சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்

சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்


பாட்டு கேட்டார், கால்ஷீட் தந்தார் -துட்டு... மெட்டு... ஹிட்டு?

Posted: 06 May 2012 08:08 AM PDT

குடுமி சைசுக்கு முடி இருந்தா கூட போதும். கூந்தல் தைல விளம்பரத்தில்நடித்துவிடுகிற அளவுக்கு சாமர்த்தியம் கொண்டவர்கள்தான் சில நடிகைகள். குடுமிகளுக்கே அப்படியொரு தன்னம்பிக்கை இருந்தால் நெற்றியில் புரளுகிற கேசத்துடன் அடர்த்தியாக வந்திறங்கிய சோனா சோப்ராவுக்கு எவ்வளவு இருக்கும்? (இவரை எந்த கூந்தல் நிறுவனம் கொத்திக் கொண்டு போகப் போகிறதோ?)

'துட்டு' என்கிற வளர்ந்து வரும் படத்தில் சோனா சோப்ராதான் நாயகி. பொண்ணு மும்பையிலிருந்து பிளைட் பிடித்து நேராக வந்திறங்கிய இடம் பிரசாத் லேப். 'ஹீரோயின் வந்த பிறகு இந்த பிரஸ்மீட்டை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். ஆனால் அவங்க வர லேட்டாயிட்டா நல்லாயிருக்காது. அதான்...' என்று அப்படத்தின் டைரக்டர் முரளிகிருஷ்ணா சொல்லி வாய் மூடுவதற்குள் 'கேசவர்த்தினி' வந்திறங்கியது தியேட்டருக்குள்.

நேராக மைக் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார்கள். மஞ்ச தண்ணி தெளிச்ச ஆடு போல மசமசன்னு நிற்காமல், பொச பொசவென பேச ஆரம்பித்தார் சோனா. இன்னும் கொஞ்ச நாளில் தமிழ் கத்துப்பேன், ஸாரி, அதுவரைக்கும் பொறுத்துக்கோங்க... என்று அவர் பேசியதை கேட்டால் கோடம்பாக்கத்து தமிழாசான்களுக்கு நிச்சயம் 'நமைச்சல்' வரும். அந்தளவுக்கு அவர் நாக்கில் புரண்டோடியது கொஞ்சல் ஆங்கிலம்.

படம் பற்றி இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ, துண்டு துக்கடா கேரக்டர்களில் நடித்திருக்கும் இன்னபிற ஃபிகர்கள் ஆகியோர் பேசியதன் மொத்த சுருக்கமும் இதுதான்.

இந்த படம் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட இளைஞனை பற்றிய கதையை கருவாக கொண்டது. ஆக்ஷன் மற்றும் காமெடியை முக்கிய அம்சமாக வைத்துக் கொண்டு படத்தை வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோ ஆரியன் ராஜேஷ் ஏற்கனவே வசந்தபாலன் இயக்கத்தில் ஆல்பம் படத்தில் நடித்தவர். பல ஆண்டுகளுக்கு பிறது தமிழில் நடிக்க வந்திருக்கிறார். இவரிடம் கால்ஷீட் கேட்பதற்கு முன்பு இப்படத்தின் பாடல்களை போட்டுக் காட்டினார்களாம். அதை கேட்டவர் கதையை கூட சரியாக கேட்காமல் சட்டென்று கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அந்தளவுக்கு எல்லா மெட்டுகளும் கவரக்கூடியவை என்றார் முரளிகிருஷ்ணா.

இந்த 'துட்டு' படத்தின் மெட்டுக்கும் இவர்தான் சொந்தக்காரர். ஆமாம்... படத்தை இயக்குவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இசையமைக்கவும் செய்திருக்கிறாராம் முரளிகிருஷ்ணா.

துட்டு... மெட்டு... அப்படியே ஹிட்டுன்னு ஒரு வார்த்தையும் மக்கள் வாயிலேர்ந்து வந்துட்டா நிம்மதின்னு நினைக்குது இந்த டீம்.

அப்படியே ஆகட்டும்.....!

பேஸ்புக் நண்பர்களை தனித்தனியாக வேறுபடுத்தி பார்ப்பதற்கு

Posted: 06 May 2012 08:01 AM PDT

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள சமூக வலைத்தளமான பேஸ்புக், தொடர்ந்து முதலிடத்தை தக்கவைக்கும் நோக்கில் பலவிதமான மாற்றங்களையும், புதிய அம்சங்களையும் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனடிப்பயைில் புதிதாக Pin View எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முதலில் Pin Viewer என்னும் மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவவேண்டும்.

இதன் மூலம் நண்பர்களின் சுயவிபரங்களையும், பகிரப்படும் படங்கள், வீடியோக்கள் என்பனவற்றையும் தனித்தனியாக வேறுபடுத்த முடியும்.





பெருவில் போதை தடுப்பு மறுவாழ்வு மையத்தில் திடீர் தீ விபத்து: 14 பேர் உடல் கருகி பலி

Posted: 06 May 2012 07:56 AM PDT

பெரு நாட்டில் உள்ள போதை தடுப்பு மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாயினர்.

பெரு நாட்டில் கிழக்கு லிமா நகரில் உள்ள சோசிகா என்ற இடத்தில் போதை தடுப்பு மறுவாழ்வு மையம் ஒன்று உள்ளது.

இங்கு போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து மீட்டு நல்வழிப்படுத்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அதிகாலை அங்குள்ள 2-வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் கொடுத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் இந்த விபத்தில் 14 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஒருவர் மட்டுமே தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். போதைக்கு அடிமையானவர்கள் சிகிச்சையின் போது தப்பி ஓடாமல் இருக்க அங்கு அறை கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டிருக்கும். அதுபோன்று தான் தற்போதும் சிகிச்சை பெறுபவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த அறை மூடப்பட்டிருந்தது.

இதனால்தான் விபத்தின் போது யாரையும் தீயணைப்பு படையினரால் காப்பாற்ற முடியவில்லை. பெரு நாட்டில் ஏராளமானவர்கள் போதைக்கு அடிமையாகி உள்ளனர்.

அதில் இருந்து அவர்களை மீட்டு நல்வழிப்படுத்த பல மறுவாழ்வு மையங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 1 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மையங்கள் அதற்கான உரிமம் பெறுவதில்லை.

இதனால் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. எனவே தான் இங்கு இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜனவரி மாதம் லிமாவில் ஒரு மறுவாழ்வு மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் 29 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.








அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: கேரி ஜான்சன் தெரிவு

Posted: 06 May 2012 07:54 AM PDT

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் லிபர்ட்டேரியன்(சுதந்திர) கட்சி வேட்பாளராக போட்டியிட கேரி ஜான்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடக்கவுள்ளதையொட்டி ‌லிபர்ட்டேரியன் கட்சியின் வேட்பாளராக முன்னாள் நியூ மெக்சிகோ கவர்னர் கேரி ஜான்சன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கார்டன் தெரிவித்தார்.

பிரேசிலின் அதிசயப் பிறவி! (படங்கள் இணைப்பு)

Posted: 06 May 2012 07:52 AM PDT

பிரேசில் நாட்டில் பிறந்த குழந்தை ஒன்று இதுவரை இல்லாத அளவிற்கு வினோதமான பரிமாணங்களில் பிறந்துள்ளது.

அதாவது அலக்சான்ட்ரா என்ற பெண்ணிற்கு பிறந்த இக்குழந்தை 12 அவுன்ஸ் நிறையுடையதாகவும், 27 சென்டிமீட்டர்கள் உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது.





கச்சதீவும் கருணாநிதியி​ன் துரோகமும்! (வீடியோ இணைப்பு)

Posted: 06 May 2012 07:47 AM PDT

கச்சதீவு நமதே - மறைக்கப்பட்ட உண்மைகளின் வரலாற்று ஆவணம்



This posting includes an audio/video/photo media file: Download Now

மும்பையுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

Posted: 06 May 2012 07:44 AM PDT

ஐ.பி.எல். போட்டியின் 49-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் டோனி தலைமை யிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- ஹர்பஜன்சிங் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் ஒரு அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். சென்னை அணி 11 ஆட்டத்தில் 5-ல் வெற்றி பெற்றது. 5 போட்டியில் தோற்றது. ஒரு ஆட்டம் முடிவு இல்லை. 11 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சியுள்ள 5 ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டியில் வெல்ல வேண்டும். 3 ஆட்டத்தில் வென்றால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்து வாய்ப்பு அமையும். மும்பை அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் 10 ஆட்டத்தில் 6 வெற்றி, 4 தோல்வியுடன் 12 புள்ளி பெற்று உள்ளது. எஞ்சியுள்ள 6 ஆட்டத்தில் 3 வெற்றி பெற்றால் அந்த அணி அரை இறுதிக்கு நுழையும். சென்னை அணியை மும்பை ஏற்கனவே வீழ்த்தி இருக்கிறது. தற்போது உள்ளூரில் விளையாடுவதால் மும்பை இந்தியன்ஸ் நம்பிக்கையுடன் உள்ளது.

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூர் அணி 10 ஆட்டத்தில் 4 வெற்றியுடன் 9 புள்ளிகளுடனும், டெக்கான் 10 ஆட்டத்தில் 2 வெற்றியுடன் 5 புள்ளிகளும் பெற்றுள்ளன. பெங்களூர் அணி அரை இறுதி வாய்ப்பை பெற வெற்றி பெற வேண்டிய கட்டாயமாகும். டெக்கான் அணி வென்றாலும் பலன் இல்லை. வாய்ப்பை இழந்த டெக்கான் அணி சில ஆட்டங்களில் வென்றால் அது பல அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம் 6-வது நாளாக நீடிப்பு: 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 06 May 2012 07:44 AM PDT

