சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- இலங்கையின் போர்க்குற்றவாளிகள் எவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த முடியும்!
- இலங்கைக்கு அதரவு வழங்க சில ஆபிரிக்க நாடுகள் இணக்கம்!
- முன்னாள் போராளிகள் கொடுத்த இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவில் மீண்டும் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு!
- இலங்கை தூதரகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்ச் 5ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்!
- சனல்-4 வெளியிடவுள்ள புதிய வீடியோ பற்றி கவலை இல்லையாம்! அரசாங்கம்
- சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தும் கையேடு கனடாவில் வெளிவந்தது!
- ஜெனீவா மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: வவுனியா வளாக மாணவர் ஒன்றியம் ( அறிக்கை இணைப்பு)
- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 13 பேர் போட்டி
- சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது! அடுத்து சிறிலங்காவா?
- ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை தோற்கடிக்கும் முயற்சியில் உலகக் கோடீஸ்வரரான தக்ஸின் ஸின்வத்ரா!
- எஜமானன் உயிரிழந்ததை அறிந்து உயிரை விட்ட குதிரை மனதை உருக்கும் நிகழ்வு
- இலங்கைக்கு எதிராக தமது முடிவை மாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு
- 2-வது உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகள் ஜப்பானில் கண்டுபிடிப்பு
- கிளி.கனகராயன்குளத்தில் உள்ள கமநல சேவைக் கட்டடத்தை மக்களிடம் கையளிக்கத் தயங்கும் பொலிஸார்!
- நண்பன் படத்திற்கு இன்று 50-வது நாள்!
- மொபைல் புது வரவு நோக்கியா 2690 (Nokia 2690 mobile)
- பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு! தவறு என்கிறார் அமைச்சர் வாசுதேவ
- ஆணியினால் வரையப்பட்ட வினோத ஓவியம் (வீடியோ இணைப்பு)
- இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோயை விரட்ட வழி
- ஐ.நா.சபை இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகாரை விசாரணை செய்ய நடவடிக்கை
- அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார்: இலங்கைப் பிரதிநிதிகள்
- உலக கோப்பை கால்பந்து போட்டியில் இருந்த ஆக்டோபசை ஸ்பெயினுக்கு விற்க ஜெர்மனி மறுப்பு
- நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்: ஜகத் ஜயசூரிய
- மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா!
- கர்ப்பிணிகளே கவனம்!: தாயின் நோய் சேயை பாதிக்கும்
| இலங்கையின் போர்க்குற்றவாளிகள் எவரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த முடியும்! Posted: 01 Mar 2012 07:50 AM PST இலங்கை ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும், போர்க்குற்றம் சுமத்தப்படும் எவரையும் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இலங்கைப் பிரதமராக இருந்த காலத்தில், ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்றும் இதனால் இலங்கையின் தலைவர்களையோ, இராணுவ அதிகாரிகளையோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்த கருத்துக்கே முன்னாள் நீதியரசர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கை தற்போது வேண்டுமானாலும் ரோம் உடன்பாட்டின் பங்காளியாகலாம். சாதாரணமாக சர்வதேச உடன்பாடு ஒன்றுக்கு இணக்கம் தெரிவிக்கும் அதிகாரம் அரச தலைவருக்கே உள்ளது. இதன் போது, உள்நாட்டு சட்டம் அல்ல, சர்வதேச சட்டமே பாதிப்புகளை ஏற்படுத்தும் என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில், நாடாளுமன்றத்தில் அமைச்சு பதவிகளை பகிர்ந்து கொள்வதில் தான் பிரச்சினைகள் இருந்தன. இதனால் ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பது குறித்து எவரும் கவனம் செலுத்தவில்லை. ரோம் உடன்பாட்டின் 15வது ஷரத்தில், குற்றவியல் வழக்கை நடத்துபவருக்கு பிராசிகியூட்டார் அதிகாரம் உள்ளது. அவர் விசாரணை நடத்தி ஆரம்ப விசாரணைக்குழுவிற்கு அனுப்பி வைக்க முடியும். சூடான் ரோம் உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. எனினும், சூடான் ஜனாதிபதிக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் லைப்பீரிய தலைவர் ஒருவருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்படுகிறது. இதுவே விசாரணைகள் நடத்தப்படுவதற்கான ஆபத்து இருப்பதை உணர்த்துகின்றன எனவும் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். ரோம் இணக்கப்பாடுகளில் கையெழுத்திடாது தொடர்பில் ஏதேனும் கௌரவம் வழங்கப்பட வேண்டுமாயின் அந்த பெருமை சந்திரிக்காவுக்குரியது - எஸ்.எல்.குணசேகர சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இராணுவத்தினர் மற்றும் இலங்கையின் தலைவர்களை கொண்டு செல்ல முடியாத படி ரோம் இணக்கப்பாடுகளில் கையெழுத்திடாது தொடர்பில் ஏதேனும் கௌரவம் வழங்கப்பட வேண்டுமாயின் அந்த பெருமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவிற்கு வழங்கப்பட வேண்டுமே அன்றி, ரணில் விக்ரமசிங்கவுக்கு அல்ல என சட்டத்தரணி எஸ்.எல்.குணசேகர தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் வகையில், ரோம் உடன்பாடுகள் உருவாக்கப்பட்டன. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர், நடைபெற்ற நியுரேம்பார்க் வழக்குகளின் பின்னர், இந்த உடன்பாடுகள் உருவாக்கப்பட்டது. ரோம் உடன்படிக்கையில் ரணில் விக்ரமசிங்க, கையெழுத்திட கூடாது என்பதற்காக அதில் கையெழுத்திடவில்லை. மாறாக இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி பிரதமர் அவ்வாறான சர்வதேச உடன்படிக்கைகளில் கையெழுத்திட முடியாது. நாட்டின் தலைவரான ஜனாதிபதியே அதில் கையெழுத்திட வேண்டும். ரணில் பிரதமராக இருந்த போது, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க ஜனாதிபதியாக இருந்தார். இருவருக்கு ஏற்பட்டிருந்த முரண்பாடுகள் காரணமாக, ரோம் உடன்பாடுகளில் கையெழுத்திட அல்லது மறுக்க எவரும் இல்லாத நிலையில், அந்த உடன்படிக்கை தொடர்பான விடயம் அத்தோடு முடிந்து போனது எனவும் குணசேகர கூறியுள்ளார். |
