சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- எதிர்பார்க்காத நேரத்தில் சம்பவித்த மரணம் (வீடியோ இணைப்பு)
- வீடு திரும்பிய போர் வீரனுக்கு பரிசளித்து பாசத்தைக் காட்டும் அதிசய நாய் (வீடியோ, படங்கள் இணைப்பு)
- Slate 8 Tabletன் வடிவமைப்பை HP நிறுவனம் வெளியிட்டது
- தோழனே... உன்னை மறப்போமா? -இதயச்சந்திரன்
- அப்பாவி தமிழ் பொதுமக்களோடு விளையாட இது தருணமல்ல - கே.பி
- இலங்கைக்கு நெருக்குதல்களை வழங்குமாறு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு கடிதம்!
- விடுதலைப் புலி உறுப்பினர்களை தேடும் நோக்கில் பொதுமக்களை கைது செய்யும் பொலிஸார்
- சிறிலங்கா விவகாரத்தினை கையிலெடுத்த அமெரிக்க மாணவ சமூகம்
- தமிழீழம் கோரி திமுக எம்.பிக்களுடன் உண்ணாவிரதம் இருக்கட்டுமே கருணாநிதி!- ராமதாஸ்
- படத்தில் நடிக்க வைக்க முமைத்கானின் பெற்றோரிடம் எழுதி வாங்கிய இயக்குனர்
- மகிந்த வாக்குறுதியை மீறியதால் கடுப்பில் இருக்கும் சுஸ்மா அடுத்தகட்டம் குறித்து ஆராய்வு
- கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி!
- த்ரிஷா,பிபாஷாவுடன் நெருக்கமா? ராணா பதில்
- தமிழீழம் பற்றி கருணாநிதி திடீரெனத் தொடர்ந்து பேச ஆரம்பித்து உள்ளாரே... என்ன மேட்டர்?
- சீனா, ரஸ்யா வெளியேற்றம்! ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி
- யாழ். நெடுந்தீவில் ரணிலுக்கு எவ்வித உதவிகளையும் வழங்க கூடாது: பொதுமக்களுக்கு ஈபிடிபி அச்சுறுத்தல்
- ஜெர்மனியில் பாடமாகிறது ஹிட்லரின் சுயசரிதை 67 ஆண்டு கழித்து அச்சாகும் புத்தகம்
- வேறொருத்தியை காதலித்ததால் ஆத்திரம் காதலனை ‘பொக்கை’ ஆக்கிய பெண் டாக்டர்
- தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட முடியாது : முஸ்லிம் காங்கிரஸ்
- பாணின் விலை 58 ரூபாவாக அதிகரிப்பு
- பீரிஸின் இரகசிய செயல்திட்ட வரைபை வெளியிடுமாறு இலங்கைக்கு அமெரிக்கா புதிய அழுத்தம்!
- அமெரிக்கப் பெண் இராஜதந்திரிகளிடம் சிக்கப்போகும் பீரிஸ் குழு
- வேகமாக கார் ஓட்டி தம்பதி மீது மோதல்: முன்னாள் இந்திய அழகி அபர்ணா சர்மா கைது
- இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம்! வைகோ அறிவிப்பு!
| எதிர்பார்க்காத நேரத்தில் சம்பவித்த மரணம் (வீடியோ இணைப்பு) Posted: 29 Apr 2012 08:14 AM PDT |
| வீடு திரும்பிய போர் வீரனுக்கு பரிசளித்து பாசத்தைக் காட்டும் அதிசய நாய் (வீடியோ, படங்கள் இணைப்பு) Posted: 29 Apr 2012 08:12 AM PDT ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நோட்ட படையில் பணியாற்றிய ஜேர்மனிய போர் வீரர் ஒருவர், விடுமுறையை ஒட்டி தனது சொந்த நாட்டிற்கு பயணம் செய்தவேளை வீட்டினுள் வைத்து அவரது வளர்ப்பு நாய் பரிசளித்து பாசமழை பொழிந்து வரவேற்றுள்ளது. ஐந்தறிவுள்ள ஜீவனின் நன்றி மறாவாமையின் வெளிப்பாடாகக் கருதப்படும் இச்செயற்பாடு பார்ப்பவர்களின் இதயத்தை மிகவும் ஆழமாக வருடிச்செல்கின்றது. ![]() ![]() ![]() ![]() |
| Slate 8 Tabletன் வடிவமைப்பை HP நிறுவனம் வெளியிட்டது Posted: 29 Apr 2012 08:08 AM PDT 10.1 அங்குல அளவிலான திரையைக் கொண்டுள்ள இந்த Slate 8 Tabletன் மின்கலமானது எட்டு தொடக்கம் பத்து மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக இயங்கவல்லது. மேலும் 9.2 மில்லி மீட்டர்கள் தடிப்புடையதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த Tabletகளின் நிறை 1.5 பவுண்டஸ் ஆகும். இவற்றிற்கான உள்ளீடுகளை லைட் பென்னைப் பயன்படுத்தியும் வழங்கக் கூடியதாகக் காணப்படுவதுடன் அதிகளவு பாதுகாப்பு வசதியையும் கொண்டுள்ளது. ![]() |
| தோழனே... உன்னை மறப்போமா? -இதயச்சந்திரன் Posted: 29 Apr 2012 07:30 AM PDT ஊடகச் சமராடி, தோழர். 'தராகி சிவராம்' மறைந்து 7 ஆண்டுகளாகி விட்டன. அவர், தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை, ஆழமான சர்வதேசப் பார்வை ஊடாக தெளிவாக முன்வைத்த ஒரே ஊடகவியலாளன் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்தியாதான் எமது உலகம் என்று குறுகிக் கிடந்தவர்களின் சிந்தனைத் தளத்தினை விரித்துவிட்டவரே நண்பன் சிவராம். கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவு நிலை சீர்குலைந்து போனதிற்கான அடிப்படைக் காரணியை, தான் கற்றுக்கொண்ட மாக்சிய இயங்கியல் தத்துவத்தின் ஊடாக புரியவைத்தவரும் அவர்தான். மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக , கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நீர்,நிலவளங்களை அபகரித்த சிங்களத்தின் செயற்பாடு, அவர்களிடையே எவ்வாறு முரண்நிலையைத் தோற்றுவித்தது என்பதனை ஒரு நேர்காணலில் விளக்கமாகக் கூறியிருந்தார் சிவராம். தராக்கி மறைந்த ஏழு ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள். சீனாவின் எழுச்சி, மேற்குலகின் வீழ்ச்சி, 'பிரிக்ஸ்' இன் தோற்றம், ஆசியாவில் அமெரிக்காவின் 'புதிய பார்வை' என்று ஏகப்பட்ட திருப்பங்கள். அதுமட்டுமல்லாது, யுத்தம் முடிவடைந்ததும், இலங்கை ஊடகத்துறையில் புதிய பரிமாணங்களை உள்வாங்கும் வகையில், நிதியியல் ஊடகவியலின் [Financial Journalism ] காத்திரமான பங்கு முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்கலாம். தென்னிலங்கை சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் நிதியியல், வர்த்தகம் குறித்த பத்தி எழுத்துக்கள் அதிகமாகக் காணப்பட்டாலும், தமிழ் பரப்பில் இதன் வகிபாகம் போதுமானதாக இல்லை என்பதையும் இந்நாளில் குறிப்பிட்டாக வேண்டும். இருப்பினும் அரசியல், இராணுவம், பொருளாதாரம் என்கிற விடயங்களை தனது எழுத்துக்களில் ஆய்வுக்குட்படுத்திய , பேசுபொருளாக்கிய, மாமனிதர் சிவராமின் பங்கினை இந்நாளில் நினைவுகூருவது பொருத்தமானது. துப்பாக்கிச் சன்னங்கள் அறிவியலாளனின் இயக்கத்தை நிறுத்தலாம். ஆனால் அவன் மக்களிடம் விதைத்த புதிய சிந்தனை முறைமைகளை அழிக்கமுடியாது . நடேசன், நிமலராஜன், சுகிர்தராஜன், சத்தியமூர்த்தி போன்ற எண்ணற்ற தமிழ் தேசிய ஊடக எழுத்துச் சமராடிகளை நாம் இழந்தாலும், அவர்கள் அக்காலத்தில் ஆற்றிய பெரும்பணி முடிவுறாமல் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. ஒடுக்கப்படும் தமிழ் தேசிய இனத்தின் ஊடக வீச்செல்லை விரிந்து கொண்டு செல்கிறது. அவர்களின் ஆளுமை, எமது ஒவ்வொரு எழுத்திலும் ஆழமாகப் புதைந்து கிடக்கிறது. போராட்ட வடிவங்கள் மாறினாலும், விடுதலைக்காக எழுதிக் குவிக்கும் எழுத்தாளனின் இலக்கு மாறாது. |
| அப்பாவி தமிழ் பொதுமக்களோடு விளையாட இது தருணமல்ல - கே.பி Posted: 29 Apr 2012 07:28 AM PDT தமிழ் அரசியல் கட்சிகள் முரண்பாட்டு அரசியலை கைவிட வேண்டுமென புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுவர் இல்லமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கைச் சேர்ந்த அப்பாவி தமிழ் மக்களை சில புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் பொது மக்களோடு விளையாட இது தருணமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலங்களில் அனுபவித்த பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபடவே மக்கள் விரும்புவதாகவும், கடந்த காலங்களில் இழைத்த அதே தவறினை மீள இழைக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக வடக்கில் பெரும் எண்ணிக்கையிலான கணவனை இழந்த பெண்களும்இ அநாதைச் சிறுவர் சிறுமியரும் உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை மிகவும் நிதானமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்... "நீடோ" அமைப்பினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வந்த முல்லைத்தீவு பாரதி இல்லம் வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் குமரன் பத்மநாதன் (கே.பி.), முன்னாள் எம்.பி. சதாசிவம் கனகரட்ணம், முல்லை. அதிபர் என். வேதநாயகம். முள்ளியவளை இராணுவ தளபதி கேணல் மதநாயக்க ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். ![]() |
| இலங்கைக்கு நெருக்குதல்களை வழங்குமாறு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு கடிதம்! Posted: 29 Apr 2012 07:25 AM PDT இலங்கை - இந்திய உடன்படிக்கையில் உருவான 13வது திருத்தச் சட்டத்தை உடன் அமுல்படுத்துவதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் மக்களுக்காகன தீர்வை உடனடியாக வழங்க இலங்கை அரசிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என இந்திய மத்திய அரசுக்கு தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் இலங்கைக்கான வருகையை மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவில் அடங்கியிருந்த தமிழக உறுப்பினர்களான சுதர்சன நாச்சியப்பன், எம்.கிருஷ்ணசாமி, வி.சேத்தன் மற்றும் மணிக் தாகூர் ஆகியோர், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மேற்படி கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். ஒரு வரையறுக்கப்பட்ட கால எல்லையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்துமாறும்அத்துடன், ராஜீவ் காந்தியுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் சிறிலங்கா அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன்மூலம் தீர்வு திட்டமொன்றை செயற்படுத்தி வெளிநாடுகளில் உள்ள தமிழ் அகதிகள் மீண்டும் நாடு திரும்புவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். வடக்கில் மீனவர் குடும்பங்களின் காணிகள் இராணுவத்தால் பறிக்கப்பட்டுள்ளது. அவை மீள அம்மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். இராணுவத்திற்கு பதிலாக காவற்றுறையினரை நிலை நிறுத்துவது குறித்து சிறிலங்கா சர்வதேசத்திற்கு உறுதியானதொரு தகவலை வழங்க வேண்டும். என சுட்டிக்காட்டியுள்ளனர். இந்திய மனித வள அமைப்பு சிறிலங்காவுக்கு தமிழ் தெரிந்த ஆங்கில, விஞ்ஞான மற்றும் கணித பாட ஆசிரியர்களை அனுப்பி வைத்து தமிழ் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் எனவும் வேண்டப்பட்டுள்ளது. |
| விடுதலைப் புலி உறுப்பினர்களை தேடும் நோக்கில் பொதுமக்களை கைது செய்யும் பொலிஸார் Posted: 29 Apr 2012 07:24 AM PDT விடுதலைப் புலி உறுப்பினர்களை தேடி அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் பொலிஸார் தேடுதல் வேட்டைகளை ஆரம்பித்து அப்பாவி பொதுமக்களை கைது செய்வதாக தெரியவந்துள்ளது. இதுவரையில் புனர்வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்களை அடையாளம் காண விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இறுதிக் கட்ட போரின் போது தலைமறைவாகிய மற்றும் தப்பிச் சென்ற புலிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, புனர்வாழ்வு அளிக்கப்படாத 500 புலி உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 200 பேர் திருகோணமலைப் பிரதேசத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில சிரேஸ்ட புலி உறுப்பினர்களும் இவ்வாறு தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும், இவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் தரப்பு செய்திகள் வெளிவந்துள்ளன. |
| சிறிலங்கா விவகாரத்தினை கையிலெடுத்த அமெரிக்க மாணவ சமூகம் Posted: 29 Apr 2012 07:23 AM PDT சர்வதேச பொது மன்னிப்பு சபை(Amnesty International) என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில், அமெரிக்க உயர்கல்வி மாணவ சமூகத்தினால், நியூயோர்க் நகரில் சிறிலங்கா தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வொன்று, பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. "Get on the Bus for human rights " எனும் தலைப்பில், சிறிலங்கா தொடர்பில் ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு நிகழ்வானது, உள்ளக அரங்க நிகழ்வாகவும், வெளித்திடல் கவனயீர்ப்பு போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளக அரங்க நிகழ்வில், அம்னெஸ்ரி அமைப்பின் மேலாளர் Director Susan Nossel ,சிறிலங்காவில் இருந்து தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள பிரபல ஊடகவியலாளர் ஏ.எஸ்.திசநாயகம் மற்றும் பர்மா ,இந்தோனேசிய பிரதிநிதிகள் பலரும் உரையாற்றியிருந்தனர். காணமல்போயும் , கடத்தி வைக்கப்பட்டும் உள்ளவர்களது நிலையினை வலியுறுத்தும் வகையில் இடம்பெற்றிருந்த நிகழ்வரங்கொன்று, பர்மிய பெண்ணொருவரினால் மேற்கொள்ளப்பட்டமை அனைவரது கவனத்தினையும் பெற்றது. அண்ணளாவாக 700க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர். உள்ளரங்கினைத் தொடர்ந்து, சிறிலங்காவின் உயர்ஆணையத்தினை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்கள், சிறிலங்காவே உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றோம் என தொடர் முழக்கமிட்டனர். இந்நிகழ்வில் பங்கெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சான் சுந்தரம், அமெரிக்கர்கள் இவ்வாறு சிறிலங்கா தொடர்பில் அணிதிரள்வதும், குறிப்பாக மாணவ சமூகம் சிறிலங்காவின் விவகாரத்தினை கையிலெடுத்திருப்பது நம்பிக்கையினைத் தருவதாக உளள்ளதென தெரிவித்தார். சிறிலங்காவின் முள்வேலிக்குள் அகப்பட்ட தமிழர்கள் மற்றும் வெள்ளைக்கொடியேந்திய தமிழர்களை சிறிலங்கா இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தமை ஆகியனவற்றை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்த ஒவியங்கள் இவ்விரு நிகழ்வுக்களிலும் முக்கிய இடத்தினைப் பிடிந்திருந்தது. ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
| தமிழீழம் கோரி திமுக எம்.பிக்களுடன் உண்ணாவிரதம் இருக்கட்டுமே கருணாநிதி!- ராமதாஸ் Posted: 29 Apr 2012 07:20 AM PDT எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் தமிழ் ஈழம் குறித்துப் பேசுவார் திமுக தலைவர் கருணாநிதி. அவருக்குத் தைரியம் இருந்தால் திமுகவிடம் தற்போது உள்ள 18 எம்.பிக்களுடன் டெல்லி போய் உண்ணாவிரதம் இருக்கட்டுமே பார்ப்போம் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அன்புமணி விவகாரம் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில்தான். 2-வது ஆண்டு உரிமம் புதுப்பிக்கப்படாததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. பின்னர் உச்சநீதிமன்றம் அமைத்த அட் ஹாக் கமிட்டி அதாவது ஒரு கண்காணிப்புக் குழுவில் 30 பேர் இடம் பெற்றிருந்தனர். இதில் இருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்தான் அந்தக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்திருக்கின்றனர். அதன் பிறகுதான் அமைச்சராக இருந்த அன்புமணி கையெழுத்திட்டார். இதில் எந்தவித முறைகேடும் இல்லை. அரசியலில் வளர்ந்து வரும் அன்புமணியின் அரசியல் செல்வாக்கைத் தடுக்கும் வகையிலேயே இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது. இதன் பின்னணியில் இருப்பவர் பற்றி எங்களுக்குத் தெரியும் நேரம் வரும் போது நிச்சயம் வெளியிடுவோம். இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். இடைத்தேர்தல் இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் தற்போதும் சரி இனிவரும் காலங்களிலும் சரி போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். அந்த தொகுதியில் யார் வென்றிருக்கிறார்களோ அந்தக் கட்சியே அங்கு வேட்பாளரை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். நேரம், பணம் விரயத்தை தவிர்க்கலாம் என்பதற்காக இதைக் கூறி வருகிறேன் ஈழம் தமிழீழம் ஒன்றுதான் தீர்வு என எப்போதும் சொல்லி வருகிறோம். கருணாநிதி எப்போதுமே எதிர்க்கட்சியாக இருக்கும்போதுதான் தமிழீழம் பற்றி பேசுவார். அவரிடம் இப்போது 18 எம்.பிக்கள் இருக்கின்றனர். தைரியம் இருந்தால் அவர் டெல்லியில் தமிழீழம் கோரி உண்ணாவிரதம் இருக்கட்டும் என்றார் அவர். |
| படத்தில் நடிக்க வைக்க முமைத்கானின் பெற்றோரிடம் எழுதி வாங்கிய இயக்குனர் Posted: 29 Apr 2012 07:20 AM PDT வில்லு, கந்தசாமி உள்ளிட்ட தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் கவர்ச்சி பாடல்களில் நடித்திருப்பவர் முமைத்கான். அவர் கூறியதாவது: நீண்ட இடைவெளிக்கு பிறகு மும்பை திரும்பி இருக்கிறேன். ஜுரம் மற்றும் சிறு விபத்தில் காயம் அடைந்ததில் சில நாட்கள் ஓய்வு எடுத்தேன். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பைதான். இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். வெளியூர்களில் இருக்கும்போது எங்காவது சென்றால் என்னைப் பார்க்க கூட்டம் கூடிவிடுவார்கள். மும்பையில் அப்படி கிடையாது. நான் தனியாக, சுதந்திரமாக போகமுடியும். 13 வயது இருக்கும்போதே நடன குழுவில் சேர்ந்து வந்துவிட்டேன். 17வது வயதில் 'முன்னாபாய் படத்தில் நடித்தேன். அதற்காக என் பெற்றோரிடம் நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ் வாங்கினார் இயக்குனர். இதுவரை என்னிடம் வந்த எல்லா படங்களையும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். இனிமேல் மனதுக்கு பிடிக்கும் நல்ல ஸ்கிரிப்ட் மட்டுமே ஏற்பேன். நான் சாதாரண பெண்தான். பெரிய அழகி கிடையாது. ஆனால் என்னைப் பார்ப்பவர்கள் நீங்கள் ரொம்பவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்கிறார்கள். அது மேக்கப் செய்யும் மாயம். என் கண்கள்தான் மிகவும் கவர்ச்சியானது. என் கால்கள் குட்டையானவை. ஆனால் எனது முன்னழகும், பின்னழகும் மற்றும் மெல்லிய இடையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவை என்னை அழகாக காட்டுகிறது. இவ்வாறு முமைத்கான் கூறினார். |
| மகிந்த வாக்குறுதியை மீறியதால் கடுப்பில் இருக்கும் சுஸ்மா அடுத்தகட்டம் குறித்து ஆராய்வு Posted: 29 Apr 2012 07:18 AM PDT இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் வரும் மே 3ம் நாள் புதுடெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இலங்கையில் இருந்து திரும்பிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமரைச் சந்தித்து, 10 அம்சத் திட்டம் அடங்கிய அறிக்கை ஒன்றை கையளித்தனர். அதையடுத்து சுஸ்மா சுவராஜை சந்தித்து, அதிகாரப்பகிர்வு குறித்து இந்தியக் குழுவுக்கு எந்த வாக்குறுதியையும் வழங்கவில்லை என்று இலங்கை ஜனாதிபதி கூறியுள்ளது குறித்து கலந்துரையாடினர். அத்துடன் தமது பயணம் தொடர்பாக இந்திய மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், குழுவின் சார்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அறிக்கை ஒன்றை கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, வரும் மே 3ம் நாள் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட குழுவின் கூட்டத்தை சுஸ்மா சுவராஜ் கூட்டவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்திய அரசின் சார்பாக செல்லும் குழுவின் சார்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் வழக்கம் இதுவரை நடைமுறையில் இல்லை என்றபோதும், தம்மிடம் அளித்த வாக்குறுதியை இலங்கை ஜனாதிபதி மறுத்திருப்பதால், அதுபற்றிக் கலந்துரையாடவே சுஸ்மா சுவராஜ் இந்தக் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தின் பின்னர், இந்த குழுவின் சார்பில் இலங்கை பயணம் குறித்த அறிக்கை ஒன்றையும் இந்திய மத்திய அரசிடம் கையளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. |
| கிளஸ்ரர் குண்டு ஆதாரம்! இலங்கை அரசுக்கு புதிய தலைவலி! Posted: 29 Apr 2012 07:17 AM PDT விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் நிறைவடையப் போகின்ற நிலையில், போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய சர்ச்சை தீர்வதற்கு முன்னர், அரசாங்கத்துக்கு இன்னொரு பிரச்சினை முளைத்திருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது அரசபடைகளால் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நா.வின் வெடிபொருள் நிபுணர் ஒருவர் வெளியிட்டுள்ள தகவலே இந்தப் பிரச்சினைக்கான மூலகாரணம். புதுக்குடியிருப்பில் அண்மையில் இடம்பெற்ற ஒரு வெடிவிபத்தில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலோகங்களாக விற்பதற்காக, வன்னியில் சிதறிக் கிடந்த குண்டுகளின் பாகங்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த வீட்டில்தான், அந்த வெடிவிபத்து ஏற்பட்டது. கிளஸ்டர் குண்டின் ஒரு பகுதியான சிறிய குண்டு ஒன்று வெடித்தே, சிறுவன் மரணமானதாக, ஐ.நா கண்ணிவெடி அகற்றும் திட்டத்தின் தொழில்நுட்ப ஆலோசகரான அலன் போஸ்டன் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்தான், முதல்முறையாக கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்தச் செய்தி உலகெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளஸ்டர் குண்டுகள் உலகின் மிகமோசமாக ஆயுதங்களாக கருதப்படுபவை. ஒரு குண்டை விமானத்தில் இருந்து வீசும் போது, அது கீழே விழுந்து, அதிலுள்ள நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் பிரிந்து, வெடித்துச் சிதறி பரவலான சேதங்களை ஏற்படுத்தும். பேரழிவு ஆயுதங்களில் ஒன்றாக கருதப்படும் இந்தக் கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை சர்வதேச போர்ச்சட்டங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படக் கூடாது என்று கூறப்படும் விமானக் குண்டுகளும், ஆட்டிலறிகளும் இலங்கைப் போரில் மிகச் சாதாரணமாகவே பயன்படுத்தப்பட்டன. இந்தநிலையில்தான் கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பேரழிவு ஆயுதமாக கருதப்படுவதால், கிளஸ்டர் குண்டுகளை உலகில் இருந்தே நாடுகளுக்கிடையிலான போர்களின் போதும் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சர்வதேச உடன்பாடு ஒன்று 2010ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்டுள்ளது. உலகில் உள்ள 60 நாடுகள் இதில் ஒப்பமிட்டுள்ளன. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பின்னர்தான், கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் உடன்பாடு கையெழுத்திடப்பட்ட போதும், இலங்கை அதில் கையெழுத்திடவில்லை. கிளஸ்டர் குண்டுகளைத் தாம் பயன்படுத்தவில்லை என்று கூறும் அரசாங்கம், இந்த உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது சந்தேகத்துக்குரியதே. பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிளஸ்டர் குண்டுகள் உள்நாட்டுப் போர்களில் பயன்படுத்தப்படுவதை கிட்டத்தட்ட ஒரு போர்க்குற்றமாகவே சர்வதேச சமூகம் கருதுகிறது. அதுவும், இலட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்த குறுகலான போர் தவிர்ப்பு வலயப்பகுதி ஒன்றின் மீது இத்தகைய குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சாதாரண விடயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. புதுக்குடியிருப்பில் தான் இந்த கிளஸ்டர் குண்டு பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா நிபுணர் கூறியுள்ளார். 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ஐ.நா முதல் முறையாக கிளஸ்டர் குண்டு பற்றிய குற்றச்சாட்டை சுமத்தியிருந்தது. ஆட்டிலறி ஷெல்களின் மூலம் கிளஸ்டர் குண்டுகள் ஏவப்படுவதாக அப்போது சந்தேகம் எழுப்பப்பட்டது. அதற்குக் காரணம், ஆட்டிலறி ஷெல்கள் வீசப்பட்ட சற்று நேரத்தில் அடுத்தடுத்து சிறிய வெடிப்புகள் பல நிகழ்ந்ததுதான். அரசாங்கம் அப்போது அதை நிராகரித்தது விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் புதுக்குடியிருப்புச் சமர் மிகவும் உக்கிரமானது. சிறியதொரு நகரான புதுக்குடியிருப்பைக் கைப்பற்றுவதற்கான சமர் பல வாரங்களாக நீடித்தது. புதுக்குடியிருப்பையே தமது இறுதித் தளமாகக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு, அது வாழ்வா சாவா என்ற போராட்டமாகவே இருந்தது. இதனால் எல்லா வளங்களையும் ஒன்று திரட்டி அவர்கள் கடுமையாகப் போரிட்டனர். இதனால், புலிகளைப் பின்தள்ளுவதற்கு அரசபடைகள் கடுமையாகப் போரிடவும் விலை கொடுக்கவும் வேண்டியிருந்தது. எனவே, அந்தப் பகுதியில் கிளஸ்டர் குண்டுகளுக்கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. 2009 ஏப்ரல் முதல் வாரத்தில் புதுக்குடியிருப்பை அடுத்து ஆனந்தபுரம் பகுதியில் நிகழ்ந்த சமர் தான், விடுதலைப் புலிகளின் மிகப்பெரிய வரலாற்றுத் தோல்விக்குக் காரணமாகியது. அதுவே அவர்கள் சந்தித்த மிகப்பெரிய இறுதிப் போராகவும் அமைந்தது. இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் முக்கியமான தளபதிகள் உள்ளிட்ட 600 வரையான போராளிகள் கொல்லப்பட்டனர். அந்தச் சமரின் போது, அரசபடைகளின் முற்றுகையில் சிக்கியிருந்த புலிகளை அழிக்க, கிளஸ்டர் குண்டுகள், எரிகுண்டுகள் போன்ற தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. இந்தச் சமரின் பின்னர் அரசபடைகளால் மீட்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் உடல்கள் மோசமாக சிதைந்து காணப்பட்டதும், எரிந்து போயிருந்ததும் குறிப்பிடத்தக்கது. எனினும், இது பொதுமக்களைச் சார்ந்த ஒரு சம்பவமாக இல்லாததால், இதுபற்றி எந்தவொரு குழுவும் கவனத்தில் எடுத்து விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்தநிலையில், புதுக்குடியிருப்பில் கண்டறியப்பட்டுள்ள கிளஸ்டர் குண்டு பற்றிய ஆதாரம், சர்ச்சையாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. போன்போது கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஏற்கெனவே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனால், கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும், அதுபற்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா நிபுணர்குழு கூறியிருந்தது. அதேவேளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னால் சாட்சியமளித்தவர்களும் கிளஸ்டர் குண்டுகள் வீசப்பட்டதாக கூறியிருந்தனர். பலரின் காயங்களில் அதற்கான தடயங்கள் இருந்தன. விமானத்தில் இருந்தும், ஆட்டிலறிகளின் மூலம் வீசப்பட்ட குண்டுகள் அடுத்தடுத்து பல சிறிய குண்டுகளாக வெடித்ததாகவும், தாமதித்து வெடித்ததாகவும் பலர் சாட்சியமளித்திருந்தனர். ஆனாலும் இலங்கை அரசாங்கம் அதனை மறுத்து வந்துள்ளது. இந்தநிலையில் தான் புதிய ஆதாரங்களை ஐ.நா நிபுணர் கூறியுள்ளார். இது இலங்கைக்கு கடும் நெருக்கடி ஒன்றை உருவாக்கக் கூடும். ஏனென்றால், அரசாங்கமே போர் தவிர்ப்பு வலயமாக அறிவித்த பகுதிகளில், இலட்சக் கணக்கான மக்கள் குவிந்திருந்த பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை சர்வதேச சமூகம் நியாயமானதென்று ஏற்றுக் கொள்ள வாய்ப்பில்லை. எனவே சர்வதேச விசாரணை வலியுறுத்தும் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கலாம். ஏற்கெனவே, பல்வேறு நெருக்கடிகள், அழுத்தங்களில் சிக்கிப் போயுள்ள அரசாங்கத்துக்கு புதியதொரு சிக்கலாக கிளஸ்டர் குண்டும் உருவெடுக்கப் போகிறது. தாம் கிளஸ்டர் குண்டுகளைப் பாவிக்கவில்லை என்று கூறும் அரசபடைகள், புலிகள் அதனைப் பாவித்தற்கான ஆதாரம் இல்லை என்கிறது. அப்படியானால் போர் நடந்த பிரதேசத்தில் இவை எப்படி வந்தன என்ற கேள்விக்கு அரசாங்கம் நிச்சயம் பதிலளித்தேயாக வேண்டியிருக்கும். வன்னியில் போர் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பொதுமக்களையோ சர்வதேச அமைப்புகளையோ அரசாங்கம் உடனடியாக அனுமதிக்கவில்லை. சர்வதேச சட்டங்களுக்கு முரணான சம்பவங்களின் ஆதாரங்களை வெளிப்படுத்தும் தடயங்கள் அகற்றப்பட்ட பின்னர் தான், அங்கு வெளியார் அனுமதிக்கப்பட்டனர்.ஆனாலும் அதையும் மீறி ஒரு சான்று ஐ.நாவிடம் சிக்கியுள்ளது. கிளஸ்டர் குண்டுகள் வன்னியில் வீசப்பட்டதற்கு ஏற்கனவே ஆதாரங்கள் பல வெளியாகின. விமானத்தில் இருந்து வீசப்பட்டு வெடிக்காத கிளஸ்டர் குண்டின் நிழற்படங்களும் வெளியிடப்பட்டன. ரஷ்யத் தயாரிப்பான அந்தக் குண்டின் எழுதப்பட்டிருந்த ரஷ்யமொழி எழுத்துகள் பெயின்ற் பூசப்பட்டு அழிக்கப்பட்டிருந்தன. அப்போது சர்வதேச சமூகம் அதைக் கண்டு கொள்ளவில்லை. ஐ.நாவின் கையில் இப்போது ஆதாரமாகச் சிக்கியுள்ள நிலையில், கிளஸ்டர் குண்டு விவகாரத்தை சர்வதேசம் இனிமேல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. போர்க்குற்ற விசாரணைகள் விடயத்தில் சர்வதேச சமூகத்தை எவ்வாறு திருப்திப்படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் அரசுக்கு கிளஸ்டர் விவகாரம் பெருந்தலைவலியாகவே அமையப் போகிறது. சுபத்ரா ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
| த்ரிஷா,பிபாஷாவுடன் நெருக்கமா? ராணா பதில் Posted: 29 Apr 2012 07:17 AM PDT த்ரிஷாவுடன் காதல், பிபாஷாவுடன் டேட்டிங் செல்கிறார் என்று தெலுங்கு நடிகர் ராணா பற்றி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கு ராணா பதில் அளித்தார். அவர் கூறியதாவது: இந்தியில் 'தம் மாரோ தம் படத்தில் நடித்தேன். பிபாஷா பாசு ஜோடியாக நடித்தார். அப்போதுமுதல் இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். புத்தாண்டின்போது இருவரும் கோவா சென்றோம். இதுபற்றி என்னை கேட்காதவர்கள் இல்லை. 'நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்களா? என்கிறார்கள். கோவாவுக்கு நாங்கள் மட்டுமா சென்றோம். எங்களைப்போல் 200 பேருக்கு மேல் சென்றார்கள். அவர்களிடம் ஏன் இதுபோல் கேட்கவில்லை. எங்களுக்குள் எந்த உறவும் கிடையாது என்பதை இன்டர்நெட்டில் தெரிவித்துவிட்டேன். ஆனாலும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எங்கள் இருவரையும் இணைத்து பேசினால் அதில் அவர்களுக்கு ஒரு த்ரில் இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த கிசுகிசுக்கள் முன்பு என்னை பாதித்தது. இப்போது பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிபாஸுவை பொறுத்தவரை எனக்கு நெருக்கமான நண்பர். எனக்கு அடிபட்டபோது நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். அதைக்கூட காதல் என்று கதை கட்டுகிறார்கள். நண்பனுக்கு அடிபட்டால் இன்னொரு நண்பர் விசாரிக்க மாட்டாரா? எங்களை இணைத்து வைப்பதில் மற்றவர்கள் ஏன் குறியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதேபோல்தான் த்ரிஷாவுடனும் என்னை இணைத்து பேசினார்கள். எனக்கென்று ஒரு காதலி இருக்கிறார். அவர் ஐதராபாத்தில் உள்ளார். அவர் யார் என்பதை இப்போது சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிச்சயம் சினிமா நடிகை கிடையாது. எனது திருமணம் பற்றியும் இப்போதைக்கு யோசிக்கவில்லை. இவ்வாறு ராணா கூறினார். |
| தமிழீழம் பற்றி கருணாநிதி திடீரெனத் தொடர்ந்து பேச ஆரம்பித்து உள்ளாரே... என்ன மேட்டர்? Posted: 29 Apr 2012 07:16 AM PDT கருணாநிதியின் தமிழீழப் பாசத்தைப் பார்த்து தமிழீழ ஆதரவாளர்களே கலவரமாகி விட்டனர். ஈழத் தமிழர் விவகாரம் சூடு பிடிக்கும்போதெல்லாம் 'தமிழ் ஈழம்தான் என் லட்சியம்' என்பார் கருணாநிதி. சீஸன் முடிந்ததும் அவரும் மறந்து விடுவார். மற்றவர்களும் அவரிடம் அதுபற்றிக் கேட்க மாட்டார்கள். ஆனால், கடந்த ஒரு வாரமாக தினமும் தமிழ் ஈழ முழக்கம்தான். ஒரு காலத்தில் அவர் நடத்தி வந்த தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு என்று சொல்லப்படும் டெசோ அமைப்பை மறுபடியும் புதுப்பிக்கும் அளவுக்கு கருணாநிதி மும்முரமாக இருப்பதுதான் புதிர்! ''இந்தப் புதுப்பிக்கும் வேலைக்குப் பின்னணியாக இருப்பது கருணாநிதியின் புதுக் கூட்டணிக் கனவு என்கிறார்கள் அரசியலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள். காங்கிரஸ் கட்சியை எப்படியாவது கழற்றிவிடும் மனநிலைக்கு கருணாநிதி வந்து விட்டாராம். இலங்கைப் பிரச்னையை அதிகமாகக் கையில் எடுத்தால்தான், டெல்லி மேலிடம் கோபிக்கும். அதன் பிறகு கழன்றுகொள்ளலாம் என்பது திட்டமாம். 'அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு எப்படிப் பார்த்தாலும், காங்கிரஸுக்குச் சாதகமாக அமையாது. அப்படி இருக்க, அவர்களுடன் நாம் ஏன் இருக்க வேண்டும். நைஸாக நடுவிலேயே வெட்டிக்கொள்வது நல்லது என்று கருணாநிதி நினைக்கிறார். இலங்கை செல்லும் இந்தியக் குழுவில் இருந்து கடைசித் தருணத்தில் கழன்றுகொண்டதற்கும் இதுதான் காரணம். இப்போது தினமும் தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசி வருவதற்கும் இதுவேதான் காரணம்!'' ''காங்கிரஸைக் கழற்றிவிட்டால் என்னவாகும்..?'' ''காங்கிரஸுடன் இருப்பதால்தானே பலரும் கருணாநிதி பக்கம் வரத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்கள் இல்லை என்றால் இந்தியக் கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டையும் தனது கூட்டணிக்குள் கொண்டுவரலாம். அதைவிட வைகோ, விஜயகாந்த் ஆகிய இரண்டு பேரையும் தனது அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பது கருணாநிதியின் ஆசை. அப்படி ஓர் அணியைத் தொடங்கினால் மட்டுமே, நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் மரியாதையைக் காப்பாற்ற முடியும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். தி.மு.க.வை நோக்கி இவர்களை இழுப்பதற்காகத்தான் தமிழ் ஈழத் தூண்டிலைக் கருணாநிதி வீச ஆரம்பிக்கிறார். அதற்கு முன்னோட்டமாக, சென்னைக் கொளத்தூரில் அவர் பேச்சிலேயே சில வார்த்தைகள் வந்து விழுந்தன...'' ''டெசோவைக் கருணாநிதி ஆரம்பித்த காலத்தில் ஐந்து பேர் அதில் அங்கம் வகித்தார்கள். கருணாநிதி, அன்பழகன், வீரமணி, பழ.நெடுமாறன், ஃபார்வர்டு பிளாக் தலைவராக இருந்த அய்யணன் அம்பலம் ஆகியோர் இருந்தனர். இப்போது, கருணாநிதி அனைவரையும் அழைக்கிறார். 'இன்னும் யார் யாரை அதிலே இணைத்துக்கொள்ள வேண்டுமோ, அவர்களையும் இணைத்துக்கொண்டு அந்த டெசோ பணியாற்றும்' என்று கருணாநிதி சொல்லி இருப்பது அரசியல் கூட்டணிக்கான ஒரு முன்னோட்டமாகவே சொல்லப்படுகிறது!'' ![]() |
| சீனா, ரஸ்யா வெளியேற்றம்! ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு மேலும் நெருக்கடி Posted: 29 Apr 2012 07:14 AM PDT ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா, ரஷ்யா உட்பட்ட நான்கு முக்கிய நாடுகள் ஜுன் மாதத்துடன் விலகிக் கொள்வதால், நவம்பர் 1ம் நாள் நடைபெறவுள்ள, மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்று இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் மட்டுமே உறுப்புரிமை வகிக்க முடியும் என்பதால், சுழற்சி முறையில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு யூன் மாதத்துடன் ரஸ்யா, சீனா, சவூதி அரேபியா, பங்களாதேஸ் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. இவற்றில் ரஸ்யாவும், சீனாவும் இலங்கைக்கு மிகவும் நெருக்கமான நாடுகளாகும். கடந்தமாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கு இந்த நாடுகள் கடுமையாக முயன்றன. குறிப்பாக சீனா, இந்தத் தீர்மானத்தைத் தோற்கடிப்பதற்கான பரப்புரைகளிலும் இறங்கியிருந்தது. இந்தநிலையில் வரும் யூன் மாதத்துடன் ரஸ்யா மற்றும் சீனா உள்ளிட்ட இலங்கைக்கு ஆதரவான நான்கு நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்த விலகிக் கொள்வது இலங்கையை கவலை கொள்ளச் செய்துள்ளது. ஜெனிவாவில் வரும் நவம்பர் 1ம் நாள் இலங்கை தொடர்பான மீளாய்வு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இந்த நாடுகளின் ஆதரவைப் பெறமுடியாத நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகள் மீளாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது போவது இலங்கையை கவலையில் ஆழ்த்தியுள்ளது என்றும், ஆனாலும் இந்த நாடுகள் வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்று நம்புவதாகவும் இலங்கை அரசாங்க வட்டாரங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. |
| யாழ். நெடுந்தீவில் ரணிலுக்கு எவ்வித உதவிகளையும் வழங்க கூடாது: பொதுமக்களுக்கு ஈபிடிபி அச்சுறுத்தல் Posted: 29 Apr 2012 07:13 AM PDT யாழ்.நெடுந்தீவுக்குச் சென்ற எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமச்சிங்கவுக்கு வாகனங்கள் உட்பட எந்த உதவிகளையும் வழக்க கூடாதென ஈ.பி.டி.பியினர் விடுத்த அச்சுறுத்தலையடுத்து, நெடுந்தீவுக்கான ரணிலின் பயணம் படுதோல்வியில் முடிவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை நெடுந்தீவுக்குச் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கான போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஈ.பி.டி.பியினர் பொதுமக்களை அச்சுறுத்தி ரணிலின் கூட்டத்திற்குச் செல்லக் கூடாதென தெரிவித்திருக்கின்றனர். அதனையடுத்து வாகன ஏற்பாடுகள் மற்றும் சந்திப்புக்களை ஏற்பாடு செய்திருந்தவர்கள் ஓதுங்கிக் கொண்டனர். இதனால் ரணில் விக்கிரமசிங்க தனது குழுவினருடன் நடந்தே உள்ளே சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் ஒரு சில பொதுமக்களுடன் சந்தித்து கலந்துரையாடியபோது அங்கு வாகனங்களில் வந்த சிலர் பொதுமக்களை எச்சரிக்கும் தொனியில் அங்குமிங்கும் ஓடித்திரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இந்த அச்சுறுத்தலை அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உதயன் விடுத்துள்ளார். இந்நிலையில் அத்திரமடைந்த ரணில் விக்கிரமசிங்க ஈ.பி.டி.பியினரை கடுமையாக பேசியதுடன், மிகவிரைவாக அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தனது கட்சியின் பொறுப்புவாய்ந்த தலைவர்களுக்கு விடத்தை தெரியப்படுத்தி உடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று நெடுந்தீவுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நயினாதீவு சென்ற ரணில், அங்கு விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டார். தொடர்ந்து நாளை குடாநாட்டில் உள்ள கிறிஸ்தவ மதத்தலைவர்களை சந்தித்து உரையாடவுள்ளார். மேலும் அவர் மே தினம் வரை யாழில் தங்கியிருப்பார். |
| ஜெர்மனியில் பாடமாகிறது ஹிட்லரின் சுயசரிதை 67 ஆண்டு கழித்து அச்சாகும் புத்தகம் Posted: 29 Apr 2012 07:12 AM PDT சிறையில் இருந்தபோது ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர் எழுதிய சுயசரிதை புத்தகம், பள்ளி மாணவர்களுக்கு பாடமாகிறது. இப்புத்தகம் 67 ஆண்டுகளுக்கு அச்சிடப்படுகிறது. உலகப்புகழ் பெற்ற ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர். முதல் உலகப் போரில் போரிட்ட இவர் 1918,ல் போர் முடிந்த பிறகு, ஜெர்மன் தொழிலாளர் கட்சியில் சேர்ந்தார். படிப்படியாக வளர்ந்து தலைமை இடத்தை பிடித்தவர், அரசை எதிர்த்து 1923,ல் திடீர் புரட்சியில் ஈடுபட்டார். புரட்சி தோல்வியில் முடிந்ததால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது 'மெய்ன் காம்ஃப்' (மை ஸ்டிரகிள்) என்ற சுயசரிதை எழுதினார். ஹிட்லரின் அரசியல் சிந்தனையை விளக்கும் வகையிலான இந்த புத்தகம் முதலில் 1925,ம் ஆண்டு வெளியிடப்பட்டது. 2,ம் பாகம் 1926,ல் வெளியிடப்பட்டது. 1945,ம் ஆண்டு வரை மொத்தம் 1 கோடி பிரதிகள் அடிக்கப்பட்டன. அதற்கு பிறகு அச்சிடப்படவில்லை. இந்நிலையில், கடந்த 67 ஆண்டுகளாக அச்சிடப்படாமல் இருக்கும் 'மை ஸ்டிரகிள்' புத்தகத்தை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் அச்சிட்டு வழங்க ஜெர்மனியின் பவேரியா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பவேரியா மாநில நிதி அமைச்சர் மார்கஸ் சோடர் கூறியதாவது: மை ஸ்டிரகிள் அல்லது மை பேட்டில் என்ற பெயரில் மாணவர்களுக்கு இப்புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதில் ஹிட்லரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கை குறித்த தகவல்கள் இருக்கும். பெர்லினில் ஹிட்லர் 1945,ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் பற்றிய தகவல்களை குழந்தைகள் அறிந்துகொள்வது அவசியம் என்பதால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி அறிந்துகொள்வதும் புத்தகம் வெளியிடுவதும் சட்டத்துக்கு புறம்பானது அல்ல. நாசிச கொள்கைகள் நாட்டில் அதிகரிக்கக் கூடும் என்று கருதப்பட்டதால் இதுவரை இப்புத்தகம் அச்சிடப்படாமல் இருந்தது. கல்வி ஆராய்ச்சியாளர்கள், வல்லுனர்களின் தீவிர ஆலோசனைக்கு பிறகு, 67 ஆண்டுகள் கடந்த நிலையில் 'மை ஸ்டிரகிள்' மீண்டும் அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. |
| வேறொருத்தியை காதலித்ததால் ஆத்திரம் காதலனை ‘பொக்கை’ ஆக்கிய பெண் டாக்டர் Posted: 29 Apr 2012 07:11 AM PDT தன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை காதலித்ததால் ஆத்திரம் அடைந்த பெண் டாக்டர், காதலனின் எல்லா பற்களையும் பிடுங்கி எறிந்தார். போலந்து நாட்டை சேர்ந்தவர் அன்னா மேகோவியக் (34). பல் டாக்டர். மாரெக் ஓல்சிவிகி என்பவரை காதலித்தார். திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அன்னாவை பிரிந்து சென்ற மாரெக் வேறொரு பெண்ணுடன் சுற்ற தொடங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்தார் அன்னா. இந்நிலையில், பல் வலியால் துடித்தார் மாரெக். பழைய காதலி பல் டாக்டர்தானே என்று நினைத்து சமீபத்தில் அவரது கிளினிக்குக்கு சென்றார். ஏற்கனவே கோபத்தில் இருந்த அன்னா, தன்னை ஏமாற்றிவிட்டு போன காதலனை பழிவாங்க இதுதான் தக்க நேரம் என்று நினைத்தார். மாரெக்கின் பற்களை சுற்றி பல மயக்க ஊசிகளை போட்டார். அவருடைய வாய் பகுதி மரத்துப் போனதும், சிகிச்சை அளிக்க தொடங்கினார் அன்னா. பாதிக்கப்பட்ட பல்லை எடுத்து விட்டதாக கூறினார். அத்துடன் அவர் வாய் திறக்க முடியாதபடி தலையுடன் சேர்த்து கட்டுப் போட்டு அனுப்பினார். ஒரு நாள் கழித்து கட்டை அவிழ்த்து விடலாம் என்று கூறி அனுப்பினார். தான் கைவிட்டாலும், டாக்டர் என்ற முறையில் காதலி சிகிச்சை அளித்ததை நினைத்து சந்தோஷப்பட்டபடி வீட்டுக்கு சென்றார் மாரெக். பின்னர் தலையில் கட்டை அவிழ்த்து வாய் திறந்து பார்த்த போது பொக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வாயில் ஒரு பல்கூட இல்லை. எல்லா பற்களையும் அன்னா பிடுங்கி போட்டிருந்தார். இதுதொடர்பாக போலீசில் மாரெக் புகார் கொடுத்தார். எனக்கு அப்போதே சந்தேகம் வந்தது. வாயில் பல்லே இல்லாதது போல் உணர்ந்தேன். ஆனால், தலையை சுற்றி கட்டுப் போட்டுவிட்டதால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று போலீசில் கூறியுள்ளார். இதையடுத்து அன்னாவை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் கூறுகையில், மாரெக்கை பார்த்ததும் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. அதனால்தான் அப்படி செய்தேன். என்னை கைவிட்டதற்கு பழி வாங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார். மருத்துவ நெறிமுறைகளை மீறியது, நோயாளியின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அன்னா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். |
| தம்புள்ளை பள்ளிவாசல் அகற்றப்பட முடியாது : முஸ்லிம் காங்கிரஸ் Posted: 29 Apr 2012 07:09 AM PDT தம்புள்ளை பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முடியாது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களின் முடிவுக்கு கட்சியின் உயர் பீடமும் இன்று அங்கீகாரம் வழங்கியதாகவும், அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் உண்மையில் விசமத்தனமாகக் கிளப்பப்பட்டது என்று கூறிய அமைச்சர், காணிகளை அபகரித்து, பள்ளிவாசல்களை கட்டுகிற ஒரு கூட்டமாக முஸ்லிம்களை காண்பிக்கும் ஒரு முயற்சியே இது என்றும் குறிப்பிட்டார். இந்த விடயத்தில் அரசாங்க உயர்மட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு தடுமாற்றம் காணப்பட்டதாக கூறிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள், ஆனால், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கும் தீவிரபோக்குடைய சக்திகள் சட்டத்தை தமது கையில் எடுத்துக்கொள்வதற்கு இடம்தராத வகையில் அரசாங்கம் நடந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார். அதேவேளை தமது கட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள், குறிப்பாக நிசாம் காரியப்பர் போன்றவர்கள், கட்சியின் முழுமையான இணக்கப்பாடு இல்லாமல் தான்தோன்றித்தனமாக இது போன்ற விடயங்களில் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்றும் தமது கட்சிக் கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். முஸ்லிம் காங்கிரஸை அரசுக்கு வெளியே தள்ளிவிட வேண்டும் என்று தருணம் பார்த்திருக்கும் சக்திகளுக்கு இவை இடமளித்துவிடும் என்றும் அவர் கூறினார். |
| பாணின் விலை 58 ரூபாவாக அதிகரிப்பு Posted: 29 Apr 2012 07:08 AM PDT பாணின் விலை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் 3 ரூபாவினால் அதிகரிக்கப்படுகின்றது. இதன்படி நாளை திங்கள் முதல் பாண் 58 ரூபாவாக விற்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை மாலை பேக்கரி உரிமையாளர்களுக்கிடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 450 கிராம் பாண் இறாத்தலொன்று 58 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாவின் விலை 8 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்பட்டடையடுத்தே பாணின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. |
| பீரிஸின் இரகசிய செயல்திட்ட வரைபை வெளியிடுமாறு இலங்கைக்கு அமெரிக்கா புதிய அழுத்தம்! Posted: 29 Apr 2012 07:07 AM PDT நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவிடம் கையளிப்பதற்காக இலங்கை தயாரிக்கும் செயல்திட்ட அறிக்கையை வாசிங்டனிடம் கையளிப்பதற்கு முன்னதாக அதனை கொழும்பில் வெளியிடுமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அதை வாசிங்டனிடம் கையளிப்பதற்கு முன்பாக, ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தமக்குள்ளது என்பதை இலங்கையை வெளிப்படுத்த வைக்கும் நகர்வுகளில் ஒபாமா நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அடுத்தமாதம் வாசிங்டனுக்குப் பயணமாவதற்கு ஒரு வாரம் முன்னதாக, அந்த செயல் திட்டத்தை கொழும்பில் வெளியிடுமாறு அமெரிக்கா கூறியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இலங்கை அரசின் செயல்திட்ட அறிக்கை, நாமல் ராஜபக்ச மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரின் ஆலோசனையுடன் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலர் சேனுகா செனிவிரத்னவினால் தற்போது வரையப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையை வொசிங்டனிடம் கையளிப்பதற்கு முன்னதாக அதனை கொழும்பில் வெளியிடுமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளதாக உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு அழுத்தங்கள், மேற்கத்தைய சதிகள் என்று பரப்புரை செய்து வருவதும், வெளிநாடுகளிடம் ஒன்றையும் உள்நாட்டில் மற்றொன்றையும் இரட்டை நாக்குடன் கூறிவருவதுமே, அமெரிக்காவின் இந்த இறுக்கமான நிலைப்பாட்டுக்கான காரணமாகக் கருதப்படுகிறது. |
| அமெரிக்கப் பெண் இராஜதந்திரிகளிடம் சிக்கப்போகும் பீரிஸ் குழு Posted: 29 Apr 2012 07:06 AM PDT அமெரிக்க இராஜங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்காக எதிர்வரும் மே 18ஆம் திகதி அமெரிக்கா செல்லும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் ஒபாமா நிர்வாகத்தின் முக்கியமான பல அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர். வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதியின் செயலபளர் லலித் வீரதுங்க, நாமல் ராஜபக்ச, சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர். இவர்கள் வொசிங்டனில் சந்திக்கத் திட்டமிட்டுள்ள, சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருமே, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கியமான மூத்த பெண் இராஜதந்திரிகளாவர். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன் மற்றும் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சுசன் ரைஸ், இராஜாங்கத் திணைக்களத்தின் மனிதஉரிமைகள் மற்றும் பலதரப்பு விவகாரப் பணியகத்துக்குப் பொறுப்பான சமந்தா பவர், பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகளுக்கான கீழ்நிலைச் செயலர் மரியா ஒரேரோ ஆகியோரை இவர்கள் சந்திக்கவுள்ளனர். இவர்கள் அனைவரும் பெண் இராஜதந்திரிகளாக இருந்தபோதும், விடாப்பிடியான போக்கைக் காட்டுபவர்கள். குறிப்பாக மனிதஉரிமை விவகாரங்களில் கூடுதல் அழுத்தங்களைக் கொடுத்து வருபவர்கள். அதிலும் இலங்கை விவகாரத்தில் அவ்வப்போது கண்டிப்பாக கருத்துகளை வெளியிடுபவர்களாவர். இதனால் பீரிஸ் தலைமையிலான குழுவினருக்கு நெருக்கடி அதிகம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை எல்லா மொழி பேசும் மக்களும் அறியும் வகையில், அதனை தமிழ் மற்றும் சிங்களத்திலும் மொழியாக்கம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அமெரிக்கா ஆலோசனை கூறியிருந்தது. ஆனால் இலங்கை வெளிவிவகார அமைச்சு இதில் ஆர்வம் காட்டவில்லை. பரிந்துரைகளை மொழியாக்கம் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்தும் வொசிங்டன் சந்திப்புகளின் போது, இக்குழுவிடம் கேள்வி எழுப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| வேகமாக கார் ஓட்டி தம்பதி மீது மோதல்: முன்னாள் இந்திய அழகி அபர்ணா சர்மா கைது Posted: 29 Apr 2012 07:06 AM PDT மும்பையைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி அபர்ணா சர்மா. இவர் முன்பு இந்திய அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டவர். உலக அழகி போட்டியில் பங்கேற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். நேற்று அவர் வெளியூர் சென்று விட்டு அதிகாலை 1 மணி அளவில் காரில் மும்பை திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது மும்பை புறநகர்ப் பகுதியான லோகண்ட் வாலா இடத்தில் அதிவேகமாக வந்த அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரோட்டோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது. இதில் முன்னாள் சென்ற கார் சேதம் அடைந்தது. அதில் இருந்த தம்பதி காயம் அடைந்தனர். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி மாடல் அழகி அபர்ணா சர்மாவை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் அவர் ரூ.10 ஆயிரம் ரொக்கம் செலுத்தி சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் கார் ஓட்டியபோது குடிபோதையில் இருந்தாரா? என்பதை அறிய மாடல் அழகியின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அபர்ணா சர்மா மீது அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளில் வழக் குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு நாளை போராட்டம்! வைகோ அறிவிப்பு! Posted: 29 Apr 2012 07:05 AM PDT இலங்கையில் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை ஏப்ரல் 30-ம் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களை, இலங்கை அரசு தாக்குவது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 20-ம் தேதி மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் தம்புள்ள என்ற இடத்தில் உள்ள மசூதியை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் மற்றும் சிங்கள காடையர்கள் முற்றுகையிட்டு ஆயுதங்களால் இடித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஏப்ரல் 30-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்த உள்ளது. இந்தப் போராட்டத்தில் மதிமுகவும் பங்கேற்கும் என்று வைகோ கூறியுள்ளார். |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





























