சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- வாத்துக்குஞ்ஜை வேட்டையாடும் மீன்(வீடியோ இணைப்பு)
- உலகில் மிகப்பெரிய பெயரைக் கொண்ட பெண் !
- சுற்றுலா பயணிகளை கவர்ந்து பரிசுகளை அள்ளிக் குவித்த எலி (வீடியோ, படங்கள் இணைப்பு)
- அண்மையில் வானத்தை அலங்கரித்த super moon (வீடியோ, படங்கள் இணைப்பு)
- ‘உத்தரவுப்படி’ ரகசியம் காக்கப்பட்ட அத்வானியின் மதுரை விசிட்!
- சிறையில் யாருமற்ற நிலையில் கனிமொழி, 20 நிமிடம் ‘சாமி தரிசனம்’!
- ஷான் வாட்சனின் அதிரடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- அத்வானியை குறி வைக்கும் சிபிஐ... கார்த்தி சிதம்பரத்தைத் துரத்தும் பாஜக!
- என்னை துரத்த முடிவு செய்துவிட்டார்கள்: பிரணாப் முகர்ஜி
- 100 ஏர் இந்தியா பைலட்டுகள் திடீர் 'சிக்' லீவ்!: 10 பைலட்டுகள் பணி நீக்கம்!!
- புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மதிமுகவும் போட்டியிடவில்லை: வைகோ அறிவிப்பு
- குட்டீஸ் எப்பவும் கம்யூட்டர் முன்னாடியே இருக்காங்களா?- கவனச் சிதறல் வரும்!
- செட்டிநாடு எலும்பு குழம்பு
- உருளைக்கிழங்கு சொதி
- உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா?
- ஜீ தமிழில் கலக்கும் ரோஜாவின் 'லக்கா கிக்கா'..!
- கேபிபி சாமி திமுகவிலிருந்து விலகத் திட்டம்?- கனிமொழி மூலம் கருணாநிதி சமாதானம்??
- கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவி
- காற்றில் இயங்கும் கார்: வெற்றிகரமாக சோதனை செய்த டாடா
- தமிழை சப்போர்ட் செய்யும் வசதியுடன் உபிஸ்லேட் டேப்லெட்!
- தொலைந்து போகும் குழந்தைகளை மொபைல்போன் மூலம் கண்டுபிடிக்கும் வசதி!
- தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…?
- கோடம்பாக்கத்தில் அதிநவீன புதிய லேப் & மினி திரையரங்கம்!
- 'சவீதா பாபி'யாக மாறிய சன்னி லியோன்!
| வாத்துக்குஞ்ஜை வேட்டையாடும் மீன்(வீடியோ இணைப்பு) Posted: 08 May 2012 09:24 AM PDT This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலகில் மிகப்பெரிய பெயரைக் கொண்ட பெண் ! Posted: 08 May 2012 08:05 AM PDT அறக்கட்டளையொன்றை நடாத்திவரும் இங்கிலாந்தின் ஹார்ட்டில்பூல் என்ற பிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணியே இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். 41 வயதான இந்தப் பெண்மணி முன்னர் டோண் மக்மனஸ் என அழைக்கப்பட்ட போதிலும், அறக்கட்டளையொன்றிற்காக தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். அவ்வாறு மாற்றிக்கொள்ளும் போது உலக சாதனையும் அவர் வசம் கிடைத்துள்ளது. மரணமடைந்த தனது மகன் கைல் என்பவரின் ஞாபகார்த்தமாக சிறுவர்களுக்கான அறக்கட்டளையான "ரெட் றீம்ஸ்" என்ற அறக்கட்டளையை நிறுவிய அவர், அவ்வறக்கட்டளைக்காகவே தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். தங்களின் இலக்கை குறித்த அறக்கட்டளை அடைய ஏனையவர்களை தங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்த அப்பெண்மணி, தங்கள் இலக்கை அடைந்தால் 2008ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை அவ்வறக்கட்டளை உதவியுள்ள அனைவரினதும் பெயரை தனது பெயராக மாற்றிக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதன்படி ரெட் - வக்கி லீக் - அன்ட்லெஸ் - புறோக் த ஸ்ட்ரீயோ - நியோன் ரைட் - பிறிங் பக் ஹொணஸ்ரி - கோலிஷன் - ஃபீட்பக் - ஹான்ட் ஒஃவ் ஏசஸ் - கீப் கோயிங் கப்டன் - லெற்ஸ் பிறிட்டென்ட் - லொஸ்ட் ஸ்ரேட் ஒஃவ் டான்ஸ் - பேப்பர் ரக்ஸிஸ் - லூனர் ரோட் - அப் டளெண் ஸ்ரேஞ் - ஓல் அன்ட் ஐ - நியோன் ஸீப் - ஈவ் ஹோர்ண்பி - ஃபயே பிரட்லே - ஏ.ஜே.வில்ட்டே - மைக்கல் ரைஸ் - டியன் வற்ஸ் - மத்தியூ அப்பிள்யார்ட் - ஜோன் அஷர்ஸ்ட் - லோரன் ஸ்வேல்ஸ் - ஷோ அங்கஸ் - ஜஸ்பிறீட் சிங் - எம்மா மத்தியூஸ் - நிக்கொலோ பிறௌண் - லியன்னே பிக்கரிங் - விக்டோரியா டேவிஸ் - ராச்சல் பேர்ண்சைட் - கில் பார்க்கர் - ஃபிறேயா வொற்சன் - அலிஸ்ஸா வற்ஸ் - ஜேம்ஸ் பியர்சன் - ஜேக்கப் சொதேர்ண் - டார்லி - பெத் லோவ்றி - ஜஸ்மின் ஹெவிற் - குலோ கிப்ஸன் - மொல்லி ஃபார்குவர் - லூயிஸ் மேர்ப்பி - அபி கோல்ஸன் - நிக் டேவிஸ் - ஹார்வே பாக்கர் - கிறயன் வில்லியம்ஸன் - மைக்கல் அன்டர்சன் - பெத்தனி முர்ரே - சோஃபி ஹமில்ட்டன் - அமி வில்க்கின்ஸ் - எம்மா சிம்ப்ஸன் - லியம் வேல்ஸ் - ஜேக்கப் பர்ட்ரம் - அலெக்ஸ் ஹூக்ஸ் - ரொபெக்கா மில்லர் - கய்ட்லின் மில்லர் - சியன் மக்குளொஸ்கி - டொமினிக் பார்க்கர் - அபே ஷார்ப்பே - எலினா லார்க்கின் - ரொபெக்கா சிம்ப்ஸன் - நிக் டிக்ஸன் - அப்பி ஃபரல்லி - லியம் கிறீவ்ஸ் - காசே ஸ்மித் - லியம் டௌணிங் - பென் விக்னல் - எலிஸபெத் ஹன் - டானியல்லே வோர்க்கர் - லோரன் கிளென் - ஜேம்ஸ் ஜோன்சன் - பென் ஏர்வின் - கேற் பேர்ட்டன் - ஜேம்ஸ் ஹட்சன் - டானியல் மேயெஸ் - மத்தியூ கிற்சிங் - ஜோஸ் பென்னட் - எவாலுஸன் - ட்ரீம்ஸ் என்ற பெயரையே அவர் தனது பெயராகக் கொண்டுள்ளார் |
| சுற்றுலா பயணிகளை கவர்ந்து பரிசுகளை அள்ளிக் குவித்த எலி (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 08 May 2012 08:02 AM PDT எலிகள் நடைப்போட்டி என்ற வினோத போட்டியும் இடம்பெற்றது. அதில் ரோப்சான் என்ற பெயருடைய எலி உட்பட 6 வகையான எலிகள் பங்கேற்றன. இதில் நாகரீக உடை அணிந்து வந்த ரோப்சான் செய்த சேட்டைகள் அனைவரையும் கவர்ந்து முதலிடத்தில் தேர்வு பெற்று பரிசுகளை குவித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் பென் ஸ்வீட் கூறும்போது, "இது ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி. சிறுவர் முதல் பெரியோர் அனைவரையும் ஈர்த்து விட்டது" என்று கூறினார். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
| அண்மையில் வானத்தை அலங்கரித்த super moon (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 08 May 2012 07:59 AM PDT இம்முறை தோன்றிய இந்தப் பூரண நிலவு வானில் 14% சதவீதம் பெரிதாக காட்சியளித்துள்ளது. இதனால் சராசரியை விட 15.300 மைல் தொலைவில் அதாவது பூமியிலிருந்து வெறும் 221.802 மைல் தூரத்தில் வழக்கத்தை விட நெருங்கி வந்துள்ளது. மேலும் இந்தப் பூரண நிலவு சுமார் 1000க்கும் மேற்பட்ட புகைப்படகாரர்களின் கவனத்தை ஈர்த்து படம் பிடிக்கவைத்துள்ளது. வேவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட பூரண நிலவின் அழகிய காட்சிகளைப் படத்தில் காணலாம். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
| ‘உத்தரவுப்படி’ ரகசியம் காக்கப்பட்ட அத்வானியின் மதுரை விசிட்! Posted: 08 May 2012 07:50 AM PDT "மதுரைக்கு அத்வானி மீண்டும் வருவதானால், நாம் சொல்லும் வரை அவர் விஜயம் செய்யும் தேதிகள் ரகசியமாக வைக்கப்பட வேண்டும்" என்று மதுரை போலீஸ், லோக்கல் பா.ஜ.க.-வினரிடம் கண்டிப்பாக கூறியிருந்தது. இப்போது, மதுரைக்கு அத்வானி வரும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரு தினங்களில் (வியாழக்கிழமை) மதுரை வருகிறார் அவர். அத்வானி வருகை ரகசியமாக வைக்கப்பட வேண்டிய காரணம், அவர் மதுரையில் தங்கியிருக்கும்போது, குண்டு வெடிப்புகள் நடக்கலாம் என்ற அச்சம்தான். கடந்த செப்டெம்பரில் அவர் மதுரை வந்தபோது, அவரது ரத யாத்திரை செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. சில தினங்களுக்குமுன் அவர் மதுரையில் பங்கேற்பதாக இருந்த கூட்டம் மழை கபாரணமாக ஒத்தி வைக்கப்பட்டபின், மதுரை ராமர் கோவிலில் ஒரு சைக்கிள் குண்டு வெடித்தது. அதனால், அடுத்த தடவை அத்வானி மதுரை வரும்போது எந்த ரிஸ்க்கையும் எடுக்க தயாராக இல்லை காவல்துறை. பா.ஜ.க.-வின் மாநில மாநாடு வரும் வியாழன், வெள்ளி (10-ம், 11-ம் தேதிகள்) தினங்களில் நடைபெறுகிறது. நடைபெறவுள்ள இடமும் மதுரைதான். அத்வானியும் அதில் கலந்து கொள்கிறார். மாநாடு தொடர்பான விபரங்கள் முன்கூட்டியே மதுரை காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. காவல்துறையின் உத்தரவுப்படி, அத்வானி வரும் விஷயத்தை மாநில பா.ஜ.க. ரகசியமாகவே வைத்திருந்தது. அத்வானி மதுரையில் தங்கியிருக்கும் இரு தினங்களும் செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாக பாதுகாப்பு பிரிவு எஸ்.பி. பாலசுப்ரமணியன் தலைமையில் ஒரு குழு ஆராய்ந்தது. மாவட்ட கலெக்டர், சட்டம் ஒழுங்கு பிரிவினர், தீயணைப்பு படையினர் என அனைத்துத் தரப்பினரும் ஆலோசனைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆலோசனையின்பின், அத்வானிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும் என்று மதுரை போலீஸ் முடிவு செய்துள்ளது. அதன்பின்னர், அத்வானியின் வருகையை வெளிப்படையாக அறிவிக்கலாம் என பா.ஜ.க. மாநிலத் தலைமைக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகள் மதுரையில் தமது முதல்கட்ட வேலைகளை முடித்துவிட்டன. மீனாஷி ஆலயம் முதற்கொண்டு பல இடங்கள் சோதனை செய்யப்பட்டு விட்டன. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல், மதுரையின் வாயில்கள் அனைத்திலும் காவல் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. அத்வானி, மத்திய அரசின் 'Z-Plus' பிரிவு பாதுகாப்பு வளையத்தில் உள்ளார். இதோ அத்வானி மே 10-ம் தேதி காலை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கப் போகிறார். |
| சிறையில் யாருமற்ற நிலையில் கனிமொழி, 20 நிமிடம் ‘சாமி தரிசனம்’! Posted: 08 May 2012 07:47 AM PDT 2ஜி-ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள கனிமொழி, கடந்த சில நாட்களாக கட்சி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். ஆனால், கட்சிக்குள் ஸ்டாலின் அணி, அழகிரி அணி ஆகிய இரண்டுமே அவரை திட்டமிட்டு ஒதுக்கத் துவங்கி விட்டன. கொலை வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சரை சந்திக்க புழல் சிறைக்கு வந்தபோது, அவரை வரவேற்க வந்தவர்கள் நாலைந்து பேர் மட்டுமே! தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, திருவொற்றியூரில் நடந்த மீனவர் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, கடந்த 6 மாதங்களாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரைதான், கனிமொழி எம்.பி. சிறைக்குச் சென்று சந்தித்தார். தி.மு.க. வி.ஐ.பி.-கள் வீட்டுக்கு பலாப்பழம் வாங்க பண்ருட்டி சென்றாலும், பந்தா வரவேற்பு கொடுப்பது தி.மு.க. தொண்டர்களின் வழக்கம். வரும் வி.ஐ.பி.களின் 'வெயிட்'டைப் பொறுத்து, தொண்டர்களின் எண்ணிக்கை இருக்கும். ஏற்பாடு: மாவட்ட செயலாளர்கள்! நகர்வலம் வரும் வி.ஐ.பி. கலைஞர் குடும்பத்தை சேர்ந்தவர் என்றால், வரவேற்பு நிச்சயம். 'சகோதர யுத்த' தி.மு.க.-வில், அழகிரிருக்கும், ஸ்டாலினுக்கும் ஒரே மா.செ. ஆதரவாளராக இருக்க முடியாதல்லவா? இதனால், அழகிரியும், ஸ்டாலினும் திக்விஜயம் செய்யும்போது, மா.செ., எதிர் அணி ஆளாக இருந்தால், தாமே மாற்று ஏற்பாடுகளை செய்துகொண்டு வருவார்கள். குறிப்பிட்ட மா.செ., அன்று ஜலதோஷம் என்று வீட்டில் படுத்து விடுவார். வாழ்க சொல்லி துண்டு அணிவிக்க தொண்டர்கள் வந்து விடுவதால், இந்த உள் விவகாரங்களையெல்லாம் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், கனிமொழி புழல் சிறையில் 'சாமி தரிசனம்' செய்ய சென்றபோது, மினிமம் கேரண்டி கட்சிக்காரர்களின் வரவேற்புகூட இருக்கவில்லை என்பதுதான் நியூஸ். முன்னாள் அமைச்சர் சாமி, அவரது தம்பி சங்கர் ஆகியோர் குடும்பத்தைச் சேர்ந்த சில பெண்கள் மட்டும், கனிமொழிக்கு சால்வை அணிவித்து, "வாழ்க" கோஷம் எழுப்பினர். ஒருவேளை கனிமொழி விசிட், ஒரு ரகசிய சந்திப்பாக இருக்குமோ என்று யோசிக்கவும் முடியாது. காரணம், சிறை அதிகாரிகளின் அனுமதி பெற்றுதான் சிறைக் கைதி ஒருவரை சந்திக்க முடியும். வி.ஐ.பி.கள் குறிப்பிட்ட ஒரு சிறையில் இருந்தால், அங்குள்ள அதிகாரிகளுடன் செய்தியாளர்கள் எப்போதும் தொடர்பில் இருப்பார்கள். சந்திப்புக்கு யாராவது வருகிறார்கள் என்றால், விஷயம் முன்கூட்டியே தெரிய வந்துவிடும். தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தபோது, கனிமொழியை புறக்கணிக்கும்படி வாய்மொழி உத்தரவு, ஸ்டாலின் தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள். "தளபதியே ஸ்ட்ரிக்டாக கடைப்பிடிக்க சொன்னார்" என்று முன்னாள் அமைச்சர் ஒருவர் இந்த உத்தரவை ஸ்டாலின் ஆதரவு மா.செ.க்களின் காதில் போட்டதாக சொல்கிறார்கள். 'கனிமொழிக்கு கட்சிப் பதவி வேண்டும்' என்று ஏற்கனவே ராசாத்தி அம்மாள் கலகக் கொடி தூக்கியபோது, அதை சமாளிக்க ஸ்டாலின் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவருக்கல்லவா தெரியும்? இதனால், கனிமொழிக்கு தமிழகத்தின் எந்த மூலையிலும் செல்வாக்கு இருப்பதாக காட்ட அவர் விரும்ப மாட்டார். புழல் சிறையில் மொத்தம், 20 நிமிடங்கள் சாமியுடன் நடந்த சந்திப்புக்குப் பின், கனிமொழி வெளியே வந்தபோது, அவரை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் செய்தியாளர்கள்தான். "அ.தி.மு.க. அரசு, தொடர் வழக்குகளைப் போட்டு தி.மு.க.வை ஒடுக்கி விடலாம் என்று தவறாக கற்பனை செய்திருக்கிறது. உண்மையில் எங்களுக்கு இப்போதுதான் மன உறுதியும், நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. சாமிக்கு துணையாக தி.மு.க. இருக்கிறது. அதனால், சாமி மன உறுதியுடனும், உடல் நலத்துடனும் இருக்கிறார். தி.மு.க.வை விட்டு விலகவும் அவர் நினைக்கவில்லை" என்றார். 'சாமி' மீது நம்பிக்கையற்ற தி.மு.க.வுக்கு அதிஷ்டம் அடித்த நாட்களில், 'சாமி' துணையிருந்த காரணத்தால், ஆட்சியமைக்க முடிந்தது என்பார்கள் ஆன்மீகவாதிகள். இப்போது கனிமொழி புழல் சிறைக்கு வந்து, 'சாமிக்கு துணையாக தி.மு.க. இருக்கிறது' என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். |
| ஷான் வாட்சனின் அதிரடியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி Posted: 08 May 2012 07:40 AM PDT ஐபிஎல் 5 தொடரில் இன்றைய முதல் போட்டியில் 126 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது. துவக்கம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ஷான் வாட்சன் அணியின் வெற்றிக்கு உதவினார். ஐபிஎல் 5 தொடரின் இன்று புனேயில் நடைபெற்ற போட்டியில் புனே வாரியர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. போட்டியின் வென்ற புனே வாரியர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் துவக்க முதலே ரன்களை குவிக்க திணறியது. 5 ஓவர்கள் வரை ரன் சேர்ப்பில் மந்தமாக செயல்பட்ட துவக்க வீரரான கேப்டன் கங்குலி 16 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரை தொடர்ந்து மற்றொரு துவக்க வீரர் மைக்கேல் கிளார்க் 16 ரன்களில் எல்.பி.டபில்யூ ஆனார். அதன்பிறகு ராபின் உத்தப்பா உடன் ஜோடி சேர்ந்த மஜூம்தார் அடுத்தடுத்து 2 சிக்ஸ் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அவரது ஆட்டம் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 30 ரன்களை சேர்த்த மஜூம்தார் போல்டானார். பொறுப்பாக ஆடி வந்த ராபின் உத்தப்பா 13 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஆஞ்சிலோ மேத்யூஸ் ஒரிரு ரன்களாக சேர்த்த நிலையில், 11 ரன்கள் எடுத்த நிலையில் ஓவைஸ் ஷாவின் குறி தவறாத த்ரோவில் ரன் அவுட்டானார். மித்துன் 11 ரன்களில் போல்டானார். கடைசி வரை அணியின் ஸ்கோரை உயர்த்த முயன்ற ஸ்டீவன் ஸ்மித் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் புனே வாரியர்ஸ் அணி 6 விக்கெட்களை இழந்து 125 ரன்களில் சுருண்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் ஷான் டைட் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். 126 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் துவக்கத்திலேயே துவக்க வீரர் ரஹானே டக் அவுட்டாகி வெளியேறினார். பொறுப்பாக ஆடி வந்த கேப்டன் ராகுல் டிராவிட் 14 ரன்களில் அவுட்டானார். அதன்பிறகு வந்த ஷான் வாட்சன் அதிரடியாக ஆடி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி வந்த அசோக் மெனாரியா 18 ரன்களில் அவுட்டானார். எளிய இலக்கை விரட்டிய ஷான் வாட்சன் 51 பந்துகளில் 4 சிக்ஸ், 10 பவுண்டரிகள் அடித்து 90 ரன்களை குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். |
| அத்வானியை குறி வைக்கும் சிபிஐ... கார்த்தி சிதம்பரத்தைத் துரத்தும் பாஜக! Posted: 08 May 2012 07:38 AM PDT பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில், அத்வானியை விடுவித்ததை சிபிஐ எதிர்த்துள்ள நிலையில், ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு தொடர்பான விவகாரத்தை இறுக்கப் பிடிக்க ஆரம்பித்துள்ளது பாஜக. பாபர் மசூதி விவகாரத்தில், அத்வானிஉள்ளிட்டோருடைய தூண்டுதல் பேச்சுதான் மசூதி இடிப்புக்கு முக்கியக் காரணம், எனவே அவர்களை விசாரித்தேயாக வேண்டும், அவர்கள் வழக்கை சந்தித்தேயாக வேண்டும் என்று சிபிஐ கூறியுள்ளது. இதனால் பாஜக தரப்பு நெருக்குதலுக்குள்ளாகியுள்ளது. ஆனால் மறுபக்கம் கார்த்தி சிதம்பரம் விவகாரத்தை இறுகப் பிடிக்க ஆரம்பித்துள்ளது பாஜக. ஏர்செல்-மாக்ஸிஸ் விவகாரத்தில் நிதி ஆதாரம் அடைந்தார் கார்த்தி சிதம்பரம் என்பது சுப்பிரமணியம் சாமி மூட்டி விட்டுப் போன புகையாகும். அதை தற்போது பாஜக ஊதிப் பெரிதாக்க ஆரம்பித்து விட்டது. நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை இன்று எழுப்பிய பாஜக உறுப்பினர்களால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இன்று காலை லோக்சபா கூடியதும் பாஜக இந்த விவகாரத்தை எழுப்பியது. பாஜக உறுப்பினர்கள் கூட்டமாக கூடி நின்று ப.சிதம்பரத்தை நீக்கக் கோரி கோஷம் எழுப்பினர். சிலர் அவைத் தலைவர் மீரா குமார் இருக்கை முன்பு கூடி கோஷமிட்டனர். அரசு இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களை அமைதிப்படுத்த மீ்ரா குமார் முயன்றும் முடியவில்லை. இதையடுத்து பிற்பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் சபை மீண்டும் கூடியபோதும் அமளி தொடர்ந்தது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவையை நடத்த முயன்றார் மீரா குமார். ஆனால் எதிர்க்கட்சியினரின் அமளி தொடரவே பிற்பகல் 1 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. |
| என்னை துரத்த முடிவு செய்துவிட்டார்கள்: பிரணாப் முகர்ஜி Posted: 08 May 2012 07:37 AM PDT குடியரசுத் தலைவர் பதவிக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தான் சிறந்த நபர் என்று பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்கிறது. அதற்கான வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அல்லது மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் கட்சி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவர் பதவிக்கு சிறந்த நபர். அவர் சிறந்த குடியரசுத் தலைவராக இருப்பார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர்களிலேயே சிறப்பாக செயல்படும் ஒரே அமைச்சர் பிரணாப் முகர்ஜி தான். அதனால் பிரணாபை தனிப்பட்ட முறையில் வாழ்த்துகிறோம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறோம். இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்த நாட்டுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறோம் என்று ஒரே வாழ்த்து மழையாகப் பொழிந்தார். இதைக் கேட்ட பிரணாபால் சிரிப்பை அடக்க முடியவில்லை. மற்றவர்களும் சிரித்தார்கள். பிரணாப் தனது இருக்கையில் இருந்து எழுந்து, ஆக மொத்தம் நிதியமைச்சகத்தில் இருந்து என்னை நீக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்று சிரித்துக் கொண்டே கூறினார். |
| 100 ஏர் இந்தியா பைலட்டுகள் திடீர் 'சிக்' லீவ்!: 10 பைலட்டுகள் பணி நீக்கம்!! Posted: 08 May 2012 07:35 AM PDT உடல் நலம் சரியில்லை என்று கூறி ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 100 பைலட்டுகள் இன்று பணிக்கு வர மறுத்துவிட்டனர். இதனால் 5 சர்வதேச சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்ய நேரிட்டது. இதனால் எரிச்சலான மத்திய அரசு, பைலட்டுகள் சங்கத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. மேலும் பணிக்கு வராத பைலட்டுகளில் 10 பேரை பணியில் இருந்து நீக்கி ஏர் இந்தியா அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானிகள் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக 100 பைலட்டுகள் உடம்பு சரியில்லை என்று கூறி இன்று பணிக்கு வரவில்லை. இதனால் 5 சர்வதே சேவைகளை ரத்து செய்ய நேரிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடும் கோபமடைந்துள்ளது. இதையடுத்து இன்று பைலட்டுகள் மீது அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு குதித்துள்ளது. முதல் வேலையாக இந்திய பைலட்டுகள் சங்கத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது. மேலும் உடல் நலம் சரியில்லை என்று கூறி பணிக்கு வராத விமானிகளின் வீடுகளுக்கு மருத்துவக் குழுக்களை அனுப்பி உண்மையிலேயே அவர்களுக்கு உடம்பு சரியில்லையா என்பதை ஆராயுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வேலைநிறுத்தம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அஜீத் சிங் கூறுகையில், இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. 100 ஏர் இந்தியா விமானிகள் உடல் நலம் சரியில்லை என்று கூறி பணிக்கு வராமல் இருப்பது சட்டவிரோதமானது. வேலைநிறுத்தம் செய்வதாக இருந்தால் முன்கூட்டியே சொல்லி விட்டுச் செய்ய வேண்டும். ஆனால் இப்படி குறுக்குத் தனமாக ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது, சட்டவிரோதமானது என்றார் அவர். தற்போது டெல்லி, மும்பையில் ஏர் இந்தியா நிறுவன விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் பணிக்கு வராத பைலட்டுகளில் 10 பேரை ஏர் இந்தியா அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பைலட்டுகள் இன்று மாலை 6 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மதிமுகவும் போட்டியிடவில்லை: வைகோ அறிவிப்பு Posted: 08 May 2012 07:34 AM PDT நடைபெறுகின்ற அநீதியை, ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காகவே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடப்போவதில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த திமுக ஆட்சியின் போது திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்ற ஆளுங்கட்சி அராஜகம், வாக்காளர்களின் வாக்குகளை விலைக்கு வாங்க, கோடிகோடியாகக் கொட்டப்பட்ட ஊழல் பணம், இவற்றால் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி, அன்றைய எதிர்க்கட்சியான அதிமுக அதற்குப் பின்பு நடைபெற்ற 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் மார்ச் மாதம் நடைபெற்ற சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முந்தைய ஆளுங்கட்சி செய்த அதே அதிகார அத்துமீறல்களையே இன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவும் அப்பட்டமாகச் செய்து, ஒவ்வொரு வாக்காளருக்கும் பல்லாயிரக்கணக்கில் பணத்தைக் கொடுத்து, கோடிகோடியாக ஊழல் பணத்தைக் கொட்டி, வாக்காளர்களின் ஏழ்மையை, இல்லாமையைப் பயன்படுத்தி, வாக்குகளை விலைக்கு வாங்கியது. இதில் தானும் சளைக்கவில்லை என்ற விதத்தில் திமுகவும் வாக்காளர்களுக்குப் பணத்தைக் கொடுத்து, கோடிக்கணக்கில் செலவழித்தது. திருமங்கலம் இடைத்தேர்தலின் போதாவது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக தேர்தல் அதிகாரியான நரேஷ் குப்தா அவர்கள், அதிகார அத்துமீறலைத் தடுக்க முயற்சி மேற்கொண்டார். அப்போது, ஆளுங்கட்சிக்குக் காவல்துறை குற்றேவல் புரிந்ததால், பணப்பட்டுவாடாவை அவரால் தடுக்க முடியவில்லை. ஆனால் சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக அதிகாரியான பிரவீண்குமார் அதிகார அத்துமீறல்களைத் தடுக்க, ஒப்புக்குக்கூட ஒரு நடவடிக்கை எடுத்ததாகக் தெரியவில்லை. முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த மறுநாள் அதாவது மார்ச் 15ம் தேதி சங்கரன்கோவில் தொகுதி முழுக்க ஆளுங்கட்சி பணப் பட்டுவாடா செய்தது. ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஆளுங்கட்சியினர், கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டபோதும், எந்த நடவடிக்கையையும், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்கொள்ளவில்லை. மாறாக ஓட்டுக்குப் பணம் கொடுத்தவர்களைப் பிடித்துக் கொடுத்தவர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு போட்டது. தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழ்நாட்டில் உள்ள தேர்தல் அதிகாரிக்கும், தேர்தல் பார்வையாளருக்கும் ஆதாரங்களோடு புகார் கொடுத்தேன். ஆனால் அதற்கு மறுநாளான வாக்குப்பதிவு நாள் வரையிலும், தொகுதிக்குள் எங்கேயும் தலைகாட்டாத தேர்தல் பார்வையாளர், குதிரை கீழே தள்ளியதோடு, குழியும் பறித்த கதையாக, தொகுதியில் பணம் எங்கும் கொடுக்கப்படவில்லை என்றும், அது குறித்து எந்தப் புகாரும் தனக்கு வரவில்லை என்றும், அப்பட்டமான பொய்களை வாக்குப்பதிவு அன்றே சொன்னார். மதிமுக தோழர்கள், தங்கள் சக்திக்கு மீறி கைக்காசைச் செலவழித்து, வீதிவீதியாக வீடு வீடாக வாக்காளர்களை நேரில் சந்தித்து, ஆதரவு கேட்டு, ஜனநாயகக் கடமை ஆற்றினர். ஆனால் ஆளுங்கட்சி, ஆண்ட கட்சியின் பணப்பட்டுவாடாவால் அனைவரின் கண்முன்னாலேயே ஜனநாயகத்தின் மென்னி முறிக்கப்பட்டது. புதுக்கோட்டை இடைத்தேர்தலிலும், ஜனநாயகத்தைக் காலில் போட்டு மிதிக்கும், அராஜகம் பகிரங்கமாக அரங்கேறப் போகிறது. தமிழ்நாட்டில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி ஆளுங்கட்சியின் ஏஜெண்டாகச் செயல்படுகின்றார். தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு புதுக்கோட்டை நகராட்சிக்கு ரூ. 50 கோடி ரூபாய் நிதிஉதவி ஒதுக்கி இருப்பதும், 32 அமைச்சர்கள் புதுக்கோட்டையில் முகாம் இடுவதும், அதற்கான ஏற்பாடுகளே சாட்சியாகும். இடைத்தேர்தலில் இப்படி நடைபெறுகின்ற அநீதியை, ஜனநாயகப் படுகொலையை நாட்டு மக்களுக்கு உணர்த்துவதற்காகவே, புதுக்கோட்டை இடைத்தேர்தலில் பங்கு பெறுவதில்லை என்று மதிமுக முடிவு செய்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். |
| குட்டீஸ் எப்பவும் கம்யூட்டர் முன்னாடியே இருக்காங்களா?- கவனச் சிதறல் வரும்! Posted: 08 May 2012 07:33 AM PDT அக்னி நட்சத்திர வெயிலில் வெளியே போய் விளையாடாமல் வீட்டில் டிவியும், கம்யூட்டருமே பழியாக கிடக்கின்றனரா உங்கள் குழந்தைகள் உடனடியாக அவர்களுக்கு வேறு விளையாட்டுக்களை அறிமுகம் செய்யுங்கள். இல்லையெனில் உங்கள் குழந்தைகளுக்கு அட்டென்சன் டிசார்டர் எனப்படும் கவனச் சிதறல் நோய் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பள்ளி விடுமுறை விட்ட நாள் முதலே கம்யூட்டரில் ரைம்ஸ், கேம்ஸ் என புகுந்து விளையாடுகின்றனர் குட்டீஸ்கள். யூ டியூப்பில் ரைம்ஸ் எல்லாமே கோடியை தாண்டி ஹிட்டடிக்கின்றன. குழந்தைகள் வெளியில் செல்லாமல் இருப்பது ஒருபுறம் நன்மையை அளித்தாலும், இப்படி கம்யூட்டர், வீடியோ, டிவி என நாள் முழுவதும் பழியாக கிடப்பது குழந்தைகளுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். எப்பொழுதும் கம்யூட்டர், டிவி பார்க்கும் குழந்தைகளுக்கு கவனக்குறைவு எனும் ஒரு வித குறைபாடு ஏற்படும். சில சமயம் அதீதமாக ஆக்டிவாக இருப்பதும் (hyperactive) முன் யோசனை இல்லாமல் நடந்துகொள்வது (impulsive behaviour) போன்ற குறைபாடுகளும் இருக்கும். மேலும் குழப்பமான மனநிலை போன்றவற்றை உருவாக்கும் ADD என்பது உளவியல் ரீதியான குறைபாடு. இந்த குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு முறையான மருத்துவம் செய்யாவிட்டால் பள்ளிப்படிப்பு பாதிக்கப்படும், வேலை சரிவரச் செய்ய மாட்டார்கள், சமூகத்தில் யாரிடமும் கலந்து பழகும் தன்மை கைவராது, சுயமரியாதை அற்றவர்களாக ஆகும் நிலை ஏற்படும். சரியான வயதில் தீர்வு காணாவிட்டால் பதின்மவயதைத்தாண்டி பெரியவர்கள் ஆன பின்பும் இந்த மனோபாவம் தொடரும் என்று எச்சரிக்கின்றனர் உளவியாளர்கள். பல வருடங்களாகச் செய்த ஆய்வறிக்கையின் படி குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில் காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது. நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அந்த அளவுக்கு வேகமான மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல் போகிறது. தொலைக்காட்சி, கம்யூட்டர் போன்றவைகளின் முன் அதிகமாக இருப்பதால் புத்தகம் படித்தல், குறுக்கெழுத்து எழுதுதல், போன்ற மூளைக்கு பயன்தரும் வேலைகளை செய்ய விடாமல் செய்து விடும். தொலைக்காட்சி பெட்டியில் ஏற்படும் அதிக சத்தம், நொடிக்கு நொடி மாறும் காட்சிகள் அது படிப்பு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளாக இருந்தாலும் கூட சரி அது பாதிப்பைத் தருகிறது. வீடியோ கேம்களும், கம்ப்யூட்டர் கேம்களும் கூட இதே விளைவைத் தருகின்றன என்கின்றனர் உளவியலாளர்கள். நிஜவாழ்க்கையில் அதையே எதிர்பார்க்கும் குழந்தைகள் குறைவான வேகமுடைய உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள். இதனால் குழந்தைகளுக்கு சீக்கிரமாக போரடிக்க ஆரம்பித்து விடும். ஓரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய முடியாது. முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச் செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால் அதை செய்ய மாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் பகல்கனவு காணுவதில் விருப்பமுள்ளவர்களாக இருப்பார்கள். குழப்பமான மனநிலையில் பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை காது கொடுத்து கேட்கிறானா இல்லையா என்று சந்தேகம் பெற்றோருக்கு வரும்.முறையான பயிற்சி, சரியான மருத்துவத்தின் மூலம் குழந்தைகளின் இந்த குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று கூறுகின்றனர் உளவியலாளர்கள். ஆசிரியரும் பெற்றோரும் கூட குழந்தையின் திறமையைக் கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த பயிற்சியை அளிக்க வேண்டும் என்பது உளவியலாளர்களின் அறிவுறுத்தலாகும். |
| Posted: 08 May 2012 07:27 AM PDT செட்டிநாட்டு சமையல் அலாதியான சுவை கொண்டது. அதிலும் அசைவ சமையலில் செட்டிநாட்டு சமையலுக்கு ஈடு இணை இல்லை எனலாம். மட்டன் எலும்பு குழம்பு சுவையோடு உடல் ஆரோக்கியத்திற்காகவும் செய்து கொடுப்பார்கள். உங்கள் வீட்டில் நீங்களும் செய்து பாருங்களேன். தேவையான பொருட்கள் எலும்பு கறி - அரைக்கிலோ சின்ன வெங்காயம் – 100 கிராம் தக்காளி – 2 மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிதளவு இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 டீ ஸ்பூன் மிளகு, சீரகம், கசகசா அரைத்தது — 2 டீஸ்பூன் தேங்காய் பால் — 1 கப் எண்ணைய் — 1 1/2 ஸ்பூன் பட்டை — 1 அங்குலம் அளவு கிராம்பு — 4 கறிவேப்பிலை ஒரு கொத்து எலும்பு குழம்பு செய்முறை குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்த உடன் கறிவேப்பிலை தாளித்து சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். நன்றாக வதக்கிய உடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் கழுவி வைத்துள்ள எலும்பு கறியை போட்டு கிளறவும். உப்பு, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு சிறிது நேரம் குக்கரை மூடி வைத்து அடுப்பை மிதமாக வைக்கவும். அப்பொழுதுதான் கறியில் உப்பு பிடிக்கும். பின்னர் குக்கரை திறந்து அதில் அரைத்த சீரக விழுது மட்டன் மசாலா தூள் சேர்த்து கிளறி எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய் பால் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை விசில் போட்டு மூடி வைக்கவும். 5 விசில் வரை விடவும் அப்பொழுதுதான் எலும்பு நன்றாக வேகும். விசில் இறங்கிய உடன் சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிடலாம். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு உடலில் சத்து சேர்க்க இந்த குழம்பை வைத்து கொடுப்பார்கள். அதேபோல் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு இந்த எலும்பு குழம்பு சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்றும் கிராமப் பகுதிகளில் கூறுவார்கள். |
| Posted: 08 May 2012 07:25 AM PDT உருளைக்கிழங்கு என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறி என்றும் கூறலாம். இந்த உருளைக்கிழங்கை இந்தியன் ஸ்டைலில் பொரியல், குருமா என்று செய்வோம். கொஞ்சம் வித்தியாசமா மலேசியா ஸ்டைல்-ல செஞ்சு கொடுப்போமா!!! தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு - 3 கெட்டியான தேங்காய்ப்பால் - 1 கப் இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப் பெரிய வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 6 பல் பட்டை,லவங்கம்,ஏலக்காய் - 2 உப்பு - தேவைக்கேற்ப கறிவேப்பிலை - சிறிது செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, அதன் தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும். பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இரண்டாம் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து அதில் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வெங்காயம் வேகும் வரை கொதிக்க விடவும். வெங்காயம் வெந்தவுடன் அதில் கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி இறக்கவும். |
| உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? Posted: 08 May 2012 07:24 AM PDT மச்சம் உடம்பில் இருந்தால் அதிர்ஷ்டம் என்று கூறுவார்கள், அதுவும் மச்சம் முகத்தில் இருந்தால் ரொம்ப ரொம்ப நல்லது என்பர், ஆனால் மச்சம் இருந்தால் பல மகத்துவங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மச்சம் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தான் ஏற்படும். இது மனித உடலில் உள்ள செல்கள் வேகமாகப் பிரியும் போது தோலில் கருப்பு நிறப் புள்ளி ஏற்படுகிறது, இதுவே மச்சம் ஆகும். இத்தகைய மச்சம் சிலருக்கு நடுத்தர வயதில் மறைந்துவிடும். சிலருக்கு அவை தொடர்ந்து பரவும். மச்சம் குறித்த ஆய்வை லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆராய்ச்சிக் குழு மேற்கொண்டது. அது மச்சம் இல்லாதவர்களை விட மச்சம் இருப்பவர்களுக்கு வலுவான எலும்புகள் இருக்கிறது என்றும் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் எலும்புகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவு என்றும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மச்சக்காரர்களுக்கு இறுக்கமான தசைகளும், ஆரோக்கியமான கண்களும், இதயமும் இருக்கும், மேலும் தோல் சுறுக்கம் குறைவாகத் தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 18 வயது முதல் 79 வயது வரை உள்ள உருவ வேறுபாடுள்ள இரட்டையர் பெண்கள் இந்த ஆராய்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களில் 100 மச்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு 25 மச்சத்தை விடக் குறைவாக உள்ளவர்களுடன் பார்க்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தாக்கும் அபாயம் 50 சதவிகிதம் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவிலும் இதே போன்று ஆய்வு ஒன்று நடந்தது, இதிலும் அதே முடிவு தெரிய வந்துள்ளது என்று மரபியல் துறை நிபுணர் பேராசிரியர் டிம் ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். உங்க உடம்புல நிறைய மச்சம் இருக்கா? அப்ப அதிர்ஸ்டசாலி என்பதை விட நீங்கள் ஆரோக்கியசாலிதான். |
| ஜீ தமிழில் கலக்கும் ரோஜாவின் 'லக்கா கிக்கா'..! Posted: 08 May 2012 07:20 AM PDT லக்கா, கிக்கா எனப்படும் புதுமையான கேம் ஷோ மூலம் கலக்கலாக களம் இறங்கியுள்ளார் முன்னாள் கனவுக்கன்னி ரோஜா. அவருடைய அழகான உடை அலங்காரம், கேள்விகளை கேட்கும் மேனரிசம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளித்திரையில் ஜொலித்த நட்சத்திரங்கள் சின்னத்திரைக்கு வருவது புதிய விசயமல்ல. சிலர் கதாநாயகியாக நடிப்பார்கள். சிலர் நிகழ்ச்சி நடத்துவார்கள். அந்த வரிசையில் ரோஜாவும் களம் இறங்கியுள்ளார். இவர் ஜீ தமிழ் டிவியில் 'லக்கா, கிக்கா' என்ற கேம் ஷோவை தொகுத்து வழங்குகிறார். வழக்கமான ஜாக்பாட் நிகழ்ச்சி போன்று இல்லாமல், முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. நான்கு சுற்றுக்களை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் கேள்வியை ரோஜா கேட்பார். அதற்கு பார்வையாளர்கள் விடை சொன்னால் அப்போதே கையில் ரூ.5 ஆயிரம் பரிசு கிடைக்கும். 2 வது சுற்று திறமைக்கான போட்டி. பாடத்தெரிந்தவர்கள் ஆடத்தெரிந்தவர்கள் மேடையேறி ஆடலாம். அப்போது கிளி ஒவ்வொருவருக்கும் ஒரு சீட்டெடுக்கும். அந்த சீட்டில் வருகிற பரிசுத்தொகையை அப்போதே ரோஜா வழங்குகிறார். 3வது சுற்று ஏலம் விடும் நிகழ்ச்சி. 4 வது இறுதி சுற்றை எட்டுபவர்களுக்காக 3 பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு பொம்மையில் மட்டும் அதிக தொகை இருக்கும். இதில் ஒரு பொம்மையை தேர்ந்தெடுத்து தங்களுக்கான தொகையை பெற்றுக் கொள்ளலாம். முற்றிலும் வித்தியாசமான முறையில் நடக்கும் இந்த நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9.30மணிக்கு ஜீ தமிழ் டி.வியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது ஜெயா டிவியில் சிம்ரன் நடத்தும் ஜாக் பாட் நிகழ்ச்சிக்கு பலத்த போட்டியாக உருவாகும் என்று நேயர்கள் மத்தியில் இப்போதே ஒரு பேச்சு கிளம்பியுள்ளது. |
| கேபிபி சாமி திமுகவிலிருந்து விலகத் திட்டம்?- கனிமொழி மூலம் கருணாநிதி சமாதானம்?? Posted: 08 May 2012 07:19 AM PDT முன்னாள் அமைச்சர் கேபிபி சாமி கைதாகி பல நாட்களாகி, அவர் சிறையில் அடைபட்டுள்ள நிலையில் திடீரென அவர் மீது திமுக தரப்பில் பரிவு காட்டப்படுவது பலரையும் குழப்பியுள்ளது. ஆனால் அவர் திமுகவிலிருந்து விலகத் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்தே அவர் மீது திமுக தலைமை திடீரென பரிவு காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. திருவொற்றியூர் கே.வி.கே. குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் செல்லத்துரை, வேலு ஆகியோர் கடந்த 2006ம் ஆண்டு மாயமானயினர். அவர்களை அப்போதைய திமுக அமைச்சர் கே.பி.பி.சாமி, அவரது தம்பி சங்கர் ஆகியோர் அடியாட்கள் மூலம் கடத்தி கொலை செய்ததாக இருவரின் மனைவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின் கே.பி.பி.சாமி, அவரது தம்பி சங்கர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கைது செய்ய்பபட்டு நெடு நாட்களாகி விட்டது. இவர்களில் சாமியைத் தவிர மற்ற அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். சாமி மட்டுமே தொடர்ந்து சிறையில் அடைபட்டுள்ளார். சாமி குறித்து எந்தத் தகவலையும் திமுக வட்டாரத்தி்ல் காண முடியாத நிலையில் திடீரென 2 நாட்களுக்கு முன்பு திமுக தலைமை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இன்றைய அதிமுக ஆட்சியில் அடுக்கடுக்காக மக்கள் பிரச்சனைகள் இருக்கும்போது, அவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டு, ஆளுங்கட்சியினர் தமிழகம் முழுவதுமுள்ள திமுக முன்னணியினரைப் பழி வாங்குவதையே முக்கிய பணியாக கொண்டு பொய் வழக்குகளை புனைந்தும், - போலீஸ் படையை கொண்டு மிரட்டியும் - கழகத்தை வலுவிழக்கச் செய்யலாம் என கனவு கண்டு - அதனை நிறைவேற்றி கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர் கே.பி.சங்கர், அவரது குடும்பத்தினர் ஆகியோரை கைது செய்தும், கே.பி.சங்கரின் மனைவியை நள்ளிரவில் வீடு புகுந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், உச்ச நீதிமன்ற விதிமுறைகளுக்கு புறம்பாக நடந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் மீது பொய் வழக்குகளை தொடுத்து, அவர் குடும்பத்தையே அழித்து விடும் முயற்சியில் இந்த அதிமுக அரசு ஈடுபட்டு, காவல்துறையை திட்டமிட்டு ஏவிவிட்டிருக்கிறது. இந்நிலையில் இதுபோன்ற அதிமுக அரசின் போக்கை எதிர்கொள்வது குறித்து ஆலோசித்திட திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கட்சியின் வழக்கறிஞர்கள் கூட்டம் வரும் 12ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. திமுக முன்னணியினர் பலர் கைதாகி சிறையில் உள்ள நிலையில் சாமி மீது திடீரென திமுக தலைமை காட்டிய பரிவு பலரையும் குழம்ப வைத்தது. இந்த நிலையில் நேற்று திமுக எம்.பி கனிமொழி திடீரென புழல் சிறைக்குப் போய் அங்கு சாமியை சந்தித்துப் பேசினார். மேலும் சிறைவாசலில் சாமியின் தம்பி மனைவி ஸ்ரீதேவியையும் சந்தித்து ஆறுதல் கூறி விட்டு வந்தார். இதுவும் திமுக வட்டாரத்திலேயே குழப்ப அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சாமி திமுக தலைமை மீது பெரும் அதிருப்தி அடைந்திருப்பதாகவும், தனது வழக்கில் திமுக தலைமை உரிய முறையில் உதவவில்லை என்று வருத்தமடைந்திருப்பதாகவும், திமுகவுக்கு முழுக்குப் போடும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டு வருவதாகவும் வந்த தகவல்களைத் தொடர்ந்தே திமுக தலைமை சுதாரித்துக் கொண்டு சாமி குறித்து பரிவு காட்ட ஆரம்பித்திருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தி உண்மையாக இருக்கலாம் என்று நினைக்கும் வகையில் நேற்று கனிமொழியின் பேச்சும் இருந்தது.சாமியை சிறையில் பார்த்து விட்டுத் திரும்பிய கனிமொழி செய்தியாளர்களிடம் கூறஉகையில், சாமிக்கு துணையாக திமுக இருக்கிறது. அதனால், சாமி மன உறுதியுடனும், உடல் நலத்துடனும் இருக்கிறார். திமுகவை விட்டு விலகவும் அவர் நினைக்கவில்லை என்றார் கனிமொழி. |
| கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவி Posted: 08 May 2012 07:16 AM PDT கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கருவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெர்மனியை சேர்ந்த பாஷ் நிறுவனம் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், ஜெர்மனி நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு அமைப்புடன் இணைந்து டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவியை பாஷ் உருவாக்கியுள்ளது. ஸ்லீப் ஓ மீட்டர் என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த கருவி டிரைவிங் செய்யும்போது தூங்கினால் ஸ்டீயரிங் வீலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து இந்த கருவி டிரைவர் தூங்குவதை கண்டுபிடித்து எச்சரிக்கும். மேலும், காரின் வேகம், ஆக்சிலேட்டர் உள்ளிட்டவற்றின் மாற்றங்களையும் இந்த கருவி கண்காணித்து டிரைவர் அயர்ந்துள்ளதை கண்டுபிடித்து எச்சரிக்கும். தற்போது சொகுசு கார்களில் இந்த தொழில்நுட்பம் இருக்கிறது. இருப்பினும், இந்த கருவி மிகக்குறைந்த விலையில் விற்பனை செய்ய பாஷ் திட்டமிட்டுள்ளதால் சாதாரண ரக கார்களிலும இந்த கருவியை பொருத்தி விற்பனைக்கு கொண்டு வர முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த கருவி மூலம் டிரைவர் அயர்ந்து விடும்போது ஏற்படும் விபத்துக்களை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது. |
| காற்றில் இயங்கும் கார்: வெற்றிகரமாக சோதனை செய்த டாடா Posted: 08 May 2012 07:15 AM PDT காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் 2 கான்செப்ட் கார்களை டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எலக்ட்ரிக் தவிர்த்து மாற்று எரிபொருள் கார்களை உருவாக்கும் வகையில், கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனமான எம்டிஐ நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 2 கட்டமாக புதிய காரை வடிவமைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கான்செப்ட் மாடல் எஞ்சின் தயாரிக்கப்பட்டு, அந்த எஞ்சின் தற்போது 2 டாடா கார்களில் பொருத்தி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது. |
| தமிழை சப்போர்ட் செய்யும் வசதியுடன் உபிஸ்லேட் டேப்லெட்! Posted: 08 May 2012 07:14 AM PDT ஆகாஷ் டேப்லெட்டைத் தயாரித்த டேட்டாவிண்ட் தன்னுடைய புதிய உபிஸ்லேட் வரிசை டேப்லெட்டுகளைக் களத்தில் இறக்குகிறது. இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் இந்த உபிஸ்லேட் டேப்லெட்டுகள் தமிழ், ஹிந்தி, மராத்தி, பஞ்சாப் மற்றும் மற்ற இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் வகையில் களமிறக்க இருக்கிறது. அதற்காக டேட்டாவிண்ட் பெங்களூரைச் சேர்ந்த ரிவேரியே லாங்குவேஜ் டெக்குனாலஜிஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற நிறவனத்துடன் வர்த்தக ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த ஒப்பந்த்தைப் பற்றி டேட்டாவிண்டின் தலைமை மேலாளர் திரு. சுனித் சிங் துளி கூறும் போது இந்த ஒப்பந்தம் பற்றி மகிழ்வதாகக் கூறுகிறார். மேலும் பல மொழிகளில் இந்த டேப்லெட் வரும் போது ஆங்கிலம் தெரியாத பல மக்கள் தங்கள் சொந்த தாய் மொழியில் டேப்லெட்டை இயக்கலாம் என்று கூறுகிறார். இந்த உபிஸ்லேட் டேப்லெட்டை வாடிக்கையாளர்கள் தங்களது சொந்த மொழிகளில் பயன்படுத்தலாம். அதற்கான தொழில் நுட்பங்களை இந்த டேப்லெட் கொண்டு வருகிறது. அதனால் உபிஸ்லேட் வாடிக்கையாளர்கள் பரமானந்தம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை. சமீபத்தில் டேட்டாவிண்ட் உபிஸ்லேட் 7சி என்ற புதிய டேப்லெட்டை களமிறக்கி இருந்தது. இந்த டேப்லெட் ஆகாஸ் 2 டேப்லெட்டின் வர்த்தக டேப்லெட்டாகவும் கருதப்பட்டது. ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளம் மற்றும் கோர்ட்டெக்ஸ் எ8 – 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் இருக்கும் இந்த டேப்லெட் ரூ.3999க்கு விற்கப்படுகிறது. குறைந்த விலையில் இந்த டேப்லெட் இருந்தாலும் வைபை மற்றும் ஜிபிஆர்எஸ் இணைப்புகளைக் கொண்டிருக்கிறது. 3 மோடம்களையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், யுஎஸ்பி போர்ட் போன்ற வசதிகளும் இந்த டேப்லெட்டில் உண்டு. மேலும் இதன் 7 இன்ச் திரை 800 x 400 பிக்சல் ரிசலூசனுடன் கப்பாசிட்டிவ் தொடு வசதியை அளிக்கிறது. |
| தொலைந்து போகும் குழந்தைகளை மொபைல்போன் மூலம் கண்டுபிடிக்கும் வசதி! Posted: 08 May 2012 07:13 AM PDT பள்ளிக்குச் சென்ற தமது குழந்தைகள் மாலை நேரம் சரியான நேரத்தில் வீடு திரும்பவில்லை என்றால் அந்த நேரம் பெற்றோர்கள் அடையும் துன்பத்திற்கும் பரபரப்பிற்கும் அளவே இருக்காது. அப்படிப்பட்ட துயராமான தருணத்தை போக்குவதற்காக ஒரு புதிய அப்ளிகேசன் வர இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஜார்ஜியாவில் ஒரு 14 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான். இதை அறிந்த அவனுடையத் தாயார் தனது ஸ்மார்ட்போன் மூலம் பேமிலி ட்ராக்கர் என்ற அப்ளிகேசனைப் பயன்படுத்தி தனது மகன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். அதன் மூலம் அவர்கள் வீட்டிற்கு மகிழ்ச்சி திரும்பியது. இந்த பேமிலி ட்ராக்கரைப் போல ஏராளமான அப்ளிகேசன்கள் உள்ளன. அதன் மூலம் தொலைந்து போன தங்களது அன்புக்குரியவர்களை மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும். பேமிலி ட்ராக்கரை உருவாக்கியவரான ராபர்டோ ப்ரான்சஸ்டி கூறும் போது, இந்த பேமிலி ட்ராக்கர் அப்ளிகேசன் மூலம் நமது தொலைந்து போன உறவினர்களை மிக எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் என்றி கூறுகிறார். மேலும் இந்த அப்ளிகேசனுக்கு உலக அளவில் 1 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருப்பதாகக் கூறுகின்றார். இந்த அப்ளிகேசன் மூலம் தொலைந்து போன தங்களது குழந்தைகளின் இடத்தைக் கண்டு பிடிக்க முடியும். அவர்களுக்கு செய்தி அனுப்ப முடியும். அதுபோல் அவர்களின் மொபைல்களுக்கு ரிமோட் மூலம் அலார்மை ஆக்டிவேட் செய்ய முடியும். இந்த சேவையை வெப் மூலமாக பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேசன் ஐபோன் மற்றும் ஆன்ட்ராய்டு சாதனங்களில் இயங்கும் வசதி கொண்டவை. மேலும் இந்த பேமிலி ட்ராக்கர் 2 வாரங்களுக்கான டேட்டா பேசையும் கொண்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த 2 வாரங்களாக தொலைந்து போன குழைந்தை எங்கே இருந்தது மற்றும் என்ன செய்தது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். |
| தட்கல் ரயில் டிக்கெட்டை நொடியில் முன்பதிவு செய்ய…? Posted: 08 May 2012 07:13 AM PDT வெகு சுலபமாக தட்கல் ரயில்வே டிக்கெட்டை முன்பதிவு செய்ய மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற இந்த பக்கத்தில் பயணிப்போரின் பெயர், வயது போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். தட்கல் புக்கிங் செய்யும்போது இவ்வாறு நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. இதனால், தட்கல் டிக்கெட் புக்கிங் செய்ய இயலாத நிலை ஏற்படுகிறது. தட்கல் முன்பதிவின்போது நேரம் விரயமாவதை தவிர்க்கும் வகையில் ஓர் புதிய வசதி அறிமுகமாகியிருக்கிறது. இந்த வசதியில் ஐஆர்சிடிசியின் முன்பதிவு பக்கத்தில் இருப்பது போன்றே பெயர் உள்ளிட்ட விபரங்களையும் முன்னதாகவே நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும்.( இந்த ஆட்டோஃபில் பக்கத்தினை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்). இதன் பிறகு ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் எப்போது டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றால், புக்மார்க்கில் உள்ள இந்த பக்கத்தினை பூர்த்தி செய்துவிட்டு கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஐயம் ஃபீலிங் லக்கி என்ற பட்டனை அழுத்தினால், மேஜிக் ஆட்டோ ஃபில் என்ற பட்டன் உருவாகும். இந்த மேஜிக் ஆட்டோ ஃபில் பட்டனை அப்படியே டிராக் செய்து, ஐஆர்சிடிசி முன்பதிவு பக்கத்தில் க்ளிக் செய்தால், பயணியின் விவர பட்டியல் தானாகவே அடுத்த நொடியில் நிரம்பி விடும். |
| கோடம்பாக்கத்தில் அதிநவீன புதிய லேப் & மினி திரையரங்கம்! Posted: 08 May 2012 07:12 AM PDT திரும்பிய பக்கமெல்லாம் ஸ்டுடியோக்களும் லேப்களுமாக நிறைந்திருந்த கோடம்பாக்கத்தில் இன்று இரண்டு லேப்களும் மூன்று ஸ்டுடியோக்களும்தான் இயங்கும் நிலையில் உள்ளன. மற்றவை அடுக்குமாடி வளாகங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர ஹோட்டல்கள் என்று மாறிவிட்டன. இந்த நிலையில் இப்போதைய தேவைகளுக்கேற்ப ஒரு அதி நவீன ஸ்டுடியோவை திறந்திருக்கிறார்கள். திரைத்துறையில் பல ஆண்டுகள் அவுட்டோர் யூனிட்டை நடத்தி வரும் ரவி பிரசாத் நிறுவனம் இந்த லேபைத் தொடங்கியுள்ளது. லேபின் பெயர் ரவி பிரசாத் லேப். இந்த லேபை சமீபத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் ஏவி எம் சரவணன், கலைப்புலி தாணு, டி சிவா, முரளிதரன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். கோடக் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மண்டல அதிகாரி ஜெர்ரி வடிவமைத்துள்ளார். இதுகுறித்து ரவி பிரசாத் லேப் நிர்வாக இயக்குநர் ரவி குமார் கூறுகையில், "1978-ம் ஆண்டு முதல் எங்கள் அவுட்டோர் யூனிட் இயங்கி வருகிறது. சினிமாவுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். இப்போது இந்த லேபை பிரமாண்டமாக தொடங்கியுள்ளோம். |
| 'சவீதா பாபி'யாக மாறிய சன்னி லியோன்! Posted: 08 May 2012 07:11 AM PDT ஆபாசப் படப் பிரியர்களைக் கவர்ந்திழுத்த சவீதா பாபி கற்பனைக் கதாபாத்திரத்திற்கு கிட்டத்தட்ட உயிர் கொடுத்துள்ளார் கனடா நாட்டைச் சேர்ந்த கவர்ச்சிப் பாவை சன்னி லியோன். இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட கற்பனை ஆபாசப் பட கேரக்டர் சவீதா பாபிதான். அதே பாணியில் தற்போது சன்னி லியோனும் கலக்கல் கவர்ச்சி போஸ் கொடுத்து அசரடித்துள்ளார். பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் இந்தியாவில் பிரபலமடைந்தவர்தான் சன்னி. கனடாவைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான இவர் அங்கு ஆபாசப் படங்களில் பிரபலமானவர். இந்தித் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ள சன்னி லியோன் ஆடவருக்கான எப்எச்எம் பத்திரிகையின் கவர்ஸ்டோரிக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். நெற்றியில் குங்குமம், கையில் வளையல், அப்படியே உடல் அங்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் பச்சை நிற மெல்லிய டிரான்ஸபரன்ட் சேலையில் படு கவர்ச்சிகரமாக தோற்றமளிக்கிறார்சன்னி லியோன். ஜன்னலுக்கு அருகே நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் சன்னிலியோனின் உடல் பாகங்களை குறிப்பாக அவரது மார்பகங்களை அப்படியே காட்டுகிறது வெளியிலிருந்து உள்ளே வரும் சூரிய ஒளி. இந்தப் பாதி கவர்ச்சிக்கே படு தூக்கலாக காட்சி தரும் சன்னி முழுக் கவர்ச்சியில் எப்படி இருப்பார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இனிமேல் ஆபாசப் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சன்னி கூறியிருந்தாலும் கூட இந்த 31 வயது அழகுப் பதுமையின் நோக்கம் என்ன என்பது இந்தப் படத்தின் மூலம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சமீபத்தில்தான் தான் ஜிஸ்ம் 2 படத்திற்காக ஒரு சூடான படுக்கை அறைக் காட்சியில் நடித்துக் கொடுத்திருந்தார் சன்னி. இந்த நிலையில் இப்படி ஒரு கவர்ச்சிகரமான போஸுடன் எப்எச்எம் இதழின் அட்டையில் காட்சி தருகிறார். நடிக்க வருகிறதோ இல்லையோ, நன்றாக கவர்ச்சி காட்ட வருகிறது சன்னிக்கு...! |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







































