தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


பொதிகையின் எதிரொலி

Posted: 07 May 2012 05:29 PM PDT

06 மே 2012 சாப்பிடும் போது மட்டுமே தொலைக்காட்சி சேனல்களை நோண்டும் பழக்கம் உடையவன் நான். (மீதி நேரத்தில் தொலைக்காட்சியில் வீட்டிலுள்ளவர்கள் ராஜ்ஜியம் தான் என்பதால், அங்கு அமர்வதே இல்லை) ஞாயிறு அன்று இரவு சன் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்று ஓடிக்கொண்டிருந்தது. 'வர வர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே சூதாட்டம் போல் ஆகி விட்டன' என்று சொல்லிக் கொண்டே ரிமோட்டால் சேனல்களை மாற்றிக் கொண்டே இருந்தேன். அப்போது தான் "பொதிகை தொலைக்காட்சி" வந்தது. முன்பு DD5 ஆக இருந்த காலத்தில், தொலைக்காட்சிக்கு ...

15000 பதிவுகளை கடந்துள்ள ஈகரையின் நகைச்சுவை மன்னன பாலா கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Posted: 07 May 2012 05:22 PM PDT

15000 பதிவுகளை கடந்துள்ள ஈகரையின் நகைச்சுவை மன்னன பாலா கார்த்திக் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மென்மேலும் பல லட்சம் பதிவுகளை விரைவாக கடக்க வாழ்த்துக்கள்.

கடவுளுக்கு ஒரு கடிதம்!

Posted: 07 May 2012 05:22 PM PDT

அனுப்புநர்: விலங்குகள், காடுகள் மற்றும் சரணாலயங்கள், பூமி. பெறுநர்: கடவுள் சொர்க்கம், ஓசோன் அருகில் பால்வழி மண்டலம். வணக்கத்துக்கும், பேரன்புக்கும் உரிய இறைவனே... உங்களின் படைப்பான உலக விலங்குகள் எழுதிக் கொள்வது! இங்கு மனிதர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எங்களின் வாழ்விடமான காட்டையும் அழித்து, தங்கள் வீடுகளுக்குத் தேவையான பொருட்களைச் செய்துகொள்கின்றனர். எங்கள் இடத்தை எல்லாம் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டிக்கொள்கிறார்கள். இது இப்படியே தொடர்ந்தால், எங்களின் இனத்தையே பார்க்க ...

சிரிக்கலாம் வாங்கோ

Posted: 07 May 2012 05:20 PM PDT

உங்க மனைவிய செல்லமா எப்படிக் கூப்பிடுவீங்க? கூகுள் ன்னு. ஏன்? நான் எங்க இருந்தாலும் கண்டுபிடிச்சுடுவா. -------------------------------------------------------------------------------- நண்பர் – 1 : ஒரு வழியா வீட்ட கட்டி முடிச்சிட்டேன். இருந்தாலும் மனசு 'திக்கு திக்கு'ன்னு இருக்கு. நண்பர் – 2 : ஏன்? நண்பர் – 1 : வீடு கட்டியிருக்கிற நிலம் யாரோடதுன்னு தெரியலியே.. --------------------------------------------------------------------------------------------- உலகத்துல ...

500 மதிப்பீடு பெற்ற பகவதியை வாழ்த்துவோம்...

Posted: 07 May 2012 05:12 PM PDT

500 மதிப்பீடு பெற்ற பகவதியை வாழ்த்துவோம்... வாழ்த்துகள் பகவதி - அனைவரின் நன் மதிப்பையும் பெற்ற நீங்கள் மென் மேலும் மதிப்பீடுகளை வாங்க வாழ்த்துகிறோம்.

திரு சார்லஸ் அவர்கள் 500 மதிப்பீடுகளை கடந்து விட்டார் வாழ்த்துக்கள்

Posted: 07 May 2012 03:21 PM PDT

ஈகரையின் கல்வியாளர் திரு சார்லஸ் அவர்கள் 500 மதிப்பீடுகளை கடந்து விட்டார் வாழ்த்துக்கள்.

வணக்கம்

Posted: 07 May 2012 03:15 PM PDT

வணக்கம்., நான் சுரேஷ்., இன்றுமுதல் மறுபடியும் இணைகிறேன்...!

அன்புத்தோழி பானு 1500 மதிப்பீடுகளை கடந்து விட்டமைக்கு வாழ்த்துக்கள்

Posted: 07 May 2012 03:14 PM PDT

அன்புத்தோழி, நமது ஈகரையின் செல்லப்பாட்டி, கதையரசி 1500 மதிப்பீடுகளை தொட்டுவிட்டார். மேலும் அதிக மதிப்பீடுகள் பெற வாழ்த்துக்கள் பானு.

ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்!

Posted: 07 May 2012 03:13 PM PDT

அன்பு நண்பர்களே! ஈகரை நண்பர்களின் இதயங்களை கொள்ளை கொண்ட நம்ம தல சிவா 3000 மதிப்பீடுகளை கடந்துள்ளார்! அனைவரையும் அரவணைத்து செல்வதில் சிறந்தவரான நம்ம சிவாவுக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகள் நண்பர்களே தங்கள் வாழ்த்துகளை ஒரு நான்கு வரி கவிதையில் தெரிவியுங்கள் எனது கவிதை: மயிலிறகே உனது மணம் மாரி மழையே உனது குணம் நீ சிவனானாலும் ஆக்கப்பிறந்தவன் வாழ்க உனது ஈகரை சேவை அன்புடன் அசுரன்

4000 பதிவுகள் - கல்வியாளர் அசுரனை வாழ்த்தலாம் வாங்க

Posted: 07 May 2012 03:10 PM PDT

4000 அனுபவ பதிவுகள் பதிந்த ஈகரை இணையற்ற கல்வியாளர் மகா அசுரனுக்கு வாழ்த்துக்கள்

நான்காயிரம் பதிவுகள்-கொலைவெறி(இனியவன்)அண்ணாவை வாழ்தலாம் வாங்க.

Posted: 07 May 2012 03:01 PM PDT

இனியவன் அண்ணனின் பெயர் மட்டும் இனிமை அல்ல,பழகவும் இனியவரே. நூற்று சொச்ச நாட்களிலே 4000 பதிவுகளிட்ட கொலைவெறி அண்ணனின் பதிவுகள் மேலும் பெருக என்னுடன் சேர்ந்து வாழ்த்துங்கள் வாழ்த்துக்கள் அண்ணா.,

4000 பதிவுகளை கடந்த நிர்வாக குழுவின் இளைய திலகம் இ.ரா.பகவதிக்கு வாழ்த்துக்கள்

Posted: 07 May 2012 02:57 PM PDT

4000 பதிவுகளை கடந்த எங்கள் அன்புத்தம்பி இளைய திலகம் இ.ரா.பகவதிக்கு வாழ்த்துக்கள்..!

`நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு

Posted: 07 May 2012 01:59 PM PDT

`நித்யானந்தா உள்பட யாருடைய கட்டுப்பாட்டிலும் நான் இல்லை' என்று மதுரை ஆதீனம் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். தருமபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளராக இருப்பவர் குருசாமி தேசிகர். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:- சட்டவிரோத காவல் தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்யானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ...

டென்ஷனில்லாம ஹாப்பியா இருக்க ஆசையா?

Posted: 07 May 2012 01:56 PM PDT

டென்ஷனில்லாம ஹாப்பியா இருக்க ஆசையா? டென்ஷனே இல்லாம சிரிச்சுக்கிட்டு எப்பவுமே ஹாப்பியா இருக்கணும்னு ஆசையா? ஆசை மட்டும் இருந்தா பத்தாது, அதுக்கு நாம சில விஷயங்களை செய்யணும். அப்பதான், நம்மால டென்ஷன் இல்லாம இருக்க முடியும். அப்படி என்ன செய்யணும்னு கேக்கறீங்களா? உங்களுக்கு பிறர் தீங்கு செய்யும் போது, அந்த தவறை நீங்கள் மன்னித்து விடுங்கள். தவறு செய்வது மனித இயல்பு. போன முறை அவன் தவறு செய்யும் போது மன்னித்தேன்; இனி என்னால் முடியாது என்று கூறாதீர்கள். நீங்கள் பிறரை மன்னிக்க மன்னிக்க உங்கள் ...

மனித வன்தட்டு(hard disk)என்றழைக்கப்படும் பெண்

Posted: 07 May 2012 01:54 PM PDT

மனித வன்தட்டு(hard disk)என்றழைக்கப்படும் பெண் – Jill Price (+Video) இன்று நீங்கள் பார்க்கப்போகும் நபர் உங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தப்போகும் ஒருவர். ஆம், இவர் தனது வாழ்வில் நடந்த எந்த சம்பவத்தையும் மறக்கவில்லை, அது நன்மையானதாக இருந்தாலும் சரி தீமையானதாக இருந்தாலும் சரி… இவரின் மூளையில் அனைத்தும் பதிவாகியுள்ளது. முன்னர் நடந்த சம்பவத்தைப்பற்றி கேட்டால் உடனே பதில் அளிக்கக்கூடிய ஆற்றலைப்பெற்றுள்ளார். யோசித்துப்பாருங்கள், இவரின் மனதில் எத்தனை எண்ண அலைகள் ஓடிக்கொண்டு இருக்குமென. இவரால் எதையுமே ...

நித்யானந்தாவால் இந்துக்கள் தலை நிமிர்ந்து நடக்கின்றனர்: இந்து மகா சபா

Posted: 07 May 2012 12:58 PM PDT

மதுரை ஆதீனம் மடத்திற்கு அகில பாரத இந்து மகா சபா தேசியத் தலைவர் சக்ரபாணி மகாராஜ், பொதுச் செயலாளர் இந்திரா திவாரி, தமிழ் மாநிலத் தலைவர் பாலசுப்ரமணியம் அடங்கிய குழு இன்று வந்தது. அவர்கள் மதுரை ஆதீனம் அருணகிரி நாதரையும், இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தாவையும் சந்தித்துப் பேசினர். பின்னர் இந்தக் குழுவினர் நிருபர்களிடம் பேசுகையில், நித்யானந்தர் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இந்து மதத்தை நல்ல முறையில் பரப்பி வருகிறார். இந்து மதம் தழைத்தோங்க பல்வேறு முயற்சிகளும் எடுத்து ...

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Posted: 07 May 2012 12:49 PM PDT

மன்னிக்கணும் நண்பர்களே! நான் இங்கு வந்துவெகு நாட்கள் ஆகிவிட்டது, வேலைபளு தான் காரணம். அத்துடன் ஒரு சந்தோஷமான செய்தி உங்களுடன் பகிர விரும்புகிறேன். எங்க கிருஷ்ணாக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு அதனால் தான் வேலை அதிகமாகிவிட்டது, அது தான் இங்கு வர முடியாமல் போனது

பிரபஞ்சத்தின் தோற்றம்

Posted: 07 May 2012 12:22 PM PDT

நாம் இருக்கும் இந்த பிரபஞ்சம் எப்போது தோன்றியது . எப்படி தோன்றியது அதற்க்கு முன்னால் என்ன இருந்தது. எவ்வளவு காலமாக இந்த பிரபஞ்சம் இருக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் இருக்கும். இந்த கேள்விகளை நாம் அனைவருமே ஏதாவது ஒரு காலகட்டத்தில் யோசித்திருப்போம். இவ்வாறு யோசித்த அறிவியல் அறிஞ்சர்கள் பிரபஞ்ச தோற்றத்தை பற்றி பல கொள்கைகளை முன்வைத்தார்கள். அவற்றில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை பிரபஞ்ச பெருவெடி கொள்கை. அந்த கொள்கையின்படி பிரபஞ்சம் ஆரம்பத்தில் அணுவினும் சிறிய கோளமாக மிகவும் வெப்பமாகவும், மிகுந்த ...

உதவி தேவை - சமன்பாடுகளை பதிவிடுவது எவ்வாறு

Posted: 07 May 2012 11:44 AM PDT

அறிவியல் பதிவுகள் இடும்போது தேவைப்படும் subcript மற்றும் superscript எவ்வாறு உபயோகிப்பது.

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!

Posted: 07 May 2012 11:43 AM PDT

"ஆற்றுநீர் வாதம் போக்கும் அருவிநீர் பித்தம் போக்கும் சோற்றுநீர் இரண்டையும் போக்கும்" கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும். உச்சிப் பொழுதில் பச்சைநிற வயல் ...

2011 ம் ஆண்டிற்கான சினிமா விருதுகள்

Posted: 07 May 2012 11:35 AM PDT

"நாளை மற்றுமொரு நாளாய்"

Posted: 07 May 2012 11:10 AM PDT

கல் ஒன்று வீசுகிறேன்.. குளத்தின் குறுக்காக. நீர் உதடுகளைத் தொட்டுத் தவ்வும்.. கல்லின் வீச்சிற்கிடையே நழுவி..நழுவிச் சிரிக்கிறது குளமும்...உனது புன்னகையும். ******************************************************* புத்தாண்டு தெரியவில்லை; பொங்கல் தெரியவில்லை; தீபாவளி, பிறந்த நாள் எதுவுமில்லை; தனது வாழ்வின் கனவுகளைச் சொல்லவும் தெரியவில்லை. "week end" விவரங்களும் தெரியவில்லை. "நாளை மற்றுமொரு நாளாய்" கழித்துத் தீர்க்கிறது கொல்லைக் குருவி. ********************************************************** ஒரு ...

கருப்பழகி “யவனப் பிரியா”

Posted: 07 May 2012 10:50 AM PDT

கருப்பழகி "யவனப் பிரியா" கொழு கொம்பு கண்டவிடத்து ஓடிப் படரும் கொடிமகள்தான் இந்த யவனப்பிரியா. இவளை அறியாதவர்கள் இருக்க முடியுமா?. நாம் அன்றாட வாழ்வில் ஒரு சிலரைப் பார்த்து இருப்போம். பழகி இருப்போம்; ஆனால் அவர்களின் பெயர் தெரியாமல் அல்லது அறியாமல் இருந்து விடுவது உண்டு. அதே போல் இந்தப் பசுங்கொடியாளையும் பார்த்தும் பயன் படுத்தியும் இருப்போம் என்று கூறுவது பொருந்தாது. கண்டிப்பாகப் பயன் படுத்தியுள்ளோம்; பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம் என்று கூறினால அது பொருந்தும். ஆனால் அவளின் புனைப்பெயர் ...

இன்று என் மகள் பிளஸ்சியின் பிறந்தநாள் - அசுரன்

Posted: 07 May 2012 10:15 AM PDT

ஈகரையின் செல்ல குட்டிஸ்களில் ஒருவரான நம் அசுரன் அண்ணாவின் அன்பு மகள் ப்ளீசிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் , ப்ளீசி எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம்

ஆன்லைனில் தள்ளுபடி விலையில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?

Posted: 07 May 2012 09:28 AM PDT

உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் பெற வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய வாய்ப்பு. அந்த வகையில் சூப்பர் ஸ்மார்ட்போன்களை ஆன்லைனில் குறைந்த விலையில் வாங்க இங்கே சில விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீது வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் ஒரு மோகம் இருக்கத்தான செய்கிறது. அந்த வகையில் ஆன்ட்ராய்டு 2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ஆர்க் எஸ் ஸ்மார்ட்போனில் ஐஸ் கிரீம் சான்ட்விச் வசதியினையும் பெற முடியும். ...

