தமிழ் ஜோதிடம் களஞ்சியம்

தமிழ் ஜோதிடம் களஞ்சியம்


தொலைத்தவையும் தேடுபவையும்..

Posted: 25 Apr 2012 08:12 PM PDT

உரஞ்சிக் கல்

முன்பு விவசாய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்ட மாடுகள் வெளி இடங்களுக்கு சென்று நீரருந்தி, புல் மேய்ந்து வரும்போது உடலை எதனோடாவது உராய்ந்து ஆசுவாசப்படுத்தி கொள்ளும். அதற்காக மக்களால் அமைக்கப்பட்ட கல்லையே ஆ உரஞ்சிக்கல் என்பர்கள். இவை குளங்கள், வாய்க்கால் அருகே அமைக்கப்பட்டதாக கூறுவர். இன்று அதன் எஞ்சிய பகுதிகளை கூட காண்பது அரிதாக காணப்படுகிறது.

தமிழ் எழுத்துகள் உச்சரிப்புப் பயிற்சிக்கான வரைபடம்.

Posted: 25 Apr 2012 07:20 PM PDT



முகநூல்

இது நியாயமா சச்சின்?

Posted: 25 Apr 2012 06:54 PM PDT

பி.சி.சி.ஐ.யின் தலைவர் ஸ்ரீனிவாசன்; தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த். இதனால் சென்னைக்கு அதிக லாபங்கள் என்றுதான் எல்லோரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலவரம் என்ன? கடைசியாக, 2008 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் மேட்ச் சென்னையில் நடந்தது. அதோடு அவ்வளவுதான். இன்றுவரை சென்னையில் ஒரு டெஸ்ட் மேட்ச்கூட நடக்கவில்லை. பாரம்பரிய கிரிக்கெட் நகரமான சென்னைக்கு இப்படியொரு புறக்கணிப்பு! அடுத்த வருடம் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. நான்கு டெஸ்ட் மேட்சுகள் ஆடவிருக்கிறது. ...

யார் பலசாலி!

Posted: 25 Apr 2012 06:34 PM PDT

நல்ல பாம்பு ஒன்று புற்றில் வாழ்ந்து வந்தது. அதற்கு ரொம்ப நாட்களாக தன்னுடைய இனத்தார் பெரிய மிருகங்களை கூட அப்படியே விழுங்கி விடுவதால், தாங்கள்தான் பலசாலி என்று நினைத்திருந்தது. இருந்தாலும், இதை சோதித்து பார்க்க எண்ணி, புற்றை விட்டு வெளியே வந்தது. அப்போது அங்கு ஒரு கீரி வரவே, பாம்பு பயத்துடன் மறைந்துக் கொண்டு, ""ஆகா! கீரிதான் பலசாலி'' என்று நினைத்துக் கொண்டது. அச்சமயம் அங்கு வந்த பூனை, கீரியை விரட்டியது. அதைப் பார்த்ததும், "பூனைத்தான் பலசாலி' என்று எண்ணியது பாம்பு. அந்தப் பூனையை ஒரு நாய் ...

பாரபட்சம்

Posted: 25 Apr 2012 06:25 PM PDT

"ஸார் குருவும் மணியும் ஒரே மாதிரி படிக்கிறாங்க. ஆனா குரு பணக்கார வீட்டுப் பையன்ங்கறதால கண்டிக்கிறது இல்ல. மணி ஏழை வீட்டுப் பையன்ங்கறதாலதானே கண்டிக்கிறீங்க' என்று 50 வயதான ஆசிரியர் விவேகனிடம் கேட்டார் 30 வயதான ஆசிரியர் பாலு. "ஆமாம், மணி ஏழை வீட்டு பையன்ங்கறதாலதான் கண்டிக்கிறேன்' என்றார் விவேகன். "ஆசிரியரா இருந்துட்டு பாரபட்சம் பார்க்கலாமா சார்' என்று கேட்டார் பாலு. "குரு பணக்கார வீட்டு பையன். கொஞ்சம் மார்க் குறைஞ்சாகூட மேல படிக்க முடியும். ஆனா மணி நல்ல மார்க் எடுத்தாதான் மேல படிக்க முடியும். ...

இமைப் பொழுது

Posted: 25 Apr 2012 06:21 PM PDT

கந்தன் ஏழைக் குடியானவன். கொஞ்சம் சோம்பேறி. கந்தனுக்கு பக்தி அதிகம். தனது கஷ்டத்தைப் போக்க வேண்டும் என்று அடிக்கடி கடவுளிடம் வேண்டுவான். ஆனால் எந்த வேலைக்கும் செல்ல மாட்டான். உழைக்காமல் பணக்காரனாகிவிட வேண்டும் என்று எண்ணுவான். நாளுக்கு நாள் கஷ்டம் பெருகிக் கொண்டே சென்றதால், கடவுளை நினைத்து தவமிருக்கத் தொடங்கினான். தன் ஏழ்மையை போக்க கடவுள் துணை புரிவார் என்ற எண்ணத்தில் தவமிருந்தான். அவன் தவத்தைப் பார்த்து ஒரு நாள் கடவுளும் அவன் முன் தோன்றினார். "மகனே என்ன வரம் வேண்டும் கேள்'' என்றார். "தன் ...

பேஸ்புக்கில் அடுத்தடுத்து சில்மிஷங்கள்

Posted: 25 Apr 2012 06:09 PM PDT

ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணைய தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது. இதனை சர்வே ஸ்கேம் (Survey Scam) என அழைக்கின்றனர். "இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு முன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்' என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், பேஸ்புக் போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு தளத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இதன் முகவரியை உற்றுக் கவனித்தால் ...

நீ சரியான ஆளுப்பா!

Posted: 25 Apr 2012 06:07 PM PDT

கிரி என்றொரு பணக்காரன் இருந்தான். அவன் மகா கஞ்சன். அவன் வாசு என்ற ஓவியனிடம் தன்னைப் போல ஓவியம் வரையச் சொன்னான். ""அந்தக் கஞ்சன் உனக்கு பணம் தரமாட்டான். எதற்காக அவன் படத்தை வரைகிறாய்?'' என்று எல்லாரும் கேவலப்படுத்தினர். ""நான் எப்படியும் அவரிடமிருந்து பணத்தை பெற்றே தீருவேன்,'' என்றான். வாசுவும் அதேபோல அவன் படத்தைத் தத்ரூபமாக வரைந்து கொடுத்து, அதற்கு ஊதியமாக ஐநூறு ரூபாய் கேட்டான். அவ்வளவு பணம் தர விரும்பாத கிரி, ""இது என்னைப் போல இல்லை,'' என்றான். ""அப்படியானால், இது என் படம் ...

அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்

Posted: 25 Apr 2012 06:04 PM PDT

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம் விளக்கு ஏற்றும் பொழுது : விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கினின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்குடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து : இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி உள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. 2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம் பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ...

சூரிய வெப்பத்தில் மின்சாரம் - நிச்சயமாக கைகொடுக்கும்

Posted: 25 Apr 2012 04:41 PM PDT

தமிழ்நாட்டில் தொடர்ந்து சில ஆண்டுகளாகவே கடுமையான மின்தட்டுப்பாட்டை, மின்சார வெட்டை சந்தித்து கொண்டிருக்கிறோம். அரசாங்கங்களும் அங்கே இங்கே வாங்கி, உற்பத்தி திறனை கூட்டி, எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும், சுமார் 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறையாகவே இருக்கிறது. 12,500 மெகாவாட் மின்சாரம் இப்போதுள்ள நிலையில் நமக்கு தேவை. இனி மேற்கொண்டு தொழில் வளர்ச்சிக்கு, விவசாய பம்புசெட் மோட்டார்களுக்கு, வீடுகளுக்கு, மின்சார நிறுவனங்களுக்கு மின்சாரம் வேண்டுமென்றாலும், இந்த 12,500 மெகாவாட் தேவை மேலும் மேலும் உயரும். குஜராத்தில் ...

கெடு முடிந்ததால் பதற்றம் அதிகரிப்பு: தீவிரவாதிகள் கடத்திய, தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை மீட்க தீவிர முயற்சி

Posted: 25 Apr 2012 04:40 PM PDT

கடத்தப்பட்ட தமிழகத்தை சேர்ந்த கலெக்டரை விடுவிப்பதற்கான `கெடு' முடிந்ததால் நேற்று பதற்றம் அதிகரித்தது. கலெக்டரை மீட்பதற்காக, மாவோயிஸ்டுகள் - அரசு பிரதிநிதிகளுக்கு இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 வயதான ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலெக்ஸ் பால்மேனன், சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணிபுரிந்து வருகிறார். மாவோயிஸ்டுகள் `கெடு' குக்கிராமம் ஒன்றில் நடந்த மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, கடந்த சனிக்கிழமையன்று மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் ...

தமிழகத்தைச் சீரழித்த திராவிடக் கட்சிகள்!

Posted: 25 Apr 2012 04:24 PM PDT

"தாமரை சங்கமம்' என்ற பெயரில் மதுரையில் பா.ஜ.க.வின் ஐந்தாவது மாநில மாநாடு கூடுகிறது. மாநாட்டு வேலைகளில் பிஸியாக இருந்த மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். "இரு திராவிடக் கட்சிகளும் தமிழகத்தைச் சீரழித்த நிலையில் மக்களின் எதிர்கால நம்பிக்கையாக தமிழக பா.ஜ.க.வை உருவாக்கும் அடித்தளமே இந்த மாநாடு' என்றவரிடம் தொடர்ந்த கேள்விகளை வைத்தோம். இந்தச் சூழலில் மாநாடு கூட்டுவதற்கான அவசியம்? "நாற்பத்தைந்து வருட காலம் ஆண்டு கொண்டிருக்கிற இந்த இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் மாநிலம் சீரழிந்ததே ...

தர்மத்தின் சக்தி!

Posted: 25 Apr 2012 04:18 PM PDT

சமந்தபுரம் என்ற சிற்றூரில் சங்கர் என்ற வள்ளல் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய இரக்க குணத்தை ஊரார் அனைவரும் அறிந்திருந்தனர். சங்கர் இப்படி நடந்து கொள்வது அவருடைய மனைவிக்குப் பிடிக்கவில்லை. ""இப்படி இருப்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒருநாள் நாமும் அவர்களைப் போல இல்லாதவர்களாகி, இருப்பவர்களிடம் சென்று கையேந்த வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடும். ஆகவே, கொடுப்பதை நிறுத்துங்கள்... போதும் நாம் தர்மம் செய்தது!'' என்று உபதேசம் செய்தாள். ""தர்மம் தலை காக்கும் என்று நீ கேள்விப்பட்டதில்லையா? ...

அறிவு

Posted: 25 Apr 2012 04:17 PM PDT

மாலை நேரம் நான்கு மணி. பள்ளி விட்டு வந்தாள் 3-ம் வகுப்பு படிக்கும் திவ்யா. தாத்தா சேகரைப் பார்த்ததும், ஓடி வந்தவள், "தாத்தா'' என்று கழுத்தைக் கட்டிக் கொண்டாள். "ஏண்டா இன்னிக்கு லேட்?'' என்றார் சேகர். "இல்ல தாத்தா நான் எப்பவும் வர நேரம்தான் இது. நீங்க எப்பவும் என்னையே நினைச்சுட்டு இருக்கீங்கல்ல அதனால உங்களுக்கு அப்படித் தெரியுது தாத்தா'' என்றாள் திவ்யா. அவள் பெரிய மனுஷி மாதிரி பேசியதைக் கேட்டதும் சேகரால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சேகருக்கு திவ்யா என்றால் ரொம்ப பிரியம். படிப்பில் ...

உங்கள் படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைய என்ன செய்வீர்கள்?

Posted: 25 Apr 2012 02:55 PM PDT

எழுதிய படைப்புக்கள் அதிக வாசகர்களைச் சென்றடைவதிலேயே அதற்குப் பெறுமதி அதிகம் கிடைக்கிறது.

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் - Format உதவி தேவை

Posted: 25 Apr 2012 02:25 PM PDT

அன்புள்ள நண்பர்களே,

தமிழில் திருமணம் வரவேற்பு விழா அழைப்பிதழ் Format & அது பற்றிய ஆலோசனை தேவை . உறவுகள் யாரவது உதவி செய்தால் பெரிய உபகாரமாக இருக்கும் .

நன்றி,
பேகன் என்கிற விஜயகுமார் .

இது ஐ.பி.எல். காமெடி

Posted: 25 Apr 2012 12:14 PM PDT







இது ஐ.பி.எல். ஜிகிர்தண்டா

Posted: 25 Apr 2012 12:08 PM PDT







இந்திய இளைஞர்களை தாக்கும் புற்று என்கிற பயங்கரம்?

Posted: 25 Apr 2012 12:05 PM PDT

இந்திய இளைஞர்களை தாக்கும் புற்று என்கிற பயங்கரம்? புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ...

இது ஐ.பி.எல். பொடிமாஸ்

Posted: 25 Apr 2012 12:02 PM PDT







21-04-2012 அன்று பிறந்த நாள் காணும் பகவதியை வாழ்த்தலாம் வாங்க

Posted: 25 Apr 2012 10:22 AM PDT

21-04-2012 அன்று பிறந்த நாள் காணும் "பதிவு புயல் " பகவதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . வாழ்வில் எல்லா நலமும் , வளமும் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் .

அயீஷா ---நாவல் ..

Posted: 25 Apr 2012 10:13 AM PDT

ஆயீஷா

இந்த நாவல் இன்றைய கல்வி முறையையை நோக்கி எழுப்பும் கேள்விகள் ! நெஞ்சததை விட்டு அகலாதவை !
படித்த பின் ..நிறைய நேரம் என்ன செய்வது என்று தோன்றாமல் உட்காந்திருந்தேன் !

இதுவே குறும்படமாகவும் வந்தது

இந்த 10 பக்க நாவலை படித்து உங்கள் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்களேன்

வரலாற்றில் இன்று !

Posted: 25 Apr 2012 09:49 AM PDT

19.11.2011


1. சர்வதேச ஆண்கள் தினம்
2. பிரேசில் கொடிநாள்
3. இந்திய சுதந்திரத்திற்காக போராடிய ராணி லட்சுமிபாய் பிறந்த தினம்(1835)
4. இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தினம்(1917)
5. வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1816)

தகவல்கள் உதவி - தினமலர் & தமிழ் மிர்ரர்

வேண்டும், மீண்டும் அப்துல்கலாம்!

Posted: 25 Apr 2012 09:22 AM PDT

இந்திய நாட்டில் மூத்த குடிமகனாக எல்லோராலும் மதிக்கப்படத்தக்க உயர்ந்த பதவியில் இருப்பவராக ஜனாதிபதியைத்தான் கருதுகிறார்கள். ஜனாதிபதியிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். விருப்பு, வெறுப்பு இன்றி இந்த கட்சி, அந்த கட்சி என்று பார்க்காமல் துலாக்கோலை கையில் வைத்து செயலாற்ற வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. பலநேரங்களில் ஜனாதிபதியை மத்திய அரசாங்கத்தின் `ரப்பர் ஸ்டாம்ப்' என்று எத்தனையோ பேர் குறை கூறினாலும், இந்த பொறுப்பில் இருந்த சில ஜனாதிபதிகள் தனிமுத்திரை பதித்திருக்கிறார்கள். அதில் ...

8வது நாளாக உயிருக்கு போராடி தொடரும் உண்ணாநிலை! கண்டு கொள்ளாமல் தூங்கி கிடக்கும் தமிழகம்

Posted: 25 Apr 2012 08:41 AM PDT

தமிழகத்தில் 110க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் முகாம் உள்ளன. இவை சாதாரணமான மக்கள் வாழும் முகாம்கள். செங்கல்பட்டிலும், பூந்தமல்லியிலும் சிறப்பு முகாம் என்ற பெயரில் இரண்டு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டில் இருந்த கிளைச் சிறையை 1991ம் ஆண்டு தமிழக அரசு, சிறப்பு முகாமாக மாற்றியது. இதே போல 2008 வரை பூந்தமல்லியில் சிறப்பு கிளைச் சிறையாக இருந்த சிறையை இலங்கைத் தமிழர்களின் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து உயிருக்குத் தப்பி ஓடி வந்த தமிழர்களை மண்டபம் முகாமில் வைத்திருந்து ...

ஈரானிய பார்லிமெண்ட் உறுப்பினர்கள் - புகைப்படங்கள்!

Posted: 25 Apr 2012 08:32 AM PDT

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - ஓகே ஓகே தொடர்ந்து முதலிடம்

Posted: 25 Apr 2012 08:29 AM PDT

5.மாட்டுத்தாவணி பவித்ரனின் இந்தப் படம் சென்ற வாரம் வெளியானது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 1.1 லட்சம். மிக மோசமான வசூல். படம் அட்டர் ப்ளாப் என்கிறது வசூல் நிலவரம். 4.மை மாட்டுத்தாவணிக்கு மை பரவாயில்லை. சென்ற வாரம் வெளியான மை முதல் மூன்று தினங்களில் 3.6 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 3.ஊலலலா ஜோதி கிருஷ்ணா இயக்கி நடித்திருக்கும் இந்தப் படமும் சென்ற வாரமே வெளியானது. இதன் முதல் மூன்று நாள் வசூல் 5.06 லட்சங்கள். படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் இதுவும் சுமாரான ...

இது அபாண்டம்தானே?

Posted: 25 Apr 2012 08:19 AM PDT

கோர்ட்டில் அந்த விவாக ரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று. அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார். "அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?" "அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க" "ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?" "எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?" "அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் ...

பகவத் கீதை --சுகி சிவம் உரை (எம்‌பி3 வடிவில்)

Posted: 25 Apr 2012 07:35 AM PDT

பகவத் கீதை --சுகி சிவம் உரை (எம்‌பி3 வடிவில்) தரவிறக்க http://www.mediafire.com/?bbczjaw24ka http://www.mediafire.com/?jnwk72uohwv http://www.mediafire.com/?tgjrdgougd0 http://www.mediafire.com/?ezyusnayqm8 http://www.mediafire.com/?hih7scueyar http://www.mediafire.com/?tnpneqiufme http://www.mediafire.com/?mdaazmbanrz http://www.mediafire.com/?x0bvebo8qap http://www.mediafire.com/?avzvvz4avvv http://www.mediafire.com/?irvueospmuq http://www.mediafire.com/?es8jbh448u1 http://www.mediafire.com/?izeamijmmiw http://www.mediafire.com/?kkdtdcmyqla

ஒரு திட்டத்தையும் புதுக்கோட்டைக்கு அறிவிக்கக் கூடாது- தலைமைத் தேர்தல் அதிகாரி

Posted: 25 Apr 2012 07:17 AM PDT

சென்னை: புதுக்கோட்டைக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அங்கு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. எனவே இனிமேல் புதுக்கோட்டைக்கு எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அறிவிக்கக் கூடாது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஜுன் 12-ந் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தேர்தல் நன்னடத்தை விதிகள் உடனடியாக (ஏப்ரல் ...

என் எண்ணதிரை - பாலா கார்த்திக்

Posted: 25 Apr 2012 07:13 AM PDT

தங்களைப் பெரிய்ய எழுத்தாளர் என்று கருதிக் கொள்கிறவர்களை 'ஏன் எழுதுகிறீர்கள்?' என்று கேட்டால் வழக்கமாக வரும் பதில்,'ஆத்ம திருப்திக்கு' இப்படிச் சொல்கிற பலர் 'இவன் ஆத்மா சாந்தியடையட்டும்' என்று நம்மை நினைக்க வைப்பார்கள். எழுதுவதிலேயே ஆத்ம திருப்தி வந்து விடுகிறதா? இல்லை. அது படிக்கிறவனுக்கு பாதிப்பை ஏற்படுத்திற்றா என்று அறிகிற போதுதான் ஆத்ம திருப்தி வருகிறது. உங்கள் எழுத்துக்கள் படிக்கிறவனுக்கு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். அது உங்கள் முகத்தில் காரி உமிழ்கிற உந்துதலாகக் கூட இருக்கலாம் ...

போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை

Posted: 25 Apr 2012 07:11 AM PDT

சுவீடன்: போபர்ஸ் ஆயுத ஊழல் விவகாரத்தில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்குத் தொடர்பு இல்லை என சுவீடன் நாட்டு முன்னாள் காவல்துறை அதிகாரி லிண்ட்ஸ்ரோம் தெரிவித்துள்ளார். போபர்ஸ் ஊழல் வழக்கின் புலனாய்வு அதிகாரியாக பணியாற்றிய லிண்ட்ஸ்ரோம் இதுவரை போபர்ஸ் ஊழல் வழக்கு குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்த நிலையில், தற்போது முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ் காந்திக்கு தொடர்பில்லை என்று கூறியுள்ளார். ராஜீவ் காந்தி லஞ்சம் வாங்கியதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்றும், மேலும் இந்த வழக்கில் ...

உலக அழிவும், மாயா இன மக்களும் பகுதி -19

Posted: 25 Apr 2012 07:05 AM PDT

வணக்கம் 21-12-2012 ல் உலகம் அழியும் என்று ஒரு பிரிவினரும் ,அழியாது என்று இன்னொரு பிரிவினரும் கூறிக்கொண்டு இருக்கிறார்கள் ,அவர்கள் அவ்வாறு கூற காரணமாக இருப்பது மாயன் , அதான் தெரியுமே மாயன் கலெண்டர் 2012 ல முடியுது அதனால அழியும் னு சொல்றாங்க இது எல்லாருக்கும் தெரியுமே புதுசா நீ என்ன சொல்லபோரன்னு கேட்குறீங்களா ? கண்டிப்பா இது ஒரு புது விஷயம் தான் ,இந்த கட்டுரை யை இப்போ படிக்கிறவங்களுக்கு ஒரு புது விஷயம் தான் உதாரணமா இந்த கட்டுரை ல இருக்குற 2 சின்ன தகவல்கள் 1.இப்போ உலகமே பயப்படுற ...

மிக அருமையான கிராமிய பாடல்

Posted: 25 Apr 2012 07:00 AM PDT

This posting includes an audio/video/photo media file: Download Now

காஃபி வித் பாலா கார்த்திக் !!!!

Posted: 25 Apr 2012 06:08 AM PDT

முன்குறிப்பு :- சூடாக, நுரையோடு ஒரு காஃபி அடித்துவிட்டு வந்து இதைப் படிக்கத் தொடங்குங்கள். "இந்தா காஃபி" என்ற குரல் கேட்டால்தான் காலையில் போர்வையையே பலர் விலக்குகிறார்கள் . இதிலும் பலர் பல் தேய்ப்பதற்கு முன்னாலேயே வெறுமனே வாய் கொப்பளித்துவிட்டு காஃபி குடிக்கிற ஜாதி. பல் தேய்த்தபிறகு இன்னொருதரம் குடிப்பவர்கள் அந்த ஜாதியில் ஒரு சப்செட் (நானும் இதே இனம்தான் ). குடிக்கிற பழக்கத்தைக் கூட சரி பண்ணிவிடலாம் . காஃபி பழக்கம் விடுவதற்கு ரொம்பக் கஷ்டமான பழக்கம் . மஸ்கட்டில் இருந்து சென்னை ...

அணுமின்நிலைய இளம் விஞ்ஞானி தற்கொலை. பிளேடால் உடலை கிழித்துக்கொண்டு இறந்த பரிதாபம்

Posted: 25 Apr 2012 04:51 AM PDT

பிளேடால் உடலில் கிழித்துக்கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலைய இளம் விஞ்ஞானி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் விஞ்ஞானி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் முகமது முஸ்தபா (வயது 24). பி.எஸ்சி. வரை படித்தவர். இவர் கல்பாக்கத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியின் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கல்பாக்கம் அணு ஆராய்ச்சித்துறை ஊழியர் குடியிருப்பில் ...

அமெரிக்காவுடன் சதாம் உசேன் நடத்திய போர் - காலசுவடுகள்

Posted: 25 Apr 2012 04:30 AM PDT

சர்வ அதிகாரங்களுடன் ஈராக் நாட்டை 25 ஆண்டுகள் ஆண்ட சதாம் உசேன், போரின் காரணமாக வீழ்ந்தார். அமெரிக்க படையிடம் அனாதை போல பிடிபட்டு ராணுவ கோர்ட்டு முன்பு விசாரணை கைதியாக கை விலங்குடன் நிற்கிறார். அமெரிக்காவுக்கு எதிராக சவால் விட்ட சதாம் உசேன் ஈராக் மக்கள் மத்தியில் சிங்கம் போல உலா வந்தார். ஆனால் 2003 மார்ச் மாதத்தில் நடந்த போர் சதாமுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். சதாம் உசேனின் வாழ்க்கைப்பாதை `திரில்' நிறைந்தது. சிறு வயதிலேயே புரட்சிக்காரராக வாழ்க்கையைத் ...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள்

Posted: 25 Apr 2012 04:28 AM PDT

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம், பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான். ஆனால்?...........இன்றோ!!!?மூச்சு (சுவாசம்) இருக்கின்றது!இரத்த ஓட்டம் இருக்கின்றது!நாடி துடிப்பு இருக்கின்றது!இதயத்துடிப்பும் இருக்கின்றது! இருந்தும்……… மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை ...

சிங்களர்களுக்கு நிகரான உரிமையை தமிழர்கள் பெற்று வாழ வேண்டும் : ஜி.கே. வாசன்

Posted: 25 Apr 2012 04:22 AM PDT

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில், நேற்று துவங்கிய மாவட்ட காங்., தலைவர் சிவராஜ் இல்ல திருமண விழாவில், எம்.எல்.ஏ., ஞானசேகரன், இளைஞர் காங்., தலைவர் யுவராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு, மணமக்கள் மதுசூதனன்- கணபதி ருச்சிரா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார். பின் அவர் செய்தியாளர்களிடம், ''இலங்கை அரசுக்கு எதிரான மனித உரிமை பிரச்னையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஓட்டளித்தது இந்தியா. அதன் பிறகு அங்கு உள்ள தமிழர்களின் வாழ்க்கை முழுமை பெற ...

சின்ன கவிதை...

Posted: 25 Apr 2012 04:16 AM PDT

மழலை மனம் கனிவாய் கைநீட்டும் கைக்குழந்தைக்குதத் தெரியாது-அது சண்டைக்கார சித்தப்பா என்பது.. வேகம்.. வேகத்திற்கு தடைகள் வேண்டாம்-ஆனால் வேகத்தடைகள் நிறைய வேண்டும் நம் பயணத்தில்.. திருமணம் நாளை நம் திருமணம்.. உனக்கு அவனோடு எனக்கு அவளோடு.. சமத்துவம்.. மயிலைக்காளைக்கும் செவலைப்பசுவுக்குமோ.. செவலைக்காளைக்கும் மயிலைப்பசுவுக்குமோ பிறந்ததல்ல காரிக்காளைக்கும் செவலை அல்லது மயிலை பசுவுக்கும் ...

இந்த அணிகலனின் பெயர் என்ன என்று சொல்லுகள் பார்போம் ????

Posted: 25 Apr 2012 04:16 AM PDT

இந்த பாட்டி கழுத்தில் அணிந்திருக்கும் அணிகலனின் பெயர் என்ன?? . தாத்தா அணிந்திருக்கும் அணிகலனின் பெயர் என்ன?? பாட்டி கழுத்தில் அணிந்திருக்கும் அணிகலனின் பெயர்தான் கழுத்திரு. தாத்தா அணிந்திருப்பதுதான் கெளரி சஙகம்

யார் இந்தப் பிரபலங்கள்?

Posted: 25 Apr 2012 04:09 AM PDT

யார் இந்தப் பிரபலங்கள்? அந்தக் காலத்தில் தமிழ்த் திரை உலகைக் கலக்கிய இரண்டு பெண்ணரசிகளின் படங்களைக் கீழே கொடுத்துள்ளேன்! பெயரைக் கண்டு பிடித்து எழுதுங்கள்! படத்தின் பெயர் என்ன படத்திலுள்ள நாயகரைத் தெரியும் நாயகி யார்? படத்தின் பெயர் என்ன? எழுதுங்கள்! தெரிந்தவர்கள் சொல்லுங்கள். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். கேள்விகள் காற்றில் ஆக்ஸிஜனின் அளவு 21% அது அனைவருக்கும் தெரியும். 1.ஆக்ஸிஜன் இடத்திற்கு இடம் சீதோஷ்ணநிலையைப் (environment temperature) போல மாறுமா ...

கூகுள் குரோம் உதவி தேவை

Posted: 25 Apr 2012 03:52 AM PDT

ஈகரை நண்பர்களுக்கு மாலை வணக்கம், :வணக்கம்: :வணக்கம்:
கூகுள் குரோமில் ஹெடர் அண்ட் ஃபுட்டர் ல் நம்முடைய நேம் அண்ட் அட்ரஸ்
வரவழைப்பது எப்படி?
வாய்ப்பிருந்தால் உதவுங்கள் நண்பர்களே

ஈகரை வாசகர்களுக்கு

Posted: 25 Apr 2012 03:49 AM PDT

ஈகரை வாசகர்களுக்கு எனது இனிய வணக்கங்களை தெரிவித்து கொள்கின்றேன்.