சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்

சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரபரப்பு : 10 பெண்கள் உள்பட 12 பேர் மாயம்

Posted: 01 May 2012 03:38 AM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக 10 பெண்கள் உள்பட 12 பேர் காணாமல் போனார்கள். அவர்களில் காதல் திருமணம் செய்த 3 மாணவிகளை போலீசார் மீட்டனர். காஞ்சிபுரம் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி (21), லாலாகுட்டை தெருவை சேர்ந்தவர் சுமதி (20). இவர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தனர். 

தேர்வு எழுத சென்ற இருவரும் வீட்டுக்கு வரவில்லை. காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கவிதா (20). இவரும் திடீரென காணாமல் போனார். காஞ்சிபுரம் ஓட்டேரியை சேர்ந்த செரீனா பேகம் (16). வீட்டில் தனியாக இருந்த இவர் மாயமானார். மணிமங்கலம் காவனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (17) இவரும் திடீரென மாயமானார். காஞ்சிபுரம் தங்கவேலு தெருவை சேர்ந்தவர் ரேவதி (17). தனியார் கல்லூரியில் படிக்கிறார். தோழியை பார்க்க சென்றவரை காணவில்லை. சுப்பிரமணி கோயில் தெருவை சேர்ந்தவர் வித்யா (21). கல்லூரி மாணவியான இவர், திடீரென மாயமாகி விட்டார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே வன்னியர் தெருவை சேர்ந்தவர் ராதிகா (20). கோயிலுக்கு சென்றவர் காணவில்லை. கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (எ) ஓவியா (15). அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்த இவர் மாயமானார். செங்கல்பட்டு அருகே அம்மணம்பாக்கம் நந்தினி (15). பள்ளிக்கு சென்றவர் வீட்டுக்கு வரவில்லை. திருப்போரூர் தாழம்பூர் உத்தபிரான் தெருவை சேர்ந்தவர் மோனிசா (13). இவரையும் காணவில்லை. 

இதுபோல், சோமமங்கலம் வரதராஜ மெயின் ரோடு சேர்ந்தவர் ராஜேஷ் (20). கூலி வேலைக்கு சென்றவரை காணவில்லை. நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (54). பாலிடெக்னிக்கில் பணியாற்றும் இவரை காணவில்லை. இதுகுறித்து புகார்கள் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், காணாமல் போனவர்கள் பற்றி இதுவரை துப்புதுலக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில், விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன், எஸ்ஐ கீதா ஆகியோர் ஜோதிலட்சுமி, கவிதா, சுமதி ஆகியோரை நேற்று மீட்டனர். இவர்கள் அனைவரும் தங்களது காதலனை திருமணம் செய்துள்ளனர். அனைவரையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அனைவருக்கும் திருமண வயது ஆகிவிட்டதாலும் விருப்பத்தின் அடிப்படையிலும் அனுப்பி வைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளம்பெண்கள் பலர் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அசினை அடுத்து மும்பையில் இலியானா !!

Posted: 01 May 2012 03:37 AM PDT

அசினை அடுத்து இலியானாவும் மும்பையில் குடியேறுகிறார். 'கஜினி' இந்தி ரீமேக்கில் நடிக்க மும்பை சென்றார் அசின். அங்கு மார்க்கெட் சூடு பிடிக்கவே சொந்தமாக பங்களா வாங்கி மும்பையில் குடியேறிவிட்டார். 

அவரைப்போல் இந்தியில் 'பர்பி படத்தில் நடிக்க மும்பை சென்றிருக்கிறார் இலியானா. நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து ஷூட்டிங்கில் பங்கேற்றார். இது அவருக்கு வசதியாக அமையவில்லை. இதையடுத்து மும்பையில் சொந்தமாக பங்களா வாங்க முடிவு செய்தார். 

Ôபர்பிÕ ஷூட்டிங் முடித்துவிட்டு கோடைகால விடுமுறைக்காக கோவா செல்கிறார் இலியானா. ஜூன் மாதம் மீண்டும் மும்பை திரும்புகிறார். இதற்கிடையில் ஒரு வார பயணமாக துபாய் செல்கிறார். இந்நிலையில் மும்பை விமான நிலையத்துக்கு அருகிலேயே வீடு வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த பங்களா ஸ்டுடியோக்களுக்கு சென்றுவர ஏதுவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுமாறு வீடு புரோக்கரிடம் கூறி இருக்கிறார். 

''பாலிவுட் படங்களில் நடிப்பதால் எனக்கு மும்பை முகவரி தேவைப்படுகிறது. அப்பொழுதுதான் டோலிவுட், பாலிவுட் இரு மொழி படங்களிலும் பேலன்ஸ் செய்து நடிக்க முடியும். இதனால் அங்கு வீடு தேடுகிறேன். விரைவில் நல்ல வீடு கிடைத்துவிடும் என்றார் இலியானா.

தமிழுக்கு வரும் டோலிவுட் ஹீரோயின்

Posted: 01 May 2012 03:36 AM PDT

தெலுங்கு படத்தில் மொட்டையடித்து நடித்த ஹீரோயின் தமிழ் படத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற படம் '1940லோ ஒக்க கிராமம்'. இதில் நடித்த ஹீரோயின் ஸ்ரீ ரம்யா. முதல்படமான இதில் மொட்டையடித்து நடித்தார். ஆந்திர அரசின் நந்தி விருதையும் வென்றார். இவர் 'யமுனா' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இ.வி.கணேஷ் பாபு இயக்குகிறார். 

இவர் கூறியதாவது:

அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தங்களுக்கு உடன்பாடு இல்லாத வேலைகளை செய்ய தயாராகி விடுகிறார்கள். அவர்களை ஒரு கூட்டம் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. அவர்களை நல்வழிபடுத்த முயல்கிறான் ஒருவன். அதில் வெற்றி கிடைத்ததா என்பது கதை. சத்யா ஹீரோ. ஸ்ரீ ரம்யா ஹீரோயின். இவர் '1940லோ ஒக்க கிராமம்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். 

முதல் படத்திலேயே மொட்டை போட்டுக்கொண்டு கனமான வேடத்தில் நடித்தார். அப்படியொரு கனமான வேடம் இதில் அமைந்தது. அதற்கு பொருத்தமானவர் ஸ்ரீ ரம்யா என்பதால் தேர்வு செய்தேன். வினோதினி, நரேன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல் வைரமுத்து. இசை இலக்கியன். ஒளிப்பதிவு பொ.சிதம்பரம்.

ராஜ்யசபா எம்.பி. என்ற 'பெளன்சரை' சந்திக்க நான் அஞ்சவில்லை- சச்சின்

Posted: 01 May 2012 03:31 AM PDT

என்னை நோக்கி வீசப்பட்ட பவுன்சர்தான் ராஜ்யசபா எம்.பி பதவி. அதை சந்திக்க நான் அஞ்சவில்லை. இது ஒரு மரியாதை, கெளரவம். அதேசமயம், நான் அரசியல்வாதியல்ல, விளையாட்டு வீரன்தான். அரசியலுக்கு நான் விளையாட்டை கைவிட மாட்டேன் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், லதா மங்கேஷ்கர், பிருத்விராஜ்கபூர் போன்ற மேதைகள் இருந்த இடத்திற்கு குடியரசுத் தலைவர் என்னை நியமித்துள்ளார். இதை பெரும் கெளரவமாக உணர்கிறேன். உங்களது துறையில் நீங்கள் தலை சிறந்து விளங்குவதற்காக ராஜ்யசபாவுக்கு குடியரசுத் தலைவர் உங்களை நியமிப்பது என்பது சாதாரணமானதல்ல. எனவே நிச்சயம் இது எனக்கு கெளரவமான ஒன்றுதான்.

அதேசமயம், நான் அரசியல்வாதியல்ல. நான் ஒரு விளையாட்டு வீரன். எனது பொறுப்புகளை நான் உணர்ந்துள்ளேன். அரசியலுக்காக விளையாட்டை ஒருபோதும் விட மாட்டேன். கிரிக்கெட் எனது வாழ்க்கை, அதை விட்டு விட்டு என்னால் போக முடியாது. என்னால் ஆனதை இந்த விளையாட்டுக்கு தொடர்ந்து நான் கொடுத்து வருவேன் என்றார் சச்சின்.

பனிப்பாறைகள் உருகும் அபாயத்தினை காட்டும் ஐபோன் அப்ளிக்கேஷன்!

Posted: 01 May 2012 03:30 AM PDT

பனிப்பாறைகள் உருகிவருவதால், ஏற்படும் அபாயத்தினையும், அதன் தாக்கத்தினையும் காட்டும் புதிய ஐபோன் அப்ளிக்கேஷன்.

உலகம் வெப்ப மயமாகி வருவதால் இயற்கை சூழலில் பல அபாயகரமான மாற்றங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து வருகிறது. பூமி மண்டலம் அதிக வெப்பமடைந்து வருவதால் பனிப்பாறைகள் உருகி வரும் விஷயம் பல பேர் அறிந்த ஒரு செய்தி.

ஆனால் இதை தெளிவாக காட்ட ஃபிராஜில் எர்த் என்ற புதிய அப்ளிக்கேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிக்கேஷனை ஐபோன் மற்றும் ஐபேட்களில் பயன்படுத்தலாம். இந்த அப்ளிக்கேஷன் மூலம் பனிப்பாறை உருகி வரும் நிலை மட்டும் அல்லாமல், ஏறிகள் வரட்சி, கடற்கரை அரிப்பு போன்ற நிலைகளையும் அறிந்து கொள்ள முடியும்.

இது போன்ற பார்ப்பதற்கு அரிய விஷயங்களையும் இந்த அப்ளிக்கேஷன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இது பற்றி தெரிந்து கொள்ள 70-க்கும் மேற்பட்ட வலைத்தளங்களையும் இந்த அப்ளிக்கேஷனில் பயன்படுத்த முடியும்.

இயற்கை சூழலின்மாற்றங்கள் பற்றிய தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ள இந்த அப்ளிக்கேஷன் பெரிதும் பயன்படும்.

மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை ஏற்க எதிர்ப்பு: தருமபுர ஆதீனம் தலைமையில் ஆதீனங்கள் அவசர ஆலோசனை

Posted: 01 May 2012 03:13 AM PDT

மதுரை ஆதீனம் அருணகிரிநாத சுவாமிகள் 293-வது ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்துள்ளார். இதைத் தொடர்ந்து மதுரை ஆதீனத்திற்கு உடனடியாக ரூ.5 கோடி நிதியையும் மேலும் பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார் நித்யானந்தா.

இந்நிலையில் மதுரை ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடம் ஆகும். இதில் ஆதீனத்தை நியமிக்க விதிமுறைகள் உள்ளன. அதனை மீறி மதுரை ஆதீனம் செயல்பட்டது மற்ற ஆதீனங்களை அதிர்ச்சிகுள்ளாக்கியது.

இதுகுறித்து ஆதீனங்களிடம் நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த ஆதீனங்களும் கருத்து தெரிவிக்க முன்வரவில்லை. இந்நிலையில் இது குறித்து தருமபுரம் ஆதீனம் சண்முகதேசிக சுவாமிகள் தலைமையில் இன்று மாலையில் தருமபுரத்தில் உள்ள ஆதீனம் கலைக்கல்லூரியில் அனைத்து ஆதீனங்களைக் கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இதில் திருவாவடுதுறை ஆதீனம், பேரூர் ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், வடலூர் ஊரனடிகள் சுவாமிகள் உட்பட மேலும் பல்வேறு சுவாமிகள் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில் மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை விதிமுறைகளை மீறி நியமித்தது குறித்து ஆதீனங்கள் காரசாரமாக விவாதிக்கின்றனர். மேலும் முக்கிய முடிவுகளும் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதீனங்களின் ஒன்று திரண்ட அணிவகுப்பு மதுரை ஆதீன செயல்களுக்கு கடும் எதிர்ப்பாகவே இருக்கும் என ஆன்மீக அன்பர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மனிதர்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற கிரகங்கள் கண்டுபிடிப்பு

Posted: 01 May 2012 03:11 AM PDT

விண்வெளியில் நட்சத்திரங்களை போன்று ஏராளமான கிரகங்கள் உள்ளன. அவை பூமியை போன்ற அமைப்பும் தோற்றமும் இருப்பதாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி விண்வெளி விஞ்ஞானி ஆதித்யா சோப்ரா குழுவினர் இது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பூமியை போன்றுள்ள அந்த கிரகங்கள் மனிதர்கள் வாழ தகுதியுள்ளவையாக இருக்கின்றன. அங்கு திரவ நிலையில் தண்ணீர் மற்றும் சீரான தட்பவெப்ப நிலை போன்றவை இருப்பது தெரிய வந்துள்ளது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கிரகங்களில் மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வாழக்கூடிய தகுதி இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அஜீத் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் இலவச உணவு வழங்கினர்

Posted: 01 May 2012 03:16 AM PDT

நடிகர் அஜீத்தின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் இன்று கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஏழைகளுக்கு உதவிகளும் வழங்கினர். 

சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள அன்னை பாரதமாதா ஆதரவற்றோர் இல்லத்தில் அஜீத் ரசிகர்கள் திரண்டனர். அங்குள்ள குழந்தைகள் 300 பேருக்கு இலவச பிரியாணி பொட்டலங்களை வழங்கினார்கள்.

பிறந்த நாளையொட்டி ஆவடியில் இலவச மருத்துவ முகாமுக்கு ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். இங்கு ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நுங்கம்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறந்தனர். நிகழ்ச்சியில் அஜீத் ரசிகர் மன்ற நிர்வாகிகள் புரசை அஜீத் சரவணன், இ.சச்சின் மணி, பி.ஜி. முரளிதரன், என்.வேலு, டி.கிருஷ்ணன், பி.ஆனந்தன், டி.ரவி, பி.ஏழுமலை, பி.குமார், மோகன், பத்மநாபன், சிரஞ்சீவி, சசிகுமார், பாபு, ஜான், புரசை பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேரள ஷெட்யூல் முடிந்து சென்னை திரும்பினார் ரஜினி!

Posted: 01 May 2012 03:07 AM PDT

கோச்சடையான் படத்தின் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு முடிந்து, ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் கேரளாவிலிருந்து சென்னை திரும்பினர்.

சௌந்தர்யா இயக்கும் முதல் 3 டி அனிமேஷன் படம் கோச்சடையான். இது சரித்திரக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். ரஜினி இதில் புகழ்பெற்ற கோச்சடையான் மன்னர் வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார்.

மோஷன் கேப்சரிங் உத்தியில் உருவாகும் இந்தப் படத்தில் சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. மேலும் அனிமேஷன் முறையில் தமிழ் சினிமாவின் சாதனை நடிகர்கள் சிலரையும் இந்தப் படத்தில் உலவ விட சௌந்தர்யா திட்டமிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் கடந்த மாதம் நடந்தது. இரண்டாம் கட்ட ஷூட்டிங் கேரளாவில் உள்ள சித்ராஞ்சலி மற்றும் விஸ்மாயா மேக்ஸ் ஸ்டுடியோக்களில் நடந்தது. இதிலும் ரஜினி கலந்து கொண்டார். தீபிகா படுகோன், ஆதி தொடர்புடைய காட்சிகளில் இங்கு படமாக்கப்பட்டன.

திட்டமிட்டபடி படப்பிடிப்பு சிறப்பாக முடிந்ததால், ரஜினியும் படக்குழுவினரும் நேற்று முன்தினம் சென்னை திரும்பினர்.

இதுகுறித்து சௌந்தர்யா தன் ட்விட்டரில், " கோச்சடையான் இரண்டாவது ஷெட்யூல் சிறப்பாக முடிந்தது. சென்னை திரும்பிவிட்டோம். முக்கிய வேலைகளை முடித்துள்ளோம். தீபிகாவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது", என்று குறிப்பிட்டுள்ளார்.

பசலைக்கீரை சட்னி

Posted: 01 May 2012 01:30 AM PDT

தேவையானப்பொருட்கள்: 

பசலைக்கீரை இலைகள் - 1 கப் 
பச்சை மிளகாய் - 2 
பூண்டுப்பற்கள் - 4 
தேங்காய்த்துருவல் - 1/2 கப் 
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்றவாறு 
எண்ணை - 1 டீஸ்பூன் 

செய்முறை: 

• ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய், பூண்டு இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். 

• பின்னர் அதில் பசலைக்கீரையைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி ஆறவிடவும். 

• வதக்கிய பொருட்கள் ஆறியவுடன் தேங்காய்த்துருவல், உப்பு சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். 

• பின்னர் அதில் எலுமிச்சம் சாற்றைச் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.

சர்வாங்க ஆசனம்

Posted: 01 May 2012 01:30 AM PDT

செய்முறை.... 

முதலில் விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கைகளும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும். மூச்சைப் பிடித்து இரண்டு கால்களையும் அப்படியே மேலே தூக்கவும். இத்துடன் இடுப்பையும் தூக்கி முழு உடலும் மேல் நோக்கிய நிலையில் இருக்கும் படி வரவும். (படத்தில் உள்ள படி)பிறகு இரண்டு கைகளையும் மடக்கி இடுப்புக்கு கீழே பிடித்து, உடலை நேராய் நிமிர்த்தவும். 

தலை முன்பக்கம் குனிந்து முகவாய்க்கட்டை மார்பில் அழுந்தும்படி பார்த்துக் கொள்ளவும். மூச்சை சாதாரணமாய் விடவும், வாங்கவும் செய்யவும். முதுகும் கால்களும் வளையாமல் நேராய் இருக்க வேண்டும். கால்களை விறைப்பாய் வைத்துக் கொள்ளக் கூடாது. வாய் மூடியிருக்க வேண்டும். கைகளின் மேல் சரீர பாரம் முழுவதையும் போட்டு பிடிக்க கூடாது. கைகள் உடலை லேசாய் தாங்கியிருக்க வேண்டும். 

இறங்கும் போது இடுப்பின் அடியில் தாங்கும் கைகளை தளர்த்தி கைகளின் மேலேயே உடலை மெதுவாக நழுவ விட்டு கொண்டே வந்து கால்களை தரையில் அமர்த்தவும். பிறகு கைகளை பக்கங்களில் நீட்டி வைத்து இளைப்பாறவும். மற்ற பயிற்சிகளை செய்து உடலை தன்வசத்தில் வைத்திருப்பவர்களுக்கு இந்த சர்வாங்கசனத்தை செய்வது சுலபமாக வரும். எந்த வித உடற்பயிற்சியும், யோகாசன பயிற்சியும் செய்யாதவர்களுக்கு இது சற்று கடினமாக இருக்கும். 

சிலருக்கு இரண்டு கால்களை மட்டும் தான் தூக்க வரும். இடுப்பை தூக்க முடியாத படி சிரமப்படுவார்கள். ஆனாலும் விடாமுயற்சியுடன் கைகளை நன்கு ஊன்றி, முடிந்த மட்டும் உடலைத் தூக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் தூக்க முடியவில்லையானால், இடுப்பை பாதி தூக்கிய நிலையில் கால்களை உயர்த்திய படி சற்று நேரம் இருக்க முயற்சி செய்யுவும். கால்களை தரையில் வைத்து விடக்கூடாது. கைகளை இடுப்புக்கு அடியில் கொடுத்து தாங்கிக் கொள்ளும் போது கால்கள் தரைக்கு வராது. இது போல் 5 முதல் 6 தடவைகள் வரை பயிற்சி செய்தால் கூட நல்ல பலன் உண்டு 

பலன்கள்: 

இந்த ஆசனத்தால் தைராய்டு பிரச்சினை தீரும். நரம்பு பலகீனம், ரத்தமின்மை, சோம்பல், தலைவலி, அசீரணம், மலச்சிக்கல், மூலம், வயிற்றுவலி, குன்மம், மூத்திரக் கோளாறுகள், மார்பு வலி, இருதய பலவீனம், ரத்தக் கொதிப்பு, சகலவாதங்கள், காலில் குத்தல், பெரும் வியாதி, காலின் கணுக்களில் நீர் தங்குதல், மலேரியா, மற்ற ஜுரங்கள், மலட்டு தனம், தைமஸ் கிளாண்ட், வீர்யமின்மை, மலட்டு தனம், கண்டமாலை, ஆல்புமின், சர்க்கரை வியாதி கோளாறுகள், வயிற்று போக்கு, மனநிலை கோளாறுகள், வலிப்பு நோய்கள் உள்பட பல வியாதிகள் தீரும். 

குறிப்பு: 

இந்த ஆசனத்தை கர்ப்பிணி பெண்கள் மூன்று மாதங்கள் வரை செய்யலாம். இந்த ஆசனம் செய்யும் போது இருமல், தும்மல், கொட்டாவி முதலியன வந்தால் அல்லது வரும் போல் இருந்தால் உடனே சர்வாங்கசனத்திலிருந்து இறங்கி பின்பு தான் இருமவோ, தும்மவோ செய்ய வேண்டும். ஆசனத்தில் இருக்கும் போதே செய்தால் மார்பு பிடிப்பு, கழுத்து சுளுக்கு, காதுக் கோளாறுகள் போன்றவை உண்டாகும். ஆசனத்தில் இருக்கும் போது எச்சில் விழுங்குதல் கூடாது. ஆசனத்தை கலைத்த பின்பு தான் எச்சில் விழுங்க வேண்டும்.

குரு காயத்திரி மந்திரம்

Posted: 01 May 2012 01:29 AM PDT

Guru inside the templeரிஷபத் வஜhய வித்மஹே!
க்ருணி ஹஸ்தாய தீமஹே! 
தந் நோ குரு ப்ரசோதயாத்! 
குருபகவான் ஸ்லோகம் 
தேவா நாஞ்க ரிஷிணர்ஞ்ச! 
குரம் காஞ்சத ஸந்நிபம்! 
பக்தி பூதம் த்ரிலோகேஸம்! 
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்! 

- இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் குருவின் அருட்பார்வையால் கல்வி சிறக்கும், செல்வம் செழிக்கும். தொழிலில் மேன்மை கிடைக்கும்.

பவுர்ணமி விரதமுறை

Posted: 01 May 2012 01:20 AM PDT

பூமியை சுற்றி வரும் சந்திரன் பவுர்ணமி அன்று முழு நிலவாக தோன்றி மிகவும் பிராகாசமாக காட்சி அளிக்கும். இந்த பவுர்ணமி தினமானது மாதம் ஒரு முறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பவுர்ணமிக்கு என தனிச் சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகிறது, 

ஆனால் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மட்டும் சித்ரா பவுர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. அன்றைய தினம் எமதர்மராஜனிடம் ஆன்மாக்கள் செய்யும் ஆற- மற செயல்களை கணக்கெழுதி காண்பிக்கும் சித்ரகுப்தனை வழிபடுகிறார்கள். 

பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தைத் தொடங்கவேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தைமுழுமையாக கடைப்பிடிப்போர் இரவு நிலவு பார்த்தபின் உணவு அருந்த வேண்டும்.

ஸ்ரீராமபிரான் கோவில் - அயோத்தி

Posted: 01 May 2012 01:18 AM PDT

ஸ்தல வரலாறு: 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பைசாபாத் புகைவண்டி நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் சரயு நதிக்கரையில் அயோத்தி திவ்ய தேசம் முத்திதரும் ஏழு நகரங்களுள் ஒன்றாக அமைந்துள்ளது. ராமபிரான் சக்கரவர்த்தித் திருமகனாக அவதாரம் செய்த தலம். இது பெரியாழ்வார், குலசேகராழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பதி. 

பெருமாள் ஸ்ரீராமர், ரகுநாயகன், சக்கரவர்த்தித் திருமகன் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ராமர், லட்சுமணர், சீதை, ஆஞ்சநேயர் கோவில்கள் பல உள்ளன. இட்சுவாகு தவமிருந்து பிரமதேவனிடமிருந்து பெற்ற பள்ளிக்கொண்ட நாதனை இத்தலத்தில் வைத்து முதற்கண் வழிபடப் பெற்றது. பின்னர் இதனை விபீஷணருக்கு ராமபிரான் பரிசாக அளித்தார். அது ஸ்ரீரங்கத்தில் நிலைகொண்டது என்பது புராண வரலாறு. 

தென்னிந்திய கோவிலின் அமைப்புப்படி இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. கோவில்களில் தென்னிந்திய வைஷ்ணவர்கள் தான் பூஜை செய்கிறார்கள். பிரம்மாவின் மூத்த பிள்ளை ஸ்வாயம்புவமனு. இவருக்கு ஸ்ரீமந் நாராயணன் வைகுண்டத்தின் ஒரு பகுதியான அயோத்தியை பிரம்மா மூலம் கொடுத்தார். 

அந்த அயோத்தியை பிரம்மா மனு சக்கரவர்த்தியிடம் கொடுக்க மனு சக்கரவர்த்தி அந்த அயோத்தியை பூலோகத்திற்கு கொண்டு வந்து நதியின் தென் கரையில் ஸ்தாபித்தார். இதுதான் அயோத்தி என்று நாம் போற்றப்படும் புண்ணிய பூமி. பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடி ஆழ்வார், திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர். 

எனினும் கோவிலில் இதற்கான கல்வெட்டு இருப்பதாகத் தெரியவில்லை. ஸ்ரீராமபிரானது கோவிலுக்கு ஒரு தடவை சென்று வந்து விட்டால் ஏழேழு ஜன்மத்திற்கும் எந்த விதபாவமும் அண்டாது. 

தொடர்புக்கு :- 05278-234321, 232252

பெரு நாட்டு கடற்கரையில் தீடீரென செத்து விழுந்த 1200 பெலிகான் பறவைகள்

Posted: 01 May 2012 01:14 AM PDT

பெரு நாட்டில் உள்ள பயூரா கடற்கரை பகுதியில் ஏராளமான பெலிகான் பறவைகள் வசிக்கின்றன. இவற்றில் 1200 பறவைகள் திடீரென செத்து விழுந்தன. கடற்கரை பகுதி முழுவதும் எங்கு பார்த்தாலும் பெலிகான் பறவைகள் உடல்களாக காட்சி அளித்தன.

இதே போல அந்த பகுதியில் 54 கடல் சிங்கங்களும் சில கடல் ஆமைகளும் செத்து கிடந்தன. இவை எதனால் தீடீரென செத்தன என்பது தெரியவில்லை. இது பற்றி ஆய்வு நடத்தி கண்டுபிடிக்கும்படி அந்த நாட்டு மந்திரி கேப்லியல் ஆகோஸ்டா உத்தரவிட்டு உள்ளார். இதே கடல் பகுதியில் கடந்த ஆண்டு 800 டால்பின் மீன்கள் செத்து கரை ஓதுங்கின.

டால்பின்கள் எதனால் செத்தது என்று அப்போது கண்டுபிடிக்க முடியவில்லை. அதே போல பெலிகான் பறவைகளும் செத்தது ஏன் என்பது மர்மமாகவே உள்ளது.

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா?

Posted: 01 May 2012 01:12 AM PDT

இறைவன் இருக்கிறான்றாரா? இல்லையா? 

இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டால்
ஒரே ஒரு பதில்தான்:

இருக்கின்றார்! சர்வ நிச்சயமாக இருக்கின்றார்?

எப்படிச் சொல்கின்றாய்? ஆதாரம் இருக்கிறதா?

இறைவன் என்பவர் நம்பிக்கை' சம்பந்தப்பட்டவர்
அல்ல! அவர் உணரப்பட வேண்டியவர்!

Yes, God is not a matter for belief ;
He is to be understood

நம்பிக்கைக்குக்கு உரியது என்றால் ஆதாரம்
காட்டலாம். உணர்வில் இருப்பதற்கு எப்படி
ஆதாரம் காட்ட முடியும்?

சரி, நம்பிக்கை என்பது எது?
உணர்வில் கொள்வது என்பது எது?

நெருப்பு சுடும் என்பது தெரியும். ஆனால்
ஒரு சிறு குழந்தைக்கு அது எப்போது
தெரிகிறது? ஒரு முறை தன் கையால்
தொட்டு, சூடுபட்டவுடன்தான் அதற்குத்
தெரியும்.

எதையுமே பட்டு உணர்வதுதான் உணர்வு
ஏற்படும் அந்த உணர்வுதான், ஒன்றைப் பற்றி
நமக்கு ஒரு புரிதலைத்தருவது. அந்தப்
புரிதல்தான் அறிவு - அந்த அறிவுதான்
நம்பிக்கை - அந்த நம்பிக்கைதான் வாழ்க்கை!

இப்படிச் சுருக்கமாகச் சொல்லலாம்

உணர்வதுதான் அறிவு - அறிவு கொடுப்பதுதான்
அனுபவம் - அனுபவம் ஏற்படுத்துவதுதான்
நம்பிக்கை - நம்பிக்கைதான் வாழ்க்கை!

All are interlinked!
(எல்லாம் ஒன்றிற்கொன்று தொடர்புடையவை)

ஒருவன் எனக்கு இறை நம்பிக்கை இல்லை
என்று சொல்லும்போது என்ன செய்வது?

நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்.
உங்களால் ஒன்றும் செய்ய முடியாது!
யாரையும் திருத்துவதற்காக நீங்கள் பிறவி
எடுக்கவில்லை!

உணர்கிறவர்கள் உணரட்டும்;
உணராதவர்கள் உணராமலேயே போகட்டும்!

குடியின் தாக்கம் பற்றி - அது ஏற்படுத்தும்
அல்லது கொடுக்கும் கிறக்கமான உணர்வு
அல்லது கிளர்ச்சி பற்றி, ஒரு சொட்டு
மதுவைக் கூட அருந்திப் பார்க்காதவனுக்கு
எப்படித் தெரியும்?

ஒரு நல்ல ஃபில்டர் காப்பி சாப்பிட்டுவிட்டு,
ஒரு வில்ஸ் ஃபில்டர் சிகரெட்டை
ஆர அமர உட்கார்ந்து குடித்துப் பாருங்கள்.
அப்போதுதான் தெரியும் சிகரெட்டின் மகிமை!

அதோடு மட்டுமா? காப்பிக்கும் சிகரெட்டிற்கும்
உள்ள ஜோடிப் பொருத்தமும் அப்போதுதான்
தெரியவரும்!

சிகரெட்டையே தொட்டிருக்காதவனுக்கு
அந்தப் பொருத்தத்தை/ மகிமையை என்ன
சொல்லி விளக்க முடியும்?
சொன்னாலும் விளங்குமா?

நெய்யில் வறுத்து, லேசாக உப்பும், மிளகாய்த்
தூளும் தூவப்பட்ட முந்திரிப் பருப்பு மிகவும்
ருசியாக இருக்கும் என்பது, அதைச் சாப்பிட்டு
அனுபவித்தவனுகுத்தானே தெரியும்?
சாப்பிடாதவனுக்கு எப்படித் தெரியும்?

புலவு சாதமும், சிக்கன் குருமாவும்
அல்லது தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும்
அற்புதமான உணவு என்பது சாப்பிட்ட
நமக்குத் தெரியும்! சாப்பிட்டிருக்காத
நைஜீரியாக்காரனுக்கு அது எப்படித் தெரியும்?

அவன், அவன் உணவை உயர்த்தியாகச்
சொல்லுவான். நாம் நம் உணவை
உயர்த்தியாகச் சொல்லுவோம்.

ஆகவே இறைவன் என்பவர் உணர்ந்தவனுக்கு
இருக்கிறார்; உணராதவனுக்கு இல்லை!

அதைத்தான் கவியரசர் கண்ணதாசன் இப்படிச்
சொன்னார்:

"உண்டு என்றால் அது உண்டு!
இல்லை என்றால் அது இல்லை!"

எல்லாம் அனுபவித்து வருவது. அனுபவித்து
வரும்போதுதான் மனிதன் ஒப்புக்கொள்வான்.
அனுபவத்திற்கு முதல் நிலைதான் உணர்தல்

கணணதாசன் வாழ்க்கையை அதன் போக்கிலேயே
நன்றாக அனுபவித்து வாழந்தவர். அவர் சந்திக்காத
துன்பமா? துரோகமா? வறுமையா?செழுமையா?
நட்பா? பகையா? சிறுமையா? பெருமையா?.

எல்லாவற்றையும் அவர் சந்தித்தார் - நல்லது,
கெட்டதை உணர்ந்தார், உணர்ந்ததனால்
அனுபவம் பெற்றார் - பெற்ற அனுபவங்களைத்
தான் தன் எழுத்தில் வைத்தார்.

என்னைப்போல் வாழாதீர்கள் - நான் எழுதியதைப்
போல வாழுங்கள் என்று சொல்லி விட்டும் போனார்

ஒரு தோட்டம். அதில் மல்லிகை, முல்லை, ரோஜா,
கனகாம்பரம், சம்பங்கி, செவ்வரளி, பிச்சிப்பூ, சாமந்தி
என்று விதவிதமான மலர்கள் நிறைந்திருக்கின்றன.
அந்த மலர்கள் ஒவ்வொன்றின் வடிவமும், நிறமும்
மணமும் ஏன் வேற்படுகின்றன?

நிலம் ஒன்றுதான், ஊற்றும் தண்ணீரும் ஒன்றுதான்
அப்படியிருக்கையில் அவை எப்படி வேறுபடலாம்?
விதையிலோ அல்லது நாற்றாக நடும் தண்டிலோ
நிறமோ அல்லது மணமோ கிடையாது. பயிராகிப்
பூக்கின்ற போது அவற்றிற்கு அந்த மணமும்,
நிறமும் எங்கிருந்து கிடைத்தது?

அதெல்லாம் இறைவனின் படைப்பு. அந்த மாதிரிக்
கேள்விகளுக் கெல்லாம் எந்தக் கொம்பனாலும்
பதில் சொல்லமுடியாது!

ஒரு தாவரவியல் விஞ்ஞானியிடம் கேட்டுப்
பாருங்கள். நாங்கள் ஆராய்ச்சி செய்து கொண்டி
ருக்கின்றோம் என்பார்.
We are exploring it என்பார்.

அந்தச் செடிகளின் மூலப் பொருள் இல்லாமல்
ஒரு மலரை உண்டாக்கிக் காட்டச் சொல்லுங்கள்.
எவனாலும் முடியாது!

செய்து காட்டட்டும் - அப்போது சொல்வோம்
இறைவன் இல்லையென்று!

இறைவனுக்குத் தன்னை உணர்ந்தவன அல்லது
உணராதவன் என்ற பேதம் கிடையாது. இருவரும்
அவனுக்கு வேண்டியவர்களே. இருவருமே
அவனால் படைக்கப்பட்டவர்கள் அல்லவா?
அதனால் இருவருமே அவனுக்குச் சமமானவர்கள் தான்.

அதனால் தான் இறைவனை - Almighty என்கிறோம்
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகிப்
போயிருப்பார்.

இறைவனைப் பல வடிவங்களில் வணங்குகிறோம்
பல பெயர்களில் அழைக்கின்றோம்.

ஆறுகள் பல உள்ளன. பல் பெயர்களில் உள்ளன
அவை கலக்குமிடம் கடல்தான்.

மதங்கள் பல இருக்கலாம், வழிபாடுகள் பல
இருக்கலாம். ஆனால் இறைவன் ஒருவன்தான்

இறைவனை நீங்கள் உணரும்போது மேற்கூரிய
அத்தனை பேதங்களும் காணாமல் போய்விடும்

அப்புறம் ஈஷ்வரன், ஸ்ரீராமன், இயேசுநாதர், அல்லா
புத்தபகவான் என்று மற்றவர்களின் பேச்சுக்கள்
எல்லாம் உங்களிடம் எடுபடாமல் போய்விடும்

நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வழிபடுங்கள்
அது உங்கள் விருப்பம். அது உங்கள் பழக்கப்பட்ட
விஷயம். அதையும் குறை சொல்ல எந்தக்
கொம்பனுக்கும் அதிகாரமில்லை

அதையும் மீறி ஒருவன் குறை சொன்னால்
அவனை விட்டு விடுங்கள்.

It is his problem - not our problem, because
we do not even have one god. We have
only God and he is the ultimate authority
for us!

சர்வ அதிகாரமும் படைத்தவர் அவர்
ஒருவர்தான்!

உலகில் இன்றுள்ள எவனுமே 'சர்வ' என்ற
வார்த்தையை தன்னுடைய அதிகாரத்துடன்
சேர்த்துப் பயன் படுத்தமுடியாது!

ஹிட்லரையும், முசோலினியையும் நினைத்துக்
கொள்ளுங்கள். அவர்களுடைய சர்வாதிகார
மெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டது

ஒரு நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் சொன்னார்:

"இன்றைக்கு செத்தால்
நாளைக்குப் பால்
ஆனால்
ஆவின் வண்டியில்
அடிபட்டால்
அன்றைக்கே பால்!"

இன்றைக்கு அதிகாரத்தில் உள்ள அததனை
பேர்களின் வாய்களிலும், ஒரு நாள் பால்
ஊற்றப்படவுள்ளது அல்லது வாய்க்கரிசி
காத்துக் கொண்டிருக்கிறது.

அந்த அரிசியும், பாலுமே அவன் கொடுத்த
கொடைதான்!

ஜனாதிபதி தேர்தல்: பாஜக கூட்டணியிலும் பிளவு!

Posted: 01 May 2012 01:12 AM PDT

ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்ற பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சு அவரது சொந்தக் கருத்தாகும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் பாஜக கூட்டணியில் இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விஷயத்தில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளுக்கு ஒரு பெயரை கூறி வருகின்றன. அதே போல எந்தக் கூட்டணியிலும் இல்லாத கட்சிகளும் வாய்க்கு வரும் பெயர்களை சொல்லி வருகின்றன.

இந் நிலையில் பாஜக கூட்டணியிலும் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அப்துல் கலாம் போட்டியிட விரும்பினால் அவரை ஆதரிக்கத் தயார் என்றும் அதே நேரத்தில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரையும் ஆதரிக்க மாட்டோம் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார்.

முகர்ஜி தீவிரமான அரசியலில் உள்ளார். அன்சாரிக்கு ஜனாதிபதி பதவிக்கான தகுதி கிடையாது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று பேட்டியளித்த பாஜக கூட்டணியின் மிக முக்கிய கட்சியான ஐக்கிய ஜனதா தளத் தலைவரான சரத் யாதவ், சுஷ்மாவின் பேச்சு முழுக்க முழுக்க அவரது சொந்தக் கருத்து. அது கூட்டணியில் கருத்து அல்ல. இந்த விஷயத்தில் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

பதிவில் எழுதுவதைக் கேள்விக் குறியாக்கும் பின்னூட்டங்கள்

Posted: 01 May 2012 01:10 AM PDT


கட்டற்ற எழுத்து சுதந்திரம் கட்டற்ற
கொடுமையாகிக் கொண்டிருக்கிறது

கண்ணியம் இல்லாதவர்களின் பின்னூட்டம்
காற்றை அசுத்தப் படுத்திக் கொண்டிருக்கிறது

போகப்போகத் தனிமனிதன் எழுத்து
சுதந்திரத்தைச் சுவாசிக்க முடியாத நிலை
ஏற்படும்போல் இருக்கிறது

பதிவின் நோக்கத்தை திசை திருப்பும்
கேள்விகளும், இறை நம்பிக்கையை
நக்கலடித்து எழுதப்பட்ட பின்னூட்டங்களும்
தொடர்ந்து வருகின்றன

இதெல்லாம் நான் எதிர்பார்த்ததுதான்.
இதெற்கெல்லாம் கவலைப் படுகின்ற
ஆள் நானில்லை!

பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய
அவசியம் எனக்கிலலை

செத்துப்போன தன் பாட்டியை உயிர்ப்பித்துத்
தரச்சொல் - நான் உன் கடவுளை நம்புகிறேன்
என்று ஒரு அன்பர் எழுதியிருக்கிறார்.

இன்னொருவர் காதலிக்காமல், காதலியைக் கண்
முன்னே பாராமல், தொட்டுப் பேசாமல், காதல்
உணர்வு எனக்கு எப்படி ஏற்படும்? என்று கேட்டுள்ளார்

இப்படிப் பின்னூட்டங்கள் வருவதும் அதைப்
பதிவில் வெளியிடாமல் விட்டு விட்டால்
ஏன் வெளியிடவில்லை என்று கேள்வி கேட்பதும்
அதிகரித்து வருகின்றன

அதேபோல் பதிவிற்கு சம்பந்தமில்லாத
செய்திகளுடன் என்னைக் கேள்வி கேட்டு வரும்
பின்னூட்டங்களும் அதிகரித்து வருகின்றன

சில பின்னூட்டங்கள், சற்று முன்வந்த சக
பதிவரின் பின்னூட்டத்தைத் பதிவில் பார்த்து
விட்டு, அவரை மறைமுகமாக ஏசி அல்லது தாக்கி
எழுதப்பெற்றும் வருகிறது. அதை வெளியிடாமல்
மட்டுறுத்தினால் ஏன் வெளியிடவில்லை என்று
அடுத்தடுத்துப் பின்னூட்டங்கள் வருகின்றது

இதை - இந்த நிலையை - கட்டற்ற கொடுமை
என்று குறிப்பிட்டால அதற்கும் எதிர் பின்னூட்டம்
வருகிறது. இனிமைக்கும் கொடுமைக்கும்
விளக்கம் கேட்டுப் பின்னூட்டம் வருகிறது

பதிவில் எழுதுவதையே கேள்விக் குறியாக்குகிறார்கள்!

கண்ணியமாக இல்லாத பின்னூட்டங்கள் குப்பைத்
தொட்டிக்குத்தான் போகும்.
எழுதி உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்
--------------------------------------------------------------------
பின்னூட்டத்தை மட்டுறுத்துவது எனது உரிமை!
என்னுடைய வகுப்பறைக்கு வந்து செல்லும்
நல்ல உள்ளங்களின் மரியாதையைக் காப்பது
காப்பது எனது கடமை!

எனது உரிமையிலும் கடமையிலும் குறுக்கிட
யாருக்கும் அனுமதி இல்லை. அதை நினைவில்
கொள்க!

புகையும் சுருட்டுடன் 'துப்பாக்கி' விஜய்!

Posted: 01 May 2012 01:09 AM PDT

இன்று மே 1 என்பதால், சென்டிமென்டாக முக்கிய படங்களின் முதல் ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றனர்.

கமல் தனது விஸ்வரூபம் ஸ்டில் மற்றும் ட்ரைலரை வெளியிட்டதைப் போலவே, நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தின் முதல் போஸ்டர் டிசைனை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

இந்த போஸ்டரில் பெரிய சுருட்டைப் பிடித்துக் கொண்டிருப்பது போல விஜய் போஸ் தருகிறார். இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீசாக நடித்துள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கி என்ற தலைப்பை துப்பாக்கி மாதிரியே வடிவமைத்துள்ளனர்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

தமிழ்ப் பதிவுல பிரம்மாவிற்காக ஒரு பதிவு

Posted: 01 May 2012 01:08 AM PDT


தமிழ்ப் பதிவுக பிரம்மாவின் கேள்வி:

///உருவாய் அருவாய் உளதாய் இலதாய்... இந்த
கடை வார்த்தைக்கு அர்த்தம் அவரால் இல்லமலும்
போகமுடியும்... he can become non existent too!
என்று நான் விளங்கியிருக்கிறேன். நாத்திகமும்
அவருக்கு ஒத்துப்போகும் என்பதையே நான்
உணர்கிறேன். அல்லது அவர் ஆத்திக நாத்திகங்கள்
இரண்டிற்கும் அப்பாற்பட்டவரோ? நீங்க என்ன
சொல்றீங்க வாத்தியார் ஐயா?///

அடியவனின் பதில்:

நாத்திகம் அவருக்கு (இறைவனுக்கு) ஒத்துப்போகும்.
ஆனால் நாத்திகத்திற்கு இறைத் தத்துவம் ஒத்துப்
போகவில்லை. அவர் இவை இரண்டிற்கும் -
நீங்கள் சொல்லியபடி அப்பாற்பட்டவர்தான்!!!!

இவர்கள் ஒத்துப்போகாதற்கும் இறைவன்தான்
காரணம் என்று எண்ணுகிறேன் இருதுருவங்கள்
இருப்பதுபோல - இரவு, பகல் இருப்பதுபோல -
இன்பம், துன்பம் இருப்பதுபோல - உறவு, பகை
இருப்பதுபோல - பெருமை, சிறுமை
இருப்பது போல, வறுமை, செழுமை
இருப்பதைப்போல, துணை, தனிமை
இருப்பது போல இதுவும் இருக்கட்டும் என்று எண்ணிச்
சும்மா இருக்கின்றாரோ என்னவோ:-)))))

ஆனால் ஆத்திகம், நாத்திகம் என்ற பேதம்
இறைவனுக்கு இல்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும்
இரு சாராருமே அவருக்குச் சமமானவர்கள் தான்
அவரால் படைக்கப்பட்ட இந்த உலகத்தின் பிரஜைகள்
அவர்கள். இந்தச் சம நோக்குப் பார்வையால்தான்
அவர் எல்லாம் வல்லவர் என்ற நிலையில் உள்ளார்.
That is the main reason for His existence as The Almighty
இல்லையென்றால் அவர் வெறும் mighty ஆகத்தான்
இருப்பார். எல்லாம் என்ற நிலை காணாமல் போயிருக்கும்.
வெறும் வல்லவர் என்றுதான் அவர் சொல்லப்படுவார்.

"ரவுசு பண்ணாம, முடக்கடி செய்யாம ஒத்துமையா
இருக்கோணும்டா சாமிகளா" என்று ஒரு தாய் தன்
பிள்ளைகளிடம் சொல்வது போலத்தான்
கடவுளின் சித்தமும். பிள்ளைகள் கேட்டால்தானே?

இங்கே நடக்கும் நாத்திக ஆத்திக சண்டைகளுக்கு
அவர் எப்படிப் பொறுப்பாவார்?

இலதாய் = இல்லாததாய் (non existent)
உளதாய் = உள்ளதாய்

உருவாய் அருவாய் உளதாய் இலதாய் என்பதை
உருவம் உடையவராகவும், உருவம் இல்லாதவராகவும்
உலகத்தோரின் கண்களில் படும்படி உள்ளவராகவும்
உலகத்தோரின் கண்களுக்கு (படாதபடி) இல்லாதவராகவும்
அல்லது தெரியாதவராகவும் என்று பொருள் கொள்ளல் வேண்டும்

நாத்திகத்தைப் பற்றிய எந்தவிதமான செய்திக்கும்
இந்தப் பாடலில் வாய்ப்பே இல்லை! ஏனென்றால்
பாடலை எழுதியவர் அருணகிரிநாதர்.
அவரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

விளக்கம் போதுமா தமிழ்ப் பதிவுலகப் பிரம்மாவே?

நாத்திகம் பற்றி நான் நன்கறிவேன். ஏனென்றால்
வசந்த காலத்தில் நான் நாத்திகனாக இருந்தவன்.
"தில்லை நடராசரையும் ஸ்ரீரெங்க நாதரையும் பீரங்கி
வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ?" என்று
சொல்லிய அன்பர்களோடும் நண்பர்களோடும்
ஒன்றாக இருந்தவன்.

நாத்திகக் கொள்கைகளுக்கு உரம் சேர்க்க ஆதாரங்
களைத் தேடி அலைந்தபோதுதான் ஆத்திகம் என்னைப்
பிடித்துக் கொண்டு விட்டது.

பிடிக்கு ஆளான கதை பெருங்கதை!

செல்லாவே வரலாமா? பதிலைத் தரலாமா?

Posted: 01 May 2012 01:06 AM PDT


தேனினும் இனிய, மலரினும் மெல்லிய எனது
வகுப்புக் கண்மணிகள் அனைவருக்கும்,
வாத்தியாரின் காலை வணக்கங்கள்!

என் மதிப்பை அதிகம் பெற்றவறான நம் வகுப்பு
மாணவர் செல்லா அவர்கள், நேற்று நடத்திய
பாடத்தில் ஏற்பட்ட சந்தேகங்களைத் தீர்த்துக்
கொள்ளூம் முகமாகப் போஸ்டர் அடித்து
ஒட்டியிருக்கிறார். (அதாவது தனிப் பதிவு
போட்டிருக்கிறார்) அதை அவர் வகுப்பறையிலே
கேட்டிருக்கலாம். இருந்தாலும் பரவயில்லை!
பதில்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

சிவப்பு வண்ண எழுத்துக்கள் கேள்விகளாகும்
கருப்பு வண்ண எழுத்துக்கள் பதில்களாகும்

1. * கடவுள் உண்டா இல்லையா? ….

பதிவை மீண்டும் படிக்கவும். பதில் அதில்
உள்ளது! இருந்தாலும் என் வகுப்பு மாணவராகிய
உங்களுக்காக மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.
கடவுள் இருக்கிறார். சர்வ நிச்சயமாக இருக்கிறார்

2. *கடவுள் என்றால் என்ன?

கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர்
கடவுள் எனப்படுபவர் உலகம், உயிர் ஆகியவற்றின்
தோற்றத்துக்குக் காரணமாகக் கருதப்படும் மனித
ஆற்றலால் அறிய முடியாதபடி இருப்பதாகக்
கருதப்படும் மேலான சக்தி - God

கடந்தவர் என்றால் எல்லாநிலைகளையும் தாண்டிய
நிலையில் உள்ள மேலானவர் என்று பொருள்படும்

3.* அவர் எப்படி இருப்பார்?

உருவமும் அருவமும அற்றவர் கடவுள்
உருவம் = மனிதன், விலங்கு முதலியவற்றின்
வெளித்தோற்றம்: முழு உடல் (Human, Animal)
Figure, body, shape
அருவம் = உருவம் இல்லாதது that which has no form

4. *முக்காலம் உணர்ந்தவர் என்பது உங்கள் பதிலா?

இல்லை! அதற்கும் மேலானவர் அவர்.
காலமே அவர்தான்!
He is the creator and everyting in the space
is created by him.
In short he is the everything
The space is a part of creation, space cannot be
separate from its material cause for this universe.
So what is space?
Space is the Lord.
Time is also the Lord

5. மற்ற உதிரிக்கேள்விகளில் மூன்றில் இரண்டு
நீங்கள் பார்த்த திரைப்படத்தை வைத்துக்
கேட்டிருக்கின்றீர்கள். அதற்குரிய விளக்கங்களை
அப்படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதியவர்
களைக் கேட்பதுதான் உசிதமானது. அவர்களையே
கேளுங்கள். (எனக்காகவும் சேர்த்துக் கேளுங்கள். )

(* திருவிளையாடல்கள்: "மக்களை சோதிப்பது
மற்றும் சோதனைக்கு உள்ளாக்குவது இதில்எல்லாம்
சிறந்தவர் நீங்கள் தான்" என்று பரம சிவனைப்
பார்த்து படத்தில் கேட்பார் பார்வதி!
முக்காலத்தையும் அறிந்த சிவனுக்கு சோதனை
ஏன் தேவைப் படுகிறது? சந்தேகம் தானே
சோதனைகளின் தாய்! அப்படியானால்
அவருக்கு முக்கா(லு) லம் தெரியாதா முழுவதும்
தெரியாதா? இந்த லட்சனத்தில் "நல்லவங்களை
ஆண்டவன் சோதிப்பான் … ஆன கைவிட மாட்டான்
…என்று வெட்டிச் சவடால்கள் வேறு. நம்மை
மாதிரி வெங்காயங்களை சோதித்துதான் அறியும்
நிலைமை / கொடுமை ஆண்டவனுக்கு ஏன் ஏற்பட்டது?)

6.* அடித்துக் கொண்டு சாவார்கள் என்ற விசயம்
தெரிந்தே தான் இவ்வுலகைப் படைத்தாரா?

யார் சொன்னது மதங்களை அவர் படைத்தார் என்று?
Only one - That is God கடவுள் ஒருவர்தான் என்று
பதிவில் சொல்லியிருக்கிறேன். மீண்டும் படியுங்கள்

அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதுபோல
"ஒன்றே குலம் - ஒருவனே தேவன்" என்பதுதான்
என்னுடைய சித்தாந்தம். அதைத்தான் பதிவிலும்
சொல்லியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை
பதிவைப் படித்துப் பாருங்கள்.

மதங்களைப் பற்றிய உங்கடைய சந்தேகங்களுக்கு
அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே கேளுங்கள்.
மதங்களைப் பற்றிப் பேசும் உரிமையை
யாரும் எனக்குத் தரவில்லை.
அது என்னுடைய வேலையும் அல்ல!

7.* எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை(!)
ஏன் நம்பச் சொல்கிறார்கள்? அதன் அவசியம்
என்ன! சிந்தனை செய் மனமே!

"எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றை" என்று
நீங்களே குறிப்பிட்டு என் வேலையைச் சற்று
எளிதாக்கி விட்டீர்கள்!

உங்களை யார் நம்பச் சொன்னது?
எதை நம்பச்சொன்னது?
உங்களை நம்பச்சொல்வதற்கு யாருக்கும்
அதிகாரமில்லை. அவசியமுமில்லை.
உங்களை நம்பவைக்க வேண்டிய
அவசியம் என்ன?
அதனால் கிடைக்கப் போகும்
பலன் என்ன?
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.

8* ஒரு மகாசக்தியா கடவுள்? தன் பக்தனையே
நம்பாத கடவுள் தன்னை சாதாரண மனிதர்கள்
நம்ப வேண்டும் என்று சொல்வது .. அவரது
மரியாதையைக் குறைக்கும் செயலல்லவா!?

கடவுள் எப்போது தன்னை நம்பும்படி சொன்னார்?
அல்லது கேட்டுக்கொண்டார்?
நீங்களும் நானும் நம்புவதால் அவருக்கு
என்ன ஆகப் போகிறது?
உங்களிடமும், என்னிடமும் மரியாதை குறைவதால்
அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது?
ஆதாலால் இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல
கவலையை விடுங்கள்!

9* எந்த சக்தியும் இல்லாத என்னிடம் " எப்படி
சாத்தானை சமாளிப்பது" என்ற புத்தகத்தை
ஏன் கொடுக்கிறார்?! போராளியாயிருக்க
வேண்டியவர் … புத்தகாசிரியர் ஆன கொடுமை
ஏன் நிகழ்ந்தது! ????

கடவுளா உங்களிடம் அதைக் கொடுத்தார்?
இல்லை அனுப்பி வைத்தாரா?
சரியாகச் சொல்லுங்கள்.
அந்தப் புத்தகத்தை படித்துப் பார்க்காமல்
நான் எப்படிப் பதில் சொல்வது?
ஆகவே இந்தக் கேள்வியை சாய்ஸ்ஸில்
விட்டு விடுகிறேன். அது எந்த அச்சகத்தில்
அடிக்கப் பெற்றது என்று பாருங்கள்
அங்கே சென்றால் இந்தக் கேள்விக்குச் சரியான
விடை கிடைக்கலாம்!

10*இவை அனைத்தும் ஆசிரமங்கள் ஆசிரமங்களாக
நான் பயணித்த போது எனக்குள் ஏற்பட்ட கேள்விகள்.

தொடர்ந்து செல்லுங்கள்.நிச்சயம் ஒரு நாள்
தெரியவரும். அதுவும் ஒரு தேடல்தான்.

இன்றைய இளைஞரெல்லாம் டாஸ்மாக் பார்களிலும்,
ரெஸ்டாரென்ட்களிலும் தங்கள் பொழுதையும்
(நேரத்தையும்) பொருளையும் (பணத்தையும்) வீணாக்கும்
போது - நீங்கள்தான் ஆசிரமங்களில் பொழுதைக்
கழித்திருக்கின்றீர்கள்.

கேட்பதற்கு சந்தோசமாகவும், பெருமையாகவும்
இருக்கிறது. Jeep it up!
என் வகுப்பின் நல்மாணவன் விருது உங்களுக்குத்தான்.
(நல்லாசிரியர் என்பதுபோல)
திருமதி பிரதிபா பாட்டீல் அவர்களுக்குப் பரிந்துரை
செய்கிறேன்.

நன்றி, வணக்கத்துடன்,
வாத்தி (யார்)
------------------------------------------------------------
திரு.செல்லா அவர்களுக்கு முடிந்தவரை பதில்
சொல்லிவிட்டேன்.

வேறு இரண்டு கேள்விகள் பின்னூட்டத்தில்
வந்துள்ளன. கீழே கொடுத்துள்ளேன்

1.ஒரு அன்பர் கேட்டுள்ளார். இருபது ஆண்டு
களுக்கு முன்பு செத்துப்போன என்னுடைய
பாட்டியை உங்கள் கடவுள் எழுப்பித்தருவாரா?
(அதாவது மீட்டுத் தருவாரா?)
அப்படித் தந்தால் கடவுளை நம்பத் தயாராக உள்ளேன்

அவராது பரவாயில்லை. பாட்டிமேல் உள்ள
பாசத்தில் தெரியாமல் கேட்டிருக்கிறார் என்று
நினைத்துக் கொள்ளலாம்
அடுத்த கேள்வியைப் பாருங்கள்

2.உணர்வது பற்றி எழுதியிருக்கிறீர்கள்.கண்களால்
பார்க்காமல் அல்லது கைகளால் தொடாமல்
ஒன்றை எப்படி உணர்வது? உதாரணத்திற்கு
காதல் உணர்வு என்கிறார்களே அது காதலி
கிடைத்த பின்பு, அவளைத் தொட்டுத் தழுவிய
பிறகுதானே ஏற்படும். ஆகவே கடவுளையும்
நான் தொட்டுத் தழுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
நான் கடவுளை நம்பத்தயார்!

இவர்கள் இருவருக்கும் என்ன பதில் சொல்வது
என்று என் சிற்றறிவிற்குத் தெரியவில்லை.
தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் உள்ளது
என்று அன்பர் ஒருவர் சென்ற வாரம் தன்னுடைய
பதிவில் குறிப்பிட்டிருந்தார்

இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
"இணையத்தில் கட்டற்ற கொடுமையும் உள்ளது!"

It is my turn now!
கேள்வி அன்பர் செல்லாவிற்கு - கடைசி வரியில்
குறிப்பிட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
மற்றவர்களும் பதில் சொல்லலாம்!

------------------------------------------------------------------

இன்றைக்குப் பாடம் ஈஸி'யானது!

Posted: 01 May 2012 01:01 AM PDT


இன்றைக்குப் பாடம் ஈஸியானது;
கலக்கலானது; குஷியானது
எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்
கொள்ளுங்கள்

வகுப்பறையில்
தினமும்
சீரியசான பாடங்களையே
நடத்திக் கொண்டிருந்தால் -
வகுப்புக் கண்மணிகள்
களவடித்து விடுகிறார்கள்:
டேக்கா கொடுத்து விடுகிறார்கள்;
கட் அடித்து விடுகிறார்கள்
அதனால் இன்று செமெ ஈஸியான பாடம்

படம் பார்த்துவிட்டு ஒரே ஒரு கேள்விக்கு
மட்டும் பதில் சொல்லிவிட்டுப் போய்விட
வேண்டியதுதான்

Over to lessons:
--------------------------------------



ஒன்று


இரண்டு


மூன்று


நான்கு


ஐந்து


ஆறு

ஏழு

எட்டு

===================================================

கேள்வி இதுதான். பார்த்த எட்டுப் படங்களில்
கருத்தும், படமும் எந்தப் படத்தில் சூப்பராகப்
பொருந்தியிருக்கிறது அல்லது உங்களை
மிகவும் கவர்ந்த படம் எது?

எழுதுங்கள்!

அடுத்த வகுப்பில் விளையாட்டு
நடந்து கொண்டிருக்கிறது.
பார்த்துவிட்டுப் போங்கள்


அனைவரின் வேண்டுகோளும் ஏற்கப்பெற்றது
1.10.2007 திங்கட்கிழமை முதல்
'ஜோதிடவகுப்பு' மீண்டும் துவங்கும்!

செந்தழல்ரவி' யாரின் கவனத்திற்கு!

Posted: 01 May 2012 12:56 AM PDT


செந்தழல்ரவி' யாரின் கவனத்திற்கு!

"What the IT industry needs and what the colleges offer" என்ற
ஒரு சிறப்பான செய்தியை Chief learning officer, Sun Microsystems,
Bangalore சேர்ந்த அதிகாரி கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருக்கிறார்.

இந்து நாளிதழின் கோவைப் பதிப்பில் வந்த செய்தி அது .
மற்ற ஊர்ப் பதிப்புகளில் வந்துள்ளதா என்று தெரியவில்லை

Information age is history, today is participation age!
என்று அசத்தலாகச் சொன்ன அவர், இந்த ஆண்டு 19,000 Fresh
Engineering Graduates தேவை என்றும் சொல்லியிருக்கிறார்.

வேலை வாய்ப்பு வலையிதழைச் சிறப்புடன் நட்த்திக்
கொண்டிருக்கும் திருவாளர் செந்தழல் ரவி அவர்களுக்கு
இந்த செய்தி உபயோகப்படலாம். மற்றும் நம் வலைப்பதிவுகளில்
வளைய வரும் கண்மணிகளுக்கும் பயன் படலாம்

ஆகவே பதிவில் வெளியிட்டுள்ளேன்
*******************************************************
மேலும் ஒரு செய்தி!


------------------------------------------------------------------------------

கிழியும் ஆனால் கிழியாது - பகுதி 2

Posted: 01 May 2012 12:52 AM PDT


இதன் முதல் பகுதியைப் படிக்காதவர்கள், படித்து
விட்டு வாருங்கள் அப்போதுதான் இந்தப் பதிவில்
சில வரிகள் புரியும்!
-------------------------------------------

"அய்யா வகுப்பில் ஜோதிடப்பாடத்தை ஏன் தொடர்ந்து
எழுத வில்லை? அடுத்த பாடம் எப்போது? " என்று
பலபேர்கள் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள்

"நன்றாக வந்து கொண்டிருக்கிறது - பாடம் நடத்தும் முறை
அருமையாக இருக்கிறது" என்று வகுப்பிற்கு வந்து போய்க்
கொண்டிருந்த பலரும் சொல்ல, சதாப்தி விரைவு வண்டியைப்
போல சென்று கொண்டிருந்த அந்தத் தொடரை முக்கியமான
பிரச்சினை ஒன்றின் காரணமாக நிறுத்திவைக்கும்படி
ஆகிவிட்டது.

என்ன பிரச்சினை? சொல்கிறேன்.

நமக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக்கொடுப்போம்
என்ற சிந்தனையில்தான் படிப்பதற்கு மட்டுமல்ல சொல்லிக்
கொடுப்பதற்கும் சற்றுச் சிரமமான ஜோதிடப் பாடத்தைக்
கையில் எடுத்தேன்.

ஜோதிடம் ஒரு கடல். எததனை வருடங்கள் வேண்டு
மென்றாலும் அதைப் பற்றிச் சுவாரசியமாகத் தொடர்ந்து
எழுதலாம்

நூற்றுக் கணக்கான celebrities எனப்படும் பிரபலங்களின்
ஜாதகங்களை உதாரணமாகக் கொண்டு கற்றுணரலாம்.
உதாரணங்களைச் சான்றுடன் படிக்கும்போது மனம்
நெகிழப் படித்துத் தேறலாம்.

நான் ஜோதிடப் பதிவைத் துவங்கும் போது பலமான
யோசனைகளுக்குப் பிறகுதான் துவங்கினேன்.

ஆரம்பத்தில் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாதவர்
களிடமிருந்து எதிர்ப்பு வந்தது அவர்களைக் கண்டு
கொள்ளாமல், என் பணியைத் தொடர்ந்து செய்தேன்.

முப்பத்தியிரண்டு அத்தியாயங்கள்வரை எழுதினேன்.
இன்னும் பதினெட்டு பகுதிகள் வரை எழுதினால்
அடிப்படைப் பாடங்கள் முடிந்து விடும். அடிப்படைப்
பாடங்கள்வரை நடத்தலாம் என்றிருந்தேன்

அதற்குப் பிறகு advanced study எனப்படும் மேல்
நிலைப் பாடங்களுக்கு - உரிய புத்தகங்களின் பெயர்களைக்
கொடுத்து விருப்பப்படுபவர்களைப் படித்துக் கொள்ளச்
சொல்லலாம் என்றிருந்தேன்.

'ஆசான் இல்லாத வித்தைபாழ்' என்னும் மொழிப்படி
எங்களால் படித்துப் புரிந்து கொள்ளமுடியாது - அதையும்
எழுதுங்கள் என்ற வேண்டுகோள் வந்தால், அதை
அந்த நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும்
எண்ணியிருந்தேன்

Advance study யின் முக்கியமான பாடங்களை
ஐந்து பகுதிகளாகப் பிரித்து எழுதலாம்.
100 முதல் 150 அத்தியாயங்கள் வரை வரும்
Each chapter 4 pages - A4 size paper அளவு எழுத
வேண்டியது வரும். அதுவும் ஒரு உத்தேசமான
அளவுதான். அந்த அளவிற்கு எழுதி, தட்டச்சு செய்து
பதிவிடச் சாத்தியமாகுமா என்றால் கொஞ்சம்
சிரமம்தான். படிப்பவர்கள் கொடுக்கும் உற்சாகத்தைப்
பொறுத்து அதுவும் சாத்தியமே!

சாத்தியம் இல்லாதது என்று எதுவுமே இல்லை!

ஜோதிட வகுப்புக்கு வந்தவர்களீல் Blogger account
வைத்திருந்து உள்ளே வந்தவர்களைவிடப் புதுமுக
வாசகர்கள்தான் ஏராளம். அவர்கள் எல்லாம் தமிழ்
மணத்தின் உள்ளே வந்து செல்கின்றவர்கள். அதோடு
ஒருவருக்கு ஒருவர் சொல்லி அவர்கள்
வருகையும் அதிகமாகிக் கொண்டே போனது.
(Hit counter மூலம் நான் அறியவந்தேன்)
நிறையப் பெண் வாசகர்களும் வந்து
படித்துக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு வந்த மின்னஞ்சல்களில் பாதிக்கும் மேல்
ஆங்கிலத்தில்தான் வந்தன. காரணம் தமிழில் தட்டச்ச
வசதி இல்லை அல்லது தெரியாது அய்யா என்று
அவர்களே சொல்லியிருந்தார்கள்

தினமும் சந்தேகம் கேட்டுப் பல மின்னஞ்சல் வரும்
எழுதிய பாடங்களிலும் கேள்விகள் கேட்டார்கள்.
அதோடு எழுதப்பட்ட பாடத்திற்குச் சம்பந்தமில்லாமலும்
கேள்விகள் கேட்டார்கள்

சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலை மின்னஞ்சலில்
சொல்லும்படி ஆயிற்று. பொறுமையோடு செய்தேன்

அடுத்து இரண்டொருவர் தங்கள் ஜாதகக் குறிப்புகளை
அனுப்பி பலன் கேட்டார்கள். சொன்னேன்.

ஆனால் அது வளர்ந்து கடைசியில் ஜாதகக் குறிப்புகளை
அனுப்பிப் பலன் எழுதுங்கள் என்ற வேண்டுகோளுடன்
வரும் கடிதங்கள் அதிகமாகிவிட்டன.

சரி பதில் எழுதாமல் இருப்பது மனிதநேயம் அல்ல,
நேரம் கிடைக்கும்போது எழுதுவோம் என்றால் சம்பந்தப்
பட்டவர்களிடமிருந்து reminders வந்து குவிய
ஆரம்பித்துவிட்டன

கடைசியில் என்னுடைய மற்ற வேலைகளைப் பாதிக்கும்
நிலைமை ஏற்பட்டு விட்டது.

அதோடு சிலர் தங்கள் குழந்தைகளின் பிறப்பு விவரங்களைக்
கொடுத்துப் பலன் எழுதும்படி வேண்டினார்கள்.

குழந்தைகளுக்குப் பன்னிரெண்டு வயது வரை தனிப்பலன்
எதுவும் கிடையாது. அவர்களூடைய பெற்றோர்களின் ஜாதகப்
பலன்தான் அவர்களுக்கும்!

இதை எழுதினால் உடனே தங்களுடைய ஜாதகத்தை அனுப்பி
குழந்தைக்குரிய பிற்காலப் பலனோடு தங்களுடைய ஜாதக
பலன்களையும் எழுத வேண்டினார்கள்.

நேரமின்மையால் தர்ம சங்கடமாகிவிட்டது

அதைவிட வேறு ஒரு பிரச்சினையும் வந்தது.

தங்கள் காதல் நிறைவேறுமா? என்று கேள்வி கேட்டுப்
பெண்கள் உட்பட பலர் எழுத ஆரம்பித்தனர்

நான் அவர்களுக்குப் பதில் சொல்வதா? அல்லது
அவர்களைப் பெற்று வளர்த்து ஆளாகிய தெய்வங்களை
நினைத்துப் பதில் சொல்லாமல் விடுவதா?

எதைச் செய்வது தர்மம்? - சொல்லுங்கள்!

காதல் விவகாரம் - அதன் outcome எனப்படும் கடைசி
முடிவு எல்லாம் ஜாதகத்தைப் பார்த்தால் தெரியவரும்.
கோடிட்டுக் காட்டலாம்.

சாதாரண ஜோதிடனாக இருந்தால் ஜாதகத்தைப்
பார்த்துவிட்டு எழிற்குரியவன் அந்த வீட்டிற்குப்
பன்னிரெண்டாம் வீட்டில் இருக்கிறான்
ஆகவே உனக்கு காதல் திருமணம்தான்.
எழிற்குரியவன் சுக்கிரனோடு சேர்ந்திருக்கிறான்
ஆகவே உனக்கு உன் எண்ணப்படிதான் திருமணம்
என்று சொல்லி விட்டுப்போய் விடுவான்.

காதலர் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்து,
அந்தக் காதல் நிறைவேறுமா? நிறைவேறினாலும்
இருவரும் சேர்ந்து வாழ்வார்களா? இல்லை உரசலில்
முடிந்து விடுமா? என்று எல்லாம் அறிந்து சொல்ல
மாட்டான்.

டவுசர் - கிழியும் ஆனால் கிழியாது என்ற நிலைமை
காதலுக்கும் உண்டு. காதல் மகிழ்ச்சியில் முடியும்
ஆனால் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக
இருக்காது என்ற நிலைமை 25% காதல்களில் உண்டு.

திருமணத்திற்குப் பிறகு ஒருவரையொருவர் முழுதாக
அறியும் போது, பலவீனங்கள் தெரியும் போது
மனவாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டுவிடும். அது
சமயங்களில் முறிவுவரை கொண்டுபோய் விட்டுவிடும்.
ஜாதகத்தைப் பார்ப்பவன் இதையும் பார்த்துச் சொல்ல
வேண்டுமா இல்லையா?

Arranged Marriage களிலும் இது உண்டு என்றாலும்,
திருமணங்கள் தோற்கும்போது உதவிக்குப் பெற்றோர்
உற்றார் என்று அனைவரும் வருவார்கள். காதல்
திருமணங்கள் தோற்கும்போது தனிமைதான் துணைக்கு
வரும்!

பெற்ற கடனுக்காக சிலரைப் பெற்றோர்கள்
மன்னித்து ஏற்றுக் கொள்ளலாம்

அதனால்தான் கவியரசர் தன்னுடைய பாடல் வரிகளில்
இப்படிச் சொன்னார்

"காதலை இலக்கியத்திற்கு விட்டு விடுங்கள்
கல்யாணத்தைப் பெற்றோரிடம் விட்டு விடுங்கள்!"

இதையெல்லாம் அவர்களிடம் சொல்வது முறையற்ற
வேலையாகிவிடாதா?
----------------------------------------
வலையில் எழுதுவது எனக்குப் பொழுது போக்கு!
ஒரு ஆர்வத்தில் ஆதங்கத்தில் எழுதுகிறேன்

நான் தொழில்முறை ஜோதிடன் அல்ல!
எனக்கு வேறு தொழில் உள்ளது.
அதை நான் கவனிக்க வேண்டாமா?

நாள் ஒன்றிற்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே
பதிவுகளுக்காக நேரம் ஒதுக்க முடியும்.
வாரத்தில் இரண்டு அல்லது மூன்று பதிவுகள் மட்டுமே
வகுப்பறையில் எழுத முடியும்.

பாடங்களைப் பதிதல், பின்னுட்டங்களுக்குப் பதில்
சொல்லுதல். மின்னஞ்சலில் வரும் சந்தேகங்களுக்குப்
பதில் சொல்லுதல். அதற்கும் மேலாக, பிறந்த
விவரங்களை அனுப்புபவர்களூக்கு softwareல் ஜாதகம்
கணித்து, ஆராய்ந்து பார்த்துப் பதில் எழுதுதல்
என்று பளு ஏறிக்கொண்டே போனால் நான் என்ன
செய்ய முடியும்?

ஜோதிடப் பதிவுகளை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில்
தினமும், சந்தேகங்கள் மற்றும் ஜாதகப் பலன்களைக்
கேட்டு என்று சராசரியாகப் பத்திற்கும் மேற்பட்ட
கடிதங்கள் - மின்னஞ்சலில் வந்தன.
அப்படி வந்ததில் பதில் அனுப்பியதுபோக அனுப்ப
வேண்டியவை என்னுடைய மின்னஞ்சல் பெட்டியில்
(Mail Box) இன்றும் நிறைய உள்ளன!

அவ்வளவு பேர்களுக்கும் எப்படி பதில் எழுதுவது?
நேரததிற்கு எங்கே போவது?

அதனால்தான் ஜோதிடப் பாடத்தை நிறுத்தி வைத்திருக்கிறேன்

இப்போது, சார் என்ன ஆயிற்று?
மீண்டும் ஜோதிடப் பாடம் எப்போது?
என்று கேட்டு நிறைய மின்னஞ்சல்கள் வந்து
கொண்டிருக்கின்றன!

அவர்களுக்கெல்லாம் இதுதான் பதில்

பாடம் - முடிந்து விட்டது ஆனால் முடியவில்லை!
(அப்பாடா - தலைப்பை நியாயப்படுத்தும் வரியை
எழுதிவிட்டேன்)
-----------------------------------------
என் நிலைமையைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்
என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம் - உங்கள்
மேலான யோசனைகளைச் சொல்லுங்கள்!

பின்னூட்டமாகவோ அல்லது மின்னஞ்சலிலோ
உங்கள் பதிலை அனுப்பலாம்.
கால அவகாசம் பதினைந்து நாட்கள்.
எதற்கு பதினைந்து நாட்களா?
இன்று இந்தப் பதிவைப் படிக்காதவர்
அடுத்த வாரம் படிக்க நேரிடலாமில்லையா?
அதனால் பதினைந்து நாட்களுகுள் உங்கள்
பதிலை எழுதுங்கள்