I tamil web

I tamil web


இரத்தப் பரிசோதனை மூலம் மார்பகப் புற்றுநோயை இனங்காணலாம்!

Posted: 03 May 2012 06:35 AM PDT


மார்பக புற்றுநோயை அது உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தகைய பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கமுடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.


கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர் 1380 பெண்களின் இரத்த மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டனர். இவர்களை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். காலப்போக்கில் இவர்களில் 640 பேருக்கு மார்பக புற்றுநோய் உருவானது.


இந்த 640 பேரின் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் இருக்கும் ஏடிஎம் எனப்படும் குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் மாறுதல் இந்த பெண்களின் மார்பக புற்றுநோயை தூண்டியதாக இந்த ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இதன் அடுத்த கட்டமாக, இந்த குறிப்பிட்ட மரபணு ஏன் மாற்றமடைகிறது என்பதை இவர்கள் ஆராய்ந்தபோது, இந்த மரபணுவின் மேற்புறத்தில் இருக்கும் மிதைலேடன் எனப்படும் குறிப்பிட்ட ரசாயனப்பொருளில் ஏற்படும் மாற்றமே, மரபணுவின் மாற்றத்தை தூண்டுவதை இவர்கள் கண்டுபிடித்தனர்.


எனவே, ஒரு பெண்ணின் இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களில் இந்த குறிப்பிட்ட மிதைலேடன் என்கிற ரசாயனம் அதிகரித்து காணப்பட்டால் அந்த பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய் உருவாவதற்கான சாத்தியம் இரண்டுமடங்கு அதிகம் இருப்பதாக இவர்கள் கணித்திருக்கிறார்கள். இவர்களின் இந்த கணிப்பை, மார்பக புற்றுநோய் உருவான 640 பெண்களின் இரத்த மாதிரிகளில் காணப்பட்ட அதிகரித்த மிதைலேடன் உறுதி செய்ததாக இந்த ஆய்வுக்கு தலைமை தாங்கிய மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.


இந்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில், இனிமேல் பெண்கள் எளிய இரத்த பரிசோதனை மூலம் தங்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடுமா என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய முடியும் என்பது மருத்துவ உலகின் நம்பிக்கையாக இருக்கிறது. அப்படி கண்டுபிடிப்பதன் மூலம் அந்த பெண்கள் மார்பக புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை முன் கூட்டியே எடுத்து அந்த நோயை ஒன்று தடுக்கலாம் அல்லது மார்பக புற்றுநோய் உருவாவதை மேலும் தள்ளிப்போடலாம் என்று இவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.


இந்த ஆய்வின் முடிவுகள், மார்பக புற்றுநோய் தடுப்பில் மட்டுமல்ல மரபணு மூலக்கூறுகள் எப்படி செயற்படுகின்றன என்கிற துறையிலும் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியிருப்பதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது மரபணுக்காரணிகள் எப்படி மாற்றமடைகின்றன என்பதற்கான புதிய புரிதலையும் இந்த ஆய்வு வழங்கியிருப்பதாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

குழந்தை விடயத்தில் மனைவியிடம் திட்டு வாங்கிய அமீர்கான்! (வீடியோ இணைப்பு)

Posted: 03 May 2012 06:23 AM PDT

பாலிவுட் நடிகர் அமீர்கானை அவரது மனைவி கிரண் ராவ் கடிந்து கொண்ட விஷயம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமீர்கான் – கிரண்ராவ் தம்பதியினருக்கு 5 மாதங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது.


அந்தக் குழந்தையை, அமீர்கான் விரைவில் வெளியாக இருக்கும் தனது முதல் தொலைக்காட்சி ரியால்டி ஷோ சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் புரோமோஷனுக்காக பயன்படுத்தியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறாராம் கிரண் ராவ்.

நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால் உயிர் துறக்கும் நபர்!

Posted: 03 May 2012 06:20 AM PDT


இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 67 வயதான ஒருவர், நரம்பு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோய் காரணமாக, அவரால் பேசவோ, எழுதவோ முடியாது. அவருக்கு குழாய் மூலமாகவே உணவும், தண்ணீரும் கொடுக்கப்பட்டு வருகிறது.மேலும், செயற்கை சுவாச கருவியும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், குடும்பத்துக்கு பாரமாக இருப்பதை விரும்பாத அவர், தான் மரணம் அடைவதற்கு அனுமதி வழங்கக்கோரி, கோர்ட்டை அணுகினார்.


ஒரு மருத்துவர், சமூக சேவகர் ஆகியோரின் முன்னிலையில், அவருடைய மனைவியின் ஒப்புதலுடன் இம்மனு தயாரிக்கப்பட்டது. இம்மனுவை விசாரித்த பெண் நீதிபதி தீய்ஸ், அந்த மனிதர் அமைதியான முறையில் இறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


அதற்காக, அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து வரும் கருவியை துண்டித்து விட்டு, அவர் மரணம் அடைய வழிவகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இங்கிலாந்தில், கடந்த 1993-ம் ஆண்டிலேயே டோனி பிளாண்ட் என்பவர் மரணம் அடைவதற்கு கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

பூனையைக் கதிகலங்க வைத்த மீன்! (வீடியோ இணைப்பு)

Posted: 02 May 2012 10:21 PM PDT

பூனையார் ஒருவர் மீன் தொட்டியிலுள்ள மீன்களை உணவாக்க தருணம் பார்த்துக்கொண்டிருந்த சமயம் தொட்டியிலுள்ள பெரிய மீன் ஒன்று அறிந்தும் அறியாமலும் பூனையை மிரள வைத்து அனுப்பியுள்ளது.





நாயிருக்க பூட்டு எதற்கு? (வீடியோ இணைப்பு)

Posted: 02 May 2012 10:09 PM PDT


காவல் காப்பதற்கு பெயர்பெற்ற மிருகமான நாய் ஒன்று தனது முதலாளியின் துவிச்சக்கர வண்டியை மிகவும் கவனமாகப் பாதுகாக்கின்றது.


இவ்வாறு சாலையோரங்களில் நிற்கும் நாய்கள் ஒவ்வொன்றும் காவல் காக்க தயாரானால் பூட்டு எதற்கு?



நவீன உலகில் அசத்தும் முப்பரிமாணப் பிரண்டர்கள்! (படங்கள், வீடியோ)

Posted: 02 May 2012 09:05 PM PDT


கணினியின் உதவி கொண்டு செய்யப்படும் வேலைகளை நமது தேவை கருதி பிரிண்கள் எடுப்பதற்கு இதுவரையில் இருபரிமாணப் பிரிண்டர்கள் பயன்பட்டன.


தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக முப்பரிமாணப் பிரிண்டர்களின் அவதாரமும் இடம்பெற்றுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி முப்பரிமாண தோற்றம் கொண்ட உபகரணங்களை வடிவமைக்க முடியும்.




உடலுறவின் போது கிளைமாக்ஸ் சரியில்லையா? பெண்களே ஆபத்து!

Posted: 02 May 2012 08:49 PM PDT


தாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் எனும் ஆர்கஸம் எனும் கிளைமேக்ஸ் சரியாக அமையாவிட்டால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தாம்பத்திய உறவில் ஈடுபடுவோரால் தொடர்ந்து ஆர்கஸத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!


உறவின் போது உச்சக்கட்டம் என்பது பால் உறுப்புகளின் தூண்டுதலில் தொடங்கி, உடலளவிலான பலவகையான மாற்றங்களையும், மனதளவிலான சில மாற்றங்களையும் உள்ளடக்கிய ஒரு எழுச்சி நிலை. இந்த எழுச்சி நிலைக்கு உடலின் பல்வேறு பாலுறுப்புகளிலிருந்து மூளைக்கு செல்லும் ரசாயன சமிக்ஞைகளும், அதற்கான மூளையின் எதிர்வினையாய் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் உடலியக்க மாற்றங்களுமே காரணம்! இதனைத்தான் ஆங்கிலத்தில் ஆர்கஸம் என்கிறார்கள்.



  • அனார்கஸ்மியா குறைபாடு



உறவில் ஈடுபடும் அனைவருக்குமே ஆர்கஸத்தை அடைவதுதான் குறிக்கோள். ஆனாலும், இது பலருக்கும் எட்டாக்கனியாகவே இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆரம்பம் நன்றாக அமைந்து கிளைமாக்ஸ் சரியில்லை என்றால் எதையோ இழந்த உணர்ந்த உடனே காணப்படுகின்றனர் தம்பதியர்.


குறிப்பாக பெண்களுக்கு ஆர்கஸம் என்ற நிலை எட்டப்படவில்லை எனில் எரிச்சல், மன அழுத்தம் போன்றவை கூட ஏற்படுகிறதாம். செக்ஸில் ஈடுபடுவோரால் தொடர்ந்து உச்சக்கட்டத்தை அடையமுடியவில்லையென்றால் அது அனார்கஸ்மியா (anorgasmia) எனும் செக்ஸ் குறைபாட்டில்தான் முடியும் என்கிறார்கள் பாலியல்துறை ஆய்வாளர்கள்!



  • வாழ்க்கைத்தரம் பாதிக்கும்.



அனார்கஸ்மியா குறைபாடு ஒருவரின் வாழ்க்கைத்தரத்தையும், உறவுகளையும் பாதிக்கக்கூடியது என்கிறார் அமெரிக்காவின், லாஸ் ஏஞ்ஜலீஸிலுள்ள செடார் சினாய் மருத்துவ மையத்தின் உளவியல் ஆய்வாளர் வாகி வில்லியம் இஷக்!


கடந்த 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 20 முதல் 40 வயதான பெண்களில், சுமார் 24% பெண்களுக்கு மாதக்கணக்கில் உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை இருப்பது கண்டறியப்பட்டது என்றும், அனார்கஸ்மியா குறைபாட்டினால் அவதிப்படும் இவர்களில் ஒரு சிலரே மருத்துவரை நாடுகிறார்கள் என்றும் கூறுகிறார் விஞ்ஞானி இஷக்! காரணம், சமுதாயத்தில் செக்ஸ் செயல்பாடில் திறமையின்மை என்பது ஒரு அவமானமாக கருதப்படுகிறது என்பதே.


உளவியல் விஞ்ஞானி இஷக் தலைமையில் சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பது பெண்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டது. மேலும் நான்கில் ஒரு பெண்ணுக்கு பகல்கனவாகவே இருக்கும் ஆர்கஸம் குறைபாட்டை தீர்க்க மருத்துவமும், இதுவரையிலான ஆய்வுகளும் போதவில்லை என்று தெரியவந்துள்ளது!



  • 101 ஆய்வுகள், முடிவுகள்



பெண்களின் ஆர்கஸம் குறைபாடு குறித்து இதுவரை நடத்தப்பட்ட 101 ஆய்வுகளை அலசிய இந்த ஆய்வில், பெண்களின் செக்ஸ் பிரச்சினைகளிலேயே இரண்டாவது தலையாய பிரச்சினையான உச்சக்கட்டத்தை எட்டமுடியாமை என்பதற்க்கான சிகிச்சைகள் மிக மிகக் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது என்கிறார்கள் இஷக் தலைமையிலான ஆய்வுக்குழுவினர்!



  • உளவியல் சிகிச்சை



ஆர்கஸம் தொடர்பான பிரச்சினை காரணமாக ஒருவர் மருத்துவரை அணுகினாலும், தீர்வுக்கான சிகிச்சை சிக்கலானது. காரணம், ஆர்கஸத்தைப் பொருத்தவரை இத்தனை நாட்களில், இத்தனை தரம் உச்சக்கட்டத்தை அடைவதுதான் இயல்பானது என்று சொல்லும் ஒரு திட்டவட்டமான வரையரை கிடையாது! ஆக, மருத்துவர்கள் நோயாளிகளின் வயது, செக்ஸ் அனுபவம் மற்றும் திருப்தி ஆகியவற்றைக் கொண்டே ஒரு தீர்வை காண முயலவேண்டும் என்கிறார் இஷக்!. தரமான வாழ்க்கையை வாழக்கூடிய ஒரு மனிதச் சமுதாயத்தை உருவாக்க, செக்ஸ் குறைபாடுகளை தீர்க்க வேண்டியது மிக மிக அவசியம் என்று கூறியுள்ளார் ஆய்வாளர் இஷக்!!