சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- பாலிவுட் ஹீரோ நிபந்தனை லிங்குசாமிக்கு புது தலைவலி
- கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தருவதா? இயக்குனர் மீது 2 ஹீரோயின்கள் பாய்ச்சல்
- அமெரிக்காவில் மரண பீதியை ஏற்படுத்தும் மயான அமைதி அறை (வீடியோ இணைப்பு)
- அமெரிக்காவில் மரண பீதியை ஏற்படுத்தும் மயான அமைதி அறை (வீடியோ இணைப்பு)
- கட்டுக்கடங்கா ரோபோவை அடங்கவைத்த நாய் (வீடியோ இணைப்பு)
- Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை (வீடியோ இணைப்பு)
- Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை (வீடியோ இணைப்பு)
- ஆறாயிரம் அடிகள் உயரத்தில் தனது உயிரை பனைய வைக்கும் மனிதர் (வீடியோ இணைப்பு)
- பட்டுப்போன்ற கூந்தலுக்கு...
- புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை
- கருப்பை புற்றுநோய்
- மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள்
- கோஸ் துவையல்
- புதினா டீ
- சக்கராசனம்
- பச்சிமோத்தாசனம்
- அணையா தீபம் ஏற்றி வழிபடலாமா?
- வேலவனுக்கான செவ்வாய்க்கிழமை விரதம்
- கணபதி துதி
- பிரதோஷ வழிபாடு பலன்
- ஸ்ரீ மகாலெட்சுமி ஸ்லோகம்
- நரசிங்கப்பெருமாள் கோவில்
- கிருஷ்ணரை விரத வழிபாடு செய்வது எப்படி?
- நவ நரசிம்மர் தலங்கள்
| பாலிவுட் ஹீரோ நிபந்தனை லிங்குசாமிக்கு புது தலைவலி Posted: 27 Apr 2012 08:21 AM PDT லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சாஹித் கபூர் நிபந்தனை விதித்ததால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். மாதவன், ஆர்யா நடித்த படம் 'வேட்டை'. லிங்குசாமி இயக்கினார். இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதில் நடிக்க மாதவன், அசின் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களை அணுகியபோது கால்ஷீட் தர மறுத்துவிட்டனர். இந்நிலையில் சாஹித் கபூர் ஒப்பந்தம் ஆனார். ஸ்கிரிப்ட் பணி முடிந்து ஷூட்டிங் செல்லும் நேரத்தில் திடீரென்று சாஹித் நிபந்தனை விதித்தார். 'தமிழில் எழுதப்பட்ட வசனங்களை அப்படியே இந்திக்கு மொழி பெயர்த்திருப்பதை ஏற்க முடியாது. இந்தி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப வசனத்தை மாற்றினால்தான் நடிப்பேன்' என்றார். இதனால் லிங்குசாமிக்கு புது தலைவலி ஏற்பட்டது. இதையடுத்து இந்தி படங்களுக்கு வசனம் எழுதும் பிரசூன் ஜோஷி ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன்பிறகே சாஹித் நடிக்க ஒப்புதல் அளித்தார். இதுபற்றி லிங்குசாமி கூறும்போது,''எனக்கு இந்தியில் மற்றவர்களுடன் எளிதாக தொடர்புகொண்டு பேச தெரியாது. இந்நிலையில்தான் தமிழ் வசனங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது. அது திருப்தியாக அமையவில்லை. இதுதான் முக்கிய பிரச்னையாக இருந்தது. இதையடுத்து மற்றொரு வசனகர்த்தாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் தமிழ் படத்துக்கு வசனம் எழுதியவருடன் அமர்ந்து ஆலோசித்து வசனத்தின் உட்பொருளை கேட்டறிந்து அதற்கேற்ப வசனம் எழுதினார். இதையடுத்து பிரச்னை தீர்ந்தது. இதற்குமுன் நான் இந்தி படம் இயக்கியதில்லை. இது புது அனுபவம் என்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறேன். இந்தி 'வேட்டை' தமிழிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். சர்வதேச மார்க்கெட்டுக்கு ஏற்ப இது உருவாகும். ஆர்யா நடித்த வேடத்தில் சாஹித் நடிக்கிறார். மாதவன் நடித்த வேடத்தில் பாகிஸ்தான் இசை அமைப்பாளர் அலி நடிக்கிறார். ஹீரோயின் இலியானா'' என்றார். |
| கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தருவதா? இயக்குனர் மீது 2 ஹீரோயின்கள் பாய்ச்சல் Posted: 27 Apr 2012 08:19 AM PDT கவர்ச்சி நடிகைக்கு முக்கியத்துவம் தந்து எங்களை ஒதுக்குவதா? என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது 2 ஹீரோயின்கள் கோபம் அடைந்தனர் ராம்கோபால் வர்மா இயக்கும் படம் 'டிபார்ட்மென்ட்'. இதில் அஞ்சனா சுகானி, லட்சுமி மன்சு, நாதாலியா கவுர் என 3 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் புரமோஷனில் அஞ்சனா, லட்சுமி இருவரையும் ஓரம்கட்டிவிட்டு கவர்ச்சி நடிகை நாதாலியா கவுருக்கு வர்மா முக்கியத்துவம் தருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அஞ்சனா, லட்சுமி இருவரும் இயக்குனர் மீது கோபமாக இருக்கிறார்கள், 'இதுபழிவாங்கும் செயல்' என்று லட்சுமி மன்சு கூறியதாக தகவல் வெளியானது. இதுபற்றி மன்சுவிடம் கேட்டபோது, ''இது வர்மாவின் படம். அவருடைய படத்தை எப்படி புரமோஷன் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். அவர் படத்தில் நடித்தது சந்தோஷம். இன்னும் சொல்லப்போனால் அவர் படத்தில் நடித்தது பெருமை. ராம்கோபால் வர்மாவைவிட வேறு யாரும் தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களை கவுரவமாக நடத்த மாட்டார்கள். தற்போது தமிழ், தெலுங்கில் 'மறந்தேன் மன்னித்தேன்' என்ற படத்தை தயாரித்து வருகிறேன். ஆந்திராவின் உட்புற பகுதிகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. டாப்ஸி, சுதீப் கிஷன் மற்றும் ஆதி நடித்துள்ளனர். 1986ம் ஆண்டு கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நடந்த முக்கிய சம்பவமொன்றை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது'' என்றார். |
