Tamilosaii

Tamilosaii


தமிழ் இனத்திற்காக குரல் கொடுத்த பெண் ஊடகவியலாளர் மேரி கொல்வின் யாழில் நினைவு கூரல்

Posted: 27 Feb 2012 04:54 PM PST

தமிழ் இனத்திற்காக குரல் கொடுத்து தமிழ் மண்ணில் தன் கண்ணொன்றை இழந்து சிரியாவில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் ஊடகவியலாளர் மேரி கொல்வின் நினைவு கூரல் நிகழ்வு இன்று மாலை யாழ்பாடி விடுதியில் நடைபெற்றது. நிமல்ராஜன் ஞாபகார்த்த அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ஊடகவியலாளர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது குடாநாட்டு ஊடகவியலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தமது [...]

ஜெனீவா முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் !

Posted: 27 Feb 2012 04:50 PM PST

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 19ம் அமர்வுகள், இன்று ஜெனீவாவில் ஆரம்பமானது. தொடர்ச்சியாக நடைபெறவுள்ள அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஓன்றைக் கொண்டுவர பல உலக நாடுகள் முனைப்புக்காட்டி வரும் நிலையில், இன்று மாநாடு நடக்கும் முன்றலில் தமிழ் மக்கள் கூடி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

ஜெனிவாவில் இன்று இலங்கையைப் பற்றி மறந்தும் வாய் திறவாத நவநீதம்பிள்ளை!

Posted: 27 Feb 2012 08:42 AM PST

ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய, மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை தொடர்பாக எந்த கருத்துக்களை வெளியிடவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. . எனினும், தனது ஆரம்ப உரையில் சிரியாவில் நிலவும் யுத்த நிலைமைகள் குறித்து அவர் கூடிய கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. [...]

ஜெனிவாவில் இராஜதந்திரப் போர் உக்கிரம்! இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் 23 இல் வாக்கெடுப்பு

Posted: 27 Feb 2012 07:57 AM PST

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் மாதம் 23 ஆம் திகதியே வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவருகின்றது. இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் ஆதரிக்கப்போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும், [...]

சிறந்த புரொஜெக்ரர் வசதியை கொண்ட புதிய சம்சுங் கலெக்ஸி போன்கள்

Posted: 27 Feb 2012 07:43 AM PST

செல்போன் உற்பத்தி துறையில் நொக்கியாவிற்கு நிகராக புரட்சியை ஏற்படுத்திவரும் சம்சுங் நிறுவனமானது தனது புதிய வெளியீடாக புரொஜெக்ரர் வசதியை கொண்ட கலக்ஸி போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் காணப்படும் புரொஜெக்ரர் மூலம் 50 இன்ச் வரையான அகலத்திற்கு விம்பங்களை உருவாக்க முடியும். 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போன்களின் புதிய பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போன்கள் அன்ரோயிட் 2.3 [...]

ஜெனீவா தீர்மானம் தொடர்பில் அரசாங்கம் மக்களை பிழையாக வழி நடத்துகின்றது: திஸ்ஸ அத்தநாயக்க

Posted: 27 Feb 2012 07:36 AM PST

ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வுகளில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில், அரசாங்கம் மக்களை பிழையாக வழி நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். குறித்த தீர்மானத்தின் ஊடாக இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இதுவரையில் எவரும் அறிவிக்கவில்லை. எனினும், ஜனாதிபதி உள்ளிட்ட [...]