I tamil web

I tamil web


தமிழீழம் அமைந்தால் அது இந்தியாவிற்கு நட்பாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் - தினமணி!

Posted: 09 May 2012 10:24 AM PDT


ஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன. அதை வரலாற்று ரீதியாக அணுகிப் பார்த்தால் உண்மைகள் புலப்படும். இலங்கையில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக அவர்களது உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு இனிமேல் சகவாழ்வு முடியாது தனிவாழ்வுதான் என்ற நிலையில்தான் ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையை அங்குள்ள தமிழர்கள் எழுப்பினர்.லெமோரியா கண்டம் அழிந்த பின் தமிழர்களின் பூர்வீக மண்ணாக இலங்கை இருந்தது என்றும் சிங்களர்கள்தான் குடியேறியவர்கள் என்று கேம்பிரிட்ஜ் ஆராய்ச்சியாளர் பால்பெய்ரிங் குறிப்பிடுகிறார். ஐரோப்பியர் தங்கள் காலனிகளாக நாடுகளைப் பிடிக்கப் பல்வேறு திசையை நோக்கி ஸ்பெயினிலிருந்தும் போர்ச்சுகல்லில் இருந்தும் புறப்பட்டது வரலாற்றுச் செய்தி. வாஸ்கோடகாமா 1495-இல் இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள கள்ளிக்கோட்டையில் இறங்கி அதன்பின் 1519-இல் இலங்கைக்குப் போனார். அங்கு அப்போது தமிழ் மன்னன் சங்கிலியன் ஆட்சி நடந்தது. வாஸ்கோடகாமா இறங்கியவுடன் அங்கு வியாபார ரீதியாகப் பணிகள் செய்ய உரிய அனுமதியும் அந்தத் தமிழ் மன்னன்தான் வழங்கினார் என்பது சரித்திர உண்மை.


இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார்கள் என்ற கதைபோலப் போர்ச்சுகீசியர்கள் சிங்களர்களுடன் இணைந்து தமிழருடைய ஆட்சியை வீழ்த்தினார்கள். இந்தக் கலகம் ஏற்பட்டபோதுதான் தஞ்சையை ஆண்ட ரகுநாத மன்னன் சங்கிலி மன்னனுக்குத் துணையாக ஒரு படையை அனுப்பிப் போர்ச்சுகீசியர்கள் மற்றும் சிங்களருடைய தாக்குதலை முறியடிக்க உதவினான்.


அவரது மகன் இரண்டாம் சங்கிலி மன்னனை அவருடைய உடன்பிறந்த சகோதரர் மூலம் சதி செய்து கைது செய்து தமிழ் மன்னனுடைய ஆளுமையை மழுங்கடித்தனர். அந்த மன்னனைக் கொழும்புக்கு அழைத்துச் சென்று தங்களது ஆட்சிக்கு உள்பட்டிருந்த கோவாவுக்கு இழுத்துவந்து தூக்கிலிட்டார்கள் போர்ச்சுகீசியர்கள்.


ஐம்பது ஆண்டுகாலம் இலங்கையில் கோலோச்சிய போர்ச்சுகீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என்று இலங்கையில் நுழைந்தனர். 1833-இல் தமிழர் பகுதியும் சிங்களர் பகுதியும் சேர்த்து ஆங்கிலேயருடைய ஆளுமையான நாடாக மாறியது.


1933-இல் இங்கிலாந்திலிருந்து வந்த சோல்பரி பிரபு ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கி இலங்கைத் தீவு என்று அறிவிக்கிறார். அப்போது தமிழர்கள் தங்களுக்கு நியாயமும் சம உரிமையும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், அதற்கு மாறாக 1948 டிசம்பர் 12-ஆம் தேதி குடியுரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்தது மட்டுமல்லாமல் இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்கள் பத்து லட்சம் பேரின் குடியுரிமை பறிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்கள் என்பவர்கள் இந்தியாவிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச் சென்றவர்கள் ஆவார்கள். அவர்கள் அந்த மண்ணைத் தமிழகத்திலிருந்துபோய் வளப்படுத்தி தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்களைக் கடும் உழைப்பால் உருவாக்கியதற்கு அளிக்கப்பட்ட வெகுமதிதான் பத்து லட்சம் தமிழர்களின் குடியுரிமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டது.


1956-இல் சிங்கள மொழிதான் ஆட்சி மொழி, புத்தம் தான் ஆட்சி மதம் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும், தந்தை செல்வா விட்டுக்கொடுத்து 1957-இல் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு பண்டாரநாயகாவுடன் ஓர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்.


அதில் தமிழர்களுக்குக் குறைந்தபட்ச அதிகாரமும் உரிமைகளும் வழங்க வேண்டும் என்பதுதான் அதில் குறிப்பிடப்பட்டது. அதை புத்த பிட்சுகளும் எதிர்த்தனர். அந்த ஒப்பந்தமும் பரிசீலிக்காமல் குப்பைத்தொட்டிக்குப் போனது.


இருப்பினும் செல்வா சமாதானம், காந்தியம் என்ற நிலையில் திரும்பவும் 1965-ல் அன்றைய அதிபர் சேனநாயகாவுடன் ஓர் உடன்பாடுக்கு முன்வந்தார். அந்த உடன்பாட்டு ஒப்பந்தத்தில் மாகாணக் கவுன்சில்கள் ஏற்படுத்தி அதிகாரங்களை ஒதுக்கி தமிழர்கள் உரிமை பாதுகாக்கப்படும் என்ற நிலையில் செல்வாவும் சேனநாயகாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதையும் புத்த பிட்சுகள் எதிர்த்தனர். அதனால் அந்த ஒப்பந்தமும் கிடப்பில் போடப்பட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இதையொட்டி தமிழர்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். இதனால் கடுமையாகக் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர். நாடாளுமன்றத்திலும் உரிமைக்குரல் எழுப்பினர்.


இந்தக் கொடுமைக்கு இடையில் தமிழர் பகுதியில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் சிங்களர்கள் குடியேற்றப்பட்டனர். வடபகுதியில் சிங்களர்கள் இல்லாத இடத்தில் 1948-லிருந்து இன்று வரை 33 சதவிகிதம் சிங்களவர்கள் தமிழர்கள் பகுதியில் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் மேற்குக் கரையில் யூதர்கள் குடியேறியதைக் கண்டிப்பவர்கள் ஈழத்தில் சிங்களவர்கள் குடியேறியதைக் கண்டிக்காதது மட்டுமல்லாமல் அதை இந்தியா உள்ளிட்ட நாடுகளே பார்த்தும் பார்க்காமல் இருப்பதுதான் வேதனை.


தமிழ் மாணவர்கள் 50 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். ஆனால், சிங்கள மாணவர்கள் வெறும் 29 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். வேலைவாய்ப்பிலும், ராணுவத்திலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டனர். தேவாலயங்களும், கோயில்களும் தாக்கப்பட்டன. நல்லூர் கோயில் அருகே பல சமயங்களில் தாக்குதல் நடந்தன. அதற்குப் பிறகு செஞ்சோலைச் சம்பவம். இப்படி எல்லையற்ற அத்துமீறல்களும் கொடூரங்களும் முள்ளிவாய்க்கால்வரை நடந்ததை யாரும் மறுக்க முடியாது.


இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் தந்தை செல்வா 1976, மே 24-ஆம் தேதி வட்டுக்கோட்டையில் கூடிய தமிழர் விடுதலை முன்னணியின் கூட்டத்தில், இனிமேல் தனி வாழ்வுதான். ஈழம்தான் என்று முடிவெடுத்து அதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் அங்குள்ள தமிழர்களுடைய வரலாற்று ஆவணமாக இன்னும் திகழ்கின்றது. இதை வைத்துக்கொண்டு 1975-இல் நடந்த இடைத்தேர்தல்களிலும் ஈழம்தான் முக்கியப் பிரச்னையாகக் கொண்டு வாக்காளர்களிடம் சென்றபோது 78.4 சதவிகிதம் பேர் செல்வாவின் ஈழத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


11 பேர் நாடாளுமன்றத்துக்குச் சென்றபோது மதச்சார்பற்ற தனி ஈழம் தங்களுக்கு வேண்டும் என்று தன்னுடைய உரிமைக் குரலைத் தெளிவாகப் பதிவு செய்துவிட்டு வெளியே வந்து செல்வா மக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் சிங்கள ராணுவம் உள்ளே புகுந்து தாக்கி ஒன்பது தமிழர்கள் சுட்டு சாகடிக்கப்பட்டனர். இதையெல்லாம் பார்த்துப் பொறுக்க முடியாமல்தான் தமிழ் இளைஞர்கள் 1972-இல் புதிய புலிகள் என்ற இயக்கத்தை பிரபாகரன் தலைமையில் தொடங்கினர். 10 இலக்கத்துக்குக் குறைவான உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் ஆல விருட்சமாக வளர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.


1983-இல் இனப்படுகொலை நடக்கும்போது அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அதைப் பொறுக்க முடியாமல் அது இனப்படுகொலைதான் என்று நாடாளுமன்றத்திலேயே சொன்னார். மனித உரிமைகளைப் பேசிய உலக சமுதாயம் இந்தக் கொடுமையினைத் தடுக்க வரவில்லை. கிழக்கு வங்கத்தில் பிரச்னை வரும்போது தலையிட்டோம். பாலஸ்தீனிலும், கிழக்கு தைமூரிலும் குரல் கொடுத்தோம்.


ஐரோப்பாவில் பல நாடுகள் இனரீதியாகப் பிரிந்ததை ஆதரித்தோம். யூகோஸ்லோவோகியா இனரீதியாகப் பிரிந்தது. சூடான் பிரிந்தது. இம்மாதிரி பிரிந்த நாடுகளுக்குக் காரணங்கள் இருந்ததைப்போல ஈழம் பிரிந்து செல்லவும் காரணங்கள் உண்டு. அப்படியிருந்தும் இன்னும் அதற்கான வழிவகை தெரியவில்லை.


ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ் போன்றவர்களுடைய படங்களையும் காணலாம். அந்த அளவில் இந்தியத் தலைவர்களை அங்குள்ள தமிழர்கள் அன்பு காட்டி நேசித்தார்கள்.


இந்தியா, சீனா போர் நடக்கும்போது இந்தியாவுக்கு ஆதரவாகத் தமிழர்கள் வீர சிங்க அரங்கத்தில் கூட்டம் நடத்தியதும்; தந்தை செல்வா, போர் நிதியாக தமிழர் பகுதியிலிருந்து சேகரித்து இந்தியாவுக்கு அனுப்பியதும் எல்லாம் வரலாற்றுச் செய்திகள் மட்டுமல்ல; நமது நாட்டை ஈழத் தமிழர்கள் எவ்வளவு பாசத்துடன் பார்த்தார்கள் என்பதை உணர்த்துபவை.


வங்க தேசப் பிரச்சனையில் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் ஆதரித்து இலங்கை நாடாளுமன்றத்தில் மனப்பூர்வமாகக் குரல் கொடுத்தார்கள் தமிழ் உறுப்பினர்கள். ஆனால், சிங்கள அதிகார வர்க்கம் இந்தியா, சீனா போரிலும், இந்தியா பாகிஸ்தான் போரிலும் இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்தது. வங்க தேசம் பிரியும்போது பாகிஸ்தான் விமானங்கள் இந்தியா வழியாகச் செல்ல முடியாமல் இருந்தபோது இலங்கை வழியாகச் செல்ல அனுமதியும் தந்தது சிங்கள அரசு. எவ்வளவோ உதவிகள் இலங்கைக்கு நாம் செய்தாலும் நன்றி கெட்டத்தனத்துடன்தான் சிங்கள அரசியல் தலைவர்களும், அதிகாரவர்க்கத்தினரும் நடந்து கொண்டார்கள்.


இதுமட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்பு குறித்தும் இங்கே நாம் பார்க்க வேண்டும். தெற்கே இந்தியப் பெருங்கடலில் உள்ள டீக்கோகர்சியாவில் 1974-75-இல் அமெரிக்கா ராணுவத் தளம் அமைக்க முயன்றபோது இந்திரா காந்தி கண்டித்து உலக நாடுகளுடைய ஆதரவைக் கொண்டு அது தடுக்கப்பட்டது. அமெரிக்கா அதன் பிறகும் விடாமல் இலங்கையில் உள்ள தமிழர் பகுதியில் உள்ள திரிகோணமலை துறைமுகத்தில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவுடைய ராடர்களை அமைக்கவும், எண்ணெய் கிடங்குகளை அமைக்கவும் ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியபோது இந்தியாவின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.


இன்றைக்கு இந்தியாவைச் சுற்றியுள்ள, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகியவற்றுடன் நமக்கு சுமுக உறவு இல்லை. இந்தச் சூழலில் நம்மைச் சுற்றியுள்ள நாடுகளோடு சீனா நட்பு பாராட்டி இந்தியாவுக்கு எதிராகத் திருப்பி வருகிறது. இப்போது சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடலிலும் அதிகரித்துக்கொண்டு வருகிறது. தனது கடற்படைத் தளங்களை அமைப்பது அணுஉலைகளை நிறுவ உதவி செய்வது, ராணுவத் தளவாடங்களைக் கொடுப்பது என்று இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் தென்மேற்குப் பகுதியில் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அடுத்த 15 ஆண்டுகளில் பாலிமெட்டாலிக் பணியில் ஈடுபடும் என்று சொல்கிறார்கள். செஷல்ஸ் தீவிலும் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளது.


சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப்பின் தன்னுடைய ஆளுமையைக் காக்க சீனா முயன்று வருகிறது. இந்தியாவோடு பகைமை உணர்வை மனதில் கொண்டு சீனா, இலங்கையைத் தனது நட்பு நாடாக வைத்துக்கொண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது. ராணுவத் தளவாடங்கள், கெம்பன்கோட்டா துறைமுகத்தை அமைத்துக் கொடுத்து சீனாவின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது என்று அதன் முயற்சிகள் தொடர்கின்றன. கச்சத்தீவில்கூட சீனர்களின் நடமாட்டம் இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. இலங்கையைச் சுற்றி சீனக் கப்பல் படைகள் வருவதும் போவதும் இந்தியாவின் எல்லைப்பக்கத்தில் அந்தக் கப்பல்கள் ஊடுருவதும் இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கு உகந்ததே அல்ல. எனவே, இந்தியா ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையோடு ஈழப் பிரச்னையில் முடிவுகள் எடுப்பது காலத்தின் கட்டாயம்.


ஈழப் போராட்ட வரலாறு, அதில் உள்ள நியாயங்கள், இந்தியப் பெருங்கடலில் வல்லரசுகளின் ஆதிக்கம், இலங்கை இந்தியா மீது மறைமுகமாகக் கொண்டுள்ள பகைமை போக்கு இதையெல்லாம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும். நாம் எவ்வளவுதான் இலங்கைக்கு உதவினாலும் அவை யாவும் தமிழர்களுக்குச் சென்றடைவது இல்லை.


தமிழ்மொழியைப் பாதுகாத்து ஆட்சிமொழியாக அறிவிப்பது, வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல் நடத்துவது போன்ற உறுதிமொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிப்பதாக இந்திய அரசிடம் வாக்குறுதி கொடுத்த ராஜபட்ச இப்போது பல்டி அடித்துவிட்டார். இந்தியா வழங்கிய 500 கோடி ரூபாய்க்கு மேலான தொகையைக் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகச் சொன்ன வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.


இந்தியா கொடுத்த அனைத்து உதவிகளையும் சிங்களப் பகுதியில் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பயணங்கள், அங்கு சென்ற நாடாளுமன்றக் குழுவின் பயணங்களும் ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கை தருவதாக அமையவில்லை.


இந்திய மண்ணில் உள்ள நாம் அனைவரும் இந்தப் பிரச்சினையின் நீள அகலத்தை அறிந்து கடந்தகால வரலாற்றை மனதில்கொண்டு பார்த்தால் அங்குள்ள தமிழர்களுக்கு ஈழம்தான் தீர்வு என்ற விடை நமக்குக் கிடைக்கும்.


ஈழம் அமைந்தால் இந்தியாவுக்குப் பாதுகாப்பாக நட்பு நாடாக அமையும். அண்ணல் மகாத்மா காந்தி குறிப்பிட்டதுபோல இந்தியாவின் மகளாக ஈழம் இருக்கும். அங்குள்ள தமிழர்கள் வீட்டில் தமிழ் பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், தமிழில் விவிலியம் இருக்கும். காந்தி, நேதாஜி, போஸ்
போன்றவர்களுடைய படங்களையும் காணலாம்.


- தினமணி -

வவுனியாவில் புலிகளுக்கு ஆதரவான, எதிரான வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள்! (படங்கள்)

Posted: 09 May 2012 10:13 AM PDT


இராணுவத்தினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு இம்மாதம் 18 ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், அத்தினத்தன்று மறைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வவுனியா நகரின் பல்வேறு இடங்களிலும் புலிகள் இயக்கதினால் உரிமைகோரப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம்' தலைப்பிடப்பட்டுள்ள மேற்படி சுவரொட்டிகளில், '18.05.2012 அன்று அனைத்து தமிழீழ மக்களும் உணர்வுபூர்வமாக பொது இடங்கள், கோயில்கள், வீடுகள் போன்றவற்றில் எங்கள் உறவுகளுக்காகவும் மாவீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்துவோம்' என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


அத்துடன், 'எம் தலைவர் சாகவில்லை. நாங்கள் மீண்டும் பொங்கி எழுவோம். புலிகளின் தாகம்... தமிழீழ தாயகம்' என்று கையெழுத்தால் எழுதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் உரிமை கோரப்பட்ட நிலையில் இச்சுவரொட்டிகள் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.


இதேவேளை, மேற்படி சுவரொட்டிகளுக்கு எதிராக 'தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக முன்னிற்கும் இயக்கத்தினால்' உரிமை கோரப்பட்ட மேலும் சில சுவரொட்டிகளும் வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.


அன்பார்ந்த மக்களே' என்று தலைப்பிடப்பட்ட இந்த சுவரொட்டிகளில், 'புலிகளின் கெடுபிடியில் இருந்து மீண்டு சுதந்திரமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் இவ்வேலையில் ஒருசில தீய சக்திகளால் புலிகளையும் அவர்களின் நடவடிக்கைகளையும் மீண்டும் ஞாபகப்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வெளியிடுதல், போஸ்டர் ஒட்டுதல் போன்ற நடவடிக்கைகள் செய்து மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.


எனவே இத்தீய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு துணைபோகாது, எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு எம் அனைவரினதும் கடமையாகும்' என்று அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




காலநிலை அறிக்கையின் போது ஆடையின்றி தோன்றிய தொகுப்பாளினி! (வீடியோ இணைப்பு)

Posted: 09 May 2012 03:15 AM PDT


பிரபல ஆங்கில தொலைக்காட்சி ஒன்றின் செய்தி நேரத்தின்போது காலநிலை அறிக்கை வாசிப்பதற்காக தோன்றிய தொகுப்பாளினியின் ஆடைகள் தொலைக்காட்சியில் தென்படாமையினால் பரபரப்பு ஏற்பட்டது.


இதற்குக் காரணம் குறித்த பெண் அணிந்திருந்த ஆடையும், ஸ்டூடியோவின் பின்னணி நிறமும் ஒரே நிறத்தில் காணப்பட்டமையாகும்.







தலைகீழான திட்டமிடலில் கட்டப்பட்ட வீடு! (வீடியோ இணைப்பு)

Posted: 09 May 2012 02:52 AM PDT


எல்லோரும் மற்றவர்களிடமிருக்கும் வீடுகளில் இருந்து தமது வீடுகளை வித்தியாசப்படுத்தும் முகமாக மண்டையைப் போட்டு உடைப்பார்கள். அதேபோல இங்கும் மண்டையைப் போட்டு உடைத்து சற்று வித்தியாசமான முறையில் தலைகீழாக வீட்டை வடிவமைத்திருக்கின்றார்கள்.


இந்த தலைகீழான சிந்தனைக்கு வடிவம் கொடுக்க எட்டு மாதங்கள் எடுத்துள்ளதாம்.

காதலி மீதான காதலை மறக்க 10,000 பேரம் பேசிய காதலன்!

Posted: 09 May 2012 01:59 AM PDT


காதலியை தனதாக்கிக் கொள்ள இன்னொரு வாலிபரிடம் ரூ.10,000 பேரம் பேசி அந்த பணத்தை கொடுக்க திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். பஸ் கண்டக்டர். அவரது மகன் மணிகண்டண் (20). அவர் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி திருத்துபனை கிராமத்தில் தண்ணீர் எடுத்துவந்த லென்சா (25) என்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினார். அப்போது பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.விசாரணையில் மணிகண்டன் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது


எனக்கு சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் இல்லை. அதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கோவிலில் சாமி சிலைக்கு அலங்காரம் செய்யும் வேலைக்கு சென்றேன். அங்கு தான் முதன் முதலாக திருட ஆரம்பித்தேன். கோவிலில் உள்ள சிறிய சிலைகள், பூஜை பொருட்களை திருடி அவற்றை விற்று வரும் பணத்தில் ஆடம்பரச் செலவு செய்தேன்.


பின்னர் கோவில் அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிய வந்ததையடுத்து என்னை வேலையில் இருந்து நீக்கினர். இதையடுத்து பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றேன். பெயிண்ட் அடிக்கச் செல்லும் வீடுகளில் உள்ள வெள்ளி, பித்தளை பொருட்களை திருடி விற்றதால் அந்த வேலையில் இருந்தும் துரத்தினர். மாந்திரீகத்தில் விருப்பம் இருந்ததால் மந்திரவாதியாக விரும்பி எனது அத்தை வீட்டில் இருந்து தங்க சங்கிலியைத் திருடி ரூ.30,000க்கு அடகு வைத்தேன்.


அந்த பணத்தை வைத்து மாந்திரீகம் செய்யத் தேவையான ஐம்பொன் சிலை மற்றும் மாந்திரீக புத்தகங்களை வாங்கினேன். இதற்கிடையே அத்தை வீட்டில் நகை திருடியது தெரிய வந்து குடும்பத்தில் பிரச்சனையாகிவிட்டது. ஆனால் எனது தந்தை நகைக்குரிய பணத்தை கொடுத்ததால் போலீசில் புகார் கொடுக்கவில்லை.


பின்னர் வள்ளியூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது அந்த கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணும், நானும் காதலித்தோம்.


ஆனால் அந்த பெண்ணை இன்னொரு வாலிபரும் காதலித்தார். இதனால் எனக்கும், அந்த வாலிபருக்கும் அடிக்கடி தகராறு வந்தது. ஒரு கட்டத்தில் காதலியை எனதாக்கிக் கொள்ள அவரிடம் பேசினேன். ரூ.10,000 கொடுத்தால் என் காதலியை மறந்துவிடுவதாக அவர் தெரிவித்தார்.


கையில் பணம் இல்லாததால் திருட முடிவு செய்து திருக்குறுங்குடி மேற்கு வட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்தேன்.ஆனால் அது கவரிங் நகை. அதன் பிறகு திருக்குறுங்குடி திருத்துபனை கிராமத்தில் தண்ணீர் எடுத்து வந்த லென்சாவின் சங்கிலியைப் பறித்தபோது தான் பொதுமக்களிடம் சிக்கினேன் என்றார். 
சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

கிளிநொச்சி பஸ்தரிப்பு நிலையத்தில் பெண்கள் மீது சேஷ்டை புரியும் ரவுடிகள்! (படங்கள் இணைப்பு)

Posted: 09 May 2012 01:48 AM PDT


கிளிநொச்சியில் பஸ்தரிப்பு நிலையத்தில் அன்றாடம் பயணத்திற்காக காத்திருக்கும் அன்றாடம் மாணவிகள், இளம்பெண் உத்தியோகத்தர்கள் என பலதரப்பட்ட பணிகளில் ஈடுபடும் பெண்கள் மீதான சேஷ்டைகள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த பகுதியில் மதுபோதையிலும் மற்றும் எதுவித காரணமின்றியும் குழுமுகிற ரவுடிக் கூட்டங்கள் அங்கு பஸ்ஸிற்காக காத்திருக்கும் பெண்கள் மீது சேஷ்டைகளில் ஈடுபடுவது.கெட்ட வார்த்தைகளை பேசுவது போன்ற ஈடுபட்டு வருவது கலாச்சாரம் பேணும் அமைப்பால் இனங்காணப்பட்டுள்ளது.


அண்மையில் இத்தகைய செயலில் ஈடுபட்ட ஒருவரின் படங்களும் அவரது நண்பர்களின் படங்களும் கலாச்சாரம் பேணும் குழுவால் கைப்பற்றப்பட்டுள்ளது.இந்த நபர் பஸ்நிலையப் பகுதியில் தெருவோரக் கடை வைத்திருப்பவர் என இனங்காணப்பட்டுள்ளார்.


எனவே இத்தகைய நபர்களை அறிந்து எச்சரிக்கையாய் இருக்கும்படியும், இவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க எண்ணியிருப்பதாகவும் கலாச்சாரம் பேணும் குழு தெரிவித்துள்ளது.








உள்ளாடைகளுக்கான பஷன் ஷோவில் அசத்திய கவர்ச்சிக் கன்னிகள்! (படங்கள் இணைப்பு)

Posted: 08 May 2012 10:51 PM PDT


சீனாவின் தலை நகரமான பீஜிங்கில் வாரம் தோறும் இடம் பெறும் விதம் விதமான பஷன் ஷோவில் அண்மையில் இடம்பெற்ற உள்ளாடைகளுக்கான காட்சிப்படுத்தலில் சீனாவைச் சேர்ந்த பல கவர்ச்சிக் கன்னிகள் பங்குபற்றியிருந்தனர்.


இதில் பலவிதமான உள்ளாடைகளை அணிந்தவாறு காட்சியளித்து அங்கு கூடியிருந்தவர்களின் கண்ணுக்கு கவர்ச்சி விருந்தளித்திருந்தனர்.








குவைத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அனாமதேய விலங்கு! (வீடியோ இணைப்பு)

Posted: 08 May 2012 08:55 PM PDT


உலகம் முழுவதும் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. குவைத் நாட்டு பாலைவனம் ஒன்றில் அதிசய விலங்கு ஒன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டு உள்ளது.குவைத் நாட்டவர்கள் இருவர் இவ்விலங்கை வீடியோ பிடித்து இருக்கின்றனர். சிறிய கால்களை உடைய சிறிய விலங்கு இது. வேகமாக ஓடி திரிந்தது.


தோற்றத்தில் நில அணில் போன்று இருந்தது. அணிலின் வேகத்தை ஓட்டத்தில் கொண்டு இருந்தது.இவ்வாறான விலங்கினம் ஒன்று குவைத்தில் முன்பு அடையாளம் காணப்பட்டு இருக்கவில்லை. இவ்விலங்கை நீங்கள் வீடியோவில் பார்க்கலாம்.

கணினியில் தோன்றிய பூனையைப் பார்த்து குழம்பிய நாய்! (வீடியோ இணைப்பு)

Posted: 08 May 2012 08:47 PM PDT


கணினி ஒன்றில் வீடியோ மூலம் பூனை ஒன்று அறையினுள் இருப்பது போன்று காட்சியளித்தது. இதை தற்செயலாகப் பார்த்த நாய்கு ஒரே குழப்பாமாக இருந்தது.


அப்படி என்னத்தை நினைத்து இந்த நாய் குழம்பியிருக்கும்? ம்... ம்... இந்தப் பூனை எப்படி கணினிக்குள் போயிருக்கும் என்றுதான் குழம்பியிருக்கும்.

அசாத்திய தொழில்நுட்பத்தில் உருவான பரா ஒலிம்பிக் விளம்பரம்! (வீடியோ இணைப்பு)

Posted: 08 May 2012 08:37 PM PDT


பரா ஒலிம்பிக் என்பது ஊனமுற்றவர்களுக்காக நடாத்தப்படும் விசேட ஒலிம்பிக் போட்டி என்பது யாவரும் அறிந்த விடயமே.


கனடாவின் பராஒலிம்பிக் குழுமம் ஆனது இதனை பிரபல்யப்படுத்தும் பொருட்டு அசாத்திய தொழில்நுட்பத்தைக் கையாண்டு விளம்பரம் ஒன்றைத் தயாரித்துள்ளது.

காட்டில் பயணிக்கும்போது திடீரெனத் தோன்றிய டைனோசர்! (வீடியோ இணைப்பு)

Posted: 08 May 2012 08:30 PM PDT


காட்டு வழியிலே பயணித்துக் கொண்டிருந்த இரண்டரை வயதுச் சிறுவன் டைனோசர் ஒன்று குறுக்கிடவே அதிர்ந்து போயுள்ளான்.


எனினும் அது நிஜமான டைனோசர் அல்ல இலத்திரனியற் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ரோபோ டைனோசர் ஆகும்.

பெண்கள் எதற்காக செக்ஸை நாடுகின்றனர்?

Posted: 08 May 2012 08:24 PM PDT


பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ரொமான்ஸ் மற்றும் சுகத்துக்காக மட்டுமல்ல... அதையும் தாண்டிய மருத்துவ காரணங்களுக்காகவும்தான் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று.


செக்ஸ் நிபுணர்கள் சின்டி மெஸ்டன் மற்றும் டேவிட் பஸ் இருவரும் இதுகுறித்து ஆய்வு செய்து, 200 காரணங்களைக் கண்டுபிடித்துள்ளனர், பெண்கள் செக்ஸ் வைத்துக் கொள்வது ஏன் என்று.



  • அவற்றில் சில...



ரொம்ப போர் அடிப்பதாக பெண்களுக்கு நினைப்பு வரும்போது கூடவே வருவது செக்ஸ் உணர்வுதானாம். 


ஒற்றைத் தலைவலியை போக்கிக் கொள்ள செக்ஸ் ஒரு நல்ல வழி. 


84 சதவீத பெண்களுக்கு, வீட்டு பணிச் சுமை, மனதை அழுத்தும் கவலைகளிலிருந்து விடுபட செக்ஸ் தேவைப்படுகிறதாம். 


வெறும் கவர்ச்சி அல்லது உடல் அழகுக்காக செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மிக சிறுபான்மையாகவே உள்ளார்கள் என்கிறது இந்த ஆய்வு. 


ஆண்கள் மீதான இரக்கம் கூட பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்ளத் தூண்டுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. 


தனக்காக ஒரு ஆண் அதிக சிரத்தை எடுத்தால், தனக்காக ஒருவன் அதிக செலவு செய்தால், தனக்காக ஒரு ஆண் அதிக தியாகங்களைச் செய்தால்... அதற்கு பதிலாக ஒரு பெண் தர விரும்பும் முதல் பரிசு... செக்ஸ்தான் என்கிறது இந்த ஆய்வு.


அதே நேரம் ஒரு ஆண் இதையெல்லாம் செய்ய பிரதான காரணமும் செக்ஸ்தான் என்கிறது இதே ஆய்வு!

தாக்கிவிட்டு தப்பித்தவரை காட்டிக் கொடுத்தது கண்காணிப்புக் கமெரா! (வீடியோ)

Posted: 08 May 2012 08:13 PM PDT


நியூயோர்க் நகர வீதியொன்றில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞன் ஒருவனை காரில் பயணம் செய்த பிறிதொரு இளைஞன் மோதிவிட்டு தப்பித்துச் செல்ல முற்பட்டவேளை கண்காணிப்புக் கமெரா காட்டிக்கொடுத்துவிட்டது.


இதன் காரணமாக சம்பவம் நடந்து 5 நிமிடங்களில் குறித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சேவல் பிடித்து விளையாடிய காற்பந்தாட்ட வீரர்கள்! (வீடியோ இணைப்பு)

Posted: 08 May 2012 08:05 PM PDT


கழகங்களுக்கிடையிலான காற்பந்தாட்டப் போட்டி ஒன்று ஈவூட் பார்க் மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை சேவல் ஒன்று திடீரெனக் களத்தில் குதித்துள்ளது.


இதனால் பந்தை விட்டுவிட்டு சேவலைப் பிடிப்பதிலே வீரர்கள் குறியாக இருந்தனர். அங்கு கூடியிருந்த ரசிகர்களின் செயற்பாடாகவே இது அமைந்திருந்தது.