சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- நீர்க் கீரிகளுடன் விளையாடும் அதிசய சிறுமி (வீடியோ இணைப்பு)
- கூடிய நர்சுகள் சீறிய சினேகா
- ரஜினி-ஏ.வி.எம் சரவணன் சந்திப்பு கோச்சடையான் பற்றி ஆலோசனை?
- ரஜினி பட ஷூட்டிங் திடீர் ரத்து !
- கன்னட ''டர்ட்டி பிக்சர்'' நிகிதா விலகல் !
- அஜீத் பிறந்தநாள் அன்னிக்கு விஜய் படம்..! "
- ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் ஏ.ஆர். ரஹ்மான்!
- நெல்லையைச் சேர்ந்த சத்தீஸ்கர் ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் கடத்தல்
- தினமும் பணம் புழங்க ஸ்ரீஸ்துதி
- தனிஈழம் : கருத்துக்கூற மறுத்த இந்தியத் தூதுக்குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ்
- கொழும்பில் பொலிஸாருக்கு எதிராக மக்கள் போராட்டம்
- யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரே அதிகாரம் செய்கின்றனர்: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்
- போர்க்குற்றவாளி பிரசன்ன சில்வாவுக்கு மென்போக்கு காட்டுவது ஏன்?: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி
- கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கு திடீர் தேர்தல்
- வடுகச்சி அம்மன் கோயில்
- கொழும்பில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை
- ஸ்ரீசாயிபாபா விரத முறைகள்
- இந்தியக் குழுவினரின் கிழக்கு விஜயம் அர்த்தமற்றது: பொன் செல்வராசா பா.உ
- ஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமனம்? – கலக்கத்தில் இலங்கை!
- பச்சிலைப்பள்ளி பிரதேச இரு கிராமங்களில் மே 15ல் மீள்குடியேற்றம்!- பிரதேச செயலகம் அறிவிப்பு
- எடியூரப்பாவிற்கு லோக் ஆயுக்தா சம்மன்
- வடபகுதி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
- அவுஸ்திரேலிய தூதரக பிரதிநிதிகளுடன் தமிழ் கூட்டமைப்பினர் யாழில் சந்திப்பு
- சொத்து குவிப்பு வழக்கு: ஆவணங்கள் படித்து பார்க்க அனுமதி கோரிய ஜெ., சசிகலா மனு தள்ளுபடி
| நீர்க் கீரிகளுடன் விளையாடும் அதிசய சிறுமி (வீடியோ இணைப்பு) Posted: 21 Apr 2012 09:07 AM PDT சிறுமியின் துணிச்சலை ஆவலோடு பார்த்தவர்கள் அதனை காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பாலூட்டி வகையைச் சேர்ந்த நீர்க்கீரிகளில் 14 இனங்கள் காணப்படுகின்றன. இவை மீன், கடற் பறவைகள், ஈரூடக வாழிகள், மட்டி போன்றவற்றை உணவாக உட்கொள்ளக் கூடியன. |
| Posted: 21 Apr 2012 08:57 AM PDT ஒருமுறை தனக்கு நெருங்கிய உறவுக்காரரின் துக்க காரியத்திற்காக சென்றிருந்தார்விஜய். மிகவும் வருத்தத்திலிருந்த அவரை அந்த நேரத்திலும் விடாமல் நெருங்கி அன்புத் தொல்லை கொடுத்தார்கள் ரசிகர்கள். அவர்களின் அன்பு என்னை திக்குமுக்காட வைத்தாலும், அந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிக்கவும் வேண்டியிருந்தது என்று பிற்பாடு வேதனைப்பட்டிருந்தார் விஜய். பிரபலங்கள் தங்கள் புகழுக்காக கொடுக்கிற விலைதான் அது. தாங்கள் விரும்பும் ஹீரோ எல்லா நேரங்களிலும் ரசிகர்களுக்காக தன்னை ஒப்புக் கொடுக்க முடியாது என்பதை உணர்ந்தேயிருக்கிற ரசிகர்கள் கூட இந்த தொந்தரவை தொடர்ந்து செய்து கொண்டேயிருக்கிறார்கள். அப்படிதான் கடந்த வாரம் சிக்கிக் கொண்ட சினேகாவின் நிலைமையும். சினேகாவின் அம்மாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு விட்டது. உடனே அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாராம் அவரை. ஒருபுறம் மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையை அவருக்கு அளித்துக் கொண்டிருக்க, இன்னொருபுறம் சினேகாவை பார்க்கும் ஆசையில் அந்த வார்டுக்குள் குவிந்துவிட்டார்களாம் நர்சுகள். கோபத்தில் முகம் சிவந்த சினேகா, இங்க கூடவா எங்களை பிரைவசியாக இருக்க விட மாட்டீங்க? தயவு செய்து எல்லாரும் வெளியே போங்க என்று கூச்சல் போட்டாராம். |
| ரஜினி-ஏ.வி.எம் சரவணன் சந்திப்பு கோச்சடையான் பற்றி ஆலோசனை? Posted: 21 Apr 2012 08:55 AM PDT ரஜினி இப்பவும் முதலாளி என்று அழைப்பது ஏவிஎம் சரவணனைதான். மனம் விட்டு அவர் பேசுகிற மனிதர்களில் ஒருவரும் இதே ஏவிஎம். சரவணன்தான். கடந்த சில வாரங்களுக்கு முன் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வந்திருந்த ரஜினி, மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தாராம் சரவணனிடம். அப்போது கோச்சடையான் படத்தை நீங்களே தயாரிக்கலாமே என்ற ஆலோசனையை அவர் முன் வைத்தாராம். சிறிது காலமாக படத் தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் சரவணன், மிகவும் நாசுக்காக இந்த விஷயத்தை கையாண்டதாக கூறப்படுகிறது. இல்ல ரஜினி. இப்போதைக்கு சினிமா இருக்கிற சூழல் சாதகமாக இல்லை. அதனால் இப்போதைக்கு வேண்டாம். சந்தர்ப்பம் வரும்போது நாம சேர்ந்து ஒரு படம் தரலாம் என்றாராம். |
