I tamil web

I tamil web


பூமி சுற்ற 24 மணி நேரம் ஆனால் பூமியைச் சுற்ற 6 மணி நேரம்! (டெமோ இணைப்பு)

Posted: 21 Apr 2012 10:13 AM PDT


வெறும் ஆறே மணித்தியாலங்களில் பூமியைச் சுற்றிவரக்கூடிய குழாய் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கும் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.


குழிகை வடிவில் உருவாக்கப்படவிருக்கும் ஒவ்வொரு கொள்கலனிலும் ஆறுபேர் உட்கார்ந்து பயணம் செய்யக் கூடியதாகவும், மணித்தியாலத்திற்கு சுமார் 6,500 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகவும் இது அமைந்திருக்குமாம். சாதாரணமாக நியூயோர்க்கிலிருந்து பீஜிங்கிற்கு பயணிக்க இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே எடுக்கும்.

அம்மாடியோவ்! அதிலயும் அமெரிக்கா தாங்க நம்பர்-01.

Posted: 21 Apr 2012 09:32 AM PDT


Sex Sells.... உலகம் பூராவும் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உலகில் உடனுக்குடன் ஹிட் அடிப்பது செக்ஸ் சமாச்சாரங்கள் மட்டுமே. பத்திரிகைகளில் விற்பனை டல் அடித்தால் உடனே செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு தூக்கி விடுவார்கள் மார்க்கெட்டை. அதேபோலத்தான் சினிமாக்களிலும், மீடியாக்களிலும் கூட செக்ஸ்தான் முக்கியக் கருவியாக இருக்கிறது.


தாம்பத்யம் பற்றி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு கலாச்சாரம் நடைமுறையில் உள்ளது. ஆங்கிலத்தில் செக்ஸ், பிற மொழிகளில் செஸ்ஸோ, செக்சாஸ், செஸ்க் என பலவித பெயர்களில் அழைக்கப்படுகிறது செக்ஸ் உறவு.


செக்ஸ் விஷயங்கள் ஒவ்வொரு நாட்டிலும் எப்படி உள்ளன என்பதை படித்துப் பாருங்களேன்...



  • செக்ஸ் வரி



செக்ஸ்சுக்கு வரி என்றதும் ஆச்சரியமாக இருக்கிறதா? ஜெர்மன் நகரங்களில் விபச்சாரம் என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. அது மட்டுமல்ல அத்தொழிலில் ஈடுபடுவோர் அரசுக்கு வரி கட்ட வேண்டும். விபச்சார விடுதிகளில் ஈபி மீட்டர் போல மீட்டர் வைத்து கட்டணம் வசூலிக்கின்றனராம்.


200 க்கும் மேற்பட்ட செக்ஸ் தொழிலாளிகள் அங்கு ஆண்டுக்கு 2 லட்சம் ஈரோ சம்பாதிக்கின்றனர். அவர்கள் வருமானத்திற்கு ஏற்ப வரியும் கட்டுகின்றனர். சந்தோஷத்திற்காக வரும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு அங்கு கையோடு ரசீதையும் கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.



  • ஆண்மையின் அடையாளம் ரஷ்யா



ரஷ்யர்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையில் பெரிய அளவில் மகிழ்ச்சிகரமாக இல்லை என்று சமீபத்தில்தான் ஒரு கருத்துக் கணிப்பு கூறியது. ஆனால் நிஜத்தில் அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பதை ஒரு பெண்ணின் தாய்மைச் சாதனை கட்டியம் கூறுகிறது.


ரஷ்ய பெண்மணி ஒருவர் 69 முறை தாய்மை அடைந்து பிள்ளை பெற்றுள்ளார். உலகிலேயே அதிக முறை தாய்மையடைந்து குழந்தை பெற்ற சாதனைக்குரியவர் இவர்தான். இதில் 16 முறை இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். 7 முறை தலா மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளார். 4 முறை தலா 4 குழந்தைகளைப் பெற்று பிரமிக்க வைத்துள்ளார். இவருக்கு ஓய்வே இல்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது!.



  • செக்ஸ் பொம்மைக்கு தடை



உலகிலேயே கவர்ச்சிப் பெண்ணாக பெரும்பாலானவர்களால் ஏற்கப்பட்டனர் ஜெனீபர் லோபஸ். அதேபோல ஹாலி பெர்ரி, பிரிட்னி பியர்ஸ் ஆகியோரும் செக்ஸியானவர்களாக கருத்துக் கணிப்புகள் மூலம் அறியப்பட்டவர்கள். இவர்களால் அமெரிக்காவுக்கும் பெருமைதான். ஆனால் அமெரிக்காவில் செக்ஸ் விஷயத்தில் ரொ்ம்பவே இப்போது கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்கிறார்கள். குறிப்பாக பாலுணர்வைத் தூண்டும் வகையிலான செக்ஸ் பொம்மைகள் விற்பனைக்கு அலபாமாவில் தடை உள்ளதாம். மற்ற பகுதிகளில் இப்படியெல்லாம் இல்லை.



  • அமெரிக்கர்கள்தான் டாப்



சமீபத்தில் எடுத்த கணக்கெடுப்பின் படி அமெரிக்கர்கள் ஆண்டுக்கு 132 முறை செக்ஸ் உறவு கொள்கின்றனராம். செக்ஸ் உறவு கொள்வதில் இவர்கள்தான் உலகிலேயே நம்பர் ஒன்னாக உள்ளனர். இரண்டாவது இடத்தை ரஷ்யர்கள் பிடித்துள்ளனர். அவர்கள் ஆண்டுக்கு 122 முறையும், முத்தத்திற்குப் பெயர் போன பிரெஞ்ச் நாட்டினர் 121 முறையும் உறவில் ஈடுபடுகின்றனராம்.


நான்காவது இடத்தில் கிரீக் நாட்டினர் உள்ளனர். உலகிலேயே குறைந்த அளவில் உறவில் ஈடுபடுவது ஜப்பான், மலேசியா, சீனர்கள்தானம். அவர்களுக்கு அதில் ஈடுபாடு அதிகம் இல்லை போல. இந்தியா இந்த விஷத்தில் ரொம்ப தூரத்தில்தான் உள்ளது.



  • சீனாவின் சக்தி



செக்ஸ் மூலம் உடலில் எண்ணற்ற சக்தி கிடைக்கிறது என்பது சீனாவில் உள்ள தாவோயிச நம்பிக்கையின் முக்கிய அம்சமாக உள்ளது. செக்ஸ் உறவின்போது பெண்களிடமிருந்து வெளிப்படும் சக்தி தங்களை வந்தடைவதாக அவர்கள் நம்புகின்றனர். இதனாலேயே தாவோயிஸ்டுகள் பலர் பல பெண்களுடன் உறவு கொள்வதை ஊக்கமளித்து வந்தனராம். இதன் மூலம் தங்களுக்கு பெருமளவில் சக்தி கிடைப்பதாக அவர்கள் நம்புகின்றனர். பெண்களே சக்தி என்ற நம்ம ஊர் தத்துவத்தை இவர்கள் இப்படி உல்டாவாக நம்பியுள்ளனர் என்பது சுவாரஸ்யமானதுதான்.



  • உடம்பே தட்டு



ஜப்பானியர்கள் தாம்பத்ய உறவிற்கு முன்பு வித்தியாசமான முறையில் உணவுகளை உட்கொள்கின்றனர். அதாவது நிர்வாண நிலையில் பெண்களை படுக்க வைத்து தட்டு போல பாவித்து அவர்களின் உடம்பு மீது உணவு வகைகளை பரிமாறி சாப்பிடுகின்றனர். இதன் மூலம் சாப்பிடுபவர்களுக்கு பெரும் கிளர்ச்சி ஏற்படுமாம். இப்படிப்பட்ட செயல்கள் இன்றும் கூட ஜப்பானில் நடைமுறையில் உள்ளதாம்.



