தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- என்னுடைய கணிபொறியின் IP அட்ரசில் வேறு ஒரு கணிப்பொறி உள்ளதாக வருகிறது
- உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி)
- நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)
- நடிகை நமீதா - ஆல்பம்
- புகைப்படங்களை ஐகான்களாக மாற்றும் பயனுள்ள இணையத்தளம்
- எருமைத் தமிழர்கள்
- சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள்
- நீயா நானா - ஆதிரா அக்காவின் செல்வங்களுடன் (காணொளி இணைப்பு )
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர்
- டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள்
- அல்குர்ஆன் தமிழ் உரை - மின்னூல்
- ஈகரை இணையப் பகுப்பாய்வியல் முற்றிலும் தமிழில்! - Eegarai Web Analytics
- உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி
- மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள்
- இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம்
- எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ?
- காதலர் தின மடல்.
- அந்தப் பழைய நான்...
- நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது.
- mydocuments
- கடவுளிடம் பேசுகிறேன் நான் !
- மொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்!
- ஹைக்கூ கவிதைகள்
- சரித்திர நாயகி!!!
- ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்!
- நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே!
- Sunday mass.. மனதிலே பதிந்தவை.....
- யார் தீவிரவாதி
- நான் வடித்த சில -3
- நன்னாரி ( மூலிகை ) வேர்
- முத்து (பற்கள்) நம் சொத்து!
- இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ?
- பார்வையற்றோரும் பார்க்கும் விதத்தில் வெப் சைட்
- இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா?
- சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின்
- அவளில்லாமல்............
- ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம்.
- புகழ் பெற்ற சில நூல்களும் அவற்றை எழுதியோரும்.
- 12000 பதிவுகளை கடந்த ரேவதி அக்காவை வாழ்த்தலாம் வாங்க ...
- மழைக்குப் பின்
- மேகங்கள்' பற்றி
- ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்
- பி.எச்.இ.எல்., நிறுவன பணிவாய்ப்பு
| என்னுடைய கணிபொறியின் IP அட்ரசில் வேறு ஒரு கணிப்பொறி உள்ளதாக வருகிறது Posted: 28 Feb 2012 06:30 PM PST என்னுடைய கணிபொறியின் IP அட்ரசில் வேறு ஒரு கணிப்பொறி உள்ளதாக வருகிறது இதற்கு என்ன செய்வது என்று சொல்லுகள் ![]() |
| உண்மையான வேற்றுக்கிரக விமானம்: உலகமே அதிர்ச்சி ! (காணொளி) Posted: 28 Feb 2012 06:28 PM PST இதுவரை தாம் பல வேற்றுக்கிரக மனுதனர்களைக் கண்டதாகவும், அவர்கள் பறக்க பாவிக்கும் மானங்களையும் தாம் கண்டதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். பல வீடியோக்களும் வெளியாகியுள்ளது. இருப்பினும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோ உலகையே அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது. இக் காணொளியானது உண்மையாகப் படமெடுக்கப்பட்டது என அதனைப் பகுப்பாய்வுசெய்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இனி முடிவை நீங்களே எடுங்கள். நன்றி: பதிவு |
| நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்) Posted: 28 Feb 2012 05:55 PM PST வணக்கம் நண்பர்களே, நுண்ணறிவுத் தகவல்கள் பகுதியில் அடுத்து நாம் இங்கே காண இருக்கும் பகுதி அணுசக்தி ஆகும். இது இந்த கால கட்டத்திற்கு மிகவும் தேவையான மற்றும் அறிய வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்காது. அணுசக்தி எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதன் தேவைகளையும், அதன் விளைவுகளையும் நாம் இங்கே காண இருக்கிறோம். இதில் உங்களுக்கு எழும் ஐயங்களை தயங்காமல் கேட்கும் போதுதான் இந்த திரி முழு வெற்றியடையும். என்னால் இயன்றவரை இங்கே பதில் அளிக்கிறேன். அண்ணன் சதாசிவம் அவர்கள் கண்டிப்பாக ... |
| Posted: 28 Feb 2012 05:52 PM PST ![]() |
| புகைப்படங்களை ஐகான்களாக மாற்றும் பயனுள்ள இணையத்தளம் Posted: 28 Feb 2012 04:54 PM PST பல்வேறு போர்மட்டுகளில்(PNG, JPG, GIF, BMP) உள்ள புகைப்படங்களை ICO என்ற ஐகான் போர்மட்டுகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது. கீழே தரப்பட்டுள்ள லிங்கில் சென்று தளத்தை ஓபன் செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse என்பதை கிளிக் செய்து உங்கள் கணணியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும். பின் Convert Now ow என்பதை கிளிக் செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும். இந்த தளம் விண்டோஸ் 7 இற்கு ஏற்ற ... |
| Posted: 28 Feb 2012 04:31 PM PST எருமைத் தமிழர்கள் தமிழனுக்கு இரும்புக்காது என்றார் பாரதியார். காது மட்டுமின்றித் தோலும் எருமைத் தோல் தான்! எத்தனைக் கடுமையாக அடித்தாலும் இடித்தாலும் அவனுக்கு உறைக்காது. அருமைத் தமிழர்கள் மொழித் துறையில் இன்று எருமைத் தமிழர்கள் ஆகிவிட்டார்கள்! இதைக் குறிக்கத்தான் இந்நூலுக்கு எருமைத் தமிழர்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆசிரியர்: முனைவர் இரா.திருமுருகன் தரவிறக்கம் செய்ய: |
| சிங்கள அரசு போர்க்குற்றம் புரியவில்லை என்னும் தமிழர்கள் Posted: 28 Feb 2012 01:42 PM PST சிங்கள அரசு போர்க் குற்றம் புரியவில்லை என்று மன்னார், வன்னி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் ஆர்பாட்டங்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் பங்கேற்றவர்களுடைய பின்னணி தெரியவில்லை ஆனால் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சிறீலங்காவில் போர்க் குற்றம் நடைபெறவில்லை என்று கூறுவோர் கொடும்பாவியும் எரித்தனர். இவர்கள் எல்லாம் தமிழர்களா? சிங்கள ஆதரவாளர்களா? என்பது ... இதுவரை தெரியவில்லை....... |
| நீயா நானா - ஆதிரா அக்காவின் செல்வங்களுடன் (காணொளி இணைப்பு ) Posted: 28 Feb 2012 12:36 PM PST நன்றி ; விஜய் டிவி , தமிழ் டிவி ஷோஸ் வலை |
| நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர் Posted: 28 Feb 2012 12:17 PM PST நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா ... |
| டீன் ஏஜ் பருவத்தை கையாள்வதற்கான வழிமுறைகள் Posted: 28 Feb 2012 12:14 PM PST டீன் ஏஜ் பருவம் மனதை கட்டுக்குள் வைத்து கொள்ள முடியாத பருவம். டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போது பெண்களின் உடல் நிலையில் மட்டுமல்லாது மன நிலையிலும் பல மாற்றங்கள் ஏற்படும். வழக்கமான நடத்தையிலிருந்து வேறுபட்டு காணப்படுவார்கள். ஏதேனும் சிறு விஷயத்திற்கும் பெற்றோர்களிடம் அதிகமாக கோபப்படுவார்கள். அதிகமாக குடும்பத்துடன் எதிலும் கலந்து கொள்வதில்லை. டீன் ஏஜ் வயதினரை கையாளுவதில் சில வழி முறைகள் உள்ளது. டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போதே அவர்களுக்கான மன அழுத்தம் அதிகரிக்க ஆரம்பிக்கின்றது. டீன் ஏஜ் பருவத்தில் ... |
| அல்குர்ஆன் தமிழ் உரை - மின்னூல் Posted: 28 Feb 2012 12:01 PM PST அல்குர்ஆன் தமிழ் உரை மொழிபெயர்ப்பு: ஹாஜி முஹம்மது ஜான் லிட்டரி & ரூசாரிட்டபிள் ட்ரஸ்ட் தரவிறக்கம் செய்ய: |
| ஈகரை இணையப் பகுப்பாய்வியல் முற்றிலும் தமிழில்! - Eegarai Web Analytics Posted: 28 Feb 2012 11:48 AM PST |
| உலக சாதனையை முறியடித்த இந்தியா பெண்மணி Posted: 28 Feb 2012 10:13 AM PST இந்தியா பெண்மணி ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகளை பெற்றெடுது உலக சாதனையை முறி அடிதுள்ளார் முகநூலில் நான் கண்டெடுதது |
| மனித மனம் / மதம் படைத்த இருவரின் உரையாடல்கள் / சாடல்கள் Posted: 28 Feb 2012 09:55 AM PST கொலவெறி: சிஷ்யா என்ன இன்னிக்கு உன் அறிவுக் கண் ஆப் ஆயி கெடக்கு? பகவதி: குருவே நேத்து ரெண்டு ஆப் பாயில் சாப்டதில ஆப் ஆயி கெடக்கு கொலவெறி: சிஷ்யா அப்ப புல்லா சாப்பிட்டா? பகவதி: குருவே பாய அந்தாண்ட தள்ளிட்டு தரைய பிராண்டுவேன் பகவதி: குருவே எனக்கு ஒரு சந்தேகம் கொலவெறி: (ஆரம்பிச்சுட்டான்டா அன்டர்வேர உருவ - மைன்ட் வாய்ஸ்) கேளு சிஷ்யா பகவதி: குருவே உங்க எதிர்ல ஒரு மதம் கொண்ட யானை ஒன்னு உங்கள தாக்க வருது இன்னொரு பக்கம் மதம் கொண்ட மனுஷன் மதவெறி பிடித்து சமூகத்த தாக்க வருகிறான் இப்ப ... |
| இந்தியா அபார வெற்றி- கோஹ்லி அதிரடி சதம் Posted: 28 Feb 2012 09:50 AM PST 37 ஓவர்களில் இந்தியா வெற்றி , bonus point கிடைதுள்ளது |
| எனக்கு விருப்பம் இல்லை - என்னோடு வந்து விடுகிறாயா அம்மா ? Posted: 28 Feb 2012 09:31 AM PST அம்மா...! அம்மா... அ...! அம்மா... ஆ...! எனது குரல் உனக்குக் கேட்கிறதா அம்மா? உன்னை இப்படி அழைத்துப் பார்க்க வேண்டும் என்பது எனது நீண்ட கால ஆசை அம்மா! அதனால் தான் அழைத்துப் பார்த்தேன்! அதற்காக நீ என் வீட்டிற்கு வந்து விடலாம் என்று நினைத்து விடாதே! நான் உனது வயிற்றில் பிறந்த முதல் குழந்தை என்றாலும்... எனது இயலாமையை நினைத்து நான் உனக்காக வருந்துகிறேன் அம்மா...! என் உடன் பிறந்த தம்பிகள் இன்று உன்னை அனாதையாக்கி விட்டார்களா அம்மா? இருந்தாலும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருந்திருக்கும்...! ஆனால், ... |
| Posted: 28 Feb 2012 09:31 AM PST ஹாய், இன்று காதலர் தினம். உண்மையான காதலர்க்கு என்றுமே காதலர் தினம் தான். அவர் மனங்களில் வினாடிக்கு வினாடி ஊற்றெடுக்கும் அன்பை, ஒரு பெப்ரவரி 14 இற்குள் அடக்கி விட முடியுமா என்ன?. ஆன போதிலும் மனதைப் பிழிந்து, உணர்வெனும் மை எடுத்து பரஸ்பர அன்பை காகிதமாக்கி மடலொன்று வரைகிறேன், என் மனதிற்கினிய உனக்கு. அதற்கு முன்னதாய் ஒன்று..................., இந்த வாழ்த்து மடலுடனும், இதய சிம்பலுடனும், முடிந்து விடும் அத்தியாயம் அல்ல காதல். அது ஒரு ஜீவ கானம். வாழ்க்கைத் தந்தியை மீட்டும் போதெல்லாம், சந்தோஷ ... |
| Posted: 28 Feb 2012 08:59 AM PST இப்போதுதான் பிறந்தக் குழந்தை என்றாலே பிடிக்காதெனக்கு கர்ப்பிணிப் பெண்களா? 'யப்பா... போதும்' மனோபாவத்தில் தூர தேசத்திலேயே தொலைத்துக்கொள்வேன் என்னை பிரசவ நேரத்துக் கவிச்சி வாடையிலிருந்து நாடு கடத்திவிடுவேன் நாசியை பெண்ணோ?ஆணோ? எதுவாயிருந்தாலென்ன... இப்போதுதான் பிறந்த குழந்தை என்றாலே பிடிக்காதெனக்கு எல்லாம் பத்து மாதங்களுக்கு முன்வரைதான் உன்னை மனசுப் பற்றிய நாள்முதல் உன் மல்லிகையும் ரோஜாவும் சாமந்தியும் என் மீது வர்ணமடித்தது இரண்டு மாத காலம்தான் மூன்றாவது ... |
| நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு. இனிதே நிறைவடைந்தது. Posted: 28 Feb 2012 08:18 AM PST தமிழ் மொழி நீதி நூல்களுக்கு பெயர் பெற்றது. பதினென்கீழ் கணக்கு நூல்கள் மட்டுமல்லாது நீதி கூறும் நூல்கள் ஏராளம் இங்கு உள்ளது. மனிதன் மனிதனாக வாழ ஒழுக்கம் அவசியம், ஒழுக்கம் தவறி பிறருக்கு துன்பம் விளைவிக்கும் போது மக்களாகிய மனிதன் மாக்களில் கலந்து விடுகிறான். இன்று உயர் நிலையில் இருக்கும் பல நாடுகள் நாகரீகம் என்றால் என்ன என்று தெரியாத காட்டுமனிதர்களாக வாழ்ந்த காலத்தில் நாம் நாகரீகத்தின் உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்பதற்கு இப்படி உள்ள தமிழ் நூல்களே சான்று. இப்படி நீதி கூறும் பல நூல்களில் ... |
| Posted: 28 Feb 2012 08:12 AM PST என்னுடைய கணினியில் ஃபார்மட் செய்த பிறகு my-டாக்குமென்ட் -இல் உள்ளது மட்டும் எடுக்க வரவில்லை. இதை எடுக்க வழி இருக்கிறதா? தெரிந்தவர் உதவுங்கள் |
| Posted: 28 Feb 2012 08:10 AM PST பேருந்து நடத்துனர்- அரசு ஊழியர் சம்பாதித்த சில்லரைக் காசு சட்டைப்பையில் சேகரித்த கட்டணக் காசு தோள்பையில் சோற்றுக்கும் சாற்றுக்கும் ருசிவேண்டா பசிக்காசு செல்லும்போது அறியாப்பெற்ற செல்லாக் காசு அத்தனை காசுகளும் அவனுக்காகவே செலவாக ஆச்சர்யம் ! பற்றா சில்லறைக்கு பட்டெனதந்த தன்காசால் பக்குவமாய் பேசிபின் ஈடாகும் பொதுக்காசு ! அரசியல்வாதி- அரசு ஊழலர் ஒருகையில் சுயமாய் சம்பாதித்த காசு மறுகையில் நம்பிக் கொடுக்கும் பொதுக்காசு ஓட்டுக்கும் வேட்டுக்கும் காலில்விழும் காசு ஓட்டுக்காக வேட்டிசேலைக்கும் ... |
| மொபைலின் பேட்டரி திறனை அதிகரிக்க சில வழிகள்! Posted: 28 Feb 2012 07:28 AM PST நீங்க புதுசா ஒரு மொபைல் வாங்கப்போறீங்கன்னா முதல்ல நீங்க எந்த மாடல் மொபைலை எடுத்தாலும் அதோட பேட்டரி திறன் எவ்ளோன்னு கண்டிப்பா பாருங்க 2" அங்குல திரை உள்ள எல்லா மல்டிமீடியா வசதிகளும் இருக்குற ஒரு மொபைலுக்கு குறைஞ்சது 1000 mAh திறன் கொண்ட பேட்டரி இருக்கான்னு செக் பண்ணிக்கிறது ரொம்ப முக்கியம். இந்த 'அளவுகுறியீடு' பேட்டரியோட பின்பக்கத்துல கண்டிப்பா போட்டுருப்பாங்க. அதுல பாத்து நீங்க தெரிஞ்சிக்கலாம். ஏன்னா குறைஞ்சது இந்த அளவுல பேட்டரிதிறன் இருந்தா தான் நீங்க பாட்டு கேக்குறது, இன்டர்நெட்ல பண்ணுறது,வீடியோ ... |
| Posted: 28 Feb 2012 07:23 AM PST தெருவிளக்கு: மழைவிட்ட நேரம் தேங்கிய நீரில் முகம் பார்த்தது தெருவிளக்கு.. -------------------------------------------------- அளவீடு: நீந்தி நீந்தி சோர்ந்து விட்டது தொட்டியை அளவெடுக்கிறது மீன்தொட்டியில் தங்கமீன்! ----------------------------------------------------- தேசிய கீதம்: அரசியல்வாதிகளை நாற்காலியை விட்டு எழச் செய்து விடுகிறது தேசிய கீதம்! ----------------------------------------------------- மாற்றம்: வசந்த காலம் வேலையின்றிக் கிடக்கிறது பனைவிசிறி... ---------------------------------------------------------- உழைப்பு: விடிய ... |
| Posted: 28 Feb 2012 07:21 AM PST என்னவளே ! நாம் இணைந்தால் இவ் உலகம் நம்மை தவறாக பேசும் என்ற அச்சமோ! அச்சத்தை விடு சரித்திரம் நம்மை பற்றி பேச காத்து இருக்குதடி!!.... காத்திரு சரித்திரம் படைக்க!!! படைத்த இறைவனிம் விதியை நம்பினேன்... ஆனால் இப்போது புது விதியை கிறுக்க தயாராகி விட்டேன்!!!... புத்துணர்ச்சியுடன் என் கைகளுடன் இணை... புது புரச்சியோடு நாம் இணைவோம் நம் தரித்திர வாழ்க்கையை சரித்திர வாழ்க்கையாக மாற்றுவோம்!!!!.... |
| ஆகாஸுக்கு போட்டியாக 3499/- விலையில் BSNL டேப்லேட்! Posted: 28 Feb 2012 07:16 AM PST இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது பல்வேறு புதிய சலுகைகளுடன் கூடிய சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் மொபைல் சந்தையில் வேகமாக பிரபலமாகி வரும் டேப்லேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு RS 3499/- என்ற மிகக் குறைந்த விலையில் நொய்டாவைச் சேர்ந்த Pantel Technologies என்ற நிறுவனத்துடன் இணைந்து தருகிறது. உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை கனடாவைச் சேர்ந்த UBISLAT என்ற நிறுவனம் "ஆகாஷ்' என்ற பெயரில் இந்தியாவில் வெளியிட்டது. ... |
| நடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே! Posted: 28 Feb 2012 07:13 AM PST இப்பவெல்லாம் பிடிச்சு வைச்ச பிள்ளையார் போல இருந்த இடத்திலே இருந்துகொண்டே எல்லாம் நடைபேசியால நடத்திறாங்களே! சும்மா சொல்லக் கூடாது முந்த நாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காழான் போல சிறுசுகளும் கட்டையில போகவுள்ள கிடு கிடு கிழங்களும் அட அட ஆளுக்காள் வேறுபாடின்றிக் கையிலே காவுறாங்க நடைபேசி! பாட்டிக்குச் சுகமில்லை - ஒரு வாட்டி மருத்துவரிடம் சொல்ல உங்க நடைபேசியால பேசட்டுமா என்றெல்லோ சிலரைக் கேட்டுப் பார்த்தேன்... அலைஎல்லை(Coverage) இங்கில்லாத இணைப்பிது நானும் மாற்றான் நடைபேசிக்கு ... |
| Sunday mass.. மனதிலே பதிந்தவை..... Posted: 28 Feb 2012 07:08 AM PST எமது சகோதரர்களை நாம் உளமார நேசிக்க வேண்டும். கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்று பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கக்கூடாது. அத்தோடு மற்றவர்களை மன்னிக்கும் மனமும் கொஞ்சமாவது நம்பும் குணமும் அவசியம். கோபம், விரோதம், பழிவாங்கும் எண்ணம், ஏட்டிக்குப்போட்டியான மனம், நீண்ட காலப்பகையுணர்வு, தற்பெருமை, எகத்தாளமான பேச்சு, இப்படியான உணர்வுகளால் மனம் அலைக்கழிக்கப்படும் போதுதான் Psychosomatic disorders எனப்படும் அநேக வகையான குழப்பங்கள் ஏற்படுகின்றன. எமக்கு அநேக பகைவர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களை ... |
| Posted: 28 Feb 2012 06:44 AM PST சின்னச் சிரிப்போடு; மெல்லிய அச்சத்தோடு; உதடுகள் உதித்தது; யூத குழந்தைக்கு; அணுதினமும் உரைப்பார் என் அப்பா; பாலஸ்தீனியர்கள் பயங்கரவாதிகள் என! ஏக்கத்தோடு; முக வாட்டத்தோடு; உடைந்த குரலோடு; வெடித்த உதடுகளுடன் பாலஸ்தீனியக் குழந்தை; உரைத்தது; ஒருபோதும் சொன்னதில்லை என் அப்பா; ஏனெனில் அவ்வாறுச் சொல்ல என் அப்பாவை உயிரோடு விட்டு வைக்கவில்லை; உங்கள் நாட்டின் அப்பாக்கள்! -- -யாசர் அரஃபாத் http://itzyasa.blogspot.com |
| Posted: 28 Feb 2012 06:30 AM PST ஈரம் நான் மண்ணுக்குள் சென்றாலும் மரணித்துக்கொண்டாலும் அகலாது உன் நினைவுகள் வாழ்வேன் உன்னில் ஈரமாய் மண்ணுக்குள் ஈரமாய் எங்கே நீ மௌனமாய் நான் என் மேல் மேகமாய் நீ உன்மேல் பூங்காற்றாய் நான் என் மீது மழைதூறலாய் நீ உன் மீது உருவமில்லாமல் நான் என்னுள் அடக்கமாய் நீ --- இழந்தேன் என்னை நான் எங்கே நீ - என்று அறியாமல் தத்தளிக்கும் நடுக்கடலாய் அன்புடன் ஜேன் |
| Posted: 28 Feb 2012 06:20 AM PST நன்னாரி ( மூலிகை ) வேர் நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் தென்னிந்தியாவில் வளரும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும். * இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா ... |
| Posted: 28 Feb 2012 06:16 AM PST சிறிய வயதில்தான் சொத்தைப் பற்கள் வர அதிக வாய்ப்புண்டு. எனவே அதிக கவனம் சிறிய வயது குழந்தைகளிடம் தான் தேவை. முக்கியமாக தாய்ப்பால் மற்றும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் வாயில் பாட்டிலை கடித்துக் கொண்டே தூங்கி விடுவதுண்டு. தாய்ப்பாலில் சர்க்கரை கிடையாது. தாய்ப்பாலுக்குப் பதிலாக நாம் கொடுக்கும் பசும்பால், புட்டிப் பால் முதலியவற்றில் நாம் சர்க்கரையை சேர்த்துதான் கொடுக்கிறோம். இது சரியல்ல. சர்க்கரை சேர்க்காமல் அப்படியே தான் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பாட்டிலைக் கடித்துக் கொண்டே ... |
| இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ? Posted: 28 Feb 2012 06:13 AM PST நீங்க இரண்டு வார்த்தை சொல்லணும் ஆனா அதுல குறைந்தது 200 லெட்டர்கள் இருக்கணும். தெரியலியா ? போஸ்ட் பாக்ஸ். --------- இந்தியாவுல அவர் காலடி படாத இடமே இல்ல அப்படியா ? கீழே கிடந்த மேப்பைக் கவனிக்காம முழுசா மிதிச்சிட்டாரு என்ன சார் உங்க பாக்கெட்ல பிளேடு இருக்கு ? நான்தான் சொன்னேனே... பஸ்ல யாரோ என் பாக்கெட்ல பிளேடுபோட்டுட்டாங்கனு ................ உன் வீட்டுக்காரர் என்ன எப்ப பார்த்தாலும் தலைல கட்டுபோட்டுட்டிருக்காரு ... |
| பார்வையற்றோரும் பார்க்கும் விதத்தில் வெப் சைட் Posted: 28 Feb 2012 05:58 AM PST மத்திய சமூகநீதித்துறையின் வெப் சைட், பார்வையற்றோரும் பார்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பிலும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பிலும் சமூக விஷயங்கள் தொடர்பாக குறைந்தபட்சம் ஐயாயிரம் இணையதளங்கள் உள்ளன. நவீன தொழில் நுட்பம் வளர்ந்து விட்ட இப்போது கூட இவற்றில் ஒன்றேனும், உடல் ஊனமுற்றவர்களால் பயன்படுத்த முடியாத அளவில்தான் இருக் கின்றன. குறிப்பாக, கண்பார்வையற்றோர், நிறங்களை அடையாளம் காண இயலாதோர், மங்கலான பார்வை உடையோர் போன்றோர் இந்த இணையதளங்களைப் பார்க்க இயலாத நிலையில் ... |
| இந்தியா பைனலுக்கு செல்ல முடியுமா? Posted: 28 Feb 2012 05:56 AM PST ஆஸ்திரேலியாவில் நடக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரில், பைனலுக்கு செல்வதில் மூன்று அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. தற்போது இந்திய அணி கடைசி இடத்தில் (10 புள்ளி) உள்ளது. அணியின் ரன்ரேட்டும் (-0.733) மோசமாக இருக்கிறது. முதல் இரு இடத்தில் ஆஸ்திரேலியா (14, +0.433), இலங்கை (11, +0.481) அணிகள் |
| சிகரெட் பழக்கத்தை நிறுத்த மிஷின் Posted: 28 Feb 2012 05:48 AM PST சிகரெட் மற்றும் புகையிலைப் பழக்கங்களுக்கு அடிமைப்பட்டவர்களை அதிலிருந்து மீட்க, புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இதற்கான நடவடிக்கைகளை டில்லி அரசு துவக்கியுள்ளது.புகையிலை மற்றும் சிகரெட் பழக்கங்களால் புற்றுநோய் வருகிறது. இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடப் பல்வேறு வழிமுறைகள் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. புதிதாக, "பயோ ரிசனன்ஸ்' இயந்திரங்கள் மூலம் இந்தப் பழக்கத்தை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்துவதில் உலகளாவிய நிலையில் ... |
| Posted: 28 Feb 2012 05:44 AM PST ஆத்தோர தென்னையிடம் அடுத்து நின்ற புன்னைமரம் நேற்றோடு சென்றவளின் நினைவுகளை தூண்டியது...... பூவரசு பூக்கவில்லை புழுதி பறக்கவில்லை மாதரசி சென்றதானால் மல்லிகையும் மணக்கவில்லை .......... குயில் பாட்டுக் கேட்கவில்ல கொட்டான்கள் கொட்டமில்லை மயில்காட்டு எல்லைவிட்டு மாஞ்சோலை வரவேயில்லை.... அந்தியில் வந்திங்கு ஆர்வத்தில் சூடேற்றும் செந்தீ சென்றெதெங்கே சிந்தனையில் முந்திரிப்பூ .... எந்தோளில் சாய்ந்தபடி இன்பத்துப்பால் பேசும் தண்தோள் பாவையெங்கே தடுமாறும் மாங்கன்று....... வாழ்க ... |
| ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். Posted: 28 Feb 2012 05:30 AM PST ரெண்டாம் விற்பனை -வண்டியின் ஜாதகம். உபயோகித்த இரு சக்ர வண்டியோ காரோ வாங்கப் போகிறீர்களா? யாருடைய வண்டி அதன் ஜாதகம் வேண்டுமா? வண்டியின் ரிஜிஸ்டிரேசன் எண் தெரிந்தால் போதும்.2003 வருடதிர்க்கு பிறகு பதிவு செய்த வண்டியாக இருக்க வேண்டும் / அல்லது ஒரு முறையாவது RTO ஆபிசிற்கு போயி இருந்தல் அவசியம், vahan >ஸ்பேஸ்< வண்டியின் ரிஜிஸ்டிரேசன் எண்ணை டைப் செய்து 09212357123 என்ற எண்ணிற்கு sms அனுப்பினால், அடுத்த நிமிடம் வண்டியின் ஜாதகம் பதில் sms இல் உங்களுக்கு. ரமணியன். நன்றி மோட்டார் விகடன். |
| புகழ் பெற்ற சில நூல்களும் அவற்றை எழுதியோரும். Posted: 28 Feb 2012 05:09 AM PST ரொபின்சன் குரூசோ............டானியல் டீப்போ. ஒலிவர் டுவிஸ்ட்...............சாள்ஸ் டிக்கின்ஸ். டிரசர் ஐலான்ட் ..................ஆர் . எல். ஸ்டீவன்சன். அட்வெஞ்சர் ஒஃப் ரொம் சோயர்............மார்க் டுவைன். குடியரசு......................பிளாட்டோ. இளவரசன்................மாக்கியவல்லி. அரசியல்.............அறிஸ்டோடில். சமூகத்தொடர்பு.............ரூசோ. மூலதனம்..............கால்மாக்ஸ். எனது போராட்டம்.......அடால்ஃப் ஹிட்லர். பிரான்சியப் புரட்சி........தோமஸ் கார்லைன். தேசங்களின் செல்வம்..........அடம்ஸ்மித். தாய்................மாக்ஸிம் ... |
| 12000 பதிவுகளை கடந்த ரேவதி அக்காவை வாழ்த்தலாம் வாங்க ... Posted: 28 Feb 2012 04:27 AM PST 12000 பதிவுகள் கடந்த உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் அக்கா நீங்கள் மென்மேலும் பல பதிவுகள் பதிவிட மனமார இறைவனை வேண்டுகிறேன்..... |
| Posted: 28 Feb 2012 04:25 AM PST காற்றின் களவாடல் வெட்டவெளியில் பொத்தலாய் நனைந்தது கூரை இல்லா வீடு அடித்து நொறுக்கப்பட்டு தொங்கும் கிழிசலாய் கூரைவீட்டின் கதவும் ஜன்னல்களும் மின்னல் சற்றேன எடுத்த புகைப்படத்தில் கருகி விழுந்த கொலைவாழை வெள்ளத்தால் மண்ணரித்த முற்றத்தில் வேரற்று குடைசாய்ந்த பச்சைமரம் அறுந்து விழுந்த மின்கம்பிச் சுருளில் இறந்து கிடந்தது கறவைப் பசு கீழ்விழுந்து உடைந்த முட்டைகளைச் சுற்றி கொக்கரிக்கும் அடைக்கோழி ஓடைத் தண்ணீரில் கரைப் பட்டுக் அழுக்காய் கிடந்தது ஒற்றைப் ... |
| Posted: 28 Feb 2012 04:08 AM PST 'மேகங்கள்' பற்றி குர்ஆன் கூறும் உண்மைகள் இன்றைய நவீன அறிவியலறிஞர்கள் மற்றும் வானியல் வல்லுனர்கள் மேகங்களின் வகைகளைப் பற்றியும், அவற்றின் செயல்பாடுகளைப் பற்றியும் பல அறிய தகவல்களை சேகரித்துள்ளனர். வானியல் வல்லுனர்கள் தகவல்ப்படி, மழை மேகங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான காற்றினாலும், மேகக் கூட்டங்களினாலும் ஓன்று திரட்டப் பட்டு இணைந்து தமக்குரிய வடிவத்தைப் பெறுகின்றன. மேகங்களின் கூட்டத்தில் ஒரு வகையான மேகமே திரள் கார்முகில்(cumulonimbus cloud) மேகமாகும். இந்த திரள் கார்முகில் எனும் மேகம் எங்கனம் ... |
| Posted: 28 Feb 2012 03:47 AM PST ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன் முதல்படி ஹாலோ பிளாக் என்றால், அதன் அடுத்த கட்டமாக வந்த தொழில்நுட்பம்தான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ். புதிய தொழில்நுட்பத்தில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாக இருப்பதாலும், கட்டுமானத்துறையில் இப்போது ஃப்ளை ஆஷ் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புச் செலவு அதிகம் என்றாலும், செங்கல்லின் தேவை தவிர்க்க முடியாதது என்பதால் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். அனல் மின் ... |
| பி.எச்.இ.எல்., நிறுவன பணிவாய்ப்பு Posted: 28 Feb 2012 03:06 AM PST இந்தியாவின் உள்கட்டுமானம் மற்றும் சக்தி தொடர்புடைய நிறுவனங்களில் பி.எச்.இ.எல்., எனப்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனம்தான் மிகவும் பெரியது. 1971 முதலே தொடர்ந்து லாபகரமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் இன்ஜினியரிங் டிரெய்னி, சூபர்வைசர் (இன்ஜினியரிங்) டிரெய்னி மற்றும் நிதி சூபர்வைசர் பிரிவுகளில் மொத்தம் 1207 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்னென்ன பிரிவுகள்: இன்ஜினியரிங் டிரெய்னி பிரிவில் மெக்கானிகலில் 700, எலக்ட்ரிகலில் 200, எலக்ட்ரானிக்ஸில் 100 காலி இடங்கள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