| ரஜினி பட ஷூட்டிங் திடீர் ரத்து ! Posted: 21 Apr 2012 08:47 AM PDT ரஜினி நடிக்கும் படம் 'கோச்சடையான்Õ. 3 டி மோஷன் கேப்சர் நவீன தொழில்நுட்ப முறையில் இப்படத்தை இயக்குகிறார் சவுந்தர்யா. இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. திடீரென்று அதன் படப்பிடிப்பு கேரளாவுக்கு இடம் மாற்றப்பட்டது. லண்டனில் விசா பிரச்னை காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் இடமாற்றம் செய்யப்பட்டது என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி பட இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகர் கூறும்போது, 'கோச்சடையான் படத்தில் நடிக்கும் 2 நடிகர்களுக்கு விசா அனுமதி கிடைக்கவில்லை. இதற்காக காத்திருந்து பட ஷூட்டிங் நடத்துவதற்கு போதுமான அவகாசம் இல்லை. மேலும் அந்த நடிகர்களின் கால்ஷீட் கிடைப்பதிலும் சிக்கல் இருந்தது. இப்படத்தை உலக தரத்தில் படமாக்குவதற்கான நவீன வசதிகளுடன் கேரளாவில் உள்ள ஸ்டுடியோ அமைந்துள்ளது. ஆனால் செட், மேக்அப் மற்றும் காஸ்டியூம் அமைப்பதில் சிரமம் உள்ளது. இதுவரை படமான ரஜினியின் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடக்கிறது என்றார். |
| கன்னட ''டர்ட்டி பிக்சர்'' நிகிதா விலகல் ! Posted: 21 Apr 2012 08:44 AM PDT சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க மறுத்து படத்திலிருந்து விலகினார் நிகிதா. கோலிவுட்டில் கலக்கிய சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து 'தி டர்ட்டி பிக்சர் என்ற பெயரில் இந்தி படம் உருவானது. வித்யாபாலன் நடித்தார். அதேபோல் கன்னடத்திலும் சில்க் ஸ்மிதாவை மையமாக வைத்து படம் உருவாகிறது. இப்படத்துக்கும் டர்ட்டி பிக்சர் என்றே தலைப்பிட்டுள்ளனர். இதில் நடிக்க நிகிதா தேர்வானார். ஷூட்டிங்கிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் நடிக்கிறார். இதற்காக இவருக்கு ரூ.85 லட்சம் சம்பளம் தரப்படுகிறது. படத்திலிருந்து விலகியது பற்றி நிகிதா கூறும்போது, 'Ôகிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் ஏழைப்பெண், வறுமையால் பாதை மாறிப்போகிறாள். பின்னர் சினிமா உலகிற்கு வருவதுபோல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற கதையில் என்னால் நடிக்க முடியாது. பெரும் தொகை சம்பளமாக பேசப்பட்டாலும் அப்படத்திலிருந்து விலகிவிட்டேன் என்றார். இது பற்றி டைரக்டர் திரிசூல் கூறும்போது, 'இந்தி படத்தை பார்த்து காப்பி அடிக்கவில்லை. புதிதாக ஸ்கிரிப்ட் எழுதப்பட்டுள்ளது. ஒரு காட்சிகூட இந்தி படத்தில் இருந்தது போல் இருக்காது. இதற்கு யாரிடமும் உரிமை வாங்க தேவையில்லை என்றார். |
| அஜீத் பிறந்தநாள் அன்னிக்கு விஜய் படம்..! " Posted: 21 Apr 2012 08:34 AM PDT கமர்ஷியல் படங்களில் ரசிகர்களை மகிழ்விக்க நடித்து வந்த விஜய், வித்தியாசமான கதைக்களம் கொண்ட 'நண்பன்' படத்தில் நடித்தார்.விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் மற்றும் பலர் நடித்த அப்படத்தினை இயக்கினார் ஷங்கர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த அப்படத்தினை ஜெமினி நிறுவனம் தயாரித்தது. 'நண்பன்' திரைப்படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகியுள்ளது. தமிழ்பட விமர்சகர்கள் மத்தியிலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் படம் வரவேற்பை பெற்று இருந்தது. 2012ம் ஆண்டில் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற இடத்தினையும் பிடித்தது. 'நண்பன்' படத்தின் 100 வது நாள் விழா ஏப்ரல் 21ம் தேதி லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற இருக்கிறது. |
| ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் ஏ.ஆர். ரஹ்மான்! Posted: 21 Apr 2012 08:32 AM PDT டி.வி நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் வரவேற்பை பெற்ற டிவி நிகழ்ச்சி ஒப்ரா வின்ஃப்ரே நடத்தும் டாக் ஷோ.ஒப்ரா வின்ஃப்ரே இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த போது பல்வேறு முன்னணி இந்தி திரையுலக பிரபலங்களும் அவரை சந்திக்க திரட்டனர். தற்போது ஓப்ரா வின்ஃப்ரே நடத்தும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொள்ள இருக்கிறார். ஏப்ரல் 22ம் தேதி ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அவருக்கு அழைப்பு வந்து இருக்கிறது. இது ரஹ்மானது உலகளாவிய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. |
