என் பக்கம் |
| Posted: 27 Feb 2012 09:23 AM PST கறுத்த முடிகள் நகைத்து வெளுத்து; திமிர் கொண்டத் தோள்கள் தளர்ந்துத் துவண்டு; பளப்பளத்தத் தோல்கள் பள்ளம் மேடுக் காட்சியோடு! என்னோடு நீ கழித்தக் காலம்; எத்தனையோ முறை உன் மனதை நான் கிழித்தக் கோலம்; நான் இழைத்தப் பிழைக்கு; நீ கேட்ட மன்னிப்புகள்; திரும்பிப் பார்த்தாலேத் திகைப்பாய்; விழிகளுக்கு மலைப்பாய்! வெட்கிக் குனிகிறேன் வேதனையில்; கர்வம் துடைத்து; விழிகளால் விழைந்து; மனதால் அழுது; மன்னிப்புக்கேட்கிறேன்; மணம் முடிக்க மணக்கூலிக் கேட்டு உறவை மாசுப்படுத்தியதற்கு; அன்று நான் உன் விழிகளைத் தூசுத் தட்டியதற்கு! |
| You are subscribed to email updates from என் பக்கம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
