| தேங்காய் லட்டு Posted: 20 Apr 2012 09:37 AM PDT |
| சேப்பங்கிழங்கு ஃப்ரை Posted: 20 Apr 2012 09:35 AM PDT  - தேவையானவை !
- சேப்பங்கிழங்கு - 4
- பூண்டு - 6 அல்லது 7 பல்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
- மிளகு தூள் - அரை தேக்கரண்டி
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
- செய்முறை !
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பூண்டு பற்களை தட்டி வைத்துக் கொள்ளவும். சேப்பங்கிழங்கை அலசி விட்டு, மூழ்கும் அளவு தண்ணீரில் வேக வைக்கவும். சேப்பங்கிழங்கு வெந்ததை முட்கரண்டியால் குத்தி பார்த்து உறுதி செய்து கொள்ளவும். பிறகு கிழங்குகளை தோல் நீக்கிவிட்டு, சிறு வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூளை சேர்க்கவும். அதனுடன் தட்டி வைத்த பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் கிழங்கு வில்லைகளை சேர்த்து, பூண்டு தூள் கலவையில் நன்கு பிரட்டி விடவும். இதனுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும். இரு பக்கங்களும் நன்கு ஃப்ரையானதும், உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும் சுவையான சேப்பங்கிழங்கு பூண்டு ஃப்ரை தயார். எளிதில் செய்துவிடக்கூடியது இந்த ரெசிப்பி. சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு நன்றாக பொருந்தும். விரும்பினால் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கலாம். பூண்டு தான் இதன் ஸ்பெஷல். பூண்டின் சுவை பிடித்தால் 10 பல் பூண்டு வரை கூட சேர்க்கலாம். பூண்டை தோலுடன் தட்டி, சேர்த்தால் இன்னும் மணமாக இருக்கும். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பூண்டு பற்களை தட்டி வைத்துக் கொள்ளவும். சேப்பங்கிழங்கை அலசி விட்டு, மூழ்கும் அளவு தண்ணீரில் வேக வைக்கவும். சேப்பங்கிழங்கு வெந்ததை முட்கரண்டியால் குத்தி பார்த்து உறுதி செய்து கொள்ளவும். பிறகு கிழங்குகளை தோல் நீக்கிவிட்டு, சிறு வில்லைகளாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தனியா தூளை சேர்க்கவும். அதனுடன் தட்டி வைத்த பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின்னர் கிழங்கு வில்லைகளை சேர்த்து, பூண்டு தூள் கலவையில் நன்கு பிரட்டி விடவும். இதனுடன் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு ஃப்ரை செய்யவும். இரு பக்கங்களும் நன்கு ஃப்ரையானதும், உப்பு சரிப்பார்த்துக் கொள்ளவும் சுவையான சேப்பங்கிழங்கு பூண்டு ஃப்ரை தயார். எளிதில் செய்துவிடக்கூடியது இந்த ரெசிப்பி. சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு நன்றாக பொருந்தும். விரும்பினால் கடுகு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கலாம். பூண்டு தான் இதன் ஸ்பெஷல். பூண்டின் சுவை பிடித்தால் 10 பல் பூண்டு வரை கூட சேர்க்கலாம். பூண்டை தோலுடன் தட்டி, சேர்த்தால் இன்னும் மணமாக இருக்கும்.
|
| சினை இட்லி Posted: 20 Apr 2012 09:26 AM PDT  - தேவையானவை !
- புழுங்கலரிசி(இட்லி அரிசி) - 1 கப்
- பச்சரிசி - 2 கப்
- வெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 கப்
- சீனி - 2 கப்
- பாசிப்பயறு - 1/2 கப்
- தேங்காய் - 1
- வாழைப் பழம் - 1
- முந்திரிப்பருப்பு - 100 கிராம்
- ஏலக்காய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை ! - பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக ஊற வைக்கவும்.
- 3 மணி நேரத்துக்குப் பிறகு, நன்றாகக் களைந்து, பிறகு, கிரைண்டரில் போட்டு, கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இதனுடன் பிசைந்த வாழைப்பழம், உப்பு இரண்டையும் சேர்த்து, நன்கு கலக்கவும். மூடி வைக்கவும்.
- அடுத்த நாள் காலையில், இந்த மாவுடன், துருவிய தேங்காய், வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்ப் பொடியைப் போட்டு, கலக்கவும்.
- சீனியையும் இந்த மாவில் கலக்கவும்.
- பாசிப்பயறை வறுத்து, குழையாமல் வேக வைத்து, எடுத்து வைக்கவும்.
- இட்லி தட்டில் துணி விரித்து, கலந்து வைத்திருக்கும் மாவில் கால் கரண்டி ஊற்றி, அதன் மேல் சிறிதளவு(1 ஸ்பூன் அல்லது 1/2 ஸ்பூன் அளவு) வெந்த பாசிப்பயறை வைத்து, அதன் மேல் இன்னும் கொஞ்சம் மாவு ஊற்றவும்.
- எல்லா இட்லிகளையும் இதே போல ஊற்றி, வேக வைத்து, எடுக்கவும்.
|
| ரவை அப்பம் Posted: 20 Apr 2012 09:21 AM PDT  - தேவையானவை !
- ரவை - 1 கப்
- மைதா மாவு - 1/4 கப்
- சீனி - 3/4 கப்
- தேங்காய்(பொடியாக அரிந்தது) - 2 டீஸ்பூன்
- முந்திரிப்பருப்பு(பொடியாக உடைத்தது) - 1 டீஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- ரீஃபைண்ட் ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு
- செய்முறை!
-
- ரவையையும் மைதா மாவையும் கலந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு, சீனி, பொடியாக அரிந்த தேங்காய், முந்திரிப்பருப்பு, சிட்டிகை உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து, தயிர் பதத்தை விட சிறிது கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமாகக் காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை அள்ளி, அப்பங்களாக ஊற்றவும்.
- ஒரு புறம் சிறிது வெந்ததும், திருப்பி விட்டு, வேக விடவும்.
- இரு புறமும் வெந்ததும், எடுத்து விடவும்.
|
| கத்தரிக்காய் சாப்ஸ் Posted: 20 Apr 2012 09:15 AM PDT  - தேவையானவை !
- பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ
- தேங்காய் - அரை மூடி
- வெங்காயம் - ஒன்று
- தக்காளி - ஒன்று
- பச்சை மிளகாய் - 6
- சோம்பு - அரை மேசைக்கரண்டி
- சீரகம் - அரை மேசைக்கரண்டி
- பட்டை - விரல் நீள அளவு
- கிராம்பு - 2
- முந்திரி - 6 எண்ணிக்கை
- இஞ்சி,பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
- முழு தனியா - கால் மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தாளிக்க
- செய்முறை !
தேங்காயை துருவி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை தனித்தனி துண்டுகளாக போடாமல், நான்காக கீறி வைக்கவும். அடுப்பில் நாண்ஸ்டிக் பேனை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாசனை பொருட்களை வறுத்துக் கொள்ளவும். அதனுடன் முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். அதே பேனில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி இறக்கி ஆற விடவும். மிக்சியில் வதக்கின தேங்காய் கலவையை கொட்டி அதனுடன் தனியாத்தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிறகு வெங்காயம், தக்காளியை அரைத்தெடுத்து தனியே வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, இலை போட்டு நன்கு பொரிய விடவும். அவை பொன்னிறமானதும் வெங்காய, தக்காளி விழுதை கொட்டி இரண்டு நிமிடம் வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும், பிறகு அதனுடன் நறுக்கி வைத்த கத்தரிக்காயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு தேங்காய் கலவையை ஊற்றி அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு சேர்த்து கிளறி மூடி வைக்கவும். கத்தரிக்காய் சாப்ஸ் நன்கு கொதித்து சுண்டி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். அனைத்து சாத வகைகள், சப்பாத்திக்கு பொருத்தமான பக்க உணவு. தேங்காயை துருவி வைக்கவும். வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை தனித்தனி துண்டுகளாக போடாமல், நான்காக கீறி வைக்கவும். அடுப்பில் நாண்ஸ்டிக் பேனை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு வாசனை பொருட்களை வறுத்துக் கொள்ளவும். அதனுடன் முந்திரி, பச்சை மிளகாய், தேங்காய் சேர்த்து வதக்கி தனியே வைக்கவும். அதே பேனில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை 2 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கி இறக்கி ஆற விடவும். மிக்சியில் வதக்கின தேங்காய் கலவையை கொட்டி அதனுடன் தனியாத்தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிறகு வெங்காயம், தக்காளியை அரைத்தெடுத்து தனியே வைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, இலை போட்டு நன்கு பொரிய விடவும். அவை பொன்னிறமானதும் வெங்காய, தக்காளி விழுதை கொட்டி இரண்டு நிமிடம் வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும், பிறகு அதனுடன் நறுக்கி வைத்த கத்தரிக்காயை போட்டு இரண்டு நிமிடம் வதக்கி விட்டு தேங்காய் கலவையை ஊற்றி அதில் மஞ்சள் தூள், உப்பு போட்டு சேர்த்து கிளறி மூடி வைக்கவும். கத்தரிக்காய் சாப்ஸ் நன்கு கொதித்து சுண்டி வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும். அனைத்து சாத வகைகள், சப்பாத்திக்கு பொருத்தமான பக்க உணவு.
|
| முள்ளங்கி குழம்பு Posted: 20 Apr 2012 09:13 AM PDT  - தேவையானவை !
- முள்ளங்கி - ஒரு கொத்து
- வெங்காயம் - பாதி
- தக்காளி - ஒன்று
- பச்சை மிளகாய் - இரண்டு
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
- மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
- தனியா தூள் - அரை தேக்கரண்டி
- தேங்காய் - சிறிதளவு
- உப்பு - தேவைக்கு
- எண்ணெய் - தேவைக்கு
- தாளிக்க:
- கடுகு - கால் தேக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- செய்முறை !
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முள்ளங்கியை அலசிவிட்டு, வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு, காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இன்னொரு கடாயில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கி நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் உப்பு சரிப்பார்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான முள்ளங்கி குழம்பு தயார். இது சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருத்தமான சைட் டிஷ். தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முள்ளங்கியை அலசிவிட்டு, வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். அதில் முள்ளங்கியை சேர்த்து வதக்கவும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து பிரட்டிவிட்டு, காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இன்னொரு கடாயில் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, தேங்காய், கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்துக் கொள்ளவும். முள்ளங்கி நன்கு வெந்ததும், அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் உப்பு சரிப்பார்த்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். சுவையான முள்ளங்கி குழம்பு தயார். இது சாதத்துடன் சாப்பிட ரொம்ப நன்றாக இருக்கும். சப்பாத்திக்கும் பொருத்தமான சைட் டிஷ்.
|
| டோனட்ஸ் Posted: 20 Apr 2012 09:11 AM PDT  - தேவையானவை !.
- மைதா / ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
- வெண்ணெய் - கால் கப்
- பால் - அரை கப்
- தண்ணீர் - கால் கப்
- ட்ரை ஆக்டிவ் ஈஸ்ட் - 1 1/4 தேக்கரண்டி
- சர்க்கரை - 3 மேசைக்கரண்டி
- உப்பு - அரை தேக்கரண்டி
- எண்ணெய் - தேவைக்கு
- சாக்லேட் - ஒன்று
- சர்க்கரை பொடித்தது / ஐசிங் சுகர் - தேவைக்கு
- செய்முறை !
வெண்ணெயை ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும். வெது வெதுப்பான கால் கப் நீரில் ஈஸ்ட் கலந்து வைக்கவும். பாலை கொதிக்க வைத்து வெண்ணெயுடன் கலந்து விடவும். இதில் சர்க்கரை கலந்து ஆற விட்டு தயாராக வைக்கவும். மாவுடன் உப்பு கலந்து அதில் பொங்கி வந்திருக்கும் ஈஸ்ட் கலவை சேர்த்து, தேவைக்கு பால் கலவை சேர்த்து பிசையவும். மாவை கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் பாத்திரத்தை மூடி 5 மணி நேரம் வைக்கவும். பின் சற்று கனமாக மாவை திரட்டி டோனட் வடிவம் கொடுக்கவும். இதே போல் எல்லாவற்றையும் செய்து மேலே எண்ணெய் தடவி மூடி ஒரு மணி நேரம் வைக்கவும். எண்ணெயை காய வைத்து மிதமான சூட்டில் அனைத்தையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சர்க்கரை பொடித்து தயாராக வைக்கவும். சாக்லேட்டை சிறு துண்டுகளாக்கி மைக்ரோவேவில் வைத்து உருக்கியோ அல்லது பாத்திரத்தில் நீர் வைத்து அதன் மேல் சாக்லேட் உள்ள கப்பை வைத்து அடுப்பில் வைத்தோ (டபுல் பாய்லர்) சாக்லேட் க்லேஸ் தயார் செய்யவும். இப்போது டோனட்ஸை ஒவ்வொன்றாக எடுத்து பொடித்த சர்க்கரை அல்லது ஐசிங் சுகர் அல்லது சாக்லேட்டில் டிப் செய்து எடுக்கவும். சுவையான டோனட்ஸ் தயார். விரும்பினால் ஸ்ப்ரின்கில்ஸ் பயன்படுத்தவும். இங்கே கொடுத்த அளவில் 8 - 10 டோனட்ஸ் தயாரிக்கலாம். வெண்ணெயை ரூம் டெம்பரேச்சரில் வைக்கவும். வெது வெதுப்பான கால் கப் நீரில் ஈஸ்ட் கலந்து வைக்கவும். பாலை கொதிக்க வைத்து வெண்ணெயுடன் கலந்து விடவும். இதில் சர்க்கரை கலந்து ஆற விட்டு தயாராக வைக்கவும். மாவுடன் உப்பு கலந்து அதில் பொங்கி வந்திருக்கும் ஈஸ்ட் கலவை சேர்த்து, தேவைக்கு பால் கலவை சேர்த்து பிசையவும். மாவை கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஈரத்துணியால் பாத்திரத்தை மூடி 5 மணி நேரம் வைக்கவும். பின் சற்று கனமாக மாவை திரட்டி டோனட் வடிவம் கொடுக்கவும். இதே போல் எல்லாவற்றையும் செய்து மேலே எண்ணெய் தடவி மூடி ஒரு மணி நேரம் வைக்கவும். எண்ணெயை காய வைத்து மிதமான சூட்டில் அனைத்தையும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். சர்க்கரை பொடித்து தயாராக வைக்கவும். சாக்லேட்டை சிறு துண்டுகளாக்கி மைக்ரோவேவில் வைத்து உருக்கியோ அல்லது பாத்திரத்தில் நீர் வைத்து அதன் மேல் சாக்லேட் உள்ள கப்பை வைத்து அடுப்பில் வைத்தோ (டபுல் பாய்லர்) சாக்லேட் க்லேஸ் தயார் செய்யவும். இப்போது டோனட்ஸை ஒவ்வொன்றாக எடுத்து பொடித்த சர்க்கரை அல்லது ஐசிங் சுகர் அல்லது சாக்லேட்டில் டிப் செய்து எடுக்கவும். சுவையான டோனட்ஸ் தயார். விரும்பினால் ஸ்ப்ரின்கில்ஸ் பயன்படுத்தவும். இங்கே கொடுத்த அளவில் 8 - 10 டோனட்ஸ் தயாரிக்கலாம்.
|
| ஷஷுவன் ரைஸ் Posted: 20 Apr 2012 09:09 AM PDT  - தேவையானவை !
- பாசுமதி அரிசி - 2 கப்
- காரட் , பீன்ஸ், குடை மிளகாய், காலிஃப்ளவர், காளான், ஸ்வீட் கார்ன், செலரி - தலா 2 மேசைக்கரண்டி
- வெங்காயம் - ஒன்று
- பூண்டு - 3 பல்
- ஸ்ப்ரிங் ஆனியன் - 2 மேசைக்கரண்டி
- சில்லி சாஸ் - அரை மேசைக்கரண்டி
- சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
- வினிகர் - ஒரு மேசைக்கரண்டி
- தக்காளி சாஸ் - ஒரு மேசைக்கரண்டி
- புளி பேஸ்ட் - கால் தேக்கரண்டி
- சில்லி கார்லிக் சாஸ் - அரை மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு
- செய்முறை !
அரிசியை கழுவி ஊற வைக்கவும். காய்கறிகளை நறுக்கி வைக்கவும். எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் செலரி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் ஓரளவுக்கு வெந்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும். அரிசியில் உள்ள தண்ணீர் வற்றியதும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் சுத்தமாக வற்றியவுடன் எல்லா சாஸும் சேர்த்து வதக்கவும். சாஸ் சேர்த்தவுடன் தீயை கூட்டி வைத்து வதக்கவும். ஐந்து நிமிடம் வதக்கி வெங்காய தாள் சேர்த்து இறக்கவும். சூடாக மஞ்சூரியனுடன் பரிமாறவும். சுவையான ஷஷுவன் ஃப்ரைட் ரைஸ் ரெடி! அரிசியை கழுவி ஊற வைக்கவும். காய்கறிகளை நறுக்கி வைக்கவும். எண்ணெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்த பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் செலரி சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிவந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறிகள் ஓரளவுக்கு வெந்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கவும். அரிசியில் உள்ள தண்ணீர் வற்றியதும் இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். தண்ணீர் சுத்தமாக வற்றியவுடன் எல்லா சாஸும் சேர்த்து வதக்கவும். சாஸ் சேர்த்தவுடன் தீயை கூட்டி வைத்து வதக்கவும். ஐந்து நிமிடம் வதக்கி வெங்காய தாள் சேர்த்து இறக்கவும். சூடாக மஞ்சூரியனுடன் பரிமாறவும். சுவையான ஷஷுவன் ஃப்ரைட் ரைஸ் ரெடி!
|
| சீனாவில் சாதனை படைத்த தேனி மனிதன் (படங்கள் இணைப்பு) Posted: 20 Apr 2012 09:09 AM PDT சீனாவைச் சேர்ந்த சீ பிங் என்ற நபர் தனது உடல் முழுவதும் சுமார் 330,000 தேனீக்களை பரப்பி சாதனை படைத்துள்ளார்.
32 வயதாகும் பிங் முதலில் இராணித் தேனியை தனது உடலில் விட்டு பேசின் வடிவான பாத்திரத்தில் தேனீக்களுடன் ஏறி நின்றுள்ளார்.
அப்போது ஏனைய தேனீக்களும் இராணித் தேனி இருக்கும் இடத்தை நோக்கி நகராலாயின. எனினும் இறுதியில் சில தேனீக்கள் அவரின் உடலில் இருந்து வெளியேறிவிட்டன.
|
| சீனாவில் சாதனை படைத்த தேனி மனிதன் (படங்கள் இணைப்பு) Posted: 20 Apr 2012 09:08 AM PDT சீனாவைச் சேர்ந்த சீ பிங் என்ற நபர் தனது உடல் முழுவதும் சுமார் 330,000 தேனீக்களை பரப்பி சாதனை படைத்துள்ளார்.
32 வயதாகும் பிங் முதலில் இராணித் தேனியை தனது உடலில் விட்டு பேசின் வடிவான பாத்திரத்தில் தேனீக்களுடன் ஏறி நின்றுள்ளார்.
அப்போது ஏனைய தேனீக்களும் இராணித் தேனி இருக்கும் இடத்தை நோக்கி நகராலாயின. எனினும் இறுதியில் சில தேனீக்கள் அவரின் உடலில் இருந்து வெளியேறிவிட்டன.
|
| சீனாவில் சாதனை படைத்த தேனி மனிதன் (படங்கள் இணைப்பு) Posted: 20 Apr 2012 09:07 AM PDT சீனாவைச் சேர்ந்த சீ பிங் என்ற நபர் தனது உடல் முழுவதும் சுமார் 330,000 தேனீக்களை பரப்பி சாதனை படைத்துள்ளார்.
32 வயதாகும் பிங் முதலில் இராணித் தேனியை தனது உடலில் விட்டு பேசின் வடிவான பாத்திரத்தில் தேனீக்களுடன் ஏறி நின்றுள்ளார்.
அப்போது ஏனைய தேனீக்களும் இராணித் தேனி இருக்கும் இடத்தை நோக்கி நகராலாயின. எனினும் இறுதியில் சில தேனீக்கள் அவரின் உடலில் இருந்து வெளியேறிவிட்டன.
|
| இளநீர் பாயசம் ! Posted: 20 Apr 2012 09:07 AM PDT தேவையானவை: இளநீர் வழுக்கை - அரை கப், இளநீர் - ஒரு கப், திக்கான பால் - ஒரு கப், மில்க்மெய்ட் - கால் கப், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: இளநீருடன் வழுக்கை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பாலுடன் சர்க்கரை சேர்த்து கெட்டியாகக் காய்ச்சவும். பால் நன்றாகக் காய்ந்ததும், மில்க்மெய்டை சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கிளறவும். பிறகு, அரைத்து வைத்துள்ள இளநீர்க் கலவையை பாலுடன் சேர்த்து இறக்கவும். ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து 'ஜில்' என்று பரிமாறவும். ஏலக்காய் சேர்க்கக் கூடாது. |
| பொட்டுக்கடலை வடை Posted: 20 Apr 2012 09:05 AM PDT தேவையானவை! பொட்டுக்கடலை - ஒரு கப், கடலை மாவு - அரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், தேங்காய் துரு...வல் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 8, கசகசா - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் பொட்டுக்கடலையை லேசாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். தேங்காய் துருவல், கசகசா, முந்திரிப் பருப்பு, சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மையாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலைப் பொடி, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வடை மாவு பதத் தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும். |
| கேரட் ஊறுகாய் Posted: 20 Apr 2012 09:02 AM PDT தேவையானவை: கேரட் - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழம் - ஒன்று. செய்முறை: கேரட்டை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு தாளித்து... கேரட், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். காய் சிறிது வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு கலந்துவிடவும். |
| அரிசி பாயாசம் Posted: 20 Apr 2012 08:59 AM PDT  - தேவையானவை !
- உடைத்த அரிசி - 100 கிராம்
- பால் - 3 கப்
- வெல்லம் - ஒரு கப்
- முந்திரி - 12 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)
- ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
- நெய் - 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை !
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் உடைத்த அரிசியை போட்டு 4 நிமிடம் வறுத்துக் கொள்ளவும். அதை குக்கரில் போட்டு 2 கப் பால் ஊற்றி சிட்டிகை உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும். 2 விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வைத்திருக்கவும். வாணலியில் வெல்லத்தை போட்டு 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி கரைய விடவும். குக்கரை இறக்கி வைத்து திறந்து ஒரு முறை நன்கு கிளறி விட்டு சர்க்கரை பாகை ஊற்றி கிளறி விடவும். அதில் மேலும் ஒரு கப் பால் மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கலந்து விடவும். மீண்டும் அதை அடுப்பில் வைத்து ஒரு கொதி வரும் வரை வைத்திருக்கவும். சிறிய கடாயில் நெய் ஊற்றி உடைத்த முந்திரி பருப்பை போட்டு வறுத்து அதை பாயசத்தில் ஊற்றி இறக்கவும். சுவையான உடைத்த அரிசி பாயாசம் தயார் |
| மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் Posted: 20 Apr 2012 08:59 AM PDT தற்போது பெண்கள் பத்து வயதிலேயே பூப்படைந்து விடுகின்றனர். எனவே தாய்மார்கள் தன் மகளுக்கு பத்து வயதாகும் பொழுதே சில விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
* மாதவிலக்கு காலத்தில் உணவில் கவனிக்கப்பட வேண்டியவை என்ன?
## பூப்படைந்த காலத்தில் இருந்து ஒன்றிரண்டு வருடங்கள் வரை சத்துணவு மிக அவசியம். புரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்காக பால், முட்டை, கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். மாதவிலக்கு நாட்களில் பீட்ரூட், திராட்சை, கேரட், மாதுளை போன்றவைகளை சாப்பிடவேண்டும்.
* ஒரு நாள் எத்தனை சானிட்டரி பேடு பயன்படுத்த வேண்டியதிருக்கும்?
## சராசரியாக ஒரு நாள் 80 மி.லி. உதிரம் மாதவிலக்கில் வெளியேறும். அப்படிப்பட்ட தருணங்களில் 4 பேடுகள் வரை பயன்படுத்த வேண்டியதிருக்கும். 8 மணி நேரத்திற்கு மேலாக ஒரே பேடு பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால், தொற்று ஏற்பட்டு ஆரோக்கிய சீர்கேடு உருவாகும்.
* மாதவிலக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட என்ன காரணம்?
## மூளையில் உள்ள ஹார்மோன்களில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மையே அதிக உதிரப்போக்குக்கு காரணம். பெரும்பாலும் இந்த பிரச்சினைக்கு இரும்பு சத்து மாத்திரைகள் சாப்பிட்டாலே போதுமானது. ஆனால் கருப்பையில் ஏற்படும் நோய்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். ஆகவே அதிக உதிரப்போக்கு இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.
* மாதவிலக்கு காலத்தில் மார்புகள் கனத்துடன் வலிப்பது ஏன்?
## மாதவிலக்கின் ஒரு வாரத்திற்கு முன்போ, மாதவிலக்கு காலங்களிலோ மார்பு கனத்து வலிக்கும். சில நாட்களில் சரியாகி விடும். இதற்கு அப்போது சுரக்கும் ஹார்மோன்களின் சமச்சீரற்ற தன்மை தான் காரணம். அதனால் இந்த வலியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. - டாக்டர் கே.எஸ்.ஜெயராணி.
|
| பாதாம் பராத்தா Posted: 20 Apr 2012 08:56 AM PDT  - தேவையானவை !
- பாதாம் பருப்பு - ஒரு கப்
- சர்க்கரை - 1/2 (அ) 3/4 கப்
- தேங்காய்ப்பூ - 1/3 கப்
- ஏலக்காய் - 2
- நெய்/வெண்ணெய் - 1 (அ) 2 மேசைக்கரண்டி
- கோதுமை மாவு - 2 கப்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
- செய்முறை !
பாதாமை சுடுத் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து தோலுரித்து வைக்கவும். ஏலக்காயை தட்டி, பொடித்து வைக்கவும். தோலுரித்து வடிக்கட்டிய பாதாமை, ஃபுட் ப்ராசஸசர்/ மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் பல்ஸ் மோடில் ஓட்டி, பொடித்து வைக்கவும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய்/வெண்ணெய் விட்டு, உருகியதும், பொடித்து வைத்த பாதாம் பொடியை கொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும். பிறகு இதனுடன் சர்க்கரையை கொட்டி கலந்து விடவும். சில நிமிடங்களுக்குப்பின் இதனுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கலவை சிறிது இளகியதும் பொடித்த ஏலக்காயைத் தூவி, சிறிது கலந்து அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மாவை தேய்த்து, ஸ்டஃப்டு பராத்தா செய்யும் முறையில் 2 தேக்கரண்டி அளவு பாதாம் கலவையை உள்ளே வைத்து மூடி, சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் தவாவில் இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும். பராத்தாக்களை சுட்டு எடுத்தவுடன், அந்த சூட்டிலேயே பராத்தாவின் மேலே துளி நெய் தடவி பரிமாறவும். சுவையான பாதாம் பராத்தா ரெடி. குழந்தைகளுக்கு நல்ல ஹெல்தியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்க ஏற்றது. சர்க்கரை சேர்த்ததும், சர்க்கரை முழுவதும் கரைந்து கலவை இளகி வருவது சரியான பதம், அதற்கு மேல் ரொம்ப நேரம் விட்டால் பாகு பதம் வந்து, பாதாம் கலவை கெட்டிப்பட்டுவிட வாய்ப்புள்ளது. ஆக, சரியான நேரத்தில் அடுப்பில் இருந்து எடுத்துவிடுவது முக்கியம். பாதாமை சுடுத் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து தோலுரித்து வைக்கவும். ஏலக்காயை தட்டி, பொடித்து வைக்கவும். தோலுரித்து வடிக்கட்டிய பாதாமை, ஃபுட் ப்ராசஸசர்/ மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் பல்ஸ் மோடில் ஓட்டி, பொடித்து வைக்கவும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய்/வெண்ணெய் விட்டு, உருகியதும், பொடித்து வைத்த பாதாம் பொடியை கொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும். பிறகு இதனுடன் சர்க்கரையை கொட்டி கலந்து விடவும். சில நிமிடங்களுக்குப்பின் இதனுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கலவை சிறிது இளகியதும் பொடித்த ஏலக்காயைத் தூவி, சிறிது கலந்து அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மாவை தேய்த்து, ஸ்டஃப்டு பராத்தா செய்யும் முறையில் 2 தேக்கரண்டி அளவு பாதாம் கலவையை உள்ளே வைத்து மூடி, சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் தவாவில் இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும். பராத்தாக்களை சுட்டு எடுத்தவுடன், அந்த சூட்டிலேயே பராத்தாவின் மேலே துளி நெய் தடவி பரிமாறவும். சுவையான பாதாம் பராத்தா ரெடி. குழந்தைகளுக்கு நல்ல ஹெல்தியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்க ஏற்றது. சர்க்கரை சேர்த்ததும், சர்க்கரை முழுவதும் கரைந்து கலவை இளகி வருவது சரியான பதம், அதற்கு மேல் ரொம்ப நேரம் விட்டால் பாகு பதம் வந்து, பாதாம் கலவை கெட்டிப்பட்டுவிட வாய்ப்புள்ளது. ஆக, சரியான நேரத்தில் அடுப்பில் இருந்து எடுத்துவிடுவது முக்கியம்.
|
| பாதாம் பராத்தா Posted: 20 Apr 2012 08:52 AM PDT  - தேவையானவை !
- பாதாம் பருப்பு - ஒரு கப்
- சர்க்கரை - 1/2 (அ) 3/4 கப்
- தேங்காய்ப்பூ - 1/3 கப்
- ஏலக்காய் - 2
- நெய்/வெண்ணெய் - 1 (அ) 2 மேசைக்கரண்டி
- கோதுமை மாவு - 2 கப்
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
- செய்முறை !
பாதாமை சுடுத் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து தோலுரித்து வைக்கவும். ஏலக்காயை தட்டி, பொடித்து வைக்கவும். தோலுரித்து வடிக்கட்டிய பாதாமை, ஃபுட் ப்ராசஸசர்/ மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் பல்ஸ் மோடில் ஓட்டி, பொடித்து வைக்கவும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய்/வெண்ணெய் விட்டு, உருகியதும், பொடித்து வைத்த பாதாம் பொடியை கொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும். பிறகு இதனுடன் சர்க்கரையை கொட்டி கலந்து விடவும். சில நிமிடங்களுக்குப்பின் இதனுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கலவை சிறிது இளகியதும் பொடித்த ஏலக்காயைத் தூவி, சிறிது கலந்து அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மாவை தேய்த்து, ஸ்டஃப்டு பராத்தா செய்யும் முறையில் 2 தேக்கரண்டி அளவு பாதாம் கலவையை உள்ளே வைத்து மூடி, சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் தவாவில் இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும். பராத்தாக்களை சுட்டு எடுத்தவுடன், அந்த சூட்டிலேயே பராத்தாவின் மேலே துளி நெய் தடவி பரிமாறவும். சுவையான பாதாம் பராத்தா ரெடி. குழந்தைகளுக்கு நல்ல ஹெல்தியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்க ஏற்றது. சர்க்கரை சேர்த்ததும், சர்க்கரை முழுவதும் கரைந்து கலவை இளகி வருவது சரியான பதம், அதற்கு மேல் ரொம்ப நேரம் விட்டால் பாகு பதம் வந்து, பாதாம் கலவை கெட்டிப்பட்டுவிட வாய்ப்புள்ளது. ஆக, சரியான நேரத்தில் அடுப்பில் இருந்து எடுத்துவிடுவது முக்கியம். பாதாமை சுடுத் தண்ணீரில் ஊற வைத்து, நீரை வடித்து தோலுரித்து வைக்கவும். ஏலக்காயை தட்டி, பொடித்து வைக்கவும். தோலுரித்து வடிக்கட்டிய பாதாமை, ஃபுட் ப்ராசஸசர்/ மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் பல்ஸ் மோடில் ஓட்டி, பொடித்து வைக்கவும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய்/வெண்ணெய் விட்டு, உருகியதும், பொடித்து வைத்த பாதாம் பொடியை கொட்டி சில நிமிடங்கள் வறுக்கவும். பிறகு இதனுடன் சர்க்கரையை கொட்டி கலந்து விடவும். சில நிமிடங்களுக்குப்பின் இதனுடன் தேங்காய்ப்பூவையும் சேர்த்து கலந்து விடவும். சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கலவை சிறிது இளகியதும் பொடித்த ஏலக்காயைத் தூவி, சிறிது கலந்து அடுப்பை அணைத்து விட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவை சிறிது உப்பு, எண்ணெய் சேர்த்து, சப்பாத்தி மாவுப்பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர், சப்பாத்தி மாவை பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மாவை தேய்த்து, ஸ்டஃப்டு பராத்தா செய்யும் முறையில் 2 தேக்கரண்டி அளவு பாதாம் கலவையை உள்ளே வைத்து மூடி, சப்பாத்திகளாக தேய்க்கவும். பின்னர் தவாவில் இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும். பராத்தாக்களை சுட்டு எடுத்தவுடன், அந்த சூட்டிலேயே பராத்தாவின் மேலே துளி நெய் தடவி பரிமாறவும். சுவையான பாதாம் பராத்தா ரெடி. குழந்தைகளுக்கு நல்ல ஹெல்தியான ஒரு ஈவ்னிங் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்க ஏற்றது. சர்க்கரை சேர்த்ததும், சர்க்கரை முழுவதும் கரைந்து கலவை இளகி வருவது சரியான பதம், அதற்கு மேல் ரொம்ப நேரம் விட்டால் பாகு பதம் வந்து, பாதாம் கலவை கெட்டிப்பட்டுவிட வாய்ப்புள்ளது. ஆக, சரியான நேரத்தில் அடுப்பில் இருந்து எடுத்துவிடுவது முக்கியம்.
|
| BBQ சிக்கன் Posted: 20 Apr 2012 08:49 AM PDT  - தேவையானவை !
- கோழிக் கால் - அரைக் கிலோ
- ஸ்பிரிங்க் ஆனியன் - ஒரு கட்டு
- வெங்காயம் - ஒன்று
- டொமெட்டோ பியூரி - 2 மேசைக்கரண்டி
- மஞ்சள் தூள் - சிறிதளவு
- மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
- மிளகு தூள் - அரை மேசைக்கரண்டி
- பார்பிக்யூ மசாலா - அரை தேக்கரண்டி
- எலுமிச்சை - 2
- இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
- தயிர் - ஒரு மேசைக்கரண்டி
- தனியா தூள் - கால் மேசைக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - வறுக்க
செய்முறை !
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஸ்பிரிங்க் ஆனியன், வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கோழிக்காலை சுத்தம் செய்து அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சை சாறு, டொமெட்டோ ப்யூரி மற்ற மசாலா தூள்கள் அனைத்தையும் கலந்து சிக்கனில் தடவி ஆங்காங்கே கத்தியால் கீறி விட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பார்பிக்யூ அடுப்பில் தீயை மூட்டி க்ரில்களில் ஊற வைத்த கோழி கால்களை வைத்து மேலே எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். சிறிது நேர இடைவெளிக்கு பிறகு திருப்பி போட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் எடுத்து எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும். இது சாலட், ப்ரெஞ்ச் ப்ரை, பிரியாணி, ஜீரா ரைஸ், கீ ரைஸ் போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். ஸ்பிரிங்க் ஆனியன், வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கோழிக்காலை சுத்தம் செய்து அதனுடன் அரைத்த விழுது, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர், எலுமிச்சை சாறு, டொமெட்டோ ப்யூரி மற்ற மசாலா தூள்கள் அனைத்தையும் கலந்து சிக்கனில் தடவி ஆங்காங்கே கத்தியால் கீறி விட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும். பார்பிக்யூ அடுப்பில் தீயை மூட்டி க்ரில்களில் ஊற வைத்த கோழி கால்களை வைத்து மேலே எண்ணெய் ஊற்றி வேக வைக்கவும். சிறிது நேர இடைவெளிக்கு பிறகு திருப்பி போட்டு வேக வைக்கவும். நன்கு வெந்ததும் எடுத்து எலுமிச்சை சாறு பிழிந்து பரிமாறவும். இது சாலட், ப்ரெஞ்ச் ப்ரை, பிரியாணி, ஜீரா ரைஸ், கீ ரைஸ் போன்றவற்றுடன் சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். |
| ஜீன்ஸ் : அழகுக்குள் ஆபத்து Posted: 20 Apr 2012 08:47 AM PDT மேலை நாட்டு பாடகிகளும், நம் நாட்டு நடிகைகளும், டீன்ஏஜ் பெண்களும் ஜீன்ஸ் அணிந்து செல்வதை பார்க்கும்போது, சில நேரங்களில் `இவர்களுக்கு மூச்சு முட்டுமே' என்று நினைக்கத் தோன்றும். இவ்வளவு இறுக்கமாக போட்டுக்கொண்டு எப்படி வாகனங்களில் ஏறி இறங்குவார்கள்? மாடிப்படிகளில் ஏறுவார்கள்? என்றெல்லாம் கேட்கத்தான் தோன்றும். ஆனால் ஜீன்ஸ் கன்னியர்களுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை.
அது அவர்கள் பேஷன்.. அது அவர்கள் உலகம்..! அது உடலை இறுக்கினால்தான், தாங்களும் பேஷனில் நெருக்கமாக இருக்கிறோம் என்பதை காட்ட முடியும் என்றுகூறி, சரும நிறத்தில் ஜீன்ஸ் அணிந்துகொண்டு, உடை இருக்கிறதா? இல்லையா என்று தேடும் அளவுக்கு நாகரீகத்தில் மூழ்கிப்போயிருக்கிறார்கள்.
ஸ்கின் நிறத்தில் ஜீன்ஸ் அணிந்து கொண்டு கலக்கும் பெண்கள் அதற்கு `ஸ்கின்னி' என்றொரு பெயரும் சூட்டியிருக்கிறார்கள். ஸ்கின்னி அணியும் பெண்கள் பற்றி அமெரிக்காவில் ருசிகரமாக சொல்லப்படும் விஷயம் ஒன்று உண்டு. மிக இறுக்கமான புதிய ஸ்கின்னி ஜீன்சை அணிந்துகொண்டு, அப்படியே குளியல் தொட்டிக்குள் இறங்கி உள்ளே படுத்துக் கொள்வார்களாம்.
அப்போது ஜீன்ஸ் நன்றாக தண்ணீரில் ஊறி விடும். பின்பு அது காயும் வரை அப்படியே வெளியே இறங்கி நடப்பார்களாம். உடலை நன்றாக இறுக்கிப்பிடிக்கவேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்களாம். முதலில் காட்டன், லினன், கம்பளி போன்ற துணிகளை பயன்படுத்தி ஜீன்ஸ் தயாரித்தார்கள்.
அடர்த்தி கூடிய துணியாக அது இருந்ததால் 19-ம் நூற்றாண்டில் கலிபோர்னியாவில் உள்ள தங்க சுரங்க பணியாளர்கள், வேலை நேரத்தில் அதனை அணிந்தார்கள். பின்பு தொழிற்சாலை பணியாளர்கள் அதை அணிந்தனர். அப்படி, இப்படி அது வளர்ச்சி பெற்றுக்கொண்டிருந்தாலும் அமெரிக்காவில் `கவுபாய்' சினிமா நடிகர்கள் அதை அணிய ஆரம்பித்த பிறகுதான் ஜீன்ஸ் புகழின் உச்சிக்கு சென்றது.
அந்த காலகட்டத்தில் அழகானவர்கள், ஆண்மைமிக்கவர்கள், சாகசம் நிறைந்தவர்கள் அணியும் ஆடையாக ஜீன்ஸ் கருதப்பட்டது. அப்போது ஜீன்ஸ் ஆண்கள் அணியும் உடையாக மட்டுமே இருந்தது. கெட்டியான, பாதுகாப்பான உடையாக அது இருந்ததால் விவசாய வேலை பார்க்கும் பெண்களும், பண்ணைகளில் வேலை பார்க்கும் பெண்களும் முதலில் ஜீன்ஸ் அணியத் தொடங்கினார்கள்.
அப்படியே மெல்ல மெல்ல எல்லா பெண்களும் அணியலாம் என்ற நிலை ஏற்பட்டதும் ஜீன்ஸ் புரட்சி தொடங்கிவிட்டது. இப்போது ஆண்களும், பெண்களும் வயது வித்தியாசம் இன்றி ஜீன்ஸ் அணிகிறார்கள்.
அதனை விரும்பி அணிய என்ன காரணம்? என்று அவர்களிடம் கேட்டால்..
- `தன்னம்பிக்கை தருவதாக' சிலர் சொல்கிறார்கள்.
- `சவுகரியமான உடையாக இருக்கிறது' என்று பலர் சொல்கிறார்கள்.
- `அழகு அதிகரிக்கிறது.. எடுப்பாக இருக்கிறது' என்பவர்களும் உண்டு.
- `எங்கள் வருமானத்திற்கு ஏற்ற தரமான உடை' என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி எல்லோரும் ஏதாவது ஒரு காரணத்தைக்கூறி ஜீன்ஸ்களை அணிந்தாலும், இறுக்கமான ஜீன்ஸ்களை தொடர்ச்சியாக அணியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது ஆய்வு ரீதியாக நிரூபணம் ஆகியிருக்கிறது. தோழியர் குழு ஒன்று பஸ், ரெயில் என்று மாறிமாறி மூன்று நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொண்டது.
பயணத்தின் முடிவில் குறிப்பிட்ட இடம் சென்றடைந்ததும், அவர்களில் டீன்ஏஜ் பெண் ஒருவருக்கு காலில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. பயணத்தில் ஏற்பட்ட அசவுகரியத்தால் அது ஏற்பட்டிருக்கும் என்று முதலில் அவள் நினைத்தாள். ஆனால் மறுநாள் வலி அதிகரித்துவிடவே, டாக்டரிடம் சென்றபோதுதான் அவளால் உண்மையை உணர்ந்துகொள்ள முடிந்தது.
பயணத்திற்கு சவுகரியமானது என்று கருதி, இறுக்கமான ஜீன்சை அவள் தொடர்ச்சியாக பயன்படுத்திவிட்டாள். ஏற்கனவே அது உடலை இறுக்கிப்பிடித்திருக்க, அதற்கு மேல் இறுக்கிப்பிடிக்கும் பெல்ட்டும் அணிந்திருக்கிறாள். அது அவளுக்கு `மெரால்ஜியா பாரஸ்தெற்றிகா' என்ற பாதிப்பை உருவாக்கிவிட்டது.
பெண்களின் அடிவயிற்றில் இருந்து தொடைப் பகுதிவழியாக மெல்லிய நரம்பு ஒன்று செல்கிறது. அதை ஜீன்சும், பெல்ட்டும் போட்டிபோட்டு இறுக்கியது, கடுமையான கால் வலியை உருவாக்கிவிட்டது. இந்த வலியும், அவஸ்தையும் முழுமையாக நீங்க வேண்டும் என்றால் சில மாதங்களாகும். அதன் பாதிப்பு மிக அதிகம் ஆகிவிட்டால், ஆபரேஷன் தேவைப்படும்.
நடுத்தர வயதினர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என்றும் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. இடுப்பு பகுதி தொடர்ந்து இறுக்கப்படுவதால், அவர்கள் முது கெலும்பும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. ஜீன்ஸ் உடலை இறுக்குவதால் சருமத்தில் காற்று படாது. அதனால் வியர்வை தேங்கி, கிருமித்தொற்று உருவாகும். உடல், உடையால் இறுக்கப்படுவதால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
அதனால் சருமத்தில் சுருக்கம், வறட்சி, லேசான காயங்கள் ஏற்படுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெண்களைவிட ஆண்களுக்கு ஜீன்ஸ் தரும் பாதிப்பு அதிகம். `ஆண்களின் இனப் பெருக்க திறன் குறைய என்ன காரணம்?' என்பது பற்றிய ஆராய்ச்சி, சுவீடனில் நடந்தது. `இறுகிய ஆடைகள் அணிவதே அவர்களின் இனப்பெருக்க சக்தி குறைபாட்டிற்கு காரணம்' என்று கண்டறிந்தார்கள்.
அதை தொடர்ந்து `சுவிடிஷ் டைட் பேண்ட் தியரி' என்ற ஒரு கொள்கையை உருவாக்கினார்கள். ஆண்களின் இனப்பெருக்க உறுப்பான விரைப்பைகள் இயற்கையாகவே உடலில் இருந்து வெளியே தொங்குகின்றன. உடல் உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு குளிர்ச்சியாக இருந்தால் மட்டுமே உயிரணு உற்பத்தி நன்றாக இருக்கும் என்பதால்தான், உடலுக்கு வெளியே அது அமைந்திருக்கிறது.
இறுக்கமான ஜீன்ஸ் போன்றவைகளை அணியும்போது விரைப்பைகள் மீண்டும் உடலோடு நெருக்கப்பட்டு, உஷ்ணபாதிப்புக்கு அவை உள்ளாகின்றன. அதனால் உயிரணு உற்பத்தி குறைந்துபோகிறது. இறுக்கமான ஜீன்சை தொடர்ந்து அணிகிறவர்களின் உயிரணு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். சிறுவர்களுக்கு இறுக்கமான உள்ளாடைகளையோ, ஜீன்ஸ் களையோ அணிவிக்க வேண்டாம்.
அணிவித்தால் எதிர்காலத்தில் அவர்கள் ஆண்மைக்குறைபாடு கொண்டவர் களாக ஆகக்கூடும். ஜீன்ஸ் அணிவதால் இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், பேஷன், சவுகரியம் போன்ற வைகளை அடிப்படையாகக்கொண்டு பலரும் அதைத்தான் அணிய விரும்புவார்கள். அவர்கள் பாதிப்பு இல்லாத அளவிற்குரிய ஜீன்ஸ்களை தேர்ந்தெடுத்து அணியவேண்டும்.
`ஸ்கின் பிட்' ஜீன்ஸ் அணிபவர்கள் நெகிழ்வுதன்மை கொண்ட துணிகளில் தயாரித்தவைகளை வாங்கவேண்டும். `ஸ்ட்ரச்சபிள் ஜீன்ஸ்' என்று சொல்லப்படும் அவை, நெகிழும் தன்மை கொண்டிருப்பதால் உடலை இறுக்காது. பேஷன் என்ற பெயரிலோ, தனக்கு கட்டுடல் இருக்கிறது என்பதை காட்டவோ தன் இடுப்பளவைவிட குறைந்த அளவிலான ஜீன்ஸ்களை ஒருபோதும் வாங்கக்கூடாது.
தன் உடலுக்கு பொருத்தமானவைகளை மட்டுமே வாங்கவேண்டும். தொடர்ச்சியாக ஒருபோதும் ஜீன்ஸ்களை அணியாதீர்கள். அதுவும் கோடைகாலத்தில், ஜீன்ஸ்கள் அணிவதை தவிர்த்திடுங்கள். தூர பயணம் மேற்கொள்ளும்போது ஸ்கின் பிட் ஜீன்ஸ் அணியவேண்டாம். அணிந்துகொண்டு காலுக்கு மேல் கால்போட்டபடி பயணம் மேற்கொள்ளவும் வேண்டாம். ஜீன்ஸ் அணிபவர்கள் பேஷனைவிட ஆரோக்கியம் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
|
| மாங்காய் இஞ்சி ஊறுகாய்! P Posted: 20 Apr 2012 08:46 AM PDT தேவையானவை: மாங்காய் இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 2, எலுமிச்சம் பழம் - அரை மூடி, பொடி செய்த உப்பு, கடுகு - தலா ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, ஈரம் போக உலர்த்தி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். மாங்காய் இஞ்சியுடன் உப்பு சேர்க்கவும். எண்ணெயை சூடாக்கி... கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, மாங்காய் இஞ்சியில் சேர்க்கவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கவும்a |
| மாங்காய் இஞ்சி ஊறுகாய்! P Posted: 20 Apr 2012 08:44 AM PDT தேவையானவை: மாங்காய் இஞ்சி - 50 கிராம், பச்சை மிளகாய் - 2, எலுமிச்சம் பழம் - அரை மூடி, பொடி செய்த உப்பு, கடுகு - தலா ஒரு ஸ்பூன், நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மாங்காய் இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, ஈரம் போக உலர்த்தி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். மாங்காய் இஞ்சியுடன் உப்பு சேர்க்கவும். எண்ணெயை சூடாக்கி... கடுகு, பச்சை மிளகாய் தாளித்து, மாங்காய் இஞ்சியில் சேர்க்கவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கவும்a |
| மாதுளைப்பழ சாலட் Posted: 20 Apr 2012 08:40 AM PDT தேவையான பொருட்கள்....
மாதுளை முத்துக்கள் - ஒரு கப் மாங்காய் (செங்காய்) - 1 சிறியது உப்பு - சிறிதளவு மிளகுத்தூள் - 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - 1/2 ஸ்பூன் நறுக்கிய புதினா - 1/ 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
• மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் மாதுளை முத்துக்கள், மாங்காய், உப்பு ஒரு சிட்டிகை, மிளகுத்தூள், கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒன்றாகக் சேர்த்துக் கலக்கவும்.
• கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
• இரும்புச் சத்து அதிகம் கொண்ட மாதுளை, ரத்தசோகை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நினைவாற்றலையும் பெருக்கக்கூடியது. |
| மாதுளைப்பழ சாலட் Posted: 20 Apr 2012 08:39 AM PDT தேவையான பொருட்கள்....
மாதுளை முத்துக்கள் - ஒரு கப் மாங்காய் (செங்காய்) - 1 சிறியது உப்பு - சிறிதளவு மிளகுத்தூள் - 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - 1/2 ஸ்பூன் நறுக்கிய புதினா - 1/ 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
• மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் மாதுளை முத்துக்கள், மாங்காய், உப்பு ஒரு சிட்டிகை, மிளகுத்தூள், கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒன்றாகக் சேர்த்துக் கலக்கவும்.
• கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
• இரும்புச் சத்து அதிகம் கொண்ட மாதுளை, ரத்தசோகை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நினைவாற்றலையும் பெருக்கக்கூடியது. |
| சஸங்காசனம் Posted: 20 Apr 2012 08:38 AM PDT செய்முறை....
முதலில் வஜ்ராசனத்தில் அமரவும். பின்னர் இரு கைகளையும் பக்கவாட்டில் வைத்து மூச்சை வெளியில் விட்டு மெதுவாக குனிந்து நெற்றி தரையில் படும்படி இருக்கவும். அந்த நிலையில் சாதாரண மூச்சில் 2 நிமிடம் இருக்கவும். பின் மெதுவாக எழுந்து, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரவும். இவ்வாறு 3 முதல் 5 வரை செய்யவும்.
பலன்கள்....
அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், நீரிழிவு, இடுப்பு வலி, முதுகு வலி, வயிற்று வலி நீங்கும். பசி எடுக்கும். தொந்தி குறையும். |