சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- புலிக்கொடியை வைத்திருந்தவர்கள் அரச தொலைக்காட்சியான ஐரிஎன் வாகனத்தில் ஏற்றிவரப்பட்டனர்! (வீடியோ இணைப்பு)
- மே மாத எண் ஜோதிடப் பலன்கள்!
- மே மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28
- மே மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29
- மே மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30
- மே மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31
- மே மாத எண் ஜோதிடம் : 5, 14, 23
- மே மாத எண் ஜோதிடம் : 6, 15, 24
- மே மாத எண் ஜோதிடம் : 7, 16, 25
- ஆரோக்கிய மருத்துவ குறிப்புகள்
- பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு
- மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம்
- முளை பயிறு பனீர் சாலட்
- தூவிகோனாசனம்
- புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு
- குரு பாடல்-1
- கள்ளழகர் கோவில்
- நவக்கிரக விரதம்: ஞாயிற்றுக்கிழமை
- மே மாத எண் ஜோதிடம் : 8, 17, 26
- மே மாத எண் ஜோதிடம் : 9, 18, 27
- ஒரு மானை முழுமையாக விழுங்கும் பாம்பு(வீடியோ இணைப்பு)
- நாக பாம்புக் குட்டியின் முதல் வேட்டை(வீடியோ இணைப்பு)
- நொக்கியாவின் PureView 808 கைப்பேசிகள்
- சொத்து குவிப்பு வழக்கு: மேலும் 41 கேள்விகளுக்கு பதிலளித்தார் சசிகலா
| Posted: 02 May 2012 09:18 AM PDT அவர்கள் சிறிலங்கா சுதந்திர கட்சி யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டு ஊர்வலம் சென்ற போது கூட்டத்துடன் கூட்டமாக சென்று புலிக்கொடியை காட்டிய போது அங்கு அக்காட்சியை படம் பிடிப்பதற்கு தயாராக நின்ற அரசாங்க தொலைக்காட்சியான ஐ.ரி.என் தொலைக்காட்சி படப்பிடிப்பாளர்கள் இதனை படம் பிடித்தனர் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. புலிக்கொடியை காட்டியவர்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதும் அதற்கு துணை புரிந்தவர்கள் அரச தொலைக்காட்சியான ஐ.ரி.என் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது. ஐக்கிய தேசியக்கட்சி மேதினத்தில் புலிக்கொடி என அரசாங்க தொலைக்காட்சியான ஐ.ரி.என் வெளியிட்ட செய்திக்கு பதிலளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் ரொஸ்மன்ட் சேனாரத்னவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் கையெழுத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தில், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் யாழ்ப்பாணத்தில் நடத்திய பொது மே தினக் கூட்டத்தை படம்பிடிக்கவும், செய்தி சேகரிக்கவும், அரச, தனியார் ஊடகங்கள் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களும் அங்கு கூடியிருந்தன. அத்துடன், ஆயிரக் கணக்கானோர் கலந்துகொண்ட பேரணிக்கு ஆயிரக் கணக்கான பொலிஸாரும் பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்தனர். எனினும், இவர்கள் யாருடைய கண்களுக்கும் தென்படாத 'புலிக் கொடி' அல்லது புலிக் கொடியை ஏந்திய நபர்கள் சுயாதீன தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளருக்கு மாத்திரம் எவ்வாறு துல்லியமாக தென்பட்டது. பேரணியில் கலந்துகொண்ட மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் குறித்த படப்பிடிப்பாளரையும், அந்தக் குழுவினரையும் பிடித்து கட்சியின் தவிசாளர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் ஒப்படைத்தனர். இதன்போது சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவரது உத்தரவுகளுக்கமையவே தான் நடந்துகொண்டதாக படப்பிடிப்பாளர் இதன்போது தெரிவித்துள்ளார். இதனையடுத்து காமினி ஜயவிக்ரம பெரேரா அவரை எச்சரித்து விடுவித்தார். இதன்பின்னர், 'புலிக் கொடி' காண்பித்து மோசடி செய்த நபர்களும் சுயாதீன தொலைக்காட்சி பணியாளர்களுக்குரிய வாகனத்தில் பயணம் செய்ததாக தெரியவந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறான இயக்கத்தின் கொடியை வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனினும், புலிக் கொடியை வைத்திருந்தவர்களை சுயாதீனத் தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளர் பார்த்தவுடன், அடிக்கு ஒரு பொலிஸ் அதிகாரியென