Tamilosaii |
- பேஸ்புக்கிற்கான Short cut Keyக்கள்
- தம்புள்ள பள்ளிவாசலை அகற்றுமாறு சமய விவகார அமைச்சர் டி.எம்.ஜயரட்ன உத்தரவு! வேறு இடத்திற்கு மாற்ற முஸ்லிம் தரப்பினர் இணக்கம்!
- பிரான்ஸ் அதிபர் தேர்தல்: அதிபர் சர்கோசிக்கு பின்னடைவு
| பேஸ்புக்கிற்கான Short cut Keyக்கள் Posted: 22 Apr 2012 06:30 PM PDT
அதாவது கூகுள் குரோமில் Alt Key பயன்படுத்தும் அதேவேளை Firefoxல் Shift+Alt Key பயன்படுத்த வேண்டும். குரோமிற்கான Short cut Keyக்கள் Alt+m: New Message Firefoxல் பயன்படுத்தும் போது உதாரணமாக, |
| Posted: 22 Apr 2012 06:01 PM PDT தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இஸ்லாமிய சமய தலைவர்கள், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, பிரதியமைச்சர்கள், அப்துல் காதர், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ன உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் உள்ள நிலையில் இத்தகைய சிறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, இனங்கள், மதங்களிடையே அநாவசிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது” எனவும் பிரதமர் கூறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எம்.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் குறித்த பள்ளிவாசலுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டார். அத்துடன் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் மற்றும் தம்புள்ள பிரதேச செயலாளர் ஆகியோரை அமைச்சர் ஹக்கீம் சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார். இரண்டாம் இணைப்பு இதன்போது, பள்ளிவாசலை வேறு பொருத்தமான இடம் ஒன்றுக்கு மாற்ற இணக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதாக இலங்கை பிரதமர் உறுதியளித்துள்ளார். பள்ளிவாசலை எப்போது இடம்மாற்றுவது என்று முடிவு எடுக்கப்படாது போனாலும் தற்போது முத்திரையிடப்பட்டுள்ள பள்ளிவாசல் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் இருந்த வந்த இந்தப் பள்ளிவாசலை அகற்றக் கோரி பௌத்த பிக்குகளும் சிங்களப் பேரினவாத சக்திகளும் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்றை நடத்தினர். தம்புள்ள புனித பிரதேசத்தில் இருந்து பள்ளிவாசல் அகற்றப்பட வேண்டும் என்று கூறி தொழுகை நடத்த விடாமல் தடுத்த அவர்கள் அதை இடிக்கவும் முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதுடன் இலங்கைப் படையினர் குவிக்கப்பட்டு பள்ளிவாசலை இலங்கை அரசு மூடியது குறிப்பிடத்தக்கது. 3ம் இணைப்பு கூட்டமே நடக்கவில்லை என்கிறார் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றுவது குறித்த சந்திப்பு நடக்கவில்லை. இதேவேளை, பிரதமர் அலுவலகத்திலிருந்து இப்படியான அறிக்கையொன்று வெளியாகியிருக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் பெளசி தமிழோசையிடம் கூறினார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் தானோ மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவோ கலந்துகொள்ளவும் இல்லை என்றும் அமைச்சர் பௌசி சுட்டிக்காட்டினார். பல பரம்பரைகளாக தம்புள்ளை நகரில் முஸ்லிம் மக்கள் சென்று வழிபட்டுவரும் பள்ளிவாசலை அகற்றுமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். அண்மையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தபோது முஸ்லிம் நாடுகளும் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களும் ஒட்டுமொத்தமாக அரசாங்கத்தை ஆதரித்திருந்த நிலையில் தம்புள்ளை நகரில் நடத்தப்பட்ட போராட்டத்தின் பின்னணியில் ஏதாவது சக்திகள் இருக்கலாம் என்று கருதுவதாகவும் அமைச்சர் பௌசி மேலும் தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். |
| பிரான்ஸ் அதிபர் தேர்தல்: அதிபர் சர்கோசிக்கு பின்னடைவு Posted: 22 Apr 2012 05:46 PM PDT பிரான்சில் அதிபராக இருக்கும் நிகோலஸ் சர்கோசி பதவிக் காலம் முடிவடைகிறது. எனவே புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அதில்,தற்போதைய அதிபர் நிகோலஸ் சர்கோசி, சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரான்கோயிஸ் ஹோலண்ட் உள்பட பலர் போட்டியிடுகின்றனர். அதிபர் தேர்தலுக்குரிய வேட்பாளராக, தற்போது 10 பேர் களத்தில் உள்ளனர்.
இந்த தேர்தலில், 50 சதவீத ஓட்டுக்கள் யாருக்கும் கிடைக்காவிடில், மறு தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி, இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெறும். பொருளாதார மந்த நிலை, வேலைவாய்ப்பின்மை, வரி விதிப்பு உள்ளிட்ட விஷயங்களை முன்னிறுத்தி, இத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். தனக்கு மீண்டும் வாய்ப்பு அளித்தால், பிரான்ஸ் மேலும் வலுவுள்ளதாக மாறும் என, அதிபர் சர்கோசி உறுதியளித்துள்ளார். ஓட்டுக்கள் எண்ணப்பட்ட நிலையில், சர்கோசியை எதிர்த்து போட்டியிட்ட பிராங்காய்ஸ் ஹோலண்ட் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தில் இருந்த நாடுகளிலும் தேர்தல் நடத்தப்பட்டன. புதுச்சேரியிலும், நான்கு இடங்களில் பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடந்தது. மொத்தமாக 79% மான மக்கள் தமது வாக்குகளை முதற்சுற்றில் வழங்கியுள்ளனர். உடனடியான வக்கு நிலையில் Francois Hollande 28.4% மான வாக்குகளையும் Nicolas Sarkozy 25.5% மான வாக்ககளையும் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தில் Marine LePen 18.2% த்துடன் உள்ளார்.
|
| You are subscribed to email updates from :: தமிழ் ஓசை :: Tamilosaii To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