| நெல்லையைச் சேர்ந்த சத்தீஸ்கர் ஆட்சியர் மாவோயிஸ்டுகளால் கடத்தல் Posted: 21 Apr 2012 08:29 AM PDT சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் (32) சனிக்கிழமை பட்டப் பகலில் 20 நக்சலைட்டுகளால் ஒரு கிராமத்தில் கடத்தப்பட்டார். இவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். "கிராம சுராஜ்' என்கிற புதிய திட்டத்தின் கீழ் கிராம மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் பொது நிகழ்ச்சியின்போது, மாஜிபாரா என்ற அந்த கிராமத்துக்கு பைக்குகளில் வந்த 20-க்கும் மேற்பட்ட நக்சல்கள் அவருடைய 2 பாதுகாவலர்களையும் சுட்டுக்கொன்றுவிட்டு அவரைக் கடத்திச் சென்றனர். ஏன் கடத்தினார்கள்? அவரைக் கடத்திச் சென்றவர்கள் அதன் பிறகு அரசுடனோ பத்திரிகைகளுடனோ தொடர்பு கொள்ளவில்லை. தங்களுடைய கோரிக்கைகள் என்ன, எதற்காக ஆட்சியரைக் கடத்தினார்கள் என்று தெரிவிக்கவில்லை. மாவட்ட அரசு அதிகாரிகள் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளதால் மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கும் தில்லிக்கும் உடனே தகவல் தரப்பட்டது. அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற சார்பு கோட்ட ஆட்சியர் எஸ்.கே. வைத்யா கடத்தப்படவில்லை. |
| தினமும் பணம் புழங்க ஸ்ரீஸ்துதி Posted: 21 Apr 2012 08:19 AM PDT ஏழை ஒருவன் தன் மகளின் திருமணத்திற்கு பணம் வேண்டி அலைந்து திரிந்தான். கடைசியில் அந்த ஏழை நிகமாந்த தேசிகரிடம் சென்று அவரது கால்களைக் கட்டிக் கொண்டு "ஐயா! நீங்கள் உதவினால் அன்றி என் மகள் கல்யாணம் நடக்காது'' என்று அழுதான். அவனுடைய நிலை அவருக்கு மனவேதனையைத் தந்தது. "கவலைப்படாதே நிச்சயம் உன் தேவைகளை லட்சுமி தாயார் நிறைவேற்றி வைப்பார். வெள்ளிக்கிழமையான நாளை காலை தாயார் சன்னதிக்கு வா'', என்று சொல்லி அனுப்பினார். ஏழையும் தேசிகரும் கோவிலுக்குச் செல்வதை அறிந்த மக்களும் கோவிலில் திரண்டனர். தேசிகர் திருமகள் அருள் பெற வேண்டி "ஸ்ரீஸ்துதி'' என்னும் 25 ஸ்லோகங்கள, கொண்ட ஸ்தோத்திரத்தை ராகத்துடன் பாடினார். திருமகளும் தங்கக்காசுகளை அளித்து மறைந்தாள். எனவே திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு பணத்தடை ஏற்பட்டாலோ, தினமும் கையில் பணம் புழங்கவும் ஸ்ரீஸ்துதியின் 21-வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வது நல்லது. இதோ அந்த ஸ்லோகம்: ஸானுப்ராஸ ப்ரகடித தயை ஸாந்த்ர வாத்ஸல்ய திக்தை: அம்ப! ஸ்நிக்தைர் அம்ருத லஹரீ ளப்த ஸப்ரஸ்மசர்யை: ங்கர்மே தாபத்ரய விரசிதே காட தப்தம் ணம் மாம் ஆகிஞ்சன்ய க்லபிதம் அங்கைர் ஆத்ரியேதா கடாசை - இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் கீழ்க்கண்ட பொருளைச் சொல்லலாம். பொருள்: கருணை மிக்க லட்சமி தாயே! தாயன்பைத் தருபவளே! பக்தர்களுக்கு துணை செய்பவளே! அமிர்தம் போல் குளிர்ச்சிமிக்கதும், பரிசுத்தமானதுமான அருளைத் தருபவளே கடும் வெயிலில் நடப்பவன் தாகத்தால் தவிப்பது போல், பொருளில்லாமல் வாடும் என்னை ஒரு கணநேரம் உன் கடைக்கண் பார்வையால் குளிரச் செய்வாயாக! |
| தனிஈழம் : கருத்துக்கூற மறுத்த இந்தியத் தூதுக்குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் Posted: 21 Apr 2012 08:19 AM PDT தனி ஈழம் அமைப்பது குறித்து இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுசன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக் குறித்து இலங்கைக்கு சென்றுள்ள இந்தியத் தூதுக்குழுவின் தலைவி சுஷ்மா சுவராஜ் கருத்துக்கூற மறுத்துள்ளார். இலங்கைக்கான இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் பயண இறுதியில் இன்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா சுவராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை அரசின் ஏற்பாட்டில் இலங்கையில் உல்லாசப்பயணமாக இந்தியத் தூதுக்குழுவின் பயணம் அமைகின்றதென்ற குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சுஷ்மா சுவராஜ் அவர்கள் இது ஓர் உல்லாச பயணம் அல்லவென நான் ஜெயலலிதாவுக்கு கூறியுள்ளேன். தினமும் காலை 6.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை நாம் பணியாற்றினோம். நாம் எங்கும் ஷொப்பிங் போகவில்லை. கொழும்பை சுற்றிப் பார்க்கவும் இல்லை. அதற்கு எமக்கு நேரம் இருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என ஊடகவியலாளர் மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்' எனக் கூறிய அவர், அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், எனினும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான மக்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களிலும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் அந்த மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும்வரை தமது இலக்கு முடிவடையப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ![]() ![]() ![]() |
| கொழும்பில் பொலிஸாருக்கு எதிராக மக்கள் போராட்டம் Posted: 21 Apr 2012 08:18 AM PDT கொழும்பு பேஸ்லைன் வீதியைச் சேர்ந்த மக்கள் பொலிஸாருக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கொழும்பு பேஸ்லைன் புகையிரத விளையாட்டரங்கிற்கு அருகாமையில் வாழும் மக்களே இவ்வாறு பொலிஸாருக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். மக்கள் நடத்திய போராட்டத்தினால் பேஸ்லைன் வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அயலவர்கள் சிலரை பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் திட்டமிட்டு கடத்திச் சென்று, போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. |
| யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரே அதிகாரம் செய்கின்றனர்: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் Posted: 21 Apr 2012 08:17 AM PDT தமிழ் மக்கள் எங்கு செல்வதானாலும் இராணுவத்தினரின் விசாரணைக்கு உட்பட்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.இலங்கை அரசு இராணுவத்தைத் திரும்ப பெற வேண்டுமென இலங்கை சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்னையில் தெரிவித்துள்ளனர். இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக சுஸ்மா சுவராஜ் தலைமையில் சென்ற இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இன்று இந்தியா திரும்பியது. இந்த குழுவில் இடம்பெற்றிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிருஸ்ணசாமி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்க தாகூர் ஆகியோர், இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணசாமி கருத்து வெளியிடுகையில், இலங்கையின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளைச் சென்று பார்வையிட்டோம். அங்குள்ள தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டோம். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரே அதிகாரம் செய்து வருகின்றனர். கோவில், நிகழ்ச்சி என அங்குள்ள மக்கள் எங்கு சென்றாலும் அவர்களின் விசாரணைக்கு உட்பட்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இலங்கை அரசு இராணுவத்தை திரும்ப பெற வேண்டும். இன்று காலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நடந்த சந்திப்பில் இவை அனைத்தும் குறித்து கலந்துரையாடப்பட்டது. 45 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பில் எல்லாப் பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தச் சுற்றுப்பயணம் குறித்த விரிவான அறிக்கை மத்திய அரசிடமும், சோனியா காந்தியிடமும் சமர்ப்பிக்கப்படும். இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய அரசு என்றும் பாதுகாப்பாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். |
| லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள் Posted: 21 Apr 2012 08:16 AM PDT ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கும், வைகுண்டத்தில் மகாலட்சுமியாக, பாற்கடலில் ஸ்ரீதேவியாக, இந்திரனுடைய இடத்தில் சுவர்க்க லட்சுமியாக, அரசர்களிடத்தில் ராஜலட்சுமியாக, குடும்பத்தில் கிரக லட்சுமியாக, வீரர்களிடத்தில் தைரிய லட்சுமியாக, பசுக்களிடத்தில் காமதேனுவாக சகல யோகங்களை வாரி வழங்கும் ஆதார சக்தியான லட்சுமிதேவிக்கு உகந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வதும் மிகவும் சிறப்பானது. தீராத வியாதியுள்ளவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து தங்களுக்கு தெரிந்த மந்திரம் அல்லது நாம ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் தீரும். கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி, பாலாரிஷ்ட தோஷங்கள் கழியும். சகல தடைகள், இடர்பாடுகள், எதிர்ப்புகளையும் அழித்து வளமும் நலமும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திர ஹோமத்தை வீட்டில் செய்யலாம். வாழ்வு வளமும் பெற தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும், தயிர் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். இனிப்பு வழங்குவதால் திருமணத் தடை நீங்கும். அரிசி, பருப்பு, தானியங்கள் தருவதால் விபத்துக்கள் நேராமல் இறைவன் காத்தருளுவார். பசுக்கள், பட்சிகள், நாய்களுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். தர்ம குணம் மேலோங்கும். |
| போர்க்குற்றவாளி பிரசன்ன சில்வாவுக்கு மென்போக்கு காட்டுவது ஏன்?: பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி Posted: 21 Apr 2012 08:14 AM PDT பிரித்தானியாவுக்கான இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி உறுப்பினர் சிபெய்ன் மக்டொனாக் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று முன்தினம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால், அது போர்க்குற்றவாளிகளை சகித்துக் கொள்ளவதில்லை என்ற பிரித்தானியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறியுள்ளார். மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான குறிப்பு ஒன்று 3 மாதங்களுக்கு முன்னர், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவர் மீதான இராஜதந்திர விலக்குரிமையை விலக்கிக் கொள்ள அந்தப் பணியகம் மறுத்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது குறித்தும், இராஜதந்திர விலக்குரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்தும் விவாதம் ஒன்றை நடத்தலாம் என்று எண்ணுகிறேன். அவர் விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால், போர்க்குற்றவாளிகளை சகித்துக் கொள்ளவதில்லை என்ற பிரித்தானியாவின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும். இலங்கை மீது நாம் மென்போக்கை காட்டினால், அட்டூழியங்களை புரிபவர்களுக்கு நாம் அடைக்கலம் வழங்குபவர்கள் என்று ஏனைய ஆட்சியாளர்களும் நிச்சயமாக கருதத் தொடங்குவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த பொதுச்சபையின் முதல்வர் சேர் ஜோர்ஜ் யங், நாடாளுமன்ற உறுப்பினர் மக் டொனாக்கின் கவலையைத் தாம் புரிந்து கொள்வதாகவும், இராஜதந்திர விலக்குரிமை தவறாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பது முக்கியம் என்றும் தெரிவித்தார். இதுபற்றி வெளிவிவகாரச் செயலருடன் கடந்த செவ்வாய்க்கிழமை பேசும் வாய்ப்பு கிடைத்ததாகவும், மீண்டும் ஒருமுறை அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று உறுதிபடக் கூற முடியாவிட்டாலும், மக் டொனாக்கின் கவலை தொடர்பாக பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் என்ன செய்கிறது என்பது பற்றிய பதில் ஒன்றை வழங்குமாறு கேட்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். |
| கிழக்கு உள்ளிட்ட 3 மாகாணசபைகளுக்கு திடீர் தேர்தல் Posted: 21 Apr 2012 08:12 AM PDT இலங்கையில் மூன்று மாகாணசபைகளைக் கலைத்து விட்டு திடீர் தேர்தல் நடத்துவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணசபைகளையே கலைத்து விட்டு தேர்தலை நடத்தும் திட்டம் அரசாங்கத்திற்கு உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜுலை மாதமளவில் இந்த மாகாணசபைகளைக் கலைத்து விட்டு செப்ரெம்பரில் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த ஊடகம் மேலும் கூறியுள்ளது. இந்தப் பகுதிகளில் ஆளும்கட்சியின் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொள்ளும்படி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கட்சி அமைப்பாளர்களிடம் கேட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. |
| Posted: 21 Apr 2012 08:12 AM PDT ஸ்தல வரலாறு... காதலில் எல்லாருக்கும் வெற்றி கிடைப்பது இல்லை. சாதி, மதம், அந்தஸ்து, குடும்ப சூழ்நிலை உள்பட பல காரணங்களால் பெரும்பாலான காதல்கள் தோல்வியிலேயே முடிந்து விடுகின்றன. ஆத்மார்த்தமாக, ஆழமான காதலில் ஈடுபடுபவர்கள் மட்டுமே காதலில் வென்று கல்யாணம் வரை செல்ல போராடுவார்கள். அந்த காதல் கை கூடுவதற்குள் அவர்கள் படும்பாடு சொல்லி முடியாது. காதலை மறக்க முடியாமல் ரத்த கண்ணீர் வடிப்பார்கள். நம் காதலுக்கு உதவ யாரும் இல்லையே என்று தவிக்கும் காதலர்கள் ஏராளமாக உள்ளனர். திக்கற்றவர்களுக்கு தெய்வம் தான் துணை! இத்தகைய உண்மையான காதலர்களுக்கு காடனேரி வடுகச்சி அம்மம் அபாயம் அளித்து காதலை வெற்றி பெறச் செய்கிறாள். சிவகங்கை மாவட்டம், பாகனேரி அருகே காடனேரியில் அமைந்துள்ள மருதூருடைய அய்யனார் கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் வடுகச்சி அம்மன் தான், உண்மை காதலர்களைச் சேர்த்து வைக்கிறார். இதனால் காதலர்கள் பலர் இங்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள். இது மட்டுமின்றி, வடுகச்சி அம்மனை வந்து வழிபட்டால், கணவன்-மனைவிக்குள் உள்ள பிரச்சினை தீரும் என்றும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சிவகங்கையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவிலும் காடனேரி அமைந்துள்ளது. சிவகங்கை வழியாக செல்பவர்கள் மதகுபட்டி சென்றும், காரைக்குடி வழியாக செல்பவர்கள் கல்லல், பாகனேரி வழியாக சென்றும் இந்த கோவிலை அடையலாம். அதுபோல கும்பகோணத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருசக்தி முற்றம் ஈசனும் காதல் கைகூட உதவுகிறார். உமையம்மை பரமசிவனை ஒரு சமயத்தில் காதலித்துத் திருமணம் புரிந்ததாகக் கூறப்படும் புராணக் குறிப்புகளில் ஈசனுக்கு தழுவக் குழந்தை நாதர் எனப் பெயர். இவர் குடியேறிக் கோவில் கொண்டமர்ந்த தலம் திருசக்தி முற்றம் கோவில் எனப்படுகிறது. இந்தத் தலத்துக்குச் சென்று வேண்டிக் கொள்பவர்களுக்குக் காதல் திருமணங்கள் கை கூடுகின்றன எனப் பல்லாண்டு கால நம்பிக்கை உள்ளது. கணவன் - மனைவி கருத்து வேறுபாடும் நீங்குவதாக பக்தர்கள் சொல்கிறார்கள். |
| கொழும்பில் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை Posted: 21 Apr 2012 08:11 AM PDT இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில், பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில், தந்தை செல்வா நினைவுப் பேருரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தந்தை செல்வாவில் 35Mவது நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நினைவுப் பேருரை எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெறும். இந்த நிகழ்வில், 'இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் - வரலாறும் வருங்காலமும்' என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் நினைவுப்பேருரை நிகழ்த்தவுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த நினைவுப்பேருரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது |
| Posted: 21 Apr 2012 08:11 AM PDT 1. ஸ்ரீசாயிபாபாவை குருவாக ஏற்று வழிபட்டதால் குரு (வியாழன்) என்பதால் வியாழக்கிழமை விரதம் இருப்பது வழக்கத்துக்கு வந்தது. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். 2. இந்த விரதத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம். 3. இந்த விரதம் அற்புத பலன்கள் தர வல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும். 4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். 5. காலை அல்லது மாலையில் சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன்மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்கவும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும், நைவேத்தியம் வைத்து (பழங்கள், இனிப்பு, கற்கண்டு எதுவானாலும்) பிரசாதத்தை விநியோகிக்கவும். 6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது. 7. 9 வியாழக்கிழமைகளும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி, சிரத்தையுடன் செய்யவும். 8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைப்பிடிக்கலாம். 9. விரதத்தின் 9. வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும். |
| இந்தியக் குழுவினரின் கிழக்கு விஜயம் அர்த்தமற்றது: பொன் செல்வராசா பா.உ Posted: 21 Apr 2012 08:10 AM PDT இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினர், கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தது அர்த்தமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சில்லிக்கொடியாறு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி மரத்தளபாடங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் இருந்து வருகை தந்த சர்வகட்சி குழுவைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து புறப்படும் பொழுது வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை குறிப்பாக இடம்பெயர்ந்தவர்களையும் மீளகுடியமர்ந்தவர்களையும் பார்வையிட்டு அவர்களின் நலன்களை விசாரிக்க வருகிறோம் என்று கூறிவிட்டு வந்தனர். ஆனால் இன்று கிழக்கிற்கு அதுவும் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்து எந்தப் பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிடாமல் சிவிலியன் குழுக்களையும் சந்திக்காமல் இரண்டு வைபவங்களில் மட்டும் பற்கேற்று விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள். இது எம்மைப் பொறுத்தவரையில் ஒரு கவலையளிக்கின்ற விடயமாகும். குறிப்பாக கிழக்கிற்கு வரும் பொழுது திருகோணமலையிலே மூதூர் பிரதேசத்தில் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்றும் நலன்புரி நிலையங்களில் இடைத்தங்கல் முகாமில் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 1268 குடும்பங்களைச் சேர்ந்த 5000 இற்கும் மேற்பட்ட மக்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள கிளிவெட்டி பட்டித்திடல் மணற்சேனை, கட்டைபறிச்சான் ஆகிய கிராமங்களிலுள்ள இடைத்தங்கல் முகாமில் கடந்த மூன்றுவருட காலமாக துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 4 மாதகாலமாக உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்டு வந்த உணவு வினியோகம் கூட இவர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. இதே மக்கள் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பிலும், 2009ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மேற்கூறிய இடைத்தங்கள் முகாம்களிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதம் 26ஆம் திகதியுடன் அதாவது தந்தை செல்வாவின் நினைவு தினம் 6 வருடங்கள் கடந்து 7வது வருடத்தில் கால் வைக்க இருக்கிறார்கள். ஆகவே இவர்களையாவது இந்திய நாடாளுமன்றக் குழு பார்வையிட்டிருக்க வேண்டும், ஆனால் அதற்கும் தவறி விட்டார்கள். ஆகவே எம்மைப் பொறுத்தளவில் இந்தியக் குழுவினரின் கிழக்கு விஜயம் அர்த்தமற்ற ஒன்றாகப் போய்விட்டது. இதை தமிழக மக்கள் ஏற்கனவே அறிந்திருந்தார்கள் என்பது மட்டும் உண்மை என தெரிவித்தார். |
| ஐ.நா தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமனம்? – கலக்கத்தில் இலங்கை! Posted: 21 Apr 2012 08:09 AM PDT நோர்வேயில் அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின்போது, பதவியிழந்த இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தீவிர அரசியலில் இருந்து விலகி, இராஜதந்திரப் பணியில் இணைந்து கொள்ளும் நோக்கில் அவர் முக்கியத்துவம் மிக்க ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்குப் போட்டியில் குதித்துள்ளார். நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான நோர்வேயின் தூதுவராகப் பணியாற்றும் மோர்டென் வெற்லன்ட் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை முடித்து ஒஸ்லோ திரும்பவுள்ளார். ஐ.நாவுக்கான தூதுவர் பதவிக்கு எரிக் சொல்ஹெய்முடன் மேலும் மூவர் போட்டியில் உள்ளனர். எனினும் இந்தப் பதவிக்கு எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான இலங்கையின் தூதுவர் நிலையில், போர்க்குற்றம் சாட்டப்படும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா பணியாற்றுகின்ற நிலையில், எரிக் சொல்ஹெய்ம் அவருக்குத் தலைவலி கொடுக்கலாம் என்று இலங்கை கலக்கமடைந்துள்ளது. ஐ.நாவுக்கான தூதுவராக எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டால், அது இலங்கைக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று இலங்கை அரசதரப்பு எதிர்பார்க்கிறது. இலங்கைக்கு எதிராக, அனைத்துலக போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நோர்வே பகிரங்கமாகவே வலியுறுத்தி வருகிறது. சில காலங்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்தபோது, எரிக் சொல்ஹெய்ம் கூட இதையே வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான ஒருவர் ஐ.நாவில் உயர் பதவியைப் பெறுவது தமக்கு நெருக்கடியாக அமையும் என்று,இலங்கை அரசதரப்பு கலக்கமடைந்துள்ளதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| பச்சிலைப்பள்ளி பிரதேச இரு கிராமங்களில் மே 15ல் மீள்குடியேற்றம்!- பிரதேச செயலகம் அறிவிப்பு Posted: 21 Apr 2012 08:07 AM PDT பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிலுள்ள இத்தாவில், வேம்போடுகேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக பிரதேச செயலகம் அறிவித்திருக்கின்றது. முகமாலை மற்றும் இத்தாவில் பிரதேசத்தில் மேற்கொண்டு வந்த வெடிபொருள் அகற்றல் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து நேற்று அப்பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே இந்த விடயம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இக்கலந்துரையாடலின் போது வெடிபொருட்கள் அகற்றல் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஹலோ ரஸ்ட் நிறுவனத்தின் கிளிநொச்சி வதிவிட முகாமையாளர் வெடி பொருட்கள் அகற்றப்பட்டுள்ள போதும் மக்கள் வெடிபொருட்கள் தொடர்பாக விழிப்புடன் செயற்பட வேண்டும். கட்டம் கட்டமாக ஆனால் விரைவாக தாம் கண்ணிவெடிகளை அகற்றி வருவதாகவும் மிகக்குறுகியளவு பகுதியில் செறிவாக புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதே இவ்வளவு காலதாமதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேலும் இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீநிவாசன், யு.என்.டி.பி. மைன்ஸ் அக்சன் நிறுவனத்தின் அதிகாரி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர் சி.சிவப்பிரகாசம், இத்தாவில் முகமாலை வேம்படுகேணி பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர். ![]() ![]() |
