தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


புதுக்கோட்டை தேர்தல் பணிக்கு 32 அமைச்சர்கள் நியமனம் - ஜெயலலிதா

Posted: 28 Apr 2012 06:42 PM PDT

28 அசிசுகூஙீ, 2012 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தேர்தல் பணிகளை கவனிக்க 32 அமைச்சர்கள் உள்பட 43 பேர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். புதுக்கோட்டை இடைத்தேர்தல் புதுக்கோட்டை சட்டமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற முத்துக்குமரன் கடந்த 1-ந் தேதி சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை தொகுதிக்கு ஜுன் மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் ...

ஐ.பி.எல்- 5 வெல்வது யார் [சென்னை- பஞ்சாப்]

Posted: 28 Apr 2012 06:31 PM PDT

ஐ.பி.எல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் யார் கோப்பையை வெல்வார்கள் என்று பார்ப்போம்.

எந்த அணி இம்முறை கோப்பையை வெல்லும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் .. வாக்களிக்க தவறாதீர்கள்..

திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது

Posted: 28 Apr 2012 05:27 PM PDT

நான் Acer Extensa 4230 Laptop இல் AWindows Xp sp2 பயன் படுத்துகிறேன், எனது மடி கணனியை பயன் படுதிக் கொண்டிருக்கும் போது ( விசேடமாக Skype பயன் படுத்தும் போது ) திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் restart ஆகுகின்றது . இது அடிக்கடி நிகழ்கின்றது. இவ்வாறு நிகழ்வதற்கான காரணம் என்ன? இதனை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் ? யாராவது எனக்கு உதவுவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

மதுரை ஆதீனத்துக்கு, நல்ல மனிதரை நியமிக்க வேண்டும் - நித்யானந்தாவை விட சிறந்தவர் வேறு யாரும் இல்லை

Posted: 28 Apr 2012 05:25 PM PDT

திருஞானசம்பந்தர் தோற்றுவித்த, 1,500 ஆண்டு பழமை வாய்ந்த மதுரை ஆதீனத்தின், 293வது குரு மகா சன்னிதானமாக, சாமியார் நித்யானந்தா முடிசூட்டப்பட்டார். இதை, நடிகை ரஞ்சிதா முதல் வரிசையிலிருந்து பார்த்து ரசித்தார். பக்தர்கள் ஆட்டம், பாட்டத்துடன் ஆரவாரம் செய்தனர். 292வது மதுரை ஆதீனமாக, சீர்காழியின் அருணகிரிநாதர் ஞானதேசிக பரமஹம்சர் 1975ல் நியமிக்கப்பட்டார். தற்போது 293வது மதுரை ஆதீனமாக, நித்யானந்தாவுக்கு குரு பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பிடதி நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில், தற்போதைய ...

சர்தார்ஜி காமடி - Just fun..........

Posted: 28 Apr 2012 05:19 PM PDT

ஒரு முறை சர்தார் சூப்பர் மார்கெட்டுக்கு சன் ஃபுளவர் (Sunflower) ஆயில் வாங்க சென்றிருந்தார். உயர்தர ஆயில் பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு கடைகாரரிடம் வந்து காசை கொடுத்து விட்டு 'கொலஸ்ட்ரால் கொடுங்க' என்றார். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. 'சாரி, கொலஸ்ட்ரால் எல்லாம் விற்பதில்லை' என்று கடைக்காரர் சொன்னார். உடனே சர்தாருக்கு கோபம் வந்து விட்டது, 'நான் என்ன இளிச்சவாயனா, என்னை ஏமாற்ற முடியாது, இப்ப கொலஸ்ட்ராலை கொடுக்கிறாயா இல்லையா?' என்று சத்தம் போட ஆரம்பித்து விட்டார். உடனே கடைக்காரர் ரொம்ப ...

திருவண்ணாமலையில் அரசு வேலைக்காக தந்தையையேக் கொன்ற மகன்

Posted: 28 Apr 2012 05:10 PM PDT

திருவண்ணாமலையில் அரசு வேலைக்காக தந்தையையேக் கொன்ற மகன் First Published : 28 Apr 2012 10:18:50 AM IST திருவண்ணாமலை, ஏப். 28 : வனத் துறையில் அரசு ஊழியராக இருந்த ஏழுமலை(58) இன்னும் 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் கடந்த 24ம் தேதி கரும்புத் தோட்டத்தில் பிணமாக இருந்தார். உடலைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ஏழுமலை ஓய்வு பெறுவதற்கு முன்னதாக உயிரிழந்தால் தனக்கு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவரது மகன் முருகனே தனது நண்பனுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்திருப்பது ...

விடுதலைப் புலிகள் தோல்வியடைந்தது ஏன்? : கருணாநிதி விளக்கம்

Posted: 28 Apr 2012 10:34 AM PDT

சென்னை, ஏப்.27: இலங்கையில் இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வெற்றிபெறாமல் வீழ்ந்து போனதற்குக் காரணம் ஓரணியாய் நின்று போரிடாததுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஈழத் தமிழர்கள் மீது இன்றைக்குக் காட்டும் உணர்வுப்பூர்வமான அக்கறையை இலங்கையில் போர் நடைபெற்றபோதே காட்டியிருக்கக் கூடாதா என்ற ஆதங்கம் உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கு இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இறுதிப் போரின்போது ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் ...

வேலன்:-பெனோமியான் விளையாட்டு

Posted: 28 Apr 2012 10:06 AM PDT

சவாலாகவும் -சற்று பயம்கலந்தும் -மூளைக்கு அதிகஅளவு வேலையும் கொடுக்கும் விளையாட்டு இது. 300எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ தோன்றும்.  இங்குள்ள பார்க்கில் உள்ள மனிதருக்கு இரண்டுகண்களும் இருக்காது அவருக்கு நாம் பார்வை வரவழைக்கவேண்டும். இந்த புகைப்படத்தில் உள்ள பொருட்களை கண்டுபிடிக்கவேண்டும்.; அனைத்துப்பொருட்களையும் கண்டுபிடித்தால் உங்களுக்கு அடுத்த குளுவிற்கான பொருள் கிடைக்கும். ...

ரிக் வேதம் – அக்கினி துதி

Posted: 28 Apr 2012 09:47 AM PDT

ரிக் வேதம் பத்து மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பத்துமண்டலங்களில் ஒன்பதாவது மண்டலம் கள்ளுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ளது. ஏனைய ஒன்பது மண்டலங்களும் இந்திரன், அக்கினி, அசிவினிகள், மருத்துக்கள், மித்திரா வருணர்கள், பல தேவர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட அதிகாரங்களாக தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 1028 அதிகாரங்கள் உள்ளன. இந்த அதிகாரங்கள் 10552 பாடல்களை உள்ளடக்கியவை. இதில் அக்கினிக்கு 2000 பாடல்கள் உள்ளன. 1. நான் (துதிபாடும் ரிஷியாகிய) புரோகிதனும் உயிர்ப்பலி யக்ஞத்தின் தலைவனும் ரத்தினமளிப்பனுமான அக்னியைத்ட ...

அயீஷா ---நாவல் ..

Posted: 28 Apr 2012 09:44 AM PDT

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்

தமிழுக்குள் நான்

Posted: 28 Apr 2012 09:10 AM PDT

நண்பர்களே நான் உங்கள் ஈகரை தளத்தில் உலா வர இருக்கிறேன். எனக்கு இத்தளத்தை அறிமுகம் செய்தவர் ஆ. தியாகராஜன் . கும்பகோணம் . நானும் கும்பகோணத்தை சேர்த்தவன்.

குழந்தையில் தொப்புளில் சாம்பல் பூசாதீங்க!

Posted: 28 Apr 2012 08:44 AM PDT

குழந்தையில் தொப்புளில் சாம்பல் பூசாதீங்க! குழந்தை வளர்ந்து ஆளாகும் வரை அதை நோய்தாக்காமல் கண்ணும் கருத்துமாய் வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. ஆனால் அக்கம் பக்கத்தார் கூறும் தேவையற்ற மூடநம்பிக்கையான செயல்களினால் அந்த குழந்தை பெரும்பாடு பட்டுவிடும். எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர் குழந்தை நல மருத்துவர்கள். தொப்புள் கொடி கருவில் இருக்கும் குழந்தைக்கும் தொடர்பில் இருக்கும் தொப்புள் கொடியை கட் செய்துதான் குழந்தையை வெளியே எடுப்பார்கள். குழந்தையில் வயிற்றில் ...

இமைத்த இமையில்

Posted: 28 Apr 2012 08:31 AM PDT


இமைத்த
இமையில்
இட்ட மை,
இனிமை கூட்டியது
இம்மை வாழ்வில்,
இம் மை.

ரமணியன்.

முகப்பருவா டீ பேக் போதுமே!

Posted: 28 Apr 2012 08:15 AM PDT

முகப்பருவா டீ பேக் போதுமே! கோடை காலத்தில் எண்ணெயும், வியர்வையும் அதிகரித்து பருக்கள் ஏற்படுவது இயல்பு. அதை நகங்களினால் கிள்ளினால் அதிக ஆபத்து. அவை சீல்வைத்து புண்கள் வடுக்கலாக மாறி விடும். கோடைகால பருக்களைப் போக்க சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். டீ பேக் பேஸ்ட் சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்கவும், பருக்களை நீக்கவும் டீ டிகாசன் சிறந்த நிவாரணி. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை கை, முகம், கழுத்து ...

கோழிக்கறி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமி

Posted: 28 Apr 2012 08:14 AM PDT

கோழிக்கறி சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சிறுமிக்கு ரூ.40 கோடி நஷ்ட ஈடு தர கோர்ட் உத்தரவு. ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரை சேர்ந்தவர் மோனிகா சமான். கடந்த 2005-ம் ஆண்டு 7வயது சிறுமியாக இருந்தபோது இவள் தனது குடும்பத்தினருடன் அங்கு கே.எப்.சி. என்ற துரித கோழிக்கறி உணவு கடைக்கு சென்றாள். அங்கு ஏற்கனவே வறுத்து பேப்பரினால் சுற்றப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த கோழிக்கறியை சாப்பிட்டாள். அவருடன் குடும்பத்தினரும் சாப்பிட்டனர். அதை சாப்பிட்ட அவர்களுக்கு சல்மோனல்லா என்ற நச்சு தாக்கியது. ...

தினமணி இன்றைய புகைப்படங்கள் - மேக மிரட்டலில் காற்றாடி

Posted: 28 Apr 2012 08:11 AM PDT

சூரியனின் ஒளிவட்டம் ஒரு நாள் மழையில்! குளிக்கத்தான் ஆளில்லை! மேக மிரட்டலில் காற்றாடி? சென்னை இஸ்கான் கோயில்

"ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் மாணவர்கள்"

Posted: 28 Apr 2012 08:09 AM PDT

வத்திராயிருப்பில் பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வரும் நூதன போதை கலாசாரத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குக்கிராமங்களிலும் டாஸ்மாக் ஒயின்ஷாப்கள் திறக்கப்பட்டதால், பெரும்பாலான இளைஞர்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். பள்ளி மாணவர்களை கூட இப்பழக்கம் தொற்றி உள்ளது. இது மட்டுமன்றி "ஒயிட்னர்' மூலம் போதை ஏற்றும் ஒரு நூதன போதை கலாசாரமும் தற்போது பள்ளி மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. இதன் பழக்கத்தில் வத்திராயிருப்பு பகுதி பள்ளி மாணவர்கள் சிலர் ஈடுபட்டு வருவது, பெற்றோர்களிடையே அச்சத்தை ...

வியப்பு

Posted: 28 Apr 2012 08:02 AM PDT

கோடிக்கணக்கான
தொலைபேசி
எண்களும்
கைபேசி
எண்களும்
இருந்தும்
கடவுளுக்கு
ஒரு
எண்கூட
தெரியவில்லையே !

ஒன்பது குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணி

Posted: 28 Apr 2012 07:50 AM PDT

உண்மையில் இது ஒரு\ மருத்துவ அதிசயம் தான். மெக்சிக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் ஒன்பது குழந்தைகள் வளர்ந்து வருவதாக பிரித்தானியப் பத்திரிக்கை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த பெண் டெக்ஸாஸ் அருகில் உள்ள கோகுலியா வைத் சேர்ந்த கர்லா வனீஸ்ஸா பரீஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது மாநிலத் தலைநகர் சால்டில்லோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மே 20-ம் தேதி அளவில் குழந்தைகள் பிறக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன. 6 பெண்குழந்தைகளும், ...

புதிய நிபந்தனை:கலெக்டரை விடுவிப்பதில் சிக்கல்

Posted: 28 Apr 2012 07:33 AM PDT

மேலும் 9 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் புதிய நிபந்தனையால், கடத்தப்பட்ட கலெக்டரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. சத்தீஷ்கார் மாநிலம், சுக்மா மாவட்ட கலெக்டரான தமிழகத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பால்மேனன், கடந்த 21-ந் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். மாவோயிஸ்டு தூதர்கள் "கலெக்டரை விடுவிக்க வேண்டுமானால், தங்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும், பாதுகாப்பு படையினர், முகாம்களுக்கு திரும்ப வேண்டும், சிறையில் இருக்கும் பெண்கள் உள்பட 8 தலைவர்களை ...

கலைஞர் ங்கொய்யா ... தயவு செய்து பேச வேண்டாம்!

Posted: 28 Apr 2012 07:21 AM PDT

'தமிழ் ஈழம் அடையும் வரை ஓய மாட்டேன்' என்றும் 'தமிழ் ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்' என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி திடீர் என அறிவித்து இருப்பது தமிழ் உணர்வாளர்களையும் அதிர வைத்துள்ளது. 'ஆட்சியில் இருந்த காலத்தில் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது கருணாநிதி பேசுவது நாடகம்' என்று சொல்ல ஆரம்பித்து உள்ளார்கள். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் பேசினோம். இவ்வாறு ஜூனியர் விகடன் இதழ் தகவல் வெளியிட்டுள்ளது. ''ஆற்ற முடியாத காயங்​களோடும் வலியோடும் பெரும் சோகத்தோடும் ...

ஐம்புலன்களும், நினைவாற்றலும்

Posted: 28 Apr 2012 07:11 AM PDT

நாம் பலவேளைகளில் ஞாபக மறதியால் அவதியுறுகிறோம். ஒரு பொருளை அல்லது ஒரு விஷயத்தை மறந்துவிட்டு அதனால் பல அவஸ்தைகளைச் சந்திக்கிறோம். நமது நினைவாற்றலில் நம்முடைய ஐந்து புலன்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று சொன்னால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. நினைவாற்றல் என்பது நம்முடைய மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த மனதில் பதிவு செய்யப்படுகிற பொருட்கள் எல்லாம் நம் புலன்கள் என்ற வாசல்படி வழியாக உள்ளே செல்லும் உணர்வுகள்தான். மரத்தைக் ...

இணைந்தேன் நான் உங்களுடன் புதிய உறவாக

Posted: 28 Apr 2012 07:04 AM PDT

வணக்கம் ,
ஆ .தியாகராஜன் கும்பகோணத்தில் இருந்து ஈகரைக்கு உறவாட வந்துள்ளேன் நண்பர் கில்லிபண்டியன் மூலமாக அறிந்து கொண்டேன்.

வெல்லம், பருப்பு மோதகம்

Posted: 28 Apr 2012 06:34 AM PDT

வெல்லம், பருப்பு மோதகம் கொழுக்கட்டை எனப்படும் மோதகம் அரிசி, வெல்லம், கடலைப்பருப்பு சேர்த்து செய்யப்படுவதால் சத்து நிறைந்தது. விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமே இதை செய்ய வேண்டும் என்பதில்லை விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு செய்து உண்ணக் கொடுக்கலாம். தேவையான பொருட்கள் அரிசி மாவு - 4 கப் கடலைப் பருப்பு - 2 1/2 கப் வெல்லம் - அரைக் கிலோ தேங்காய்த்துருவல் - 2 1/2 கப் உப்பு - ஒரு தேக்கரண்டி பூரணம் செய்முறை கடலைப் பருப்பினை சுமார் ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பருப்பை குழைய ...

முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்

Posted: 28 Apr 2012 05:38 AM PDT

மும்முரமாகத் தேடுவதை, `ஒரு கல்லையும் திருப்பாமல் விடாதே' (Leave no stone unturned) என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இதன் பின்னணி என்னவென்று தெரியுமா? கிரேக்கப் புராணக் கதையின் அடிப்படையில் கூறப்படும் வார்த்தைகள் இவை. `ஆரக்கிள் ஆப் டெல்பி'யால் (Oracle of Delphi) கடவுளுடன் பேச முடியும். அதனால் அவன் பேரறிவைப் பெற்றிருந்தான். தோற்கடிக்கப்பட்ட ஒரு ராணுவத் தளபதியால் ஒளித்து வைக்கப்பட்ட புதையலை எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஆரக்கிளிடம் கேட்கப்பட்டபோது, `ஒரே ஒரு வழிதான் உள்ளது. எந்தக் கல்லையும் ...

இது நியாயமா சச்சின்?

Posted: 28 Apr 2012 05:03 AM PDT

பி.சி.சி.ஐ.யின் தலைவர் ஸ்ரீனிவாசன்; தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த். இதனால் சென்னைக்கு அதிக லாபங்கள் என்றுதான் எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன? கடைசியாக, 2008 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மேட்ச் சென்னையில் நடந்தது. அதோடு அவ்வளவுதான். இன்றுவரை சென்னையில் ஒரு டெஸ்ட் மேட்ச்கூட நடக்கவில்லை. பாரம்பரிய கிரிக்கெட் நகரமான சென்னைக்கு இப்படியொரு புறக்கணிப்பு! அடுத்த வருடம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. நான்கு டெஸ்ட் மேட்சுகள் ஆடவிருக்கிறது. ...

இணையதளம் மூலம் ரூ. 20 லட்சம் மோசடி: நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேர் கைது

Posted: 28 Apr 2012 05:02 AM PDT

திருப்பூர், ஏப். 28: திருப்பூரில் இணையதளம் மூலம் பின்னலாடை நிறுவன கணக்கில் இருந்து ரூ. 20 லட்சம் மோசடி செய்ததாக நைஜீரியா, மும்பையை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை தொண்டு நிறுவனத்திடம் இருந்து ரூ. 10 லட்சம் மீட்கப்பட்டது. திருப்பூரில் சிபி எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் பின்னலாடை வர்த்தம் செய்து வருகிறது. வெளிநாடுகளில் வர்த்தகம் செய்து வரும் இந்த நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இணையதள பண பரிவர்த்தனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் இணைய தள முகவரிக்கு ...

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Posted: 28 Apr 2012 05:00 AM PDT

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை 'ஏன் எழுதுகிறீர்கள்?' என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,'ஆத்ம திருப்திக்கு' இப்படிச் சொல்கிற பலர் 'இவன் ஆத்மா சாந்தியடையட்டும்' என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது. உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் ...

ஷிவ் கேரா வின் “யு கேன் வின்”

Posted: 28 Apr 2012 04:43 AM PDT

சில பேர் எல்லாவற்றையுமே கொனஷ்டையாகத்தான் பார்ப்பார்கள்.வாட்டர் போலோ என்று ஒரு விளையாட்டு இருக்கிறது. அதில் பந்தைப் பொறுக்குவதே பெரிய வேலை.(எல்லாம் கேள்விப் பட்டதுதான். எனக்கு நீச்சலே தெரியாது. வாட்டர் போலோ எங்கே தெரியப் போகிறது!) இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று ஒருத்தன் நினைத்தான். ஒரு நாயை வாங்கினான். அதற்க்கு நீர் மேல் நடக்கிற பயிற்சியை ரொம்ப சிரமப் பட்டு கொடுத்தான். ஆச்சரியமான விஷயங்களை நேராகச் சொல்கிற வழக்கம் யாருக்கும் கிடையாது. அதைப் பார்க்கிறவர்கள் வாயிலிருந்தே வரவழைக்க வேண்டும் ...

அஜீத் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டி

Posted: 28 Apr 2012 04:41 AM PDT

எனது நடிப்பு முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கின்றார்கள். நான் 15 ஒபரேஷன்களுக்குப் பிறகு நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார். சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். செல்ப் புரமோஷன் பற்றி நான் மங்காத்தாவில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் வெறிவருகின்றது. இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை. மனதை ...

Bersih 3.0 - ஒரு லட்சம் பேர் தலைநகர் கோலாலம்பூரில் குவிந்துள்ளனர். கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டுள்ளது.

Posted: 28 Apr 2012 04:31 AM PDT

இன்று தலைநகர் கோலாலம்பூரில் ஒரு லட்சம் பேர் திரண்டுள்ள பெர்சே 3.0 பேரணியில் சற்றுமுன் போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைக்க முயற்சி செய்துகொண்டுள்ளனர்.

போலீசார் கூட்டத்தினர் மீது இராசயனத் தண்ணீரையும் பீய்ச்சி அடித்துக் கொண்டுள்ளார்கள்.

கோலாலம்பூர் பெர்சே 3.0 புகைப்படங்கள்:

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 59 பேர் பலி

Posted: 28 Apr 2012 04:19 AM PDT

புது தில்லி, ஏப். 28 : நாடாளுமன்றத்தில் இன்று பன்றிக் காய்ச்சல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், இந்தியாவில் ஏப்ரல் 23ம் தேதி வரை பன்றிக்காய்ச்சலுக்கு 13 மாநிலங்களில் 1000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்களில் 59 பேர் பலியாகியுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 487 பேர் பன்றிக்காய்ச்சல் பாதித்து அதில் 20 பேர் பலியாகியுள்ளனர். ...

திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறைய பேர் உள்ளனர்

Posted: 28 Apr 2012 04:16 AM PDT

திருப்பரங்குன்றம், ஏப். 27: திமுகவில் களை எடுக்கப்பட வேண்டியவர்கள் நிறையபேர் உள்ளனர் என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்தார். மத்திய ரசாயனம் மற்றும் உரத் துறை அமைச்சர் மு.க.அழகிரி சென்னையில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் புதுக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் யார்? எனக் கேட்டதற்கு நான் இல்லை என்று பதில் அளித்தார். உங்கள் ஆதரவாளர் இசக்கிமுத்து நீக்கப்பட்டுள்ளாரே என்று கேட்டதற்கு, கட்சியில் ...

பங்காரு லட்சுமணனுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Posted: 28 Apr 2012 04:12 AM PDT

புது தில்லி, ஏப். 28 : முன்னாள் பாஜக தலைவர் பங்காரு லட்சுமணன்கு டெல்லி உயர்நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் வீடியோ ஆதாரங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பங்காரு லட்சுமணன் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் ...

பெர்சே 3.0 செய்தித் துளிகள்

Posted: 28 Apr 2012 04:09 AM PDT

Sogo shopping centre அருகே போலிஸ் வாகனம் இருவரை மோதித் தள்ளியதில் அவர்கள் இருவரும் கடுமையாகக் காயமுற்றனர்.

இதனால் ஆத்திரமுற்ற பேரணியாளர்கள் அந்த போலிஸ் வாகனத்தைத் தலைகீழாகக் கவிழ்த்துவிட்டனர்.

உத்தியோகபூர்வ அறிமுகம்! _

Posted: 28 Apr 2012 03:14 AM PDT

கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப உலகினர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த 'கூகுள் ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியை கூகுள் தற்போது உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Google Drive என்பது நம்முடைய வீடியோ, ஓடியோ, பி.டி.எப், கோப்புகள், படங்கள ஆகியவற்றை சேமித்து வைக்கக்கூடியதும் எந்த இடத்தில் இருந்தும் எந்த நேரத்திலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வசதியை அளிப்பதும் தான் 'Google Drive'. இவற்றை நாம் பார்ப்பது மட்டுமன்றி நண்பர்களுக்கும் பகிரமுடியும். ஒரே நேரத்தில் ...

பிலிப்ஸின் இரு தசாப்தங்களுக்கு ஒளிரக்கூடிய மின்குமிழ்

Posted: 28 Apr 2012 03:10 AM PDT

மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்ககூடியதும், சுமார் 20 வருடங்கள் வரை ஒளிதரக்கூடிய எல்.இ.டி மின்குமிழ் தற்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது சுமார் 100,000 மணித்தியாலங்கள் இவற்றால் ஒளிரமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இம் மின்குமிழானது நெதர்லாந்து நாட்டு நிறுவனமான 'பிலிப்ஸ்' இனால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அண்மையில் அமெரிக்க அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்தும் மின்குமிழுக்கான 10மில்லியன் டொலர் பரிசினையும் ...