  • ஆண்மை தினம்



ஜப்பானில் கடந்த மார்ச் 15 ம் தேதி ஆண்மை தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த விழாவின் முக்கிய அம்சமே ஆண்குறியைப் போற்றிக் கொண்டாடுவதாம். இந்த விழாவின் ஒரு பகுதியாக 250 ஆண்களும், 250 பெண்களும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உறவு கொண்டனர். அதுதொடர்பான டிவிடியையும் வெளியிட்டனர்.


இப்படி செக்ஸ் விஷயங்கள் உலகம் பூராவும் வித்தியாசமாகவும், வினோதமாகவும் கொண்டாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

வெள்ளையின மக்களின் கரகோசத்திற்கு மத்தியில் ஏற்றப்பட்ட தமிழீழத் தேசியக்கொடி! (படங்கள்)

Posted: 21 Apr 2012 08:14 AM PDT


 அவுஸ்திரேலிய-விக்ரோரிய மாநிலத்தின், Geelong நகரத் தொழிற்சங்க கூட்டமைப்பின் அலுவலகக் கட்டிடத்தில், தமிழீழத் தேசியக் கொடி உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டது.நேற்று வெள்ளிக்கிழமை மாலை Geelong  தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் திரு Tim Gordon அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியை, அலுவலகக் கட்டிட உச்சியில் ஏற்றிவைத்தார்.


இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய வெள்ளை இனமக்கள், கரவொலி  எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.கொடியேற்றுதலுக்கு முன்னதாக, தமிழீழத் தேசியக் கொடி உருவான வரலாற்றுப் பின்னணி குறித்தும், தேசியக் கொடி குறித்தும், அங்கு கூடியிருந்த மக்களுக்கு சபேசன் எடுத்துரைத்தார்.


நிகழ்வின் இறுதியில் சனல் 4 இன் இலங்கையின் கொலைக்களங்கள் விவரணப்படம் திரையிடப்பட்டது.இவ்விரணப் படத்தைப் பார்த்து கவலையுற்ற பார்வையாளரின் கேள்விகளுக்கு சபேசன் பதிலளித்தார்.










இணையத்தில் பிரயங்கா சோப்ராவைத் தேடி அலையும் ரசிகர்கள்! (படங்கள் இணைப்பு)

Posted: 21 Apr 2012 06:39 AM PDT

வட இந்திய பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்பிராவின் கவர்ச்சிப் படங்கள் மும்பாயை ஒரு கலக்கு கலக்கியுள்ளதாம். இணையங்களில் பல ஆண்கள் பிரியங்கவின் கவர்ச்சிப்படங்களை தேடி அலைவதாக ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது.எமது ரசிகர்களுக்காக நாமும் பிரியங்கா சோப்ராவின் கண்கவர் கவர்ச்சிப்படங்களை இங்கு பிரசுரிக்கின்றோம்.







உயிருக்காகப் போராடிய காதலனைக் காப்பாற்ற முடியாமல் மயங்கிய உயிர்க் காதலி! (படங்கள், வீடியோ இணைப்பு)

Posted: 21 Apr 2012 05:53 AM PDT


பிரிட்டனில் ஓக்ஸ்போர்ட் பகுதியைச் சேர்ந்த ஆட்ரியன் றோலண்ட் (வயது 53) ஆட்டோ மொபைல் ஆலோசகராக பணியாற்றி வந்தார்.
இவரும் காதலி சூலி ஜாலின்ஸ்கியும் மார்ச் மாதம் புதுடெல்லி வந்தனர். தாஜ்மஹால் உட்பட சுற்றுலாத்தளங்களை சுற்றிப்பார்த்தனர்.





இதையடுத்து காதலி சூலி பிரிட்டனுக்கு புறப்பட, றோலண்ட் தென்டெல்லியில் கிரீன் பார்க் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வந்தார்.இந்நிலையில் இவர்கள் இருவரும் தினமும் இணையதளம் மூலமாக ஒருவரையொருவர் பார்க்கும் படி பேசிக்கொள்வர்.


சம்பவதன்று இருவரும் பேசுகையில் றோலண்ட் தன்னை யாரோ கொலை செய்ய வருவது போல அறையில் அங்கும் இங்கும் ஒரு மனநோயாளி போல ஓடியுள்ளார். இந்நிகழ்வை பிரிட்டனிலிருந்து காதலி சூலி பார்த்து அதிர்ச்சியுற்றார்.




மேலும் இந்நிகழ்வை தன் தோழியை அழைத்தும் பார்க்க வைத்தார். காதலன் றோலண்ட் ஓடியவாறு சமயலறையில் ஒரு போத்தலை எடுத்து அதை உடைத்து தனது கழுத்தில் குத்திக்கொண்டார்.இதனால் மளமளவென ரத்தம் பீறிட்டு ஓடியது. உடனே சூலி பிரிட்டன் தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு காப்பாற்றும் படி வேண்டுகோள் விடுக்க அவர்கள் டெல்லியில் உள்ள தூதரக அதிகாரிகளுக்கு விடயத்தை தெரியப்படுத்தினர்.


பின்னர் றோலண்டை காப்பாற்ற சம்பவ இடத்திற்கு பொலிஸ் விரைந்தது. இருப்பினும் பொலிஸாரால் றோலண்டை காப்பற்ற முடியவில்லை. இந்நிகழ்வை பார்த்த காதலி சூலி மயக்கமடைந்தார். றோலண்ட் உடலை காதலியுடன் ஒப்படைக்க இந்தியத் தூதகரம் முடிவெடுத்துள்ளது.

நிர்வாணமாக வாழ்க்கை நடாத்தும் ஜப்பானிய மனிதன்! (வீடியோ இணைப்பு)

Posted: 21 Apr 2012 04:33 AM PDT


ஜப்பானைச் சேர்ந்த மஷாவுமி நாகசாஹி என்ற 76 வயதான முதியவர் ஸ்ரோபநாறி என்னும் தீவில் தன்னந்தனியாக அதுவும் முழுநிர்வாணமாக வாழ்க்கை நடாத்தி வருகின்றார். தனது ஜீவனோபாயமாக மீன் பிடியை மேற்கொள்ளுகின்றார் இந்த அதிசய மனிதர்.




இது பற்றி குறித்த முதியவர் கருத்துத் தெரிவிக்கையில் "சமுதாயம் என்னைப்பற்றி என்ன நினைக்கின்றதோ தெரியவில்லை ஆனால் நான் இயற்கையோடு ஒட்டி வாழ விரும்புகின்றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

தமிழுக்குத் தலைவணங்கிய ஆங்கில தேசம்! வணக்கம் கூறி ஆரம்பிக்கப்பட்டது ஒலிம்பிக் வரவேற்பு. (வீடியோ இணைப்பு)

Posted: 21 Apr 2012 01:52 AM PDT

இலண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான வரவேற்பில் ''வணக்கம்'' என முதன்முதலாக தமிழில் வரவேற்பு ஆரம்பிக்கப்பட்டமை வியப்பாக அமைந்துள்ளதுதமிழின் முக்கியத்துவத்தையும் அதன் வரலாற்றையும் சிறப்பிக்கும் பொருட்டு இலண்டனில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான விளம்பரத்தில் வணக்கம் என தமிழ் மொழியுடன் ஆரம்பிக்கும் ஒலிம்பிக் வரவேற்பு விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திராவிடமா ஈழத்தமிழர் அழிவிற்கு காரணம்? கொளத்தூர் மணி!

Posted: 20 Apr 2012 10:45 PM PDT


சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப் போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் அறிந்தும் அறியாமலும் மக்களை குழப்பிவருகின்றனர்.


அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.

எம்.எம்.எஸ் மூலம் காட்டுத் தீ போல பரவும் குளு குளு பூனம் பாண்டே! (வீடியோ இணைப்பு)

Posted: 20 Apr 2012 10:03 PM PDT


கிளு கிளுப்பான உடைகள் அணிந்து செக்ஸியாக பல கோணங்களிலும் போஸ் கொடுக்கும் பூனம் பாண்டேவின் எம்.எம்.எஸ் பலரது செல்போன்களிலும் காட்டுத் தீபோன்று பரவிவருகின்றது.


