சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- இன்றைய முக்கிய செய்திகள்
- ஹீரோவுடன் கிளுகிளுப்பான காட்சி : படத்திலிருந்து வெளியேறினார் பாவனா
- 45 ஆயிரம் விதவைகளை பார்த்து கண்ணீர் விட்டோம் : இலங்கை சென்று வந்த மார்க்சிஸ்ட் எம்.பி. பேட்டி
- குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும்: டி.வி. நடிகை கணவர் வழக்கு
- இலங்கை சென்று வந்த பாராளுமன்ற குழுவால் எந்த பலனும் இல்லை: டாக்டர் ராமதாஸ் பேட்டி
- போலீசாரின் எச்சரிக்கையை நிராகரித்த கலெக்டர்
- ஐ.பி.எல்.கிரிக்கெட்: பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- வளர்ச்சி வங்கியை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆர்வம்
- மஞ்சள் கடலில் சீனா- ரஷியா கூட்டு கடற்படை பயிற்சி
- பிரான்ஸ் அதிபரைத் தேர்ந்தெடுக்க புதுவை, சென்னையில் ஓட்டு போட்ட மக்கள்!
- யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அறிவிப்பு
- அம்மாவாகிறார் ஸ்வேதா மேனன்!
- பாலிவுட்டிலேயே நான் தான் பெஸ்ட் 'ஐட்டம்': கஷ்மிரா ஷா
- நீதிபதி கடும் காட்டம்: பெங்களூரில் சசிகலா நாளை ஆஜராவார்?
- ரகளையால் வந்த ரகளை புலம்புகிறது பெரிய நிறுவனம்
- சாக்லெட் ஹீரோவின் சைட் பிசினஸ்?
- ஜீவா-மிர்ச்சி சிவா ஒரு ரகசிய மோதல்
- ‘மே’-யில் வெளியாக தயாராகும் ‘சமரன்’
- போராளிகளின் புத்தாண்டு கொண்டாட்டம்… (வீடியோ இணைப்பு)
- சுவாரஸ்யமாக சண்டையிடும் நாயும் பூனையும் (வீடியோ இணைப்பு)
- டைட்டானிக் விபத்தை நினைவு கூர்ந்த பிரம்மாண்டமான கைப்பாவை (வீடியோ இணைப்பு)
- கொக்கோ கோலா நிறுவனம் செய்யும் கட்டிப்புடி வைத்தியம்! (வீடியோ இணைப்பு)
- நாய்களுக்காக தனி டிவி சேனல் துவக்கம் (வீடியோ இணைப்பு)
- இருதயத்தை பாதுகாக்கும் இதமான காலிஃப்ளவர்!
- அஜீத்தைப் பற்றி எப்படிச் சொல்றதுன்னே தெரியலே... உருகும் புருனா!
| Posted: 22 Apr 2012 11:56 AM PDT |
| ஹீரோவுடன் கிளுகிளுப்பான காட்சி : படத்திலிருந்து வெளியேறினார் பாவனா Posted: 22 Apr 2012 08:13 AM PDT ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க மறுத்து படத்திலிருந்து வெளியேறினார் பாவனா. 'ஜெயம் கொண்டான்Õ, 'சித்திரம் பேசுதடிÕ, 'தீபாவளிÕ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. தற்போது தமிழ் படங்கள் கைவசம் இல்லை. மலையாளம், கன்னடத்தில் நடிக்கிறார். இந்தியில் இம்ரான் ஹாஷ்மியுடன் ஜோடியாக நடிக்க பாவனா ஒப்பந்தம் ஆனார். முத்த ஸ்பெஷலிஸ்ட் என்று பாலிவுட்டில் பட்டப்பெயர் பெற்றவர் இம்ரான். சக ஹீரோயினுக்கு தவறாமல் லிப் டு லிப் முத்தம் கொடுப்பதுடன், நெருக்கமாக நடித்து அசத்துவார். பாவனாவையும் இம்ரானுடன் அதுபோல் நெருக்கமாக நடிக்க சொன்னபோது அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் பல காட்சிகளில் அரைகுறை ஆடையுடன் நடிக்க வேண்டும் என இயக்குனர் கூறியிருக்கிறார். அப்படி நடிக்க முடியாது என்று கூறி படத்திலிருந்து விலகியுள்ளார் பாவனா. இது பற்றி பாவனா கூறும்போது, 'Ôஇந்தி படத்தில் நடிக்க நான் தயங்கவில்லை. இம்ரானுடன் நடிக்கும் படத்திலிருந்து விலகியதற்கு காரணம் இருக்கிறது. அவருடன் மிக நெருக்கமாக நடிக்க கேட்டதுடன், படுகவர்ச்சியாகவும் நடிக்க சொன்னார்கள். |
| 45 ஆயிரம் விதவைகளை பார்த்து கண்ணீர் விட்டோம் : இலங்கை சென்று வந்த மார்க்சிஸ்ட் எம்.பி. பேட்டி Posted: 22 Apr 2012 08:11 AM PDT தமிழர் பகுதியில் 45 ஆயிரம் போர் விதவைகளைப் பார்த்து கண்ணீர் விட்டோம் என்று இலங்கை சென்று வந்த மார்க்சிஸ்ட் எம்.பி. டிகே ரங்கராஜன் கூறினார். சென்னையில் இன்று அளித்த பேட்டி: கடந்த 16ம்தேதி முதல் 21ம்தேதி மதியம் வரை இலங்கையில் இந்திய எம்.பி.க்கள் குழு தமிழ் மக்களை தனித்தனியாகவும் குழுவாகவும் சந்தித்து பேச வாய்ப்பு கிடைத்தது. எந்த இடத்திலும் தடையோ, கட்டுப்பாடுகளோ விதிக்கப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களோடும் வேறு சில தமிழர் அமைப்புகளோடும் விவாதித்தோம். அவர்கள் ஒன்றுபட்ட இலங்கையின் கீழ் கூடுதல் அரசியல் அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மாணிக்கம் தோட்டம், செட்டிக்குளம் பகுதியில் தமிழ் மக்களோடு கலந்து உரையாடினோம். மட்டக்களப்பு பகுதியில் 45 ஆயிரம் தமிழ் போர் விதவைகளை பார்த்தோம். அவர்களில் 13 ஆயிரம் பேர் 23 வயதுக்கு உட்பட்ட பெண்கள். இவர்களை பார்த்து நான் மட்டுமல்ல, சுஷ்மா சுவராஜ் உள்பட எம்.பி.க்கள் அனைவரும் கண்ணீர் விட்டோம். யாழ்ப்பாணம் பகுதியில் கோவில்களில் ராணுவங்கள் முகாமிட்டுள்ளதை வாபஸ் பெற வேண்டும் என்று மக்களும் வலியுறுத்தினார்கள். நாங்களும் ராஜபக்சேவிடம் வலியுறுத்தினோம். தமிழர்கள் பகுதியில் ராணுவத்தினரை வாபஸ் பெற்று விட்டு ஆட்சியாளர்கள் மூலம் அன்றாட பணிகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். கடந்த முறை இந்திய எம்.பி.க்கள் குழு சென்று வந்த பிறகு தற்போது தமிழர் வாழும் பகுதியில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களுக்கு இன்னும் ஏராளமான குறைகள் உள்ளன. கல்வி, குடியிருப்பு, சமூக பொருளாதார முன்னேற்றம் என்று குறைகள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். |
| குழந்தைக்கு பாதுகாப்பு வேண்டும்: டி.வி. நடிகை கணவர் வழக்கு Posted: 22 Apr 2012 07:47 AM PDT தமிழ் மற்றும் தெலுங்கு டி.வி. தொடர்களில் நடித்திருப்பவர் சிம்ரன்ஜீத் கவுர். இவரது கணவர் கோபி கிருஷ்ணதாஸ். இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. கோபி கிருஷ்ணதாஸ் சென்னை முதன்மை குடும்ப நல கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சிம்ரன்ஜீத் கவுரை பொதுவான நண்பர் ஒருவர் மூலம் 2007, டிசம்பரில் சந்தித்தேன். எங்களுக்குள் நல்ல அறிமுகம் ஏற்பட்டதை தொடர்ந்து 2008 ஜனவரியில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். அந்த சமயத்தில் நான் சிங்கப்பூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாலும் சிம்ரன்ஜீத் கவுர், சில டி.வி. தொடர்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த காரணத்தினாலும், எங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மார்ச் மாதம் வைத்து கொண்டோம். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிறகு எனது மனைவி என்னோடு சிங்கப்பூர் வந்துவிட்டார். அங்கு கர்ப்பம் அடைந்த எனது மனைவி குழந்தை பெறுவதற்காக 2009-ல் இந்தியா திரும்பினார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. பிறகு சிங்கப்பூரில் இருந்து மாற்றலாகி சென்னையில் பணி அமர்த்தப்பட்டேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் எங்களுக்குள் சண்டை நடந்தது. இதையடுத்து எனது மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு அவளது தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி முதல் தனது தாய் வீட்டிலேயே எனது மனைவி தங்கி இருந்து வருகிறாள். நாங்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தபோது, குழந்தைக்கும் மனைவிக்கும் சிறப்பான சூழலை அமைத்துக் கொடுப்பதற்காக வீட்டையே மாற்றினேன். என்னுடன் இருந்த வரை குழந்தை பள்ளிக்கு சென்றது. ஆனால் இப்போது குழந்தை பள்ளிக்கு செல்லவில்லை. எனது மனைவியின் தயாரால் எனது குழந்தையை சரியாக பராமரிக்க முடியாது. கடந்த இரண்டு மாதமாக எனது குழந்தையை பார்க்க மனைவியின் வீட்டார் என்னை அனுமதிக்க மறுத்துவிட்டனர். குழந்தை என் பாதுகாப்பில் இருந்தால்தான் பாதுகாப்பான சூழலில் வளர முடியும். எனது குழந்தைக்கு நல்ல கல்வியை கொடுக்கவும் மற்ற தேவைகளை பூர்த்தி செய்யவும் தேவையான பண வசதி என்னிடம் உள்ளது. மேலும் நான் வேலைக்கு சென்றுவிடும் நேரங்களில் குழந்தையை எனது தாயார் பராமரித்துக் கொள்வார். குழந்தையை கவனித்து கொள்ளும் வகையில் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். எனவே குழந்தை எனது பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் இருக்கும் வகையில் குழந்தையை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். |
| இலங்கை சென்று வந்த பாராளுமன்ற குழுவால் எந்த பலனும் இல்லை: டாக்டர் ராமதாஸ் பேட்டி Posted: 22 Apr 2012 07:44 AM PDT பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று கும்பகோணம் வந்தார் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைக்கு சென்ற இலங்கை தமிழர்கள் சந்தித்து வந்த நாடாளுமன்ற குழுவால் எந்த பலனும் இல்லை. தனி ஈழம் அமைப்பதற்காக பொது வாக்கெடுப்பு நடந்த இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மத்திய அரசு மாநிலங்களை நகராட்சியை போல் நடத்துகிறது என முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறை கூறினார். ஆனால் அவர் மந்திரிகள் அறிவிக்க வேண்டிய திட்டங்களை அவை விதி 100-ன் கீழ் அறிவித்து குறிப்பாக உயர்கல்வி அமைச்சர் சட்டமன்ற உரையில் திட்டங்களை அறிவிக்கவில்லை. ஆனால் 19-ந்தேதி முதல்-அமைச்சர் ஜெயலலிதா அவை விதி 100-ன்கீழ் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொறியியல் கல்லூரி கட்டுவதற்கு அறிவிக்கின்றார் இது எந்த விதத்தில் நியாயம். |
| போலீசாரின் எச்சரிக்கையை நிராகரித்த கலெக்டர் Posted: 22 Apr 2012 07:42 AM PDT சத்தீஸ்கர் மாநில சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் நேற்று மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். அப்போது அவருடன் சென்ற இரண்டு போலீஸ் அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் கடத்தப்பட்ட கலெக்டரை மீட்க மத்திய அரசும், மாநில அரசும் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கடத்தல் சம்பவம் நடைபெறலாம் என மாநில போலீசார் கலெக்டருக்கு முன்எச்சரிக்கை விடுத்ததாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில போலீசார் தரப்பில் கூறும்போது, இதுபோன்ற கடத்தல் சம்பவம் ஏற்படலாம் என நாங்கள் பலமுறை அவரை எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார். இருந்தாலும், தகுந்த முன்னெச்சரிக்கையுடன் சென்று வரவேண்டும் எனவும், தகுந்த பாதுகாப்பில்லாமல் எங்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தோம். என்று கூறினர். போலீசாரின் இந்த எச்சரிக்கைகளை கண்டு கொள்ளாத கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் அரசின் திட்டங்கள் மக்களை எவ்வாறு சென்றடைந்துள்ளது என்பதை காண கிராமத்து மக்களை சந்திக்க செல்லும்போது மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டுள்ளார். |
| ஐ.பி.எல்.கிரிக்கெட்: பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி Posted: 22 Apr 2012 07:39 AM PDT ஐ.பி.எல்.போட்டித் தொடரின் 28-வது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் ஹஸ்சி தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்பஜன் பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் காயம் அடைந்த சச்சின் தெண்டுல்கர் இப்போட்டியில் இடம் பெற்றார். தொடக்க ஆட்டக்காரர்களாக சச்சின் தெண்டுல்கரும் பிராங்க்ளினும் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 51 ரன்னாக இருந்தபோது சச்சின் தெண்டுல்கர் 23 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டமிழக்க மும்பை அணி 9.2 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 56 ரன் மட்டுமே எடுத்திருந்தது.அடுத்த 3-வது விக்கெட்டுக்கு பிராங்க்ளின் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை விளாசித் தள்ளியது.தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 20 பந்தில் 35 ரன் எடுத்தார். பிராங்க்ளின் 79 ரன் எடுத்தார். இறுதியில் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்துள்ளது. |
| வளர்ச்சி வங்கியை உருவாக்க பிரிக்ஸ் நாடுகள் ஆர்வம் Posted: 22 Apr 2012 07:38 AM PDT இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய வளரும் நாடுகள் இணைந்து பிரிக்ஸ் எனும் அமைப்பை உருவாகியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது. அதில் இந்த அமைப்புக்கென ஒரு வங்கியை உருவாக்க தீர்மானித்தனர். உலக வங்கி மற்றும் இன்டர்நேஷனல் மானிடரிங் பண்ட் ஆகிய இரு உலக வங்கி அமைப்புகளும் இதற்கு இசைவு தரும் எனவும், பிரிக்ஸ் நாடுகளும் புதிய வங்கி உருவாவதற்கான திட்ட அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் பிரிக்ஸ் அமைப்பின் நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறுகையில்:- புதிதாக உருவாக்கப்படும் வங்கி நிர்வாகத்தில் அனைத்து நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களும் நிபுணர்களும் பங்கு பெறுகிறார்கள் எனவும், இந்நிபுணர்கள் குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதற்கு முந்தைய பிரிக்ஸ் மாநாடுகளை காட்டிலும் தற்போது நடைபெற்ற மாநாட்டில் அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களுக்கென்று தனி வங்கி உருவாக ஆர்வம் காட்டுகின்றன. தான் உலக வங்கி மற்றும் இன்டர்நேஷனல் மானிடரிங் பண்ட் அதிகாரிகளுடன் பேசியதாகவும் அவர்களிடம் இருந்து சாதகமான தகவல்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்தார். |
| மஞ்சள் கடலில் சீனா- ரஷியா கூட்டு கடற்படை பயிற்சி Posted: 22 Apr 2012 07:36 AM PDT சீனாவும் ரஷியாவும் கிழக்கு சீன கடற்பரப்பான மஞ்சள் கடற்பகுதியில் கூட்டுக் கடற்படை பயிற்சியை இன்று முதல் மேற்கொள்கின்றன. கூட்டுக் கடற்படைப் பயிற்சிக்காக ரஷிய கப்பல்கள் நேற்று சீனாவின் சிங்தா துறைமுகத்தை வந்தடைந்தன. மஞ்சல் கடல் பகுதியைச் சுற்றி வடகொரியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. பனிப்போருக்குப் பிந்தைய காலத்தில் இரு நாடுகளும் கடந்த சில ஆண்டுகளாக கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இப்பயிற்சி தொடர்பாக கருத்து தெரிவித்த ரஷிய கடற்படையின் துணை முதன்மை தளபதி சுக்னோவ், இது ஒரு அரிய வாய்ப்பு என்றர். இன்று முதல் வரும் 27-ந் தேதி வரையில் மஞ்சள் கடல் பகுதியில் வான் தாக்குதல், கடலில் பொருட்களை வழங்குதல், கடல் வழி ஊடுருவலை எதிர்ப்பது, கடலில் மீட்புதவி ஆகியவை தொடர்பாக இருநாட்டு கடற்படையும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளது. சீனாவின் 2 நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் 16 போர்க் கப்பல்கள் இதில் பங்கேற்கின்றன. அண்மையில் தென்சீனக் கடற்பகுதியில் பிலிப்பைன்ஸூம் அமெரிக்காவும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. |
| பிரான்ஸ் அதிபரைத் தேர்ந்தெடுக்க புதுவை, சென்னையில் ஓட்டு போட்ட மக்கள்! Posted: 22 Apr 2012 07:33 AM PDT பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று தொடங்கியது. இதில் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவ 5000க்கும் மேற்பட்டோர், புதுச்சேரி, சென்னை, காரைக்கால் ஆகிய இடங்களிலும் வரிசையில் நின்ரறு ஓட்டுப் போட்டனர். பிரான்ஸ் அதிபர் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தப்படும். இந்த முதல் கட்ட வாக்குப் பதிவுகள் எண்ணப்படும். இதில் யாருமே 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாவிட்டால் மீண்டும் 2வது கட்டமாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களே அதிலும் போட்டியிடுவர். இத்தேர்தல் மே 6ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய தேர்தலில் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி 2வது முறையாக களம் கண்டுள்ளார். இவருக்குக் கடும் போட்டியைக் கொடுப்பவர் சோசலிச கட்சியைச் சேர்ந்த பிரான்காய்ஸ் ஹோலன்டே மற்றும் மரின் லி பென், ஜீன் லுக் மெலன்சான், பிரான்காய்ஸ், பெய்ரூ ஆகியோர். மொத்தம் 10 பேர் களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் மொத்தம் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். இன்று காலை 8 மணிக்கு அந்நாடு முழுவதும் முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. புதுவை-சென்னையிலும் ஓட்டு இந்தியாவிலும் சுமார் 5 ஆயிரம் பேர் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் புதுச்சேரியில்தான் உள்ளனர். மற்றவர்கள் சென்னை, கேரளா, அந்தமான் ஆகிய பகுதிகளில் உள்ளனர். இவர்களுக்காக 6 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு சாவடிகள் புதுச்சேரியிலும், சென்னை, காரைக்காலில் தலா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கும் இன்று காலை வாக்குப் பதிவு நடைபெற்றது. |
| யாழில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அறிவிப்பு Posted: 22 Apr 2012 07:32 AM PDT இலங்கையின் வடக்குப் பகுதியான தமிழர்கள் வாழும் இடங்களில் இருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்ற இந்திய எம்.பிக்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கை சென்று திரும்பிய இந்திய குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் எம்.பிக்கள், யாழ்ப்பாணத்தில் சடங்குக்கும் சாவுக்கும் கூட ராணுவத்திடம் அனுமதி கேட்க வேண்டிய நிலை இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று ராஜபக்சேவிடம் சொன்னோம். அவர் உடனே நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு விட்டார் என்று வாய் ஜம்பம் பேசிக் கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்கள் தமிழ்நாட்டில் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, வடக்கில் இருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்ற சிங்களக் கொக்கரிப்பு வந்து விழுந்திருக்கிறது. இவர்கள் போய் சந்தித்த அதே ராஜபக்சே அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜெயசேகர இது தொடர்பாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவிக்கையில், "இந்திய எம்.பிக்களிடம் நாடு முழுவதும் தான் ராணுவத்தின் பிரசன்னம் இருக்கிறது. தமிழர்கள் வாழும் வடக்குப் பகுதியில் மட்டும் குவிக்கப்படவில்லை என்றுதான் ராஜபக்சே விளக்கம் அளித்தார்" என்று கூறியுள்ளார். மேலும் இந்திய எம்.பிக்கள் கோருவதுபோல் வடக்குப் பகுதியில் இருந்து மட்டும் ராணுவத்தை விலக்கிக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். |
| Posted: 22 Apr 2012 07:31 AM PDT மலையாள நடிகை ஸ்வேதா மேனன் கர்ப்பமாக உள்ளாராம். மலையாளத்தில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் வெளுத்து வாங்குபவர் நடிகை ஸ்வேதா மேனன். அவருக்கு வெயிட் போட்டுவிட்டதால் அதை குறைக்க அமெரிக்கா செல்லப்போவதாகவும், அதனால் 1 வருடம் படங்களில் நடக்கப் போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அவர் கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. அவருக்கு வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம். ஸ்வேதா மேனனுக்கும் மும்பையில் பணிபுரியும் ஸ்ரீவல்சன் மேனனுக்கும் கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி கேரளாவில் வைத்து திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து வருகிறார். கேட்டதற்கு கணவர் அனுமதியுடன் தான் கவர்ச்சியாக நடிப்பதாகத் தெரிவித்தார். அவரது தொழிலை கணவர் நன்கு புரிந்து வைத்துள்ளதால் கவர்ச்சியாக நடிப்பதற்கு அனுமதித்து, ஊக்கமளிப்பதாகவும் வித்தியாசமாக விளக்கமளித்திருந்தார். குழந்தை பெற அமெரிக்கா போகத் தான் உடல் எடையைக் குறைக்க செல்வதாகக் கூறினாரோ? |
| பாலிவுட்டிலேயே நான் தான் பெஸ்ட் 'ஐட்டம்': கஷ்மிரா ஷா Posted: 22 Apr 2012 07:30 AM PDT பாலிவுட்டிலேயே நான் தான் சிறந்த ஐட்டம் டான்ஸர் அதாவது குத்துப் பாட்டு நாயகி என்று இந்தி நடிகை கஷ்மிரா ஷா தெரிவித்துள்ளார். புதுமுக பாலிவுட் இயக்குனர் ரிக்ஷித் மத்தாவின் மிஸ்டர் மணி படத்தில் நடிகை கஷ்மிரா ஷாவும், அவரது காதலர் க்ருஷ்ணா அபிஷேக்கும் சேர்ந்து போன்லெஸ் பிரியாணி என்ற பாட்டிற்கு குத்தாட்டம் போடுகின்றனர். தாபா செட்டில் எடுக்கப்படும் இந்த பாடலின் டான்ஸ் மாஸ்டர் விஷ்ணு தேவா. கஷ்மிரா ஷாவை நடிகை என்பதைவிட குத்தாட்ட நாயகி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். இந்த பிரியாணி பாடல் குறித்து கஷ்மிரா கூறுகையில், இனிமேல் மக்கள் ஒரு பிளேட் பிரியாணி கொடுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக ஒரு பிளேட் காஷ்மிரா கொடுங்கள் என்றே கேட்பார்கள். தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஹீரோயின்களுமே குத்தாட்டம் போட விரும்புகின்றனர். ஆனால் பாலிவுட்டிலே நான் தான் சிறந்த ஐட்டம் டான்ஸர். ஹெலன்ஜிக்கு அடுத்ததாக 7 முதல் 8 ஹிட் குத்தாட்டப் பாடல்கள் கொடுத்தது நான் தான் என்றார். நாட்டுக்கு நல்லதுதானே...! |
| நீதிபதி கடும் காட்டம்: பெங்களூரில் சசிகலா நாளை ஆஜராவார்? Posted: 22 Apr 2012 07:29 AM PDT தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகமல் இழுத்தடித்து வருவதற்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். நாளைய விசாரணையில் சசிகலா ஆஜராகாவிட்டால் கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துவிட்டார். சசிகலாவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகிறது. இதுவரை மொத்தம் 504 கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்துள்லார். இதனிடையே ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களைப் பார்வையிட அனுமதி கோரி 2 புதிய மனுக்கள் கடந்த 18-ந் தேதி தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதானவாதம் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிப்பதாக நீதிபதி மல்லிகார்ஜூனையா தெரிவித்திருந்தார். நேற்றைய விசாரணையின் போது சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவருமே நீதிமன்றத்துக்கு ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்களே ஆஜராகினர். மனு தள்ளுபடி முதலில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தாக்கல் செய்த மனுக்களை கடும் சீற்றத்துடன் நீதிபதி மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்தார். அவர் தமது தீர்ப்பில், சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டு 15 ஆண்டுகள் கழித்து பிறகு வழக்கின் இறுதி விசாரணையின்போது ஆவணங்களைக் கேட்பது சரியில்லை. எனவே சரியான காரணங்கள் இல்லாததால் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் ஆவணங்களின் நகலை பார்வையிட அனுமதி வேண்டும் என்று கேட்டு தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்றார். சசிகலா உட்பட மூவர் மீது சீற்றம் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகததற்கு நீதிபதி மல்லிகார்ஜூனய்யா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்தார். இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெற உள்ளது. இதில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார். |
| ரகளையால் வந்த ரகளை புலம்புகிறது பெரிய நிறுவனம் Posted: 22 Apr 2012 04:25 AM PDT கம்பீரமான வரிப்புலியின் கோடுகளை, அவர் வாரிசுகளே ரப்பர் வைத்து அழித்த கதைதான் இது. படத் தயாரிப்பிலிருந்து பல வருடங்களாக ஒதுங்கியிருந்த வெற்றிப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி, மகன் ஜீவா நடிக்க சொந்தப்படம் ஒன்றை எடுத்தார். பல கோடிகள் நஷ்டம். இன்னொரு மகன் ஜித்தன் ரமேஷை தயாரிப்பாளராக்கி தெலுங்கிலும் தமிழிலும் ஒரு படத்தை தயாரித்தார். கடந்த வாரம் வெளியான அப்படம், வந்த வேகத்திலேயே பெட்டிக்குள் சுருண்டு கொண்டது. இப்படத்தை தமிழில் ரகளை என்ற பெயரில் வெளியிட முயன்றவரை தியேட்டர்காரர்கள் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். முந்தைய படத்தின் நஷ்டத்தை கேட்டுதான் இந்த பிலுபிலு... |
| சாக்லெட் ஹீரோவின் சைட் பிசினஸ்? Posted: 22 Apr 2012 04:23 AM PDT தமிழ்சினிமாவில் ஒரு காலத்தில் பார்ட்டி ஃபேமஸ் வீடு என்றால் சட்டென்று நட்சத்திர தம்பதி ஒருவரின் வீட்டை நோக்கியே விரல்கள் நீளும். வீக் எண்ட் கொண்டாட்டங்கள் களைகட்டிய அந்த வீடு, இப்போது ரொம்பவே வீக் ஆகிவிட்டது. அதற்காக பாரம்பரியமான பார்ட்டிகளை விட்டுத்தள்ள முடியுமா? தம்பதி செய்த காரியத்தை தனியொரு ஆளாக செய்து கொண்டிருக்கிறார் அந்த சாக்லெட் பாய் ஹீரோ. |
| ஜீவா-மிர்ச்சி சிவா ஒரு ரகசிய மோதல் Posted: 22 Apr 2012 04:23 AM PDT லொள்ளு ஹீரோக்கள் அறிமுகமாகும் போதெல்லாம் மிர்ச்சி சிவாவுக்கு தான்மிகப்பெரிய லாஸ். 'அந்த மாதிரி' நக்கல் நையாண்டிக்கெல்லாம் அவர்தான் லாயக்கு என்று பேசிய இதே கோடம்பாக்கம், சிவகார்த்திகேயனையும் இந்த லொள்ளு லிஸ்ட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. சிவாவுக்கு போக வேண்டிய பல வாய்ப்புகள் அப்படியே டேர்ன் அடித்து சிவகார்த்திகேயன் வீட்டுப்பக்கம் போய் கொண்டிருக்கிறது. கொழுக்கட்டைக்கும் குழி பணியாரத்துக்கும் இருக்கிற வித்தியாசம்தான் ரெண்டு பேருக்கும். வடிவம்தான் வேறயே தவிர, ருசி அதேதான். இதில் சம்பளத்தை குறைச்சலா கேட்கிறவங்க பக்கம் போறோம். யார் இதை தப்புன்னு சொல்ல முடியும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். இதை உறுதிப்படுத்துகிற மாதிரி இன்னொரு தகவல். அகமத் இயக்கத்தில் ஜீவா நடித்துவரும் புதிய படத்தில் காமெடிக்காக நுழைக்கப்பட்டிருந்த சிவாவை து£க்கியடிக்க சொல்லிவிட்டாராம் ஜீவா. நிச்சயம் சம்பளத்திற்காக இருக்கப் போவதில்லை. நிஜ காரணம் அந்த ரெண்டு பேருக்கும் மட்டுமே புரிந்த ஒன்று. சிவாவுக்கு பதிலாக சிவ கார்த்திகேயன்தான் என்ட்ரி ஆகியிருக்கிறாராம். |
| ‘மே’-யில் வெளியாக தயாராகும் ‘சமரன்’ Posted: 22 Apr 2012 04:17 AM PDT விஷால் நடித்த 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தை இயக்கிய திரு, மீண்டும் விஷாலை வைத்து சமரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் முதன் முறையாக விஷாலுடன் திரிஷா இணைகிறார். இரண்டாவது நாயகியாக அனன்யாவும் நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, 'ஒஸ்தி' திரைப்படத்தை தயாரித்த பாலாஜி ரியல் மீடியா தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் ஊட்டி மற்றும் தாய்லாந்தில் நடத்தியுள்ளனர். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இப்படத்தை மே மாதத்தில் ரீலீஸ் செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| போராளிகளின் புத்தாண்டு கொண்டாட்டம்… (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 04:13 AM PDT புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சுமார் 700 முன்னாள் போராளிகள் கலந்துகொண்டதுடன் அவர்களின் பெற்றோர், உறவினர்களும் பங்குபற்றினர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| சுவாரஸ்யமாக சண்டையிடும் நாயும் பூனையும் (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 04:11 AM PDT ஆனால் சற்று வித்தியாசமாக நாய் ஒன்று பூனையைப் போல பாவனை செய்து தனது முன்னங்கால்களால் பூனையுடனேயே சண்டை போடுவது சுவாரஸ்யமாக இருக்கின்றது. இவ்வாறு நண்பர்கள் போல தம்முள் அன்புச் சண்டை போடும் நாயும் பூனையும் இணையத்தில் பலரது கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
| டைட்டானிக் விபத்தை நினைவு கூர்ந்த பிரம்மாண்டமான கைப்பாவை (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 04:10 AM PDT இக்கைப்பாவையானது சுமார் 50 அடிகள் உயரமானதாக அமைக்கப்பட்டிருந்தது. இவ் ஊர்வலத்தில் Lilliputians என அழைக்கப்படும் 20 தொடக்கம் 40 வரையிலான விசேட உடையணிந்தவர்களும் கலந்து கொண்டனர். |
| கொக்கோ கோலா நிறுவனம் செய்யும் கட்டிப்புடி வைத்தியம்! (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 04:07 AM PDT மென்பானம் அருந்துவதற்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, மென்பான இயந்திரத்தை கட்டிப்பிடித்தால் போதும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான மென்பான இந்திரம் சிங்கப்பூரில் காணப்படுகின்றது. ஹக் மீ (Hug Me) என்ற வார்த்தையுடன் கூடிய இந்த இயந்திரத்தை கட்டிப் பிடித்தால் மென்பான கேன் கிடைக்கும். சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அருகில் இந்த மென்பான இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. கொகாகோலா நிறுவனத்தின் ஓபன் ஹப்பினஸ் என்னும் விற்பனை மேம்படுத்தல் திட்டத்தின் அடிப்படையில் இந்த மென்பான இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நாய்களுக்காக தனி டிவி சேனல் துவக்கம் (வீடியோ இணைப்பு) Posted: 22 Apr 2012 04:02 AM PDT நாய்கள் காணும் வகையில் ஒலி, இசை, வண்ணங்களில் நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். வர்த்தக நோக்கில் அல்லாமலும், ஏற்கனவே ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் மீண்டும் இடம்பெறாத வகையில் தொடர்ந்து புதுப் புது நிகழ்ச்சிகள் ஒளிபரப் பாகும். மேலும், நாய்கள் குறித்து அனுப்பப்படும் கடிதங்களில் உள்ள கருத்துகளுக்கு ஏற்பவும் நிகழ்ச்சிகளில் மாற்றம் கொண்டுவரப்படும். அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள நாய்களுக்கான இந்த சேனலுக்கு தற்போது 10 லட்சம் வாடிக்கையாளர்களாக உள்ளனர். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இருதயத்தை பாதுகாக்கும் இதமான காலிஃப்ளவர்! Posted: 22 Apr 2012 03:52 AM PDT காய்கறி இனத்தைச் சேர்ந்த காலிஃப்ளவர் ஒருவகையான பூ வகையைச் சேர்ந்தது. இதில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் மூலிகையாகவும் கருதலாம். முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை. இது சாதாரணமாக வெள்ளையாகவோ, இளம் மஞ்சளாகவோ காணப்படும். மேலும் இவற்றில் வயலட் கலர் காலிஃபிளவரும் உண்டு. காலிஃப்ளவர் ஒரு குளிர்பிரதேச காய்கறி. இது குளிர்காலங்களில் அதிக அளவில் கிடைக்கின்றது. இத்தாலியில் அதிக அளவில் விளைவிக்கப்பட்ட காலிஃப்ளவரானது முதன்முதலில் ஆசியாவில் தான் பயிரிடப்பட்டது. அக்காலத்தில் தென்னிந்திய மக்களுக்கு இது பற்றி எதுவும் தெரியாததால் இதற்கு தமிழில் பெயர் இல்லை. ஆங்கிலப் பெயரான காலிஃப்ளவர் என்றே அனைவராலும் அழைக்கப்படுகிறது. காலிஃப்ளவரின் சத்துக்கள் காலிஃப்ளவரில் பொட்டாசியம், விட்டமின் B6, ஆகியவை உள்ளன. இதில் விட்டமின் சி மிக அதிகமாக உள்ளது. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம், விட்டமின் சி 72 மில்லி கிராம், ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம், பொட்டாசியம் 355 மில்லி கிராம் அடங்கியுள்ளன. மேலும் இது நார்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறியாகும். எப்படி சமைக்கலாம்? இந்த காய்கறியை அதிகமாக வேக வைக்க கூடாது. இல்லையெனில் சத்துக்கள் கரைந்துவிடும். இதில் ஒரு வித தாவர அமிலம் உள்ளது. வேகும்போது கந்தகக் கலவையாக மாறி வாசனை வருகிறது. அதிக நேரம் வேக வைத்தால் வாசனை அதிகமாகும். சத்தும் வீணாகும். அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிவிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிவிடும். இதை தண்ணீரில் வேகவைப்பதை விட நீராவியிலோ, மைக்ரோவேவ் அவனிலோ வேகவைக்கலாம். வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். இருதயத்தை பாதுகாக்கும் காலிஃப்ளவரில் கொழுப்பு சத்து இல்லாத காய்கறி. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் இதயநோய்க்கு இதமான காய்கறி இது. காலிஃப்ளவருக்கு புற்று நோயை தடுக்கும் சக்தி உள்ளது. பூ வேகும்போது Isothiocyantes என்னும் ரசாயனம் வெளிவருகிறது. இது உடலினுள் சென்று உடல் தானாக உற்பத்தி செய்யும் phase II என்ற புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்கிறது. |
| அஜீத்தைப் பற்றி எப்படிச் சொல்றதுன்னே தெரியலே... உருகும் புருனா! Posted: 22 Apr 2012 03:48 AM PDT அஜீத் குமாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்று பில்லா 2 நாயகிகளில் ஒருவரான புருனா அப்துல்லா தெரிவித்துள்ளார். பி்ல்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் புருனா அப்துல்லா. இவர் ஒரு அரபிய-பிரேசில் கூட்டுத் தயாரிப்பு. ஹைட்டும், கச்சிதமான வெயிட்டும் புருனாவை படு கம்பீரமாக காட்டுகிறது. அஜீத்துடன் நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில், அஜீத் குமாருடன் நடித்தது ஒரு சிறப்பான அனுபவம். அதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. ஒரு பெரிய நடிகர் என்ற பந்தாவே இல்லாமல் இயல்பாகப் பழகுவார். அமைதியானவர். அவரோட வேலை செய்வது ரொம்ப ஈசி. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அவர் எனக்கு தமிழில் பேச கற்றுக் கொடுத்தார். அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும் என்றார். |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |























