I tamil web

I tamil web


FACEBOOK பாவித்துப்பார்...

Posted: 23 Apr 2012 09:56 AM PDT

FACEBOOK பாவித்துப்பார் உன்னை சுற்றி REQUEST தோன்றும்
நட்பு அர்த்தப்படும் நாளிகையின் நீளம் குறையும்
உனக்கும் கவிதை வரும் டைப்பிங்க் வேகமாகும்
INTERNET தெய்வமாகும் உன் கைவிரல் பட்டே KEYBORS உடையும் கண்ணிரண்டும் கமெண்ட் ஐ தேடும் FACEBOOK பாவித்துப்பார்...


நித்திரை மறப்பாய் 6 முறை LOG IN பண்ணுவாய் LOG OUT பண்ணினால் நிமிசங்கள் வருஷங்கள் என்பாய் LOG IN பண்ணினால் வருஷங்கள் நிமிசம் என்பாய் காக்கை கூட உன்னை கவனிக்கும் ஆனால்,யாருமே உன்னை கண்டுகொள்ளவில்லை என் உணர்வாய் உனக்கும் நண்பருக்கும் இடையில் இனந்தெரியாத உறவொன்று உருவாகக் காண்பாய் இந்த போஸ்ட், இந்த கமெண்ட், இந்த லைக், எல்லாம் FACEBOOKஐ கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய் FACEBOOK பாவித்துப்பார்...


இருதயம் அடிக்கடி ஓய்வெடுக்கும் EMPTY POSTஇல் உனது கமெண்ட் மட்டும் இருக்கும் உன் நண்பனே உனக்கு கலாய்த்து கமெண்ட் அடிப்பான் FACEBOOKஇன் பாஸ்வேட்டை நீயே மறப்பாய் அதற்காக மெயில் முகவரியை தேடுவாய் பின் பாஸ்வேட்டை மாற்றுவாய் FACEBOOK பாவித்துப்பார்... சின்ன சின்ன கமெண்ட் களில் சிலிர்க்க முடியுமே அதற்காக வேணும் நட்பை மீண்டும் உருவாக்க முடியுமே ஆதற்காக வேணும் நட்பேன்ற சொல்லுக்கு அகராதியில் இல்லாத அர்த்தங்கள் விளங்குமே அதற்காக வேணும் FACEBOOK பாவித்துப்பார்...


அப்பன் அடித்தாலும் ஆத்தா ஏசினாலும் விளித்துப் பார்க்கையில் நீ நடுறோட்டில் நின்றாலும் நீ நேசிக்கும் முகப்புத்தகம் உன்னை நேசிக்க மறந்தாலும் வாழ்வு சாவு இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம் FACEBOOK பாவித்துப்பார்.

அமானுஸ்ய விளம்பரம் பார்த்ததுண்டா? (வீடியோ இணைப்பு)

Posted: 23 Apr 2012 08:23 AM PDT

சிறுவன் ஒருவன் எவ்வளவோ முயற்சி செய்து அமானுஸ்ய சக்தியைக் கொண்டு பொருட்களை இயக்க முனைகின்றான் ஆனால் முடியவில்லை. எனினும் இன்றைய தொழில்நுடம்பம் அவனது ஆசையைப் பூர்த்தி செய்கின்றது.

காம வெறிபிடித்த ஒபாமாவின் காவலாளிகள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்! (படங்கள் இணைப்பு)

Posted: 23 Apr 2012 08:10 AM PDT


சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமா கொலம்பியா செல்லவிருந்தார். அவர் அங்குசெல்ல முன்னர், ஓபாமாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தனிப்பட்ட காவலாளிகள் பலர் அங்கே அனுப்பப்பட்டனர். இவர்கள் அனைவரும் அதிபர் ஓபாமாவின் பிரத்தியேகக் காவலாளிகள் ஆவர். இவர்களில் சுமார் 11 பேர் கொலம்பியாவில் உள்ள பிளே-கிளப் என்னும் களியாட்ட விடுதியில் மது அருந்திவிட்டு, விலைமாதுகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். ஓபாமாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்காமல், இவர்கள் பல முறை அந்த களியாட்ட விடுதிக்குச் சென்றுள்ளனர்.


அங்கே தானிய என்று அழைக்கப்படும் பெண்ணோடு உல்லாசமாக இருக்க 800 டாலர்கள் விலைபேசியுள்ளனர். இருப்பினும் 250 டாலரை இறுதியாகக் கொடுத்து அவர்கள் அப்பெண்ணோடு காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 9 அதிகாரிகளும் 2 உயரதிகாரிகளும் இவ்வாறு உல்லாசமாக இருந்ததை அமெரிக்க உளவுத்துறை எப்படியோ மோப்பம் பிடித்துவிட்டது. இவ்விடையம் அமெரிக்க தலைமைக்கு தெரியவந்ததை அடுத்து இந்தப் 11 பேரையும் உடனடியாக நாடு திரும்புமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.


தற்போது கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில், இவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேல் தீவிர விசாரணைகள் நடைபெறவிருப்பதாகவும் அறியப்படுகிறது. இவர்கள் சாதாரணமாக மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அல்லர் என்றும், இவர்களுக்கு யாராவது போதைப் பொருட்களைக் கொடுத்து விலைமாதரிடம் செல்லுமாறு தூண்டியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இதனூடாக அமெரிக்க அதிபர் ஓபாமாவின் வரவு குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கலாம் எனவும், மேலும் பல இரகசியங்கள் கசிந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


விலைமாதுக்களை கைதுசெய்யாமல், அவர்களை இரகசிய அறை ஒன்றில் வைத்து அமெரிக்க உளவு நிறுவனம் விசாரணைகளை நடத்திவருவதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.




காதலில் வெற்றி பெற வேண்டுமா? முதலில் பல்லை விளக்குங்கள்!

Posted: 23 Apr 2012 08:03 AM PDT


காதலிப்பது பெரிய விசயமில்லை, அந்த காதலை வெற்றிகரமாக்குவதில்தான் இருக்கிறது சூட்சுமம். நிறைய பேருக்கு அதன் டெக்னிக் தெரிவதில்லை. என்ன செய்தால் காதலில் வெற்றி பெறலாம் என்பது தெரியாமல் இருப்பதால்தான் நிறைய காதல்கள் தோற்றுப்போகின்றன. இது குறித்து நடைபெற்ற ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. சுவாசப் புத்துணர்ச்சி பெரும்பாலான காதல் தோற்றுப் போனதற்கு வாய் துர்நாற்றம் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவே சுத்தமாக பல்விலக்கிவிட்டு சுவாசப் புத்துணர்ச்சியோடு இருந்தாலே காதல் வெற்றி பெரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.



  • காதலியின் செல்லப்பிராணி



அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹஸ்டன் பல்கலையின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் காதல் வெற்றிக்கு காதலி வளர்க்கும் நாய் முக்கிய பங்கு வகிக்கிறதாம். 120 ஜோடிகளிடம் இணையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டது.



  • நாயை நேசியுங்கள்



நாய் வளர்ப்பதில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உணர்வு ரீதியாக பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு ஆண் செல்லப் பிராணி ஒன்றை வளர்க்கும் போது தனது காதலியும் அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஒரு பெண் தான் வளர்க்கும் நாயை தனது காதலனும் அளவுக்கு அதிகமாக நேசிக்க வேண்டும் என எதிர்பார்கிறாள்.


எனவே காதலில் வெற்றி பெற உங்களின் காதலி ஆசை ஆசையாக வளர்த்து வருகின்ற நாயை நீங்கள் நன்றாக நேசியுங்கள் அதன் மீது அன்பு செலுத்துங்கள் உங்களின் காதல் தானாகவே வளரும். அப்படி உங்களால் நேசிக்க முடியாவிட்டால் கூட நாயை நேசிப்பது போல் ஆவது நடியுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

உங்கள் இதயத்துடிப்பை ஒரு கணம் நிறுத்தும் அரிய புகைப்படங்கள்!

Posted: 23 Apr 2012 05:11 AM PDT

ரஷ்யாவில் சில இளைஞர், யுவதிகள் வானை முட்டும் உயரமான பகுதிகளில் ஏறி புகைப்படம் பிடித்துள்ளனர். இப்புகைப்படங்களை பார்க்கும் எங்களுக்கே இதயம் ஒரு கணம் துடிக்க மறுக்கின்றது என்றால்.... அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்?





இராட்சத எலியை பலியெடுத்த முதியவர் - சட்டத்திடம் சிக்குவாரா? (படங்கள், வீடியோ இணைப்பு)

Posted: 23 Apr 2012 04:58 AM PDT


பிரயன் வட்சன் எனும் 67 வயதான முதியவர் நான்கு அடி நீளமான இராட்சத எலி ஒன்றை கொலைசெய்துள்ளார். இக்கொலையானது மிருக வதைச்சட்டத்திற்கு முரணானது என்பதால் வட்சன் சட்டத்திற்கு பதில் சொல்லவேண்டிய நிலை உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இக்கொலைச் சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வட்சனை விசாரணை நடாத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






அடி ஆத்தி! இவரின் வாய்க்குள் இம்முட்டு வித்தையா? (வீடியோ இணைப்பு)

Posted: 23 Apr 2012 02:11 AM PDT

தொலைக்காட்சி நிகழ்ச்யான Got Tallent 2012 ல் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் தனது வாயைப் பயன்படுத்தி பல்வேறு ஒலிகளை எழுப்பிக் காட்டியுள்ளார். இவரது திறமையை வியந்து அரங்கமே எழுந்து நின்று கைதட்டியுள்ளது.





பூனைக் குட்டிகளின் நீயா? நானா? (வீடியோ இணைப்பு)

Posted: 23 Apr 2012 02:02 AM PDT


மனிதர்களுக்கு குத்துச்சண்டைப் போட்டி நடப்பது போல இங்கு இரண்டு பூனைக் குட்டிகளுக்கும் அபார குத்துச்சண்டை இடம்பெறுகின்றது. இதில் நீயா? நானா? என்று விடா முயற்சியுடன் போட்டிபோடும் இரண்டு பூனைக் குட்டிகளிலும் எது வென்றிருக்கும்?


சரி வாங்க சேர்ந்து காணொளியைப் பார்த்துத் தெரிந்துகொள்வோம் நண்பர்களே!

அநியாயத்திற்கு பெயர்போன தேள் உண்ணி மனிதன்! (வீடியோ இணைப்பு)

Posted: 23 Apr 2012 01:41 AM PDT

இந்த உலகில் எத்தனயோ விசித்திரமான உணவு பழக்க வழக்கங்கள் காணபடுகின்றன..ஆனால் தேளை உயிருடன் தின்னும் அதிசய (அரை லூசோ?) காண்பது கடினம்..இவர் ஊரில் பட்டினி பஞ்சம் வந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை..

அரை குறை உடையுடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் ரஷ்ய பதுமை! (படங்கள் இணைப்பு)

Posted: 22 Apr 2012 08:54 PM PDT

ரஷ்யாவைச் சேர்ந்த அலியோனா விலானி என்பவர் நடனத்தில் பிரபல்யமானவர் ஆவார். இவர் பல விருதுகளையும் நடனத்திற்காக பெற்றுள்ளார். தற்போது அடுத்த கட்ட நடன நிகழ்விற்காக லண்டனில் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றார் 27 வயதான அலியோனா.







முன்னாள் போராளிகளின் புத்தாண்டுக் கொண்டாட்டம்! (வீடியோ இணைப்பு)

Posted: 22 Apr 2012 07:20 PM PDT

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புனர்வாழ்வு அமைச்சு ஏற்பாடு செய்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றன.புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சுமார் 700 முன்னாள் போராளிகள் கலந்துகொண்டதுடன் அவர்களின் பெற்றோர், உறவினர்களும் பங்குபற்றினர்.