வழிநெடுகிலும் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புத் தரப்பினருக்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருக்கலாம். எனினும், படப்பிடிப்பாளர் அதனைச் செய்யவில்லை. இதன்படி சுயாதீனத் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் அவர்களுக்கு உதவியுள்ளார் என்பது தெளிவாகிறது. இவ்வாறான காட்சிகள் கிடைத்திருந்தாலும் அதனை எவ்வாறு கையாள வேண்டும் என்ற ஒரு நடைமுறை இருக்கிறது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பிற்கமைய பணியாற்ற வேண்டிய பொறுப்பு சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவருக்கு இருக்கிறது. இந்தக் காட்சிகளை பொலிஸாருக்கோ, இராணுவத்தினருக்கோ வழங்கியிருக்க வேண்டும். இதன்போது புலிக் கொடி ஏந்திய நபர்களை கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்த உதவியிருக்க வேண்டும். எனினும், சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவரும் புலிக்கொடி ஏந்தியவர்களுக்கு உதவி செய்துள்ளார். இவற்றில் எதனையும் செய்யாது புலிக்கொடி காட்சிகளை சுயாதீனத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதுடன், தேசிய ரூபவாஹினிக்கும், இணையத்தளங்கள் பலவற்றுக்கும் சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவர் வழங்கியுள்ளார். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்படி சுயாதீனத் தொலைக்காட்சியின் தலைவரும், அந்த நிறுவனப் பணியாளர்களும் பாரிய தவறொன்றை செய்துள்ளளனர். இந்தக் காட்சிகள் உடனடியாக பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க வேண்டும் என எமது கட்சி கோரிக்கை விடுக்கிறது. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில், அரசாங்க நிறுவனம் ஒன்றின் தலைவரே புலிகளின் கொடிகளைக் காட்சிப் படுத்தி, பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகிறோம். இப்படிக்கு ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் – திஸ்ஸ அத்தநாயக்க This posting includes an audio/video/photo media file: Download Now |
| மே மாத எண் ஜோதிடப் பலன்கள்! Posted: 02 May 2012 09:02 AM PDT |
| மே மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28 Posted: 02 May 2012 08:56 AM PDT 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் உங்களின் எதிர்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். சொத்துப் பிரச்சனை சுமூகமாகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபரமாக அமையும். தாயாருடன் இருந்த கருத்து மோதல்கள் விலகும். பணப்புழக்கம் அதிகரித்தாலும் செலவுகளும் கூடி வரும். உல்லாசப் பயணம் சென்று வருவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயல்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புதியவரின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சொந்த-பந்தம் தேடி வரும். அவ்வப்போது எதிலும் இழுபறி, தடுமாற்றம், முன்கோபம், டென்ஷன் வந்துப் போகும். ஆன்மீகப் பயணம் சென்று வருவீர்கள். கண், காது, பல் வலி வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். கன்னிப் பெண்களே! தவறான எண்ணங்களுடன் பழகியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களின் நட்பை பெறுவீர்கள். வி. ஐ. பிகளால் பாராட்டப்படும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 9, 10, 14, 23 அதிர்ஷ்ட எண்கள் : 4, 7 அதிர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, வெள்ளை அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய் |
| மே மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29 Posted: 02 May 2012 08:55 AM PDT 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் செல்வாக்கு கூடும். பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மதிப்பார்கள். விலை உயர்ந்த ஆடியே, வீடியோ சாதனங்கள் வாங்குவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். அவ்வப்போது வாகனச் செலவு, மனஉளைச்சல் வந்துப் போகும். நெருக்கமான நண்பர் உங்களைத் தவறாகப் புரிந்துக் கொள்வார். ஆனால் சகோதர வகையில் பயனடைவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சி மேல்மட்டத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். கன்னிப் பெண்களே! முடிவுகளெடுப்பதில் இருந்த தடுமாற்றம் நீங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த தோழியை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அடுக்கடுக்கான வேலைகளால் மனஇறுக்கம் அதிகரிக்கும். கலைத்துறையினர்களே! உங்களின் கலைத்திறன் வளரும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 7, 16, 11, 25 அதிர்ஷ்ட எண்கள் : 1, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தாபச்சை, ரோஸ் அதிர்ஷ்ட கிழமைகள் : வியாழன், சனி |
