சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- உயிர்காக்கும் தலைக் கவசமாக பயன்படுத்தப்படும் கைப்பைகள் (வீடியோ இணைப்பு)
- பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட பேர்கண் (வீடியோ, படங்கள் இணைப்பு)
- நெதர்லாந்தில் பூச்சிகளினால் சுவையூட்டப்படும் வினோத உணவு (படங்கள் இணைப்பு)
- நாய் செய்த தவறுக்கு மனைவியின் உயிரைப் பறித்த கணவர் (வீடியோ இணைப்பு)
- பெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி ..|
- அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை
- முளைக்கட்டிய பச்சைப்பயறு ரைஸ்
- கலர் புஃல் சாலட்
- ஜானுசீராசனம்
- உசட்டாசனம்
- மகர ஆசனம்!
- மகர ஆசனம்!
- அட்சய திருதியை அன்று வழிபாடு செய்வது எப்படி?
- மகாலட்சுமியின் 12 நாமங்கள்
- ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில்
- விரத நிறைவு விதிமுறைகள்
- திருச்செங்கோடு நகராட்சி கழிப்பறையில் விஜயகாந்த் !
- சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு!
- பழுப்பு கண்களா? அழகாக்க டிப்ஸ் இதோ!
- தந்திரோபாய விளையாட்டுக்கார இளைஞன் (வீடியோ இணைப்பு)
- தாய்லாந்து பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண பெண்(வீடியோ இணைப்பு)
- மனிதக் கடத்தல் - ஒரு ரிப்போர்ட்!
- ஒட்டிக்குதா பார்க்குறேன்... கருணாசுடன் ரிஸ்க் எடுத்த நடிகை
- சிம்பு எப்படி சிக்குனாரு? வியக்கிறது கோடம்பாக்கம்
| உயிர்காக்கும் தலைக் கவசமாக பயன்படுத்தப்படும் கைப்பைகள் (வீடியோ இணைப்பு) Posted: 23 Apr 2012 09:34 AM PDT பயணங்களின் போதும் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் பயன்படுத்தப்படும் கைப்பைகனை இனிமேல் உயிர்காக்கும் தலைக் கவசமாகவும் பயன்படுத்தலாம். Grappa எனும் பெயருடன் தயாரிக்கப்பட்ட கைப்பைகளையே இவ்வாறான இரட்டை நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது. இக்கைப்பையானது வெற்றுப்பையாக காணப்படுகின்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றின் போது தலையில் தலைக்கவசமாக அணிந்துகொள்ள முடியும். ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ள இக்கைப்பை ஒன்றின் விலையானது 1000 யென்களாகும். அதாவது 12 அமெரிக்க டொலர்கள். |
| பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட பேர்கண் (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 23 Apr 2012 09:32 AM PDT இதனை மிகப்பிரம்மாண்டமாக உருவாக்கி ஜப்பான் வாசி ஒருவர் சாதனை படைத்துள்ளார். சுமார் 1,050 தட்டுக்களைக் (அடுக்கில்) கொண்டதாக இந்த பேர்கணை தயாரித்து அசத்தியுள்ளார். ![]() ![]() ![]() ![]() ![]() |
| நெதர்லாந்தில் பூச்சிகளினால் சுவையூட்டப்படும் வினோத உணவு (படங்கள் இணைப்பு) Posted: 23 Apr 2012 09:30 AM PDT நெதர்லாந்தில் கேக் வடிவிலமைந்த சிற்றுண்டி ஒன்றிற்கு சிறிய வகை பூச்சிகளை சேர்த்து சுவையூட்டி உண்கின்றனர் அந்நாட்டு மக்கள். இவை காண்பவர்களுக்குத் தான் அருவருப்பாக இருக்கும் ஆனால் சாப்பிட்டுப்பார்த்தால் அதன் சுவை மிகவும் பிடித்தமானதாகவே காணப்படுகிறது. மேலும் இந்த உணவுப் பண்டமானது Cookbook of insects என்று அழைக்கப்படுகின்றது. இவ்வுணவில் பெரும்பாலும் வெட்டுக்கிளிகளின் குடம்பிப் பருவமே சுவையூட்டியாக சேர்க்கப்படுகின்றது. ![]() ![]() ![]() ![]() |
| நாய் செய்த தவறுக்கு மனைவியின் உயிரைப் பறித்த கணவர் (வீடியோ இணைப்பு) Posted: 23 Apr 2012 09:23 AM PDT ஆனால் அந்த நாய்களில் ஒன்று, வீட்டுக்குள் மலம் கழித்துவிட்டது. என்னதான் செல்லமாக வளர்த்த நாய் என்றாலும், வீட்டுக்குள் அசிங்கம் செய்து விட்டதால் அந்த நாய் மீது மட்டுமல்ல, அதை கவனிக்காத தனது மனைவி பெர்னீஸ் மீதும் ஸ்டீபனுக்கு கோபம் வந்தது. உடனே அவர் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவியையும், இரண்டு நாய்களையும் சுட்டுக்கொன்று விட்டார். இப்போது பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். |