| அமெரிக்காவில் மரண பீதியை ஏற்படுத்தும் மயான அமைதி அறை (வீடியோ இணைப்பு) Posted: 27 Apr 2012 08:14 AM PDT உலகிலேயே மிகமிக அமைதியான அறை அமெரிக்காவில் உள்ளது. இந்த அறையில் உட்கார்ந்தால் இதயம், நுரையீரல், இரைப்பை இயங்கும் சத்தம் கூட கேட்கும். இந்த அறையில் முக்கால் மணி நேரத்துக்கு மேல் யாரும் உட்கார்ந்தது இல்லை. தியேட்டர்கள், பெரிய அரங்கங்கள், இசை நிகழ்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் இரைச்சல், எதிரொலி ஆகியவற்றை தடுக்கும் வகையில் பிரத்யேக வசதிகள் செய்யப்படும் ![]() அரங்கத்தின் சுவர், தரை, கூரை ஆகியவற்றில் ஒலியை உள்வாங்கக்கூடிய பொருட்கள் பொருத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகர் மின்னபாலிஸ் நகரில் உள்ள ஆர்பீல்டு ஆய்வுக்கூடத்தில் 'மயான அமைதி' அறை உருவாக்கப்பட்டுள்ளது. 'அன்எக்கோயிக் சேம்பர்' என்பது இதன் பெயர். ஸ்டீல், கான்கிரீட் என இரண்டு அடுக்கு சுவர்களை கொண்டு இந்த சவுண்ட் புரூப் அறை அமைக்கப்பட்டுள்ளது. 99.99 சதவீதம் எதிரொலி தடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகமிக அமைதியான இடம் என்று கடந்த 2004ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது இந்த அறை. பசங்க சத்தம் தாங்க முடியல. கொஞ்ச நேரம் போய் உக்கார்ந்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் இந்த அறையில் அமர முடியாது. காரணம், அங்கு நிலவும் மயான அமைதி மரண பீதியை ஏற்படுத்தும் என்கிறார் ஆர்பீல்டு ஆய்வுக்கூட நிறுவனர் ஸ்டீவன். இதுபற்றி அவர் கூறுகையில், விண்வெளிக்கு செல்பவர்கள் துளிக்கூட சத்தம் இல்லாத இடத்தில் வெகு நேரம் இருந்து தங்களை தயார்படுத்திக் கொண்டால் தான் பயமின்றி விண்வெளிக்கு செல்ல முடியும். அதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த அறை அமைக்கப்பட்டது. மேலும், உலகப்புகழ் பெற்ற ஹர்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த சத்தம் கொண்ட பைக்குகள் தயாரிக்கவும் இந்த அறையை பயன்படுத்திக் கொள்கிறது. சிறிதுகூட சத்தம், எதிரொலி கேட்காது என்பதால் அமைதியாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அந்த அமைதி மிகவும் பீதி தருவதாக இருக்கும். அன்எக்கோயிக் சேம்பர் மயான அமைதியுடன் இருப்பதால் இதயத்தின் லப்டப் சத்தம், நுரையீரலின் சுவாச சத்தம், இரைப்பையின் செரித்தல் சத்தம் கூட தெள்ளத் தெளிவாக நமக்கு கேட்கும். நேரம் ஆகஆக ரத்த ஓட்டம் கூட பெரும் இரைச்சல் போல கேட்கும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். நடக்காதது எல்லாம் நடப்பது போல தோன்றும். அன்எக்கோயிக் சேம்பரில் ஒருவர் அதிகபட்சம் முக்கால் மணி நேரம் உட்கார்ந்தது தான் சாதனையாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து என்று ஸ்டீவன் கூறினார். |
| அமெரிக்காவில் மரண பீதியை ஏற்படுத்தும் மயான அமைதி அறை (வீடியோ இணைப்பு) Posted: 27 Apr 2012 08:12 AM PDT உலகிலேயே மிகமிக அமைதியான அறை அமெரிக்காவில் உள்ளது. இந்த அறையில் உட்கார்ந்தால் இதயம், நுரையீரல், இரைப்பை இயங்கும் சத்தம் கூட கேட்கும். இந்த அறையில் முக்கால் மணி நேரத்துக்கு மேல் யாரும் உட்கார்ந்தது இல்லை. தியேட்டர்கள், பெரிய அரங்கங்கள், இசை நிகழ்ச்சிக் கூடங்கள் ஆகியவற்றில் இரைச்சல், எதிரொலி ஆகியவற்றை தடுக்கும் வகையில் பிரத்யேக வசதிகள் செய்யப்படும் ![]() அரங்கத்தின் சுவர், தரை, கூரை ஆகியவற்றில் ஒலியை உள்வாங்கக்கூடிய பொருட்கள் பொருத்தப்படும். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகர் மின்னபாலிஸ் நகரில் உள்ள ஆர்பீல்டு ஆய்வுக்கூடத்தில் 'மயான அமைதி' அறை உருவாக்கப்பட்டுள்ளது. 'அன்எக்கோயிக் சேம்பர்' என்பது இதன் பெயர். ஸ்டீல், கான்கிரீட் என இரண்டு அடுக்கு சுவர்களை கொண்டு இந்த சவுண்ட் புரூப் அறை அமைக்கப்பட்டுள்ளது. 99.99 சதவீதம் எதிரொலி தடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகமிக அமைதியான இடம் என்று கடந்த 2004ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது இந்த அறை. பசங்க சத்தம் தாங்க முடியல. கொஞ்ச நேரம் போய் உக்கார்ந்து விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் இந்த அறையில் அமர முடியாது. காரணம், அங்கு நிலவும் மயான அமைதி மரண பீதியை ஏற்படுத்தும் என்கிறார் ஆர்பீல்டு ஆய்வுக்கூட நிறுவனர் ஸ்டீவன். இதுபற்றி அவர் கூறுகையில், விண்வெளிக்கு செல்பவர்கள் துளிக்கூட சத்தம் இல்லாத இடத்தில் வெகு நேரம் இருந்து தங்களை தயார்படுத்திக் கொண்டால் தான் பயமின்றி விண்வெளிக்கு செல்ல முடியும். அதற்கு பயிற்சி அளிக்கும் நோக்கில் இந்த அறை அமைக்கப்பட்டது. மேலும், உலகப்புகழ் பெற்ற ஹர்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த சத்தம் கொண்ட பைக்குகள் தயாரிக்கவும் இந்த அறையை பயன்படுத்திக் கொள்கிறது. சிறிதுகூட சத்தம், எதிரொலி கேட்காது என்பதால் அமைதியாக இருக்கும் என்று நினைக்கலாம். ஆனால், அந்த அமைதி மிகவும் பீதி தருவதாக இருக்கும். அன்எக்கோயிக் சேம்பர் மயான அமைதியுடன் இருப்பதால் இதயத்தின் லப்டப் சத்தம், நுரையீரலின் சுவாச சத்தம், இரைப்பையின் செரித்தல் சத்தம் கூட தெள்ளத் தெளிவாக நமக்கு கேட்கும். நேரம் ஆகஆக ரத்த ஓட்டம் கூட பெரும் இரைச்சல் போல கேட்கும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். நடக்காதது எல்லாம் நடப்பது போல தோன்றும். அன்எக்கோயிக் சேம்பரில் ஒருவர் அதிகபட்சம் முக்கால் மணி நேரம் உட்கார்ந்தது தான் சாதனையாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து என்று ஸ்டீவன் கூறினார். |
| கட்டுக்கடங்கா ரோபோவை அடங்கவைத்த நாய் (வீடியோ இணைப்பு) Posted: 27 Apr 2012 08:03 AM PDT தனிமையில் தவித்த நாய் ஒன்று தனது விளையாட்டிற்கு துணையாக ரோபோ ஒன்றைத் தேர்ந்தெடுத்துள்ளது. ரோபோவின் அசைவைக் கண்டதும் நாய் அதனைப் பார்த்துக் குரைத்து பின் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதைப் பார்க்கும் போது வேடிக்கையாத் தான் இருக்கின்றது |
| Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை (வீடியோ இணைப்பு) Posted: 27 Apr 2012 07:57 AM PDT அதன்படி Boeing 777 ஆனாது சுமார் 300 பயணிகளைக் காவிச்செல்லக்கூடிய பிரமாண்டமான விமானம் ஆகும். இவ்விமானம் இரட்டை என்ஜின்களில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரையிறக்கத்திற்கு பயன்படும் வகையில் ஆறு சில்லுகளைக் கொண்டுள்ளன. |
| Boeing 777 ஜெட் விமானம் கட்டப்படும் முறை (வீடியோ இணைப்பு) Posted: 27 Apr 2012 07:55 AM PDT அதன்படி Boeing 777 ஆனாது சுமார் 300 பயணிகளைக் காவிச்செல்லக்கூடிய பிரமாண்டமான விமானம் ஆகும். இவ்விமானம் இரட்டை என்ஜின்களில் இயங்கக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரையிறக்கத்திற்கு பயன்படும் வகையில் ஆறு சில்லுகளைக் கொண்டுள்ளன. |
| ஆறாயிரம் அடிகள் உயரத்தில் தனது உயிரை பனைய வைக்கும் மனிதர் (வீடியோ இணைப்பு) Posted: 27 Apr 2012 07:52 AM PDT நாற்பது வயது நிரம்பிய டீன் எவ்விதமான கலக்கமுமின்றி சுமார் 130 அடிகள் இவ்வாறு தொடர்ச்சியாக நடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது |
| Posted: 27 Apr 2012 07:31 AM PDT • கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். • முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணையை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும். • தலைமுடி வறண்டு, சீராக இல்லாமல் இருந்தால் முகத்தின் தோற்றப் பொலிவும் குறையும். ஆகவே மறுநாள் காலையில் விழா என்றால் முதல் நாள் இரவில் கூந்தலை சீராக்குவது அவசியம். • முதல் நாள் மாலையில் கூந்தலை எப்போதும் போல் ஷாம்பு அல்லது சீயக்காய் வைத்து அலசி விடவும். அடுத்தநாள் கூந்தலை அலசி, துடைத்து விட்டு அலங்காரம் செய்தால் கூந்தல் பளிச்சென இருக்கும். முகமும் தோற்றப் பொலிவுடன் அனைவரையும் கவரும். • அழகு நிலையங்களுக்கு சென்று தலை முடியை கலரிங் செய்து விட்டு, ஷாம்பு மூலம் சுத்தம் செய்யும் போது கூந்தலில் உள்ள சில சத்துக்கள் அழிந்து போகும். இதற்கு வீட்டில் ஷாம்பு போட்டு முடித்த பின்னர், தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலக்கி கூந்தலை கழுவி அலசவும். இதனால் கூந்தல் பளபளப்பாகும். • செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். • இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கும் இது உதவுகிறது. |
| புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை Posted: 27 Apr 2012 07:28 AM PDT உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படி செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது. இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பத்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசையரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண் ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய். இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபகசக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர். கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பர நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட, ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம். திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டாப என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரியவந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். |
| Posted: 27 Apr 2012 07:25 AM PDT கருப்பை வாயில் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும். கருப்பைவாய் மற்றும் அதன் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களை `எச்.பி.வி.', வைரஸ் என்னும் கருவியின் மூலம் கருப்பைவாயில் உள்ள மாற்றங்களை பார்த்து எளிய முறையில் பரிசோதனை செய்யலாம். கருப்பை வாய் பரிசோதனையில் மிக எளிதான பரிசோதனை ஆகும். இந்த முறையில் எடுக்கப்படும் திசுக்களை பரிசோதிப்பதன் மூலம், புற்று நோயின் ஆரம்ப அறிகுறியை கண்டறிய முடியும். பரிசோதனைக்கு வரும் பெண்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. ஏனெனில், இந்த நோய் முற்றிய நிலைக்கு வர சில காலமாகும். அறிகுறி இருந்தால் அதற்குள் புற்றுநோயை தடுக்க முடியும். இந்நோய் நுண்கிருமி பாதிப்பால் ஏற்படுவதால், அதை தடுப்பூசி மூலம் தடுக்கலாம். இந்த தடுப்பூசி போடுவதால், உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி தூண்டப்படுகிறது. `எச்.பி.வி.' வைரசின் பாதிப்பு தடுக்கப்படுகிறது. இத்தடுப்பூசி நுண் கிருமியால் பாதிப்பு ஏற்படாதவர்களுக்கு பிற்காலத்தில் இந்த வைரசால் வரும் பாதிப்பை தடுக்கிறது. ஆனால் ஏற்கனவே, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சிகிச்சை மருந்தாக செயல்படாது. இது மூன்று ஊசிகளாக ஆறுமாத இடைவெளியில் கொடுக்கப்படுகிறது. இளம் வயதிலேயே கொடுப்பதன் மூலம் பிற்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கும் வாய்ப்புள்ளது. |
| மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தைராய்டு பிரச்சினையை விரட்ட வழிமுறைகள் Posted: 27 Apr 2012 07:25 AM PDT இந்தியாவில் மட்டும் 4.5 கோடி பேர் தைராய்டு நோயால் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் தாக்கிய பெண்கள் குழந்தை பெற முடியாமல் அவதிப்படுகிறார்கள். இந்த நோய் பற்றி நமக்கு விரிவாக விளக்குகிறார் டாக்டர் ஜெயராணி. அவர் கூறியதாது:- மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புகளின் செயல்பாடுகள் கூட கரு உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதை நாளமில்லா சுரப்பிகள். நம் உடலில் பிட்யூட்டரி தைராய்டு, பாராதை ராய்டு, அட்ரீனல் என பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை சுரக்கும் பொருளை இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் என்று அழைக்கிறோம். நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தைராய்டு சுரப்பியாகும். கருவில் குழந்தை உருவாகும் போது அதன் உணவுப் பாதையில் இருந்து கீழ் இறங்கி தொண்டைப் பகுதியில் இருக்கும் குரல்வளையைச் சுற்றி தைராய்டு சுரப்பி அமைந்திருக்கும். சுமார் 15 முதல் 25 கிராம் எடையுள்ள இது வண்ணத்துப் பூச்சியின் வடிவம் கொண்டது. வண்ணத்துப் பூச்சியின் இரு இறகுகள் போன்ற வடிவுடைய பகுதிகள் நடுவில் இணைப்பு திசுவால் இணைக்கப்பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி குரல்வளையோடு சேர்ந்து நன்றாகப் பிணைக்கப்பட்டிருப்பதால் சிலருக்கு உணவை விழுங்கும் போது குரல் வளையோடு தைராய்டு சுரப்பியும் மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும். தைராய்டு ஒருவரின் கண்ணுக்குப் புலப்படுகிற தென்றாலே அது தன் வழக்கமான 25 கிராம் எடையை விட மிகுதியாய் இருக்கிறது என்பதை அறியலாம். தைராய்டு அதனுடைய சுரப்புத் தன்மையை கரு உருவாகி இரண்டு வார காலத்தில் இருந்தே துவங்கி விடுகிறது. சுரக்கும் ஹார்மோனின் பெயர் தைராக்சின் தைராய்டு. தைராய்டு செல்களிடையே செழிப்பான ரத்த ஓட்டம் இருக்கிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் இருந்து அயோடின் என்ற அமிலத்துடன் இணைந்து தைராக்சின் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட ஹார்மோன் தைரோகுளோபுலின் சேமித்து வைக்கப்படுகிறது.தேவையான பொழுது இவை ரத்தத்தில் கலக்கப்படுகிறது. இந்த தைராக்சின் உருவாகும் செல்கள் ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது. உடல் வளர்ச்சிக்கும், உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், தைராய்டு ஹார்மோன்கள் பெரிதும் உதவுகிறது. உடல் வெப்ப நிலையை சீராக வைக்கவும் உதவுகிறது. செல் மற்றும் திசுக்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலில் வெப்பம் உண்டாக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். புரதப் பொருள்களை சிதைவுப்படுத்தி செல்களின் வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் உதவுகிறது.குளுகோஸ் உறிஞ்சப்படுவதை தூண்டுகிறது.கிளைக்கோஜன் சிதைவுபட உதவுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளில் இருந்து அதிக அளவில் விடுபட வைக்கிறது. வைட்டமின் ஏ உருவாக ஏதுவாக உள்ளது. குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதய துடிப்பை சீராக வைக்க உதவுகிறது. குடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப்படுத்துகிறது.இனப் பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற உதவுகிறது. பால் சுரப்பு கோளங்களை தூண்டி அதிக அளவில் பாலை சுரக்க வைக்கிறது. தைராய்டு சுரப்பியின் இயக்க குறைவினாலோ, மிகுதியாலோ நோய்கள் ஏற்படலாம். தைராய்டு இயக்க குறை நோயை என்றும் தைராய்டு இயக்க மிகை நோய் என்றும் அழைக்கின்றனர். குழந்தை கருவில் இருக்கும் போதே தைராய்டின் இயக்கம் குறைந்திருந்தால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையில் குழந்தை சுறு சுறுப்பாக உலாவவில்லை என்ற அறிகுறியின் மூலம் அறியலாம். அப்படிப்பட்ட குழந்தைகள் குழந்தை பிறந்த உடனேயே வீறிட்டு அழுவதில்லை. உடனே மலம் கழிப்பதில்லை. மூச்சு எடுத்து விடக் காலம் கடத்தும், மற்றும் வயிறு பெறுத்து, தொப்புளில் குடலிறக்கத்துடன் காணப்படும். இக்குழந்தைக்கு இயல்பாக பிறந்தவுடன் ஏற்படும் மஞ்சள் காமாலை நெடுநாள் வரை நீடிக்கும். பிறந்தது முதல் குழந்தையின் வளர்ச்சியும் முதிர்ச்சியும் மற்ற குழந்தைகளை விட பின் தங்கியே இருக்கும். வயதாக வயதாக குழந்தையின் அறிவு முதிர்ச்சி பின்தங்கக் துவங்கும்.பெற்றோர் இப்பருவதில் இதனை உணரத்துவங்குவார். கர்பத்தில் குறைபாடுகள், நினைவுக் குறைபாடுகள் ஆகியன தெரிய ஆரம்பிக்கும். பிறந்த சில ஆண்டுகளுக்கு பின் தைராய்டு குறை ஏற்பட்டால், இக் குழந்தைகளின் செயல்வேகம் குறைந்து இருப்பதை காண முடியும். பருவ வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தக்க சமயத்தில் பருவம் எய்துவதில்லை. இதுவே வயது வந்தவர்களுக்கு தைராய்டு குறை ஏற்படின் அதைகண்டு பிடிப்பதற்கே மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. தலைமுடி கொட்டுதல், புருவங்களில் இருந்து முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். முகம் எப்பொழுது பார்த்தாலும் தூங்கி விழிந்தது போலவே இருக்கும். கண்ணை சுற்றி ஒரு வீக்கம் இருக்கும். பேச்சு ஏற்றதாழ்வில்லாமல், மெதுவான வேகத்தில் இருக்கும். குரல் தடித்திருக்கும். மலச்சிக்கல் நீரி பிரியாமை, உடல் முழுவதும் வீக்கம் ஆகிய பிற அறிகுறிகள் தோன்றலாம். ஆண்மைக் குறைவு, மாத சுழற்சியின் போது உதிரம் அதிகம் போதல், மலட்டுத்தன்மை ஆகியவையும் தைராய்டு இயக்க குறையால் ஏற்படலாம். முதுமையில் தைராய்டு இயக்க குறைவு ஏற்பட்டால் அது நரம்புகள் பலம் இழப்பு, நரம்புகள் தடித்துப் போவதால் கைகளிலும், கால்களிலும் மதமதப்பு போன்றவை ஏற்படலாம்.கைகால் வலிப்பு உண்டாகலாம். சிறுமூளை பாதிக்கப்பட்டு தள்ளாட்டமும் நடுக்கமும் ஏற்படலாம். வளர்சிதை மாற்றம் அதிக அளவில் நடப்பதால் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவார்கள். அதிக அளவு வெப்பத்தை இவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. வயிற்றுப் போக்கு அதிகம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது உதிரம் குறைவாகவே வெளியேறும். மனதில் இனம் புரியாத பயம், படபடப்பு ஏற்படும். கைகள் நடுங்கும், இதயம் படபடக்கும். உடம்பெங்கும் வியர்த்துக் கொட்டும், எளிதில் சோர்வு ஏற்படும், சரியான உறக்கம் ஏற்படாது. வயதானவர்களுக்கு இந்த நோய் ஆண்மை குறைவை ஏற்படுத்தும், மாத சுழற்சி சிலசமயம் நின்று விடலாம். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப் புண்டு, இதயத்தின் இயக்கம் சீர்கெடும். நாடித்துடிப்பு 200-க்கு மேலாகவும் சீரில்லாமலும் இருக்கும். தைராய்டு நோய் ஒருவருக்கு இருக்கின்றதா என்று ஆராயும் போது இரண்டு செய்திகள் கவனிக்கப்படுகின்றன. தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் குறைவாகவோ, சரியாகவா அல்லது மிகுதியாகவோ என்பது. தைராய்டு சுரப்பின் வடிவம் எவ்வாறு உள்ளது என்பது உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை பரிசோதிப்பது தைராய்டு செயல்படும் நிலையை அறிய உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை அளப்பது, அடிப்படை வளர் சிதைமாற்ற விகிதத்தை கணிப்பது, போன்றவை மற்ற பரிசோதனை முறைகள் ஆகும். இதய மின் வரைபடங்களில் ஏற்படும் மாறுதல்கள் கூட தைராய்டு செயல்பாடு நிலையில் உள்ள மாறுபாடுகளை எடுத்துக் காட்டும். தைராய்டு சுரப்பியின் வடிவத்தை அறிய எக்ஸ்-கதிர் படம் கணினி அச்சு வெட்டுப்படம். காந்த அதிர்வு படம் மற்றும் நுண் ஒலித் துருவு படங்கள் உதவுகின்றன. கதிரியக்க அயோடின், டெக்னீஷியம் 99 எம், தாலியம் ஆகிய மூலகங்களைத் தைராய்டு சுரப்பி கவரும் தன்மை கொண்டது. இத்தன்மையை பயன்படுத்தி சில துருவப் படங்கள் எடுப்பதன் மூலம் தைராய்டின் வடிவம் மட்டுமின்றி எந்தப் பகுதி மிகுதியாக வேலை செய்கின்றது, எந்தப் பகுதி குறைவாக வேலை செய்கிறது என்பதை அறிய முடியும். தைராய்டு இயக்க கோளாறுகளால் ஏற்படும் நோயை தக்க மருத்துவரின் உதவியுடன் அறிந்து அதற்கு உகந்த மருந்துகளை உட்கொள்வது சிறந்தது. மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகளை உட்கொள்வதால் அயோடின் சத்து நம் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது.இதனால் தைராய்டு நோய்கள் முளையிலேயே தடுக்கப்படுகிறது. நவீன மருத்துவ முறைகளில் தைராய்டு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்துகள் உள்ளன என்கிறார் சென்னை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் ஜெயராணி. தைராய்டு சுரப்பிக் குறைபாட்டை பரிசோதனைகள் மூலம் கண்டறிய இயலும். இச்சுரப்பி மிகுதியாகச் சுரந்தாலோ மிகவும் குறைவாகச் சுரந்தாலோ மலட்டுத் தன்மை ஏற்படும். தைராய்டு சுரப்பிக் கோளாறினால் ஏற்படக் கூடிய விளைவுகள்: 36 நாட்கள் இடைவெளியில் மாத விலக்குத் தோன்றினால், சில வேளைகளில் மாத விலக்கே ஏற்படாமல் இருந்தால் அல்லது அடுத்தடுத்து மாத விலக்காகி குறைந்த உதிரப் போக்கும் அதுவும் துர்நாற்றத்துடன் இருந்தால் முட்டை வெளிப்படாது இயல்பான மாதப்போக்கு இருந்தாலும் முட்டை வெளிவருவதில் சிக்கல் ஏற்படும். உடல் எடை அதிகரிப்பு, அதிகமான கொழுப்பு முட்டை வெளிப்படாத நிலை சேர்ந்து இருக்கும். இத்தகைய பிரச்சினையால் முட்டை வெளியிடப்பாத குறைபாடுள்ளவர்கள் உணவு, முறை மாற்றம் செய்து கொழுப்பைக் குறைக்கலாம். அதிகமாக கொழுப்பைக் குறைத்தாலும் மலட்டுத் தன்மை வரும். அதிக உடற்பயிற்சி செய்தாலும், முட்டை வெளிப்படுவது தடைபடும், நீண்ட தூரம் ஓட்டம் ஆபத்தானது, மாத விலக்கு ஒழுங்காக வராத நிலை இருந்தால் ஓட்டம் மற்றும் உடற்பயிற்சியை குறைத்துக் கொள்ளலாம். பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இருந்தால் முகம் மற்றும் உடலில் அதிகப்படியாக முடி முளைக்கும் முட்டை வெளிப்படுவதில் சிக்கல் ஏற்படும். இக்குறைபாட்டை நவீன சிகிச்சை மூலம் சரிப்படுத்தினால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். தைராய்டு சுரப்புக் குறை என்பது பொதுவான மக்கள் தொகையில் மூன்று சதவீதம் இருக்கின்றது. அயோடின் குறைபாடு அல்லது அயோடின் வெளிப்பாடு போன்ற காரணிகள் அதன் இடரை அதிகரிக்கும். தைராய்டு சுரப்புக் குறைவுக்கு பல காரணிகள் உள்ளன. தைராய்டு சுரப்புக் குறையானது பேற்றுக்குபின் தைராய்டு சுழற்சியை விளைவிக்கும். இந்த நிலையானது அனைத்து பெண்களில் 5 சதவீதம் பேருக்கு பிரசவத்திற்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. முதல் கட்டம் என்பது வழக்கமாக அதி தைராய்டியம் ஆகும். பின்னர் தைராய்டு ஆனது இயல்புக்கு திரும்புகிறது அல்லது பெண் தைராய்டு சுரப்புக் குறைக்குத் திரும்புகிறது. அந்த பெண் பேற்றுக்குப் பின் தைராய்டு சுழற்சியுடன் தொடர்புடைய தைராய்டு சுரப்புக் குறையை உணர்கிறார். ஐந்தில் ஒருவர் வாழ்க்கை முழுவதும் சிகிச்சை தேவைப்படுகின்ற நிரந்தர தைராய்டு சுரப்புக் குறையைப் பெறுவார். தைராய்டு சுரப்புக்குறைக்கு விரவும் தன்மையுள்ள மரபுப்புரவலும் சில நேரம் ஆட்டோசோம் மங்கலும் காரணமாக அமையலாம். தைராய்டு சுரப்புக்குறை ஒப்பிடுகையில் வீட்டு நாய்களுக்கு வரும் பொதுபாலின் நோயுமாகும். இதில் சில குறிப்பிட்ட நாய் இனங்களில் அது குறிப்பிடத்தக்க உணர்தன்மை மிகுதியுடையவையாக உள்ளன. தற்காலிகமான தைராய்டு சுரப்புக் குறைக்கு உல்ஃப்- சைக்காப் காரணமாக இருக்கலாம். அதிகமாக அயோடின் எடுத்துக் கொள்வது தைராய்டு சுரப்புக் குறையை குணப்படுத்தப் பயன்படுத்தப்படலாம். குறிப்பாக அவசரக் காலங்களில் அயோடின் என்பதும் தைராய்டு ஹார்மோன்களுக்கான பற்று பொருளாகும், அதன் அளவு அதிகமானால் உட்கொள்ளப்படும்.அயோடின் சிறு அளவையே எடுத்துக் கொள்ளும் படி கட்டுப்படுத்தப்படும். இதனால் ஹார்மோன் உற்பத்தி குறைக்கப்படும். மோசமான தசை தளர்ச்சி, களைப்பு, குளிர் தாங்க முடியாமை, குளிரை உணர்தல் அதிகரித்தல், உளச் சோர்வு, தசைப்பிடிப்புகள் மற்றும் மூட்டு வலி, மணிக்கட்டு குகை நோய், முன்கழுத்துக் கழலை, மெலிதல், விரல் நகங்கள் நொறுங்குதல், மெலிதல், முடி நொறுங்குதல், வெளிரிய தன்மை, குறைவான வியர்வை, உலர்ந்த அரிக்கும் தோல், எடை ஏற்றம் மற்றும் நீர்ப்பிடிமானம், குறை இதயத் துடிப்பு, (குறைவான இதயத்துடிப்பு வீதம் நிமிடத்திற்கு அறுபது துடிப்புகள்), போன்றவை தைராய்டு நோய்க்கான முக்கிய அறிகுறிகள் ஆகும். |
| Posted: 27 Apr 2012 07:23 AM PDT தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ்- 100 கி தக்காளி - 2 சின்ன வெங்காயம் - 100 கி வரமிளகாய் - 4 பூண்டு - 10 பல் புளி - கோலி குண்டு அளவு உப்பு - தேவையான அளவு எண்ணை - 3 ஸ்பூன் செய்முறை.... * முதலில் கோஸ் மற்றும் தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை தோல் உறித்துக் கொள்ளவும். * கடாயில் எண்ணை ஊற்றி கோஸ், தக்காளி, சின்ன வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு போன்றவற்றை தனித்தனியாக ஒன்றன் பின் ஒன்றாகபோட்டு வதக்கிக் கொள்ளவும் * வதக்கியவற்றை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். |
| Posted: 27 Apr 2012 07:22 AM PDT தேவையான பொருட்கள்:- பால்- ஒரு டம்ளர். தண்ணீர்- ஒரு டம்ளர். சர்க்கரை- மூன்று தேக்கரண்டி. டீ தூள்- ஒரு தேக்கரண்டி. புதினா- அரை கை பிடி. இஞ்சி- ஒரு சிறிய துண்டு. செய்முறை:- * இஞ்சியை ஒன்றும் பாதியாக தட்டிக்கொள்ளவும். * புதினா இலைகளை மட்டும் ஆய்ந்து மண் இல்லாமல் அலசி வைக்கவும். * முதலில் ஒரு பாத்திரத்தில் பால், தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். கொதித்த உடன் அதில் சர்க்கரை சேர்க்கவும். *கொதி வரும் போது டீ தூள் போட்டு அதில் இஞ்சியும் சேர்த்து நன்கு பொங்கும் வரை கொதிக்க விட்டு வடித்து விடுங்கள். *உடனே புதினா இலைகளை சூடான டீயில் போட்டு இரண்டு நிமிடம் மூடி வையுங்கள். *பிறகு வடித்து குடிக்கவும். குறிப்பு.... |
| Posted: 27 Apr 2012 07:22 AM PDT செய்முறை: முதலில் தரையில் படுத்துக்கொண்டு கால்களை முன்னால் இழுத்து கைகளைப் பின்னால் ஊன்றி முதுகையும், உடலையும் உயர்த்தி படத்தில் பாட்டியபடி நிற்க வேண்டும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். ஆரம்பத்தில் 2 முறை பழகலாம். பலன்கள்: |
| Posted: 27 Apr 2012 07:21 AM PDT இரு கால்களை நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டே கைவிரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்ட விரலையோ பிடித்து கொள்ளவேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலையில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள். பயன்கள்:- |
| Posted: 27 Apr 2012 07:20 AM PDT பூஜை அறையை மூடும் போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால் தான் மறுநாள் காலையில் தீபம் ஏற்ற இயலும். இல்லை எனில் தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும். அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று இருக்கும் போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தியினால் அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது. விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கு ஏற்றுவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை. கோவில்களில் கூட கர்ப்பகிரகத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிரகத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோவிலுக்கு நல்லதுதானே என்று சொல்லலாமா? ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்க வேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக் கொண்டு பூஜையையும் பாதிப்புக்குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தை கடைப்பிடித்தால் அபசாரம் இருக்காது. |
| வேலவனுக்கான செவ்வாய்க்கிழமை விரதம் Posted: 27 Apr 2012 07:19 AM PDT கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறுவோமாக! |
| Posted: 27 Apr 2012 07:16 AM PDT |
| Posted: 27 Apr 2012 07:14 AM PDT ஞாயிறு பிரதோஷம்- சுப மங்களத்தை தரும். திங்கள் சோம பிரதோஷம்- நல்எண்ணம், நல்அருள் தரும். செவ்வாய் பிரதோஷம்- பஞ்சம், வறுமை, பட்டினி அகலும். புதன் பிரதோஷம்- நல்ல புத்திரபாக்யம் தரும். வியாழன் பிரதோஷம்- திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும். வெள்ளி பிரதோஷம்- எதிரிகள், எதிர்ப்பு விலகும். சனிப்பிரதோஷம்- அனைத்து துன்பமும் விலகும். |
| Posted: 27 Apr 2012 07:13 AM PDT த்ரயீமயீம் த்ரிபுவனமாதரம் ரமாம்! குணாதிகா குருதரபாக்யபாகின:! பவந்தி தே புவி புதபாவிதாஸயா:!! விளக்கம்:- |
| Posted: 27 Apr 2012 07:11 AM PDT தல வரலாறு...... அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக பகவான் ஸ்ரீமன் நாராயணன் பல அவதாரங்கள் எடுத்தார். அவற்றில் தனிச் சிறப்பு பெற்றது நரசிம்ம அவதாரம். அசுர குடும்பத்தில் பிறந்தாலும், பக்தியால் தன்னை வளைத்துப் போட்ட ஒரு குழந்தைக்காக உருவானவரே நரசிம்மர். இரண்யன் என்னும் அசுரன். தன்னையே நாட்டு மக்கள் வணங்க வேண்டும் என உத்தரவிட்டான். அவனது மகன் பிரகலநாதன், பகவான் நாராயணனின் பக்தனாக விளங்கினான். தந்தை மீது மரியாதை கொண்டாலும் கடவுளாக ஏற்க மறுத்தான். பெற்ற பிள்ளை என்றும் பாராமல் பலவகையிலும் கொடுமை செய்தான். அவனைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார் திருமால். தவ வலிமை மிக்க இரண்யன் தனக்கு மனிதர், மிருகம், பிற சக்திகளால் அழிவு வரக்கூடாது என்ற வரம் பெற்றிருந்தான். எனவே திருமால் சிங்க முகமும், மனித உடலும் கொண்ட வித்தியாசமான வடிவில் தோன்றி அவனை அழிக்க முற்பட்டார். ``உன் ஹரி எங்கே இருக்கிறான்?' என்று அவன் தன் மகனிடம் கேட்டதும், நரசிம்மரே திகைத்து விட்டார். இந்தச் சிறுவன் நம்மை எங்கே இருக்கிறான் என்று சொல்வானோ என அதிர்ந்து போனார். ஆனால் பிரகலாதன் உலகில் உள்ள அத்தனை தூசு, துரும்பில் கூட ஹரி இருக்கிறார் என கூறினான். இறுதியில், பிரகலாதன் ஒரு தூணைக் காட்ட அதைப் பிளந்தான் இரண்யன். உள்ளிருந்து வெளிப்பட்டார். நரசிம்மர். இரண்யனை தன் மடி மீது வைத்து அவனைப் பிளந்தார். அவரது உக்கரத்தைத் தணிக்க லட்சுமிபிராட்டியே பூமிக்கு வந்து பகவானின் மடியில் அமர்ந்தாள். அது முதல் அவர் ``லட்சுமி நரசிம்மர்'' என பெயர் பெற்றார். சிற்பம்சம்........... 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் இது. எட்டாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. நெல்லையப்பர், காந்திமதி அம்பிகை கோவில் பாண்டிய மன்னால் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னரே, இந்த நரசிம்மப்பெருமானின் திருமேனி வடிவமைக்கப்பட்டதாக தகவல் உள்ளது. இந்த சன்னதியும், நெல்லையப்பர் மூல லிங்கமும் ஒரே மட்டத்தில் இருந்துள்ளன. இரு கோவில்களுக்கும் இடையே சுரங்கம் ஒன்றும் இருந்தது. ஒரு காலத்தில் இக்கோவில் மண்ணுக்குள் புதைந்து விட்டது. வைணவ மகான் ஸ்ரீ கூரத்தாழ்வார் கோன் இதை மீண்டும் கண்டு பிடித்தார். அப்போது நரசிம்மர் அளவற்ற சக்தியுடன் ஆர்ப்பரித்து தனது சக்தியை வெளிப்படுத்தினாராம். இம்மகானுக்கு பிறகு வைணவ பக்தர்களான பேரருளாளர் கோன், திருமங்கையாழ்வார் கோன் ஆகியோர் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்து நிர்வாகத்தையும் கவனித்து வந்தனர். செவ்வாய் தோஷ நிவர்த்தி............ கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் நீராஞ்சன தீபம் செலுத்தும் வகையில் பக்தர்கள் அரிசி, தேங்காய், நல்லெண்ணை எடுத்து செல்கின்றனர். ஒரு தட்டில் அரிசியை பரப்பி தேங்காய் உடைத்து வைக்க வேண்டும். அதில் நல்லெண்ணை விட்டு தீபம் ஏற்ற வேண்டும். இதனால் செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் தோஷத்தால் ஏற்பட்ட திருமண தடை விலகுவதாக நம்பிக்கை. கடன் பிரச்சினை, நீதிமன்ற வழக்கு பிரச்சினை, வீடு, நிலம் பிரச்சினைகள் தீர்வதற்கும், வியாபார பெருகுவதற்கும் சர்க்கரையும், எலுமிச்சை சாறும் கலந்து பானகம் நைவேத்யம் செய்கின்றனர். எந்தக் குறை ஏற்பட்டாலும், அதற்கு இவர் பரிகாரம் செய்வார் என்ற நம்பிக்கை இருப்பதால் நரசிம்மபெருமாளையும், தாயாரிடமும் பக்தர்கள் கண்ணீர் வடித்து, உருக்கமாக, தங்கள் கோரிக்கைகளைச் சொல்வதை இங்கு காண முடியும். சிலையின் சிறப்பு............. தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கு பெருமாளின் இடது மடியில் அமர்ந்த மகாலட்சுமி பெருமாளின் தோளில் கைபோட்டபடி இருப்பதைக் காண முடியும். அவளது கையில் தாமரை மலர் உள்ளது. இவள் பெருமாளை நோக்கி தனது பார்வையைத் திருப்பி இருக்கிறாள். இங்கு வந்து கோரிக்கை வைக்கும் பக்தர்களின் குறையை உடனே தீர்க்கும்படி அவள் பெருமாளிடம் தெரிவித்துக் கொண்டே இருக்கும் வகையில், அவர் மீது வைத்த கண்ணைத் திருப்பாமல் இருப்பதாக ஐதீகம். இப்படி ஒரு சிலை அமைப்பு காண்பதற்கு அரிய ஒன்றாகும். அது மட்டுமல்ல. இந்தப் பெருமாள் நரசிம்மர் என அழைக்கப்பட்டாலும், அவருக்கு சிங்க முகம் கிடையாது. இப்படிப்பட்ட பெருமாளை `பிரகலாத வரதன்' என அழைப்பது வழக்கம். இதுபோன்ற அமைப்புள்ள நரசிம்மரிடம் வைக்கும் கோரிக்கை பரிவுடன் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதும் நம்பிக்கை. இருப்பிடம்....... திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் பின்புறம் உள்ள மேலமாட வீதியில் கோவில் அமைந்துள்ளது. பழைய பஸ் நிலையத்தில் இருந்து டவுனுக்கு செல்லும் பஸ்களில் சுவாமி சன்னதி முன்பு இறங்கி நடந்து சென்றுவிடலாம். கோவில் திறக்கும் நேரம்:- |
| கிருஷ்ணரை விரத வழிபாடு செய்வது எப்படி? Posted: 27 Apr 2012 07:10 AM PDT கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா? ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும். அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும். ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும். பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா, சாய்வாலா, ஆம்பர் மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும். வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கையில் பிரதட்சணம் செய்ய வேண்டும். கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், ஸ்ராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடு இரவில், ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிறந்தார். கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக் காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் `ஓம் நமோ' பகவதே வாசுதேவாய' என நாம ஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும். |
| Posted: 27 Apr 2012 07:07 AM PDT 1.பார்கவ நரசிம்மர்:- கீழ் அஹோபிலத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இது உள்ளது. பார்கவ தீர்த்தம் அருகில், குன்றில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பார்கவ ராமர் வழிபட்டதால் பார்கவ நரசிம்மர் என்று பெயர் வந்தது. 2. யோகானந்த நரசிம்ம சுவாமி:- கீழ் அஹோபிலத்திற்கு தென் கிழக்குத் திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோவில் உள்ளது. கிரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்தபின் பக்தர் பிரகலாதனுக்கு சுவாமி அனுக்கிரகம் செய்ததோடு, யோக முறைகள் பலவற்றையும் இங்கே போதித்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது. 3. சத்ரவட நரசிம்மர்:- இது கீழ் அஹோபிலத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் முட்புதர்கள் சூழ்ந்த ஓரிடத்தில் உள்ளது. இங்கு சுவாமி ஓர் ஆலமரத்தின் கீழ் சேவை சாதிப்பதால் இந்தப் பெயர். வட வருசம் ஆலமரத்தின் பெயராகும். 4. அஹோபில நரசிம்மர்:- மேல் அஹோபிலத்தில், கீழ் அஹோபிலத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. மற்ற எல்லாக் கோவில்களை விடப் பழமையானதும், முதன்மையானதுமான சன்னதி இது. உக்ர நரசிம்மராக இங்கே சுவாமி காட்சி தருகிறார். இந்த சிலாரூபம் தானாக ஏற்பட்ட `சுயம்பு விக்கிரகம்' என்று உறுதியாகக் கூறப்படுகிறது. 5. குரோட(வராஹ) நரசிம்மர்:- அஹோபில நரசிம்மர் கோவிலிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் இது அமைந்துள்ளது. சுவாமியின் முகம் வராஹர் என்னும் குரோட வடிவத்தில் இருப்பதால் இந்தத் திருநாமம். லட்சுமிதேவி சம்பன்னராக இவர் சேவை சாதிக்கிறார். 6. கரஞ்ச நரசிம்மர்:- மேல் அஹோபிலத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் கரஞ்ச (புங்கை மரம்) தருவினடியில் இந்த நரசிம்மர் எழுந்தருளியிருப்பதால் கரஞ்ச நரசிம்மர் என்று இவரது திருநாமம். 7. மாலோல நரசிம்மர்:- மேல் அஹோபிலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமாலோல நரசிம்மர் மிகப் பிரசித்தி பெற்றவர். திருவுடன் (லட்சுமியுடன்) நேர்த்தியாக சாந்த ஸ்வரூபமாக காட்சி தருவதால் `ஸ்ரீமாலோல' நரசிம்மர் எனப் பெயர் பெற்றார். இந்த மூர்த்தியின் உற்சவ விக்கிரகம் முதல் ஆதிவன் சடகோப யதீந்திர மகா தேசிகன் சுவாமிக்கு நேரிடையாக நரசிம்மரால் அனுகிரகிக்கப்பட்டதால் மேற்படி அஹோபில மடத்தின் ஜீயர் சுவாமிகள் யாத்திரையாக எங்கு எழுந்தருளினாலும், ஸ்ரீமாலோல நரசிம்மருடன் சென்று வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. 8. ஜவாலா நரசிம்ம சுவாமி:- அசலசாயா மேரு என்ற உயரமான மலையில், மேல் அஹோபிலத்தில் இருந்து இன்னும் 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. புராணப்படி இங்கு தான் நரசிம்ம சுவாமி கிரண்ய கசிபுவை சம்ஹாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. 9. பாவன நரசிம்மர்:- |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |