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறாததை கண்டித்தும், கூடங்குளம் பகுதியில் கடலியல், நீரியல், நிலத்தியல் ஆய்வுகள் மேற்கொள்ளக் கோரியும், கூடங்குளம் பகுதி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அணு உலை எதிர்ப்பாளர்கள் இடிந்த கரையில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 1-ந்தேதி தொடங்கினார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தொடர் உண்ணாவிரதம் நடந்துவரும் இடிந்த கரையில்தான், இந்த காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 25 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் அவர்களது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் 351 பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் நேற்று முன்தினம் (4-ந்தேதி) முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இதனால் 4-ந்தேதி முதல் 376 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்நிலையில் அவர்களில் பலர் 5-வது நாளான நேற்று(5-ந்தேதி) சோர்வடைந்தனர். இதனால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவருமாறு அரசு மருத்துவக்குழுவினரை போராட்டக் குழுவினர் வரவழைத்தனர். அதன்பேரில் கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஷாலினி, தெற்கு கள்ளிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராமலிங்கம் ஆகியோர் இடிந்தகரைக்கு வந்து 1-ந்தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வரும் 25 ஆண்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அவர்களில் சகாயராஜ், ஸ்டேன்லி உள்பட 3பேரின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆகவே அவர்கள் உடனடியாக உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு ஆஸ்பத்திரியில்சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் டாக்டர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதன்பேரில் அவர்கள் 3 பேரும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6-வது நாளாக நடந்துவருகிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 3 பேரை தவிர மீதமுள்ள 373 பேரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கூடங்குளம், இடிந்தகரை பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் 6-வது நாளாக இன்றும் அடைக்கப்பட்டிருந்தன. இடிந்தகரை மற்றும் கூத்தங்குளி பகுதி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

ராஜஸ்தான் பா.ஜனதாவில் பிரச்சினை முற்றுகிறது: 30 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம்

Posted: 06 May 2012 07:43 AM PDT

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வசுந்தரா ராஜேக்கு ஆதரவாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதால் உள்கட்சி பூசல் முற்றியுள்ளது.

ராஜஸ்தான் மாநில எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் வசுந்தரா ராஜே. பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரான குலாப் சந்த் கட்டாரியா லோக் ஜாக்ரன் யாத்திரிகாவை நடத்த திட்டமிட்டிருந்தார். இதை எதிர்த்த வசுந்தரா ராஜே இந்த அரசியல் யாத்திரையை நிறுத்தாவிட்டால் கட்சியில் இருந்து விலகப்போவதாக நேற்று நடந்த கட்சி கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த 30 எம்.எல்.ஏக்களும், யுவ மோர்ச்சா அமைப்பின் அலுவலர்களும் வசுந்தரா ராஜேக்கு ஆதரவாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.மேலும் அவர்கள் வசுந்தரா ராஜேயை அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நர்மதா பள்ளத்தாக்கில் 10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த 'சுறா' பல் கண்டுபிடிப்பு

Posted: 06 May 2012 07:41 AM PDT

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள நர்மதா பள்ளத்தாக்கில் இருந்து அரிதான 'சுறா' பல் ஆய்வாளர்கள் குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்தூரிலிருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் தார் மாவட்டத்தில் அமைந்துள்ள நர்மதா பள்ளத்தாக்கில் ஆய்வு நடத்தியபோது இப்பல் கண்டறியப்பட்டுள்ளதாக மங்கள் பன்சயத்தான் பரிசத் எனும் ஆய்வு குழுவின் தலைவர் விஷால் வர்மா தெரிவித்தார்.

ஆய்வில் பூமியின் மூன்று அடுக்கு பகுதிகளில் இருந்து மூன்று வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்த விலங்குகளின் புதை படிவங்களை கண்டறிந்துள்ளதாகவும், அவைகள் 6.5 முதல் 10 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிவங்கள் என வர்மா தெரிவித்தார்.

கண்டறியப்பட்ட 'சுறா' பல் 14 சென்டி மீட்டர் அளவிற்கு தற்போதைய 'புலி' பல்லை போன்று இருப்பதாக தெரிவித்தார். மேலும் இப்பகுதியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டைனோசர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் அப்பகுதியில் இருந்து டைனோசர், ஆஸ்ட்ரிச்,ஹிப்போபோடமஸ் மற்றும் ச்டேகோடன் போன்ற உயிரனங்களின் புதைபடிவங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஹிலாரி கிளின்டனின் இந்தியப் பயணம்! இலங்கை கலக்கத்தில்..! கொழும்பு ஆங்கில ஊடகம்

Posted: 06 May 2012 07:41 AM PDT


இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள இணைப்பு இலங்கைக்கு முக்கியமான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


இந்தநிலையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் புதுடெல்லிக்கும் கொல்கத்தாவுக்கும் மேற்கொள்ளும் பயணம் குறித்து நெருக்கமாகக் கண்காணிப்பதற்கு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுக்கான பயணத்தை நேற்று தொடங்கிய ஹிலாரி கிளின்டன் சீனா வழியாக வாசிங்டன் திரும்பவுள்ளார். புதுடெல்லிப் பயணத்தின் போது அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரஞ்சன் மத்தாய் உள்ளிட்ட இந்தியத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

இந்தச் சந்திப்புக்களில் பிராந்திய விவகாரம் குறித்து கலந்துரையாடும்போது இலங்கை விவகாரம் குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசப்படும் என்று ராஜபக்ச அரசாங்கம் நம்புகிறது.

பத்து நாட்களுக்குப் பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினரை வாசிங்டனில் சந்திக்கவுள்ள நிலையில் ஹிலாரி கிளின்டன் இலங்கை விவகாரம் குறித்து கவனம் செலுத்துவார் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியாவுடன் ஆலோசித்த பின்னரே அமெரிக்கா கொண்டு வந்தது.

இந்தநிலையில் தீர்மானத்திற்கு பிந்திய நிலைமைகள் குறித்தும் இந்தியாவின் பங்களிப்புடனேயே அமெரிக்கா கணிப்பீடு செய்யவுள்ளது என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது.

ரிலீசுக்கு முந்தும் ‘மாற்றான்’

Posted: 06 May 2012 07:41 AM PDT

சூர்யா - காஜர் அகர்வால் நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் மாற்றான். இப்படம் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளின் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. 

இப்படத்தின் படப்பிடிப்புகள் ரஷியாவின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. கோடையில் ரிலீசாகியிருக்க வேண்டிய இப்படம் சினிமா தொழிலாளர்களின் பிரச்சினை காரணமாக தள்ளிப் போய் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜோத்பூர் பாலைவனப்பகுதியில் சுமார் 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் சுவாரஸ்யமான, பிரம்மாண்டமான காட்சிகளும் இப்படத்தில் உள்ளது.

இன்னும் சில தினங்களில் இப்படத்தை முடித்து, சீக்கிரமாக வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் விவேக், ஈஷா ஷர்வாணி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

தமரா குணநாயகத்தின் பதவி மாற்றம் குறித்து அறிவித்தல்கள் விடுக்கப்படவில்லை!– வெளியுறவு அமைச்சு

Posted: 06 May 2012 07:38 AM PDT



ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாக உள்ள தமரா குணநாயகம் மாற்று பதவி ஒன்றுக்கு நியமிக்கப்படுவதாக வெளிவிவகார அமைச்சு எந்த முடிவையும் எடுக்கவில்லை. வெளியுறவு அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக தமரா குணநாயகம், இலங்கையின் வெளிவிவகார அமைச்சகத்திற்கு, கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளியான தகவலையும் இலங்கை வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் அமெரிக்காவினால் சமாப்பிக்கப்பட்ட பிரேரணையின் போது இலங்கைக்கு சார்பாக தமராவே தீவிரமான வாதங்களில் ஈடுபட்டார்.

எனினும் அவர் பிரான்ஸ் தூதுவராக இருந்து இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த காரணத்தினால் திருப்பியழைக்கப்பட்ட தயான் ஜயதிலக்கவினால் இந்த பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் என்ற அடிப்படையில் பழிவாங்கப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.

இந்த நிலையில், தமரா குணநாயகம் பிபிசிக்கு சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

தன்னை அந்த பதவியில் இருந்து வேறு பதவிக்கு மாற்றும் முயற்சி, இலங்கைக்கு எதிரான சக்திகள், தமிழர் ஒருவருக்கு எதிராக பழிவாங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியாக அர்த்தம் கொள்ள முடியும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இதனை மறுத்துள்ள இலங்கையின் வெளியுறவு அமைச்சு, ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஒருவருக்கு அங்கீகாரம் இல்லாமல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

'ஐடி ரெய்டு'க்கு அரசியல் தூண்டுதலே காரணம்: நித்தியானந்தா

Posted: 06 May 2012 07:37 AM PDT

சிலரின் அரசியல் தூண்டுதலால்தான் மதுரை ஆதீன மடத்தில் வருமான வரி சோதனை நடந்துள்ளது என்று நித்தியாந்தா கூறியுள்ளார்.

இதுகுறித்து திருவண்ணாமலை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

நான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதை சிலர் குறை கூறி வருகிறார்கள். வழக்கும் தொடர்ந்து உள்ளனர். நான் முறைப்படிதான் மதுரை ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ளேன். இதில் மரபு எதுவும் மீறப்படவில்லை. மதுரை ஆதீனமாக பொறுப்பு வகிக்க எனக்கு எல்லா வித தகுதியும் இருக்கிறது.

எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்துதான் என்னை மதுரை ஆதீன மடாதிபதியாக நியமித்தார்கள். சிலர் வேண்டுமென்றே பொய் யான தகவல்களை கூறுகிறார்கள். இதில் எந்த மரபோ, விதிமுறையோ மீறப்படவில்லை. யாரும் யார் மீது வேண்டு மானாலும் குற்றப்பின்னணியை கூற முடியும். யாரும் கோர்ட்டிலும் வழக்கு போடலாம். அதே போல்தான் என் மீதும் ஒரு வழக்கு உள்ளது. அது பொய்யானது அந்த வழக்கு தூங்கி கொண்டு இருக்கிறது.

எனது அறக்கட்டளை மூலம் மதுரை ஆதீன அறக்கட்டளைக்கு ரூ.5 கோடி வழங்கப்பட்டது இது வெளிப் படையானது. அதில் எந்த முறைகேடும் இல்லை. இதுபற்றி பத்திரிகைகளுக்கு வெளிப்படையாக அறிவித்து இருந்தேன். இதை பார்த்து விட்டுதான் அரசியல் தூண்டுதலின் பேரில் மடத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனைக்கு வந்தார்கள். பார்த்தார்கள். எந்த விதமான முறைகேடும் நடைபெற வில்லை. என்பதை அறிந்து சென்றார்கள் என்றார் அவர்.

ஆந்திர பிரதேசத்தில் அத்துமீறி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்கள் கைது

Posted: 06 May 2012 07:37 AM PDT


இந்திய ஆந்திர பிரதேச கோதாவரி மாவட்டம், நிலாம்பட்டினம் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி தொழில் ஈடுபட்ட 6 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தத் தகவலை இன்று ஆந்திர காவல்துறை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச கடற்பரப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் 6 இலங்கை மீனவர்கள் பயணித்த படகை மறித்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை படகுடன் அவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை 500 கிலோ கிராம் மீனுடன், காக்கிநாடா கடற்பரப்பு காவல்துறையினரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டனர்.

சர்வதேச கடல் எல்லையை மீறி, இந்திய கடற்பரப்பில் நுழைந்து அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

எதிரி ஏவுகணைகளை அழிக்கும் ஏவுகணைகள் தயார்..2 நகரங்களில் நிறுத்தப்படும்!

Posted: 06 May 2012 07:37 AM PDT

இந்தியாவின் அதி நவீன ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம் முழுமையாக தயாராகி விட்டது. இந்த வகை ஏவுகணைகளை விரைவில் 2 நகரங்களில் நிறுத்தத் திட்டமிட்டப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட அதி நவீன ஏவுகணைகளை வைத்துள்ள ஒரு சில நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தற்போது சேர்ந்துள்ளது.

மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகமான டிஆர்டிஓ இதை உருவாக்கியுள்ளது. மேலும் இதை வெற்றிகரமாகவும் சோதித்துப் பார்த்துள்ளது. இந்த ஏவுகணைகள், 2000 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுறுவிச் சென்று எதிரிகளின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாகும். இதை 2016ம் ஆண்டுவாக்கில் 5000 கிலோமீட்டர் வரை மேம்படுத்தும் திட்டத்தையும் டிஆர்டிஓ வைத்துள்ளது.

இதுகுறித்து டிஆர்டிஓ தலைவர் வி.கே.சரஸ்வத் கூறுகையில், தற்போது ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டம் தயாராகி, ஆயத்த நிலைக்கு வந்து விட்டது. இதை முதலில் 2 நகரங்களில் நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு நகரங்கள் எது என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அரசியல் மட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என்றார்.

பிருத்வி ஏவுகணையின் பல்வேறு வகைகளைக் கொண்டு இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது.

சரஸ்வத் இதுகுறித்துக் கூறுகையில், மொத்தம் 6 முறை பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் புவியின் வளி மண்டலத்திற்கு வெளியேயும், உள்ளேயும் என இரு மட்டங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. ஏவுகணைகளைக் கண்டறிவது, அதை தடுத்து தாக்குவது உள்ளிட்ட அனைத்தும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைத் திட்டமானது தானாக இயங்கக் கூடியது. நமது எல்லைக்குள் எதிரி நாட்டு ஏவுகணைகள் ஊடுறுவுமானால் தானாகவே சென்று அதைத் தாக்கி அழிக்கும். அதை நிறுத்து வேண்டுமானால் மட்டுமே நாம் தலையிட்டு ஏவுகணையைக் கட்டுபடுத்த வேண்டும் என்றார்..

அமெரிக்காவின் பாட்ரியாட் 3 ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைக்குச் சமமானது இந்தியா உருவாக்கியுள்ள ஏவுகணை. 1990ல் நடந்த வளைகுடாப் போரின்போது பாட்ரியாட் ஏவுகணைகள் சிறப்பாக செயல்பட்டன என்பது நினைவிருக்கலாம்.

இந்த ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளை 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக சோதனையிட்டுப் பார்த்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது உலக அளவில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட ஏவுகணைகள், அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு வெளிப்பாடு: "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுப் பேரிணைவு"

Posted: 06 May 2012 07:36 AM PDT


பிரித்தானியாவில் ஒன்றிணைந்த தமிழ் அமைப்புக்களின் கூட்டு ஏற்பாட்டில் "முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் மூன்றாம் ஆண்டு நினைவுப் பேரிணைவு" நிகழ்வு எதிர்வரும் மே 18 ஆம் நாள் நடைபெறவுள்ளது.


லண்டன் SKLPC (UK), West End Road, Northolt, Middlesex, UB5 6RE எனும் முகவரியில் அமைந்துள்ள "முருகதாசன் நினைவுத் திடலில்" எதிர்வரும் 18.05.2012 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிமுதல் 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த "நினைவு வணக்க பேரிணைவில்", முள்ளிவாய்க்காலில் மரணித்த எம் தாயக உறவுகளையும் நினைந்து அஞ்சலிக்கவும், அவர்கள் நினைவில் சங்கமிக்கவும் ஒன்றுகூடி வருமாறு பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழ் மக்களையும் இவ் நிகழ்வு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிங்களப் பேரினவாதத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தாயக உறுவுகளை நினைவுகொள்ளும் இந்த நிகழ்வை, பிரித்தானியாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அக்ட் நவ் அமைப்பு, பிரித்தானியத் தமிழர் ஒன்றியம், நீதிக்கும் சமாதானத்துக்குமான பரப்புரை அமைப்பு, பிரித்தானியத் தமிழர் விளையாட்டுக் கழகங்கள், பிரித்தானியத் தமிழ்ப் பாடசாலைகள், பிரித்தானியத் தமிழர் மதவழிபாட்டுத் தலங்கள், பிரித்தானியத் தமிழர் நிலையம் போன்ற அமைப்புக்கள் ஒன்றிணைந்து பெரு நிகழ்வாக ஏற்பாடுசெய்துள்ளனர்.

உயிர்களாய் இருந்த எம் உறவுகளை உடல்களாய் குருதியில் இட்ட சிங்கள பேரினவாதத்தின் முகமூடியை கிழித்தெறிவோம். தமிழத் தாயகத்தில் தொடரும் இனப்படுகொலையை சர்வதேசத்திற்கு சத்தமிட்டுச் சொல்வோம்.

உறவுகளே… உறங்கியது போதும் உணர்வுடன் எழுந்திடு!

மண்ணுறங்கும் உண்மைகளை உலகறியச் செய்து ஈழ விடுதலைக்கு தோழ்கொடுத்து மரணித்த மக்களின் குருதிக்கு பதில் தேடு!

நஞ்சையும், குண்டையும் கொண்டு நடந்திட்ட கொள்கை வீரராம் மாவீரர் இலட்சியத்தை நனவாக்க நடை போடு!

யார் பெயரையும் நான் சோனியாவிடம் பரி்ந்துரைக்கவில்லை-பவார்

Posted: 06 May 2012 07:35 AM PDT

சோனியா காந்தியை கடந்த மாதம் சந்தித்தபோது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக யாரையும் தான் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய அமைச்சருமான சரத் பவார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த மாதம் சோனியா காந்தியை நான் சந்தித்தபோது குடியரசுத் தலைவர் வேட்பாளர் தொடர்பாக பேசவில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவரும் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசிக்க வேண்டியது அவசியம்.

இப்போது பெயரை பரிந்துரைத்து விவாதிக்கத் தேவையில்லை. அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை அறிந்து முடிவெடுக்கலாம் என்றுதான் நான் சோனியாவிடம் தெரிவித்தேன்.

பிரணாப் முகர்ஜி முன்னணியில் இருக்கிறாரா என்ற கேள்விக்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது. இப்போது அதற்கான நேரம் இல்லை என்றார் அவர்.

துணுக்காய் இந்திய வீட்டுத்திட்ட மக்களுக்கு பொங்கல் அன்பளிப்புகள்! லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் உதவி

Posted: 06 May 2012 07:34 AM PDT


துணுக்காய் பிரதேசத்தில் உயிலங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் குடிபுகுந்த மக்களுக்கு இன்று பொங்கல் அன்பளிப்புக்களை லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் வழங்கியது.


உயிலங்குளம் பகுதியில் காடுகளை அழித்து சுமார் 50 வீடுகள் இந்திய வீட்டுத்திட்டத்திற்குக் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.

இந்த வீடுகளில் நிர்மாணப்பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இந்த வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

இருந்த போதிலும் இந்த வீடுகளை சம்பிரதாய பூர்வமான குடிபுகுதலை செய்துள்ளனர்.

துணுக்காய் பிரதேசசபை தலைவர் இராசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பாண்டியன்குளம் பிரதேசசபை உப தலைவர் செந்தூரன் கட்சி உறுப்பினர்கள் கிராமசேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சம்பிரதாய குடிபுகுதலுக்கான தலா 1500ரூபா பொங்கல் பொருட்களை ஐம்பது குடும்பங்களுக்கு இலண்டன் கற்பக விநாயகர் தர்மகர்த்தா கோபாலகிருஸ்ணனின் அனுசரணையோடு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வழங்கி வைத்தார்.

பெருங்காட்டுப் பகுதியை அழித்து அவ்விடத்தில் அமைக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டத்திற்கான வீதி அமைப்பு முன்பள்ளிகள் சுகாதார வசதிகள் எதுவுமே அடிப்படையில் அங்கு ஏற்படுத்தப்படவில்லை. சாதாரணமாக குடிநீர் வசதிகள் கூட ஏற்படுத்தாத நிலையில் அந்த மக்களுக்கான வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குறை நிறைகளை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் துணுக்காய் பிரதேச சபையின் ஊடாக உடனடியாக குடிநீருக்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

இதனை விடவும் அவர்களின் மேலதிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதன்கான சம்பந்தப்படுத்தப்பட்ட மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து மேலதிக நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்வதாகக் கூறினார்.

இதேவேளை இராணுவத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களை படம்பிடித்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.










கூலிப்படையை ஏவி ராமஜெயத்தை கொன்றாரா முக்கியப் பிரமுகர்?

Posted: 06 May 2012 07:34 AM PDT

ராமஜெயம் கொலை வழக்கில் தற்போது முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கூலிப்படையை ஏவி ராமஜெயத்தை ஒரு முக்கியப் பிரமுகர்தான் கொலை செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த மார்ச் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது முக்கிய துப்பு கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர் ஒருவரே கூலிப்படையை ஏவி ராமஜெயத்தை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த கூலிப்படைக்கு திருச்சி மத்திய சிறையில் இருக்கும் பிரபல ரவுடிகள் சிலர் உதவி செய்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜாமீனில் விடுதலையான பிரபல ரவுடிகளைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறையில் இருந்தபோது அந்த ரவுடிகள் வெளியே இருக்கும் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பல காரியங்களை நடத்தியது தெரிய வந்துள்ளது.

குண்டர் சட்டத்தில் கைதாகி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த டோல்கேட் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுந்தரபாண்டியன் தண்டனை காலம் முடிந்து அண்மையில் விடுதலையானது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் பிடித்து கூலிப்படை குறித்து போலீசார் விசாரித்தனர். ராமஜெயத்தை கொலை செய்த கூலிப்படை அவரது மனைவி லதா, குளித்தலையைச் சேர்ந்த பெண் உறவினர் ஆகியோரிடம் கட்டை குரலில் பேசியதைப் போட்டுக் காட்டி அந்த குரல்கள் எந்தெந்த ரவுடிகளுக்கு சொந்தமானது என்று துருவித் துருவி விசாரித்தனர்.

அதில் செல்போன் பேச்சு மற்றும் கூலிப்படை குறித்து முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு எடமலைப்பட்டிபுதுரில் லோடு ஆட்டோ டிரைவர் ஸ்டீபன் என்பவரை மிரட்டி பணம் பறித்ததாக சுந்தரபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். 

இதற்கு முன்பு சுந்தரபாண்டியன் எடமலைப்பட்டிபுதூர் கே.ஆர்.எஸ்.நகரில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுந்தரபாண்டியன் முட்டை ரவி கோஷ்டியைச் சேர்ந்தவர் ஆவார்.

புல்லட் மனோகர் கொலை வழக்கில் சுந்தர பாண்டியன் பெயர் உள்ளது. புல்லட் மனோகரும் ராமஜெயத்தை போன்று கடத்தப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதனால் தான் போலீசார் சுந்தரபாண்டியனை பிடித்து விசாரித்துள்ளனர்.

சுந்தரபாண்டியனுக்கு திருச்சி, சேலம், தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. கொலை, கொள்ளைச் சம்பவங்களை செய்துவிட்டு மாணவர்களுடன் தங்கிக்கொள்வாராம். சேலம் ஆத்தூரில் உள்ள ஒரு கல்லூரி மாணவனை தனிப்படை போலீசார் விசாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவுடிகள் மற்றும் அந்த மாணவரிடம் நடத்திய விசாரணையில் கூலிப்படை குறித்து முக்கிய துப்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

துணுக்காய் இந்திய வீட்டுத்திட்ட மக்களுக்கு பொங்கல் அன்பளிப்புகள்! லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் உதவி

Posted: 06 May 2012 07:34 AM PDT


துணுக்காய் பிரதேசத்தில் உயிலங்குளம் பகுதியில் அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டத்தில் குடிபுகுந்த மக்களுக்கு இன்று பொங்கல் அன்பளிப்புக்களை லண்டன் கற்பக விநாயகர் ஆலயம் வழங்கியது.


உயிலங்குளம் பகுதியில் காடுகளை அழித்து சுமார் 50 வீடுகள் இந்திய வீட்டுத்திட்டத்திற்குக் கீழ் நிர்மாணிக்கப்பட்டிருந்தன.

இந்த வீடுகளில் நிர்மாணப்பணிகள் அரைகுறையாக முடிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே இந்த வீடுகள் மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

இருந்த போதிலும் இந்த வீடுகளை சம்பிரதாய பூர்வமான குடிபுகுதலை செய்துள்ளனர்.

துணுக்காய் பிரதேசசபை தலைவர் இராசரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பா.உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் பாண்டியன்குளம் பிரதேசசபை உப தலைவர் செந்தூரன் கட்சி உறுப்பினர்கள் கிராமசேவையாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சம்பிரதாய குடிபுகுதலுக்கான தலா 1500ரூபா பொங்கல் பொருட்களை ஐம்பது குடும்பங்களுக்கு இலண்டன் கற்பக விநாயகர் தர்மகர்த்தா கோபாலகிருஸ்ணனின் அனுசரணையோடு பா.உறுப்பினர் சி.சிறீதரன் வழங்கி வைத்தார்.

பெருங்காட்டுப் பகுதியை அழித்து அவ்விடத்தில் அமைக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டத்திற்கான வீதி அமைப்பு முன்பள்ளிகள் சுகாதார வசதிகள் எதுவுமே அடிப்படையில் அங்கு ஏற்படுத்தப்படவில்லை. சாதாரணமாக குடிநீர் வசதிகள் கூட ஏற்படுத்தாத நிலையில் அந்த மக்களுக்கான வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் குறை நிறைகளை அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் துணுக்காய் பிரதேச சபையின் ஊடாக உடனடியாக குடிநீருக்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்தார்.

இதனை விடவும் அவர்களின் மேலதிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதன்கான சம்பந்தப்படுத்தப்பட்ட மாவட்டத்தை பிரநிதித்துவப்படுத்தும் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து மேலதிக நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்வதாகக் கூறினார்.

இதேவேளை இராணுவத்தினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களை படம்பிடித்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.










சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபட வேண்டி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சசி வழிபாடு!

Posted: 06 May 2012 07:34 AM PDT

சொத்துக் குவிப்பு உள்ளிட்ட வழக்கிலிருந்து விடுபட வேண்டி காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாகியுள்ள சசிகலா சாமி கும்பிட்டு வழிபாடு நடத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. புகழ் பெற்ற இந்தக் கோவிலுக்கு ஏராளமானோர் குறிப்பாக பெரிய பெரிய விஐபிக்கள் வருவது வழக்கம். குறிப்பாக வழக்குகளில் சிக்கியுள்ளவர்கள் இங்கு அடிக்கடி வந்து அலை மோதுவது வழக்கம்.

காரணம், இங்கு வந்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தி சாமியைக் கும்பிட்டுச் சென்றார், சாமி, அவர்களை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவித்து விடுவார் என்று மக்கள் நம்புவதே.

திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கிலிருந்து விடுபட்டு பிரச்சினைகளிலிருந்து நீங்க வேண்டும் என்று வேண்டி, திமுகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பியான வசந்தி ஸ்டான்லி முன்பு சிறப்பு வழிபாடு நடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபட வேண்டி அதிமுக அமைச்சர்களும் சாமி கும்பிட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியாக இருந்து இடையில் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் தோழியாகியுள்ள சசிகலாவும் இன்று வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்றுள்ளார்.

வழக்கறுத்தீஸ்வரர் கை கொடுப்பாரா...?

''இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்''...செளமியா அன்புமணிக்கு முருகதாஸ் சவால்!

Posted: 06 May 2012 07:31 AM PDT

துப்பாக்கி படத்தில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு டாகட்ர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா தலைமையிலான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், சினிமாப் பட வசனத்தை குறிப்பிட்டு ஒரு படத்தைப் போடடு நேரடியாகவே சவால் விட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருதகாஸ்.

துப்பாக்கி படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர். அதில், அசல் படத்தில் அஜீத் சுருடடுடன் காட்சி அளித்ததைப் போன்று விஜய் சுருட்டு பிடித்தபடி இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் செளமியா அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்,

'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

`துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.

எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியிருந்தார்.

பசுமைத் தாயகத்தின் இந்தக் கோரிக்கைக்கு தற்போது இயக்குநர் முருகதாஸின் டிவி்ட்டரில் விஜய் ரசிகர்களும் பிறரும் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் உசசமாக முருகதாஸே, ஒரு படத்தைப் போட்டு இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

ஒரு இந்திப் படத்தில் இடம் பெற்ற, ஒருவன், இன்னொருவனை கீழே தள்ளி கொலை செய்வது போன்ற காட்சி அடங்கிய பட போஸ்டர் அது. அந்தப் படத்தைப் போட்டு, இதுவும் விளம்பரம்தான், இவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று கமென்ட் போட்டுளளார முருகதாஸ்.

எங்க போய் நிக்கப் போகுதோ இது...!

வடக்கு கொள்ளைகளில் ஆயுதக் குழுக்களுக்குத் தொடர்பிருக்கலாம்! தீவிரமாக விசாரிக்கிறது பொலிஸ்

Posted: 06 May 2012 07:31 AM PDT


வடக்கில் இடம்பெற்றுவரும் துப்பாக்கி முனைக் கொள்ளைச் சம்பவங்களுடன் முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு தொடர்பு இருக்கலாம். இந்த அடிப்படையிலும் விசாரணைகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறு யாழ். பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 






இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்.

இவ்வாறு வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி டீ சில்வா தலைமையில் நேற்று யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பொலிஸ் அதிகாரிகள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பு குறித்து மேலும் தெரியவருவதாவது:

ரி. 53ரக துப்பாக்கி பயன்படுத்தி கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான குற்றச் செயலைத் தடுப்பதற்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இப்படித் துப்பாக்கி பயன்படுத்தி கொள்ளையிடுபவர்கள் யாராக இருக்கலாம்? என ஊடகவியலாளர்கள் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பினர்.

இக்கேள்விக்குப் பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு கூறப்பட்டது.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்ரீகோணேசன் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது:

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் மட்டும் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பார்கள் என்று கூற முடியாது. முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கும் தொடர்பு இருக்கலாம்.

அந்த அடிப்படையில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ரீ.56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்காக இராணுவத்தைக் குற்றம்சாட்ட முடியாது.

இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இத்தகைய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். அப்போது முழு உண்மையும் வெளிவரும் என்றார் அவர்.

இந்தச் சந்திப்பின்போது வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தவை வருமாறு:

வடபகுதியில் குற்றச் செயல்களை முறியடிப்பதற்காக பொலிஸ் தரப்பு எடுத்துள்ள நடவடிக்கை சிறப்பானதாகும். 80 வீதமான கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச் செயல்களைத் தற்போது இடம்பெறாது தடுத்திருக்கிறோம். யுத்த காலத்தில் நடைமுறைப்படுத்த முடியாத சட்டதிட்டங்களை தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

கிராமங்கள் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்களை நியமித்து குற்றச் செயல்கள் இடம்பெறாமல் கட்டுப்படுத்தி வருகிறோம். அதிகரித்த ஹெரோயின் பாவனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வருகிறோம். அண்மைக் காலத்தில் பதினைந்து பேரைக் கைது செய்திருக்கிறோம்.

18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் பிள்ளையின் விருப்பத்துடன் பாலியல் உறவில் ஈடுபட்டாலும் அது பாலியல் வன்புணர்வாகவே எடுத்துக் கொள்ளப்படும். இந்த விடயம் தொடர்பாக ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழில் முறைப்பாடு செய்யவும், விசாரணை செய்யவும் ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நீதிமன்ற வழக்குப் பதிவு கூட தமிழில் இடம்பெறுகிறது. தமிழ் பொலிஸாரை மேலும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன என்றார்.