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Posted: 07 May 2012 09:21 AM PDT

அனைவருக்கும் வணக்கம் எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது. இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள ...

வண்டி... வண்டி... ரயில் வண்டி

Posted: 07 May 2012 09:19 AM PDT

என்ன தான் சொந்தமாக கார், பைக் என்று வைத்திருந்தாலும், ரயிலில் செல்லும் பயணமே அலாதியானது. ரயிலில் பயணம் செய்தால், அதிக கட்டணம் இன்றி பயணம் செய்யலாம். மேலும், உடலுக்கு அதிக சோர்வு இல்லாது பயணம் செய்யலாம். எனவே தான், தொலைதூரப் பயணங்களுக்கு மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகிறனர். சென்னை போன்ற மாநகரங்களைப் பொறுத்தவரை, புறநகர் ரயிலில் சென்றால், வாகன நெரிசலில் மாட்டாமல் தப்பிச் செல்லலாம். விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்குச் செல்லலாம். எனவே, புறநகர் பயணங்களுக்கும் மக்கள் இயன்ற அளவு ரயிலைப் ...

காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா?

Posted: 07 May 2012 09:04 AM PDT

காங்கிரஸ்காரர்களுக்கு~ தெரியுமா? ~தெரியாதா? $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$ ராஜீவ் காந்தி இலங்கையில் சிங்களவ இராணுவத்தினால் தாக்கப்பட்டார் ...அன்று ..அடிவாங்கிய சிறு நாட்களிலே தமிழ் ஈழமக்களுக்கு எதிராக செயற்பட தொடங்கிய மூடன் அவனே !!! தமிழீழ மக்களின் இன்னல் குறித்து யார் பேசினாலும் அவர்களின் ...

திருச்சியில் காலரா பீதி:30 பேர் பாதிப்பு

Posted: 07 May 2012 08:33 AM PDT

திருச்சி அருகே காலரா பீதி ஏற்பட்டுள்ளது. இதனால் 30-ம் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருச்சி அந்தநல்லூர் அருகே குலுமணி பஞ்சாயத்திற்குட்பட்ட புளியூர், கோசம்பட்டி், ‌கோதாவூர், எட்டரை ஆகிய கிராமங்களில் பொதுமக்களுக்கு திடீர் வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்பட்டுள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் பதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு குளுமணி ஆரம்ப சுகாதாரத்துறை அதிகாரி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். மேலும் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மருத்துவக்குழுவினர் ...

கம்ப ரசம் – அறிஞர் அண்ணா

Posted: 07 May 2012 08:00 AM PDT

"இராமன் வீர உரையைக் கம்பன் தீட்டுவது பார்! இயற்கையின் எழிலை அப்படியே எதுத்துக்காட்டும் திறத்தைக் கவனி! உவமைகள் தரும் உல்லாசத்தை உணர்!" என்று கூறி வந்தார்களே தவிர உண்மைக் கம்பரசம் இதுவென்று கூறினதில்லை. என் தோழர், இராமாயணத்திலே இருப்பது கம்பரசம், அதைச் சாப்பிட வேண்டும் என்று எனக்கு உரைத்தார். நான் ஒரு டோஸ் உள்ளுக்குச் செலுத்தினேன். ஆமாம் கம்பரசத்தைத்தான்... நீங்களும் அந்த கம்ப ரசத்தைச் சுவைத்தால்....! சரி, இதோ முதல் டோஸ், பருகுக! "போக்கிரிப்பயலே! இப்படி விறைத்து விறைத்துப் பார்ப்பதா பெண்களை? ...

ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?

Posted: 07 May 2012 07:56 AM PDT

வாழை மரத்தின் பயன்கள் என்று பார்த்தால், அது மருத்தவ குணம் நிறைந்தது, விஷம் முறிக்கும் ஒரு மருந்தாகவும், தீக் காயத்தில் இருந்து நம் உடலை காக்கவும் மேலும் எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. பாம்பு ஒருவரை தீண்டினால் அவருக்கு முதல் உதவி செய்து பின்பு வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து பின்பு அவருக்கு கொடுத்தால் அவர் விரைவில் நலம் பெறுவார். தீவிபத்தில் யாருக்கேனும் உடலில் காயம் ஏற்ப்பட்டால் வாழை இலையில் வைத்து கொண்டு சென்றால் அந்த எரிச்சலும் ...

கீதை துளிகள்

Posted: 07 May 2012 07:56 AM PDT

கீதை 4:38 உயிரோட்டமான--நித்தமும் வளர்கிற அறிவிற்கு ஈடுஇணையானதும் அதைப்போல தூய்மையானதும் இந்த உலகில் ஏதுமில்லை! அது எல்லா யோகங்களின் முற்றிய பலனால் விளைவது!! யார் ஆன்மீக பயிற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளுகிராறோ அவர் தனக்குள்ளாகவே இந்த அறிவை ஏற்ற காலத்தில் துய்க்க தொட்ங்குவார்!!! கீதை 4:39 இந்த உயிரோட்டமான அறிவில் லயித்த பக்தன் தனது புலண்களை அடக்குவதில் வெற்றி பெற்று ஞானம் சித்திக்கபெறுகிறான்! ஞானம் சித்திக்க பெற்று உண்ணதமான தெய்வீக சமாதானம் நிறம்பியவனாய் மாறுகிறான்!!! கீதை 4:40 ...

ஒண்டர்புல் ஒயிட் ஹவுஸ்!

Posted: 07 May 2012 06:09 AM PDT

அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலக மாளிகையின் பெயர் வெள்ளை மாளிகை. வாஷிங்டன் நகரின் மத்தியில், "நச்' என்று உள்ளது. இந்த மாளிகை மிகவும் எளிமையானது. ஆனால், மதிப்பிற்குரியது. முழுவதும் வெள்ளையாக வர்ணமடிக்கப்பட்ட மாளிகை இது. இந்த மாளிகையை வடிவமைத்தவர் ஜேம்ஸ் ஹோபன். 1792 முதல் 1800ம் ஆண்டு வரை கட்டப்பட்டது. ஹோபன் ஒரு ஐரிஷ் கட்டட கலை வல்லுனர். ஜனாதிபதி மாளிகையை வடிவமைக்கும் போட்டியில் வென்றதன் மூலம், ஹோபனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அயர்லாந்தில் டப்லின் என்னும் இடத்தில் "டுயூக் ஆப் லெயின்ஸ்டர்' ...

நெட் செண்டரில் போய் உள் நுழைந்தால் தமிழில் பெயர் மாறவில்லையே ஏன்?

Posted: 07 May 2012 06:06 AM PDT

நெட் செண்டரில் போய் ஈகரையில் உள் நுழைய முடிய வில்லையே ஏன்? சனிக்கிழமை ஒரு வேலை விசயமாக வெளியே நெட் செண்டர் வந்து ஈகரை வர முனைந்தேன் வரமுடியல .. என் பெயர் தமிழில் மாறவே இல்லை ஆஃபிசில் ஏற்கனவே அட்ரஸ் பாரில் இருப்பதால் வந்து விட்டேன் இல்லையென்றால் .........

உங்கள் கணியை ஃபார்மேட் செய்த பிறகு அனைத்து மென்பொருள்களையும் நிறுவ..!

Posted: 07 May 2012 05:47 AM PDT

உங்கள் கணினி சிலவேளைகளில் செயலிழந்து இயக்கத்தை நிறுத்திவிடும். மீண்டும் கணினியை சரிசெய்ய அதை Format செய்து பயன்படுத்துவீர்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது உங்களுக்குத் தேவையான மென்பொருள்களை ஒவ்வொன்றாக Install செய்துதான் இதுவரையும் பயன்படுத்தியிருப்பீர்கள். இனி அந்த கவலை உங்களுக்கு இல்லை. உங்கள் கணினியை Fomat செய்தவுடனேயே உங்களுக்கு வேண்டிய softwareகளை உடனடியாக உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ள ஒரு இணையதளம் உள்ளது. தளத்தின் பெயர்: Ninite இந்த தளத்தில் உங்கள் வேண்டிய அத்தனை முக்கிய மென்பொருள்களும் ...

