சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- வாசகர் தகவல்கள்
- அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு ஆயுதங்கள் உள்ளன: வட கொரியா
- சக்திவிகடன் ஃபேஸ்புக், டிவிட்டர்
- புத்தக விமரிசனம்
- தாராளமாக ரன் கொடுத்த சாவ்லா-மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி
- தாராளமாக ரன் கொடுத்த சாவ்லா-மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி
- வியாச முனிவருக்கு வித்தக கணபதி; காஞ்சி முனிவருக்கு ரா.கணபதி!
- புதுக்கோட்டையில் என்னத்தை செய்ய?... விவாதிக்க கூடுகிறது சிபிஐ மாநிலக் குழு!
- புதுக்கோட்டையில் என்னத்தை செய்ய?... விவாதிக்க கூடுகிறது சிபிஐ மாநிலக் குழு!
- அலெக்ஸ் பால் மேனனை மீட்க களமிறங்குகிறார் விஜயக்குமார்?
- மனவளக் கலை யோகா
- நல்ல திருப்பங்கள் நிகழட்டும்!'
- ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உலகின் பயணப் பாதைகள்! (வீடியோ இணைப்பு)
- தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி
- வாழ்க வளமுடன்!
- எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம் (வீடியோ இணைப்பு)
- ஆலயம் தேடுவோம்!
- எப்பிடி எல்லாம் யோசிக்கிறன்களோ? (வீடியோ இணைப்பு)
- எப்பிடி எல்லாம் யோசிக்கிறன்களோ? (வீடியோ இணைப்பு)
- எப்பிடி எல்லாம் யோசிக்கிறன்களோ? (வீடியோ இணைப்பு)
- வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்!
- கல்வியில் மேன்மை; பிறவியில் மோட்சம்!
- ஆறறிவு என்பதற்காக இப்படியெல்லாம் சிந்திப்பார்களா? (வீடியோ இணைப்பு)
- பரிட்சைக்குத் துணை நிற்பார் ஸ்ரீபாணபுரீஸ்வரர்!
| Posted: 25 Apr 2012 09:08 AM PDT ![]() | |
| அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு ஆயுதங்கள் உள்ளன: வட கொரியா Posted: 25 Apr 2012 09:07 AM PDT இன்று ஹவுஸ் ஆஃப் கல்ச்சர் என்ற கூட்டம் நடைபெற்றது. அதில் பங்குபெற்ற துணை மார்ஷல் ரி யோங் ஹோ கூறுகையில், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிடமிருந்து வட கொரியாவை காப்பாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்றார். மேலும் ஒரே அடியில் அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு எங்களிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என்று அவர் இராணுவ அதிகாரிகளிடம் கூறியுள்ளார். | |
| சக்திவிகடன் ஃபேஸ்புக், டிவிட்டர் Posted: 25 Apr 2012 09:06 AM PDT | |
| Posted: 25 Apr 2012 09:03 AM PDT | |
| தாராளமாக ரன் கொடுத்த சாவ்லா-மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி Posted: 25 Apr 2012 09:03 AM PDT ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 169 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ், கடைசி கட்டத்தில் ராபின் பீட்டசனின் அதிரடி ஆட்டம் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது. 19 ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கிய சாவ்லா, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார். ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியின் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்கத்தில் அதிரடியாக ஆடி வந்த மன்தீப்சிங் 22 ரன்கள் எடுத்து ஆர்.பி.சிங்கின் பந்தில் அவுட்டானார். இதனையடுத்து பொறுமையாக ஆடி வந்த மற்றொரு துவக்க வீரர் நிதின் சைனி 17 ரன்களில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு வந்த ஷான் மார்ஷ் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் அவர் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், கேப்டன் டேவிட் ஹஸ்ஸி மட்டும் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசி வரை அதிரடியாக ஆடிய டேவிட் ஹஸ்ஸி 40 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸ், 4 பவுண்டரிகளை விளாசி 68 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடிய டேவிட் மில்லர் 17 பந்துகளில் 3 சிக்ஸ்களை அடித்து 34 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 விக்கெட்களை இழந்து 168 ரன்களை குவித்தது. 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் ஜேம்ஸ் பிராங்களின் 22 ரன்களில் அசார் மகமூது பந்தில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பொறுப்பாக ஆடி வந்த சச்சின் 4 பவுண்டரிகளை அடுத்து 34 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக்(3), போல்லார்டு(3) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, ரோஹித் சர்மா ஒருபுறம் நின்று பொறுப்பாக ஆடினார். 30 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்பஜன் சிங் டக் அவுட்டானார். மும்பை இந்தியன்ஸ் வெற்றிப் பெற கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் சாவ்லா வீசிய 19வது ஓவரில் ராபின் பீட்டர்சன் 3 சிக்ஸ், 2 பவுண்டரிகள் விளாசி 27 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் வெற்றி பெற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ரன்களை தேவைப்பட்டது. இந்த நிலையில் 1 பந்து மீதமிருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ராயுடு 17 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசி 34 ரன்களை எடுத்தார். பீட்டர்சன் 7 பந்துகளில் 16 ரன்களை எடுத்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தரப்பில் அவானா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். | |
| தாராளமாக ரன் கொடுத்த சாவ்லா-மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி Posted: 25 Apr 2012 09:02 AM PDT ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 169 ரன்களை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ், கடைசி கட்டத்தில் ராபின் பீட்டசனின் அதிரடி ஆட்டம் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிப் பெற்றது. 19 ஓவரில் 27 ரன்களை வாரி வழங்கிய சாவ்லா, மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார். ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. போட்டியின் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்கத்தில் அதிரடியாக ஆடி வந்த மன்தீப்சிங் 22 ரன்கள் எடுத்து ஆர்.பி.சிங்கின் பந்தில் அவுட்டானார். இதனையடுத்து பொறுமையாக ஆடி வந்த மற்றொரு துவக்க வீரர் நிதின் சைனி 17 ரன்களில் கேட்சாகி வெளியேறினார். அதன்பிறகு வந்த ஷான் மார்ஷ் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் அவர் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்பஜன் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், கேப்டன் டேவிட் ஹஸ்ஸி மட்டும் அதிரடியாக ஆடி 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். கடைசி வரை அதிரடியாக ஆடிய டேவிட் ஹஸ்ஸி 40 பந்துகளை சந்தித்து 4 சிக்ஸ், 4 பவுண்டரிகளை விளாசி 68 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடிய டேவிட் மில்லர் 17 பந்துகளில் 3 சிக்ஸ்களை அடித்து 34 ரன்களை சேர்த்தார். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 3 விக்கெட்களை இழந்து 168 ரன்களை குவித்தது. 