தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


மெழுகுவர்த்தி எரிகின்றது...

Posted: 08 May 2012 07:02 PM PDT

மெழுகுவர்த்தி எரிகின்றது...

திரியோ தீயாய் எரிந்து சாம்பலாக - சாம்பலாகுமுன் ஒளியைத் தந்து
மெழுகோ உடன் உருக - உருகி எரிவது இரண்டும் தான்
ஈன்ற உயிரினை - உயர்வாய் காணவென்று
உயிர்தனைக் கொடுத்து - வாழும் உயரிய
உயிர்கள் - அன்னையும் தந்தையும்
உன்னத உயிர்கள் தாமென
உணராமல் - உணர்ந்தும்
உணராமல் ஈனமாய்ப்
போவதேனோ?

(இது இன்று நடப்பில் நாம் காண்பதுவே)

அன்றைய ரோஜா .""" """

Posted: 08 May 2012 06:56 PM PDT

உனக்காக தினமும் என் கரத்தில் ரோஜாவை வைத்து காத்து கொண்டு இருப்பேன் உன்னிடத்தில் என் காதலை சொல்ல. என் கரத்தை தாண்டி உன் கரத்தை தீண்ட துடித்து கொண்டு இருக்கும் ரோஜாவை உன்னை கண்டதும் மறைத்து விடுவேன். இன்றாவது பூவை தந்து காதலை சொல்ல தயங்கும் என் மனதை கண்டு சிரிக்கும் கடவுளுக்கு அதை காணிக்கையாக தந்து விடுவேன். தினமும் அதை ... கடவுளுக்கு கண்ணீர் விட்டு தன் குடும்ப கஷ்டத்தை சொல்லும் கருப்பாயி பாட்டி பூக்கடையில் எனது ரோஜாதான் அன்றைய வருமானம். உன்னிடத்தில் என் காதலை சொல்ல வில்லை ...

முயற்சியும் திருவினையும் !!!

Posted: 08 May 2012 06:49 PM PDT

சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான உரையாடலைக் எங்கள் அலுவலகத்தில் கேட்டேன்.எங்கள் மேலாளருக்கும், உதவி மேலாளருக்கும் நடந்த உரையாடல் அது. "முயற்சிக்கிறதுன்னு எதுவுமே கிடையாது. ஒண்ணு நாளைக்குப் பண்றேன்னு சொல்லு. இல்லே நாளைக்கு பண்ண மாட்டேன்னு சொல்லு." "அதெப்படி சார் சொல்ல முடியும்? பெரிய ஸ்டேட்மென்ட் அது. ஆறு சப்ளையர்ஸ் இருக்காங்க. பனிரெண்டு நார்ம்ஸ் இருக்கு. ஒவ்வொரு நார்ம்ச்க்கும் மூணு லெவல்ஸ் இருக்கு. எத்தனை பாசிபிளிடிஸ் தெரியுமா?" "அப்ப நாளைக்கு முடியாதுன்னு சொல்லு" "முடியாதுன்னும் ...

அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்

Posted: 08 May 2012 06:36 PM PDT

கோட்டயம் :முல்லைப் பெரியாறு அணை குறித்து ஆராய, உச்ச நீதிமன்றம் நியமித்த உயர்மட்டக்குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையில், "கேரளாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை' என, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜெ.ஜோசப் தெரிவித்திருந்தார். இதற்கு உயர்மட்டக்குழுவில் கேரளா தரப்பு பிரதிநிதியாக இடம் பெற்ற நீதிபதி கே.டி.தாமஸ், "அமைச்சர் சொன்னபடி நடப்பதற்காக, உயர்மட்டக்குழுவில் என்னை நியமிக்கவில்லை' என பதிலடி கொடுத்துள்ளார். தமிழக - கேரள எல்லையை ஒட்டி, 119 ஆண்டு பழமையான முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த அணை ...

ஈகரையில் இருந்து வந்தார் 'பெரியவர்' ஒருவர்...

Posted: 08 May 2012 05:36 PM PDT

வணக்கம். கடந்த ஒரு மாத காலமாக என்னால் ஈகரையுடன் இணைய முடியாமல் சிறு சிறு தொடர் தொழில்சார் பணிகள். இந்த வேளையில் இன்ப அதிர்ச்சி எனக்கு நேர்ந்தது ஈகரை மூலம். கண்கள் விரிய உங்கள் புத்திக்குள் புயலாய்க் கேள்விகள் சுழன்று எழுந்து பதில் தேடி பாடாய்ப் படுத்தும்.தெரியும். ஓர் ஏப்ரல் மாதத்துக் காலையில் எனக்கு நான் அறிந்திராத ஓர் எண்ணில் இருந்து என் கைபேசிக்கு அழைப்பொன்று வர,எடுத்துப் பேசினால்..."வணக்கம் ரா.ரா...நான் '......'..."...அந்த பெயரைக் கேட்டதும் அதிர்ந்தேன் ஆனந்தத்தில்.சந்திக்க வேண்டும் ...

5000 பதிவுகள் கடந்த இனியவன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Posted: 08 May 2012 05:00 PM PDT

. 5000 பதிவுகள் கடந்த ஈகரையின் பதிவு சுறாவளி இனியவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் . இன்னும் பல இலட்சம் பதிவுகள் இட , மதிப்பீடுகள் பெற வாழ்த்துக்கள் .

இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Posted: 08 May 2012 04:55 PM PDT

இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக நாம நல்லா படிக்க பெத்தவங்க ரொம்பவே கஷ்டப் படறாங்க நாம நம்ம பெத்தவங்களுக்காக படிக்க ரொம்பவே கஷ்டப் படறோம். இஷ்டப் பட்டத கஷ்டப் பட்டு செஞ்சாதான் கஷ்டப் படரதொட முழுப் பலனையும் கஷ்டப் படாம இஷ்டப் பட்டு அனுபவிக்க முடியும். சரிதானுங்களே? நா என்ன சொல்ல வரேன்னா இஷ்டப் படரத முதலில் கண்டுபிடிங்க அப்புறம் அத கஷ்டப் பட்டு செய்யுங்க நீங்க இஷ்டப் படர மாதிரி இஷ்டப் படறது எதுவுமே கஷ்டமா இருக்காதுங்க. அப்புறம் நீங்க இஷ்டப் பட்டதில் கஷ்டப் படாமலே ...

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன்...

Posted: 08 May 2012 04:52 PM PDT

இன்று இறக்கும் தருவாய் வந்துவிட்டதென உணரத் துவங்கினேன். இறக்கும் முன் உங்களிடம் ஒரு வார்த்தை பேசி விடலாமேன்னு தான் இதை எழுதினேன். கண்ண மூடுறதுக்கு முன்னாடி உங்களிடம் ஒரு வார்த்தையாவது பேசிடனூன்னு உதடுகள் துடித்தது. இன்று முழுவதும் ஓடி ஆடி வேலை செய்து களைத்திருந்தேன். கண்கள் சொருகி இமை திறக்கக் கூட முடியாமல் இருந்தேன். தலை முடி கலைந்து காணவே சகிக்காமல் இருந்தேன். கால்கள் ஒரு புறமும் கைகள் மற்றொரு புறமும் இழுத்தன. மின்சாரம் வேறு இல்லாததால் வேர்த்துக் கொட்டியது. மேல் மூச்சு ...

காணாமல் போன நண்பரின் கதை

Posted: 08 May 2012 04:50 PM PDT

காணாமல் போன நண்பரின் கதை நாமறிந்த நண்பர் ஒருவர் திடீரென காணாமல் போய் விட்டார். ஒருவருக்கும் சொல்லாமல் ஏன் இப்படி செய்தார் என்று இல்லாத மூளையை கசக்கியா சிந்திக்க முடியும்? ஏற்கனவே தலை சூடானா முடி கொட்டும்ன்னு சொல்றாங்க - நமக்கேன் வம்புன்னு எப்பவும் போல சும்மா இருந்துட்டேன். தோணுமே தோணுமே உங்களுக்கு நக்கலா? கல்யாணம் ஆயிடுச்சுன்னா சும்மா இருந்து தான ஆவணும் - ஆமாஞ்சாமி போட்டுட்டுன்னு. கல்யாணம் ஆகாத சிங்கக் குட்டிகளெல்லாம் சிரிக்காதீங்க - தில்லிருந்தா சாரி மூளை இல்லாமா கல்யாணத்த கட்டி ...

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும்

Posted: 08 May 2012 04:49 PM PDT

தமிழக பூனைப் படையும் - மாஞ்சா மர்மமும் சென்னையில் பட்டம் விடும் சீசன் துவங்கி விட்டது. போன வருஷம் சீசன் ரொம்ப மந்தமாக இருந்தது - காரணம் போலீஸ் மாஞ்சாவை தடை செய்து மாஞ்சா தயாரிப்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் கைது செய்து மிரட்டி வைத்திருந்தார்கள். இந்த வருஷமும் அப்படித்தான் இருக்குமென்று எதிர்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. எங்கு பார்த்தாலும் பட்டம் பறந்தது - பட்டம் விடுபவர்கள் ஒரே குதூகலத்தில் திளைத்தார்கள். காரணம் அறியாது போலீஸ் தனது பூனைப் படையை ஏவி இதன் காரணத்தை ...