இக்காணொளியானது தன்னைப் பிரபல்யப்படுத்திக்கொள்வதற்காக தனது கமெராமானைக் கொண்டு பூனம் பாண்டேயால் பிரத்தியேகமாக எடுக்கப்பட்ட காணொளியாகும்.

பூச்சிகளால் சுவையூட்டப்பட்ட வினோத உணவு! வாங்க சாப்பிடலாம். (படங்கள் இணைப்பு)

Posted: 20 Apr 2012 09:45 PM PDT


கேக் வடிவிலமைந்த சிற்றுண்டி ஒன்றிற்கு சிறிய வகை பூச்சிகளை சேர்த்து சுவையூட்டி உண்ணுகின்றனர் நெதர்லாந்து நாட்டவர்கள். பார்ப்பதற்குத் தான் அருவருப்பாக இருக்கும் ஆனால் சாப்பிட்டுப்பார்த்தால்.... ஒன்ஸ் மோர் தான்.


இவ் உணவுப் பண்டமானது Cookbook of insects நெதர்லாந்து நாட்டவர்களால் அழைக்கப்படுகின்றது. இவ்வுணவில் பெரும்பாலும் வெட்டுக்கிளிகளின் குடம்பிப் பருவமே சுவையூட்டியாக சேர்க்கப்படுகின்றதாம்.


"நம்மட நாடுகளில மயிர்கொட்டியின்ர குடம்பிப் பருவத்தை போட்டாலும் போட்டிடுவாங்க டோய்"







பிணத்தையும் எழுப்பும் பணத்தின் மாயா ஜாலங்கள்! (படங்கள் இணைப்பு)

Posted: 20 Apr 2012 09:26 PM PDT


ஈட்டி எடடும் மட்டும் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பார்கள். ஆனால் இன்று அதனையெல்லாம் தாண்டி பல மாயா ஜாலங்களையும் காட்டி நிற்கின்றது இந்தப் பணம்.


கீழுள்ள படங்களைப் பாருங்கள் வெவ்வேறு நாடுகளின் பணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட வினோத வடிவங்களே இவை. ஒரு நேரச் சாப்பாட்டிற்கு பணமில்லாமல் அலையும் ஜீவன்கள் இருக்கும் இந்த உலகத்தில் பணம் படைத்தவர்களின் வேடிக்கையைப் பார்த்தீர்களா?









காளானிலிருந்து உருவாக்கப்பட்ட ஜொலிக்கும் USB Drive! (படம் இணைப்பு)

Posted: 20 Apr 2012 08:29 PM PDT


இப்பொழுதெல்லாம் இயற்கையை ஒட்டி செயற்கை அமைகின்றது போலும் காளானைப் பார்த்த ஒருவரின் எண்ணத்தில் இதே போன்று ஒரு USB Drive உருவாக்கினால் என்ன? என்று நினைத்தார் உருவாக்கிவிட்டார்.


ஆனால் சாதாரண காளானுக்கு என்றுமே இணையாகாது இந்த USB Drive. காரணம் என்ன தெரியுமா? 150 கரட் வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளதாம். தற்போதைக்கு 32 GB சேமிப்பு வசதிகொண்ட உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை எவ்வளவு தெரியுமா? 16,500 டொலர்களாம். அம்மாடியோவ்....




அகதிகளாய் அடைக்கலம் தந்த தொப்பிள் கொடி உறவுகளே! மீண்டும் எம்மை ஒரு கணம் திரும்பிப் பாரீர்... (வீடியோ இணைப்பு)

Posted: 20 Apr 2012 07:37 PM PDT


தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகள், தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இச்சிறையில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர்.




இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றுமாறு கோரி, கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 45 நாட்களுக்குள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.



இதையடுத்து, உண்ணாவிரதத்தை கைவிட்ட இலங்கைக் கைதிகள், 45 நாட்கள் கடந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடந்த 15 ந்திகதி முதல் மீண்டும் 10 பேர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள்.


இன்று 5ஆவது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் இலங்கைக் கைதிகளான பிஷ்பி, சதீஷ்குமார் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். நாங்கள் நிரபராதிகள், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என சிறையில் உள்ள இலங்கைக் கைதிகள் தெரிவித்துள்ளனர்.