தமிழ் ஜோதிடம் களஞ்சியம் |
- தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம்
- ரசிக்க சில குறும்பு படங்கள்
- உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல்
- ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை
- நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க
- பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம்
- ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள்
- அதிர்ச்சியூட்டும் விபச்சார நடிகைகள் பட்டியல்:கதிகலங்கிய காவல்துறை
- தற்சோதனை - வேதாத்திரி மஹரிஷி
- சிவானந்தவேல் கவிதை தொகுப்பு
- கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை
- உங்களுக்கென தனியாக செய்தி திரட்டி உருவாக்கிக் கொள்ள உதவும் ஈகரையின் புதிய இணையதளம்
- எப்படி சொல்வாய் கண்ணா
- ஒரு குழந்தை மனைவி
- மழைக்காலப் பூக்கள்
- என் தாய் வீடு..
- தினம் ஒரு திருக்குறள்
- ‘இவன் ஒரு தமிழ் மாணாக்கன்’
- ரசிக்க சில புகைப்படங்கள்
- அந்த அனுபவமே நான்தான் -கவியரசர்
- கணவன்-மனைவி-காதல்-கவிதை
- நதிமூலம்
- (தா)வரம்
- சில கடிகள்
- குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி
- ஆண்களே பதில் சொல்லுங்களேன்.
- காதல் ...
- திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன?
- நிறம் !
- விருப்பப் பட்டியல் - வைரமுத்து
- நாலுகாசு வைப்பிலிட்டு
- அழகு
- எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்..
- "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்"....
- முகநூலில் ரசித்தவை!
- தலை நசுங்கிய ஆணிகள்-ஹைக்கூ.
- ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி?
- Oracle
- அது ஒரு காகம் (நீதிக்கதை)
- முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
- Intex Avatar 3D touch phone
- கண் விழித்தது மனம்
- மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை
- உலகின் மிகப் பெரிய online shopping amazon.com இந்தியாவில்
- வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!
- இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு.....
- "இன்று விளைந்த முத்துக்கள்"
| தத்து பித்து தத்துவம்! - சமோசா சாப்பிட்டு சம்பந்தமே இல்லாம உளறுவோர் சங்கம் Posted: 29 Feb 2012 07:26 PM PST பல்வலி வந்தால் பல்லைப் புடுங்கலாம் ஆனா கால்வலி வந்தால் காலைப் புடுங்க முடியுமா? இல்லை தலைவலி வந்தால் தலையைத்தான் புடுங்க முடியுமா? (டேய்! எங்கடா இருந்து கிளம்புறீங்க?) சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும் அதுக்காக, மன்டே அன்னைக்கு மண்டையப் போட முடியுமா? டிசம்பர் 31-க்கும் ஜனவரி 1-க்கும் ஒருநாள் தான் வித்தியாசம் ஆனால், ஜனவரி 1-க்கும் டிசம்பர் 31-க்கும் ஒரு வருஷம் வித்தியாசம் இதுதான் உலகம்! இன்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இன்ஜினியர் ஆகலாம் பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக ... |
| Posted: 29 Feb 2012 07:18 PM PST |
| உலகின் பழமையான அணுமின் நிலையம் மூடல் Posted: 29 Feb 2012 07:00 PM PST உலகின் மிகப்பழமையான அணுமின் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து நாட்டில் உள்ள அணுமின் நிலையம் புதன்கிழமை மூடப்பட்டது. இருப்பினும அதன் அருகாமையிலேயே புதிய அணுமின் நிலையத்திற்கான கட்டுமானப்பணி துவங்கியுள்ளது. அவை வரும் 2025-ல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டில் கடந்த 1958-ம் ஆண்டில் அணுமின் நிலையத்திற்கான கட்டுமானப்பணி துவங்கியது. 1960-ம் ஆண்டு முதல் அவை தனது பணியை துவக்கியது. உலகில் அமைக்கப்பட்ட பழமையான அணுமின்நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். கடந்த 44 ஆண்டுகளாக ... |
| ஆசிய கோப்பை : இந்திய அணியில் சேவாக் இல்லை Posted: 29 Feb 2012 07:00 PM PST ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கும், ஜாகிர் கானும் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக யூசுப் பதானும், அசோக் தின்டாவும் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இது குறித்து அணித் தேர்வுக் குழு கூறுகையில், சேவாக்கிற்கும், கானுக்கும் ஓய்வு அளிக்கப்படுகிறது. சச்சினுக்கும், உமேஷ் யாதவும் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க ஒரு வாய்ப்பாக அணியில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. அணியின் துணைத் தலைவராக விராத் கோஹ்லி இருப்பார் என்று கூறியுள்ளது. தோனி,காம்பீர்,சச்சின்,பிரவீன் குமார்,யூசுப் பதான்,இர்பான் ... |
| நம்ம தல ராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவோம் வாங்க Posted: 29 Feb 2012 05:26 PM PST இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் சகோதரரும், நம்ம தளத்தின் தலையும் ஆகிய ராஜாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இது போல பல பிறந்த நாள்கள் எந்த விட குறையும் இல்லாமல் கொண்டாட என் பிரார்த்தனைகள் |
| பூமிக்கு அருகில் செவ்வாய் கிரகம்: வெறும் கண்ணால் பார்க்கலாம் Posted: 29 Feb 2012 05:25 PM PST பூமிக்கு அருகில் வரும் செவ்வாய் கிரகத்தை, பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்க்கலாம்' என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயலர் இயக்குனர் அய்யம்பெருமாள் கூறினார்.அவர் கூறியதாவது:சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் செவ்வாய் கிரகம், வரும் 3ம் தேதி நள்ளிரவு, 1.40 மணிக்கு, பூமிக்கு, 10.08 கோடி கி.மீ., தொலைவில் வருகிறது. இத்தொலைவு, 5.5 கோடி கி.மீ.,க்கும், 38 கோடி கி.மீ.,க்கும் இடையே வேறுபடும். 26 மாதங்களுக்கு ஒரு முறை வரும் இந்த நிகழ்வின் போது, இரவு நேரத்தில், வானத்தின் கிழக்கு திசையில், ... |
| ஆன்மிகத்தை வரையறுக்கும் ஒழுக்க விதிகள் Posted: 29 Feb 2012 04:25 PM PST மகாநதி' என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தொலைந்துபோன தனது மகளை கொல்கத்தாவில் உள்ள விபசார விடுதிகளில் தேடும் கதாநாயகன், அங்கே சின்னஞ்சிறு சிறுமிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டு உறைந்துபோய் நிற்பார். அவருக்குப் பின்னே புன்னகையோடு காட்சி தரும் அன்னை துர்கையின் புகைப்படம் தென்படும். பெண்ணை தெய்வமாக வழிபடும் பாரத தேசத்தில்தான் இதுபோன்ற சமூக இழிவுகள் நடந்தேறுகின்றன என்பதைச் சிந்திக்கத் தூண்டும் காட்சி அமைவு. நிஜத்திலும் இதுபோன்ற இழிவுகள் அரங்கேறுகின்றன என்பதைச் ... |
| அதிர்ச்சியூட்டும் விபச்சார நடிகைகள் பட்டியல்:கதிகலங்கிய காவல்துறை Posted: 29 Feb 2012 04:08 PM PST 'அட குடும்ப குத்து விளக்கு போல இருக்கும் இவரா...' 'கண்டிப்புக்குப் பெயர் போன நடிகை என்று பெயரெடுத்த அவரா...' 'இவருக்குதான் கல்யாணம் ஆகிடுச்சே, இன்னுமா?', 'நம்ப முடியவில்லையே'! இப்படி விதவிதமாக ஆச்சர்யக் குரல் கொடுக்கிறது காவல்துறையும், அவர்கள் தந்த 'விபச்சார நடிகைகள்' தகவலை வைத்துக் கொண்டு எப்படி இதை வெளியிடுவது என முழிக்கும் பத்திரிகையுலகமும். நடிகை புவனேஸ்வரி மாட்டிக் கொண்ட கையோடு, தன்னிடம் உள்ள விபச்சார நடிகைகளின் பட்டியலையும் போலீசாருக்கு கொடுத்து, 'என்னை மட்டும் பாய்ஞ்சு பாய்ஞ்சு ... |
| Posted: 29 Feb 2012 03:44 PM PST தற்சோதனை என்பது மனத் தூய்மையை நாடிச் செல்லும் ஒரு தெய்வீகப் பயணம். ஐயுணர்வின் வயப்பட்டு ஆன்மாவானது உணர்ச்சிப் பெருக்கில் பல செயல்களைப் புரிகிறது. விளைவறிந்து செயலாற்றும் பண்பு ஓங்கும் வரையில் ஆன்மாவின் செயல்களால் பெரும்பாலும் துன்பமே விளைகின்றது. துன்பமோ பொருந்தா உணர்வு. அறிவு உயர்ந்து விழிப்பு நிலை பெறும் வரையில் ஆன்மா பழக்கத்தின் வழியேதான் செயல்களை ஆற்ற முடியும். எனவே துன்பங்கள் மேலும் மேலும் பெருகுகின்றன. இந்த நிலைமையிலிருந்து தன்னையே தான் மீட்டுக் கொள்ள நிச்சயமான ஒரு வழி "தற்சோதனை" தான். தன்னைப்பற்றி ... |
| Posted: 29 Feb 2012 03:37 PM PST எழுக பாரதம் விடுதலைக்கு வித்திட்டோராய் விதியை மாற்றியவனாய் விலங்குகளை விரட்டியவனாய் விடிவெள்ளியாய் அன்று விடிந்துவிட்டது இன்று. . . தன்னிகரோடு பாரினிலே தத்தலிப்போர் பார்வையிலே தரிசு நிலத்திலே தங்கமாய் விலையுதே தமயரெல்லாம் ஏன் பிரிந்தோமென. . . சாதனையை தொடக்கிவிட்டோம் சாதிகள் தத்தலிக்கின்றன சாரணனாய் வலம் வருகின்றோம் சாலைகளாய் மாறுகின்றோம் சாடுவோரெல்லாம் ஏன் என. . . விண்ணுக்கு ஏவி விட்டோம் விந்தையை பரப்புகின்றன விசாலம் எங்களுக்குள்ளே விவேகமும் நமக்குள்ளே விடிந்துவிட்டது பாரதம் ... |
| கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை Posted: 29 Feb 2012 02:54 PM PST கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை நாம் மனித மாமிசம் உண்டவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் மகாத்மா காந்தி, ''பசுவின் பாலைக்குடிக்காதீர்கள். அது மாட்டுக்கறியின் சாறு '' என்றார். உடனே ராதாகிருஷ்ணன், ''அப்படியானால், நாம் எல்லோருமே மனித மாமிசம் உண்டவர்கள்தான்'' என்றார். ''எப்படி?'' என்று கேட்டார் காந்திஜி. '' நாம் அனைவரும் தாயின் பால் குடித்துதானே வளருகிறோம். அதை மனித மாமிசத்தின் சாறு என்று கூறலாம் அல்லவா?'' என்றார். காந்திஜி பதில் சொல்லாமல் அமைதியானார். எனக்கு தகுதி இல்லை ஒரு குடும்பக் ... |
| உங்களுக்கென தனியாக செய்தி திரட்டி உருவாக்கிக் கொள்ள உதவும் ஈகரையின் புதிய இணையதளம் Posted: 29 Feb 2012 12:59 PM PST மற்றவர்கள் உருவாக்கியுள்ள செய்தி திரட்டிகளைப் பயன்படுத்தி வரும் உங்களுக்கு மேலும் முக்கியமான உங்களுக்குப் பிடித்த இணையத் தளங்களை இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படும். ஆனால் அது நிறைவேறாத ஆசையாக இருக்கும். உங்களுக்குப் பிடித்தமான இணையத் தளங்களின் RSS செய்தியோடையை இணைத்துக் கொள்ள ஈகரையின் புதிய தளம் உதவுகிறது. இதில் இணைக்கும் தளத்தை மற்றவர்கள் பார்வையிட முடியாது. நீங்கள் இணைக்கும் தளங்களை நீங்கள் மட்டுமே பார்வையிட முடியும். எத்தனை தளங்களின் செய்தியோடையை வேண்டுமானாலும் ... |
| Posted: 29 Feb 2012 12:43 PM PST நடந்து முடிந்தது நன்றாய் , முடிந்ததாய் ,.. நமக்கு சொல்வது கீதை , நடக்க போவது நன்றாய் நடக்குமம் அதையும் சொல்வது கீதை , கொத்து கொத்தாய் கோர தீயால் வெந்த மலர்களை அறிவோம் , ஆழ்துளை கிணற்றில் அறியா சிறுவன் ,அகப்படும் கொடுமை அறிவோம் , கைகள் இல்ல சிறுவன் ஒருவன் காலில் உண்ணும் கொடுமை , பாலியல் கொடுமையால் அறியா சிறுமியை ,குதறி கொள்வதை அறிவோம் , கழுத்தை அறுத்து நகையை இழந்த்தும் கற்பை இழக்கும் பெண்கள் , பெற்றவன் மகளை பெண்டாளநினைக்கும் ,குற்றம் நடக்கும் நாட்டில் , மூதாட்டியைஉம் விட்டுவைக்காத ... |
| Posted: 29 Feb 2012 11:51 AM PST பள்ளிக்கூடம் போகப் பிடிக்காமல் அழுது கதறி அடம்பிடிப்பாய் நீ அது மழையடிக்காத காலம் இருந்தும் பெருமழை-பேய்மழை உன் கண்களில் கண்களில் சிரிப்புத் தேக்கி எதிர்வீட்டில் நான் என்னோடு என்னம்மா,அக்கா,தங்கை,அண்ணன் தெருவில் இன்னும் சிலர் நின்று... தினமும் நடக்கும் வாடிக்கை வேடிக்கை இப்போதும்கூட அழாமல் செல்லும் பள்ளிப்பிள்ளைகள் அழவேண்டும் உன்னைப்போல ஆசை மழையடிக்கும் எனக்குள் நானும் இப்படி அழுததாய் அம்மா சொல்வார் -பொய்- இப்படியல்ல உன்னைப்போல இன்னும் அழுதிருப்பேன் புயல்மழைக்காரனாக ... |
| Posted: 29 Feb 2012 10:59 AM PST அது ஒரு காலம் கண்ணே கார்க்காலம் நனைந்து கொண்டே நடக்கின்றோம் ஒரு மரம் அப்போது அது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை அனுப்பிக் கொண்டிருந்தது இருந்தும் அந்த ஒழுகுங் குடையின்கீழ் ஒதுங்கினோம் அந்த மரம் தான் எழுதிவைத்திருந்த பூக்கள் என்னும் வரவேற்புக்கவிதையின் சில எழுத்துக்களை நம்மீது வாசித்தது இலைகள் தண்ணீர்க்காசுகளைச் சேமித்து வைத்து நமக்காகச் செலவழித்தன சில நீர்த்திவலைகள் உன் நேர்வகிடு என்னும் ஒற்றையடிப்பாதையில் ஓடிக்கொண்டிருந்தன அந்தி மழைக்கு நன்றி ஈரச்சுவாசம் நுரையீரல்களின் ... |
| Posted: 29 Feb 2012 10:43 AM PST முன்பெல்லாம் எனக்கு அம்மா என்று அழைக்கவாவது ஒருத்தி இருந்தாள் என்றேனும் அவளைப் பார்க்கப் போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும் எனக்கொரு புடவை வாங்கி வைத்திருப்பாள் முடியாவிட்டாலும் எழுந்து எனக்குப் பிடித்ததை பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள் உதவி செய்யப் போனால்கூட வேண்டாண்டி இங்கையாவது நீ உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள். என்னதான் நான் பேசாவிட்டாலும் இரண்டொரு நாளைக்கேனும் எனை அழைத்து எப்படி இருக்க.. என்னடி செய்த.. உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று ... |
| Posted: 29 Feb 2012 10:15 AM PST அகர முதல எழுத்தெல்லாம்; ஆதி பகவன் முதற்றே உலகு. A is the starting point of the world of sound: even so is the Ancient One supreme the starting point of all that exists. |
| Posted: 29 Feb 2012 10:13 AM PST ஜி.யூ.போப் (1820 – 1907) இங்கிலாந்தில் பிறந்து கிறித்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து தமிழுக்காக சேவை செய்தவர். தமிழ் மீது பெரும் பற்று கொண்ட அவர் திருக்குறள், நாலடியார், புறப்பொருள் வெண்பாமாலை, புறநானூறு, மணிமேகலை, சிவஞான போதம் ஆகிய நூல்களை ஆங்கில மொழியாக்கம் செய்தார். ELEMENTARY TAMIL GRAMMAR என்னும் தலைப்பில் மூன்று பாகங்களாகத் தமிழ் இலக்கணத்தை மொழி பெயர்த்து எழுதினார். யான் முதன் முதலில் பயின்ற இலக்கணம் டாக்டருடையதே என்று திரு,வி.க புகழ்ந்து கூறினார். ஜி.யூ.போப் அவர்கள் ... |
| Posted: 29 Feb 2012 10:08 AM PST ![]() |
| அந்த அனுபவமே நான்தான் -கவியரசர் Posted: 29 Feb 2012 09:57 AM PST பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் ... |
| Posted: 29 Feb 2012 09:48 AM PST கவிப்பேரரசு வைரமுத்துவும் அவரின் காதல் மனைவி திருமதி.பொன்மணி வைரமுத்து இருவருமே கவிஞர்கள் என்பது ஊரறிந்த உண்மை. இவர்கள் இருவரின் காதல் பார்வைதான் இந்தக் கவிதைகள். இரண்டு இதயங்கள் ஏதோ ஒரு நிறுத்தத்தில் சறுக்கி விழுவதே காதல் -பொன்மணி வைரமுத்து ******* மறைத்தாலா தாழை மனம்குறையும்? நீரில் கரைத்தாலா தங்கம் கரையும்? -கரையில் இறைத்தாலா வற்றிவிடும் எழுகடல்? நெஞ்சில் மறையாது காதல் மலர். -வைரமுத்து |
| Posted: 29 Feb 2012 09:39 AM PST பூமிக்கடியில் தேடித்தேடி ஓர்நாள் பொத்துக்கொண்டுப் பூமியைக் கிழித்துப் பூமியிலேயே விழுந்து எம்பி எம்பிக் குதித்து மெல்ல மெல்ல ஊர்ந்து மெதுவாய் நடந்து மலைகளில் உருண்டு புரண்டு மகிழ்வோடு விழுந்து பாறைக்குழிகளைக் குடித்துவிட்டு நுரைகளையும் குமிழ்களையும் நூதன சங்கீதமாய்த் துப்பி பெண்களை- பிடித்தமான கரைகளை முத்தமிட்டு எச்சிலாக்கி இலைகளை-மலர்களை எச்சில் கழிவுகளைச் சுழிமேனியில் சுமந்து சூரியனை நிலவை சுதந்திரமாய்க் கலைத்துவிட்டு இடுப்பெலும்புகள் முறிய எங்கெங்கோ வளைந்து எதிர்பாராமல் ... |
| Posted: 29 Feb 2012 09:37 AM PST உனக்காகத்தான் உன் வருகைக்காகத்தான் இத்தனை நாள்கள்... மெல்ல மெல்ல முயன்று மிருதுவாய் ஆழந்தொட்டு உற்சாகமாய் உயிர் ஊன்றி உள்வரை நனையுமாறு நீரூற்றி நீ முட்டுவதைப் பார்க்க அடிக்கடி மேடுதடவி சின்னச் சின்ன வார்த்தைகளில் வாக்கியங்களைப் பேசி வெயிலில்-மழையில் உனக்காக காய்ந்து உனக்காக நனைந்து நீ முழுதாய் வெளி வந்ததும் கண்களில் நீர் ஊற மனசில் நீ ஊற உனக்காகத்தான் உன் வருகைக்காகத்தான் இத்தனை நாள்கள்... (விதை முளைப்பதும் -கருத் தரிப்பதும் ஒன்றென எண்ணி எழுதியது) |
| Posted: 29 Feb 2012 09:26 AM PST கடிங்க எஜமான் கடிங்க! நாய்க்கு நாலு கால் இருக்கலாம் . ஆனா அதால LOCAL கால் , STD கால் , ISD கால் , even MISSED கால் கூட பண்ண முடியாது ! கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம் .... காவேரி ஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா? என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவன துப்பாக்கிகுள்ள போட முடியாது. பொங்கலுக்கு கவர்மெண்ட்ல லீவு குடுபாங்க... ஆனா இட்லி தோசைக்கு குடுப்பாங்களா?! தூக்க மருந்து சாப்பிட்டா ... |
| குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி Posted: 29 Feb 2012 09:09 AM PST பிறந்து 3 நாளே ஆன குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய மாணவி 00:55:29Wednesday2012-02-29 கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் பிறந்து 3 நாளே ஆன குழந்தையுடன் எஸ்.எஸ்.எல்.சி தேர்வை மாணவி எழுதினார். மேற்கு வங்காளத்தில் சிறுவயதில் திருமணம் நடப்பது சகஜம். இப்படி, திருமணமானவர் சரஸ்வதி ஹல்தர். இவர் நாடியா மாவட்டத்தில் உள்ள பஜன்காட் உயர் நிலை பள்ளியின் 10ம் வகுப்பு மாணவி. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு தொடங்கியது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரஸ்வதி கடந்த வெள்ளிக்கிழமை பெங்காலி மொழி ... |
| Posted: 29 Feb 2012 08:16 AM PST அழகான படித்த பெண்ணைப் பார்த்துப் பழகி பதிவுத் திருமண நிகழ்வரை வந்தாச்சு. பதிவுத் திருமண நிகழ்வில் மணமகனைக் காணவில்லை. உண்மையை ஆய்வு செய்து பார்த்த போது, "குறைந்த சாதிப் பெண்ணைக் கட்டவேண்டாம்" என்று மணமகனைப் பெற்றோர் தடுத்தனராம்; ஆகையால் மணமகன் பதிவுத் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லையாம். என்னடாப்பா கதை இப்படியாச்சு என்கிறீர்களா? குறித்த பெண்ணின் உள்ளம் எத்தனை துயரடைந்து இருக்கும் என்கிறீர்களா? இவை உங்கள் கேள்விகள். காதலிப்பது சுகம், திருமணம் செய்வது சிக்கலா? அழகு, படிப்பு, பணம் எல்லாம் ... |
| Posted: 29 Feb 2012 07:49 AM PST கத்தியில்லாமல் காயப்படுத்தும் கவிதைக் கொத்து ...... உடலைத்தாண்டி உயிரை உரசும் உந்து சக்தி ........ ஜாதிகளைப் பற்றி சங்கடப்படாத ஜோதி மார்க்கம்..... மதங்களைத் தாண்டி மனங்களைத் தீண்டும் மனிதப் பழக்கம்... மொழிகளைக் கூட மூழ்கி பிறக்கும் விழிகளின் வேதம்....... ஆராய்ச்சிக்குள் அகப்படாத அறிவியல்..... யுகம் யுகமாய் அணையாத அகநெருப்பு.... அழிக்க முடியாத அழியக்கூடாத அழகிய கோலம்.... இந்த புதுக்கோளில் இரவும் பகலும் இல்லவே இல்லை..... இந்த ... |
| திரைப்படங்களைப் பற்றிய உங்கள் கருத்தென்ன? Posted: 29 Feb 2012 07:48 AM PST பொழுதுபோக்கிற்குச் சிறந்த ஊடகமாகத் திரைப்படம் விளங்குகிறது. அன்று குடும்பத்தவர் ஒன்றுகூடிப் பார்க்கக்கூடியதாகத் திரைப்படம் அமைந்திருந்தது. ஆனால், இன்று அப்படியல்ல. இம்மாற்றம் வரும் வழித்தோன்றல்களுக்கு நல்லதல்ல. |
| Posted: 29 Feb 2012 07:47 AM PST நிழலின் நிறமறிந்தவன் ஒருபோதும் கவலைப்படுவதேயில்லை தன் நிறம் குறித்து! ஆர்.சி.மதிராஜ் |
| விருப்பப் பட்டியல் - வைரமுத்து Posted: 29 Feb 2012 07:44 AM PST கேள் மனமே கேள் சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன் சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன் ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன் ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன் சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன் சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன் யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன் உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன் கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன் கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன் பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன் பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன் வெண்ணிலவில் ... |
| Posted: 29 Feb 2012 07:34 AM PST கடன் படாதீர்! கடன் பட்டால் கலங்கி நிற்பீர்! உறவுக்குப் பகை கடன்! கடனுள்ள வரை காதலும் வராது; மனைவியும் கிட்ட நெருங்காள்! அடடே! இன்னும் பல வரிகள் எச்சரித்தாலும் நம்மாளுகள் வைப்பக அடகுநகைப் பகுதியில் தான் விடிகாலையில் வரிசையில் நிற்கிறார்களே! விரலுக்கேற்ற வீக்கம் போல வரவுக்கேற்ப செலவமைத்து கைக்கெட்டியதைக் கையாள முடிந்தால் நீங்களும் கடனை நாட மாட்டியள் வைப்பகங்களையும் மூடித்தான் ஆகவேண்டி வருமே! அடேங்கப்பா! வாழ்க்கைக்குப் பணம் வேணும் தான் அதுக்காகப் பாருங்கோ... கடன் பட்டால் தூக்குப் ... |
| Posted: 29 Feb 2012 07:25 AM PST அதிகாலை நான் காணும் கலங்கரை விளக்கம் தெளிவில்லை என்றாலும் அழகுதான் அதே நேரம் நான் காணும் கதிரவனோ கண் இமைக்க வைத்தாலும் அழகுதான் அரை முகம் மூடி குறை தரிசனம் தரும் பிறைமதியும் அதிலொன்றுதான் ஆங்காங்கே கோடி கோடி தொலைவில் கண்சிமிட்டி தொலைந்து போகும் அந்த வானத்து விண்மீனும் அழகுதான் தவறோ சரியோ என தவறிழைத்த பிஞ்சு மழலையின் கவலை கலந்த முகமும் தனி அழகுதான் இப்படி எல்லா அழகும் தோற்றுப்போனது உன்முன் அழகு எனும் வார்த்தையே நீ ஆனதால். |
| எனது வண்ணத்துப் பூச்சியும்...எனது தவறுகளும்.. Posted: 29 Feb 2012 07:23 AM PST பறந்து செல்கிறது சில வண்ணங்கள்... திசையற்று. சிறகுகளில்.... ஒட்டிக் கொண்டிருக்கிறது ஒரு பூவின் காதல். ஒரு குழந்தையின் சிரிப்பைச் சிரித்தபடி கடந்து செல்கிறது எனது வண்ணத்துப் பூச்சி. ****************************** ஏனோ... கடவுளோடு வாழ்பவன் ஒருவன் என் கனவுகளில் வந்து கொண்டிருந்தான். எனது தவறுகளைச் சொல்லிக் காட்டியவன்.. என்னைத் திருந்தும்படி வற்புறுத்தி..வற்புறுத்தி...மறைந்தான். அவனைச் சமாதானம் செய்வதாய்... ஆடிய என் தலை.. ஒருபோதும் அவனின் வேண்டுகோளைச்... செவிமடுக்கவே இல்லை. நான் ... |
| "தலை நிமிர்த்த விரும்பாத புற்கள்".... Posted: 29 Feb 2012 07:20 AM PST இரை போட வருபவனைப் பார்த்து... குதிக்கத் துவங்குகிறது மீன். கத்தத் துவங்குகிறது பறவை.. வாலை ஆட்டிக் குரைக்கிறது நாய். குதித்துக்...கத்தி...வாலை ஆட்டும் அறிவு எந்தப் புராதன அடிமையின் அறிவு? *************************************** நாற்காலி.... அடங்காமல் ஆடிக் கொண்டே இருக்கிறது. அமைதியானவுடன்தான் விசாரிக்க வேண்டும்... அமர்ந்துவிட்டுப்போன அரசியல்வாதி யாரென?. **************************************** காற்று வீசுகிறது...வேகமாய். தலை அசைக்கும் பூக்கள்.. ஒருபோதும் நடுங்குவதில்லை..காற்றுக்கு. ****************************************** நேற்றுப் ... |
| Posted: 29 Feb 2012 07:17 AM PST முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!! உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!! |
| Posted: 29 Feb 2012 07:12 AM PST தலை நசுங்கிய ஆணியின் கீழ் தொங்கியபடி அருள் பாலிக்கிறார் நாட்கள் தின்னும் கடவுள். ****************************************************** வானத்தில் மிதக்கிறது கடவுளின் விளக்கு எனது இரவைச் செரித்த படி. ******************************************************** பனியின் குரல் இலைகளின் கண்ணீர் பாதி திருடப்பட்ட சூரியானோடு விடிகிறது பகல். ************************************************************ குதிரைகள் பூட்டிய தேரினில் சூரியன். கருகாத குதிரைகளினூடே வளர்கிறது பாட்டிமார் கதைகள். ********************************************************** நிழல் ... |
| ஒரே நாளில் உடல் எடையை குறைப்பது எப்படி? Posted: 29 Feb 2012 07:10 AM PST இன்னாவெல்லாமோ செஞ்சு பார்த்தும் உடல் எடை குறைய மாட்டேங்குதா? கவலையை உடுங்க! உங்களுக்காகவே இந்த ஸ்பெஷல் பதிவு!! எக்ஸர்சைஸ் பண்ண மாட்டேன்! டயட் கண்ட்ரோல் ... மூச்!! மருந்து மாத்திரை எதுவும் சாப்பிட மாட்டேன்!! பாட்டரி பெல்ட், மேக்னட் பெல்ட் இதெல்லாம் கண்டிப்பாக கூடாது!! ஆனா ஒரே நாள்ல வெய்ட் கொறையணும்.... அப்டீன்னு நெனைக்குற ஆசாமியா நீங்க? வாங்க வாத்யார், உங்களத்தான் எதிர் பாத்துகினு இருந்தேன் உங்களுக்காகவே ஸ்பெஷலா ஒரு ஏற்பாடு அண்ணாத்த பண்ணிகிறாரு. ஒரே நாள்ல ... |
| Posted: 29 Feb 2012 07:09 AM PST ஈகரை நண்பர்களே Oracle பற்றிய முழு விவரம் தேவை.......... |
| Posted: 29 Feb 2012 07:06 AM PST வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார். திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது. "என்ன இது?" என்று கேட்டார் முதியவர். லேப்-டாப்பிலிருந்து கண்களை ... |
| முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள் Posted: 29 Feb 2012 07:03 AM PST மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதன் பின்னணி என்னவென்று தெரியுமா? கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான். தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் ... |
| Posted: 29 Feb 2012 06:58 AM PST Intex நிறுவனம் 3D தொழில்நுட்பம் கொண்ட தொடுத்திரை கைப்பேசியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்க்கு Intex Avatar என பெயரிட்டு உள்ளனர். இந்த மொபைல் dual SIM (GSM-GSM) கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால் 2.8-inch stereoscopic display, 4GB, microSD card, 2 MP camera with LED Flash, விளையாட்டுக்கள் என்று பார்த்தால் Crazy Birds, Fruit Ninja, Pentachess, Call of Atlantis, and Yumsters, மற்றும் apps of Google, MSN, Yahoo and Facebook கொண்டுள்ளது. இதன் சந்தை விலை ரூபாய் 3,690/- மட்டுமே. |
| Posted: 29 Feb 2012 06:40 AM PST கனவில் உன்னை கண்டதும் கண் விழித்து கொள்கிறது மனம் உன்னுடன் கதை பேசி உன்னை தூங்கவைத்து அது தூங்கும் வேலையில் உன் நினைவுகளுடன் விளித்து கொண்டேன் காலை பொழுதில் "நான்" |
| மூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாதனை Posted: 29 Feb 2012 06:38 AM PST உலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஆன smart phone-ஐ உருவாக்கி 23 வயதான British பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்வீகமாக கொண்ட Kieron-Scott Woodhouse என்ற மாணவர் Middlesex பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவரது கண்டுபிடிப்பு குறித்து அவர் கூறியுள்ளதாவது, சிறுவயதில் இருந்தே தனக்கு மூங்கிலின் மீது தீராத பற்று இருந்தது. எனது ஓய்வுநேரங்களில் கிடைக்கும் மூங்கிலினை சீவி ஏதாவது ஒருபொருள் செய்து கொண்டிருப்பேன். அந்த வகையில் உருவானது தான் இந்த smartphone. ... |
| உலகின் மிகப் பெரிய online shopping amazon.com இந்தியாவில் Posted: 29 Feb 2012 06:24 AM PST உலகின் மிகப் பெரிய online shopping இணையதளமான amazon.com இந்தியாவில் இன்று முதல் junglee.com என்ற பெயரில் அறிமுகம் ஆகிறது. http://www.junglee.com/ junglee.com-ல் சுமார் 1 கோடியே 20 லட்சம் பொருட்கள் விற்பனைக்கு வருகின்றன. இதில் 14,000 இந்திய மற்றும் பன்னாட்டு பிராண்டுகள் உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்கள் பொருட்களின் விலைகளை ஒப்பு நோக்கி பரிசீலிப்பதற்கான வசதிகளையும் ஜங்லீ செய்துள்ளது. ஆனால் கொள்முதல் மூன்றாம் நபர் சில்லறை விற்பனையாளர்கள் network மூலமே செய்ய முடியும். இனிமேல் ... |
| வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க! Posted: 29 Feb 2012 05:49 AM PST வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க! பருவ நிலை மாற்றத்தினால் கோடை காலத்திற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. வெப்பத்தினால் புழுக்கம் அதிகம் இருந்தாலும் மின்தடைவேறு வெப்பத்தின் கடுமையை அதிகப்படுத்துகிறது. பெரியவர்களினாலேயே வெப்பத்தை சமாளிக்க முடியாத நிலையில் பச்சிளம் குழந்தைகளின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. கோடைவெப்பத்தில் இருந்து இளம் சிசுக்களை பாதுகாக்க சில டிப்ஸ்… வியர்வை கவனம் கோடை காலத்தில் குழந்தைகளுக்கு அதிகம் வியர்த்துக் கொட்டும். இதனால் உடைகள் நனைந்து அவர்களுக்கு ... |
| இவை உங்களின் மேலான விமர்சனத்திற்கு..... Posted: 29 Feb 2012 05:43 AM PST நிலவில் தெரியும் பாட்டியும்... வடை சுட்டுக் கொண்டிருப்பதாய்தான் சொல்லிக் கொண்டிருந்தாள் அம்மா. காகமோ, நரியோ அங்கு இருந்ததா -என்று அம்மாவுக்குத் தெரியாததால்.. அங்கே-ஏமாந்தது யார் என்று தெரியவில்லை. நீல் ஆம்ஸ்டிராங்க் நிலவில் கால் வைக்கும் முன்னிருந்தே இந்தக் கதை சொன்ன அம்மாவிற்கு... நிலவில் கால் வைத்தவருக்கு.. அங்கே வடை கிடைத்ததா? என்ற கதையும் தெரியவில்லை. ******************************************************* எனது தலை அணிந்துகொண்டுவிட்டது எனது பெயரை. நீ கூப்பிடும் போதும் திரும்புகிறது. நீ ... |
| Posted: 29 Feb 2012 05:42 AM PST பள்ளிக்கூடத்துச் சுவர்கள் வெறுப்பில் வளைந்து நெளிகிறது.... அதன் முதுகில் எல்லாம் "வயது வந்தவர்களுக்கு மட்டும்". ********************************* இரவு தொலைத்துவிடுவது வெளிச்சத்தை மட்டும் இல்லை. ********************************** கோவில் தூண்கள் காதைத் தீட்டிக் கொள்கின்றன... "ஊர் வம்பு"...ஆரம்பம். ************************************ சுதந்திர தேசம்... யார் அனுமதியும் தேவை இல்லை... "மூச்சு விட" மட்டும். *********************************** மரங்களின் அழுகையை பறவைகள் மொழிபெயர்க்கின்றன... இலையுதிர்காலம். ************************************ நீ ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