| இலங்கைக்கு அதரவு வழங்க சில ஆபிரிக்க நாடுகள் இணக்கம்! Posted: 01 Mar 2012 07:48 AM PST ஜெனீவாவில் நடைபெற்று வரும் 19 வது மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் பிரேரணையின் போது இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சில ஆபிரிக்க நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன என்று இலங்கை குழுவின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கின்ற நாடுகளின் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது உறுதியளிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதேவேளை இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்ப்பிக்கப்படுமாயின் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொள்ள தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். |
| முன்னாள் போராளிகள் கொடுத்த இரகசிய தகவலையடுத்து, முல்லைத்தீவில் மீண்டும் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு! Posted: 01 Mar 2012 07:47 AM PST முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலத்திற்கு அருகாமையில் இருந்து பெருமளவிலான வெடிபொருட்களை, வவுனியாவிலிருந்து சென்ற விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தடுப்பு முகாமில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொடுத்த இரகசிய தகவலின் படி, வவுனியாவிலிருந்து புதுக்குடியிருப்பு இரணப்பாலத்திற்குச் சென்ற விசேட அதிரடிப் படையினரின் தேடுதலிலே விடுதலைப்புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளைமோர் - 14, கிறனைட்- 6, விடுதலைப்புலிகள் தயாரித்த மிதிவெடி- 13, ஹெட்டனேட்டர் - 5, ஆர்.பி.ஜி குண்டு - 8, ரவைகள் - 750, பராலைட் - 81, ஆட்லொறி குண்டு 120mm - 10 ஆகிய வெடிபெொருட்களே வவுனியா விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டவைகளாகும். அண்மைக்காலமாக முல்லைத்தீவு பிரதேசத்தில் விடுதலைப்புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட பெருமளவிலான வெடிபொருட்களை படையினர் மீட்டு வருவதோடு, அப்பகுதியில் மேலும் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. |
| இலங்கை தூதரகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்ச் 5ம் திகதி கண்டன ஆர்ப்பாட்டம்! Posted: 01 Mar 2012 07:45 AM PST இலங்கையில் ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் போர்க்குற்றங்கள் நிகழ்த்திய போர்க்குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவும் இலங்கை அரசை, இந்திய அரசு நிர்ப்பந்திக்க வலியுறுத்தி மார்ச் 5ம் திகதி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தத்தில் பல்லாயிரம் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டதும், கைது செய்யப்பட்டவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாததும், பலத்த காயமுற்றவர்களுக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதும் உள்ளிட்ட மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் மீது யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இது தொடர்பாக மத்திய அரசும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இதனை வன்மையாகக் கண்டிக்கிறது. எனவே, இலங்கையில் ஆயுத மோதலின் இறுதிக்கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீது நம்பகத்தன்மை வாய்ந்த, சர்வதேச தரத்திலான, சுயேச்சையான விசாரணை காலதாமதமின்றி நடத்தப்படவும், போர்க்குற்றங்கள் நிகழ்த்திய போர்க்குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவும் இலங்கை அரசை, இந்திய அரசு நிர்ப்பந்திக்க கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களையும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தி, இயல்பு வாழ்க்கை தொடர்வதை உறுதிப்படுத்திடவும், இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து, சம உரிமை உள்ளிட்ட சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வை ஏற்படுத்திடவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திடவும் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மேற்கண்டவற்றை முன்னிறுத்தி இலங்கை அரசையும், இந்திய அரசையும் வலியுறுத்தி மார்ச் 5 அன்று காலை 11 மணி அளவில் சென்னையில் உள்ள இலங்கைத்தூதரகம் முன்பு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக கட்சி அணிகளும், ஜனநாயக சக்திகளும், மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார். |
| சனல்-4 வெளியிடவுள்ள புதிய வீடியோ பற்றி கவலை இல்லையாம்! அரசாங்கம் Posted: 01 Mar 2012 07:43 AM PST பிரித்தானியாவின் சனல் -4 தொலைக் காட்சி நிறுவனம் இலங்கைக்கு எதிராக வெளியிடவுள்ள புதிய வீடியோ தொடர்பில் இலங்கை அரசு அலட்டிக்கொள்ளவில்லை என அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இன்று தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோது ஊடகவியலளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அங்கு அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பிரித்தானியாவின் சனல் -4 தொலைக்காட்சி நிறுவனம் பல போலியான வீடியோக்களை ஒளிபரப்பியது. எனினும் அவுஸ்திரேலிய துறைசார் நிபுணர்கள் அந்த வீடியோக்களை ஆராய்ந்து அவை புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போலியாகத் தயாரிக்கப்பட்டவை என்பதை உலகறியச் செய்தனர். இதன்மூலம் சனல் -4 நிறுவனத்தின நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிட்டது. எனவே அவர்கள் இலங்கைக்கு எதிராக எத்தனை வீடியோக்களை வெளியிட்டாலும் அது தொடர்பில் இலங்கை கவனத்தில் எடுக்காது என்றும் அமைச்சர் கூறினார். |
| சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தும் கையேடு கனடாவில் வெளிவந்தது! Posted: 01 Mar 2012 07:42 AM PST சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் "WE ACCUSE ; WAR CRIMES AND GENOCIDE" எனும் கையேடு கனடாவில் வெளிவந்தது. இக்கையேட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சகம் உருவாக்கியிருந்தது. இதன் வெளியீட்டு நிகழவ்வு கடந்த 26-022012 அன்று ரொறன்ரோவில் இடம்பெற்றிருந்தது. NDP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைசன், சர்வதேச மன்னிப்புச் சபையின் கனடியப் பேராளரும் சிறிலங்காவிற்கான ஒருங்கிணைப்பாளர் Mr. John Argue, CHRV அமைப்பைச் சேர்ந்தவரும் லிபரல் கட்சிப் பிரமுகர் Todd Ross ஆகியோர் சிறப்பு பிரதிநிதிகளாக பங்கெடுத்திருந்தனர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை விவகாரங்களுக்கான அமைச்சர் டிலக்சன் மொறிஸ் மற்றும் இந்தியா-பெங்களுர் பல்கலைக் கழக விரிவுரையாளரும் நா.த. அரசாங்கத்தின் ஜெனீவா ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வள அறிஞர் குழுவின் பிரதிநிதியுமான பேராசிரியர் பொல் நியூமன் ஆகியோர் இணையவழி காணொளிப் பரிவர்த்தனையூடாக பங்கெடுத்திருந்தனர். நா.த.அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் ராம் சிவலிங்கம், தகவல்துறை அமைச்சர் சாம் சங்கரசிவம், அவை உறுப்பினர் ஈழவேந்தன் ஆகியோருடன் படைப்பாளிகள் கழகத் தலைவரும் சமூக அரசியல் செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை தங்கவேலு ஆகியோர் உரை நிகழ்த்தியிருந்தனர். நா.த அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் ஜெயபாலனின் ஒருங்குபடுத்தலில், கென்றி கிருபைராஜா நிகழ்வரங்கை தொடக்கி வைக்க , பவன் சங்கரசிவம் நிகழ்வினை நெறிப்படுத்தியிருந்தார். |
| ஜெனீவா மாநாட்டைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: வவுனியா வளாக மாணவர் ஒன்றியம் ( அறிக்கை இணைப்பு) Posted: 01 Mar 2012 07:40 AM PST தமிழ் மக்களது ஏகோபித்த ஆதரவைப்பெற்று பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள கூட்டமைப்பு,ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரிற்கு செல்வதில்லை என்ற தீர்மானமும் அதற்காக அவர்கள் கூறியுள்ள காரணமும்.. ..தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என வவனியா வளாக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்படி மாநாட்டிற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பிரசன்னமாகி இலங்கையில் தமிழ் மக்கள் மீது இறுதி யுத்த காலப்பகுதியில் மட்டுமல்ல அதற்கு முன்னரான 60 ஆண்டுகளாக போர்க்குற்றங்களும் மனித்தத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்பதனையும் அவை வெறும் போர்க் குற்றங்கள் மட்டுமல்ல திட்டமிட்ட இனஅழிப்பு என்பதனை பதிவு செய்திருக்க வேண்டும். சர்வதேச நாட்டு இராஐதந்திரிகள் அங்கு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை கூறினார்கள் என்ற காரணம் காட்டி கூட்டத்திற்கு செல்வதிலிருந்து கூட்டமைப்பு விலகிக் கொண்டமை தமிழ் மக்களது நலன் அடிப்படையில் அல்லாமல் பிறசக்திகளது நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முடிவாகவே கருதவேண்டியுள்ளது. பிறநாடுகள் எப்போதும் தமது நலன்களை முன்னிலைப்படுத்தியே தீர்மானங்களை மேற்கொள்ளும் என்பது வரலாறு. இதுவரை காலமும் தமிழ் மக்களது பிரச்சினையில் தலையிட்ட நாடுகள் தமிழ் மக்களை தமது நலன்களை அடைந்து கொள்வதற்காகவே பயன்படுத்திவந்துள்ளன என்பதும் கூட்டமைப்பினருக்குத் தெரியாத ஒன்றல்ல. இந்த சந்தர்ப்பத்தில் கூட்டமைப்பினர் தமிழ் மக்களது நலன் அடிப்படையில் சிந்தித்திருந்தால் நிச்சயம் ஜெனீவா சென்று தமிழர் தரப்பு நிலைப்பாட்டை ஆணித்தரமாக பதிவு செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதாவது தமிழ் மக்கள் மீது கடந்த அறுபது ஆண்டுகளில் புரியப்பட்ட இனஅழிப்புத் தொடர்பாக பூரணமான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்க வேண்டும். சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் நியாயம் பெற்றுக் கொள்ளுவதற்கு தமிழ்த் தரப்பிற்கு கிடைத்த முக்கயமாகதொரு சந்தர்ப்பத்தினை உரிய முறையில் பயன்படுத்தாது தவிர்த்துக் கொண்டதன் மூலம் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை மேற்கொண்டவர்கள் சர்வதேச விசாரணை ஒன்றில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவி புரிந்துள்ளனர். மனித உரிமைகள் மாநாட்டில் வாக்குரிமைகள் கொண்டுள்ள நாடுகளுக்கு எமது நிலைப்பாட்டை ஏற்கனவே எழுத்து மூலம் தெரிவித்து விட்டோம். செய்ய வேண்டியதைச் செய்து விட்டோம். ஆகவே அஞ்சத் தேவையில்லை. என்று கூறுவதும் வன்முறைச் சூழல் உருவாகும் என அஞ்சுகிறொம். அதனால் மீண்டும் எனதுமக்கள் பாதிப்படையக் கூடும் என அஞ்சுகிறோம். அவ்வாறு மக்கள் பாதிக்கப்படுவதனை விடும்பவில்லை. ஆகவே ஜெனிவாவுக்குச் செல்லவில்லை. என்று கூறுவதும் இனப்படுகொலையாளிகளுக்கு சாதகமாக தாம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் கூறும் நொண்டிச்சாட்டு. கடந்த கால அரசுடன்மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைகளில் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் சிவில் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டு, அதற்கான ஆக்கபூர்வமான பதிலேதும் கூட்டமைப்பினரிடமிருந்து கிடைக்கப்பெறாத நிலையில், மீண்டும் ஒரு ஏமாற்றத்தை தமிழ் மக்கள் சந்திக்க நேர்ந்துள்ளது. தொடர்ந்தும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடுகளைத் தடுக்க சிவில் சமூகம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எனக் கோருவதுடன் சிவில் சமூகத்தினருக்கு தமிழ் மக்கள பக்கபலமாக இருக்க வேண்டும் எனக் கோருகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்நடவடிக்கையானது, மாணவ சமுதாயமாகிய எங்களுக்கு கடும் விசனத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என்பதையும் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ![]() ![]() |
| சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 13 பேர் போட்டி Posted: 01 Mar 2012 07:39 AM PST ![]() சங்கரன்கோவில், மார்ச்.1: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 33 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது இன்று பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 20 பேர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் 13 பேர் போட்டி இட உள்ளனர். |
| சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானம் நிறைவேறியது! அடுத்து சிறிலங்காவா? Posted: 01 Mar 2012 07:39 AM PST நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் - அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க நிர்வாகத்தின் கீழ் அதிகரித்துச் செல்லும் மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவுக்கு எதிரான இந்த கண்டன பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன. இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. சிரியா தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அடுத்து சிறிலங்காவை நோக்கிய தீர்மானம் சபைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் மேலோங்கியுள்ளது. இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கம் இன்று மாலை உப மாநாடொன்றினை ஏற்பாடு செய்துள்ளதாக ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா தொடர்பிலான பல விடயங்கள் சபையின் பங்கெடுத்திருந்த பலரது உரைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த நிலையில் சிறிலங்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த உப மாநாடு காரசாரமான விவாதங்களுக்கும் கேள்விகளுக்கும் சிறிலங்கா பதில் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ![]() This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 01 Mar 2012 07:36 AM PST ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தீவிரமாக செயற்பட்டு வரும் தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவு பெற்றுக்கொடுக்கும் இராஜதந்திரச் செயற்பாடுகளில் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவருமான தக்ஸின் ஸின்வத்ரா களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் தக்ஸின் ஸின்வத்ரா மிக நெருக்கமான நட்புறவைக் கொண்டிருப்பதால், இம்முறை ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தோற்கடிக்கச் செய்யும் இராஜதந்திர முயற்சியில் அவரின் உதவியையும் பெற அரசு தீர்மானித்தது. இந்நிலையில், தக்ஸின் ஸின்வத்ராவுடன் தொலைபேசியூடாகப் இலங்கை விடயம் தொடர்பாக கலந்துரையாடியுள்ள இலங்கை அரசின் அதி உயர்மட்டத் தலைவர்கள், இலங்கைக்கெதிராக மேற்கொள்ளப்படும் சதிமுயற்சியை முறியடிக்கச் செய்ய முழு அளவிலான ஆதரவை வழங்குமாறு அவரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இந்த கோரிக்கைக்கிணங்க, லத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் சிலருடன் அவசரப் பேச்சுகளை நடத்தியிருக்கும் ஸின்வத்ரா, ஜெனிவாவில் மேற்குலக நாடுகள் எடுக்கும் தீர்மானத்திற்கு ஆதரவை வழங்குவது, போருக்குப் பின்னராக இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்து மென்று சுட்டிக்காடியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்தின் தற்போதைய ஆட்சி அதிகாரத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்குத் தக்ஸின் ஷஸின்வத்ராவின் முழுமையான ஆலோசனைகளே பின்னணியில் இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது இதேவேளை, இலங்கையுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்ஸின் ஸின்வத்ரா, தற்போதைய தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஸின்வத்ராவின் சகோதரராவார். |
| எஜமானன் உயிரிழந்ததை அறிந்து உயிரை விட்ட குதிரை மனதை உருக்கும் நிகழ்வு Posted: 01 Mar 2012 07:35 AM PST கோவை : கோவை அருகே, நண்பர்களுடன் அணையில் விளையாடிய கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி இறந்தார். இவர், வீட்டில் பராமரித்து வந்த நடனக்குதிரை, மறுநாளே உயிரைவிட்டது. இவ்விரு நிகழ்வுகளும், மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் வசிப்பவர் செந்தில்முருகன்; மில் தொழிலாளி. இவரது இளைய மகன் மணிகண்ணன் (21); வி.எல்.பி., கல்லூரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி தனது கல்லூரி நண்பர்களுடன், தமிழக - கேரள எல்லையிலுள்ள வாளையார் அணையில் குளிக்கச் சென்றார். ஒவ்வொருவரும் போட்டி போட்டு அணையில் குளித்துக்கொண்டிருந்தபோது, மணிகண்ணன் மட்டும் வெகுநேரம் வரை வெளியே வரவில்லை. அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அருகிலிருந்த வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு துறையினர் வந்து மணிகண்ணனின் உடலை மீட்டனர். கல்லூரிக்குச் சென்ற மகன் பிணமாக மறுநாள் வீட்டுக்கு திரும்பியது கண்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர் பெற்றோர். உற்றார், உறவினர் கூடி அன்று மாலையில் உடல் அடக்க சடங்குகளை முடித்து வீட்டுக்கு திரும்பியபோது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்ணன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரித்து வந்த, நடனக் குதிரை மயங்கி கிடந்தது. கால்நடை டாக்டரை அழைத்து வந்து காண்பித்த போது, அதுவும் உயிரை விட்டிருந்தது. "தனது எஜமானன் உயிரிழந்ததை அறிந்து, இந்த குதிரையும் உயிரை விட்டுவிட்டதாகவே' பலரும் கருதி பரிதாபத்துடன் வேடிக்கை பார்த்துச் சென்றனர். இது குறித்து, மணிகண்ணனின் தந்தை செந்தில்முருகன் கூறியதாவது:நீரில் மூழ்கி இறந்த எனது மகன், படிப் பில் அக்கறை கொண்டவன். அதே வேளை யில், குதிரை வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டவன். அவனது விருப்பத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன் குதிரை வாங்கினோம். அதற்கு "புயல் ராணி' என பெயரிட்ட அவன், நடனமாடும் பயிற்சியையும் அளித்தான். கடந்த 2009ல் கேரள மாநிலம், கொல்லத்தில் நடந்த "டான்சிங் ஹார்ஸ்' (நடனக் குதிரை) போட்டியில் பங்கேற்ற எங்களது குதிரை, சிறப்பு பரிசு பெற்றது. அதே போன்று, முந்தைய ஆண்டுகளில் நடந்த போட்டியிலும் பல பரிசுகளை பெற்றது. குதிரை மீது மிகுந்த பாசம் வைத்து, பராமரித்து வந்தான். நீரில் மூழ்கி இறந்த மகனின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து வாசலில் வைத்திருந்தோம் (அருகில் குதிரை இருந்தது). நீண்ட நேரத்துக்கு பின் எடுத்துச் சென்று உடலை அடக்கம் செய்துவிட்டு திரும்பியபோது, வீட்டில் இருந்த குதிரையும் இறந்துவிட்டது. நல்ல திடகாத்திரமான நிலையில் இருந்த குதிரை திடீரென இறக்க வாய்ப்பே இல்லை. எது எப்படியோ, மகனின் இறப்புக்கும், குதிரையின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாகவே கருதுகிறோம்.இவ்வாறு, செந்தில்முருகன் தெரிவித்தார் |