| எடியூரப்பாவிற்கு லோக் ஆயுக்தா சம்மன் Posted: 21 Apr 2012 08:07 AM PDT முறைகேடாக நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக, வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது இரு மகன்கள் உள்பட ஐந்து பேர் மீது லோக் ஆயுக்தா நீதிமன்றம் இன்று சம்மன் அனுப்பியுள்ளது. இம்மனுவை விசாரித்த நீதிபதி என்.கே.சுசீந்திரா ராவ், எடியூரப்பா உள்ளிட்ட ஐந்து பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். இவ்வழக்கை மே 24 ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இவ்வழக்கில் எடியூரப்பா, அவரது இரு மகன்களான ராகவேந்திரா மற்றும் விஜந்திரா, அவரது மருமகன் ஆர். என். சோகன் குமார், ஆதர்ஷ் குடியிருப்பு ப்ரமோட்டர் பி.எம். ஜெய்சங்கர் மற்றும் பி. எம். காருநிஷ் ஆகியோர்களை குற்றவாளிகளாக அம் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. |
| வடபகுதி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் Posted: 21 Apr 2012 08:06 AM PDT தற்போது, ஏற்பட்டுள்ள கால நிலைமாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாயப்பு ஏற்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை வேளையில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும், மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிற்கும் ஆங்காங்கே மழையினை எதிர் பார்க்க முடியும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சிலபகுதிகளில் மின்னல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. |
| அவுஸ்திரேலிய தூதரக பிரதிநிதிகளுடன் தமிழ் கூட்டமைப்பினர் யாழில் சந்திப்பு Posted: 21 Apr 2012 08:05 AM PDT அவுஸ்திரேலியாவின் இலங்கைத் தூத ரகத்தின் இரண்டாம் நிலைச் செயலாளர் நற்றலியா நேற்று யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடினார். மீள் குடியேற்றம், அபிவிருத்தி திட்டங்கள் போன்றன குறித்து அவருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் பேச்சாளார் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யுத்தத்தின் பின்னரான வடக்கின் நிலைப்பாடு, மீள்குடியேற்றத்துக்கான தாமதம், இராணுவப் பிரசன்னம் போன்றவை குறித்து தாம் விரிவாக விளக்கமளித்ததாக அவர் கூறினார். அவுஸ்திரேலியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராய தாம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததாக நற்றலியா கூறியுள்ளார். இச்சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா, சிறிதரன் மற்றும் பேராசிரியர் சிற்றம்பலம் சீ.வீ.கே. சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர். |
| சொத்து குவிப்பு வழக்கு: ஆவணங்கள் படித்து பார்க்க அனுமதி கோரிய ஜெ., சசிகலா மனு தள்ளுபடி Posted: 21 Apr 2012 08:05 AM PDT தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் தற்போது சசிகலாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை சசிகலாவிடம் 504 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் கேட்கப்படும் கேள்விகளுக்காக தனக்கு கூடுதல் ஆவணங்கள் அரசு தரப்பில் தரப்பட வேண்டுமென்று சசிகலா கோரியிருந்தார். இந்த கோரிக்கையை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வாக்குவாதங்களை கேட்டபின் ஆவணங்களை தர இயலாது என தீர்ப்பளித்து சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் சசிகலா, ஜெயலலிதா சார்பில் புதிய மனு ஒன்று கடந்த ஏப்ரல் 18-ந்தேதி கர்நாடக சிறிப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ஆவணங்கள் படித்து பார்க்கவாவது தங்களுக்கு அனுமதி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதனால் இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அரசு வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். நீதிபதி மல்லிகார்ஜூனையா முன்னிலையில் இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அரசு தரப்பு மற்றும் மனுதாரர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி, 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில், தற்போது ஆவணங்களைப் படித்துப் பார்க்க வேண்டும் என மனு அளித்திருப்பது ஏன்? என கேள்வி எழுப்பினார். |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |















