கல்வி களஞ்சியம்: “நவீன செயற்கைக்கோள் தயாரித்து தமிழக பெண் விஞ்ஞானி சாதனை!!” plus 1 more |
| நவீன செயற்கைக்கோள் தயாரித்து தமிழக பெண் விஞ்ஞானி சாதனை!! Posted: 25 Apr 2012 07:08 AM PDT இந்தியாவின் விண்வெளி மற்றும் அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் பல சாதனைகள் படைத்து தமிழகத்துக்கு பெருமை தேடித்தந்தார். அவரைத் தொடர்ந்து மேலும் பல தமிழக விண்வெளி விஞ்ஞானிகள் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இந்தியா சந்திரனுக்கு ராக்கெட் பறக்க விட்டு உலக அளவில் சாதனை நிகழ்த்தியது. இந்த சந்திராயன் ராக்கெட் தயாரித்தவர் அதன் திட்ட இயக்குனர் தமிழகத்தின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மயில்சாமி. இதற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இவர்கள் வரிசையில் இப்போது தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் விஞ்ஞானியான வளர்மதி சாதனை படைத்துள்ளார். கோவையைச் சேர்ந்த வளர்மதி இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இந்தியா தற்போது அதிநவீன மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங்சேட்டி லைட் என்ற செயற்கை கோளை உருவாக்கி உள்ளது. இதனை தயாரித்தவர் தமிழக பெண் விஞ்ஞானி வளர்மதி. இவரிடம் செயற்கைக்கோள் தயாரிப்புக்கான திட்டப்பணியை இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதையடுத்து அதன் திட்ட இயக்குனராக பெண் விஞ்ஞானி வளர்மதி பொறுப்பு ஏற்றார். அவரது தலைமையிலான விஞ்ஞானிகள் குழுவினர் இரவு பகலாக உழைத்து செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளனர். இதற்கு ரிசாட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் ரிசாட்-1 செயற்கைக்கோள் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது. அனேகமாக மார்ச் 15-ந்தேதிக்கு பிறகு செலுத்த ஏற்பாடு நடப்பதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். செயற்கைக்கோள் தயாரிப்பு பற்றி பெண் விஞ்ஞானி வளர்மதி கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
|
| சுருக்கமில்லாத முகம் வேண்டுமா? – எளிய வழிகள்! Posted: 25 Apr 2012 06:58 AM PDT
இளமையோடும், அழகுடனும் இருக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பு பெண்களின் எண்ணம். கண்களுக்கு கீழே கருவளையமோ, முகத்தில் லேசாக சுருக்கமோ ஏற்பட்டாலோ உடனே அழகு நிலையங்களுக்குச் சென்று ஆயிரக்கணக்கில் செலவழித்து முகத்தை அழகு படுத்திக்கொள்பவர்கள் இருக்கின்றனர்.
இதனால் செலவும் மிச்சமாகும் காலி ஃப்ளவர், முள்ளங்கி வெயிலில் அலைவதால் முகம் கருப்பாகிவிடும். அழுக்குகள் படிந்து முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். இவற்றைப் போக்க காலிஃப்ளவரும், முள்ளங்கியும் போதும். 2 ஸ்பூன் பாலுடன் ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் முழுவதும் பூசி 10 நிமிடம் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் புத்துணர்ச்சியோடு திகழும். இதை தொடர்ந்து செய்து வர முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். காரட், ஆரஞ்சு பழம் தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன், காரட்சாறு ஒரு ஸ்பூன், ரோஸ் வாட்டர் ருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலக்கவும். அந்த கலவையை நன்றாக முகம் முழுவதும் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளப்பளப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். மென்மை தரும் வெள்ளரி வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றாக மை போல அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணெய் வழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும். முகம் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும்.
சுருக்கம் நீக்கும் கோஸ் முட்டைக் கோஸ் இலைகளை நன்றாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு ஈஸ்ட், ஒரு ஸ்பூன் கலந்து பேஸ்ட் போல செய்யவும். அதனை முகத்தில் தடவி பேக் போடவும்.20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதன் பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை துடைத்து விட்டு வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசி நன்றாக மசாஜ் செய்யவும். ஒருமணி நேரம் இந்த கலவை முகத்தில் இருக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை கழுவி விட வேண்டும். வாரம் ஒருமுறை இதுபோல செய்து வர முகம் சுருக்கம் நீங்கி பளபளப்பாகும். பருக்கள் இருந்தாலும் மறையும். சத்தான சாத்துக்குடி சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும். ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பால், பப்பாளி பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும் |
| You are subscribed to email updates from கல்வி களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

