சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்

சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்


எரித்தாலும் பயன் இல்லாதது எது?

Posted: 09 May 2012 09:30 AM PDT



சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.


"திருப்பதி மிதியாப்பாதஞ் சிவனடி வணங்காச் சென்னி
இரப்பவர்க் கீயாக்கைக ளினியசொற் கேளாக்காது
புரப்பவர் தங்கள் கண்ணீர் பொழிதரச் சாகாதேகம்
இருப்பினும் பயனென்காட்டி லெரிப்பினு மில்லைதானே. "
- விவேக சிந்தாமணி - பாடல் எண் 28


திருப்பதி மிதியாத பாதம்,
சிவனடி வணங்காத தலை,
இரப்பவருக்குக் கொடுக்காத கை,
இனிய சொற்களைக் கேட்காத காது,
தங்களைப் பாதுகாப்பவர் கண்களில் கண்ணீர் கண்டும்
உயிர் கொடுக்காதவனின் உடல்
ஆகியவைகள்
இருந்தும் பயனில்லை;
காட்டில் எரித்தாலும் பயனில்லை.

எழுதிய ஞானி என்னவொரு அழுத்ததுடன் எழுதியுள்ளார் பாருங்கள்!

SOME AUTHENTICATED VEDIC ASTROLOGERS

Posted: 09 May 2012 09:28 AM PDT



SOME AUTHENTICATED VEDIC ASTROLOGERS TO CONSULT

I am reproducing the article written by Mr.Vinodhavel, one of our class students,
for the benefit of one and all who comes to the classroom
=====================================
This post is dedicated to Mr.Vinodhavel!
=====================================
1. Pandit Sanjay Rath
We all know that Dr.B.V.Raman spread the power to the entire world thru his
speeches, predictions, articles and books for about 40 years. Pt. Sanjay rath follows
similar path. He has been revealing the many secrets of Vedic astrology, Nadi
astrology, Prasna, etc to the public. Many details were hidden by earlier selfish
astrologers. Each word he utters has the authenticity of classic books like BPHS,
Saravali, Jataka Paarijatha, etc and most of the time he is able to give us the entire
quotes for the topic in discussion. Like B.V.Raman, he is one of the few astrologers
who daringly advised people that Numerology is a fake- business as it is not at
all based on astronomy unlike astrology. Like B.V.Raman, he is celebrated for
his strong scientific basis of astrology. He has many renowned disciples like
PVR Narasimha Rao, Visti, Goravani and disciples from various parts of
world.

He is associated with more than 10 websites and blogs.
All the SJC websites are very resourceful and most contents are free.
He is the founder Sri Jagannatha Centre, which has branches all over the world.
He is the founder of the leading magazine 'The Jyotish Digest'.
You can have more information in this URL
You can know his contact details and fee in corresponding website or by E-Mail.
======================================
2. PVR Narasimha Rao
Follower of B.V.Raman & Sanjay Rath.
One of the Jyotish Gurus in SJC (Sri Jagannath Centre).
An IIT (Madras) Student.
A software engineer near Boston.
His unselfishness is very remarkable. He is author of the world famous
freeware software 'Jagannatha Hora'.
There is no other software that can compete the software Jagannatha
Hora in terms of accuracy of calculations, level of details availability,
ephemeris (has 10,000 years) and flexibility.
Above all, it is completely a Free Software. I searched almost 50 software
programs and found that only Parashara Light software has similar features.
He is also the author of a good book "Vedic Astrology - an integrated approach".
You can know more about him, contact details and fee in corresponding
website or by E-Mail.
(our teacher Subbiah sir is also using the same software)
=======================================
3. Visti Larsen
Follower of Sanjay Rath.
Admirer of B.V.Raman.
One of the Jyotish Gurus in SJC (Sri Jagannath Centre).
He is a cool and young person by biological age (DOB: 12-Nov-1981)
but his mental age conquers even 70. He has studied many classics and lot
of contemporary books on Vedic and western astrology. His knowledge
is a lot more than that of many very expeienced astrologers all over India.
His unselfishness is also very remarkable. As on Nov'2008, he has
published more than 500 classes as MP3 Audio files in his website.
All for Free Download. You can see his profile, contact details and fee
and all info in his website.
=========================================
4. Other Gurus in / associated with SJC centre:
There are many other eminent Gurus like Sarbanji, Freedom cole,
Goravani, Rafal, Gauranga Das. But, I am not much aware of them.
So, I leave it to seeker's choice.
=========================================
5. Authenticated Websites List-1:



===================================================
6. K.N.Rao:
One of the most renown and eldest astrologers of India.
He has played a major role in finding the fault of Raman's ayanamsa and making
Lahiri Ayanamsa as a standard.
He is an author of about 15 unique books on astrology, which are specified in
"reference" in many articles found in http://Wikipedia.org.
His books are most selling ones in America after B.V.Raman's books.
He is founder of the largest 'formal educational school for astrology' in India.
You can know more about in his websites.
To know about his life, knowledge and experience in a snapshot, you just read
an interview with him taken in 2005
(http://www.lightonvedicastrology.com/articles-knrao-printer.htm).
Criticisms:
Many scholars disagree with some of his methods - for example most scholars
use 4th house of a horoscope for educational perspectives but he claims that
it is only 5th house that signifies education.
===========================================
7. Vaughn Paul:
He was one of the well known students of K.N.Rao, Late R.Santhanam & some
more Indian astrologers.
He is known for his clean articles and genuine predictions.
===========================================
8. Authenticated Websites List - 2:

====================================================

9. Authenticated Websites List - 3:
Many genuine Gurujis occasionally visit this site and give their wise guidance:
http://www.indiadivine.org/audarya/vedic-astrology-jyotisha
This site is very useful like srijagannath.org & yahoo vedic astrology group
and it has good discussions on astrology.
============================================
10. Prof. Mu. Matheswaran
In tamilnadu, I could not think any body equal to his profound knowledge.
About him:
He is multifaceted personality - An Astrologer, Teacher, Writer, Trainer,
Vaasthu consultant, Palmist, Body Reader & Photographer!
Out of about 50 astrologers I have met so far, he stands quite distinct.
I was amazed by his predictions!

Disciple of P. S. Iyer (Kerala) who amazed the South India with his
profound astrological knowledge and

predictions. P.S.Iyer was a thickest friend of B.V.Raman.
Follower of Dr. B. V. Raman who made the entire world esp. western
world and scientists admire the power of Indian astrology.
(BTW: B.V.Raman is the 'Bill Gates' in astrology!)
Writer of 30 unique Tamil books on astrology, numerology, gems, palmistry, etc.
Teacher of more than 1000 students and uncountable followers in Tamilnadu.
Revolutionist in astrology - who first condemned the cheating techniques
and superstitions of many fake astrologers.

Note:
He gets mostly ordinary visitors everyday. So, if you really want 'Special' &
'Masterly' predictions for you, you have to explain to him about you serious
seeking first.
A word on his life:
He was born in 1945. He lost his parents in his age of 18 and was brought up
under his relatives.
He started his career as an ordinary photographer.
He studied most of the astrology by himself & became astrologer.
Later he joined with P. S. Iyer.

His contact Details:
Mu. Matheswaran MICAS
Maruthi Jothidar Illam,
215 (107), Gandhi Nagar,
Water tank road,
Athur - 636 102,
Salem (DT)
Tamilnadu, India.
Tel: 04282 - 250532.
=====================================
11. What about other Astrologers?
Of course, there are many so-called 'famous astrologers' but many of them
appear to be too commercial, not genuine or less knowledgeable when we meet
them in person. Some modern styled astrologers (like V.K.Choudhry) lack
authenticity of classics or strong base for their so-called 'new approaches'.
So, I excluded them.
=====================================
12. Misc:
Out of the above astrologers, I have met only Mr.Mu.Matheswaran
in person. But, I have come across the articles, chart readings, reputations &
books of all other people especially of Sanjay

Rath and Visti Larsen.
Unluckily, nobody at present could equal or even become close to the level of
Dr.B.V.Raman, 'The Naveena Varahamihira' (Pt. Sanjay Rath, C.S.Patel,
Bepin Behari, P.S.Iyer & many more scholars explicitly accepted this fact).
Please understand that none can understand one's life completely just by
visiting an astrologer twice or thrice.
For that, you have to try to practice the various things in the life like
spirituality, philosophy, astrology, etc.
Also, follow somethings before meeting an astrologer, to make it successful:
Have at least basic knowledge in Astrology.
Get an appointment with an astrologer on the date (& time, if possible)
that is most favourable to you (this you can judge to some extent using things
like Tara Bala, Ashtakavarga, Daily hora, etc.
Have your questions list ready on hand. See that your questions are specific
and to-the-point instead of the general things.

Hope this enlightens you considerably!
Comments are welcome!
Do correct me, if I am mistaken anywhere.
May Ketu Bless All!

எதிர்மறையான புத்திசாலித்தனம்!

Posted: 09 May 2012 09:27 AM PDT



மிகப் பெரிய, நவீன வசதிகள் நிரம்பிய மருத்துவமனை ஒன்றில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கு.

இளைஞன் ஒருவனுக்கு இதயக் கோளாறு. அறுவை சிகிச்சை அவனுக்கு நடைபெற இருந்தது.

எல்லாம் தயாராக இருந்தது. தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் வருவதற்காக
அனைவரும் காத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் அவரும் வந்து விட்டார்.

மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவரும் வந்துவிட்டார்.

தலைமை, இறை நம்பிக்கை உள்ளவர். மனதிற்குள் இறைவனை வணங்கி
விட்டு, படுத்திருப்பவனை தைரியப் படுத்தும் முகமாகச் சொன்னார்.

"எல்லாம் நல்லபடியாக முடியும். தைரியமாக இரு." என்றார்.

அவன் அதைப் பற்றிக் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. அதோடு தான்
மிகவும் கெட்டிக்காரன், துணிச்சல் மிக்கவன் என்பதை அவருக்கு உணர்த்து
வதற்காகப் பேச்சுக் கொடுத்தான்.

எதிர்ப்புறம் சுவற்றில் ஒரு புது ரோஜா மாலை தொங்கிக் கொண்டிருந்தது.
அது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தவுடன், அங்கே உள்ள
சர்வேஸ்வரனின் படத்திற்குப் போடப்படும். வழக்கமாக நடைபெறுவதுதான்
அது!

படுத்திருக்கும் ஆசாமி அந்த மாலையைக் காட்டிக் கேட்டான்.

"டாக்டர், அங்கே ஒரு மாலை தொங்கிக்கொண்டிருக்கிறதே - யாருக்காக
அது?"

மருத்துவர் புன்னகையுடன் சொன்னார், "எனக்குத்தான் அது. ஆஃபரேசன்
வெற்றிகரமாக முடிந்தவுடன் அதை எனக்குப் போட்டு அனுப்பிவைப்பார்கள்."

அவன் விடவில்லை, அடுத்துக்கேட்டான், "ஒரு வேளை அப்படி முடியாவிட்டால்......"

மருத்துவர் பட்டென்று சொன்னார், "கவலைப் படாதே, உனக்குப் போட்டு
அனுப்பிவைப்போம்!"
==========================================================
கடைசியில் அவருடைய வாக்குப் பலித்துவிட்டது.

அந்த மாலை அவனுக்கே போடப்பட்டது.

கயல்விழிகளில் வயல் அமைப்பவன் யார்?

Posted: 09 May 2012 09:25 AM PDT




"கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!"

என்று நாயகன் தன் காதலியைக் கண்டு மனம் உருகிப் பாடுகின்றான்

உடனே நாயகியும் கண்கள் பனிக்க காதலனுக்குப் பதில் சொல்லிப்
பாடுகிறாள்

"கட்டான கட்டழகுக் கண்ணா -
உன்னைக்காணாத பெண்ணும் ஒரு பெண்ணா"

"அடிப்பாவி, தன் காதலனின் அழகைப் பார்த்து வியக்காத பெண்ணும்
பெண்ணல்ல என்றல்லவா சொல்கிறாள். என்ன அநியாயம்? " என்று
அவளை வையாதீர்கள். அவளுடைய நாயகன் அவ்வளவு அழகானவன்.
அவனுடைய அழகை உயர்த்திச் சொல்கின்றாள்.அவ்வளவுதான்.

உடனே நாயகன் சும்மா இருப்பானா? அவனும் பொருத்தமாகப் பதில்
சொல்கிறான்

"பட்டாடை கட்டி வந்த மைனா -
உன்னைப்பார்க்காத கண்ணும் ஒரு கண்ணா?"

இதுக்கு அவளே பரவாயில்லை. இவனே அப்படிச் சொல்லும் போது
அவள் சொல்வதில் என்ன தவறு?

தொடர்ந்து நாயகன் தன் காதலியை வர்ணிக்கின்றான். வர்ணனை
பிடிக்காதவர்கள் பத்து வரிகள் தாண்டிப் போய்விடலாம்.

"மானல்லவோ கண்கள் தந்தது
மயில் அல்லவோ சாயல் தந்தது
தேனல்லவோ இதழைத் தந்தது
சிலையல்லவோ அழகைத் தந்தது"

என்று நாயகன் சிலாகித்துப் பாட, நாயகி விடுவாளா, உடனே அவள்
கிறங்கிப் பாடுகின்றாள்

"தேக்குமரம் உடலைத் தந்தது
சின்ன யானை நடையைத் தந்தது
பூக்களெல்லாம் நிறத்தைத் தந்தது
பொன்னல்லவோ சிரிப்பைத் தந்தது"

உடனே நம்ம ஆள் மயங்கி விட்டான். தொடர்ந்து பாடுகிறான்

"சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை"

அவன் வளர்த்த உறவைப் பற்றி சிந்தித்து நேரத்தை வீணாக்காமல்
பாடலத் தொடர்ந்து பாருங்கள்.

"மார்கழிப் பனி போல் உடையணிந்து -
செம்மாதுளங்கனி போல இதழ் கனிந்து
கார்குழலாலே இடையளந்து - நீ
காத்திருந்தாயோ எனை நினைந்து"

அவள் காத்திருந்ததை எப்படி வர்ணிக்கிறான் பாருங்கள். மார்கழிப் பனி
போன்ற உடையாம்.

உடனே செம்மாதுளங்கனி இதழ்க்காரி என்ன பிதற்றுகிறாள் பாருங்கள்

"அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் -
இந்தஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
பழகியும் ஏனோ தலை குனிந்தேன் -
இன்றுபருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்"

தன் முகம் சிவந்ததன் காரணத்தை அவள் அடுக்கிச் சொல்கிறாள்

உடனே நம்ம ஆள் அச்சாரம் போட்டுப் பாடுகிறான். என்னதொரு
கற்பனை பாருங்கள்

"கயல்விழி இரண்டில் வயல் அமைத்து -
அதில்காதல் என்றொரு விதை விதைத்து
காலமறிந்து கதிர் அறுப்போமா
காவிய உலகில் குடியிருப்போமா"

கயல் விழிகளில் வயல் அமைக்கிறானாம். ஆமாம் அந்த வயலுக்குப்
பத்திரப்பதிவு செலவெல்லாம் கிடையாது. அமைக்கட்டும் என்ன
கெட்டுவிடப் போகிறது?

உடனே நாயகி தன் நிலை இழந்து சொல்கின்றாள்

"பஞ்சணைக் களத்தில் பூவிரித்து -
அதில் பவள நிலாவை அலங்கரித்து
கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா -
சுகம்கோடிக் கோடியாய்க் குவிப்போமா!

கட்' கட்.... வாத்தியாரின் கத்திரிக்கோல் விழுந்து விட்டது.
வாருங்கள் பாடத்தைப் பார்ப்போம்.
-------------------------------------------------------------------------------------------------
"வாத்தியார் என்ன இது? குஷி moodஆ? காதல் பாடல்களாய் இருக்கிறது.
வகுப்பை நடத்தும் லட்சணம் இதுதானா?"

"குஷி மூடும் இல்லை, ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. இந்தப் பாடல்
வரிகளுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்ன?"

"..........................................."

"எனக்குத் தெரியும் கேள்வி கேட்டால் எல்லோரும் வழக்கம்போல வாய்
மூடி மெளனமாகி விடுவீர்கள். தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இல்லை என்றால்
கடைசியில் நான் சொல்கிறேன்"
---------------------------------------------------------------------------------------------------
"வாத்தியார் ஒரு க்ளூ மட்டும் கொடுங்கள்"

"இன்றையப் பாடத்திற்கும், அந்தப் பாடல்வரிகளுக்கும் ஒரு தொடர்பு
இருக்கிறது"
---------------------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தில் சூரியனின் பங்கு!

கிரகங்களின் அரசன் சூரியன். அதில் சந்தேகமில்லை. சூரியன்தான்
ஆட்சியாளர்களை உருவாக்குபவன். சூரியனின் அருளின்றி எவரும்
அரசியலிலோ அல்லது ஆட்சிக்கோ வரமுடியாது.

சூரியனை இயற்கையிலேயே ஒரு தீயகிரகம் (natural malefic) என்று
வேதங்கள் வர்ணிக்கின்றன. அதனால்தானோ என்னவோ அரசியல்
வாதிகளிலும் பலர் தீயவர்களாகி விடுகிறார்கள்

ஜாதகனுக்கு வலிமையையும், எதிர்ப்பு சக்தியையும் கொடுப்பவன் சூரியனே.
நம் உடல் அமைப்புக்கு அவன்தான் காரகன்

(The Sun gives us vitality and the power of resistance and immunity.
It is responsible for our physical makeup - the body's constitution.
The Sun gives life force, the power of will, intellect, brilliance,
prosperity, success in worldly affairs, wealth, personal conduct, activity,
cheerfulness, good fortune, wisdom, ambition, fame, the understanding
of the phenomenal world, and the knowledge of medicine.)

சூரியனை வைத்துத்தான், சூரியனின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்
நாளைத்தான் நாம் ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். அதைத்தான்
மொழிபெயர்ப்பில் Sunday என்கிறார்கள்.

சூரியனை வணங்கி மகிழத்தான் ஞாயிற்றுக் கிழமையை விடுமுறையாக
விட்டார்கள். அதாவது அது அந்தக்காலத்தில். சூரியனை வணங்கி விட்டு
வேலைகளைத் துவங்குவோம் மற்ற ஆறு நாட்களில் வேலைகளைச்
செய்வோம்.

இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கலியுகம். மனிதன் திங்கள்
முதல் சனி வரை வேலை செய்துவிட்டு ஞாயிறன்று ஓய்வு என்று சொல்லிப்
படுத்து உறங்குகிறான். அல்லது சன் டி.வி, கே. டி.வி, ராஜ் டி.வி என்று
ஒரே நாளில் மூன்று திரைப்படங்களை ஓசியில் பார்த்து மகிழ்கிறான்.
ஓசியில் கிடைப்பதெல்லாம் பெரும்பாலும் மகிழ்ச்சியையே தரும்:-))))

Aditya என்பதற்கு தமிழில் முதல் பிறவி ("first born") என்று பெயர்
பூமியின் சுழற்சியினால் இரவு பகல் நமக்குக் கிடைப்பதற்குக் காரணம்
சூரியனே. இல்லையென்றால் வெறும் இரவு மட்டும்தான் இருக்கும்
--------------------------------------------------------------------------------------------------------
1. ஜாதகனுக்கு வாளிப்பான அல்லது வலிமையான அல்லது ஆரோக்கியமான
உடம்பு அமைவதற்குக் காரணம் சூரியனே. சூரியன்தான் உடல்காரகன்

2. சூரியன் கேந்திர திரிகோணங்களில் அமர்ந்திருந்தால், சுயவர்க்கத்தில்
5ம் அல்லது அத்ற்கும் மேற்பட்ட பரல்களையும் கொண்டிருந்தால் ஜாதகனுக்கு
நல்ல உடல் அமைப்பு இருக்கும்.

நமக்கு எதையும் சினிமாவை வைத்துச் சொன்னால் எளிதில் புரியும். ஆகவே
அதன் பலனை இப்படிச்சொல்லலாம். சூரியன் நன்றாக இருந்தால், ஜாதகனுக்கு
அரவிந்தசாமி, அல்லது அஜீத் குமார் அல்லது சூர்யா அல்லது அப்பாஸ்
அல்லது மமுமுட்டி போன்றவர்களின் வசீகரமான உடல் அமைப்பு இருக்கும்
இல்லையென்றால் ஜாதகன் ஓமக்குச்சி நரசிம்மன்தான்

3. ஜாதகத்தில் சூரியன் தீயவர்களின் வீட்டில் அல்லது சேர்க்கையில் அல்லது
பார்வையில் இருந்தால் ஜாதகனுக்கு நோய்கள் இருக்கும் அல்லது உண்டாகும்
சூரியன் ஆறு, எட்டு, அல்லது பன்னிரெண்டு ஆகிய வீடுகளில் அமர்ந்து
இருந்தாலும் அதே பலன்தான்.

இந்த அமைப்பில் சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தால் அது
விதிவிலக்கைக் கொடுக்கும்!

4. ஜாதகத்தில் சனியும் சூரியனும் சேர்ந்திருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர்
நேராகப் பார்த்தாலும், ஜாதகனுக்கு ஊனம் அல்லது உடற் குறைபாடுகள்
உண்டாகும் அல்லது ஏற்படும்.

5. சூரியன்தான் தந்தைக்கும் அதிபதி. சூரியன் நன்றாக இருந்தால் நல்ல
தந்தை கிடைப்பார். இல்லையென்றால் இல்லை

6. ஜாதகத்தில் சூரியன் கெட்டிருந்தால், ஒரு சப்பையான தந்தை அல்லது
ஒரு உதவாக்கரைத் தந்தை கிடைப்பார்.(He will be useless or hopeless)

7. சூரியன் கெட்டிருந்தால் அல்லது மறைந்திருந்தால், சிலர் தங்களுடைய
சின்ன வயதிலேயே தந்தையை இழக்க நேரிடும்.

இது இளம் வயதுக் குழந்தைகளுக்கு ஒரு சோகமான சூழ்நிலையைக்
கொடுக்கும்

"அன்னையோடு அறுசுவைபோம். தந்தையோடு கல்விபோம்" என்பது
முதுமொழி. அன்னை கையால் உண்ணும் உணவுதான் அறுசுவையாக
இருக்கும் என்பார்கள். அன்னை போய்விட்டால் மகனுக்கு நல்ல சுவையான
உணவு கிடைக்காது என்று இதற்குப் பொருள். இது பெண் குழந்தை
களுக்கும் பொருந்தும்

(தங்கமணிகள் வந்து சமையலைக் கற்றுக் கொண்டு, நமக்கு சுவையான
உணவைக் கொடுப்பதற்குள் ஒன்று நமக்கு வயசாகிவிடும் அல்லது மேலே
சிறகில்லாமல் சென்றிருப்போம்)

8. சூரியனுடன் பத்துப் பாகைக்குள் வரும் மற்ற கிரகங்கள் அஸ்தமனமாகி
விடும் ஆதலால் சூரியன் தனித்து இருப்பது நல்லது

இதை வைத்துத்தான் அமாவாசையில் பிறப்பவன் அவதிப்படுவான்
என்பார்கள். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் நெருங்கி ஒருவரை
ஒருவர் கட்டிக் கொண்டிருப்பார்கள். அந்தக் கட்டில் ஜாதகனுடைய
சந்திரன் அவுட்டாகி விடுவார். அதாவது அஸ்தமனம் ஆகி விடுவார்.

அதானால் ஜாதகனுக்கு வாழ்க்கையில் பெரிய பெரிய அவஸ்தைகள் வந்து
கொண்டே இருக்கும். அதிலும் ஒரு நன்மை உண்டு. ஜாதகன் ஐம்பது
வயதிற்குமேல் ஞாநியாகிவிடுவான்.

9. சூரியன் நீசமாகி, சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை பெறாமல்
சுய வர்கத்தில் 2 அல்லது அதற்குக் குறைவான பரல்களை பெற்றிருக்கும்
ஜாதகனின் உடம்பு பலமின்றி (weak) இருக்கும். நோஞ்சானாக இருப்பான்
அல்லது நித்திய சீக்காளியாக இருப்பான்.

10. உச்சமான சூரியன், சுபக்கிரகத்தின் பார்வை பெற்ற சூரியன்,சுய வர்க்கத்தில்
5 அல்லது அதற்கு மேல் பெற்ற சூரியன் ஆகிய அமைப்புக்கள் உடைய
ஜாதகன் டக்கராக் இருப்பான். வெற்றி மீது வெற்றி வந்து அவனைச் சேரும்.
===========================================================
1. The Europeans called the Sun "Apollo," whom the Greeks adored as the Sun-God.

2. In Iran, Mithra, the God of Light, is the Sun-God.

3. The Chinese regarded the Sun as the prime dispeller of evil spirits.

4. In Japan, Dhyani Buddha, the great Sun, is the ultimate Buddha-reality.

5. Mexicans, the Sun is "Impalnesohumani", which means "He by whom men live."

6. The Egyptians view the Sun as the governing deity because he causes
upward and downward currents of ether and the annual waters of rains.

7. The Chaldeans also worshipped the Sun.

8. The Hindu prays to the Sun thrice a day. Surya Namaskar, Whenever
the Sun enters into certain significant zodiacs, the Hindus perform religious
functions. They celebrate Sankranti when Sun enters Capricorn zodiac, when
Sun commences its northern course. Tamil New Year's Day is celebrated

9. when the Sun crosses the fixed Nirayana Vernal Equinox and enters
Aries. Christians celebrate Christmas on that very day when the Sun changes
its course in the sky and starts gaining power.

Sundays were probably initially designated holidays to worship this God of the sky.
==============================================================
சூரியனுக்கும் பன்னிரெண்டு ராசிகளுக்கும் உள்ள தொடர்பு

சூரியனுக்குச் சொந்த வீடு: ஒன்று மட்டுமே: அது சிம்மம்
சூரியனுக்குச் நட்பு வீடுகள்: மூன்று = விருச்சிகம், தனுசு, மீனம்
சூரியனுக்குச் சம வீடுகள்: மூன்று = கன்னி, மிதுனம், கடகம்
சூரியனுக்குச் பகை வீடுகள்: மகரம், கும்பம், ரிஷபம்
சூரியனுக்குச் உச்ச வீடு: மேஷம்
சூரியனுக்குச் நீச வீடு: துலாம்

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சூரியனுக்கு 100%
வலிமை இருக்கும்.

சூரியனுடன் பதன் சேர்ந்திருந்தால் ஆதித்ய யோகம்
அந்த யோகத்திற்குப் பலன்கள்:
ஜாதகன் புத்திசாலியாக இருப்பான். எல்லா வேலைகளிலும்
கெட்டிகாரனாக இருப்பான். மதிப்பும் மரியாதையும் உடையவனாக
இருப்பான் அல்லது அவைகள் அவனுக்குக் கிடைக்கும் அல்லது
தேடிவரும். வசதிகளும் மகிழ்ச்சியும் கொண்டவனாக இருப்பான்

சூரியனுடன் சனி சேரக்கூடாது. அல்லது ஒருவர் பார்வையில்
ஒருவர் இருக்கக்கூடாது. உடல் நோய்கள், உடல் உபாதைகள்
உடல் ஊனங்கள் ஏற்படும் அபாயம் உண்டு

சம வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் சூரியனுக்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த சூரியனுக்கு பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த சூரியனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகளையெல்லாம் நான் எடை போட்டுச் சொல்லவில்லை;
அனுபவத்தில் சொல்கிறேன். அதை மனதில் கொள்க!
=============================================
சூரியன் கொண்டிருக்கும் சுயவர்க்கப்பரல்களுக்கான் பலன்கள்:

சுயவர்க்கத்தில் சூரியன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1 பரல்: உடல் உபாதைகள், துக்கம், அலைச்சல்

2 பரல்கள்: மகிழ்வின்மை, தனநஷ்டம், அரசுபகை, புரிதலின்மை (misunderstanding)

3 பரல்கள்: அவதிகொடுக்கும் உடல் நிலை, அலைச்சல் மிகுந்த பயணங்கள்
உடல் காரணமாக மனதிற்கும் வேதனைகள்

4 பரல்கள்: சம அளவில் லாபம், நஷ்டம், மகிழ்ச்சி, துக்கம் கலந்த வாழ்வு.

5 பரல்கள் செல்வாக்கு உள்ளவர்களின் நட்பு, கல்வியால் மேன்மையடைதல்

6 பரல்கள்: ஆரோக்கியமான உடல் நிலை. வசீகரமான தோற்றம், சாதிக்கும்
மனப்பான்மை. வண்டி வாகன சேர்க்கைகள். முறையான வழியில் அதிர்ஷ்டம்
மற்றும் புகழ்.

7 பரல்கள்: வாழ்க்கையின் உச்சங்களைக் காணும் பாக்கியம். உரிய விருதுகள்
கிடைக்கும் வாழ்க்கை

8 பரல்கள்: அரசியல் செல்வாக்கு, அதிகாரம், மரியாதை எல்லாம் கிடைக்கும்
அல்லது அப்படிப் பட்டவர்களின் தொடர்பு கிடைக்கும். சிலருக்கு உலக
அளவில் அறியப்படும் வாய்ப்பும் உண்டாகும் (universal respect)
==========================================================
சூரியன் இருக்கும் 12 ராசிகளுக்குகான பலன்கள்

1
லக்கினத்தில் சூரியன் இருந்தால்: ஜாதகன் கோபக்காரன். சிலருக்கு
சோம்பலும் சேர்ந்து இருக்கும். அதீத துணிச்சல் உடையவனாக இருப்பான்
சிலருக்கு இளம் வயதிலெயே தலை வழுக்கையகிவிடும். தங்களைப்
பற்றிய உயர்வு மனப்பானமை இருக்கும். இரக்கசிந்தனை இருக்காது.
பொறுமையுணர்வும் இருக்காது.

மேஷ லக்கினத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் உயர்கல்வி
பெற்றவர்களாக இருப்பார்கள். செல்வந்தவர்களாவும், தனித்தன்மை
உடையவர்களாகவும், புகழ் பெற்றும் விளங்குவார்கள்.

கடகத்தை லக்கினமாகக் கொண்டு அதில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள்
கண்பார்வைக் கோளாறுகள் ஏற்பட்டு அவதிப்படுவார்கள்.

துலாம் வீடு லக்கினமாக இருந்து அங்கே சூரியன் நிலை கொண்டிருந்தால்,
ஜாதகன் வறுமை மற்றும் துன்பத்தால் அவதியுறுவான். அதே லக்கினத்தில்
பிறந்த பெண்ணிற்குக் கருத்தரிப்பதில் பிரச்சினை உண்டாகும்

மேற்கூறிய இடங்களைச் சுபக் கிரகங்கள் பார்த்தால், தீய பலன்கள்
வெகுவாகக் குறைந்துவிடும். நல்ல பலன்கள் அதிகமாகும்
....................................................................................................................
2
லக்கினத்திற்கு இரண்டாம் வீட்டில் சூரியன் இருந்தால்:

சொத்துக்கள் இருக்காது அல்லது கிடைக்காது. அதே போலக் கல்வியும்
கிடைக்காமல் போய்விடும்.. பெருந்தன்மை உடையவனாக ஜாதகன்
இருப்பான். எதிரிகளையும் நேசிப்பான். சிலருக்கு அரசு பகை
உண்டாகலாம்.

இரண்டாம் வீட்டில் எந்த தீய கிரகம் இருந்தாலும், அது ஜாதகனின்
சொத்து சுகங்களுக்கு எதிராகத்தான் இருக்கும். எதிராகத்தான் வேலை
செய்யும்.
.....................................................................................................................
3.
லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் சூரியன் இருந்தால்:

ஜாதகன் வசீகரமானவனாக இருப்பான்.(the quality of being good
looking and attractive) தியாக மனப்பான்மை உடையவனாக இருப்பான்.
யுத்தத்தில் எதிரிகளை வதம் செய்பவனாக இருப்பான். அதீத
துணிச்சல் இருக்கும். உடல் உறுதியுடையவனாக இருப்பான்.

இந்த அமைப்பு (அதாவது லக்கினத்திற்கு மூன்றாம் வீட்டில் சூரியன்)
இளைய சகோதர உறவுகளுக்கு எதிரானது. உறவுகள் ஜாதகனை விட்டு
விலகும்
.......................................................................................................................
கட்டுரை பெரியது. எழுதுவதற்கும் தட்டச்சுவதற்கும் இதுவரை அதிகமான
நேரத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது. ஆகவே இனிவரும் வீடுகளுக்கு
மொழி மாற்றத்தைக் கைவிட்டு விட்டு என் சேகரிப்பில் இருப்பதை
அப்படியே தருகிறேன். எளிய ஆங்கிலத்தில்தான் உள்ளது. அனைவருக்கும்
புரியும்
4.
Sun in the Fourth House

Heart may be afflicted. Will be devoid of happiness, landed
properties, relatives and conveyances. Will be interested in
the opposited sex. Will have many houses. Will harm paternal
wealth. Will never have mental peace & contentment.
.....................................................................................................................
5.
Sun in the Fifth House

Will be highly intelligent, and will be loved by the Government.
Will be devoid of sons, comforts & wealth. Will love forests &
try to live in such surroundings. This position is adverse for
relationship with sons.
.....................................................................................................................
6
Sun in the Sixth House

Will have prosperity and along with prosperity, enemies.
Will be virtuous, Will be famous, Will have good digestive power.
Will be victorious but will have to face enemy trouble. Will be
a commander and will be skilled in combat. Will be a lord with a
lot of subordinates. Digestive tract disorders indicated.
...................................................................................................................
7.
Sun in the Seventh House

Will be tormented by the Government. Will have to face defeat.
Will be devoid of marital happiness. Will have to face humiliation.
May be insulted by women. Body may be tormented by ill health.
Will be traveling a lot.
................................................................................................................
8
Sun in the Eighth House

Will be devoid of relatives and wealth. Will be melancholic &
sorrowful. Will be quarrelsome and will be fastidious. Will have
to face defeat in many situations.
...................................................................................................................
9
Sun in the Ninth House

Will have wealth, relatives and sons. Will have reverence for the
preceptors and devotion to spiritual people. May harm the father.
Will be devoid of Dharma. Will be a misogynist.
....................................................................................................................
10
Sun in the Tenth House

Will be highly educated & will have paternal wealth. Will be
highly intelligent with a lot of conveyances. Will be hedonistic
and strong. This dominance of Sun on the Meridian is capable
of conferring regal status, knowledge and valor.
................................................................................................................
11
Sun in the Eleventh House

Will be wealthy with high education. Will have good longevity and
a lot of good subordinates.Will have high professional skill. Will be
strong and will be prosperous
.................................................................................................................
12
Sun in the Twelfth House

Will have eye troubles and will be devoid of sons & wealth. Will be
inimical to the father. Will be weak and may fall from profession.
This adverse position of the Sun is not good from the perspective
of profession as a fall is indicated.

எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!
--------------------------------------------------------------------------------------------------
சூரியனின் கோச்சார பலன்கள்:

சூரியன் ஒரு வருடத்திற்குள் ஒரு சுற்று சுற்றி முடிக்கக்கூடியவர்.
ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதம் மட்டுமே இருக்கக் கூடியவர்

3, 6, 11 ஆகிய வீடுகளில் சஞ்சாரம் செய்யும் அந்த 3 மாதகாலம்
மட்டுமே ஜாதகனுக்குக் கோச்சார சூரியனால் நன்மைகள் ஏற்படும்
மற்ற 9 மாத காலத்தில் கோச்சார சூரியனால் நன்மைகள் ஏற்பட
வழியில்லை

கோச்சார சூரியன் தான் சுற்றிவரும் பாதையில் ஜாதகனின் சுயவர்க்கத்தில்
தன்னுடைய கட்டத்தில் எந்த இடத்தில் ஜீரோ பரல்களுடன் இருக்கிறாரோ
அந்த இடத்திற்கு வரும் மாதத்தில் ஜாதகனுக்கு நோய் நொடிகளை
அல்லது தன் நஷ்டங்களைக் கொடுப்பார்,
======================================

யாருக்கு அறிவுரை சொல்லக் கூடாது?

Posted: 09 May 2012 09:23 AM PDT




அது ஒரு வனாந்திரக்காடு. கார்த்திகை மாதம். அடை மழை அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. மரம் செடி கொடி என்று எல்லாமே ஈரமாகியிருந்தது.

பெரிய மரம் ஒன்றில், கூட்டில் இருந்த தூக்கனாங் குருவி ஒன்று வெளியே எட்டிப் பார்க்காமல், சேர்த்து வைத்திருந்த உணவைத் தின்று விட்டுக் கூட்டுக்குள்ளேயே பத்திரமாக இருந்தது.

மழை சற்று நின்றது. மழையால் ஏற்பட்ட இரைச்சலும் காணாமற்போனது.

நமது குருவியின் போதாத நேரம், கூட்டைவிட்டுத் தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தது.

கூடு தொங்கிக் கொண்டிருந்த கிளைக்குக் கீழ் கிளையில் குரங்கு ஒன்று வெட வெடவென்று நடுங்கிய நிலையில் அமர்ந்திருந்தது. தொடர்ந்து பெய்த மழையாலும், ஜில்'லென்ற சீதோஷ்ண நிலையாலும், முழுக்க ஆறு மணி நேரத்திற்கு மேல் அடை மழையில் நனைந்திருந்ததாலும் அந்த நடுக்கம்!

இரக்கம் கொண்ட குருவி, அந்தக் குரங்கைப் பார்த்துச் சொன்னது.

"அண்ணா! நீங்கள் என்னை விட நூறு மடங்கு வலிமையானவர். திறமையானவர்.
இப்படி நடுங்கும் நிலை ஏற்படலாமா? நீங்களும் என்னைப்போல ஒரு கூடைக்
கட்டிக் கொண்டு அதில் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எவ்வளவு
பாதுகாப்பாக இருக்கும்? நீங்கள் ஏன் அதை செய்யக்கூடாது?"

குரங்கார் மேலே நிமிர்ந்து பார்த்தார். அவருக்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது?

"நீ எனக்கு எப்படி அறுவுரை சொல்லலாம்? என்னை என்ன முட்டாள் என்று
நினைத்தாயா? உனக்கு ஒரு கூடு இருப்பதால் தானே இந்தத் திமிர்ப் பேச்சு?
இப்போது என்ன செய்கிறேன் பார்!" என்று மேல் கிளைக்குத்தாவி, தொங்கிக்
கொண்டிருந்த கூட்டைத் தன் பலம் கொண்ட மட்டும் ஆட்டிப் பிடிங்கித் தன்
கைகளில் பற்றியது.

அரண்டு போன குருவி கூட்டை விட்டுப் பறந்து பக்கத்தில் இருந்த மரத்தில்
போய் அமர்ந்து கொண்டு, தன் கூட்டிற்கு எற்படும் நிலைமையைத் தன்
கண்களால் பரிதாபமாகப் பார்த்தது.

என்ன ஏற்பட்டிருக்கும்?

குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று கூறுவார்களே அந்த நிலைதான் கூட்டிகும் ஏற்பட்டது.

கூடு சுக்கல் நூறாகி மரத்தின் கீழ் பகுதிகளில் சென்று விழுந்தது.

தகாதவர்களுக்குச் செய்யும் அறிவரையின் முடிவு இப்படித்தான் ஆகும்

கூப்பிடும் தூரத்தில்தான் கடவுள் இருக்கிறார் - God is only in the calling distance!

Posted: 09 May 2012 09:22 AM PDT



கூப்பிடும் தூரத்தில்தான் கடவுள் இருக்கிறார் -
God is only in the calling distance!

ஒரு குறுநில மன்னன் இருந்தான். அவனும் நன்றாக இருந்தான்.
அவன் தலைமையில் நாடும் நன்றாக இருந்தது.

அவனுக்கு இறை நம்பிக்கை உண்டு. ஆனால் அதீதமாக
இறைவனைக் கும்பிடுபவன் இல்லை அவன்.

ஒரு நாள் அரச சபையில் இருந்த அமைச்சர்கள், கவிராயர்கள்,
கல்வியாளர்கள் என்று அனைவரையும் நோக்கிக் கேட்டான்.

"இறைவன் எங்கே இருக்கிறான்?"

அனைவரும் ஒருசேர வானத்தை நோக்கிக் கையைக் காட்டினார்கள்.

மன்னன் புன்னகைத்துவிட்டுச் சொன்னான். "வானத்தில் இருக்கிறான்
என்பது எனக்கும் தெரியும். வானத்தில் எங்கே இருக்கிறான்? அதைச்
சொல்லுங்கள்!" என்றான்

அனைவரும் மெளனமாகி விட்டர்கள். அதாவது 'கப், சிப்' பென்று
அடங்கிவிட்டார்கள்.

அரசன் சொன்னான், "சரி, ஒருவாரம் அவகாசம் தருகிறேன்.
யோசித்துச் சரியான பதிலைச் சொல்லுங்கள்.என்னை மகிழ்விக்கக்கூடிய
பதிலைச் சொல்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு!"
.....................................................................................................................
ஒருவார காலம் கடந்து போனதே தெரியவில்லை. அடுத்த திங்கட்
கிழமையும் வந்து சேர்ந்தது. அரச சபையும் கூடியது.

மன்னன் ஒரு வாரமாக ஆர்வத்துடன் காத்திருந்ததால், சபைக்கு
வந்தவுடன், அந்தக் கேள்வியைத்தான் முதலில் கேட்டான்.

"யாராவது சென்ற வாரம் நான் கேட்ட கேள்விக்குப் பதிலுடன்
வந்திருக்கிறீர்களா?"

ஒருவரும் வாயைத் திறக்கவில்லை. தலையைக் குனிந்து கொண்டு
நின்றார்கள்.

அரசனுக்கும் சங்கடமகிவிட்டது. இத்தனை சான்றோர்களும், மூத்த
அறிஞர்களும் நிறைந்த இந்தச் சபையில் ஒருவருக்குக் கூடவா
சரியான பதில் தெரியவில்லை?

அப்போதுதான் அது நடந்தது.

அரசனுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த பணியாள், சாமரத்தைக் கீழே
வைத்துவிட்டு, அரசனருகில் வந்து, தன்னுடைய இரண்டு கைகளையும்
கட்டிக்கொண்டு, பணிவுடன் கேட்டான்.

"மன்னர் மன்னா, உங்கள் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியும். நான்
சொல்லவா?"

வியப்பு மேலிட்ட அரசன் மகிழ்ந்து சொன்னான்.

"ஆகா தாராளமாகச் சொல்"

"கடவுள் அங்கு இங்கு எனாதபடி எல்லா இடங்களிலும் இருக்கிறார்.
நம் அருகிலேயே இருக்கிறார். கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறார்"

"எப்படிச் சொல்கிறாய்?"

"முதலையின் வாயில் தன் கால் மாட்டிக் கொண்டு மீள முடியாதபோது,
ஆதிமூலம் என்று யானை ஒன்று கதறி அழுது கூப்பிட்ட போது
இறைவன் வந்து அதைக் காப்பாற்றவில்லையா? தன் மானம் பறிபோகும்
நிலையில், கண்ணா, என்னைக் காப்பாற்று என்று திரெளபதை கூக்குரல்
இட்டபோது, இறைவன் உதவிக்கு வந்து அவள் மானத்தைக் காக்கவில்லையா?
ஆகவே இறைவன் கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில்தான் இருக்கிறார்.
நீங்கள் மனம் உருகி அழைத்தால் அவர் வருவார். உங்களுக்கு
வேண்டிய உதவிகளைச் செய்வார்"

அவன் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்தான் மன்னன்.
ஆனாலும் அவன் அதை முழுதாக அதை ஏற்றுக் கொள்ளாமல்,
தொடர்ந்து கேட்டான்.

"அப்பனே நீ சொல்வது சரி. ஆனாலும் ஒரு கேள்வி இருக்கிறது.
துரியோதனின் சபைக்கு திரெளபதையை அவன் தம்பி துச்சாதனன்
இழுத்துவந்த போது, அந்த மாதரசியை, இறைவன் ஏன் ஆரம்பத்திலேயே
காப்பாற்றவில்லை? தன்னுடைய வீட்டிற்கு வந்து துச்சாதனன்
அழைத்தபோது - அடேய், நான் மாதவிடாயில் இருக்கிறேன் - ஒற்றை
ஆடையில் இருக்கிறேன் - பொது சபைக்கு வரமுடியாத நிலையில்
இருக்கிறேன் - என்னை விட்டுவிடு என்று அவள் சொன்ன போது - வரம்பு
மீறி அவளைத் தர தரவென்று இழுத்துக் கொண்டு செல்லும் நோக்கோடு
கையைப் படித்து அந்தப் பெண்ணரசியை இழுத்தானே - அப்போது
ஏன் இறைவன் வந்து அவளைக் காக்கவில்லை?

"இல்லை மன்னா, தவறு திரெளபதையுடையது. சொல்லியும் கேட்காமல்
இழுக்கிறானே - என்ன செய்வான் பார்த்து விடுவோம் என்ற மன
நிலையில் இருந்தாள். அதே போல அரச சபைக்கு வந்தவுடன்
பீஷ்மர், துரோணாச்சாரியார் போன்ற பெரியவர்களைப் பார்த்தும்
இங்கே தனக்கு அசிங்கமாக ஒன்றும் நேர்ந்துவிடாது என்று துணிவும்
கொண்டாள். அதோடு தன் கணவர்கள் ஐவரையும் அங்கே பார்த்தவுடன்
இவர்களும் இருக்கிறார்கள் - யார் என்னை என்ன செய்துவிட முடியும்
என்ற நம்பிக்கையையும் கொண்டாள். ஆனால் இறுதியில் எல்லாம்
மோசமாகி, தன் துகில் - தன் சேலை - உரியப் படும் நிலைக்கு வந்த
பிறகுதான் - இனி யாராலும் தன்னைக் காப்பாற்ற முடியாது
இறை வடிவான கண்ணன் ஒருவனால்தான் தன்னைக் காப்பாற்ற
முடியும் என்ற முடிவிற்கு மின்னலாக வந்தாள். அதற்குப் பிறகுதான்
கண்ணா, என்னைக் காப்பாற்று என்று கதறிக் கூக்குரல் கொடுத்தாள்
கண்ணனும் அவளுடைய மானத்தைக் காத்தார். ஆகவே ஒன்று மட்டும்
சொல்ல ஆசைப் படுகிறேன் மன்னா! அழைத்தவர் குரலுக்கு மட்டுமே
இறைவன் வருவான். அவன் அவனாக வந்து ஒருபோதும் உதவி
செய்வதில்லை. ஆகவே மனம் உருகி அழையுங்கள் மன்னா, இறைவன்
வருவான். நல்வழி தருவான்."
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"வாத்தியார், இந்தக் கதை எதற்கு?"

"உங்கள் பிர்ச்சினைகளைத் தீர்க்க இறைவன் அவனாக வருவான் என்று
தெனாவட்டாக இருக்காதீர்கள். மனம் உருகிப் பிரார்த்தனை செய்யுங்கள்
உங்கள் பிரச்சினைகளை அவன் தீர்த்துவைப்பான்."
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

எல்லாவற்றிலும் ஒன்றிப் போவது எப்படி?

Posted: 09 May 2012 09:20 AM PDT




மனிதனுக்குள் எல்லா ரசனையும் உண்டு!

ரசிப்பவன், ரசிக்கும்தன்மை உடையவன் எல்லாவற்றிலும் ஒன்றிப் போய்
விடுவான்! காலம் அவனை மாற்றாது!

எப்படி?

என்னையே உதாரணமாகச் சொல்லலாம்

நான் சுசிலா அம்மையாரின் பாடல்களில் பல முறை கரைந்திருக்கிறேன்
அதேபோல சித்ரா அவர்களின் பாடல்களில் பலமுறை என்னையே பறி
கொடுத்திருக்கிறேன். டி.எம்.எஸ் முதல் இன்றைய ஹரிஹரன்வரை
அத்தனை பாடகர்களையும் எனக்குப் பிடிக்கும்

"ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே..." பாடலில் இருந்து
"பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்; ஒற்றை நாணயம்" வரை ஏராளமான
பாடல்களுக்கு நான் ரசிகன்

தள்ளுபடி எதுவும் கிடையாது.

கண்ணதாசனையும் பிடிக்கும், கங்கை அமரனையும் பிடிக்கும்

கரகாட்டக்காரன் பாடல்களை லேசில் மறக்க முடியுமா?

ஆகவே ஒப்பிடுவது தவறு. ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பு இருக்கிறது.

எனக்கு அந்தக்காலத்தில் எப்படி சரோஜாதேவியைப் பிடித்ததோ, அதே போல
இன்று சிநேகாவையும் பிடிக்கும், பாவனாவையும் பிடிக்கும் (ஒரு உதாரணத்
திற்காகச் சொல்லியிருக்கிறேன்)

ஸ்டார் ஓட்டலும் பிடிக்கும், கையேந்தி பவனும் பிடிக்கும்

எல்லாவற்றிற்கும் காரணம்: 1, ரசனை உணர்வு, 2.மனப்பக்குவம்
------------------------------------------------------------------------------------------------
ஆகவே எதையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

மல்லிகைப்பூவிற்கு ஒரு சிறப்பு என்றால்
தாழம்பூவிற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது

புறாவிற்கு ஒரு சிறப்பு என்றால்
காகத்திற்கும் ஒரு சிறப்பு இருக்கிறது

உருளைக்கிழங்கிற்கு ஒரு சிறப்பு என்றால்
பாகற்காய்க்கும் ஒரு சிறப்பு இருக்கிறது

ஆகவே எல்லாவற்றையும் ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அதோடு ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொள்ளுங்கள்

தீ (Fire)க்கு ஒரே குணம்தான்!
ரசனைக்கும் அப்படித்தான்

பெயர்ச்சியா? தளர்ச்சியா?

Posted: 09 May 2012 09:17 AM PDT



குரு பகவான் மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு வீடு மாறுகிறார்.
அதனால் யாராருக்கு என்ன நேரும்? என்று எல்லா இதழ்களும் போட்டி
போட்டுக்கொண்டு எழுதுகின்றன.

அவருக்கு ஏது மூட்டை முடிச்சுக்கள்? மனிதனுக்குதான் மூட்டை முடிச்சுக்கள்
ஐடென்ட்டி கார்டு, வோட்டுரிமை கார்டு, பான் கார்டு, ரேசன் கார்டு என்று
பைநிறையப் பல கார்டுகள். ஒரு லாரி கொள்ளும் அளவிற்கு தேவைப்படும்
வீட்டு, மற்றும் சொந்த உபயோக சாதனங்கள். ஒவ்வொருமுறையும் வீடு
மாறும்போதும் தூக்கிக் கொண்டு அலைய வேண்டும். அத்துடன் குடும்ப உறவுகள்.

ஆகவே குரு பகவான் இடம் பெயருகிறார். உங்கள் வீட்டிற்கு அருகில்
எங்கே வருகிறார் பாருங்கள்? என்று ஒருவனைப் பயமுறுத்துவது போல
வருகின்ற செய்திகளைக் கண்டு மயங்காதீர்கள்.

தற்போது வான வட்டத்தில் 270 டிகியில் பயணித்துக் கொண்டிருக்கும்
அல்லது சுழன்று கொண்டிருக்கும் குரு பகவான், டிஸம்பர் 6ஆம் தேதியன்று
271 டிகிரிக்கு அடியெடுத்து வருகிறார். அது தனுசுராசி முடிந்து மகரராசியின்
எல்லை. அதைத்தான் பத்திரிக்கைகள் குருப் பெயர்ச்சி என்று எழுதுகின்றன
அதோடு ஒவ்வொரு ராசிக்கும் நன்மை தீமைகளையும் எழுதியிருக்கின்றன

இந்திய மக்கள், ஏன் உலக மக்கள் அனைவருக்கும் அவைகள் பொதுப்
பலன்கள் ஆகும். பலன்கள் நன்றாக இருக்கும் என்று எழுதியிருப்பதைப்
படிப்பவர்கள் மகிழ்ந்தும் அல்லாதாவர்கள் தளர்ந்தும் போய் விடுவார்கள்

அதெல்லாம் தளராதீர்கள்?

நான் முன்பே எழுதியிருக்கிறேன். ஜாதகம் என்பது வாகனம் (car). தசாபுத்தி
என்பது பயணிக்கும் பாதை (Road). கோச்சாரம் என்பது ஓட்டுனர் (Driver)

கார் நன்றாக இருந்தாலும் பயணிக்கும் பாதையும், ஓட்டுனரும் முக்கியமானவை.
பாதை நன்றாக இருந்தால் பயணம் சுகமாக இருக்கும். ஓட்டுனர் நன்றாக
இருந்தால் பயணம் பாதுகாப்பாக இருக்கும்.

ஆகவே வெறும் குருப்பெயர்ச்சி பலன்களை மட்டும் படிக்காமல் அதை
உங்கள் ஜாதகத்துடன் ஒத்துப் பாருங்கள்.

நல்ல தசாபுத்திகள் நடந்தால் பாதகம் ஒன்றும் வராது. பாதை நன்றாக
இல்லாவிட்டால் ஓட்டுனரும் பார்த்துத்தான் ஓட்டுவார்.

எப்படி என்று கேட்காதீர்கள். அதுதான் உங்களையும் என்னையும்
படைத்த இறைவனின் கருணை!தான் படைத்த உயிர்களுக்கு அவன்
அளிக்கும் சலுகை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குருப் பெயர்ச்சிப் பலன்களை வழவழவென்று அடுக்கிக்கொண்டு போகாமல்
ஒரு வார்த்தையில் செய்தி வெளியிட்டிருந்தார்கள் ஒரு பத்திரிக்கையில். அதை
நீங்கள் அறியத்தருவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ராசிகளுக்கான பொதுப் பலன்கள்

1. மேஷம் - சிரமம்
2. ரிஷபம் - நன்மை
3. மிதுனம் - கஷ்டம்
4. கடகம் - லாபம்
5. சிம்மம் - பாதிப்பு
6. கன்னி - இன்பம்
7. துலாம் - சுமார்
8. விருச்சிகம் - கவனம்
9. தனுசு - மகிழ்ச்சி
10. மகரம் - பரவாயில்லை
11. கும்பம் - கவலை
12. மீனம் - மேன்மை

எங்கிட்ட மோதாதே! நான் வீராதி வீரனடா!

Posted: 09 May 2012 09:15 AM PDT



கிராமங்களில்,"மாப்ளே அவன் தகிரியமான ஆள்டா. வம்பு கிம்பு
வச்சிக்காதேடா. சாத்திப்புடுவான்டா" என்று ஒருவனைப் பற்றி
சிலாகித்துச் சொன்னால், அவன் துணிச்சல் மிக்கவன் என்று பொருள்.

சிலருக்கு இயற்கையாகவே துணிச்சல் அதிகமாக இருக்கும். அதோடு
கோபமும் இருக்கும். ஒரு சின்னச் சலசலப்பிற்குக் கூட, இடுப்புப்
பெல்ட்டைக் கழற்றிக் கொண்டு, அல்லது கையில் கிடைக்கும்
எதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு சண்டையில் இறங்கி விடுவார்கள்.
பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். அது ஒரு
வகைத் துணிவு.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவு உடல் வலியையும்
அல்லது மன வலிகளையும் தாங்கிக் கொண்டு ஒன்றும் நடக்காதுபோல
இருப்பார்கள். முகத்தில் எதையும் காட்ட மாட்டார்கள். அது ஒருவகைத்
துணிவு

தேசிய பாதுகாப்பில் இருக்கும் வீரர்கள், காவல்துறையில் இருக்கும் பல
வீரர்களின் துணிவு ஒப்பிட்டுப் பார்க்க முடியாத ஒன்று!

அதுதான் அவர்களுக்கு ஆதாரம் அல்லது ஜீவாதாரம். அதுதான்
அவர்களின் வாழ்க்கை. அது ஒருவகைத் துணிவு

ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய்
.
ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருக்கும் ஆசாமிகள், அபாயச்சூழல்
நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள்
என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள்.

அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம்
போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்

சிலர் ஊழல் செவதற்கோ, அவமானத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ
பயப்படாமல் இருப்பார்கள். அதே செவ்வாய் வேறு ஒரு கிரகக் கூட்டணி
யால் அல்லது பார்வையால் அவர்களுக்கு அந்த வித்தியாசமான
துணிவைக் கொடுக்கும்.

செவ்வாய்தான் கிரகங்களில் ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின்
நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும் அவர்தான்.

குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச்
செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான்.
சட்டென்ற கோபம் (short-tempered) அதிரடி, அடிதடி, வாக்குவாதம்,
விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான்.

ராணுவத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும்
காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செவ்வாய்தான் நாயகன்!

தொழில்நுட்ப அறிவிற்கும், இயந்திரங்கங்களை வடிவமைத்தல் மற்றும்
இயந்திரங்களை லாவகமாகக் கையாளும் அறிவிற்கும், திறனுக்கும்
ஆற்றலிற்கும் அவரே அதிபதி.

நாட்டில் சட்டம், ஒழுங்கு, எரிபொருள் போன்றவற்றிற்குக்கான காரகன்
அவர்தான்.

மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிவாகத்திறன், சுதந்திர மனப்பான்மை
ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் அவர்தான் அதிபதி.
---------------------------------------------------------------------------------
ஜாதகனின் உடன்பிறப்புக்களுக்கும் அவர்தான் காரகன். உடன்
பிறப்புக்களுடான நல்ல உறவுகளுக்கும், அல்லது அவர்களோடு
ஏற்படும் மனக் கசப்புக்களுக்கும் அவரே காரகர் (Authority)

நெருப்பு, மற்றும் இரத்தத்திற்கும் அவரே காரகன்

செவ்வாயைக் குறிக்கும் மற்ற பெயர்கள். அங்காரகன், குஜன்
ஆங்கிலத்தில் Mars. செவ்வாய் கிரகத்தின் நிறம் சிவப்பு!
கடகம் மற்றும் சிம்ம லக்கினங்களுக்கு செவ்வாய் யோககாரகன்
நவரத்தினங்களில் செவ்வாய்க்கு உரியது பவளம்.
இந்திய எண் கணிதத்தில் செவ்வாய்க்கு உரிய எண் 9
செவ்வாய்க்கு உரிய தெய்வங்கள் சுப்பிரமணியர், பத்ரகாளி1
=============================================
1. ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாகவோ அல்லது 1,4,9,10ஆம் வீடுகளில்
அமர்ந்திருந்து தனது சுய வர்க்கத்திலும் 8 பரல்களைப் பெற்றிருந்தால்
ஜாதகன் கோடீஸ்வரனாக உயர்வான். தன் திறமை மற்றும் செயல்
ஆற்றும் தன்மையால் பெரும் செல்வம் ஈட்டுவான்.

2. தனுசு, சிம்மம், மேஷம், கடகம், மகரம் ஆகிய ஏதாவது ஒன்று
லக்கினமாக இருந்து, அதில் செவ்வாயும் இருந்து, சுய வர்க்கப்பரல்
களும் 4ற்கு மேல் இருந்தால், ஜாதகன் ஆட்சியாளனாக இருப்பான்
அல்லது அதிகாரம் மிக்கவனாக இருப்பான்.

ஆட்சியாளன் என்றவுடன் இந்தியாவின் பிரதமர் பதவி வரும் என்று
நினைக்க வேண்டம். கிராம முன்சீப் பதவி அல்லது நகர சேர்மன்
பதவிகூட ஆட்சிப் பதவிதான் சுவாமி!

3. சுய வர்க்கத்தில் 8 பரல்களை உடையவர்கள், தாங்கள் பங்கு
பெற்றுள்ள துறையில் உச்சமான பதவியை அடைவார்கள்.

வங்கியில் குமாஸ்தாவாகச் சேருகிறவன், படிப்படியாக முன்னேறி
அதே வங்கியின் தலைமை அதிகாரியாக ஒருநாள் உயர்வான்.

துவக்கத்தில் ஒரு இசைக்குழுவில் ஆர்மோனியம் அல்லது கீ போர்டு
வாசித்துக் கொண்டிருப்பவன் திடீரென ஒரு நாள் நாடறிந்த இசை
அமைப்பாளனாக உயர்ந்து விடுவான், அதெல்லாம் செவ்வாயின்
உற்சாகமான சேட்டைகள்.

4, இரண்டாம் வீட்டிலோ அல்லது ஆறாம் வீட்டிலே செவ்வாய்
அமர்ந்திருந்து சுய வர்க்கத்திலும் ஆறு பரல்களைக் கொண்டிருந்தால்
ஜாதகனுக்கு வாழ்க்கையின் எல்லா செளகரியங்களும், சுகங்களும்
கிடைக்கும். அதே நேரத்தில் ஏராளமான விரோதிகளும் இருப்பார்கள்.

5. செவ்வாய் ஜாதகத்தில் நீசம் அடைந்ததுடன், 6ஆம் வீட்டிலோ
அல்லது 8ஆம் வீட்டிலோ அல்லது 12ஆம் வீட்டிலோ அமர்ந்திருந்து
உடன் வலுவில்லாத சந்திரனும் (waxing Moon) கூட்டணி போட்டிருந்தால்
ஜாதகனுக்கு உடன் பிறப்புக்கள் இருக்காது. அப்படியே ஒரிருவர்
இருந்தாலும் ஜாதகனுக்கு அவர்களுடன் நல்ல உறவு இருக்காது.
(அதற்கு இல்லாமலேயே இருக்கலாம்)

6. மூன்றாம் இடத்தில் செவ்வாயும், சனியும் கூட்டாக இருந்து, செவ்வாய்
சுயவர்க்கத்தில் முன்று பரல்களுடன் அல்லது அதற்குக் கீழான
பரல்களுடன் இருந்தால், ஜாதகன் தன் உடன் பிறப்பைப் பறிகொடுக்க
நேரிடும்.

7. பத்தில் செவ்வாய் இருந்து, அதன் சுயவர்க்கத்தில் 4 அல்லது
அதற்கு மேற்பட்ட பரல்களைக் கொண்டிருந்தால், அதோடு அந்த
அமைப்பில் செவ்வாய் சனியின் பார்வையைப் பெற்றால் ஜாதகன்
ராணுவத்தில் பணி புரிவான்.

8. செவ்வாய் பதினொன்றாம் அதிபதியாக இருந்தால், அவருடைய
திசையில் ஜாதகனுக்கு ராஜ யோகங்கள் கிடைக்கும்.

9. லக்கினம் செவ்வாயின் வீடுகளில் ஒன்றாக இருந்து அதாவது
மேஷம் அல்லது விருச்சிகமாக இருந்து, லக்கினம் அதன் சுய
வர்க்கத்தில் 7 பரல்களைப் பெற்றிருப்பதோடு, 7ஆம் வீட்டில்
செவ்வாய் இருந்து அதன் பார்வை தன் சொந்த வீட்டில் விழுந்தால்
ஜாதகன் சர்வ அதிகாரியாக இருப்பான். உலகில் சில சர்வாதிகாரி
களின் ஜாதகம் இத்தகைய அமைப்பைக் கொண்டது.

10. பெண்களின் ஜாதகத்தில் மாதவிடாய்க்குக் காரகன் செவ்வாய்.
மாதவிடாய் சமயத்தில் இரத்தப் பெருக்கு, irregular periods, அடி
வயிற்றில் வலி, மற்றும் அந்த மூன்று நாட்கள் உபாதைகளுக்கு
செவ்வாய்தான் காரணகர்த்தா.

இருபத்தியேழு நாட்களுக்கு ஒருமுறை சந்திரன் வட்டமடிக்கும்போது
ஜாதகி புஷ்பவதியான அன்று செவ்வாய் இருந்த இடத்தைச் சந்திரன்
கடக்கும் நேரத்தில்தான் ஜாதகிக்கு மாதவிடாய் ஏற்படும்.

செவ்வாய் வலிமை இல்லாத ஜாதகிகளுக்குதான் irregular periods
மற்றும் மாதவிடாய் சமயத்தில் அடிவயிற்றில் அதீத வலி போன்ற
உபாதைகள் (pains)ஏற்படும். அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில்
விரதம் இருந்து முறைப்படி இறைவனை வணங்கினால் அந்தக்
குறைகள் நிவர்த்தியாகும்

இயற்கையாகவே பல பெண்கள் பவள மோதிரம் அணிந்திருப்பார்கள்
எதற்காக அதை அணிகிறோம் என்று தெரியாமலேயே அணிந்திருப்
பார்கள். வழி வழியாக அணியப் பட்டு வருவதால் (mere copying)
அணிந்திருப்பார்கள். அப்படி அணிந்திருப்பவர்களுக்கு இந்த
மாதவிடாய் உபத்திரவங்கள் குறைந்திருக்கும்.

அது எப்படி சார்? பவளத்திற்கும் மாதவிடாய்க்கும் என்ன சம்பந்தம்
என்று குடையாதீர்கள். சம்பந்தம் உண்டு. விவரித்தால் பத்துப்
பக்கங்களுக்கு எழுத வேண்டியதிருக்கும். அது தனி டிராக். பிறகு
ஒரு நாள் எழுதுகிறேன். நினைவு படுத்துங்கள்
=======================================================
ஜாதகத்தில் செவ்வாயின் பங்கு!

கடவுளின் சந்நிதானத்தில் கிரகங்கள் வடிவில் ஒன்பது அமைச்சர்கள்
ஊழல் இல்லாத அமைச்சர்கள். அவர்களில் செவ்வாய்தான் ராணுவ
அமைச்சர்.

நிவாகத் திறமைகளைக் கொடுக்கின்ற கிரகமும் செவ்வாய்தான்

ஒரு ஜாதகத்தில் செவ்வாய் வலிமையாக இல்லாவிட்டால், ஜாதகனுக்கு
வேற்றிகளைப் பெறக்கூடிய செயல் திறன் (ability) இருக்காது.
ஜாதகன் பல வேற்றிகளைப் பகற் கனவுகளில் காண்பவனாக இருப்பான்.

martial என்கின்ற ஆங்கிலச் சொல் Mars என்ற சொல்லில் இருந்து
வந்தது. martial arts என்கின்ற சொல்லிற்கும் அதுதான் அடிப்படை
------------------------------------------------------------------------------------------
Good temparament and skill in war are the tasks of Mars.
If he is exalted in one's horoscope, the native will become
cruel in his tendencies. Some people will be cruel rulers or
cruel administrators
=====================================================
ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் நிலைகளுக்கான பலன்கள்!

1
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் கோபக்காரன். எடுத்தற்கெல்லாம் சட்டென்று கோபம் வரும்!
உக்கிரமானவன். சிலருக்கு அடிக்கடி உடற் காயங்கள் ஏற்படும்.
சிலருக்கு (ஜாதகத்தில் மற்ற அமைப்புக்கள் சரியாக இல்லாவிட்டால்)
குறைந்த ஆயுளிலேயே போர்டிங் பாஸ் கொடுக்கப்பட்டுவிடும்.
ஒரு வியாதி போனால் இன்னொரு வியாதி கதைவைத் திறந்து கொண்டு
உடனே வரும்!

ஜாதகன் சலனபுத்திக் காரணாக இருப்பான். தீரனாகவுன் இருப்பான்
சிலர் வன்கன்மையாளராகவும் (cruel) இருப்பார்கள்.
---------------------------------------------------------------------------------------

2
இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
குறைந்த அளவு செல்வம் இருக்கும். கல்வியும் குறைந்த அளவே
இருக்கும். சிலர் தீயவர்களுக்கு சேவை செய்வார்கள். வாக்குவாதம்
செய்பவர்கள் (argumentative)

செவ்வாயின் இந்த அமைப்பு, கல்விக்கும், செல்வத்திற்கும் ஏற்றதல்ல!
இரண்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால் அது செல்வத்திற்குக்
கேடானது. செல்வம் இருக்காது. அப்படியே தேடிப் பிடித்தாலும் தங்காது
அல்லது நிலைக்காது!
---------------------------------------------------------------------------------------

3
******மூன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
ஜாதகன் பிடிவாதக்காரன். சாதனையாளன்.செல்வச்சூழல்களை
அனுபவிக்கக்கூடியவன். புகழ் பெறுவான். எல்லா வசதிகளும்
வந்து சேரும். தனித்தன்மை வாய்ந்தவன்.நீண்ட ஆயுளை
உடையவன்.

தர்ம, நியாயங்கள், நன் நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டுச்
சிலர் வாழ்வார்கள்.
---------------------------------------------------------------------------------------

4
நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உறவுகள், வீடு வாசல், சொத்துக்கள், தாய்ப்பாசம், வாகனவசதி
போன்றவைகள் இல்லாத அல்லது கிடைக்காத அல்லது மறுக்கப்பட்டவனாக
ஜாதகன் இருப்பான்.

இது அத்தனையும் எனக்கு இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் இந்த
அமைப்பின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை பட்டுக் கொண்டிருக்கும்

ஜாதகன் பெண்களின்மேல் அதீதமான ஈர்ப்பு உள்ளவன். சிலர்
பெண்களுக்காக உருகி கோதாவரி ஆறு போல ஓடக்கூடியவர்களாக
இருப்பார்கள். மனப் போராட்டங்கள் மிகுந்த ஜாதகம்.

(பெண்பித்து இருந்தால் மனப்போராட்டம் ஏன் இருக்காது?:-))))
--------------------------------------------------------------------------------------

5
ஐந்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
பெண்குழந்தைகள் மட்டுமே இருக்கும். வாழ்க்கை வசதிகள், சொத்துக்களில்
குறைபாடுகள் இருக்கும். அல்லது சொத்து, சுகம் இல்லாமல் இருக்கும்.
சிலர் மனம் வெறுக்கும் சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும். தர்ம, நியாயங்கள்,
நன்நடத்தைகள் ஆகியவற்றை உதறி விட்டு வாழ நேரிடும்.

சிலர் குறுகியமனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள். சிலர்
எடுத்ததெற்கெல்லாம் கோபம் கொள்ளுகின்ற குணத்தை உடையவர்களாக
இருப்பார்கள்.
-------------------------------------------------------------------------------------
6
********ஆறாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
நல்ல கட்டுமஸ்தான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பு இருக்கும்
ஜாதகன் ஊராக இருந்தாலும் சரி, போராக இருந்தாலும் சரி, எதிரிகளை
துவம்சம் செய்யக்கூடியவனாக இருப்பான்.

மனதில் பயமே இருக்காது. சிலருக்கு அதீத பெண் ஆசை இருக்கும்
அதாவது ஆதீதமான காம உணர்வுகள் இருக்கும். எப்போதும் காம
சிந்தனைகள் மேலோங்கி இருக்கும்.

சிலர் தங்கள் முயற்சியால் மேன்மை அடைவார்கள். புகழ்பெறுவார்கள்
=======================================================
7
ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.
சுபக்கிரகங்களின் பார்வை இருந்தால் அது குறையும்.

சிலருக்கு மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. சண்டைபிடிக்கும்,
அல்லது சண்டை போட்டு சட்டையைப் பிடிக்கும் மனப்பான்மை இருக்கும்
அநேக நோய்கள் ஒவ்வொன்றாகத் தேடிவரும். மனையாளும் அதனால்
பாதிக்கப்படுவாள்.

சிலர் கல்மனதுக்காரர்களாக இருப்பார்கள்.
--------------------------------------------------------------------------------------
8
எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
உடலும், உள்ளமும் நலமாக இருக்காது. சொத்து சேராது. சுகம்
எட்டிபார்க்காது.

சிலருக்கு ஆயுள் குறைவாக இருக்கும். ஜாதகத்தில் வேறு அம்சங்கள்
நன்றாக இல்லாவிட்டால் ஜாதகன் சீக்கிரமே சிவனடி சேர்ந்து விடுவான்.
தர்ம, நியாயங்களைப் பற்றிக் கவலைப்படாத மனதைக் கொண்டிருப்பான்.
--------------------------------------------------------------------------------------

9
ஒன்பதாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
தந்தையோடு நல்ல உறவு இருக்காது. தந்தை மேல் அன்பு பாசம்
இருக்காது. ஜாதகன் அதிரடியான ஆள். கடுமையான ஆள்

ஜாதகன் கண்களுக்குப் புலப்படாத கலைகளில் ஆர்வம் உள்ளவனாக
இருப்பான். அதில் தேர்ச்சியும் பெறுவான்.
--------------------------------------------------------------------------------------
10
*******பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
இது செவ்வாய் நமக்கு நன்மைகளை அள்ளித் தரும் இடம்.
ஜாதகன் ராஜ அந்தஸ்துடன் இருப்பான். வீரன். சூரன். வெற்றியாளன்
ஆற்றல் உடையவன்.ஆர்வம் உடையவன்.

மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ் என்று எல்லாம் கிடைக்கும்
ஜாதகன் தேடிப்பிடிப்பான்.
----------------------------------------------------------------------------------------
11
********பதினொன்றாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
மகன்கள் இருப்பார்கள்.சொத்து சுகம், புகழ், வளம் எல்லாம் இருக்கும்
வயாக்ரா சாப்பிடமலேயே ஆண்மை உணர்வு அதிகமாக இருக்கும்
மன உறுதி இருக்கும்.(அது இருந்தால் இது இருக்காதா என்ன?)

நிறைய நண்பர்கள், கூட்டாளிகள் இருப்பார்கள். ஜாதகன் உண்மையிலேயே
தனித்தன்மை வாய்ந்தவனாக இருப்பான்.

ஜாதகன் எதையும் தெளிவாகப் பேசக்கூடியவனாக இருப்பான்
=======================================================
12
பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்:
கண்களில் குறைபாடுகள் ஏற்படும். பயப்பட வேண்டாம். கண் நோய்கள்
ஏற்படலாம். ஜாதகன்

சோம்பல் உடையவன். சோம்பல்தான் அவனுடைய முதல் மனைவி!:-)))

பொருளாதார இழப்புக்கள் இருக்கும். பல சொத்துக்களைத் தொலைப்பான்
துன்பங்கள், துயரங்கள் என்று எல்லாமே ஜாதகனுக்கு எதிராகக் கொடிபிடிக்கும்

சிலர் படு கருமியாக இருப்பார்கள். சாப்பிடும்போது காக்காய் வந்தால்
கையைக் கழுவி விட்டு காகத்தை ஓட்டுபவர்கள் என்று வைத்துக் கொள்ளூங்கள்
===========================================================
வெவ்வேறு ராசிகளில் செவ்வாய் இருக்கும் பலன்கள்:
(Since this portion is in simple english. I have given it as it is)
1
மேஷத்தில் செவ்வாய்:

The individual will be inspiring, generous and active
He will be powerful and will be good at Mathematics.
He will be blessed with a dark sensual body
-----------------------------------------------------------------------------
2
ரிஷபத்தில் செவ்வாய்:

The individual will be timid, stubborn and sensitive.
He will have a strong inclination towards sports and magic
He will have a strong animal instinct.
------------------------------------------------------------------------------
3
மிதுனத்தில் செவ்வாய்:

The individual will be ambitious, quick, rash, fearless and tactless.
He will be blessed with a loving family and children
He will be skilled in music.
------------------------------------------------------------------------------
4
கடகத்தில் செவ்வாய்:

The individual will be intelligent, wealthy, and fickle minded
He will be proficient in any one of following fields
Agriculture, Medical and surgical
------------------------------------------------------------------------------
5
சிம்மத்தில் செவ்வாய்:

If Mars is in Leo, the individual will be liberal, generous, noble and
successful. They will also have an interest in occult science, astrology,
astronomy and mathematics and will also have deep love and respect
for their parents.
-------------------------------------------------------------------------------
6
கன்னியில் செவ்வாய்:

If Mars is in Virgo, the individual will be self-confident,
conceited, boastful and materialistic. Their marriage will usually not be
successful and these individuals can also suffer from digestive disorders.
--------------------------------------------------------------------------------
7
துலா ராசியில் செவ்வாய்:

The individual will be ambitious, perceptive
He will be fond of adulation.
He will be blessed with a tall, symmetrically body and a fair complexion.
--------------------------------------------------------------------------------
8
விருச்சிகத்தில் செவ்வாய்:

The individual will be indulgent, clever and aggressive!
He will have a medium stature and make great progress in life.
----------------------------------------------------------------------------------
9
தனுசில் செவ்வாய்:

The individual will be conservative, indifferent, impatient and quarrel
some.
He can make a good minister or a statesman!
----------------------------------------------------------------------------------
10
மகரத்தில் செவ்வாய்:

The individual will be rich, brave, generous,bold and respected
He can easily attain a high political position and will usually be
blessed with many sons.
--------------------------------------------------------------------------------
11
கும்பத்தில் செவ்வாய்:

The individual will be unhappy, miserable, poor unwise, controversial
and will have a tendency to forget things.
These individuals will be in constant danger from water.
-----------------------------------------------------------------------------------
12
மீனத்தில் செவ்வாய்:

The individual will be passionate, restless, faithful and willful.
He will have a fair complexion, can have troubles in their love affairs
and will also have a few children.
-----------------------------------------------------------------------------------
செவ்வாயின் சொந்த வீடுகள்: மேஷம், விருச்சிகம் (2 இடங்கள்)
செவ்வாயின் உச்ச வீடு: மகரம்
செவ்வாயின் நீச வீடு: கடகம்
செவ்வாயின் நட்பு வீடுகள்: சிம்மம்,தனுசு, மீனம் (3 இடங்கள்)
செவ்வாயின் சம வீடுகள்: ரிஷபம், துலாம், கும்பம் (3 இடங்கள்)
செவ்வாயின் பகை வீடுகள்: மிதுனம், கன்னி, (2 இடங்கள்)

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் செவ்வாய்க்கு
100% வலிமை இருக்கும்.

சம வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 75% பலன் உண்டு!

நட்பு வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 90% பலன் உண்டு.

பகை வீட்டில் இருக்கும் செவ்வாய்க்கு 50% பலன் மட்டுமே உண்டு

நீசமடைந்த செவ்வாய்க்கு பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த செவ்வாய்க்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

இந்த அளவுகள் ஒரு உத்தேச அளவுகளே!
===================================================
செவ்வாயின் சுய அஷ்டவர்க்கப் பலன்கள்:
சுயவர்க்கத்தில் செவ்வாய் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1, 2, 3 பரல்வரை : உயர்வாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. உடல்
உபாதைகள். காய்ச்சல் போன்ற நோய்கள் அடிக்கடி வரும். எதற்கு
எடுத்தாலும் விவாதம் அல்லது சண்டை போடக்கூடிய அமைப்பு. உறவுகள்,
நெருங்கிய உறவுகளுடன் பிரிந்து வாழும் வாழ்க்கை அமையும்

4. பரல்கள்: சமமான அளவில் நன்மை மற்றும் சமமான அளவில் தீமைகள்
கொண்ட ஜாதகம்

5. பரல்கள்: அனைவரையும் ஈர்க்கக்கூடிய பழக்கவழக்கங்கள், நன்நடத்தை
உள்ள ஜாதகர்.

6. பரல்கள். அரசிடம் இருந்து ஆதரவும் சலுகைகளும் கிடைக்கக்கூடிய
ஜாதகர். அல்லது ஆட்சியில் உள்ளவர்களுடன் நெருக்கமான தொடர்பு உள்ள
ஜாதகர்

7. பரல்கள்: ஜாதகரால் அவருடைய உடன்பிறப்புக்களுக்கும், உடன்
பிறப்புக்களால் ஜாதகருக்கும் தொடர்ந்து நன்மைகள் கிடைக்கும்
பாசமலர்கள்.

8. பரல்கள்: எதிரிகளைத் துவம்சம் செய்யக்கூடிய ஜாதகர். இடங்களும்
சொத்துக்களும் ஆதாயமாகக் கிடைகக்கூடிய ஜாதகர்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாயின் கோச்சாரப் பலன்கள்:

குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரனில் இருந்து நடப்பில் செவ்வாய்
இருக்கும் ராசியை வைத்துப் பலன்கள்:

3ஆம் வீடு, 6ஆம் வீடு, 11ஆம் வீடு ஆகிய இடங்களில் கோச்சார
செவ்வாய் சஞ்சரிக்கும் காலங்கள் மட்டுமே நன்மையுள்ளதாகும்

மற்ற இடங்களில் அவர் சஞ்சாரிக்கும் காலங்களில் நன்மைகள்
இருக்காது
=======================================================
செவ்வாயின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிகக் குறைவானது!

அவர் வான வெளியில் ஒரு சுற்று சுற்றி முடிக்க எடுத்துக் கொள்ளும்
காலம் 18 மாதங்கள். ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை மாதங்கள்
இருப்பார்.

In short, Mars is the is significator of brothrhood, courage and
talents of a native
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவ்வாய் எப்போதும் தீமைகளையே கொடுப்பார். செவ்வாய் திசை
வந்தால் துன்பங்களும், சிரமங்களும் விபத்துக்களும் வந்து சேரும்
என்று சிலர் நினைப்பதுண்டு. அது உண்மையல்ல!

தமிழகத்தில் ஒரு மாபெரும் தலைவி மிதுன லக்கினக்காரர். அவருடைய
பதினொன்றாம் வீட்டு அதிபதியான செவ்வாய்தான், தன்னுடைய தசா
புத்தியில் அவரை முதல் மந்திரி பதவியில் உட்கார வைத்து அழகு
பார்த்தது.

அதுபோல செவ்வாயால் நன்மைகள் பெற்ற பலர் உண்டு. ஜாதகனின்
ஜாதகத்தில் தான் எந்த வீட்டிற்கு அதிபதியோ, அதற்குரிய செயல்களை
செவ்வாய் சரியாக உரிய நேரத்தில் செய்து விடுவான்

எந்தக் கிரகமும், முழுவதும் நன்மைகளையோ அல்லது முழுவதும்
தீமைகளையோ அளிக்காது.

ஒவ்வொரு கிரகமும், அதன் இருப்பிடம், சம்பந்தம் கொண்டுள்ள
மற்ற கிரகங்கள், பார்வை ஆகியவற்றைப் பொறுத்தே நன்மையையும்
தீமையையும் வழங்கும்
------------------------------------------------------------------------------------------
செவ்வாய் தோஷம் பற்றி இங்கு எழுதவில்லை. அது விரிவான
பாடம். ஜாதகத்தில் தோஷங்கள் என்கின்ற topic ல் எழதும்போது
அதை விவரிக்கிறேன். பொறுத்துக் கொள்ளவும்

ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக அல்லது பகை வீட்டில் அமர்ந்து
படுத்திக் கொண்டிருந்தால், அல்லது கஷ்டங்களை அதிகமாக
அனுபவிப்பதாக நீங்கள் நினத்தால் அதற்குப் பரிகாரம் இருக்கிறது

செவ்வாய்க் கிழமை விரதம் இருங்கள். எழுந்தது முதல் மாலை
ஆறுமணி வரை உபவாசம் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும்
குடிக்கலாம். மாலையில் செவ்வாயின் நாயகர் சுப்பிரமணியரை
வணங்கி விட்டு இரண்டு வாழைப் பழங்கள் ஒரு டம்ளர் பால்
சாப்பிடலாம். அல்லது அரிசி வெல்லப் பாயாசத்தைப் பிரசாதமாக
வைத்து வணங்கிவிட்டு இரண்டு டம்ளர்கள் பாயாசத்தைக் குடிக்கலாம்

கோவிலுக்கு முடிந்தால் சென்று வணங்கி வரலாம். அல்லது வீட்டிலேயே
விளக்கு ஏற்றி வணங்கலாம். இறைவன் எங்கும் இருக்கிறான்

எத்தனை செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும்?

ஒன்பது செவ்வாய்க் கிழமைகள் இருக்க வேண்டும். சிலர் இருபத்தோரு
செவ்வாய்க் கிழமைகள் விரதம் இருக்க வேண்டும் என்பார்கள்.

விரதம் எப்படி உங்கள் விருப்பமோ, நாட்களின் எண்ணிக்கையும் உங்கள்
விருப்பம்தான்

யார் யார் இருக்க வேண்டும்?

திருமணம் தள்ளிக்கொண்டே போகிறவர்களும், காரியத் தடைகள்
உள்ளவர்களும், மிகுந்த துன்பங்கள் மற்றும் கஷ்டங்களை அனுபவிப்பவர்களும்
செவ்வாய் விரதத்தை மேற் கொள்ளலாம்.வேலை இல்லாமல் இருப்பவர்களும்
மன அமைதியற்றவர்களும் மேற்கொள்ளலாம்.

என்ன பலன் கிடைக்கும்?

இருந்து பாருங்கள் தெரியும். படித்துப் பரிட்சை எழுதாமலேயே, என்ன
மதிப்பெண் வரும் என்று கேட்டால் எப்படி?

நான் அதைக் கண்கூடாகப் பார்த்தவன். என் இரண்டாவது சகோதரியின்
திருமணம் தள்ளிக்கொண்டே போனபோது. வள்ளுவர் இனத்தைச் சேர்ந்த
ஒரு அற்புதமான ஜோதிடர் ஒருவர், என் தந்தையிடம் கூறினார்.

"உங்கள் பெண்ணிற்கு கடுமையான மாங்கல்ய தோஷம். இரண்டாம் தாரமாகத்
தான் வாழ்க்கைப் பட நேரிடும். இல்லாவிட்டால் ஜாதகம் கணவனை எடுத்து
விடும். இந்தப் பெண் ஒன்பது வாரம் செவ்வாய்க் கிழமை விரதம் இருந்தால்
ஒன்பதாம் வாரம் முடியும் போது திருமணம் நிச்சயமாகும்!" என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு என் சகோதரி செவ்வாய்க் கிழமைகளில் விரதம்
இருக்க ஆரம்பித்தார்.

என்னவொரு ஆச்சரியம்!

எட்டாவது வாரமே திருமணம் நிச்சயமாகிவிட்டது. 25 வயது இளைஞர்
ஒருவர் எந்து சகோதரியைக் கரம் பிடிக்க வந்தார். அவருக்கு அது இரண்டாவது
மணம். அவருடைய முதல் மனைவி அதற்கு முன் வருடம் தலைப் பிரசவத்தில்
இறந்து போயிருந்தாள். அவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் சனி

வரன் கேட்டு வந்தவர்களுடைய குடும்பப் பிண்ணனி பிடித்துப்போக, அதோடு
அவரையும் பிடித்துப்போக அடுத்த மாதமே திருமணம் நிறைவேறியது.

அந்த சகோதரி ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர் மூலமாகத்தான் நான்
தெலுங்கு மொழியைக் கற்றுக் கொண்டேன்.

எந்த அளவிற்குத் தெலுங்கு வரும்?

மாட்லாடுதானிக்கு ஒஸ்ததண்டி! சதுவுதானிக்கு ராது!

நானும் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்திருக்கிறேன். முதலில் படும் சிரமங்கள்
போக வேண்டும் என்பதற்காக. ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் இருந்த பிறகு
அதுவே பழகிவிட தொடர்ந்து ஒரு வருட காலம் அதாவது 52 செவ்வாய்க்
கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்திருக்கிறேன். அது முருகன் மேற்கொண்ட
பக்தியினால் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதோடு உடம்பைக் குறைக்கும்
முகமாகவும் வாரம் ஒரு நாள் லங்கனம். அதாவது பட்டினி அல்லது விரதம்
(ஹி.ஹி)

ஆகவே எதையும் நம்பிக்கையோடு செய்யுங்கள். நிச்சயம் பலன் உண்டு!

Prayer frees one from debts, poverty and illness afflicting the skin.
Mars bestows property and conveyance
Prayer to Mars can restore loss of eyesight.
Tuesdays are intended for the worship of Mars
If one observes the fast on Tuesday for 21 times, the unlucky influence
will be got rid off.
=============================================================
செவ்வாயைப் பற்றிய பாடம் நிறைவுறுகிறது.

அடுத்த பதிவில் வேறு ஒரு கிரகத்தைக் கையில் எடுத்துத் துவைப்போம்,

அது என்ன கிரகம்?

ராகு சாமி ராகு!

அவரை இரக்கமற்றவர் என்று கூறுவார்கள். He is called as merciless planet.

சனிக்கும் ராகுவிற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
சனி தண்டிக்க வேண்டிய நேரத்தில் தண்டிப்பார். ராகுவும் அப்படி தண்டிக்க
வேண்டிய நேரத்தில் தண்டிப்பார்.

என்ன வித்தியாசம்?

சனி நிற்க வைத்து அடிப்பார். ராகு தொங்க விட்டு அடிப்பார்!

அவரை நாம் துவைத்து அலசுவோம்

பொறுத்திருங்கள்

துருவன் அய்யரும் வெண்பொங்கலும்!

Posted: 09 May 2012 09:12 AM PDT



செல்வந்தர் வீட்டுத் திருமணம். அவருடைய ஒரே மகளுக்குத் திருமணம்.
அந்தக் காலத்து வழக்கப்படி அந்தப் பெண்ணிற்கு 18 வயதிலேயே திருமணம்.

செல்வந்தர் என் தந்தையாரின் பால்ய சிநேகிதர். அதோடு மிகவும் நெருங்கிய
நண்பர்.

காலம்?

நீலமலைத் திருடன் படம் வெளிவந்து தமிழ்த் திரையரங்குகள் களை கட்டிக்
கொண்டிருந்த காலம். சரியாகச் சொன்னால் 1957ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
என்று வைத்துக் கொள்ளுங்கள்

"சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா.."

என்று தன் இனிய ப்ளஸ் கணீர்க் குரலால், பாடகர் திரு.T.M. செளந்தரராஜன்
அவர்கள் தமிழர்களைக் கட்டிப்போட ஆரம்பித்திருந்த காலம்.

உனக்கு எப்படித் தெரியும்?

நான் அப்போது சிறுவன். எனக்கு எல்லாம் என் தந்தையார் சொல்லித் தெரியும்
அவர் கதை சொல்வதில் சூரர். சாதாரணக் கதையைக்கூட சுவாரசியமாகச் சொல்வார்.

எனக்கு நினைவாற்றல் அதிகம் (ஹி.ஹி, ஏழில் புதன்) அதனால் அவைகள்
எல்லாம் என் மண்டைக்குள் கடவுள் கொடுத்த Hard Discல் ஏறி, பலப் பல
ஃபோல்டர்களில் வைரஸ் பிரச்சினைகள் இன்றி, ஸ்பைவேர் பிரச்சினைகள் இன்றிப்
பாதுகாப்பாக இருக்கின்றன!.

விட்டால் பேசிக் கொண்டே இருப்பேன். அது தெரியாமல் சிலர் என்னிடம் தொலைபேசி எண்ணைக் கேட்கிறார்கள் பாருங்கள்........பாவம்! :-))))

சரி, வாருங்கள் கதைக்குள் போவோம்
---------------------------------------------------------------------------------------
திருமணத்திற்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே விருந்தோம்பல்.

தஞ்சாவூர் தலை வாழை இலை போட்டு, நான்கு வேளையும் (4 என்கின்ற
எண்ணிக்கையைக் கவனிக்கவும்) விதம் விதமான உணவுகள்.

தினமும் மாலை வேளைகளில் விருந்தினர்களுக்கு இன்னிசைக் கச்சேரிகள்
மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகள்.

திருமணத்திற்கு முதல் நாள் மாலை. அப்போது மிகவும் பிரபலமாக இருந்த
நடன மங்கை, நடிகை ஈ.வி.சரோஜாவின் அவர்களின் நாட்டிய நிகழ்ச்சி.
(இந்த ஈ.வி.சரோஜா அப்போது வெளிவந்த நீலமலைத் திருடனில் நடித்து
அதிகப் படியான புகழைக் கொண்டிருந்தார். அந்தப் படத்தை எதற்காக
கதைக்குள் கொண்டு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் இப்போது
தெரிந்திருக்கும்)

அதறகு முதல் நாள் திருமதி.M.L.வசந்த குமாரி ( Actress Srividhya's
mother) அவர்களின் இன்னிசைக் கச்சேரி.
----------------------------------------------------------------------------------
அதெல்லாம் முக்கியமில்லை. நண்பர் வீட்டுக் கல்யாணத்தில் விருந்தோம்பல்
பொறுப்பை என் தந்தையார் ஏற்றுக் கொண்டிருந்தார். உதவிக்கு என்னுடைய
பெரியப்பாவும் சேர்ந்திருந்தார்.

இங்கே என் பெரியப்பாவைப் பற்றி இரண்டு வரிகளாவது சொல்ல வேண்டும்.
அவர் பெரிய கலா ரசிகர். வகை வகையான உணவுகளில் ரசனை மிக்கவர்.
நன்றாகச் சமையல் செய்யவும் தெரிந்தவர். என் தந்தையாரை விடப் பத்து
வயது மூத்தவர். அவர் போல சாப்பாட்டை இரசித்துச் சாப்பிடும் மனிதரை
இதுவரை நான் கண்டதில்லை.

எங்கள் ஊர் சமையல் மேஸ்திரிகளுக்கெல்லாம், அவரைக் கண்டால் பயம்.
அவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அவர் பந்தியில்
அமர்ந்து சாப்பிடும்போது எதிரில் பவ்வியமாக வந்து நின்று உபசரிப்பார்கள்

அவர் பெயர். "பவுன்" மாணிக்கம் செட்டியார். தொழில் மற்றும் பொழுதுபோக்கு
இரண்டுமே சீட்டு ஆடுவது. அவர் சிவந்த நிறமாக இருப்பார். அதனால் அந்த
அடையாளப் பெயர். அதோடு சீட்டாடும் பொது பவுனை வைத்துத்தான்
சீட்டாடுவார். அதற்கான காரணப் பெயரும் அது.

அதற்குக் காசு?

லட்சக்கணக்கான பணத்தைத் தொலைத்த பெரிய கதை அது! பல சுவாரசியங்கள்
நிறைந்த கதை. அதை இப்போது சொன்னால் கதை பாரதக்கதை மாதிரி நீண்டு
விடும். இன்னொரு நாள் அதைச் சொல்கிறேன்
------------------------------------------------------------------------------
என் பெரியப்பாவின் சொற்படி, என் தந்தையார் இரண்டு விதமான சமையலுக்கு
ஏற்பாடு செய்திருந்தார். ஒன்று வழக்கம்போல செட்டிநாட்டு சமையல்காரர்களின்
சமையல்.

இன்னொரு பக்கம் அப்போது மிகவும் பிரபலமாக இருந்த தஞ்சாவூர் துருவன்
அய்யர் குழுவினரின் சமையல்.

யார் வேண்டுமென்றாலும் எந்தப் பக்குவத்தில் வேண்டுமென்றாலும் ரசித்துச்
சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்னும் பெருநோக்கு!

என் தந்தையார் அந்த மூன்று நாட்களிலும் இரவு பகல் என்று தூக்கத்தை
ஒதுக்கி வைத்துவிட்டு, சமையல் நடந்த கூடங்களே கதி என்று மேற்பார்வை
செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

என் தந்தையாருக்கு காப்பியும், சிகரெட்டும் இருந்தால் போதும். எத்தனை
நாட்கள் வேண்டுமென்றாலும் விழித்துக் கொண்டிருப்பார்.

அப்போதெல்லாம் சிகரெட்டுகள் டின்களில் வரும். வட்டவடிவடின். ஒரு
டின்னிற்கு 50 சிகரெட்டுக்கள். இந்த மாதிரிக் கண் விழிக்கும் நாட்களில் ஒரு
நாளைக்கு ஒரு டின் சிகரெட் காலியாகும்

Smoking is injurious to health' என்ற எச்சரிக்கையெல்லாம் அப்போது கிடையாது.
அதுபோல அதிகமாகப் புகைத்தால் கேன்சர் வருமென்ற பயமும் அப்போது
கிடையாது.

என் தந்தையாருக்கு ஒரு புண்ணாக்கும் வந்ததில்லை.
இறுதிவரை ஆரோக்கியமாக இருந்தார். தனது 75 வது வயதில் பத்து நிமிட
போராட்டத்துடன் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். அவ்வளவுதான்.
மரணம் எப்படி வர வேண்டும் என்பற்கும் அவர் உதாரணமாக இருந்தார்.

ஆசான் என்னும் மலையாள ஜோதிட நண்பர் அவருடைய மரணத்தைத்
துல்லியமாகக் குறித்துக் கொடுத்திருந்தார். அதுபோலவேதான் நடந்தது. அதை
என்னுடைய முன் பதிவு ஒன்றில் சொல்லியிருக்கிறேன்.

கதை தடம் மாறிக் கொண்டிருக்கிறது. மெயின் கதைக்குப் போவோம்
----------------------------------------------------------------------------------
திருமண தினத்தன்று அதிகாலை 5 மணி.

காலைப் பலகாரம் 7 மணி முதல் 8 மணிக்குள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.

எதிர் நோக்கியிருக்கும் விருந்தினர்களின் எண்ணிக்கையோ சுமார் மூவாயிரம்.

மெனு: பாதம் அல்வா, கேசரி, வடை, பொங்கல், இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி,
மற்றும் தக்காளிச் சட்னி். உடன் மசால் தோசை, உபரியாக செட்டி நாட்டுப் புகழ்
வெள்ளைப் பணியாரம்.

என் தந்தையார் எல்லாவற்றையும் நோட்டமிட்டார். பொங்கலைத் தவிர மற்ற
தெல்லாம் அளவில் சரியாக வரும் போலத் தோன்றியது.

வெண் பொங்கல், அதுவும் துருவன் அய்யரின் பிரபலமான வெண் பொங்கல்.
பறிமாறும் போது, பற்றாக்குறை ஏற்பட்டால் பந்தியில் அசிங்கமாகி விடாதா?

பெரிய விறகு அடுப்பில் மூன்றடி உயரம், மூன்றடி அகலம் உள்ள பாத்திரத்தில்,
பொங்கல் தயாராகிக் கொண்டிருந்தது. முக்கால் பாத்திர அளவிற்கு மட்டுமே
அது கொதித்துக் கொண்டிருந்தது.

அருகில் சமையல் உதவியாளர் ஒருவர் நின்று, அதைக் கிண்டிக்கொண்டிருந்தார்.

சமையல் கட்டின் நடுவில் நின்று கொண்டிருந்த தலைமை சமையல்காரர் துருவன்
அய்யரிடம் என் தந்தையார் பேச்சுக் கொடுத்தார்.

"ஸ்வாமி, பொங்கல் மட்டும் குறைவாகத் தெரிகிறதே?"

"அதெல்லாம் போதும். மிஞ்சும் பாருங்கோ.அதில் சேர்க்க வேண்டிய அயிட்டம்
ஒன்று பாக்கியிருக்கிறது. சித்த நாழி வெயிட் பண்ணுங்கோ!"

என் தந்தையார் காத்திருந்தார். ஐந்து நிமிடங்கள் கழித்து, கொதித்துக் கொண்டிருந்த
பொங்கல் பாத்திரத்தின் அருகே சென்ற துருவன் அய்யர், "நெய் டின்னை எடுத்துக்
கொண்டு வாங்கடா" என்று குரல் கொடுக்க, ஒருவன் ஒரு முழு டின் நெய்யை
அங்கே எடுத்துக் கொண்டு வந்தான்.

முழு டின் என்பது பதினைந்து கிலோ அளவுள்ள நெய்.

"உள்ளே ஊத்துடா" என்று அவர் சொன்னவுடன். அதை அவன் ஊற்றினான்.
இன்னொரு முழு டின்னை எடுத்துக் கொண்டு வந்து ஊற்றுடா என்று அவர்
மேலும் சொல்ல அதுவும் நடந்தது.

என் தந்தை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இரண்டு முழு டின் நெய்யா? பெரிய சமாச்சாரமாக இருக்கிறதே.!

அதோடு விடவில்லை. மூன்று கிலோ அல்லது ஐந்து கிலோ அளவில்
வறுத்த முந்திரிப் பருப்பும் வந்து அதில் சேர்க்கப்பட்டது. அடுத்த இரண்டு
நிமிடங்களில் பொங்கல் ரெடி. நீர் ஊற்றி அடுப்பு அணைக்கப்பெற்றது.

"செட்டியார், நீங்களே பிள்ளையார் சுழி போட்டு துவங்கி வைங்கோ" என்று
சொன்ன துருவன் அய்யர், தன் உதவியாளரிடம் சொன்னார்,"டேய் ஒரு கின்னத்தில்
செட்டியாருக்கு பொங்கல் எடுத்துக் கொடுடா. ஸ்பூனோடு கொடுடா. அவர்
சாப்பிட்டுப் பார்க்கட்டும்"

நடந்தது.

அற்புதமாக இருந்தது பொங்கல். அவ்வளவு ருசி. அதோடு தொண்டைக்குள்
வழுக்கிக் கொண்டு சென்றது. செல்லுமுன் நாக்கின் மூலமாக உடலின் ருசி
சம்பந்தப்பட்ட அத்தனை நரம்புகளையும் சுண்டி விட்டுச் சென்றது. உங்கள்
மொழியில் சொன்னால் நரம்புகளைக் கிண்டிக் கிழங்கெடுத்து விட்டுச் சென்றது
அல்லது பின்னிப் பெடல் எடுத்துவிட்டுச் சென்றது

அதன் அசாத்திய ருசியில் என் தந்தையார் அசந்து போய் விட்டார்

கின்னத்துப் பொங்கலைச் சாப்பிட்டு முடித்தவுடன், அருகில் வந்த அய்யர் கேட்டார்

"செட்டியார், இன்னும் ஒரு கின்னம் சாப்பிடரேளா?"

"வேண்டாம் சாமி, நன்றாக இருக்கிறது. ஒரு கின்னத்திற்கு மேல் சாப்பிடமுடியாது"

"ஏன்?"

"திகட்டுகிறது."

"அதுதான் சங்கதி. திகட்டும்.அதனால் தான் மிஞ்சும் என்றேன். பந்தியில் ஒரு
கரண்டிக்கு மேல் ஒருத்தரும் கேட்கமாட்டார்கள்"

அப்படியே நடந்தது.

இதை, ஒரு மனிதன் தன் தொழிலில் அதீதத் திறமை பெற்று எப்படி விளங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகச் சொல்வார் என் தந்தை.
பிறகு என் அனுபவத்தில் பல தொழில் வல்லுனர்களைப் பார்த்தும் நான் அதைத்
தெரிந்து கொண்டேன். திறமை உள்ளவன் மட்டுமே தன் தொழிலில் சிறக்கமுடியும்

அதனால்தான் செய்யும் தொழிலே தெய்வம் என்றும் சொல்லப் படுகிறது!
-------------------------------------------------------------------------------
"வாத்தியார் இந்தக் கதை பாடத்தோடு சம்பந்தப் பட்டதா?"

"ஆமாம்"

"என்ன சம்பந்தம்?

"ஆற்றல் (Ability) மற்றும் திறமை (Talent) ஆகிய இரண்டும் ஒரு மனிதனுக்கு
நன்றாக அமையக் காரணமாக இருக்கின்ற கிரகத்தைப் பற்றிய பாடம் அடுத்த
பாடம். அதற்கான முன்னோட்டம்தான் இந்தக் கதை!"

பக்கா பதிவுத் திருடன்!

Posted: 09 May 2012 09:10 AM PDT



இணையம் ஒரு திறந்தவேளி. இங்கே உலாத்துபவர்கள் அனைவரும்
நேர்மையானவர்கள் அல்ல! ஒரு குறிப்பி்ட முடியாத சதவிகிதம் திருடர்கள்
இருக்கிறார்கள்.

பிக்பாக்கெட் கேசாக இருந்தால் பரவாயில்லை தொலைகிறது என்று விட்டுவிடலாம்

இருட்டில் திருட்டுத்தனமாக பெண்மேல் கை வைப்பவனை என்ன செய்வது?

கை வைத்தவன் மாட்டிக் கொண்டு விட்டால், என்ன நடக்கும்?

நகரமாக இருந்தால் பலரும் சேர்ந்து கும்முவார்கள். கிராமமாக இருந்தால்
அறிவாள் வெட்டு விழுகும். குறைந்த பட்சம் அவன் ஒரு மாதமாவது மருத்துவ
மனையில் படுக்கும்படி ஆகிவிடும்

சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

என்னுடைய ஜோதிடப் பதிவுகளை அப்படியே திருடி ஒருவர் தன் பெயரில்
வலைப்பதிவு ஒன்றைத் துவங்கிப் பதிவிட்டிருக்கிறார். இதுவரை 10 பதிவுகளைத்
திருடிப் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய பெயர் வசந்த் என்பது மட்டும் தெரிகிறது. அது அவருடைய
சொந்தப் பெயரா அல்லது அதுவும் திருட்டுப் பெயரா என்பது தெரியவில்லை:-)))))

பதிவில் மின்னஞ்சல் முகவரி இல்லை. திருடியது சொற்பம்தான் 10 பதிவுகள்.
ஆனாலும் திருட்டு திருட்டுத்தான். அததனையும் நவம்பர் 18ஆம் தேதி வலையேற்றப்
பட்டுள்ளது. அதற்குப் பிறகு வேறு எங்காவது உண்மையான திருட்டைச் செய்யப்
போய் விட்டாரோ என்னவோ?:-)))))

எந்த அரிப்பில் பதிவுகளைத் திருடினார் என்பதும் தெரியவில்லை:-)))))

அவர் தன்னுடைய ஜாதகத்தை அனுப்பினால் அவருக்கு உள்ளே போகவேண்டிய
யோகம் இருகிகிறதா என்று பார்த்துச் சொல்லுவேன்:-)))))

எனக்கு பலமே என்னுடைய வாசகர்கள்தான். இன்றையத் தேதியில் என்னுடைய
இந்த வலைப் பதிவிற்கு ஏராளமான வாசகர்கள் இருக்கிறார்கள். திருட்டுக்கள்
என் கண்ணில் இருந்து தப்பினாலும், அவர்கள் கண்ணில் இருந்து தப்பாது.

என் மதிப்பிற்குரிய வாசகர் ஒருவர் அந்தத் திருட்டைச் சுற்றிக் காட்டியிருந்தார்.
அவருக்கு என் நன்றி!

அந்தத் திருட்டுப் பதிவின் சுட்டி இங்கே உள்ளது.
அனைவரையும் பார்க்க வேண்டுகிறேன்.

என்ன செய்யலாம் அந்தத் திருடனை?

உங்கள் மேலான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

சொன்னால் அழிந்து போகக்கூடியது எது?

Posted: 09 May 2012 09:07 AM PDT



சட்டையைப் பிடித்து உலுக்குவது. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது.
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு மட்டுமே
கைவந்த கலை. அப்படிச் சொல்லப்பட்ட வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

"குரு உபதேசம், மாதர்கூடிய இன்பம், தன்பால்
மருவிய நியாயம், கல்வி,வயதுறச் செய்த தர்மம்,
அரிய மந்திரம், விசாரம்,ஆண்மை இங்கு இவைகள் எல்லாம், ஒருவரும்
தெரிய ஒண்ணாது உரைத்திடின் அழிந்துபோமே."
- விவேக சிந்தாமணி

ஒருவனுக்கு மறைவாக ஆசிரியர் செய்த உபதேசம்,
மாதரிடத்து அனுபவித்த இன்பம்,
தன் மனதில் பொருந்திய நியாயம்,
தான் கற்ற கல்வி,
தன்னால் செய்யப்பட்ட தர்மம்,
அரியதான மந்திரம்,
தனது கவலை,
தனது வல்லமை
என்ற இவையெல்லாம் வேறு ஒருவருக்கும்
தெரியச்சொல்லுதல் கூடாது.
சொன்னால் அவற்றின் மதிப்பு அழிந்துபோகும்.

எழுதிய ஞானி என்னவொரு அழுத்ததுடன் எழுதியுள்ளார் பாருங்கள்!

Label: நெத்தியடியான பாடல் வரிகள் - 4

நித்தியானந்தா அதிரடி: அனைவரது அறைகளிலும் இதோ ரகசிய கேமரா!

Posted: 09 May 2012 09:07 AM PDT

"என்மீது குற்றச்சாட்டு வைக்கும் அனைத்து ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தினால் தெரியும் சேதி" என்று எரிகிற நெருப்பில் எண்ணை வார்த்திருக்கிறார் நித்தியானந்தா. 

"மற்றைய ஆதீனங்களின் அறைகளுக்குள்ளும் ரகசியமாக எட்டிப் பார்த்தால், எத்தனை பேர் என்னைப்போல பாலியல் புகார்களில் சிக்குகிறார்கள் என்று தெரிந்துவிடும்" என்றும் சவால் விட்டிருக்கிறார் இந்த லேட்டஸ்ட், மதுரை இளைய ஆதீனம்.

சுருக்கமாக அவர் கூற வருவது என்னவென்றால், "எனது அறையில் கேமரா வைத்ததில் நான் சிக்கிக் கொண்டேன். உங்கள் அறைகளில் கேமரா வைக்காத காரணத்தால் நீங்கள் தப்பித்துக் கொண்டீர்கள்… முடிந்தால் வாருங்கள், கேமராவை வைத்துக் கொண்டு மோதிப் பார்ப்போமா?"

எல்லாம், 'யாம் பெற்ற இன்பம், பெறுக இவ் வையகம்' பாலிஸிதான். இந்த 'ரகசிய எட்டிப்பார்த்தல்' வேலைகளுக்கு, தனியார் துப்பறியும் நிறுவனத்தை ஏற்பாடு செய்வோமா என்றும் கேட்டிருக்கிறார் அவர். நித்தியின் அறைக்குள் எடுக்கப்பட்ட வீடியோவுக்கு கேமரா ஃபிக்ஸ் பண்ணியது, அவரது சீடர்களில் ஒருவர் என்பதே பொதுவான ஊகம்.

"எமக்கு வாய்த்த சீடர்கள் மிகமிகத் திறமைசாலிகள். ஆனால் கைகள்தான் வீடியோ கேமராவரை நீண்டிருக்கின்றன" என்று அவர் சொல்லவில்லை. "உங்களுக்கு (மற்றைய ஆதீனங்களுக்கு) அப்படியான சீடர்கள் வாய்க்கவில்லை. எனவே, கேமரா பிக்ஸ் பண்ண தனியார் துப்பறியும் நிபுணர்களை அழைக்கலாம்" என்கிறார்.

நித்தியின் இந்தக் கூற்று (அல்லது கூத்து) அவர்மீது வழக்கு தொடர்கிறோம் என்று கூறிக்கொண்டிருக்கும் மற்றைய ஆதீனங்களை நிச்சயம் கொதிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தன்னை எதிர்ப்பவர்கள் பற்றி குறிப்பிட்ட நித்தியானந்தா, "இங்கே மொத்தம் 800 மடாதிபதிகள் உள்ளார்கள். அவர்களில் 13 பேர் மட்டுமே எனக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்து அமைப்புகள் என்ற பெயரில், சில கயவர்கள் என் மீது கல்வீசுகின்றனர். ஆனால், உண்மையான இந்துக்கள் என் பக்கம் உள்ளனர். 151 நாடுகளில் ஆன்மிகத்தை வளர்ப்பவன் நான். என்னை எதிர்ப்பவர்கள், சும்மா லோக்கலில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள்" என்று கூறியிருக்கிறார்.

151 நாடுகளில் நித்தியானந்தா ஆன்மீகத்தை வளர்க்கும் விஷயம், ஐ.நா.வுக்கே புதிய தகவலாக இருக்கும்.

ஐ.நா.வின் கணக்குப்படி, உலகில், 193 அங்கத்துவ நாடுகள் உள்ளன. அது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட அதிகாரபூர்வ கணக்கு. ஆனால், நிஜ எண்ணிக்கை அதைவிட அதிகம். உதாரணமாக, கொசோவோ அந்தப் பட்டியலில் உள்ளது. ஆனால், தாய்வான் கிடையாது (தாய்வான் தமது நாட்டின் ஒரு மாகாணம் என்கிறது சீனா) பாலஸ்தீனம், கிரீன்லாந்து, வெஸ்டர்ன் சஹாரா, ஆகியவை பட்டியலில் இல்லை. கருணாநிதி லேட்டஸ்டாக கூறத் துவங்கியுள்ள ஈழமும் பட்டியலில் கிடையாது.

எப்படியோ அவரது கூற்றுப்படி, ஐ.நா.வின் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையில், மூன்றில் இரண்டு மெஜாரிடி நாடுகளில் நம்ம நித்தி ஆன்மீகத்தை வளர்த்து வருகிறார். மீதி நாடுகளிலும் எக்ஸ்பான்ட் பண்ணும் பொட்டடன்ஷியலும் உள்ளது. அப்படியிருக்கையில், ஆந்திரா பார்டரே தாண்டாத ஆதீனங்கள் என்னை எப்படி கேள்வி கேட்க முடியும்? என்பதே நித்தியின் கேள்வி.

அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை நம்ம இளைய சுவாமிகள். "எனது உருவபொம்மையை 10 பேர் எரித்துள்ளனர். நான் 'உம்…' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் உருவபொம்மைகளை எனது சீடர்கள் எரித்து விடுவார்கள். சட்டம் ஒழுங்கு கெடக்கூடாது. சண்டையிட்டு, இந்து மதத்திற்கு அழிவை உண்டாக்கக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருக்கிறேன்" என்றும் கூறியிருக்கிறார்.

அவரின் சீடர்கள் எரிப்பதிலும் வல்லவர்கள் என்பது புதிய தகவல். அவர்கள் மதுரை மடத்தின் பெண் உதவியாளரை நையப்புடைப்பார்கள் என்பதுதான் இதுவரை வெளியாகிய தகவல்.

நித்திக்கு மதுரை மடத்தில் புதிய, இளைய ஆதீனமாக அப்பாயின்ட்மென்ட் கிடைந்து மதுரைக்கு வந்தபோது, அவருடன் வந்த சீடர்கள், மடத்தின் ஒரிஜினல் சீடர்களுடன் மோதிக் கொள்கிறார்கள் என்பது மதுரை முழுக்க தெரிந்திருக்கிறது. மடத்தில் உதவியாளராக உள்ள வைஷ்ணவி என்ற பெண்ணை, நித்தியின் சீடர்கள் தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

அதற்கு மதுரை மூத்த ஆதீனம், "மடத்தில் பணிவிடை செய்யும் பெண் வைஷ்ணவி, நித்யானந்தா சீடர்களால் தாக்கப்படவில்லை. நித்யானந்தா சீடர்களுக்கும் வைஷ்ணவிக்கும் வாய்த்தகராறு மட்டுமே நடந்தது" என்று பதில் கூறியிருக்கிறார்.

மடத்தில் வைஷ்ணவி என்ற நங்கையும் கிடையாது. அதனால் தகராறும் கிடையாது என்று மூத்த சுவாமிகளே கூறவில்லை. தகராறு நடந்தது உண்மைதான் என்கிறார். எனவே basic story நிஜம். நித்தியின் சீடர்கள் தகராறு பண்ணக்கூடியவர்கள் என்பதை அவரது பாஸ் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அப்படிப்பட்ட சீடர்கள் நித்தி சொன்னால் உருவப் பொம்மையையும் எரிப்பார்கள், கண்ணகி ரேஞ்சுக்குபோய், மதுரையையே எரித்தாலும் எரிப்பார்கள் என்பது மறுக்க முடியாததுதான்.

"அவர்களை (சீடர்களை) பொறுமையாக இருக்குமாறு கூறியிருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் அவர்களை கட்டுப்படுத்த என்னாலேயே முடியாது போய்விடும். அதன்பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்" என்றும், நித்தி கூறியிருக்கிறார். இது, தமிழக காவல்துறைக்கே நித்தி கொடுத்திருக்கும் வார்னிங்!

ஒரு விதத்தில் மூத்த, இளைய சுவாமிகளை பாராட்ட வேண்டும். இந்து மதத்தில் எந்தளவுக்கு, எதையும், எப்படியும், யாரைப் பற்றியும் விமர்சித்து பேசலாம் என்ற சுதந்திரம் உள்ளது என்பதை இவர்கள் இருவரும்தான் நிரூபித்திருக்கிறார்கள்!

சந்திரனைக் காணாமல் அல்லி முகம்மலருமா?

Posted: 09 May 2012 09:06 AM PDT



"சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா?
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா?"
என்றார் கவியரசர் கண்ணதாசன்.

அல்லிக்கு ஏது சஞ்சலம்? கவியரசர் கூறியது அல்லி போன்ற முகம்
கொண்ட இளம் நங்கையரின் மனசஞ்சலத்தைக் கூறினார்.

அல்லி, மல்லி, அல்லது கள்ளி என்று பெண்கள் மட்டுமல்ல, ஜீன்ஸ்
பாகி, டபுள் பேரல் பேண்ட் அணிந்த இளைஞர்களுக்கும் மன சஞ்சலம்
வரக்கூடாது. அந்த சஞ்சலங்களுக்குக் காரணமாக இருக்கும்
சந்திரனைப் பற்றி இன்று பார்ப்போம்
====================================================
சந்திரன் பெண் கிரகம். பெண்களைச் சிறப்படையச் செய்யும் கிரகம்.

"அது எப்படி சார்? இருபாலருக்கும் பொதுவானதல்லவா கிரகங்கள்.
ஏன் ஜல்லி அடிக்கிறீர்கள்?"

ஜல்லி இல்லை அப்பனே. சந்திரன் பொதுவான கிரகம்தான். சட்டம்
பொதுவானதுதான் ஆனால் பல சட்டங்கள் பெண்களுக்கு சாதகமாக
இல்லையா?

அதுபோல சந்திரன் அதிகமான அளவில் பெண்களுக்கே சாதகமாக
இருப்பான். அவன் தாய்க்கு உள்ள கிரகம் சாமி!

ஒரு குழந்தைக்கு நல்ல தாயையைக் கொடுப்பது அவன்தான்.

பிறக்கும் குழந்தைக்கு வேறு என்ன வேண்டும்?

கோடியில் ஒருத்தி தனக்குப் பிறந்த குழநதையை குப்பைத் தொட்டியில்
போட்டு விட்டுப் போவாள். அவளையெல்லாம் கணக்கில் எடுத்துக்
கொள்ள வேண்டாம்.

ஒரு ஞானி சொன்னான்:

"கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது. அதானால்தான் தாயைப் படைத்தான்."

ஆகவே தாய் கடவுளுக்குச் சமம்.

இப்போது சொல்லுங்கள் சந்திரன் யாருக்கு அனுசரணையாக இருப்பான்?

சந்திரன் லக்கினத்தில் இருந்தாலும் அல்லது ஏழில் இருந்து லக்கினத்தைப்
பார்த்தாலும், அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் ஜாதகி அழகாக இருப்பாள்.
பல நடிகைகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கும்.

Beauty என்பது பெண்களுக்கு மட்டுமே! :-)))))

ஆண்களுக்கு Handsome - அதற்கு அதிபதி சூரியன்
---------------------------------------------------------------------------------------------------------
விட்டால் நான் எழுதிக் கொண்டே இருப்பேன். நேற்று ஒரு பின்னூட்டக்காரர்
வந்து உங்கள் பதிவுகள் நீளமாக இருக்கின்றன என்றார். இன்றும் அவர் வரலாம்.
அதனால் கதைப்பதை நிறுத்தி விட்டுப் பாடத்திற்கு வருகிறேன்.
...............................................................................................................................
உடலுக்குள் பல உறுப்புக்கள் உண்டு. அவைகள் ஒழுங்காக இயங்கினால்
தான் மனிதன் உயிர் வாழ முடியும். அதுபோல மனத்திற்குள் பல
தாக்கங்கள் உண்டு. சில தாக்கங்கள் மனதை அதிரச் செய்யும். சில
தாக்கங்கள் மனதைக் குளிரச் செய்யும். அந்தத் தாக்கங்கள் அதிகமானால்
மனிதனுக்குப் பைத்தியம் பிடித்து விடும்.

நாசுக்காகச் சொன்னால் Mental ஆகி விடுவான்.

அவைகள் என்னென்ன தாக்கங்கள் என்பதைப் பட்டியல் இட்டிருக்கிறேன்
அவற்றில் நல்ல தாக்கங்களும் உண்டு. தீய்மை பயக்கும் தாக்கங்களும்
உண்டு. பாருங்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் சொல்லுங்கள்

1. சுகங்கள், துக்கங்கள்
2. கோபங்கள், தாபங்கள்
3. உடன்பாடுகள்
4. முரண்பாடுகள்
5. ஒட்டுதல்கள்
6. விரிசல்கள்
7. பிடிவாதங்கள்
8. விட்டுக்கொடுத்தல்கள்
9. சுயநலங்கள்
10. தியாகங்கள்
11. எதிர்பார்ப்புக்கள்
12. ஏமாற்றங்கள்
13. நம்பிக்கைகள்
14. துரோகங்கள்
15. காதல்
16. காமம்
17. மன நெகிழ்ச்சிகள்
18. மன எரிச்சல்கள்
19. புளங்காகிதங்கள்
20. பூசல்கள்

சந்திரன் மனதிற்குக் காரகன். ஜாதகத்தில் அவன் வலிமையாக இருந்தால்
மேற்கூறியவற்றில் குளிர வைக்கும் அதிர்வுகளையே ஜாதகன் அதிகமாகச்
சந்திப்பான்.

இல்லையென்றால் இல்லை! மனப் போராட்டம்தான்!
=====================================================
சந்திரனின் ஆதிபத்யங்கள்

சொந்த வீடு: கடகம் (1)
நட்பு வீடுகள்: சிம்மம், கன்னி, மிதுனம்.(3)
சமவீடுகள்: துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம், மேஷம் (6)
உச்சவீடு: ரிஷபம் (1)
நீசவீடு: விருச்சிகம் (1)
பகைவீடு: எதுவுமில்லை! (அப்பாடா பிழைத்தோம்)

அதில் ஒரு உண்மையிருக்கிறது. சந்திரன் மனகாரகன். அவனுக்குப் பகை
உணர்வு இருந்தால், அவன் எப்படி மனகாரகனாக இருக்க முடியும்?
ஆகவே அவனிடமும் பகை இல்லை. அவன் சென்று அமரும் இடங்களிலும்
அவனுக்குப் பகை இல்லை. அவன்தான் அனுசரித்துப் போகிறான்.
அனுசரித்துப் போனால் பகை ஏது?

சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சந்திரனுக்கு 100% வலிமை
இருக்கும்.

சந்திரனுடன் குரு சேர்ந்திருந்தால் குருச்சந்திர யோகம்
சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருந்தால் சசிமங்கள யோகம்
அவற்றிற்கான பலன்களை யோகங்களைப் பற்றிய பாடம் நடத்தும்போது
அலசுவோம்

சம வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)

நட்பு வீட்டில் இருக்கும் சந்திரனுக்கு 90% பலன் உண்டு.

சந்திரனுக்குப் பகை வீடுகளே கிடையாது.

நீசமடைந்த சந்திரனுக்கு பலன் எதுவும் இல்லை

உச்சமடைந்த சந்திரனுக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!

சந்திரன் மாத்ரு காரகன் எனப்படுவான். தாய்க்கு அதிபதி.
வியாதிகளில் - சித்த சுவாதீனம் அல்லது ஷயரோகம் ஏற்பட்டால்
அதற்குக் ஜாதகத்தில் உள்ள நலிவடைந்த சந்திரனே காரணமாவான்.

இந்த அளவுகளையெல்லாம் நான் எலக்ட்ரானிக் ஸ்கேல் வைத்து எடை
போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன். மனதில் கொள்க!
======================================================
நவரத்தினங்களில் சந்திரனுக்கு உரியது முத்து.
தானியங்களில் சந்திரனுக்கு உரியது அரிசி (நெல்)
எண் கணிதத்தில் சந்திரனுக்கு உரியது எண் 2 ஆகும்!
சந்திரனுக்கான உலோகம் வெள்ளி (Silver)ஆகும்!
அதிதேவதை: பார்வதி (பராசக்தி)
-----------------------------------------------------------------------------------------------------
Moon is the presiding deity of the element water,
and rules over the tides of the sea.
The sphere of the Moon is the reservoir of rainwater
and thus Moon is the ruler of plants and the
vegetable kingdom.

Moon represents the mother or female principle,
the energy that creates and preserves.

Moon rules peace of mind, comfort, general well-being,
and also the fortune of a person.

Some will be tender-hearted, wise, and learned.
--------------------------------------------------------------------------------------
Water Content of the Human Body:
The average person is about 70% water by weight!

சந்திரன் நீருக்கு அதிபதி. மழை, ஆறு, கடல், அனைக்கட்டுகள்
போன்ற அனைத்து நீர் நிலைகளுக்கும் அவன்தான் அதிபதி.

பெளர்ணமி தினத்தன்று சந்திரனிலிருந்து வரும் ரேகைகளின்
(Magnetic rays from the moon) அழுத்தம் அதிகமாக இருப்பதால்தான்
கடலில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும்
ஆறுகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும்.

மனநோயாளிகள் அன்று உத்வேகமாக இருப்பார்கள். சாதாரண
மனிதர்கள் அதை உணர்வதில்லை.

பெளர்ணமி நாளான்று மனிதனுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக
இருக்கும். அதனால் அன்று அறுவை சிகிச்சைகளைத் தவிருங்கள் என்று
மருத்துவர் ஒருவரே சொல்லியிருந்தார். அதன் விவரத்தை முன் பதிவு
ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

The Moon gives illumination, sense of purpose, intuitive nature,
sensuality, taste, youth, love of poetry, fine arts and music,
love of jewelry, attractive appearance, wealth and good fortune.
It makes us moody, emotional, and sensitive.

வளர்பிறைச் சந்திரனின் காலத்தில் பிறந்தவர்களுக்குச் சந்திரன்
நன்மையளிக்கும் கிரகம். தேய்பிறைச் சந்திரனின் காலத்தில்
பிறந்தவர்களுக்கு சந்திரனால் பெரிய அளவு நன்மைகள்
கிடைக்காது. இது பொது விதி

அதென்ன வளர்பிறைச் சந்திரன்? தேய்பிறைச் சந்திரன்?

ஜாதகத்தில் சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 180 பாகைக்குள்
இருக்கும் சந்திரன் வளர்பிறைச் சந்திரன். அந்த தூரத்தைக் கடந்து
181 பாகை முதல் 360 பாகைவரை உள்ள இடத்தில் இருக்கும்
சந்திரன் தேய்பிறைச் சந்திரன்

அதாவது அமாவாசைத் திதியில் இருந்து பெளர்ணமி திதி வரை
உள்ள 15 தினங்கள் வளரும் நாட்கள். பெளர்ணமி முதல்
அமாவாசை வரை உள்ள பதினைந்து தினங்கள் தேயும் (பிறை)
நாட்கள்.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சரியான இடத்தில் இல்லாவிட்டாலும்
அல்லது தீய சேர்க்கை அல்லது பார்வைகளால் கெட்டிருந்தாலும்,
அந்த ஜாதகனுக்கு வெற்றிகள் அரிதாகிவிடும். வசதியான வாழ்க்கை
கிடைக்காமல் போய்விடும். சிலர் சிறு வயதிலேயே வறுமைக்கு
ஆளாகி நொடித்துப் போவிடுவார்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிகளை வைத்துப் பலன்கள்:

1.
மேஷத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் செவ்வாயின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். இந்த இடத்தில்
சந்திரன் அமைந்த ஜாதகன் செயல் வீரனாக இருப்பான். எடுத்த காரியத்தை
முடிக்காமல் விட மாட்டான். உடல், மனம் இரண்டிலும் பலம் பொருந்திய
வனாக இருப்பான். உணர்ச்சி வயப்பட்டவனாக இருப்பான். எளிதில்
தூண்டுதலுக்கு இறையாகிவிடுபவனாக இருப்பான். (Easily ignited;
flammable.). சிறந்த கருத்துக்களை அள்ளிக் கொடுப்பவனாக இருப்பான்.
----------------------------------------------------------------------------------------------------
2.
ரிஷபத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் சுக்கிரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். ஒரு ஜாதகத்தில்
சந்திரன் அமர்வதற்கு உகந்த இடம் இதுதான். This is the most favoured
position in the chart for the moon). எல்லா உணர்வுகளையும் கொண்டவனாக
ஜாதகன் இருப்பான். அதை அவ்வப்போது வெளிப்படுத்தும் திறமையும்
ஜாதகனிடம் இருக்கும். ரசனை உணர்வு மிக்கவனாக ஜாதகன் இருப்பான்.
அழகு, இயற்கை, கலைகள் என்று எல்லாவற்றையும் ரசித்துப் போற்றுபவனாக
இருப்பான். பிடிப்பான கொள்கை, கண்ணோட்டம் உடையவனாக ஜாதகன்
இருப்பான். நினைத்தை சாதிக்கும் ஆற்றல் உடையவனாகவும் இருப்பான்.

சில சமயங்களில் இந்த அதீதப் பிடிப்பினால் கோபமான சூழ்நிலைக்குத்
தள்ளப்படும் ஆளாகவும் இருப்பான்.
-----------------------------------------------------------------------------------------------------
3.
மிதுனத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் புதனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். புத்திசாலிகளுக்கு உரிய
இடம். அதிக ஆர்வமும், அனைத்தையும் நேசிக்கும் தன்மை உடையவனாக
ஜாதகன் இருப்பான். பெண்ணிலிருந்து பேனா வரை ஒன்றைக்கூட விடாமல்
ரசிப்பான். எதையும் கற்றுக் கொள்ளக்கூடியவன். சிறந்த சிந்தனையாளன்.
எதையும் சிறப்பாகச் சொல்லும் திறமையாளன். ஒரே நேரத்தில் பல வேலை
களை வெற்றிகரமாகச் செய்து முடிக்கக்கூடியவன்.

வாழ்க்கையில் எல்லாவற்றையும் விதம் விதமாகத் தேடுபவன்.
தேடும் வெரைட்டி கிடைக்காதபோது சோர்ந்து விடுபவன்
========================================================
4.
கடகத்தில் சந்திரன் இருந்தால்:
இந்த இடம் சந்திரனின் ஆட்சிக்கு உட்பட்ட இடம். அதாவது சந்திரனின்
சொந்த வீடு. இந்த இடத்தில் இருக்கும் சந்திரன் ஜாதகனுக்கு, நல்ல,
வலுவான, சக்தியுள்ள மனதைக் கொடுக்கும். A moon sitting in its own
sign is good and strong and shows a powerful mind.

சிலர் உணர்ச்சிவசப் படுபவர்களாக இருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளை
வெளிப்படுத்தி ரஃப் & ட்ஃப்பாக நடந்து கொள்ளவும் செய்வார்கள்.சிலர்
மற்றவர்கள் மேல் அக்கறை கொண்டு அவர்களைப் போற்றி வளர்ப்பதில்
மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பொதுவாக இந்த அமைப்புள்ள ஜாதகன் வாழ்க்கை ஓட்டத்தில் பல ஏற்றத்
தாழ்வுகளைச் சந்திக்க நேரிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5.
சிம்மராசியில் சந்திரன் இருந்தால்:

இது சூரியனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், இயற்கையாகவே
தலைமை ஏற்கும் உணர்வு மேலோங்கி இருக்கும்.ஜாதகனுக்குத்
தன்னுடைய குறிக்கோள்களை அடையக்கூடிய புத்தியும், மன
உறுதியும் இருக்கும். தனித்தன்மையோடு தன் முடிவுகளை எடுக்கக்
கூடியவன். மற்றவர்களுடைய யோசனைகளும் கருத்துக்களும்
அவனிடம் எடுபடாது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவனாக
இருப்பான். சட்டென்று யாராவது கோபத்தைத் தூண்டும்படி நடந்தால்
கோபத்துக்கு ஆளாகி விடுவான். சீக்கிரமே சமாதானமாகியும்
விடுவான். மனதில் எதையும் வஞ்சகமாக வைத்துக் கொள்ள மாட்டான்.
========================================================
6.
கன்னிராசியில் சந்திரன் இருந்தால்:

இது புதனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் தகவல் தொழில்
நுட்பம், தொலைபேசி, மற்றும் பத்திரிக்கைத் துறைகளோடு சம்பந்தப் பட்டால்
சிறப்பாகப் பணியாற்றுவான். மற்றவர்கள் வசதியாக வாழ ஜாதகன் உதவும்
மனப்பான்மை கொண்டவனாக இருப்பான். பல வழிகளில் பலருக்கும்
உதவியாக இருப்பான். அதீத பாசமும், நேசமும் கொண்டவனாக இருப்பான்.
புத்திசாலியாக இருப்பான். துறு துறுவென்ற மனதைக் கொண்டவனாக இருப்பான்
வியாபாரத்தில் ஈடுபட்டால், அதில் கெட்டிக்காரத்தனமாகச் செயல் படுவான்.
அழகையும், கலைகளையும் நேசிப்பவனாக, அவற்றில் ஈடுபாடு கொண்டவனாக
ஜாதகன் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.
துலா ராசியில் சந்திரன் இருந்தால்:

இது சுக்கிரனின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், சக்திவாய்ந்த சுக்கிரன்
அழகையும், அழகு சார்ந்த கலைகளையும் ஜாதகனை ஆராதிக்க வைத்து
விடும். பெண்ணையும், பெண்மையையும் மிகவும் ரசிப்பவனாக இருப்பான். அதன்
காரணமாக சிலர் உடல் உபாதைகளுக்கும் ஆளாகக் கூடும். வாழ்க்கையில்
பல வெற்றிகளைக் காண்பான். தொழிலில் நேர்மையானவனாக இருப்பான்.
வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பான். விவேகம் உடையவனாக
இருப்பான். எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும், அல்லது எதைப்பேச
வேண்டும் என்கின்ற ஞானம் உடையவனாக இருப்பான்.

சிலர் உலகியல் வாழ்க்கை, ஆன்மிக வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சம
அளவில் ஈடுபாடு உடையவர்களாக விளங்குவார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8. **************விருச்சிக ராசியில் சந்திரன் இருந்தால்: இது செவ்வாயின் வீடு.
இங்கே சந்திரன் இருப்பது நல்லதல்ல! இருப்பதிலேயே இந்த இடம்தான்
சந்திரனுக்கு சற்றும் பொருத்தமில்லாத இடம். வலிமை எதுவும் இல்லாத இடம்.
இது சந்திரனின் நீச வீடு. அதை மனதில் கொள்க! ஜாதகனுக்கு எப்போதும்
அமைதியற்ற மனநிலை இருக்கும். மன வருத்தத்துடன் இருப்பான். ஒன்று
போனால் அடுத்த மன வருத்தம் தந்தி அடித்து வரச் சொன்னது போல உடனே
வந்து நிற்கும். சிலர் காயப்பட்ட உணர்வுகளால் அல்லாடுவார்கள்.
காயப்பட்ட உணர்வுகள் விட்டுப் போகவும் போகாது. அதுதான் இந்த அமைப்பின்
துயரம். மற்றவர்கள் உங்கள் உனர்வுகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
இறை வழிபாடு ஒன்றுதான் இந்த அமைப்புள்ளவர்களுக்குத் துணை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
தனுசு ராசியில் சந்திரன் இருந்தால்:
இது குரு பகவானின் வீடு. இங்கே சந்திரன் இருந்தால், ஜாதகன் அனேக நல்ல
குணங்களையும், செயல்பாடுகளையும் உள்ளவனாக இருப்பான். அனைவருடனும்
ஒத்துப் போகக்கூடியவனாக இருப்பான், நேர்மையானவனாக இருப்பான். நல்
ஒழுக்கமும், நடத்தையும் உடையவனாக இருப்பான். நேர்வழியில் மட்டுமே
அடுத்தவர்களுடன் பணம் முதலாக எல்லாப் பங்கீடுகளும் இருக்கும். ஜாதகனுடைய
லட்சியங்கள் நிறைவேறும்.புத்திசாலித்தனம் எல்லாவிதத்திலும் மேலோங்கி இருக்கும்.
குடும்பத்தில் அனைவருடனும் ஈடுபாடு உடையவனாக இருப்பான்.

தத்துவங்களிலும், ஆன்மிகத்திலும் ஆர்வமும் தேர்ச்சியும் உடையவனாக இருப்பான்
---------------------------------------------------------------------------------------------------------------------
10
மகரத்தில் சந்திரன் இருந்தால்:

இது சனியினுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், செய்யும் தொழிலை
அல்லது வேலையை ஆர்வமுடன் செய்வான். அதுவே அவனை வெற்றியின் பக்கம்
இழுத்துச் செல்லும். நல்ல குணவான். அதே நேரத்தில் சில விஷயங்களில் அடிக்கடி
மனமாற்றம் உடையவனாக இருப்பான். நம்பிக்கைக்கு உரியவனாக இருப்பான்.
இந்த அமைப்புள்ளவர்கள் அன்பிற்கு இலக்கணமாக இருப்பார்கள். பிரச்சினைகளை
பொறுமையுடன் எதிகொள்பவனாக இருப்பான். நகைச்சுவை உணர்வு மேலோங்கியவனாக
இருப்பான். நுண்கலைத் திறமைகள் கொண்டவனாக இருப்பான். பலராலும் பாராட்டப்
படுபவனாக இருப்பான்
----------------------------------------------------------------------------------------------------------------------
11
கும்பத்தில் சந்திரன் இருந்தால்:

இது சனியினுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன் அதி புத்தி
சாலியாக இருப்பான். வாழ்க்கைத்ததுவம், இறைவழிபாடு ஆகியவற்றில் நாட்டம்
உடையவனாக இருப்பான். தியானம், மற்றும் யோகா போன்ற கலைகளில் நாட்டம்
இருக்கும். எதையும் சீர் தூக்கிப் பார்க்கும் தன்மை இருக்கும். சிலர் கலைஞர்களாக
பரிணமளிப்பார்கள். நன்றாக வேலைகளைச் செய்யக்கூடியவனாக இருப்பான்.
சிலரை வாழ்க்கையிம் ஏற்ற, இறக்கங்கள் அவ்வப்போது புரட்டிப் போடும். அதைத்
தாங்கி மீண்டும் மேலுக்கு வரும் மனநிலை கொண்டவனாக ஜாதகன் இருப்பான்.
===============================================================
12.
மீனத்தில் சந்திரன் இருந்தால்:

இது குரு பகவானுடைய வீடு. இங்கே சந்திரன் அமர்ந்திருந்தால், ஜாதகன்
பல லட்சியங்களையும், கொள்கைகளையும் உடையவனாக இருப்பான். நடத்தை
தவறாதவனாக இருப்பான். உணர்ச்சிவயப்படுபவனாக இருப்பான். அல்லது
உணர்ச்சி வசப்படுவர்களிக் கண்டு பாதிப்பிற்கு உள்ளாகிறவனாக இருப்பான்.
பெருந்தன்மையானவன். ஜெண்டில்மேன் என்று மற்றவர்களால் மதிக்கப்படுபவானாக
இருப்பான். புத்திசாலியாக இருப்பான். ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும். உலக
வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கும் பாக்கியசாலியாக இருப்பான். நம்பிக்கைக்கு
உரிய நட்புக்கள் அவனைத் தேடிவந்து சேரும்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Mathematics gave birth to the Law of Probability.
When this Law based on astronomical facts & figures is applied,
it becomes the Wisdom of the Heavens, Astrology.
Rightly it has been defined as a Lamp in darkness.
Despite the allegations leveled against it, Astrology continues
its role as one of the noblest professions & one of the greatest
sciences which human intellect has built up.

The role of Moon in Horoscope
As the Queen of the Solar Logos, Moon is an important luminary
capable of conferring great mental power. The position of Moon
is very important from the perspective of prosperity. A strong Moon,
powerful in digit strength,can give immense courage to the native
and courage is essential for prosperity. Prosperity depends on the
position of Moon & Jupiter, the indicator of wealth.
The Moon is considered as a natural benefic in Vedic Astrology.
=======================================================
Effects of Moon in the 12 Houses
1
Moon in the Ascendant
If weak Moon ( weak in digit strength ) tenants the First House,
the native will be devoid of mental strength and longevity.
If Full Moon is posited in the Ascendant, the native will have
good longevity and will be a scholar.

If the Ascendant is Taurus or Cancer,the native will be wealthy & famous.
..........................................................................................................
2
Moon in the Second House
Will have wealth & all sorts of enjoyments.Will have the gift of the
gab or the divine gift of articulate speech. Will be handsome and
will have the ability to understand other's perspectives.
Will be educated with scientfic knowledge.
..........................................................................................................
3
Moon in the Third House
Will have wealth, education, virility & pride. Will have good strength.
Will have gains via brothers. Will be miserly.
.........................................................................................................
4
Moon in the Fourth House
Will have wealth and conveyances. Will be liberal and altruistic.
Will be fond of the other sex. Will not be too attached to anything.
Will be a donator.
.........................................................................................................
5
Moon in the Fifth House
Will be highly intelligent and kind. Will be interested in politics.
Will be affable and diplomatic.
..........................................................................................................
6
Moon in the Sixth House
Will be cruel and intelligent. Will have disorders of the digestive tract.
Will face many a defeat. Will be intelligent and clever.
Will be slightly lazy. This position is slightly detrimental to prosperity.
...........................................................................................................
7
Moon in the Seventh House
Will posses wealth & fortune. Will have a high standard of comeliness.
Will have accumulated property. Will be kind.
Will enjoy the pleasures of the mundane.
.............................................................................................................
8
Moon in the Eighth House
Will be quarrelsome and devoid of benevolent attitude. Will be afflicted
by many a disease. Will be handsome. Will have less longevity.
Will have marks caused by wounds on his/ her body.
..............................................................................................................
9
Moon in the Ninth House
Will be highly religious,liberal & will have devotion to elders and
preceptors. Will possess devotion of a high order.
.................................................................................................................
10
Moon in the Tenth House
Will be well off. Will have gains from education.Will be liberal and
altruistic. Will be famous and will get fame from many altruistic
deeds.
................................................................................................................
11
Moon in the Eleventh House
Will have wealth and a lot of subordinates. Will have education of a
high order. Will be versatile. Intelligence of a high degree will grace
the native. Will be altruistic and liberal.
....................................................................................................................
12
Moon in the Twelfth House
Will be lazy and devoid of wealth. Will be an outcast. Will have
to face a lot of defeats. Will live in foreign lands. Mother's health may
be affected.

=========================================================
சந்திரனின் சுய அஷ்டகவர்க்கப் பலன்கள்!

சுயவர்க்கத்தில் சந்திரன் கொண்டிருக்கும் பரல்களை வைத்துப் பலன்கள்:
எல்லாம் பொதுப்பலன்கள். உங்களுடைய ஜாதகத்தின் மற்ற அம்சங்களை
வைத்து இவைகள் மாறுபடலாம், அல்லது வேறுபடலாம். அதையும் மனதில்
கொள்க!

1.பரல்: விஷ ஜந்துக்களிடமிருந்தும், ஆயுதங்களில் இருந்தும் பாதகங்கள்
ஏற்படலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

2.பரல்கள்: ஜாதகனின் தாய்க்குப் பாதகங்கள் ஏற்படும்! ஜாதகனுக்கு
நோய்களால் அவதிப்படுவான்

3.பரல்கள்: மேற்கூறிய பலன்கள் குறைந்த அளவில் இந்த அமைப்பிற்கு
இருக்கும்
.
4.பரல்கள்: ஜாதகனின் குடும்பம் மேன்மையுறும்.

5.பரல்கள்: மன அமைதியும், நல்ல நடத்தையும் ஜாதகனிடம் குடி கொள்ளும்.

6.பரல்கள்: நல்ல மன திடமும், உயர்ந்தகோட்பாடுகளும் உடையவனாக
ஜாதகன் இருப்பான்.

7.பரல்கள்: ஜாதகன் எல்லாக் கலைகளிலும் ஆர்வமுடையவனாகவும்,
விற்பன்னனாகவும் இருப்பான்

8.பரல்கள்: மகிழ்ச்சியான அதிர்ஷ்டகரமான வாழ்க்கை ஜாதகனுக்கு அமையும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சந்திரனின் கோச்சாரப் பலன்கள்:

குறிப்பிட்டுள்ளவைகள் எல்லாம் சந்திரன், ஜாதகனின், ராசியில் தான்
இருக்கும் ராசியை வைத்து கோச்சாரத்தில் இருக்கும் இடங்களுக்கான
பலன்கள்:

சந்திரன் ஒரு ரவுண்டு அடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள் 27

(இது இளைஞர்கள் அடிக்கும் ரவுண்டு அல்ல!)

அதனால் ஒரு ராசியில் இருப்பது 2.25 நாட்கள் மட்டுமே

1ல், 3ல், 6ல், 7ல், 10ல், 11ல் இருக்கும்போது மட்டுமே நன்மை
அதாவது 27 நாட்களில் பாதி நாட்கள் மட்டுமே நன்மை.

2ல், 4ல் 5ல், 8ல், 9ல், 12ல் இருக்கும்போது நன்மைகள் இருக்காது.

சந்திரனின் கோச்சாரப் பலன்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். குரு அல்லது சனியைப் போல் அல்லாமல் அவர் ஒரு
ராசியில் தங்கிச் செல்லும் காலம் மிக, மிகக் குறைவானது!

அவர் ராசிக்கு எட்டாம் இடத்திலும், 12ஆம் இடத்திலும்
சஞ்சாரம் செய்யும் நாட்களில் காரிய சித்தி இருக்காது. எடுத்த
காரியங்கள் முடியாது. ஆகவே அன்றைய தினங்களில் Routine
work களை செய்தால் போதும்

சந்திரனின் கோச்சாரத்தை வைத்துத்தான், நாளிதழ்களில் தினப்பலன்
களை எழுதுவார்கள்.
=========================================================
சந்திரதசை மொத்தம் 10 ஆண்டுகள் காலம் நடைபெறும்.
அந்த காலகட்டத்தில் சந்திரனின் சுய புத்திக் காலமும், குரு புத்திக்
காலமும் மட்டுமே நல்ல பலன்களைத் தரும். மற்ற புத்திகளின்
காலத்தில் நன்மைகள் இருக்காது.

சமீரா ரெட்டியும், அனுஷ்கா சர்மாவும்!

Posted: 09 May 2012 09:04 AM PDT



அன்பும், அன்பின்மையும் (unkindness) கலந்தது மனித வாழ்வு.
அன்பும், வெறுப்பும் கலந்தது மனித வாழ்வு!
(Life mixed with Love and cruelty)

அல்லது இப்படி வைத்துக் கொள்ளலாம்.

நேசமும் விரோதமும் கலந்த வாழ்வு.
இன்பமும், துன்பமும் கலந்த வாழ்வு.
நேசமும் துரோகமும் கலந்த வாழ்வு.
பாசமும், விரோதமும் கலந்த வாழ்வு.
உறவும், பிரிவும் கலந்த வாழ்வு.
வறுமையும், செழுமையும் கலந்த வாழ்வு.
பெருமையும், சிறுமையும் கலந்த வாழ்வு

எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அன்புதான் எல்லாவற்றையும் விட உயர்வானது.

உன்னிடம் அன்பிருக்கிறதா? அது இருந்தால் போதும். உன்னிடம்
எல்லாம் இருக்கிறது. உன்னிடம் அன்பு இல்லையா? உன்னிடம்
எதுவும் இல்லை! அல்லது வேறு எதுவும் இருந்து பயனில்லை.
அன்பு இருந்தால் மட்டுமே உன் வாழ்க்கை சிறக்கும்.
நீ எல்லோராலும் விரும்பப் படுவாய்.

யார் இதைச் சொன்னது?

யார் சொன்னால் மறுப்பின்றிக் கேட்போமே, அவர் சொன்னது!

ஆமாம் வள்ளுவப் பெருந்தகைதான் சொல்லியிருக்கிறார்

குறளைப் பாருங்கள்:

"அன்பிலார் எல்லாம் தமக்குஉரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"

தனிமரம் தோப்பாகாது. நமது வாழ்க்கை கூட்டு வாழ்க்கை. மனதில்
அன்பு இருந்தால் மட்டுமே நீங்கள் அடுததவருடன் இயைந்து
வாழமுடியும்.

நான் பதிவில் மாய்ந்து மாய்ந்து எழுதுவதும் வாசகர்களாகிய
உங்கள் மேற்கொண்டுள்ள அன்பினால்தான். இல்லையென்றால்
அரிய நேரத்தைச் செலவழித்து எப்படி என்னால் எழுத முடியும்?

என் எழுத்திற்கு ஆதாரம் அன்பு! நான் அறிந்தவற்றை அடுத்த
தலைமுறையினர் அறிய வேண்டும் என்கின்ற அன்பு!

உங்களுடைய அன்புதான் எனக்குக் கிரீடம் அல்லது மகுடம்

அன்புதான் நமது வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கிறது.
Love gives meaning to our lives

Love gives meaning to our lives as do friendship or faith in God.
These are factors of true happiness, of inner peace, of feelings
of harmony, allowing meaning to our existence.
------------------------------------------------------------------------------------------------
வாழ்க்கையின் மறுபக்கம் ஒன்று இருக்கிறது. அது நம்மைக்கேட்டு
ஏற்படாது. அல்லது நம் விருப்பத்திற்கு நடைபெறாது. அதைத்
தவிர்க்கவும் முடியாது அல்லது விரட்டியடிக்கவும் முடியாது.

வாழ்க்கையின் அவலங்கள். வலிகள். வேதனைகள். துயரங்கள்
துன்பங்கள். என்று நம்மைச் சுற்றிப் பல விலங்குகள் உள்ளன.
அந்த விலங்குகளினால் நாம் எப்போது வேண்டுமென்றாலும் தாக்கப்
படலாம்.
------------------------------------------------------------------------------------------------
இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்குள் தடுமாறும் அல்லது அடிவாங்கும்
மனிதன் வாழ்க்கையைப் பற்றி இருவிதமான சிந்தனைகளைக்
கொள்கிறான்.

ஒருவன் வாழ்க்கையை இனிமை என்கிறான்.
இன்னொருவன் வாழ்க்கையைக் கொடுமை என்கிறான்.

பாடலைப் பாருங்கள்:

"கடவுள் ஒரு நாள் உலகைக் காண தனியே வந்தானாம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றானாம்"

மனிதன் என்ன பதில் சொன்னான்?

"ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்"

விட்டாரா கடவுள்? இல்லை தொடர்ந்து கேட்டார்:

"கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் இங்கே யார் தந்த்து
எல்லையில்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதனின் கொள்கை தெரியவில்லை

ஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்"

சரி முடிவு என்ன ஆயிற்று?

"பள்ளிக் கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் கவிதை கண்டானாம்
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பைக் கண்டானாம்
உன்னைக் கண்டேன் போதும் என்றே வானம் சென்றானாம்"

****************************************************************
உள்ளம் எங்கும் வெள்ளம் பொங்கும் அன்பு" என்றார்
பாருங்கள், அங்கே கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அந்தப்
பாடல் வரிகளோடு நம் மனதிற்குள் வந்து தங்கி விடுவார்.

ஆகவே கடவுள் நமக்கு அள்ளிக் கொடுத்தது இந்த அன்பு
உணர்வு!

கடவுள் மனிதனுக்குக் கொடுக்காதது ஒன்று உள்ளது.

அது என்ன?

ஒரு கதை மூலம் அதைச் சொல்கிறேன்
================================================
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார். அவர் வந்து இறங்கிய இடம்
ஒரு வனாந்திரக் காடு.

அங்கே ஒருவன் விறகிற்காகச் சின்னச் சின்ன மரங்களையும்,
மரக் கிளைகளையும் வெட்டிக் கொண்டிருந்தான். அவனுக்கு
நாற்பது வயதிருக்கும்.

நெடு நேரமாக வெட்டிக்கொண்டிருந்தான் போலும். அவன்
உடம்பு தொப்பலாக வியர்வையால் நனைந்திருந்தது.

அவன் அருகில் சென்ற கடவுள், கணீரென்ற குரலில் சொன்னார்

"வெட்டியது போதும்! போ!"

திடுக்கிட்டுத் திரும்பிய அவன், கடவுளைப் பார்த்தான்.அந்தக்
கம்பீரமான தோற்றமும், கணீர்க் குரலும் அவனுள் ஒரு பயத்தைத்
தோற்றுவித்தது.

வந்திருப்பது இறை என்பதை அவன் அறியவில்லை. இந்தக்
காட்டின் சொந்தக்காரர் போலும் என்று நினைத்தான்.

"அய்யா, என்னை நம்பி பத்து ஜீவன்கள் வீட்டில் இருக்கின்றன.
இந்த விறகுகளைக் கொண்டுபோய் சந்தையில் விற்றால்தான்
நான்கு நாட்களுக்காவது அந்த ஜீவன்களின் வயிற்றுப் பசியைப்
போக்க முடியும்" என்று பணிவுடன் அவன் சொன்னான்.

அவன் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்ந்த கடவுள்,
அவனுடைய தலைவிதியை மாற்றுவோம் என்று எண்ணினார்..

"உன்னுடைய வறுமையைப் போக்குகிறேன். அந்தக் கல்லை எடுத்துக்
கொண்டு வா" என்றூ சொல்லி அருகில் கிடந்த செங்கல் ஒன்றைக்
காட்டினார்.

அவன் சட்டென்று அதை எடுத்துக் கொண்டு வந்து அவர் முன்பு
நீட்டினான்.

கடவுள் தன் விரலால் அதைத் தொட, உடனே அது தங்கமாக
மாறியது.

என்ன ஆச்சரியம்? செங்கல் சொக்கத்தங்கமாக மாறியவுடன்
அவனுக்கு மிக்க மகிழ்ச்சி.

ஆனாலும் அப்போதும் அவன் அவரைக் கடவுள் என்று உணர்ந்தான்
இல்லை. அவன் அறிவு அவ்வளவுதான். அவன் அவரை ஏதோ
சித்து வேலை செய்யும் சாமியார் என்று நினைத்து விட்டான்.

'இந்தத் தங்கம் உன்னுடைய வறுமையைப் போக்கும் போ, போய்
சந்தோஷமா இரு!" என்றார் கடவுள்.

அவன் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது. அதைக் கண்ட கடவுள்,
தொடர்ந்து கேட்டார், "என்ன யோசிக்கிறாய்?"

புன்னகைத்த அவன் சொன்னான்,"அய்யா, இதைக் கொண்டு போவதால்
என் முழுப்பிரச்சினையும் தீராது. ஒரளவிற்குத்தான் தீரும்"

உடனே கடவுள் சொன்னார்."அதை கீழே வை. அதோ அந்தக்கல்லை
எடுத்துவா!" என்று அம்மிக்கல் அளவில் இருந்த பெரிய கல் ஒன்றைக்
காட்டினார். அது முப்பது அல்லது நாற்பது கிலோ அளவு எடை
கொண்டதாக இருந்தது.

அந்த விறகு வெட்டியும் ஆர்வத்துடன் ஓடிச் சென்று அதைத் சிரமப்பட்டுத்
தூக்கிக் கொண்டு வந்து நீட்டினான்.

கடவுள் தன் விரல்களில் ஒன்றை அதன் மீது வைக்க, உடனே அது
தங்கமாக மாறியது.

அவனுக்கு அளவிட முடியாத ஆச்சரியம். அவனுடைய கண்கள்
மின்னின! உடல் முழுவதும் தீப்பிடித்ததைப் போன்று மகிழ்ச்சி பரவியது.

கடவுள் சொன்னார்,"சரி இதை எடுத்துக்கொண்டு போ! மகிழ்ச்சியாக
வாழ்க்கையை நடத்து!"

அவனுடைய சந்தோஷம் ஒரு நொடி கூட நீடிக்கவில்லை. அவன் முகம்
மீண்டும் வாட்ட முற்றது.

கடவுள் என்ன வென்று வினவ, கையில் இருந்த அத்தனை பெரிய தங்கக்
கல்லைத் தரையில் வைத்துவிட்டு, ஆதங்கத்துடன் அவன் கடவுளிடம்
சொன்னான்.

"ஐயா, எனக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தாருங்கள். உங்களைப் போலவே
எனக்கும் பத்து விரல்கள் இருக்கின்றன. நான் தொட்டால் தொட்ட
பொருள் தங்கமாகும் சக்தியை என் விரல்களில் ஒன்றிக்குத் தாருங்கள்.
நான் வேண்டும்போது, வேண்டிய பொருளைத் தொட்டுத் தங்கமாக்கிக்
கொள்கிறேன்"
----------------------------------------------------------------------------------------------------
அதுதான் மனிதனின் மனம். மனித மனம் எப்போதும் எதிலும் திருப்தி
அடையாது.

நூறு ஏக்கர் நிலம் கிடைத்தால் ஆயிரம் ஏக்கர் விளைநிலத்திற்கு ஆசைப்படும்

அம்மிஞ்சிக்கரையில் வீடு கொடுத்தால், அடையார் பங்களாவிற்கு ஆசைப்படும்.

மாருதி ஜென் காரைக் கொடுத்தால், பென்ஸ் டீலக்ஸ் காருக்கு ஆசைப்படும்.

டீம் மேனேஜர் வேலை கொடுத்தால், கம்பெனி சி.யி.ஓ வேலைக்கு ஆசைப்படும்

மாநிலத்தில் மந்திரியாக்கினால் மத்திய அரசில் மந்திரிப் பதவிக்கு ஆசைப்படும்.

சமீரா ரெட்டியைக் கொடுத்தால் அனுஷ்கா சர்மாவிற்கு ஆசைப்படும்

------------------------------------------------------------------------
இந்த சமீராவும், அனுஷ்காவும் யாரென்று தெரிகிறதா? அவர்கள்
தான் இன்றையத் தேதியில் இந்திய நாட்டின் கனவுக் கன்னிகள்.
அதாவது dream girls. வெள்ளித் திரையில் மின்னும் நட்சத்திரங்கள்
உங்களுக்குப் புரியும் படியாக எழுதவேண்டும் என்பதற்காக
அவர்களை உதாரணப் படுத்தி எழுதியுள்ளேன்.

சினிமாவை வைத்துச் சொன்னால்தான் சில விஷ்யங்கள் நமக்குப்
பிடிபடும்

இதை நான் சொல்லியாக வேண்டும். இல்லை என்றால் பிரம்பு சட்டாம் பிள்ளை உண்மைத் தமிழரின் கைக்குப் போய்விடும் அபாயம் உள்ளது:-))))))

அவருக்கு உதாரணம் சொல்ல கொடுமுடி சுந்தராம்பாளையும்,
பெங்களூர் ரமணி அம்மாள் அவர்களையும் பற்றிச் சொன்னால்
போதும். மனிதர் குளிர்ந்து விடுவார்.

பெண் என்றால் கண்களும், உதடுகளும், குரலும் பேச வேண்டும் என் அப்பா காலத்தில் பசுபலேட்டி கண்ணாம்பா மற்றும் டி.ஆர். ராஜகுமாரி ஆகியோரின் கண்களும், உதடுகளும், குரலும் பேசும். என் காலத்தில் சாவித்திரி மற்றும் சரோஜாதேவி ஆகிய இருவரின் கண்களும், உதடுகளும், குரலும் அசத்தலாக இருந்தது. இப்போது அந்த மாதிரி திலகங்கள் யாரும் இல்லை! அந்த மாதிரித் திலகங்கள் புதிதாகத் தோன்றினால் வரவேற்கும் மன நிலையில் இன்றைய இளைஞர்களும் இல்லை! என்ன கருமமோ, எல்லாம் கவர்ச்சி மயமாகி விட்டது. அதுவும் ஒரு அவலம்தான்.
---------------------------------------------------------------------------

ஆசைக்கு எல்லை இல்லை! அந்த ஆசையில் மனிதன் ஆடட்டும்
என்று காலதேவன் மனிதனை ஆடவிட்டு வேடிக்கை பார்த்துக்
கொண்டிருக்கிறான்.

ஓய்வான் ஒரு நாள் - சாத்துவோம் அப்போது என்று காத்துக்
கொண்டும் இருக்கிறான்.

மனிதன் ஓய்வானா? எப்போது?

நாடி நரம்பெல்லாம் தளர்ந்து ஒரு நாள் கட்டாந்தரையில் படுக்காமலா
போவான்?

அப்போது வருவான். கால தேவன். ஆடிய ஆட்டதிற்கெல்லாம்
அப்போது கிடைக்கும் சாமி பரிசு!:-)))))
--------------------------------------------------------------------------------------------------------
கடவுள் மனிதனுக்குக் கொடுக்காதது திருப்தி (satisfaction)

கொடுத்தது அன்பு.

கொடுக்காதது திருப்தி!
------------------------------------------------------------------------------------------------------
"வாத்தியார் எதற்கு இதெல்லாம்? பாடத்திற்கு சம்பந்தம் உண்டா?

"இல்லாமலா? அடுத்தபாடம் மனகாரகனைப் பற்றியது.
Next lesson is about The Authority of Mind. மனகாரகன் சந்திரனைப்
பற்றியது. அதற்கான முன்னோட்டம்தான் இது!"

"சரி, பாடம் எப்போது?"

"இன்றே கொடுத்தால் "Over dose" ஆகிவிடும். அதனால் பாடம் நாளை
மறுநாள் (17.12.2008) பதிவிடப்படும்"
------------------------------------------------------------------------
"வாத்தியார்...?"

"என்ன ராஜா?

"ஒரு சந்தேகம், கேட்கலாமா?"

"எனக்குக் கோபமே வராது. கேளு ராஜா?"

"இந்த இடுகைக்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்?"

"என்ன தலைப்பு வைத்திருக்கலாம்?"

" மனிதனுக்கு இறைவன் எதைக் கொடுக்கவில்லை?"

"அப்படித் தலைப்பு வைத்திருந்தால் யாரு ராஜா உள்ளே வருவார்கள்?
பதிவு உலகில் உலாத்துபவர்களின் சராசரி வயது 32. இறைவன், கடவுள்
என்று தலைப்பு வைத்தால் ஒரு ஆள் கூட உள்ளே எட்டிப் பார்க்காது
பதிவை அனைவரும் படிக்க வேண்டும். அதுதான் எனது நோக்கம்.
அதனால்தான் இந்த மாதிரித் தூண்டில் தலைப்புக்கள்.

தலைப்பை நன்றாகப் போடு; தானே வருவார்கள் என்று பலமுறை
மற்றவர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன். அதனால் தலைப்பைச்
சொதப்பாமல் அப்படிப் போட்டுள்ளேன். தலைப்பை மறந்து விட்டு
இடுகையை இன்னுமொரு முறை படி ராஜா! இடுகை எப்படி உள்ளது
அதை மட்டும் சொல்லு ராஜா!
------------------------------------------------------------------

துப்பாக்கி முனையில் பிரதமரிடம், போராளிகள் கோரிய ஊதியம்!

Posted: 09 May 2012 09:04 AM PDT


லிபியாவின் சுதந்திரத்துக்காக போராடிய முன்னாள் போராளிகள் குழு ஒன்று, ஆயுதங்கள் சகிதம் பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு கைப்பற்றியது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற இந்த அதிரடி நடவடிக்கையின்போது, பிரதமர் அப்துரஹிம் அல்-கெய்ப் தமது அலுவலகத்தில் இல்லாத காரணத்தால், தப்பித்துக் கொண்டார்.

சுமார் 30 பிக்கப் ட்ரக்களில் ஆயுதங்கள் சகிதம் தலைநகருக்கு வந்த போராளிகள், பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். பிரதமர் அலுவலக பாதுகாவலர்கள் பலர் காயமடைந்தனர். அதையடுத்து, பிரதமர் அலுவலகம், முற்று முழுதாக போராளிகளின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

கிக்ளா என்ற பகுதியைச் சோந்த போராளிகள் இவர்கள். தலைநகரில் இருந்து 120 கி.மீ. தென்மேற்காகவுள்ள இந்தப் பகுதியைச் சேர்ந்த போராளிகளும், கடாபியின் ராணுவத்தை எதிர்த்துப் போராடி விரட்டியதாலேயே, லிபியாவில் புதிய அரசு அமைந்தது. அப்போது போராடிய அனைத்துப் போராளிகளுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று லிபியாவில் புதிதாக உருவான அரசு கூறியிருந்தது.

ஆனால், இதுவரை ஒரேயொரு மாதம் மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. பழைய பாக்கி ஏதும் வழங்கப்படவில்லை.

போராட்டம் நடைபெற்ற காலம் முழுவதற்குமான ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே, கிக்ளா பகுதியைச் சேர்ந்த போராளிகள் குழு, துப்பாக்கியை தூக்கிக் கொண்டு தலைநகருக்கு வந்திருந்தது. பிரதமர் அலுவலகத்தையும் கைப்பற்றியுள்ளது.

லிபிய அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரத்தை, வன்முறை இல்லாது தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை துவங்கியுள்ளது அரசுத் தலைமை. பேச்சுவார்த்தை பலன் அளிக்காவிட்டால், நாட்டின் மற்றைய பகுதிகளில் இருந்தும் போராளிக் குழுக்கள் தலைநகரை நோக்கி வரத் துவங்குவார்கள்.

அப்படி நடந்துவிட்டால், கடாபிக்கு ஏற்பட்டதைவிட மோசமான கதி, புதிய அரசுத் தலைமைக்கும் ஏற்படும்!

புகழ் பெற்ற பாடல்கள்

Posted: 09 May 2012 09:02 AM PDT



புகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும்
பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!

"கண்கள் இரண்டு இருந்தபோதும் காட்சி ஒன்றுதான்
வழிபடவும், வரம் தரவும் தெய்வம் ஒன்றுதான்"
என்றார் கவியரசர் கண்ணதாசன்.

இறைவன் ஒருவன்தான்: நாம் அவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்.

உணவு ஒன்றுதான் - நாம் பலவிதங்களில் பல சுவைகளில் சமைத்து
உண்கிறோமே அதைப்போல!

சில பாடல்கள், பாடலின் கருத்து - அமைப்பு, பாடுபவர்,
பாவம், உடன் சேர்ந்து ஒலிக்கும் இசைக்கருவிகள், என்று எல்லாம்
சேர்ந்து சிறப்பாக அமைந்தால்தான் நம் மனதை ஈர்க்கும். ஆனால்
பக்திப்பாடல்களுக்கு அந்த வரைமுறை கிடையாது!

பக்தி ஒன்றுதான் அதற்கு அளவுகோல்! படிக்கும்போதே அது நம்
மனதிற்குள் வந்து அமர்ந்துவிடும்! இப்போது பாடலைப் பாருங்கள்:

காலைத் தொழுதாலும் கந்தாஉன் கையிலிருக்கும்
வேலைத் தொழுதாலும் வேல்கழுவிக் - கால்வழியும்
பாலைத் தொழுதாலும் பாய்ந்துவரும் உன்மயிலின்
வாலைத் தொழுதாலும் வாழ்வு!

பேராசிரியர், முனைவர் திரு.அர.சிங்காரவடிவேலன் அவர்கள் எழுதி
1973ம் ஆண்டு வெளியிடப்பெற்ற 'செந்தூர் முருகன் அந்தாதி' என்ற
101 வெண்பாக்களைக் கொண்ட நுலில் உள்ள மிகவும் சிறப்பான
பாடல்களில் ஒரு பாடல்

அந்த அந்தாதி நூலின் துவக்கப் பாடல்

நாளும் ஒருவெண்பா நான்பாடச் செந்தூரில்
வாழும் முருகா வரமருள்வாய் - சூழும்
திருச்சீர் அலைபோலச் சிந்துதமிழ்ப் பூவால்
அருச்சனைகள் செய்திடவே ஆர்த்து.

சீர், சந்தம், எதுகை மோனை, கருத்து என்று எல்லாமே எவ்வளவு
அசத்தலாக இருக்கிறது பார்த்தீர்களா?

கடல் கொள்ளையரை துரத்த பிரிட்டிஷ் கடல்படையில் கப்பல் இல்லை!

Posted: 09 May 2012 09:01 AM PDT

சோமாலியக் கொள்ளையரை வேட்டையாடும் கடல் ஆபரேஷனில் இருந்து பிரிட்டன் மெதுவாகப் பின்வாங்கியுள்ளது. சோமாலியக் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஒரு கப்பலை வருடம் பூராவும் ஈடுபடுத்த, பிரிட்டிஷ் கடல்படையில் கப்பல் வசதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் சோமாலியக் கடல் கொள்ளையரால் உலக கப்பல் போக்குவரத்து இழந்த தொகை, 7 பில்லியன் டாலர். வர்த்தகக் கப்பல்களையும், அதன் மாலுமிகளையும் கைப்பற்றி, பணயத் தொகையாக கடல் கொள்ளையர் பெற்ற தொகை மட்டும், 160 மில்லியன் டாலர்.

இவ்வளவு பணத்தை கொள்ளையருக்கு கொடுத்தும், 24 பணயக் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

அனைத்து நாடுகளையும் பாதிக்கும் பிரச்னை இது என்பதால், அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட மற்றைய நாடுகளுடன் பிரிட்டனும் இணைந்து, சோமாலியா கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது. அனைத்து நாடுகளின் கடற்படைகளையும் இணைத்து, 16 கப்பல்கள் கொண்ட படை ஒன்று, கடல் கொள்ளையரிடம் இருந்து பாதுகாப்பு கொடுத்து வருகின்றது.

இந்த கப்பல் படையில் இருந்துதான், தமது கப்பலை விலக்கிக் கொள்ளப் போகின்றது பிரிட்டன்.

பிரிட்டனில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பாதுகாப்பு பட்ஜெட்டில் ஏற்படுத்தப்பட்ட வெட்டு காரணமாக, சூயஸ் கால்வாய்க்கு கிழக்கே இரண்டே இரண்டு கப்பல்களை மட்டும் பிரிட்டிஷ் கடற்படையால் இயக்க முடியும். அந்த இரு கப்பல்களும், சூயஸ் கால்வாய் பாதுகாப்பு பணியில் உள்ளன.

அத்துடன், லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் போட்டிகளின்போது, பிரிட்டனை பாதுகாக்கும் வகையில் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்களும், பிரிட்டனைச் சுற்றி நிறுத்தப்படவுள்ளன. அதனால், சோமாலியக் கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரிட்டிஷ் கப்பலுக்கு, நாடு திரும்புமாறு உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

இங்குள்ள மற்றொரு சிக்கல், சோமாலியக் கடலில் பிரிட்டிஷ் கடற்படையால் கைது செய்யப்பட்ட கடல் கொள்ளையரை என்ன செய்வது என்பதே. இவர்கள், பிரிட்டிஷ் கப்பலில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். கப்பல் பிரிட்டனுக்கு திரும்பவுள்ளதால், இவர்களை ஏதாவது செய்தாக வேண்டும்.

அதற்கு பிரிட்டன் என்ன செய்கிறது தெரியுமா?

தாம் கைது செய்து கப்பல் சிறையில் வைத்திருக்கும் சோமாலி கடல் கொள்ளையரை, செட், செட்டாக விடுவிக்கப்படுகின்றனர்.

கொள்ளையர்களை இரண்டு இரண்டு பேராக படகுகளில் ஏற்றி, சோமாலிக் கரையை அடைந்ததும், அவர்களது கை விலங்குகளை கழட்டிவிட்டு. தரையில் இறக்கிவிட்டு வருகின்றனர் பிரிட்டிஷ் கடற்படையினர்!

யாழ்.குடாக்கடலில் தென்பகுதி மீனவர்கள் கடலட்டை பிடிப்பதற்கெதிராக வடபகுதி மீனவர்கள் போர்க்கொடி

Posted: 09 May 2012 09:01 AM PDT



யாழ்.குடாக் கடலில் தங்கியிருந்து சங்கு மற்றும் கடலட்டை பிடிப்பதற்கு அனுமதி அளிக்குமாறு, தென்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ள அதேவேளை, அதற்கெதிராக வடபகுதி கடற்றொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
யாழ்.குடா கடற்பகுதிகளில் சங்கு மற்றும் கடல் அட்டை பிடிப்பதற்கு தென்பகுதியைச் சேந்த 15 நிறுவனங்கள் யாழ்.கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் அனுமதி கோரியுள்ளதாக, யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
எனினும் குடாக்கடலில் உள்ள கடற்றொழில் சங்கங்கள் சம்மதித்தால் மட்டுமே இதற்கு அனுமதியளிக்க முடியும்.
கடந்த 30 வருடகாலமாக குடாக்கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் தங்கள் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகையில் திடிரென தென்பகுதி நிறுவனங்கள் இந்தக் கடலில் சங்கு மற்றும் கடல் அட்டை பிடிப்பதற்கு அனுமதி கோரியிருப்பது ஆச்சரியப்பட வேண்டிய விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
தென்பகுதி கடற்றொழிலாளர்களின் இக்கோரிக்கை குறித்து, யாழ்.கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களில் சமாக பிரதிநிதிகளிடம் கேட்டபோது, கொதித்தெழுந்த அவர்கள் தென்னிலங்கை கடற்றொழிலாளர்களை யாழ்.குடாக்கடலில் அனுமதிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்தனர்.
ஏற்கனவே பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள யாழ்.கடற்றெழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் இத்தகைய எந்தவொரு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை இறுதிவரை எதிர்த்து கடற்றொழிலாளர்களைத்  திரட்டிப் போராடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

நாடி ஜோதிடம்; பலர் நாடாத ஜோதிடம்!

Posted: 09 May 2012 08:58 AM PDT



நாடி ஜோதிடம்பற்றி எனக்கு படிப்பறிவு மட்டுமே. பட்டறிவு கிடையாது

அதைப் பற்றி எழுதும்படி சில வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.
எதற்கு சிரமம்?
வலையில் தேடியபோது ஒரு நல்ல கட்டுரை கிடைத்தது.
ஏனோ தானோ ஆள் எழுதியதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்காரர்கள்
நடத்தும் பத்திரிக்கையில் வந்தது.

அப்படியே கட் & பேஸ்ட்டாக இங்கே அதைப் பதிவிட்டிருக்காலாம்.
விருப்பமில்லை. காப்பி ரைட் பிரச்சினை வரும்!
ஆகவே செய்யவில்லை. சுட்டி கொடுத்திருக்கிறேன்.
விருப்பமானவர்கள் சென்று பாருங்கள்

சுட்டி!

ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத மகான்கள் அங்கே போகவேண்டாம்.
போய்ப் படித்துவிட்டு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.
அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காரைக்குடியில் ஒரு நாடி ஜோதிடர் முன்பு இருந்தார். என் சித்தப்பாவிற்குத்
தெரிந்தவர். அவர் பெயர் சாரி (Chari) காரைக்குடியில் உள்ள பெரிசுகளைக்
கேட்டால் கதைகளைச் சொல்வார்கள்.

வருகிறவனின் கட்டை விரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு
ஆளை அனுப்பிவிடுவாராம். அரை மணி நேரம் கழித்து வரச்சொல்வாராம்
வேறு ஒரு தகவலும் கேட்க மாட்டாராம்.

அரை மணி நேரம் கழித்துப்போனால். ஜாதகனின் பிறந்த நாள், பிறந்த நேரம்
ஆகியவற்றுடன் அச்சு அசலாக ஜாதகம் தயாராக இருக்குமாம்.

ஏட்டைப் படித்து பலன்களையும் சொல்வாராம்.

இப்போது அவர் இல்லை. சிவனடி சேர்ந்துவிட்டார்.

அது அவருக்கு எப்படி சாத்தியப்பட்டது எனக்கு இன்றும் புதிராக இருக்கிறது.

அதுபோல என் உறவினர் ஒருவர் வைத்தீஸ்வரன் கோவிலில் நாடி ஜோதிடம்
பார்த்தபோது, அவர்கள் அவருடைய பெயர், அவருடைய பெற்றோரின் பெயர்கள்
மற்றும் உடன் பிறந்த சகோதரிகளின் பெயர்கள் அனைத்தையும் எடுத்த ஏட்டின்
மூலம் சொல்லி அசர வைத்திருக்கிறார்கள்

இந்தியாவின் தலை சிறந்த ஜோதிடரான திரு.பி.வி.ராமன் அவர்கள் நாடி
ஜோதிடத்தைப் பற்றி ஒருமுறை குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர்கள்
நடந்த நிகழ்ச்சிகளை அசத்தலாக சொல்லி விடுகிறார்கள். எதிர்காலத்தைச்
சொல்வதில் சற்றுத் திணறுகிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எது எப்படியோ, எனக்கு அந்த வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை! கிட்டினால்
அவர்களைக் கிண்டிக் கிழங்கெடுத்து விடுவேன்:-))))))))

அதாவது அதைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டு வருவேன்!

மோகன்லால் வீட்டுக்கு திடீரென வ‌ந்த அமீர்கான் ..!!

Posted: 09 May 2012 08:56 AM PDT

இந்தி நடிகர் அமீர்கான் ஒருநாள் சுற்றுப்பயணமாக கேரளா சென்றார். தனது 'சத்யமேவ ஜெயதே' என்ற டி.வி. நிகழ்ச்சியை விளம்பரம் செய்வதற்காக இப்பயணத்தை மேற்கொண்டார். அப்போது கொச்சியில் உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வீட்டுக்கு திடீரென சென்றார்.

அமீர்கானை மோகன்லாலும், மலையாள நடிகர் திலீப்பும் வரவேற்றனர். மோகன்லால் வீட்டை அமீர்கான் சுற்றி பார்த்தார். வீட்டில் மோகன்லால் பழங்கால பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். அவற்றை வியப்போடு பார்த்தார். விருந்தும் சாப்பிட்டார்.

பின்னர் நீண்ட நேரம் இருவரும் மலையாள மற்றும் இந்தி திரையுலகம் பற்றி பேசிக் கொண்டு இருந்தனர். அதன்பிறகு அங்கிருந்து அமீர்கான் புறப்பட்டு சென்றார். அமீர்கானை காண மோகன்லால் வீட்டின் முன்னால் ஏராளமான ரசிகர்கள் திரண்டார்கள். அவர்களை பார்த்து கையசைத்தபடி சென்றார்.

இதுதான் சாமி உங்க ஆளு!

Posted: 09 May 2012 08:55 AM PDT

ஆடவர்களாக இருந்தால் - துணைவி அல்லது தோழி அல்லது காதலி.
வளைக்கரங்களாக இருந்தால் - துணைவன், நண்பன் அல்லது உள்ளம் கவர்ந்தவன்
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

அவரைப் பற்றி ஒரு சொல்லில் தெரிந்து கொள்ள வேண்டுமா?

வழியிருக்கிறது!

அவருடைய ராசி என்னவென்று தெரியுமா?

தெரியாதா?

பதிவை விட்டு விலகுங்கள்!

அதைத் தெரிந்து கொண்டு வாருங்கள்.

அதைக் கூடத் தெரிந்து வைத்துக்கொள்ளாமல், என்ன பிறவி நீங்கள்?

தெரியுமா?

நீங்கள்தான் நாட்டிற்குத் தேவையானவர்

Scroll down செய்து பாருங்கள்!





1 மேஷம்



2 ரிஷபம்



3 மிதுனம்



4 கடகம்



5 சிம்மம்



6 கன்னி



7 துலாம்



8 விருச்சிகம்



9 தனுசு




10 மகரம்



11 கும்பம்



12 மீனம்
====================================================================

"வாத்தியாரே, ஒன்னு கேட்கலாமா?"

"கேளு ராசா!"

"பதிவிற்கும், ரஜினிகாந்த் படத்திற்கும் என்னய்யா சம்பந்தம்?"

"பதிவுன்னா, படம் போட்டாத்தானே ராசா நல்லாயிருக்கும். நம்ம மக்களுக்குப்
பிடிச்சவாராச்சே அப்படீன்ன்னு செல்வி.நமீதா படத்தைத்தான் முதல்ல பதிவில
போடறதா இருந்தேன். படமும், தலைப்பும் சேர்ந்து பதிவை வலையேற்றிய
ஒரு மணி நேரத்துக்குள்ளயே சூடான இடுகைக்குக் கொண்டுபோற அபாயம்
இருந்ததால அதைக் கைவிட்டு விட்டேன்!"

"சரி, வேற யாருடைய படத்தையாவது போட்டிருக்கலாம்ல? எதுக்கு ரஜினியோட
படம். அதுவும் ஒவ்வொரு தடவையும்?"

"எனக்குத் தெரிந்து நடிகர்கள்ள அவர் ஒருத்தர்தான் சாமி தீவிர இறை நம்பிக்கை
உடையவாரக இருக்கிறார். அதோட அவர். சிம்ம லக்கினம். திருவோண நட்சத்திரம்.
நானும் சிம்ம லக்கினம், திருவோண நட்சத்திரம். ஒரு பாசந்தான் - ஹிஹி..ஹி..வேறென்ன?

காஞ்சியை கலக்கும் "ஏழு தலை நாகம்' புகைப்படம்

Posted: 09 May 2012 08:55 AM PDT

காஞ்சிபுரம் அருகே ஏழு தலை பாம்பு பிடிபட்டதாக பரவிய வதந்தியைத் தொடர்ந்து, சாலையில் ஏழு தலையுடன் கூடிய பாம்பு படமெடுத்து ஆடுவது போல், கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்ட புகைப்படம், அலைபேசி மூலம் வேகமாக பரவி வருகிறது.

காஞ்சிபுரத்தில் கடந்த மாதம், இரவில் ரத்தக்காட்டேரி உலா வருவதாகவும், அது, வீட்டிற்குள் நுழைவதை தடுக்க, நுழைவு வாயிலில், "இன்று போய் நாளை வா' என, சிகப்பு வண்ணத்தில் எழுதி வைக்க வேண்டும், எனவும் வதந்தி பரவியது. அதை நம்பி, ஏராளமானோர் தங்கள் வீடுகளில், சூலம் படம் வரைந்து, "இன்று போய் நாளை வா' என, சிகப்பு வண்ணத்தில் எழுதி வைத்தனர். சிலர் மனித முகத்தை படமாக வரைந்து வைத்தனர். சிலர், 'ஸ்வஸ்திக்' குறியீட்டை வரைந்து வைத்தனர்.

ஏழு தலை நாகம்: அடுத்த கட்டமாக, ஏழு தலை நாகம் உலா வருவதாக வதந்தி பரவத் துவங்கி உள்ளது. கடந்த வாரம் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில், ஏழு தலை நாகம் வந்ததாகவும், அதை சிலர் புகைப்படம் எடுத்ததாகவும், அதன்பிறகு அந்த நாகம் மறைந்துவிட்டதாகவும் தகவல் பரவியது. தகவல் கூறியவர்களிடம், நீங்கள் பார்த்தீர்களா எனக் கேட்டால், "நான் பார்க்கவில்லை, என் நண்பன் சொன்னான்' என்றனர். அவர்களைக் கேட்டாலும், அதே தகவலை தெரிவித்தனர். நேரில் பார்த்தவர்கள் உண்டா என விசாரித்தால், யாரும் இல்லை.

"கிராபிக்ஸ்' படம்: இச்சூழலில், ஏழு தலை நாகம் படமெடுத்து ஆடுவதை, புகைப்படம் எடுத்துள்ளதாகக் கூறி, "புளூடூத்' மூலம் சிலர் அலைபேசிகளுக்கு அனுப்பி வருகின்றனர். அவ்வாறு அனுப்பப்பட்ட படத்தை வாங்கி, கணினி வல்லுனர்களிடம் காண்பித்தபோது, "கிராபிக்ஸ்' உதவியுடன், சாலையோரம் ஏழு தலை பாம்பு படமெடுத்திருப்பதைப் போல் வடிவமைத்து, உலவ விட்டிருப்பது தெரிய வந்தது. 

இப்படம் தற்போது காஞ்சிபுரம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. இப்படத்தை சிலர் உண்மை என நம்பி, தங்களுக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்பி வருகின்றனர். அவர்களிடம் இது கிராபிக்ஸ் எனக் கூறினாலும், நம்ப மறுக்கின்றனர். "கலிகாலம் முடிவடைய உள்ளதால், ஏழு தலை நாகம் வெளியில் வரத் துவங்கிவிட்டது. பலர் நேரில் பார்த்துள்ளனர். நீங்கள் கூறுவது தான் பொய்' எனக் கூறி, உண்மையை கூறுவோரின் வாயை அடக்குகின்றனர். இதுபோன்ற நபர்களால், காஞ்சிபுரம் நகரில், "ஏழு தலை நாகம்' புகைப்படம், வேகமாகப் பரவி வருகிறது.

பள்ளிக்கூட நகைச்சுவைகள்

Posted: 09 May 2012 08:56 AM PDT





பள்ளிக்கூட நகைச்சுவைகள்

காட்சி 1

நகரப் பேருந்து. பள்ளிக்கூட வாத்தியார் ஒருவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தார்.

உள்ளே நல்ல கூட்டம். நெருக்கடி.

பல கல்லூரிக் காளைகள் படியில் தொற்றிப் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.

படி எதிரே உள்ள ஒரு எழுத்து வாசகம் மிக அழகாக படிப்பயணத்தை
எச்சரிக்கை செய்து கொண்டிருந்தது.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!

அதையும் மீறிப் படியில் பயணிப்பவர்களை, நடத்துனர் எச்சரிக்கை செய்தும்,
அவர்கள் கேட்டபாடில்லை. கோபம் கொண்ட அவர் கிண்டலாக இப்படிச்
சொன்னார்.

"என்னம்மா கண்ணுங்களா, எல்லாரும் வீட்டில சொல்லிட்டு வந்திட்டீங்களா?"

அவர்கள் சளைத்தவர்களா?

அதில் ஒருவன் சொன்னான்,"ஆ...சொல்லாம வருவமா? சொல்லிட்டுத்தான்
வந்திருக்கோம். பின்னாடிப் பாரு நம்மளை பாலோ பண்ணி வந்திக்கிட்டிருக்கில்ல
ஆம்புலன்ஸ் அதுவும் நாங்க சொல்லித்தான் பின்னாடி வந்திக்கிட்டிருக்கு!"

உடனே நடத்துனர் அதிரடியாக இப்ப்டிச் சொன்னார்:

"ஓ, அப்ப சங்கு ஊதுரவனுக்கு மட்டும் சொன்னாப் போதும் - இல்லையா?"

பேருந்தில் கொல்லென்று சிரிப்பு

அடடா! என்னே நகைச்சுவை உணர்வு.
---------------------------------
காட்சி 2

ஒவ்வொரு நாளும் காலையில், வகுப்புத் துவங்கு முன்பாக கரும்பலகையில்
பொன்மொழி ஒன்றை அல்லது மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் வாசகம்
ஒன்றை எழுதி வைக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர் உத்தரவு
போட்டிருந்தார்.

தினம் ஒரு பொன்மொழியா - அதற்கு எங்கே போவது என்று வகுப்பு
ஆசிரியர் கவலையில் மூழ்கினார்.

அவர் வகுப்புக் கண்மணி ஒருவன், "சார் கவலைப் படாதீர்கள். உங்கள்
பிரச்சினையைத் தீர்த்து வைக்கிறேன்" என்று புது மண்டபத்தில் உள்ள
பழைய புத்தகக் கடையில் இருந்து பொன்மொழிக்களஞ்சியம் என்ற புத்தகம்
ஒன்றை வாங்கிக் கொடுத்தான். அதிலிருந்து தினம் ஒன்றைப் படித்து
அல்லது பிடித்துக் கரும்பலகையில் எழுதிச் சமாளித்து விடுவதை
அவர் வழக்கமாக்கிக் கொண்டார்.

அன்று போதாத காலம் குறித்துக் கொண்டு வரவில்லை.

என்ன செய்யலாம் என்று வாத்தியார் யோசித்தார்
.
பேருந்தில் படித்த வாசகம் நினைவிற்கு வர, அதையே எழுதிவிட்டார்.

"படியில் பயணம்
நொடியில் மரணம்!
----------------------------
காட்சி 3

தலைமை ஆசிரியர் அழைத்திருந்ததால், அவரைப் பார்த்துவிட்டு ஐந்து
நிமிடங்களில் வகுப்பிற்குத் திரும்பி வந்தார் வாத்தியார்
.
என்ன நினைத்தாரோ அது நடந்து விட்டது!

எவனோ ஒரு கண்மணி, அவர் எழுதியிருந்த அந்த வாசகங்களுக்கு கீழே
அடிக்குறிப்பு ஒன்றை எழுதி விட்டான்!

நீங்களே பாருங்கள்:

"படியில் பயணம்
நொடியில் மரணம் :

"பிடியில் கவனம்
போகுமே மரணம்!"

அதாவது நல்லாக் கம்பியைக் கெட்டியாப் பிடித்துக்கொண்டு படியில் பயணம் செய்!
எப்படி மரணம் வரும்? வந்தாலும், பிடித்திருக்கும் பிடியைப் பார்த்துவிட்டு அது
ஓடிப்போய்விடும் என்று பொருள்பட மாணவன் எழுதியிருந்தான்.

இது போல எது செய்தாலும் அதுக்கொரு அடிக்குறிப்பு வைத்திருக்கிற
மாணவர்களை வைத்துக் கொண்டு ஒரு வாத்தியார் எப்படிப் பாடம் நடத்துவார்?
நீங்களே சொல்லுங்கள்!

காட்சி 4

தலைமை ஆசிரியர் சொன்ன தீர்ப்பு!

வகுப்பில் வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, காச்சு மூச்சென்று
ஒரே சத்தம்!

அந்தப் பக்கம் சென்று கொண்டிருந்த தலைமை ஆசிரியர் அதைக்கேட்டு,
திடிரென்று வகுப்பிற்குள் நுழைந்து விட்டார்.

கப் சிப்பென்று சப்த நாடிகளும் ஒடுங்க, சப்தம் ஒரே வினாடியில் அடங்கி விட்டது

எல்லாப் பையன்களும் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் சொன்னார்கள்.
அதெல்லாம் சரியாகச் செய்து விடுவார்கள்.

கலாய்ப்பது வகுப்பு ஆசிரியரை மட்டும்தான்!

தலைமை ஆசிரியர் கணீரென்று குரல் கொடுத்துக் கேட்டார்

"என்னய்யா சண்டை? ஒரே சத்தமாக இருக்கிறது?"

"அதெல்லாம் ஒரு சண்டையும் இல்லை சார்! விவாத மேடை வகுப்பு - அதான்
பிள்ளை களோடு சேர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தேன்" என்றார் வாத்தியார்

உடனே தலைமை ஆசிரியர் கேட்டார், "தலைப்பு என்ன?"

"தலைப்பு பெரிசா ஒன்னுமில்லை சார்! சண்டைங்கிற சொல்லிற்கு இரண்டு சுழி 'ன'
போடுவதா அல்லது மூன்று சுழி 'ண' என்பது பற்றித்தான் விவாதம்"

"இதில் விவாதிப்பதற்கு என்ன இருக்கிறது? சின்னச் சண்டையாக இருந்தால்
இரண்டு சுழி 'ன' போடுங்கள் - அதுவே பெரிய சண்டையாக இருந்தால் மூன்று
சுழி 'ண' போடுங்கள்!" என்று சொன்னவர், டக் கென்று வகுப்பை விட்டு
வெளியேறி விட்டார்