தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கி ஏமாறாதீர்கள்: விழிப்புணர்வு பிரச்சாரம்

Posted: 23 Apr 2012 07:00 PM PDT

செவ்வாய்கிழமை அட்சய திருதியை நாளாகும். இந்த நாளில் எல்லோரும் தங்கம் வாங்கினால் ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வம் பெருகும் என மக்களிடம் நம்பிக்கை உள்ளது. இதனை பயன்படுத்தி தரமற்ற தங்க நகைகளை பலரும் விற்பனை செய்வதாக புதுச்சேரியில் நுகர்வோர் அமைப்பினரின் பிரச்சாரம் செய்தனர். புதுச்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மைக்குகள் மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அட்சய திரிதியை நாளைப் பயன்படுத்தி நகைக் கடைக்காரர்கள் நுகர்வோர்களை ஏமாற்றுவதாக ...

செல்வங்களை அள்ளித் தரும் அக்ஷய திருதியை

Posted: 23 Apr 2012 06:49 PM PDT

நந்தன வருடம் சித்திரை மாதம் 24ஆம் திகதி; செவ்வாய்க்கிழமை அக்ஷ்ய திருதியையாகும். இந்துக்கள் தமது வாழ்வின் ஒவ்வொரு விடயத்தையும் நல்ல நாள், நட்சத்திரம் என்று பார்த்துத் தொடங்குவர். அவர்கள் செல்வச் செழிப்பை அளிக்கும் நாளாக அக்ஷய திருதியையைக் கருதுகின்றனர். அதாவது அக்ஷய திருதியை மிகவும் புனிதமான நாள் என்றும் அந்நாளில் செய்யும் தான தருமங்கள் ஏழு பிறவிக்கும் தொடரும் என்றும் ஸ்வர்ண தானம் மிகவும் உயர்ந்தது என்றும் கருதுகின்றனர். இந்நாளில் பசு, தயிர், பால் போன்றவற்றையும் தானமாக அளிக்கலாம். ~அக்ஷ| ...

வாணிகம் - ஒரு விளக்கம்

Posted: 23 Apr 2012 06:43 PM PDT

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். -திருவள்ளுவர் தமிழ் வேதங்கள் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு என்பன. அதில் அறக் கருத்தை வலியுறுத்தும் திருக்குறளின் அறத்துப்பாலில் இல்லறவியல் பகுதியில் அதிகாரம் 12 - நடுவுநிலைமை – குறள் எண்:120 ஆக வருவது மேற்கண்ட குறள். விளக்கம்:- வாணிகம் செய்பவர்கள், வாணிகம் செய்யும் போது தாம் வழங்கும் பொருட்களை (அ) சேவையை தாமே பயன்படுத்தப்போவதாக கருதிக்கொண்டு (அதாவது வாடிக்கையாளரின் மனநிலையில்) வாணிகம் செய்ய வேண்டும். இப்படி வாணிகம் ...

ஆரியர் யார்? (பகுதி 2)

Posted: 23 Apr 2012 06:40 PM PDT

7 .வேதகாலச் ஆரிய சடங்குகளை செய்யக் கூடிய இந்த ஆரிய வழிவந்த பிரிவு, சமுதாயத்தில் தனிச்சலுகை பெற்ற ஓன்றாக மாறியது. இது சலுகை பெற்ற ஒரு தனியான சுரண்டும் வர்க்கமாக, தனது வர்க்க தனித்துவத்தை பேணவும், அதை இரகசியமாக்கவும், தனது பழைய மொழியின் சிதைவில் இருந்து ஒரு மொழியை தக்கவைத்துள்ளது. அதுதான் சமஸ்கிருதம். இதை கடவுளுக்கு மட்டும் தெரிந்த ஒரு மொழியாக கூறிக்கொண்டதுடன், கடவுளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவர்களின் ஒரு இரகசிய மொழியாகவும் இதைப் புனைந்தனர். இந்த மொழியைத் தெரிந்தவர்கள், கடவுளுடன் பேசக் ...

ஆரியர் யார்? (பகுதி 1)

Posted: 23 Apr 2012 06:37 PM PDT

1. ஆரியர்கள் என்போர் வந்தேறிகளே. அவர்கள் கி.மு 1000 க்கும் கி.மு 2000 ஆண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில், இந்தியாவின் ஒரு பகுதியை வந்தடைந்தவர்கள். 2. ரிக்வேதம் ஆரியருடையதும், ஆரியரால் பின்பட்ட ஒரு வாழ்வுமுறையுடன் கூடிய ஒரு சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டது. ரிக்வேத உள்ளடக்கமும் அதன் வாழ்வியல் முறையும், இந்திய சமுதாயத்துடன் தொடர்பற்ற ஒன்று. 3. ஆரியர் என்று கருதப்பட்டவர்கள் தான், இன்றைய பார்ப்பனர்கள் என்ற நேர்கோட்டு எடுகோள் தவறானது. மாறாக ஆரியரின் ஒரு பிரிவு, அதுவும் இந்திய சமுதாய கலப்பின் ...

வணக்கம்

Posted: 23 Apr 2012 06:35 PM PDT

வணக்கம் என் பெயர் மூவேந்தன் ..
நானும் நண்பன் கார்த்தியின் மூலமாக இந்த தளத்தை அறிந்தேன்..

சில பொன்மொழிகள்

Posted: 23 Apr 2012 06:30 PM PDT

காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார் -லெனின் செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான். -பெர்னாட்ஷா வெற்றியை நோக்கிப் பற! பறக்க முடியாவிட்டால் ஓடு! ஓட முடியாவிட்டால் நட! நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல். ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு. நான் சாக்கடையில் விழுந்து கிடக்கிறேன். என் கண்கள் நட்சத்திரங்களில். ஒரு மனிதனின் வாழ்க்கையில் நன்மை செய்தலே உண்மையான இன்பம் அளிக்கும் செயல். - சர் பிலிப்சிட்னி "ஒரு நல்ல நூல் ஒரு நல்ல ...

கிராமங்களுக்கு "இன்ஷியல்' & போலியான ஆராய்ச்சிகள்

Posted: 23 Apr 2012 06:19 PM PDT

கிராமங்களுக்கு "இன்ஷியல்' தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள் ஒரே பெயரில் உள்ளன. இதனால் ஏற்படும் பெயர் குழப்பங்களை நீக்க, அருகில் உள்ள தாய் கிராமம் அல்லது நகரம் அல்லது கிராமம் உள்ள மாவட்டத்தை பெயரோடு சேர்த்துக் கொள்வது வழக்கமாகும். மதுரைக்கு அருகில் உள்ள "வல்லாளபட்டி' அழகர்கோவில் அருகில் இருப்பதால், "அழகர்கோவில் வல்லாளபட்டி' என்று அழைக்கப்பட்டு பின், "அ.வல்லாளபட்டி' ஆனது. இந்த பெயர்க் குழப்பம் கிராமங்களுக்கு மட்டுமின்றி, நகரங்களுக்கும் உள்ளது. ஐதராபாத் என்ற பெயரில் ஒரு நகரம் இந்தியாவில் மட்டுமின்றி, ...

வலம்புரிஜான்: இவர் படமல்ல; பாடம்..! -

Posted: 23 Apr 2012 06:15 PM PDT

இவர் படமல்ல; பாடம்..! குடந்தை கீதப்பிரியன் First Published : 22 Apr 2012 01:02:46 AM IST ஒரு பறவை பறந்து போகிறது. அது பறக்கும்போது இறகுகள் அங்கங்கே உதிரத்தான் செய்யும். உடனே, பறக்கிற பறவை கீழே இறங்கி வந்து, தன் அழகான அந்த இறகுகளை கொத்திக் கொத்தி சேகரித்துக் கொண்டிருந்தால் பயணம் தடைபட்டுப்போகும். எனவே, இழப்புகளை எண்ணாமல் போய்க்கொண்டே இருக்க வேண்டும். ÷பெரிய நதி போகிறது. தன் பாதையை அது தானே அமைத்துக்கொண்டு போகுமே தவிர, பாதை வெட்டுவதற்காக மண் வெட்டியும், கடப்பாரையும், கூடையும் கூடவே கொண்டு ...

windows xp reboot & ரீ-இன்ஸ்டால் சி‌டி கிடைக்குமா ?

Posted: 23 Apr 2012 03:56 PM PDT

windows xp பொதுவாக வைரஸ் வந்து பாதிப்பு அடைந்தால் அதை boot செய்யவும் , ரீ இன்ஸ்டால் செய்யவும் சி‌டி இல்லை, அதன் தரவிறக்கம் கிடைக்குமா ? எக்ஸ்‌பி தேவையான டிரைவர்ஸ் கூட .... பாதிப்பு அடைந்த கணினியை கடைக்கு செல்லாமல் நாமே சரி செய்ய முடியாதா ?

ஆன்ட்ராய்ட்-எப் ட்ராய்டு

Posted: 23 Apr 2012 11:41 AM PDT

நண்பர்களே இன்றைய உலகில் போனில் அதிக அளவு விற்பனையாவது ஸ்மார்ட் போன்கள் அதுவும் ஆன்ட்ராய்டு வகை போன்கள் மிக அதிகமாக விறபனையாவதை அனைவரும் அறிந்ததே. ஆன்ட்ராய்ட் ஒரு இலவச இயங்குதளமாகும். இந்த வகை இயங்குதள போன்களுக்கு என்று வைத்திருந்த கூகிளின் ஆன்ட்ராய்ட் மார்கெட்டினை கூகிள் ப்ளே என்று பெயர் மாற்றியது சில நாட்களுக்கு முன்புதான் என்பதையும் அறிவீர்கள். சரி இந்த வகை ஆன்ட்ராய்ட் இயங்குதள போன்களுக்கு கூகிள் ப்ளே மட்டும்தான் உள்ளதான் என்று பார்த்தால் கூகிளை போன்ற சில தளங்கள் இருக்கதான் செய்கின்றன இதில் ...

நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

Posted: 23 Apr 2012 11:21 AM PDT

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார். பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும். உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான். ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம். மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன. பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் ...

படிக்கும் அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு

Posted: 23 Apr 2012 10:41 AM PDT

மு.கு: நாம் எழுதுகிற பதிவு எல்லோருக்கும் பிடிப்பது என்பது சாத்தியமில்லை. பெரும்பான்மையானவர்களுக்கு பிடித்தாலே ஹிட்டாகிவிடும். படிக்கும் எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு பதிவு போட ஐடியா தோன்றியது எனக்கு. அதுவும் ஒரே வரியில். "தமிழ் பதிவுலகில் முதன் முறையாக அனைவராலும் பாராட்டப்படப்போகும், படிக்கும் அனைவருக்கும் சந்தோஷம் தரப்போகும் பதிவு". அது என்ன என்பதை கடைசியில் பார்ப்போம். இந்தப் பதிவு எப்படிப்பட்டது என்பதற்கு சில உதாரணங்கள் தருகிறேன். 1) கூகிளில் சென்று "best search engines" என்று ...

வேலன்:-சென்னையின் பஸ்ரூட் எளிதில் அறிந்துகொள்ள

Posted: 23 Apr 2012 09:18 AM PDT

சென்னையின் பரப்பளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. தாம்பரத்தில் ஆரம்பித்து கும்மிடிப்பூண்டி வரை பரந்து விரிந்து இருக்கின்றது. புது புது ஊர்களும் -புதுபுது கட்டிடங்களும் நம்மை மிரள வைக்கின்றது.சென்னைக்கு பழக்கமானவர்களே பஸ் ரூட் தெரியாமல் முழிக்கும் போது நாமெல்லாம் எந்த மூளைக்கு..? சென்னையின் பஸ் ரூட் எளிதில் அறிந்து கொள்ள இந்த இணைய தளம் நமக்கு அருமையாக வழிகாட்டுகின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ...

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -17

Posted: 23 Apr 2012 08:20 AM PDT

வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் , அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ? கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான் உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள் 1.இப்போ உலகமே பயப்படுற ...

இவர் யார் என்று சொல்லுகள் பார்போம்

Posted: 23 Apr 2012 08:14 AM PDT

விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்

Posted: 23 Apr 2012 08:08 AM PDT

1995ஆம் ஆண்டு தொடங்கி 2010ஆம் ஆண்டு முடியவுள்ள 16 ஆண்டுகளில் இந்தியாவெங்கிலும் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 2,56,913 என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது, தேசியக் குற்ற ஆவண ஆணையம். இப்பதினாறு ஆண்டுகளில், முதல் எட்டு ஆண்டுகளில் (1995-2002) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,21,157; அடுத்த எட்டு ஆண்டுகளில் (2003-2010) விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது முந்தையை எட்டு ஆண்டுகளை ஒப்பிடும்பொழுது, ஆண்டொன்றுக்குச் சராசரியாக 1,825 என்ற வீதத்தில் அதிகரித்து, 1,35,756ஐத் ...

கொஞ்சம் லொள்ளு !!!!!!!!! கொஞ்சம் ஜொள்ளு !!!!!!!

Posted: 23 Apr 2012 07:45 AM PDT

கிளாஸ்ல ஃபர்ஸ்ட் உங்க மகன் தான்ங்க! அப்படியா, ரொம்ப சந்தோஷம் சார்! நீங்க வேற… பெல் அடிச்சதும் அவன் தான் வகுப்பிலேருந்து முதல்ல வெளியேறுவான். ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ இரண்டு பள்ளி சிறுவர்கள் பேசிக்கொண்டது; நம்ம டீச்சருக்கு வர வர ஞாபக மறதி அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன். எப்படிச் சொல்ற? பின்ன என்ன, அவங்களே போர்டில சிலப்பதிகாரம்னு எழுதிட்டு, நம்மகிட்ட சிலப்பதிகாரத்தை எழுதியது யார்னு கேட்கிறாங்க. ====================================================================================== ஆசிரியரும் ...

செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட்

Posted: 23 Apr 2012 07:23 AM PDT

புதிய முறையில் செயற்கையாய் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் - ஷாக் ரிப்போர்ட் மாம்பழத்தின் சுவையில் மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவ்வளவு இனிமையான சுவை கொண்டது மாம்பழம். தர்பூசணி பழங்களின் சீசன் முடிந்த நிலையில் வியாபாரிகள் மாம்பழ விற்பனையை மும்மூரமாக துவங்கியுள்ளனர் என்னது ! மாம்பழ சீசன் வந்துருச்சா ! என்று நீங்கள் கேட்பது புரிகிறது. மாம்பழ சீசன் இன்னும் வரவில்லை. தற்போது சந்தையில் கிடைப்பது எல்லாம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள். நாளுக்கு நாள் தொழிநுட்பம் வளர்ந்து ...

செல்போன், வீடியோ கேமரா.. அந்தரங்க ஆபத்து

Posted: 23 Apr 2012 07:13 AM PDT

செல்போனிலோ, விடீயோ கேமராவிலோ தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பதிவு.. ''நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். ``அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா... வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் ...

சிவா தம்பி

Posted: 23 Apr 2012 06:59 AM PDT

வணக்கம் தம்பி


என் தோழி ஒருவர் நாம் ஈகரையில் இணைந்துள்ளார் புன்னகை

அவர் யூசர் நேம் போட்டால் உள் நுழைய முடியவில்லை என்ன செய்வது... சோகம்


சீக்கிரம் பதில் சொல்லுங்கள்...

சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு - சிட்டுக்குருவிகளுக்கு உதவி செய்ய விரும்புகிறீர்களா

Posted: 23 Apr 2012 06:53 AM PDT

சிட்டுக்குருவிக்கு இல்லை கட்டுப்பாடு ப.ஜெகநாதன் காட்டுயிர் விஞ்ஞானி, மைசூர். First Published : 22 Apr 2012 03:07:00 PM IST பல ஆண்டுகளாக மார்ச் மாதங்களில் பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பெறும் செய்தி சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன என்பது. அதற்கான முக்கிய காரணங்கள் நகரமயமாதல், செல்போன் டவரிலிருந்து வரும் மின்காந்த அலைகள் என்றும் எனவே அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றெல்லாம் அக்கட்டுரைகளில் சொல்லப்பட்டிருக்கும். இவையெல்லாம் எந்த அளவிற்கு உண்மை? சிட்டுக்குருவியின் நிலை அவ்வளவு பரிதாபகரமாக ...

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!

Posted: 23 Apr 2012 06:50 AM PDT

மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு! உலக மது எதிர்ப்பு மாநாடு - நம்பிக்கையளிக்கும் புதிய தொடக்கம். உலகின் முதல் மதுஒழிப்பு உலக மாநாடு தாய்லாந்து நாட்டில் நடந்து முடிந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் மதுவினால் ஏற்படு தீமைகளை உணர்ந்து அதனை தடுக்கவும் மதுத்தீமையை ஒழிக்கவும் உரிய வழிமுறைகளைக் கண்டறிவதாக இம்மாநாடு இருந்தது. இந்நேரத்தில் உலக அளவில் தமிழ்நாடு மட்டுமே மதுபானத் தீமையை வளர்க்கும் ஒரு தனித்தீவாக இருப்பதை எண்ணித் தமிழர்கள் வெட்கப்பட வேண்டும்! மதுவளர்க்கும் ...

ஒருவர் சொல்வதை அப்படியே காப்பி செய்து பதிவிடுவது எப்படி ??

Posted: 23 Apr 2012 06:46 AM PDT

ஒருவர் சொல்வதை அப்படியே காப்பி செய்து ஓட்ட வைப்பது எப்படி என்று சொல்லுங்க....

உதாரணத்திற்கு நான் சொன்னதை siva wrote என்று சொல்லி அதை அப்படியே காப்பி செய்து எப்படி பதிவு செய்கிறீர்கள் ?? ஒன்னும் புரியல

தலைவன் கோட்டை ஜமீன் வரலாறு

Posted: 23 Apr 2012 06:29 AM PDT

முன்னுரை: 14ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் (1320-1323) பாண்டிய மன்னர்களுக்குள் உள்நாட்டுப் போரை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இசுலாமியர்கள் தமிழகத்தின் மீது தங்களது கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர். மாலிக்காப10ரின் படையெடுப்பு தொடங்கி முகமது துக்ளக் ஆட்சி வரை பல முறை இசுலாமியர் படையெடுப்பு நிகழ்ந்தது. முகமது பின் துக்ளக் ஆட்சி காலத்தில் மதுரை டில்லி சுல்தானியத்தின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. முகமதுபின்துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மதுரையின் ...

பெயர் பெற்ற கோயில்கள் ‌

Posted: 23 Apr 2012 06:12 AM PDT

பெரிய கோயில் - தஞ்சை பூங்கோயில் - திருவாரூர் ஏழிருக்கை - சாட்டியக்குடி ஆலக்கோயில் - திருக்கச்சூர் கரக்கோயில் - திருக்கடம்பூர் மணிமாடம் - திருநறையூர் தூங்காளை மாடம் - திருப்பெண்ணாடகம் அயவந்தீச்சரம் - திருச்சாத்தமங்கை சித்தீச்சுரம் - திருநறையூர் தகவல் பகிர்வு - தினமணி ஞாயிறு கொண்டாட்டம்

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

Posted: 23 Apr 2012 05:12 AM PDT

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று. இதில் ஆழமான பிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல. முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், வெட்கம், மானம், மரியாதை, சூடு, சொரணை, இப்படி வேண்டாத சாமான்களை எல்லாம் காயலான் கடைக்குப் போட்டு விடவேண்டும். அப்புறம் நல்ல கணவனாவது வெகு சுலபம். வளவளவென்று சும்மா பேசி என்ன பிரயோஜனம்? சுருக்கமாக பாய்ன்ட் பை பாய்ன்ட்டாக (Point by Point) நெம்பர் ...

சிங்கப்பூர் தொலைபேசி கோட் எண் வேண்டும்

Posted: 23 Apr 2012 04:43 AM PDT

நண்பர்களே சிங்கபூரில் ஒரு நண்பருக்கு கைதொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும் அவரது மொபைல் நம்பர் மட்டும் உள்ளது கோட் நம்பர் ஏதாவது சேர்க்க வேண்டுமா

வீட்டு தந்தூரி சிக்கன் ரெஸிபி

Posted: 23 Apr 2012 04:31 AM PDT

வீட்டு தந்தூரி சிக்கன் ரெஸிபி தந்தூரி சிக்கனை ஹோட்டலில் வாங்கினால் விலை அதிகம் இருக்கும். விலை அதிகமாக இருக்கிறதே என்று சாப்பிடாமலும் இருக்க முடியாது. இதற்கு அருமையான ஐடியா கொடுக்கிறார் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஹைதராபாத் மொகல் பிரியாணி ஹோட்டலின் சமையல் கலைஞர். வீட்டிலேயே மணக்க மணக்க இந்த தந்தூரி சிக்கனை செய்து சாப்பிடலாமாம். அவர் கொடுக்கும் டிப்ஸைப் பாருங்களேன்... தேவையான பொருட்கள் சிக்கன் – முழு கோழி தந்தூரி மசாலா - 5 டேபிள் ஸ்பூன் வினிகர் - 3 டீ ஸ்பூன் எலுமிச்சை - ...

மைக்ரோசொப்ட் ஏழைக்கு உதவாது

Posted: 23 Apr 2012 04:17 AM PDT

உலகில் நாளுக்கு நாள் கணினி நுட்பம் மாறிக்கொண்டு வருகிறது. ஆனால், பல நாடுகளின் பொருண்மிய நிலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதேநேரம் மைக்ரோசொப்ட் தனது இணைய வலைச் சோதனையால் வின்டோஸ் இயங்குதள உதவியுடன் களவாகப் பயன்படுத்தும் மென்பொருள்களைச் செயலிழக்கச் செய்வது பழைய செய்தி. இதனால், ஏழை நாடுகளில் உலாவும் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள் பயனர்கள் திண்டாடுகின்றனர். ஏழைகளுக்கு உதவும் நோக்கில் சில கணினி நுட்பவியலாளர்களின் முயற்ச்சியால் ஒளித்துப் பயன்படுத்தும் மென்பொருள்கள் உலாவ இடமிருக்கிறது. மைக்ரோசொப்ட்டின் ...

பொது கணனியில் எப்படி வலைத்தளங்களை பார்க்க முடியலை

Posted: 23 Apr 2012 03:48 AM PDT

பொது கணனியில் சில வலைத்தளங்களை பார்க்க முடியாமல் உள்ளது .என்ன செயலாம் ?உதவுங்கள் நீண்ட காலத்திற்கு பின் ஈகரையில் இணைகிறரேன்.எல்லாரும் மறந்திருப்பீர்கள் .எல்லோருக்கும் புதுவருட நல்வால்த்துக்கள் .

"சலனம் அற்று இருக்கும் எனது மொழி"

Posted: 23 Apr 2012 03:33 AM PDT

அலைகளை இழந்து எனது கைகளில் சலனம் அற்று இருக்கும் இந்தக் கடல் நீர் உற்றுப் பார்க்கும் குழந்தைக்கு என்ன உண்மையை உணர்த்தக் கூடும்? *********************************************************************** மீன்கள் நிரம்பிய இந்த ஆறு வறண்டு போய் விட்டது கோடையில். ஒற்றைக் காலுடன் சில கொக்குகள் சுற்றித் திரிகின்றன எல்லாத் திசைகளிலும். கனவு முட்டைகளுடன் இந்த ஆற்றில்.... நீந்தித் திரிந்த மீன்கள் எந்தப் பாறைக்கடியில் சேர்த்துவைக்கும் தனது கண்ணீர் முட்டைகளை? ******************************************************************************* நான் ...

வார/மாத இதழ்கள்: புதியவை - நாணயம் விகடன் 29/4, கம்ப்யூட்டர்மலர் 23/4, பாலஜோதிடம் 21/4, புதிய தலைமுறை 29/4

Posted: 23 Apr 2012 03:13 AM PDT

குமுதம் 21-03-2012 http://www.4shared.com/office/TM4ii-zp/Kumudam_21032012.html http://www.mediafire.com/?ba9svax396b3aog http://letitbit.net/download/69849.64cdf40f94e05fe0e876965b0c35/Kumudam21032012.pdf.html குறிப்பு: அனைத்து பதிவுகளும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.இணையத்தில் கிடைத்த லிங்கையே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் கலெக்டர் கடத்தப்பட்டது எப்படி? பரபரப்பான புதிய தகவல்கள்

Posted: 23 Apr 2012 03:08 AM PDT

சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடத்தப்பட்டது எப்படி? என்பது பற்றி பரபரப்பான தகவல் வெளியானது. புதிய தகவல்கள் சத்தீஷ்கார் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக பணியாற்றி வருபவர் அலெக்ஸ் பால்மேனன். 32 வயதான இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அந்த மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதி ஆகும். கலெக்டர் அலெக்ஸ் நேற்று முன்தினம் மாலை அந்த மாவட்டத்தில் மஜிபரா என்ற கிராமத்தில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மாவோயிஸ்டுகளால் கடத்திச் ...

இன்று உலக புத்தக தினம் சிந்தனைக்கு சில வரிகள் கவிஞர் இரா .இரவி

Posted: 23 Apr 2012 03:07 AM PDT

இன்று உலக புத்தக தினம் சிந்தனைக்கு சில வரிகள் கவிஞர் இரா .இரவி புத்தகம் கவிஞர் இரா .இரவி மனிதனை மனிதனாக வாழ வைப்பது புத்தகம் ! மனிதனின் வளர்ச்சிக்கு வித்திட்டது புத்தகம் ! பண்பாடு வளர்த்து பண்பைப் போதிப்பது புத்தகம் ! அறிவியல் அறிவை அகிலம் பரப்பியது புத்தகம் ! பயனுள்ள கண்டுபிடிப்பு வாழ்வின் பிடிப்பு புத்தகம் ! புரட்சியாளனை உருவாக்கியது புத்தகம் ! அகிம்சைவாதியை வளர்த்தது புத்தகம் ! பகுத்தறிவுப் பகலவன் ஒளிவீசக் காரணம் புத்தகம் ! பேரறிஞர் புகழ்ப் ...

பகுத்தறிவன் - மற்றுமொரு தமிழ் அன்பன், உங்கள் நண்பன்!

Posted: 23 Apr 2012 02:56 AM PDT

தமிழில் அறிவியில் செய்திகளை கூகிள்-ல் தேடிய போது, கண்டெடுத்த பெட்டகமே ஈகரை !
ஈகரையில் இணைந்தது, ஈடிலா மகிழ்ச்சி!!

[பிரசன்னா கேட்டு கொண்டதற்கிணங்க இதை பதிகிறேன்!]

நீதிமன்றத்தில் "நீதிநெறி'!

Posted: 23 Apr 2012 02:00 AM PDT

தனிப்பட்ட ஆதாயத்துக்காக ஏமாற்ற முயலாதீர்கள்; பிறர் நலனைக் குலைப்பதால் பெறும் ஆதாயம் நிலையில்லாதது.'' ""கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமர்வான்.'' ""விட்டுக் கொடுப்பவன் கெட்டுப்போவதில்லை'' ""வணங்கும் கரங்களை விட உதவும் கரங்களே மேலானவை'' ""திறக்க முடியாத பூட்டும் இல்லை; தீர்க்க முடியாத பிரச்னையும் இல்லை. சமாதானத்துக்கு முயலுங்கள்''. - என்ன ஒரே தத்துவ மழையாக இருக்கிறதே... என்று நினைக்கிறீர்களா? சேலம் மாவட்டம், சங்ககிரியில் வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்த நான்கு நீதிமன்றங்களும் ...

தெரிந்து கொள்வோம் ... முத்திரைத்தாள்

Posted: 23 Apr 2012 01:57 AM PDT

முத்திரைத் தாள் இப்போது புழக்கத்திலுள்ள முத்திரைத் தாள் முறைக்கு முதன் முதலில் வித்திட்ட நாடு நெதர்லாந்து. அங்கு கி.பி.1624}ம் ஆண்டு இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனையடுத்து, கி.பி.1694-ல் இங்கிலாந்து நாட்டில் முத்திரைச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஐக்கிய அமெரிக்காவில் இச்சட்டம் கி.பி.1766}ல் கொண்டு வரப்பட்டது. 1797-ம் ஆண்டு, இங்கிலாந்து அரசு, இந்தியாவில் முத்திரைத் தாள் வரியை அறிமுகப்படுத்தியது. அப்போது நிலத்திலிருந்து பெறப்படும் வரியை மட்டுமே நம்பியிருந்தது ஆங்கிலேயே அரசு. முதலில் ...

சனாதி அப்பண்ணா!

Posted: 23 Apr 2012 01:38 AM PDT

1977ல் "சனாதி அப்பண்ணா' என்ற கன்னட படம் வந்தது. மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் அதில் ஒரு ஷெனாய் வித்வானாக நடித்தார். பின்னணியில் ஷெனாய் இசைப்பதற்காக காலம் சென்ற பிரபல ஷெனாய் மேதை பிஸ்மில்லாகானை வேண்டினார்கள். புரொடக்ஷன் மேனேஜர் ஸ்ரீனிவாஸ் அதற்காக காசியில் இருந்த பிஸ்மில்லாகான் வீட்டுக்குப் போனார். ஆனால் கான் லேசில் சம்மதிக்கவில்லை. ஒரு ஹிந்தி படத்தில் அவருக்கு கிடைத்த கசப்பான அனுபவம்தான் அதற்குக் காரணம். (அந்தப் படத்தில் வன்முறையும் செக்ஸþம் மிக அதிகமாக இருந்ததாம்). ஸ்ரீனிவாஸ், பிஸ்மில்லாகானிடம் ...

யானைகளை பிச்சையெடுக்க விடலாமா?

Posted: 23 Apr 2012 01:17 AM PDT

விலங்குகள் மீது மனிதர்களுக்கு அன்பு வர வேண்டும். விலங்குகளின் மீது அன்பு செலுத்தும் உள்ளம் இருந்தால் அது சக மனிதர்களின் மீது அன்பு செலுத்தும் உள்ளமாக உங்கள் வீட்டு வாசலில் ஐந்து பூனைக்குட்டிகளை யாரோ விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. உதவ முடியுமா?'' என்று தொலை பேசியில் ஓர் அழைப்பு. உடனே காரை எடுத்துக் கொண்டு கிளம்பிச் சென்று அந்த ஐந்து பூனைக்குட்டிகளையும் எடுத்து வந்து வளர்க்கிறார் கல்பனா வாசுதேவன். ""ஆண்ட்டி, அணில் ஒண்ணு செத்துக் கெடக்கு. என்ன செய்யணும்?'' ...

லூபா என்னும் குட்டி யானை!

Posted: 23 Apr 2012 01:15 AM PDT

ஏறக்குறைய 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த பழங்கால குட்டி யானை பனிப் பாறைகளுக்கிடையிலிருந்து கடந்த 2007-ம் ஆண்டுவாக்கில் ரஷ்யாவின் சைபீரியாவில் கண்டெடுக்கப்பட்டது. இதுதான் உலகிலேயே அதிக ஆண்டுகள் பதப்படுத்தப்பட்ட குட்டி யானை என்ற புகழைப் பெற்றிருக்கிறது. லூபா என்னும் பெயர் வைத்திருக்கும் பெண் யானையான இதை ஆசியா முழுவதும் தற்போது கண்காட்சிக்கு வைக்க இருக்கிறார்கள். ஏப்ரல் 12 முதல் மே 10 வரை ஹாங்காங்கில் காட்சிக்கு வைக்கப்பட இருக்கிறது, லூபா. குட்டி யானையின் உடல் உறுப்புகளை ஆராய்ந்ததில், ...

முதல்வர் அளித்த உற்சாக "டானிக்'

Posted: 23 Apr 2012 01:09 AM PDT

பிரபலமான அரசியல் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கல்வித் துறைக்கு வருவது மிகமிக அரிது. அதிலும் அறிவுக் களஞ்சியமான பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவிக்கு வருவது சாதாரண விஷயமல்ல. நாவன்மையால் பொதுமக்களை தன் வசம் கட்டிப்போட்டு வைத்தவரும், "நாவலர்' என அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவருமான இரா.நெடுஞ்செழியன் குடும்பத்திலிருந்து கல்வியாளர் ஒருவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக வந்துள்ளார். அதிலும் இப்பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தர் என்பது அவருக்கு கூடுதல் சிறப்பு. ...

ஒரு document attach செய்ய என்ன செய்வது

Posted: 23 Apr 2012 12:59 AM PDT

ஒரு document attach செய்ய என்ன செய்வது?அந்த document ஈகரைக்கு அனுப்ப என்ன செய்வது.அதில் 92 பக்கங்கள் உள்ளன