Tamilosaii

Tamilosaii


Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை

Posted: 28 Apr 2012 09:34 AM PDT

நாடு கடந்த பயணங்களுக்கு பெரும் உதவியாக ஆகாய விமானங்கள் காணப்படுகின்றன. அவற்றிலும் தொழில் நுட்பங்கள், பிற வசதிகளைக் கொண்டு வெவ்வேறு வகைகள் காணப்படுகின்றன.
அதன்படி Boeing 777 ஆனாது சுமார் 300 பயணிகளைக் காவிச்செல்லக்கூடிய பிரமாண்டமான விமானம் ஆகும். இவ்விமானம் இரட்டை என்ஜின்களில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரையிறக்கத்திற்கு பயன்படும் வகையில் ஆறு சில்லுகளைக் கொண்டுள்ளன.

இலங்கையின் மனிதஉரிமை மீறல்கள்! ஆதாரமிருந்தால் மட்டுமே விசாரணையாம்! இலங்கை அரசாங்கம்

Posted: 28 Apr 2012 09:04 AM PDT

மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றமிழைத்தவர்கள் நீதிமன்றங்களின் மூலம் தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இலங்கை அமைச்சரவையின் மூத்த சட்ட ஆலோசகரான மொகான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அளிக்கப்பட்ட அனைத்து மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும். இதன்மூலம் குற்றமிழைத்தவர்கள் என்று கண்டறியப்படும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.

ஐ.நா மனிதஉரிமை பேரவைக் கூட்டத்தொடரில் பல்வேறு அரசசார்பற்ற அமைப்புகள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பல இடம்பெற்றிருப்பதாகவும், அவற்றை நிரூபிக்கும் ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் குற்றம்சாட்டின.

இலங்கை அரசுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட தாக்கல் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று, அரசதரப்பில் கூறப்பட்டது.

ஆனாலும், நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதஉரிமை மீறல்கள் அனைத்தையும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூலம் தனித்தனியாக, ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்கள் குற்றமிழைத்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிந்து, அதற்கான ஆதாரங்கள் இருப்பின் அவர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கும் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.

இலங்கைப் படையினர் மனிதஉரிமை மீறில்களில் ஈடுபட்டதற்கோ, பொதுமக்களைத் துன்புறுத்தியதற்கோ ஆதாரங்கள் இருந்தால், இலங்கை இராணுவத் தளபதிக்கு எவரும் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்.

அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு, அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையானால் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும்.

ஆதாரமற்ற வெறும் குற்றச்சாட்டுகளின் மீது இலங்கை அரசாங்கத்தினால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு மூன்று மாதங்கள் தான் ஆகியுள்ளன.

இந்தநிலையில், இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தத் தவறியுள்ளது என்று குற்றம்சாட்டுவது நியாயமற்றது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு முதல் கூட்டம்

Posted: 28 Apr 2012 09:02 AM PDT

தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலத்தில் வரும் 30-ந் தேதி நடைபெறுகிறது.
இலங்கையில் தனி ஈழம் அமையவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீண்டும் டெசோ அமைப்பை உருவாக்கவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கலைஞர் தலை மையில் தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு (டெசோ) உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் உறுப்பினர்களாக தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

இதுகுறித்து தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

''தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) முதல் கலந்துரையாடல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் அமைப்பின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் டெசோ அமைப்பின் உறுப்பினர்களான தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் போரின் போது கொத்துக் குண்டுகள் பாவனை! அனைத்துலக அமைப்பு விசாரணை

Posted: 28 Apr 2012 09:01 AM PDT

போரின் போது இலங்கைப் படைகளால், கொத்துக்குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து கிளஸ்டர் குண்டுகளின் பாவனையைத் தடை செய்வதற்காகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள அனைத்துலக அமைப்பான “கிளஸ்டர் குண்டு ஒழிப்புக் கூட்டணி” விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அவ்வமைப்பின் பணிப்பாளரான, லோறா சீஸ்மன் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இலங்கையில் போரின் போது கிளஸ்டர் குண்டுகள் பாவிக்கப்பட்டதாக வெளியாகின்ற தகவல்கள் கவலை தருகின்றன. இதனை நாம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம்.

கிளஸ்டர் குண்டுகளை ஒழிக்கும் கூட்டணியின் நிபுணர்கள் வலையமைப்பு, இதுபற்றி மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறது.

அதேபோன்று இலங்கை அரசும் விசாரணை செய்வதை நாம் ஊக்குவிக்கிறோம்" என்றார்

ஈழப்போரில் கொத்துக்குண்டு பாவனை – இலங்கை அரசு மறுப்பு – மருத்துவ பணியாளர் ஒருவரின் சாட்சியம் – ஏபி ஊடகம்

Posted: 28 Apr 2012 08:56 AM PDT

இறுதிப்போரில் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தவே இல்லை என சிறிலங்கா படைத்தரப்பும் அரசும் மறுத்துள்ள நிலையில், கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒருவரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவரின் சாட்சியத்தை ஏபி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.
இலங்கை போரின் போது, வெடிக்காத கிளஸ்டர் குண்டினால் காயமடைந்த ஒருவரைத் தான் கண்டதாக அந்த மருத்துவப் பணியாளர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இலங்கை போரின் இறுதிகட்டத்தில், கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நாவின் வெடிபொருள் நிபுணர் அலன் போஸ்டனின் அறிக்கையை ஏபி செய்தி நிறுவனம் சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.

இதனை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் அடிப்படையற்றது என்று நிராகரித்துள்ள நிலையிலேயே, கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்டவரை நேரில் கண்டவரின் சாட்சியத்தை ஏபிசி செய்தி ஊடகம் வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த மருத்துவப் பணியாளர் மேலும் கூறியுள்ளதாவது -

"போரின் இறுதி மாதங்களில் வெடிக்காத கிளஸ்டர் குண்டு ஒன்றினால் காயமடைந்த ஒருவரைப் பார்த்தேன். அவரது காலைக் கிழித்துக் கொண்டு நுழைந்த அந்த கிளஸ்டர் குண்டின் பாகம், வெடிக்காத நிலையில் புதைந்து போயிருந்தது.

பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைச் சுற்றாடலில் தாம் கிளஸ்டர் குண்டின் சிதறல்களைக் கண்டுபிடித்ததாக ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள் என்னிடம் கூறியிருந்தனர்.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்த நோயாளர்கள் கிளஸ்டர் குண்டுகளால் காயமடைந்ததாக கூறியதை அடுத்து அந்த மருத்துவமனை புதுமாத்தளனுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

வித்தியாசமான வெடிப்புச்சத்தம் கேட்டது. பாரிய குண்டுச்சத்தத்தை அடுத்து சிறிய குண்டுவெடிப்புகள் இடம்பெற்றன. காயங்கள் பலமானதாக இருந்ததால் மருத்துவ அதிகாரிகளால் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதன் பின்னர் மார்ச் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒருவர் தனது காலின் கீழ்ப் பகுதியில் காயமடைந்த நிலையில் வந்தார்.

அவரது காயத்தை மருத்துவ அதிகாரிகள் சுத்தம் செய்த போது, கிளஸ்டர் குண்டின் சிறியதொரு வெடிக்காத பாகம் உள்ளிருந்ததை கண்டுபிடித்தனர். அவரது காலுக்குள் குண்டு இருந்தது. இதனால், குண்டு இருந்த அவரது முழங்காலுக்கு கீழான பகுதியை மருத்துவ அதிகாரிகள் வெட்டி அகற்றினர். அதனை செயலிழக்க வைப்பது பாதுகாப்பற்றது என்பதால், அவரது கால் அகற்றப்பட்டு வீசப்பட்டது." என்றும் அந்த மருத்துவப் பணியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஏபி பெற்றுக் கொண்ட ஒரு ஒளிப்படத்தில், ஒருவரது முழங்காலுக்குக் கீழ் உலோக உருளை ஒன்று புதைந்துள்ளதை காணமுடிகிறது.

இதை தொழில்நுட்ப வல்லுனர்களிடம் காண்பித்தபோது, அது ஒரு கிளஸ்டர் குண்டு தானா இல்லையா என்பதை கூறமுடியவில்லை என்று தெரிவித்துள்ளதாகவும் ஏபி குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, தமிழ்ப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசபடைகள் மேற்கொண்ட போரின் போது, பல ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்தனர் என்றும் இவர்களில் பலர் வெள்ளை பொஸ்பரஸ் குண்டினால் ஏற்பட்டிருக்கக் கூடிய எரிகாயங்களுக்கு உள்ளாகியதாகவும் ஏபி தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அந்த மருத்துவப் பணியாளர், "வெள்ளைப் பொஸ்பரசினால் ஏற்பட்ட காயங்களுடன் நோயாளர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதிக்கருகே சென்று பார்த்தபோது அந்த இடம் கருகிப் போயிருந்தது" என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதை அனைத்துலக சட்டங்கள் தடை செய்யவில்லை.

ஆனால் பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இவை பயன்படுத்தப்படுவது மனிதஉரிமை அமைப்புகள் போர்க்குற்றம் என்று கூறுவதாகவும் ஏபி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.