| பெண்களை அதிகம் தாக்கும் முதுகு வலி ..| Posted: 23 Apr 2012 09:20 AM PDT உலகில் 80 சதவீதம் பேர், வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் கீழ் முதுகு வலியால் அவதிப்படுகிறோம். முதுகுத் தண்டு வடம், ஒன்றன் மீது ஒன்று அமைந்த வகையிலான சிறிய முள்ளெலும்புகளால் ஆனது. இந்த எலும்புகளுக்கிடையே உள்ள நீரும், வழுவழுப்பான சதையும், எலும்புகள் ஒன்றோடு ஒன்று தேயாமல் தடுக்கின்றன. இவை, முதுகு தண்டு வடத்துடன் ஒட்டிய சதை மற்றும் ஜவ்வுகளின் ஆதரவுடன் செயல்படுகின்றன. நாம் நிமிர்ந்து நிற்கும் போது, தண்டுவடத்தின் கீழ் பகுதி மேல் பகுதியில் உள்ள எடையை தாங்கி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. புவியீர்ப்பு விசையின் காரணமாகவும், முதுகு கீழ் அழுத்தம் ஏற்படுகிறது. சிலருக்கு, கீழ் பகுதி எலும்புகள் சரியான வளர்ச்சி இன்றியும் இருக்கும். இந்த முள்ளெலும்புகளில் இடையிலிருந்து வெளிவரும் சில நரம்புகள் தான், கை, கால்களுக்கு செல்கின்றன. இந்த முள்ளெலும்புகளில் தேய்மானம் அல்லது சரியான முறையில் ஒன்றன் பின் ஒன்று பதியாமல் இருத்தல் ஆகிய காரணங்களால், இவற்றின் இடையே செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு, முதுகு வலி ஏற்படுகிறது. சிறு வயது குழந்தைகள், பெரும்பாலும் வலியால் அவதிப்படுவதில்லை. இடைநிலைப் பள்ளி குழந்தைகள், புத்தகச் சுமை காரணமாக, முதுகு மற்றும் தோள் வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு அமைப்பிலேயே பாதிப்பு ஏற்படுவதால் அவதிப்படும் குழந்தைகள் மிகக்குறைவே. புத்தகம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றுடன் பையை தோளில் மாட்டிக்கொள்ளும் போது, உடலின் புவியீர்ப்பு மையத்தில் மாறுபாடு ஏற்பட்டு, சதை மற்றும் தசைகளில் வலி ஏற்படுகிறது. வகுப்பு நேரத்தில் பெஞ்சும் நல்ல முறையில் வடிவமைக்கப்படாமல் இருக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற உயரத்தில் அமையாமல், முதுகு பகுதிக்கு சரியான சாய் மானம் இல்லாமல் இருக்கும். வீட்டுப் பாடத்தை தரையில் அமர்ந்து எழுதுவது, முதுகை வளைத்தப்படி சோபாவில் அமர்ந்து எழுதுவது ஆகியவையும் முதுகு வலியை அதிகரிக்க செய்யும். பெண்கள் அதிக பாதிப்பு அறிகுறிகள்........ முதுகு வலியின் முதல் அறிகுறிக்கு அதிக பரிசோதனை தேவைப்படாது. ஆறு மாதங்களுக்கு வலி தொடர்ந்தாலோ, கால் தசைகள் வலுவிழந்தாலோ, செயலற்று, போகும் போதோ சிறுநீர், மலம் வெளியேறுவதில் கட்டுப்பாடு குறைந்தாலோ, சிறுநீருடன் ரத்தம் சேர்ந்து வெளியேறினாலோ, தலைவலியுடன் வாந்தியும், வந்தாலோ அவசியம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். துவக்க நிலையில் எக்ஸ்-ரே பரிசோதனை எடுக்கப்படும். என்ன பிரச்சினை உள்ளதென்பதை எக்ஸ்-ரே மூலம் கண்டறியலாம். சில நேரங்களில் ரத்தப் பரிசோதனையும் செய்ய வேண்டி வரும் பெரும்பாலான முதுகுவலிகள், சில நாட்களிலேயே மறைந்து விடும். எனவே, வலி ஏற்பட்ட உடனேயே மருத்துவரிடம் செல் வதை விட, சில நாட்கள் பொறுத்திருந்து வலி நீடித்தால் மருத்துவரிடம் காண்பிக்கலாம். நீங்கள் அமரும் அல்லது நிற்கும் நிலை, காலணி, அமரும் நாற்காலி அல்லது சோபா ஆகியவற்றில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் ஆராய வேண்டும். உன்னிப்பாக கவனித்து செயல்பட்டால், பெரும்பாலான முதுகு வலியை தவிர்த்து விடலாம். போதுமான அளவு ஓய்வில் இருத்தல், வலி நிவாரணி எடுத்து கொள்ளுதல், வலி குறைக்கும் பட்டைகள் கட்டிக் கொள்ளுதல், மென்மையான படுக்கையில் படுக்காமல் தரையில் படுத்தல், தசை சீர்படுத்தும் மாத்திரைகள் உட்கொள்ளுதல் ஆகியவை மேற்கொண்டால், வலியிலிருந்து நிவாரணம் பெறலாம். உடல் எடையை குறைப்பதிலும் முனைப்பு காட்ட வேண்டும். உடல் எடையுடன், `பி.எம்.ஐ.' அளவு சரியாக ஒத்து போகிறது என்பதையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும். |
| அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை Posted: 23 Apr 2012 09:12 AM PDT * முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். * தினமும் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப்பாகும். * முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும். * இரண்டு டீஸ்பூன் ஆலிவ் என்ணெயுடன், இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும். * கொத்தமல்லிச் சாற்றை உதடுகளில் தினமும் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும். * லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடுகளில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ்டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும். * உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும். உதாரணத்திற்கு வைட்டமின் பி குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும். |
| Posted: 23 Apr 2012 09:08 AM PDT தேவையானவை: முளைகட்டிய பயறு - அரை கப் பாஸ்மதி அரிசி - ஒரு கப் இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை - சிறிதளவு வெங்காயம் - 2 தக்காளி - 2 உப்பு- தேவையான அளவு எண்ணெய் - 2 ஸ்பூன் செய்முறை: * பாஸ்மதி அரிசியை உதிராக வடித்துக் கொள்ளவும். * தக்காளி வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். * கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். |
| Posted: 23 Apr 2012 09:07 AM PDT தேவையானவை:- கேரட்- தலா கால் கப் பச்சை பட்டாணி- கால் கப். காலிஃப்ளவர்- ஒரு கப். உப்பு- தேவையான அளவு. கோஸ் இலை- தேவையான அளவு. செய்முறை: *காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி காய்கறிகளை உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைக்கவும். *அடுப்பில் நான்-ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் கோஸ் இலையை வைக்கவும். சூடேறும் போதே கோஸ் இலை ஓரளவு வெந்து மேல் நோக்கி மூட ஆரம்பிக்கும். • அப்போது, அதற்கு உள்ளே ஒரு கரண்டி காய்கறிக் கலவையைப் போட்டு, கோஸ் இலையைச் சுற்றி சிறிது தண்ணீர் தெளிக்கவும்.படபடவென ஓசை வந்ததும் எடுத்துப் பரிமாறவும். |
| Posted: 23 Apr 2012 09:06 AM PDT செய்முறை: முதலில் விரிப்பில் அமரவும். வலது காலை மடித்து, இடது தொடை அருகில் படும்படி வைக்கவும். பின்னர் இடது காலை நேராக நீட்டவும். கைகளை உயர்த்தி இரு கைகளாலும் கொண்டு இடது கால் பாதத்தைத் தொடவும். இடது கால் முட்டியில் நெற்றி படும்படி செய்யவும். முட்டிகள் மடங்கக் கூடாது. 30 விநாடிகள் இதே நிலையில் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும். இதுபோல் காலை மாற்றிச் செய்யவும். இவ்வாறு 3 முதல் 5 வரை செய்யவும். பலன்கள்: |
| Posted: 23 Apr 2012 09:05 AM PDT செய்முறை: முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். கால்களை ஒரு அடி அகற்றி மண்டியிட்டு நிற்கவும். பின்னால் மெதுவாக வளைந்து, கைகளை மெதுவாக பின்னால் கொண்டு வந்து, இரு பாதங்களையும் பிடிக்கவும். கழுத்தை பின்னால் வளைக்கவும். மூச்சை மெதுவாக, ஆழமாக இழுத்து, மெதுவாக வெளிவிடவும். பின் கைகளை எடுத்து சாதாரண நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 வரை செய்யவும். பலன்கள்: |
| Posted: 23 Apr 2012 09:05 AM PDT மகரம் என்ற வட மொழிச் சொல்லுக்கு முதலை என்று பொருள். மகர ஆசனம் முழுத் தளர்ச்சியை அளிக்கும் ஒரு ஆசனமாகும். செய்முறை:- குப்புறப்படுத்துக் கொள்ளவும். வயிறு, மார்பு, முகவாய்க்கட்டை தரையைத் தொடவேண்டும். கால்களை நீட்டவும். கைகள் இருபுறமும் பக்கவாட்டில் இருக்கவேண்டும். கால்களை வசதியாக அகற்றிக் கொள்ளவும், தரையைத் தொடுமாறு பார்த்துக் கொள்ளவும். குதிகால்கள் இரண்டும் ஒன்றையொன்று நோக்குமாறு வைத்துக் கொள்ளவேண்டும். கால்களின் முனைகள் தரையில் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். கணுக்கால்களை