| மே மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30 Posted: 02 May 2012 08:54 AM PDT 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் முன்கோபம் விலகும். பளிச்சென்று பேசி பிரச்னையில் சிக்கினீர்களே! இனி அக்கம்-பக்கம் பார்த்துப் பேசுவீர்கள். இழுபறியான வேலைகள் உடனே முடியும். எதிர்பாராத பணவரவு உண்டு. திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். அவ்வப்போது வீட்டில் கழிவு நீர் அடைப்பு, மிக்சி, கிரைண்டர், டி. வி பழுதாகுதல், சிறுசிறு வாகன விபத்து வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பிள்ளைகள் எதிர்த்துப் பேசுவார்கள். நண்பர்கள், உறவினர்களின் கனிவான விசாரிப்பால் ஆறுதலடைவீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் ஏற்படும். பூர்வீக சொத்து பாராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! தொகுதி நிலவரங்களை உடனுக்குடன் மேலிடத்துக்கு கொண்டு செல்லுங்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். பங்குதாரர்கள், வேலையாட்களால் நிம்மதி இழப்பீர்கள். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகிப்புத் தன்மைத் தேவைப்படும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 9, 21, 10 அதிர்ஷ்ட எண்கள் : 2, 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், மஞ்சள் அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், சனி |
| மே மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31 Posted: 02 May 2012 08:53 AM PDT 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் வி. ஐ. பிகள் மூலம் சாதிப்பீர்கள். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமொழிப் பேசுபவர்கள் உதவுவார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடனுதவியும் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். சொந்த ஊரில் இழந்தை செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். சொத்துத் தகராறு தீரும். வாழ்வின் சூட்சுமத்தை அறிவீர்கள். சாதுக்கள் உதவுவார்கள். ஆன்மீக பணிகளை முன்னின்று செய்வீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த உறுப்பினர்களைச் சந்தித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். வியாபாரத்தில் புது யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். சக ஊழியர்களால் உதவிகள் உண்டு. கலைத்துறையினர்களே! உங்களுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். சொன்னதை முடித்துக் காட்டும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 4, 1, 6, 17, 15, 24 அதிர்ஷ்ட எண்கள் : 5, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, க்ரீம் வெள்ளை |
| மே மாத எண் ஜோதிடம் : 5, 14, 23 Posted: 02 May 2012 08:51 AM PDT 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மனஇறுக்கும் நீங்கும். சவாலான சில வேலைகள் சாதாரணமாக முடியும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் மனங்கோணாமல் நடந்துக் கொள்வார்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். தாயாருக்கு இருந்த முதுகு, கழுத்து வலி விலகும். வாகன வசதிப் பெருகும். வீடு மாறுவது, உங்கள் ரசனைக் கேற்ற இடம் அமையும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சகோதரங்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சொத்து வாங்குவது விற்பதில் இருந்த இழுபறி நிலை மாறும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அவ்வப்போது களைப்பு, சோர்வு, முதுகுத் தண்டில் வலி வந்து நீங்கும். அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார். கன்னிப் பெண்களே! வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்ததை விட லாபம் அதிகரிக்கும். பழைய வேலையாட்கள், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உணவு, இரும்பு வகைகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூழ்ச்சிகளையும் தாண்டி அதிகாரியின் ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் கற்பனைத்திறன் வளரும். உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 1, 5, 6, 8, 14, 17, அதிர்ஷ்ட எண்கள் : 3, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், ஆரஞ்சு அதிர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, செவ்வாய் |
| மே மாத எண் ஜோதிடம் : 6, 15, 24 Posted: 02 May 2012 08:50 AM PDT 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சலிப்பு, சோர்வு நீங்கும். பணம் வரும். ஆடை, அணிகலன் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். உறவினர் வீட்டு கல்யாணத்தை திறம்பட எடுத்து நடத்துவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். வி. ஐ. பிகளின் தொடர்பு கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேலைக் கிடைக்கும். வேற்றுமதம், இனத்தவர்களால் நன்மை உண்டு. கடந்த கால இனிய அனுபவங்களை அவ்வப்போது நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். அவ்வப்போது பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசுவீர்கள். சகோதரங்களால் செலவினங்கள் அதிகரிக்கும். வழக்கில் நிதானம் அவசியம். அரசியல்வாதிகளே! ஆதாரமின்றி எதிர்கட்சிக்காரர்களை விமர்சிக்க வேண்டாம். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஒதுக்கப்பட்டாலும் அதிகாரிகளால் மதிக்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும் அளவிற்கு பிரபலமாவீர்கள். அந்தஸ்து ஒருபடி உயரும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 4, 5, 6, 8, 15, 24 அதிர்ஷ்ட எண்கள் : 7, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ப்ரவுன் அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன் |
| மே மாத எண் ஜோதிடம் : 7, 16, 25 Posted: 02 May 2012 08:49 AM PDT 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். தோற்றப்பொலிவுக் கூடும். வாகன, வீடு வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். தந்தையார் உதவுவார். பிதுர்வழி சொத்து சேரும். வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள். வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். அரசு காரியங்களும் முடியும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு என்றாலும் அவ்வப்போது பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்துப் போகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளே! பொதுக்கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள். கன்னிப் பெண்களே! திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடும். திடீர் பயணங்கள் உண்டு. வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வதுப் பற்றி யோசிப்பீர்கள். வர வேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். கலைத்துறையினர்களே! சம்பளப்பாக்கி கைக்கு வரும். போராடங்களை கடந்து சாதிக்கும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 2, 6, 7, 11, 16, 20 அதிர்ஷ்ட எண்கள் : 2, 6 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, பச்சை அதிர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், புதன் |
| Posted: 02 May 2012 08:48 AM PDT * முள்ளங்கி சாப்பிட்டால் வாதம் குணமாகும். முள்ளங்கி இருமல், கபம், குடல் நோய்களுக்கும் சிறந்தது. * இரவில் தூங்க அடம் பிடிக்கும் குழந்தைக்கு படுக்கும் முன் சிறிது தேன் கொடுத்தால் அசந்து தூங்கும். * கருவேப்பிலை, மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்து சாப்பிட்டால் வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் சரியாகும். * 5 கிராம்பு. கொஞ்சம் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் உஷ்ண தலைவலி குறையும். * சீரகத்தை தண்ணீரில் கொதிக்க விட்டு ஆறியதும் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுப்படும். * இஞ்சி, கொத்தமல்லித் தழையுடன் எலுமிச்சைச் சாறு கலந்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் நன்கு பசி எடுக்கும். * அன்னாசிப்பழத்தை நறுக்கி தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் குடித்தால் கல்லீரல் ஆரோக்கியமாகும். * இதய மாற்று அறுவைச்சிகிச்சை செய்தவர்களுக்கு மஞ்சள் தூள் அருமருந்தாகும். இது இதயத்தில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கும். திசுக்களின் சேதத்தையும் சரிப்படுத்தும். |
| பிளாக் ஹெட்ஸ் பிரச்சனைக்கு தீர்வு Posted: 02 May 2012 08:46 AM PDT முகத்தில் எடுப்பாக தெரிவது மூக்குதான் மூக்கில் ஏற்படும் முக்கிய பிரச்சனை பிளாக் ஹெட்ஸ் எனப்படும் கரும்புள்ளிகள்தான். ஒரு சிலருக்கு ஒயிட் ஹெட்ஸும் காணப்படும். இது இரண்டுக்குமே முறையான கவனிப்பு அவசியம். கடைகளில் விற்கும் பிளாக் ஹெட்ஸ் ரீமூவல் ஸ்ட்ரிப்ஸ் அதிக நாட்களாக இருக்கும் பிளாக் ஹெட்ஸை முழுதுமாக நீக்காது. ஏனென்றால் நாள்பட்ட பிளாக் ஹெட்ஸ் மிகவும் அழுத்தமாக இருக்கும். நாள்பட்ட பிளாக் ஹெட்ஸுக்கு மிகவும் சரியான ட்ரீட்மெண்ட், ஆவி பிடித்தல்தான். வீட்டிலேயே பேஷியலுக்கு செய்வதுபோல் எண்ணெய்ப்பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்கிற்கு நன்றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும். மூக்கின் பிளாக் ஹெட்ஸ் உள்ளவர்கள், விரல்களால் மூக்கின் பக்க வாட்டிலும், நுனியிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்றாக வேர்க்கும்வரை ஆவி பிடிக்க வேண்டும். இதனால் கரும்புள்ளிகள் மறைந்து விடும். மூக்கின் உள்ளே ஒரு சிலருக்கு அதிகமாக முடிகள் இருந்து, வெளியில் லேசாக எட்டிப் பார்க்கும். இதுவும் அழகை கெடுக்கிற விஷயம்தான். சின்னதாக புருவத்தை ட்ரிம் செய்ய உதவும் கத்தரிக்கோலை கொண்டு லேசாக ட்ரிம் செய்துவிடலாம். இதற்கென்று பிரத்யேகமான கத்தரிக்கோலும் கடைகளில் கிடைக்கும். அதிக எண்ணெய் உணவுகளை எடுத்துக் கொள்பவர்களுக்கும், எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்களுக்கும் பிளாக் ஹெட்ஸ் அதிகம் காணப்படும். நார்மல், ட்ரை ஸ்கின் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை குறைவு. |
| மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மருத்துவம் Posted: 02 May 2012 08:41 AM PDT * ஹோர்மோன் பிரச்னை உள்ள பெண்களுக்கு உடம்பு பருத்து மூன்று, ஆறு மாதங்களுக்குக் கூட மாதவிலக்கு வராமல் இருக்கும். இதற்கு முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் சமஅளவு எடுத்து அதை மிக்சியில் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட வேண்டும். சாறு எடுத்த மூன்று மணி நேரத்திற்குள் சாப்பிட்டால்தான் சிகிச்சை பலனளிக்கும். * முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்து கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கு பிரச்சனை சரியாகும். * உலர்ந்த புதினா இலையோடு ஒரு ஸ்பூன் கருப்பு எள் சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். * கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து பின் அதை வெளியில் எடுத்து நன்கு உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும். |
| Posted: 02 May 2012 08:39 AM PDT முளை கட்டிய பச்சைப்பயறு அடிக்கடி உபயோகித்தால் சுலபமாக ஜீரணமாகும். புரதத்துடன், நல்ல நார்ச்சத்து, வைட்டமின் - சி, பி- காம்ப்ளெக்ஸ் கிடைக்கும். குழந்தைகயின் ஆரோக்கியமான, உடல் வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும். தேவையான பொருட்கள்: முளை கட்டிய பச்சைப்பயறு - 1 கப் பனீர் - அரை கப் மாங்காய் - 1 கேரட் - 2 கொத்தமல்லி தழை - 1 கட்டு பச்சை மிளகாய் - 1 உப்பு - தேவையான அளவு சாட் மசாலா தூள் - அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் செய்முறை: * செய்முறை • பனீரை சதுரமாக வெட்டிக்கொள்ளவும். * கேரட்டை துருவிக் கொள்ளவும். * மாங்காயை துருவிக் கொள்ளவும். * கொத்தமல்லியை நன்றாக கழுவி இலைகளை மட்டும் ஆய்ந்து கொள்ளவும் * முளைகட்டிய பயறுடன், துறுவிய கேரட், அரிந்த பனீர், மாங்காய் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போடவும். * மிளகாயுடன் கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீல் விடாமல் மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். * அரைத்த் விழுதுடன் ஆலிவ் எண்ணெய், எலுமிச்ரை சாறு, சாட்மசாலா தூள் கலந்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு நன்கு குலுக்கி ஒன்று சேர்ந்ததும் கலந்து வைத்துள்ள முளைப்பயறுடன் சேர்க்கவும். |