| இலங்கைக்கு எதிராக தமது முடிவை மாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு Posted: 01 Mar 2012 07:35 AM PST இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஆதரவு தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வடக்கு,கிழக்கு மக்களால் ஜனநாயக முறைப்படி பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையில் தாம் இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட இலங்கை அரசினால் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்தும், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்தும், தமிழ்மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் அவர் இந்தக் கடிதத்தில் விரிவாக விளக்கியுள்ளார். போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறலகள் தொடர்பாக நம்பகமான குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கு அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள இரா.சம்பந்தன், இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு தருமாறும் கேட்டுள்ளார். |
| 2-வது உலகப்போரின் போது வெடிக்காத குண்டுகள் ஜப்பானில் கண்டுபிடிப்பு Posted: 01 Mar 2012 07:34 AM PST ஜப்பானின் ஒகினாலா நகரில் ஓட்டல் அருகே சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது.இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது மண்ணுக்குள் இரும்பு குண்டு கள் புதைந்து கிடந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்து பார்த்த அதிகாரிகள் இது வெடிகுண்டுகளாக இருக்கலாம் என சந்தேகப்பட்டனர். எனவே மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதித்த போது அவை வெடி குண்டுகள் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவற்றை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். மொத்தம் 902 குண்டுகள் பூமியில் இருந்து எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை. அவை 2-வது உலகப் போரின் போது ஜப்பான் மீது அமெரிக்கா வீசிய வெடிகுண்டுகளாகும். இந்த குண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் கிடந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக இடோமன் நகர சீனியர் போலீஸ் அதிகாரி ஜியோடாகா மேடோமரி தெரிவித்தார். ஏற்கனவே ஜப்பானில் இது போன்று பல இடங்களில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாகவும் அவர் கூறினார். |
| கிளி.கனகராயன்குளத்தில் உள்ள கமநல சேவைக் கட்டடத்தை மக்களிடம் கையளிக்கத் தயங்கும் பொலிஸார்! Posted: 01 Mar 2012 07:33 AM PST கிளிநொச்சி கனகராயன்குளத்தில் உள்ள கமநல சேவைகள் கட்டடத்தில் பொலிஸ் நிலையம் இயங்கி வருவதாகவும், இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியான கோரிக்கை வைத்தும் குறித்த கட்டிடத்தை மக்களிடம் கையளிக்க பொலிஸார் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கனகராயன்குளத்தில் மற்றொரு பகுதியை அபகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், கனகராயன்குளத்தில் பல இடங்களை இராணுவத்தினர் அபகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தனர். பொதுமக்களுக்குச் சொந்தமான மயானத்தில் இராணுவத்தினர் பாரிய படைத்தளத்தை அமைத்துள்ளனர். இது தொடர்பில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் மயானத்தை கையளிக்கும்படி மக்கள் தொடர்ச்சியான கோரிக்கை விடுத்து வந்த பொழுதும் படைத்தளம் அகற்றப்படவில்லை. அத்துடன் பாரிய புத்தர்சிலை ஒன்றை அமைக்கும் முயற்சியிலும் படையினர் ஈடுபட்ட பொழுது கனகராயன் குளப் பிரதேச மக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். புத்தர்சிலை அமைக்கவுள்ள இடத்தில் கம்பியினாலான மாதிரி புத்தர் சிலையையும் வெள்ளரச மரம் ஒன்றையும் படையினர் நட்டுள்ளனர். அதேவேளை கனகராயன்குளத்தில் உள்ள சில வீதிகளுக்கு சிங்களவர்களின் பெயர்களை சூட்டிமையும் பிரதேச மக்களால் விமர்சிக்கப்பட்டது. கனராயன்குளப் பிரதேசத்தின் மையத்தில் அமைந்துள்ள விவசாய நடவடிக்கைகளுடன் தொடர்புடைய கமநலசேவைகள் நிலையத்தின் கட்டிடத்தை மீளக் கையளிக்க இராணுவத்தின் உதவியுடன் பொலிஸார் மறுத்துள்ளனர். பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டி முயற்சிகளை மேற்கொண்ட பொழுதும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளம் பிரதேசத்தில் படையினர் தொடர்ச்சியாக இவ்வாறு மக்கள் இடங்களை அபகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. |
| நண்பன் படத்திற்கு இன்று 50-வது நாள்! Posted: 01 Mar 2012 07:33 AM PST மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்து வரும் டைரக்டர் ஷங்கரின் "நண்பன்" படம் கடந்த மாதம் ரிலீஸாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விஜய், இலியானா, ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், சத்யன் உள்ளிட்ட பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். படத்தில் இவர்களின் நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். முக்கியமாக நடிகர் சத்யனின் நடிப்பு மிகவும் பிரமாதமாக இருந்தது. ஹாரீஸ் ஜெயராஜ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் ஷங்கருக்கு இது தான் முதல் ரீமேக் படம். பாலிவுட்டில் அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி மற்றும் கரினா கபூர் நடிப்பில் வந்த "3 இடியட்ஸ்" படத்தினை ரீமேக் செய்திருக்கிறார் டைரக்டர் ஷங்கர். |
| மொபைல் புது வரவு நோக்கியா 2690 (Nokia 2690 mobile) Posted: 01 Mar 2012 07:33 AM PST சென்ற மாதம், நோக்கியா நிறுவனம் தன் நோக்கியா 2690 மாடல் மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ. 3,700. ஒரு பட்ஜெட் விலை போனில் தரப்படக் கூடிய அனைத்து வசதிகளையும் இந்த போன் கொண்டுள்ளது. நல்ல இளஞ்சிகப்பு, கிராபைட், நீலம் மற்றும் வெள்ளை சில்வர் வண்ணங்களில் இந்த போன் மாடல் கிடைக்கிறது. இதன் திரை 1.8 அங்குல அகலத்தில் இதன் வண்ணத்திரை அமைந்துள்ளது. இது 128 X 160 பிக்ஸெல்கள் கொண்டதாக உள்ளது. ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் எட்ஜ் தொழில் நுட்பம் கொண்டுள்ளது. எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம்.ரேடியோ உள்ளது. இதன் நினைவகம் 15 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதனை 8 ஜிபிக்கு உயர்த்தலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் சோஷியல் நெட்வொர்க் தள இணைப்புகளை இந்த போன் தருகிறது. இதனுடன் நோக்கியா லைப் டூல்ஸ் தரப்படுகிறது. இது பெரும்பாலும் கிராமப்புற மக்களுக்கு உதவிடும் கூடுதல் மதிப்பு சேவையாக இயங்குகிறது. இந்த போன் விலை அளவில் பல போன்கள் மார்க்கட்டில் இருப்பதால், விற்பனையில் சரியான போட்டியை சந்திக்க வேண்டியதிருக்கும். |
| பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிப்பு! தவறு என்கிறார் அமைச்சர் வாசுதேவ Posted: 01 Mar 2012 07:32 AM PST பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், நியமனத்தில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டமை பிழையான செயலாகும் என்று தேசிய மொழிகள் மற்றும் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்திற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 22 பேர் அண்மையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்த்தப்பட்டனர். இவர்களில் சிங்களவர்கள் 21 பேரும் ஒருவர் முஸ்லிமும் ஆவர். ஒரு தமிழரேனும் பதவியுயர்த்தப்படவில்லை. இது குறித்து கேட்டபோதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இது முற்று முழுக்க பிழையான செயற்பாடாகும். இப்பதவிக்கு தகுதியுள்ள தமிழ் பொலிஸார் விண்ணப்பித்துள்ளனர். அப்படியிருந்தும் அவர்கள் இணைத்துக் கொள்ளாமை அநீதியான செயலாகும். அத்தோடு இவ்வாறான செயற்பாடுகளால் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி பாதிக்கப்படும். மேலும் மேலும் இனங்களுக்கிடையேயான இடைவெளிகள் அதிகரித்தே செல்லும். எனவே இது தொடர்பில் உடனடியாக அரசாங்கத்திற்கு கடிதம் எழுதவுள்ளேன். என்றார். பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவில் அநீதி! தலையிட்டு தீர்வுகாண வேண்டும்!- மனோ கணேசன் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவில் தமிழ் அதிகாரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியில் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீபத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்ட பொலிஸ் அத்தியட்சர்களில் தமிழ் அதிகாரிகளுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களாக தெரிவு செய்யப்பட்ட 22 பேரில் 21 சிங்களவர்களும், ஒரு முஸ்லிமும் உள்ளடங்குகிறார்கள். இதில் ஒரு தமிழரும் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இன ரீதியான ஒதுக்கீடு என்பதைவிட, நேர்முகத்தில் தகுதியை பெற்ற தமிழ் அதிகாரிகளும் பின்தள்ளப்பட்டு, பெரும்பான்மை இனத்தைச் சார்ந்தவர்கள் தமிழர்களுக்கு உரிய இடங்களிலும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நான் அறிந்துள்ளேன். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சர் என்ற முறையிலும், பெரும்பாலும் சிங்களமயமாக இருக்கின்ற பொலிஸ் துறையில் தமிழர்களுக்கு உரிய இடத்தை பெற்றுத் தரப்போவதாக அடிக்கடி தமிழ் ஊடகங்களில் சொல்லி வருபவர் என்ற முறையிலும் இதில் உடனடியாக நீங்கள் தலையிட வேண்டும். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மனோ கணேசன் கூறியதாவது, உண்மையில் இன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தமிழ் பேசும் அதிகாரிகளுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் உரிய தகுதி இருந்தும் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்பது அநீதிகரமானது. எனவே, தமிழர்களுக்கு உரிய நியமனங்களை வழங்க முடியாவிட்டால் சொல்லிவிட வேண்டும். அதற்காக அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என நடைமுறையாகாத வாக்குறுதிகளை அரசாங்கம் வாரி வழங்கக்கூடாது. எனது கருத்துக்களையும், கடும் அதிருப்தியையும் அமைச்சர் வாசுதேவாவுக்கு நேற்று காலை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியுள்ளேன். எனது கருத்துக்களை ஏற்றுக்கொண்ட அவர் உடன் இதில் தலையிடுவதாக உறுதி அளித்துள்ளார். |
| ஆணியினால் வரையப்பட்ட வினோத ஓவியம் (வீடியோ இணைப்பு) Posted: 01 Mar 2012 07:31 AM PST வித்தியாசமான கலையினை வெளிப்படுத்தும் கலைஞர்களின் மத்தியில் Brusspup என்பவர் 40,000 push pin-களை கொண்டு அசத்தும் ஓவியமொன்றை உருவாக்கி பிரபலமடைந்துள்ளார். மேலும் இவ்வாறான ஓவியத்தினை உருவாக்குவதற்கு இவர் ஒரு மாதம் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
| இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோயை விரட்ட வழி Posted: 01 Mar 2012 07:31 AM PST இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோயை விரட்ட செர்ரி பழ ஜூஸ் உதவும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நியூயார்க்கிலுள்ள ரோசஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக டெய்லி மெயில் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிக்கும் நோய் ஏராளமானோருக்கு உண்டு. வயதானவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்த நோய் உண்டு. இந்த நோய் இன்சோம்னியா என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயை விரட்டுவதற்கு செர்ரி பழ ஜூஸ் போதும் என்கிறார் ரோசஸ்டர் பல்கலைக்கழக பேராசிரியரும், உளவியல் நிபுணருமான டாக்டர் வில்பிரட் பிஜியான். இந்த ஆய்வு இவர் தலைமையில்தான் நடந்தது. இதுகுறித்து வில்பிரட் கூறியதாவது: இன்சோம்னியா நோயால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார். அப்படியே தூக்கம் வந்தாலும் விரைவில் எழுந்துவிடுவார்கள். வயதானவர்களில் 4-ல் ஒருவருக்கு இந்த நோய் கட்டாயம் இருக்கிறது. அவர்களுக்கு செர்ரி பழ ஜூஸை ஒரு நாளைக்கு இரு முறை கொடுக்கும்போது அந்த நோய் குணமாகிவிடுகிறது. தொடர்ந்து இதைச் செய்யும்போது அவர்களுக்கு நல்ல தூக்கம் வருவது எங்கள் ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. காலையிலும், மாலையிலும் இந்த ஜூஸை அவர்கள் குடிக்கவேண்டும். இதில் இனிப்பு சேர்க்கக்கூடாது. செர்ரி பழத்தில் உள்ள மெலடோனின் சத்து, உடலிலுள்ள ஹார்மோனை முறைப்படுத்தி தூக்கத்தை முறையாக உடலுக்கு வழங்குகிறது. பகலில் உழைப்பு, இரவில் தூக்கம் என்ற சுழற்சியை அந்த ஹார்மோன் ஏற்படுத்த ஜூஸ் உதவுகிறது. நவீன காலத்தில் இன்சோம்னியா நோயை குணப்படுத்துவது என்பது மிகப் பெரிய சவாலாகும். அந்த சவாலை நிறைவேற்ற செர்ரி பழ ஜூஸ் உதவுகிறது. இந்த ஆய்வை நாங்கள் 2 கட்டமாக மேற்கொண்டோம். முதல் கட்டத்தில் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு காலை, மாலை இரு வேளையிலும் செர்ரி பழ ஜூஸை கொடுத்தோம். 2-வது கட்டத்தில் அதே நபர்களுக்கு வேறு பழ ஜூஸை கொடுத்து ஆய்வு செய்தோம். செர்ரி பழ ஜூஸ் குடிப்பவர்கள் சராசரியாக 17 நிமிடங்கள் அதிகம் தூங்குவது தெரியவந்தது என்றார் அவர். இந்த ஆய்வு குறித்து மெடிசனல் ஃபுட் என்கிற பத்திரிகையில் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. |
| ஐ.நா.சபை இந்திய ராணுவ அதிகாரி மீது “செக்ஸ்” புகாரை விசாரணை செய்ய நடவடிக்கை Posted: 01 Mar 2012 07:30 AM PST ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டில் ஐ.நா.சபையின் அமைதிப்படை முகாமிட்டுள்ளது. அந்த படையில் இந்திய ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் உள்ளனர். இந்த நிலையில் இந்திய ராணுவ மேஜர் கும்மன் மீது செக்ஸ் புகார் கூறப்பட்டுள்ளது. கடந்த 6-ந் தேதி அங்குள்ள வடக்கு கிவு மாகாணத்தில் ஒரு மதுக்கடைக்கு விபசார அழகிகளுடன் சென்று இருந்தாராம். அவருடன் துணியாவை சேர்ந்த ராணுவ கண்காணிப்பாளரும் இருந்தார். இதுகுறித்து ஐ.நா. சபை பொது செயலாளர் பான்கிமுன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இவர் மீது கூறப்பட்டுள்ள செக்ஸ் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு ராணுவ மந்திரி ஏ.கே. அந்தோணியும் உத்தரவிட்டுள்ளார். செக்ஸ் புகாரில் சிக்கிய ராணுவ அதிகாரி காங்கோ நாட்டில் இருந்து விரைவில் இந்தியா திரும்ப உள்ளார். ஏற்கனவே 3 பேர் இதே குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். தற்போது இக்குற்றச்சாட்டில் சிக்கிய இவர் 4-வது இந்திய ராணுவ அதிகாரி ஆவார். |
| அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார்: இலங்கைப் பிரதிநிதிகள் Posted: 01 Mar 2012 07:30 AM PST ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் அரச சார்பற்ற நிறுவனங்களின் அழுத்தங்களை எதிர்நோக்கத் தயார் என இலங்கைப் பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர். இன்று முதல் எதிர்வரும் 19ம் திகதி வரையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் அமர்வுகளில் தமது கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக சில அரச சார்பற்ற நிறுவனங்கள் குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சி எடுத்து வருவதாகவும், இதனை முறியடிக்க அரசாங்கப் பிரதிநிதிகள் ஆயத்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் உரையைத் தொடர்ந்து பல நாடுகள், இலங்கை தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| உலக கோப்பை கால்பந்து போட்டியில் இருந்த ஆக்டோபசை ஸ்பெயினுக்கு விற்க ஜெர்மனி மறுப்பு Posted: 01 Mar 2012 07:29 AM PST சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடந்தது. இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என உலகம் முழுவதும் பலவித ஆரூடங்கள் மூலம் கணிக்கப்பட்டது. ஜெர்மனியில் உள்ள ஓபர் கோஷன்ஸ் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத்தில் உள்ள பால் ரோஸ் என்ற ஆக்டோபஸ் ஆரூடம் சொன்னது. அதன்படி தொடர்ந்து 7 போட்டிகளில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. ஆனால், அரை இறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதும் ஸ்பெயின் வெற்றி பெறும் என கணித்தது. அதன்படி ஸ்பெயின் அணி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. தங்களது சொந்த நாட்டு அணிக்கு எதிராக ஆரூடம் சொன்ன ஆக்டோபசை வறுத்து சாப்பிட விரும்புவதாக ஜெர்மனி மக்கள் ஆத்திரத்துடன் தெரிவித்தனர். ஆனால் தங்களுக்கு சாதகமாக ஆரூடம் தெரிவித்த பால்ரோஸ் ஆக்டோபசுக்கு பாதுகாப்பு அளிக்க ஒரு குழுவை ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயிஸ் அனுப்பி வைத்தார். இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை ஸ்பெயின் வெற்றி கொள்ளும் என்று இந்த ஆக்டோ பஸ் கூறியது. அதன்படியே ஸ்பெயின் வென்று கோப்பையை கைப்பற்றியது. இதனால் ஸ்பெயின் மக்களிடம் பால்ரோஸ் ஆக்டோபஸ் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. எனவே அந்த ஆக்டோபசை ரூ.20 லட்சத்துக்கு வாங்க ஸ்பெயின் நாட்டு வியாபாரி விரும்பினார். ஆனால் அதை விற்க ஜெர்மனியின் ஒயர்ஹீசேன் கடல் வாழ் உயிரின அருங்காட்சியகம் மறுத்து விட்டது. இதை தொடர்ந்து பால்ரோஸ் ஆக்டோபசை தங்கள் கவுரவமிக்க நண்பன் என ஸ்பெயின் மக்கள் அங்கீகரித்துள்ளனர். |
| நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இராணுவம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்: ஜகத் ஜயசூரிய Posted: 01 Mar 2012 07:28 AM PST தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வழங்கிய ஒத்துழைப்பைப் போன்றே, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும் இராணுவம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய அறிவித்துள்ளார். நாட்டின் சுபீட்சத்திற்காக என்றென்றும் பாடுபட இரைணுவத்தினர் தயார் எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாதம் மீண்டுத் தலைதூக்குவதற்கு அனுமதியளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சும் பரிபூரண ஆதரவளித்து வருகின்றது என இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். |
| மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வா! Posted: 01 Mar 2012 07:28 AM PST வாஷிங்டன் : அரபு நாட்டைச் சேர்ந்த பெண், முதல் முறையாக மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டார். அவர் மதுபான பாரில் டான்ஸ் ஆடியவர் என பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனால், மிஸ் யு.எஸ்.ஏ.,விற்கு சிக்கலோ சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டில் பிறந்தவர் ரீமா பாக்கி(24). இவர், தற்போது மிஸ் யு.எஸ்.ஏ., (அமெரிக்கா)வாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவர் தேர்வு செய்யப்பட்ட மறுநாளே அங்குள்ள பத்திரிகைகள் அவரை தேர்வு செய்தது குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றன.அவர் ஏற்கனவே மதுபான பாரில் ஒவ்வொரு ஆடையாக களைந்து முடிவில் நிர்வாணமாக ஆடும் போல் டான்சராக இருந்தவர் என்பது தான் பத்திரிகைகளின் கோபத்திற்கு காரணம்.இதுகுறித்து அங்குள்ள டெய்லி மெயில் உட்பட பல நாளிதழ்களும் படத்துடன் செய்தி வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்துள்ளன. இவர், 2007ம் ஆண்டு டெட்டராய்ட் நகரில் நடந்த ஸ்டிரீப் டான்சில் பங்கேற்ற படங்கள் தான் வெளியாகி உள்ளன. இதையடுத்து பத்திரிகைகளின் கண்டனம் குறித்து தேர்வு கமிட்டி ஆய்வு செய்து வருகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் உலக அழகிப் போட்டியில் அமெரிக்கா சார்பில் ரீமா பங்கேற்பது சிரமமானதாகி விடும். இவ்வாண்டு லாஸ்வேகாஸ் நகரில் நடக்க இருக்கும் அழகிப் போட்டியிலும் அமெரிக்கா சார்பாக ரீமாவை அனுப்புவது இயலாததாகி விடும்.மிஸ் யு.எஸ்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்ட அவருக்கு வைரம் பதித்த கிரீடமும், நியூயார்க் நகரில் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பில் சகல வசதிகளுடன் கூடிய வீடும், உதவித் தொகையும், சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது.லெபனான் நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய அவரது பெற்றோர், டயர்போன் நகரில் வசித்து வருகின்றனர். |
| கர்ப்பிணிகளே கவனம்!: தாயின் நோய் சேயை பாதிக்கும் Posted: 01 Mar 2012 07:27 AM PST கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் வளரும் கரு என்பது மென்மையான பூ போன்றது. அதை அழகாக பாதுகாப்பாக பெற்றெடுக்க வேண்டியது ஒரு தாயின் கடமை. மிதமான வேலை, மிதமான நடை, மிதமான உடற்பயிற்சி, அமைதியான மனநிலையே ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் படியாகும். கருவை பாதிக்கும் தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும். ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும். சளி பிடிக்கக் கூடாது கருவுற்ற பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்ப்பது நல்லது. குளிர்ந்த காற்று, வாடைக்காற்று, பனிக்காற்று வீசும் இடங்களில் நிற்கக் கூடாது. சன்னல் ஓரம் அதிக நேரம் நிற்கக் கூடாது. மழையிலோ, மழைச் சாரலிலோ நனையக் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம் சூடான நீரில் குளித்து உடலையும் தலையையும் நன்கு துடைக்கவேண்டும். காய்ச்சி ஆறவைத்த நீர் கர்ப்பிணிகள் எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரைப் பருகுவது நல்லது. அதிக தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதற்காக ஒரே நேரத்தில் குடிக்கக்கூடாது . சிறிது இடைவெளி விட்டு குடிக்கவேண்டும். அதிக சூடான நீரையோ, குளிர்சாதனப் பெட்டியில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இதனால் சளிப் பிடிக்காமல் தவிர்க்கலாம் கருவுற்ற பெண்ணுக்கு சளிப் பிடித்தால் அது கருவில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கும். உணவு அவசியம் கருவுற்ற பெண்கள் சிலபேர் குமட்டல் வாந்தி காரணமாக உணவை தவிர்ப்பார்கள். அப்படி தவிர்ப்பதால் குழந்தைக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போகும். கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு அருந்த வேண்டும். உணவு உண்டவுடன் தூங்கக் கூடாது. சற்று ஓய்வெடுத்தாலே போதுமானது. முடிந்தவரை பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது நல்லது. அதிக காரம், புளிப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்ண வேண்டும். தொலைக்காட்சியை தவிர்க்கலாம் மழை, இடி, மின்னல் ஏற்படும் போது வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.அதுபோல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மூச்சு திணறும் அளவு மக்கள் நெருக்கடி உள்ள திருவிழா, கடை வீதிகளுக்கு செல்வது நல்லதல்ல. தொலைக்காட்சியை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மனதைப் பாதிக்கும் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். பாடல்கள் கேட்கலாம் கர்ப்ப காலத்தில் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும். சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் . கோபப்படாமல் பொறுமையுடன் இருத்தல் மிக முக்கியமானது. பிரியமானவர்களுடன் நன்கு மனம் விட்டு சிரித்து பேச வேண்டும். அதிக சப்தம் போட்டு பேசுவதால் வயிற்றில் உள்ள கருவிற்கு சில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இரவு நேரங்களில் அதிக வெளிச்சமில்லாத பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். நல்ல பாடல்களை அதாவது மனதிற்கு அமைதி தரக் கூடிய பாடல்களை கேட்க வேண்டும் . குழந்தை வயற்றில் இருக்கும் பொழுது கேட்க பட வேண்டிய சில பாடல்களை கேட்கலாம். இதன் மூலம் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் சிந்திக்கும் ஆற்றலுடன் பிறக்கும். சத்து மாத்திரைகள் சத்து மாத்திரைகளை நேரடியாக உபயோகிக்கக் கூடாது. கீரைகள், பழங்கள், தானியங்கள் காய்கறிகள் போன்றவற்றில் தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சத்து மாத்திரைகளை உபயோகித்தால் அவை சில நேரங்களில் தாயின் உடல் சமநிலைப்பாட்டை மாற்றி கருவில் உள்ள குழந்தையை பாதிக்க ஆரம்பிக்கும். இதனால் குழந்தைகள் பிறந்து சில நாட்கள் நன்றாக இருந்து பின்பு பாதிப்பை ஏற்படுத்தும். சில குழந்தைகளுக்கு உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். மதிய உணவில் ஏதாவது ஒரு கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிக சூடு, அதிக குளிர்ச்சி தரும் பழங்களைத் தவிர்த்து மற்ற பழங்களைச் சாப்பிடுவது நல்லது. |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |