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள்

Posted: 08 May 2012 04:45 PM PDT

கிருஷ்ணாம்மா வீட்டு நிச்சயதார்த்த கலாட்டாக்கள் கிருஷ்ணாப்பா: சீக்கிரம் கிளம்புங்க நாழி ஆயிட்டிருக்கு மண்டபத்துல அவால்லாம் வெயிட் பண்ணின்றுப்பா. கிருஷ்ணாம்மா: வெயிட் பண்ணட்டுமே - வெயிட் பண்ணினாதான் வெயிட்டா போறதில மதிப்பா இருக்கும்ன்னா. கிருஷ்ணா: தனக்குள் - என்ன கொடுமைடா இது - நம்ம அவசரம் புரியாம இவா பேசிண்டே இருக்கா. ஒரு வழியா கிருஷ்ணாவின் அவசரம் புரிந்தும் புரியாமலும் வந்து சேர்ந்தாங்க நம்ம நால்வராக போகும் மூவர் குடும்பம் மண்டபத்துக்கு. கிருஷ்ணாம்மா: டிபன் எல்லாம் ரெடி ஆயிடித்தோன்னோ? கிருஷ்ணாப்பா: ...

பாவாடை, தாவணி கலாசாரம் திரும்புகிறது: தமிழ்நாட்டு இளம்பெண்களுக்கு அதிக ஆர்வம்

Posted: 08 May 2012 12:23 PM PDT

தமிழ்நாட்டின் இளம் பெண்களுக்கு பாரம்பரிய உடையான பாவாடை, தாவணி காலாசாரம் மீண்டும் திரும்பியுள்ளது. இப்போது வரும் திரைப்படங்களில்கூட கதாநாயகிகள் அந்தகாலத்தைப்போல பாவாடை, தாவணி அணிந்து காட்சி அளிக்கிறார்கள். நவநாகரீக உடைகள் கடந்த பல ஆண்டுகள் முன்புவரை, தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டில் இளம் பெண்கள், முதலில் பாவாடை, தாவணி அணிவதும், சற்று வயது கூடியதும் தொடர்ந்து காலமெல்லாம் சேலை அணிவதும்தான் வழக்கமாக இருந்தது. நாகரீக உலகில் பாவாடை, தாவணிக்கு பதிலாக, ஏன் இளம் பெண்கள் சேலை ...

எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா

Posted: 08 May 2012 10:38 AM PDT

ஐரோப்பிய தமிழ் தொலைககாட்சியில் வெளியிட எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்....


ஈவண்ட்ஸ் manegment க்குரிய விளம்பரம்.

கேட்டரிக்ங் பார்ட்டி சேவிஸ், டெக்கரேசன், கேக் அலங்காரம் விழாவுக்கான முழு ஒழுங்குகளும் அமைத்து கொடுக்க படும்.

எப்படி
எங்கே
யார்முலம்
செலவாகும் தொகை

போன்ற விபரம் தெரிந்தவர்கள், அல்லது ஈகரையில் அது சம்பந்தமான துறையிலிருப்பவர்கள் உதவி வேண்டும்.

ஞான கர்ம சந்நியாச யோகம் !!!

Posted: 08 May 2012 10:18 AM PDT

கீதை 4 :1 இறைதூதர் கிருஷ்ணர் கூறினார் : நான் இந்த அழிவற்ற விஞ்ஞானமாகிய யோகமுறைகளை ஆதியிலே மனிதர்களின் தகப்பனான மண்ணு /மணுவிற்கு உபதேசித்தேன் !!! அவர் தமது மகனான இஷ்வாகிற்கு உபதேசித்தார் !! கீதை 4 :2 இந்த உண்ணதமான விஞ்ஞானம் வழிவழியாக சீடர்களின் பாராம்பரியத்தால் பெறப்பட்டு; ராஜரிஷிகளாகிய அரசர்களால் உணர்ந்து கடைபிடிக்க பட்டு வந்தது! இருப்பினும் நாளடைவில் இந்த பாராம்பரியம் உடைந்து இன்றைய தினம் காணப்படுவது போல இந்த உண்ணதமான விஞ்ஞானம் அறியப்படாமலேயே போயிற்று!!! கீதை 4 :3 உண்ணதமான கடவுளோடு இயைந்து ...

ஆன்மீக பகிர்வுகள் !!!

Posted: 08 May 2012 10:14 AM PDT

ஏகஇறைவனின் ராஜ்ஜியத்தை கட்டுகிற பணியிலுள்ள நாமும் உழைப்பாளர்களே! உலகம் முழுமையும் சமாதாணத்தை உண்டாக்குகிற இமாம்--வழிகாட்டி ஒருவர் நியாயத்தீர்ப்பு நாளுக்கு முன் வருவார் என்பது முகமதுவின் வெளிப்பாடு அந்த நபரை இந்தியாவிலிருந்து ---குறிப்பாக ஆதிமனித சமுதாயமான தமிழரிலிருந்தே வெளிப்படுத்தும்படி பிரார்திக்கிற முன்னோடிகள் என்ற பாக்கியத்தை பெற உழைக்கும்படி வேண்டுகிறேன்! கண்ணால்காணாததை உணர்கிறவரும் கடவுளின் செயல்பாட்டில் பங்கேற்போருமே பாக்கியசாலிகள்!! மஹாத்மா காந்தி அவர்களின் மூலமாக அந்த வாய்ப்பு ...

நிம்மதியா தூங்கணுமா? செல்போனை தலையணைக்கடியில் வைக்காதீங்க!

Posted: 08 May 2012 10:13 AM PDT

நிம்மதியா தூங்கணுமா? செல்போனை தலையணைக்கடியில் வைக்காதீங்க! சிலர் எப்போது பார்த்தாலும் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் செல்போல் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு. இந்த செயல் தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எம்.ஐ.டி மாணவர்கள் நடத்திய ஆய்வில் ...

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Posted: 08 May 2012 09:56 AM PDT

வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம். நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம். சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம். பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம். தெரிந்து கொள்வோம் குருவை! சொந்த வீடு - தனுசு, மீனம் உச்சராசி - கடகம் நீச்சராசி - மகரம் திசை - வடக்கு அதிதேவதை - பிரம்மா நிறம் ...

உதவுங்கள்...

Posted: 08 May 2012 09:49 AM PDT

உங்களுக்கு புது நட்பு அழைப்பு கிடைத்துள்ளது என்று ஈகரை முகப்பு பகுதியில் காட்டுகிறதே.. அது என்ன.. அதை கிளிக் செய்தால எதுவும் தெரியவில்லை.

உதவுங்கள்...

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Posted: 08 May 2012 09:48 AM PDT

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி மின் விளக்கின் வெளிச்சத்தில் எடிசன் முகம் ! இறந்தபின்னும் ஒலி எழுப்பும் விலங்கு மத்தளம் ! திட்டங்கள் கோடிகளில் ஏழைகள் தெருக் கோடியில் என்று விடியல் ? பாலியல் குற்றவாளி கொலைக் குற்றவாளி சாமியார்கள் ? தாமதமான நீதி அநீதி தண்டியுங்கள் விரைவில் இலங்கைக் கொடூரன் ! சரியாக ஆடும் ஆட்டத்தின் பெயரோ தப்பாட்டம் ! இதயத்தை இதமாக்கும் கோபத்தைக் குறைக்கும் இசை ! மனதை மலர்விக்கும் சிந்தையைச் செதுக்கும் கவிதை ! -- ...

வேலன்:-வியாபாரிகளுக்கான கால்குலெட்டர்.

Posted: 08 May 2012 09:41 AM PDT

விதவிதமான கால்குலேட்டர்கள் இருப்பினும் புதியதாக இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் வலதுபுறம் கீபோரட் இருக்கும் அதில் கணக்கினை நீங்கள் போட பக்கத்தில் உள்ள நோட்பேடில் விவரம் உங்களுக்கு கிடைக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். இதில் டெஸிமல் 0 விலிருந்து 9வரை கொண்டுவரலாம். மேலும வணிக நிறுவணங்கள் வரிபோடும் வசதிஉள்ளதால் இதில் உள்ள + டேக்ஸ் மற்றும் வரியை ...

அன்புத் தோழி

Posted: 08 May 2012 09:37 AM PDT

ஆயிரம் உறவுகள் அருகே இருந்தாலும்
உன் நட்பிற்கு இணையாவதில்லை
காரணமே இல்லாது அன்பு கொண்டு
உயிர்கொடுக்கும் உன் நட்பிற்காக
என் ஜென்மம் முழுதும் அடிமையாய் இருந்திடவா?

குமரி மாவட்ட டாஸ்மாக் கடைகளின் ஏப்ரல் மாத வருவாய் ரூ.54 கோடி

Posted: 08 May 2012 09:36 AM PDT

குமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.54 கோடிக்கு மது வகைகள் விற்பனையாகியுள்ளன. குமரி மாவட்டத்தில் 147 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. நகர பகுதிகள் மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குமரி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் பெருமளவு குறையவில்லை. பிராந்தி, பீர் வகைகள் பெட்டி, பெட்டியாக காலியாகின. பிராந்தி வகைகளை விட பீர் வகைகளின் விற்பனை படுஜோராக உள்ளது. புதுப்புது சுவைகளில் ...

டுவீட்டர் அக்கவுண்டை எவ்வாறு டெலிட் செய்வது

Posted: 08 May 2012 09:36 AM PDT

எனக்கு டுவிட்டர் அக்கவுன்டிலிருந்து நிமிடத்திற்க்கு ஒரு குறுன்செய்தியாக வருகிறது அதனை நிறுத்த வேண்டும் , நான் கஸ்டமர்ஸ் கெரின் உதவியை நாடினேன் எந்த பயனும் இல்லை சரி டுவிட்டர் அக்கவுண்டை டெலிட் செய்துவிடலாம் என்றாலும் அது முடிய வில்லை, அக்கவுண்ட் உள்நூழைய முடியவில்லை யாரவது உதவுங்களேன்

ஹிஷாலீ ஹைக்கூ

Posted: 08 May 2012 09:33 AM PDT

கண்ணீர் துளிகள் மறு மழை வியர்வை துளிகள் மணக்கோலத்தில் சிலை விதியின் பிழை முதிர் கன்னி கரு சிதைந்தாலும் மரணத்தை தின்று ஜனனத்தை வெல்கிறாள் இசைக்கு ஆராதனை பல்லவி கண் காது வாய் இருந்தும் இல்லாததுபோல் வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் ஒளிந்திருந்த ஜாதிகள் உயிருட்டம் பெற்றது உதவி தொகையால் சிறப்புக் கட்டணத்தில் விலை போகும் பூசாரிகள் வேடிக்கை சாமிகள்

எறும்புகளின் அழகிய உலகம் – புகைப்படங்கள்

Posted: 08 May 2012 09:30 AM PDT

ரஷ்ய புகைப்பட காரர் Andrey Pavlov என்பவரால் எடுக்கப்பட்டு பின்னர் போட்டோஷாப்பால் வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இப்புகைப்படங்களில் தோன்றும் அனைத்து எறும்புகளும் நிஜமானவை. ஆனால் சில தருணங்களில் இறந்த எறும்புக்களின் உருவங்களையும் பயன்படுத்தியுள்ளார். எறும்புகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் இவர், இந்த எறும்புகள் வேலை செய்யும் போது வித்தியாசமான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். எறும்புக்களின் நடத்தைகளை துல்லியமாக படம்பிடிப்பதற்காக சில Stage செட்டுக்களையும் ...

தகவல்கள் ஆயிரம்

Posted: 08 May 2012 09:27 AM PDT

மொத்த இந்தியாவிலேயே பின் கோட்டில் ( Pin Code ) அதிக எங்களை கொண்ட ஒரு நகரம் நம்ம சென்னைதான் என்றால் பார்த்துகொள்ளுங்கள் . ஒருசில பிரபலமான நகரங்களின் பின் கொடுகளைமட்டும் தருகிறேன் சென்னை ( 600001 --- 600098 ) பம்பாய் ( 400001 --- 400093 ) . கல்கத்தா ( 700001 --- 700070 ) . டெல்லி ( 110001 --- 110062 ) . தாமரை பூ - மயக்கும் தன்மை கொண்டதாம் அசோக பூ - ஸ்தம்பிக்கச் செய்தல் தன்மை கொண்டதாம் மா பூ - வற்றச் செய்தல் தன்மை கொண்டதாம் நவமல்லிகா பூ - பைத்தியமாக்குதல் தன்மை கொண்டதாம் நீலோற்பலம் ...

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

Posted: 08 May 2012 09:26 AM PDT

குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது – முதற்பகுதி ஒரு நாள் நிகழ்ச்சி - அகவல் - 1 . காலை மலர்ந்தது இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை. ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல், நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது. தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது. புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில் மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள். விளக்கம்: காலைக் கதிரவனின் கதிர்கள் கிழக்குத்திசையில் இன்னும் வரவில்லை. இருள் என்ற ...

தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…?

Posted: 08 May 2012 09:20 AM PDT

வெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் ...

நீரிழிவு நோய் இருக்கா? கோவைக்காய் சாப்பிடுங்க...

Posted: 08 May 2012 09:18 AM PDT

நீரிழிவு நோய் இருக்கா? கோவைக்காய் சாப்பிடுங்க... இன்றைய தலைமுறையினர் நீரிழிவு நோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு நாம் நமது உணவு பழக்கவழக்கத்தில் சிறிது கவனம் செலுத்தினால் போதும். இந்த நோயிலிருந்து ஈஸியா தப்பிக்க கோவைக்காய் சாப்பிட்டா போதும். கோவைக்காயை நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள். அவர்கள் நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் கொண்டால் ...

காற்று எரிபொருளில் இயங்கும் கார்: வெற்றிகரமாக சோதனை செய்த டாடா

Posted: 08 May 2012 08:56 AM PDT

காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் 2 கான்செப்ட் கார்களை டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எலக்ட்ரிக் தவிர்த்து மாற்று எரிபொருள் கார்களை உருவாக்கும் வகையில், கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனமான எம்டிஐ நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 2 கட்டமாக புதிய காரை வடிவமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, ...

சேலம், நாமக்கல்லில் தங்கம் இருக்கிறதா? கனிமவளத்துறை ஆய்வு

Posted: 08 May 2012 08:55 AM PDT

சேலம் மாவட்டம் சுண்ணாம்பு கரடு மலை மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் மாலிப்டினம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய கனிம ஆய்வுப்பிரிவு ஆய்வு நடத்தி வருகிறது. தமிழகத்தில் பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக்கல், மேக்னசைட், பெல்ஸ்பர், குவார்ட்ஸ், கன கனிம மணல், இரும்புத்தாது, மாலிப்டினைட், கிராபைட், வெர்மிகுலைட், கச்சா எண்ணெய், கருப்பு மற்றும் பல வண்ண கிரானைட் கற்படிவுகள் உள்ளிட்ட கனிமங்கள் கிடைத்து வருகின்றன.இத்தகைய கனிமங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல், ...

அஞ்சலியையும் இப்படி ஆக்கிட்டீங்களே

Posted: 08 May 2012 08:43 AM PDT

அங்காடித்தெரு நாயகி அஞ்சலி இப்போதெல்லாம் தனது முழு நேரத்தையும் உடற்பயிற்சி மையத்திலேயே செலவிடுகிறார். ஏன் என்று கேட்டால், முருகதாஸின் அடுத்த படத்தில் கல்லூரி மாணவியாக நடிப்பதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு நடவடிக்கையாம். சுந்தர் சி இயக்கிய கலகலப்பு படத்தில் நடிக்க போட்டிருந்த கூடுதல் எடையையும் சேர்த்து குறைக்க வேண்டியிருப்பதால் தற்போது கடின உடற்பயிற்சியில் உள்ளார் அஞ்சலி. தற்போது தமிழில் ஆர்யாவுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடிக்க உள்ள அஞ்சலி, தெலுங்கில் வெங்கடேஷுடன் ஒரு படத்தில் ...

தூங்க முடியாமல் தவிக்கிறேன்... பாதுகாவலர்கள் கொல்லப்பட்டது குறித்து அலெக்ஸ் பால் மேனன்

Posted: 08 May 2012 08:36 AM PDT

மாவோயிஸ்டுகளால் எனது பாதுகாவலர்கள் அம்ஜத் மற்றும் கிஷன் ஆகியோர் கொல்லப்பட்டதால் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. என் மீது பாசம் வைத்திருந்த இருவரையும் இழந்ததால் நிம்மதியில்லாமல் தவிக்கிறேன், மிகவும் நொறுங்கிப் போயுள்ளேன் என்று கூறியுள்ளார் மாவோயிஸ்டுகளின் பிடியிலிருந்து மீண்டுள்ள சட்டிஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டரான அலெக்ஸ் பால் மேனன். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது... நான் பத்திரமாக திரும்பி வந்து விட்டேன். மீண்டெழ முயற்சித்து வருகிறேன். இருந்தாலும் இன்னும் ...

குட்டீஸ் எப்பவும் கம்யூட்டர் முன்னாடியே இருக்காங்களா?- கவனச் சிதறல் வரும்!

Posted: 08 May 2012 08:20 AM PDT

அக்னி நட்சத்திர வெயிலில் வெளியே போய் விளையாடாமல் வீட்டில் டிவியும், கம்யூட்டருமே பழியாக கிடக்கின்றனரா உங்கள் குழந்தைகள் உடனடியாக அவர்களுக்கு வேறு விளையாட்டுக்களை அறிமுகம் செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் குழந்தைகளுக்கு அட்டென்சன் டிசார்டர் எனப்படும் கவனச் சிதறல் நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பள்ளி விடுமுறை விட்ட நாள் முதலே கம்யூட்டரில் ரைம்ஸ், கேம்ஸ் என புகுந்து விளையாடுகின்றனர் குட்டீஸ்கள். யூ டியூப்பில் ரைம்ஸ் எல்லாமே கோடியை தாண்டி ஹிட்டடிக்கின்றன. குழந்தைகள் வெளியில் ...

சிம்மாசனம் என்று எப்படி பெயர் வந்தது தெரியுமா?

Posted: 08 May 2012 07:52 AM PDT

பக்த பிரகாலாதனுக்கு அருள்புரியவும், அசுர குலத்தை சேர்ந்த மாபெரும் சக்கரவர்த்தியான அவனது தந்தை இரண்ய கசிபுவிடமிருந்து இந்த உலகத்தை காப்பாற்றுவதற்காகவும் தூணிலிருந்து அவதாரம் எடுத்தவர் நரசிம்மர். இரண்யகசிபுவிற்கு பிறகு அவனது ஆசனத்தில் அமர்ந்து கொண்டு பிரகலாதனை மடியில் அமர்த்தி அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார் பகவான் நரசிம்மர். அப்போது பிரகலாதன் சொன்னான்,லட்சுமி நரசிம்மா! அரசர்கள் எதில் அமர்ந்து ஆட்சி செய்வார்களோ, அந்த இருக்கைக்கு பெயர் நிருபாசனம் (ராஜா ஆசனம்) ஆகும். நிருபன் என்றால் ராஜா. ...

பார்ரவையாளர்கள் முன்னிலையில் இயந்திர மனிதனாக மாறிய பெண்! (வீடியோ இணைப்பு)

Posted: 08 May 2012 07:48 AM PDT

இயந்திர மனிதர்களை அறிமுகப்படுத்தும் விழா ஒன்று கொங்கொங் நாட்டில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் இடம்பெற்றது. இக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர். அவர்களை சந்தோசப்படுத்தும் விதமாக அங்கு பிரசன்னமாகியிருந்த பெண் ஒருவர் அழகிய குரலில் பாட்டுப்படாடி அசத்திக்கொண்டிருந்தார். இப்பெண்ணை பார்வையுற்ற அனைவரும் இயந்திர மனிதன் என்று நினைத்து விட்டார்களாம் என்றால் பாருங்களேன்! நன்றி யாழ்

ஒரிசா: எஸ்.ஐயை கடத்திச் சென்று சுட்டுக் கொன்ற மாவோயிஸ்டுகள்!

Posted: 08 May 2012 07:47 AM PDT

ஒரிசாவில் இன்று காலை கடத்தப்பட்ட துணை சப்-இன்ஸ்பெக்டர் க்ருபாராம் மாஜ்ஹியை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஒரிசா மாநிலம் நவ்பதா மாவட்டத்தில் உள்ள தர்ம்பந்தாவில் பணிபுரியும் துணை சப்-இன்ஸ்பெக்டர் க்ருபாராம் மாஜ்ஹி இன்று காலை 10 மணி அளவில் உள்ளூர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது அவரை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றனர். வழக்கமாக கடத்தியவரை வைத்துக்கொண்டு அரசிடம் பேரம் பேசுவது போல் செய்யாமல் க்ருபாராமை சுட்டுக் கொன்றுள்ளனர். ஆனால் இன்று காலை கடத்தப்பட்ட துணை சப்-இன்ஸ்பெக்டர் கடத்தப்பட்ட ...

தொடரும் ராஜேஷ் - சந்தானம் கெமிஸ்ட்ரி

Posted: 08 May 2012 07:32 AM PDT

பொதுவாக இயக்குநர் - கதாநாயகன், கதாநாயகன்-கதாநாயகி என சிலருடன் சிலருக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒத்துப்போகும். அந்த வகையில் தற்போது சினிமா உலகில் ஒரு இயக்குநருக்கும், நகைச்சுவை நடிகருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி வருகிறது. ஒன்று அல்ல இரண்டு அல்ல 4வது படத்திலும் இந்த கூட்டணி தொடர்வதுதான் ஆச்சரியமான விஷயம். அவர்கள் யார் என்று ஏற்கனவே நீங்கள் யோசித்திருப்பீர்கள். ஆம்.. சரிதான். இயக்குநர் ராஜேஷ் - சந்தானம் தான் அந்த வெற்றிக் கூட்டணி. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் தற்போது ஒரு கல் ...

பென் டிரைவ் format - உதவி

Posted: 08 May 2012 07:27 AM PDT

பென் டிரைவ் format செய்தால் write protect ன்னு வருது.. என்னிடம் இருப்பது sandisk..
start ல போய் cmd கொடுத்து பார்த்தாச்சு.. startla regedit கொடுத்தாச்சு.. mycomputer -ல manage வழி போயாச்சு.. எல்லா இடமும் write protect ன்னு தான் வருது.. அதிர்ச்சி

சென்னையிலும் விரைவில் மினி பஸ்கள் அறிமுகம்!

Posted: 08 May 2012 07:24 AM PDT

தமிழகம் முழுவதும் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ்கள், முதல்முறையாக சென்னையிலும் இயக்கப்படவுள்ளன. சட்டசபையில் இன்று போக்குவரத்து மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் முடிந்த பின் அந்தத் துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: அரசு போக்குவரத்து கழகங்களுக்கு இந்த நிதியாண்டில் ரூ. 548 கோடி செலவில் 3,000 புதிய பஸ்கள் வாங்கப்படும். இவை சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, நெல்லை மாவட்டங்களில் இயக்கப்படும். சென்னை மாநகரில் பஸ் வசதி அளிக்க முடியாத ...

கிருஷ்ணாவின் நிச்சயதார்த்த போட்டோக்கள் :)

Posted: 08 May 2012 06:50 AM PDT

கிருஷ்ணாவின் நிச்சயதார்த்த போட்டோக்கள் சில இங்கு போடுகிறேன் நண்பர்களே !

பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்

Posted: 08 May 2012 06:03 AM PDT

பால் குடிங்க பளிச் பார்வை கிடைக்கும்: ஆய்வில் தகவல் பால் குடித்தால் எலும்பு, பற்களின் வளர்ச்சி சீராக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் பாலான பார்வை குறைபாட்டினை சரி செய்யும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை பால் அருந்தாத நபர்களே இல்லை. இத்தகைய பாலானது கண் பார்வை குறைபாட்டைச் சரிசெய்யும் என்று நியூயார்க் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் அமைந்துள்ள பவலோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏமி மில்லன் ...

வார/மாத இதழ்கள்: புதியவை - குங்குமம் 14/5, வண்ணத்திரை 14/5, கம்ப்யூட்டர் உலகம் Feb/Mar/Apr-2012

Posted: 08 May 2012 05:12 AM PDT

புதிய வார/மாத இதழ்கள். ~~~~~~~~~~~~~~~~~~~ Mirrorcreator.com லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான serverல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். Code:mirror creator லிங்கில் கிழிகண்ட server link உள்ளது. depositfiles.com, rapidshare.com, zshare.com, badonga.com, ziddu.com, 2shared.com, jumbo.com, ..... mirrorcreator லிங்கில் தரவிறக்கம் உதவிக்கு கீழே உள்ள லிங்கில் பார்க்கவும் http://www.eegarai.net/t83257p195-30-4-28-4-26-4-23-4#785894 குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் ...

பருப்பு மட்டன் தாளிச்சா

Posted: 08 May 2012 05:09 AM PDT

தேவையான பொருட்கள் துவரம் பருப்பு -1 கப் இறைச்சி எலும்பு -1/4 கிலோ இஞ்சி பூண்டு விழுது -2 டேபிள் ஸ்பூன் வாழைக்காய் -1 காரெட் -1 தக்காளி- 100 கிராம் வெங்காயம் -2 கத்திரிக்காய் - 2 முருங்கைகாய்- 2 மாங்காய் -1 கருவேப்பிலை சிறிது மல்லித் தலை புதினா தலை கொஞ்சம் மசாலாதூள்-3 ஸ்பூன் புளி நெல்லிக்காய் அளவு பட்டை -சிறிது லவங்கம் -2 ஏலக்காய்-2 மஞ்சள் தூள் தேவையான அளவு எண்ணை தேவையான அளவு செய்முறை முதலில் இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை ...