சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- நயன்-த்ரிஷா மோதலுக்கு என்னதான் காரணமாம்?
- இதற்கும் உத்தரவாதமில்லை... விக்ரம் பட வில்லங்கம்
- அயிட்டம் டான்ஸ் வேணாம்... அடம் பிடிக்கும் நடிகை
- பாகிஸ்தானில் 3 கரத்துடன் பிறந்த பெண் குழந்தை (காணொளி இணைப்பு) _
- சிம்பு பாடிய பாப்பா பாட்டு!
- தயாரிப்பு தனுஷ் : ஹீரோ சிவகார்த்திகேயன் !
- தயாரிப்பு தனுஷ் : ஹீரோ சிவகார்த்திகேயன் !
- நடுத்தெருவில் வைத்து சுடப்பட்ட சிரியா இளைஞன் (வீடியோ, படங்கள் இணைப்பு)
- பக்கவாட்டில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திய விமானம் (வீடியோ, படங்கள் இணைப்பு)
- பக்கவாட்டில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திய விமானம் (வீடியோ, படங்கள் இணைப்பு)
- உணவருந்தும் தனது கோப்பையை தானே கழுவிச் சுத்தம் செய்யும் பூனை (வீடியோ இணைப்பு)
- அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இலங்கை பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை
- இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம்
- இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள்! ஆதாரமிருந்தால் மட்டுமே விசாரணையாம்! இலங்கை அரசாங்கம்
- இந்தியாவுக்கு கடத்தவிருந்த தங்க பிஸ்கட்டுகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பறிமுதல்
- யாழ். பொது எதிரணி மேதின கூட்டத்தில் தமிழ்மக்கள் அணி திரள வேண்டும்!- மனோ கணேசன் அழைப்பு
- கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்
- இலங்கையில் போரின் போது கொத்துக் குண்டுகள் பாவனை! அனைத்துலக அமைப்பு விசாரணை
- ஈழப்போரில் கொத்துக்குண்டு பாவனை - இலங்கை அரசு மறுப்பு - மருத்துவ பணியாளர் ஒருவரின் சாட்சியம் - ஏபி ஊடகம்
- கருமை நிறம் மறைய
- மதுபோதையில் மனைவியை எரிக்க முயற்சித்த கணவன் கைது: யாழில் சம்பவம்
- கிளிநொச்சியில் அம்பாள் நீராடும் புண்ணிய தீர்த்தம் ஆக்கிரமிப்பாளர் கையில்
- அரசாங்கத்திற்கு வெள்ளை வான்களில் நபர்களைக் கடத்த வேண்டிய அவசியமில்லை! ஹூலுகல்ல
- முன்னாள் அமைச்சர் செ. இராசதுரை துரோகி: சிவாஜிலிங்கத்தின் கருத்துக்கு யோகேஸ்வரன் கண்டனம்
| நயன்-த்ரிஷா மோதலுக்கு என்னதான் காரணமாம்? Posted: 28 Apr 2012 09:13 AM PDT எனக்கும் த்ரிஷாவுக்கும் எந்த பிரச்சனையுமில்ல, மீடியாதான் பிரச்சனை அது இதுன்னு து£ண்டிவிடுது என்று ஓப்பன் பேட்டி கொடுத்திருக்கிறார் நயன்தாரா.ஆனால் நயன்தாரா சென்னையில் கால் வைத்த நாளில் இருந்தே இருவரும் போனில் பிலுபிலுவென பிடித்துக் கொண்டு உருண்ட கதையை யாரிடம் சொல்ல? என களுக்கென சிரித்து மேலும் இந்த பிரச்சனையில் சுளுக்கு விழ வைக்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமான சோர்ஸ்கள் அப்படியென்ன பிரச்சனை இருவருக்கும், அதுவும் இவ்வளவு காலம் கழித்து? சில வருடங்களுக்கு முன் தனது தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க 75 லட்ச ரூபாய் முன் பணம் கொடுத்திருந்தாராம் லிங்குசாமி. அதை வாங்கிக்கொண்டு கால்ஷீட் கொடுக்காமல் கம்பி நீட்டி விட்டார் நயன். பணத்தை திரும்ப கைப்பற்ற எவ்வளவோ போராடியும், என் தேதிகளை நீங்க வேஸ்ட் பண்ணிட்டீங்க. தர முடியாது என்று மறுத்துவிட்டார் அவர். இடைபட்ட நேரத்தில் மேற்படி படத்தில் வேறொரு நடிகை நடித்தார். லிங்குசாமி கம்பெனியை பொருத்தவரை நான்தான் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்கிற மாதிரி நடந்து கொள்வார் த்ரிஷா. இந்த புதுப்படத்திற்கு தன்னை அழைக்காமல் நயன்தாராவை அழைத்தார்களே என்ற கோபம் வந்துவிட்டதாம் த்ரிஷாவுக்கு. அதனால்தான் போன் போட்டு பொங்கி வெடித்தாராம். |
| இதற்கும் உத்தரவாதமில்லை... விக்ரம் பட வில்லங்கம் Posted: 28 Apr 2012 09:10 AM PDT ஷங்கர் படத்தில் விக்ரம் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வமற்ற செய்தி கிளப்பிவிடப்பட்ட அடுத்த நாளே ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவலும் உடனடியாக வெளியிடப்பட்டது. நண்பன் படத்தில் நடிக்க ஆயிரம் கண்டிஷன்கள் போட்டு ஷங்கரை அலற வைத்த சூர்யா, இந்த முறையும் அதே ஸ்டைலை போட்டு தாக்க, மறுபடியும் ஷங்கரின் படம் கை நழுவிப் போயிருக்கிறது அவருக்கு. இதை மூடி மறைக்கும் விதத்தில்தான் இந்த ஹரி பட அறிவிப்பு என்கிறார்கள். கரிகாலன் டிராப், தாண்டவம் படத்தில் நம்பிக்கையில்லை, சமீபத்தில் வெளிவந்த ஐந்து படங்களும் தொடர் பிளாப். இதெல்லாம் கிலியை ஏற்படுத்திய காரணத்தால் ஷங்கரிடம் போய் விடாப்பிடியாக இந்த வாய்ப்பை பெற்றாராம் விக்ரம். இருந்தாலும் முறையான அறிவிப்பு வருகிற வரைக்கும் இந்த படத்திற்கும் உத்தரவாதமில்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். |
| அயிட்டம் டான்ஸ் வேணாம்... அடம் பிடிக்கும் நடிகை Posted: 28 Apr 2012 09:06 AM PDT அட்டு பிகராக இருந்தாலும் அதற்கு நட்டு போல்ட் போட்டாவது ரசிக்க வைத்துவிடும்கோடம்பாக்கம். அப்படிப்பட்ட ஏரியாவே ஒரு நடிகையை அப்படியே ஆறப்போட்டு விட்டது. அவர்தான் சுஜா. இந்த திடீர் அதிர்ச்சியால் துணுக்குற்ற சுஜா ஆறு மாதம் யாருக்கும் சொல்லாமல் காணாமல் போய் விட்டார். எங்கோ வெளிநாட்டுக்கு போய் மூக்கு உள்ளிட்ட பல்வேறு ஏரியாக்களை மறு சீரமைப்பு செய்துவிட்டு திரும்பியிருக்கிறார். கோயம்பேடு தக்காளிக்கு கோல்டு சட்டை போட்ட மாதிரியாகிவிட்ட அவரது திடீர் பொலிவுக்கு செம மாஸ். போட்டோவை பார்த்தே அழைப்புகள் உறுதி செய்யப்படுகின்றனவாம். சுஜாவின் தற்போதைய பெயர், சுஜா வாரூணி. |
| பாகிஸ்தானில் 3 கரத்துடன் பிறந்த பெண் குழந்தை (காணொளி இணைப்பு) _ Posted: 28 Apr 2012 09:04 AM PDT முதுகெலும்பு தண்டு வடத்துக்கு அருகே மேலதிகமாக மூன்றாவது கரத்துடன் பெண் குழந்தையொன்று பிறந்த அதிசய சம்பவம் பாகிஸ்தானின் டெரா காஸி கான் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை பிறந்த மேற்படி குழந்தை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. நிஷத்தார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள அக்குழந்தையின் மூன்றாவது கரத்தை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இவ்வாறு மேலதிக அவயத்துடன் குழந்தை பிறப்பது ஒரு மில்லியன் பிறப்புகளுக்கு ஒரு பிறப்பு என்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும். இதற்கு முன்பு இம்மாத ஆரம்பத்தில் பாகிஸ்தானின் சுக்குக் பிரதேசத்தில் 6 கால்களுடன் உமா பாரூக் என்ற ஆண் குழந்தை பிறந்தமை குறிப்பிடத்தக்கது. |
| Posted: 28 Apr 2012 08:56 AM PDT சிம்பு நடிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் ' போடா போடி ' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வருகிறது.DISNEYLAND-ல் சிம்பு, வரலெட்சுமி சரத்குமார் மற்றும் சம்ரத் ( சிம்புவின் மருமகன்) சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். DISNEYLAND-ல் படமாக்கப்பட்டு வரும் பாடல் காட்சிகள் குறித்து சிம்பு " அப்பா - மகன் உறவு குறித்து வாலி சார் எழுதிய பாடலை படமாக்கி வருகிறோம். இப்பாடலுக்கு தரணின் இசை அருமையாக வந்து இருக்கிறது. ' பாப்பா நான் இருக்கேன் பா... மதராவும் இருப்பேன் பா... எப்பவுமே நாந்தான் பா உன் பர்ஸ்ட் ப்ரெண்ட் பா... உன் பெஸ்ட் ப்ரெண்ட் பா..' என்ற இப்பாடலை நான் பாடி இருக்கிறேன். |
| தயாரிப்பு தனுஷ் : ஹீரோ சிவகார்த்திகேயன் ! Posted: 28 Apr 2012 08:55 AM PDT 'மெரினா', ' 3 ' உள்ளிட்ட படங்களில் தனது காமெடி கலந்த நடிப்பில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். தனுஷ் உடன் இணைந்து இவர் நடித்த '3' படத்தில் இவரது காமெடி காட்சிகள் வரவேற்பைப் பெற்றது. தற்போது எழில் இயக்கத்தில் 'மனம் கொத்தி பறவை' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். '3' படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமான தனுஷ், தற்போது சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து படம் ஒன்றினை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய செந்தில் இயக்க இருக்கிறார். |
| தயாரிப்பு தனுஷ் : ஹீரோ சிவகார்த்திகேயன் ! Posted: 28 Apr 2012 09:08 AM PDT 'மெரினா', ' 3 ' உள்ளிட்ட படங்களில் தனது காமெடி கலந்த நடிப்பில் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். தனுஷ் உடன் இணைந்து இவர் நடித்த '3' படத்தில் இவரது காமெடி காட்சிகள் வரவேற்பைப் பெற்றது. தற்போது எழில் இயக்கத்தில் 'மனம் கொத்தி பறவை' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். '3' படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமான தனுஷ், தற்போது சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து படம் ஒன்றினை தயாரிக்க இருக்கிறார். இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவியாளராக பணியாற்றிய செந்தில் இயக்க இருக்கிறார். |
| நடுத்தெருவில் வைத்து சுடப்பட்ட சிரியா இளைஞன் (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 28 Apr 2012 08:47 AM PDT இதேவேளை ஐக்கியநாடுகள் சபையின் பிரதிநிதிகள் சிலரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். இவர்கள் குறித்த இளைஞனைக் காப்பாற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. ![]() ![]() This posting includes an audio/video/photo media file: Download Now |
| பக்கவாட்டில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திய விமானம் (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 28 Apr 2012 08:45 AM PDT |
| பக்கவாட்டில் பறந்து பரபரப்பை ஏற்படுத்திய விமானம் (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 28 Apr 2012 08:44 AM PDT |
| உணவருந்தும் தனது கோப்பையை தானே கழுவிச் சுத்தம் செய்யும் பூனை (வீடியோ இணைப்பு) Posted: 28 Apr 2012 08:42 AM PDT மனிதர்ளே சில வேளைகளில் இவ்வாறு சுத்தம் செய்வதற்கு தயக்கம் காட்டும் தருணத்தில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுத் பூனைக்குட்டி மிகுந்த பொறுப்புடன் தனது கோப்பையை தானே சுத்தப்படுத்துவது ஆச்சரியம் ஊட்டும் வகையில் காணப்படுதுடன் சிலருக்கு இது ஒரு பாடமாகவும் அமைகின்றது. |
| அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இலங்கை பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை Posted: 28 Apr 2012 08:27 AM PDT இலங்கைப் பணியாளர்களை கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, சுவிஸ்சர்லாந்து மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளிற்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. பணியாளர்களை அனுப்புவதற்காக சகல நாடுகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக அத் திணைக்களத்தின் தலைவர் தெரிவித்தார். இந் நாடுகளில் பொறியியளாலர், ஹோட்டல் வேலை மற்றும் விமான நிலைய வேலைகளில் அதிக வெற்றிடங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே தான் இலங்கைப் பணியாளர்களை சர்வதேச நாடுகளில் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் பயிற்றிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. |
| இலங்கையில் ஜம்மியத்துல் உலமாவுக்குள் பிளவு: புதிய அமைப்பு நடவடிக்கை ஆரம்பம் Posted: 28 Apr 2012 08:25 AM PDT தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை தொடர்பான விடயத்தை அடுத்து, இலங்கையில் பலமிக்க இஸ்லாமிய இயக்கமாக இருந்து வந்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு எதிராக மற்றும் ஒரு சபை நேற்று முதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை என்ற பெயரில் இந்த அமைப்பே நேற்று தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதலுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட போதும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து வந்தது. எனினும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கையின் அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஆதரவாக செயற்படுகிறது. அது தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் விடயத்தில் உரிய எதிர்ப்புகளை வெளியிடவில்லை எனவே, தாம் இனிமேல் முஸ்லிம் மக்களுக்கான உரிமைகளுக்காக போராட்டப்போவதாக இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவில் இணைந்திருக்கப் போவதில்லை என்றும் இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி மிப்லால் தெரிவித்துள்ளார். |
| இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள்! ஆதாரமிருந்தால் மட்டுமே விசாரணையாம்! இலங்கை அரசாங்கம் Posted: 28 Apr 2012 08:24 AM PDT மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றங்களின் மூலம் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இலங்கை அமைச்சரவையின் மூத்த சட்ட ஆலோசகரான மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட அனைத்து மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். இதன்மூலம் குற்றமிழைத்தவர்கள் என்று கண்டறியப்படும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். ஐ.நா மனிதஉரிமை பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு அரசசார்பற்ற அமைப்புகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பல இடம்பெற்றிருப்பதாகவும், அவற்றை நிரூபிக்கும் ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குற்றம்சாட்டின. இலங்கை அரசுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தாக்கல் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று, அரசதரப்பில் கூறப்பட்டது. ஆனாலும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல்கள் அனைத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலம் தனித்தனியாக, ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் குற்றமிழைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து, அதற்கான ஆதாரங்கள் இருப்பின் அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர். இலங்கைப் படையினர் மனிதஉரிமை மீறில்களில் ஈடுபட்டதற்கோ, பொதுமக்களைத் துன்புறுத்தியதற்கோ ஆதாரங்கள் இருந்தால், இலங்கை இராணுவத் தளபதிக்கு எவரும் நேரடியாக முறைப்பாடு செய்யலாம். அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு, அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும். ஆதாரமற்ற வெறும் குற்றச்சாட்டுகளின் மீது இலங்கை அரசாங்கத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளன. இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது என்று குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். |
| இந்தியாவுக்கு கடத்தவிருந்த தங்க பிஸ்கட்டுகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பறிமுதல் Posted: 28 Apr 2012 08:23 AM PDT இந்தியாவுக்கு கடத்தப்படவிருத்த ஒரு மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்கா விமான நிலையத்திலுள்ள அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைப்பற்றியுள்ளதாக சுங்கப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது அப்பெண் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரின் பயணப் பையை சோதனை செய்துள்ளனர். அப்பையினுள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரு மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அத்தங்க பிஸ்கட்டுகள் அரச உடைமையாக்கப்பட்டுள்ளதுடன், அப்பெண் விசாரணைகளின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார். |
| யாழ். பொது எதிரணி மேதின கூட்டத்தில் தமிழ்மக்கள் அணி திரள வேண்டும்!- மனோ கணேசன் அழைப்பு Posted: 28 Apr 2012 08:21 AM PDT அரசின் மேலாதிக்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டங்கள் தமிழ் மாகாணங்களில் வெகுவிரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கு பிள்ளையார்சுழி போடுவதாக எமது பொது எதிர்க்கட்சிகளின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் அமைய வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது, எதிர்க்கட்சிகளின் பொது மேதினகூட்டம் யாழ்நகரில் நடத்தப்படுவது தொடர்பில் தமிழ் தேசியவாத நண்பர்கள் சிலவிமர்சனங்களை முன்வைத்துள்ளார்கள்.இந்த நடவடிக்கை தமிழ் தேசியத்தை சிங்கள பெரும்பான்மை கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரும் செயல் என்றும், ஐக்கிய தேசிய கட்சிக்கு யாழ்ப்பாணத்தை திறந்து விடும் நடவடிக்கை என்றும் எம்மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. விமர்சனங்களை முன் வைக்கும் தமிழ் தேசியவாத நண்பர்களை நான் மிகவும் மதிக்கின்றேன். அவர்கள் இதை நல்ல எண்ணத்திலேயே முன்வைக்கிறார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் ஐதேக யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டத்தில்,கலந்துகொள்வதன் மூலம் யாழ் மக்கள் ஐதேக விற்கு கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு வழங்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நான் நம்பவில்லை. ஐதேகவிற்கு கடந்த காலங்களில் கண்ணை மூடிக்கொண்டு வழங்கிய ஆதரவை தமிழ் மக்கள் இன்று கொழும்பிலேயே வழங்கவில்லை. தமிழ் தேசியவாத அணியினரின் ஆதரவுடனும்,முற்போக்கு சிந்தனை கொண்ட சிங்கள அணியினரின் துணையுடனும் அதை நாம் கடைசியாக கொழும்பு மாவட்டத்தில் நடந்த தேர்தலில் நிரூபித்து காட்டியுள்ளோம். இன்று கொழும்பு மாநகரசபையை எமது ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆதரவு மூலமாகவே ஐதேக கொண்டு நடத்தும் சூழலை தமிழ் மக்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். எனவே கொழும்பிலேயே நிலைமை இவ்விதம் இருக்கையில், யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் ஒரு மேதின கூட்டத்தை கண்டு ஐதேகவுக்கு ஆதரவு வழங்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது ஏற்றுகொள்ள முடியாத கருத்து ஆகும். விமர்சனங்களை முன்வைக்கும் தமிழ் தேசியவாத அணியினரை மதிப்பதுபோல், நான் யாழ்ப்பாணத்து தமிழர்களையும் மதிக்கின்றேன். வடமாகாண மக்கள் ஒருபோம்து தமிழ் தேசியத்திற்கு வெளியில் செல்ல மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை. யாழ்ப்பாணத்தில் நடக்க உள்ள மேதின கூட்டம், ஐக்கிய தேசிய கட்சி கூட்டம் அல்ல. ஐதேகவுடன் மாத்திரம் இணைந்து மேதின கூட்டம் நடத்தும் தேவை எமக்கு கிடையாது. இது ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜகட்சி, ஐக்கிய சமவுடைமை கட்சி ஆகிய கட்சிகளுடன், வடக்கின் தலைமை கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்குபற்றும் பொது எதிரணி நிகழ்வாகும். தென்னிலங்கையில் நாம் நடத்திய பொது எதிர்க்கட்சி போராட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி கலந்துகொண்டார். இத்தகைய ஒரு பொது எதிர்க்கட்சி நிகழ்வையே நாம் தற்சமயம் வடக்கிற்கும் விரிவுபடுத்த விளைகிறோம். மே முதலாம் திகதி காலை 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட கூட்டமைப்பு கிளையினரால், கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடத்தப்படும் மேதின கூட்டத்திலும், பின்னர் நல்லூர் கோயில் வீதி, கைலாசபதி பிள்ளையார் கோவிலடியில் பிற்பகல் 1.30 மணிக்கு ஊர்வலமாக ஆரம்பித்து யாழ் புனித ரோச் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள பிரதான பொது எதிரணி மேதின கூட்டத்திலும் நான் கலந்துகொள்ள உள்ளேன். இந்த இரண்டு கூட்டங்களிலும் தமிழ் மக்கள் அணி திரண்டு கலந்துகொள்ள வேண்டும் என வேண்டுகிறேன். |
| கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம் Posted: 28 Apr 2012 08:19 AM PDT தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் வரும் 30-ந் தேதி நடைபெறுகிறது. இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலை மையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் உறுப்பினர்களாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர். இதுகுறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ''தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் அமைப்பின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது. |
| இலங்கையில் போரின் போது கொத்துக் குண்டுகள் பாவனை! அனைத்துலக அமைப்பு விசாரணை Posted: 28 Apr 2012 08:16 AM PDT போரின் போது இலங்கைப் படைகளால், கொத்துக்குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து கிளஸ்டர் குண்டுகளின் பாவனையைத் தடை செய்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள அனைத்துலக அமைப்பான "கிளஸ்டர் குண்டு ஒழிப்புக் கூட்டணி" விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவ்வமைப்பின் பணிப்பாளரான, லோறா சீஸ்மன் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக வெளியாகின்ற தகவல்கள் கவலை தருகின்றன. இதனை நாம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். கிளஸ்டர் குண்டுகளை ஒழிக்கும் கூட்டணியின் நிபுணர்கள் வலையமைப்பு, இதுபற்றி மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது. அதேபோன்று இலங்கை அரசும் விசாரணை செய்வதை நாம் ஊக்குவிக்கிறோம்" என்றார் |
| Posted: 28 Apr 2012 08:15 AM PDT இறுதிப்போரில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவே இல்லை என சிறிலங்கா படைத்தரப்பும் அரசும் மறுத்துள்ள நிலையில், கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒருவரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவரின் சாட்சியத்தை ஏபி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. இலங்கை போரின் போது, வெடிக்காத கிளஸ்டர் குண்டினால் காயமடைந்த ஒருவரைத் தான் கண்டதாக அந்த மருத்துவப் பணியாளர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இலங்கை போரின் இறுதிகட்டத்தில், கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நாவின் வெடிபொருள் நிபுணர் அலன் போஸ்டனின் அறிக்கையை ஏபி செய்தி நிறுவனம் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. இதனை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ள நிலையிலேயே, கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்டவரை நேரில் கண்டவரின் சாட்சியத்தை ஏபிசி செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தினால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த மருத்துவப் பணியாளர் மேலும் கூறியுள்ளதாவது - "போரின் இறுதி மாதங்களில் வெடிக்காத கிளஸ்டர் குண்டு ஒன்றினால் காயமடைந்த ஒருவரைப் பார்த்தேன். அவரது காலைக் கிழித்துக் கொண்டு நுழைந்த அந்த கிளஸ்டர் குண்டின் பாகம், வெடிக்காத நிலையில் புதைந்து போயிருந்தது. பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைச் சுற்றாடலில் தாம் கிளஸ்டர் குண்டின் சிதறல்களைக் கண்டுபிடித்ததாக ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள் என்னிடம் கூறியிருந்தனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்த நோயாளர்கள் கிளஸ்டர் குண்டுகளால் காயமடைந்ததாக கூறியதை அடுத்து அந்த மருத்துவமனை புதுமாத்தளனுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. வித்தியாசமான வெடிப்புச்சத்தம் கேட்டது. பாரிய குண்டுச்சத்தத்தை அடுத்து சிறிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. காயங்கள் பலமானதாக இருந்ததால் மருத்துவ அதிகாரிகளால் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் மார்ச் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒருவர் தனது காலின் கீழ்ப் பகுதியில் காயமடைந்த நிலையில் வந்தார். அவரது காயத்தை மருத்துவ அதிகாரிகள் சுத்தம் செய்த போது, கிளஸ்டர் குண்டின் சிறியதொரு வெடிக்காத பாகம் உள்ளிருந்ததை கண்டுபிடித்தனர். அவரது காலுக்குள் குண்டு இருந்தது. இதனால், குண்டு இருந்த அவரது முழங்காலுக்கு கீழான பகுதியை மருத்துவ அதிகாரிகள் வெட்டி அகற்றினர். அதனை செயலிழக்க வைப்பது பாதுகாப்பற்றது என்பதால், அவரது கால் அகற்றப்பட்டு வீசப்பட்டது." என்றும் அந்த மருத்துவப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக ஏபி பெற்றுக் கொண்ட ஒரு ஒளிப்படத்தில், ஒருவரது முழங்காலுக்குக் கீழ் உலோக உருளை ஒன்று புதைந்துள்ளதை காணமுடிகிறது. இதை தொழில்நுட்ப வல்லுனர்களிடம் காண்பித்தபோது, அது ஒரு கிளஸ்டர் குண்டு தானா இல்லையா என்பதை கூறமுடியவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் ஏபி குறிப்பிட்டுள்ளது. அதேவேளை, தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் மேற்கொண்ட போரின் போது, பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் என்றும் இவர்களில் பலர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டினால் ஏற்பட்டிருக்கக் கூடிய எரிகாயங்களுக்கு உள்ளாகியதாகவும் ஏபி தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அந்த மருத்துவப் பணியாளர், "வெள்ளைப் பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களுடன் நோயாளர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிக்கருகே சென்று பார்த்தபோது அந்த இடம் கருகிப் போயிருந்தது" என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதை அனைத்துலக சட்டங்கள் தடை செய்யவில்லை. ஆனால் பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுவது மனிதஉரிமை அமைப்புகள் போர்க்குற்றம் என்று கூறுவதாகவும் ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. |
| Posted: 28 Apr 2012 08:13 AM PDT கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு கண் மற்றும் உதட்டை சுற்றிலும் கருமை படர்ந்து காணப்படும். மேலும், கழுத்துப் பகுதியும் கருமையாக மாறிவிடும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுடன், தோலில் சூரிய ஒளிபடும்போது, இவ்வாறு கருமை நிறம் தோன்றுகிறது.குழந்தை பிறந்ததும், இவை மறைந்து விடும். இருந்தாலும் இன்றைய பெண்கள், சிலர் பார்லர்களில் லேசர் சிகிச்சை செய்து கொள்கின்றனர். இதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் இது தாய், சேய் உடல் நலனை பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த கருமை நிறம் போக நாம் வீட்டில் இருக்கும் பாசிப் பருப்பு, கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், காய்ந்த ரோஜா இதழ்கள், சந்தனம் மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கலந்து பொடி செய்து, அதை தேய்த்து குளித்து வந்தால் கருமை மறையும். |
| மதுபோதையில் மனைவியை எரிக்க முயற்சித்த கணவன் கைது: யாழில் சம்பவம் Posted: 28 Apr 2012 08:09 AM PDT மதுபோதையில் வீடு வந்த கணவன் மனைவியின் தலையில் மண்ணெண்ணையை ஊற்றித் தீவைக்க முயற்சித்த சம்பவமொன்று யாழ், நாவாந்துறை, பொம்மைவெளிப் பகுதியில் பதிவாகியுள்ளது. இதன்போது அங்கிருந்து தப்பியோடிய குறித்த பெண் யாழ் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். சம்பவம் குறித்து பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட பொலிஸார் அவரது கணவரைத் தேட ஆரம்பித்துள்ளனர். மதுக்கடை ஒன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும்போது குறித்த நபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
| கிளிநொச்சியில் அம்பாள் நீராடும் புண்ணிய தீர்த்தம் ஆக்கிரமிப்பாளர் கையில் Posted: 28 Apr 2012 08:07 AM PDT ஐம்பது வருடங்களுக்கு மேற்பட்ட பாரம்பரியத்தையும் அழகிய சித்திரத்தேரையும் கொண்டு, வன்னி மக்களின் நம்பிக்கை தாயாக விளங்கக்க கூடிய கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாளின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. 2009இற்கு முன்னர் மிகவும் அருள்பெருக்கு நிறைந்த பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு சிறப்புற்ற இவ்வாலயம், போருக்கு பின்னர் பல்வேறு நெருக்கடிகளை இராணுவத்தாலும் சிங்கள சுற்றுலா பயணிகளாலும் புனிதம் மாசுபடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சியின் நூற்றாண்டு பெருமை கொண்ட 30000இற்கும் மேற்பட்ட ஏக்கர் வயல்களின் செழிப்புக்கும் உழவர்களின் உவப்புக்கும் பஞ்சங்களுக்கும் பரிவுகடாட்சமாகவும் விளங்கும் இணைமடு பெருங்குளத்தின் காவல் தெய்வமாக இருக்கும் கனகாம்பிகை அம்பாள் ஆலயம் இப்போது முற்றிலும் இராணுவ வலயமாக காணப்படுகின்றது. கோவிலின் புலால் உண்ணிகளின் கொத்தளங்களாக காணப்படுகின்றது.திருவிழாக்காலங்களில் பகத்தர்கள் மிகவும் சுதந்திரமாக உலவிய சூழல் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளன. வழமையாக சித்திரைப் பூரணையுடன் நிறைவுறும் கனகாம்பிகை அம்பாளின் பெருந்திருவாழாவின் போது அம்பாள் குளிர்த்திபெற இரணைமடுக்குளத்தின் ஆற்றுப்படுக்கையான கனராயன் ஆற்றில் பக்தர்கள் புடைசூழ செல்வாள். ஆனால் இம்முறை அத்தகைய பரவசத்துடன் செல்ல இராணுவஆக்கிரமிப்பு அனுமதிக்குமா பக்தர்கள் கவலையுற்றிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அம்பாளின் திருவிழாவிற்கு இணைமடு பெரும் அணையால் கால்நடையாகவும் ஊர்திகளிலும் நேர்த்திக்கடன்களுடன் பெருந்திரளாக வரும் வட்டக்கச்சி, இராமநாதபுரம், தர்மபுரம் போன்ற பெரிய கிராமங்களை சேர்ந்த அடியார்கள் இம்முறை அவ்வழியாக வர இராணுவம் தடைவிதித்துள்ளது. இதனால் பாதுகாப்பற்ற காட்டுப்பகுதிவழியாக பெண்களும் குழந்தைகளும் வரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இராணுவ வலயத்துள் வன்னி மக்களுக்கு அருள்பாலிக்கும் கனகாம்பிகை அம்பாள் உற்சவம் பொலிவிழந்து காணப்படுகின்றது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
| அரசாங்கத்திற்கு வெள்ளை வான்களில் நபர்களைக் கடத்த வேண்டிய அவசியமில்லை! ஹூலுகல்ல Posted: 28 Apr 2012 08:05 AM PDT குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும் என்றால் சட்டரீதியாகவே கைது செய்வேம் ஆனால் கடத்த மாட்டோம் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹூலுகல்ல குறிப்பிட்டுள்ளார். நாட்டில் 95 வீதமான வான்கள் வெள்ளை நிறத்தைக் கொண்டவையாகவே காணப்படுகிறது எவரையும் கைது செய்ய வேண்டுமாயின் சட்ட ரீதியில் கைது செய்யக் கூடிய அதிகாரம் அரசாங்கத்திடம் காணப்படுகிறது. எனவே அரசாங்கத்திற்கு வெள்ளை வான்களில் நபர்களைக் கடத்த வேண்டிய அவசியமில்லை, எமது நாட்டில் கடத்தல் சம்பவங்கள் ஒன்றும் புதிய விடயமல்ல கடத்தல் சம்பவங்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன ஆனால் கடந்த காலங்களை விடவும் தற்போது அதிகளவில் ஊடகங்களில் கடத்தல்கள் பற்றி பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய லக்ஸ்மன் ஹூலுகல்ல, கடந்த இரண்டு தசாப்த காலமாக நாட்டில் இடம்பெற்ற யுத்தம் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியானதாகவும் தற்போது நாட்டில் சமாதானம் நிலவி வருவதனால் கடத்தல் சம்பவங்களை முன்னிலைப்படுத்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிடுவதாகவும். இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக பிரேம்குமார் குணரட்னம் கடத்தப்பட்டதாக வெளியான தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். |
| முன்னாள் அமைச்சர் செ. இராசதுரை துரோகி: சிவாஜிலிங்கத்தின் கருத்துக்கு யோகேஸ்வரன் கண்டனம் Posted: 28 Apr 2012 08:01 AM PDT இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அமைச்சர் செ. இராசதுரை துரோகி என கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்தமைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முன்னாள் அமைச்சர் செ.இராசதுரை அவர்கள் மட்டக்களப்பு மண்ணில் இருந்து உதயமான ஆரம்பகால இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார். இவர் தந்தை செல்வாவுடன் நீண்ட காலமாக உறவை பேணி வந்ததுடன் அவர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். அவர் தமது வாழ்நாளில் எப்போதும் இவர் தந்தை செல்வாவை மறக்கவில்லை. இதற்கு ஆதாரமாக செ.இராசதுரை அவர்கள் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களிலும் தந்தை செல்வாவை (வே.செல்வநாயகம்) பற்றி சிறப்பித்தே குறிப்பிட்டிருக்கின்றார். அதுமட்டுமின்றி அக்காலத்தில் அவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக சிறைவாசத்தையும் அனுபவித்துள்ளார். ஆனால் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னும் பின்னும் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாகவும், சிலரின் செயற்பாடுகள் காரணமாகவும் இவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரவேசிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானார் என மட்டக்களப்பு வாழ் மக்களின் பொதுவான கருத்தாகும். அதுமட்டுமின்றி தற்போதும் பரம்பரை பரம்பரையாக தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்களாக திகழ்ந்து வரும் மட்டக்களப்பு வாழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் முன்னாள் அமைச்சர் செ.இராசதுரை அவர்களுக்கு எதிராக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நடவடிக்கை குறித்து மிகுந்த வேதனையடைந்துள்ளனர். ஒரு காலத்தில் தமது சொற்பொழிவால் தமிழரசுக் கட்சியை வளர்த்த செ.இராசதுரை அவர்களுக்கு "சொல்லின் செல்வர்" என போற்றிய இடத்தில் இச்செயற்பாடு நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் அவர்கள் தற்போது எதுவித அரசியலிலும் ஈடுபடாது ஆன்மீகத் துறையிலேயே முற்றுமுழுதாக தம்மை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றார். இவ்வேளை தந்தை செல்வாவை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் சார்பின்றி, இந்நிகழ்வில் நினைவுப் பேருரையாற்ற சென்றிருந்தார். இவ்வேளை இவருக்கு துரோகிப் பட்டம் கூறப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. செ.இராசதுரை அவர்களை தூற்றச் சென்ற ரெலோ அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரும், முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்ததன், பின் ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும், அரசாங்க அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் உட்பட்ட சில கட்சிகள் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைக்கு எதிரான அரங்கமென்னும் அமைப்பில் தாம் பங்காளராக இருந்ததை மறந்து விட்டாரா? ஆனால், இவர் இப்போது 1983ம் ஆண்டுக்கு முன் நடந்த சம்பவத்தை வைத்து பிரதேச வாத அடிப்படையில் துரோகிப் பட்டங்களை சூட்ட முற்பட்டிருக்கின்றார். அண்மையில் எமது தமிழ் தேசிய கொள்ளைக்கு துரோகிகளாக இருப்பவர்களுடன் தானே கூட்டுச் சேர்ந்தார். எனவே சிவாஜிலிங்கத்தின் இந்நடவடிக்கை மட்டக்களப்பு வாழ் மக்களை அவமதித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தற்போது பிரதேசவாதத்தை கதைத்து அரசியல் நடாத்த அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் சில உதிரிக் கட்சிகள் முயற்சி செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில், நாங்கள் வடக்கு கிழக்கு எம் தமிழ் மக்களின் தாயகம் என்பதையும், வடக்கு கிழக்கு மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தே எமது அரசியல் உரிமையை கோரிக்கை கொண்டும். பிரதேசவாத உணர்வை தகர்தெறிந்து வரும் வேளையில் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள முயல்வது எம்மக்களிடையே ஒற்றுமையை சீர்குலைப்பதுடன் சில உதிரக் கட்சிகளுக்கு இனிப்பு கொடுப்பதாக அமைந்துவிடும். இன்றும் தமிழரசுக் கட்சியின் அபிமானிகள் பலர் செ.இராசதுரை அவர்களின் அபிமானியாக உள்ளனர். ஆனால் துரோகிகள் என பட்டியல் இட்டு பார்க்கப்போனால் தற்போது வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியம் பேசும் பலர் துரோகிகள் பட்டியலில் அடங்குவர். இதுசார்பாக சிவாஜிலிங்கம் அறியவில்லையா?. முன்னாள் இந்து கலாசார பிராந்திய அமைச்சர் செ.இராசதுரை மீது செல்வா நினைவு அறங்காவல் குழு நடாத்திய தந்தை செல்வாவின் 35ஆவது நினைவு தினத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மேற்கொண்ட நடவடிக்கையானது, அவரது தனிப்பட்ட நடவடிக்கையையே தவிர இது வடமாகாண மக்களினதோ அல்லது யாழ்ப்பாண மக்களினதோ நடவடிக்கையாக யாரும் நினைவில் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே வடக்கு கிழக்கு மக்களை பிரித்து அரசியல் சுயலாபம் தேட கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான த.ம.வி.பு கட்சி முயலும் இவ்வேளையில், தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு எமது தமிழர்களின் தாயகம் என்பதை உணர்ந்து பிரதேசவாத வலைகளில் சிக்காது ஒற்றுமையாக உறுதியாக இருந்து எமது தாயக உரிமையை பெறும் பாதைக்கு உதவ வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் வெளியிட்டுள்ள அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தந்தை செல்வா நினைவு தினம் கூட்டம்: இராசதுரை உரையாற்றுவதற்கு சிவாஜிலிங்கம் எதிர்ப்பு! This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






















