தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


உடையார் நாவல் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை முதல் பகுதிகளை தவிர மற்றவைகளை ...

Posted: 27 Apr 2012 07:04 PM PDT

முகவும் சிறந்த இணையதளம் இது...மற்ற பகுதிகளை பதிவிறக்கம் செய்ய உதவுங்கள்...இதில் இணைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் ...மிக்க நன்றி மற்றும் வாழ்த்துகள்

கூகிள் புத்தகத்தை மென்புத்தகமாக தரவிறக்க

Posted: 27 Apr 2012 06:47 PM PDT

பதிப்புரிமை சிக்கல்கள் மற்றும் பிற விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக கூகிள் புத்தகங்களில் டிஜிட்டல் புத்தகங்களை தரவிறக்க முடியவில்லையா? டெஸ்க்டாப் கருவிகளை பயன்படுத்தியும் அலுப்பாயிருக்கிறீர்களா? நீங்கள் எந்த தடையும் இல்லாமல் இதன் மூலம் தரவிறக்க முடியும்.கூகிள் புக்ஸ் சேவை பயனர் அமைப்பு இல்லாமல் முழு புத்தகங்களை இலவசமாக டிஜிட்டல் பதிப்புகளாக தரவிறக்க முடியும். இதன் மூலம் கூகிள் புத்தகங்களை இலவச மின்னணு புத்தகங்களாக பதிவிறக்க விடாமல் செய்யும் கட்டுப்பாடுகளை நீக்க முடியும்.இது PDF வடிவத்தில் ...

ரிக் வேதம் – இந்திரன் துதி

Posted: 27 Apr 2012 06:40 PM PDT

1. 'சோமக்குடியனான இந்திரன், நீண்ட கழுத்தையுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக்கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப்பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (சமணத்தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்' மண்டலம் ...

ஹிஷாலீ ஹைக்கூ

Posted: 27 Apr 2012 06:12 PM PDT

அவன் விழி பிம்பத்தில் ஆயிரம் முகங்கள் திருத்தம் விரத்தியில் சலூன் கண்ணாடி பக்கங்கள் இல்லா இதயத்தில் சாகும் வரை எழுதுகிறேன் சுயசரித்திரம் விவசாய மண்ணின் தாய் பால் காவேரி தென்பெண்ணை பாலாறு நாநூறு ஆண்டுகள் இனிக்கும் கணிதக் கனி இயற்கை மருத்துவம் மெலிந்த தேகம் பானை வயிறு குவாஷி யோர்கள் பழுதுண்டு சாலையில் பழைய பல்லவன் புதிய பயணச் சீட்டு மனித நேயத்தின் மறுமலர்ச்சி காவியங்கள் காந்தி காரல்மார்க்ஸ்

சிம்மாசனம்

Posted: 27 Apr 2012 06:03 PM PDT

உலகில் தேடி தேடி
அலைந்தாலும்
மீண்டும் அமர முடியா
சிம்மாசனம்
அகிலமே ஆளும்
அரசனாகவும் இருந்தாலும்
அமர முடியா
சிம்மாசனம்
அன்னையின் கருவறை தான்

இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக

Posted: 27 Apr 2012 05:56 PM PDT

இஷ்டமே கஷ்டமாய நமக இஷ்டமே இஷ்டமாய நமக நாம நல்லா படிக்க பெத்தவங்க ரொம்பவே கஷ்டப் படறாங்க நாம நம்ம பெத்தவங்களுக்காக படிக்க ரொம்பவே கஷ்டப் படறோம். இஷ்டப் பட்டத கஷ்டப் பட்டு செஞ்சாதான் கஷ்டப் படரதொட முழுப் பலனையும் கஷ்டப் படாம இஷ்டப் பட்டு அனுபவிக்க முடியும். சரிதானுங்களே? நா என்ன சொல்ல வரேன்னா இஷ்டப் படரத முதலில் கண்டுபிடிங்க அப்புறம் அத கஷ்டப் பட்டு செய்யுங்க நீங்க இஷ்டப் படர மாதிரி இஷ்டப் படறது எதுவுமே கஷ்டமா இருக்காதுங்க. அப்புறம் நீங்க இஷ்டப் பட்டதில் கஷ்டப் படாமலே ...

வியர்வை நாற்றம் போக

Posted: 27 Apr 2012 05:51 PM PDT

1. குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும். 2. வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். 3. குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். 4. ...

நான்காயிரம் பதிவுகள்-கொலைவெறி(இனியவன்)அண்ணாவை வாழ்தலாம் வாங்க.

Posted: 27 Apr 2012 05:41 PM PDT

இனியவன் அண்ணனின் பெயர் மட்டும் இனிமை அல்ல,பழகவும் இனியவரே. நூற்று சொச்ச நாட்களிலே 4000 பதிவுகளிட்ட கொலைவெறி அண்ணனின் பதிவுகள் மேலும் பெருக என்னுடன் சேர்ந்து வாழ்த்துங்கள் வாழ்த்துக்கள் அண்ணா.,

பணம்

Posted: 27 Apr 2012 05:26 PM PDT

நான் ஏற்றத்தாழ்வின் அளவு மாணி! மனித வாழ்வின் உயிர் நாடியும் நானே! ஏழைக்கு நான் வெறும் கனவு மட்டுமே! பலரின் இலட்சியமும் நான் தான் சவாலும் நான் தான்! நான் சமத்துவத்தின் இலக்கணம்.. யாசிக்கும் கரங்களையும் நேசிப்பேன் *"டொடடி"களின் மடிகளையும் நிரப்புவேன்! என்னில் இல்லை உயர்வும் தாழ்வும், மனிதா என்னால் உன்னில் உயர்வும் தாழ்வும் ஏன்? வங்கிகள் என் காப்பரண்கள் நான் அடை காக்கப்படுவதும் அங்கு தான் அப்போது, வட்டியை நான் குட்டியும் இடுவேன்! உலகம் உள்ள ...

சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை!

Posted: 27 Apr 2012 05:05 PM PDT

"சொல்லாமல் கொல்லும் சர்க்கரையை இல்லாமல் செய்யும் வெண்டை!" யின் மகத்துவம் குறித்து எழுத்தாளர். திரு. ரா.கி. இரங்கராஜன் அவர்களுக்கு அவரின் நண்பர் திரு. பி.எஸ். பஞ்சநாதன் அவர்கள் இயற்கை மற்றும் எளிய பாட்டி வைத்தியம் ஒன்றை பரிந்துரை செய்துள்ளார். பக்க விளைவுகளற்ற, பணவிரயமின்றி அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் வெண்டைக்காயினை பின்வருமாறு உண்டதால் இரண்டு வாரங்களிலேயே 60மில்லி கிராம் வரை அவருக்கும், 30 கிராம் வரை அவரது துணைவியாருக்கும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்ததுக் கண்டு வியந்து அவர் ...

ரெஸ்ட் போதும்ணே... புதுசா வரப் போறேன்...! - வடிவேலு

Posted: 27 Apr 2012 11:33 AM PDT

நகைச்சுவைப் புயல் தன் ஓய்வு காலத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அடுத்த படத்துக்கான வேலைகளில் பரபரப்பாகிவிட்டார். அவரது அடுத்த படம், இம்சை அரசன் 23-ம் புலிகேசியின் 2-ம் பாகம்தான் என நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம். இப்போது சிம்பு தேவனுடன் கதை விவாதம் நடத்தியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள வடிவேலு, புதிய பொலிவுடன், அசத்தலான திரைக்கதையுடன் கூடிய படத்தில் நாயகனாக நடிக்கவிருப்பதாகக் கூறியுள்ளார். தனது அடுத்த படம் குறித்து வடிவேலு கூறுகையில், "சினிமாவில் சில ...

ஒரு நொடிப்பொழுதில்...

Posted: 27 Apr 2012 10:44 AM PDT

அவமானத்தின் உச்சத்தில்,
புறக்கணிப்பின் உறுத்தலில்,
வார்தைகள் விஷமாக கக்கும் உதடுகளின் மீதுள்ள அச்சத்தில்,
ஒரே நொடிப்பொழுதில்,
மரணத்தின் கரம்பிடித்து செல்கிறாய்....

உனக்காக அழவிருக்கும் கண்களுக்கு பதில் சொல்லாமலே...

முகூர்த்த நிர்ணயம்

Posted: 27 Apr 2012 09:01 AM PDT

வணக்கம்!
ஒரு பெண்ணுக்கு அவளது பிறந்த மாதத்தில் திருமணத் தேதி
வைக்கலாமா? உதாரணத்துக்கு என் தங்கை பிறந்தது ஆனி மாதத்தில். அவளுக்கு
ஆனி மாதத்தில் திருமணத் தேதி வைக்கலாமா? யாராவது விளக்க முடியுமா?

நன்றியுடன்,
தி.ராதாகிருஷ்ணன்

மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா

Posted: 27 Apr 2012 08:40 AM PDT

மதுரை ஆதினத்தின் அடுத்த மடாதிபதியாக நித்தியானந்தா மூடிசூட்டப்பட்டார். பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் மதுரை ஆதினம் அடுத்த மடாதிபதியாக மூடி சூட்டிவைத்தார். http://www.dinamalar.com/News_Detail.asp?Id=456565

ஹிந்தி படிக்க கற்றுக்கொள்ளவும்

Posted: 27 Apr 2012 07:36 AM PDT

இப்போது இறுதியாண்டு படிக்கும் மற்றும் வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்களே தயவு செய்து ஸ்போக்கேன் மற்றும் மத்யமா வரையிலான ஹிந்தி படிப்பை உடனடியாக படிக்க ஆரம்பிக்கவும் வட இந்தியாவில் வேலை சுலபமாக தென்னிந்தியர்கள் வாங்க முடிவது ஏனென்றால் அவர்களின் வேலை மீது காட்டு கின்ற மதிப்பு மற்றும் வேலை சார்ந்த ஒழுக்கம். ஆகவே மிக பெரிய நிறுவன அதிகாரிகள் தென்னிந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் நமது முதல் பிரச்சனை மொழி நமக்கு பாட சம்பந்தமான அறிவு நிரயா இருந்தாலும் அதை ...

அவெஞ்சர்ஸ்(AvEnGeRs) திரைப்படம் ஒரு பார்வை !

Posted: 27 Apr 2012 06:04 AM PDT

ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்ற மனிதரின் பிறப்பிலிருந்து இந்த அவெஞ்சர்ஸின் கதை துவங்குகிறது. 1922ல் ந்யூயார்க்கில் பிறந்த லீபர், இன்று 89 வயது ஆகியும், உலகம் முழுக்கப் புகழ் பெற்று விளங்கும் நபர். ஸ்பைடர் மேன், X Men, Fantastic Four, Daredevil ஆகிய கதாபாத்திரங்களை உருவாக்கிய மனிதர் இவர். காமிக்ஸ் பிதாமகர் என்று இன்று அழைக்கப்படும் இவரது இப்போதைய புகழ்பெற்ற பெயர் - ஸ்டான் லீ. முப்பதுகளில், ஹாலிவுட்டில், எர்ரால் ஃப்ளின் என்ற நபர் படுபாப்புலராக இருந்தவர். எம்ஜியாரின் முன்னோடி என்றே இவரைச் ...

சுய தொழில்கள்-கப்பா பைகஸ் பாசி (கடல் பாசி or பெப்ஸி பாசி)வளர்ப்பு

Posted: 27 Apr 2012 05:55 AM PDT

நண்பர்களுக்கு என் நண்பர் ஒருவர் சுயதொழில் செய்வதை பற்றி சில குறிப்புகள் எனக்கு அனுப்பி தந்திருக்கிறார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்று பார்க்கப் போவது கப்பா பைகஸ் or பெப்சி பாசி வளர்ப்பு பற்றியது. இது ஒரு கடல் சார்ந்த தொழில். கடலோர ஊர்களில் வசிக்கும் நண்பர்கள் அவர்களுக்கு நன்கு பழகிய மீனவ சமூக ஆட்களின் துணை கொண்டு இத் தொழிலைச் செய்யலாம். யாரோ ஒரு வெளிநாட்டுக் கம்பெனியான பெப்சி நம் மீனவ மக்களிடம் விதைப் பாசியை கொடுத்து மொத்தத்தையும் அறுவடை செய்து அயல் நாடுகளுக்கு அனுப்பி கொள்ளை,கொள்ளையாக ...

இன்றும் ஒரு கதை (27/04/2012 பானு)வார்த்தையால் சுட்ட புண் ஆறாது!

Posted: 27 Apr 2012 04:43 AM PDT

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு விளக்கம் : "நெருப்பில் சுட்டுக் கொள்வதால் ஏற்படும் புண் கூட குணமாகிவிடலாம்! ஆனால், தகாத வார்த்தைகள் கூறி ஒருவர் மனத்தைப் புண்படுத்தினால் அது என்றும் ஆறாது." சேதுபதியும், சபாபதியும் சகோதரர்கள். மூத்தவனான சேதுபதி படித்து முடித்த பிறகு ஒரு நிறுவனத்தில் விற்பனையாளனாகப் பணியில் சேர்ந்தான். சிவகாமி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட பின், அவனுக்குஇரு குழந்தைகள் பிறந்தன. சபாபதி படித்து முடித்துவிட்டு வேலை ...

தமிழ் ஸ்டோரி books

Posted: 27 Apr 2012 04:37 AM PDT

nanbargal en kangal. நண்பா எனக்கு மதன் தமிழ் புக் கிமு கிபி பி‌டி‌எஃப் வடிவத்தில் தேவை

அன்புடன்
பிரகாஷ் saaiyok

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?

Posted: 27 Apr 2012 04:00 AM PDT

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று. இதில் ஆழமான பிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல. முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், வெட்கம், மானம், மரியாதை, சூடு, சொரணை, இப்படி வேண்டாத சாமான்களை எல்லாம் காயலான் கடைக்குப் போட்டு விடவேண்டும். அப்புறம் நல்ல கணவனாவது வெகு சுலபம். வளவளவென்று சும்மா பேசி என்ன பிரயோஜனம்? சுருக்கமாக பாய்ன்ட் பை பாய்ன்ட்டாக (Point by Point) நெம்பர் ...

ஒட்ஸ் பொங்கல்

Posted: 27 Apr 2012 03:13 AM PDT

ஒட்ஸ் பொங்கல் செய்வது எப்படி பொங்கலுக்கு எல்லோரும் வழக்கமா சர்க்கரை பொங்கல்தான் வைப்போம்.. அதோடு இந்த ஓட்ஸ் பொங்கலையும் வச்சு பாருங்க.. முற்றிலும் மாறுபட்ட சுவையுடன் சூப்பரா இருக்கும்… அப்பறம் என்ன? ஒரே பாராட்டு மழைதான்……! தேவையானப் பொருள்கள்: ஓட்ஸ் – 2 கப் பச்சைப் பருப்பு – 3/4 கப் மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு தாளிக்க: நெய் – 2 டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் 1 – டீஸ்பூன் முந்திரி பருப்பு – 10 இஞ்சி – ஒரு சிறிய துண்டு கறிவேப்பிலை – கொஞ்சம் செய்முறை: முதலில் ...

மெழுகுவர்த்தியுடன் ஒரு உரையாடல்

Posted: 27 Apr 2012 02:59 AM PDT

மெழுகுவர்த்தி தொழிற்ச்சாலை நோக்கி மெல்ல நடந்தேன் தொழிற்ச்சாலை வாயிலில் மெழுகுவர்த்தி அடைப்பான்கள் மாநில மாநிலமாக ஏற்றுமதி செய்யபட்டுகொண்டிருந்தன அதிலிருந்து தவறி விழுந்த ஒரு மெழுகுவர்த்தி என் தரைபட்ட பாதத்தை தட்டியது நான் ஒரு கவிஞன் என்பதால் உருகும் மெழுகுவர்த்தியுடன் என் உரையாடலை தொடர முடிந்தது தவறி விழுந்த மெழுகுவர்திடன் உன் கூட்டாளிகள் ஏற்றுமதியாகும் போது நீர் மட்டும் ஏன் ஏற மறுக்கிறாய் என்றேன் உடனே அந்த மெழுகுவர்தியோ நான் ஏற்றுமதியாகும் இடம் தமிழ்நாடு என்றது அத்துடன் அங்கே ...

பெண்களை நிலவென்றார்கள்

Posted: 27 Apr 2012 02:54 AM PDT

அன்றைய கால புலவர்கள்
அறிவாளிகள்
விண்ணுக்கே செல்லாமல்
நிலவை பெண்களுக்கு
ஒப்பிட்டனர்
பெண்களை
நிலவென்றார்கள்
இவ்வளவு நாளா நிலவின் அழகைதான்
பெண்ணுக்கு
ஒப்பிட்டனர் என நினைத்தேன்
உன்னை பார்த்த பின்தான்
இதயத்தை ஒப்பிட்டது
புரிந்தது

"தினம் தொலையும் இரவொன்றின் கதை ...."

Posted: 27 Apr 2012 02:32 AM PDT

அம்மா எனக்குக் கதை சொன்ன காலத்திலிருந்து என்னோடு வளரத் துவங்கியிருந்தது இரவு. ஒரு விடியலின் அற்புதத்தைத் தனக்குள் ஒளித்து வைத்துக் கொண்டிருந்த அது..... ஏனோ இன்று வரை சூரியனின் முன் தன் முகம் காட்ட மறுத்து ஒளிந்து கொண்டிருந்தது. மரங்களோடும்...வயல் நாற்றுகளோடும்... உறங்கும் குழந்தைகளோடும்..... தனது கனவுகளைச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தது அது.. நிலவினால்...தன் வயிறு கிழிக்கப்படும் வருத்தம் இருந்தாலும்.. தன் நக்ஷத்திரக் குழந்தைகளுக்காக என் அம்மாவிடம் கதை கேட்க வந்து அமர்ந்திருந்தது ...

செட்டிநாடு / காரைக்குடி மீன் குழம்பு

Posted: 27 Apr 2012 02:21 AM PDT

செட்டிநாடு / காரைக்குடி மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் – 1 /2 கிலோ புளி – எலுமிச்சை அளவு பூண்டு – 15 பல் சின்ன வெங்காயம் – 10 தக்காளி – 1 மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – 1 1 /2 – 2 தேக்கரண்டி மல்லித்தூள் – 3 தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு அரைக்க தேவையான பொருட்கள் தேங்காய் துருவியது – 1 /4 கப் மிளகு – 10 – 15 சீரகம் – 2 தேக்கரண்டி கருவேப்பிலை – 2 கொத்து தாளிக்க தேவையான பொருட்கள் சீரகம் – 1 /2 தேக்கரண்டி மிளகு – 1 /2 தேக்கரண்டி வெந்தயம் – 10 கருவேப்பிலை ...

தெரிந்த உருவம்! தெரியாத மனது!!

Posted: 27 Apr 2012 02:11 AM PDT

அந்த பெண்மணிக்கு ஐம்பது வயதிற்கு மேல் இருக்கும் உருவத்தை பார்த்தாலே பெரிய அந்தஸ்தில் உள்ளவர் என்று சொல்லி விடலாம் சில நிமிடம் பேச்சி கொடுத்தாலே அந்த பெண்மணியின் அறிவு கூர்மை நம்மை வியக்கவைத்து விடும் அவர் மற்றவரை பார்ப்பதே ஒரு வித ராஜ பார்வை போல் இருக்கும். நான் யாரையும் ஆட்சி படுத்துவேனே தவிர யாருடைய அதிகாரத்திற்கும் அடிபணிய மாட்டேன் என்று சொல்லாமல் சொல்வது போல் அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கும் அதற்காக அவரை அடங்கா பிடாரி என்று சொல்லிவிடவும் முடியாது அதிகாரம் கலந்த அன்பு மொழியே அவரிடமிருந்து ...

முலாம் பழச்சாறு!

Posted: 27 Apr 2012 01:40 AM PDT

கோடை வெப்பத்தை விரட்டும் முலாம் பழச்சாறு! திராட்சைச் சாறு, கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை அளிக்கிறது. உடற்சூடு, நீர்க் கடுப்பு, வெட்டை சூடு, ஜீரண கோளாறுகளுக்குத் திராட்சை ரசம் அருமருந்து. முலாம்பழத்தைச் சாறெடுத்து அருந்த உடல் உடனே குளிர்ச்சியாகும். நீர்ச்சுருக்கைக் குணப்படுத்தும். உண்மையில் முலாம்பழத்தில் தர்ப்பூசணியைவிட தண்­ணீர்(ஈரப்பதம்) அதிகம். எனவே முலாம்பழச்சாற்றை ஒருதடவை தினமும் அருந்தினால், கோடைவெப்பத்தை எளிதில் விரட்டிச் சமாளிக்கலாம். மாம்பழச்சாறு கோடை மயக்கத்தை நீக்கும். ...

15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம்

Posted: 27 Apr 2012 01:35 AM PDT

15 வயதுக்கு முன்பு உறவு: இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே அதிகம் இந்தியாவில் 15 வயதுக்கு முன்பு ஆண்களைவிட பெண்களே அதிகமாக உறவுவைத்துக் கொள்கின்றனர் என்பது கடந்த ஆண்டில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்டவர்களில் 8 சதவீதம் பெண்கள் 15 வயதுக்கு முன்னரே பாலியல் உறவு கொண்டுள்ளனர். ஆனால் அதே வயதில் ஆண்களில் 3 சதவீதம்பேரே உறவுகொண்டுள்ளனர். கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 வயதுக்கு முன்பு 17 சதவீதம் பெண்கள் உறவு வைத்துக் கொள்கின்றனர். இந்தியாவும் ...

நான் அடைந்த இலக்குகளில்

Posted: 27 Apr 2012 01:10 AM PDT

வாழ்க்கையில்
நான் அடைந்த இலக்குகளில்
எல்லாம் என்னோடு
என் அன்னை இருந்தார்
இருக்கிறார்
இப்பொழுது
அவருக்கு துணையாய்
நீயும்
இருக்கும்வரை
வெற்றிதான் என் வாழ்வில்


கூகுள் குரோம் உதவி தேவை

Posted: 27 Apr 2012 01:02 AM PDT

ஈகரை நண்பர்களுக்கு மாலை வணக்கம், :வணக்கம்: :வணக்கம்:
கூகுள் குரோமில் ஹெடர் அண்ட் ஃபுட்டர் ல் நம்முடைய நேம் அண்ட் அட்ரஸ்
வரவழைப்பது எப்படி?
வாய்ப்பிருந்தால் உதவுங்கள் நண்பர்களே

இது மக்கள் மருத்துவமனை!

Posted: 27 Apr 2012 12:21 AM PDT

இது மக்கள் மருத்துவமனை! - விகடன் - 25 ஏப்ரல் 2012 இதழிலிருந்து செய்யும் வேலையே சேவையாக அமைவது வரம். ஈரோட்டில் எஸ்.ஜி.மெட்மருத்துவ மனையின் தலைமை மருத்துவர் மாரிமுத்து சரவணனுக்கு அப்படி ஒரு வரம் வாய்த்து இருக்கிறது. காசு பிடுங்கும் கார்ப்பரேட் மருத்துவ மனைகளுக்கு மத்தியில், இது மக்கள் மருத்துவமனை. மூளை அறுவைச் சிகிச்சை, இதய அறுவைச் சிகிச்சை போன்ற சிக்கலான, காஸ்ட்லியான சிகிச்சைகளுக்குக்கூட 'முடிந்ததைக் கொடுங்கள்... இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை...' என்பதுதான் இந்தமருத்துவ மனையின் கொள்கை. ...

பற்பசை (Toothpaste) உருவான வரலாறு

Posted: 27 Apr 2012 12:02 AM PDT

கோல்கேட்(Colgate); History of Toothpaste ஒரு மனிதன் தன்னுடைய உடலை எப்படி தூய்மையாக வைத்துக்கொள்வது என்பதை உலகிற்கு கற்றுகொடுத்தவர்கள் இந்தியர்கள் என்றால் மிகையில்லை. ஒரு மனிதன் அன்றாடம் காலையில் எழுந்ததும் செய்யும் முதல் வேலையான பல் துலக்குதலிளிருந்துதான் நாம், நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கான முதல் பயணம் துவங்குகிறது, அதன் பிறகுதான் குளிப்பதும் (Bathing) ஏனைய செயல்களும்அந்தவகையில் பல்துலக்குதல் (Tooth Brushing) என்பது நம் உடலை தூய்மையாக வைத்துக்கொள்வதற்க்கு எடுத்துக்கொள்ளும் எல்லா ...

My Documents - Folder Location -ஐ வேறு Drive க்கு மாற்றுவது எப்படி?

Posted: 26 Apr 2012 11:42 PM PDT

வழக்கமாக My Documents C:\Documents and Settings\உங்கள் User Name\My Documents என்று இருக்கும். ஒருவேளை உங்கள் System Drive -ல் இடபற்றாகுறை, மற்றும் இதர காரணங்களுக்காக நீங்கள் My Documents ஐ வேறு டிரைவிற்கு மாற்ற வேண்டுமென்றால், 1. தேவையான டிரைவில் "My Documents" Folder -ஐ Create செய்து கொள்ளவும். 2. My Computer -ஐ திறந்து கொண்டு, அதில் இடது புறமுள்ள Common Task pane-ல் உள்ள "My Documents" -ஐ ரைட் கிளிக் செய்து Properties -க்கு செல்லவும். (வலதுபுறமுள்ள "My Documents Folder"-ல் அல்ல.) 3. ...

Nokia Phone இல் Security Code இனை Reset செய்வது எப்படி?

Posted: 26 Apr 2012 11:33 PM PDT

ஒரே நிமிடத்தில் உங்களுடைய Nokia Phone இன் Security Code இனை Reset செய்வது எப்படி என்று பார்ப்போம்.இப்படி செய்வதால் உங்களுடைய Phone இன் Security Code 12345 இற்கு மாறிவிடும். தேவையானது 01.உங்களுடைய phone இன் Data Cable 02.NSS என்ற மென்பொருள் - இங்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் ...

கர்வம் அழிந்தது.

Posted: 26 Apr 2012 11:30 PM PDT

நான் மறையைக் கற்றவனல்ல ஞானி! நான் மறையக் கற்றவனே ஞானி! என்பது முதுமொழி. நான் என்னும் அகந்தையையின்றி வாழ்வது எல்லோராலும் இயலாதவொன்றாகும். இருந்தாலும் அவ்வாறு இருக்க முயல்பவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடத்தேவையில்லை. எல்லோரும் அவர்களை ஞானி என்றுதான் உணர்வார்கள்.கதை ஒன்று………… அறிஞன் ஒருவன் இருந்தான் அவனுக்கு தான் மிகவும் அறிவாளி என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. யாராக இருந்தாலும் அவர்களை கேள்வி கேட்டே மடக்கிவிடமுடியும் என்று தன்மீது மிகுந்த கர்வம் கொண்டிருந்தான். இவன் ...

காதல் தேசம்...!

Posted: 26 Apr 2012 11:19 PM PDT



அவன் ஒரு தேசம்
நான் ஒரு தேசம்
இருவரும் பேசுகிறோம்
ஒரு மொழி கோசம்
அதுதான் காதல் தேசம்

முகநூலில் ரசித்தவை!

Posted: 26 Apr 2012 11:00 PM PDT

முட்டையை வெளியே இருந்து உடைத்தால் அது மரணம் ...!!
உள்ளே இருந்து உடைக்கப்பட்டால் அது ஜனனம் ...!!