Tamilosaii

Tamilosaii


பார்த்தீர்களா நாட்டு நிலவரம் எப்படிப் போகின்றது என்று? கொக்கோ கோலா நிறுவனம் செய்யும் கட்டிப்புடி வைத்தியம்

Posted: 23 Apr 2012 05:34 PM PDT

உலகின் மென்பான உற்பத்தி ஜாம்பவான்களான கொகாகோலா நிறுவனம் வித்தியாசமான முறையில் விற்பனை மேம்படுத்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மென்பானம் அருந்துவதற்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, மென்பான இயந்திரத்தை கட்டிப்பிடித்தால் போதும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வித்தியாசமான மென்பான இந்திரம் சிங்கப்பூரில் காணப்படுகின்றது.

ஹக் மீ (Hug Me) என்ற வார்த்தையுடன் கூடிய இந்த இயந்திரத்தை கட்டிப் பிடித்தால் மென்பான கேன் கிடைக்கும்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில் இந்த மென்பான இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

கொகாகோலா நிறுவனத்தின் ஓபன் ஹப்பினஸ் என்னும் விற்பனை மேம்படுத்தல் திட்டத்தின் அடிப்படையில் இந்த மென்பான இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் தொழில்நுட்​பத்தில் மின்கலங்களை சார்ஜ் செய்யலாம்

Posted: 23 Apr 2012 09:24 AM PDT

மின்கலங்களை கொண்டு இயங்கும் இலத்திரனியற் சாதனங்களை மின்னேற்றுவதற்கு தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் வெகு விரைவில் அறிமுகமாகின்றது.
இதன் மூலம் கார்கள், மடிக்கணணிகள், கைப்பேசிகள் என்பவற்றின் மின்கலங்களை சார்ஜ் செய்ய முடியும்.

இதுதவிர மின்சக்தியில் இயங்கும் சஞ்சிகைகள் என்பவற்றையும் இத் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கார் போன்றவற்றை இலத்திரனியல் பற்தூரிகை எனும் கருவியைப் பயன்படுத்தி தொடுகை முறை மூலம் சார்ஜ் செய்யும் வசதி காணப்படுகின்றது.

எனினும் வயர்லெஸ் நவீன தொழில்நுட்பம் மூலம் அனைத்து வகையான இலத்திரனியல் கருவிகளுக்கும் மின்சாரத்தை வழங்கும் முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.