சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- பாம்பை வேட்டையாடும் சிலந்தி(வீடியோ இணைப்பு)
- பச்சை என்கிற காத்து – திரை விமர்சனம்
- Sony Tablet Sன் இயங்குதளத்திற்கான இயங்குதளத்தை அப்டேட் செய்யலாம்
- புற்றுநோயை தடுக்கும் பீசா: ஆய்வில் தகவல்
- கிலானிக்கு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு (வீடியோ இணைப்பு)
- கிலானிக்கு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு (வீடியோ இணைப்பு)
- 3டி சொக்லேட் தயாரிக்கும் முறை (வீடியோ, படங்கள் இணைப்பு)
- அன்றாடம் செய்யும் சில வேலைகளை விரைவில் செய்வதற்கு (வீடியோ, படங்கள் இணைப்பு)
- நியூயோர்க்கில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட வண்ணப்பூங்கா (வீடியோ இணைப்பு)
- வீழ்ச்சியின் போதும் அழகாய் இருப்பது இவை மட்டும் தான் (வீடியோ இணைப்பு)
- கோயில் நகரமாம் கும்பகோணத்தின் மடத்துத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில். காசியில் வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ.... கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் பெறுவோமோ அதே புண்ணிய பலன்களைத் தருகிற ஒப்பற்ற திருத்தலம் இது! இங்கே ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீகாளஹஸ் தீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீஞானாம்பிகை. காவிரி மற்றும் அரசலாற்றுக்கு நடுவே உள்ள கோயில், ஐந்து கால பூஜைகளும் விசேஷமாக நடைபெறும் ஆலயம், மடத்துக் கோயில் என அனைவராலும் சிறப்பிக்கப்படும் இந்தத் தலத்தில், தினமும் உத்ஸவம் நடைபெறும். எனவே ஏகதின உத்ஸவக் கோயில் என்றும் போற்றுவார்கள். காஞ்சி மகா பெரியவா, கும்பகோணத்துக்கு வந்து தங்கியபோது, இங்கே வந்து தினமும் வழிபட்டதாகப் பெருமிதத்துடன் சொல்வர்! காளஹஸ்தியில் உள்ளது போலவே, இங்கும் உத்ஸவருக்கு மூன்று அம்பிகை மூர்த்தங்கள் உண்டு. மேலும் ஸ்ரீகாத்யாயினி சமேத ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரும் இங்கே தனிச் சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. ராகு பகவானும் தனிச்சந்நிதியில் அருள்கிறார். அதேபோன்று, பதினெட்டு திருக்கரங்களுடன் ஸ்ரீதுர்கை இங்கே விசேஷம். வேறொரு சந்நிதியில் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீதுர்கை ஆகிய மூவரையும் தரிசிக்கலாம். ராகு முதலான தோஷங்கள், திருமணத்தடை முதலான இடர்பாடு களால் வருந்துவோர், இங்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளை வணங்கித் தொழுதால், விரைவில் நல்லது நடக்கும்; வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்! மாணவர்கள் இங்கு வந்து, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீஞானாம்பிகைக்கு விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், ஞானச் செல்வம் பெறலாம்; கல்வியில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்! ஞானாம்பிகையை வணங்கி, ஞானம் பெறுவோம்!
- 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆவணங்களை சமர்ப்பித்தார் கனிமொழி
- கல்விச் செல்வம் தருவார் கல்லுக்குழி ஆஞ்சநேயர்!
- தனது மகனின் லாபத்துக்காக ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் செய்தார் ப.சிதம்பரம்: சு சாமி
- தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்!
- புதிய ஜிடி ஐ-9300 ஸ்மார்ட்போனை வழங்கும் சாம்சங்!
- அஜீத் பட நாயகிக்கு கல்யாணம்!
- மங்கல வாழ்வு தரும் மாசி மக தரிசனம்!
- கமலின் விஸ்வரூபத்தை வெளியிடுகறது ஜெயா பிக்சர்ஸ்?
- 25 வருடங்களுக்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாம் லின்டர்ஸ்டிரோம்-அமிதாப்
- மாசி மக நன்னாளில்.. மகனாக வந்த மகேஸ்வரன்!
- தந்தை செல்வநாயகத்தின் நினைவுநாள் நிகழ்வு யாழ். சதுக்கத்தில்..! தந்தை பற்றி விவரணப்படம் தயாராகிறது!
- இராணுவத்தினர் வசமிருந்த அரியாலை பகுதியில் வீதி புனரமைப்பின்மையால் மக்கள் அசௌகரியம்
- இராணுவ நீதிமன்றம் விதித்த தண்டனை நிறைவு! சரத் பொன்சேகா பிணை வழங்குமாறு மனு தாக்கல்!
| பாம்பை வேட்டையாடும் சிலந்தி(வீடியோ இணைப்பு) Posted: 26 Apr 2012 08:41 AM PDT வழமையாக சிலந்திகள் பூசிகளைத் தான் உணவாக உட்கொள்ளும் என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இங்கே நீங்கள் பார்க்கப் போகும் சிலந்தியானது பாம்பையே உணவாக உட்கொள்ளுகின்றது. கிட்டத்தட்ட அரை மீட்டர் நீளமான பாம்பைச் சாப்பிடுகின்ற இந்தச் சிலந்தியின் காணொளி அவுஸ்திரேலியாவில் தான் எடுக்கப்பட்டுள்ளது. Cairns என்பவர் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது தான் மேற்படி ஆச்சரிய காணொளியை எடுத்துள்ளார். எவ்வளவு பெரிய பாம்பின் மீது நெட் வளையம் ஒன்றை உருவாக்கி அலேக்காக அமுக்கி விட்டது இந்தச் சிலந்தி. இனி பாம்புக்கு கும்பாபிஷேகம் தான். | ||
| பச்சை என்கிற காத்து – திரை விமர்சனம் Posted: 26 Apr 2012 08:23 AM PDT அரசியல் சதியில் சிக்கி வாழ்வை தொலைக்கும் இளைஞன் கதை. போதை, நட்பு வட்டாரம் என தான்தோன்றித்தனமாக திரிபவன் பச்சை. உள்ளூர் அரசியல்வாதியிடம் சேர்ந்து கட்சி வேலை செய்கிறான். ஒரு கட்டத்தில் அரசியல்வாதிக்கும், பச்சைக்கும் மோதல் வெடிக்கிறது. பச்சையை ஆள் வைத்து வெட்டி வீசுகிறான். அதில் உயிர் பிழைக்கும் பச்சை அரசியல்வாதியை வீடு புகுந்து வெட்டுகிறான். எதிர்கோஷ்டியில் உள்ள அரசியல் தாதா பச்சைக்கு அடைக்கலம் கொடுத்து பகையாளிகளை போட்டுத் தள்ள பயன்படுத்துகிறான். இன்னொருபுறம் கல்லூரி மாணவி தமிழ்ச்செல்வியுடன் காதல் மலர்கிறது. அவளும் அவனை விரும்புகிறாள். ஆனால் பச்சையின் நடவடிக்கைகள் அவனுடன் அவளை நெருங்க விடாமல் தடுக்கிறது. ஒரு கட்டத்தில் அவன் முரட்டுத்தனம் காதலை சின்னா பின்னாமாக்குகிறது. அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் நெஞ்சை உலுக்குகின்றன. கிராமிய களத்தில் அரிதாரம் இல்லாத கேரக்டர்களை உயிர்ப்போடு நடமாடவிட்டு அழுத்தமான கதையோட்டத்தில் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் கீரா. பச்சையாக வரும் வாசகர் கேரக்டரில் வாழ்கிறார். ஜாலியாக வாழவேண்டும் என்ற சித்தார்ந்தத்தில் திரியும் அவர் அரசியல்வாதிகள் பிடிக்குள் சிக்கி சின்னா பின்னமாவது நெஞ்சை உறைய வைக்கிறது. தமிழ்செல்வி பின்னால் அலைந்து காதல் செய்வது சுவாரஸ்யம். எதிரிகளால் வெட்டி மூட்டையில் கட்டி மரத்தில் தொங்கவிட்டு கிடப்பது உதறல். காதலியை பயமுறுத்த தண்ணீரில் அமுக்குவதும், அவர் பலியானதும் நெஞ்சில் தனது பெயரை பச்சை குத்தி இருப்பது கண்டு அலறி துடிப்பதும் ஜீவன். தமிழ்செல்வியாக வரும் தேவதை இரு கெட்டப்பில் கிராமத்து தேவதையாய் ஜொலிக்கிறார். கிளைமாக்சில் பழிதீர்க்கும் படலத்தை நிறைவேற்றும்போது ஆவேசத்தில் நடிப்பின் உச்சம் தொடுகிறார். நண்பனாக வரும் வளவன், தம்பியாக வரும் துருவன், அப்பாவாக வரும் முரா அம்மாவாக வரும் சத்தியபாமா கேரக்டர்களும் வலுவாக செதுக்கப்பட்டு உள்ளன. காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய காதலியிடம் பள்ளியிலும், பஸ் பயணங்களிலும், கூட்டத்தினர் மத்தியில் அத்துமீறும் நாயகனின் நடத்தைகள் வெறுப்பூட்டுகின்றன. கிளைமாக்ஸ் சீட் நுனிக்கு இழுக்கும் திகில்… அரிபாபுவின் இசை ஒன்ற வைக்கிறது. அன்பு ஸ்டாலின் ஒளிப்பதிவு கிராமிய அழகை அள்ளுகிறது. | ||
| Sony Tablet Sன் இயங்குதளத்திற்கான இயங்குதளத்தை அப்டேட் செய்யலாம் Posted: 26 Apr 2012 08:16 AM PDT முன்னணி இலத்திரனியல் நிறுவனமான Sony நிறுவனமானது தான் அறிமுகப்படுத்திய Sony Tablet Sன் இயங்குதளத்தை தற்போது அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படுகின்றது. அதனை Android 4.0 Ice Cream Sandwich இயங்குதளத்திற்கு அப்டேற் செய்வதற்கான வசதியை தற்போது சோனி நிறுவனம் வழங்கியுள்ளது. Android 4.0 Ice Cream Sandwich இயங்குதளத்தில் முன்னைய இயங்கு தளத்தை விட சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் திரையை லொக் செய்வதற்கான வசதியும் புதிதாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ் இயங்குதளத்தை Tabletன் Settingsற்கு சென்று check for updates என்ற வசதி மூலம் அப்டேட் செய்து கொள்ளமுடியும். ![]() | ||
| புற்றுநோயை தடுக்கும் பீசா: ஆய்வில் தகவல் Posted: 26 Apr 2012 08:14 AM PDT பீசாவை அதிக அளவு சாப்பிட்டால் பெருஞ்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கிலாந்தின் லாங் ஐலேண்டு பல்கலைகழக பேராசிரியர் சுப்ரியா பவேத்கர் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டனர். அப்போது ஒரீகானோ என்ற இரசாயன பொருள் சுரப்பி புற்றுநோயை குணப்படுத்துவதை கண்டறிந்தனர். மேலும் பீசாவை அதிக அளவில் சாப்பிட்டால் சுரப்பி புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்ப முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர். ஏனெனில் பீசா மற்றும் இத்தாலி வகை உணவுகளில் ஒரீகானோ என்ற இரசாயன பொருள் சேர்க்கப்படுகிறது. அது சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் செல்களை அழிக்க கூடியது. இது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது என பேராசிரியர் சுப்ரியா தெரிவித்துள்ளார். | ||
| கிலானிக்கு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு (வீடியோ இணைப்பு) Posted: 26 Apr 2012 08:11 AM PDT நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி மீதான ஊழல் வழக்கினை விசாரிக்க பிரதமர் கிலானி மறுத்து வந்தார். இது தொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி கிலானிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. 7 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் யுசுப் ராஸா கிலானி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் கிலானி கூறுகையில், என் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன். எப்போதுமே நீதித்துறைக்கு உரிய மரியாதை அளித்து வருகிறேன் என்றார். 2ம் இணைப்பு: இந்நிலையில் பிரதமர் கிலானி இன்று ஆஜரானார். அவருடைய வழக்கில் நீதிபதிகள் அவரை குற்றவாளி என அறிவித்தனர். இருப்பினும் கிலானிக்கு அடையாள தண்டனையாக 30 வினாடிகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. ![]() ![]() ![]() | ||
| கிலானிக்கு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு (வீடியோ இணைப்பு) Posted: 26 Apr 2012 08:10 AM PDT நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி மீதான ஊழல் வழக்கினை விசாரிக்க பிரதமர் கிலானி மறுத்து வந்தார். இது தொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் கிலானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 16ம் திகதி கிலானிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. 7 நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் யுசுப் ராஸா கிலானி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் கிலானி கூறுகையில், என் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன். எப்போதுமே நீதித்துறைக்கு உரிய மரியாதை அளித்து வருகிறேன் என்றார். 2ம் இணைப்பு: இந்நிலையில் பிரதமர் கிலானி இன்று ஆஜரானார். அவருடைய வழக்கில் நீதிபதிகள் அவரை குற்றவாளி என அறிவித்தனர். இருப்பினும் கிலானிக்கு அடையாள தண்டனையாக 30 வினாடிகள் சிறைதண்டனை வழங்கப்பட்டது. ![]() ![]() ![]() | ||
| 3டி சொக்லேட் தயாரிக்கும் முறை (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 26 Apr 2012 08:07 AM PDT இவ்வாறான சொக்லேட் பல வடிவத்தில் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வடிவத்தினைக் காணும்போது மிகவும் அழகாகவும், கலைநயத்துடன் கூடியதாகும் காணப்படும். இங்கு காணப்படும் 3டி சொக்லேட் தயாரிக்கும் முறையைக் காணொளியில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() | ||
| அன்றாடம் செய்யும் சில வேலைகளை விரைவில் செய்வதற்கு (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 26 Apr 2012 08:05 AM PDT | ||
| நியூயோர்க்கில் செயற்கையாக வடிவமைக்கப்பட்ட வண்ணப்பூங்கா (வீடியோ இணைப்பு) Posted: 26 Apr 2012 08:01 AM PDT அப்படி இந்த பூங்காவின் விசேடம் என்னவென்றால், நான்கு சுவற்றுக்குள் வடிவமைக்கப்பட்டுள்ள உள்ளிட பூங்கா இது. பச்சை புல், மரம், இலை, குலை, செடிகள், சுற்றுலா போர்வைகள, நாற்காலிகள் என வெளியிட பூங்காவுக்கு தேவையான அனைத்தும் இதில் இருக்கின்றது. மேற்குலக நாடுகளில் குளிர்காலம் என்றால், வீட்டை விட்டு வெளியில் செல்வதையே பொதுவாக தவிர்த்துவிடுவார்கள். அவ்வாறு காணப்படும் நிலையில் மிதமான காலநிலையுடன், செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ள இப்பூங்கா, நிஜமாகவே ஒரு வண்ணப்பூங்காவில் இருப்பது போன்ற உணர்வை தருவது மட்டுமின்றி இதன் உள்ளே நுழைவதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இவ்வாறான பூங்கா இன்னும் சில வருடங்களில் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. | ||
| வீழ்ச்சியின் போதும் அழகாய் இருப்பது இவை மட்டும் தான் (வீடியோ இணைப்பு) Posted: 26 Apr 2012 07:59 AM PDT இவற்றில் உலகில் மொத்தமுள்ள நீர் பரப்பில் 3% வீதமே மிக தூய்மையான, புத்துணர்ச்சி தரக்கூடிய நீராக இருக்கிறது. அப்படிப்பட்ட நீர்தன்மையை இந்த ஏஞ்சல்ஸ் நீர்வீழ்ச்சியின் சாரலில் உணரலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. சுமார் 1000 மீற்றர் உயரத்திலிருந்து இயற்கையாக பாயும் இந் நீர்வீழ்ச்சி தரைப்பகுதியை அடைவதற்குள் பெரும்பாலான நீர்த்துளிகள் சாரலாய் மாறி காற்றுடன் கலந்து கொள்வதைக் காணொளியில் காணலாம். | ||
| Posted: 26 Apr 2012 07:26 AM PDT ![]() கோயில் நகரமாம் கும்பகோணத்தின் மடத்துத் தெருவில் அமைந்துள்ளது ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோயில். காசியில் வணங்கினால் என்ன பலன் கிடைக்குமோ.... கங்கையில் நீராடினால் என்ன புண்ணியம் பெறுவோமோ அதே புண்ணிய பலன்களைத் தருகிற ஒப்பற்ற திருத்தலம் இது! காளஹஸ்தியில் உள்ளது போலவே, இங்கும் உத்ஸவருக்கு மூன்று அம்பிகை மூர்த்தங்கள் உண்டு. மேலும் ஸ்ரீகாத்யாயினி சமேத ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரும் இங்கே தனிச் சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு. ராகு பகவானும் தனிச்சந்நிதியில் அருள்கிறார். அதேபோன்று, பதினெட்டு திருக்கரங்களுடன் ஸ்ரீதுர்கை இங்கே விசேஷம். வேறொரு சந்நிதியில் ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீதுர்கை ஆகிய மூவரையும் தரிசிக்கலாம். ராகு முதலான தோஷங்கள், திருமணத்தடை முதலான இடர்பாடு களால் வருந்துவோர், இங்கு வந்து ஸ்வாமி மற்றும் அம்பாளை வணங்கித் தொழுதால், விரைவில் நல்லது நடக்கும்; வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்! மாணவர்கள் இங்கு வந்து, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஸ்ரீஞானாம்பிகைக்கு விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து வழிபட்டால், ஞானச் செல்வம் பெறலாம்; கல்வியில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம்! ஞானாம்பிகையை வணங்கி, ஞானம் பெறுவோம்! | ||
| 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: ஆவணங்களை சமர்ப்பித்தார் கனிமொழி Posted: 26 Apr 2012 07:22 AM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க. தலைவர் மு.கருணநிதியின் மகளான கனிமொழி கைதானார். கலைஞர் தொலைக்காட்சி மீது ரூ. 200 கோடி முறைகேடு நடந்தது குறித்து அமலாக்கப்பிரிவு அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கனிமொழியுடைய வருமானம், சொத்து விவரங்கள், சேமிப்பு கணக்குகள் உள்ளிட்ட நிதி ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி இன்று தமக்கு தொடர்புள்ள நிதி ஆவணங்களை அமலாக்கப்பிரிவிடம் சமர்ப்பித்தார். இந்த ஆவணங்கள் ஆராயப்பட்டபின் விசாரணைக்காக அழைக்கப்படுவார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அவர் கலந்து கொண்டு வருவதால், கூட்டத்தொடர் இல்லாத தினத்தில் அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. | ||
| கல்விச் செல்வம் தருவார் கல்லுக்குழி ஆஞ்சநேயர்! Posted: 26 Apr 2012 07:21 AM PDT ![]() ரயில்வே பணிகளுக்காக, சிறிய கோயி லாக இருந்த இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர். ஆனால் அடுத்தடுத்த வேலைகள் தடைபட்டன. என்ன ஏது என்று புரியாமல் குழம்பினார்கள் ஆங்கிலேயர்கள். பிறகு 'பழைய இடத்தில் குடியமரவே விருப்பம்' என்று அசரீரி கேட்டதை அடுத்து, மறுவருடமே பழையபடி கோயில் கொண்டு அருள்பாலிக்கத் துவங்கினார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் என்கிறது கோயிலின் ஸ்தல வரலாறு. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்குப் பின்புறம் உள்ளது கல்லுக்குழி. ரயில்வே குடியிருப்புகள் கொண்ட இந்தப் பகுதியில் இருந்தபடி, இன்றைக்கும் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர். மிகுந்த வரப்பிரசாதி இவர். அதேபோல், அழகும் கருணையும் ததும்பும் இவரின் திருமுகத்தை ஒருமுறை தரிசித்து விட்டால், பிறகு நாமே அடிக்கடி வந்து தரிசிப்போம் எனச் சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் மிகச் சிறிய கோயிலாக இருந்தது. பிறகு இவரைத் தரிசித்துப் பிரார்த் தனை நிறைவேறியவர்கள் மற்றும் அனுமன் பக்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பில் மிக அருமையான திருப்பணிகள் நடந்தேறின. திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலுக்கு, டோல்கேட், மன்னார்புரம் பகுதியில் இருந்தும் வரலாம். தன் மாணவப் பருவத்தில், ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடிக்கடி இங்கு வந்து தரிசித்து, அருட்பணி ஆற்றியதாகச் சொல்வர்! ![]() அழகிய கோபுரத்துடன் அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம். இங்கே ஸ்ரீராம நவமி, பத்து நாள் விழாவாக வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல், புரட்டாசி நவராத்திரி ஒன்பது நாள் விழாவும் சிறப்பாக நடைபெறும். ஸ்ரீஅனுமன் ஜயந்தி நாளில், 10,008 வடை மாலை சார்த்தி சிறப்பு பூஜைகள், திருவீதியுலா, விசேஷ அபிஷேகம் என அமர்க்களப்படும்! ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீபாண்டுரங்கன் ஆகியோரும் தனிச்சந்நிதிகளில் காட்சி தந்து அருள்கின்றனர். இங்கே, சந்நிதிக்கு எதிரில் நடைபெறும் ஸ்ரீசுதர்சன ஹோமம் வெகு பிரசித்தம். இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு, ஸ்ரீஅனுமனையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாரையும் தரிசித்து, மனதார வேண்டிக் கொண்டால்... எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும். கல்வி - கேள்விகளில் சிறந்து விளங்கலாம். கருத்து வேற்றுமையால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை! செவ்வாய்க்கிழமைகளில், இங்கேயுள்ள தியான மண்டபத்தில், மாணவர் களுக்காக சிறப்பு தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தியான மண்டபத்தில் காட்சி தரும் ஸ்ரீதியான நிலை அனுமனுக்கு, 'ஸ்ரீராம ஜெயம்' சீட்டு எழுதி, மாலை சார்த்தி தியானம் இருந்தால், மனதில் நிம்மதி யையும் புத்தியில் ஞாபக சக்தியையும் தந்தருள்வார் ஸ்ரீஅனுமன் எனப் பூரிக்கின்றனர் மாணவர்கள்! | ||
| தனது மகனின் லாபத்துக்காக ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் செய்தார் ப.சிதம்பரம்: சு சாமி Posted: 26 Apr 2012 07:20 AM PDT இந்தியாவின் ஏர்செல் நிறுவனமும் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்து கொண்டதில் உள்ள முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறனும் உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையில் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என சுப்பிரமணியசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 2005-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் திவாலாகும் நிலைமையில் இருந்தது. அப்போது அந்த நிறுவன அதிபர் சிவசங்கரனை மலேசியாவின் உள்ள மேக்சிஸ் நிறுவனம் சந்தித்து ரூ.4000 கோடி கொடுத்து 74 சதவீத பங்குகளை வாங்கிக் கொள்வதாக கூறியது. ஆனால் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் இந்த ஒப்பந்தத்துக்கு சம்மதிக்கவில்லை. மேலும், இந்த ஒப்பந்தமானது கார்த்தி சிதம்பரம் முக்கிய பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தின் வழியாக ஏர்செல் நிறுவன பங்குகளை பெற்றுக்கொண்டு பெரும் லாபம் சம்பாதித்தார். இதற்கு ப.சிதம்பரமும் அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதிமாறனும் உதவியதாக குற்றம் சாட்டியுள்ளார். எனினும், இந்த தகவல்கள் அடங்கிய இந்த கடிதத்தில் எந்த ஆவணங்களும் சமர்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. | ||
| தீர்த்தவாரியில் தரிசித்தால் பாவமெல்லாம் கரைந்துவிடும்! Posted: 26 Apr 2012 07:15 AM PDT ![]() ஆலயத்தில், சயனத் திருக்கோலத்தில் ஸ்ரீரங்க நாதரும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவரதராஜ பெருமாளும் தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீபஞ்ச முக ஆஞ்சநேயர், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் (இங்கு இரண்டு அனுமன் சந்நிதிகள் உள்ளன), ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமணவாள மாமுனிகள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரும் இங்கே திருக்காட்சி தருகின்றனர். திருக்கார்த்திகையில் விஷ்ணு தீபம், சித்திரை மாத பௌர்ணமி, புரட்டாசி மாதம், ஸ்ரீராம நவமி ஆகிய நாட்களில் இங்கே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்புற நடைபெறும். மாசி மக நன்னாளில், இங்கு நடைபெறும் தீர்த்தவாரி திருவிழா வெகு பிரபலம். அந்த நாளில், பொறையார், தரங்கம்பாடி, திருக்கடையூர் என சுற்றுவட்டார ஊர்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அந்த நாளில், பொறையார் ஸ்ரீகோதண்டராமர், அதே ஊரில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர், தரங்கம்பாடி குட்டியாண்டியூர் பெருமாள் ஆகியோர் சூழ்ந்து வர... தரங்கம் பாடி கடற்கரையில் நடைபெறும் தீர்த்தவாரிப் பெருவிழாவில், மூன்று தலத்து உத்ஸவ மூர்த்தங்களையும் காணக் கண்கோடி வேண்டும். ![]() பிறகு, தரங்கம்பாடியில் இருந்து பொறையாருக்கு திருவீதி பவனி வரும் ஸ்ரீகோதண்டராமருடன் எண்ணற்ற பக்தர்கள் பின்னால் அணிவகுத்து வருவார்கள். ஆலயத்துக்கு வந்ததும், உத்ஸவத் திருமேனிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு என 16 வகை அபிஷேகங்கள், விசேஷ பூஜைகள் ஆகியன நடைபெறும். மாசி மக தீர்த்தவாரிப் பெருவிழாவில் கலந்து கொண்டு, ஸ்ரீகோதண்டராமரை தரிசித்தால், சகல பாவங்களும் விலகும். சொத்துப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள், உத்தியோகத்தில் மேன்மை மற்றும் பதவி உயர்வுக்காகக் காத்திருப்பவர்கள், தேர்வு எழுதும் மாணவர்கள், தம்பதி ஒற்றுமை மேலோங்க விரும்புவோர் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்கிறார் கோயிலின் ரங்கசாமி பட்டாச்சார்யர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் மாசி மக நாளில், புளியோதரை, தயிர்சாதம், சர்க்கரைப்பொங்கல் என நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவார்கள். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், இங்கு வந்து வேண்டிச் சொல்வோர் ஏராளம். இங்கேயுள்ள ஸ்ரீஅனுமனும் வரப்பிரசாதி. சனிக்கிழமைகளில் இவருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை சார்த்தி வேண்டிக் கொண்டால், எதிரிகள் தொல்லை ஒழியும்; கல்வி - ஞானத்தில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை! - மா.நந்தினி படங்கள்: இ.ராஜவிபீஷிகா
| ||
| புதிய ஜிடி ஐ-9300 ஸ்மார்ட்போனை வழங்கும் சாம்சங்! Posted: 26 Apr 2012 07:15 AM PDT புதிய ஜிடி ஐ-9300 (சாம்சங் கேலக்ஸி எஸ்-3) என்ற ஸ்மார்ட்போனை ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உருவாக்கி உள்ளது சாம்சங் நிறுவனம். 4.6 இஞ்ச் அகன்ற திரையின் மூலம் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொண்டது. மல்டி டச் ஸ்கிரீன் திரையினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனை கையாள்வது ரொம்ப சுலபம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் 126 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இதன் ஆன்ட்ராய்டு 4.0.3 இயங்குதளத்தை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மூலம் சிறப்பான தொழில் நுட்ப வசதியினை பெற முடியும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் 1,400 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் சாம்சங் எக்ஸினோஸ் 4412 பிராசஸரும் உள்ளது. கூடுதல் வசதியினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இதில் 8 மெகா பிக்ஸல் கேமராவும் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் உள்ளது. இந்த டியூவல் வசதி கொண்ட கேமராவின் மூலம் சிறந்த புகைப்படங்களையும், வீடியோவினையும் எடுத்து குவிக்கலாம். மேலும் 1 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியினையும் கொடுக்கும். ஸ்மார்ட்போனில் பிரவுசிங் வசதி இருந்தால் பயணங்களின் போது கூட தகவல்களை எளிதாக தேடி எடுக்க முடியும். இன்றைய சூழலில் பிரவுசிங் வசதி மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஜிடி ஐ-9300 ஸ்மார்ட்போனில் சிறப்பான ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பத்தின் மூலம் பிரவுசிங் வசதியினை பெற முடியும். இது மட்டும் அல்லாது 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதியினையும் பெறலாம். விருப்பமான இசையை கேட்டும் பார்த்தும் மகிழ இதில் ஆடியோ மற்றும் வீடியோ வசதியும் உள்ளது. இது போன்ற பொழுதுபோக்கு அம்சத்தினை பெற நீடித்து உழைக்கும் பேட்டரி மிக அவசியமாக உள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனில் 2050 எம்ஏஎச் லித்தியம்-அயான் பேட்டரியும் உள்ளது. இந்த ஆற்றல் வாய்ந்த பேட்டரி ஆடியோ, வீடியோ ப்ளேயர் வசதிக்கு மட்டும் அல்லாமல், 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கும் சிறப்பாக உதவும். | ||
| Posted: 26 Apr 2012 07:13 AM PDT அஜீத்துடன் இணைந்து பில்லா-2 படத்தில் நடித்து வரும் பிரேசில் நாட்டு பேரழகி புரூனா அப்துல்லாவுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாம். இதனால் விரைவிலேயே அவர் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பம் நடத்தப் போகிறாராம். பில்லா 2 படம்தான் அவருடைய கடைசிப் படமாம். புரூனாவை மணக்கப் போகும் நபர் ஒரு பெங்காலியாம். கடந்த 3 வருடங்களாக அவர்கள் மும்முரமாக காதலித்து வருகின்றனராம். சமீபத்தில் புரூனாவுடன் பிரேசில் போய் அவருடைய அம்மா, அப்பாவைப் பார்த்து விட்டு வந்தாராம் இந்தக் காதலர். புரூனா வீட்டில் அத்தனை பேருக்கும் அவரது காதலரைப் பிடித்து விட்டதாம். இதனால் நிச்சயம் செய்து விட்டனர். இருப்பினும் பில்லா படத்தை முடித்து விட்டு வந்து விடுகிறேன், அதற்குப் பிறகு கல்யாணம், கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என்று புரூனா கூறியுள்ளதால் படம் முடிந்த பிறகுதான் கல்யாணமாம். | ||
| மங்கல வாழ்வு தரும் மாசி மக தரிசனம்! Posted: 26 Apr 2012 07:13 AM PDT ![]() ஸ்வாமி - ஸ்ரீஅபிமுகேசர். ஸ்ரீநாரிகேளேசர் எனும் திருநாமத்தில், கிழக்கு நோக்கியபடி அருள்பாலித்தாராம், துவக்கத்தில்! கங்கா, யமுனா, சரஸ்வதி, நர்மதை, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய ஒன்பது புண்ணிய நதிப் பெண்கள் அனைவரும், 'மக்கள் அனைவரும் தங்களது பாபங்களையெல்லாம் எங்களிடம் சேர்த்துவிட்டனர். இதனால் நாங்கள் துன்பப்படுகிறோம்' என சிவனாரிடம் சென்று முறையிட்டனர். பிறகு அவர் சொன்னபடி, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீநாரிகேளேசரை வணங்கித் தொழுதனர். இங்குள்ள மகாமகப் புண்ணிய தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, சிவனாரைத் தரிசித்தனர். அவர்களிடம் சேர்ந்திருந்த சாபங்களையும் பாபங்களையும் போக்கி அருளுவதற்காக, கிழக்கு முகமாக இருந்த சிவனார், மேற்கு நோக்கியபடி காட்சி தந்தருளினார் என்கிறது ஸ்தல புராணம். அபிமுகம் என்றால், மேற்கு முகம் என்று பொருள். எனவே இந்தத் தலத்து நாயகனுக்கு, ஸ்ரீஅபிமுகேஸ்வரர் எனும் திருநாமம் அமைந்தது! ![]() இங்கே, வருடந்தோறும் மாசி மக விழா வெகு விமரிசையாக நடைபெறும். பதினோரு நாள் நடைபெறும் இந்த விழாவில், இறைவனைத் தரிசிக்க, எங்கிருந்தெல்லாமோ பக்தர்கள் வருவார்கள். தினமும் ஒவ்வொரு வாகனத்தில், ஒவ்வொரு அலங்காரத்தில், ஸ்வாமியும் அம்பாளும் திருவீதியுலா வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். ஏழாம் நாள் நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்தால், தோஷங்கள் விலகி, திருமண பாக்கியம் கைகூடும் என்பர். பத்தாம் நாள், தீர்த்தவாரியும் மறுநாள் பஞ்சமூர்த்திகள் வீதி புறப்பாடும் சிறப்புற நடைபெறும்! இங்கே, வெள்ளிக்கிழமை ராகு கால வேளையில், அம்பாள் ஸ்ரீஅமிர்தவல்லியை செவ்வரளிப் பூ சார்த்தி, தீபமேற்றி வழிபட்டால் விரைவில் திருமண பாக்கியம் கைகூடும். ஒன்பது வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டால், சகல ஐஸ்வரியங்களும் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்! தவிர, துலாம் ராசிக்கு உரிய தலம் இது. அந்த ராசிக்காரர்கள் இங்கு வந்து வணங்கினால், அவர்களின் அத்தனை தோஷங்களும் விலகிவிடும் என்பர். பன்னிரு கரங்களுடன் ஸ்ரீசுப்ரமணியர், யோக நிலையில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீபைரவர் ஆகியோரும் இங்கு விசேஷம்! | ||
| கமலின் விஸ்வரூபத்தை வெளியிடுகறது ஜெயா பிக்சர்ஸ்? Posted: 26 Apr 2012 07:10 AM PDT கடந்த ஆட்சியில் சன் டிவி, திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கென்று சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந்த நிறுவனம் குறித்து ஆஹா ஓஹோ என்று பாராட்டிய சினிமாக்காரர்கள், நாளாக ஆக குத்துதே குடையுதே என புலம்ப ஆரம்பித்தனர். ஆட்சி மாற்றம் வந்ததும் சன் பிக்சர்ஸ் அடங்கிப் போக ஆரம்பித்தது. இப்போது ஜெயா டிவி முறை போலிருக்கிறது. விரைவில் சினிமாவுக்கென்று ஜெயா பிக்சர்ஸ் எனும் பேனரில் படங்களை தயாரிக்க, விநியோகிக்க ஜெயா டிவி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான வேலைகளிலும் மும்முரமாக இறங்கியுள்ளதாம். | ||
| 25 வருடங்களுக்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாம் லின்டர்ஸ்டிரோம்-அமிதாப் Posted: 26 Apr 2012 07:09 AM PDT போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் எனது பெயரை புட்டப் செய்து சேர்த்தனர் என்று ஸ்வீடன் நாட்டு முன்னாள் போலீஸ் அதிகாரி ஸ்டென் லின்டர்ஸ்டிரோம் கூறியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. நான் நிரபராதி என்பதை இப்போதாவது மக்கள் உணர வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் இதை 25 வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தால் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன். போபர்ஸ் விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் அமிதாப்பும் கூட ஒருவர். ஆனால் அவருக்கும், இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை. அவரது பெயரைச் சம்பந்தப்படுத்த இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக முயன்றன என்று லின்டர்ஸ்டிரோம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை அமிதாப் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன். எனது நிலை சரி என்பதை லின்டர்ஸ்டிரோமின் பேட்டி உணர்த்துகிறது. நான் நிரபராதி என்பது இப்போதாவது வெளிச்சத்திற்கு வந்ததே. லின்டர்ஸ்டிரோமின் பேட்டி குறித்து அறிந்து நானும், எனது குடும்பத்தினரும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம். நாங்கள் நிரபராதிகள் என்று லின்டர்ஸ்டிரோம் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இன்று வரை இல்லை. இந்த சான்றிதழை லின்டர்ஸ்டிரோம் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பே இது வந்திருக்கலாம். இந்த கால கட்டத்தில் நானும், எனது குடும்பத்தினரும் பட்ட கவலைகள், வேதனைகள், அவமானங்களை சொல்லில் வடிக்க முடியாது. இப்போது நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம். எனக்கு பெரும் வேதனை என்னவென்றால் எனது பெற்றோர் உயிருடன் இருந்தபோதே உண்மை வெளிவராமல் போய் விட்டதே என்பதுதான். எனது தந்தை, போபர்ஸ் சர்ச்சை வெடித்தபோது நீ ஏதாவது தவறு செய்திருக்கிறாயே என்று என்னைப் பார்த்துக் கேட்டபோது நான் துடித்துப் போய் விட்டேன். என்ன பதில் சொல்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை. என் பெயர் போபர்ஸ் விவகாரத்தில் இழுக்கப்பட்டதால் எனது தந்தை பெரும் வேதனை அடைந்தார். ஆனால் இன்று உண்மை என்னிடம் இருக்கும்போது, எனது தந்தை என்னிடம் இல்லை. வயதான காலத்தில், தங்களது வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் பெரும் வேதனையைச் சுமந்தபடி அவர்கள் மரணத்தை சந்தித்தது எனக்கு நீங்காத வேதனையாக என்றும் இருக்கும். எனது பெயரை திட்டமிட்டு வேண்டும் என்றே சேர்த்தனர் என்று லின்டர்ஸ்டிரோம் கூறியிருப்பது எனக்கு பெரும் அதிர்ச்சித் தகவலாக உள்ளது. இந்த்த தகவல் லின்டர்ஸ்டிரோமுக்கு முன்பே தெரிந்த ஒன்றுதான். ஆனால் இத்தனை காலமாக இதை ஏன் சொல்லாமல் மறைத்து வந்தார் என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக உள்ளது என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன். | ||
| மாசி மக நன்னாளில்.. மகனாக வந்த மகேஸ்வரன்! Posted: 26 Apr 2012 07:09 AM PDT ![]() மறுநாள் அரசவையைக் கூட்டினார் மன்னர். மந்திரிகள் கூடியிருந்த அந்த அவையில், குழந்தை இல்லாத மனக்குறையைச் சொன்னார். அதைக்கேட்ட மந்திரிகள் எல்லோரும் ஒருமித்த குரலில், ''மன்னா! குழந்தை பிறக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு, யார் வந்து என்ன உதவி கேட்டாலும் செய்யலாம். முக்கண் முதல்வன் மகப்பேறு அருள்வான்'' என்றார்கள். சபை கலைந்தது. மறுநாளே கோட்டையிலும் முக்கியமான இடங்களிலும் முரசும் ஒலித்தது, ''யார் வந்து, எது கேட்டாலும் மன்னர் அளிப்பார்'' என்ற அறிவிப்பும் கூடவே வெளியானது. பலரும் வந்து பலன் பெற்றுப் போனார்கள். மன்னரிடம் உதவி கேட்கும் அவசியம் இல்லாதவர்களும், மன்னருக்கு மகவு பிறக்கவேண்டும் என வேண்டிக்கொண்டு, தங்களால் இயன்றளவு தான தர்மம் செய்தனர். இவ்வளவுக்கும் பிறகு பலன் கிட்டாமல் போகுமா? கிடைத்தது. ![]() ஒருநாள்... திருவண்ணாமலையில் சிவனடியார் கூட்டம் ஒன்று, ''அரும்பசி தணிய அன்னம் இடுவார் இல்லையா?'' என்று கேட்டபடியே வீதி வீதியாக வந்தது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வீட்டில் உபசரிப்பு நிகழ, அவர்களின் தலைவர் மட்டும் அரண் மனையை அடைந்தார். சிவந்த திருமேனி, உடலெங்கும் திருநீறு, கழுத்தில் ருத்ராட்சம்... என தெய்வக் களையோடு திகழ்ந்த அந்த அடியவரை வரவேற்று உபசரித்தார் மன்னர். அவரிடம் அடியார் தலைவர், ''நீயும் உன் அரசும் நீடுழி வாழ்க! எனக்குப் பணிவிடை செய்யவும், என் ஆவலைப் பூர்த்தி செய்யவும் பெண்ணொருத்தி வேண்டும்'' என்றார். மன்னவன் திகைத்தார். 'இறைவா... இதென்ன சோதனை? எந்தப் பெண்தான் இதற்கு சம்மதிப்பாள்?' என்று உள்ளுக்குள் மருகினார். எனினும் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், ''இதோ! சற்று நேரத்தில் வருகிறேன்'' என்று அடியவரிடம் சொல்லிவிட்டு, அந்தப்புரத்துக்கு விரைந்தார். மனைவியரிடம் விஷயத்தைச் சொல்லி வருந்தினார். உடனே அவரின் இளைய மனைவியான சல்லமாதேவி, ''இதற்காகவா வருந்துகிறீர்கள்! அனுமதி கொடுங்கள்; அடியவருக்குப் பணிவிடை செய்ய நான் போகிறேன்'' என்றாள். அதைக்கேட்டு உள்ளம் சிலிர்த்தார் மன்னர். அடியவரிடம் ஓடோடிச் சென்று, ''ஸ்வாமி... தங்களுக்குப் பணிவிடை செய்ய ஒரு வனிதை வருகிறாள்'' என்றார். 'உத்தமனும் பெரியவர்க்கு உரைத்திட் டானால்' என்று இந்த தகவலைத் திருவண்ணா மலை தல புராணம் கூறுகிறது. 'மாற்றானுக்கு மனைவியைக் கொடுத்தவன் உத்தமனாம். கேட்டுப் பெற்றவன் பெரியவராம். 'என்னய்யா கதை இது?' என்று அறிவு கேட்கிறது அல்லவா? அவசரப்பட்டு குழம்ப வேண்டாம். ஆராய்ச்சியும் விஞ்ஞானமும் நெருங்க முடியாத நிகழ்ச்சிகள் ஏராளம் உண்டு. மனதுக்கு வெள்ளையடித்துக் கொண்டு வாருங்கள்! விடை கிடைக்கும். ![]() அதோ! சல்லமாதேவி, அடியார் இருந்த அறைக்குள் நுழைந்துவிட்டாள். படுத்திருந்த அவர் அருகில் அமர்ந்து வீணையை சுருதி கூட்டி, இனிமையாகப் பாடினாள். நேரம்தான் போயிற்றே தவிர, அடியவரின் நித்திரை கலையவில்லை. பாட்டை நிறுத்திவிட்டு சல்லமாதேவி பன்னீரை எடுத்து சிறு திவலைகளாக அடியாரின் முகத்தில் தெளித்தாள். அப்போதும் அவரிடம் எந்தவித அசைவும் இல்லை. 'கொக்கரகோ' என்று சேவல் கூவும் சத்தம் கேட்டது. சல்லமாதேவி பதறினாள். ''ஆ! மன்னர் வாக்கு தவறக்கூடாது அவரது வாக்கை காப்பாற்றியாக வேண்டும். ஆனால், அதற்குள் பொழுது விடிந்துவிடும் போல் இருக்கிறதே!'' என்று பதறியபடி, அடியாருக்குப் பணிவிடை செய்ய அவரின் பாதங்களைப் பிடிக்கப் போனாள். அப்போது... ஏதோ மாயம் நிகழ்ந்தது போன்று, அடியார் இருந்த இடத்தில் அழகான ஆண் குழந்தை கை-கால்களை உதைத்தபடி அழுதுகொண்டிருந்தது. சல்லமாதேவி திகைத்தாள். குழந்தையைத் தூக்க வேண்டும் என்று கூட அவளுக்குத் தோன்றவில்லை. அதற்குள் குழந்தையின் அழுகை கேட்டு மன்னரும் மூத்த தேவியாரும் அங்கு ஓடி வந்தார்கள். குழந்தையைக் கண்டதும் மன்னர் தன்னிலை மறந்தார்; பரவசத்துடன் குழந்தையை அள்ளி எடுத்து உச்சிமுகர்ந்தார்; முத்த மழை பொழிந்தார். அப்போது மின்னல் ஒன்று பளிச்சிட்டது. அவர் கையில் இருந்த குழந்தையும் சட்டென மறைந்தது. மன்னவரும் அவரின் மனைவியரும் அதிர்ந்தனர். ''அண்ணாமலையாரே! அடியேனை சோதிக்கவா இப்படிக் குழந்தையாக வந்தீர்கள்... என் கதியென்ன?'' எனக் கதறினார் மன்னர். அதற்குப் பதில் சொல்வது போல் ஆகாயத்தில் இருந்து பூமாரிப் பொழிந்தது. ''அம்மா...ஆஆ!' என்றொரு குரலும் கேட்டது. தொடர்ந்து அம்பிகையுடன் ரிஷப வாகனராக திருக் காட்சி தந்தார் அண்ணாமலையார். மன்னனும் அவரின் தேவியரும் சிரம் தாழ்த்தி கரம்கூப்பி வணங்கித் துதித்தார்கள். ![]() ''மன்னா! நிலையில்லாத இந்த உலகில், எந்த விதமான கர்மத் தொடர்பும் இல்லாதவன் நீ. உனக்கு எப்படிப் பிள்ளை பிறக்கும்? ஆனாலும், நீ செய்த சிவ புண்ணியத்தின் பலனாக நாமே உமக்கு குழந்தையாக வந்தோம். கற்பில் சிறந்த உன் தேவியரின் பெருமையையும் உன் பக்தியையும் உலகுக்கு உணர்த்தவே ஒரு திருவிளையாடலும் புரிந்தோம்!'' என்று அருளினார் ஈசன். அரச தம்பதி அளவிலா ஆனந்தம் அடைந்தது! அத்தோடு நின்றதா திருவிளையாடல்... ஒருநாள், உணவு உண்டு கொண்டிருந்தார் அரசர். அப்போது, தண்டை ஒலியெழுப்ப ஓடோடி வந்த குழந்தை ஒன்று, அவரின் மடியில் அமர்ந்து அன்னத்தில் கைவைத்துப் பிசைந்து ஓர் உருண்டையை எடுத்து அவருக்கு ஊட்டியது. அப்போது சிதறிய பருக்கைகளை எடுத்து தானும் உண்டது. அரசரும் மனைவியரும் அதைக் கண்டு ரசித்து சிரித்தார்கள். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்ந்தது! ஒரு மாசி மாதம்- மக நட்சத்திரத்தன்று, வழக்கப்படி பூஜையை முடித்த மன்னர், மனம் ஒன்றி 'ஹர ஹர' என்று உச்சரித்தார். அதே நொடியில் அவரின் உயிர் பிரிந்தது. 'மன்னா' என்று அலறியபடி அவர் மீது விழுந்த மனைவியரும் உயிர் நீத்தனர். ஊர் மக்கள் உள்ளம் கசிந்து கண்ணீர் சிந்தினார்கள். அதே நேரம்... ''அம்மா... அப்பா!'' என்றோர் இனிய நாதம் ஆகாயத்தில் எழுந்தது. திருக்கோயிலின் சிவலிங்கத் திருமேனியில் இருந்து ஜோதிமயமாக ஒரு குழந்தை வெளிப்பட்டு, அரண்மனைக்கு ஓடிவந்து, மன்னர் மீதும் அவரின் மனைவியர் மீதும் விழுந்து அழுது புரண்டது. தானே அந்தத் தம்பதிகளுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தது. பிறகு, எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாபெரும் ஜோதியாக அங்கிருந்து மறைந்தது அந்தக் குழந்தை!''அண்ணாமலையாரே வந்து அரச தம்பதிக்கு தன் கையாலேயே பிரேத சமஸ்காரங்கள் செய்திருக்கிறார். என்ன புண்ணியம்! என்ன புண்ணியம்! அண்ணாமலையாருக்கு அரோஹரா!'' என்று எல்லோரும் கூவினார்கள். அப்போது ஓர் அசரீரி... 'ஆண்டு தோறும் மாசி மக நன்னாளில் இந்த நிகழ்ச்சி ஒரு திருவிழாவாகவே நடைபெறும். நாம் குழந்தையாக வெளிப்பட்ட வல்லாள மகாராஜா கோபுர வாயில் அன்று மட்டும் திறக்கப்படும்'' என்று ஒலித்தது. அதன்படியே இன்றும் மாசி மகத்தன்று ஸ்வாமி வெளியில் வந்து மன்னருக்கு சிராத்தம் செய்துவிட்டுப் போகிறார். நாம் நம்புகிறோமோ இல்லையோ. மாசி மக நன்னாளில், அண்ணா மலையாரின் குரல் அங்கே 'அம்மா! அப்பா!' என்று ஒலிக்கும். அதைக் காதாரக் கேட்டவர்களும் உண்டு! | ||
| தந்தை செல்வநாயகத்தின் நினைவுநாள் நிகழ்வு யாழ். சதுக்கத்தில்..! தந்தை பற்றி விவரணப்படம் தயாராகிறது! Posted: 26 Apr 2012 06:57 AM PDT மூதறிஞர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுநாள் நிகழ்வு இன்று காலை யாழ்.தந்தை செல்வா சதுக்கததில் ஏராளமான பொதுமக்கள் மற்றும், தமிழ் தேசிய ஆதரவு சக்திகள் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராசதுரை, மற்றும் சர்வமத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர். இதில் முதற்கட்டமாக தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு அவரது மகன், மற்றும் பேராசிரியர்கள், ஆகியோர் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின்னர், நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி நடைபெற்றது. இதன் பின்னரே சிறப்புச் சொற்பொழிவு, மற்றும் ஆசியுரைகள், மற்றும் வரலாற்று நினைவு படுத்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. இதில் இராசதுரை சிறப்புச் சொற்பொழிவாற்றினார். மேலும் தந்தை செல்வாவிற்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையிலான தொடர்பு குறித்து ஹஸ்மிர் உரையாற்றினார். தந்தை செல்வா பற்றி விபரணப்படம் தயாரிக்கப்படுகிறது தந்தை செல்வாவின் 35 ஆவது நினைவு நாள் நிகழ்வு யாழ் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் இன்று 26.04.2012 காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக தந்தை செல்வாவின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை சூட்டி அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றன. செல்வா நினைவுக் குழுவின் தலைவர் அருட்கலாநிதி சு.ஜெபநேசன் அவர்கள் முதலில் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்சிப்பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வின் பின்னர் செல்வா சமாதியில் மலர் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து அஞ்சலி உரைகளும் நினைவுரைகளும் சதுக்கத்தில் அமைந்துள்ள தற்காலிக மண்டபத்தில் இடம் பெற்றன. சமயப் பெரியார்களின் நினைவஞ்சலி உரையைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த பிரமுகரும் மட்டக்களப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சொல்லின் செல்வர் செல்லையா இராசதுரை (வயது 83) அவரின் நினைவுரை இடம்பெற்றது. தந்தை செல்வாவுடன் இணைந்து தமிழரசுக் கட்சியை கட்டிவளர்த்த வரலாறு தந்தையின் தீர்க்க தரிசனம் உண்மை, நேர்மை, சத்தியவழிச் சிந்தனை பற்றி உரை இடம்பெற்றது. இந் நிகழ்வில் தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த தந்தை செல்வாவின் மகன் திரு சந்திரஹாசன் அவர்களும் அவரது மகளும் கலந்து கொண்டனர். தந்தை செல்வாவின் பேத்தி, தந்தை பற்றி ஓர் ஆவணப்படம் தயாரித்து வருகின்றார் என்ற தகவல் அறிவிக்கப்பட்டது. தந்தை செல்வா சமாதியில் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதையும் பேராசிரியர் இரா. சிவசந்திரன் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதையும் படத்தில் காணலாம். | ||
| இராணுவத்தினர் வசமிருந்த அரியாலை பகுதியில் வீதி புனரமைப்பின்மையால் மக்கள் அசௌகரியம் Posted: 26 Apr 2012 06:56 AM PDT அரியாலை கிழக்கிற்கான பிரதான போக்குவரத்து வீதியை புனரமைத்து தருமாறு அப்பகுதியில் மீளக்குடியமர்ந்த பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இராணுவத்தினர் வசமிருந்த அரியாலை கிழக்கில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொது மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டன. ஆயினும் இதன் போது மக்களுக்கான போதிய வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது தான் அப்பகுதிக்கான பாடசாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புக்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அப்பகுதியில் மீளக் குடியேறியுள்ள மக்கள் பாதை சீரின்மை காரணமாக போக்குவரத்து செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முன்னர் இப்பகுதிக்கு தார் பாதையென்று அமைக்கப்பட்டிருந்த நிலையில் அவை முற்றாக இராணுவத்தினரது கனரக வாகனப் பாவனை காரணமாக அழிக்கப்பட்டுள்ளதோடு, மணல் வீதியாகவே தற்போது வீதி காணப்படுகின்றது. குறிப்பாக பாடசாலை மாணவர்கள் நகர்ப்புறங்களிலுள்ள பாடசாலைகளுக்கு சென்று வருவது மிகவும் கடினமானதாக உள்ளது. எனவே மிகவிரைவாக அரியாலை கிழக்கிற்கான பாதையை சீரமைத்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ![]() ![]() | ||
| இராணுவ நீதிமன்றம் விதித்த தண்டனை நிறைவு! சரத் பொன்சேகா பிணை வழங்குமாறு மனு தாக்கல்! Posted: 26 Apr 2012 06:55 AM PDT வெள்ளைக் கொடி வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள சரத் பொன்சேகா தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். தனது சட்டத்தரணி ஊடாக சரத் பொன்சேகா இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதோடு மனுவின் பிரதிவாதியாக சட்ட மா அதிபரின் பெயரை அவர் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக் கொடி வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றால் தனக்கு 3 வருட கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகா தனது மனுவில் தெரிவித்துள்ளார். ஆனால் அதனை எதிர்த்து தான் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் தனது மேன்முறையீட்டை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தனக்கு பிணை வழங்குமாறு சரத் பொன்சேகா தனது மனுவில் தெரிவித்துள்ளார். 40 வருட இராணுவ சேவையில் தான் இருந்துள்ளதால் பிணை வழங்கப்பட்ட பின் நீதிமன்றை அவமதித்து நடக்க மாட்டேன் என சரத் பொன்சேகா தனது மனுவில் உறுதியளித்துள்ளார். ![]() |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





















ர















ஊர் மக்கள் உள்ளம் கசிந்து கண்ணீர் சிந்தினார்கள். அதே நேரம்... ''அம்மா... அப்பா!'' என்றோர் இனிய நாதம் ஆகாயத்தில் எழுந்தது. திருக்கோயிலின் சிவலிங்கத் திருமேனியில் இருந்து ஜோதிமயமாக ஒரு குழந்தை வெளிப்பட்டு, அரண்மனைக்கு ஓடிவந்து, மன்னர் மீதும் அவரின் மனைவியர் மீதும் விழுந்து அழுது புரண்டது. தானே அந்தத் தம்பதிகளுக்கு ஈமச் சடங்குகளைச் செய்தது. பிறகு, எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாபெரும் ஜோதியாக அங்கிருந்து மறைந்தது அந்தக் குழந்தை!