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

Posted: 07 May 2012 05:10 AM PDT

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று இறங்கினார். இந்த கோலாகல நிகழ்ச்சியை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி கோஷத்துடன் கண்டு தரிசித்தனர். பிரசித்தி பெற்ற திருவிழா உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திடும் சிறப்பு மிகு விழாவாகும். பழமையை பறைசாற்றக் கூடிய சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் ...

தமிழகத்தில் நேற்றைய வெயில் அளவு

Posted: 07 May 2012 05:04 AM PDT

தமிழகம் முழுவதும் நேற்று பதிவான வெயில் அளவு வரிசைப்படி வருமாறு:- வேலூர்-104.36 டிகிரி (40.2 செல்சியஸ்) மதுரை-102.2 டிகிரி (39 செல்சியஸ்) திருச்சி-102.2 டிகிரி (39 செல்சியஸ்) பாளையங்கோட்டை-100.58 டிகிரி (38.1 செல்சியஸ்) சேலம்-99.5 டிகிரி (37.5 செல்சியஸ்) கோவை-97.7 டிகிரி (36.6 செல்சியஸ்) சென்னை மீனம்பாக்கம்-95.72 டிகிரி (35.4 டிகிரி) கடலூர்-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) புதுச்சேரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) கன்னியாகுமரி-94.28 டிகிரி (34.6 செல்சியஸ்) தூத்துக்குடி-93.56 ...

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் - கொலவெறி

Posted: 07 May 2012 04:07 AM PDT

நீதி தவறிய உளுந்துவடை பாண்டியனும் - பானுவின் வடையும் மன்னர் உளுந்துவடைப் பாண்டியன் அவையில் ஒரு சிறுவன் அரண்மனை வடையை திருடிய குற்றத்திற்காக சவுக்கடி தண்டனைக் குள்ளாகிறான். அது தெரிந்து அவன் அன்னை பானு நீதி கேட்டு மன்னர் உளுந்துவடைப் பாண்டியனை சென்று வழக்காடுகிறார். காவலர்கள் தடுத்தும் அவர்களை மீறி பானு தலைவிரி கோலமாக கையில் ஒரு உளுந்துவடையுடன் அரசவைக்குள் ஆவேசமாய் நுழைகிறார். மன்னா நீதி தவறா உளுந்துவடை பாண்டியன் என்று பெயர் பெற்ற உன்னால் ஒரு பாவமும் அறியாத என் கண்மணி தண்டிக்கப் ...

இது எப்படி இருக்கு?

Posted: 07 May 2012 03:09 AM PDT

ஒரே வகையான உணவு சாப்பிடுவது ஆரோக்கியமா?

Posted: 07 May 2012 03:01 AM PDT

தற்போது நிலவும் கால ஓட்டத்தின் காரணமாக தினமும் ஒரே வகையான உணவை சாப்பிடும் பழக்கத்திற்கு பலர் ஆளாகி விடுகிறார்கள். இது குறித்து சத்துணவு நிபுணர்கள் ஆய்வு செய்ததில் 68 சதவீதம் மக்கள் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தது. ஆனால் இந்த ஒரே விதமான உணவை சாப்பிடுவது சலிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றது அல்ல என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரணம் ஆகும் திறன் குறைந்து விடும் என்றும் கூறுகிறார்கள். எனவே நாம் ஆரோக்கிய ...

காஃபி வித் பாலா கார்த்திக் !!!!

Posted: 07 May 2012 02:39 AM PDT

முன்குறிப்பு :- சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள். "இந்தா காஃபி" என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள் . இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட் (நானும் இதே இனம்தான் ). குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம் . காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம் . மஸ்கட்டில் இருந்து சென்னை ...