வெளிப்புறத்தை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இப்போது கால்களையும், உடலின் நடுப்பகுதியையும் உயர்த்தவும் வலது கையை இடது தோளுக்கு அடியில் கொண்டு வரவும். வலது கையால் இடது தோளை லேசாக பற்றவும். இடது கையை வலது தோளின் மீது வைக்கவும். இப்போது இடது கையால் வலது தோளை லேசாகத் தொடவும். இந்த நிலையில் முழங்கைகள் மடிக்கப்பட்டுள்ளபோது, ஒன்றின் மேல் ஒன்று உள்ளபோது, இரட்டை முக்கோண வடிவம் கிடைக்கிறது. உங்களது முன் கைகள் எதிர்ப் பகுதியில் உள்ள மேல் கைகளின் மேல் இருக்கும். உருவான இரட்டை முக்கோணத்தில் உங்கள் நெற்றியை இருத்த வேண்டும். கண்களை லேசாக மூடி சிறிது நேரம் இருக்கவும். உங்களால் முடிந்த வரையில் இந்த நிலையில் இருக்கவும். பிறகு மெதுவாக உட்காரும் நிலைக்கு திரும்பவும். பலன்கள்: வயிற்று உபாதைகளும், முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவும் சரியாகும். சிறு குடல்கள் சீராக இயங்கி சீரண உறுப்புகள் நன்றாக இயங்கும். |
| Posted: 23 Apr 2012 09:04 AM PDT மகரம் என்ற வட மொழிச் சொல்லுக்கு முதலை என்று பொருள். மகர ஆசனம் முழுத் தளர்ச்சியை அளிக்கும் ஒரு ஆசனமாகும். செய்முறை:- குப்புறப்படுத்துக் கொள்ளவும். வயிறு, மார்பு, முகவாய்க்கட்டை தரையைத் தொடவேண்டும். கால்களை நீட்டவும். கைகள் இருபுறமும் பக்கவாட்டில் இருக்கவேண்டும். கால்களை வசதியாக அகற்றிக் கொள்ளவும், தரையைத் தொடுமாறு பார்த்துக் கொள்ளவும். குதிகால்கள் இரண்டும் ஒன்றையொன்று நோக்குமாறு வைத்துக் கொள்ளவேண்டும். கால்களின் முனைகள் தரையில் பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். கணுக்கால்களை வெளிப்புறத்தை நோக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். இப்போது கால்களையும், உடலின் நடுப்பகுதியையும் உயர்த்தவும் வலது கையை இடது தோளுக்கு அடியில் கொண்டு வரவும். வலது கையால் இடது தோளை லேசாக பற்றவும். இடது கையை வலது தோளின் மீது வைக்கவும். இப்போது இடது கையால் வலது தோளை லேசாகத் தொடவும். இந்த நிலையில் முழங்கைகள் மடிக்கப்பட்டுள்ளபோது, ஒன்றின் மேல் ஒன்று உள்ளபோது, இரட்டை முக்கோண வடிவம் கிடைக்கிறது. உங்களது முன் கைகள் எதிர்ப் பகுதியில் உள்ள மேல் கைகளின் மேல் இருக்கும். உருவான இரட்டை முக்கோணத்தில் உங்கள் நெற்றியை இருத்த வேண்டும். கண்களை லேசாக மூடி சிறிது நேரம் இருக்கவும். உங்களால் முடிந்த வரையில் இந்த நிலையில் இருக்கவும். பிறகு மெதுவாக உட்காரும் நிலைக்கு திரும்பவும். பலன்கள்: வயிற்று உபாதைகளும், முதுகெலும்பின் பக்கவாட்டு வளைவும் சரியாகும். சிறு குடல்கள் சீராக இயங்கி சீரண உறுப்புகள் நன்றாக இயங்கும். |
| அட்சய திருதியை அன்று வழிபாடு செய்வது எப்படி? Posted: 23 Apr 2012 09:03 AM PDT அட்சய திருதியை தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து பூஜை அறையில் கோலம் போட வேண்டும் லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு, பூமாலைகள் சாற்ற வேண்டும். குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏற்றி வைக்கவும். பின்னர் கோலத்தின் மீது பலகை வைத்துக் கோலம் போடவும். ஒரு சொம்பில் அரிசி, மஞ்சள், நாணயங்கள், பொன், சிறிய நகைகள் போடவும். அதற்கு சந்தனம், குங்கும் இட வேண்டும். அதன் மீது தேங்காயை மாவிலை கொத்து நடுவில் வைத்து, கலசம் தயார் செய்து பலகை மீது வைக்கவும். இதற் முன் கோலம் போட்டு நுனி வாழை இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்கவும், பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் குங்குமம் இட்டு பூ போடவும். பொன், பொருள், புத்தாடைகள் வாங்கி இருந்தால் கலசத்திற்கு அருகில் வைக்கவும். அர்ச்சனைகள் முடிந்த பிறகு தூபம், தீபம் காட்டி, பால் பாயாசம் நைவேத்யம் செய்யலாம். இவ்வாறு பூஜை செய்தால் அளவற்ற பலன்கள் கிடைக்கும். அட்சய திருதியை தினத்தில் நாம் செய்யும் நற்செயல்கள் எல்லாம் ஆயிரம் மடங்கு பலனைத் தரும் என்று பவிஷ்யோத்ர புராணம் கூறுகிறது. அன்றைய தினம் செய்யப்படும் தானங்கள், பித்ரு காரியங்களுக்குப் பல ஆயிரம் பலன்கள் உண்டாக்கும். |
| Posted: 23 Apr 2012 08:59 AM PDT பொருள் வரவு, உடல் நலம், அன்பான மனைவி, சிறந்த பிள்ளைகள், நல்ல நண்பர்கள், கல்விக் செல்வம் இந்த ஆறும் குறைவின்றி பெற்றவர்களே லட்சுமி கடாட்சம் பெற்றவர்கள் ஆவர். இந்த ஆறையும் பெற மகாலட்சுமியை 12 நாமங்கள் சொல்லி வழிபட வேண்டும். ஸ்ரீதேவி: செல்வத்தை உடையவள் பத்மா: தாமரையில் வாழ்பவள் கமலா: தாமரையை வீற்றிருப்பவள் முகுந்த மஹிஷீ: திருமாலின் மனைவி லட்சுமி: லட்சணம் நிறைந்தவள் திரிலோகேஸ்வரி: மூன்று உலகங்களையும் ஆள்பவள் மகாகீர்த்தி: பெருமைக்குரியவள் ஷீ ராப்திஸுதா: பாற்கடலில் பிறந்தவள் விரிஞ்சஜனனி: உலகத்தைப் படைப்பவள் வித்யா: அறிவைத் தருபவள் ஸரோஜன்யாசனா: தாமரை ஆசனத்தில் இருப்பவள் ஸர்வாபீஷ்ட பலப்ரதா: சகல விருப்பங்களையும் நிறைவேற்றுபவள் |
| Posted: 23 Apr 2012 08:57 AM PDT ஸ்தல வரலாறு.... இலங்கையில் இருந்து வணிகர் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரையின் போது சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய கப்பலில் வந்து செல்வார். ஒருமுறை கடும் புயல், மழை பெய்தது. இதனால் குலசேகரன்பட்டினம் வரை கப்பலில் வந்தவர் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே தங்கும்படியானது. சிவனைத் தரிசிக்க முடியவில்லையே எனும் கவலையால் அந்த வணிகர் கதறி அழுதார். அவரது வாட்டத்தை அறிந்த சிவனார், அங்கேயே அவருக்கு திருவாதிரைக் கோலத்தில் காட்சி தர முடிவு செய்தார். அப்போது, `இங்கிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் வழியில் எறும்புகள் வரிசையாகச் சென்று, உனக்கு பாதை காட்டும். அந்த எறும்புக்கூட்டம் நிற்கும் இடத்தில், உனக்குத் திருக்காட்சி தருவேன்' என அசரீரி கேட்டது. அதன்படியே எறும்புகள் வழிகாட்ட... அவற்றைப் பின்தொடர்ந்த வணிகர், ஓரிடத்தில் தில்லையின் திருவாதிரைத் திருக்காட்சியைக் கண்டு சிலிர்த்தார். பிறகு, அந்த இடத்திலேயே ஆலயம் எழுப்பி, சிவனுக்கு ஸ்ரீசிதம்பரேஸ்வரர் எனும் திருநாமம் சூட்டி வழிபட்டார். திருச்செந்தூரில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது குலசேகரன்பட்டினம். இங்கிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பங்குனி உத்திரப் பெருவிழாவை விமரிசையாகக் கொண்டாடும் தென் மாவட்ட ஆலயங்களுள், முதன்மையான தலம் இதுஆகும். பங்குனி உத்திர நாளில், இங்கு திருக்கல்யாண விழா கோலாகலமாக நடைபெறும். பங்குனி உத்திர நாளில், திருமணப் பிரார்த்தனை செய்பவர்கள், சுவாமிக்கும் அம்பாளுக்கும் இரண்டு மாலைகளை மாற்றி, அதில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு, தங்களின் கழுத்தில் அணிந்து, ஆலயத்தைப் பிரகார வலம் வருவர். இப்படிப் பிரார்த்திக்க... விரைவில் கல்யாண மாலை தோளில் விழும் என்பது ஐதீகம். அதேபோல் இங்கு தருகிற மஞ்சளை, பெண்கள் தினமும் குளித்துவிட்டுப் பூசிக் கொள்ள... வீட்டில் விரைவில் கெட்டிமேளச் சத்தம் கேட்குமாம். திருக்கல்யாணம் முடிந்த அன்றைய தினம், இரவு 7.30 மணிக்கு, சுவாமியும் அம்பாளும் ஊஞ்சலில் அமர்ந்தபடி காட்சி தருவர். இதைத் தரிசிக்க... நம் வேதனைகள் பறந்தோடி விடும். |
| Posted: 23 Apr 2012 08:55 AM PDT 1. 9-வது வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். அன்று 5 ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். (உணவு தங்களால் இயன்றது) நேராக உணவு அளிக்க முடியாதவர்கள் யார் மூலமாகவும் பணமோ, உணவு பொருளோ கொடுத்து உணவு அளிக்க ஏற்பாடு செய்யவும். 2. சாயிபாபாவின் மகிமை மற்றும் விரதத்தை பரப்புவதற்காக நம்முடைய வீட்டிற்கு அருகில் வசிப்பவர், சொந்த பந்தம் தெரிந்தவர் என்று இந்த விரத புத்தகங்களை 5,11 (அல்லது) 21 என்று தங்களால் இயன்ற அளவு விநியோகம் செய்யவும். 3. 9-வது வியாழக்கிழமை விநியோகிக்கும் புத்தகங்களை அன்று பூஜையில் வைத்து பிறகு வினியோகிக்கவும். இதனால் புத்தகத்தை பெறும் பக்தரின் விருப்பங்களும் ஈடேறும். மேற்கூறிய விதிமுறைகளின்படி, விரதமும், விரத நிறைவும் செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும். இது சாயி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. |
| திருச்செங்கோடு நகராட்சி கழிப்பறையில் விஜயகாந்த் ! Posted: 23 Apr 2012 08:51 AM PDT திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி சட்டமன்ற அலுவலகத்தில் தே.மு.தி.க. தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த் இன்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது அவரிடம் ஏராளமான குறைகளை தெரிவித்து பொதுமக்கள் மனு கொடுத்தனர். அதை தொடர்ந்து ஏழைகளுக்கு தையல் எந்திரம், சலவைப்பெட்டி உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உதவிகளை வழங்கி விஜயகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஆட்சி மாறுது காட்சிகள் மாறவில்லை. மக்கள் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூறியதால்தான் கூட்டணி வைத்தேன். ஆனால் எனக்கு கூட்டணி மீது நம்பிக்கை இல்லை. தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறேன். இதை கண்டு ஆளுங்கட்சி பயப்படுகிறது. தமிழகம் முழுவதும் தினமும் 10 -ல் இருந்து 15 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. எங்களது எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து என்னென்ன வேலைகள் செய்து இருக்கிறார்கள் என்பதை பார்வையிட வந்திருக்கிறேன். நேற்று மேட்டூர் தொகுதிக்கு சென்றேன். மேட்டூரில் இருந்து தமிழகம் முழுவதுக்கும் தண்ணீர் செல்கிறது. ஆனால் மேட்டூர் மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. எம்.ஜி.ஆர்.காலத்தில் மேட்டூர்-மேச்சேரி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது இதுவரை யாரும் நிறைவேற்றவில்லை. அதேபோல் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு செய்த போது மின்வெட்டு இருப்பதும், மருந்து, மாத்திரை இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுவதும் தெரியவந்தது. நான் சென்றவுடன் எனக்காக ஜெனரேட்டர் மூலம் பேன், லைட் போட்டனர். இது நோயாளிகளுக்கு கிடைக்கும் வகையில் எப்போதும் போட்டால் பரவாயில்லை.மக்களிடம் பெற்ற மனுக்களை படித்து அதற்கு உண்டான தீர்வுகளை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து மனுக்களை பெற்ற விஜயகாந்த் திடீரென திருச்செங்கோடு புதிய பஸ்நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு நகராட்சி கழிப்பிடத்திற்குள் சென்று பார்த்தார். அப்போது அவர் கூறும்போது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. ரூ. 1 கட்டணத்துக்கு பதிலாக ரூ. 5 வசூலிப்பதாக தெரிவித்தார். மேலும் கடைகளில் தடைசெய்யப்பட்ட பான்பராக், உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குடிநீர் இல்லாத பகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் என்றார். விஜயகாந்துடன் மாவட்ட செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏவுமான சம்பத்குமார், மாநில துணை செயலாளர் ஏ.ஆர். இளங்கோவன், முன்னாள் மாவட்ட செயலாளர் விஜயசரவணன், மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், பொதுக்குழு உறுப்பினர் விஜய்கமல், நகர செயலாளர் தம்பி மனோகரன், ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். |
| சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு! Posted: 23 Apr 2012 08:48 AM PDT தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன். சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம். அறிகுறிகள் என்ன ? முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம். தைராய்டு பிரச்சினை பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும். 5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும். ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம். பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. வீட்டு வைத்தியம் சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம். பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம். வாழைத்தண்டு முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும். எதை சாப்பிடக்கூடாது? சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். |
| பழுப்பு கண்களா? அழகாக்க டிப்ஸ் இதோ! Posted: 23 Apr 2012 08:41 AM PDT முகத்தின் அழகை அதிகரித்துக் காட்டுவது கண்கள். கண்ணின் கருவிழிகள் கருப்பாக இருப்பது அனைவருக்கும் இயல்பானது. சிலரது கண்கள் பழுப்பாகவும், சிலரது கண்கள் நீலமாகவும் இருக்கும். கண்களின் நிறம் கருவிழியின் மெலனோசைட்டுகளால் உற்பத்தி செய்யப்படும் மெலனின் என்ற நிறப்பொருளின் வேறுபடும் விகிதாசாரத்தினால் ஏற்படுகின்றன பழுப்பு கண்களை உடையவர்கள் அதற்கேற்ப மேக் அப் போட்டால் கண்களை அட்ராக்டிவாக காட்ட முடியும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். பழுப்பு நிற கண்ணிற்கு மேக் அப் பழுப்பு நிற கண்களுக்கு ஏற்ற ஐ ஷேடோவை வாங்கி பயன்படுத்தலாம். அடர் நிற ஷேடோக்கள் பழுப்பு நிற கண்ணிற்கு ஏற்றது. கருப்பு, நீலம், ப்ளு க்ரே, பர்ப்பிள் போன்றவை பழுப்பு நிற கண்களுக்கு ஏற்றது. ஐ லைனர், மஸ்காரா போன்றவை கருப்பு அல்லது சில்வர் ஷேடோவில் இருக்கவேண்டும். கீழே உள்ள கண் இமைக்கு திக்காக போடுவதன் மூலம் கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும். மெட்டாலிக் நிறங்களான கோல்டு, காப்பர், சில்வர் ஐ ஷேடோக்கள் பளுப்பு நிற கண்களுக்கு ஏற்றது. லைட் கலர் ஐ லைனர் பயன் படுத்துவன் மூலம் கண்களை எடுப்பாக காட்டலாம். லைட் ப்ளு ஐ லைனர் பென்சில் கொண்டு கீழ் இமைகளில் லேசாக வரையவேண்டும். நமக்கு சரும நிறத்திற்கு ஏற்ற ஐ ஷேடோ பயன்படுத்துவது ஹைலைட் ஆகும். அதேசமயம் உதட்டிற்கு டார்க் கலர் லிப் கிளாஸ் பயன்படுத்தலாம். அழகியல் நிபுணர்கள் கூறியுள்ள இந்த ஐ மேக் அப் போட்டால் பழுப்பு நிற கண்கள் பக்காவாக இருக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். |
| தந்திரோபாய விளையாட்டுக்கார இளைஞன் (வீடியோ இணைப்பு) Posted: 23 Apr 2012 08:02 AM PDT இதில் கரணம் தப்பினால் மரணமும் நிகழலாம். ஆனால் பிரண்டன் மக்கியூன் என்ற இளைஞன் மிகவும் தந்துரோபாயமான யுக்திகளைக் கையாண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் விளையாடுகின்றான். |
| தாய்லாந்து பாராளுமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண பெண்(வீடியோ இணைப்பு) Posted: 23 Apr 2012 07:55 AM PDT அண்மையில் தாய்லாந்து நாடாளுமன்றத்தில் மிகவும் பரபரப்பாக விவாதம் ஒன்று நடத்தப்பட்டு கொண்டிருந்தபோது அங்கு உள்ள திரையில் திடீரென அரை நிர்வாண கோலத்தில் பெண் ஒருவர் அழையா விருந்தாளியாக தோன்றி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அரசமைப்பு சட்டத்தின் திருத்தம் ஒன்றின் மீது காரசாரமாக விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. எம்.பி ஒருவர் உரையாற்றிக் கொண்டு இருந்தார். நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு இருந்த இராட்சத திரையில் அப்போது திடீரென அரை நிர்வாண பெண்ணின் உருவம் மிக நெருக்கமாக தோன்றியது. எம். பி உரையாற்றுகினற காட்சிக்கு இடையில் இவ்வுருவம் தோன்றி இருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இது குறித்து சபைக்கு முறையிட்டார். தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அத்துடன் திரையும் செயல் இழக்க வைக்கப்பட்டது. உடனடியாக விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன. வெளியாள் ஒருவர்தான் இப்புகைப்படங்களை திரையில் ஏற்றி இருக்கின்றார் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். இப்பரபரப்புக்கள் ஓய்ந்ததை அடுத்து அமர்வு மீண்டும் இடம்பெற்றது. |
| மனிதக் கடத்தல் - ஒரு ரிப்போர்ட்! Posted: 23 Apr 2012 07:47 AM PDT மலேசியாவில் 12 குறும்படங்களை இயக்கி அவற்றுள் 'தொலைதூர பயணம்' என்ற குறும்படத்திற்காக சிறந்த படத்திற்கான 'வானவில்' விருதையும் பெற்றவர் இயக்குனர் அமின். இந்த குறும்பட கதைக் கருவை 'தொலைவினிலே' என்ற பெயரில் முழுநீளத் திரைப்படமாக இயக்கி வருகிறார் அமின். கோல்ட் குளோப் சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மலேசிய திரை நட்சத்திரங்களான தியாகராஜன், கேசவன், மு.ஆர்.பாலு, காந்திநாதன், மன்சு, ஸ்ரீமதி ஆகியோருடன் தமிழ் சினிமா நட்சத்திரங்களும் இணைந்து நடிக்கின்றனர். மலேசியா தாய்லாந்து, ஸ்வீடன் ஆகிய தொலைதூர நாடுகளில் படமாகிறது தொலைவினிலே படம். |
| ஒட்டிக்குதா பார்க்குறேன்... கருணாசுடன் ரிஸ்க் எடுத்த நடிகை Posted: 23 Apr 2012 07:45 AM PDT லொடுக்கு பாண்டியாக தன் சினிமா வாழ்க்கையை தொடங்கி, அம்பானியாக சொந்தப்படம் எடுக்கிற அளவுக்கு முன்னேறியவர் கருணாஸ். இடையில் தான் நடித்த படங்களில் சிலவற்றை தானே விநியோகம் செய்கிறேன் என்று அகல கால் வைத்த கருணாசுக்கு அவ்வளவு சுபிட்சம் தரவில்லை அந்த ஏரியா. எப்படியோ ஆட்டை தூக்கி மாட்டில் போட்டு, மாட்டை தூக்கி மந்தையில் வீசி, ஹீரோக்களில் ஒருவராக நின்றுவிட்டார் கருணாஸ். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் தன்னுடன் நடிக்க முன்னணி பின்னணி நடிகைகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்து, அதில் ஏராளமான மனக்காயங்களை சந்தித்த கருணாஸ், ஏன்... என் கூட நடிச்சா கருப்பு ஒட்டிக்குமா என்றெல்லாம் பேட்டியளித்து குமுறியது தனிக்கதை. ஆனால் இன்றைய தேதிக்கு தமன்னா மார்க்கெட்டே தள்ளாடிக் கொண்டிருக்கும் போது, கருணாசுக்கு ஒரு லட்சணமான நடிகை கிடைக்காமலா போய்விடுவார்? யெஸ்... தான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் மச்சான் படத்திற்கு அதிகம் சிரமப்படவில்லையாம் கருணாஸ். ஷெரில் பிண்டோ என்ற ஆப்பிள் பழத்தை அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார்கள்இவருக்காக. எங்க? கருப்பு ஒட்டிக்குதா பார்க்குறேன் என்று கருணாசோடு நெருக்கமாகவே டூயட் ஆடவிருக்கிறாராம் இந்த ஷெரில். இப்படத்தை தயாரித்து, இயக்கவும் செய்யப்போகிற ஷக்தி சிதம்பரம் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவும் போகிறார். ஆச்சர்யம் நம்பர் இன்னொன்று. சில காலம் தமிழ்சினிமாவை கண்டு கொள்ளாமலிருந்த விவேக், மீண்டும் களமிரங்கியிருக்கிறார். |
| சிம்பு எப்படி சிக்குனாரு? வியக்கிறது கோடம்பாக்கம் Posted: 23 Apr 2012 07:43 AM PDT சென்னையில் எங்கு திரும்பினாலும் சிம்புவின் போஸ்டர்தான் தென்படுகிறது. இத்தனைக்கும் சிம்பு நடித்த ஒரு படம் கூட இப்போதைக்கு ரிலீஸ் இல்லை. இந்த நேரத்தில் எதற்காக? ஸ்ரீதர் என்ற படத்தில் நட்புக்காக ஒரு பாடலை பாடியிருக்கிறாராம். அதற்கு நன்றி தெரிவித்துதான் இந்த பிரமாண்டமான போஸ்டர்கள். இந்த தலைப்புக்காகவே கூப்பிட்டதும் வந்து பாடிக் கொடுக்க ஒப்புக் கொண்டார் சிம்பு என்கிறார்கள் படக்குழுவினர். ஸ்ரீதர் குழுமம் சிம்புவுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய நாளில் இருந்தே பேஸ்த் அடித்து திரிகிறது இன்னொரு படக்குழு. அவங்க அடிச்சாச்சு. நாங்களும் அடிக்கணுமே என்ற கட்டாயத்தினால் வந்த பேஸ்த் இது. மதில் மேல் பூனை என்ற படத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார்களாம். இவர்களின் அழைப்பையும் ஏற்றுக் கொண்டு பாடிக் கொடுத்திருக்கிறார் சிம்பு. சிம்புவோட கால்ஷீட் வாங்கறதுன்னா, யானைக்கு கோமணம் கட்டுற மாதிரி பெரிய வேலை. இவங்க ரெண்டு கம்பெனிக்கு மட்டும் எப்படி சுலபமா சிக்குனாரு அவரு? என்று கேட்டு கேட்டு கிர்ரடித்துப் போகிறது கோடம்பாக்கம். |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























