தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


ஏழாயிரம் பதிவுகள்-நிர்வாகக்குழுவின் நிகரில்லா உறுப்பினர் மகா பிரபுவை வாழ்தலாம் வாங்க.

Posted: 22 Apr 2012 07:16 PM PDT

இன்னும் பல ஆயிரம் பதிவுகள் தந்து ஈகரையை சிறப்பிக்க வாழ்த்துக்கள் மகா பிரபு.

தீக்கை = தூய தமிழ்ச் சொல்

Posted: 22 Apr 2012 07:13 PM PDT

தீக்கை என்பது தூய தமிழ்ச் சொல். தீக்கை என்ற சொல்லே வடமொழியில் தீக்ஷை (அ) தீக்ஷா என்று திரித்துக் கூறப்பட்டது. வடமொழியில் தீ என்பது கொடு என்றும் 'க்ஷ' என்பது கெடு என்றும் பொருள் தரும். அதாவது கொடுத்துக் கெடுத்தல். அதாவது அருளைக் கொடுத்து மலத்தைக் கெடுப்பது என்று பொருள் தரும். உண்மையில் மலத்தைக் கெடுத்தபின் தூய்மை பெற்ற இடத்தில்தான் அருள் விளங்கும். செம்பொருள் துணிவில் (வடமொழியில் சித்தாந்தம்) மலபரிபாகம் ஆனவுடன்தான் சத்திநிபாதம் ஆகிய அருள்வீழ்ச்சியும் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. எனவே வடமொழியில் ...

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு)

Posted: 22 Apr 2012 07:11 PM PDT

நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள் (ஹீமோபீலியா பற்றிய பதிவு) பேராசிரியர் திருமதி மோகனா சோமசுந்தரம் அவர்கள் ஹீமோபீலியா (Hemophilia) பற்றி முகநூலில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்த கட்டுரையை அவரது அனுமதியின் பேரில் எனது பதிவாக வெளியிடுகிறேன். தாங்கள் படித்துப் பார்த்து தங்களது கருத்தை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். ஹீமோபிலியா (Hemophilia ) என்பது இரத்தம் தொடர்பான ஒரு பரம்பரை நோய். இது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கு மட்டுமே வரும். இதில் பெண்கள் ஹீமோபிலியா ...

நெல்லையிலிருந்து அமெரிக்கா போன 'ஹில்' கிருஷ்ணன்... நியூயார்க் நகராட்சி தேர்தலில் போட்டி!

Posted: 22 Apr 2012 07:06 PM PDT

நெல்லையிலிருந்து அமெரிக்கா போன 'ஹில்' கிருஷ்ணன்... நியூயார்க் நகராட்சி தேர்தலில் போட்டி! நெல்லையைச் சேர்ந்தவரான ஹில் கிருஷ்ணன் நியூயார்க் நகர சபை தேர்தலில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார். இப்பதவிக்குப் போட்டியிடும் முதல் தமிழர் மற்றும் இந்தியர் இவர்தான் என்பதால் ஹில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் ஹில் கிருஷ்ணன். மேல் கிழக்கு பகுதியிலிருந்து போட்டியிடும் ஹில் கிருஷ்ணனின் பூர்வீகம் நெல்லை மாவட்டமாகும். ...

"சொற்கள் தொலைந்து போன ஒரு கதை"

Posted: 22 Apr 2012 07:06 PM PDT

கதை சொல்லத் துவங்கிய இரவில் நழுவத்துவங்கியது ஒரு நெடுங் காலத்தின் வேதனை. நக்ஷத்திரங்களெல்லாம் தொலைந்துபோன ஒரு இரவின் குறிப்பை...... ஒரு பிரளயத்திலிருந்து தப்பி வந்த ஒரு பறவையின் எழுத முடியாத இழப்பை... எல்லாச் சொற்களும் தொலைந்துவிட்ட எனது கதையின் வழியாய் உனக்குச் சொல்லத் துவங்கினேன். நெஞ்சின் ஈரம் வற்றி... மனிதர்கள் மடிந்து போன ஒரு தீவின் கதையாய் .... இது உனக்குத் தோன்றக் கூடும். நமது ஆதி வேர்களின் தடயங்கள்... அழிக்கப் பட்டுவிட நமது நிழல்களற்ற சூரியன் எரித்துக் கொண்டிருந்தது ...

தமிழர் ஆரியர் கருத்து வேறுபாடுகள்

Posted: 22 Apr 2012 07:03 PM PDT

மொழிஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், தமிழர் ஆரியர் பற்றிய கருத்து வேறுபாடுகளைத் தொகுத்துள்ளார். அவை பின்வருமாறு; தமிழ்க் கருத்து (சிவப்பு வண்ணத்தில் இருப்பது ஆரியக்கருத்து) 1 பிறப்பாற் சிறப்பில்லை (பிறப்பாற் சிறப்புண்டு) 2 தொழில் பற்றிக் குலம் (பிறப்புப் பற்றிக் குலம்) 3 உழவு, உயிர்களை ஓம்பும் உயர் தொழில் (உழவு, உயிர்களைக் கொல்லும் இழி தொழில்) 4 நால்வருணம் என்பது மனிதர்களின் பாகு பாடு (நால்வருணம் என்பது கடவுளின் படைப்பு) 5 தமிழன் பிராமணனுக்கு தாழ்ந்தவனல்லன் (தமிழன் பிராமணனுக்குத் ...

ஏப்ரல் 22 - உலக புவி தினம்

Posted: 22 Apr 2012 06:28 PM PDT

வாங்க கொண்டாடுவோம்! இன்று.. ஏப்ரல் 22 - உலக புவி தினம். பூமி உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகளும், உயிர்கள் தோன்றி 350 கோடி ஆண்டுகளும், மனித இனம் தோன்றி 50 லட்சம் ஆண்டுகளும் ஆகின்றன. பூமி தோன்றியதிலிருந்தே, பல்வேறு இயற்கை நிகழ்வுகள், பேரிடர்களால் பூமிக்கு ஆபத்தும் அழிவும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்த பின்தான்... பூமிக்கு ஏராளமான பாதிப்புகள் பலபல பரிமாணங்களில் உருவானது. பூமி வெப்பமடைந்து கொதித்துச் சுழலும், வளிமண்டலமும் சிதைவுற்று உயிர்கள் அழிவை ...

"ஆங்கில பெயர் தான் மக்களிடம் போய் சேரும்': சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின்

Posted: 22 Apr 2012 06:21 PM PDT

:""சினிமா படங்களை பொறுத்தவரை ஆங்கிலப் பெயர் தான் மக்களிடம் "ரீச்' (போய்ச்சேரும்) ஆகும்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மகன் உதயநிதி தெரிவித்தார். மதுரையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் படத்தில் சில குறைகள் உள்ளன. முதல் படம் என்பதால், அடுத்து திருத்திக் கொள்வேன். மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலித்த தி.மு.க., பிரமுகரின் தியேட்டர் பிடிபட்டதாக கேள்விப்பட்டேன். கூடுதலாக வசூலிப்பது தவறு தான். படத்தின் தலைப்பான "ஒருகல் ஒரு கண்ணாடி'யை, "ஓகே, ஓகே' என, ஆங்கிலத்தில் சுருக்கியதால், மக்களிடம் ...

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......

Posted: 22 Apr 2012 06:16 PM PDT

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்....... மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார். அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர். முதல் விருப்பமாக, "என்னுடைய ...

''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' - சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

Posted: 22 Apr 2012 06:14 PM PDT

''ஈமு கோழிகளில் முதலீடு செய்யாதீர்கள்!'' -சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு 'ஈமு வளர்த்தால் குபேரனாகலாம்' என்றபடி மக்களிடம் ஒரு லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு, மாதம்தோறும் 6 ஆயிரம், 10 ஆயிரம், 11 ஆயிரம் என விதம்விதமாக ரிட்டர்ன் தருவதாக புற்றீசல் போல பல கம்பெனிகள் புறப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் ஏகப்பட்ட கம்பெனிகள் முளைத்துள்ளன. அதேசமயம், 'இது மக்களை ஏமாற்றும் வேலை' என்று ஈமு வளர்ப்புக்கு எதிராக விவசாயிகள் சங்க பிரநிதிகள் முழங்கிக் கொண்டுள்ளனர். 'மாதம் ...

கவிதை !

Posted: 22 Apr 2012 06:03 PM PDT

நேசம் சொல்ல
வார்த்தைகள் தேடிக் களைத்து,
பொறுக்கியெடுத்த வார்த்தைகளும் உதவாது போக ,
வார்த்தைகளைப் புதைத்து மீண்ட
கல்லறையின் மீது நின்று,
சத்தங்களும் வார்த்தைகளுமின்றி
உரத்துக் கூவுகின்றேன்
உனக்கான நேசத்தை

கவிஞர் : அலெக்ஸ் பால் மேனன் (மாவோயிஸ்ட் களால் கடத்தபட்டுள்ள கலக்டர்
இவர் குறைகுடம் என்ற பிளாக் வைத்துள்ளார்
http://alexmenon.blogspot.in/

ஞான வளர்ச்சி !!!

Posted: 22 Apr 2012 03:22 PM PDT

வளர்ச்சி என்ற ஒன்றை அடைந்திருந்தால் நாம் உண்மை என நினைத்துக்கொண்டிருந்த விஷயங்கள் பல தவறு என்பதை பின்னாளில் உணர்ந்த அனுபவம் இருந்திருக்கும் !எல்லாம் தெரிந்த நபராக மனிதன் இருக்கவே வாய்ப்பில்லை !அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்த மனித அறிவு நாளும்நாளும் அனுபவத்தாலும் கடவுளின் அருளாலும் வெளிச்சம் கூடுகிற அனுபவ முதிர்ச்சி இருந்திருந்தால் இன்றைய கருத்துகள் நாளை நாம் மாற்றிக்கொள்ள கூடும் என்கிற நிதானத்துடன் தடித்த வார்த்தைகள் கிண்டல் கேலிகள் வராது அனுபவம் என்ற பட்டறையில் தன்னை உரமேற்றியவர்களின் குணாதிசயம் ...

இறைதூதர்கள் !!!

Posted: 22 Apr 2012 02:50 PM PDT

உலகம் முழுமைக்குமான ஒரு கடவுளின் தூதர்களாக அடுத்து அடுத்து ராமர் .கிருஷ்ணர் .இயேசு .முகமது வந்தார்கள் !இப்போது எல்லாமே கலப்படைந்து விட்டதால் புதிய இறைதூதர் வந்தால் மட்டுமே அனைத்து மதங்களும் சீராக்க பட்டு கடவுளை நோக்கிய ஒரே மதமாக மாறும் !கல்கி வர்கையின் முன் ஒரு வழிகாட்டியின் மூலம் உலகம் முழுமையும் சமாதானம் உண்டாயிருக்கும் என்பது முகமதுவின் வெளிப்பாடு !அந்த நபர் இந்தியாவிலிருந்து வந்தால் மட்டுமே ==எல்லா மதங்களையும் தனக்குள் அடக்குகிற தாய் மதமான ஆதி இந்து மதம் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும் !அதற்க்கு ...

வர்மக்கலை

Posted: 22 Apr 2012 11:58 AM PDT

- சரவண ராஜேந்திரன் - உலகின் புகழ்வாய்ந்த இனங்கள் அனைத்தும் வீர சாகசங்களால் மட்டுமே அறியப்பட்டன. கோழைத்தனம் குடிபுகுந்த எந்த ஒரு வம்சமும் கொற்றம் அமைத்துக் கோலோச்சியதாக வரலாறு இல்லை. பகைவரிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வோடு, உலகின் ஒவ்வோர் இனமும் வீர விளையாட்டுக்களுக்கான வியூகங்களை வகுத்துக் கொண்டன. ஐம்புலன்களையும் அடக்கி, உடலையும் மனதையும் ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த மனித இனங்கள், உயிர்காக்கும் தற்காப்புக் கலைகளையும் உருவாக்கி, அவற்றைப் ...

பெருமைமிகு இந்தியப் பொக்கிஷங்கள்!

Posted: 22 Apr 2012 11:42 AM PDT

நமக்கு எப்போதும் நம்மைப் பற்றி ஒரு தாழ்வான உணர்வும், மேலைநாடுகள் என்றாலே ஒருவித பிரமிப்பும் உண்டு. ஆனால் மேலைநாடுகள் நாகரீகத்தின் வாசத்தைக் கூட உணராத காலகட்டத்திலேயே கலை, இலக்கியம், கல்வி, நாகரீகம் என அனைத்துத் துறைகளிலும் உச்சத்தில் இருந்தது இந்தியா. பொறியியல் தொழில்நுட்பம், மருத்துவவியல், கணிதம், இயற்பியல், ரசாயனம், விண்வெளியியல், யுத்தம் என்று பல்வேறு பிரிவுகளில் உலகுக்குப் பாடம் கற்றுக்கொடுத்தது பண்டைய பாரத தேசம். இன்று தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் வெளிப்படும் விஷயங்கள் இதைத்தான் ...

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Posted: 22 Apr 2012 11:41 AM PDT

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதன் பின்னணி என்னவென்று தெரியுமா? கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான். தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் ...

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் )

Posted: 22 Apr 2012 11:39 AM PDT

இரண்டு முக அபூர்வ மனிதன்! ( வீடியோ + அறிவியல் விளக்கம் ) நாம் இன்று பார்க்க இருப்பது "ரொபேர்ட் ஒவன் பொப் மெல்வின்" என்ற நபரைப்பற்றியதாகும். அப்படி என்ன இவரிடம் விசேடம் என்று நினைக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம். மெல்வின், 1920 ஆம் ஆண்டில் மிஸூரி (Missouri) யில் பிறந்தவர். குடும்பத்தில் 6 நபர்கள் இருந்த போதும் இவரிற்கு மட்டும் இவர்களின் ஏதோ ஒரு தாத்தாவிடம் இருந்த மரபணுக்கோளாறு கூடவே பிறந்துவிட்டது. ஆம், இவரின் பிரச்சனை இவரின் முகத்தின் ஒரு பகுதி மட்டும் வழமைக்கு மாறாக விசேடமாக வளர்வதாகும்! ஆரம்பம் ...

காந்தியடிகளின் தமிழார்வம்!

Posted: 22 Apr 2012 11:37 AM PDT

காந்தியடிகளுக்குத் தமிழ் மொழி மீது அளவு கடந்த பற்றுதல் இருந்தது. தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் பல தடவைகள் முயற்சி செய்தார். தமிழ் மொழியைக் கற்பதற்கு நேரம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படவும் செய்தார். காந்தியடிகள் தென்ஆப்பிரிக்காவில் சிறிது காலம் வசித்தபோது, அங்குள்ள இந்தியர்களின் நலன் காக்கும் நோக்கத்தோடு சத்தியாக்கிரக இயக்கம் ஒன்றைத் தொடங்கினார். அப்போது மகாத்மாவுக்குப் பெரும் துணையாக இருந்தவர்கள் அங்கு குடியேறியிருந்த தமிழ் மக்கள்தான். பீனிக்ஸ் என்ற ஊரில் காந்தியடிகள் ...

சந்தோஷம் தரும் சோகம்

Posted: 22 Apr 2012 11:34 AM PDT

சோகக்காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை பார்த்தால் சோகமான நிலை ஏற்படும் என்று தான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் விஞ்ஞானம் இதை மாற்றிச்சொல்கிறது. சோகம் நிஜமாகவே மக்களுக்கு (தற்காலிகமாக) சந்தோஷத்தைத் தருகிறது என்கிறது புதிய ஆய்வு ஒன்று. அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் சில்வியா நாப்ளோச் வெஸ்டர்விக் இதுபற்றி ஆய்வு நடத்தினார். அவர் கூறுகிறார்... சோகமான காட்சிகள் நிறைந்த திரைப்படங்கள் உண்மையிலேயே அதைப்பார்க்கும் மக்களுக்கு சந்தோஷத்தைத்தான் ...

ரசிக்க சில புகைப்படங்கள்

Posted: 22 Apr 2012 11:32 AM PDT

3டி கண்ணாடியுடன் வரும் புதிய டேப்லெட்!

Posted: 22 Apr 2012 11:31 AM PDT

3டி கண்ணாடியுடன் வரும் புதிய டேப்லெட்! இமாட்டிக் நிறுவனம் ஒரு புதிய ஆன்ட்ராய்டு டேப்லெட்டைக் களமிறக்குகிறது. இந்த புதிய 7 இன்ச் டேப்லெட்டிற்கு இக்ளைட் பிரிஸ்ஸம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கேமிங் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த டேப்லெட்டில் ஏராளமாக உள்ளன. இந்த இமாட்டிக் டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்பங்களை வழங்குகிறது. குறிப்பாக இதன் 7 இன்ச் டிஸ்ப்ளே 480 x 800 பிக்சல் ரிசலூசனை வழங்குகிறது. 6 பவுண்டு எடை மட்டுமே கொண்டுள்ள இந்த டேப்லெட் 1 ஜிஹெர்ட்ஸ் சிஹ்கிள் கோர் ப்ராசஸர் ...

மனிதர்களைப் புனிதர்களாக மாற்றும் புத்தகங்கள்!

Posted: 22 Apr 2012 11:22 AM PDT

நூல்... இந்த ஒற்றைச் சொல்லுக்குள் நுணுக்கமான பல கருத்துகள் அடங்கியிருக்கின்றன. மனைக் கோட்டம் நீக்கவும், மரத்தின் கோட்டம் நீக்கவும் நூல் உதவும். அதுபோல் மனக் கோட்டம் நீக்கவும் புத்தகம் என்ற நூல் உதவும். `ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என்றார் தமிழ் மூதாட்டி அவ்வை. ஆம்! ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்களை மட்டுமல்ல, பயனுள்ள புத்தகங்களையும் தேடிப் படிக்க வேண்டும். தேடலில் உள்ள சுகம்... சுமையானதல்ல, சுகமானது! புத்தகங்கள் காலமெனும் கடலில் கட்டப்பட்டிருக்கின்றன கலங்கரை ...

வர்மங்களில் மறைந்திருக்கும் மர்மங்கள்

Posted: 22 Apr 2012 11:20 AM PDT

வர்மக்கலை என்பது ஒருவரது உயிரை சேதமில்லாமல் மீட்டு, அவருக்கே மீண்டும் திருப்பி கொடுக்கும் அதி அற்புத தெய்வீக கலையாகும். இந்த உன்னத கலை அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. அதை யாருக்கு கற்றுக்கொடுப்பது என்ற கேள்வி அவருக்குள் எழுந்தபோது, அன்றைய சமுதாயத்தில் வீரத்திலும், விவேகத்திலும் சிறந்து விளங்கிய 18 இளைஞர்களை தேர்ந்தெடுத்தார். அர்ப்பணிப்பு எண்ணம்கொண்டு எதையும் சாதிக்கும் துணிவுடனும், துடிப்புடனும் விளங்கிய அந்த இளைஞர்களுக்கு ``அடவு வர்மம்'' என்று சொல்லக்கூடிய தடுத்து தாக்குதல் முறைகளையும், ...

சரஸ்வதி வீணை

Posted: 22 Apr 2012 11:19 AM PDT

இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனை இசைய வைக்கிற, அமைதியடைய வைக்கிற அருமையான விஷயம் இசை. "இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்'' என்று இசையை பற்றிய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. இசையை தரும் இசைக்கருவி களில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, வீணை. இது ஒருவகை நரம்பு இசைக்கருவி. வீணை இசைக்கருவி பண்டையகாலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும் கி.பி.17-ம் நூற்றாண்டில் தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. இது தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரின் ...

மாமனார் இல்லாத புகுந்த வீடு

Posted: 22 Apr 2012 11:15 AM PDT

மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள். புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகிய இரண்டும் பெரும்பாலும் மாமனார்களிடம் இருக்கிறது. பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் நுழையும் ஒரு பெண்ணின் மனநிலையை மாமனாரால் புரிந்து கொள்ள முடியும். காரணம் வெளி உலக ...

ரூ.1 கோடியில் தயாரிக்கப்பட்ட தமிழ் படம் இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்தது

Posted: 22 Apr 2012 11:13 AM PDT

பிரபு, கலாபவன் மணி, ரம்பா, மோனிகா ஆகியோர் நடித்து, டி.பி.கஜேந்திரன் டைரக்ஷனில், சில வருடங்களுக்கு முன் வெளிவந்த படம், `பந்தா பரமசிவம்.' இந்த படத்தை வர்ஷினி பிலிம்ஸ் சார்பில் பி.டி.செல்வகுமார் தயாரித்து இருந்தார். படம், ரூ.1 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இந்தி படம் `பந்தா பரமசிவம்' படத்தை இந்தியில் தயாரிக்கும் உரிமையை நாகித்வாலா என்ற பட அதிபர் வாங்கினார். படத்துக்கு, `ஹவுஸ்புல்-2' என்று பெயர் சூட்டப்பட்டது. பிரபு நடித்த வேடத்தில் அக்ஷய்குமார் நடித்தார். ரம்பா நடித்த வேடத்தில் ...

முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சை ஈன்ற கோழி - இலங்கையில் அதிசயம்

Posted: 22 Apr 2012 11:09 AM PDT

முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சை ஈன்ற கோழி - இலங்கையில் அதிசயம் கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஈன்ற சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது. வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவரின் வீட்டிலுள்ள ஆறு கோழிகளில் ஒரு கோழி மாத்திரம் முட்டையிடாமல் இருந்தது. ஆனால் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் கோழிக்குஞ்சொன்றை அது ஈன்றது. குஞ்சை ஈன்றபின் அக்கோழி ...

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!.

Posted: 22 Apr 2012 11:04 AM PDT

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!. ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே. ...

சுஷ்மா சுவ்ராஜ் செல்லும் இடம் எல்லாம் பரிசுகளை வாங்கிக் குவிப்பு!..

Posted: 22 Apr 2012 10:55 AM PDT

இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க்கட்சி தலைவி சுஷ்மா சுவ்ராஜ் அவர்களும் மற்றும் காங்கிரஸ் எம்பிமார்களும் செல்லும் இடம்மெல்லாம் பசுரிகளைப் பெற்று வருகின்றனர். அவர்களைப் பார்க்க வரும் எல்லா இலங்கை அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் ஏதாவது ஒரு பரிசுபொதியை இவர்களுக்கு வழங்கிய வண்ணம் இருக்கின்றனர். டக்ளஸ் தொடக்கம் பிள்ளையான், கருணா என எல்லோரும் பரிசுகளை வழங்கிவருகின்றனர். இதில் போதாக்குறைக்கு பசில் மற்றும் மகிந்தரும் தமது பரிசுகளையும் வழங்கியுள்ளனர். சில பரிசுப் பொதிகள் பெரிதாகவும் சில பரிசுப் பொதிகள் ...

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள்

Posted: 22 Apr 2012 10:49 AM PDT

ஏகோஜி கி.பி.1676-ல் தஞ்சையைக் கைப்பற்றி அங்கு முதன்முதலில் மராட்டியர் ஆட்சியை நிறுவினார். அவர் உட்பட மொத்தம் பதின்மூன்று மராட்டிய மன்னர்கள் தஞ்சையில் இருந்து ஆட்சி புரிந்தனர். இவர்களைத்தான் தஞ்சை மராட்டியர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இவர்கள் கி.பி.1676 முதல் 1855 வரை 180 ஆண்டுகள் தஞ்சையில் ஆட்சி புரிந்தனர். இவர்களுள் ஏகோஜி, ஷாஜி, முதலாம் சரபோஜி, துக்கோஜி, பிரதாப் சிங், துல்ஜாஜி, இரண்டாம் சரபோஜி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இவர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராகக் காண்போம். ஏகோஜி ...

ராஜராஜ சோழனின் ஆட்சி அமைப்பு

Posted: 22 Apr 2012 10:13 AM PDT

மாமன்னன் முதல் இராசராச சோழன் காலத்து சோழமண்டல வள நாடுகள் 1. அருண்மொழித் தேவ வளநாடு 2. உய்யக்கொண்டான் வளநாடு 3. இராசராச வளநாடு 4. நித்திவிநோத வளநாடு 5. இராசேந்திர சிங்க வளநாடு 6. இராசாசிரய வளநாடு 7. கேரளாந்தக வளநாடு 8. சத்திரிய சிகாமணி வளநாடு 9. பாண்டிகுலாசனி வளநாடு உலகம் போற்ற ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சி அமைப்பு: இதில் ஆட்சி முறை அமைப்பும், இன்று மாவட்டங்கள் இருப்பது போன்று அன்று எப்படி மண்டலங்களாக ஆட்சிப் பிரிவுகள் இருந்தன என்பதும், ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த அலுவலர்களைப் ...

அறிமுகம்

Posted: 22 Apr 2012 09:58 AM PDT

நான் முருகன்

நான் குவைத்தில் இருக்கிறேன். ஈகரையில் இணைய விரும்புகிறேன்.

நன்றி

:நல்வரவு: கிடைக்குமா?

ஆக்ஸிஜக் கடவுள் மூச்சி திணறுகிறார்

Posted: 22 Apr 2012 09:54 AM PDT

மரங்கள் முழுதும் அழித்தாயிற்று
மனிதர்களே இப்போது நிம்மதியா ?
மண்டை முடியை பம்பட்டையாகவே வையுங்கள்
பாவம் பறவைகள் கூடு கட்டி வாழட்டும்
மர மண்டைகளே உங்கள் புத்தி கூர்மை இல்லாததால்
குத்தாது குயில்களும் இனி கூடு கட்டட்டும்
கொஞ்சம் அமைதியாக இருங்கள்
ஆக்ஸிஜக் கடவுள் மூச்சி திணறுகிறார்.....
அவருக்கு உலோக மாத்திரை கொடுங்கள்
உங்களைப் போல் இரைப்பை அவருக்கும்
இரும்பாகி விட்டதா என விசாரித்து விட்டு

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!

Posted: 22 Apr 2012 09:50 AM PDT

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் .. ********************************* உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ********************************* இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" ...

செங்குந்தர் குலத்தின் வரலாறு

Posted: 22 Apr 2012 09:31 AM PDT

செங்குந்தர் குலத்தின் வரலாறு உங்களிடம் இருக்கின்றதா? இருந்தால் தரமுடியுமா? அதாவது ஒட்டக்கூத்தரின் வரலாறு இருந்தால் எனது மின்னஞ்சலில் அல்லது உங்கள் களஞ்சியத்தில் இட முடியுமா?

-பாஸ்கரன்

(மின்னஞ்சல் வழி பாஸ்கரன் என்ற நண்பர் உதவி கோரியுள்ளார், உதவுங்கள் உறவுகளே)

புதிய உறவு -ர .சிவா

Posted: 22 Apr 2012 09:08 AM PDT

அனைவருக்கும் வணக்கம் :வணக்கம்:
என் நண்பன் கார்த்தியின் மூலமாக ஈகரையை அறிந்தேன்....
என்னையும் உங்கள் நண்பனாக ஏற்று கொள்ளுங்கள்.. :வணக்கம்: :வணக்கம்:

அறிமுகம்

Posted: 22 Apr 2012 08:42 AM PDT

enathu peyar kodees. naan srilanka yarlppanam(jaffna) vai sernthavan. tharppothu Gulf il velai parkkiren. Eegarai kku puthiyavan. ennaiyum eatruk kolveerkala?




anpudan,
kodees.

"பதுங்கி அசைந்து வரும் இரவு"

Posted: 22 Apr 2012 08:38 AM PDT

பதுங்கிப் பதுங்கி அசைந்து வருகிறது இரவு. சூனியம்........ வரைய முடியாத ..... ஒரு பெரும் கரிய யானையாய் வளர்ந்து கிடக்க இரவில் அடைகாக்கப்படும் பெரிய முட்டைகளுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது சாத்தானின் சிறகுகள். ஒரு பறத்தலும்,...ஒரு பாடலும் இல்லாத அதன் முன்னே கைவிடப் பட்ட அகதியாய் நின்று கொண்டிருந்தது காலம். சபிக்கத் தெரியாத...கூடுகள் பிய்த்தெறியப்பட்ட சிறு பறவைகளின் கண்களிலிருந்து வழிகிறது..... காலம் துடைத்தெறியாத துயரத்தின் நதியொன்று. வழி தவறிய ஆடுகளென.......வசிப்பிடம் தேடித் தொலைந்த சில ...

இதயம் இல்லாத மனிதன் .......

Posted: 22 Apr 2012 08:34 AM PDT

இதயம் இல்லாத மனிதன் ....... கடந்த வருடம் மார்ச் மாதம், கிரேய் லெவிஸ் (55) எனும் நபர் இதயக்கோளாறு காரணமாக இறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை காப்பாற்றுவதற்கு புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ள டெக்ஸாஸில் உள்ள Texas Heart Institute ஐ சேர்ந்த இரு வைத்தியர்கள் முடிவு செய்தனர். குறித்த நபரின் இதயத்தை முற்றாக அகற்றிவிட்டு, இதயம் போன்று செயற்பட கூடிய 'contunuos flos' எனும் செயற்கை உபகரணத்தை பொருத்தினர். இதயத்தை போன்று இந்த உபகரணம் துடிப்பதில்லை. ஆனால் இதயம் செய்யக்கூடிய ...

அன்னை பூபதி அன்னை பூபதி

Posted: 22 Apr 2012 08:31 AM PDT

அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 - ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர். பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் ...

நம்பரை அழுத்த வேண்டாம்: நினைத்தாலே ‘கால்’ போகும்

Posted: 22 Apr 2012 08:22 AM PDT

நம்பரை அழுத்த வேண்டாம்: நினைத்தாலே 'கால்' போகும் கடுதாசி வாங்கி 'நலம் நலமறிய ஆவல்' எழுதி, பசை தடவி ஒட்டி பெட்டியில் போடும் வேலை இல்லை. எஸ்டீடி பூத் தேடிப் போய் பேச வேண்டிய அவசியமும் இல்லை. தயாராய் பாக்கெட்டிலேயே இருக்கிறது செல்போன். எந்நேரமும் யாரிடமும் பேசலாம். அதற்குக்கூட சிலருக்கு அலுப்பு. நைன், எய்ட், ஃபோர், சிக்ஸ் என்று 10 நம்பர்கள் அழுத்தியாக வேண்டுமே. மெமரியில் வைத்திருந்தால்கூட பெயரை தேட வேண்டுமே. உழைப்பை சிக்கனப்படுத்தும் இவர்களுக்கு நல்ல தகவல் தந்திருக்கின்றனர் அமெரிக்காவின் ...

முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்....

Posted: 22 Apr 2012 08:20 AM PDT

முதலுதவி அளிக்க கற்றுக்கொள்ளுங்கள்...... ஆரம்பித்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறோம். ஒரு கையோடு இருந்தால் போதும். எல்லா சந்தர்ப்பங்கம் நாமாகவே சிகிச்சை செய்து கொள்ளலாம் என்று நினைத்துவிடாதீர்கள். காரணம் சிகிச்சை முறைகள் நபருக்கு மாறுபடும். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும். ஆனாலும் சில பொதுவான விதிகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளோம். முதல் கட்டமாக, முதலுதவி செய்பவர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் மூன்று: 1.உயிரைப் பாதுகாக்க வேண்டும். 2.நிலைமை மோசமாவதைத் தடுக்க வேண்டும். 3.சீக்கிரத்தில ...

தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி

Posted: 22 Apr 2012 08:19 AM PDT

தமிழகத்தில் இசுலாமியர் ஆட்சி திப்பு சுல்தான் (ரஹ்) (ஆயிரம் ஆண்டுகள் ஆடாக வாழ்வதைவிட ஆறே நாள் புலியாக வாழ்வது மேல்.) திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, சிறீரங்கப்பட்டினம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் ...

மின்சாரதிற்கு ஒரு தீர்வு 'ப்ளூம் பாக்ஸ்'

Posted: 22 Apr 2012 08:09 AM PDT

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்.... இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்.... திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் ...

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Posted: 22 Apr 2012 08:04 AM PDT

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:- வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்) மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி) கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) தூத்துக்குடி-93.56 ...

டாய்லெட், கேன்டீனுடன் வால்வோ பஸ்: கர்நாடகத்தில் அறிமுகமாகிறது.

Posted: 22 Apr 2012 08:00 AM PDT

டாய்லெட், கேன்டீனுடன் வால்வோ பஸ்: கர்நாடகத்தில் அறிமுகமாகிறது. கழிவறை, கேன்டீன் வசதியுடன் கூடிய 25 வால்வோ பஸ்களை கர்நாடக போக்குவரத்து கழகம் விரைவில் வாங்குகிறது. இவை அனைத்தும் படுக்கை வசதி கொண்டதாக இருக்கும். நாட்டிலேயே கர்நாடக போக்குவரத்து கழகம் பயணிகள் சேவையில் முன்னிலை வகிக்கிறது. நாட்டின் சிறந்த போக்குவரத்து என்பதற்காக விருதுகளையும் வாங்கியுள்ளது. இந்த நிலையில், முன்பு தமிழகத்தில் ஜேஜேடிசி என்ற பெயரில் ஓடிய நீண்ட தூர பஸ்களில் இருந்தது போன்று டாய்லெட் மற்றும் கேன்டீன் வசதிகளுடன் ...

சித்திரை ..!

Posted: 22 Apr 2012 07:41 AM PDT

உன் நல்வரவால்
கதிரவனின் மனமகிழ்வால்,
கத்தரியின் கண் திறப்பால் ,
முத்திரை பதித்ததாம்
எத்திக்கும் கோடை .!
காற்றிலும் கூட
அதன் வாடை .!!
இது இன்னொரு
கோடையின் ஜனனத்தின் ஜாடை !!!.

வசீகரப்ரியன்

கணவன்

Posted: 22 Apr 2012 07:38 AM PDT

பலசரக்கு வாங்குவதற்காக பைகளை எடுத்துக் கொண்டு பஜாருக்கு புறப்பட்டேன். வழக்கமாக சரக்கு வாங்கும் ராம் ஸ்டோருக்குப் போனேன். ஏழெட்டுப் பேர் சரக்கு வாங்கிக் கொண்டிருந்தனர். சரக்குச் சிட்டையை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்த ஒரு ஸ்டூலில் உட்கார்ந்தேன். அப்போது சரக்கு வாங்கிய இன்னொரு பெண்ணிடம் ``அம்மா உங்களுக்கு முன்னூற்று நாற்பது ரூபாய்'' என்றார் கடைக்காரர். அந்தப் பெண் வசதியானவளாகத் தெரிந்தாள். மூன்று தங்கச் செயின், டாலடிக்கும் வைரக் கம்மல், தங்க வளையங்கள், பட்டுச்சேலை என ஜொலித்தாள். அந்தப் ...