தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


கவலைப்படாதே!

Posted: 26 Apr 2012 07:14 PM PDT

அந்த அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை விஜயாம்பிகை தன் மாணவ மாணவிகளுக்கு ரிவிஷன் டெஸ்ட் முடிந்து திருத்திய விடைத்தாள்களை வழங்கிக் கொண்டிருந்தார். ஒரு சிலர் தவிர அனைத்து மாணவ மாணவிகளும் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தனர். ஆசிரியைக்கு கோபமும், வேதனையும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு அக்கறை எடுத்து பாடம் நடத்தியும் இப்படி குறைந்த மார்க் வாங்கியிருக்கிறார்களே என எண்ணிக் கொண்டார். இருந்தாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. "நான் உங்களிடம் ஒரு தோழி போல் பழகி பாடம் எடுக்கிறேன். உயிரியல் ...

தொடர் விருதுகளை பெற்று வரும் நாலுகோட்டை ஊராட்சிக்கு பிரதமர் விருது

Posted: 26 Apr 2012 07:12 PM PDT

தொடர் விருதுகளை பெற்று வரும் நாலு கோட்டை ஊராட்சிக்கு பிரத மரின் சிறந்த ஊராட்சிக்கான விருது வழங் கப்பட்டுள்ளது. நாலுகோட்டை ஊராட்சி சிவகங்கை ஒன்றியத்தை சேர்ந்த நாலு கோட்டை ஊராட்சி அரசின் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றியதற்காக பாரத பிரதமரின் விருதை பெற்றுள் ளது. இதையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி மணிகண்டனுக்கு கடந்த 24-ந்தேதி டெல்லியில் நடை பெற்ற விழாவில் பிரதமர் மன் மோகன்சிங் சிறந்த ஊராட்சிக் கான விருதை வழங்கியுள்ளார். நாலு கோட்டை ஊராட்சி கடந்த 1998ம் ஆண்டில் இருந்து இதுவரை ...

அல்வா

Posted: 26 Apr 2012 07:09 PM PDT

அண்ணா பூங்காவில் நீண்ட நேரம் காத்திருந்தாள் கவிதா. பூங்காவை பத்து முறையாவது சுற்றி வந்திருப்பாள். இருட்டும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. வீட்டிற்குக் கிளம்ப தன் `சன்னி'யைக் கிளப்பின நேரம் எதிரே வந்து நின்றான் முகுந்தன்- கவிதாவின் முன்னாள் காதலன். ``என்ன... என்னைப் பார்க்காமலேயே கிளம்பிடலாங்கிற நினைப்பா?'' கேட்டான் முகுந்தன். ``இல்லே... நாளைக்குப் பார்க்கலாம்னு...'' இழுத்தாள் கவிதா. தன் பாக்கெட்டில் கைவிட்டவனைப் பார்த்துக் கேட்டாள். `நான் எழுதிய லெட்டர்களை எடுத்து வந்துட்டியா?'' ``இல்லே'' ``ஏன்?'' ``ரொம்ப ...

ஆரோக்கிய வாழ்வையே காப்பது உடற்பயிற்சி

Posted: 26 Apr 2012 07:08 PM PDT

இன்றைய இளைஞர்கள் சத்தான உணவுகளையே சாப்பிடுகிறார்கள். அதற்கான பொருளாதாரம் அவர்களிடம் இருப்பதால் பணம் ஒரு பிரச்சினை இல்லை. சாப்பிடுவதோடு ஆரோக்கியம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், பொழுதுக்கும் கம்ப்ïட்டர் முன்பாக உட்கார்ந்து விடுகிறார்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகாவது உடற்பயிற்சி பற்றி எண்ணிப் பார்க்கிறார்களா என்றால் இல்லை. `நெட்'டில் அமர்ந்து உலக விஷயங்களை ஊடுருவத் தொடங்கி விடுகிறார்கள். பல நேரங்களில் நள்ளிரவு தாண்டியும் இந்த தேடல் தொடர்கிறது. இதனால் விடிகாலையில் தூங்கப்போய் ...

நெகிழ வைத்த நிஜங்கள்

Posted: 26 Apr 2012 07:06 PM PDT

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி' நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு. சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. ...

சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18, புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

Posted: 26 Apr 2012 07:02 PM PDT

சட்டபூர்வ செக்ஸ் உறவுக்கு வயது வரம்பை 18 ஆக உயர்த்தும் புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. வயது வரம்பு 18 செக்ஸ் குற்றங்களில் இருந்து சிறு வயதினருக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின்படி 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் அவர்களுடைய சம்மதத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தால் குற்றமாக கருதப்படுவது இல்லை. புதிய சட்ட திருத்தத்தின்படி, இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்படுகிறது. ...

கோவையில் ஒரு இனிய சந்திப்பு !

Posted: 26 Apr 2012 06:43 PM PDT

அன்புள்ள உறவுகள் அனைவருக்கும் என் வணக்கங்கள் கடந்த ஏப்ரல் 23 ம் திகதி நான் கோவை நகருக்கு ஒரு சொந்த நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். போன மாதமே இதுகுறித்து நான் தம்பி பகவதியிடம் ஆலோசித்தேன். நான் இரண்டு நாட்கள் கோவையில் தங்குவதால், அச்சமயத்தில் நமது ரபீக் தம்பியை போய் பார்த்துவருவது என்று முடிவுசெய்தோம். பகவதியும், ரபீக் அவர்கள் மைசூரில் இருந்து மீண்டும் கோவையில் இரண்டாம் முறை ஹெமோதெரபிக்காக வந்திருப்பார், ஆகவே அப்போது பார்க்க இயலும் என்று கூறினார். ஆயினும் நடந்ததோ வேறு....இப்போது அன்னார் ...

தமிழகத்திற்கு நற்செய்தி..! முல்லைப் பெரியாறு அணை அபார பலத்துடன் உள்ளது -ஐவர் குழு அறிக்கை

Posted: 26 Apr 2012 06:20 PM PDT

டெல்லி: தமிழகத்திற்கு மிகப் பெரிய நற்செய்தியை உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது அறிக்கை மூலம் கொடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலத்துடன் உள்ளது. அதில் நீர் இருப்பு அளவை தாராளமாக அதிகரிக்கலாம் என்பதே அந்த நற்செய்தியாகும். முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் ஐவர் குழு கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி ...

தெண்டுல்கருக்கு மேல்-சபை எம்.பி. பதவி, மத்திய அரசு நியமித்தது

Posted: 26 Apr 2012 06:10 PM PDT

கிரிக்கெட் விளையாட்டில் உலக சாதனை படைத்த தெண்டுல்கரை, டெல்லி மேல்-சபை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது. அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி, 250 உறுப்பினர்களை கொண்ட டெல்லி மேல்-சபைக்கு 12 உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிக்க முடியும். தெண்டுல்கருக்கு எம்.பி. பதவி கலை, இலக்கியம், விஞ்ஞானம், விளையாட்டு, சமூக சேவை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் மேல்-சபைக்கு நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள். கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் சச்சின் தெண்டுல்கருக்கு ...

வேலன்:-கம்யூட்டரில் துவங்குகையில் உள்ள தை அறிந்துகொள்ள உதவும் சாப்ட்வேர்.

Posted: 26 Apr 2012 05:39 PM PDT

அதிகபடியான சுமை கொடுத்து ஒருவரை மலைஏறச்சொன்னால் மிகவும் சிரமப்பட்டு மலையேறுவார். ஆனால் அவருக்கே கொஞ்சமாக சுமைகொடுத்து ஏற சொன்னால் விறுவிறு என்று ஏறிவிடுவார்.அதுபோல நமது கம்யூட்டர் ஆன்ஆகும் சமயம் அதிகப்படியான ப்ரேகிராம்களை ஸ்டார்ட்அப்பில் வைத்தால் நமது கம்யூட்டர் ஆன்ஆகவே சற்று நேரம் எடுக்கும். அதனை தவிர்த்து அவசியமானவையை மட்டும் நாம் ஸ்டார்அப்பில் கொண்டுவரலாம்.நீங்கள் கம்யூட்டரில் நன்கு பழகியவராக இருந்தால் -Start -Run -msconfig--தட்டச்சு செய்து கீழ்கண்ட விண்டோவில் ஸ்டாப்அப் ப்ரோகிராம்களை கண்ட்ரோல் ...

தொடரும் அராஜகம் : மகாராஷ்டிராவில் மேலும் 2 பேரை கொன்று 10 பேரை கடத்திய நக்சல்ஸ்

Posted: 26 Apr 2012 02:44 PM PDT

கட்சிராலி: மகாராஷ்டிராவில் உள்ள மாவோயிஸ்டுகள் அம்மாநில கிராமத்தில் உள்ள 2 பேரை கொலை செய்துள்ளனர். மேலும், 10 பேரை கடத்தியுள்ள சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட, ஒடிசா எம்.எல்.ஏவை இன்று விடுவித்தனர். மேலும், சட்டீஸ்கர் பகுதியில் கலெக்டர் பால் மேனனை மாவோயிஸ்டுகள் கடத்தி வைத்துள்ளனர். அவரை விடுவிக்க கோரி அவரது உறவிர்கள் உட்பட, பல்வேறு மாநில மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நக்சல்கள் மேலும் தங்கள் கடத்தல் ...

சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி

Posted: 26 Apr 2012 02:13 PM PDT

சச்சினின் அரசியல் "இன்னிங்ஸ்' ஆரம்பமாகிறது. கிரிக்கெட் அரங்கில் இவர் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைக்கு அங்கீகாரமாக ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படுகிறது. இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற சாதனை படைத்துள்ள இவர், சமீபத்தில் 100வது சதம் அடித்து வரலாறு படைத்தார். இவரை கடந்த மாதம் காங்., கட்சியை சேர்ந்த சில மூத்த தலைவர்கள் சந்தித்தனர். அப்போது, ராஜ்யசபா எம்.பி., பதவி தருவதாக உறுதி அளித்துள்ளனர். சோனியாவுடன் சந்திப்பு: இந்நிலையில், நேற்று காங்., தலைவர் ...

வணக்கம் உங்களுடன் நானும்

Posted: 26 Apr 2012 02:01 PM PDT

வணக்கம்,

இகரை நண்பர்க்குளுக்கு இந்த புதியவனின் அன்பான வணக்கங்கள்,

அன்புடன்
ஆர். கமலக்கண்ணன்

முதல் பதிவு

Posted: 26 Apr 2012 02:00 PM PDT

:வணக்கம்:

திரு சார்லஸ் அவர்கள் 500 மதிப்பீடுகளை கடந்து விட்டார் வாழ்த்துக்கள்

Posted: 26 Apr 2012 01:59 PM PDT

ஈகரையின் கல்வியாளர் திரு சார்லஸ் அவர்கள் 500 மதிப்பீடுகளை கடந்து விட்டார் வாழ்த்துக்கள்.

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!

Posted: 26 Apr 2012 11:29 AM PDT

தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !! PETER விடும் சில தமிழ் மக்களே ..படியுங்கள் .. ********************************* உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ********************************* இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" ...

குண்டப்பா & மண்டப்பா! (1)

Posted: 26 Apr 2012 11:24 AM PDT

குண்டப்பா & மண்டப்பா! ======================= குண்டப்பா தனது கிராமத்திலிருந்து, டவுனுக்கு ஓர் அரசாங்க அலுவலகத்திற்கு ஒரு காரியமாக வந்தார். வேலை முடிய மதியம் ஒரு மணியாகிவிட்டது. மதியம் 1.15 பஸ்ஸில் புறப்பட்டால் அவரது கிராமத்திற்குப் போய் சேர ஒரு மணி நேரமாகும். பசி அவரது வயிற்றைக் கிள்ளி, வயிறே புண்ணாகி விட்டது. ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம் என்று நினைக்கும்போது, 'சாப்பாடு என்றால் 50 ரூபாய் செலவாகி விடுமே, என்ன செய்யலாம்' என்று யோசித்தார். அப்போதுதான் அதே டவுனில் நான்கு தெருக்கள் தள்ளிதான் ...

Phaக்கத்தை Thiருப்பும் Oய் !

Posted: 26 Apr 2012 11:21 AM PDT

ஒருவர்: என்னய்யா இந்த நோட்டீசுல கடைசி வரில P.T.O.-ன்னு போட்டிருக்கே, என்னய்யா அர்த்தம்? மற்றவர்: Phaக்கத்தை Thiருப்பும் Oய் ! ================================================ ஒருவர்: எனக்கு கல்யாணப் பத்திரிகை தரீங்க, நீங்க யாருனே எனக்குத் தெரியாதே? மற்றவர்: நீங்க எல்லா கல்யாணத்திலயும் நல்லா மொய் வெப்பீங்கன்னு கேள்விப்பட்டேன், அதான்! ================================================ நண்பர் 1 : என் மனைவி பேசியே, என்னை 'வியக்க' வச்சிடுவாள்! நண்பர் 2 : என் மனைவி பேசியே, என்னை ...

நகைச்சுவை குரு பெயர்ச்சி பலன்கள்:

Posted: 26 Apr 2012 11:15 AM PDT

குரு பெயர்ச்சி பலன் -நந்தன ஆண்டு , சத்தியமா நான் எழுதலை. ஒருவேளை நீங்கள் இதை ஏர்க்னவே படித்திருப்பீர்கள். இருந்தாலும் இன்னொருதரம் ENJOYYYYYYYYYYYYYYY மேஷ ராசி மக்களே! ஏலேய் மக்கா, ரெண்டாவது மாடியிலிருந்து, மூணாவது மாடிக்கு குரு பெயர்ச்சி ஆகறதால, நீங்க 2ல இருந்தா 1க்கும், 1ல இருந்தா 0க்கும், 0ல இருந்தா, அதான் கீழ் போர்ஷன்ல இருந்தா பூமிக்கடியில போய் ஒளிஞ்சிக்கோங்க! மேலும் நீங்க இங்கிலீசுல 'a,e,i,o,u', அப்புறம் தமிழில 'கசடதபற'ல ஆரம்பிக்கிற வார்த்தைகளை 126 நாள் பேசக்கூடாது. ஜோடி ...

வெள்ளையங்கிரி மலைக்கு பெண்கள் போகலாமா?

Posted: 26 Apr 2012 10:31 AM PDT

அனைவருக்கும் வணக்கம் எனது அலுவலகத்தில் சில ஆன்மீக நண்பர்கள் வெள்ளையங்கிரி மலைக்கு சென்று (ஏழு மலை கடந்து சென்று) ஈஸ்வரனை தரிசனம் செய்து வந்தார்கள். அதிலிருந்து எனக்கும் அங்கே சென்று ஈசனை காண வேண்டும் என்ற ஆவல் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டேயிருக்கிறது. பெண்கள் மலை ஏற முடியாது, மிகவும் கடினம் என்று பலர் சொன்னார்கள். எனினும் எனது உள் மனது ஈசனை காண எவ்வளவு ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற அளவிற்கு வந்து விட்டது. இப்படியிருக்கும்போது இன்னும் சிலர் வெள்ளையங்கிரி மலையில் அடிவாரத்தில் உள்ள ...

நடிகையர் திலகம் சாவித்திரி பொக்கிஷ பேட்டி - 1975

Posted: 26 Apr 2012 10:23 AM PDT

நடிகையர் திலகம் சாவித்திரி பொக்கிஷ பேட்டி - 1975 ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதியில் இருந்து நடிகையர் திலகம் சாவித்திரி நடிக்க வந்து 25 வருடங்களாகிவிட்டன. இந்த 1975... அவருக்கு வெள்ளி விழா ஆண்டு. அவரைப் பாராட்டி விரைவில் ஒரு விழா நடத்த இருக்கிறார்கள். அந்தக் காலம் எப்படி, இந்தக் காலம் எப்படி? சாவித்திரி சொல்கிறார். நான் நடிக்க வந்தபோது... ''நான் 1950-ல நடிக்க ஆரம்பிச்சேன். நான் நடிக்க வந்தபோது, இத்தனை 'புரொடக்ஷன்'கள் இல்லை. வந்த புதுசுலயே நான் எட்டுப் படங்கள்ல நடிச்சேன். ...

பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு பற்றி விசாரணை?

Posted: 26 Apr 2012 10:18 AM PDT

புதுடெல்லி : விவிஐபி.க்களின் போக்குவரத்துக்காக இத்தாலி நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக புகார் வந்தால் விசாரணை நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இத்தாலியில் உள்ள அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து, விவிஐபி.க்களின் போக்குவரத்துக்காக மத்திய அரசு ரூ. 3,546.17 கோடியில் 12 ஹெலிகாப்டர்களை வாங்க கடந்த 2010, பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்தது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் ...

அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி

Posted: 26 Apr 2012 10:14 AM PDT

அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் ! கவிஞர் இரா .இரவி அன்பளிப்பாக மரக்கன்று ஒன்று தந்தார்கள் அன்போடு வாங்கி வீடு சென்றேன் அழகான மரம் வளர்க்க ஆசை எங்கு நடலாம் என்று யோசித்தேன் வீட்டின் இடது வலது இருபுறமும் வீடு வீட்டின் முன் பின் இருபுறமும் வீடு வீட்டின் மேல் கீழ் இருபுறமும் வீடு பல லட்சம் தந்து வாங்கிய வீடு ஒரு மரக்கன்று நட உரிமை இல்லை அடுக்கக வீடும் உரிமை இல்லாச் சிறைதான் இயற்கை நேசத்திற்கு வழியில்லா அறைதான் வரும் வழியில் குடிசையைக் கண்டேன் வாங்கிய மரக்கன்றைத் ...

குரல் மூலம் கடவுச்சொல்​லை ஏற்படுத்தக்​கூடிய USB driveகள் அறிமுகம்

Posted: 26 Apr 2012 10:10 AM PDT

கணணித் துறையில் தகவல்களை இடமாற்றாம் செய்வதற்கும், சேமிப்பதற்கும் USB driveகள் மிகுந்த பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. எனினும் தனிப்பட்ட கோப்புக்களை சேமித்து வைத்திருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை காரணமாக கடவுச்சொற்களை கொடுப்பது வழமை. இக்கடவுச்சொற்கள் இதுவரை காலமும் எழுத்துக்கள், விசேட குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றின் அடிப்படையில் அமைந்தவையாகக் காணப்பட்டன. எனினும் தற்போது குரல் பதிவு மூலம் கடவுச்சொற்களை உருவாக்கி பாதுகாக்கும் தொழில்நுட்பத்துடன்கூடிய USB driveகள் அறிமுகமாகின்றன. தற்போது ...

2012ல் லினக்ஸ் பயன்பாடு

Posted: 26 Apr 2012 10:07 AM PDT

சென்ற ஆண்டு பெர்சனல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் கொண்டு வந்த மாற்றங்கள், அறிவித்த புதிய திட்டங்கள் மக்களிடையே நிறைய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தின. குறிப்பாகச் சொல்வ தென்றால், மொபைல் சாதனங்களுக்கென வடிவமைக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் சிறப்புகளை, பெர்சனல் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் கொண்டு வர பல நிறுவனங்கள் முயற்சி செய்து வெற்றியும் பெற்றன. இதனைக் கண்ட மக்கள், கிடைக்கும் சிஸ்டத்திற்கு ...

பெண்களே எச்சரிக்கையா இருங்கள்

Posted: 26 Apr 2012 09:43 AM PDT

இந்த இதை நான் போன வாரமே எழுத வேண்டும் என்று நினைத்தேன்.என் தோழி எனக்கு மெயில் அனுப்பிய அவரது அனுபவத்தை நான் இங்கு பகிர விரும்புகிறேன் என் தோழியின் அலுவலகத்துக்கு புதியதாக ஒருவர் வந்து வேலைக்கு வந்து சேர்ந்து இருக்கிறார். அவர் இந்த ஊரில் இருந்து வருகிறார் ,திருமணம் ஆகாதவர் என்று மட்டும் அவர்களுக்கு தெரியும் . அவருடைய பேச்சில் எப்போதும் பெண்ணியம், பெண் சுதந்திரம் என்பதும் கலந்தே இருக்கும். மூச்சுக்கு முன்னூறு தடவை பெண்கள் நாட்டின் கண்கள், அவர்களை மதித்து நடத்த தெரியாதவன் ஆம்பளையே இல்லை என்று ...

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -20

Posted: 26 Apr 2012 09:40 AM PDT

வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் , அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ? கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான் உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள் 1.இப்போ உலகமே பயப்படுற ...

இறந்த பின் மனைவியை புதைப்பதற்காக குட்டி தீவை விலைக்கு வாங்கிய பள்ளி ஆசிரியர்

Posted: 26 Apr 2012 08:51 AM PDT

இறந்த பிறகு தனது உடலையும், மனைவியின் உடலையும் புதைப்பதற்காக இங்கிலாந்தில் குட்டி தீவை விலைக்கு வாங்கி உள்ளார் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி. இங்கிலாந்தின் ஹெர்ட்போர்ட் ஷயர் கவுன்டியில் உள்ளது செயின்ட் ஆல்பன்ஸ் நகரம். இங்கு மெக்கன்சி என்ற பெயரில் குட்டி தீவு உள்ளது. இங்கு தண்ணீர், சாலைகள், மின்சார வசதி எதுவும் இல்லை. இந்த குட்டி தீவு 18 மாதத்துக்கு முன்பு விலைக்கு வந்தது. ஆனால் யாரும் வாங்கவில்லை. இந்நிலையில், செயின்ட் ஆல்பன்ஸ் நகரில் உள்ள பீச்வுட் பார்க் பள்ளி ஆசிரியர் கசிமிர் ரோசின்ஸ்கி, ...

தமிழகத்திற்கு நற்செய்தி..!

Posted: 26 Apr 2012 08:43 AM PDT

டெல்லி: தமிழகத்திற்கு மிகப் பெரிய நற்செய்தியை உச்சநீதிமன்ற ஐவர் குழு தனது அறிக்கை மூலம் கொடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலத்துடன் உள்ளது. அதில் நீர் இருப்பு அளவை தாராளமாக அதிகரிக்கலாம் என்பதே அந்த நற்செய்தியாகும். முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் ஐவர் குழு கூறியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகி ...

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்!... அஜீத்

Posted: 26 Apr 2012 08:08 AM PDT

நான் குண்டாக இருப்பதைக் கேலி பேசுகிறார்கள்! அஜீத் அப்செட் சார்லஸ் அஜீத் எப்போதும் ஆச்சர்யம்! '' 'பில்லா-2' முடிஞ்சிடுச்சு சார். இப்போதான் ரிலாக்ஸ் ஆனேன். கொஞ்சம் பேசலாமா?'' என்று அஜீத் கேட்டது நள்ளிரவு 2 மணிக்கு. நிறையவே பேசினோம்... ''இலங்கை அகதியாக நடிக்கிறீர்கள் என்பது உட்பட 'பில்லா-2' பற்றி நிறையச் செய்திகள். எது உண்மை?'' ''நான் 'மங்காத்தா'வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2'-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு ...

எனக்கொண்ணு தோணுது -----ராஜ்அருண்

Posted: 26 Apr 2012 07:45 AM PDT

பயபுள்ள புதுசா எதயோ சொல்லபோறான் டா...................னு வந்தீங்களா ? சாரிங்க ,இது சும்மா ,,சிவாவோட என் எண்ணங்கள் ,பாலாவோட என் எண்ணத்திரை,ராரா எழுதுன பிளாட்டினகனவுகள் ,இந்த மாதிரி பதிவுகளோட இன்ஸ்பிரேஷன் ல நாமளும் தோனுறத சொல்லுவோமே னு ஆரம்பிச்சேன் , பொதுவா மனசுல உள்ளத சொல்லும்போது ,நிறைய பேர் கருத்துக்களோட ஒத்துபோகாது ,அதுமாதிரி நான் சொல்றதுல ஏதாவது ஏத்துக்க முடியலனா கண்டிப்பா கேளுங்க எனக்கு தெரிஞ்சத சொல்றேன் ,தப்புனா திருத்திக்கிறேன் நண்பர்கள பற்றி ஏதாவது சொன்னா சும்மா கிண்டலா தான் இருக்கும் ...

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!.

Posted: 26 Apr 2012 06:29 AM PDT

சில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்! விழிப்புணர்வு பதிவு!!. ரோட்டோர கடைகளில் (அங்கு மட்டுமா?) சில்லி சிக்கன், சிக்கன் 65 போன்ற சிக்கன் வகையறாக்களை சாப்பிடுபவரா நீங்கள். அந்த மாதிரியான கடைகளில் என்னென்ன வகைகளில் கலப்படம் செய்கிறார்கள் என தெரியுமா? பழைய எண்ணையை உபயோகிப்பார்கள், அல்லது மசாலாக்களில் கலப்படம் இருக்கலாம் என நினைக்கலாம், நீங்கள் நினைப்பது சரி தான் ஆனால் சிக்கனிலேயே கலப்படம் செய்கிறார்கள். என்ன, செத்த கோழியை யூஸ் பண்ணியிருப்பாங்க என சொல்றிங்களா? அப்படி இருந்தா தான் பரவாயில்லையே. ...

தூக்கு தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்தது

Posted: 26 Apr 2012 06:27 AM PDT

மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் கசாப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. 2008ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இரவு பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் கசாப் உட்பட 10 தீவிரவாதிகள் கராச்சியில் இருந்து படகு மூலமாக மும்பை வந்து சி.எஸ்.டி. ரயில் நிலையம், காமா மருத்துவமனை, தாஜ், டிரைடென்ட் ஓட்டல்கள் உட்பட முக்கிய இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். 3 நாட்கள் தெடர்ந்து நடந்த இந்த பயங்கர ...

மனைவிக்கு வாங்கிய ஆடம்பர காருக்கு ரூ.9 லட்சத்துக்கு பேன்சி நம்பரை ஏலம் எடுத்த முன்னாள் டிஜிபி

Posted: 26 Apr 2012 06:21 AM PDT

சண்டிகர் : ருச்சிகா மானபங்க வழக்கில் சிக்கிய அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர், தனது மனைவிக்கு பரிசாக வழங்கிய புதிய மெர்சிடஸ் பென்ஸ் காருக்கு, 9 லட்சத்து ஐந்தாயிரத்து ஒரு ரூபாய் கொடுத்து பேன்சி நம்பரை வாங்கியுள்ளார். அரியானா முன்னாள் டிஜிபி ரத்தோர். இவருடைய மனைவி பிரபல வக்கீலாக இருக்கிறார். ரத்தோர் போலீஸ் அதிகாரியாக இருந்தபோது ருச்சிகா கிரிஹோத்ரி என்ற 14 வயது பள்ளி மாணவியை கடந்த 1990ல் மானபங்கம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. தனது அதிகாரத்தை பயன்படுத்தி ருச்சிகாவுக்கு ரத்தோர் கொடுத்த பாலியல் ...

நேசித்தேன் நேசிப்பேன்!

Posted: 26 Apr 2012 06:07 AM PDT

இதயத்தில் நீ
இருப்பதால்
உன்னை காதலிக்கவில்லை
என் இதயமாய் நீ இருப்பதால்தான்
காதலிக்கிறேன் உன்னை
--------------------------------------------------------------------------------------------------------------------------------
என்னை பார்த்து
நீ சிரித்தாய்
உன்னை நேசித்தேன்
என்னை பார்த்து
முறைத்தாய்
அப்போதும் நேசித்தேன்
நேசிப்பேன்

பிரிவு வேண்டாம்

Posted: 26 Apr 2012 06:06 AM PDT

உன்னை எத்தனையோ
தடவை பிரிந்து இருக்கிறேன்
ஆனா இப்போது பிரிவது
வழமையை விட
பிரிவு என்னை வாட்டுகிறது
நாம் அப்போது நண்பர்கள்
இப்போது நாம் காதலர்கள்
நீ அங்கே இருப்பதும் நான்
எமக்குள் பிரிவு காணும்
இந்த இடைவெளி இனியும் வேண்டாம்
நிரந்தரம் இல்லை எண்டாலும்
நித்தம் வாட்டுகிறது என்னை
உனக்கு ஆறுதல் சொல்லி வந்தேன்
எனக்கு ஆறுதல் சொல்வது யார்

கடவுள் இருக்கார?????????

Posted: 26 Apr 2012 06:02 AM PDT

கடவுள் இருக்கார
என்றால் தெரியாது-
இப்போதாக்கு
எனக்கிருப்பது
ஒரே ஒரு காதலி
------------------------------------------------------------------------------------------------------------------------------
உயிர் பிரியும் வரை
உன் நினைவு
உயிர் பிரிந்தாலும்
உன் நினைவு வேண்டும்

கடவுளே !!!

Posted: 26 Apr 2012 05:56 AM PDT

கரம் கூப்பி ........
தலை தாழ்த்தி ......
அங்கம் பட ......
வாரம் முழுக்க ......
வரம் கேட்டு ........
தொழுதேன் ..........

தருவாய் என ......
காத்து இருந்தேன்.....
உன்னையும் களவாடிய ......
பிறகு தான் உணர்ந்தேன் ...

உனக்கு வேண்ட மறந்ததை .....
கடவுளே !!!!!!

அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு !

Posted: 26 Apr 2012 05:52 AM PDT

அன்புள்ள ரமேஷ் நாகா அவர்களுக்கு! வணக்கம் ~! நலமா ? நான் பேச , நட்புக்கொள்ள நினைக்கிற நபர்கள் எல்லாம் எனக்கு அருகில் இருப்பதில்லை. ஓரிருவரை தவிர , சிலர் தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்பதில்லை. தொலைவில் இருந்தும் தொடர்பில் இல்லாத நபர்களில் நீங்களும் ஒருவர் ரமேஷ் நாகா ! ஈகரை எனக்கு தந்த அரிய உறவில் நீங்களும் ஒருவர். நமக்கான தொடர்புகள் பெரும்பாலும் கவிதையும் கவிதை ரசனையும் சார்ந்ததாகவே அமைந்துவிட்டது. அதனால் தானோ என்னவோ இந்த கடிதத்தில் கூட உங்கள் கவிதையின் ஆதிக்கம்தான் அதிகமாய் ...

கூகிள் எர்த் --ஒரு பார்வை

Posted: 26 Apr 2012 05:50 AM PDT

இந்த பதிவு கூகிள் எர்த் பற்றியது ,இதை பற்றி பெரிய முன்னுரை தேவை இல்லை நாம் அனைவரும் ஒருதடவையாவது உபயோகித்து பார்திருப்போம் பூமி ,நிலா ,வானம் ,செவ்வாய் போன்றவைகளை இங்கிருந்தபடியே காணலாம், கூகிள் இன்னும் பல சேவைகளை இணைத்துக்கொண்டு தான் இருக்கிறது , சரி பதிவுக்கு வருவோம் இதில் நீங்கள் இதுவரை என்ன பார்த்திருபீர்கள் ? உங்கள் வீடு எங்கிருக்கிறது ,வழிகள் சரியாக உள்ளதா என்று தேடியிருபீர்கள், இதை தவிர்த்து உங்களிடம் இரண்டு மூன்று ஆப்ஷன் இருக்கும் (வேலை செய்த இடம் ,சுற்றுலா சென்ற இடம்) வேறு ...

கோளாறுகளை நீக்கும் கடுகு

Posted: 26 Apr 2012 05:43 AM PDT

கருப்பை கோளாறுகளை நீக்கும் கடுகு கடுகு சிறுத்தாலும் காரம் போகாது' அந்த அளவிற்கு எண்ணற்ற சத்துக்களையும், மருத்துவ குணங்களையும் சின்னஞ்சிறிய கடுகு தன்னகத்தே கொண்டுள்ளது. 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கடுகின் பயன்பாடு இருந்துள்ளது. கடுகில் கருங்கடுகு, வெண்கடுகு, நாய்க்கடுகு, மலைக்கடுகு, சிறுகடுகு என பலவகை உண்டு. இது சிறு செடி வகையைச் சார்ந்தது. இந்தியாவில் பல இடங்களில் பயிராகிறது. வெண்கடுகை விட கருங்கடுகில் காரம் மிகுந்து காணப்படும். இதன் மேல்தோல் கறுப்பாக இருக்கும். சத்தான கடுகு கடுகில் ...

சிக்கன் மஞ்சூரியன்

Posted: 26 Apr 2012 05:40 AM PDT

சிக்கன் மஞ்சூரியன் ரெஸிபி மஞ்சூரியன் என்பது சீன வகை உணவு. சைவம், அசைவத்திலும் மஞ்சூரியன் செய்யலாம். காரமான, புளிப்பான சாஸ் போல இருக்கும். ட்ரை, கிரேவி என இரண்டு வகையாக மஞ்சூரியன் செய்யப்படுகிறது. ஹோட்டல்களில் ப்ரைடு ரைஸ் ஆர்டர் செய்பவர்கள் சைடாக மஞ்சூரியன் சொல்ல மறக்கமாட்டார்கள். வீட்டிலேயே எளிதாக சிக்கன் மஞ்சூரியன் செய்யலாம் என கூறியுள்ளார் வில்லிவாக்கம் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி ஹோட்டல் சமையல் கலைஞர். அவர் கூறும் ரெஸிபியை கேளுங்களேன். தேவையான பொருட்கள் எலும்பு நீக்கிய கோழிக்கறி - ...

யாரும் யா......அழுவதில்லை

Posted: 26 Apr 2012 05:23 AM PDT

அவர்கள் இல்லை.. இல்லை... இவர்கள் யார் யார் அழுவார்கள் நம் மரணத்தில் அன்று நமக்காய் அழுபவர்களின் அடையாளங்களை தேடுகிறது பாழ்மனது இன்றைய அவர்களுடனான நேசம் நாளை நமக்காக அழுவதற்கான சுயநலமோ நம் துக்க மனதை ரணப்படுத்தும் பிறரின் நமக்கான அழுகையின் வேஷங்கள் தன் இருப்பை உணர்த்துவதர்க்காக படைப்பின் அடையாளங்களில் இறைவன் தாய் தந்தையென எத்தனையோ பாச நேச சுயநல அடையாளங்களில் உறவுகள் உருவமற்ற உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் பெயர் சமைத்து மரணம்வரையிலான ...

மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்

Posted: 26 Apr 2012 05:06 AM PDT

உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாரை பார்த்து வராத உணர்வு உன்னைப் பார்த்து வந்தது அதனாலேயே உன்னை காதலிக்கிறேன் ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விண்ணில் வெற்றிகரமாக சீறிப்பாய்ந்தது ரிசாட்-1

Posted: 26 Apr 2012 05:03 AM PDT

ஸ்ரீஹரி‌கோட்டா: இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய செயற்கைகோளான ரீசாட்-1 ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.47 மணியளவில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. சுமார் 380 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைகோள் வானிலை சம்பந்தமான துறைகளுககும், மற்றும் அனைத்து விதமான துறைகளுக்கும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பகல், இரவு,மற்றும் மேகமூட்டம் அதிகமாக உள்ள காலகட்டங்களிலும் புகைப்ப‌டங்களை எடுத்து அனுப்பும் திற‌மை கொண்டது. சரியான பாதை‌யில் ...

" ரமேஷ்!இது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலே?!"..........

Posted: 26 Apr 2012 05:02 AM PDT

எனக்கே வருத்தமாய் இருக்கிறது என்னை நினைத்துப் பார்க்கையில். அதிலும்- எல்லாம் அறிந்தவனாய் நீங்கள் என்னை மதிப்பிட நேர்கையில். நான் பார்க்க நேரிடும் எதனோடும் எனது நேசம் வளரவில்லை என்பதை நீங்கள் உணர நேர்கையில் நீங்கள் என்னை யாரென மதிப்பிடுவீர்கள் ?...... பூக்களும், வண்டுகளும் பேசிக் கொள்ளும் ஒரு மொழியை...... நாற்று....காற்றோடு பேசும் மொழியை.. மீன்கள் நீந்தியபடி நீரில் எழுதும் மொழியை... ஒவ்வொரு கணத்திலும்... இயற்கை என்னைச் சுற்றி எழுதும் அற்புதத்தின் மொழியை ..... நான் ...