சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- கமல் சொன்ன கரெக்சனில் 3
- பிரசவித்த பெண்களை ரிலாக்ஸாக்கும் மசாஜ்!
- பால் கேசர் பேடா
- சவூதியில் இலங்கைப் பெண் மாந்திரீகம்! மரண தண்டனை விதிக்கப்படுமா?
- இங்கிலாந்து இளம்பெண் அவதி : உடலில் குப்குப்பென்று அழுகிய மீன் நாற்றம்
- மட்டக்களப்பு மாநகரசபை வரவேற்பு பெயர்ப்பலகை மை ஊற்றி சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்!
- இலங்கை கிரிக்கெட்டை ஆட்டிபடைக்கும் அரசியல் தலையீடு: அர்ஜுன குற்றச்சாட்டு
- தம்பி நிச்சயம் தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! விகடன் மேடையில் பழ.நெடுமாறன்
- குரங்காக மாறிய பெண் (வீடியோ இணைப்பு)
- விடுவிக்கப்ட்ட முன்னாள் போராளிகள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை!-அமைச்சர் கஜதீர
- பாதுகாப்பரண் அகற்ற பணம் கேட்கும் படையினர்! மீளக் குடியமர்த்தப்பட்ட நாகர்கோயில் கிழக்கு மக்கள் புகார்!
- சிறையில் உள்ள உறவுகளின் உடமைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுங்கள்! பெற்றோர்கள் வேண்டுகோள்!
- வடமராட்சியில் காணாமல்போன இளைஞன் தற்கொலை செய்துள்ளார்! பிரேத பரிசோதனையில் உறுதி!
- 'முட்டையில்லாமல் கோழிக்குஞ்சு' ! மலையகத்தில் சம்பவம்!
- தேசத்தின் தாயை நினைவில் ஏந்துவோம்! தமிழர் நடுவம் - பிரான்ஸ்
- தீயில் கருகி பெண்ணொருவர் பலி: கல்முனையில் சம்பவம்
- எட்டு பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்
- உலகின் மிகப் பெரிய முயல் (படங்கள் இணைப்பு)
- இந்தியக் குழுவினர் பாராட்டுப் பத்திரம் வாசித்தனராம்- இலங்கை அரச தரப்பு பரப்புரை
- மத்திய வங்கியின் ஆண்டறிக்கை சுயாதீனமானதல்ல: ஹர்ஸ டி சில்வா
- இது சிறப்பு அகதி முகாம் அல்ல, சிறை முகாம்- தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் ஈழ அகதியின் குரல்
- சட்ட விரோதமாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப அரசு நடவடிக்கை
- திருடப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் மீட்பு: சந்தேக நபர்கள் இருவர் கைது
- தாயை சுட்டுக் கொன்று விட்டு பிறந்து 3 நாட்களேயான பச்சிளம் குழந்தை கடத்தல் (வீடியோ, படங்கள் இணைப்பு)
- இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.வந்த இந்திய பாராளுமன்ற குழுவிடம் மகஜர்
| Posted: 19 Apr 2012 09:06 AM PDT FILEபாபா படத்தின் போது விநியோகஸ்தர்கள் நஷ்டக் கணக்கு காண்பித்து வீட்டு முன் க்யூ நின்றதை ரஜினி மறக்கவில்லை. 3 படத்தின் நஷ்டத்துக்கு ரஜினி பணம் தருவார் என யாரோ பற்ற வைக்க பதறிப் போய் உடனே அறிக்கைவிட்டார் சூப்பர் ஸ்டார். அந்தப் படத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. வடஇந்தியப் பத்திரிகைகள் இதனை பூதாகரமாக்கியதுதான் தனுஷால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியில் அறிமுகமாகும் இந்த நேரத்தில் மருமகன் கடனை அடைத்த மாமனார் என பிரபல நாளிதழ்களே செய்தி வெளியிட்டால்...? கடவுள் புண்ணியத்தில் எந்த நஷ்டத்தையும் என்னால் பார்த்துக் கொள்ள முடியும். தேவையில்லாமல் ரஜினியை இதில் இழுக்காதீர்கள் என காட்டமாக கூறியிருக்கிறார். இந்த நஷ்டக் கணக்கு நேரத்தில் இந்தியில் படம் வெளிவருமா என்று கூடுதல் கடுப்படித்திருக்கிறார்கள் சிலர். தமிழ், தெலுங்கில் தோல்வியை சந்தித்தப் படம் இந்தியில் மட்டும் பாக்ஸ் ஆஃபிஸை கலக்கவாப் போகிறது? இதற்கு பதிலளித்த தனுஷ், கமல் இரண்டாம் பகுதியில் சொன்ன கரெக்சனை சரி செய்து இந்தியில் படத்தை வெளியிடுவோம் என்றார். |
| பிரசவித்த பெண்களை ரிலாக்ஸாக்கும் மசாஜ்! Posted: 19 Apr 2012 09:03 AM PDT குழந்தையை பெற்றெடுத்த தாய்மார்களுக்கு மனரீதியாவும், உடல்ரீதியாகவும் ஒருவித அயர்ச்சி ஏற்படும். இதற்கு காரணம் உடல் வலியும், உடல் வடிவம் மாறிவிட்டதே என்ற கவலையும் தான். எனவே பிரசவித்த பெண்களுக்கு சில மசாஜ் செய்தால் அது மனரீதியாகவும் ரிலாக்ஸ் ஏற்படும் என்கின்றனர் மகப்பேறு நிபுணர்கள். ரிலாக்ஸ் கிடைக்கும் பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டுமே என்று ஒரு வித பதற்றம் ஏற்படும். இதை தவிர்க்க பிரசவத்திற்குப் பின்னர் செய்யப்படும் மசாஜ் மனதிற்கும், உடலுக்கும் ரிலாக்ஸ் தரும். உடல்வலிக்கு தீர்வு கால், தொடை, கழுத்து, முதுகுப்புறம் போன்ற இடங்களில் பிரசவத்திற்குப் பின்னர் ஒரு வித வலி ஏற்படும். இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்லும் முன் கணவரிடம் சொல்லி மசாஜ் செய்து கொள்வதன் மூலம் வலிக்கு நிவாரணம் கிடைக்கும். நன்றாக உறக்கம் வரும். தாய்பால் அதிகரிக்கும் மசாஜ் செய்வதன் மூலம் உடலில் ரத்த ஓட்டம் சீராகும், உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் கிடைக்கும். குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் உற்பத்தி அதிகமாகும். உடலில் ஆங்காங்கே தடைகள் இருந்தாலும் அவை நீங்கும். லூசான தசைகள் இருக்கமடையும். தழும்புகள் நீங்கும் மசாஜ் செய்வதன் மூலம் உடலில் ஏற்பட்ட தழும்புகள் நீங்கும். பிரசவகாலத்தில் தோலில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். ரெகுலராக மசாஜ் செய்வதன் மூலம் குண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறையும். தோலில் உள்ள இறந்த செல்கள் உதிர்ந்து புரிய செல்கள் தோன்றும். |
| Posted: 19 Apr 2012 08:21 AM PDT தேவையான பொருட்கள் பால் - 1லிட்டர் சர்க்கரை - 2கப் குங்குமப்பூ - சிறிதளவு சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன் பிஸ்தா, முந்திரி - 20 கேசர் பேடா செய்முறை பாலை நன்றாகக் கொதிக்க வைத்து, அரை லிட்டர் ஆகும் வரை சுண்ட விடவும். இதில் சர்க்கரையைப் போட்டு நன்கு கிளறவும். சர்க்கரை நன்கு கரைந்து பால் தோசை மாவு பதத்தில் திக்காக வந்ததும் அதில் 2 சிட்டிகை குங்குமப்பூவைப் போட்டுக் கலக்கவும். இதனுடன் தண்ணீரில் கரைத்த சோளமாவை சேர்த்துக் கிளறவும். கை விடாமல் கிளறவேண்டும். பால் நன்கு சுருண்டு வரும். |
| சவூதியில் இலங்கைப் பெண் மாந்திரீகம்! மரண தண்டனை விதிக்கப்படுமா? Posted: 19 Apr 2012 08:11 AM PDT சவூதி அரேபியாவில் சிறுமி ஒருவருக்கு மாந்தீரிகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கை பெண்ணொருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினர் பொருட் கொள்வனவிற்கு சென்ற சந்தர்ப்பத்தில் அவர்களின் 13 வயது சிறுமியை வசியம் செய்ய முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகள் திடீரென வழமைக்கு மாறான செயல்கள் ஈடுபட்டதாக சவுதி அரேபியர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜித்தா நகரிலுள்ள வர்த்த நிலையமொன்றில் குறித்த இலங்கை பெண் அருகில் வந்த பின்னரே தனது குழந்தைக்கு இந்த நிலைமை ஏற்பட்டதாக முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். மந்திரவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் சவூதி அரேபியாவில், குறித்த பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பலாம் என சவூதி அரேபிய பொலிஸாரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த இலங்கை பெண் கைது செய்யப்பட்டுள்ளதை அந்த நாட்டு பொலிஸார் உறுதிசெய்துள்ளதாக ரொய்ட்டர் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாந்திரீக குற்றங்களுக்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு சர்வதேச மன்னிப்பு சபை கடந்த டிசம்பர் மாதம் கண்டனம் வெளியிட்டிருந்தது. இவ்வாறான குற்றச்சாட்டில் சூடானைச் சேர்ந்த பிரஜையொருவருக்கு சவூதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. |
| இங்கிலாந்து இளம்பெண் அவதி : உடலில் குப்குப்பென்று அழுகிய மீன் நாற்றம் Posted: 19 Apr 2012 08:10 AM PDT இங்கிலாந்தின் யார்க் பகுதியை சேர்ந்தவர் கிளாரி ரோடஸ் (34). திருமணமாகி, 4 குழந்தைகளை பெற்றெடுத்தவர். இவருக்கு ஒரு பாதிப்பு. உடலில் இருந்து திடீர் திடீரென அழுகிய மீன் நாற்றம் வீசும். சுற்றி இருப்பவர்கள் அலறி ஓடுவார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக இவருக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. இதுபற்றி கிளாரி கூறியதாவது: 20 வயது முதல் இந்த பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறேன். ஆரம்பத்தில் குப்பென்று நாற்றம் வீசியது. வியர்வை, சிறுநீர் மட்டுமின்றி மூச்சு காற்றுகூட அழுகிய மீன் நாற்றம் அடிக்கும். எனக்கே பொறுக்க முடியவில்லை. வாய், பல்லில் இருந்து வருவதாக நினைத்தேன். பல் டாக்டரிடம் காட்டினேன். ஒரு பிராப்ளமும் இல்லை என்றார். ஆனாலும், வாயில் இருந்துதான் நாற்றம் வருவதாக உறுதியாக நம்பினேன். நாற்றம் தாங்காமல் ஒரு நாளுக்கு 20 முறை பல் துலக்கினேன். ஆனாலும், நாற்றம் நிற்கவில்லை. பற்களை பிடுங்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில், கடுமையாக பல் வலிப்பதாக கூறினேன். சில பற்களையும் டாக்டர் பிடுங்கினார். அதற்கு பிறகும் நாற்றம் தொடர்ந்தது. நான் போகும் இடங்களில் எல்லாரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள். வேலை போனது.உடல் துர்நாற்றம் என்று கருதி தினமும் 10 முறைக்கு மேல் வாசனை சோப் போட்டு குளிப்பேன். அதையும் மீறி நாற்றம் அடிக்கும். மனஉளைச்சலில் தற்கொலைக்குகூட முயன்றேன். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், எதேச்சையாக டிவி பார்க்கும்போது, சிலர் இதுபோல வித்தியாசமான மீன்நாற்ற நோயால் பாதிக்கப்படுவதாக கூறினார்கள். எனக்கும் அந்த பாதிப்புதான் ஏற்பட்டிருக்கிறது என தெரிந்துகொண்டேன். டாக்டரிடம் காட்டினேன். டிரைமெத்திலமின்யூரியா (டிஎம்ஏயு) என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறினார். ஸ்டிராபெர்ரி, பேரிக்காய், கேரட், உருளை உள்பட சில வகை கிழங்குகள் தவிர வேறு எதுவும் சாப்பிட கூடாது என்று கூறிவிட்டார். படிப்படியாக நாற்றம் போய்விட்டது. உடல் எடையும் கணிசமாக குறைந்திருக்கிறேன். உடல் நாற்றம் போய்விட்டதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேன், அரிசி, புதிய பிரெட் ஆகியவை கொஞ்சம் சாப்பிடலாம். இந்த டயட்டை மீறினால் திரும்பவும் மீன்நாற்றம் வந்துவிடும் என்று டாக்டர் எச்சரித்திருக்கிறார். இவ்வாறு கிளாரி கூறியுள்ளார். |
| மட்டக்களப்பு மாநகரசபை வரவேற்பு பெயர்ப்பலகை மை ஊற்றி சேதமாக்கப்பட்டமைக்கு கண்டனம்! Posted: 19 Apr 2012 08:09 AM PDT மட்டக்களப்பு - காத்தான்குடி எல்லைப் பகுதியில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்ட வரவேற்பு பெயர்ப்பலகை மை ஊற்றி சேதமாக்கப்பட்டது தொடர்பில் காத்தான்குடியில் உள்ள அதிருப்தியாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தலையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் மாநகர ஆணையாளர் சிவநாதன், உதவி முதல்வர் ஜோர்ஜ்பிள்ளை, காத்தான்குடி பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவரும் மீரா ஜும்மா பள்ளிவாசல் தலைவருமான அல்காஜ் சுபைர், காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்வர், மீரா ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஐ.எல்.சபீர் உட்பட பள்ளிவாசல், மட்டக்களப்பு மாநகரசபை பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்போது கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் மட்டக்களப்பு - காத்தான்குடி எல்லையில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு பெயர்ப்பலகை இனந்தெரியாத விஷமிகளால் அகற்றப்பட்டு அது மீண்டும் அமைக்கப்பட்டிருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் அந்த வரவேற்பு பெயர்ப்பலகை மீது கறுப்பு மை ஊற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்த கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் மீண்டும் அதே இடத்தில் புதிய வரவேற்பு பலகை நிறுவுவதெனவும் அதற்கு காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடியின் மக்கள் பிரதிநிதிகளை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தும் இவ்வாறான செயல்களை வன்மையாக கண்டிப்பதாக இங்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன், யார் தடுத்தாலும் அவ்விடத்தில் வரவேற்பு பலகை மீண்டும் நிறுவப்படும் என தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த 30 வருடகாலத்தில் இரு சமூகமும் பல்வேறுபட்ட முரண்பாடுகளில் இருந்து விடுபட்டு இன்று ஒரு சிறந்த நிலையினை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் அதனை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே நோக்கவேண்டியுள்ளது. ஒரு சில விசமிகளால் மஞ்சந்தொடுவாய் எல்லையில் மட்டக்களப்பு மாநகரசபையினால் அமைக்கப்பட்டிருந்த "வணக்கம், மட்டக்களப்பு உங்களை வரவேற்கின்றது" என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருந்தது. வணக்கம் என்ற வார்த்தை கராம் என்று கூறியே அந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டிருந்தது. என்றாலும் பல இஸ்லாமிய சகோதரர்கள் அது குறித்து ஆதங்கப்பட்டனர். அவ்வாறு வணக்கம் என்றும் சொல்லும் வார்த்தை கராம் இல்லை. இது சில விஷமிகளின் விடயமாக உள்ளது. இதனை ஒரு சமூகத்தின் பெரியவர்கள் என்ற வகையில் இதனை அனுமதிக்க முடியாது என்று என்னிடம் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் காத்தான்குடியில் உள்ள பல்வேறு அமைப்பினருடனும் கதைத்து காத்தான்குடி நகரசபைக்கு எழுத்து மூலம் அறிவித்து ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் "வணக்கம், மட்டக்களப்பு உங்களை வரவேற்கின்றது" என்ற பெயர்ப்பலகை மீண்டும் நடப்பட்டது. எனினும் மிகவும் மனம் வருந்தத்தக்க வகையில் ஒரு சில தினங்களுக்கு முன்னர் அந்த பெயர்ப்பலகையில் மை ஊற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதானது மிகவும் வருந்தத்தக்க செயலாகவுள்ளது என்றார். ![]() |
| இலங்கை கிரிக்கெட்டை ஆட்டிபடைக்கும் அரசியல் தலையீடு: அர்ஜுன குற்றச்சாட்டு Posted: 19 Apr 2012 08:07 AM PDT அரசியல்வாதிகள் தங்களுடைய வெற்றிக்காக இலங்கை கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தி வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதையை பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். துபாயில் இடம்பெற்ற சியாம் பாத்தியா விருது விழாவில் கலந்து கொண்டு ´கொல்ப் செய்திச் சேவை´க்கு கருத்து தெரிவித்த போதே அர்ஜுன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். "இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு அதிகரித்துள்ளமையே பிரதான விடயம். ஜனாதிபதி தொடக்கம் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு காணப்படுவது நம்பமுடியாத ஒன்றாகும். எனது கிரிக்கெட் காலத்தில் அரசியல்வாதிகளின் வெற்றிக்கு கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தப்படுவதை நான் அனுமதிக்கவில்லை." "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இரண்டாவது தடவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது கிரிக்கெட் வீரர்களை தனது வெற்றி விளம்பரத்துக்காக பயன்படுத்தினார். தற்போது ஜனாதிபதி, அமைச்சர்கள் என பலர் கிரிக்கெட்டில் தலையீடு செய்கின்றனர். விளையாட்டுத்துறை அமைச்சர் எல்லா விடயங்களிலும் விரல் நுழைக்கிறார். இதுதான் இலங்கையின் கிரிக்கெட்துறை வீழ்ச்சிக்குக் காரணம்." என அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் ´ஆமாம்´ என தலைசாய்ப்பவர்களே இலங்கை கிரிக்கெட் சபையை நடத்திச் செல்வதாக அர்ஜுன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். "நான் கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்தபோது அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அரசியல் விழாவிற்கான நிதியை செலுத்துமாறு கோரினார். நான் அதனை மறுத்துவிட்டேன். சிலர் நாம் செலுத்த வேண்டும் எனக்கூறினர். எனினும் கிரிக்கெட் பணம் கிரிக்கெட்டுக்கே செலுத்தப்பட வேண்டும் எனவும் அரசியல் வாதிகளின் சந்தோஷத்துக்கு அல்ல எனவும் நான் கூறினேன்." இவ்வாறு அர்ஜுன குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டை வர்த்தகமாக, முதலீடாக நினைப்பவர்கள் இருப்பதனால் கிரிக்கெட் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்து செல்வதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். |
| தம்பி நிச்சயம் தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! விகடன் மேடையில் பழ.நெடுமாறன் Posted: 19 Apr 2012 08:06 AM PDT மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! இவ்வாறு தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளார் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வின்போது தெரிவித்தார். கேள்வி: இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று பலரும் சொல்கின்றனர். ஆனால், நீங்களோ பிரபாகரன் உயிரோடு இருப்பதாகத் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். ஏன்? பதில்: 1984-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி சிங்கள இராணுவம் பிரபாகரனைச் சுட்டுக் கொன்றுவிட்டதாகச் செய்தி வெளியானது. உலகத் தமிழர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். எங்கள் குடும்பம் உறங்காமல் தவித்துக் கிடந்தது. அடுத்த நாள் காலை மதுரையில் என் வீட்டு முன்பாக ஒரு ஜீப் வந்து நின்றது. பிரபாகரன் சிரித்துக்கொண்டே இறங்கி வந்தார். சிறுமியான என் மகள் உமாவை இழுத்து அணைத்துக்கொண்டு, மாமாதான் வந்திருக்கிறேன். மாமாவின் ஆவி அல்ல என்றார். எல்லோரும் துயரம் மறந்து சிரித்தோம். 1989 ஜூலை 24-ம் தேதி 'தி இந்து' நாளேட்டில், 'விடுதலைப்புலிகள் அமைப்பின் அடுத்த நிலையில் உள்ள மாத்தையா குழுவினரால் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டார். பிரபாகரனின் உடல் வவுனியாவில் இருந்து வடகிழக்கே அனந்தர் பெரியகுளம் கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இரு நாட்களாக பிரபாகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்' என்று செய்தி வெளியானது. அது பொய் என்பதைக் காலம் வெகுவிரைவிலேயே உணர்த்தியது. 2004-ம் ஆண்டு சுனாமி வந்தபோது அதில் சிக்கி பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடலை எடுத்துச் செல்ல விலை உயர்ந்த சவப்பெட்டி தயாராக இருப்பதாகவும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதில் இருந்து 10 நாட்கள் கழித்து நோர்வே நாட்டின் வெளியுறவுத் துறைச் செயலாளரைப் புன்னகை மாறாமல் சந்தித்தார் தம்பி. 2007-ம் ஆண்டு சிங்கள விமானப் படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் இலங்கைப் பாதுகாப்புத் துறை செய்தி வெளியிட்டது. அது பொய் என்பது பின்னர் உலகுக்குத் தெரியவந்தது. அவை எல்லாம் போலத்தான் இப்போதும். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவித்தார்கள். ஓர் உடலையும் காட்டினார்கள். ஆனால், மே 30-ம் தேதி வரை அவரது பாதுகாவல் படையில் இருந்தவர்களைச் சந்தித்துப் பேசும்போது, மே 17-ம் தேதி பிரபாகரனுக்கு எதுவும் நடந்து விடவில்லை என்பதை உறுதி செய்கின்றனர். ஆகவே, மரணத்தை வென்ற அந்த மாவீரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதை நம்பத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் முந்தைய வரலாறுகளில் இருந்தே பேசுகிறேன். எனது சொந்த விருப்பத்தில் இருந்து அல்ல! தம்பி நிச்சயம் ஒரு நாள் வருவார். தமிழீழ விடுதலைக்கு மறுபடியும் தலைமை தாங்குவார்! கேள்வி: இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கொள்கையா? பதில்: அது எங்கள் கொள்கை அல்ல. இப்போதைய இந்திய அரசியல் சட்டத்தின்படி, எல்லா அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மாநில அரசுகள் கேவலம், நகராட்சிகளுக்குச் சமமாக மதிக்கப்படுகின்றன. நிதி வசதியும் கிடையாது; அதிகாரமும் கிடையாது. மாநில அரசுகளை, மத்திய அரசு ஆட்டிப்படைக்கிறது. இந்த நிலையை மாற்றி, பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் இந்தியா ஓர் உண்மையான கூட்டாட்சி நாடாக மாற வேண்டும். அதற்கு முதலில் இப்போது இருக்கும் இந்த அரசியல் சட்டத்தை அப்புறப்படுத்த வேண்டும். வெளியுறவு, இராணுவம், ரூபாய் அச்சடித்தல் போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே மத்திய அரசிடம் இருக்க வேண்டும். மீதி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசின் வசம்தான் இருக்க வேண்டும். அந்தந்த மாநில சட்டமன்றங்கள் நாடாளுமன்றங்களாக மாற வேண்டும். மாநிலங்கள் அளிக்கும் பங்குத் தொகையில்தான் மத்திய அரசு நடத்தப்பட வேண்டுமே தவிர, மத்திய அரசு போடும் பிச்சைக் காசில் மாநில அரசு இயங்கக் கூடாது. இதுவே எங்கள் கொள்கை. மற்றபடி, இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதோ, தனி நாடாக்க வேண்டும் என்பதோ எங்கள் கொள்கை அல்ல! கேள்வி: உலகம் முழுவதும் இன்று தமிழன் விரவிக்கிடக்கிறான். தமிழனின் ஆகப் பெரிய பலம் என்று எதைச் சொல்வீர்கள்? பதில்: உலகம் எங்கும் தமிழர்கள் விரவிக்கிடக்கிறார்கள் என்பது உண்மைதான். அதேபோல இன்னோர் உண்மையும் இருக்கிறது. தமிழன் இல்லாத நாடு இல்லை. ஆனால், தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இந்த நிலையை மாற்ற உலகத் தமிழர்களுக்கு இடையேயான ஒற்றுமைதான் இன்றைய அவசரத் தேவை. அந்த ஒற்றுமையைச் சாத்தியப்படுத்தும் சக்தி தமிழுக்கு மட்டுமே உண்டு. ஓர் இனம் எப்போது தன் மொழியை இழக்கிறதோ, அப்போதே பண்பாட்டை இழக்கிறது; கலாசாரத்தை இழக்கிறது; வாழ்க்கை முறையை இழக்கிறது. எதிர்காலத்தை இழக்கிறது. நமக்கு தமிழ் தான் பலம். அந்த மொழி உணர்வை இழந்து விடாமல் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும் வளர்த்தெடுக்கவும் நாம் அனைவருமே முயற்சிக்க வேண்டும்! |
| குரங்காக மாறிய பெண் (வீடியோ இணைப்பு) Posted: 19 Apr 2012 08:04 AM PDT ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Ito என்ற பெண் குரங்கு போல் தனது கால்களாலும், கைகளாலும் மிக வேகமாக பாய்ந்து ஓடுகின்றார், மேலும் வேகமாக ஓடக்கூடியவர் என்பதில் இவர் கின்னஸ் சாதனையும் புரிந்துள்ளார். சிறு வயதிலிருந்து தனது உடல் அமைப்பு ஒரு குரங்கின் அமைப்பு போல் இருப்பதாக கூறி தன்னை பாடசாலையில் குரங்கு குரங்கு என பரிகாசம் செய்ததாகவும், அத்தோடு தனக்கும் குரங்குகளின் செயற்பாடுகளில் ஒரு ஆர்வம் இருந்ததாகவும் 8 வருடங்களாக தான் குரங்கு போல் பாய்ந்து ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றார். குறையாக மற்றவர்கள் கேலி செய்த போதும் அதை ஒரு சாதனையாக மாற்றியிருக்கின்றார் Ito. |
| விடுவிக்கப்ட்ட முன்னாள் போராளிகள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை!-அமைச்சர் கஜதீர Posted: 19 Apr 2012 08:04 AM PDT வவுனியாவில் இன்று முன்னாள் போராளிகள் அவர்களின் குடும்பத்தினருடன் தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழாவினை கொண்டாடுவதற்கான விளையாட்டு விழாவை சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழவில் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் கஜதீர, அரச தகவல் தினைக்கள இயக்குனர் மற்றும் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு அமைச்சின் ஆலோசகர் சதீஸ்குமார் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை தலைவர் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர். நீண்ட காலத்தின் பின்னர் முன்னாள் போராளிகள் 700 பேர் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வவுனியா நகரசபை மைதானத்தை சுற்றிலும் இருந்து கதைத்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் குறித்த 700 முன்னாள் போராளிகளும் நீதிமன்ற தண்டனையைப் பெற்று புனருத்தாரண நிலையங்களில் தடுத்து வைக்கப்ட்டுள்ளனர். இந்த 700 பேரும் அடுத்த ஆண்டு விடுதலைசெய்யப்படவிருக்கின்றார்கள். அவர்கள் எப்போது விடுதலை செய்யப்டவுள்ள திகதியையும் அவர்கள் அறிந்திருப்பதால் மகிழ்ச்சியாக காணப்பட்டனர் இந் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போது புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணைக்கப்ட்ட முன்னாள் போராளிகள் எவரும் சட்டவிரோத நடவடிக்கையிலோ குற்ற செய்யும் செயற்பாட்டையோ செய்யாது சமூகத்திலே நல்ல பிரஜைகளாக வாழ்வதாக பாராட்டு தெரிவித்த போது முன்னாள் போராளிகள் கை தட்டி மகிழ்ச்சி வெளியிட்டனர் புலம்பெயர் தமிழர்களே இலங்கையில் நிலவும் நல்லிணக்கத்தை குழப்புவதாக குற்றம் சுமத்திய அமைச்சர் கஜதீர தமிழ் பேசத் தெரியாத புலம்பெயர் தமிழர்களும் இதில் அடங்குவதாக குற்றம் சுமத்தினார். முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் தொழில்வாய்ப்பிற்கும் 300 மில்லியன் நிதியும் ஒதுக்கப்ட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்நாள் போராளியொருவர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே தாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் எனவே தாம் விடுதலையாகும் திகதியும் தமக்கு தெரியுமென குறிப்பிட்ட அவர் விடுதலையின் பின்னர் தமது தொழில் நடவடிக்கைக்கு அரசு நிதி உதவியினை செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார். ![]() ![]() ![]() ![]() ![]() |
| Posted: 19 Apr 2012 08:02 AM PDT கடந்த 06.04.2012 அன்று மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் நாகர்கோவில் கிழக்கு கிராமத்தில் கைவிடப்பட்ட இராணுவ பாதுகாப்பு அரண்களை அகற்றுவதற்கு மீளக்குடியமர்ந்த மக்களிடம் இராணுவம் பணம் கேட்பதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். ஆனால் அதுபோன்ற முறைப்பாடுகள் எதுவும் தனக்குக் கிடைக்கவில்லை என்று மருதங்கேணி உதவி அரச அதிபர் கூறுகிறார். நாகர்கோயில் கிழக்கு கிராம மக்களின் வீடுகள் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு அரண்கள், காவலரண்கள் ஆகியவற்றை அகற்றுவதற்கு இராணுவம் மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதாகத் தெரிய வருகிறது. இராணுவத்தினர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஐந்நூறு ரூபா கொடுத்தால் காவல் அரண்கள் அகற்றித் தரப்படும் என்று கூறுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர். மிதிவெடி அபாயம் மற்றும் ஆளணி வளம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பணத்தைக் கொடுத்தாவது இராணுவத்தின் உதவியைப் பெறவேண்டி இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். அண்மையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட இந்த மக்கள் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள். இதனால் காவல் அரண்களை அகற்றுவதில் பெரும் சிரமம் அடைகின்றனர். இந்த விடயம் தொடர்பாக மருதங்கேணி உதவி அரச அதிபர் திரு. ந. திருலிங்கநாதன் தெரிவிக்கையில், கடந்த ஆறாம் திகதி மக்களை மீளக்குடியமர்த்தும் போது 15 நாட்களுக்குள் பாதுகாப்பு அரண்களை அகற்றித் தருவோம் என்று தெளிவாக அறிவித்திருந்தோம். மக்கள் மீளக்குடியமர்ந்த மறுநாளே பாதுகாப்பு அரண்களை அகற்றுவதற்கான முயற்சிகளை எமது உதவி அரச அதிபர் பணிமனை மேற்கொண்டது. எனினும் ஏற்ற கனரக வாகனம் கிடைக்காததன் காரணமாக உடனடியாக முடியவில்லை. இருந்தும் நேற்று புதன்கிழமை தொடக்கம் அவற்றை அகற்றுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. இராணுவம் பணம் பெறுவது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியவரவில்லை. மக்களுக்கு நாம் வழங்கிய 15 நாட்கள் கால அவகாசத்தினுள் அவர்கள் தாமாக பாதுகாப்பு அரணை அகற்றுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர் என்றார் |
| சிறையில் உள்ள உறவுகளின் உடமைகளை மீட்டுத்தர நடவடிக்கை எடுங்கள்! பெற்றோர்கள் வேண்டுகோள்! Posted: 19 Apr 2012 08:01 AM PDT மகசின் சிறைச்சாலையில ஏற்பட்ட கலவரத்தினால் தொலைந்துபோன பொருட்களை மீட்டுத் தரும்படி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மகசின் சிறைச்சாலையில 24.01.2012 ஆம் திகதி ஏற்பட்ட கலவரத்தினால் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 220 தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்புக் கருதி களுத்துறைச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் பெறுமதியான ஆவணங்களும் பொருட்களும் தொலைந்து போயிருந்தது. இந்தப் பொருட்களை மீட்டுத் தரும்படி தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். கடிதத்தின் முழுவிபரம் வருமாறு. கெளவரவ சிறைச்சாலைகள் மற்றும் புணர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் 35,A Dr. N.M பெரேரா மாவத்தை பொரல்ல கொழும்பு 08. 19.04. 2012 கெளவரவ அமைச்சர். மற்றும் ஆலோசகர். அவர்களுக்கு. 24. 01. 2012 அன்று மகசின் சிறைச்சாலையில் நடைபெற்ற கலவரத்தில் 220 தமிழ் அரசியல் கைதிகள் பாதுகாப்புக் கருதி களுத்துறைச் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அப்போது சிறை அதிகாரிகள் அவர்களை எந்த உடமைகளையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. அச் சந்தர்ப்பத்தில் ஏனைய சிங்களக் கைதிகள். எமது உறவுகளை தடுத்து வைத்திருந்த அறைக்குள் புகுந்து பெருந்தொகையான அத்தனை பொருட்களையும் சூறையாடிச் சென்றதாக எமது பிள்ளைகளை நாம் பார்வையிடச் சென்ற பொழுது எம்மிடம் மேற்படி விடயத்தைக் கூறினர். அத்தோடு சிறைச்சாலையின் களஞ்சிய சாலையில் வைக்கப்பட்டிருந்த 46 தேசிய அடையாள அட்டைகள், மற்றும் 08 கடவுச் சீட்டு, 10 சாரதி அனுமதிப் பத்திரம், 06 தொழில்சார் அனுமதிப் பத்திரம், 11 பவுண் தங்கம், ஒரு இலச்சத்தி எழுபத்தையாயிரம் ரூபா பணமும் ஆவணப்படுத்தி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டிருந்தது. அதற்கும் என்ன நடந்ததென்று தெரியாமல் உள்ளது என்று எங்கள் பிள்ளைகள் கூறினார்கள். இவ்விடயம் தொடர்வாக பலமுறை சம்பந்தப்பட்ட சிறை அதிகாரியிடம் இவ் ஆவணங்கள் மிகப் பெறுமதி மிக்கவை. ஏற்கனவே யுத்ததிலும் நாங்கள் இதுபோன்று பல ஆவணங்களை இழந்து இன்னும் அதைப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். எனவே எங்களது பிள்ளைகளின் ஆவணங்களை பெற்றுத்தரும்படி சிறை அதிகாரியிடம் பல முறை முறையிட்டிருந்தோம். மூன்று மாதங்களாகியும் எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. இது விடயமாக ஒரு சில அரசியல் பிரமுகர்களிடமும் உங்கள் அமைச்சின் இடத்திலும் வேண்டியிருந்தோம். அதற்கும் இதுவரை எவ்விதமான முன்னேற்றங்களும் காணப்படவில்லை. எனவே! மேற்கண்ட விடயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் எடுத்து இவ் ஆவணங்களை சிரமம் இல்லாமல் பெற்றுக் கொள்வதற்கு விரிவான விசாரணையை மேற்கொண்டு அவர்களுடைய ஆவணங்களையும் உடமைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கெளரவ அமைச்சர் இடத்திலும் அவருடைய ஆலோசகர் இடத்திலும் பணிவாக வேண்டி நிற்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள். இதன் மூலப் பிரதி சிறைச்சாலைகள் அமைச்சர், இணைப் பிரதி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், நீதி அமைச்சர் அவர்களுக்கும். |
| வடமராட்சியில் காணாமல்போன இளைஞன் தற்கொலை செய்துள்ளார்! பிரேத பரிசோதனையில் உறுதி! Posted: 19 Apr 2012 08:00 AM PDT யாழ். வடமராட்சிப் பிரதேசத்தின் தொண்டமனாறு, செல்வச்சந்நிதி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இனைஞன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்ட தடயங்கள், சாட்சியங்களின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இளைஞன் கடந்த 13 ஆம் திகதி அதாவது புதுவருடத்தன்று மாலை காணாமல் போயுள்ளதாக குறித்த இளைஞனின் பெற்றோரினால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் தொண்டமனாறு பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்தில் இருந்து இந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் குறித்த சடலம் அண்மையில் காணாமற்போன சிவலிங்கம் சிவகுமாரன் என்ற 18 வயதுடைய இளைஞனின் சடலமெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். |
| 'முட்டையில்லாமல் கோழிக்குஞ்சு' ! மலையகத்தில் சம்பவம்! Posted: 19 Apr 2012 07:59 AM PDT இலங்கையில் ஒரு கோழி முட்டை போடாமல் நேரடியாக கோழிக்குஞ்சை ஈன்றதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இலங்கையின் மலையகப் பகுதி ஒன்றைச் சேர்ந்த ரஞ்சித் ஏக்கநாயக்க என்பவரின் 6 கோழிகளில் ஒன்று முட்டை எதுவும் இடாமல் இருந்து வந்திருக்கிறது. ஆனால், திடீரென ஒரு நாள் அந்தக் கோழி நேரடியாக ஒரு குஞ்சை ஈன்றெடுக்கவே அவருக்கு அது பெரும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அந்தக் குஞ்சைச் சுற்றி முட்டையோ, அதன் கோதோ இல்லாமல் முழுமையாக வளர்ந்த குஞ்சாக அது இருந்துள்ளது. அந்த தாய் கோழி இறந்துவிட்டாலும், குஞ்சு உயிர் தப்பித்து விட்டது. இந்த மாதிரி முட்டையில்லாமல் நேரடியாக குஞ்சு வந்தது குறித்து தான் இதற்கு முன்னர் எப்போதும் கேள்விப்பட்டதே கிடையாது என்று அந்தப் பகுதி மிருக வைத்தியர் கூறியுள்ளார். அந்தக் கோழியை பரிசோதனை செய்த அவர், அதனது இனப்பெருக்க தொகுதியில் கரு முட்டை உருவாகி, அது வெளியே வருவதற்குப் பதிலாக, அதன் உள்ளேயே பொரித்து, 21 நாட்களின் பின்னர் குஞ்சு வெளியே வந்துள்ளதாக கூறியுள்ளார். உட் காயங்கள் காரணமாகவே தாய்க் கோழி இறந்ததாக தெரியவந்துள்ளது. ![]() |
| தேசத்தின் தாயை நினைவில் ஏந்துவோம்! தமிழர் நடுவம் - பிரான்ஸ் Posted: 19 Apr 2012 07:57 AM PDT ஒப்பற்ற தியாகி அன்னை பூபதி, இன இருப்பிற்காக நீதிகேட்டுப் போராடி தன் உயிரை அர்ப்பணித்து இருபத்தி நான்கு ஆண்டுகள் கரைந்து மறைந்து போயின என்றாலும், அப்பழுக்கில்லாத அந்த வீரத்தாயின் நினைவுகள் எப்போதும் ஈரமாகவும் உயிர்த்துடிப்புடனுமேயே எம் உள்ளங்களில் தங்கியிருக்கின்றன. இனத்தை அழிவின் மேகங்கள் சூழ்ந்து, அச்சமூட்டிக்கொண்டிருந்த பொழுதுகளில், தமிழீழத் தாயின் எழுச்சியின் வடிவமாக, தியாகத்தின் திருவுருவாக, தன் உயிரை முன்னிறுத்தி நீதி கேட்டுப் போராடிய வீரத்தாய் அவர். தேசத்தைப் பாதுகாக்க, தேசத்தின் குழந்தைகளைப் பாதுகாக்க, வீரத்தாயாக எழுந்து முன்நின்று தன் உயிரை அர்ப்பணித்தார். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில், அவரது தியாகம் உயர்ந்த உன்னதமான இடத்தில் வைத்துப் பூசிக்கப்படவேண்டியது. தேசத்தின் தாயாக அவர் தமிழர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். நெஞ்சை உருகவைக்கும் இதபோன்ற தியாகங்கள் அர்ப்பணிப்புக்கள் ஒருபோதும் வீண்போகாது. வீண்போக விடக்கூடாது. இன்று, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், தன் இலக்கு நோக்கி, புதிய தளங்களில், புதிய வடிவங்களில், தேசியத் தலைவரின் எண்ணங்களுக்கும் சித்தனைக்கும் ஏற்ப, அவர் வகுத்துவிட்ட பாதை வழியே உறுதியுடன் பயணப்படுகின்றது. உலக அரங்கில், தவிர்க்கப்பட முடியாத பிரச்சினையாக, எமது பிரச்சினை தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர் தேசத்தில், எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக தமது இன்னயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் கனவுகளைத் தாங்கிய இளைய சந்ததியின் போராட்ட ஈடுபாடு எமது விடுதலைப் போராட்டத்தை காத்திரமான அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றது. நாம் இந்தக் கட்டத்தை அடைய, ஆயிரம் பல்லாயிரம் ஈகங்களும், வகைதொகையற்ற அர்ப்பணிப்புக்களும் இழப்புக்களுமே காரணம். பூபதியம்மாவின் அற்புதமான தியாகம், வயதான காலத்திலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி, தன்னை வருத்தி உருக்கி தன் உயிரை முழுமையாகக் கருக்கி, இந்த இனத்திற்கு வெளிச்சம் காட்டிய அந்த அருமைத்தாயின் தியாகம், எமக்கெல்லாம் உயிர்ப்பேற்றட்டும். குறிப்பாக பெண் இனத்திற்கு எம் தமிழ்த் தாய்க் குலத்திற்கு அவர் விட்டுச்சென்ற செய்தி மகத்தானது. தேசத்தையும் தேசத்தின் குழந்தைகளையும் காப்பாற்ற 'ஒரு தாயாக முன்செல்கின்றேன்' என்பதுதான் அச்செய்தி. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். ![]() |
| தீயில் கருகி பெண்ணொருவர் பலி: கல்முனையில் சம்பவம் Posted: 19 Apr 2012 07:56 AM PDT கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் சலவை இயந்திரத்தில் ஏற்பட்ட மின்சார ஒழுக்கினை தொடர்ந்து ஏற்பட்ட தீயில் அகப்பட்டு பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாய்ந்தமருது ஒராபிபாஷா வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய முஹம்மத் ஹனிபா ரிஸ்வானா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேற்படி பெண் சலவை இயந்திரத்தினுள் ஆடைகளை கழுவிகொண்டிருந்த நிலையில், மின்சார ஒழுக்கு ஏற்பட்டு குறித்த இயந்திரம் தீப்பற்ற தொடங்கியுள்ளதுடன் இத்தீயில் குறித்த பெண்ணும் சிக்கிக்கொண்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். |
| எட்டு பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் Posted: 19 Apr 2012 07:55 AM PDT பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட எட்டு உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் இந்த இடமாற்ற உத்தரவினை பிறப்பித்துள்ளார். தனமல்வில, ஹபரண, அனுராதபுரம், மின்னேரிய, கிராந்துருகோட்டே, நுவரெலியா, மற்றும் காலி பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி வந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். |
| உலகின் மிகப் பெரிய முயல் (படங்கள் இணைப்பு) Posted: 19 Apr 2012 07:54 AM PDT |
| இந்தியக் குழுவினர் பாராட்டுப் பத்திரம் வாசித்தனராம்- இலங்கை அரச தரப்பு பரப்புரை Posted: 19 Apr 2012 07:54 AM PDT இலங்கைக்கு சென்றுள்ள இந்திய நாடாளுமன்றக்குழு தமிழர் தாயகத்தில், இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து பாராட்டுப் பத்திரம் வாசித்தனர் என இலங்கை அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கின் மீள் எழுச்சி கண்டு இந்தியக் குழுவினர் மகிழ்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை அரச ஊடகம், வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாம்களில் உள்ள மக்களை இலங்கை அரசாங்கம் மீளக்குடியமர்த்துவதற்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய நாடாளுமன்ற குழுவினர் இலங்கை அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இந்திய நாடாளுமன்ற குழுவினரின் இலங்கைக்கான பயணம் காலத்துக்குத் தேவையான ஒரு நிகழ்வு என இலங்கையின் பதில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் விளங்கப்படுத்தி, இது தொடர்பில் சிறந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்த இந்திய நாடாளுமன்றக் குழுவினர் முக்கியமானவர்கள் என தெரிவித்துள்ள பதில் ஊடகத்துறை அமைச்சகர், தமிழ் சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வசதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், இலங்கை தொடர்பான நல்லபிப்பிராயத்தை இந்தியா அதிகரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இலங்கை அரச தரப்பு இந்தியக் குழுவினரின் வருகை குறித்து பரப்புரைகளை மேற்கொண்டிருக்கையில், தமிழகத்தின் தினமணி நாளேடு மகிந்த ராஜபக்ஷவின் வலையில் வீழ்ந்த இந்தியக் குழுவென விமர்சித்துள்ளது. இலங்கையின் அரச இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கை அரசு வரவேற்றதன் காரணமே, ஐ.நா. சபையின் குழு எதுவும் இலங்கையைப் பார்வையிட வந்துவிடாமல் தடுப்பதற்காகத்தான். மனித உரிமைக் கழகத்தில் எங்களுக்கு எதிராக வாக்களித்த இந்தியாவே தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்பி எங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கிவிட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத் தான். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரித்த ராஜதந்திர வலையில் மறுபடியும் விழுந்திருக்கிறது இந்திய அரசு என்பது தான் உண்மை என தினமணி நாளேடு சாடியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ![]() |
| மத்திய வங்கியின் ஆண்டறிக்கை சுயாதீனமானதல்ல: ஹர்ஸ டி சில்வா Posted: 19 Apr 2012 07:53 AM PDT மத்திய வங்கியின் ஆண்டறிக்கை சுயாதீனமானதல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஸ டி சில்வா கூறுகையில், சில வருடங்களாகவே மத்திய வங்கியின் ஆண்டறிக்கையின் சுயாதீனத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. 2011ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கியின் அறிக்கையில் தொடர்பிலும் சந்தேகங்கள் நிலவுகின்றன. மத்திய வங்கியின் ஆண்டறிக்கை தயாரிக்கும் அதிகாரிகளை நான் குறை கூறவில்லை. மத்திய வங்கியின் நிதிச் சபை முற்று முழுதாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை முன்மொழிவுகள் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் மத்திய வங்கியின் நிதிச் சந்தை சுயாதீனமான அமைப்பாக இயங்கும் என எதிர்பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார். |
| இது சிறப்பு அகதி முகாம் அல்ல, சிறை முகாம்- தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் ஈழ அகதியின் குரல் Posted: 19 Apr 2012 07:51 AM PDT தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் அகதிகள், தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இவர்கள் கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இங்கு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், 12 முறைக்கு மேல் இவ்வாறு உண்ணாவிரதமிருந்துள்ள போதும் இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகளை நோக்கி இப்போராட்டத்தை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்புக்கும், தமக்கும் எவ்வித தொடரும் இல்லை, தமிழகத்திற்கு தங்களின் பாதுகாப்பு கோரியே இலங்கை யுத்தத்திலிருந்து வந்திருப்பதாக இவர்கள் கூறியுள்ளதுடன், போரினால் பாதிக்கப்பட்டு இருக்கும் தமது குடும்பத்தினரை பராமரிக்க வேண்டியுள்ளதால் தங்களை பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டுமென இவர்கள் முன்னர் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. |
| சட்ட விரோதமாக வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப அரசு நடவடிக்கை Posted: 19 Apr 2012 07:49 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர் தொழிலாளர்களை கண்டுபிடித்து மீண்டும் பாடசாலைகளில் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம், கல்வித் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தொழில் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபையின் உலக தொழிலாளர் நிறுவனம், யுனிசெப் நிறுவனம், சிறுவர் நன்னடத்தைப் பிரிவு என்பனவற்றுடன் இணைந்து மேற்படி நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக மாவட்டத்திலுள்ள உயர் அதிகாரிகளுக்கு விளக்கமூட்டி குறித்த சட்டவிரோத நடவக்கையினைத் தடுத்தல் தொடர்பான செயற்பாட்டு குழுக்களை நியமிக்கும் விஷேட மாநாடு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் தலைமையகத்தில் நடைபெற்றது. மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் கே.மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மனித உரிமை ஆணைக்குழவின் விசாரணை அதிகாரி ஏ.சீ.அப்துல் அஸீஸ் விளக்கவுரை நிகழ்த்தினார். உலக தொழலாளர் அமைப்பின் மாவட்ட பணிப்பாளர் ஆர்.சிவப்பிரகாசம் மாவட்ட தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் திருமதி ஆர்.திருச்செல்வம் வலய கல்வி பணிப்பாளர்கள் மாவட்ட பொலிஸ் திணைக்கள சிறுவர் பொறுப்பதிகாரி திருமதி கே.யோகராஜன் யுனிசெப் அதிகாரிகள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர் |
| திருடப்பட்ட 18 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் மீட்பு: சந்தேக நபர்கள் இருவர் கைது Posted: 19 Apr 2012 07:48 AM PDT அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது கடலில் தரித்துநின்ற இயந்திரப் படகிலிருந்து திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் 18 இலட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டதுடன், இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். மாத்தறை மாவட்டத்தின் கந்தரைப் பகுதியில் கன்டர் ரக லொறி ஒன்றில் இம் மீன்பிடி வலைகள் ஏற்றப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதுக் கடலில் இயந்திரப் படகு தரித்துநின்ற போது, அப்படகிலிருந்த மீன்பிடி வலைகளை மற்றுமொரு இயந்திரப் படகில் வந்த தென்பகுதியை சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களால் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கல்முனை பொலிஸாரும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடிச் சங்கத்தினரும் இணைந்து தென்பகுதி பொலிஸார் மற்றும் மீன்பிடி தொடர்பான அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் மீன்பிடி வலைகளை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். |
| தாயை சுட்டுக் கொன்று விட்டு பிறந்து 3 நாட்களேயான பச்சிளம் குழந்தை கடத்தல் (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 19 Apr 2012 07:48 AM PDT அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிறந்து 3 நாட்களேயான பெண் குழந்தையின் தாயை சுட்டுக் கொன்று விட்டு, அக்குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனையின் கார் பார்க்கிங் இடத்திற்கு அருகே வந்த ஒரு பெண், குழந்தையின் தாயிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதன் பின் திடீரென அந்த குழந்தையின் தாயை நோக்கி சுட்டதில், அந்த இடத்திலேயே தாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து குழந்தையை எடுத்துக் கொண்டு அந்த பெண் தப்பித்து விட்டார். தகவல் அறிந்த பொலிசார் பல இடங்களிலும் சோதனையிட்டு தேடினார்கள். இதனால் குழந்தையை ஒரு இடத்தில் போட்டு விட்டு அந்த பெண் தலைமறைவானார், அதன் பின் குழந்தையை மீட்ட பொலிசார் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ![]() ![]() ![]() ![]() ![]() |
| இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.வந்த இந்திய பாராளுமன்ற குழுவிடம் மகஜர் Posted: 19 Apr 2012 07:47 AM PDT இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தினால் இந்தியக் குழுவினருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை யாழ்.ஞர்னம்ஸ் ஹோட்டலில் வைத்து இதனை சம்மேளனத் தலைவர் சி.தவரட்ணம் இந்திய குழுவின் தலைவர் திருமதி சுஷ்மா சுவராஜிடம் இதனைக் கையளித்தார். இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு எழுதப்பட்ட இக்கோரிக்கை கடித்தின் பிரதிகள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வட கடலோரங்களில் பல மீன்பிடி வளங்கள் காணப்படுகின்றன. அங்க பல்வேறு வகையிலான மீன்கள் இறால்கள் கணவாய் இனங்கள் நண்டு சிங்கறால் மற்றும் கடலட்டை போன்றவை பெருமளவில் காணப்பட்டன. இவ்வியற்கை வளங்களும் அங்கு காணப்படும் முருங்கற்கற்களும் தாவர வகைகளும் அங்கு வாழும் மீனினங்களின் இனப்பெருக்கத்திற்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்கி கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வளங்கள் எமது மீனவர்கள் பாரம்பரிய கடற்றொழில் முறைகளான மாதல்வலை மற்றும் கரை வலை மூலமும் ஆகக்கூடுதலாக 18 அடி நீளமான படகுகளைப்ப பாவிப்பதன் மூலமும் எமது இயற்கை வளங்களையும் கடல்வள இனப்பெருக்கத்தையும் பாதிக்காத வகையில் ஒழுங்கான முறையில் மீன்பிடித்து வந்தனர். இதனால் பெருந்தொகையான மீன்கள் பிடிக்ககூடியதாக இருந்தது. 1983 ஜீலையின் பின் தொடர்ச்சியாக நடந்த வன்முறைகள் காரணமாக 1985 இன் ஆரம்ப காலங்களில் இருந்து வடக்கின் கடலோரப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயரத் தொடங்கினர். அவர்களினல் பெரும்பாலானோர் மீன்பிடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் அனேகமானோர் தமிழ் நாட்டிற்கு அகதிகளாகச் சென்றனர். இவ் இடைக்காலத்தில் இந்திய மீனவர்கள் எமது கடல் வலயத்தினுள் எல்லை மீறி வந்து இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கலாயினர். 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து குறிப்பாக, 1992-93 காலப்பகுதியில் இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்றவர்களில் பலர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பத் தொடங்கினர். அரசாங்கத்தினது மட்டுப்படுத்தப்பட்ட உதவியுடனும் கடனுதவிகள் மூலமும் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவியுடனும் அவர்கள் மீண்டும் தமது வாழ்வாதார தொழிலனை செய்யத் தொடங்கினர். அப்போது தான் தெரியவந்தது இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைக் கொண்டு எமது கடல் வலயத்தினுள் மீன்பிடித்தமையினால் எமது கடல் வளங்கள் எவ்வாறு இந்திய கடலோரக் கடல் வளங்கள் இல்லாதொழிக்கப்பட்டனவோ அதே போன்று அழிக்கப்படுகின்றன. அவர்கள் இழுவைப்படகைப் பாவித்தது மட்டுமல்லாது தங்கூசி வலைகளையும் பாவித்து மீன்பிடிக்கின்றனர். இவ் இந்திய இழுவைப்படகுகள் எமது கடல் வளங்களையும் கடல் தாவரங்களையும் மற்றும் முருகைக் கற்களையும் அழிப்பதோடு மட்டுமல்லாமல் கடல் வாழ் உயிரினங்களின் இயல்பான இடம்பெயர்வு முறையினையும் சிதறடித்து வருகின்றன. அத்துடன் மட்டுமல்லாமல் அவர்கள் எமக்கு வாழ்வாதாரமாக விளங்கும் எமது வலைகளையும் அறுத்து எம்மால் ஈடு செய்ய முடியாத சேதத்தினை விளைவித்து வருகின்றனர். வடக்கே மீன்பிடித்தொழிலை நம்பி சுமார் 18 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இத் தொழில்துறை சார்ந்த மேலும் 10 ஆயிரம் குடும்பங்கள் இருக்கின்றன. இந்திய இழுவைப் படகுகள் எமது கடல் எல்லைக்குள் ஊடுருவி மீன்பிடிக்கும் செயலானது எமது மீன்பிடிக்கும் உரிமையை அத்துமீறும் ஒரு செயல் மட்டுமல்லாமல், எமது இலங்கை அரசாங்கத்தின் கடற்றொழில் சார்ந்த சட்டதிட்டங்களை மீறிய மீன்பிடி முறைமையை பாதிக்கும் செயலாகவும் அமைகின்றது. இவ்விடயங்கள் சம்பந்தமாக நாம் தென்னிந்திய மீனவர்களின் பிரதிநிதிகளுடன் கொழும்பில் 2004ஆம் ஆண்டு 2010ஆம் ஆண்டு நவம்பர் மாத்திலும் தென்னிந்தியாவிலும் மீண்டும் கொழும்பில் மீன்பிடி அமைச்சரின் அனுசரனையுடன் 2011ஆம் ஆண்டு நடுப்பகுதியிலும், கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி பாரம்பரிய கைத்ததொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் கச்சதீவிலும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தோம். ஆகையினால் எல்லை கடந்த இந்திய மீனவர்கள் இழுவைப் படகினைப் பாவித்து மீன்பிடிப்பது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளும் வண்ணம் மேதகு தங்களைக் வேண்டிக் கொள்கின்றோம். அத்துடன் இவ்வாறு எல்லை கடந்த மீன்பிடியினைத் தடுப்பதற்கு இந்திய கடலோர படையினரதும் சிறீலங்கா படையினரதும் கூட்டு ரோந்து ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் எனவும் நாம் வேண்டுகிறோம் என அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





















