I tamil web |
- அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார்.
- கூட்டுக் குடும்பத்திற்கு இலக்கணம் சொல்லும் யாழ்ப்பாண தூக்கணாங் குருவிகள்! (படம் இணைப்பு)
- பிறந்து 3 நாட்களான குழந்தையைக் கடத்துவதற்காக தாயைக் கொன்ற கொடூரம்! (வீடியோ, படங்கள் இணைப்பு)
- கறுப்பு வெள்ளை காலத்திலேயே ஆடைகளை களையும் நடிகை! (வீடியோ இணைப்பு)
- பீப் பீப் ஓடி வாங்கோ பீட்சா ஸ்கூட்டர் வருகிது! (வீடியோ இணைப்பு)
- போட்டியில் குறுக்கிட்ட நீச்சல் வீரரால் நிறுத்தப்பட்ட படகுப்போட்டி! (படங்கள்,வீடியோ இணைப்பு)
- அடி ஆத்தி எம்மாம் பெரிய முயலு! (படங்கள் இணைப்பு)
- இலங்கையிலும் அதிசயம் - குஞ்சு ஒன்றை பெற்றெடுத்தது கோழி! (படம் இணைப்பு)
- குரங்கு குரங்கு என்றதால் குரங்காக மறிய இளம்பெண்! (வீடியோ இணைப்பு)
- ஹோட்டலில் தோன்றிய கொடிய பேய் உருவம்! (நகைச்சுவை வீடியோ)
- வை திஸ் கொலைவெறி? கறுப்பினப் பெண்ணின் பிறப்புறுப்பை அரிந்த சுவீடன் அமைச்சர். (படங்கள்,வீடியோ இணைப்பு)
- அந்தரங்கமான குடியிருப்பின் பெயரை மாற்ற வாக்கெடுப்பு! (படங்கள் இணைப்பு)
| Posted: 19 Apr 2012 08:37 AM PDT மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! இவ்வாறு தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளார் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வின்போது தெரிவித்தார். கேள்வி: இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்? பதில்: 1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள இராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்பம் உறங்காமல் தவித்துக் கிடந்தது. அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார். சிறுமியான என் மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு, மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல என்றார். எல்லோரும் துயரம் மறந்து சிரித்தோம். 1989 ஜூலை 24-ம் தேதி 'தி இந்து' நாளேட்டில், 'விடுதலைப்புலிகள் அமைப்பின் அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனின் உடல் வவுனியாவில் இருந்து வடகிழக்கே அனந்தர் பெரியகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு நாட்களாக பிரபாகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்' என்று செய்தி வெளியானது. அது பொய் என்பதைக் காலம் வெகுவிரைவிலேயே உணர்த்தியது. 2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது அதில் சிக்கி பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விலை உயர்ந்த சவப்பெட்டி தயாராக இருப்பதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இருந்து 10 நாட்கள் கழித்து நோர்வே நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலாளரைப் புன்னகை மாறாமல் சந்தித்தார் தம்பி. 2007-ம் ஆண்டு சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டது. அது பொய் என்பது பின்னர் உலகுக்குத் தெரியவந்தது. அவை எல்லாம் போலத்தான் இப்போதும். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். ஓர் உடலையும் காட்டினார்கள். ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்தவர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின்றனர். ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். எனது சொந்த விருப்பத்தில் இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! கேள்வி: இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா? பதில்: அது எங்கள் கொள்கை அல்ல. இப்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மாநில அரசுகள் கேவலம், நகராட்சிகளுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன. நிதி வசதியும் கிடையாது; அதிகாரமும் கிடையாது. மாநில அரசுகளை, மத்திய அரசு ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையை மாற்றி, பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா ஓர் உண்மையான கூட்டாட்சி நாடாக மாற வேண்டும். அதற்கு முதலில் இப்போது இருக்கும் இந்த அரசியல் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். வெளியுறவு, இராணுவம், ரூபாய் அச்சடித்தல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் வசம்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாநில சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களாக மாற வேண்டும். மாநிலங்கள் அளிக்கும் பங்குத் தொகையில்தான் மத்திய அரசு நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசு போடும் பிச்சைக் காசில் மாநில அரசு இயங்கக் கூடாது. இதுவே எங்கள் கொள்கை. மற்றபடி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, தனி நாடாக்க வேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல! கேள்வி: உலகம் முழுவதும் இன்று தமிழன் விரவிக்கிடக்கிறான். தமிழனின் ஆகப் பெரிய பலம் என்று எதைச் சொல்வீர்கள்? பதில்: உலகம் எங்கும் தமிழர்கள் விரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல இன்னோர் உண்மையும் இருக்கிறது. தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இந்த நிலையை மாற்ற உலகத் தமிழர்களுக்கு இடையேயான ஒற்றுமைதான் இன்றைய அவசரத் தேவை. அந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்தும் சக்தி தமிழுக்கு மட்டுமே உண்டு. ஓர் இனம் எப்போது தன் மொழியை இழக்கிறதோ, அப்போதே பண்பாட்டை இழக்கிறது; கலாசாரத்தை இழக்கிறது; வாழ்க்கை முறையை இழக்கிறது. எதிர்காலத்தை இழக்கிறது. நமக்கு தமிழ் தான் பலம். அந்த மொழி உணர்வை இழந்து விடாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் நாம் அனைவருமே முயற்சிக்க வேண்டும்! தொடர்ச்சி அடுத்த வாரம்…. நன்றி தாய்த்தமிழ் |
| கூட்டுக் குடும்பத்திற்கு இலக்கணம் சொல்லும் யாழ்ப்பாண தூக்கணாங் குருவிகள்! (படம் இணைப்பு) Posted: 19 Apr 2012 08:02 AM PDT |
| பிறந்து 3 நாட்களான குழந்தையைக் கடத்துவதற்காக தாயைக் கொன்ற கொடூரம்! (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 19 Apr 2012 07:26 AM PDT அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையின் தாயை சுட்டுக் கொன்று விட்டு, அக்குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையின் கார் பார்க்கிங் இடத்திற்கு அருகே வந்த ஒரு பெண், குழந்தையின் தாயிடம் சென்று தகராறு செய்துள்ளார்.இதன் பின் திடீரென அந்த குழந்தையின் தாயை நோக்கி சுட்டதில், அந்த இடத்திலேயே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனையடுத்து குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த பெண் தப்பித்து விட்டார். தகவல் அறிந்த பொலிசார் பல இடங்களிலும் சோதனையிட்டு தேடினார்கள். இதனால் குழந்தையை ஒரு இடத்தில் போட்டு விட்டு அந்த பெண் தலைமறைவானார், அதன் பின் குழந்தையை மீட்ட பொலிசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். |
| கறுப்பு வெள்ளை காலத்திலேயே ஆடைகளை களையும் நடிகை! (வீடியோ இணைப்பு) Posted: 19 Apr 2012 06:23 AM PDT இன்றைய காலகட்டத்தில்தான் இந்தியச் சினிமா எல்லை மீறி சமுதாயச் சீரழிவிற்கு காரமாக மாறுகின்றது என்ற கருத்து பலர் மத்தியில் காணப்படுகின்றனது. ஆனால் கறுப்பு வெள்ளைப் படங்கள் வெளிவந்த காலத்திலேயே ஒரு நடிகை தனது ஆடைகளை களைகின்றார். இதற்கு என்ன சொல்லப்போகின்றார்களோ தெரியவில்லை... அவங்க அப்பிடி இப்பிடித்தான் இருப்பாங்க நாங்கதான் ஐம்புலன்களையும் அடக்கி வேலி பாயாம இருக்க பழகிக் கொள்ள வேண்டும் பாருங்கோ. |
| பீப் பீப் ஓடி வாங்கோ பீட்சா ஸ்கூட்டர் வருகிது! (வீடியோ இணைப்பு) Posted: 19 Apr 2012 05:45 AM PDT |
