I tamil web

I tamil web


படப்பிடிப்பாளர்களை பதறடித்த அல்டிமேட் ஸ்டார்! (ரெயிலர் இணைப்பு)

Posted: 26 Apr 2012 06:27 AM PDT


சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜித் குமர் நடித்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. ஏற்கனவே பில்லா 2 திரைப்படத்தின் டிரைலருக்கு இணையத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது. லட்சக்கணக்கில் பல பேரை கவர்ந்து சாதனை படைத்து வருகிறது படத்தின் டிரையிலர்.


டிரையிலர் வெளியாகி ஒரு சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது அஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சிகள்தான்.மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சிதான் அது.


இந்த அனுபவம் பற்றி பில்லா 2 படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான கீசா காம்பக்தீ கூறியதாவது:


நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவர் வியப்பு தெரிவித்துள்ளார்.

உரிமையாளரை வாகனத்தில் தொங்கவிட்ட திருடன்! (வீடியோ இணைப்பு)

Posted: 26 Apr 2012 06:20 AM PDT

வாகனம் ஒன்றைத் திருடன் ஒருவன் ஆட்டையைப் போட்டு எடுத்துச் செல்வதைக்கண்ட வாகன உரிமையாளர் வாகனத்தை நிறுத்துவதற்காக வாகனத்தில் தொங்கியவாறு செல்லும் கொடுமையைப் பார்த்தீர்களா?





சிலந்திக்கு இரையாகியது பாம்பு! (வீடியோ இணைப்பு)

Posted: 26 Apr 2012 03:19 AM PDT


வழமையாக சிலந்திகள் பூசிகளைத் தான் உணவாக உட்கொள்ளும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே நீங்கள் பார்க்கப் போகும் சிலந்தியானது பாம்பையே உணவாக உட்கொள்ளுகின்றது.கிட்டத்தட்ட அரை மீட்டர் நீளமான பாம்பைச் சாப்பிடுகின்ற இந்தச் சிலந்தியின் காணொளி அவுஸ்திரேலியாவில் தான் எடுக்கப்பட்டுள்ளது.


Cairns என்பவர் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது தான் மேற்படி ஆச்சரிய காணொளியை எடுத்துள்ளார்.எவ்வளவு பெரிய பாம்பின் மீது நெட் வளையம் ஒன்றை உருவாக்கி அலேக்காக அமுக்கி விட்டது இந்தச் சிலந்தி. இனி பாம்புக்கு கும்பாபிஷேகம் தான்.

பாம்பின் பல தலை அவதாரம்! (வீடியோ இணைப்பு)

Posted: 26 Apr 2012 02:43 AM PDT


பாம்புகளுக்கு பொதுவாக ஒரு தலையே காணப்படுவது வழமை. சில சந்தர்ப்பங்களில் இரண்டு தலைகள் கொண்ட பாம்புகள் உருவாகும் அதிசயமும் உண்டு.ஆனால் அவற்றையெல்லாம் மீறி ஒரு பாம்பு பல தலைகளைக் கொண்டுள்ளது போன்று காட்சியளிக்கின்றது.


உண்மையிலேயே ஒரு தலை காணப்படுகின்ற போதிலும் அதன் வாலானது பல தலைகள் போன்ற அமைப்பில் உள்ளதுபோன்ற மாயையை தோற்றுவிக்கின்றது.

பாவையாக மாற முயற்சித்த அப்பாவிப் பெண்! (படங்கள், வீடியோ இணைப்பு)

Posted: 25 Apr 2012 11:33 PM PDT


ரஷ்யாவைச் சேர்ந்த 21 வயதான Valeria Lukyanova என்ற யுவதி ஒருவர் மனிதப் பொம்மையாக மாற பல முயற்சிகளை எடுத்துள்ளார்.பார்லி பொம்மைகளை போன்று காட்சி கொடுக்க வேண்டும் என்கிற நாட்டம், பேரவா ஆகியன யுவதிகள் மத்தியில் திடீரென அதிகரித்து வருகின்றது. இணையங்களில் தோன்றி அசத்த வேண்டும் என்றும் பிரபலம் ஆக வேண்டும் என்றும் பற்றுறுதியாக உள்ளார்கள்.


அந்த வகையில் பார்லி பொம்மை போன்று காட்சி அளிக்கின்ற மனித அழகி என்று இணையங்கள் மூலம் சொந்த நாட்டில் அதி பிரபலம் அடைந்து இருக்கின்றார் இந்த யுவதி. அருகில் வருபவர்கள் எவரும் இவர் ஒரு பார்லி பொம்மை என்கிற முடிவுக்கு வருகின்ற வகையில் உள்ளது இவரின் தோற்றம்.இவரின் தோற்றம் யதார்த்தத்துக்கு புறம்பானதாக உள்ளது. கிட்டத்தட்ட பிளாஸ்ரிக் போல தெரிகின்றார். இவரது முகம் உணர்வுகள், உணர்ச்சிகள் அற்றதாக தெரிகின்றது. இவரது உடல் பாகங்களும் அசாதாரணமானவையாக காணப்படுகின்றது.




பாம்பையே பதம்பார்த்த அணிலார்! (வீடியோ இணைப்பு)

Posted: 25 Apr 2012 09:30 PM PDT

படையையே குலைநடுங்க வைக்கும் பாம்பு ஒன்றை அணில் ஒன்று கடித்து விளையாடுகின்றது. என்னா தெனாவெட்டு இருந்தால் இந்த அணில் அந்தப் பாம்பைக் கடிக்கும்? காணொளியைப் பார்த்துவிட்டு நீங்களே பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.

சிறீலங்கா ஆதிவாசிகளின் சிங்கார விளையாட்டுக்கள்! (படங்கள் இணைப்பு)

Posted: 25 Apr 2012 09:24 PM PDT


 ரதுகல ஆதிவாசிகளின் புதுவருட விளையாட்டு விழா முதன் முறையாக நேற்று செவ்வாய்க்கிழமை ரதுகல வன பிரதேசத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்விற்கு விசேட விருந்தினராக பிரதி கல்வி அமைச்சர் காமினி விஜித் விஜயமுனி சொய்சா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஆதிவாசிகளின் பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதோடு ஆதிவாசிகளின் சிறுமிகள் அழகுராணி போட்டியிலும் பங்கு கொண்டனர். 


அங்கு இடம்பெற்ற விளையாட்டு ஒன்றில் பிரதி கல்வி அமைச்சர் ரதுகல ஆதிவாசி தலைவர்கள் மரமேறும் போட்டியொன்றிலும் பங்குகொண்டமை விசேட அம்சமாகும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. படம் இணைத்துள்ளேன்.