தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


அன்றைய ரோஜா .""" """

Posted: 06 May 2012 07:21 PM PDT

உனக்காக தினமும் என் கரத்தில் ரோஜாவை வைத்து காத்து கொண்டு இருப்பேன் உன்னிடத்தில் என் காதலை சொல்ல என் கரத்தை தாண்டி உன் கரத்தை தீண்ட துடித்து கொண்டு இருக்கும் ரோஜாவை உன்னை கண்டதும் மறைத்து விடுவேன் . இன்றாவது பூவை தந்து காதலை சொல்ல தயங்கும் என் மனதை கண்டு சிரிக்கும் கடவுளுக்கு அதை கணிக்கை தந்து விடுவேன் தினமும் அதை ... கடவுளுக்கு கண்ணீர் விட்டு தன் குடும்ப கஷ்டத்தை சொல்லும் கருபாயி பாட்டி. பாட்டிக்கு பூக்கடையில் எனது ரோஜாதான் அன்றைய வருமானம் ...உன்னிடத்தில் என் ...

புதிய மெனு பட்டை அறிமுகம்

Posted: 06 May 2012 07:20 PM PDT

புத்தம் புதிதாக மெனு பட்டயை அறிமுகப் படுத்தி அதிலே பற்பல திரிகளை நாடிச் செல்ல வழி வகுக்கும் பீச்சரை தந்து அதோடு கோடிங் முறையில் நம் பெயரையும் சொல்லி வணக்கம் என்று சொல்லும் அழகைத் தந்த சிவாவுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.

பதவி மோகம் ???

Posted: 06 May 2012 06:54 PM PDT

ஷாஜஹான் மன்னருக்கு தனது மூத்த மகன் ' குர்ரம் ' மீது அளவு கடந்த பிரியம் . எப்பவும் தன்னோட பக்கத்திலேயே வச்சுகிட்டு ராஜகாரியங்களை எப்படி எப்படி செய்யவேண்டும்னு வாய்மொழியா போதிப்பாராம் . தனக்குப்பின் அவன்தான் அரியணையில் அமர வேண்டும்னு குறிக்கோளோட செயல்பட்டாராம் . அவரது ஏழாவது மகன் ஔரங்கசீப் மகாமுரடன் .எப்பொழுதும் சண்டை , போராட்டம்னு ஈடுபடுவானாம் . அதனால , அவருக்கு ஔரங்கசீப்பையே பிடிக்காது . நாட்ல எங்காவது கலவரம் , அண்டை நாட்டு மன்னன் தொல்லை, எல்லைத் தகராறுன்னா ஔரங்கசீப்பை அங்கு அனுப்பிவிடுவார் ...

காதல் செடி.........

Posted: 06 May 2012 06:39 PM PDT

பூத்தால் பறித்து
விடுவாய் என்று
தெரிந்துதான்
உன்னுள் பூக்காமலே
வளர்ந்து கொண்டு
இருகிறது என்
காதல் செடி...........
-----------------------------------------------------
ரோஜாவில்
இருந்து உதிர்த்த
ஒற்றை இதழை
ஒட்ட துடிக்கும்
உன் மனதை
பார்ததும் பூத்து
விட்டது என் மன ரோஜா ................
----------------------------------------------------

5000 பதிவுகளை கடந்த நண்பர் பிரசன்னாவை வாழ்த்துவோம்

Posted: 06 May 2012 05:27 PM PDT

5000 பதிவுகளை கடந்த நண்பர் பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள்

குடும்ப விளக்கு – தமிழ் பண்பாடு அறிவோம் – தொடர் பதிவு

Posted: 06 May 2012 12:53 PM PDT

குடும்ப விளக்கு - பாவேந்தர் பாரதிதாசன் எழுதியது – முதற்பகுதி ஒரு நாள் நிகழ்ச்சி - அகவல் - 1 . காலை மலர்ந்தது இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை, இரவு போர்த்த இருள் நீங்கவில்லை. ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல், நள்ளிரவு மெதுவாய் நடந்துகொண் டிருந்தது. தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள்தன் கட்டுக் குலைந்தது. புலர்ந்திடப் போகும் பொழுது, கட்டிலில் மலர்ந்தன அந்த மங்கையின் விழிகள். விளக்கம்: காலைக் கதிரவனின் கதிர்கள் கிழக்குத்திசையில் இன்னும் வரவில்லை. இருள் என்ற ...

எலுமிச்சை

Posted: 06 May 2012 11:58 AM PDT

எலுமிச்சை சிலிர்க்க வைக்கும் நிவாரணத்தோடுப் பிதிங்கி நிற்கிறேன்; கர்ப்பவதியைப் போல! துவண்டுப்போன மேனியைப் பளப்பளக்க; கொழுத்து நிற்கும் பொடுகிற்குப் பொடிவைத்து அடிக்கொடுக்க; பருக்களுக்குப் பாரமாய்; களைப்பிற்குத் தூரமாய்! அடுக்கிவைக்கும் ஆரோக்கியம் ஆயிரம் கொண்டாலும்; வாகனத்தின் திருஷ்டியைக் கழிக்க; சக்கரத்திற்கு அடியில் என்னைத் திணித்து; இளித்து நிற்கும் மனிதர்களுக்கு மத்தியில் மணமாய் நான்!http://itzyasa.blogspot.com/2012/05/blog-post_05.html

பெண்கள் மட்டும் ஆளும்உலகம்!

Posted: 06 May 2012 11:37 AM PDT

பெண்கள் மட்டும் ஆளும்உலகம்! : parthenogenesis பொதுவாக இயற்கை முறையில் ஒரு உயிர் உருவாக வேண்டுமென்றால் ஆண்-பெண் இனப்பெருக்க உறவு முறை மூலமே சாத்தியமாகின்றது. ஆனால், பல புழுவகைகளில் பெண் இனம் மட்டுமே இருக்கின்றன. அவற்றில் ஆண்கள் இருப்பதில்லை! ஆம், அவ் புழு வகைகள் இனப்பெருக்கம் அடைவதற்கு ஆண்களின் துணை தேவைப்படுவதில்லை. பெண் புழுவே இனப்பெருக்க காலத்தின் போது கரு முட்டைகளை உருவாக்கிக்கொள்கின்றன. நம்ம மண்புழுக்கள் (Earthworm) பலவும் இந்த ஜாதிதான்! புழுக்கள் மட்டுமன்றி பல பல்லி (lizard) ...

விடைக்கொடுக்க முடியாமல்...

Posted: 06 May 2012 11:37 AM PDT

விடைக்கொடுக்க முடியாமல்... அடை மழையிலும் வேலைக்கு விடைக்கொடுக்க முடியாமல் நான்! வறுமைக்கு வாக்கப்பட்டதால் வயதானக் காலத்தில் இப்படி! உயர்வேதும் இல்லை பதவியில்; உயரம் கூடினாலே அன்றி! வரம்பேதும் இல்லை வயதிற்கு; மூட்டுக்கு முடிச்சி விழும் வரை! இல்லாத செல்வத்தால் பொல்லாத வறுமை; இப்போது அழுதாலும் கவலையில்லை மழையோடு சேர்ந்து மறைந்துவிடுமென்று! கனவேதும் பெரியதில்லை ஒருநாள் உழைத்ததைக் கொண்டு மறுநாளும் உண்ண வேண்டும்; தினக்கூலி என்றப் பெயர் மாறவேண்டும்!http://itzyasa.blogspot.com/2010/09/blog-post_20.html

காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்....

Posted: 06 May 2012 11:33 AM PDT

தேசப்பிதா மகாத்மா காந்தி பயன்படுத்தியபொருட்களை, பிரிட்டனில் உள்ள ஏல நிறுவனத்திடம் இருந்து, இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏலம் எடுத்துள்ளார். மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டை, மூக்குகண்ணாடி, பிரார்த்தனை புத்தகம், அவர் எழுதியகடிதங்கள் மற்றும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுவிழுந்த இடத்தில் ரத்தக் கறை படிந்திருந்த மண்,புற்கள் உள்ளிட்ட 23 பொருட்கள், பிரிட்டனைசேர்ந்த ஏல நிறுவனத்தின் வசம் இருந்தன.மும்பையை சேர்ந்த தொழில் அதிபரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்மொரார்க்கா என்பவர், பல லட்ச ரூபாய்கொடுத்து, ...

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Posted: 06 May 2012 11:12 AM PDT

எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், வெளிப்படையான மனதும் இருந்தால், எந்த சூழ்நிலையிலும் வசிக்கலாம் என்பதற்கு, சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறார், சீனாவைச் சேர்ந்த ஜெங் லிங்சுன் என்ற இளைஞர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார். சீனாவின் முக்கியமான நகரமான சென்யாங்கிற்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி வந்தார். சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் தங்கி வந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஓட்டல் ஒன்றில், பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த ஒரு ...

சிறு‌மி நரப‌லி ஏ‌ன்.... எ‌ப்படி - போ‌லீ‌ஸ் ‌வி‌ள‌க்க‌ம்

Posted: 06 May 2012 11:03 AM PDT

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் சிறுமியை நரபலி கொடுத்ததாக, திமுக பிரமுகரும், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவருமான அயூப்கான் உள்ளிட்ட மூவரை, சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டியைச் சேர்ந்தவர் தொத்தன் என்ற தொத்தல். இவரது மகள் ராஜலெட்சுமி (5). 2011 ஜனவரி 1-ம் தேதி வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் ராஜலெட்சுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமி நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது. ...

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Posted: 06 May 2012 10:56 AM PDT

சென்னை: வானில் வழக்கமாக நாம் பார்க்கும் நிலா இன்று மட்டும் 14 விழுக்காடு அளவு பெரிதாகவும் மிகவும் பிரகாசமாகவும் தோன்றும். நம் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்று வட்டப்பாதையின் தூரம் என்பது 4,06,349 கி.மீ. இந்த தூரமானது இன்று மிகவும் குறைந்து பூமிக்கு அருகில் வருகிறது. அதாவது இன்று மட்டும் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்றுவட்டப்பாதையின் தூரமானது 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும். இதனால் நாம் வழக்கமாக பார்க்கும் நிலாவின் அளவு இன்று மட்டும் 14 விழுக்காடு அதிகமாகத் தெரியும். ...

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Posted: 06 May 2012 10:53 AM PDT

புதுதில்லி, மே 6: இந்தியா ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது. இந்த அமைப்பை குறைந்தது 2 நகரங்களில் பொருத்தி பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த தயாராக உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது. 2000 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும் வல்லமை கொண்டதாக ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது. ...

மதிப்பெண்ணை விட மனித உயிர் மேலானது ?

Posted: 06 May 2012 10:43 AM PDT

ஒரு காலத்தில் இந்தியாவின் சுமையாக கருதப்பட்ட மக்கள் தொகை இன்றைக்கு மனித வளமாக மாறியுள்ளது. ஆம். மனித ஆற்றல் நம்மிடம்தான் அதிகமாக உள்ளது. உலக அளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இந்த இளைஞர்களால் நாட்டின் வளர்ச்சி உச்சத்திற்கு செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உலக நாடுகள், இந்தியாவை மிரட்சியுடன் பார்க்கின்றன. இந்த காலகட்டத்தில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனையான ஒன்று. உலகளவில் மக்கள் தொகையில் மட்டுமல்ல, தற்கொலைகளின் எண்ணிக்கையிலும் சீனாவுக்கு அடுத்தபடியாக ...

பூசணிக்காய் ரசவாங்கி

Posted: 06 May 2012 10:33 AM PDT

பூசணிக்காய் ரசவாங்கி தேவையானவை: பூசணிக்காய் துண்டுகள் - ஒரு கப், புளி - சிறிய எலுமிச்சம்பழம் அளவு, மிளகாய் வற்றல் - 3 அல்லது 4, கடலைப் பருப்பு, தனியா, தேங்காய் துருவல் - தலா 2 டீஸ்பூன், பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன், வேக வைத்த மொச்சைக் கடலை - கால் கப், வேகவைத்த துவரம்பருப்பு - கால் கப், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: புளியை உப்பு சேர்த்துக் கரைத்து வடிகட்டி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, ...

கண்களை கவரும் காகித கலை

Posted: 06 May 2012 10:32 AM PDT

கண்களை கவரும் காகித கலை

உலகின் இறுதி நாள் 21-12-2012- மாயன்கள் உறுதி

Posted: 06 May 2012 10:27 AM PDT

இன ஒழிப்பு இன்னமும் நடந்தேறிக் கொண்டிருக்கும் சமாசாரம் என்றே கூற வேண்டும். உண்மையில் ஒரு இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது என்பது சாத்தியமற்றது. மாயாக்கள் விசித்திர குணாதிசயங்கள் கொண்ட மனித இனம். தென் அமேரிக்க பகுதியின் வாழ்ந்த இவ்வினம் இப்போது இல்லை. மாயாக்கள் அழிக்கப்பட்டார்களா, அழிந்து போனார்களா அல்லது மறைந்து போனார்களா? அவர்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது. ஆரம்ப காலம் முதல் பல முறை ஸ்பெயின் நாட்டினர் அங்கு படையெடுத்து இருக்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் படையெடுப்பின் ...

கணிணிகளை தூக்கி சாப்பிடும் மூளை!

Posted: 06 May 2012 10:20 AM PDT

செல்களுக்குத் தேவை உணவு,பிராணவாயு, நீராதாரப் புறச்சூழ்நிலை. இவை இருந்தால்தான் செல்கள் இருக்க முடியும். உணவு, மற்றும் தண்ணீரை உடலில் உள்ள ரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் வழங்குகின்றன, இவைதான் கழிவுகளையும் வெளியேற்றுகிறது. செல்களுக்குத் தேவையான ரசாயங்கள் மற்றும் உணவுப்பொருட்களை தாங்கியுள்ளது ரத்தமாகும். ஈக்கள் ஒரு வினாடியில் 200 பிம்பங்களைப் பார்க்க முடியும். அதனால் ஒரு சினிமா அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் ஆனால் எல்லாம் நகராத பிம்பங்களாகவே தெரியும். இதனால்தான் ஈக்கள் ...

இப்படியும் சொல்லலாம்...

Posted: 06 May 2012 10:18 AM PDT

இப்படியும் சொல்லலாம்... அதிகாரி : நாம் எப்போதாவது தாமதமாகப் போனால் முன்னாடியே வருபவர்; நாம் சீக்கிரமாகப் போனால் தாமதமாக வருபவர். அணுகுண்டு : கண்டுபிடிப்புகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவரும் கண்டுபிடிப்பு. கமிட்டி : தனியாக ஒன்றும் செய்ய முடியாதவர்கள் கூட்டாகச் சேர்ந்து ஒன்றும் செய்யாமலிருப்பது. அனுபவம் : தங்களின் தவறுகளுக்கு மனிதர்கள் வைத்த பெயர். சந்தர்ப்பவாதி : தெரியாத்தனமாக ஆற்றில் விழுந்தாலும் குளிக்கத் ...

வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி........

Posted: 06 May 2012 10:18 AM PDT

"ஒரு முறைபடித்தால்மறக்காது!' திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார். வெளிச்சத்திற்கு வராத இந்தியாவின் இளம் மேதை விஷாலினி: என் சொந்த ஊர் பாளையங்கோட்டை. என் அம்மா, அகில இந்திய வானொலியில் ...

மாம்பழம் தரும் அழகுக் குறிப்புகள்

Posted: 06 May 2012 10:17 AM PDT

மாம்பழம் தரும் அழகுக் குறிப்புகள் இயற்கை தரும் இளமை வரம்! முக்கனிகளில் மட்டுமல்ல.. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத்தான். வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வந்துவிடும் மாம்பழத்தைச் சாப்பிட்டால், சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அந்தந்த சீஸனில் வருகிற பழங்களைச் சாப்பிடும்போதுதான் அவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா.. மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் ...

ரயில் எங்கு செல்கிறது, எங்கு நிற்கிறது என்று தெரிய வேண்டுமா?

Posted: 06 May 2012 10:17 AM PDT

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்கள் எந்த இடத்தில் சென்று கொண்டிருக்கிறது என்ற விபரத்தை வழங்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை ரயில்வேத் துறை துவங்கியுள்ளது. நாட்டில் ஓடும் ரயில்கள் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிய ரயில்வேத்துறை www.trainenquiry.com என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த இணையதளத்திற்கு சென்று 20 நொடியில் எந்த ஒரு ரயிலின் சேவை விபரங்களையும் அறிய முடியும். இன்டர்நெட் வசதி கொண்ட செல்போன்களிலும் இந்த விபரங்களை பெறலாம். ரயில் எண்களை அளித்தால் ரயில் எந்த ரயில் ...

மீண்டும் நான்....!

Posted: 06 May 2012 10:12 AM PDT

நீண்ட நெடிய பயணத்தின் பின்...
மீண்டும் நான்...
இதோ பயனிக்கதடதொடங்கிவிட்டேன்
எனது சோகங்களுடனும்...
தூரிகைகளுடனும்....

நித்தியானந்தா மீதுள்ள 'கேஸ்' குறித்து யாரும் பேசக் கூடாது- மதுரை ஆதீனம்

Posted: 06 May 2012 10:06 AM PDT

ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு செல்லக்கூடாது. செல்லவும் மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது என்று பேசியுள்ளார் மதுரை ஆதீனம். திருவண்ணாமலையில் நேற்று ராத்திரி நித்தியானந்தாவுக்கு பட்டாபிஷேகம் நடத்தினார் மதுரை ஆதீனம். அதன் பின்னர் அவர் பேசுகையில், வாழ்நாளில் இந்த நாள் புதிய நாள். மன மகிழ்ச்சி, மன நிம்மதி தரும் நாள். சிவன்-பார்வதி நிறைந்த திருவண்ணாமலையில் ஆதீன தலைவராக நித்தியானந்தாவை அறிவித்து பட்டாபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்று. ...

கருப்பட்டி தோசை சாப்பிட விருப்பம் இருக்கிறதா?

Posted: 06 May 2012 09:50 AM PDT

சென்னை: மெரீனா கடற்கரையில், சித்த மருத்துவக் கல்லூரியின் சார்பாக நேற்று, மூலிகை உணவுத் திருவிழா நடந்தது.சென்னைவாசிகளிடையே மூலிகை உணவு முறைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சித்த மருத்துவக் கல்லூரியின் சார்பாக மெரீனாவில், மூலிகை உணவு திருவிழா நடந்தது.மேயர் சைதை துரைசாமி, விழாவை துவக்கிவைத்தார். சர்க்கரை நோய், உடல் பருமன் முதலான நோய்களுக்கு மூலிகை கசாயம் வழங்கினர். சர்க்கரை நோய், முடி உதிர்தல், முகப்பரு, மூட்டுவலி, உடல்பருமன், பன்றிக்காய்ச்சல் முதலான நோய்கள் வராமல் தடுப்பது குறித்து இலவச ...

நுண்ணறிவுத் தகவல்கள்: அணுசக்தி (வேதியியல்)

Posted: 06 May 2012 09:46 AM PDT

வணக்கம் நண்பர்களே, நுண்ணறிவுத் தகவல்கள் பகுதியில் அடுத்து நாம் இங்கே காண இருக்கும் பகுதி அணுசக்தி ஆகும். இது இந்த கால கட்டத்திற்கு மிகவும் தேவையான மற்றும் அறிய வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்காது. அணுசக்தி எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், அதன் தேவைகளையும், அதன் விளைவுகளையும் நாம் இங்கே காண இருக்கிறோம். இதில் உங்களுக்கு எழும் ஐயங்களை தயங்காமல் கேட்கும் போதுதான் இந்த திரி முழு வெற்றியடையும். என்னால் இயன்றவரை இங்கே பதில் அளிக்கிறேன். அண்ணன் சதாசிவம் அவர்கள் கண்டிப்பாக ...

எல்லாரும் சைக்கிள் ஓட்ட கத்துக்கிடணும்!

Posted: 06 May 2012 09:38 AM PDT

ஒன்றுக்கு இரண்டாக மோட்டார் சைக்கிள் இருக்கிறது. ஆனாலும், வீட்டிலிருந்து, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு, தினமும் சைக்கிளில் தான் போய் வருகிறார். கிட்டத்தட்ட, 52 கி.மீ., தூரம் சைக்கிளில் போய் வந்து கொண்டிருப்பதற்கான காரணம் கஞ்சத்தனம் அல்ல, இயற்கையின் மீதும், ஆரோக்கியத்தின் மீதும் கொண்ட அக்கறைதான். சென்னை தாம்பரத்தில் குடியிருக்கும் சரத் நம்பியார் (வயது 51) கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, "தட்சிணசித்ராவில்' பொறுப்பான பணியில் இருக்கிறார். இவர் குடியிருக்கும் இடத்திற்கும், வேலை பார்க்கும் ...

வார/மாத இதழ்கள்: புதியவை - நாணயம் விகடன் 13-05-2012 புதிய தலைமுறை 03-05-2012, வாரமலர் 06-05-2012

Posted: 06 May 2012 09:12 AM PDT

புதிய வார/மாத இதழ்கள். ~~~~~~~~~~~~~~~~~~~ Mirrorcreator.com லிங்கில் சென்று உங்களுக்கு தேவையான serverல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும். Code:mirror creator லிங்கில் கிழிகண்ட server link உள்ளது. depositfiles.com, rapidshare.com, zshare.com, badonga.com, ziddu.com, 2shared.com, jumbo.com, ..... mirrorcreator லிங்கில் தரவிறக்கம் உதவிக்கு கீழே உள்ள லிங்கில் பார்க்கவும் http://www.eegarai.net/t83257p195-30-4-28-4-26-4-23-4#785894 குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் ...

ஜப்பானின் கடைசி அணுமின் உலையும் மூடல்- மக்கள் கொண்டாட்டம்

Posted: 06 May 2012 08:03 AM PDT

ஜப்பானில் இயங்கி வந்த ஹொக்கொய்டோ அணுமின் நிலையம் பரமாரிப்புப் பணிக்காக மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டில் 40 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக அணுமின்சாரம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு பேரழிவைச் சந்தித்த பிறகு அணு உலைகளின் பாதுகாப்புக்காக அவற்றை மூடி பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜப்பானைப் பொறுத்தவரையில் ஒரு அணு உலை மூடப்பட்டால் உள்ளாட்சி அமைப்பின் அனுமதி பெற்ற பிறகே திறகப்பட வேண்டும். இதுவரை மூடப்பட்ட அணு உலைகள் திறக்கப்படவில்லை. பொதுமக்களின் கடும் ...

புரிவதற்கற்ற மொழியிலிருந்து விரியும் உலகம்....

Posted: 06 May 2012 08:01 AM PDT

ஒரு புரிவதற்கற்ற மொழியிலிருந்தே
விரிகிறது....
குழந்தையின் உலகம்.

மெதுவாய் நீள்கிறது....
"அம்மா"விலிருந்து....
கை வீசிப் பிடிக்க முயலும்
"நிலவு" வரை.

தனது மழலையினாலும்...
அசைவுகளாலும்...
எப்படியோ .....புரிய வைத்து விடுகிறது
அம்மாவிற்கு தன் மொழியை.

பின் நீளும் உரையாடலில்....
அம்மாவைக் குழந்தையாக்கி விடுகிறது
குழந்தை.

தினமலர் » வாரமலர் » ஜோக்ஸ்!

Posted: 06 May 2012 07:57 AM PDT

நீர், மண் வளத்தை மேம்படுத்துவதற்கான படிப்பு...-04-05-2012

Posted: 06 May 2012 07:52 AM PDT

நீரின்றி அமையாது உலகு என்று சொல்வார்கள். இயற்கையின் கொடைகளில் ஒன்றான நீர்வளத்தை மனிதர்கள் முன்னெப்போதையும் விட வேகமாக அழித்துக் கொண்டிருக்கிறார்கள். வற்றாத ஜீவ நதிகள் என்றழைக்கப்பட்ட நதிகள் கூட இன்று ஆண்டின் பல மாதங்கள் வற்றி விடுகிறது. இந்தியாவின் முக்கிய நதிகளில் ஒன்றான கங்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாசுபட்டு விட்டதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொண்டைத் தண்ணீர் வற்ற கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மழை பெய்யும் போது அதனை சேமித்து வைப்பதற்காக கட்டப்பட்ட அணைகளும், ஆண்டின் ...

நம்ம ஊரு வயாகரா

Posted: 06 May 2012 07:50 AM PDT

இனி கோடை காலம் வந்து விட்டது உடல் சூட்டைத்தணிக்க தர்பூசணி சாப்பிடலாம் என்று அனைவரும் எண்ணுவோம். நம் ஊரின் முக்கிய வீதிகளில் இப்பொழுதே தர்பூசணி கடைகள் முளைக்க ஆரம்பித்து விட்டது. தர்பூசணி வெய்யில் காலத்தில் அதிகம் உண்ணக்கூடிய உணவாகும். இதில் பல பயன்கள் உள்ளன. நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர்பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை, ...

சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன்

Posted: 06 May 2012 07:46 AM PDT

திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவில் வாசலை அடைத்தபடி பயங்கர கவர்ச்சி நடிகை ஷகீலாவை வைத்து ஷூட்டிங் நடத்தியதால் மக்கள் கடும் எரிச்சலடைந்தனர். பொது இடங்களில் மக்கள் அதிகம் செல்லும் இடங்களில், குறிப்பாக ஆன்மீகத் தலங்களில் சினிமாக்காரர்கள் செய்யும் அட்டாகசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது. கோவில்களில் படப்பிடிப்பு என்ற பெயரில் அவர்கள் நடந்து கொள்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகங்களை சுழிக்க வைப்பதாக உள்ளது. இந்த நிலையில் திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ஷகீலாவை வைத்து நடந்த ...

புதுமை பித்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

Posted: 06 May 2012 07:21 AM PDT

அவதாரில் கர்சரை வைத்தவுடன், பயனர் பற்றிய தகவல் செய்திகள் வருவதை இன்றுதான் கண்டேன். நல்ல முன்னேற்றம்..வாழ்த்துக்கள். தினம் தினம் ஒரு புதுமை ஈகரை வளமை.
புதுமை பித்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

ரமணியன்.

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் - மே 11ம் தேதி முதல் 31 வரை-06-05-2012

Posted: 06 May 2012 06:39 AM PDT

சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், 11ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 58 மையங்களில் வழங்கப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் அறிவித்தார். 31 கடைசி நாள்: இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பிற ஐந்து இடங்களில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 58 இடங்களில், வரும் 11 முதல், 31ம் தேதி வரை; காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும். பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ...

ராஜ்யசபாவில் சச்சின் அமர்வது எங்கே?

Posted: 06 May 2012 06:30 AM PDT

புதுடில்லி: ராஜ்யசபாவுக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு, தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு அருகில், இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராஜ்யசபாவுக்கு, பிரபல இந்தி நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் ஆகியோர், மத்திய அரசு சார்பில், நியமன எம்.பி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், ராஜ்யசபாவில் ஏற்கனவே எம்.பி.,யாக உள்ள, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவரும், இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சனுக்கு அருகில், நடிகை ரேகாவுக்கு, சபையில் இருக்கை ...

மோடி-நிதீஷ் கை குலுக்கல் ; லாலு குதிப்பு !

Posted: 06 May 2012 05:55 AM PDT

பாட்னா: பீகார் முதல்வர் நிதீஷ்குமார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் கை குலுக்குவதா என முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டில்லியில் நேற்று தேசியபயங்கரவாத தடுப்பு மையம் தொடர்பான கூட்டம் பிரதமர் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து நலம் விசாரித்து கொண்டனர். இது போல மோடியும் ( குஜராத்), நிதீஷ்குமார் (பீகார்), கை குலுக்கி நட்புறவு பாராட்டி கொண்டனர் . இது தொடர்பான படங்கள் இன்று செய்தி தாள்களில் வெளியானது . இது குறித்து ...

குதிரை ஓட்டும் வீராங்கனை அனிதா ஓஜோ!

Posted: 06 May 2012 05:42 AM PDT

சென்னை வேளச்சேரியில் உள்ள, "சென்னை ரைடிங் ஸ்கூல்' என்ற குதிரை ஓட்ட பயிற்சி தரும் பள்ளியின், ஒரே பெண் பயிற்சியாளர். ஆறடிக்கு மேல் கம்பீரமே உருவெடுத்தது போல, வீரத்துடனும், தீரத்துடனும் நிற்கும், குதிரையின் பிடறி பிடித்து, நிமிடத்தில் ஏறி உட்கார்ந்தவர், கால்களால் குதிரைக்கு சமிக்ஞை கொடுத்ததும், குதிரை சிட்டாய் பறக்கிறது. ஓடும் குதிரையில் இருந்தபடி, எழுந்து நிற்கிறார், திரும்பி நிற்கிறார், மாறி உட்காருகிறார், நிமிர்ந்து, மல்லாந்து படுக்கிறார். இப்படி குதிரையின் மீது, பல்வேறு சாகசம் செய்பவர், ...

அரச குடும்ப பெண்களுக்கும் இளவரசி கதே தான் ரோல் மாடல்!

Posted: 06 May 2012 05:31 AM PDT

இளவரசி கதே வில்லியம், பிரிட்டனில் உள்ள இளம் பெண்களின் ரோல் மாடலாக உருவெடுத்துள்ளார். தன் மாமியாரும், மறைந்த இளவரசியுமான டயானாவை போல், கதே அணியும் உடைகளும், அவர் அணியும் அணிகலன் களும், பிரிட்டனில் பிரபலமாகி விடுகின்றன. கதேயின் பேஷனை, பிரிட்டன் இளம் பெண்கள் மட்டுமல்லாமல், அரச குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்களும் பின்பற்றத் துவங்கி விட்டனர். இளவரசர் சார்லசின் இளைய சகோதரர் ஆண்ட்ரூவின் மகளும், இளவரசியுமான பெட்ரைஸ், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் போது, தன் அண்ணி கதே அணிவதைப் போன்ற உடைகளை ...

தினமலர் » வாரமலர் » மனமே காரணம்!

Posted: 06 May 2012 05:20 AM PDT

மனதை அடக்கு, மனதைக் கட்டுப்படுத்து என்றெல்லாம் சொல்லியிருக்கின்றனர். நம்முடைய பாவ புண்ணியங்களுக்கும் காரணம் மனம் தான். மனதில் தோன்றுவது தான் எண்ணம். மனதில் தோன்றுவதை எப்படி செயல்படுத்தலாம் என்று ஆலோசனை செய்வது புத்தி. புத்தி, எப்படி செயல்படுத்துவது என்று தீர்மானம் செய்கிறது; அதை, அவயவங்கள் நிறைவேற்றுகின்றன. அதாவது, ஒரு காரியம் நடப்பதாக இருந்தால், மனம், புத்தி, அவயவம் இம்மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும். ஒருவருக்கு, கோவில் கட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. இது அவரது எண்ணம். இந்தக் கோவிலை ...

தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்!

Posted: 06 May 2012 05:11 AM PDT

பெண்களை ஊக்கப்படுத்துவோம்! நீண்ட நாட்களுக்கு பிறகு, என் தூரத்து உறவினரை சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்த பின், அவரது மகளைப் பற்றி விசாரிக்க எண்ணி, "பெரியப்பா... பாப்பாவுக்கு கல்யாணம் முடிந்ததா... எப்படியிருக்கா?' என்றேன். இதைக் கேட்டவுடன் அவர், "இல்லைப்பா... இன்னும் முடியலை. இப்போ தான், வரன் பார்த்துக் கொண்டிருக்கோம். சீக்கிரமே முடிந்து விடும்...' என்றார் உற்சாகமாக. "திருமணம் முடியவில்லை என்பதை, இவ்வளவு மகிழ்ச்சியாக சொல்கிறாரே...' என புரியாமல், மேலும் சில விவரங்களை பேசிக் ...

கள்ளழகர்

Posted: 06 May 2012 05:09 AM PDT

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வைகையாற்றில், கள்ளழகர் இன்று காலை, 5.50 மணிக்கு பச்சை பட்டுத்தி இறங்குகினார். இதற்கான பாதுகாப்பு பணியில், 2,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். கள்ளழகர் வேடமணிந்த அழகர், நேற்று முன் தினம் இரவு, அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் அமைக்கப்பட்ட, திருக்கண் மண்டபங்களில், எழுந்தருளினார். நேற்றிரவு, தல்லாகுளத்தில் எதிர்சேவை நடந்தது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை, 5.50 மணிக்கு, வைகையாற்றில் இறங்கினார். மீனாட்சியம்மன் கோவிலில், மே 2ல் நடந்த திருக்கல்யாணத்தின் ...

தினமலர் » வாரமலர் » மென்மையான நினைவு!

Posted: 06 May 2012 05:08 AM PDT

ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை. சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக அமைந்து விடுவதும் உண்டு. இதோ... இந்த ஓரத்து இருக்கையைப் போல. பொதிகை எக்ஸ்பிரசின் தாலாட்டில் தூங்கி எழுந்து, முதல் விடியல் கீற்றை தரிசிக்க இயலும். நகர்ப்புற வாழ்வின் பரபரப்பில், கடைசியாக எப்போது விடியலைப் பார்த்தோம் என்று நினைத்துப் பார்த்தாள். ஐந்து வருடங்களுக்கு முன்... ஒரு கணம் திக்கென்றுதான் இருந்தது. ரமணனை பிரிந்து, ஐந்து வருடங்கள் ஆகின்றன. அப்படியானால், ...

தினமலர் » வாரமலர் » ஒத்த வீடு!

Posted: 06 May 2012 05:07 AM PDT

தெரு முழுவதும் புகைமண்டலமாயிருந்தது. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளின் உள்ளேயிருந்து, சில மனிதத் தலைகள் மட்டும் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. ""தள்ளிப்போ... தள்ளிப்போ... பக்கத்துல யாரும் வராதீங்க...'' குரலோடு அணுகுண்டு வெடியை பற்ற வைத்தான் பட்டாசுச் சங்கிலி. பட்டாசை பக்குவமாய் வெடிக்கச் செய்வதில், கில்லாடி இவன். அதனால்தான் பெயரே, "பட்டாசு சங்கிலி' பட்டாசு வெடிக்க தனிச் சம்பளம், பாட்டில் சரக்கு, சாப்பாடு... முகூர்த்த நாட்களில் கிராக்கி இவனுக்கு. ""நல்லது - கெட்டது எதுக்குன்னாலும், ...

தினமலர் » வாரமலர் » திண்ணை!

Posted: 06 May 2012 05:02 AM PDT

"ஆங்கிலேயர்கள், பெரியமருது, சின்ன மருது இருவரையும் பிடித்து, தூக்கில் போட்டுக் கொன்றனர். மருது சகோதரர்களுக்கு உதவியாக இருந்த, 72 பேரை கைது செய்து, பினாங்கு தீவுக்கு நாடு கடத்தினர். தூத்துக்குடியிலிருந்து, பினாங்கு செல்ல, ஆறு வார கால கப்பல் பயணம். 72 கைதிகள், 20 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் பலர். இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள் ஆகியன, "அட்மிரல் நெல்சன்' என்ற கப்பலில் கொண்டுபோய் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல், 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு, பம்பாயிலிருந்து ...