| போட்டியில் குறுக்கிட்ட நீச்சல் வீரரால் நிறுத்தப்பட்ட படகுப்போட்டி! (படங்கள்,வீடியோ இணைப்பு) Posted: 19 Apr 2012 03:43 AM PDT தேம்ஸ் நதிக்கரையில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையில் வருடந்தோறும் இடம்பெற்றுவரும் படகுபோட்டியின்போது குறித்த நதியில் காணப்பட்ட நீச்சல் வீரர் காரணமாக படகுப்போட்டி நிறுத்தப்பட்டது.பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடம்பெற்ற இப்போட்டியின்போது நதியில் நீச்சலடித்துக்கொண்டிருந்த நபரை யாரும் அறிந்திருக்கவில்லை. படகுப் போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் நீர்மட்டத்திற்கு மேல் வந்த குறித்த நபரை போலீசார் கைது செய்ததுடன் படகுப்போட்டியும் நிறுத்தப்பட்டுள்ளது. |
| அடி ஆத்தி எம்மாம் பெரிய முயலு! (படங்கள் இணைப்பு) Posted: 19 Apr 2012 03:24 AM PDT |
| இலங்கையிலும் அதிசயம் - குஞ்சு ஒன்றை பெற்றெடுத்தது கோழி! (படம் இணைப்பு) Posted: 18 Apr 2012 10:02 PM PDT கோழி ஒன்று குஞ்சை ஈன்றெடுத்த சம்பவம் அதிசயம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது. அதாவது கோழி முட்டை போடுவதும், அதை அடைகாத்துக் குஞ்சு பொரிப்பதும்தான் வழமை.ஆனால் இலங்கையின் வெலிமட, கெந்திரிமுல்ல, நெடுங்கமுவ என்ற இடத்தில், ஈ.எம்.ரஞ்சித் என்பவர் வளர்த்து வந்த ஆறு கோழிகளில் ஒன்றே குஞ்சு ஒன்றை ஈன்று விட்டு இறந்து போயுள்ளது.இந்தக் கோழி இதுவரை முட்டையிடாமல் இருந்து வந்ததாகவும், நேற்று குஞ்சு ஒன்றை ஈன்ற பின்னர் இறந்து போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்க்கோழி இறந்த போதும், அது ஈன்ற குஞ்சு நலமாக உள்ளது.இத்தகையதொரு நிகழ்வை தாம் கேள்விப்பட்டதில்லை என்று கூறியுள்ள வெலிமட பிரதேச தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி பி.ஆர்.யாப்பா, கோழியே குஞ்சை ஈன்றதை உறுதி செய்துள்ளார்.கோழியின் உடலை பரிசோதனை செய்ததாகவும், அந்தக் கோழியின் உடலுக்குள் முட்டை அடைகாக்கப்பட்டு, குஞ்சு பொரித்த நிலையில் அது வெளிவந்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். |
| குரங்கு குரங்கு என்றதால் குரங்காக மறிய இளம்பெண்! (வீடியோ இணைப்பு) Posted: 18 Apr 2012 09:56 PM PDT ஜப்பானைச் சேர்ந்த Ito என்பவர் நான்கு கால்களில் பாயும் குரங்கு போல் தனது கால்களாலும் கைகளாலும் மிக வேகமாக குரங்கு போல் பாய்ந்து ஓடுகின்றார். உலகிலேயே நான்கு கால் பாச்சலில் மிகவும் வேகமாக ஓடக் கூடியவர் என உலக சாதனை படைத்துள்ளார். சிறு வயதிலிருந்து தனது உடல் அமைப்பு ஒரு குரங்கின் அமைப்பு போல் இருப்பதாக கூறி தன்னை பாடசாலையில் குரங்கு குரங்கு என பரிகாசம் செய்ததாகவும், அத்தோடு தனக்கும் குரங்குகளின் செயற்பாடுகளில் ஒரு ஆர்வம் இருந்ததாகவும் 8 வருடங்களாக தான் குரங்கு போல் பாய்ந்து ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றார்.குறையாக மற்றவர்கள் கேலி செய்த போதும் அதை ஒரு சாதனையாக மாற்றியிருக்கின்றார் Ito. பரிஸ்தமிழ்.கொம் வாசகர்களே. குறைகளை நிறையாக்கி சாதிக்கும் திறனை இவரிடம் இருந்து அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். வாழ்க்கை எனும் போராட்டத்தில் எமது பலவீனங்களையும் பலமாக்கும் வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள் என்றுமே நீங்கள் வெற்றியாளர்கள். |
| ஹோட்டலில் தோன்றிய கொடிய பேய் உருவம்! (நகைச்சுவை வீடியோ) Posted: 18 Apr 2012 05:33 PM PDT |
| Posted: 18 Apr 2012 05:29 PM PDT சுவீடன் நாட்டில் கறுப்பர்கள் வெள்ளையர்கள் என்ற பேதம் மோசமாக காணப்பட்டு வருகின்றது. இந் நிலையில் அந் நாட்டு கலாச்சார அமைச்சர் lena adelsohn liljeroth நிர்வாண பெண் வடிவிலான கேக் ஒன்றை வெட்டி சர்ச்சையில் மாட்டியுள்ளார்.கறுப்பின பெண் வடிவில் அமைந்திருந்த கேக்கின் பெண் உறுப்பு பகுதியில் கத்தியால் புன்முறுவலோடு கேக்கை வெட்டியுள்ளார். இச் சம்பவம் கடந்த 15 ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இச் சம்பவத்தினால் அமைச்சர் பதவி விலகவேண்டும் என்ற எதிர்ப்புகள் அதிகரித்துள்ளன. |
| அந்தரங்கமான குடியிருப்பின் பெயரை மாற்ற வாக்கெடுப்பு! (படங்கள் இணைப்பு) Posted: 18 Apr 2012 05:25 PM PDT |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