| Posted: 02 May 2012 08:37 AM PDT செய்முறை: முதலில் கால்களுக்கிடையே ஒரு அடி இடைவெளியிருப்பது போல் நிற்கவும். விரல்களைக் கோர்த்து, கரங்களைப் பின்பக்கமாக நீட்டி வைக்கவும். மூச்சை முழுவதுமாக உள்ளே இழுக்கவும். அடுத்து மூச்சை வெளிவிட்டுக் கொண்டே இடுப்பை வளைத்து எவ்வளவு குனிய முடியுமோ,அவ்வளவு தூரம் குனியவும். குனியும் போது பின்னிய கரங்களைப் பின்புறம் மேலே உயர்த்தவும். இதே நிலையில் சிறிது நேரமிருந்து மெதுவாக ஆரம்ப நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும். பலன்கள்: • தோள்பட்டை தசைகள் வலுப்பெறுகின்றன. • கழுத்தும், பிடரியும் வலுப்பெறும். |
| புண்ணியம் தரும் ரிஷப வாகன வழிபாடு Posted: 02 May 2012 08:36 AM PDT மதுரையில் நடந்து வரும் சித்திரை திருவிழாவின் கடைசி நாள் அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருவார்கள். சித்திரை திருவிழாவில் ரிஷபத்திற்கு மட்டும் இரண்டு நாள் இறைவனைச் சுமக்கும் பாக்கியம் கிடைக்கிறது. ஆறாம் திருவிழாவிலும் ரிஷபமே பவனி வந்தது. எதைத் தவற விட்டாலும், ரிஷப வாகன தரிசனத்தை மட்டும் தவற விடவே கூடாது. அந்தளவுக்கு புண்ணியமான தரிசனம் இது. ரிஷபம் என்றும் காளை தர்மத்தின் சின்னமாகும். இதன் கட்டான உடல் நமக்கு திடமனது வேண்டும் என்பதையும் கால்கள், எவ்வளவு சுமை இருந்தாலும் அதை தாங்கும் தன்னம்பிக்கை வேண்டும் என்பதையும், காதுகள் இறைவனின் திருநாமத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதையும், கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும் என்பதையும் ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும், கழுத்தில் கட்டப்பட்ட கிண்கிணி மணிகள் இறைவனை மந்திரம் சொல்லி வழிபடுவதையும் குறிக்கின்றன. ரிஷப தரிசனம் எல்லோருக்கும் எப்போதும் கிடைத்து விடாது. ஏனெனில் அந்த தரிசனம் மட்டும் ஏதோ ஒரு முன் பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். ரிஷப வாகனத்தில் பவனிவரும் சுவாமியை தரிசித்தால் இவ்வுலகில் என்னென்ன தான தர்மங்கள் உண்டோ அத்தனையும் செய்த புண்ணியம் கிடைக்கும். இந்த புண்ணியத்தை தனது அடியார்களுக்கு வழங்குவதற்காகவே மீனாட்சியும் சுந்தரேசுவரரும் ஒன்றாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். |
| Posted: 02 May 2012 08:34 AM PDT |
| Posted: 02 May 2012 08:32 AM PDT அழகரின் அபூர்வ வரலாறு........ ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு பற்கள் வெளியே தெரியும்படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்ëடார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டான். நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன். சரி நமது உருவம் தான் இப்படி அகிவிட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர் கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு. இவனுக்கு காட்சி கொடுத்து வேண்டியதை கேள் என்று கூறினார். அதற்கு தர்மதேவன் நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். தர்மதேவனின் வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் அழகு எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர்மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம். தல சிறப்பு......... பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சீபுரம் அடுத்த இடத்தையும், மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார். ஆண்டாள், நம்வாழ்வார், பூதத்தாழ்வார். பேயாழ்வார், திருமங்கையாழ்வார். ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர். பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர். கள்ளழகர் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது........ அழகர் கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாவிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர் கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக்கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார். தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத் தேடி இங்கு வந்து விட்டாள். மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன் மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க வேண்டும் என அடம் பிடித்தார். இவனது வேண்கோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள். இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் கள்ளழகர் ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்வாழ்வார் வஞ்சக்கள்வன் மாமாயன் என்கிறார். வைகை தோன்றியது எப்படி? மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே உணவு வகை கொட்டிக்கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவாப போய் விடும் என்றனர். சிவன் அவர்களிடம் இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர். மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே என வெட்கிநின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர். திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான் அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன். அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான். ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம் மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப்படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு என கட்டளையிட்டார். குண்டோதரனிடம் நீர் வரும் திசை நோக்கி கை வை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள் என்றார். இதுவே வைகை ஆனது. கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும், வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் வேகவதி எனப்பட்டது. அழகர் கோவிலின் சிறப்பம்சம்............ கருபண்ணசுவாமி..... இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம்படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். விவசாயிகள் விளைச்சல் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். அழகர் கோவில் தோசை: காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோவில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்ற மிகவும் புகழும், சிறப்பும் உடையது. நூபுர கங்கை: சிலம்பாறு, ராக்காயி அம்மன் கோவில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் இருந்து வற்றாத ஜீவ நதியாக வந்து கொண்டிருக்கிறது. மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை. பெருமாள் சப்தரிஷிகள் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் உற்சவராக உட்கார்ந்திருக்கிறார். சிறப்பம்சம்:........... தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கிறது. அழகரின் அவதாரம்.......... சித்திரை திருவிழாவிற்காக அழகர்கோவிலிருந்து கிளம்பும் பெருமாள் மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக்கொண்டு குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குகிறார். அழகர்கோவிலில் இருந்து பல்லக்கில் கிளம்பும் அழகர் பின் குதிரை வாகனம், சேஷவாகனம் என மாறுகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள், தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். இதன் பின் ராமராயர் மண்டகப்படியில் தசாவதாரம் எடுக்கிறார். நேர்த்திக்கடன்......... தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். |
| நவக்கிரக விரதம்: ஞாயிற்றுக்கிழமை Posted: 02 May 2012 08:29 AM PDT ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பதனை ஆதிவார விரதம் என்பர். ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்யஹிருதயம் படிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று விரதமிருந்து சூரியனுக்கு ப்ரீதியான சிகப்பு நிற வஸ்திரம், கோதுமை தானியத்தை இறைவனுக்கு படைத்து அதை பக்தர்களுக்குத் தானம் செய்யலாம். 11 வாரங்கள் இவ்வாறு விரதமிருந்து சூரியனை வழிபட்டால் சூரியனின் அருள் கிடைக்கும். |
