சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள் |
- சேவற்கொடி HOT விமர்சனம்
- துப்பாக்கிக்காக ஷூட் செய்த விஜய்!
- கருங்காலியிடம் தப்பித்த நடிகையும், சிக்கிக் கொண்ட நடிகையும்!!
- தலை முடி ஆரோக்கியம்..//
- ஆழ்ந்த தூக்கம் வர...//
- பிரசவத்திற்குப் பிறகு...//
- காஞ்சீபுரம் இட்லி
- எப்போது தியானம் செய்யலாம்?
- சூரியன் 108 போற்றிகள்
- மழைக்காக ஒரு வழிபாடு..//
- கோடக நல்லூர் கோவில்
- உயிர் காக்கும் காமாட்சி விரதம்..//
- பெண்களின் முக ரோமங்களை போக்கும் கஸ்தூரி மஞ்சள்!
- மத்திய அரசின் அதிரடி-ரூ. 2.84 லட்சம் புற்று நோய் மருந்து இனி ரூ.88,00க்கே!
- முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்த 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்கியது
- மொறு மொறு செட்டிநாடு கை முறுக்கு
- உத்தர்கண்ட் முதல்வராக காங். எம்.பி. பஹுகுணா பதவியேற்பு-பாதி எம்எல்ஏக்கள் வரவில்லை
- மக்கள் காளிக்கு பயந்தது ஏன்?
- சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?
- கடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா? இல்லையா?
- எது இனிய இல்லற வாழ்கை முறை?
- சோமவார விரதம் செய்யும் முறை!
- ஏகாதசி விரதத்தின் சிறப்பும் பலனும்!
- பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பும் வழிபடும் முறையும்!
- வணங்கிட வரம் தரும் வழிவிடு முருகன்!
| Posted: 13 Mar 2012 10:35 AM PDT திருச்செந்தூர் மீனவ கிராமத்தில் செய்யாத தப்புக்கு கருவாடாகிப் போகிற ஒரு காதலனின் கதைதான் இந்த சேவற்கொடி. உப்பு கண்டம் ருசிதான். அதுவே உப்பு ஜாஸ்தியானால்? சில இடங்களில் அப்படியும் கரிக்க வைக்கிறார் இயக்குனர். படத்தின் ஹீரோ அருண் பாலாஜி. இவருக்கும் வில்லன் பவனுக்கும் வருகிற பிரச்சனை இருக்கிறதே, அதுதான் சரியான வில்லங்கம். தங்கச்சிய கட்டிக்கோ, ஓட்டுற வேனுக்கு நானே ஓனராகிக்கிறேன் என்று முதலாளிக்கு வாக்குறுதி கொடுக்கிறார் பவன். ஆனால் அந்த பாசக்கார தங்கச்சியோ தனது காதலனுடன் ஓடிவிட, காதல் ஜோடியை அனுப்பி வைத்ததே அருண் பாலாஜிதான் என்று தவறாக நினைக்கிறார் பவன். இத்தனைக்கும் இந்த சம்பவத்தில் ஒரு தொடர்பும் இல்லை ஹீரோவுக்கு. என் வலி அவனுக்கும் தெரியணும் என்று நினைக்கிற பவன், அருண் பாலாஜியின் அம்மாவை லாரி ஏற்றி கொன்றேவிடுகிறார். (ஆடியன்சின் பரிதாபத்தை அப்படியே அள்ளிக் கொள்கிற அளவுக்கு ஒளிவீசும் முக லட்சணம் அந்த அம்மாவுக்கு) இது எதிர்பாராத விபத்துதான் என்று நினைக்கிற ஹீரோவுக்கு, அதே பவன் வாயால் உண்மை தெரியவர, ஆரம்பிக்கிறது வார்! நார் நாராக கிழித்துக் கொள்கிறார்கள் இருவரும். ஒருகட்டத்தில் தனது புஜ பராக்கிரமத்தால் பவனை நிர்வாணமாகவே ஆக்கி நையப்புடைக்கிறார் அருண். இந்த அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாத பவன் அருணை போட்டுத்தள்ள கூலிப்படையை நாடுகிறார். இந்த பகையின் முடிவெங்கே? அதுதான் ரெண்டரை மணி நேர சே.கொ. அந்த ஊரில் எல்லாருமே அரையிருட்டாக இருக்க, கதாநாயகி பாமா மட்டும் ட்யூப் லைட்டாக ஜொலிக்கிறார். 'உன் மூக்கு மேல வேர்வையாகணும்' என்று வைரமுத்து எழுதிய ஒவ்வொரு வரிக்கும் உயிர் கொடுக்கிற இந்த நாயகி மீது, அருண் பாலாஜிக்கு வருகிறது லவ். ஒரு கொசு அடிக்கிற நேரத்தில் வருகிற இந்த லவ்தான் ஆரம்பத்தில் ஒட்டவில்லையே தவிர, ஜோடிகள் ரெண்டும் கண்ணுக்குள் 'பச்சக்' என ஒட்டிக்கொள்கிறார்கள். முதலில் பாமா பவனின் தங்கையோ என்பது போல ஒரு ட்விஸ்ட் அடிக்கிறார் டைரக்டர். அப்புறம் அது வழக்கமான சினிமாவாகிவிடும் என்று நினைத்திருக்கலாம். ரூட்டை மாற்றிக்கொள்கிறார். பாமாவின் குடும்ப பின்னணியும் இவரது காதலுக்கு பெற்றவர்களின் சம்மதமும் ரொம்பவே இயல்பு. அருண் பாலாஜி நீச்சல் வீரராம். நடிப்பு என்பது சமுத்திரமல்லவா? குழந்தை தத்தளிக்கிறது. சிகரெட்டு புகையும் செம்பட்டை தலையுமாக இவரை பார்க்கும்போதெல்லாம் 'ஐயோ என் தமிழ்சினிமாவே' என்று அலறத் தோன்றுகிறது. பவன். ஏன் இன்னும் கதாநாயகன் அந்தஸ்தை எட்டவில்லை என்று யோசிக்க வைக்கிறார். அழுத்தமான பார்வையும் அதில் வழியும் குரூர கோபமுமாக ரசிக்க வைக்கிறார். தைரியமா அடுத்த கட்டத்துக்கு போகலாம் வாத்யாரே... பவனுடன் க்ளினராக வரும் அந்த ஒன்றரைக்கண் இளைஞர் கவனிக்க வைக்கிறார். பேசாமலேயே நடிப்பதுதான் பெரிய கலை என்பதை முதல் படத்திலேயே உணர்த்தியிருக்கிறார். நுணுக்கமான தேர்வு. டைரக்டரின் பெயர் சுப்ரமணியன். அதனால் கூட திருச்செந்து£ர் சுப்ரமணியரின் சூரசம்ஹாரத்தை காட்ட நினைத்திருக்கலாம். கதைக்கு தேவையில்லாத பகுதி என்றாலும், கன்னத்தில் போட்டுக் கொள்ள ஒரு சந்தர்ப்பம். இத்தனை பெரிய கூட்டத்திலும் நுழைந்து புகுந்து விருந்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் செல்லத்துரை. இசை- 'எங்கேயும் எப்போதும்' சத்யா. 'கம்பி மத்தாப்பூ கண்ணு' பாடலில் இவரும் கவிப்பேரரசு வைரமுத்துவும் இணைந்து நடத்தியிருக்கிறார்கள் ஒரு இசை லட்சார்ச்சனை. டைட்டிலில் ஒலிக்கும் பக்தி பாடலை வெஸ்டன் ஸ்டைலில் தந்திருப்பதும் அதிரடி முயற்சி. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டாத விளக்கெண்ணை ரகம். சேவற்கொடி - சீமை வெடி! |
| துப்பாக்கிக்காக ஷூட் செய்த விஜய்! Posted: 13 Mar 2012 10:27 AM PDT விஜய் நடிக்க, முருகதாஸ் இயக்கும் 'துப்பாக்கி'யின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று வருகிறது. காட்சிப்படி கும்பல் நிறைந்த தெருவில் விஜய் செல்வது போல எடுக்க வேண்டியிருந்ததாம். படத்தின் முக்கியமான காட்சி அது என்பதால், பொதுமக்களுக்குத் தெரியாமல் அக்காட்சியை கும்பல் இருக்கும் சாலையில் படம்பிடிக்க திட்டமிட்டிருந்தார்கள். பொதுமக்கள் விஜய் படப்பிடிப்பு நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் முன், அவசரமாக எடுக்க வேண்டிய காட்சி என்பதால், படக்குழுவினர் தயாராக, விஜய் சட்டென்று தானே கேமராவைக் கையாண்டு அக்காட்சியை படம் பிடித்துள்ளார். விஜய் எடுத்த படப்பதிவைப் பார்த்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அந்த காட்சியை விஜய் மிக அழகாக எடுத்துள்ளதாக பாராட்டியிருக்கிறார். |
| கருங்காலியிடம் தப்பித்த நடிகையும், சிக்கிக் கொண்ட நடிகையும்!! Posted: 13 Mar 2012 10:23 AM PDT அந்த கருங்காலி இயக்குநர் கம் நடிகர்., ஊரிலேயே கல்யாணமானவர், குடும்பஸ்தர், என்றாலும் முன்பு தேவகி என்றொரு நடிகையுடன் ( இப்பொழுது அந்த நடிகை அக்கா, அம்மா, அண்ணி கேரக்டர்களுக்கு வந்து விட்டார்.) தனிக்குடித்தனம் இருந்து வந்தார். நடிக இயக்குநர் ஆவதற்கு முன்பே நான்கைந்து நல்ல படங்களை இயக்கி இருக்கிறார். அதன் பிறகு தற்போது முன்னணியில் இருக்கும் அஞ்சலியை தமிழ் திரையுலகில் அறிமுகம் செய்து வைத்தவர் (அந்தப் படம் ஆரம்ப நிலையிலேயே நின்றும் போனது..) என்ற முறையில் அவருக்கும் எல்லாமும் நான் என எகத்தாளமாக பேட்டியெல்லாம் கொடுத்தார்! தன்னுடன் கருங்காலி படத்தில் காட்டாயப்படுத்தி ஒரு ஜோடியாக அஞ்சலியை நடிக்கவும் வைத்தார். |
| Posted: 13 Mar 2012 10:21 AM PDT முடி உதிரும் பிரச்சனை, பொடுகுத் தொல்லை, வழுக்கை என்று பலருக்கும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கின்றது காலம் காலமாக நமது வீடுகளில் பல இயற்கை முறைகளை பின்பற்றி வந்தாலும், தலைமுடி பிரச்சனை இன்னமும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள், எனக்கு இந்த தண்ணீர் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம். ஓரளவிற்கு தண்ணீரால் முடி கொட்டும் என்பது உண்மையென்றாலும், நாம் சாப்பிடும் உணவு, கடைபிடிக்கும் சில வழிமுறைகள் மூலமாக இந்தப் பிரச்சனையை தவிர்க்கலாம். பெண்களைப் பொறுத்தவரை வழுக்கை என்ற விஷயம் இல்லாவிட்டாலும் முடி கொட்டுவது என்பது பொதுவான பிரச்சனையாக இருக்கிறது. முடி கொட்டுவதற்கு நாம் உட்கொள்ளும் உணவும் நல்ல சமச்சீரான, சத்தான உணவாக இருப்பது அவசியம். பொதுவாக தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கும், இரத்த சோகை இருப்பவர்களுக்கும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். நாம் கூந்தலை சரியான முறையில் பராமரிக்கும் போது முடி கொட்டுவதை தவிர்க்கலாம். பொடுகு தலையில் இருந்தாலும் முடி கொட்டும். தலையை வாரம் இரு முறை அலசினால் போதுமானது. கண்டிஷனரை வேர்க்கால்களில் படாமல் அப்ளை செய்வது மிகவும் நல்லது. தலையில் மேலோட்டமாக மண்டையில் படாமல் ( 1 செ.மீ அளவேனும் இடைவெளி விட்டு) முடிக்கு மட்டும் படுமாறு கண்டிஷனர் அப்ளை செய்தால் முடி கொட்டாமல் இருக்கும். அடிக்கடி அல்லது தினமும் தலை குளிப்பவர்கள் மிகவும் மைல்டான ஷாம்பூ உபயோகிப்பது மிகவும் நல்லது. வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும். சீயக்காய்- 1 கிலோ செம்பருத்திப்பூ- 50 பூலாங்கிழங்கு - 100 கிராம் எலுமிச்சை தோல் (காய வைத்தது, பொடுகை நீக்கும்)- 25 பாசிப்பருப்பு - கால் கிலோ மரிக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள் கரிசலாங்கண்ணி இலை (முடி கருப்பாக) - 3 கப் அளவு மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டு வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி குளிக்கலாம். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதுடன் முடியை கருப்பாக்க மிகவும் உதவும். ஆனால் நல்லெண்ணெய் முகத்திற்கு போடுவது சரும நிறத்தை கருமையாக்கும். விளக்கெண்ணெய் கண் புருவம், இமை முடிகள் வளர உதவும். முட்டை முடிக்கு நல்ல ஷைனிங் தரும். அடிக்கடி உபயோகித்தால் முடி வறண்டு விடும். பேரிச்சை, கீரை போன்ற இரும்பு சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. தினமும் உணவில் இவற்றில் ஒன்றை சேர்த்து கொள்ள வேண்டும். மருதாணி முடிக்கு மிகவும் நல்லது. இயற்கையான சாயத்திற்கும், குளிர்ச்சிக்கும் மிகவும் நல்லது. உப்புத் தண்ணீர், சூடான தண்ணீர் போன்றவை முடிக்கு நல்லதல்ல. கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கருவேப்பிலை மூன்றையும் அரைத்து வடைகளாகத் தட்டி நிழலில் காயவைத்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயை தலையில் தடவி வந்தால் முடி கருமையாக நன்றாக இருக்கும். சூடத்தை (கற்பூரம்) தேங்காய் எண்ணெயில் போட்டு தடவி வந்தால் பொடுகு நீங்கும். வெந்தயத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊறவைத்து அதனை தலைக்கு தடவினால் உடல் குளிர்ச்சிக்கு நல்லது. |
| Posted: 13 Mar 2012 10:18 AM PDT என்ன செய்தால் நன்கு தூக்கம் வரும்? இதற்கான விடையைத்தான் உலகமெங்கும் பலபேர், பலவிதமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளை உங்களுக்குச் சொல்கிறேன். செய்து பாருங்கள். நன்றாக தூக்கம் வரும். பகல் எவ்வளவு நேரமோ, அதே அளவு தான் இரவும். பகல் பொழுதைக் கழிக்க நாம் நம்முடைய வீட்டு வரவேற்பறைகளையும், ஆபீசையும் மற்றும் நம்மைச் சுற்றியிருக்கும் இடங்களையும் அழகாகவும், அலங்காரமாகவும், சுத்தமாகவும் மனதைக் கவரும் வகையில் வைத்துக் கொள்கிறோம். ஆனால் இரவுப் பொழுதைக் கழிக்க நாம் நம்முடைய படுக்கையையும், படுக்கை அறையையும் அதைச் சுற்றியுள்ள இடத்தையும், அழகாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்கிறோமா என்றால் `இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். பட்டு மெத்தையை விரித்து வைக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவரவர் வசதிக்கேற்ப முதலில் தூங்கும் இடத்தை தூக்கம் வருவதற்குண்டான சூழ்நிலை ஏற்படுகிற மாதிரி அழகாகவும், சுத்தமாகவும் வைக்க முயற்சி செய்யுங்கள். பாய் முதற்கொண்டு பெட்ஷீட், தலையணை கவர் வரை அடிக்கடி சுத்தம் செய்து மாற்றிக் கொள்ளுங்கள். படுக்கையறை ஜன்னல்களுக்கு ஸ்கிரீன் போட்டு அதிகாலையில் சூரிய வெளிச்சம் அதிகம் வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள். கம்ப்யூட்டர், டி.வி. போன்ற பொருட்களை தூங்கும் அறையில் வைக்காமல் வேறு அறையில் வையுங்கள். நன்றாகத் தூங்குவதற்கு தினமும் செய்யும் உடற்பயிற்சி கண்டிப்பாக உதவும். தூங்குவதற்கு முன்பு சிலபேர் உடற்பயிற்சி செய்வார்கள். சிலருக்கு அந்தப் பழக்கம் கிடையாது. பகலில் எந்த நேரத்தில் செய்யப்படும் உடற்பயிற்சியும் உடலுக்கு நல்லது தான். தூங்கப்போவதற்கு முன்பு செய்யப்படும் லேசான உடற்பயிற்சி தூக்கத்தை வரவழைக்கும். ஆனால் கடினமான உடற்பயிற்சி தூக்கத்தை கெடுத்துவிடும் காலையில் செய்யப்படும் உடற்பயிற்சியோ, முற்பகலில் செய்யப்படும் உடற்பயிற்சியோ தூக்கத்தை தொந்தரவு பண்ணாது. குறைந்தது நான்கு மணி நேரத்துக்கு முன்பு உடற்பயிற்சிகளையெல்லாம் செய்து முடித்து விடுங்கள். அதற்குப் பிறகு செய்யாதீர்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கரெக்டாகப் படுத்து விட வேண்டும் என்று முடிவு செய்து அந்த நேரத்தில் படுக்கைக்கு போய் விடுங்கள். இரவு தூங்கப் போவதையும் காலையில் தூங்கி எழுவதையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்தாக வேண்டும் என்று மனதில் நினைத்து அந்த நேரத்தை முடிவு செய்து மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். மாற்றி மாற்றி கண்ட நேரத்தில் தூங்கி கண்ட நேரத்தில் எழுந்திருக்காதீர்கள். சுமார் 700 கோடி மக்கள் வாழும் இந்த பூமியைப்போல் பல மடங்கு பெரியது சூரியன். அவ்வளவு பெரிய சூரியனே காலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு உதயமாகி மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மறைகிறது. அப்பேர்ப்பட்ட சூரியனே நேரத்தைக் கடைப்பிடிக்கும்போது மனிதர்களாகிய நாம் ஒன்றுமே கிடையாது. எனவே நாமும் தூங்கும் நேரத்தையும், விழிக்கும் நேரத்தையும் மனதில் பதிவு செய்து கொள்ள வேண்டும். சனி ஞாயிறு லீவு தானே கொஞ்சம் லேட்டாகப் படுத்து லேட்டாக எழுந்திருக்கலாம் என்று நினைத்து தூங்கும் நேரத்தை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். உங்கள் மனதில் ஏற்கனவே நீங்கள் தூங்கப்போகும் நேரமும், எழுந்திருக்கும் நேரமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை மாற்றாதீர்கள். பகலில் ஒரு மணி நேரம் இரண்டு மணிநேரம் என்று குட்டித் தூக்கம் போடாதீர்கள். அது இரவுத் தூக்கத்தை கெடுத்து விடும். இரவுத் தூக்கத்தை தாமதப்படுத்தி விடும். அப்படியே தூங்கித்தான் ஆக வேண்டும் என்று முடிவு செய்தால் பகலில் மூன்று மணிக்கு முன்னால் தூங்கி எழுந்து விடுங்கள். தூக்கமின்மை ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. தினமும் இரவில் சுமார் 7 மணி நேரம் நன்கு தூங்கினால் அவர்களுக்கு சீக்கிரம் இறப்பதற்குண்டான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று அமெரிக்காவிலுள்ள அமெரிக்கன் கேன்ஸர் சொசைட்டி சுமார் 11 லட்சம் பேரிடம் எடுத்த சர்வேயின்படி கூறுகிறது. அதேநேரத்தில் எட்டு மணி நேரத்திற்கு மேலே தூங்கினால் அவர்களுக்கு சீக்கிரம் இறப்பதற்குண்டான வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்றும் அந்த சர்வே கூறுகிறது. தினமும் எட்டு மணி நேரத்துக்கு மேலே தூங்குவது உடலுக்கு நல்லதல்ல என்பது நமக்கே தெரியும். தூங்கும் நேரம் குறையக்குறைய உடல் ஆரோக்கியமும் குறைந்து கொண்டே போகும். அமெரிக்காவில் நாற்பது வயதை நெருங்கியவர்களும் அதற்கு மேலுள்ளவர்களும் சுமார் 58 சதவீதம் பேர் வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ இரவில் நிம்மதியான தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்று தேசிய தூக்க ஆய்வு நிறுவனம் சொல்கிறது. செல்வச் செழிப்பில் இருக்கும் நாடாகிய அமெரிக்காவில் வாழ்பவர்களுக்கே இப்படி என்றால் கஷ்டப்படும் வளர்ச்சியடையாத நாடுகளில் வசிப்பவர்களின் நிலைமை என்ன என்று யோசித்துப் பாருங்கள். எனவே பணத்துக்கும் தூக்கத்துக்கும் சம்பந்தமில்லை. தூக்கம் வரும்போது மட்டும் தூங்குங்கள். மற்ற நேரத்தில் படுக்கை பக்கமே போகாதீர்கள். தூங்காவிட்டாலும் பரவாயில்லை. படுக்கையில் அரை மணி நேரம் ரிலாக்சாக படுத்து எழுந்தாலே போதும். உடம்பிலுள்ள களைப்பு எல்லாம் போய்விடும் என்று சொல்வதும் உண்டு. எது எப்படியோ, தூக்கம் வராமல் படுக்கையில் கண்ணை மூடிக்கொண்டு மட்டும் சும்மா படுத்திருக்காதீர்கள். படுக்கையில் படுத்து சுமார் 20 நிமிட நேரத்தில் உங்களால் தூங்க முடியாவிட்டால், அல்லது உங்களுக்கு தூக்கம் வராவிட்டால் படுக்கையிலிருந்து எழுந்து விடுங்கள். போர் அடிக்கக்கூடிய ஏதாவது ஒரு விஷயத்தை உங்களுக்கு தூக்கம் வருகிற வரைக்கும் செய்யுங்கள். பின் தூக்கம் தானாக வரும். அந்த நேரத்தில் போய்ப்படுங்கள். படுக்கை அறையிலுள்ள வெளிச்சத்தைக் குறையுங்கள். பளிச்சென்று மிகவும் பிரகாசமாக எரியும் விளக்குகளை படுக்கையறையில் உபயோகிக்காதீர்கள். வெளிச்சம் உங்களது மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்கும். மங்கிய வெளிச்சத்தில் அமைதியாக உட்கார்ந்திருங்கள். தூக்கம் தானாக வரும். தூக்கத்தை கெடுக்கக் கூடிய மது, சிகரெட் நிகோடின் காபி ஆகியவைகளை தூங்கப்போவதற்கு சுமார் நான்கு மணி நேரத்திற்கு முன்பே முடித்து விடுங்கள். தூங்கப்போவதற்கு முன்பு எளிதில் செரிக்கக்கூடிய உணவை குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிக உணவு இரவில் வேண்டாம். வயிறு காலியாக இருந்தாலும் தூக்கம் வராது. வயிறு முட்ட சாப்பிட்டாலும் நிம்மதியாக தூங்க முடியாது. பாலில் டிரிப்டோபன் என்னும் பொருள் இருக்கிறது. இது தூக்கத்தை உண்டு பண்ணும். எத்தனை மணி நேரம் படுக்கையில் படுத்திருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எவ்வளவு நேரம் நன்றாக தூங்குகிறோம் என்பது தான் முக்கியம். |
| Posted: 13 Mar 2012 10:13 AM PDT பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு பெரிதாகக் காணப்படும். பிள்ளைப் பெற்றால் இப்படித்தான் ஆகும்... என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், சில உடற்பயிற்சிகளை செய்யச் சொன்னால் அந்த பிரச்சினையை எளிதில் போக்கிவிடலாம். அதற்கு என்ன செய்யலாம்? * மல்லாந்து படுத்துக் கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே தூக்க வேண்டும். பிறகு இடது காலை தூக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். இதுபோல் தினமும் பத்து முறை செய்யலாம். இப்படிச் செய்வதால் உப்பிக் காணப்படும் வயிற்றின் உப்புசம் குறையும். * நின்றுக் கொண்டு, இரண்டு கை விரல்களும் கால் விரல்களை தொடும் அளவுக்கு தினமும் பத்து முறை குனியலாம். * காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கலாம். * நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமையல் வேலைகளை செய்யாமல் கீழே உட்கார்ந்து வேலை செய்வது நல்லது. * குழந்தை பிறந்த ஐந்து மாதத்திற்குப் பிறகு தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தாலும் வயிற்று உப்புசம் சரியாகும். |
| Posted: 13 Mar 2012 10:11 AM PDT தினமும் இட்லியா? என்று சலித்துக் கொள்பவர்களுக்கு, காஞ்சீபுரம் இட்லி தயாரித்து கொடுத்தால் நிச்சயம் ஒரு பிடி பிடிப்பார்கள். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் எளிதில் ஜீரணமாகக் கூடிய கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவு இது. செய்முறை இதோ... தேவையான பொருட்கள்.... புழுங்கலரிசி - 1 கப் பச்சரிசி - 1 கப் உருண்டை உளுந்தம்பருப்பு - ஒரு கப் கடுகு, உளுந்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் மிளகு - ஒரு டீஸ்பூன் சீரகம் - 1 டீஸ்பூன் இஞ்சி - சிறு துண்டு பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் ஆப்பசோடா - ஒரு சிட்டிகை தேங்காய்ப்பூ - 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் செய்முறை..... * அரிசி, முழு உளுத்தம்பருப்பை ஒன்றாக ஊற வைத்து கொரகொரவென அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்கவும், மாவு பொங்கியதும் ஆப்ப சோடா சேர்த்து கலக்கவும், அத்துடன் நல்லெண்ணெயை காய்ச்சி ஊற்றவும். * வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து பொன்னிறமானதும், மிளகு, சீரகத்தை உடைத்து கலந்து கொள்ளவும். * இத்துடன் இஞ்சியை பொடியாக துருவி சேர்த்து, தேங்காய்ப் பூ, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்க்கவும். * நன்றாக கலந்து அகலமான கிண்ணத்தில் எண்ணெய் தடவி மாவை முக்கால் பங்கு வருமாறு ஊற்றி குக்கரில் வைத்து வெயிட் போடாமல் வேக வைக்கவும். |
| Posted: 13 Mar 2012 10:09 AM PDT தியானம் செய்யும்போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. ஒருவர் தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்வது நல்லது. காலையிலோ, மாலையிலோ எப்போது வேண்டுமானாலும் தியானம் செய்யலாம். தியானத்தின் போது அவசரம் இருக்கவே கூடாது. ஏதாவது ஒரு வேலையைச் செய்ய மனதில் நினைத்துக் கொண்டு தியானம் செய்ய ஆரம்பிக்கக் கூடாது. |
| Posted: 13 Mar 2012 09:41 AM PDT ஓம் அதிதி புத்ரனே போற்றி ஓம் அளத்தற்கரியனே போற்றி ஓம் அறுகுப்பிரியனே போற்றி ஓம் அருணன் சோதரனே போற்றி ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி ஓம் ஆண் கிரகமே போற்றி ஓம் ஆதிவார நாதனே போற்றி ஓம் ஆய்வின் இலக்கே போற்றி ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி ஓம் ஆன்மாவே போற்றி ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி ஓம் இருள் நீக்கியே போற்றி ஓம் இயக்க சக்தியே போற்றி ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி ஓம் உக்கிரனே போற்றி ஓம் உஷாநாதனே போற்றி ஓம் உவமைப்பொருளே போற்றி ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி ஓம் உத்திர நாதனே போற்றி ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி ஓம் என்பானவனே போற்றி ஓம் எருக்கு சமித்தனே போற்றி ஓம் எழுபரித் தேரனே போற்றி ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி ஓம் ஒளிப்பிழம்பே போற்றி ஓம் ஓராழித்தேரனே போற்றி ஓம் ஓய்விலானே போற்றி ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி ஓம் கதிரவனே போற்றி ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி ஓம் களங்கமிலானே போற்றி ஓம் கமலம் விரிப்பவனே போற்றி ஓம் கர்ணன் தந்தையே போற்றி ஓம் கனலே போற்றி ஓம் கண்ணின் காவலே போற்றி ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி ஓம் காசியபர் மைந்தனே போற்றி ஓம் காயத்ரி தேவனே போற்றி ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி ஓம் காலக் கணக்கே போற்றி ஓம் காய்பவனே போற்றி ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி ஓம் கிழக்கு நோக்கனே போற்றி ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி ஓம் கிரக நாயகனே போற்றி ஓம் கிருபாகரனே போற்றி ஓம் குந்திக்கருளியவனே போற்றி ஓம் குறை தீர்ப்பவனே போற்றி ஓம் கோதுமைப் பிரியனே போற்றி ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி ஓம் ஞாயிறே போற்றி ஓம் ஞாலக் காவலே போற்றி ஓம் சனித் தந்தையே போற்றி ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி ஓம் சாட்சித் தேவனே போற்றி ஓம் சமரிலானே போற்றி ஓம் சிங்கக் கொடியனே போற்றி ஓம் சிம்மராசியதிபதியே போற்றி ஓம் சிரஞ்சீவியே போற்றி ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி ஓம் சுயம்பிரகாசனே போற்றி ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி ஓம் செம்மேனியனே போற்றி ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி ஓம் செந்நிறக் குடையனே போற்றி ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி ஓம் சூலாயுதனே போற்றி ஓம் சோழர் மூதாதையே போற்றி ஓம் சௌரத் தலைவனே போற்றி ஓம் தனிக்கோவிலோனே போற்றி ஓம் தாமிர உலோகனே போற்றி ஓம் தூயவனே போற்றி ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி ஓம் நடுவிருப்போனே போற்றி ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி ஓம் நலமேயளிப்பவனே போற்றி ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி ஓம் நான்முனித் தந்தையே போற்றி ஓம் நாடப்படுபவனே போற்றி ஓம் நீதித் தேவனே போற்றி ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி ஓம் பகற் காரணனே போற்றி ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி ஓம் பரஞ்சோதியே போற்றி ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி ஓம் பாலைநிலத் தேவனே போற்றி ஓம் பிரபாகரனே போற்றி ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி ஓம் புத்தியளிப்பவனே போற்றி ஓம் மல நாசகனே போற்றி ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி ஓம் மயில்வாகனனே போற்றி ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி ஓம் முதல் கிரகமே போற்றி ஓம் முக்கோணக் கோலனே போற்றி ஓம் முழுமுதற் பொருளே போற்றி ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி ஓம் விடியச் செய்பவனே போற்றி ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி ஓம் "ஹ்ரீம்'' பீஜ மந்திரனே போற்றி ஓம் சூரியநாராயணனே போற்றி |
| Posted: 13 Mar 2012 09:39 AM PDT குற்றாலத்தில் மெயின் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோவில். மெயின் அருவியில் நீராடுபவர்களில் பலர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கிறார்கள். குற்றாலநாதர் கோவில் சங்கு வடிவில் அமைந்திருப்பது சிறப்பு. வடக்கு பார்த்த சன்னதி கொண்டுள்ள இந்த கோவிலில் இறைவன் சன்னதியும், அம்மன் சன்னதியும் அருகருகே அமைந்துள்ளன. குற்றாலநாதருக்கும், அம்மனுக்கும் தினமும் சந்தன தைல அபிஷேகம் செய்யப்படுகிறது. பொதுவாக, ஜுன் முதல் செப்டம்பர் மாதம்வரை குற்றால சீசன் நிலவும். சிலநேரங்களில் தென்மேற்கு பருவக்காற்று மழை பெய்ய காலதாமதம் ஆவது உண்டு. அதுபோன்ற நேரங்களில் குற்றாலநாதருக்கும், அம்மனுக்கும் `தாராபிஷேகம்' என்ற அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகம் செய்தால் குற்றாலத்தில் மழைச்சாரல் விழுந்து சீசனும் ஆரம்பித்து விடும் என்பது நம்பிக்கை. |
| Posted: 13 Mar 2012 09:32 AM PDT சுவாமி : கைலாசநாதர் அம்பாள் : ஸ்ரீ சிவகாமி அம்சம் : செவ்வாய் ராசி : விருச்சிகம், மேஷம் சிறப்பு : இத்தலத்து இறைவனை வழிபட்டால் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் சிவபெருமானை வழிபட்டதற்குச் சமம். பலன் : செவ்வாய் தோஷம் நீங்கும், திருமணத்தடைகள் நீங்கும். சகல நோய்கள் குணமாகும். நந்திக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறும். அர்ச்சகர் : ஜி. சுரேஷ் முகவரி : இ.பி. ஆபீஸ்ரோடு, நடுக்கல்லூர் செல் : 9659728621 இருப்பிடம் : திருநெல்வேலி சேரன் மகாதேவி செல்லும் வழியில் நடுக்கல்லூருக்கு தெற்கே 1 கி.மீ.ல் உள்ளது. நடை திறந்திருக்கும் நேரம் : காலை 6.00 முதல் 12.00 வரை |
| உயிர் காக்கும் காமாட்சி விரதம்..// Posted: 13 Mar 2012 09:25 AM PDT காரடையான் நோன்பு அன்று அன்னை பராசக்தியான ஸ்ரீகாமாட்சியை விரதம் இருந்து பெண்கள் வழிபடுவார்கள். இதற்கு காரணம் உண்டு. ஒரு சமயம் சிவபெருமான் தனிமையில் இருக்கும் போது, அன்னை பார்வதிதேவி இறைவனின் கண்களை விளையாட்டாகப் பொத்தினாள். அதன் விளைவால் உலகம் முழுவதும் இருள் சூழ்ந்து உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாயின. கோபம் கொண்ட சிவபொருமான் பார்வதியை பூலோம் சென்று தவம் செய்யும் படி கட்டளையிட்டார். அதன்படி பூலோகம் வந்த பார்வதி இன்றைய சென்னையின் புறநகர் பகுதியான மாங்காட்டில் தவமிருந்து பிறகு காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் செய்து விரதம் மேற்கொண்டு பூஜித்து கொண்டிருந்தாள். அந்த வேளையில் இறைவனின் திருவிளையாடலால் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து பார்வதி பூஜை செய்யும் லிங்கத்தை அடித்துச்செல்ல வந்தது. உடனே சிவலிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினாள் பார்வதி. இறைவனும் நேரில் காட்சி கொடுத்தார். வெள்ளம் வடிந்தது. இறைவனுடன் இணைந்தாள். அன்னை காமாட்சி இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்புக்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது. |
| பெண்களின் முக ரோமங்களை போக்கும் கஸ்தூரி மஞ்சள்! Posted: 13 Mar 2012 09:11 AM PDT பெண்கள் சிலருக்கு முகத்தில் தேவையற்ற இடங்களில் ரோமங்கள் முளைத்திருப்பது அவர்களின் அழகையும், தன்னம்பிக்கையையும் பாதிக்கும். ரோமத்தை போக்க கடைகளில் விற்கும் லோசன்களை வாங்கி தேய்த்தும் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. முகத்தில் உள்ள ரோமத்தைப் போக்க ஹேர் ரிமூவர்கள் உபயோகிப்பது நல்லதல்ல என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். இதனால் முடியின் தன்மை மாறி கடினமாக ஆகிவிடும். எனவே இயற்கையான முறையில் முகத்தில் உள்ள ரோமங்களை அகற்ற அழகியல் நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அவற்றை பின்பற்றி பாருங்களேன். கஸ்தூரி மஞ்சள் கஸ்தூரி மஞ்சளுக்கு முடி வளர்ச்சியை குறைக்கும் தன்மை உண்டு. எனவே நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் கஸ்தூரி மஞ்சளை வாங்கி அதனுடன் பாசிப்பயறு சேர்ந்து இரண்டையும் வெளியில் காயவைத்து மெஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும். தினசரி குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் இந்த பவுடரை போட்டு கழுவவும். உடனடியாக பலன் தராது. ஆனால் நாளடைவில் முடியை உதிரச்செய்து ரோமங்கள் வளர்வதை தடுக்கிறது. முகமும் அழகாவதோடு சருமமும் பாதுகாக்கப்படும். வேப்பிலை, மஞ்சள் முகத்தில் காணப்படும் ரோமங்கள் நீங்க குப்பைமேனி இலை, வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து தேவையற்ற ரோமங்கள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் தேவையற்ற ரோமங்கள் அகன்று விடும். அதே போல், வேப்பங்கொழுந்தை அரைத்து பூசினாலும் ரோமங்கள் உதிர்ந்து விடும். பாசிப் பயறு, மஞ்சள் பச்சை பயிறை நன்றாக அரைத்து முகத்தில் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், சிலருக்கு முகத்தில் காணப்படும் தேவையற்ற ரோமங்கள் உதிர்ந்து விடும். தினசரி மஞ்சள் தேய்த்து குளித்து வருவதாலும், முகத்தில் ரோமங்கள் வளராது. சர்க்கரை கரைசல் 2 கப் சர்க்கரையில், கால் கப் எலுமிச்சை சாறு ஊற்றி அரை கப் தண்ணீர் ஊற்றி கலக்கவும். இந்த கலவையை அகலமான பாத்திரத்தில் போட்டு மிதமாக சூடுபடுத்தவும். லேசாக நுரைகள் வந்த உடன் இறக்கிவைத்து லேசாக குளிர வைக்கவும். |
| மத்திய அரசின் அதிரடி-ரூ. 2.84 லட்சம் புற்று நோய் மருந்து இனி ரூ.88,00க்கே! Posted: 13 Mar 2012 09:07 AM PDT மத்திய அரசின் அதிரடியான நடவடிக்கையால் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப் பெரிய நல்லது நடந்துள்ளது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். அது தவிர அதிகம் செலவு செய்வது மருந்து மாத்திரைகளையும் வாங்க வேண்டியுள்ளது. அவர்களின் சிரமத்தினை குறைக்க அதிக விலையிலான புற்று நோய் மாத்திரைகளை மிக மிக குறைந்த விலைக்குக் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது சாதாரணமான விஷயம் இல்லை. காரணம், இது நாள் வரை ரூ. 2.84 லட்சத்திற்கு விற்று வந்த மருந்துகளை இனிமேல் ரூ. 8880க்கே வாங்கலாம் என்பதால் மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகப் பெரிய விஷயம். இந்த மருந்தின் பெயர் sorafenib tosylate ஆகும். இதன் பிராண்ட் பெயர் Nexavar ஆகும். 120 மாத்திரைகளைக் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை தற்போது ரூ. 2.84 லட்சமாகும். இதனால் புற்றுநோயாளிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர். தற்போது மத்திய அரசு அவர்களுக்கு பேருதவி புரிந்துள்ளது. இந்த மருந்துக்கான காப்புரிமை தற்போது ஜெர்மனியைச் சேர்ந்த பேயர் நிறுவனத்திடம் உள்ளது. ஆனால் புற்றுநோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்யவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, சர்வதேச காப்புரிமை சட்டத்தைப் பிரயோகித்து, ஹைதராபாத்தில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான நேட்கோ விற்கு ஒப்பந்த அடிப்படையில் புற்றுநோய் மருந்துகளை உற்பத்தி செய்ய கட்டாயமாக லைசென்ஸ் வழங்குமாறு பேயருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய காப்புரிமைச் சட்டம் 84 ன் கீழ் நேட்கோவிற்கு இந்த லைசென்ஸ் கிடைத்துள்ளது. இந்த மருந்துகள் முற்றிய நிலையில் உள்ள சிறுநீரக, கல்லீரல் புற்றுநோயை கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் மூலம் நோயாளிகளின் வாழ்நாள் அதிகரிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். |
| முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்த 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்கியது Posted: 13 Mar 2012 09:00 AM PDT முல்லைப் பெரியாறு அணையின் பலத்தை ஆய்வு செய்யும் 2-ம் கட்ட சோதனை இன்று தொடங்கியது. புனேயில் உள்ள மத்திய நீர்மின் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் தேசாய் தலைமையில் தொடங்கிய இந்த சோதனையில், புனேயைச் சேர்ந்த கபோடி நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். முல்லைப் பெரியாறின் அணையின் மொத்த நீளமான, 1,200 மீட்டரில் 310வது மீட்டர் மற்றும் 650வது மீட்டர் பகுதியில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக 150 மில்லி மீட்டர் கருவிகள் கொண்டு துளையிடப்பட்டு வருகிறது. நீர்க்கசிவு உள்பட 3 விதமான பரிசோதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பரிசோதனைகள் இம்மாதம் இறுதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| மொறு மொறு செட்டிநாடு கை முறுக்கு Posted: 13 Mar 2012 08:58 AM PDT முறுக்கு வகைகளில், கைகளால் சுற்றி செய்யப்படும் கை முறுக்கின் சுவை அலாதியானது. மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சிற்றுண்டி. தேவையான பொருட்கள் அரிசி மாவு - 3 கப் உளுத்தம் மாவு - கால் கப் டால்டா - ஒன்றரை டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு சீரகம் – 100 கிராம் வெண்ணெய் - அரை கப் எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு முறுக்கு செய்முறை அகலமான பாத்திரத்தில் அரிசி மாவுடன் உளுத்தம் மாவு, உப்பு, போட்டு டால்டா, வெண்ணைய்யை லேசான சூட்டில் சற்று உருக்கி எடுத்து ஊற்றவும். இதோடு சீரகம் சேர்த்து போட்டு நன்றாக பிசையவும். பின்னர் மாவின் மேல் 2 கப் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மிகவும் தோய்வாக இல்லாமல் பிசையவும். ஒரு உருண்டை மாவை எடுத்துக் கொண்டு, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் ஆகிய மூன்று விரல்களைக் கொண்டு முறுக்கினை சுற்றவும். கட்டை விரலாலும், ஆட்காட்டி விரலாலும் மாவினை சிறிது அழுத்திவிட்டு, பிறகு அதனைத் திருகி திருகி, வட்ட வடிவில் சுற்றவும். முதலில் ஒரு பேப்பரில் சுற்றிக் கொள்ளவும். முறுக்கு பெரிதாக இருந்தால், பேப்பரை அப்படியே ஒரு தட்டில் கவிழ்த்து, தட்டில் முறுக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த வகை முறுக்கினை மிகவும் மெல்லியதாக சுற்றக்கூடாது. முறுக்கு சுற்றின பிறகு சிறிது நேரம் உலர வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் முறுக்கு வைத்துள்ள தட்டை எண்ணெய்க்கு அருகில் கொண்டு சென்று, சற்று கவனமுடன் எண்ணெய்யில் போடவும். எண்ணெய் நுரைத்து வருவது குறைந்தவுடன், இரண்டு புறமும் பொன்னிறமாக வெந்ததும், ஒரு கம்பி கொண்டு முறுக்கினை எடுத்து எண்ணெய் வடியவிடவும். |
| உத்தர்கண்ட் முதல்வராக காங். எம்.பி. பஹுகுணா பதவியேற்பு-பாதி எம்எல்ஏக்கள் வரவில்லை Posted: 13 Mar 2012 08:56 AM PDT காங்கிரஸ் எம்.பி. விஜய் பஹுகுணா உத்தர்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பாதிக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். பஹுகுணாவுக்கு முதல்வர் பதவி கொடுத்ததற்கு மத்திய இணையமைச்சரான ஹரீஷ் ராவத்தும் அவரது ஆதரவு எம்எலஏக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தனது எதிர்ப்பைத் தெரிவிக்க தனது மத்திய அமைச்சர் பதவியை ராவத் ராஜினாமா செய்துள்ளார். ஆனாலும் காங்கிரஸ் தலைமை விஜய் பஹுகுணாவையே உத்தர்கண்ட் முதல்வராக இன்று பதவியேற்க வைத்தது. பதவியேற்பு விழா டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மொத்தமுள்ள 32 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 15 பேர் மட்டுமே பங்கேற்றனர். மற்றவர்கள் விஜய் முதல்வராவதை எதிர்க்கும் ராவத் கோஷ்டியை சேர்ந்தவர்கள் ஆவர். 70 இடங்கள் உள்ள உத்தர்கண்ட் சட்டசபையில் காங்கிரஸுக்கு 32 இடங்கள் கிடைத்தது. ஆட்சியமைக்க 36 எம்.எல்.ஏ.க்களாவது வேண்டும். இதையடுத்து 3 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தர்கண்ட் கிராந்தி தளத்தைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் ஆதரவை காங்கிரஸ் பெற்றது. இதன்மூலம் அந்தக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. |
| Posted: 13 Mar 2012 08:06 AM PDT ![]() மகரிஷியால் உபதேசிக்கப்பட்ட 27 ஸ்லோகம் கொண்ட துர்கா நட்சத்திரமாலிகா ஸ்துதியை பக்தியுடன் ஒன்பது இரவுகள் சொன்னார்கள். அந்த இரவுகளே நவராத்திரி ஆயிற்று. அவர்களை அவள் ஆசிர்வதித்தாள். வெற்றிக்கு துணை நின்றாள். |
| சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? Posted: 13 Mar 2012 08:03 AM PDT ![]() சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி ஜாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் ஜாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது ஜாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். சிவம் என்பதன் பொருள் சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று பொருள். சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் நன்மை பெருகும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தை முறைப்படி அனுஷ்டிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் இருப்பதற்கு பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் உலகம் அழிந்தபோது மீண்டும் உலகை சிருஷ்டிக்க உமாதேவி சிவனைபூஜித்து ஒரு இரவு முழுவதும் இருந்த விரதமே சிவராத்திரி விரதம். மற்றொரு கதையின்படி, சிவனின் கண்களை பார்வதிதேவி மூடியதாகவும், இதனால் உலகம் இருண்ட நேரத்தை சிவராத்திரியாக அனுஷ்டிப்பதாகவும் கூறுகிறார்கள். ஜோதிர்லிங்கம் என்றால் என்ன? ராமேஸ்வரத்துக்கு போய் ஜோதிர்லிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள். அதன் தத்துவம் என்ன? யோகிகள், தங்கள் சிரசிலுள்ள சகஸ்ரார கமலத்தில் (ஆயிரம் இதழ் தாமரை போன்றது) உள்ள சந்திரமண்டலத்தில், சிவனை ஜோதி வடிவாக தியானம் செய்வார்கள். அப்போது, சந்திரமண்டலத்தில் இருந்து அமிர்தம் கொட்டும். அவர்கள் பரமானந்த நிலையில் திளைப்பார்கள். இதன் காரணமாக, உலக வடிவான ஜோதிர்லிங்கம் குளிரும். அது குளிர்ந்தால் உலகமே குளிரும்.அதாவது, மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு இது போன்ற யோகம் சாத்தியமல்ல. நாம் செய்யும் யோகா எல்லாம் உடல்நலத்துக்காக மட்டுமே. லிங்கம் குளிர்ச்சியாக இருக்க வேண்டுமே என்பதற்காகத்தான் வடக்கேயுள்ள ஜோதிர்லிங்கத் தலங்களில் பக்தர்களே அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. லிங்கோத்பவரின் அடியும் முடியும் புதைந்த ரகசியம் சிவாலயங்களில் கோஷ்டத்தின் பின்புற சுவரில் லிங்கோத்பவரைக் காணலாம். இவரது பாதங்கள் பூமியில் புதைந்திருக்கும். தலை வானில் புதைந்திருக்கும். மேலே ஒரு அன்னமும், கீழே ஒரு பன்றியும் செதுக்கியிருப்பார்கள். அன்னம் பிரம்மாவாகவும், வராகம் (பன்றி) விஷ்ணுவாகவும் கருதப்படுகிறது. இவர்கள் சிவனின் அடிமுடியைக் காண போட்டியிட்டதாக ஒரு புராணக்கதை உண்டு. உண்மையில் இதன் தத்துவம் என்ன தெரியுமா? சிவன் லிங்க வடிவமாக உள்ளார். லிங்கம் என்பது நீள் வட்ட வடிவமுடையது. சதுரம், செவ்வகம், முக்கோணம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஆரம்ப இடமும், முடியும் இடமும் உண்டு. ஆனால், வட்டத்துக்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. சிவனும் ஆதிஅந்தம் இல்லாதவர் என்பதை இந்த வடிவம் காட்டுகிறது. ஆனால், இந்த வடிவம் மனதில் நிற்காது என்பதற்காக ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஊரில் இருக்கும் மகனிடமோ மகளிடமோ போனில் பேசினால் திருப்தி இருக்காது. நேரில் பார்த்தால் தான் மனம் திருப்தியடையும். அதுபோல, சிவனை நேரில் பார்த்த திருப்தி பெற, அவரது உருவத்தை நீள்வட்ட லிங்கத்துக்குள் நிறுத்தி, தலையும், திருவடியும் புதைந்திருப்பது போல் காட்டி, அவர் ஆதிஅந்தமில்லாதவர் என்ற தத்துவம் மாறாமல் உருவம் கொடுத்தனர். மகாபாரதத்தில் சிவராத்திரி மகாபாரதத்தில் சிவராத்திரி விரதம் பற்றி கூறப்படுகிறது. பீஷ்மர் அம்புபடுக்கையில் படுத்தபடி தர்மத்தைப்பற்றி எடுத்துக்கூறும்போது சித்ரபானு என்ற மன்னன் அவரிடம் மகா சிவராத்திரி விரதம் பற்றி கூறுகிறான். இந்த மன்னனுக்கு பூர்வ ஜென்ம வரலாறுகளை நினைவுகூறும் சக்தி உண்டு. அதன் அடிப்படையில் கடந்த பிறவி ஒன்றில் அவன் இவ்விரதத்தை அனுஷ்டித்ததாக சொல்கிறான். அந்தபிறவியில் அவன் சுச்வரன் என்ற பெயரில் வேடனாக இருந்தான். இந்த பெயருக்கு இனியகுரல் என்று பொருள். ஒருமுறை வேட்டைக்கு சென்றபோது ஒரு மரத்தில் ஏறி அமர்ந்திருந்தான். அது ஒரு வில்வ மரம். இரவு முழுக்க காத்திருந்தும் எந்த மிருகமும் அகப்படவில்லை. குடும்பத்தாரின் நினைவு அவனுக்கு வந்தது. பசியும் தாகமும்அவனைவாட்டி எடுத்தது. குடும்பத்தினரை நினைத்து கண்ணீர்விட்டான். பொழுதுபோகவில்லையே என்பதற்காக மரத்தில் இருந்த வில்வ இலைகளை பறித்து தரையில் போட்டுக் கொண்டிருந்தான். மறுநாள் ஒரு மான் சிக்கியது. அப்போது ஒருவன் வேடன் எதிரே வந்தான். அவன் அந்த மானை தனக்கு தரும்படி கேட்டான். பசியால் அவன் முகம் வாடி உள்ளது என்பதை அறிந்த வேடன், அவனுக்கும் தன்னிடம் இருந்த மான் இறைச்சியின் ஒரு பகுதியை கொடுத்தான். பிறகு வீட்டிற்கு சென்று சாப்பிட்டான். அந்த வேடனின் இறுதிக்காலம் வந்தது. அவன் இறந்ததும் சிவலோகத்திற்கு சென்றான். வேடன் ஆனாலும் காட்டில் மரத்தின் மீது அமர்ந்திருந்த நாள் சிவராத்திரி என்பதால், சிவபதம் கிடைத்துவிட்டது. அன்று இரவில் வில்வ இலைகளை கீழே போடும்போது மரத்தின் அடியில் இருந்த லிங்கத்தை கவனிக்கவில்லை. இடுப்பில் கட்டியிருந்த குடுவையிலிருந்து மிச்சம் மீதி இருந்த தண்ணீர் லிங்கத்தின் மீது பட்டது. அபிஷேமாகவும், அர்ச்சனையா கவும் ஏற்றுக்கொண்டார். விரதத்தின் முடிவில் தானமும் செய்துவிட்டான். இதன் காரணமாக அவனுக்கு சொர்க்கம் கிடைத்தது. சிவராத்திரி பூஜை வீட்டில் செய்வது எப்படி? உங்கள் வீட்டில் சிவலிங்கம் அல்லது நடராஜர் சிலை இருந்தால் வீட்டிலேயே நான்கு ஜாமமும் பூஜை செய்யலாம். அன்று பகலில் சாப்பிடாமல், மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் துவக்க வேண்டும். மாலை 6.30. இரவு 9.30, நள்ளிரவு 12.30, அதிகாலை 3மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்ட வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து சிவாயநம நமசிவாய என மந்திரம் சொல்லலாம். சிவன் தொடர்பான பாடல்கள், கதைகளை பக்தியுடன் ஒருவர் சொல்ல, மற்றவர்கள் கேட்கலாம். விழிக்கிறோம் என்ற பெயரால் சினிமா, டிவி பார்க்கக்கூடாது. சிவராத்திரி கொண்டாட்டம் ஏன்? பார்வதிதேவி ஒருநாள் விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூடினாள். ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கி உயிர்கள் வருந்தின. அந்நாளே மகாசிவராத்திரி என்று கூறுவர். திரயோதசியன்று மாலையில் சிவபெருமான் பிரதோஷ நடனம் ஆடினார். அன்றிரவு தேவர்கள் பாற்கடலை கடைந்து பெற்ற விஷத்தை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தனர். சிவபெருமான் நஞ்சையும் விரும்பி உண்டு தேவர்களைக் காத்தார். விஷத்தைக் குடித்ததால் மயக்கமடைந்தார். அன்றிரவு சிவபெருமானைத் துதித்து தேவர்கள் யாவரும் வணங்கி நின்றனர். அந்நாளே சிவராத்திரி. மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் விரைந்து வந்தான். உயிரைக் காத்துக் கொள்ள அவன் சிவலிங்கத்தை ஆரத்தழுவிக் கொண்டான். ஆனாலும், தர்மவானான எமதர்மன் பாசக்கயிற்றை வீசினான். கயிறு லிங்கத்தையும் பற்றிக் கொண்டது. சிவபெருமான் எமனை காலால் உதைத்தார். அதன்பின், தேவர்கள் சிவனை வேண்டி எமனை உயிர்ப்பித்தனர். அந்நாளே மகாசிவராத்திரி என்று கூறுவர். அதனால், மகாசிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டோருக்கு மரணபயம் நீங்கும் என்பது ஐதீகம். நான்கு காலம்! நான்கு கோலம்! மகாசிவராத்திரியன்று இரவுப்பொழுதில் நான்குகாலஅபிஷேகம் சிவபெருமானுக்கு நடைபெறும். ஒவ்வொரு காலத்திலும் சிவபெருமானின் ஒவ்வொரு கோலத்தை வழிபடவேண்டும். முதல்காலத்தில் முருகப்பெருமானை நடுவில் அமர்த்தி உமாதேவியும், சிவபெருமானும் காட்சிதரும் சோமாஸ்கந்தரை வழிபடுவர். இரண்டாம்காலத்தில் தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும். 3ம் காலத்தில் கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவரை தரிசிக்கவேண்டும். நான்காம் காலத்தில் ரிஷபவாகன சிவனான சந்திரசேகரரை வழிபடவேண்டும். சிவராத்திரிக்கு வெந்நீர் அபிஷேகம் உக்கிரசேன மன்னன் சிவபெருமானை வேண்டி பார்வதிதேவியை மகளாகப்பெற்றான். மன்னன் மகளுக்கு தேவிகாஎன்று பெயரிட்டு வளர்த்தான். அவள் சிவபக்தியோடு இறைவனைப் பூஜித்து வழிபட்டாள். அப்பெருமானுக்கு பொன்மலைநாதர் என்று பெயர். இவர் ஆரணிக்கும் பேரூருக்கும் இடையில் அமைந்துள்ள தேவிகாபுரத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 64 சக்திபீடங்களில் இத்தலம் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இங்கு அபிஷேகத்தின்போது வெந்நீரையே பயன்படுத்துவதும் மாறுபட்டதாகும். பஞ்ச சிவராத்திரி சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளை மகாசிவராத்திரியாக சிவாலயங்களில் கொண்டாடுகிறோம். ராத்ர என்னும் சொல்லுக்கு செயலற்று ஒடுங்கி நிற்கும் காலம் என்று பொருள். இதனையே சம்கார காலம் அல்லது பிரளயகாலம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு நாள் இரவும் உயிர்கள் தூக்கத்தில் ஒடுங்கி செயலற்று விடுகின்றன. அதனையே நித்திய சிவராத்திரி என்று குறிப்பிடுவர். தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பட்ச சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது மாத சிவராத்திரி. சோமவாரமான திங்கட்கிழமை சிவராத்திரி வந்தால் யோக சிவராத்திரி என்பர். மாசிமாத சிவராத்திரி மகாசிவராத்திரி. எல்லாம் இங்கு ஐந்து நாள் சிவபெருமானுக்கு ஐந்தெழுத்து மந்திரத்தால் ஏற்பட்ட பெயர் பஞ்சாட்சரம். பஞ்சாட்சர மந்திரமான நமசிவாயத்தை இறைவனே ஓதுவதால் காசியை விட புனிதமான தலமாக விருத்தாசலம் போற்றப்படுகிறது. விருத்தாசலம் என்பதற்கு பழமையான மலை என்பது பொருள். பூலோகத்தில் இம்மலையே மிகப்பழமையானது என்று இக்கோயில் புராணம் கூறுகிறது. இக்கோயிலுக்கும் ஐந்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. திசைக்கொரு கோபுரமாக நான்கு ராஜகோபுரங்களும், கோயிலுக்குள்ளே ஒரு கோபுரமாக ஐந்து கோபுரங்கள் உள்ளன. கோயிலில் ஐந்து கொடிமரங்கள் உள்ளன. பிரம்மோற்ஸவத்தின் போது ஐந்து கொடிமரத்திலும் கொடி ஏற்றப்படுகிறது. வலப்புறம் தலைசாய்த்தபடியே ஐந்து நந்திகள் இருப்பது சிறப்பாகும். மணிமுத்தாறு, அக்னி, சக்கர, குபேர, நித்தியானந்த கூபம் என்னும் ஐந்து தீர்த்தம் இங்குண்டு. விபசித்து, உரோமசர், குமாரதேவர், நாதசர்மா, அவைர்த்தணி என்னும் ஐந்து ரிஷிகள் விருத்தகிரீஸ்வரரை வழிபட்டு முக்தி பெற்றனர். ஜாக்கிரதையா இருங்க! பூஜையறையில், கண்ணாடிபோல் இருக்கும் ஸ்படிக லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள். இதை வழிபடும்போது,மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஸ்படிகலிங்க வழிபாட்டின் போது, உங்கள் மனதில் என்ன தோன்ற வேண்டும் தெரியுமா? ஸ்படிகலிங்கத்திற்கு நிறம் கிடையாது. ஆனால், அதன் பின்னால் ஒரு செவ்வரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். வில்வத்தை வைத்தால் பச்சையாக இருக்கும். அதாவது, எதை வைத்துள்ளோமோ, அந்த நிறத்தை அப்படியே உள்வாங்கி நம்மிடம் காட்டும். அதே போல், நாம் என்ன எண்ணத்துடன் அந்த லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும். நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்கக்கூடாது. அவ்வாறு கேட்டால், அது நம்மையே வந்தடையும். எனவே, ஸ்படிக லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமக்கு ஒரு கஷ்டம் என்றால், நீ பார்த்துக்கொள் என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள். நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு. ஸ்படிகலிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள். நமசிவாய என்று சொல்வோமே! நன்மைகள் ஆயிரம் கொள்வோமே கயிலாயத்தில் பார்வதி சிவபெருமானிடம் உயிர்கள் உய்யும் வழி பற்றி விவாதித்துக் கொண்டிருந்தாள். அப்போது தேவி இறைவனிடம், நாதா! உங்களை வழிபாடு செய்வதில் எந்தநாள் மிகவும் உகந்தது? என்று கேட்டாள். சுவாமியும் அன்னையின் விருப்பமறிந்து, உமா! மாசி மாதத்தேய்பிறையில் வரும் சிவராத்திரியே எனக்கு மிகவும் உகந்தநாளாகும். அந்நாளில் செய்யும் தீர்த்த ஸ்நானம், தூபதீபம், நிவேதனம், அபிஷேகம் ஆகிய வற்றைக் காட்டிலும் விரதம் மேற்கொள்வதே சிறப்பாகும். சிவபெருமானின் உள்ளம் அறிந்த உமையவள் மிகவும் பரவசமுற்றாள். தானும் சிவராத்திரி நோன்பிருக்க எண்ணம் கொண்டாள். தன்னுடைய தோழிகளுக்கும் விஷயத்தை தெரிவித்தாள். அவர்கள் பூலோகத்திற்கு தெரியப்படுத்தினர். இப்படியே சிவராத்திரி விரதமகிமை உலகெங்கும் பரவியது.மனிதனுக்கு சத்வ, ரஜோ, தமோ என்னும் மூவித குணங்கள் இருக்கின்றன. இதில் சாதுக்களிடம் இருக்கும் உயர்ந்த குணமே சத்வகுணம். ரஜோ, தமோ குணங்கள் நம்மை தாழ்ந்த நிலைக்கு கொண்டு செல்பவை. காமம், கோபம், பொறாமை கொண்டு செயலைச் செய்பவன் ரஜோ குணம் பொருந்தியவன். சோம்பல், தாமதம் ஆகிய குணங்களைக் கொண்டவன் தாமச குணம் பொருந்தியவன். சிவராத்திரி விரதத்தின் மூலம் இவ்விருகுணங்களையும் போக்கிக் கொள்கிறோம். சோம்பல் தரும் தூக்கத்தை வெல்லவேண்டும் என்பதால், இந்நாளில் இரவு முழுவதும் விழிக்கவேண்டும் என்பதை விரத நியமமாக ஏற்படுத்தினர்.சிவனை அபிஷேகம் செய்வது புற வழிபாடு. உண்மையில் சிவபெருமான் ஒளிவடிவமானவர். தவக்கனலால் அவர் ஜொலிக்கிறார். அவரிடம் நாம், இறைவா! பால் தண்ணீர், பால் போன்றவற்றால் நாங்கள் அபிஷேகம் செய்கிறோம். நீர் எம்மை ஞானத்தால் நீராட்டுவீராக. பாவம் அனைத்தையும் போக்கி புனிதமாக்குவீராக. உமது அருளால் அநீதியும், அக்கிரமமும் ஒட்டுமொத்தமாக அகற்றப்படட்டும். இரண்டற்ற நிலையில் பரம்பொருளான உமது அருள் எம்மிடம் பூரணமாக நிலைத்திருக்கட்டும் என்று வழிபட வேண்டும். ஆன்மிக சாதகர்கள் அனைவருமே இருக்கவேண்டிய விரதம் சிவராத்திரி. தண்ணீரைக் கூட அருந்துவதைத் தவிர்ப்பது சிறப்பு. உலக அமைதி மற்றும் சுபிட்சத்திற்காக சிவனுக்குரிய ஹோமம் செய்ய வேண்டும் அல்லது அதில் கலந்துகொள்ள வேண்டும். நாள் முழுவதும் ஓம் நமசிவாய மந்திர ஜபத்தை தியானிக்க வேண்டும். இரவில் சிவாலயத்தில் ஒன்றுகூடி நான்கு கால அபிஷேக தரிசனமும், மந்திரஜெபமும் செய்யவேண்டும். என் இதயத் தாமரையில் வீற்றிருக்கும் ரத்தினமான சிவனே! உம்மை நான் வணங்குகிறேன். சிரத்தை, பக்தி என்னும் நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரான என் தூய மனதால் அபிஷேகம் செய்கிறேன். தியானம் என்னும் நறுமணப்பூக்களால் வழிபடுகிறேன்,என்று சொல்லி உளமாற வழிபட வேண்டும். சிவபெருமானே! நீரே என் உயிர். என் மனமே பார்வதி. என் கருவி கரணங்களே உமது சேவகர்கள். என் உடலே உமது வீடு. என் அன்றாட செயல்கள் அனைத்தும் உமது வழிபாடு. என் உறக்கத்தில் உம்மோடு இரண்டற கலந்து விடுகிறேன். என் கால் நடக்கும் பாதை எல்லாம் உமது கோயில் பிரகாரம். என் பேச்செல்லாம் உமது பிரார்த்தனை மொழி. இவ்விதம் என் எண்ணம், சொல், செயல் அனைத்தையும் உமக்கே அர்ப்பணிக்கிறேன், என்றும் பிரார்த்திக்கலாம். சிவராத்திரி நாளன்று மனவீட்டில் விளக்காக திகழும் ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாயத்தை இயன்றவரை சொல்லி ஆயிரமாயிரம் நன்மைகளை வாழ்வில் பெறுவோம். |
| கடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா? இல்லையா? Posted: 13 Mar 2012 08:01 AM PDT ![]() சீதையின் முன் ஜென்மம்! முதலில் ராமாயணத்தில் முக்கியமான சம்பவத்தைப் பார்க்கலாம்! சுந்தரகாண்டத்தில் அசோகவனத்தில் துன்பப்படும் சீதை, முன் ஜன்மாந்தரத்தில் எப்படிப்பட்ட பாபம் என்னால் செய்யப்பட்டதோ! ஆகவேதான் கொடுமை கொண்டு மிக வருத்துகின்ற இந்தத் துயரம் என்னால் அனுபவிக்கப்படுகிறது (கீத்ருஸம் து மயா பாபம் புராஜன்மாந்தரே க்ருதம் / யேநேதம் ப்ராப்யதே துக்கம் மயாகோரம் ஸுதாருணம் / 26ம் அத்தியாயம் 18ம் சுலோகம்) என்று கூறுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்! சீதைக்கு ஏது முன் ஜென்மம் என்று ஆச்சரியப்படும்போதே, யுத்த காண்டத்தில் மீண்டும் ஒரு குட்டி சம்பவத்தைப் பார்க்கிறோம். ராவணன் வதம் செய்யப்பட்ட நிலையில் ஹனுமன், சீதையைக் கொடுமைப்படுத்திய ராக்ஷஸிகளைக் கொல்வதற்கு சீதையிடம் அனுமதி கேட்கிறான். நன்கு யோசித்து விட்டு சீதை கூறுகிறாள். அவர்கள் வெறும் ஊழியர்கள்தான் ! அவர்கள் மீது ஏன் கோபப்படுகிறாய்! நான் அடைந்த துன்பங்கள் அனைத்தும் எனது முன் ஜென்மங்களில் செய்த செயல்களின் விளைவுதான் என்று திட்டவட்டமாக கூறுகிறாள். (யுத்தகாண்டம் 113ம் அத்தியாயம், 39ம் சுலோகம்) சீதையின் முன் ஜென்மக் கதை சுருக்கமாக இதுதான். ஒருமுறை ராவணன் பூமியைச் சுற்றி வரும்போது இமயமலைக் காட்டுப் பகுதியில் தவம் புரியும் ஒரு மாபெரும் அழகியைப் பார்க்கிறான். காம வசப்பட்ட ராவணன் இளமை பொங்கி வழியும் அழகியிடம் தவத்தை விட்டு விட்டுத் தன்னை மணம் புரிய வேண்டுகிறான். அந்த அழகியோ, பிருஹஸ்பதியின் புத்திரரான பிரம்ம ரிஷி குஸத்வஜரின் புதல்வி தான் என்றும், வேதங்களின் பிறப்பாகத் தான் பிறந்ததாகவும், தன்னை அடையத் தக்கவர் விஷ்ணு ஒருவரே என்று தன் தந்தை கருதியதாகவும், இதைக் கேட்டுக் கோபம் கொண்ட தைத்ய அரசன் சம்பு இரவில் தூங்கிக் கொண்டிருந்த தந்தையைக் கொன்றதாகவும், இதனால் துக்கப்பட்டுத் தனது தாயார் அவருடன் சிதை ஏறியதாகவும், அதன் பின்னர் தந்தையின் ஆசையை நிறைவேற்ற நாராயணரை நோக்கித் தவம் புரிவதாகவும் கூறினாள். யார் அந்த விஷ்ணு? என்று ஏளனமாகக் கூறியவாறே வேதவதியின் கூந்தலைப் பிடித்து ராவணன் தூக்கவே வேதவதி தன் கையைத் தூக்கினாள். அது வாளாக மாற தன் கூந்தலை அறுத்துக் கொண்டு தீயை மூட்டி, நான் இனியும் உயிர் வாழ ஆசைப்படவில்லை; பெண்ணான என்னால் உன்னைக் கொல்ல முடியாது; நான் சாபமிட்டாலோ என் தவத்தை இழக்க வேண்டியிருக்கும். ஆகவே, அக்னியில் புகுந்து என் தவ வலிமையால் அயோனிஜையாக (கர்ப்பத்தில் பிறக்காதவளாக) மீண்டும் வருவேன் என்று கூறி அக்னியில் புகுந்தாள். பின்னர் மீண்டும் ஒரு தாமரை மலரிலிருந்து தோன்றினாள். அவளை மீண்டும் பிடித்த ராவணன் தன் அரண்மனைக்குக் கொண்டு வந்து தனது மந்திரியிடம் காண்பித்தான். அவளது சாமுத்ரிகா லட்சணத்தைக் கூர்ந்து கவனித்த மந்திரி, இவள் இங்கு இருந்தால் உன் அழிவுக்குக் காரணமாவாள் என்று கூறினார். இதனால் ராவணன் அவளை கடலில் தூக்கி எறிந்தான். கரையை நோக்கி வந்த அவள் ஒரு யாகபூமியை அடைந்தாள். அங்கு ஜனக மஹாராஜன் உழும்போது பூமியிலிருந்து அவள் வெளிப்பட்டாள். உழு சாலிலிருந்து (சீதை) வெளி வந்ததால் சீதை என்ற நாமகரணத்துடன் வளர்ந்தாள். ராமனை மணம் புரிந்தாள். கிருத யுகத்தில் வேதவதியாய் இருந்து த்ரேதா யுகத்தில் சீதையாக வெளிப்பட்ட சீதையின் முற்பிறப்பு ரகசியம் பற்றிய கதையின் சுருக்கம் இது தான்! உத்தரகாண்டம் தரும் முன்பிறப்பு இரகசியங்கள்! சாதாரணமாக ராம பட்டாபிஷேகத்துடன் சுபம் என்று நாம் ராமாயணத்தை முடித்து விடுவதால் உத்தர காண்டத்தில் உள்ள அரிய ரகசியங்களை நாம் தெரிந்து கொள்ள முடியாமல் போய் விடுகிறது. வால்மீகி அரிய முன்பிறப்பு ரகசியங்களையும், ராமாயணத்திற்கு ஆதாரமாக விளங்கும் பல ரகசியங்களையும் (பிருகு முனிவர் விஷ்ணுவை பூமியில் மானிடனாக அவதரிக்க சாபம் தந்ததால் அவர் ராமனாக அவதரித்தது உள்ளிட்டவற்றை) உத்தர காண்டத்திலேயே விளக்குகிறார். சீதையின் முற்பிறவியைப் போலவே ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயண கதாபாத்திரங்களின் முற்பிறவி பற்றிய சம்பவங்கள் சுவையானவை. படித்து அறிந்து கொள்ள வேண்டியவை. இந்து மதத்தின் அடிநாதமான உண்மை மறுபிறப்பு! செமிடிக் மதங்கள் என்று கூறப்படும் யூத மதம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் ஆகியவற்றிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளில் முக்கியமான ஒன்று புனர்ஜென்மம். மனிதப் பிறவியில் ஒருவர் ஆற்றும் நல்வினை, தீவினைக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது. அனைத்து மானுடரும் படிப்படியாக முன்னேறி முக்தி அடையலாம்; அடைவர் என்பது இந்து மதம் கூறும் உண்மை. மாறாக செமிடிக் மதங்கள் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு. அவர் இறந்தவுடன் தீர்ப்பு நாள் வரும் வரை காத்திருந்து தீர்ப்பிற்கேற்ப சுவர்க்கத்தையோ அல்லது நரகத்தையோ அடைய வேண்டும் என்று கூறுகின்றன. தர்க்கரீதியாக சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு பிறவிதான் ஒருவருக்கு உண்டு என்றால் ஒருவர் நீண்ட ஆயுளுடன் இருக்க, பிறந்த குழந்தை ஒன்று ஏன் மரிக்க வேண்டும்? ஒருவர் ஏன் செல்வந்தராகவும், இன்னொருவர் ஏழையாகவும் இருக்க வேண்டும்? என்பன போன்ற ஏராளமான கேள்விகள் எழுந்து விடை காண முடியாமல் தவிக்க வேண்டியிருக்கிறது. மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட மாமனிதர்கள்! பிளேட்டோ, பித்த கோரஸ், லியனார்டோ டா வின்ஸி, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், எமர்ஸன், ஷெல்லி, மாஜினி, தோரோ, ஹென்றி ஃ போர்டு, சி.ஜே.ஜங், உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள் இந்து மதத்தின் அடிப்படைக் கொள்கையான மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள்! அன்னி பெஸண்ட் அம்மையார் இது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து ரீ இன்கார்னேஷன் என ஒரு அரிய புத்தகத்தையே எழுதி இந்தத் தத்துவத்தை விளக்கியுள்ளார். விஞ்ஞானியின் ஆராய்ச்சி! வர்ஜீனியா மாநில பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான ஐயான் ஸ்டீவன்ஸன் 1040 புனர் ஜென்ம கேஸ்களை ஆராய்ந்து இது உண்மைதான் என ஆய்வு முடிவில் கூறியுள்ளார்! மிகவும் பிரபலமான எட்கர் கேஸ் 2000 பேரின் பூர்வஜென்மத்தைக் கூறி அவை சரி பார்க்கப்பட்டு அனைவரையும் பிரமிப்பின் உச்சிக்கே ஏற்றியிருக்கிறது. |
| Posted: 13 Mar 2012 07:59 AM PDT ![]() உற்சாகமான ஒரு தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொள்வதை, ஆடவர்கள் புனிதமான கோயில் வாழ்க்கையாக எண்ணிக் கொள்ள வேண்டும். வெறும் வரட்டுத்தனமும், வெறும் காம வேட்கையுமல்ல இல்லற வாழ்க்கை என்பது. பல கடமைகளுக்கு நடுவே காதல் என்றாலும், காதல் தான் முதலிடம் வகிப்பது அந்த முதலிடத்தைக் கணவன் தான் மனைவிக்குத் தந்தாக வேண்டும். கற்புடைய மனைவியுடன் காலதலுற்று அறமும் தர்மமும் தவறாமல் வாழ்தலே இவ்வுலகத்தில் சுவர்க்க வாழ்க்கையை ஒத்ததாகும். ஒருவனுக்குத் தன் வீடே கோயில், வீட்டிலே தெய்வத்தைக் காணத் திறமையில்லாதவன் மலைக்குகையிலோ, மற்ற கோயிலிலோ கடவுளைக் காண மாட்டான். மனைவியுடன் துயிலும் போது, மனைவியின் கையால் சாப்பிடும் போது, மனைவி தமக்குப் பெற்றெடுத்துத் தந்த குழந்தை தொட்டிலில் தூங்கும் போது இந்தப் புனிதமான வாழ்க்கை உலகில் எவருக்கும் அமையாது என்கின்ற உற்சாகம் வேண்டும். பல கடமைகளுக்கு மேலே தான் அவள் காதலை வைத்திருக்கிறாள் என்றாலும் அவளுடைய உடம்பையும் அமைதிப் படுத்த வேண்டியது, நிம்மதிப்படுத்த வேண்டியது கணவனின் கடமையாகும். ஒரு பெண் வாழ்ந்தாள் என்று சொல்வதே அவள் கணவனோடு வாழ்ந்தாள் என்பதைத் தான் குறிக்கும். இல்லறமல்லது நல்லறமில்லை. அனுசரித்துப் போவது தான் இல்லறத்தில் மிக முக்கியம். நல்ல குழந்தை ஒரு வீட்டில் பிறந்திருக்கிறதென்றால் கணவன், மனைவி நன்றாக வாழந்திருக்கிறார்கள் என்பது அதன் பொருளாகும். கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடக்கூடாது. மனைவியிடம் இருந்து கணவனும் கடமையை எதிர்பார்க்கலாம். அதை நிறைவேற்ற அவள் தயங்கக் கூடாது. ஒரு இந்துப்பெண் - ஒரு இந்தியப்பெண் தன்னுடைய கணவனின் தேவைகளை எந்தக் காலத்திலும் மறுக்கவும் மாட்டாள். மறக்கவும் மாட்டாள். எனவே கணவன் - மனைவி உறவு என்பது புனிதமானது; கோயில் போன்றது; கோபுரத்துச் சிலை போன்றது என்பதை மனதிலே கொண்டு வாழ்வைத் துவக்குங்கள். உங்களுக்குப் பிறக்கின்ற குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். அவனுக்கு வருகின்ற மனைவியும் - அவளுக்கு வருகின்ற மண மகனும், ஆக மாப்பிள்ளை வந்தாலும் மருமகள் வந்தாலும் உங்களைப் பார்த்து அவர்கள் வாழக் கற்றுக் கொள்வார்கள். ஆரோக்கியமான சந்ததி உருவாகும். உங்களாலே நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தைகள் வாழ்கின்றன. உங்கள் பேரன் பேத்திகள் வாழ்கின்றார்கள். உங்களைப் பார்த்து அடுத்த வீடு, அக்கம் பக்கம் வாழ்கின்றது. அத்தோடு சமுதாயமே வாழ்கின்றது. நல்ல சமுதாயத்துக்கு அடிப்படை ஒரு நல்ல குடும்பம். |
| Posted: 13 Mar 2012 07:56 AM PDT ![]() சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வர குரு சாக்ஷõத் பரப் பிரம்மம் தஸ்மை ஸ்ரீ குருவே நம : இந்த விரதத்தை எந்த மாதத்திலும் ஆரம்பிக்கலாம். 16 சோமவாரம் முழு பட்டினி இருந்து சிவதரிசனம் செய்து பின்வரும் கதையை ஒருவரிடம் சொல்லவேண்டும். ஒருவரிடமும் சொல் சந்தர்ப்பம் இல்லை என்றால் சுவாமியின் முன்பும் அல்லது துளசி மாடத்தின் முன்பும் அல்லது பசுமாட்டின் முன்பும் சொல்லலாம். காபி, பால், பழம் முதலியன சாப்பிட்டுக் கொள்ளலாம். உப்பு புளிப்பு கூடாது. மடியாக ஆடை உடுத்தி ஆசாரத்துடன் விரதம் இருக்கவேண்டும். கதை சொல்லும் போது கையில் சிறிது அட்சதை வைத்துக் கொள்ள வேண்டும் சோமவாரக் கதை ஒரு ஊரிலே ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் கோபுரம் மிகவும் பழுதடைந்து இருந்தது. ஆகையால் அவ்வூர் ஜனங்கள் அக்கோயிலில் பூதம், பிசாசுகள் வாசம் செய்கிறது என்று பிரச்சாரம் செய்துவிட்டார்கள். ஆகையால் எவரும் அக்கோயிலுக்குப் போகவில்லை. ஆனால் அது சின்னச் கோயிலாக இருந்தாலும் வாசனையுள்ள பூக்களும் நல்ல மூலிகைகளும் நிறைந்து இருந்தது. அதனால் ஈஸ்வரர், ஈஸ்வரி அங்கு வந்து சதுரங்கம், சொக்கட்டான் முதலியன விளையாடிக் கொண்டும், சத்சங்கம் செய்து கொண்டும் அமைதியாக இருப்பார்கள். ஒரு சமயம் இருவரும் விளையாடுகையில் பார்வதி தேவி ஜெயித்தார். ஈசுவரர் நானே ஜெயித்தேன் என்றார். எனவே மறுபடியும் இருதடவை அவர்கள் விளையாடியும் பார்வதி தேவியே வென்றார். ஆனாலும் ஈசுவரர், நானே வென்றேன் என்றார். உடனே பார்வதி தேவி, தோற்றுவிட்டு நானே வென்றேன் என்று பொய் கூறுகிறீர்களே என்று கூறி கோபித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார். ஈசுவரர் சங்கல்பத்தில் அப்பொழுது ஒரு தபோதனர் அங்கு வந்தார். அவரைப் பார்த்த அம்பாள் இந்த பிராமணரிடம் யார் வென்றோம், என்று கேட்போம் என்றார். ஈசுவரரும் அதற்கு சம்மதித்தார். அப்பிராமணர் அருகில் வந்ததும், எங்கள் இருவரில் யார் வென்றார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு பிராமணர் காதால் கேட்பதைக் காட்டிலும் கண்ணால் காண்பது நன்று என்றவுடன் இருவரும் மறுபடியும் மூன்று தடவை விளையாடினார்கள். மூன்று முறையும் தேவியே ஜெயித்தார். ஆனால் பிராமணர் அம்பாள் ஜெயித்தாலும் ஈசுவரரே ஜெயித்தார் என்று கூறினார். இதைக் கேட்ட தேவி கோபாவேசமாகி துர்க்கையாக மாறி சாதாரண விஷயத்திற்கு பிராமணர் பொய் பேசியதால் பிராமணருக்கு குஷ்டம் ஆகக்கடவது என்று சாபமிட்டார். உடனே அந்த இடத்திலேயே பிராமணருக்கு இரத்தம் ஒழுகி உடம்பு முழுவதும் நாற்றம் எடுத்து சீழ், புழு முதலியன வெளியேறியது. அவ்வியாதியின் கஷ்டம் தாங்காமல் பிதாவிடம் விமோசனம் கேட்டார். அதற்கு பிதா அம்பாள் இட்ட சாபம் இட்டது தான்; அதை மாற்ற முடியாது என்றார். ஆனால் பிதா தன் சங்கல்பத்தினால் சோமவார சமத்காரம் நடத்த நினைத்தார். ஈஸ்வரர் இப்படி சொன்னவுடன் பிராமணர் தன் தேக உபாதை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைத்து கிணற்று அருகில் சென்றார். அப்பொழுது ஈசுவரர் சங்கல்பத்தில் அங்கு ஒரு அப்சரஸ்திரி இந்திரலோகம் போய்க்கொண்டிருந்தாள். அவளும் இந்திரன் சாபத்தினால் பூலோகத்தில் அவதாரம் எடுத்து சோமவார விரதம் இருந்து சோமவார சமத்காரத்தினால் சாபம் தீர்ந்து இந்திரலோகம் போய்க் கொண்டிருந்தாள். அவள் கிணற்றில் விழச்சென்ற பிராமணரைப் பார்த்து, சுவாமி தங்களைப் பார்த்தால் மகரிஷி மாதிரி தெரிகிறதே; தற்கொலை செய்து கொண்டால் ஏழு ஜென்மத்திற்கும் பாவமாயிற்றே ! பிராமணராய் இருந்தும் ஏன் கிணற்றில் விழப்போகிறீர்கள்? என்று கேட்டாள். அதற்குப் பிராமணர், பூலோகத்தில் இந்த பாவ உடலை வைத்துக் கொண்டு நான் ஏன் இருக்க வேண்டும் என்றார். அதற்கு அப்சரஸ்திரி 16 சோமவார விரதத்தினால் உங்கள் வியாதி குணமாகிவிடும். ஆனால் எனக்கு அதைப்பற்றி சொல்ல நேரமில்லை. நீங்கள் அருகிலுள்ள விதர்பநகர் சென்றால் அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்கள் சோமவார விரத மகிமையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் சென்று குரு, சிஷ்யபாவமாக சோமவார விரத மகிமையைக் கேட்டால் அவர்கள் சொல்வார்கள். அதன்படி சோமவார விரதம் இருந்து வந்தால் உங்கள் வியாதி குணமாகிவிடும், என்று சொன்னாள். அந்த தபோதனர் ஸ்திரியிடம் விடைபெற்று விதர்பநகர் சென்றார். அங்கு கிணற்றடியில் இருக்கும் பெண்களை சிறுபெண்கள் என்றுகூட நினைக்காமல் நமஸ்காரம் செய்து சோமவார விரத மகிமையைப் பற்றி கேட்டார். அவர்கள் எல்லோரும் சோமவார விரதத்தால் தங்களுக்குத் கிடைத்த பலாபலன்களைக் கூறினார்கள். மேற்படி விரதத்தின் மகிமையையும் செய்யும் முறையையும் கூறினார்கள். இந்த கார்த்திகை மாதத்தில் நான்கு முறையும் அடுத்த கார்த்திகை மாதத்தில் நான்கு வருடத்தில் 16 சோமவார முறையும் முடிக்கலாம். ஆவணியில் ஆரம்பித்தும் நான்கு வருடம் விரதம் இருந்து முடிக்கலாம். செய்யும் முறை சிவபூஜை செய்ய வேண்டும். சிவபக்தியுடன் 16 சோமவார விரதம் இருந்து முடிக்கவேண்டும். 16 சோமவாரம் விரதங்கள் முடிந்தபின் மறுநாள் காலையில் 16 லட்டுகள் செய்து கோயிலுக்கு கொண்டுபோய் நைவேத்தியம் செய்து அங்குள்ளவர்களுக்கும் கொடுத்து; தானும் சாப்பிட்டு; ஒரு லட்டை பசு மாட்டிற்குக் கொடுத்து; மீதியை வீட்டிற்குக் கொண்டு வந்து பெரியவர்களுக்கும் கொடுத்து; விளக்கு வைக்கும் நேரம்வரை பூஜை செய்த லட்டை வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் கொடுத்துவிட வேண்டும். அன்று யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது. இப்படிச் செய்தால் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது என்று அப்பெண்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு வரும் வழியில் ஒரு முதியவளிடமும் சோமவார விரத மகிமையைக் கேட்க அவளும் அப்பெண்கள் கூறியதையே கூறினாள். பிராமணர் இவ்விரதத்தை 2 வருடங்கள் 8 சோமவாரம் செய்தார். விரத மகிமையால் பிராமணரின் வியாதி குணமாகியது. இவ்வாறு சோமவார விரதம் இருப்போருக்கு அவரவர் வேண்டும் பலனை நிச்சயம் தருவார் என்பது உறுதி. சோமவார விரத லட்டு செய்யும் விதம் தேவையான பொருட்கள் : நெய் 1/4 கிலோ கோதுமை மாவு 1/2 கிலோ வெல்லம் 400 கிராம் செய்யும் முறை : முதலில் கோதுமை மாவை நன்றாக சலித்துக்கொண்ட பிறகு அதை வறுத்து கீழே இறக்கி வைத்துக்கொண்டு காய்ச்சிய நெய், பொடி செய்த வெல்லத்தையும் மாவுடன் நன்றாகக் கலந்து கொண்டு பின் சிறிய சிறிய உருண்டைகளாக லட்டு பிடிக்க வேண்டும். |
| ஏகாதசி விரதத்தின் சிறப்பும் பலனும்! Posted: 13 Mar 2012 07:53 AM PDT ![]() தோற்றமும் - பெயர்களும்: பிறந்தவை யாவும் மறைந்தே ஆக வேண்டும் என்பது இயற்கை நியதி. பிறப்பும் - மறைவும் வடிவ மாற்றங்களே தவிர நிரந்தர தோற்ற அழிவு அல்ல. இதை மறப்பதால் தான் சிலர், ஒரு குறிப்பிட்ட உருவிலேயே (மனிதராக, தேவராக ) என்றும் இருக்க விரும்பி, தவம் புரிகின்றனர். அவ்வுருவ வாழ்காலத்தை நீட்டிக் கொண்ட அகந்தையால், தம் பலத்தை நிரூபிப்பதாக எண்ணி, மற்றோரைத் துன்புறுத்தி வந்திருக்கின்றனர். இத்தகையோருள் முரன் என்பவனும் ஒருவன். சூரனை அடக்கி அருளுவதற்காக சிவனாரின் அம்சமாக கந்தன் தோன்றியது போல, பல்லோரையும் துன்புறுத்தி வந்த முரனை அடக்குவதற்காக, விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி என்ற தெய்வ கன்னிகை. மண்ணோரும், விண்ணோரும் விஷ்ணுவை வழிபட்டு, விரதமிருந்து, அவர் அருளால், முரனின் கொடுமையிலிருந்து தப்பியது முதல் ஏகாதசி ஒரு முக்கிய நித்ய விரதமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த ஏகாதசி நன்னாள், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி ஆக (11ம் நாள்) இருந்ததால், அன்று முதல், மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி உற்பத்தி ஏகாதசி எனப்படுகிறது. உற்பத்தி ஏகாதசியில் தொடங்கிய விரதத்தை, பின்னர் வந்த ஏகாதசி நாட்களிலும் அனுஷ்டித்து, பலரும், பல்வகைப் பயன்களைப் பெற்றனர். அப்பயனின் அடிப்படையில், ஒவ்வொரு ஏகாதசிக்கும், அதன் சிறப்பைக் குறிக்கும் அடைமொழி நிலைத்து விட்டது. ஒவ்வொரு நாளுமே பல்லோர் அவதரித்த நன்னாளாயினும், அக்டோபர் 2ம் நாளை காந்தி ஜயந்தியாகவும், ஜனவரி 12ஐ விவேகானந்த ஜயந்தியாகவும் அனைவரும் நினைவுறுவது போல ஒவ்வொரு ஏகாதசியிலும் எண்ணிலார் பயன் பெற்று வந்திருப்பினும், ஓரிருவர் பெற்ற நன்மையைக் குறிப்பதாகவே ஏகாதசிகளின் பெயர்கள் அமைந்துள்ளன. பானைக்கு ஒரு சோறு பதம் போல, ஒவ்வொரு ஏகாதசியில் விரதமிருந்து பயன் பெற்றவரும், அடைந்த பயன்களும் ஒரு உதாரணமே தவிர, ஒருவர் மட்டும் ஒரு பயனை மட்டுமே அடைந்தனர் என்பதல்ல. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று, வைகானஸர் மேற்கொண்ட விரதத்தின் பயனாக அவருடைய முன்னோர்கள் (முக்தி) வைகுண்ட பதம் அடைந்ததிலிருந்து, அந்த ஏகாதசி, எல்லா ஏகாதசிகளையும் விட மிக முக்கியமாகக் கருதப்பட்டு (மோக்ஷõ) வைகுண்ட ஏகாதசி என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதசி விரத பலனை அளிப்பதால் முக்கோடி ஏகாதசி என்றும் பெயர். தை மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு சபலா. (விருப்பை நிறைவிப்பது) என்று பெயர். புலிக்குப் பயந்து மரத்திலேறிய ஒரு வேடன், அம்மரம் வில்வமரம் என்பதையோ, அதன் கீழ் சிவலிங்கம் இருப்பதையோ, சிவலிங்கத்திற்கு வில்வார்ச்சனை செய்வதின் மேன்மையையோ, அன்று சிவராத்ரி என்பதையோ, அன்றிரவு விழித்திருப்பதின் நன்மையையோ அறியாவிட்டாலும், தூக்கத்தில் கீழே விழுந்திடக் கூடாது என்பதற்காக மட்டுமே இரவு முழுவதும் மரத்திலிருந்து ஒவ்வொரு இலையாகப் பறித்துப் போட்டாலும் கூட, சிவனருள் பெறுகிறான். அதுபோலவே, நாடு கடத்தப்பட்ட மகிஷ்மதராஜனின் மகன், எதுவும் கிடைக்காததாலேயே, உண்ணாமலும், பசி, தாகத்தினால் உறங்காமல் இருந்தாலும் கூட, திருமால் அருளால் மீண்டும் அரசாட்சி பெற்ற நாள். தை மாதம், வளர்பிறை ஏகாதசிக்கு புத்ரதா (குலம் தழைக்க மகப்பேறு அருள்வது) என்று பெயர். பல வருடங்கள் புத்திரப்பேறு இன்றி வருந்திய சுகேதுமான் - சம்பா என்ற அரச தம்பதியர்க்கு குழந்தை அருளிய பெருமையுடையது. மாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு ஷட்திலா (ஷட் = ஆறு; திலா = எள்) என்று பெயர். உடனடியாக பலனளிக்கும் மிகச் சக்தி வாய்ந்த தானங்களில், எள் தானம் மிக முக்கியமானது. அதனை ஆறு வகையில் (குடிநீரிலோ, ஸ்நான தீர்த்தத்திலோ, உணவிலோ, வேள்வியிலோ, திண்பண்ட உருண்டையிலோ அல்லது வெறுமனேயோ) தானம் செய்ய மிகவும் உகந்த நாள். மாசி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஜயா (நினைத்ததை அடைவதில் வெற்றி கோருவது) என்று பெயர். மால்யவான் என்பவன் தெய்வ அபசாராத்தால் ஏற்பட்ட அல்லல் நீங்கிய நாள். பங்குனி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு விஜயா (இழந்த அரச பதவியை மீட்பது) என்று பெயர். விஷ்ணுவின் அவதாரமான இராமபிரானே, பகதாலப்ய முனிவரின் பரிந்துரைப்படி விரதமிருந்து அரச பதவியை மீளப்பெற்ற நாள். பங்குனி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு ஆமலகி (அளப்பரிய திறன் வாய்ந்த நெல்லி) எனப் பெயர். ருத்ராக்ஷ மரம் சிவத் தோன்றல் போல, நெல்லி திருமாலின் தோன்றலாகும். எல்லா தெய்வ சக்திகளும் கோமாதா காமதேனுவுள் அடக்கம் போல, நலன் பயக்கும் சக்திகள் யாவும் நெல்லியுள் அடக்கம். ஆதிசங்கரருக்கு அளிக்கப்பட்ட ஒரு நெல்லி, அவரை கனகதாரா துதியை பாடச் செய்து தங்க மழையை கொட்டுவித்தது போல பெரும் பயன் அருள வல்லது. சித்திரை மாதம் தேய்பிறை ஏகாதசி பாபமோசினி (தீவினையால் விளைந்த இன்னலை அழிப்பது) எனப்படும். மேதாவி முனிவரை காமவயப்படுத்தியதால் மஞ்சுகோஷாவுக்கு விளைந்த அல்லலைப் போக்கிய நாள். சித்திரை மாதம் வளர்பிறை ஏகாதசி காமதா எனப்படும். பிற கடமைகளை நிறைவேற்றாமல், மித மிஞ்சிய பாலுறவில் ஈடுபடுவதால் நேரும் இன்னலை நீக்கி அருளும் நாள். வைகாசி மாதம் தேய்பிறை ஏகாதசி வரூதினி (இம்மையிலேயே நன்மை தருவது) எனப்படும். மாந்தாதாவை இம்மையிலும், மறுமையிலும் நன்மை அடையச் செய்த நாள். அன்னதானத்திற்கும் மேலான வித்யாதானத்தின் பலனை அருளும் நாள். வைகாசி மாதம் வளர்பிறை ஏகாதசி மோகினி எனப்படும். மோகத்தில் ஆழ்ந்திருந்த அருணகிரியை முருகன் காத்தது போல. வாழ்வு போகங்களிலேயே ஆழ்ந்ததால் நேரிட்ட எல்லா துன்பங்களிலிருந்தும் த்ருஷ்டிமான் என்ற அரச குமாரன் கௌண்டின்ய முனிவரின் அறிவுரைப்படி, விரதமிருந்து மீண்ட நாள். அனைவரையும் மோகத்திலிருந்து விடுவிக்கும் நாள். ஆனிமாதம் தேய்பிறை ஏகாதசி அபரா (மறுமைக்கு வழி காட்டும்) எனப்படும். தெரியாததை மறைத்து, அறிந்தவர் போல நடக்கின்ற தவற்றை நீக்கிடும் நாள். உதாரணமாக, மருத்துவம் அறியாதவர் மருத்துவராக உலவுவது போன்று, இன்னும் பலர் வெவ்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்றதாக ஊரை ஏமாற்றுவதால் நேரும் அல்லலை தவிர்க்கும் நாள். ஆனி மாதம் வளர்பிறை ஏகாதசி நிர்ஜலா ( நீர் கூடப் பருகாமல் இருத்தல்) எனப்படும். சிலருக்கு அதிக நேரம் உண்ணாமை கஷ்டமாகத் தெரிவதில்லை. பலருக்கு என்றாவது உண்ணாமை சிரமமாக இருப்பதில்லை. இன்னும் சிலருக்கோ, இயற்கையாகவே, ஒரு வேளை கூட உண்ணாமல் இருக்க முடிவதில்லை. இந்த நிலைக்கு பீமன் ஒரு உதாரணம். அவனும் கூட, இந்நாளில் விரதமிருந்து, மறுநாள் துவாதசியிலேயே உணவு ஏற்றதால், நிர்ஜலா ஏகாதசிக்கு மறுநாள் பாண்டவ துவாதசி என்று பெயர். ஆடிமாதம் தேய்பிறை ஏகாதசியை மோகினி என்பர். பொதுவாகவே, போகிகளாக இருக்கும் நமக்கு அதற்கு மேலான யோக நிலையை அடைந்திட அருளும் நாள். ஆடி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கு சயனி என்று பெயர். ஒவ்வொரு ஜீவராசியும் வெவ்வேறு காலங்களில் ஓய்வு எடுப்பது போல, மகாவிஷ்ணு ஓய்வாக சயனிக்கத் துவங்கும் நாள். ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி காமிகா எனப்படும். நம்மை அத்தியாவசியத் தேவைகட்கு கஷ்டப்படாமல் காத்து அருளும் நன்னாள். ஆவணி மாதம் வளர்பிறை ஏகாதசிக்கும் (தை வளாபிறை ஏகாதசி போல) புத்ரதா என்று பெயர். புரட்டாசி மாதம் தேய்பிறை ஏகாதசிக்கு அஜா (வருத்தம் நீக்கும்) என்று பெயர். உண்மை பேசுவோரின் மேன்மையை உலகுக்கு உணர்த்துவதற்காக, சோதனைக்குள்ளாக்கப்பட்ட ஹரிச்சந்திர மகாராஜன் விரதமிருந்து, மீண்டும் நாடும் நலனும் பெறச் செய்த பெருமையுடையது.புரட்டாசி மாதம் வளர்பிறை ஏகாதசி பத்மா எனப்படும். நாராயணன் (நாரா = நீர், அயனன் = துயில்பவன்) அருளால் மழை பொழிவித்து எங்கும் வளமை கூட்டும் பெருமையுடையது.ஐப்பசி மாதம் தேய்பிறை ஏகாதசி இந்திரா எனப்படும். நற்செயல்கள் புரியாமையால் விளைந்த இன்னலைப் போக்குவது. ஐப்பசி மாதம் வளர்பிறை ஏகாதசி பாபாங்குசா (அல்லனவையில் ஈடுபட்டதால் ஏற்பட்ட துன்பத்தை துடைப்பது) எனப்படும். நம்மை மட்டுமின்றி, தந்தை வழி தாய் வழி, மனையாள் வழி முன்னோரையும் நரக துன்பத்திலிருந்து மீட்கும் நாள். கார்த்திகை மாதம் தேய்பிறை ஏகாதசி ரமா (மகிழ்வு கூட்டுவது) எனப்படும். ஒருவர்க்கு மட்டுமின்றி, ஊருக்கே, உலகுக்கே வளமையருளும் நாள். கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி ப்ரபோதினி என்று கூறப்படுகிறது. வருடத்திற்கு 365/366 நாள் என்பதாலும், திதிகளில் கால அளவு குறைந்து, கூடுவதாலும் ஒவ்வொரு ஏகாதசிக்குமிடையே சரியாக 15 நாள் இடைவெளி இல்லாததாலும் 2,3 வருடங்களுக்கொரு முறை, ஒரே வருடத்துக்குள் 25 ஏகாதசிகள் வரும். அது உத்தமோத்தமமான கமலா ஏகாதசி எனப்படும். கால அளவைகளும் விரதங்களும்: பூமியோ, சந்திரனோ, சூரியனோ இன்னும் பிற கிரகங்கள், நக்ஷத்திரங்களோ நாம் அமைத்துக் கொண்ட அல்லது பின்பற்றுகின்ற கால அளவு கோல்களின்படி - நிமிடம், மணி, நாள், மாதம், வருடம் போன்றவற்றின்படி இயங்குவதில்லை. பகல் 12 மணி, இரவு 12 மணி நேரம் என்றும், மாதம் 30 நாட்கள் என்றும், வருடம் 365 நாட்கள் என்றும் கோள்களின் சுழற்சியும் நகர்வும் அமைவதில்லை. சில பகுதியினர், சந்திரனின் கதிக்கு ஏற்ப, அமாவாசை தொடங்கி அமாவாசை வரையிலான நாட்களை ஒரு மாதமாகவும், வேறு சில பகுதியினர், சுமார் 365 1/4 நாளில், சூரிய பூமியின் நகர்வு - மற்றும் இருப்பை வைத்து 12 மாதத்திற்கும் 29 நாள் முதல் 32 நாட்கள் என்றும் தீர்மானிக்கின்றனர். இது போலவே, ஒரு சிலர் இரவு 12.01 முதல் மறு இரவு 12.00 வரை ஒரு நாளாகவும், வேறு சிலர் காலை 6.01 முதல் மறுநாள் காலை 6.00 வரை ஒருநாள் என்றும் கருதுகின்றனர். இத்தகு காலப்பாடெல்லாம் நம் சௌகரியத்துக்கு அமைத்துக் கொண்டவைகளே அண்ட சராசரங்கள் நம் திட்டப்படி இயங்கவில்லை. இதனால் தான், நாம் ஒரு நாள் ஆகக் கருதும் நேரமும், சந்திரனின் தேய்வு - வளர்வு நகர்வில் 15ல் ஒரு பகுதியான திதியும் ஒரே சமயமாக இருப்பதில்லை. ஒரு திதி சில நாட்களில் முழுமையாக இருக்கலாம். சில நாட்களில் இரண்டு திதிகள் கூடக்குறைய இருக்கலாம். சில சமயங்களில், ஒரே நாளில், அதிகாலை மிகச்சிறு நேரம் ஒரு திதியாகவும், அடுத்து ஒரு திதி முழுமையாகவும், கடைசியில் சிறிது நேரம் மூன்றாவது திதியும் இருக்கலாம். இப்படி வரும் நாளை திஸ்ப்ருஷா என்று கூறுவது வழக்கம். சிலர் சில திருவிழாக்களை நக்ஷத்திரப்படியும், சிலவற்றை பவுர்ணமிப்படியும் வெவ்வேறு நாளில் கொண்டாடுவதும், இந்த அடிப்படையில் தான். பருவகாலப்படியும், தக்ஷிணாயன, உத்தராயணப் படியும் அமாவாசை, பவுர்ணமிக்கு இடையிலான நேரம் மாறுபடுவதால் பிரதமை முதல் அமாவாசை / பவுர்ணமி வரை ஒவ்வொரு திதியும் சுமார் 55 முதல் 65 நாழிகை வரை இருக்கும். இதனால் தான், ஒரு திதி அல்லது நக்ஷத்ரம் அவ்வக்காலத்தில் எந்த நாளில் வேளையில் அதிகமாக உள்ளது என்பதைக் கருதி விரதமிருக்க வேண்டிய தினத்தைத் தீர்மானிக்கின்றனர். குழந்தைகளின் பிறப்பு ஒரு கிழமையின்/தேதியின் முதல் வினாடி ஆயினும், கடைசி வினாடி ஆயினும், இடைப்பட்ட எந்த வினாடி ஆயினும் அந்நாளில் பிறக்கின்ற பல்லாயிரம் குழந்தைகளின் பிறப்புத் தேதியையும், நம் சௌகரியத்திற்காக ஒன்றாகவே குறிப்பிடுகிறோம். இது போலவே தான், ஒரு விரதத்தை காலை 7.35 முதல் மறுநாள் காலை 8.20 வரையிலும், மற்றொரு விரதத்தை பகல் 1.22 முதல் மறுநாள் பகல் 12.40 வரையிலும், இன்னுமொரு விரதத்தை இரவு 9.40 முதல் மறுநாள் இரவு 9.55 வரையும் அனுஷ்டிப்பது நடைமுறை சாத்தியமாகாது என்பதால் தான், சில கணக்கு நியதிகளின் படி விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. இப்படி, விரதங்களை முதல் நாள்/ மறுநாளும் திருவிழாக்களை காலை/மாலையும் அனுஷ்டிப்பதை சரி/தவறு என்று கருதவோ, சாடவோ இடமேயில்லை. விரதங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றனவா. அவை மறவாது மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்தோடிருப்பதே முக்கியம். ஏகாதசி விரதம் அனுஷ்டித்தல் சில செய்திகள்: 1. மனித வாழ்காலத்தை பிரம்மசர்யம், கிருஹஸ்தம், வானப்பிரஸ்தம், சன்யாசம் என்று நான்கு நிலைகளாகப் பகுப்பது இந்த மரபு. இந்த நான்கு நிலையோரும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். 2. இக்குலத்தில் பிறந்தோர், அக்குலத்தில் பிறந்தோர் என்று வித்தியாசமின்றி அனைத்து குலத்தவரும் ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள வேண்டும். 3. ஆதியில், உற்பத்தி ஏகாதசி (மார்கழி மாதத்தில்) முதலில் வந்ததால், எல்லா வருடமும், எல்லா மாதமும் தேய்பிறை ஏகாதசியே முதலில் வருவதில்லை. வளர்பிறை ஏகாதசியும் முன்பாக வரலாம். 4. வளர்பிறை/தேய்பிறை ஏகாதசி விரதத்திற்கு இடையே ஏற்றத் தாழ்வு இருப்பதாக கருதக்கூடாது. 5. நெருங்கிய உறவினரின் பிறப்பு - இறப்பின் போதும், பெண்களின் மாதவிடாய்க் காலத்தும் பல்லோருடன், பழகிடாமல் ஒதுங்கி இருக்கும் காலங்களிலும் கூட ஏகாதசி விரதம் போன்ற நித்ய விரதங்களை மேற்கொள்ள வேண்டும். 6. திங்கள்/ சனிப் பிரதோஷங்கள் மிகு சிறப்பு போல, பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி நக்ஷத்திரங்களில் வரும் ஏகாதசிகள் அதி சிறப்பு. 7. கடையில் வாங்கும் தேங்காய் எல்லாம், முதற்பார்வைக்கு ஒன்றாகவே தோன்றினாலும், இலங்கையில் விளைந்த (கொழும்பு)த் தேங்காய்க்கும், கேரள மலைச்சாரலில் விளைந்த தேங்காய்க்கும், பொதுவாக, மழை குறைவான, தமிழகத்தில் விளையும் தேங்காய்க்கும், நுண்ணிய வித்தியாசம் இருப்பது போலவே, வெவ்வேறு மாதங்களில், தினங்களில் வரும் ஏகாதசிகளுக்கும் தனித்தன்மைகள் உள்ளன. 8. பொதுவாக, எல்லா வகை மருத்துவமும், அவ்வழி பின்பற்றும் மருத்துவமும் நமக்கு பல்வேறு நோய்களிலிருந்தும் நிவாரணம் அளித்தாலும் ஒவ்வொரு வகை மருத்துவ இயலுக்கும், ஒவ்வொரு மருத்துவருக்கும் தனிச்சிறப்பு உள்ளது. இது போலவே தான் ஒவ்வொரு ஏகாதசி விரத தன்மையும், பலன்களும் ஆகும். பயன் குறைவு - கூடுதல் என்பதல்ல. மாறாக ஒவ்வொரு ஏகாதசியும் பொதுவான நற்பயன்கள் அளிப்பதோடு ஒரு தனிப்பயனும் அளிக்கவல்லது என்பதை உணர வேண்டும். 9. ஏழ்மை - நிவாரணம், நோய் எதிர்ப்பு நிலைக் குறைவு - தடுப்பு, தொழுநோய் தவிர்ப்பு, புலியினம் காப்பு, சுற்றுச்சூழல் மாசுபடாமல் காத்தல் போன்றவற்றுக்கு நம் அன்றாடச் செயல்பாடுகள் பலவும் உதவினாலும் கூட; மேற்குறிப்பிட்டவற்றில் ஏதாவது ஒன்றை அதிகமாகப் பெறுவதற்காகவே சில தினங்களில் முனைப்புடன் செயல்படுகிறோம். இது போன்ற நிலையையே விரத அனுஷ்டிப்பிலும் காண்கிறோம். 10. அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பும், சிகிச்சையின் போதும், அறுவை சிகிச்சைக்குப் பின்பும், நோயாளிக்கு முழுமையான ஆரோக்கிய நிலை ஏற்படுவதற்காக, சில நாட்களுக்கு உணவுக் கட்டுப்பாடும், குறைப்பும், தவிர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இது போலவே தான், ஏகாதசி போன்ற விரதங்களின் போது, விரத உண்ணாமையின் முழுப் பயனை அடையவும், விரத நாளில் முழுவதும் உண்ணாதிருப்பது சிரமமாகத் தோன்றாமல் இருக்கவும், முதல் நாளான தசமியன்று ஒரு வேளை மட்டுமே உண்கிறோம். மேலும், வெகு நேரம் உணவின்றியிருந்ததற்குப் பின்பு, படிப்படியாகவே உணவு அளவைக் கூட்ட வேண்டும் என்பதற்காக துவாதசியிலும் ஒரு வேளை உணவே பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அன்றைய உணவு அளவு குறைவாயிருந்தாலும் அது எளிதாக ஜீரணிக்கப்பட்டு, அதிக ஊட்டச்சத்தும் அளிக்க வேண்டும் என்பதற்காக, நெல்லிக்காய், அகத்திக்கீரை போன்றவற்றை உபயோகிக்கிறோம். 11. ஒவ்வொரு ஏகாதசி விரதமும் (எல்லா விரதங்களுமே) குறிப்பிட்ட, தவறான செயல்பாடுகளால் விளைந்த அல்லல்களைத் தீர்ப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணம், துன்பப்படுவோர் நன்மை பெற வேண்டும் என்பது மட்டுமல்ல. அவ்வல்லல்களுக்குக் காரணமாகும் தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும் என்று நினைவுறுத்துவதே, விரத மேன்மை விவரிப்புகளின் நோக்கமாகும். 12. ஒவ்வொரு ஏகாதசியின் பெருமையையும், வழிபாட்டு முறையையும், வெவ்வேறு தெய்வங்களோ, முனிவர்களோ வெவ்வேறு அன்பர்க்கு தெரிவித்ததாக கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு, கூறியவர் அல்லது கேட்டவரின் காலத்திலிருந்து தான் குறிப்பிட்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுவதாக கருதக்கூடாது. ஒரு பள்ளிக்கூடத்தின் வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு மாணவர்களுக்கு ஒரே பாடத்தையே வழிவழியாக கூறிவருகின்றனர். இது போன்றதே ஏகாதசியைப் பற்றிய வரலாறுகளும் ஆகும். 13. ஏகாதசி விரதத்தன்று, விரிவாக பூஜை செய்வது நல்லதே என்றாலும், பலருக்கும் பசி சோர்வினால் பூஜை செய்வது இயல்வதில்லை. உண்ணாநோன்பே அன்று மிக முக்கியமானதால், இங்கும் அங்கும் ஓடி அதிகச் சோர்வு அடைவதை விட வீட்டிலேயே, மௌனமாக இருந்து, மானஸ பூஜை அல்லது நாமஜபம் செய்வது எளிதாகும். வீட்டுச் சூழ்நிலைகளால் இறைச் சிந்தனை தடைப்படுமாயின் அன்று முழுவதும் ஆலயத்திலேயே தங்கி வழிபாடுகளை தரிசித்தல் மேலும் சிறப்பு. அலைபாயும் மனதை கட்டுப்படுத்தி அரங்கனையே நினைக்கச் செய்திட விஷ்ணு புராணம், பாகவதம், ராமாயணம் போன்ற இறைத் திருவிளையாடல் நூல்களையோ விஷ்ணு சகஸ்ரநாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற துதிகளையோ தொடர்ந்து பாராயணம் செய்வதும் நல்லது. பாராயணத்தால் பயன் அடைவதோடு, முறையற்ற செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருப்பதால் அல்லல்கள் வராமலும் காக்கப்படுவோம். ஏகாதசி விரத சங்கல்ப மந்திரம்: தசமீ தினம் ஆரப்பிய கரிஷ்யேகம் விரதம் தவ த்ரிதினம் தேவ தேவேச நிர்விக்னம் குரு கேசவ துவாதசி பாரணை - நெறிமுறைகள்: ஏகாதசி உண்ணாமை விரதத்திற்குப் பிறகு துவாதசியில் உணவு ஏற்பதை பாரணை என்று கூறுவர். பல சமயங்களில், துவாதசி திதி நாள் முழுவதும் இருப்பதில்லை. இதனால், துவாதசியில் ஏற்கப்பட வேண்டிய ஒரே வேளை உணவையும் வெவ்வேறு துவாதசி தினங்களிலும், அத்திதி இருக்கும் போதே முன்பின்னாக ஏற்க நேரிடும். துவாதசி திதி காலையில் மிகக் குறுகிய நேரமே இருப்பின் மதியம் வரை செய்ய வேண்டிய சந்தியாவந்தனம், முக்கிய பூஜை போன்றவற்றை சீக்கிரமாகவே முடிப்பதில் தவறில்லை. அல்ப (மிகக் குறைவாகவே) துவாதசி திதி இருப்பின், முதலில், பெருமாளை நினைத்து துளசி கலந்த நீரைப்பருகி பாரணை முடித்துவிட்டு, பின்னர் உணவை ஏற்கலாம். இப்படி விரதம் இருந்த அம்பரீச சக்கரவர்த்தி துருவாச முனிவரின் கோபத்தில் இருந்து கூட பாதுகாக்கப்பட்டதை பல புராணங்கள் தெரிவிக்கின்றன. வளர்பிறை தேய்பிறை துவாதசியன்று திருவோண நட்சத்திரம் வந்தால் அன்றும் உண்ணா நோன்பு இருந்து திரயோதசி திதியிலேயே பாரணை செய்ய வேண்டும். இப்படி ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களிலும் முழுவதுமாக உண்ணாமை இயலாவிட்டால், ஏகாதசியன்று முன் இரவில் சிறிதளவு பலகாரம் ஏற்கலாம். சிரவண துவாதசி அன்று கண்டிப்பாக உண்ணாதிருக்க வேண்டும். துவாதசி பாரணை சங்கல்ப மந்திரம் ஏகாதஸ்யா நிராகார ஸ்தித்வா அகம் அபரேஹனி போக்ஷ்யாமி புண்டரீகாட்ச சரணம்மே பவாசயுத துளசி நீர் அருந்திடுமுன்பு துதி அஷ்டாக்ஷரேண மந்த்ரேண த்ரிஜப்தேன அபிமந்த்ரிதம் உபவாச பலம் பிரேப்சு பிபேத் தோயம் சமாஹித சில விதி தளர்வுகள் எல்லா தேய்பிறை, வளர்பிறை ஏகாதசிகளிலும் எல்லோருமே, முற்றும் உண்ணாமையை மேற்கொள்வதே சிறப்பு. இருப்பினும், இல்லறத்தாரின் அன்றாட பணி நிர்பந்த நிலைகளையும், அதனால் கொஞ்சமாவது உணவு ஏற்க வேண்டிய நிலையையும் கருதி, சாஸ்திரங்கள் சில விதி தளர்வுகளை அனுமதிக்கின்றன. ஆடி மாத வளர்பிறை சயனி ஏகாதசி முதல், கார்த்திகை மாதம் வளர்பிறை ப்ரபோதினி ஏகாதசி முடிய, 9 ஏகாதசிகளிலும் உண்ணாமை யாவர்க்கும் கட்டாயம். பிற மாதங்களில் வரும் தேய்பிறை ஏகாதசிகளில் மட்டும் பகலில் உண்ணாதிருந்து, இரவில் குறைந்த பட்சமாக, அதுவும், திட உணவையும், பக்குவப்படுத்திய உணவையும் ஒதுக்கி, பால், பழம் போன்றவற்றை ஏற்பதில் தவறில்லை. பலாகாரம் (பழ ஆகாரம்) = பழங்கள் உண்பது பல - ஆகாரம் = இட்லி, தோசை, பூரி என்று மாறி, அதுவும் பல - காரம் = உப்பு-உறைப்பு கூடிய உணவாக மாறிவிட்டது. இரவில், நமக்குப் பிடித்தமான பல காரங்களால், நம் பசியைத் தூண்டி விட்டு, உணவு வகைகளை அதிகமாக மனதாறச் சாப்பிடுவதற்காக, விரதம் என்ற பெயரில் பகலில் உண்ணா நோன்பு இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயலே. பக்குவப்படுத்தாத, பழ வகைகளிலும், புளிப்பு இல்லாதவற்றை ஏற்கலாம். இயன்றவரை, பழங்களையும் தவிர்த்து பால் மட்டும் (காபி, டீ அல்ல) அருந்தலாம். நீர், கிழங்கு, பால், நெய், மருந்து போன்ற சிலவற்றை ஏற்பது விரதநியதிகளை மீறுவது ஆகாது என்பதற்காக, விரத நாட்களில் நினைத்த போதெல்லாம், பசித்த போதெல்லாம் இவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொள்ளக்கூடாது. ஏகாதசியன்றே வருகின்ற சில விரதங்கள்: சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமியன்று சங்கரர் ஜயந்தி, ராமானுஜர் ஜயந்தி ஒன்றாகவே வருகின்றன. சிவனார் ஒரு முறை ஜோதியாக மாறியதும், வேறு முறை திரிபுர அசுரர்களை அழித்ததும், திருமால் மச்ச அவதாரம் எடுத்து வேதங்களை மீட்டதும், கார்த்திகை மாதம் அண்ணாமலை தீபத்தன்றே நாமும் முப்பெரும் விழா, ஐம்பெரும்விழா கொண்டாடுகிறோம். இது போலவே சில ஏகாதசிகளில் வேறு விரதங்களும் கூடுகின்றன. 1. ஆடிமாதம் வளர்பிறை ஏகாதசியில் அனுஷ்டிக்கப்படுவது கோபத்மவிரதம். பல்வகையிலும் நமக்கு நன்மை பயக்கும் பசுக்களைக் கட்டும் இடத்தில், தாமரை வடிவ கோலம் இட்டு, அதனுள், திருமாலை வழிபட்டு கோதானம் அளிப்பது மிகச் சிறப்பு. 2. மாதம், பிறை பாகுபாடின்றி எந்த ஏகாதசியில் அருணோதய நேரத்தில் அதிகாலை (4 . 30 - 6) தசமி திதி இருக்கிறதோ அன்று அத்திமரத்தால் ஆன பாத்திரத்தில் நீர் கொண்டு வந்து விஷ்ணுவை வழிபடுவதை வஞ்சுள ஏகாதசி விரதம் என்பர். 3. கார்த்திகை வளர்பிறை ஏகாதசியன்று பீஷ்மர் அம்புப்படுக்கையிலிருந்தே மகாபாரதப் போர் நிகழ்ச்சிகளைக் கண்ட நாள் என்பதால் அன்று பீஷ்ம பஞ்சக விரதம் அனுஷ்டிப்பது வழக்கம். 4. மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று கோபூஜை செய்வதை வைதரணி விரதம் என்பர். ஏகாதசியும் சிரார்த்தமும்: ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது என்பர். இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டுமென்பதால், ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படும் அந்தணர்களும், நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை. சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது. வைகுண்ட ஏகாதசியும் ஸ்ரீரங்கமும்: எல்லா விஷ்ணு ஆலயங்களிலும், வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்பட்டாலும், பால்குட விழா என்றால் பழனியும், கிரிவல வழிபாடு என்றால் திருவண்ணாமலையும் நினைவிற்கு வருவதுபோல வைகுண்ட ஏகாதசி என்றால் எல்லோருக்கும் ஸ்ரீரங்கமே முதலில் நினைவிற்கு வருகிறது. பிரம்ம லோகத்தில் பூஜை செய்து வந்த திருமாலின் திருவுருவை பிரமன். சூரிய வம்ச அரசனான. இக்ஷ்வாகுக்கு கொடுக்க, பிற்காலத்தில், அதை ராமபிரான் விபீஷணனுக்கு கொடுக்க, அவன் பெருமாள் திருமேனியை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் போது, இறைவன் திருவிளையாடலால் ஸ்ரீரங்கம் என்ற புண்ணிய பூமியில் நிலைத்து விட்டது. அங்கு தர்மவர்மனால் எழும்பிய முதற்கோயில், ஒரு காலத்தில் காவிரி வெள்ளத்தால் மறைந்து விட்ட போது தெய்வீகக்கிளி ஒன்று, அவ்விடத்தின் மேன்மையை கிள்ளிவளவனுக்கு தெரிவித்தது. அவன் புதுப்பித்த கோயிலையே இன்று காண்கிறோம். அரங்கனே திருவரங்கத்தை வைகுண்டமாகக் கருதியதால் தான் இன்றும் பகல்பத்து, ராப்பத்து என்று வைகுண்ட ஏகாதசியின் போது மிகமிக விரிவான திருவிழா நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று திருமாலை வழிபடுவோர் வைகுண்டத்துக்கே செல்வதாக உணர்த்துகின்ற நிகழ்வே வைகுண்டவாசல் அல்லது பரமபதவாசல் நுழைகின்ற வழக்கமாகும். ஒவ்வொரு வருடமும், பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும், வாழ்வில் ஒருமுறையாவது அவ்விழாவில் கலந்து கொள்ள பெருமாள் அருளட்டும். பெருமாள் ஆலய முக்கிய சன்னதித் துதிகள் கருடாழ்வார் : மால் தாங்கும் மேலோனே, மால் விழியை அகலானே கும்பிடும் நல் குணவானே, குறை நீக்கி அருள்வாயே மகாவிஷ்ணு : பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு. லட்சுமி/தாயார் : பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே பங்குனியில் உத்திரநாள் பாருதித்தாள் வாழியே மங்கையர்கள் திலகமென வந்த செல்வி வாழியே மாலரங்கர் மணிமார்பை மண்ணும் அவள் வாழியே. சக்கரத்தாழ்வார் : சகல தேவ வடிவனே, சக்கிரத்துள் சிறுத்தோனே சர்வாயுத மேந்தியவனே, சகலரையும் காத்திடுவாய் ஆண்டாள் : சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே - தொல்பாவை பாடியருள வல்ல வல்வளையாய் - நாடி நீ வேங்கடவற்கு என்னை விதியென்ற இம்மாற்றம் நாம் கடவாவண்ணமே நல்கு. அனுமான்: அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக்காப்பான் தசாவதார சன்னதி : அவசியத்து வந்தவரே, அல்லலையே பொடித்தவரே அரி அம்சம் ஆனவரே, அண்டும் எமைக் காப்பீரே ஆழ்வார்கள் சன்னதி : பன்னிரு நல் ஆழ்வாரே, பாடி யாடிப் பணிந்தோரே ஆல் மாலுள் ஆழ்ந்தவரே, அனைவர்க்கும் உதாரணரே. |
| பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பும் வழிபடும் முறையும்! Posted: 13 Mar 2012 07:50 AM PDT ![]() பங்குனி உத்திர நன்னாளின் சிறப்பு : இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது; காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது; மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது; ராமர் சீதையை மணந்தது; லட்சுமணன், சத்ருகன் ஆகியோருக்கும் திருமணம் நடந்தது; இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது; திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது; ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது; அர்ச்சுனன் பிறந்தது ஆகிய அனைத்தும் நடந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். சமஸ்கிருதத்தில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயரும் உண்டு. இந்த பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார். சிவனின் தவத்தை கலைக்க நினைத்த மன்மதனை சிவன் எரித்தார். ரதியின் பிரார்த்தனைக்கு இணங்க மன்மதனை சிவன் உயிர்பித்த நாளும் இதுதான். மார்க்கண்டேயனுக்காக சிவன் காலனை தன் காலால் உதைத்த நாள். இத்தனை சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர தினத்தில் நாமும் இறைவனை பிரார்த்தித்து இறைவனின் பரிபூரண அருளை பெறுவோம். பக்தியுள்ள கணவர் கிடைக்க தட்சனின் மகளாக பிறந்ததற்காக வெட்கம் கொண்ட தாட்சாயணி, மலையரசன் இமயவானின் மகளாக பிறந்து பார்வதி என்ற பெயரில் சிவனை வேண்டி கடும் தவம் இருந்தாள். அப்போது, சிவன் தட்சிணாமூர்த்தியாக யோகத்தில் இருந்தார். இதனால் உலகில் அசுரர்கள் பெருகி தேவர்களை துன்புறுத்தினர். எனவே, தேவர்கள் மன்மதனின் உதவியுடன் சிவனது தவத்தை கலைத்தனர். அசுரர்கள் தங்களை கொடுமைப்படுத்துவதை பற்றி கூறினர். சிவன், தகுந்த காலத்தில் பார்வதி தேவியை மணம் செய்து கொண்டு, சூரர்களை வதம் செய்ய, குமரன் ஒருவனை படைப்பதாக கூறினார். பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த சிவன், ஒரு பங்குனி உத்திரத்தன்று அவளுக்கு காட்சி தந்து திருமணம் செய்து கொண்டார். இன்று அனுஷ்டிக்கும் விரதத்தை, திருமண விரதம் என்பர். இந்நாளில் தம்பதியர் விரதம் இருந்து சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, நீண்டநாள் ஒற்றுமையுடன் வாழ அவரது அருளைப் பெறலாம். திருமணமாகாத பெண்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் பக்தியுள்ள கணவர் கிடைப்பார் என்பது ஐதீகம். தீர்த்தத் தொட்டியில் நீராடுங்க! தேனி மாவட்டம் கோடாங்கிபட்டி தீர்த்தத் தொட்டியில் உள்ள விருப்பாச்சி ஆறுமுகநயினார் கோயிலில் நாக சுப்பிரமணியர் உள்ளார். மூலவருக்கு அருகிலுள்ள ஒரு நாகத்தின் மத்தியில் சிறிய வடிவில் வலதுபுறம் திரும்பிய மயிலுடன் நின்ற கோலத்தில் அருளுகிறார். ராகு, கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். விசேஷ காலங்களில் இவ்விரு சுவாமிகளுக்கும் சந்தனம், அரிசிமாவு காப்பு அலங்காரம் செய்கின்றனர். கோயில் முன்புள்ள தீர்த்தம் வற்றாமல் எப்போதும் சுரந்தபடி இருக்கிறது. இதன் பெயரால் இத்தலம் தீர்த்தத் தொட்டி என பெயர் பெற்றிருக்கிறது. பங்குனி உத்திரத்தன்று, இந்த தீர்த்தத்தில் நீராடி, ஆறுமுகநயினாரை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு ஐந்து வாகனம் முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், திருமால் கொடுத்த யானை, சேவல் மற்றும் ஆடு ஆகியவையும் அவரது வாகனங்களாக இருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங் களையும் காணலாம். திருவிழாக் காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருளுகிறார். கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தக்கலை அருகிலுள்ள குமாரகோயிலில் உற்சவ காலங்களில் முருகன் குதிரை வாகனத்தில் பவனி வருவார். மலைப்பாறையில் அங்கபிரதட்சணம் மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது வெள்ளி மலை முருகன் கோயில். இங்குள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தின் அடியில் வேல் மட்டும் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. அதன் பின் இங்கு கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் பங்குனி உத்திரத்தன்று பக்தர்கள் பாறையில் அங்க பிரதட்சணம் செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இங்கு வேண்டிக் கொண்டால் ஆணவம் நீங்கி பணிவு வரும் என்பது நம்பிக்கை. சாஸ்தாவின் அவதார நாள் சிவபெருமானுக்கும் மோகினியாக வந்த விஷ்ணுவுக்கும் பங்குனி உத்திரநாளில் அவதரித்தவர் தர்மசாஸ்தா. இவரே ஐயப்பனாக மானிட அவதாரம் எடுத்து பந்தளமன்னர் ராஜசேகரனால் வளர்க்கப்பட்டார். ஐயப்பன் வழிபாட்டில் நெய்த்தேங்காய்க்கு முக்கியத்துவம் உண்டு. நெய்த்தேங்காய் இருமுடியில் இடம் பெறும் பொருட்களில் ஒன்றாகும்.தேங்காயில் வலக்கண், இடக்கண், ஞானக்கண் என்னும் மூன்று கண்கள் உண்டு. ஒரு கண்ணைத் தோண்டி அதில் இருக்கும் இளநீரை வெளியேற்றிவிடுவர். இளநீர் உலக இன்பத்தைக் குறிப்பதாகும். அதை வெளியேற்றுவதன் மூலம் நம் அஞ்ஞானம் விலகுகிறது. இன்ப வேட்கை மறைகிறது. நெய்யை நிரப்புவதன் மூலம் தெய்வீக சிந்தனை நம்முள் நிரம்புகிறது. இந்தச் சடங்கின் நோக்கமே மனத்தூய்மை பெற்று ஞானம் அடைவது தான். இப்போதும், இவரது கோயில்கள் ஆற்றங்கரை, காடுகள், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களிலேயே இருக்கும். இதனால், இங்கு செல்ல அச்சப்பட்ட மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். சாத்து என்ற சொல்லுக்கு கூட்டம் என்று பொருள். இதனால், இவர் சாத்தா, சாஸ்தா, சாஸ்தான், சாத்தான் என்றெல்லாம் கிராமமக்களால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கப்படுகிறார். தென்மாவட்ட கிராமங்களில் சாஸ்தா கோயில்கள் மிக அதிகமாக உள்ளன. பங்குனி உத்திரத்தன்று இங்கு கூட்டம் அலைமோதும். ஞானம் அருளும் தர்ம சாஸ்தா செங்கல்பட்டு அருகில் உள்ள தலம் தாழக்கோயில். இங்கு தேவாரப்பாடல் பெற்ற பகத்வத்சலர் கோயில் உள்ளது. பக்தவத்சலர் என்பதற்கு தாயுள்ளம் கொண்டவர் என்பது பொருள். அம்பிகை திரிபுரசுந்தரிக்கு பங்குனி உத்திரம், நவராத்திரி ஒன்பதாம் நாள், ஆடிப்பூரம் நாட்களில் மட்டும் அம்பிகைக்கு முழுமையான அபிஷேகம் நடைபெறும். மற்ற நாட்களில் பாதத்திற்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். தேவாரம் பாடிய மூவரும் இங்கு பாடல் பாடியுள்ளனர். கோயில் வரலாறு அந்தகக்கவி வீரராகவரால் எழுதப்பட்டது. அகத்திய முனிவரும், விஸ்வாமித்திரரும் வழிபட்ட சிறப்புடையது. சபரிமலையில் பங்குனி உத்திரம் சாஸ்தாவின் அவதாரமான ஐயப்பன் சபரிமலையில் கோயில் கொண்டுள்ளார். மாத பூஜை நீங்கலாக நடைதிறக்கும் நாட்களில் பங்குனி உத்திரம் குறிப்பிடத்தக்கது. ஐயப்பனின் பிறந்தநாள் என்பதால் இந்நாளில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவர். கடந்த சில ஆண்டுகளாக பங்குனி பிரம்மோற்ஸவமும் இணைந்து நடப்பதால், மண்டல, மகர விளக்கு காலத்திற்கு அடுத்தபடியாக அதிக நாட்கள் நடை திறந்திருக்கும் காலமாக பங்குனி விளங்குகிறது. சம்பந்தர் பாட்டில் உத்திர விழா சென்னை மயிலாப்பூரில் வசித்த, சிவநேசர் என்பவர் தன் மகள் பூம்பாவையை திருஞானசம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க எண்ணியிருந்தார். அச்சமயத்தில் தோட்டத்தில் மலர் பறிக்க சென்ற பூம்பாவை, பாம்பு தீண்டி உயிரிழந்தாள். அவளுக்கு இறுதி காரியங்களை செய்து முடித்தார் சிவநேசர். இதையறிந்த சம்பந்தர், பூம்பாவையை எரித்த சாம்பலை கொண்டு வரச்செய்தார். பங்குனி உத்திரத் திருநாளில் சிவனின் திருக்கல்யாணம் நடக்குமே! அதைக் காணாமலே போகிறாயே பூம்பாவாய்! என்ற பொருளில் பாடல் பாடினார். சிவனருளால் அவள் உயிர் பெற்றாள். பலி விழாப் பாடல் செய் பங்குனி யுத்திர நாள், ஒலி விழாக் காணாதே போதியோ பூம்பாவாய் என்பது அந்தப்பாடலிலுள்ள வரிகள். குளிர்ந்த நெற்றிக்கண் சிவனுக்கு வெப்பமான அக்னி நெற்றிக்கண்ணாக இருப்பது போல, அம்பாளுக்கு குளிர்ந்த சந்திரன் நெற்றிக்கண்ணாக இருக்கிறது ஒரு கோயிலில். திருவாரூரிலுள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் உள்ள மதுரபாஷினி அம்மைக்கு இத்தகைய சிறப்பு இருக்கிறது. அகத்தியர் இந்த அம்பிகையை ஸ்ரீசக்ர தாரிணி, ராஜசிம்மானேஸ்வரி, லலிதாம்பிகை என்றெல்லாம் புகழ்ந்துரைத்துள்ளார். இந்த அம்பாளை வழிபட்டால், மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். பேச்சுத்திறமைக்காகவும் இவளுக்கு பூஜை செய்து வரலாம். பங்குனி மாதம் பவுர்ணமியுடன் உத்திர நட்சத்திரம் சேர்ந்து வரும் தினத்தையே பங்குனி உத்திரமாகக் கொண்டாடுகிறோம். சந்திரனுக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் கோயிலுக்கு வாழ்வில் ஒருமுறையாவது சென்று வாருங்கள். இந்த அம்பாள் மனோபலமும் தருபவள் என் பது குறிப்பிடத்தக்கது. பால்போலவே வான்மீதிலே... சந்திரன் பவுர்ணமி நாளில் கூட சிறு களங்கத்துடன் தான் ஒளி தருவான். ஆனால், பங்குனி மாதத்தில் பூமி மீன ராசியில் இருப்பதால், உத்திர நட்சத்திரத்துடன் சேர்ந்து, ஏழாம் இடமாகிய கன்னியில் நின்று, முழு கலையையும் பெற்று பூமிக்கு ஒளி வழங்குவான். அந்த பூரண பவுர்ணமி நிலாவில் களங்கத்தைக் காண முடியாது. களங்கமில்லாத சந்திர ஒளி உடலுக்கும் மனதுக்கும் நிம்மதி தரும். பல நற்பலன்களை கொடுக்கும். எனவே, இந்த நாள் கூடுதல் பலன்களை தரக்கூடிய நாளாகக் கருதப்படுகிறது. மணவிழா காணும் குன்றத்து முருகன் திருப்பரங்குன்றம். பாடல் பெற்ற சிவத்தலமாகவும், முருகனின் அறுபடைவீடுகளில் முதல் தலமாகவும் உள்ளது. வடதிசை நோக்கி அமைந்துள்ள குடைவரைக் கோயிலான இங்கு, சத்தியகிரீஸ்வரர் கிழக்கு நோக்கியும், பவளக்கனிவாய்ப் பெருமாள் மேற்குநோக்கியும், கற்பகவிநாயகர், துர்க்கை, முருகப்பெருமான் வடக்குநோக்கியும் அருள்பாலிக்கின்றனர். தனியாக கோவர்த்தனாம்பிகை சன்னதி உள்ளது. தெய்வானை திருமண வைபவத்தைக் காண மும்மூர்த்திகள், துவாதச ஆதித்தியர், அஷ்ட வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள், அஷ்டதிக் பாலகர்கள், இந்திராதி தேவர்கள், முனிவர்கள் என்று அனைவரும் கூடியதால் இத்தலம் கயிலாயத்திற்கு ஈடானதாகும். சம்பந்தர் பாடிய தேவாரத்தில் இம்மலை சிவலிங்கமாக காட்சியளிப்பதாக பாடியுள்ளார். திருமுருகாற்றுப்படையை நக்கீரர் இங்குள்ள முருகன் மீது பாடினார். பங்குனியில் முருகப்பெருமானுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. மார்ச் 22ல் இத்தலத்தில் முருகப்பெருமான் தெய்வானை திருமணம் நடக்கிறது. குன்றத்து குமரனுடன் கூட்டணி கயிலாயத்தில் ஒருநாள் பார்வதிதேவிக்கு பிரணவ உபதேசம் செய்து கொண்டிருந்தார் சிவன். தாயின் மடியில் இருந்த முருகனும் அம்மந்திரத்தைக் கேட்டுவிட்டார். குரு மூலமாகத் தெரிந்து கொள்ள வேண்டியதை மறைமுகமாக கேட்டதால் முருகனுக்கு பாவம் ஏற்பட்டது. ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் சொரூபமாக முருகன் இருந்தாலும், உலகநியதிக்கு கட்டுப்படவேண்டும் என்ற முறையில், தனக்கு ஏற்பட்ட பாவம் நீங்க முருகப்பெருமான் பூலோகத்திலுள்ள குன்றில் தவத்தில் ஆழ்ந்தார். பிள்ளையின் தவத்தைக் கண்டு ஈசன் ஆனந்தம் கொண்டார். பரம்பொருளான இறைவன் காட்சியளித்த குன்று என்பதால் அம்மலை பரங்குன்று என்றாகி திரு என்ற அடைமொழியுடன் திருப்பரங்குன்று ஆனது. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களும் ஒற்றுமையுடன் இங்கு வந்து வழிபட்ட செய்தி சுந்தரர் தேவாரத்தில் இடம் பெற்று உள்ளது. பிரம்மோற்ஸவம் பங்குனியில் பத்து நாட்கள் நடக்கும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்த முருகப்பெருமானுக்கு, இந்திரன் தன்மகள் தெய்வானையை வெற்றிப்பரிசாக அளித்து திருமணம் நடத்தி வைத்த இடம் இதுவே. கருவறையில் முருகன், தெய்வானை, நாரதர், துர்க்கை, கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை, பவளக்கனிவாய்ப் பெருமாள், மதங்கரிஷி என்று கூட்டணியாக நின்று அருள்புரிகின்றனர். பங்குனி சுவாதியன்று இங்கு திருக்கல்யாண விழா நடக்கும். மணவிழாவில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து மீனாட்சி, சொக்கநாதர் திருப்பரங்குன்றம் எழுந்தருள்வர். பங்குனி பவுர்ணமி வலம் சிவபெருமானின் மலைக்கோயில்களில் ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோயிலும் ஒன்று. பழங்காலத்தில் செண்பக வனமாக இருந்த இவ்வூர் இன்று நகரமாக காட்சி தருகிறது. கிழக்கு எல்லையில் மலையேறினால் கோயிலை அடையலாம். வாகன வசதி உண்டு. நந்தியம்பெருமானின் அம்சமாக இம்மலை இருப்பதாக ஐதீகம். உடும்பு வடிவத்தில் சிவன் பார்வதிதேவிக்கு காட்சி தந்ததால் கவுதேயாத்ரி என்றொரு பெயருண்டு. அம்மன் மரகதவல்லி என்னும் திருநாமத்தோடு விளங்குகிறாள். பங்குனி பவுர்ணமிநாளில் சுவாமியும் அம்பாளும் இங்கு பவனிவருவர். மணவாழ்வு தரும் உத்திர திருநாள் பங்குனி உத்திரநாளில் சிவபார்வதி திருமணம் நடந்தது. நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை ஜெபிக்கவேண்டும். மதியம் ஒருவேளை உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவு பால் பழம் சாப்பிடலாம். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம். மாலை கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடவேண்டும். கால் கடுக்க நிற்கும் கருணை பிரசித்தி பெற்ற பெரிய கோயில்களில் ஆறுகால பூஜை நடக்கும். இதில் உச்சிக்காலம் (மதியபூஜை) முடிந்ததும் நடை சாத்தப்பட்டு, மாலையில் திறப்பர். ஆனால், அதிகாலை முதல் இரவு வரை நமக்காக நடையே அடைக்காமல், கருணையோடு கால்கடுக்க நின்றருள் புரிகிறான் பழநி முருகன். ஞானப்பழமாய் நிற்கும் அப்பெருமானின் நாமத்தைச் சொல்வதும், காதால் கேட்பதும் கூட நன்மையளிக்கும் என்று அருளாளர்கள் போற்றுகின்றனர். நெஞ்சமே! தஞ்சம் ஏதுநமக்கினியே என்று கந்தர் அலங்காரம் பழநியப்பனைக் குறிப்பிடுகிறது. பங்குனி உத்திரத்தன்று இங்கு நடக்கும் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மொட்டையாண்டி பழநியாண்டி என்றெல்லாம் இப்பெருமானை குறிப்பிட்டாலும், இவர் ஜடைமுடியோடு இருப்பதை அபிஷேக காலத்தில் தரிசிக்க முடியும். பழநி தலபுராணமும், முருகன் குடுமியோடு இருக்கும் காட்சியைப் போற்றுகிறது. சிவபெருமானின் அம்சமாகத் திகழும் இவர், அபிஷேகத்தால் மனம் குளிர்ந்து அருள்வதாகக் கூறுகின்றனர். சேரமன்னர்கள் இக்கோயிலுக்குத் திருப்பணி செய்ததால், கேரளமக்கள் பெருமளவில் வருகின்றனர். சபரிமலை செல்பவர்களும் இவரை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பரிதிநியமத்தில் பங்குனி விழா தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள தலம் பருத்தியப்பர் கோயில். இவ்வூரின் புராணப்பெயர் பரிதிநியமம். பரிதி என்றால் சூரியன். சூரியன் சிவபெருமானை வழிபட்டு நோய் நீங்கப்பெற்றதால், சுவாமிக்கு பரிதியப்பர் பாஸ்கரேஸ்வரர் என்றெல்லாம் பெயர்கள் சூட்டப்பட்டன. பருதியப்பர் என்ற சொல்லே பருத்தியப்பர் என மருவி விட்டதாகவும் சொல்வர். இங்குள்ள அம்பிகை மங்கலநாயகி பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளுகிறாள். சிவனை சூரியன் வழிபடும் சிற்பத்தை கோயிலில் காணலாம். பங்குனி 18, 19,20 (இவ்வாண்டு ஏப்ரல் 1,2,3) தேதிகளில் உதய வேளையில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகின்றன. இத்தல முருகனுக்கு பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். கோயிலின் முன்புறத்தில் சூரியதீர்த்தமும், பின் புறத்தில் சந்திரதீர்த்தமும் உள்ளன. பரிதியப்பர், மங்கலநாயகி, முருகப் பெருமான், சூரியன் ஆகியோரை ஒருசேர வழிபடுவோருக்கு பிதுர் தோஷம் (முன்னோர் தந்த சாப பலன்) நீங்கும் என்பர். திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இங்கு பங்குனி உத்திரவிழா விசேஷமாக நடக்கிறது. உத்திரநாளில் வள்ளி கல்யாணம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தன்று வள்ளி திருமணம் நடக்கிறது. அதிகாலையில் பள்ளியறையிலிருந்து குமரவிடங்கர் கருவறைக்குக் கிளம்புவார். அபிஷேகம், அலங்காரம் முடிந்தவுடன் தீபாராதனை நடக்கும். பின் பெரிய பூஞ்சப்பரத்தில் மேலக்கோயில் சென்று தவத்தில் ஆழ்வார். மாலை நான்கு மணிக்கு தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி மேலக்கோயில் முன்புள்ள பந்தல் மண்டப முகப்பிற்கு வருவார். அப்போது வள்ளியம்மை மணமகள் கோலத்தில் எதிரில் வந்ததும், இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் நிகழும். பக்தர்கள் இந்நாளில், வள்ளிநாயகிக்கு தினை மாவிளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இந்நிகழ்ச்சி, முருகனுக்கு வள்ளி தேனும் தினைமாவும் வழங்கியதை நினைவூட்டுவதாக உள்ளது. வள்ளி கல்யாணத்தை தரிசிப்பதாலும், மாவிளக்கு ஏற்றுவதாலும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். சுப்பா ஓடிப்போ தெலுங்கு மற்றும் கன்னட மக்கள் முருகனை சுப்பன், சுப்பராயன், சுப்ராயலு, சுப்பண்ணா என்று பெயரிட்டு வழிபடுகின்றனர். முருகனைப் பாம்புகளின் தலைவனாகக் கருதும் வழக்கம் அவர்களிடம் உள்ளது. இதனால் பாம்பைப் பார்த்தால் சாம்பிராணி தூபமிட்டு சுப்பா ஓடிப்போ, சுப்பராயா ஓடிப்போ, என்று அன்போடு விரட்டுவார்கள். பாம்பை அடக்கும் மயிலை வாகனமாக ஏற்றதால் முருகன் மீது அவர்களுக்கு பாசம் அதிகம். மங்களூருவில் இருந்து 100கி.மீ., தொலைவில் உள்ள தலம் சுப்ரமண்யம். முருகன் தாரகாசுரனை வதம் செய்தபின், வந்து அருள்புரியும் தலம் இது. இதனை ஆதிசுப்ரமண்யம் என்று கூறுவதுண்டு. இங்குள்ள மலை குமார பர்வதம். நதி குமாரதாரா. மூலவர் பாம்புப்புற்றின் மீது வீற்றிருக்கிறார். புற்றுமண் பிரசாதமாக தரப்படுகிறது. இளைஞர்களே 48 ஆண்டு விரதமிருங்க பங்குனி உத்திரவிரதம் மேற்கொள்வோர் 48 ஆண்டுகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று விரதநூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரதத்தால் அடுத்தபிறவி தெய்வப்பிறவியாக அமையும். அதன் மூலம் ஜனன, மரணச் சக்கரத்தில் இருந்து உயிர் விடுபட்டு முக்தி பெறும் என்பது ஐதீகம். சித்திரையில் சூரியன் தன் உச்சவீடான மேஷராசியில் சஞ்சரிப்பார். அந்த அடிப்படையில் பங்குனியிலேயே சூரியனின் கதிர்கள் தீவிரமடையத் தொடங்கிவிடும். உத்திர நட்சத்திரத்திற்குரிய கிரகம் சூரியன். இந்நாளில் செய்யும் வழிபாட்டினால் பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகிவிடும் என்று சூரியபுராணம் கூறுகிறது. பங்குனி உத்திரநாளில் சந்திரன் பலம்பெற்று கன்னிராசியிலும், சூரியன் மீனவீட்டிலும் இருக்கும். இவ்விரு கிரகங்களும் இந்நாளில் ஒருவரை ஒருவர் ஏழாம்பார்வையால் பார்த்துக் கொள்வர். இதன் மூலம் ஆத்ம பலமும், மனோபலமும் ஒருசேர நமக்குக் கிடைக்கிறது. பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை * மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள். * பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார். * தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது. * சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம். |
| வணங்கிட வரம் தரும் வழிவிடு முருகன்! Posted: 13 Mar 2012 07:48 AM PDT ![]() ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகராக விளங்கும் ராமநாதபுரம் நகரின் இதயம் போன்ற இடத்தில், எழில்மிகு கோலத்தில் அறுபடை வீட்டின் அழகு முருகன் வழிவிடு முருகனாக வடிவம் கொண்டு, வணங்கிவந்தவர்க்கெல்லாம் வழிவிட்டு வழியருகில் இருக்கின்றான். பக்தியோடும், மெய்யான இறை உணர்வோடும் அடிபணிந்து வணங்கி வழிபடுவோர் அனைவருக்கும் ஜாதி, மதஇன வேறுபாடுகள் எதுவுமின்றி அருள்பாலித்து வருவது இம்முருகப் பெருமானின் தனிச்சிறப்பாகும். மூலவரலாறு: இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆண்டுகளில் நள வருஷத்தில் முதல் பிளவு ஆண்டுக்காலத்தில் தற்சமயம் தர்மகர்த்தாவாக இருப்பவரின் முன்னோர்களால் தனி வேல் வைத்து ஏற்பட்டதாக மூல வரலாறு கூறுகிறது. தனிச்சிறப்பு: இக்கோயில் அமைந்திருக்கும் இடத்தின் நான்கு திக்கிலும் வழக்கு மன்றம்,பெரிய மருத்துவமனைகள், வாரச்சந்தைகள் அமைந்துள்ளதாலும், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம் போன்றவை உள்ளதாலும் இவற்றுக்கு வருகின்ற பொதுமக்கள் பயணம் மேற்கொள்பவர்களும், முறையே தங்களது வழக்குகளில் நீதி கிடைத்திடவும், பிணி நீங்கி நலம் பெறவும், பொருள்கள் வாங்கவும், விற்கவும் மேலும் வெளியூர் பயணம் செய்பவர்கள் நலமாக சென்று திரும்பிவரவும் வழியருகில் அமைந்துள்ளதால் இந்த வழிவிடு முருகனை வணங்கி சென்றதால் நினைத்த காரியம் நிறைவேறியதால் கோயிலுக்கு மட்டுமின்றி பக்தர்களுக்கும் சிறப்பும், புகழும் சேர்ந்தது. குறிப்பாக சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்கள் எளிதாக கோயிலுக்கு சென்று மெய்யுருக வணங்கிடவும், வழிகாட்டி வரம் தருவான் இம் முருகன். நீண்டநாள் நினைப்பு, கனவுகள், லட்சியம் கோரிக்கைகளை அவரவர் வேண்டுதலுக்கும், நேர்த்திக்கடனுக்கும் செவி சாய்த்து வரம் தந்து வாழ்க்கைக்கும் உறுதுணையாக இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஸ்தல விருட்சக சாயா மரம்: அன்பு அண்ணன் ஆனை முருகன் கணேசன் (விநாயகர்) அருகிலிருக்கவும் வள்ளி, தெய்வாணை துணையுடன் வண்ண மயில் மீது அமர்ந்து வடிவேல் தாங்கி அமர்ந்து இருக்கும் வடிவான கோலம், ஒரே கல்லில் செதுக்கி செய்யப்பட்டு மூலவராக இருக்கும் வழிவிடு முருகனை காண்பது கண் கொள்ளா காட்சியாகும்.இக்கோயில் ஸ்தல விருட்சமாக சாயா என்ற அபூர்வ மரம் இருப்பது மேலும் சிறப்பு செய்கிறது. எவ்வளவு பக்தர்கள் கூட்டம் வந்தாலும் எவ்வித சிரமமுன்றி முருகனை தரிசித்து மனதார வணங்கிடவும் நிர்வாகத்தால் எல்லா வசதி செய்யப் பட்டுள்ளது. கோயில் வளாகத்துக்குள் நவக்கிரகம், சஷ்டி முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை ஆகியோருக்கு தனிப்பிரிவு சன்னதிகளும், இடும்பன், பைரவர் ஆகியோருக்கும் சிறப்பு தனிச்சன்னதிகள் உள்ளன. இதைப் போலவே ஒவ்வொரு நாள் இரவிலும் பள்ளியறை வழிபாட்டுக்காக மண்டபம் அமைத்து ஊஞ்சல் கட்டியும், வழிபாடு நடைபெற்று வருகிறது. வழிபாடுகள்: தினசரி இரண்டு கால பூஜைகள் முறைப்படி ஆலய மணி முழங்கிட அபிஷேக தீபாராதனைகளுடன் வழிபாடல்களுடன் தமிழில் நடைபெற்று வருகின்றன. வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் மார்த்தாண்ட பூஜையும், மாதத்தின் பவுர்ணமி நாளில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. மூலவரைச் சுற்றி வரும்போது பிரகாரங்களில், கந்த புராணப் பாடல்கள், திருப்புகழ் பாடல்கள், சஷ்டி கவசம், சண்முக கவசம் என பல பாடல்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன. பங்குனி உத்திர பெருவிழா:ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா மிகச் சிறப்பான முதன்மை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் ஆன்மீக சொற்பொழிவுகள் உள்ளே உள்ள தனி மண்டபத்தில் நடைபெறும். ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றியுள்ள நூற்று கணக்கான ஊர்களிலிருந்து ஆயிர கணக்கான பக்தர்கள் பங்குனி உத்திர பெருவிழாவிற்கு காப்புகட்டி விரதமிருந்து விழாவின் முக்கிய தினமான பங்குனி விழா தினத்தில் நொச்சிவயல் ஊரணியிலிருந்து பால்குடம், பால்காவடி, மயில்காவடி அலகு குத்தி சப்பரம் இழுத்தும் பூக்குழி இறங்கியும் முருகனுக்கு நேர்த்திகடன் செலுத்துவர். முருகனை காண கோடான கோடி கண்கள் வேண்டும் என்று சொல்லுக்கு ஏற்றாற்போல் அலங்காரத்தில் காட்சியளிக்கும் முருகனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என பக்தர்கள் அலைமோதி தரிசித்து பக்தர்களின் பக்திபரவசத்துடன் எழுப்பும் அரோகரா கோசம் ராமநாதபுரத்தின் எட்டுதிசையிலும் எதிரொலிக்கும். மறுநாள் இரவு 7 மணிக்கு புறப்படும் வழிவிடு முருகன் உற்சவ மூர்த்தியாக எழுந்து சப்பரத்தில் பூரண அலங்காரத்துடன் வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி எங்குமே காண முடியாத ஒன்றாகும். சூரசம்ஹாரம்: ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டிப் பெருவிழா விசேஷ அலங்காரத்துடன் அபிஷேகமும் நடக்கிறது. அப்போது சூரசம்ஹார நிகழ்ச்சியும், வழிவிடு முருகன் தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. பங்குனி உத்திரப் பெருவிழா இக்கோயிலின் மிகச் சிறப்பான முதன்மை திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. வழிவிடு முருகன் ஜனநாயக முருகன் ஆவான். மக்கள் சக்தியாலும் காவடியான் பெருமையாலும் சக்தி பெற்றவன். மக்கள் சக்தியை மக்களிடம் பெற்று மக்களுக்காக நன்மைகளை புரியும் முருகன் வழிவிடும் முருகன். புகழ் பாமாலை: ராமநாதபுரம் நகரை சேர்ந்த பாவலர்கள், புலவர்கள், கவிஞர்கள் தமது நெஞ்சம் நிறைந்த பக்தியுடன் பாடல்கள் இயற்றி, முருக பற்று, அருளமுதம், ஞானப் பண்டித பாமாலை, முருகன் பாமாலை என்ற பெயர்களில் வழிவிடு முருகனின் புகழ்பாடி பாமாலை சூட்டி உள்ளனர். திருமுருகன் படை வீடு ஆறு, அதை திசையெங்கும் இசையோடு பாடு. இசைபாட வைத்தவன் தான் வழிவிடு முருகன், விழி அசைவாலே வீடாறும் காட்டும் இறைவன்.அந்த இறைவன் முருகனின் திருவருளைப் பெற இக்கோயிலுக்கு வந்து வணங்கி இப்பிறவிப் பயனை அனைவரும் அடைவோமாக. குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி போது உலக அமைதிக்காக ராமநாதபுரம் வழி விடு முருகன் கோயிலில் மகா யாக சாலைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் தோஷ நிவர்த்தி பெற சங்கல்பம் இலவசமாக செய்யப்படுகிறது. |
| You are subscribed to email updates from அமானுஷ்யம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



















