சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- வி.எல்.சி மீடியா பிளேயர் மென்பொருளின் புதிய தொகுப்பினை தரவிறக்கம் செய்ய
- நீங்களும் 1 கோடி வெல்லலாம் ..//
- ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்' பண்ணிடாதீங்க...
- விநாயகரிடம் அருள் பெறும் வழிகள்..//
- அறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம்
- Suja Varunee New Images
- Dhansika Latest Photos
- Tanvi Lonkar New Images
- Lovely Movie New Stills
- Lovely Movie On Location Images
- Madhurima Hot Images
- Poola Rangadu Movie Success Meet Images
- Surya and Kajal Movie Press Meet Images
- Jeeva Nadhi Book Launch Images
- Yarukku Theriyum Movie Stills
- Gopichand Yeleti Movie Launch Images
- Poo Pookum Osai Movie Launch Images
- வாலி வரிகளில் கோச்சடையான் பாடல்
- கொலவெறி படத்தில் ரஜினி - உண்மை என்ன?
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர்
- 45 மாணவர்களுடன் ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: 2 மாணவர்கள் உடல்கள் மீட்பு
- மருத்துவ பரிசோதனைக்காக சோனியா மீண்டும் அமெரிக்கா பயணம்
- பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்று 'சிக்'கென்ற உடல் வேண்டுமா?
- திருப்பரமபதம்
- அஞ்சநேயர் ஜெயந்தி விரதம்.//
| வி.எல்.சி மீடியா பிளேயர் மென்பொருளின் புதிய தொகுப்பினை தரவிறக்கம் செய்ய Posted: 28 Feb 2012 08:43 AM PST இணையத்தில் பல இலவச மீடியா பிளேயர் மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் பெரும்பாலானவர்களின் தெரிவாகக் திகழ்வது VLC Media Player மென்பொருளாகும். இம் மென்பொருளில் உள்ள பல பயனுள்ள வசதிகளால் வாசகர்களை இது எளிதில் கவர்கிறது. இப்பொழுது VLC நிறுவனத்தினர் தங்களது மென்பொருளில் இருந்த சில கோளாறுகளை தீர்த்து புதிய வெர்சனை வெளியிட்டு உள்ளனர். இது VLC2.0 "Two Flower" என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படுத்தப்பட்டுள்ள சில புதிய மாற்றங்கள்: மீடியோ கோப்புக்களை வேகமாக திறந்து நமக்கு வேகமாக காட்டுகிறது. புதிய வீடியோ போர்மட்களை சப்போர்ட் செய்கிறது குறிப்பாக HD மற்றும் 10codecs சிறு சிறு பிழைகள் பலவற்றை நீக்கி மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. Mac கணினிகளுக்கு தோற்றத்தை மாற்றி உள்ளது. மற்றும் பல மாற்றங்களை இந்த புதிய வெர்சனில் செய்து உள்ளனர். இதனை தரவிறக்கம் செய்ய: VLC2.0 - Windows - Download VLC2.0 - Mac OS X - Download VLC2.0 - Other computer versions -Download This posting includes an audio/video/photo media file: Download Now |
| நீங்களும் 1 கோடி வெல்லலாம் ..// Posted: 28 Feb 2012 08:13 AM PST ![]() |
| ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்' பண்ணிடாதீங்க... Posted: 28 Feb 2012 08:11 AM PST எல்லா சீசனிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று... ஆரஞ்சு. பல நோய்களை முன்கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும் இதில் உண்டு. சில உணவுகளை சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த பித்த நீர், ரத்தத்தில் கலந்து ரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் ரத்தம் அசுத்த மடைகிறது. மேலும், பித்த நீர், தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. அதோடு ஞாபக மறதியும் ஏற்படுகிறது. சருமத்தை பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து ரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து ரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர். இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதை தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாகத் திகழ்கிறது ஆரஞ்சு. ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் ரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருப்பது ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரஞ்சு பழச்சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கிறது. உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. ஸோ... ஆரஞ்சை எங்கேப் பார்த்தாலும் `மிஸ்' பண்ணிடாதீங்க... |
| விநாயகரிடம் அருள் பெறும் வழிகள்..// Posted: 28 Feb 2012 08:07 AM PST * செவ்வாய்க்கிழமையும், சனிக்கிழமையும் விநாயகருக்கு உகந்த நாட்கள். அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்க வேண்டும். * சுக்ல சதுர்த்தசி அன்று அருகம் புல்லை விநாயகருக்குச் சாற்றி வழிபட்டால் செயல்கள் பெற்றி பெறும். * வலம்புரி விநாயகருடைய திருமேனியைச் சங்கடஹர சதுர்த்தியன்று அபிஷேக காலத்தில் வணங்கி நல்லருள் பெறலாம். * மஞ்சள் பிள்ளையாரை 48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணக்காலம் விரைவில் வரும். * நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும். * வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் அகலில் ஏற்றி வர குடும்பத்தில் வறுமை விலகும். * சதுர்த்தியன்று அரிசி நொய்யைச் சாதமாக்கி பிள்ளையார் எறும்புப் புற்றில் பிள்ளைகளாய் பாவித்துத் தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார். * உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குப் படிப்பு வர வேண்டும் என்றால் சுக்ல சதுர்த்தி நாளில் குழந்தை பெயரில் விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்து பென்சில் நோட்டுக்களை 11 குழந்தைகளுக்கு இனிப்புடன் தானம் செய்ய வேண்டும். * நாக்குப் பிறழாத குழந்தைகளுக்குத் தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும். |
| அறிவு, ஆரோக்கியம் தரும் ஸ்லோகம் Posted: 28 Feb 2012 08:05 AM PST ஓம் அச்வ த்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத் - இது சூரியனுக்குரிய காயத்ரி மந்திரம். இதேபோல் ராமபிரான், ராவணனை வெற்றி கொள்ள வேண்டுமானால் சூரிய பகவானைத் துதிக்க வேண்டும் என்று அகத்திய முனிவர் உபதேசித்த ஸ்தோத்திரம்தான் ஆதித்ய ஹ்ருதயம். காயத்ரி மந்திரமும், ஆதித்ய ஆரோக்கியத்தையும் அறிவுத் திறனையும் கொடுக்க கூடியவை. |
| Posted: 28 Feb 2012 07:54 AM PST |
| Posted: 28 Feb 2012 07:48 AM PST |
| Posted: 28 Feb 2012 07:47 AM PST |
| Posted: 28 Feb 2012 07:46 AM PST |
| Lovely Movie On Location Images Posted: 28 Feb 2012 07:46 AM PST |
| Posted: 28 Feb 2012 07:44 AM PST |
| Poola Rangadu Movie Success Meet Images Posted: 28 Feb 2012 07:44 AM PST |
| Surya and Kajal Movie Press Meet Images Posted: 28 Feb 2012 07:43 AM PST Surya and Kajal Agarwal starring Duplicate Telugu Movie Press Meet at Hyderabad gallery, Maatran dubbed Telugu version Duplicate press mett stills, Suriya, Kajal Agarwal, KV Anand, KE Gnanavel Raja, Peter Hein, Bellamkonda Suresh at Duplicate Telugu Movie Press Meet pictures, pics, photos, images, CLICK THE IMAGE TO VIEW IN FULL SIZE |
| Jeeva Nadhi Book Launch Images Posted: 28 Feb 2012 07:39 AM PST |
| Posted: 28 Feb 2012 07:38 AM PST |
| Gopichand Yeleti Movie Launch Images Posted: 28 Feb 2012 07:38 AM PST |
| Poo Pookum Osai Movie Launch Images Posted: 28 Feb 2012 07:37 AM PST |
| வாலி வரிகளில் கோச்சடையான் பாடல் Posted: 28 Feb 2012 07:34 AM PST கோச்சடையான் படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் நாம் நினைப்பதைவிட வேகமாக நடந்து வருகின்றன. முக்கியமாக இசை. ஏ.ஆர்.ரஹ்மான் கோச்சடையானுக்கு இசையமைக்கிறார். இவரது டியூன் கிடைக்க இப்போதெல்லாம் தவமிருக்க வேண்டும். ஹாலிவுட், பாலிவுட், தனி ஆல்பம் என்று இசைப்புயலுக்கு கரை ஒதுங்க நேரமில்லை, உலகமெல்லாம் வீசிக் கொண்டேயிருக்கிறது புயல். ஆனாலும் ரஜினி படமென்றால் விசேஷமில்லையா. படப்பிடிப்பு தொடங்கும் முன்பே வாலி வரிகளில் ஒரு பாடலை ஒலிப்பதிவு செய்திருக்கிறார் என்கின்றன நம்பத்தகுந்த வட்டாரங்கள். இந்தப் படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, கல்யாணி, நாசர் உள்ளிட்டோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது. |
| கொலவெறி படத்தில் ரஜினி - உண்மை என்ன? Posted: 28 Feb 2012 07:32 AM PST 3 என்று சொன்னால் பலருக்குத் தெரியவில்லை. கொலவெறி என்றால்தான் தெரிகிறது. ஒரேயொரு பாடலை வைத்து எவ்வளவு பிரபலமான - கவனிக்க புகழடைந்த அல்ல - படம் கொலவெ... ஸாரி 3 படமாகதான் இருக்கும். படத்தை ஏலத்தில் விடப்போறார் கஸ்தூரிராஜா என்கிற அளவுக்கு படத்தை வாங்க போட்டா போட்டி. இது போதாது என்று படத்துக்கு மேலும் பூஸ்ட் ஏற்றுவதற்காக ரஜினி நடிக்கிறார் என்றொரு வால் செய்தியையும் சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி ஆட்டிக் காண்பிக்கிறார்கள். முக்கியமான நடிகர் ஒருவர் 3ல் இருக்கிறார். அவர் யார் என்பது சஸ்பென்ஸ் என கஸ்தூரிராஜா வால் செய்திக்கு வலிமையூட்டி வருகிறார். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் ரஜினி 3 படத்தில் நடிக்கவில்லை என்பதுதானாம். அவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் குசேலன் படத்தின் பில்டப்பில் தடுக்கியது போல் 3 விஷயத்திலும் ஏமாற வேண்டாம் என ரஜினி நலம் விரும்பிகள் கேட்டுள்ளனர். சொன்னதை சொல்லிட்டோம். |
| நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காலிஃப்ளவர் Posted: 28 Feb 2012 06:59 AM PST நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. இந்த பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் ஆண்டி ஆக்ஸிடேசன் அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் உட்பட பல்வேறு சத்துக்களும் காணப்படுகின்றன. மேலும் பீட்டா கரோட்டீன் போன்றவையும் உள்ள சத்தான உணவாகும். இதன் மூலம் மன அழுத்தம், இதய நோய்களும் குணமாகும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். ஒபிசிட்டி குணமடையும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. வயிறுக்கு இதமளித்து வயிறு தொடர்புடைய நோய்களை குணமாக்குகிறது. அல்சர் மற்றும் குடல் புற்றுநோயையும் கட்டுப்படுத்துகிறது. இது சூட்டை தணிக்கும் தன்மையுடையது, மூலத்தை கட்டுப்படுத்துகிறது, மலச்சிக்கலைப் போக்கும். உடல் இளைத்தவர்களுக்கு இது சத்தானது. தினம் காலிஃப்ளவரை சமையலில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பாக குண்டாகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைட்டமின் பி1, 2, 3, 5, 6 மற்றும் பி9 வைட்டமின்கள் காணப்படுகின்றன. மேலும் புரதச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் காணப்படுகின்றன. சத்தான காலிஃப்ளவர் வாரம் இருமுறை உட்கொண்டால் உடல் நலம் பெறும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். |
| 45 மாணவர்களுடன் ஆற்றில் பஸ் கவிழ்ந்தது: 2 மாணவர்கள் உடல்கள் மீட்பு Posted: 28 Feb 2012 06:16 AM PST |
| மருத்துவ பரிசோதனைக்காக சோனியா மீண்டும் அமெரிக்கா பயணம் Posted: 28 Feb 2012 03:11 AM PST காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன் திரிவேதி கூறுகையில், சோனியாவின் அமெரிக்க பயணம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குத்தான் அவர் சென்றுள்ளார் என்றார். ஐந்து நாட்கள் அமெரிக்காவில் தங்கியிருந்து சோனியா சிகிச்சை பெற உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமும் திடீரென சோனியா புறப்பட்டுச் சென்று சிகிச்சை பெற்று வந்தார். |
| பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்று 'சிக்'கென்ற உடல் வேண்டுமா? Posted: 28 Feb 2012 03:03 AM PST இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் எப்படி சிக்கென்று இருக்கின்றார் என்று தெரியுமா? நம்ம ஊர் பெண்கள் ஒரு குழந்தை பெற்றுவிட்டாலே புஸ் என்று ஊதிவிடுகின்றனர். உடல் எடையைக் குறைத்து சிக்கென்று இருக்க வேண்டும் என்று கூறினாலும், அது தான் புள்ளையப் பெத்தாச்சுல இனி என்னத்த உடம்ப சிக்குன்னு வைக்க என்று கேட்பார்கள். அப்படி இருக்கையில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் எப்படி சிக்கென்று இருக்கின்றார் என்பதைப் பார்ப்போம். அவர் எப்பொழுதுமே பிரவுன் கலர் அரிசிச் சோறும், கொழுப்புச் சத்து குறைவாகவுள்ள கோழிக்கறி மற்றும் மீன் வகைகளை சாப்பிடுவாராம். இனி்ப்பு சாப்பிட்டால் எடை கூடும் என்பதால் அவர் பழச்சாறுகள் குடிப்பதைக் கூட நிறுத்திவிட்டார். ஜங்க் புட் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். ஆனால் அவற்றை சாப்பிட்டால் பலூன் மாதிரி ஊதிவிடுவோம் என்ற பயத்தால் சாப்பிடுவதில்லை. சிறு, சிறு இடைவேளைகளில் கொஞ்சம், கொஞ்சம் சாப்பிடுவது தான் அவரது எடையைக் குறைக்க உதவுகிறது. அதாவது மூன்று நேரம் உணவு உண்பதற்கு பதில் அவர் கொஞ்சமாக 5 வேளை உண்கிறார். இது தவிர அவர் புரோட்டீன் சத்துள்ள முட்டைகள், கோழிக்கறி, மீன் மற்றும் கீரை வகைகளை உட்கொள்கிறார். அவருக்கு நிறைய காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. அதனால் கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலில் போடப்படும் காபியை மட்டுமே குடிக்கிறார். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்கிறார். பிரிட்னி ஸ்பியர்ஸின் ரகசியம் தெரிந்துவிட்டதல்லவா? இனி நீங்களும் உங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள். |
| Posted: 28 Feb 2012 03:00 AM PST ஸ்தல வரலாறு...... பரமபதம்தான் பெருமாள் எப்பொழுதும் நித்தியவாசம் செய்கிற புண்ணியமான தலம். இங்கு தான் ஜீவாத்மாக்கள் பகவானைப் போலவே உருவம் கொண்டு, பகவானுக்கு சதாசர்வ காலமும் கைங்கர்யம் செய்து கொண்டிருப்பார்கள். திருப்பாற்கடலை தரிசனம் செய்தவர்களுக்கெல்லாம் நிச்சயம் பரமபதத்தில் இடம் உண்டு. பெருமாள் மூலவரும் அவரே உத்ஸவரும் அவரே வீற்றிருந்த திருக்கோலத்தில் தெற்கே தரிசனம் கொடுத்துக் கொண்டிருப்பார். தாயார் பெரிய பிராட்டியார். இந்த இடத்தில் நுழைகிறவர்கள் யாருக்கும் மறுபிறவி கிடையாது. பரமபதமே முத்திப் பதம் ஆகும். அடியவர்களைத் திருமாலே தன் திருநாட்டுக்கு அழைச் செல்கிறார் என்பது ஐதீகம். திருநாட்டைப் பற்றி ராமானுஜர் வேதாந்த சங்கிரகம் என்னும் நூலில் நேரில் காண்பது போன்று அருளிச் செய்கிறார். பெருமாள் சங்கு சக்கர கதையுடன் காயாம்பூ இதழ் போன்ற வண்ணத்தில் பல கோடி சூரிய ஒளி விளங்கச் சேவை சாதிக்கிறார். தாமரை மலர் போன்ற கண்களும், தோள்வளை, மாலை, காலில் சதங்கையுடன் திருமேனியில் சந்தனமும் விளங்க இருப்பவர். பட்டாடை புனைந்து ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி, நீளா தேவி விளங்க, நித்தியர்களும், முத்தர்களும் முக்காலமும் தொழுதவாறு இருக்கத் திகழ்கிறார். இது பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை யாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகிய எட்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதி. வைகுண்டத்திற்கு வரும் பக்தர்களை பகவானே வாசலில் நின்று வரவேற்று தன்னுடைய பரமபத தேசத்தில் அவர்களை நிரந்தரமாக்கி மகிழ்த்துக் கொண்டிப்பான் என்று ராமானுஜர் சொல்லி இருக்கிறார். இந்த பாக்கியம் கிட்ட நாம் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். |
| Posted: 28 Feb 2012 02:58 AM PST ஆஞ்சநேயர் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரம் அமாவாசைத் திதியில் வரும். அன்று அதிகாலை நீராடி உணவருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆஞ்சநேயருக்கு பிடித்தமான துளசியால் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது. காலையில் பொரியும், பழமும் மட்டும் உண்ண வேண்டும். மதியம் இரவு பால், பழம், பொரி சாப்பிடுவது நல்லது. அன்று முழுவதும் ஆஞ்சநேயர் புராணம், ராமாயணம் படித்தல் வேண்டும். மாலையில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை, பொரி, பழம், கற்கண்டு, இளநீர் நிவேதனம் செய்து வணங்குதல் வேண்டும். இவ்விரதம் இருந்தால் பிரிந்தவர்கள் கணவன்-மனைவி கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் ஒன்று சேர்வார்கள். பிணக்குகள் நீங்கும். ஆஞ்சநேயர் அருள் கிடைக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவது மிகவும் விசேஷம். அவருக்கு வாலில் குங்குமப் பொட்டு வைத்து வழிபடுவது கூடுதல் பலன்கள் தரும். இந்த வழிபாடுகளை பெரியவர்களிடம் கேட்டு ஐதீகப்படி செய்தால் உரிய பலன்கள் நிச்சயம் கிடைக்கும். |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

























































































































