| மே மாத எண் ஜோதிடம் : 8, 17, 26 Posted: 02 May 2012 08:26 AM PDT 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைக் கைக்கூடும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பிள்ளைகளை அதிகம் செலவு செய்து அவர்கள் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. ஷேர் பணம் தரும். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது பதவி, பொறுப்பு, உத்தியோகம் தேடி வரும். வழக்கில் திருப்பம் ஏற்படும். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். உடன்பிறந்தவர்கள் மதிப்பார்கள். அவ்வப்போது ஒருவித படபடப்பு, வீண் பழி, கவலைகள், விபத்து வந்துச் செல்லும். கோவில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். அரசியல்வாதிகளே! வீண் வறட்டுக் கவுரவத்திற்காக சேமிப்புகளை கரைக்காதீர்கள். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். கணிசமாக லாபம் உயரும். வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். இங்கிதமான பேச்சால் முன்னேறும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 5, 6, 8, 14, 15, 23 அதிர்ஷ்ட எண்கள் : 1, 3 அதிர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், பிங்க் அதிர்ஷ்ட கிழமைகள் : வெள்ளி, சனி |
| மே மாத எண் ஜோதிடம் : 9, 18, 27 Posted: 02 May 2012 08:24 AM PDT 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வழக்கு சாதகமாகும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சகோதரிக்கு திருமணம் முடியும். தாய்வழியில் ஆதரவுப் பெருகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதியவர்கள் நண்பர்களாவார்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அவ்வப்போது தாழ்வுமனப்பான்மை தலைத்தூக்கும். மறைமுக எதிர்ப்புகளும் வந்துப் போகும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமைக்கு நெருக்கமாவீர்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. கடையை விரிவுப்படுத்திக்கட்ட முடிவெடுப்பீர்கள். பழைய பங்குதாரர் மீண்டும் வந்து இணைவர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு புது நிறுவனங்களிலிருந்து வாய்ப்பு வரும். திடீர் யோகம் தரும் மாதமிது. அதிர்ஷ்ட தேதிகள் : 1, 3, 6, 18, 21, 27 அதிர்ஷ்ட எண்கள் : 4, 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ்பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வியாழன் |
| ஒரு மானை முழுமையாக விழுங்கும் பாம்பு(வீடியோ இணைப்பு) Posted: 02 May 2012 07:56 AM PDT |
| நாக பாம்புக் குட்டியின் முதல் வேட்டை(வீடியோ இணைப்பு) Posted: 02 May 2012 07:55 AM PDT |
| நொக்கியாவின் PureView 808 கைப்பேசிகள் Posted: 02 May 2012 07:48 AM PDT நொக்கியா நிறுவனம் PureView 808 என்ற இலக்கம் கொண்ட தனது புதிய தொலைபேசியை இம்மாதத்தில் அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளது.இக்கைப்பேசி வெளியீடு தொடர்பாக கடந்த பெப்ரவரி மாதம் நொக்கியா நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சிம்பியன் இயங்குதளத்தில் தொழிற்படவுள்ள இக்கைப்பேசியானது 41 மெகா பிக்சல்கள் உடைய கமெராவைக் கொண்டுள்ளது. இக்கைப்பேசியை தற்போது ரஷ்யா, இந்தியா போன்ற சில நாடுகளிலேயே தற்போது அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ள நொக்கியா நிறுவனம் அடுத்தடுத்த வாரங்களில் ஏனைய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளது. ![]() ![]() ![]() |
| சொத்து குவிப்பு வழக்கு: மேலும் 41 கேள்விகளுக்கு பதிலளித்தார் சசிகலா Posted: 02 May 2012 07:12 AM PDT தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து விட்டார். சசிகலாவிடம் வாக்குமூலம் பெறும் பணி நடந்து வருகிறது. இதுவரை அவரிடம் 500 க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதா, சசிகலா தாக்கல் செய்த புதிய மனுக்களை கடந்த 21-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மே 2-ந்தேதி முதல் விசாரிக்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நீதிபதி மல்லிகார்ஜுனையா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது சசிகலாவிடம் 41 கேள்விகள் கேட்கப்பட்டன. ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சசிகலாவின் வங்கி கணக்கில் பணப் பரிமாற்றம் நடந்தது எப்படி என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |












