I tamil web

I tamil web


தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய போலீஸ்! (அதிரடிப்படங்கள்)

Posted: 01 Mar 2012 09:44 AM PST

கட்டிடமொன்றின் 32வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்த 24 வயதுடைய இளம் பெண் ஒருவரை போலீஸ் அதிரடியாக செயற்பட்டு காப்பாற்றியுள்ளது. இச்சம்பவமானது சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஆரம்பத்தில் கல் ஒன்றை கொண்டு தனது இடது மணிக்கட்டை வெட்டிய குறித்த யுவதி அதன் பின் தற்கொலை செய்யும் நோக்கில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கட்டிடத்தின் 32வது மாடி​யை நோக்கி விரைந்துள்ளார். எனினும் சம்பவத்தை அறிந்த போலீசார் விரைவாக செயற்பட்டு யுவதியை காப்பாற்றியதால் அவரின் தற்கொலை முயற்சி வீணாகியது.




நைஸ் ஸ்மைல்! (படங்கள்)

Posted: 01 Mar 2012 09:31 AM PST


நாம் அறிந்தவரையில் மனிதனைத்தவிர வேறு எந்த உயிரினமும் சிரிப்பது இல்லை. எனினும் சில சந்தர்ப்பங்களில் சில உயினங்களின் செயற்பாடு அவ்வாறானதொரு தோற்றத்தை ஏற்படுத்துவதுண்டு. அதே போல அமெரிக்காவின் ஒலிம்பிக் தேசிய பூங்காவில் உள்ள ஆந்தை ஒன்றி செயற்பாடானது அது சிரிப்பது போன்ற தோற்றத்தில் காணப்பட்டுள்ளது. இதனை மிகவும் தத்துரூபமான முறையில் பறவைகளை புகைப்படமெடுப்பதில் மிகுந்த ஆர்வமுடைய புகைப்படக்கலைஞரான ரின் மின் லீ என்பவர் எடுத்துள்ளார்.

ஆந்தைகள் இரவில் மட்டுமே பார்வையை கொண்டுள்ள போதிலும் இந்த ஆந்தை பகல் நேரத்தில் பார்வையற்ற தருணத்தினிலேயே சிரித்து அசத்தியுள்ளது.




கொடிய பாம்பை காலை இரையாக்கிய சிலந்தி! (படங்கள்)

Posted: 01 Mar 2012 09:18 AM PST

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். காரணம் தீண்டியவுடன் கொல்லக்கூடிய அதனுடைய கொடிய விஷமாகும். இப்படிப்பட்ட பாம்பு ஒன்றை சிலந்தி ஒன்று தனது காலை உணவாக்கியுள்ளது. இச்சம்பவமானது தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது. தான் இடம் விட்டு இடம் நகரவும் எதிரிகளை சிக்க வைக்கவும் தனது வாயிலிருந்து வெளிவரும் ஒருவகை திரவத்தின் மூலம் உருவாக்கப்படும் வலை மூலமே குறித்த பாம்பிற்கு குழியமைத்துள்ளது அந்த சிலந்தி!




ஸ்மார்ட்போன்களினால் அமைக்கப்பட்ட இராட்சதப் பறக்கும் குதிரை

Posted: 01 Mar 2012 02:01 AM PST


இன்றைய மனித வாழ்வில் கைப்பேசி என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. கைப்பேசிகள் பேச மட்டுமல்ல மனிதர்களை மிரட்டவும் செய்யும் என்று Huawei நிறுவனம் நிரூபித்துள்ளது. Huawei நிறுவனம் தனது கைப்பேசி தயாரிப்புகளில் ஒன்றான smartphones-ல் புதிய தொழில்நுட்பம் ஒன்றை புகுந்தியுள்ளது. அது பலரையும் சென்றடைய கூடிய வகையில் புதிய விளம்பர உத்தியை கையாண்டுள்ளது.

அதாவது பறக்கும் குதிரை ஒன்றை smartphones கைப்பேசிகளை கொண்டு ஒரு இராட்சத சிலையை உருவாக்கியுள்ளனர். ஸ்பெயின் நாட்டின் MWC மண்டபத்திற்குள் முன்னால் இந்த விளம்பர சிலையை அறிமுகப்படுத்தியுள்ளனர். சுமார் 3500 கைப்பேசிகளை கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 19 அடி நீளமுள்ள இந்த குதிரையை வடிவமைக்க சுமார் 720 மனித மணித்தியாலங்கள் செலவிடப்பட்டுள்ளன. D Quad என்ற புதிய தொழில்நுட்ப உத்தியை அறிமுகம் செய்கின்றது Huawei நிறுவனம்.



விரும்பிய இடத்திற்கு தூக்கிச் செல்லக் கூடிய கொன்ரெய்னர் வீடுகள்

Posted: 01 Mar 2012 01:54 AM PST



தற்போது உலகம் எங்கும் புதுமையான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. வீட்டுக்குள் மாடிப்படிகள் போன்ற சாதனங்களை ரெடிமேடு ஆக வாங்கி பொருத்தி வந்தவர்கள், தற்போது தங்கள் வீட்டையே விரும்பிய இடத்துக்கு தூக்கிச்செல்ல முடியும். பிரான்ஸ் நாட்டில் லில்லி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இது போன்ற வீடுகளை கொன்ரெய்னர் வீடுகள் என்று அழைக்கிறார்கள்.

8 கொன்ரெய்னர்களை ஒன்றாக சேர்த்தால் ஒரு குடும்பத்துக்கு தேவையான வீடு தயார். சாதாரண வீடுகளில் உள்ள அத்தனை வசதிகளும் இதில் உள்ளன. வேலை காணமாக இடம் மாற வேண்டியது வந்தாலும் வீட்டை அப்படியே தூக்கிச் சென்று விடலாம்.













பேய் உற்சாகத்தில் ராகவா லாரன்ஸ்

Posted: 01 Mar 2012 01:45 AM PST


முனி - 2 எனும் காஞ்சனா கண்ட பெரும் வெற்றி, இயக்குநர் - நடிகர் ராகவா லாரன்ஸுக்கு 'பேய் உற்சாக'த்தைத் தந்திருக்கிறது. சுறுசுறுப்பாக அடுத்த பாகத்துக்குத் தயாராகிவிட்டார் மனிதர். இந்த புதிய படத்தில் தனது தம்பியை அறிமுகப்படுத்தப் போகிறாராம் லாரன்ஸ். ராசியான நடிகை என்பதால், மனஸ்தாபத்தை மறந்து மீண்டும் லட்சுமிராயை கேட்க முடிவு செய்துள்ளாராம். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்.

முனி 3 குறித்து லாரன்ஸ் கூறுகையில், "காஞ்சனா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ராகவேந்திரர் அருளாள்தான். ராகவேந்திரர் கோயிலைக் கட்டிய பிறகு என் வாழ்க்கை நல்ல விதமாக போய்க்கொண்டிருக்கிறது. என் வெற்றிகளை ராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கிறேன்," என்றார். காஞ்சனாவை இந்தியில் சல்மான்கான் ரீமேக்கவிருப்பது தெரியும்தானே!

மகாத்மா காந்திக்கு அமெரிக்கத் தேவாலயத்தில் ஞானஸ்தானம்

Posted: 01 Mar 2012 01:39 AM PST


தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அவர்களுக்கு அமெரிக்காவில் சால்ட் லேக் நகரில் உள்ள மர்மோன் தேவாலயத்தில் ஞானஸ்நானம் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. அவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து கடந்த 1996-ம் ஆண்டு இதை செய்துள்ளனர். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள ரட்கி என்பவருக்கு மர்மோன் தேவாலயம் தற்போது தெரிவித்துள்ளது. இதை இந்து மத ஆர்வலர் ராஜன் செத் என்பவருக்கு ரட்கி மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.


மேலும் காந்திக்கு ஞானஸ்நானம் செய்வித்தது தொடர்பான ஆவணங்களை மர்மோன் தேவாலயத்தில் கடந்த 16-ந் திகதி, தான் பார்த்ததாகவும் அதன்பிறகு அந்த ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த இந்திய தலைவர் ஒருவர், பதிலி முறையில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட சம்பவம், உலகம் முழுவதும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் மகாத்மா காந்தியின் பேரன் அருண் காந்தியும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்





கண் இமைக்கும் நேரத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

Posted: 01 Mar 2012 01:29 AM PST


வேகமாக சுழன்று கொண்டிருக்கும் பூமியின் செயற்பாட்டில் இடம்பெறும் அதன் செயல்கள் அனைத்தும் படு வேகமாகவே முடிந்துவிடும். அதாவது மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விடும். அந்த வகையில் உலகில் இடம் பெற்ற மெய்சிலிர்க்கும் காட்சிகளை மிகவும் வேகம் குறைவாக(Slow) வெளிப்படுத்தும் காணொளியைக் காணலாம்.


இயக்குநர் அமீர் ஞானவேல் ராஜா, ஜெமினி லேப் மீது போலீஸில் புகார்!

Posted: 01 Mar 2012 01:25 AM PST


பருத்தி வீரன் படத்தின் தெலுங்கு உரிமையை தனக்கு தெரியாமலேயே விற்றுவிட்டதாகக் கூறி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, ஜெமினி லேப் நிறுவனம் மீது சென்னை மாநகர போலீசில் புகார் கொடுத்துள்ளார் இயக்குநர் அமீர்.

தனது பருத்தி வீரன் படம் மூலம் கார்த்தியை பெரிய நடிகராக அறிமுகப்படுத்தியவர் அமீர். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாதான் என்றாலும், அந்தப் படத்தின் பாதியிலேயே அவர் வெளியியேறிவிட்டதாகவும், மொத்தப்படத்தையும் தனது செலவிலேயே எடுத்து வெளியிட்டதாகவும் அமீர் கூறினார்.

அமீருக்கும் - ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீனுக்கும் இடையே இதுதொடர்பான கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இன்னும் முடியவில்லை. தனியாக வழக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையில், இப்போது கார்த்தி தெலுங்கிலும் பிரபலமாகிவிட்டார். ஆனாலும் தெலுங்கு தேசத்தில் பருத்திவீரன் மட்டும் இன்னும் வெளியாகாமல் இருந்தது.

தெலுங்கு வெளியீட்டு உரிமை இயக்குனர் அமீர், ஞானவேல்ராஜாவிடம் கூட்டாக இருந்ததுதான் இதற்குக் காரணம். அமீர் அனுமதி இல்லாமல் இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிட மாட்டேன் என ஞானவேலும், நெகடிவை பாதுகாப்பாக வைத்திருப்போம் என ஜெமினி லேபும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்திருந்தனராம். இந்த நிலையில்தான் பருத்திவீரன் படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடுவதாக தன்னிச்சையாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தார் ஞானவேல் ராஜா. இதற்கு உடந்தையாக ஜெமினி பிலிம்ஸ் இருந்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, எனக்கு சேர வேண்டிய 25 சதவீத ராயல்டி தொகையை கொடுக்காமல் பருத்திவீரனை ரிலீஸ் செய்யும் ஞானவேல் ராஜா, ஜெமினி பிலிம்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளார் இயக்குநர் அமீர்.இந்த இருவருக்கும் எதிராக நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கூட்டுசதி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் அமீர்

இந்நாளிலும் பெண்கள் உரிமையை மறுக்கும் வினோத கிராமம்

Posted: 01 Mar 2012 01:18 AM PST


உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களுக்கு இது நாள் வரை ஓட்டு போட உரிமை அளிக்கப்படாமல் உள்ளது.
மேலும் ஓட்டு போடுவது ஜனநாயகக் கடமை என கூறப்பட்டு வரும் நிலையில் இந்த மாநிலத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் செருவா கிராமத்தில் பெண்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாத நிலை காணப்படுகிறது. சுதந்திரம் அடைந்த நாள் முதல் இந்த கிராமத்தில் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பெண்களை ஓட்டு போட அனுமதிப்பதில்லை.

இந்த வினோத நடவடிக்கை குறித்து கிராம பெரியவர் நசீர் கானிடம் கேட்ட போது, தேர்தல் நேரத்தில் கிராமத் தலைவர் எங்களை அழைத்து யாரெல்லாம் ஓட்டு போடப் போகிறீர்கள். யாரெல்லாம் உங்கள் வீட்டு பெண்களை ஓட்டு போட அனுப்பப் போகிறீர்கள் என கேட்பார். நாங்களும் வழக்கப்படி பெண்களை ஓட்டு போட அனுப்ப மாட்டோம் என சொல்லி விடுவோம் என்றார்.

இந்த கிராம பெண்களிடமும் ஏன் நீங்கள் ஓட்டு போடுவதில்லை என கேட்டால்? ஓட்டு போடாதது எங்களது பாரம்பரியமாக உள்ளது. அதை முன்னோர்களைப் போல நாங்களும் பின்பற்றி வருகிறோம் என்கிறார்கள்.
முஸ்லிம் கிராமம் என்பதால் இந்த சமூக பெண்கள் தான் இப்படி என்றால் இக்கிராம இந்து பெண்களும் ஓட்டு போடுவதில்லை. இது எங்கள் கிராமத்தில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம் என்கிறார்கள்.

இந்த கிராமத்தை சேர்ந்த பார்கவா என்பவர் தெரிவிக்கையில், எங்கள் குடும்பப் பெண்கள் மட்டும் ஓட்டு போடுவார்கள். என் மனைவி, மகள், மருமகள் மூன்று பேரையும், ஓட்டு போட நான் அனுமதித்து வருகிறேன். எங்கள் கிராமத்தில் இந்த மூன்று பெண்கள் தான் ஓட்டு போட்டு வருகிறார்கள் என்றார்.

சூப்பர் ஸ்டாரிணி அந்தஸ்தை நிச்சயம் பெறுவேன் நடிகை தன்ஷிகா

Posted: 01 Mar 2012 01:12 AM PST



சினிமா கதாநாயகிகள் திரையில் காட்டும் நடிப்பை விட, நிஜத்தில் போடும் வேஷமும் நடிப்பும் அபாரமாய் இருக்கும். நான் டாக்டராகியிருப்பேன்... சினிமாவுக்கு வந்தது விபத்து என்றும், டூப்பே போடாமல் சாகஸக் காட்சிகளில் நடித்தேன் என்றும் அவர்கள் சொல்லும்போது முன்பெல்லாம் நம்புவது போலவே ஒரிஜினலாக இருக்கும். இப்போது ரசிகர்கள் தெளிவாகிவிட்டார்கள்.

பேராண்மையில் ஐந்தில் ஒரு ஹீரோயினாக வந்து, இப்போது அரவானில் சோலோவாகிவிட்ட தன்ஷிகா பிழைக்கத் தெரிந்தவர். வாய் ரொம்பவே அதிகம். வாய்க்கு வந்ததை அடித்துவிடுவதில் இவர் பேராண்மை மிக்கவர்தான்.

நாளை ரிலீசாக இருக்கும் அரவானில் நடித்தது குறித்து நிருபர்களிடம் அவர் பேசும்போது, வசந்தபாலனை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். வசந்தபாலன் டைரக்ஷனில் ஒரே ஒரு படத்தில் நடித்தால் போதும். விருது வாங்கிடலாம் என்றார். (அடுத்த படத்துக்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்துவிட்டார் போலிருக்கிறது) அடுத்து அவர் சொன்னதெல்லாம் அரவானில் காமெடி குறைவாக இருக்குமோ என எண்ணத் தூண்டியது.

இதோ ஒரு சாம்பிள்: "அரவான் படத்தில் நான் பல சவாலான காட்சிகளில், துணிச்சலுடன் நடித்தேன். 30 அடி உயரத்தில் இருந்து குதித்து இருக்கிறேன். ஒகேனக்கல் மலையில் இருந்து கீழே ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் குதித்து `டூப்' போடாமல் குதித்திருக்கிறேன்... இந்த மாதிரி வேடங்களில் நடிக்கவே ஆசை. நிச்சயம் சூப்பர் ஸ்டாரிணி அந்தஸ்தைப் பெறுவேன்...," என அருள் வராத குறையாக ஆவேசப்பட்டார் அம்மணி!

ஓடும் வானிலிருந்து விழும் சிறுவர்கள்!

Posted: 01 Mar 2012 01:02 AM PST


ஓடுகிற வானில் இருந்து இரண்டு சின்னப் பிள்ளைகள் விழுகின்ற அதிர்ச்சியான வீடியோக் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.துருக்கி நாட்டின் வீதியொன்றில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராவில் தான் மேற்படி அதிர்ச்சிக் கட்சிகள் வெளியாகின.விழுந்த அதிர்ச்சியில் எழுந்த சிறுவர்கள் சாலையின் ஓரமாக நடக்கின்றார்கள்.ஆனால் திரும்பவும் அந்த வாகனம் ரிவேஸில் வருகின்றது. அதில் உள்ளவர்கள் அந்தச் சிறுவர்களை வானில் ஏற்றுகிறார்கள். வான் மீண்டும் புறப்படுகின்றது.


இன்று பிரிதிதானியவாழ் பெற்றோரின் பரபரப்பும் ஏக்க நிலையூம்

Posted: 01 Mar 2012 12:55 AM PST


இன்றைய தினம் பிரித்தானியாவில் பெற்றோர்கள் பெரும் ஏக்கத்தில் இருப்பார்கள் என்றும், பலர் தமது வேலைக்குச் செல்ல மாட்டார்கள் என்றும் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. 11+ என்று அழைக்கப்படும் 10 வயது நிரம்பிய மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாக உள்ளது. தமிழ் பெற்றோர்கள் தொடக்கம் அனைத்து இன மக்களும் இந்தப் பரிட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனர்.

பிரித்தானியாவில் 10 வயதுச் சிறுவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இந்த பரிட்சையின் பெறுபேறுகள், மிக முக்கியமான விடையங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  தபால்காரரின் வரவையே பெற்றோர் பெரிதும் எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனர். பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை கிடைக்கவேண்டும், என்பதற்காக பெற்றோர் பெரிதும் பாடுபட்டிருப்பர்.

இன்று வெளியாகவுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில், அவர்களுக்கு எந்தப் பாடசாலை கிடைக்கும் என்று தெரியவரும். குறிப்பாக லண்டன் வாழ் தமிழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் 11+ பரீட்சையில் அதிக சித்திபெற்று நல்ல பள்ளிக்கூடத்துக்குச் செல்லவேண்டும் என அதீத ஆர்வம் காட்டுவது வழக்கம். இந் நிலையில் இது தமிழ் சமூகத்துக்கு மிக முக்கியமான நாட்களுள் ஒன்றாகும்.

தமது பிள்ளைகள் நல்ல சித்தியடைந்தால், பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பர். இருபினும் குறைந்த மதிப்பெண்களை எடுத்து நல்ல பள்ளிக்கூடத்தை தவறவிட்ட பிள்ளைகளைப் பொற்றோ கடிந்து அவர்களின் மனதைப் பாதிக்கும் வார்த்தைகளைப் பாவிக்காமல் இருப்பது நல்லது.

நிதானமாகச் சிந்தித்து அடுத்தது என்ன செய்யவேண்டும் ? விண்ணப்பித்த பாடசாலை கிடைக்கவில்லை என்றால் அடுத்த நல்ல பாடசாலை எது, என்று ஆராய்ந்து அதற்கு தமது பிள்ளைகளை அனுப்புவது நல்லது. குறிப்பாக குறைந்த மதிப்பெண்களை எடுத்த பிள்ளைகளின் மனம் கோணாத வகையில் பெற்றோர் நடப்பது நல்லது. ஏன் எனில் சில விபரீதங்கள் நடக்க வாய்ப்பும் உள்ளது.

22 வருடங்களுக்குப் பின் ஒரே பிரசவ விடுதியில் ஒன்றாகப் பிறந்த இருவரும் திருமணம்

Posted: 01 Mar 2012 12:45 AM PST



இவர்கள் பிறந்த போதே கடவுளால் தீர்மானிக்கப்பட்டு விட்டார்களா? இந்த இரண்டு பேரும் தான் இணைந்து வாழ வேண்டும் என்று.
தொட்டிலில் இருந்து கல்லறை வரை ஒன்றாகத் தான் இருப்போம் என்று நிரூபித்து விட்டனர் இத் தம்பதியினர்.

Richard, Kayleigh Brookes என்ற இந்த இரண்டு பேரின் அம்மாக்களும் 1989 ஆம் ஆண்டு ஒரே மகப்பேற்று விடுதியில் இவர்களைப் பெற்று எடுத்து உள்ளனர்.
இவர்கள் இருவரும் வளர்ந்து வரும் போதும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் தான் படித்து வந்துள்ளனர். பின்னர் தற்போது 22 ஆவது வயதில் திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.