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரர் ஜேம்ஸ் பிராங்களின் 22 ரன்களில் அசார் மகமூது பந்தில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பொறுப்பாக ஆடி வந்த சச்சின் 4 பவுண்டரிகளை அடுத்து 34 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக்(3), போல்லார்டு(3) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேற, ரோஹித் சர்மா ஒருபுறம் நின்று பொறுப்பாக ஆடினார். 30 பந்துகளை சந்தித்து 3 சிக்ஸ், 3 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்பஜன் சிங் டக் அவுட்டானார். மும்பை இந்தியன்ஸ் வெற்றிப் பெற கடைசி 2 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் சாவ்லா வீசிய 19வது ஓவரில் ராபின் பீட்டர்சன் 3 சிக்ஸ், 2 பவுண்டரிகள் விளாசி 27 ரன்களை குவித்தார். கடைசி ஓவரில் வெற்றி பெற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ரன்களை தேவைப்பட்டது. இந்த நிலையில் 1 பந்து மீதமிருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. கடைசி வரை அவுட்டாகாமல் இருந்த ராயுடு 17 பந்துகளை சந்தித்து 2 சிக்ஸ், 2 பவுண்டரிகளை விளாசி 34 ரன்களை எடுத்தார். பீட்டர்சன் 7 பந்துகளில் 16 ரன்களை எடுத்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தரப்பில் அவானா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை வீழ்த்தினார். | |
| வியாச முனிவருக்கு வித்தக கணபதி; காஞ்சி முனிவருக்கு ரா.கணபதி! Posted: 25 Apr 2012 08:58 AM PDT கடவுளின் அவதாரமாக இந்த நாட்டில் அவதரித்த புனிதர்களைப் பற்றி மட்டுமே எழுதிப் பெரும் புகழ் சேர்த்தவர் ரா.கணபதி. மகா பெரியவரின் அருளுரைகளைத் தொகுத்து, 'தெய்வத்தின் குரல்' எனும் மாபெரும் பொக்கிஷத்தை உலகுக்குத் தந்த இந்த அருளாளர் பிறந்தது விநாயகர் சதுர்த்தியன்று; முக்தி அடைந்தது, (கடந்த) மகா சிவராத்திரியன்று!'57-ஆம் வருஷம், பெரியவா ஓரிக்கையில் இருந்த தருணம்... கணபதியின் அம்மாவும் அப்பாவும் (கணபதியின் தந்தை: சி.வி.ராமச்சந்திரய்யர்; தாய்: ஜெயலக்ஷ்மி) சிதம்பரத்தில் இருந்து அவரை அழைத்துக்கொண்டு பெரியவரை தரிசிக்கச் சென்றார்கள். கணபதிக்கு அப்போது 21 அல்லது 22 வயது இருக்கும். அப்போது அவருக்கு இந்த ஜீவாத்மா, பரமாத்மா, உயிர் தத்துவம் என்பதில் எல்லாம் துளிக்கூட நம்பிக்கை கிடையாது. சொல்லப் போனால், கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்த அந்த இளைஞருக்கு, ஓரிக்கை வரவே விருப்பம் இல்லை. 'இந்த ஆசார- அனுஷ்டானம், சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் எனக்கு அப்போது கொஞ்சமும் பிடிக்கலே. ஒரே வெறுப்பா இருந்தது! என்று சொல்லியிருக்கிறார் கணபதி'' என அவரைப் பற்றி நினைவுகூர்கிறார் கணேச சர்மா. தெய்வத்தின் குரலை ஒவ்வொரு சபாவிலும், ஆஸ்திக சமாஜத்திலும் விளக்கி சொற்பொழிவு நிகழ்த்தி வரும் கணேச சர்மா, ரா.கணபதி பற்றிய இன்னும் பல நெகிழ்ச்சியான விஷயங்களை விவரிக்கிறார்... 'அப்பா சொல்லைத் தட்டமுடியாமல் ஓரிக்கைக்கு வந்தார் கணபதி. அங்கே பெரியவா இருந்த சின்ன அறையில் வெளிச்சம் கூட இல்லை. அவரும் ஏதோ காஷாயம் சுற்றிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். கணபதிக்கு அங்கே எந்த ஈர்ப்பும் ஏற்படவில்லை. என்ன இவர்... கோயில் வாசலில் இருக்கும் ஆண்டியைவிட சாதாரணமா இருக்காரே என்ற எண்ணம்! அறைக்குள் நுழைந்தது முதல், வைத்த கண் எடுக் காமல் கணபதியைப் பார்த்துக்கொண்டிருந்த மகா பெரியவா, சிறிது நேரம் கழித்துப் 'போகலாம்' என்று உத்தரவு கொடுத் ததும்தான் 'அப்பாடா' என்றிருந்தது கணபதிக்கு. இருந்தாலும், வீடு திரும்பிய பின்னரும் கணபதியின் மனசு பூராவும் பெரியவா நினைப்பே சுழன்று சுழன்று வந்தது. எங்கே திரும்பினாலும் பெரியவா இருக்கிற மாதிரி ஒரு பிரமை! 'பெரியவா என்னைத் தடுத்தாட்கொண்டு இருக்கார்னு புரிஞ்சுது. அதன் பிறகு என் வாழ்க்கையே திசை திரும்பிடுச்சு!' என்று கூறியிருக்கிறார் கணபதி. அதன் பிறகு, 'கல்கி' பத்திரிகையுடன் தொடர்பு ஏற்பட்டு, சதாசிவம், எம்.எஸ் தம்பதியின் கருணை வட்டத்தில் வந்து விட்டார். சில காலம் கழித்து, மடத்துக்கு மீண்டும் அறிமுகமாகி, பெரியவா சொல்வதைக் குறிப்பு எடுக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பெரியவா ஓரிடத்தில் சொன்ன சமாசாரத்தை இன்னோர் இடத்தில் தொடர்வார். பெரியவா பேச்சில் சயின்ஸ் இருக்கும்; வேதம் இருக்கும். கணபதி எல்லாவற்றையும் ஒன்று விடாமல் குறித்துக்கொள்வார். வேத வியாசருக்கு விநாயகர் அமைந்த மாதிரி, மகா பெரியவாளுக்கு ரா.கணபதி கிடைத்தார் னுதான் சொல்லணும். ஆசார நியம நிஷ்டை, தபஸ் எல்லாமே கணபதிக்குப் பழகிப் போச்சு. நைஷ்டிக பிரம்மசாரி. ராமகிருஷ்ண மடத்து 'அண்ணா'தான் அவருக்கு மந்திர குரு; உபதேசம் செய்து வைத்தவர். கணபதி அம்பத்தூரில் தங்கியிருந்த காலத்தில் அவர் அம்பாள் பூஜை செய்வதை பார்க்கணுமே... அவ்வளவு சிலிர்ப்பா இருக்கும். கேரள நம்பூதிரி ஒருவர் இந்த அம்பாள் விக்கிரகத்தைத் தலையிலேயே சுமந்துகொண்டு வந்து, சிதம்பரத்தில் இருந்த இவரது வீட்டில் சேர்ப்பித்தாராம். கேட்டதற்கு, 'இங்கேதான் கொடுக்கணும்னு அம்பாள் சொல்லிட்டா' என்றாராம். ![]() கொஞ்ச காலம் புட்டபர்த்தியில் தங்கலாம் என்று அங்கே போனார் கணபதி. ஆனால், ஸ்ரீசாயிபாபா இவரைக் கூப்பிட்டு, 'தெய்வத்தின் குரலை' எழுதுவதே உங்களின் பிறவிப் பணி. நீங்கள் தொகுக்கும் 'தெய்வத்தின் குரல்' இந்து மதத்துக்கும் சனாதன தர்மத்துக்கும் பலமாக - உபநிஷத்துக்குச் சமானமாக இருக்கப் போகிறது' என்று அருளினாராம். மகா பெரியவாளை ஸ்ரீராமர் என்றுதான் கணபதி சொல்வார். பெரியவாளுடைய நூற்றாண்டு விழாவின் போது, கணபதியை கௌரவம் பண்ணி சன்மானம் கொடுக்க... அதை அப்படியே ஓரிக்கை கோயிலுக்குக் கொடுத்துவிட்டார் கணபதி. 'தெய்வத்தின் குரலை' நான் உபன்யாசம் செய்வது இருக்கட்டும்... அதைப் படித்தவர்கள் யாரேனும் வாழ்க்கையில் சிறிதேனும் தங்களை மாற்றிக்கொண்டு இருக்கிறார்களா என்பதை அறிய, நானும் நண்பர் சிவராமனும் போகிற இடங்களில் எல்லாம் கவனித்துப் பதிவு செய்வது வழக்கம். அப்படியான சம்பவங்கள் நிறைய! 'தெய்வத்தின் குரல்' ஏழு பாகங்கள் வெளியாகி இருக்கு. ஏழாவது வால்யூமை பெரியவா பார்க்கலை. கணபதி, இன்னும் இரண்டு வால்யூம்களுக்கு விஷயம் வைத்திருந்தார். 'அதையெல்லாம் எப்போது எழுதப் போகிறீர்கள்?' என்று கேட்டபோது, கணபதி என்ன சொன்னார் தெரியுமா? 'என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. இனிமே என்னால எழுத முடியாது!' என்றார் தமாஷாக. மகா பெரியவா மாதிரியே கணபதிக்கும் அசாத்திய ஞாபக சக்தி. பத்து வருஷத்துக்கு முந்தி சந்தித்தவரைக்கூட, நினைவில் வைத்து விசாரிப்பார். ரா.கணபதி போதேந்திராள் சரிதத்தையும் 'காம கோடி ராம கோடி' எனும் தலைப்பில் எழுதி வெளியிட்டிருக்கார். போதேந்திராள் 59-வது ஆசார்ய பீடம்; அவர் கோபி சந்தனம் இட்டுக் கொண்டிப்பார் எனப் புத்தகத்தில் எழுதியிருந்தார் கணபதி. 'அது தப்பு; திருத்தணும்!' என்றாராம் பெரியவா. அத்துடன், 'விபூதி, ருத்ராட்சம் தவிர வேறெதுவும் அணிவதில்லை என்ற மடத்து சம்பிரதாயத்தை அவர்கள் (போதேந்திராள்) ரட்சித்துக் கொடுத்தார்கள். அதை ஜனங்க தெரிஞ்சுக் கணும்' என்றும் அறிவுறுத்தினாராம். ஆதிசங்கரர் குறித்த 'ஜெயஜெய சங்கர', ஸ்ரீரமணரைப் பற்றிய 'ரமணாயனம்', மீராபாயின் வரலாற்றைச் சொல்லும் 'காற்றினிலே வரும் கீதம்', பாபாவின் சரிதம் சொல்லும் 'ஸ்வாமி', ராமகிருஷ்ண பரமஹம்சர்- விவேகானந்தர்- சாரதாமணி அம்மையார் பற்றி 'அறிவுக்கனலே, அருட் புனலே' ஆகிய அற்புதமான நூல்களும் ரா.கணபதியின் படைப்புகளே! எனினும், 'தெய்வத்தின் குரல்' ஒன்றுக்காகவே தமிழுலகமும் ஆத்திக உலகும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது'' - நெகிழ்ச்சியுடன் சொல்லி முடித்தார் கணேச சர்மா. 'ஒருமுறை நானும் பால்யூவும் ரா.கணபதி சாரும் பாபாவை தரிசிச்சுட்டு, புட்டபர்த்தியில் இருந்து ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தோம். மாலை நேரம் ஆனதும் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார் கணபதி சார். நெற்றி நிறைய விபூதியுடன் அவரைப் பார்த்தபோது ஆதிசங்கரர் மாதிரி இருந்தது. வழியில் ஓரிடத்தில் பயங்கரச் சத்தம். அசம்பாவிதம் எதுவும் இல்லை என்றாலும், எல்லோரும் பயந்துபோனோம். ஆனால், கணபதி சார் கொஞ்சம்கூட அசையவில்லையே! அப்படியரு யோக நிஷ்டையில் இருந்தார். இப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும் ஆச்சரியம் அது!'' என்று நெகிழ்கிறார் ஓவியர் மணியம் செல்வன். அறிஞர் அண்ணாவின் அன்னையார் மறைந்த தருணம்... மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாராம் பேரறிஞர். அந்த வாரம் கல்கி இதழில் 'ஜெயஜெய சங்கர' தொடரில்... ஆதிசங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் மரணம் அடைவது பற்றி உருகி எழுதியிருந்தார் கணபதி. 'அதில் தாயை இழந்த சோகத்தை சங்கரர் அனுபவித்த விதம் குறித்து கணபதி எழுதியிருந்த விதத்தைப் படித்து நானும் நெகிழ்ந்துவிட்டேன்' என அறிஞர் அண்ணா, பாரதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் 'தன் வரலாறு' நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆம்... அனைத்துத் தரப்பினரையும் அசைத்துப் பார்க்கும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் ரா.கணபதி. ![]() இரண்டு சூரியன்கள்! ரா.கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது! ''இன்று அக்டோபர் 25, 1992. காஞ்சி மகா சுவாமிகளின் நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். மே மாதம் 1994-ல்தான் அவர் நூறாண்டு முடிப்பார் என்ற போதும், நமக்கு இந்தத் தருணத்தில் இரட்டிப்பு பாக்கியம் கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், நூறு ஆண்டுகளைக் கடந்த இன்னொரு பெரிய ஞானியை இன்று நினைக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. இதில் அபூர்வமான விஷயம் என்ன என்றால், இரண்டு ஞானிகளின் பெயர்களும் 'சந்திரசேகர' என்பதுதான். அவர் வேறு யாருமல்ல, சிருங்கேரி சங்கர மடத்தின் சந்திரசேகர பாரதி சுவாமிகள்தான். காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக்கொண்டிருந்த தருணத்தில், பாரதி சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்விகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களின் தலைமையை ஏற்று நடத்துவது பராசக்தியின் விளையாட்டு அல்லவா? இருவருமே ஒரே விஷயத்தில் பார்வையைச் செலுத்தும் இரண்டு கண்கள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும், அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். இருவருமே ஒப்பிட முடியாதவர்கள்; அதே நேரம் ஒப்பிடக்கூடியவர்களும்கூட! மனித குலத்தை வாழ்த்தும் தகுதி உடையவர்கள் அவர்கள். நிபுணர்களைத் திகைக்க வைக்கும் அறிவொளி படைத்தவர்கள். வேதாந்தக் கருத்துகளை எளியவருக் கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள். பெரிய ஞானிகள் மட்டுமே நடந்துகொள்வது போன்று, அடக்கமாக நடந்துகொள்பவர்கள். மாற்றங்களும், சீர்திருத்தங்களும் நிகழும் இந்தக் காலத்தில், பாரம்பரிய கட்டுப்பாடுகளை மீறாமல், எதிர் நீச்சல் போடுபவர்கள். 'ஜகத்குரு' என்ற பட்டத்தை அவர்களாகத் தேடிப் போகவில்லை. குருவாக அவர்கள் யாருக்கும் பாடம் கற்பிக்க முனையவில்லை. இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள காஞ்சி மடத்தின் தலைவரின் தாய்மொழி கன்னடம். கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் தலைவரின் தாய்மொழி தெலுங்கு. இருவருக்குமே சந்நியாசத்தை ஏற்கும் தருணத்தில் குரு என்று யாருமே இருக்கவில்லை. ஆனால் இருவருமே, 'குரு என்று ஒருவர் தேவை' என்பதை உலகுக்கு வலியுறுத்தியவர்கள். உள்ளத்தளவில் இருவருமே ஒரே மாதிரிதான். ஆனால், அவர்கள் வெளியே நடந்துகொள்ளும் முறையையும், செயல்களையும் கண்ட உலகத்தினர், வேறு மாதிரி நினைக்கத் தொடங்கினர். முக்கியமான வேறுபாட்டை இங்கே விளக்கியாக வேண்டும். காஞ்சி முனிவர் பிரம்மஞானியாக இருந்தாலும், வெளியுலக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். அவை எல்லாமே சாஸ்திர அடிப்படைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று செயல் பட்டார். அதை அடைய செயல் திட்டங்கள் தீட்டினார். சாஸ்திர முறைகளுக்கு மக்களைத் திருப்பும் ஆர்வம் கொண்டிருந்த சிருங்கேரி ஆசார்யர், பொதுவாகத் தன்னைத் தனிமைப் படுத்திக்கொண்டு, தியானத்தில் ஈடுபட்டார். அவர் நினைத்திருந்தால், அறிவுக்கடலில் நீந்தித் திளைத்திருக்க முடியும். ஆனால் தெய்விகம், ஆன்மிகம் தவிர, வேறு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை. சீடர்களையும் அகடமிக் எனப்படும் அறிவு சார்ந்த விஷயங்களில் அக்கறை காண்பிக்கத் தூண்டவில்லை. மதம், சரித்திரம் அல்லது இலக்கிய ரீதியான அடிப்படையில், மதத் தலைவர்கள் அல்லது மதம் சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் ஆர்வம் காட்டமாட்டார். ஆதிசங்கரர் காலம் அல்லது அவரது சில நூல்கள் சார்ந்த பிரச்னைகளிலும், அல்லது வித்யாரண் யருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்தார்களா என்பது போன்ற தர்க்கங் களிலும்... 'இதில் உண்மையைக் கண்டு பிடித்து அறிந்துகொள்வதற்கும், உனது சொந்த ஆன்மிக வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ?' என்பதுதான் பாரதி சுவாமிகளின் பதிலாக இருக்கும். மாறாக, காஞ்சி முனிவரோ, எல்லாத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்வதை வரவேற்பார். அத்துடன், தாமே நவீன அறிவியல் கடலில் தேடித் தேடி முத்து, பவளம், சங்கு என்று கண்டெடுத்து, அறிவு குறித்த பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். இந்த இருவரையுமே சனாதன தர்மத்தின் இரு கண்கள் என்று போற்றினார்கள் பல நிபுணர்கள். ஆசார்யர்கள் இருவரும் ஒருவரையருவர் சந்திக்கா விட்டாலும், ஒரே இதயம் படைத்தவர்களாகவே இருந்தனர். 'தங்கள் திட்டங்களைக் குறித்து பரஸ்பரம் கருத்துப் பரி¢மாற்றங்கள் செய்துகொண்டனர்' என்று கே.பாலசுப்ர மணிய ஐயர், எல்.எஸ்.பார்த்தசாரதி ஐயர் மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாசார்யர் போன்றவர்கள் என்னிடம் இந்த விஷயங்கள் குறித்துச் சொன்னது உண்டு. காஞ்சி மடத்திலிருந்து எவர் வந்தாலும், அவர்களை மிக மரியாதையாக நடத்துவதுடன், மற்ற மடங்களுக்கும் அழைத்துச் செல்லத் தம் தொண்டர்களை அனுப்பிவைப்பார் சிருங்கேரி ஆசார்யர். 'இப்படிப்பட்ட தேஜஸ்வியை வேறு எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அது அவருடைய தபஸின் மகிமை!' என்று அவரைப் பற்றி மகா பெரியவாள் சொல்வதுண்டு. அவருடைய தந்தை மற்றும் பாட்டனார் குறித்தும் பெரியவாள் உயர்வாகச் சொல்வதுண்டு. சிருங்கேரி ஆசார்யரோ காஞ்சிப் பெரியவர் பற்றி, 'அந்த ஞானியின் ஆன்மிக ஒளி அல்லவா உலகின் நன்மைக்குக் காரணமாக இருக்கிறது!' என்று மகிழ்ச்சியுடன் கூறுவார். நீதித்துறையில் புகழ் பெற்றவர் டி.எம்.கிருஷ்ணசுவாமி ஐயர். இவர், பெரியவா பாலக்காட்டில் உள்ள பல்லாவூரில் 1927-ல் தங்கியிருந்தபோது, அங்கே சென்று திருப்புகழ் பஜனைகள் செய்தார். பெரியவா இவருக்குத் 'திருப்புகழ் மணி' என்று பட்டம் கொடுத்தார். அதன் பிறகு திருப்புகழ் மணி, கோவைக்குச் சென்று சிருங்கேரி ஆசார்யர் முன்பும் திருப்புகழ் பஜனைகளைச் செய்தார். இவருக்குக் காஞ்சி பெரியவா விருது தந்து கௌரவித்தது பற்றிக் கேள்விப்பட்டதும், 'அவர் அப்படி கௌரவம் செய்திருந்தால், அதை நாங்கள் இருவருமே அளித்ததாக வைத்துக்கொள்ளுங்கள்!' என்றாராம் சிருங்கேரி ஆச்சார்யர். இன்னொரு விசேஷம் என்னவென்றால், 1927-ல் பெரியவா கோயமுத்தூருக்கு விஜயம் செய்தபோது, அவர் முகாமிட்டிருந்ததே சிருங்கேரி மடத்தில்தான்! 1935-ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு நவராத்திரி பூஜை செய்யப் போனார் காஞ்சி பெரியவா. அங்கே மந்திரேந்திர சர்மா என்ற சிருங்கேரி மட அபிமானியும் இருந்தார். பூஜையின் 4-வது நாள் வரை அவரால் பொறுக்கமுடியவில்லை. நேராக சிருங்கேரி போய் சுவாமிகள் முன் நின்றார். சுவாமிகளுக்கு வந்ததே கோபம். 'உன் மனதில் வேறுபாடு என்கிற கல்மிஷம் புகுந்துவிட்டது. ஏன் பாதி பூஜையில் இங்கே வந்தாய்? மகா பாபம் செய்திருக்கிறாய். ஒரு கணம்கூட என் கண் முன் நில்லாதே. திரும்பிப் போய்விடு!' என்று அவரைக் கடிந்துகொண்டாராம்! ஆம், இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள். | |
| புதுக்கோட்டையில் என்னத்தை செய்ய?... விவாதிக்க கூடுகிறது சிபிஐ மாநிலக் குழு! Posted: 25 Apr 2012 08:58 AM PDT புதுக்கோட்டையில் அதிமுக தனது வேட்பாளரை அறிவித்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்து வந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன். இவர் ஏப்ரல் 1ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலிலும் தாங்களே போட்டியிட அதிமுக ஆதரவு தரும் என்று நம்பியிருந்த நிலையில் அங்கு கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்து விட்டது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசுவதற்கு அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்த நிலையில் வேட்பாளரை அவர் அறிவித்ததால் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அவதிக்குள்ளாகியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இதையடுத்து தனது மாநிலக் குழுக் கூட்டத்தை சென்னையில் அக்கட்சி கூட்டியுள்ளது. இக்கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா, போட்டியிட்டால் யாரை நிறுத்துவது, யாரிடம் ஆதரவு கோருவது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஆண்டிப்பட்டியில் நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும். அப்போது தான் நாட்டை பிடித்த பிணி விலகும் என்று பேசியுள்ளார். அவர் கூறுகையில், நமது நாட்டில் அதிக அளவு உணவு உற்பத்தி இருந்தும், அவற்றை பாதுகாக்க போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் டன் கணக்கில் உணவு உற்பத்தி செய்தும், பல பகுதிகளில் மக்கள் பட்டினி கிடக்கும் அவலநிலையே இனறும் நாட்டில் நிலவி வருகின்றது. நதிகளை இணைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியும், அதை நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகள் அக்கறை காட்டவில்லை. நாட்டில் எத்தனையோ மக்கள் குடியிருக்க வீடு இன்றி நடுத் தெருவில் தூங்கும் அவலம் உள்ளது. இதை சரிமுடியாத மத்திய அரசு ராக்கெட் விடுவாதாக பீற்றிக் கொள்கின்றது. | |
| புதுக்கோட்டையில் என்னத்தை செய்ய?... விவாதிக்க கூடுகிறது சிபிஐ மாநிலக் குழு! Posted: 25 Apr 2012 08:57 AM PDT புதுக்கோட்டையில் அதிமுக தனது வேட்பாளரை அறிவித்து விட்டதால் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. புதுக்கோட்டை சட்டசபைத் தொகுதி உறுப்பினராக இருந்து வந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்துக்குமரன். இவர் ஏப்ரல் 1ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலிலும் தாங்களே போட்டியிட அதிமுக ஆதரவு தரும் என்று நம்பியிருந்த நிலையில் அங்கு கார்த்திக் தொண்டைமான் போட்டியிடுவார் என்று அதிமுக அறிவித்து விட்டது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசுவதற்கு அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்த நிலையில் வேட்பாளரை அவர் அறிவித்ததால் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அவதிக்குள்ளாகியுள்ளது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. இதையடுத்து தனது மாநிலக் குழுக் கூட்டத்தை சென்னையில் அக்கட்சி கூட்டியுள்ளது. இக்கூட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா, போட்டியிட்டால் யாரை நிறுத்துவது, யாரிடம் ஆதரவு கோருவது என்பது உள்ளிட்டவை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில் ஆண்டிப்பட்டியில் நடந்த கட்சிப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியை அகற்ற வேண்டும். அப்போது தான் நாட்டை பிடித்த பிணி விலகும் என்று பேசியுள்ளார். அவர் கூறுகையில், நமது நாட்டில் அதிக அளவு உணவு உற்பத்தி இருந்தும், அவற்றை பாதுகாக்க போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் டன் கணக்கில் உணவு உற்பத்தி செய்தும், பல பகுதிகளில் மக்கள் பட்டினி கிடக்கும் அவலநிலையே இனறும் நாட்டில் நிலவி வருகின்றது. நதிகளை இணைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தியும், அதை நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகள் அக்கறை காட்டவில்லை. நாட்டில் எத்தனையோ மக்கள் குடியிருக்க வீடு இன்றி நடுத் தெருவில் தூங்கும் அவலம் உள்ளது. இதை சரிமுடியாத மத்திய அரசு ராக்கெட் விடுவாதாக பீற்றிக் கொள்கின்றது. | |
| அலெக்ஸ் பால் மேனனை மீட்க களமிறங்குகிறார் விஜயக்குமார்? Posted: 25 Apr 2012 08:55 AM PDT மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டுள்ள சட்டிஸ்கர் மாவட்ட ஆட்சித் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால் மேனனை பத்திரமாக மீட்பது குறித்த முக்கிய ஆலோசனை டெல்லியில்நடந்தது. இதில் சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரலான தமிழகத்தைச் சேர்ந்த கே.விஜயக்குமார் கலந்து கொண்டார். இதனால் இந்த ஆபரேஷனில் விஜயக்குமார் களம் இறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் முயற்சியில் தற்போது சிஆர்பிஎப் எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸார்தான் ஈடுபட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளின் தலைவரான கிஷன்ஜி சுட்டு வீழ்த்தப்பட்டார். அதன் பின்னணியில் சிஆர்பிஎப் தலைவரான விஜயக்குமார் இருந்ததாக பேச்சு அடிபட்டது. தமிழகத்தில் தலை சிறந்த காவல்துறை அதிகாரியாக விளங்கியவர் விஜயக்குமார். வீரப்பன் வேட்டை, வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்டர், அயோத்தியா குப்பம் வீரமணி என்கவுண்டர் உள்ளிட்டவற்றுக்கு இவர் பெயர் போனவர். தற்போது சிஆர்பிஎப் இயக்குநர் ஜெனரலாக இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அலெக்ஸ் பால் மேனன் மீட்பு நடவடிக்கையில் விஜயக்குமாரின் நேரடி உத்திகள் செயல்படுத்தப்படவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. நேற்று டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடைபெற்றது. இதில் விஜயக்குமார் கலந்து கொண்டார். மேலும், சட்டிஸ்கர் மாநில ஏடிஜிபி ராம் நிவாஸ், ராய்ப்பூர் மாவட்ட ஐஜி பங்கஜ் சிங் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின்போது கலெக்டரை எப்படி மீட்பது என்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், அப்போது விஜயக்குமார் பல யோசனைகளைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. | |
| Posted: 25 Apr 2012 08:52 AM PDT ![]() ''சக்தி விகடனின் தீவிர வாசகன் நான். இந்த முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற என் ஆசை, இப்போதுதான் நிறைவேறியிருக்கு. இந்தப் பயிற்சி தந்திருக்கிற புத்துணர்ச்சி, இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று'' என்று சிலிர்ப்புடன் தெரிவித்தவர், சித்தூரில் உள்ள மனநல மருத்துவர் முரளி மோகன். ''இந்தக் குளிர்காலத்துல எனக்கு மூச்சுத் திணறல் வரும். என்ன செஞ்சாலும் சரியாகறது ரொம்பக் கஷ்டம். அந்த நேரத்துல, என் கணவர் இந்த முகாமிற்குக் கூட்டிட்டு வந்தார். அதுல, மூச்சுப் பயிற்சியை செஞ்சு முடிச்சதும், நெஞ்சுக் கூட்டுல மிகப்பெரிய ரிலாக்ஸ் கிடைச்சுது. சக்தி விகடனுக்கு நன்றி'' என்று நெகிழ்ந்தபடி சொன்ன வாசகி விஜயலட்சுமி, தன் கணவருடன் வந்திருந்தார். ''இந்தப் பயிற்சியை வெறும் இலவசமா சொல்லிக் கொடுக்கறதா நினைக்காம, அவ்வளவு ஆத்மார்த்தமா சொல்லித் தந்த விதமே மனசுக்கு இதமா இருந்துச்சு. ஒவ்வொரு பயிற்சியும் அருமையா இருக்கு. எல்லாமே, உடலுக்கும் மனசுக்கும் ரொம்பவும் தேவையான பயிற்சிகள்!'' என்று நெக்குருகிச் சொல்கிறார் பெங்களூருவில் இருந்து வந்திருந்த சந்தியா எனும் வாசகி. முகாம் நிறைவுற்று, இதே நிறைவுடன் கிளம்பிச் சென்றனர் வாசகர்கள்! - கே.ஏ.சசிகுமார் படங்கள்: ச.வெங்கடேசன் ![]() | |
| நல்ல திருப்பங்கள் நிகழட்டும்!' Posted: 25 Apr 2012 08:48 AM PDT ![]() | |
| ஆச்சரியத்தில் ஆழ்த்தும் உலகின் பயணப் பாதைகள்! (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 08:46 AM PDT | |
| தானே' மறுவாழ்வு ஓவிய விற்பனை கண்காட்சி Posted: 25 Apr 2012 08:45 AM PDT | |
| Posted: 25 Apr 2012 08:43 AM PDT மகராசனத்தின் இரண்டாம் பகுதியைப் பார்ப்போமா? முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்குமான அடிப்படை வித்தியாசம் ஒன்று உண்டு. முதல் பகுதியில், மல்லாக்கப் படுத்துக்கொண்டு, பயிற்சி செய்தோம் அல்லவா? இந்த இரண்டாம் பகுதியில், குப்புறப் படுத்துக்கொண்டு பயிற்சி செய்யப் போகிறோம்.நம் முகம், மூக்கு ஆகியவை தரையில் படும்படியாகவும், கால் விரல்கள் தரையைத் தொட்டுக்கொண்டு இருப்பது போலவும் குப்புறப் படுத்துக்கொள்ள வேண்டும். கால்களை நன்றாக நீட்டிக் கொள்ளுங்கள். நம் உடலில் இருந்து சுமார் 45 டிகிரி கோணத்தில் முதல் பகுதியில் வைத்திருந்தது போலவே, இரண்டு பக்கமும் கைகளை உடலில் இருந்து தள்ளி வைத்திருங்கள். குதிகால்களும் பெருவிரல்களும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்க வேண்டும். அதேபோல், வலது உள்ளங்கை தரையில் படும்படியாகவும், இடது உள்ளங்கை மேல்நோக்கி இருக்கும்படியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். என்ன... தயாராகிவிட்டீர்கள்தானே? இவையெல்லாம் பயிற்சி செய்வதற்கான முதல் நிலை. அடுத்து, தலையை மெள்ள வலது புறமாகத் திருப்புங்கள். அப்போது உங்களின் இடது கன்னம் முழுவதுமாகத் தரையில் படும்படி இருக்கட்டும். அப்படி தலையைத் திருப்புகிறபோதும், இடது கன்னத்தைத் தரையில் படும்படி வைக்கிறபோதும் கை- கால்களோ, இடுப்போ அசைவற்றிருக்க வேண்டும் என்பது முக்கியம். அதையடுத்து தலையை இடது பக்கமாகத் திருப்புங்கள். உங்களின் வலது கன்னம் தரையில் படும்படி வைத்திருங்கள். இப்போது, தலையை இடது பக்கம் திருப்பும்போது, உடலையும் மெள்ள இடது பக்கமாகத் திருப்புங்கள். கால்களை மடக்க வேண்டாம்; கைகள் எந்த நிலையில் உள்ளனவோ, அப்படியே இருக்கட்டும். அதேபோல், தலையை வலது பக்கமாகத் திருப்புங்கள். உடலையும் அப்படியே வலது பக்கம் திருப்புங்கள். இடது கன்னம் தரையில் படும்படி இருக்கட்டும். இப்படி... தலையை இடதும் வலதுமாகக் கொண்டு செல்லும் இந்தப் பயிற்சியை மூன்று முறை செய்யுங்கள். இதில கவனமாகப் பார்க்க வேண்டியது என்ன தெரியுமா? மகராசனத்தின் முதல் பகுதியில், இடது பக்கம் திருப்பினால் வலது பக்கத்தில் உடலைத் திருப்பினோம். ஆனால், இந்தப் பயிற்சிகளில் தலை எந்தப் பக்கம் திரும்புகிறதோ, அந்தப் பக்கத்தில் உள்ளங்கையைத் தரையில் படும்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். அதேபோல், இந்தப் பயிற்சிகளில்... தோள்பட்டை தரையில் இருந்து உயராதபடி கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். வலது பக்கம் தலை திருப்பும்போது இடது கன்னம் தரையில் படும்படியாகவும், இடது பக்கமாகத் தலையைத் திருப்புகிறபோது வலது பக்கக் கன்னம் தரையில் படும்படியாகவும் வைத்துக்கொள்ளவும் மறந்துவிடாதீர்கள். இந்தப் பயிற்சிகளை தினமும் காலையிலும் மாலையில் எவர் தொடர்ந்து செய்து வருகிறாரோ... அவர்களுக்கு முழங்கால் வலியோ மூட்டு வலியோ எட்டிக் கூடப் பார்க்காது. 'குளிக்கும் போது சடக்குன்னு திரும்பிட்டேன். கழுத்துப் பிடிச்சுக்கிச்சு. வண்டி ஓட்டும்போது பள்ளத்துல வண்டியை விட்டதுல, இடுப்புப் பிடிச்சுக்கிச்சு' என்பதற்கல்லாம் வேலையே இருக்காது. ஏனெனில், உடலை ஒரு ரப்பர் போல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திருப்புகிற வித்தையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தால், எந்தத் தொந்தரவும் வந்து நம்மைத் தாக்காது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். எனக்குத் தெரிந்து, சர்க்கரை வியாதியால் அவதிப்பட்ட மதுரை அன்பர் ஒருவர், இந்தப் பயிற்சியை சரிவரச் செய்து வந்தார். மூன்றே மாதங்களில், அவரின் சர்க்கரை அளவு குறைந்து சீராக இருப்பதாக பூரிப்புடன் தெரிவித்தார். இப்படித்தான் திருவண்ணாமலையில் இருந்து வந்திருந்த 45 வயதுப் பெண்மணி, 'பத்து நிமிடம் நின்றுகொண்டு, சமையற்கட்டில் காபி போட்டு வந்தாலே, கால்கள் வலிக்கத் துவங்கி விடுகின்றன' என்று புலம்பினார். அவருக்கு மகராசனப் பயிற்சியை அளித்தேன். அதையடுத்து, இரண்டு மாதங்கள் தொடர்ந்து பயிற்சிகளை வீட்டிலேயே செய்தவர், 'என்ன ஆச்சரியம்! என் கால் வலி போயே போச்சு! சமீபத்தில் பர்வதமலைக்கு ஏறிச் சென்று, ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு வந்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நன்றி சுவாமி' என்று கடிதம் எழுதியிருந்தார். ![]() கைகளும் கால்களும் வலுவானவைதான். அவற்றுக்கு உரிய முறையில் பயிற்சியைக் கொடுத்துக்கொண்டிருந்தால், அவற்றின் வலுவானது கூடிக் கொண்டேதான் இருக்கும்; ஒருபோதும் குறையாது! உடலின் நரம்புகளுக்கும் எலும்புகளுக்கும் போதுமான உணவு தருவதற்கு இணையானதுதான், உடற்பயிற்சி என்பதும்! ஓடியாடி உழைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி உழைத்துக் காசாகவும் பணமாகவும், வீடாகவும் வாசலாகவும், நகையாகவும் காராகவும் சேர்த்துச் சேர்த்து வைத்து மகிழ்கிறோம். அப்படிச் சேர்த்ததையே வாழ்ந்ததன் அடையாளமாகச் சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறோம். ஆனால், முக்கால்வாசி பேர், உடலை மறந்துவிட்டு கடுமையாக உழைத்துச் சேர்த்து, வயோதிகத்தில் அந்தக் காசையும் பணத்தையும், மருத்துவத்துக்காகவும் மருந்துகளுக்காகவும் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை வருத்தத்துக்குரிய விஷயம்! 'கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்கிற உவமை இதற்குப் பொருந்தும்தான்! ஆனால், கண்களைக் கெடாமல் பார்த்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்? கால்களில் விலை உயர்ந்த ஷூ அணிந்துகொள்கிறோம்; இடுப்பில் மிக அழகான, தோலில் செய்யப்பட்ட பெல்ட்டை கட்டிக் கொள்கிறோம். விரல்களில் மோதிரங்களையும், கை மணிக்கட்டில் பிரேஸ்லெட்டையும் அணிந்து அழகு பார்க்கிறோம். கழுத்தில் கனமான அல்லது ஒல்லியான, நமக்குப் பிடித்த தங்கச் செயினை வாங்கிப் போட்டுக் கொள்கிறோம். ஆனால், யாராவது குதிகால் எலும்பையோ, இடுப்பு எலும்பையோ, கழுத்து எலும்பையோ கவனிக்கிறோமா? சின்ன நல விசாரிப்புகளையாவது செய்கிறோமா? காலின் எலும்பு பலமாக இருந்தால்தான் நிற்கவும் நடக்கவும் முடியும். இடுப்பு எலும்பு உரமாக இருந்தால்தான் கூன் போடாமல் நிமிர்ந்திருக்க முடியும். கழுத்து எலும்பு வளமுடன் இருந்தால்தான் மூன்று திசைகளிலும் நன்றாகத் திருப்பி, உலகையும் மனிதர்களையும் பார்க்க முடியும். இந்த மூன்றில் ஏதேனும் ஒரு இடத்தில் சிக்கல் என்றாலும் கூட, நம் நடையும் நாம் நிற்பதும் பார்ப்பதும் மாறிவிடும் என்பதை உணரமுடிகிறதுதானே, உங்களால்! வஜ்ராசனம் என்கிற இந்த இரண்டாம் பகுதியின் பயிற்சிகளை நீங்கள் கூர்ந்து, கவனித்துச் செய்யத் துவங்கினால், உங்கள் நடையில் தோற்றத்திலும் ஒரு கம்பீரம் கிடைக்கும்! கம்பீரம் என்பது இளமையின் இன்னொரு பெயர்; என்ன, சரிதானே?! | |
| எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம் (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 08:41 AM PDT இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார்.யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இசை வானம் மலரட்டும் பாடல் இசை அமைத்து பாடியவர் -K.ஜெயந்தன் பாடலாசிரியர் -கவிஞர் பொத்துவில் அஸ்மின் தயாரிப்பு -கோபி எடிட்டிங் -திபோ வர்ணம் -லவன் ஒளிபதிவு -பிரஷாந்தன் நடிப்பு -குகன் ,திவ்யா This posting includes an audio/video/photo media file: Download Now | |
| Posted: 25 Apr 2012 08:40 AM PDT ![]() திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து வந்தவர்; படைப்புக்கு அதிபதி என்று மகா பெருமையுடன் திகழும் ஸ்ரீபிரம்மாவுக்கு, ஆணவம் தலை தூக்கியது. ஆனால், அந்த ஆணவமே திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்தது. கர்வம் என்பது நமக்கெல்லாம் அலட்டல். ஆனால் இறைவனின் கர்வத்தில், உலக உயிர்களுக்கான பாடம் அரங்கேறும் விளையாட்டு நிகழும். ஒருகட்டத்தில், உண்மையை உணர்ந்து கொண்ட ஸ்ரீபிரம்மா, தற்போதைய காஞ்சியம்பதிக்கு வந்து திருமாலை மனதில் நிறுத்தி, யாகம் ஒன்றை நடத்துவது என முடிவு செய்தார். மனைவியை அருகில் வைத்துக் கொண்டு யாகமும் பூஜையும் செய்வதுதானே மரபு! எனவே, ஸ்ரீசரஸ்வதி தேவியை யாகத்துக்கு வரும்படி அழைக்க... 'கர்வத்துடன் திரிவது கணவனேயானாலும் மன்னிக்க மாட்டேன்' என்று சொல்லி, வர மறுத்தாள். உடனே, ஸ்ரீசாவித்திரியையும் ஸ்ரீகாயத்ரியையும் அழைத்துக் கொண்டு, யாகத்துக்குப் புறப்பட்டார் ஸ்ரீபிரம்மா. இதில் ஆவேசமானாள் ஸ்ரீசரஸ்வதி. அவளும் பூமிக்கு வந்தாள். நதியாக உருவெடுத்து, யாகம் நடைபெறும் இடத்தையே தண்ணீரில் மூழ்கச் செய்வது எனத் திட்டமிட்டாள். ![]() பூமிக்கு வந்தவள், நதியானாள். கடும் உக்கிரத்துடன் மிக வேகமாகப் பாய்ந்து வந்தாள். இதனால், அந்த நதிக்கு, வேகவதி எனப் பெயர் அமைந்தது. மனிதர்கள்தான் இனமும் குணமும் பார்ப்பார்கள். எந்தப் பாகுபாடுகளும் இன்றி, ஆட்கொள்பவன் ஆண்டவன் மட்டுமே! ஆகவே ஸ்ரீபிரம்மாவின் யாகத்தையும், அதனைக் கலைக்க ஸ்ரீசரஸ்வதிதேவி, நதியாக உருவெடுத்து வந்திருப்பதையும் அறிந்த திருமால், தன் பக்தனுக்கு வந்த சோதனையை முறியடிக்கத் திருவுளம் கொண்டார். யாகம் நடைபெறும் இடத்தை நோக்கி, சீறிப் பாய்ந்தபடி வேக வேகமாக வந்து கொண்டிருந்த வேகவதி நதிக்கு முன்னே... தன் ஆதிசேஷனின் பிரமாண்டமான திருவுருவத்தை அப்படியே அணையாக்கிக் கொண்டு, அந்த ஆதிசேஷன் மீது மிக ஒய்யாரமாகச் சயனித்திருந்தார் திருமால். திருப்பாற்கடலில் சயனித்துள்ளதைப் போலவே எதிரில் வீற்றிருக்கும் பிரமாண்ட ஆதிசேஷனையும் பரம் பொருள் திருமாலையும் கடந்து வேகவதியால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. தன் தவற்றை உணர்ந்தாள். கணவரிடமும் கடவுளிடமும் மானசீகமாக மன்னிப்பு வேண்டி னாள். திருமாலும் ஸ்ரீபிரம்மனுக்குத் திருக்காட்சி தந்தார். அவரிடம், 'எனக்கு அருளியது போல், பூவுலகத்து மனிதர்கள் யாவருக்கும் இந்த க்ஷேத்திரத்தில் இருந்து அருள்பாலியுங்கள் ஸ்வாமி' என்று வேண்டினார் பிரம்மன். அதை ஏற்று, இன்றும் அந்தத் திருவிடத்தில் இருந்தபடி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகிறார் ஸ்ரீபரந்தாமன். ![]() வேலூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாற்கடல். சென்னை - வேலூர் சாலையில் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாற்கடல் திருத்தலம். வேகவதி ஆற்றின் வேகத்தைத் தடுத்து நிறுத்த திருப்பாற்கடலில் இருப்பது போலவே ஆதிசேஷன் மீது சயனித்த திருக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால், ஊரின் பெயர் திருப்பாற்கடல் என்றே அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். தீர்த்தம் - சரஸ்வதி தீர்த்தம். பெருமாள் - ஸ்ரீரங்கநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் - ஸ்ரீகடல்மகள் நாச்சியார். பங்குனி மாத ரேவதி நட்சத்திர நன்னாளில், உபய நாச்சியாரின் உத்ஸவத் திருமேனிக்கு பால் திருமஞ்சனம் செய்து, படியை நெய்யால் மெழுகி, சர்க்கரையால் கோலமிட்டுப் பிரார்த்தித்தால், நம் வாழ்க்கையையே இனிக்கவும் சிறக்கவும் செய்கிற குழந்தை பாக்கியத்தைத் தந்தருள்வாள் தாயார். அவளுக்குத் தேன் திரு மஞ்சனம் செய்து வணங்கினால், விரைவில் திருமண வரம் கை கூடும் என்பது ஐதீகம். ஆதிசேஷனின் மேல் சயனித்த திருக்கோலத்தில், சுமார் 9 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டு, அற்புதமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீரங்கநாதர். அதுவும் எப்படி? 'அத்தி ரங்க அத்தி ரங்க ஆதிமூல ஸ்வாமியாம்; இத்தரையில் ஏகி வந்த தாருசார மூர்த்தமாம்' என்பதற்கு ஏற்ப, அத்தி மரத்தாலான மூர்த்தமாக சேவை சாதிக்கிறார். அத்தி ரங்க தரிசனம், பாவ வினைகளை எல்லாம் போக்கும் என்பர். ![]() சித்ரகுப்தன், அத்தி மர சமித்து களைக் கொண்டு மிகப்பெரிய ஹோமம் நடத்தி திருமாலை வழிபட்டிருக்கிறான். எனவே, திருப்பாற்கடல் தலத்துக்கு வந்து, ஸ்ரீரங்கநாதரை பிரார்த்திக்க, சித்ரகுப்தன் எழுதி வைத்துள்ள மொத்தப் பாவக் கணக்குகளும் நீங்கும்; வைகுண்டப் பதவியை அடையலாம் என்று நிகமாந்த மகாதேசிகர் தனது மெய்விரத மான்யத்தில் அருளிச் சென்றுள்ளார். நாராயண சதுர்வேதிமங்கலம் என ஆதியில் அழைக் கப்பட்டு, தற்போது திருப்பாற்கடல் என அழைக்கப்படும் இந்தத் தலத்தின் பெருமையை உணர முடிகிறதா உங்க ளால்? ஆனால் பல வருடங்களாக நித்திய பூஜையே அரிதாகி, வழிபாடுகளுக்கே வழியின்றி, ஆலயத்தினுள் நுழைவதற்கே பெரும்பாடு படுகிற சோகநிலையில் இருந்த ஆலயம் இது என்றால், உங்கள் மனம் என்ன பாடுபடும்? தற்போது மெள்ள மெள்ள திருப்பணிகள் நடந்தேறி வருகின்றன. சப்தக விமானத்தின் கீழ் சேவை சாதிக்கிறார் திருமால். சப்த ரிஷிகளும் இங்கு வாசம் செய்து, பரம்பொருளை வழிபடுவதாக ஐதீகம். விஷ்ணுபதி புண்ய காலங்களான கார்த்திகை, மாசி, வைகாசி, ஆவணி ஆகிய மாதப் பிறப்புகளில் இங்கு வந்து, செவ்வாழை அல்லது அத்திப்பழம் தானம் செய்து வழிபட, சகல நோய்களும் நீங்கி ஆரோக்கியமாக வாழலாம் என்பது நம்பிக்கை. ![]() கல்வியில் மேன்மை பெறவும், மனச் சஞ்சலத்தில் இருந்து விடுபடவும், கால் கள் சம்பந்தமான பிரச்னைகள் நீங்கப் பெறவும் நல்லெண்ணெய் தானம் செய்து, அத்தி ரங்கனை வழிபடுவது சிறப்பு என்கின்றனர். இங்கே, 116 விரலி மஞ்சளைக் கொண்டு மாலையாக்கி ஸ்ரீஅத்திரங்கப் பெருமாளுக்கு சார்த்தி வழிபட, திருமணமாகாத ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும்.கருடாழ்வாருக்கு ராகு காலத்தில் தேன் திருமஞ்சனம் செய்து வழிபட்டால், நோய்களும் தோஷங்களும் நீங்கும்; சிறிய திருவடியான ஸ்ரீஆஞ்சநேயருக்கு கூழ்பாண்டம் செய்து (11 எண்ணிக்கை கொண்ட பூசணிக்காய் மாலை) மாலை சார்த்திப் பிரார்த்தித்தால், ம்ருத்யு தோஷங்கள் விலகும் என்கிறார் நந்த குமார் பட்டாச்சார்யர். மிகப் பெரிய புண்ணிய க்ஷேத்திரம்; நம் மொத்தப் பாவக் கணக்குகளையும் தீர்க்கும் தலம் இது. 116 விரலி மஞ்சளைக் கொண்டு மாலையாகச் சார்த்துகிற அதே நேரத்தில், அந்த எண்ணிக்கை யில் கல்லோ சிமென்ட் மூடைகளோ கோயிலுக்கு வாங்கிக் கொடுங்கள். பாலும் தேனும் திருமஞ்சனம் செய்து, நல்லெண்ணெய் தானம் தருகிற அதே வேளையில்... கோபுர திருப்பணிக்கோ, பிராகார நடைபாதைக்கோ உங்களால் முடிந்த நன்கொடையைத் தாராளமாகச் செய்யுங்கள். பூலோக திருப்பாற்கடல் எனப் போற்றப்படும் இந்தத் திருப்பாற்கடல் கிராமத்துக்கு, பூவுலகின் பக்தர்கள் எல்லோரும் வந்து பாவங்களைப் போக்கிக்கொண்டு, புண்ணியங்களைப் பெருக்கி நலமுடன் வாழ... அங்கே திருப்பணிகள் நடந்து, கும்பாபிஷேகமும் சிறப்புற நடைபெற... அத்தி ரங்கனை ஆத்மார்த்தமாகத் தொழுதபடியே வெளியே வந்தோம். அத்தி ரங்கா... அத்தி ரங்கா... அத்தி ரங்கா! | |
| எப்பிடி எல்லாம் யோசிக்கிறன்களோ? (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 08:37 AM PDT | |
| எப்பிடி எல்லாம் யோசிக்கிறன்களோ? (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 08:38 AM PDT | |
| எப்பிடி எல்லாம் யோசிக்கிறன்களோ? (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 08:38 AM PDT | |
| வெற்றியைத் தருவார் ஸ்ரீவீர ஆஞ்சநேயர்! Posted: 25 Apr 2012 08:36 AM PDT ![]() தேரின் கொடியில் அமர்ந்து, யுத்தத்தில் தனக்கு மகத்தான வெற்றியைத் தேடித் தந்த ஆஞ்சநேயருக்கு, யுத்தம் முடிந்ததும் நன்றி தெரிவிக்க விரும்பினான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணரிடம் இதுகுறித்து ஆலோசித்தான். ''ஆகா, நல்ல யோசனை அர்ஜுனா! நன்றி காட்டுவது உத்தமமான குணம். நான் சுட்டிக்காட்டும் இடத்தில் ஸ்ரீவீர ஆஞ்சநேயரின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக!'' என்று பகவான் அருளினார். அதன்படியே அனுமனின் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் அர்ஜுனன். அந்த இடம், கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகலில் உள்ளது. அர்ஜுனன் வழிபட்ட விக்கிரகத்தை இன்றைக்கும் தரிசிக்கலாம். பெங்களூருவில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலைவிலும், கோலார் நகரிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது முல்பாகல் எனும் நகரம். இந்த ஊரின் பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். ![]() 'முதல பாகிலு' என்று ஆதியில் அழைக்கப்பட்டு, பிறகு 'முல்பாகல்' என மருவியதாகச் சொல்வர். முதல பாகிலு என்றால், 'கிழக்கு வாசல்' என்று பொருள். விஜயநகர மன்னர்கள் ஆண்ட மைசூர் ராஜ்ஜியத்துக்கு, கிழக்குத் திசை நுழைவாயிலாக இந்த நகரம் இருந்ததால், இப்படிப் பெயர் அமைந்ததாகச் சொல்வர். முல்பாகல் திருத்தலம், 'பாஸ்கர க்ஷேத்திரம்', 'கதிலேஷண்ட வனம்' (கதலி வாழை), 'ஷதக் கவாடபுரி' எனப் பல திருநாமங்களால் அழைக்கப்படுகிறது. இந்த ஊரை ஒட்டியுள்ள மலைக்கு 'அஞ்சனாத்ரி மலை' என்று அனுமனின் தாயார் பெயர் சூட்டப்பட்டுள்ளது. முல்பாகலிலும் சுற்று வட்டாரப் பகுதியிலும் புராதனமான ஆலயங்கள் பல இருக்கின்றன. புனித க்ஷேத்திரமான காசி- வாரணாசி தலத்துக்கு நிகரான தலமாக, ஸ்ரீசோமேஸ்வரர் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், பண்டரி புரத்தில் உள்ள 'பாண்டுரங்க விட்டல' திருக்கோயிலுக்கு இணையானதாக ஸ்ரீவிட்டலேஸ்வரர் எனும் திருநாமத்துடன் திருமாலுக்கும் ஓர் ஆலயம் அமைந்துள்ளது. அவணி என்ற ஒரு தலம், 'கயா'வுக்கு நிகரான தலம் என்று புகழப்படுகிறது. இங்கு ஸ்ரீராமலிங்கேஸ்வரர், ஸ்ரீலட்சுமணேஸ்வரர், ஸ்ரீபரதேஸ்வரர் மற்றும் ஸ்ரீசத்ருக்னேஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. ![]() இருப்பினும், அனைத்து ஆலயங் களிலும் மிகவும் பழைமையானதும் புகழ் பெற்றதும்... அர்ஜுனன் பிர திஷ்டை செய்த ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோயில்தான் என்கின்றனர் ஊர் மக்கள். ஆஞ்சநேயர் கோயில் என அழைக்கப்பட்டாலும், மூலவர் திருமால்தான். அவரின் திருநாமம் - ஸ்ரீசென்னகேசவ பெருமாள். தாயார் - ஸ்ரீபத்மாவதி தாயார். ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீவரதராஜர், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, ஸ்ரீகோதண்டராமர் ஆகியோரும் தனித் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீவீர ஆஞ்சநேயர் விக்கிரகத்தைத் தவிர, மற்ற விக்கிரகங்களை வசிஷ்ட மகரிஷி பிரதிஷ்டை செய்தார் என்கிறது ஸ்தல புராணம். சிறிய அளவில் இருந்த ஸ்ரீவீர ஆஞ்சநேயர் ஆலயத்தை, மொகலாய சக்ரவர்த்தி அக்பரின் நிதி அமைச்சராக இருந்த ராஜா தோடர்மால் விரிவுபடுத்திக் கட்டியதுடன் புனருத்தாரண வேலைகளையும் செய்திருக்கிறார். கிருஷ்ணதேவராயர் கட்டிய மண்டபத்தில் மற்ற ஸ்வாமிகளின் சந்நிதிகள் அமைந்துள்ளன. ராஜா தோடர்மாலின் சிலையை ஆலயத்தில் காணலாம். திருப்பதி சென்று திருவேங்கடவனைத் தரிசிக்க விரும்பும் பக்தர்கள், முதலில் முல்பாகல் வந்து ஸ்ரீவீர ஆஞ்சநேயரையும், இதர தெய்வங்களையும் தரிசித்து, அதன் பிறகே திருப்பதி செல்ல வேண்டும் என்பது கர்நாடக மக்களின் வழக்கமாக உள்ளதாம். ![]() அதேபோல், இங்கு வந்து ஸ்ரீவீர ஆஞ்சநேயரையும் பெருமாளையும் ஸேவித்த பிறகுதான், திருமணம் முதலான வீட்டு விசேஷங்களைத் துவக்குகின்றனர், இந்தப் பகுதி மக்கள். ''வைகானச ஆகமப்படி பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில், ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு விசேஷமாக தாழம்பூவினால் பூஜை நிகழ்த்தப்படுகிறது. வருடத்தின் 365 நாட்களிலும் தாழம்பூ வழிபாடுதான்! ஆஞ்சநேயரை வழிபட வருபவர்களுக்கு தாழம்பூ மடலையே பிரசாதமாக வழங்குகிறோம். காலை 7 முதல் மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 3 முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்'' என்கிறார் அர்ச்சகர் வெங்கடேச ஆச்சார்யர். ''ஏப்ரல், மே மாதங்களில் ரத உத்ஸவம், செப்டம்பரில் லட்சார்ச்சனை, ஆடி மாதம் பவித்ரோத்ஸவம், தனுர் மாதத்தில் 9 நாட்கள் திருவிழா, நவராத்திரியில் தசாவதாரம், அனுமன் ஜயந்தி என திருவிழாக்கள் சிறப்புற நடைபெறுகின்றன. வைகானாச ஆச்சார்யரின் ஜயந்தியும் இங்கே கொண்டாடப்படுகிறது. பக்தர்கள், எந்தக் கோரிக்கையை முன் வைத்து ஸ்ரீவீர ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்தாலும், அவர் அந்தக் கோரிக்கையை விரைவில் ஈடேற்றித் தருவார். இவரை வேண்டினால், வெற்றி நிச்சயம்'' எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் அர்ச்சகர் வெங்கடேச ஆச்சார்யர். | |
| கல்வியில் மேன்மை; பிறவியில் மோட்சம்! Posted: 25 Apr 2012 08:35 AM PDT ![]() கருங்குருவி ஒன்றுக்கு மோட்சம் கொடுத்த 47-வது திருவிளையாடல் தெரியும்தானே? அந்தத் திருத்தலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில், சுமார் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெருங்கரை கிராமம். பார்த்திபனூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரை, மேலப் பெருங்கரையூர் என்பர். இந்தத் தலத்து ஸ்வாமியின் திருநாமம் - ஸ்ரீஅட்டாள சொக்கநாதர்; சுயம்பு மூர்த்தம். அம்பாள் - ஸ்ரீஅங்கயற்கண்ணி. ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீஐயப்பன் ஆகியோர் தனிச் சந்நிதியில் காட்சி தரும் அற்புதத் தலம் இது! முற்பிறவியில் அறம் நிறையச் செய்தும் சிறிதளவு பாவம் செய்ததால், ஒருவன் கருங்குருவியாகப் பிறந்தான். அந்தக் கருங்குருவியின் ஏக்கத்தையும் சோகத்தையும் புரிந்துகொண்ட முனிவர் ஒருவர், சோமசுந்தரக் கடவுளை வணங்கி தவமிருந்தால் இம்மையிலும் மறுமையிலும் மோட்சம் கிட்டும் என அருளினார். அதன்படி அந்தக் குருவி சிவனாரை நினைத்து, வனத்தில் இருந்தபடி கடும் தவத்தில் ஈடுபட்டது. குருவியின் தவத்தில் மகிழ்ந்து சிவபெருமான் காட்சி தந்தார். குருவி மற்றும் இதர பறவைகளுக்கு வலிமையை வரமாகத் தந்து மறைந்தார். அந்தத் திருவிடத்தில் இருந்தபடி, இன்றைக்கும் அருளி வருகிறார் ஸ்ரீஅட்டாள சொக்கநாதர். சுந்தரமூர்த்தி நாயனார் பாடிப் பரவிய திருத்தலம் இது! ஸ்ரீஅட்டாள சொக்கநாதர் முக்தியைத் தந்தருள்கிறார் எனில், ஸ்ரீஅங்கயற்கண்ணி, ஞானச் செல்வத்தை வாரி வழங்குகிறாள். இங்கே, கார்த்திகை மாத முதல் மற்றும் கடைசி சோம வாரத்தில் (திங்கட்கிழமைகளில்), இங்கு வந்து ஸ்வாமிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், நம் மனதைக் குளிரச் செய்யும் வகையில் எண்ணங்களையெல்லாம் ஈடேற்றித் தருவாராம் ஸ்ரீஅட்டாள சொக்கநாதர். புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீஅங்கயற்கண்ணிக்கு பாலபிஷேகம் செய்து, பச்சைப் புடவை சார்த்தி வணங்கினால், கல்வியில் சிறந்து விளங்கலாம்; ஞாபக சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். | |
| ஆறறிவு என்பதற்காக இப்படியெல்லாம் சிந்திப்பார்களா? (வீடியோ இணைப்பு) Posted: 25 Apr 2012 08:34 AM PDT | |
| பரிட்சைக்குத் துணை நிற்பார் ஸ்ரீபாணபுரீஸ்வரர்! Posted: 25 Apr 2012 08:33 AM PDT இங்கே ஸ்வாமி - ஸ்ரீபாணபுரீஸ்வரர். அம்பாள் - ஸ்ரீசோமகலாம்பிகை. இந்தத் தலத்துக்கு வந்து வணங்கினால், திருமண தோஷங்கள் யாவும் விலகி, விரைவில் மாங்கல்ய வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்! பிள்ளை பாக்கியம் கிடைக்கும் பரிகாரத் தலமாகவும் போற்றப்படுகிறது, இந்தத் திருக்கோயில். வங்க தேச மன்னரின் மனைவி, தீராத நோயால் பெரிதும் அவதிப்பட்டு வந்தாள்; எத்தனையோ வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை எனும் நிலையில், தெற்கே ஸ்ரீபாணபுரீஸ்வரர் தலத்துக்கு வந்து வழிபட்டால், விரைவில் குணம் பெறுவாள் என்று அசரீரி கேட்கவே... மன்னர் தன் மனைவியுடன் இங்கு வந்து நெடுநாட்கள் தங்கி, இறைவனை வழிபட்டார்; அவளின் நோய்கள் யாவும் குணமாயின என்கிறது ஸ்தல புராணம். எனவே, இங்கு வந்து ஸ்ரீசோமகலாம்பிகைக்கும் ஸ்ரீபாணபுரீஸ்வரருக்கும் வஸ்திரம் சார்த்தி, பவளமல்லிப் பூவை அணிவித்து வழிபட்டால், சகல நோய்களும் தீர்ந்து, ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.இந்தக் கோயிலில் ஸ்ரீஅனுமன், ஸ்ரீஅர்த்த நாரீஸ்வரர், ஸ்ரீவியாஸகலிங்கம், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீபைரவர் ஆகியோர் தனிச்சந்நிதிகளில் இருந்து அருள்பாலிக்கின்றனர். சோமவாரம் எனப்படும் திங்கட் கிழமை, குரு வாரம் எனப்படும் வியாழக்கிழமை மற்றும் பிரதோஷ காலங்களில், ஸ்ரீபாணபுரீஸ்வரருக்கும் ஸ்ரீசோமலாம்பிகைக்கும் தேன் மற்றும் மாதுளைச் சாறு அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி பிரார்த்தனை செய்தால், மாணவர்கள் கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள் என்கிறார் கோயிலின் அர்ச்சகர் துரைசாமி குருக்கள். ''கும்பகோணம் எனும் திருத்தலத்தில் உள்ள முக்கியமான, புராதனமான ஆலயங்களில் முதன்மையானது இந்தக் கோயில். இங்கு மாணவர்கள் தங்களது எழுதுகோல் மற்றும் ஹால் டிக்கெட்டை சிவனாரின் சந்நிதியில் வைத்து வேண்டிச் சென்றால், தேர்வு பயம் விலகும்; தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். இதனை வெற்றி பெற்ற மாணவர்களே தங்களின் அனுபவரீதியாகச் சொல்ல, மற்ற மாணவர்களும் இங்கு வந்து ஸ்வாமியையும் அம்பாளையும் வணங்கிச் செல்கின்றனர்'' எனப் பெருமிதத்துடன் சொல்கிறார் கோயில் குருக்கள். படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவ- மாணவிகள், ஸ்ரீபாணபுரீஸ்வரரை வணங்கித் தொழுதால், பரீட்சையில் வெற்றி பெறுவது உறுதி! |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


க








ம










எனவே, இங்கு வந்து ஸ்ரீசோமகலாம்பிகைக்கும் ஸ்ரீபாணபுரீஸ்வரருக்கும் வஸ்திரம் சார்த்தி, பவளமல்லிப் பூவை அணிவித்து வழிபட்டால், சகல நோய்களும் தீர்ந்து, ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழலாம் என்கின்றனர், பக்தர்கள்.