I tamil web

I tamil web


சிங்கத்தையே பயமுறுத்தும் முள்ளம் பன்றிக் கூட்டம்

Posted: 29 Feb 2012 06:22 AM PST


காட்டு ராஜாவான சிங்கத்திற்கு அனைத்து மிருகங்களும் பறவைகளும் அஞ்சியே வாழ்க்கின்றன. இவை மட்டுமின்றி மனிதர்களும் அவற்றிற்கு பயந்துதான் வாழ்கின்றனர். கடும் பசி காரணமாக உணவை தேடி அலைந்த காட்டுராஜா கூட்டம் இங்கு காணொளியில் முள்ளம் பன்றியை கண்டு விரண்டு ஓடுவதைக் காணலாம்.

அதிவிவேக வண்டியை உருவாக்கிச் சாதனையைத் தனதாக்கிக் கொண்ட கணினிப் பொறியியலாள​ர் (படங்கள் ,வீடியோ)

Posted: 29 Feb 2012 06:10 AM PST

கணணி பொறியியலளாராக இருக்கும் 40 வயது நிரம்பிய அட்றியன் பென்னெட்ட என்பவர் மணிக்கு 72 மைல் வேகத்தில் பயணிக்கும் வினோத வடிவமுடைய வண்டி ஒன்றை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார். இதில் இணைக்கப்பட்டுள்ள இன்ஜின் ஆனது ஜெட் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ள இன்ஜின்களின் வலுவிற்கு சமனாக காணப்படுவதுடன் 120 குதிரை வலுவுடையன. ஏறத்தாழ 1200 யூரோக்களை செலவு செய்த இந்த வண்டியானது இயங்கும் போது, 1000 டிகிரி வரையான வெப்பநிலையை அதன் புகைப்போக்கியினூடாக வெளியேற்றுகின்றது.












தனது எஜமானியைக் கோடீஸ்வரியாக மாற்றிய வளர்ப்பு வேட்டை நாய்

Posted: 29 Feb 2012 05:54 AM PST



சீனாவை சேர்ந்த குயு கிங்காய்(53) என்பவர் வளர்த்த வேட்டை நாய் கோடீஸ்வரராக மாற்றி இருக்கிறது. இவர் வளர்ப்பு நாய்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒரு திபெத்தியன் வேட்டை பெண் நாயை பரிசாக வழங்கினார். சமீபத்தில் அந்த வேட்டை நாய் ஒரேநேரத்தில் 22 குட்டிகளை போட்டது. அதில் 5 குட்டிகள் இறந்து விட்டன. ஆனாலும் மற்ற 17 குட்டிகளும் நன்றாக இருக்கின்றன.


மேலும் இந்த திபெத்திய வேட்டை ரக நாய் உலகிலேயே அதிக விலைக்கு விற்பனையாவதாகும். அதாவது ஒரு குட்டி பல லட்சத்துக்கு விலை போகக்கூடியது. சமீபத்தில் சீனாவில் உள்ள ஷிஜிஹூயாங் என்ற இடத்தில் இந்த ரக நாய் ஒன்று சுமார் ரூ.6 கோடிக்கு ஏலம் போனது. 17 குட்டிகளை ஈன்றதன் மூலம் இந்த நாய் தனது உரிமையாளர் குயுவை பெரிய கோடீஸ்வரர் ஆக்கி விட்டது.


பொதுவாக இந்த ரக நாய் 7 அல்லது 8 குட்டிகளை தான் போடுவது வழக்கம். ஆனால் 22 குட்டிகளை ஈன்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று சீன வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்ல உலக அளவில் அதிக குட்டிகளை ஈன்ற வளர்ப்பு நாய் பட்டியலில் 2-வது இடத்தையும் பெற்று விட்டது. இதற்கு முன்பு கேம்பிரிட்ஜ் பகுதியில் ஒரு நாய் 24 குட்டிகளை ஈன்றது தான் சாதனை ஆக இருக்கிறது.








ஜப்பானில் பீதி, சுனாமியால் உயிரிழந்தவர்கள் பேயாக நடமாட்டம்

Posted: 29 Feb 2012 05:31 AM PST


ஜப்பானில் கடந்தாண்டு மார்ச் மாதம் 11ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமியால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்ததில் 19 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். மேலும் புகுஷிமா அணு உலை வெடித்ததில் கதிர்வீச்சு பரவி பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.தற்போது சிறிது சிறிதாக அணு உலை சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் பேயாக மாறி பொதுமக்களை பயமுறுத்தி வருவதாக இஷினோமகி நகரில் கடும் பீதி நிலவுகிறது.

இறந்தவர்களின் சத்தங்கள் மற்றும் அலறல்கள் கேட்பதாக பலரும் கூறி வருவதால், மக்கள் சாலையில் நடமாட அஞ்சுகின்றனர். இதனிடையே நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பலியான நபர்களின் ஆன்மா சாந்தியடைய பரிகார பூஜைகளை செய்வதில் மதகுருமார்கள் ஈடுபட்டுள்ளனர்.








கூடைப்பந்து விளையாடும் அதிசய நாய் (வீடியோக்கள்)

Posted: 29 Feb 2012 05:06 AM PST



கைப்பந்து ஆடுகின்ற திறமையை வெளிப்படுத்தி இணையத்தில் மிகுந்த பிரபலம் பெற்ற நாய் Petey. தற்போது கூடைப் பந்து ஆடி அசர வைக்கின்றது.
மேலும் எஜமானியுடன் சேர்ந்து கூடைப்பந்தாடி அசத்தும் நாயின் திறமையினைக் காணொளியில் காணலாம்.






ஜீவா, கார்த்திக்கு நோ சொன்னாராம் லட்சுமி ராய்!

Posted: 29 Feb 2012 04:51 AM PST



2011-ம் ஆண்டின் மிக வெற்றிகரமான நடிகை லட்சுமி ராய்தான். அவர் நடித்த மங்காத்தா பெரிய ஹிட். காஞ்சனாவோ சூப்பர் டூப்பர் ஹிட்.

இன்றைக்கு பலரும் லட்சுமிராயை தங்கள் படத்தில் நடிக்க வைக்க முயல்கிறார்கள். ஆனால் ரொம்ப தெளிவான லட்சுமிராய், தனக்கு முக்கியத்துவம் இல்லாத படங்களை, அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் ஒப்புக் கொள்ள மறுத்துவருகிறார்.

சமீபத்தில் லட்சுமி ராய்க்கு இரு பெரிய பட வாய்ப்புகள் வந்தன. அதில் ஒன்று கார்த்தியின் படம். இதில் லட்சுமி ராய்க்கு இரண்டாவது நாயகி வேடம். ஆனால் நல்ல சம்பளம் தரத் தயாராக இருந்தார் தயாரிப்பாளர். கதையைக் கேட்ட லட்சுமி ராய், நான் நடிக்க மாட்டேன் என விலகிக் கொண்டார். அடுத்து ஜீவாவுடன் நடிக்க வந்த வாய்ப்பையும் வேண்டாம் என மறுத்துவிட்டார்.

ஏன் இப்படி? என்றால், இரண்டு படங்களிலுமே எனக்கு அரைவேக்காட்டுத்தனமான ரோல். அவற்றில் நடித்து பெயரைக் கெடுத்துக் கொள்வதை விட, கையிருக்கும் படங்களில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன், என்கிறார் லட்சுமி ராய்.

மலையாளத்தில் 3 படங்கள், கன்னடத்திலும் தெலுங்கும் தலா இரண்டு என நிற்க நேரமில்லாத அளவு சோலோ ஹீரோயின் வேடங்கள் இருப்பதால், தமிழில் வரும் இரண்டாம் தர ஹீரோயின் வேடங்களை மறுக்கிறார். தமிழிலும் தனி ஹீரோயின் வேடம் கொடுங்கள் வெளுத்துக் கட்டுகிறேன், என்கிறார்.

ஏலியன் வடிவில் பிறந்தது அதிசயக் கன்றுக்குட்டி

Posted: 29 Feb 2012 04:42 AM PST



மாடுகள் ஈன்றெடுக்கும் கன்றுகள் சில நேரங்களில் இரண்டு தலையுடனும், வித்தியாசமான வண்ணங்களிலும் பிறந்திருப்பதைக் கண்டிருப்போம்.
ஆனால் தாய்லாந்தில் ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஒரு மாடு ஏலியன் வடிவிலான கன்றினை ஈன்றுள்ளது.மேலும் இறந்து நிலையில் பிறந்துள்ள இக்கன்றுக்கு அங்கு வாழும் மக்கள் தனது வித்தியாசமான சடங்குகளை செய்து வழிபடுவதைக் காணொளியில் காணலாம்.













குஷ்புவின் புதுக்குடும்பமாகிவிட்ட ட்விட்டர்

Posted: 29 Feb 2012 04:15 AM PST




குஷ்புவின் புதுக் குடும்பம் என்று கூடச் சொல்லலாம். அந்த அளவுக்கு ட்விட்டர் அவருடன் இணை பிரியாத ஒன்றாகி விட்டதாம். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட ட்விட்டரில் போட்டு வைத்து விடுகிறார்.

காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு ரெடி செய்வது முதல் இரவு தூங்கப் போவது வரை என்னென்ன நடக்கிறதோ அத்தனையையும் ட்விட்டரில் சொல்லி விடுகிறார் குஷ்பு.

ஏன் இப்படி என்றால், எனது பிளாக்பெர்ரியிலிருந்து மெசேஜ் செய்வது எளிது, அதனால்தான் என்று கூறிச் சிரிக்கிறார் குஷ்பு. ட்விட்டர் தற்போது குஷ்புவின் விரிவுபடுத்தப்பட்ட ஒரு குடும்பமாகவே மாறிப் போயுள்ளது. ஒரு நாளின் பாதி நேரத்தை ட்விட்டரிலேயே அவர் கழிக்கிறாராம்.

என்னிடம் பலரும் பல கேள்விகளை, சந்தேகங்களை, விளக்கங்களைக் கேட்கிறார்கள். அதற்கு நானும் பொறுமையாக ட்விட்டர் மூலம் பதிலளிக்கிறேன். என்னையும் ட்விட்டரையும் பிரித்துப் பார்க்கவே முடியாது.

மேலும் எனது குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யங்களையும் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எனது குடும்பத்தாரிடம் சொல்ல முடியாத - காரணம் இதெல்லாம் போர்ம்மா என்று அலுத்துக் கொள்வார்கள் - விஷயங்களை ட்விட்டர் மூலம் மற்றவர்களுக்கு சொல்கிறேன் என்று கூறி சிரிக்கிறார் குஷ்பு.

விரைவில் பார்த்த ஞாபகம் இல்லையே என்ற கலைஞர் டிவி சீரியல் மூலம் சின்னத் திரை ரசிகர்களை சந்திக்க வருகிறாராம் குஷ்பு. இந்த சீரியலில் அவர் வித்தியாசமான வில்லத்தனம் செய்துள்ளாராம். திரில்லர் சீரியலாக இது அமைந்துள்ளதாம். இது குஷ்புவின் சொந்தத் தொடராம்

தத்ரூபமாக மரங்களால் வடிவமைக்கப்பட்ட குதிரைகள்

Posted: 29 Feb 2012 04:06 AM PST


மரங்களினால் பலவிதமான பொருட்களை கலைநயத்துடன் வடிவமைக்கும் கலைஞர்களின் சிந்தனைகளும், செயல்களும் சற்று வித்தியாசமாகவே காணப்படுகின்றன.
இவ்வாறான மரத்தினால் தயாரிக்கும் பொருட்கள் வீட்டை அழகுப்படுத்துவதில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவ்வாறு மரங்களினால் வினோதமாக வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பத்தினைப் படத்தில் காணலாம்.













நான் வில்லன் அல்ல மணிரத்தினத்திற்கு அர்ஜுன் தெரிவிப்பு

Posted: 29 Feb 2012 03:41 AM PST


மணிரத்னம் இயக்கும் கடல் படத்தில் தான் வில்லன் இல்லை என்று ஆக்ஷன் கிங் அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

ராவணன் படத்துக்குப் பிறகு மணிரத்னம் இயக்கும் படம் கடல். இதில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் தான் ஹீரோ. சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுனும், மோகன் பாபு மகள் லட்சுமி மஞ்சுவும் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க, வைரமுத்துவும் அவர் மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதுகிறார்கள். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் அர்ஜுன் தான் வில்லன் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை அர்ஜுன் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

கடல் படத்தில் நான் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இன்னும் ஷூட்டிங் துவங்காததால் படத்தைப் பற்றி வேறு எதுவும் கூற இயலாது. மணிரத்னம் இயக்கத்தில் நான் நடிப்பது இது தான் முதல் தடவை என்பதால் ரொம்ப த்ரில்லாக உள்ளது. இதில் நான் தான் வில்லன் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. கடல் படத்தில் நடிகர் அரவிந்த்சாமி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது தான் எனக்குத் தெரியும்.

இரண்டாவது நாயகனாக நடிப்பதில் பிரச்சனையில்லை. ஏனென்றால் எனக்கு கதாபாத்திரம் தான் மிகவும் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெயர் எடு்த்துவிட்டேன். பாலிவுட்டிலும் ஒரு கை பார்க்கலாம் என்று நினைத்து கதை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அதில் நான் தான் ஹீரோ என்றார்.

செல்லமாக வளர்த்த நாயின் இழப்பைத் தாங்காது திருமணத்தையே நிறுத்திய மணப்பெண்

Posted: 28 Feb 2012 11:41 PM PST


இந்தியாவின் தமிழக மாநிலத்தில் வேலூரை அடுத்த தக்கோலம் அருகே அரிகலபாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாராயண மூர்த்தி.
இவரது மகள் காயத்ரி(24). இவருக்கும் சென்னையை சேர்ந்த தரணி(26) என்பவருக்கும் கடந்த மாதம் 10ம் திகதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இவர்கள் திருமணம் நேற்று (பிப். 28 ) காலை 10 மணிக்கு நடப்பதாக இருந்தது. இதைத் தொடர்ந்து காயத்ரி செல்லமாக வளர்த்து வந்த மணி என்ற நாய்க்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதனால் கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சையளித்தனர். மேலும் மூன்று மணி நேரத்துக்கு பின் நாய் நன்றாக நடமாடும் எனக் கூறி விட்டு மருத்துவர் சென்றார்.

ஆனால் காலை 9 மணிக்கு திடீரென நாய்க்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் இறந்தது. சோகம் தாங்காமல் காயத்ரி அழுது துடித்தார்.

இதனால் குறிப்பிட்ட நேரத்தில் திருமணத்தை நடத்த முடியவில்லை. நாயை ஒரு அறையில் வைத்து விட்டு திருமணம் நடத்தலாம் என்றும் திருமணம் முடிந்த பின் அடக்கம் செய்யலாம் என்றும் காயத்ரி வீட்டார் தெரிவித்ததற்கு காயத்ரி சம்மதிக்கவில்லை.

நான் பல ஆண்டுகள் செல்லமாக வளர்த்த நாய் மணியே இறந்து விட்டது. இதனால் என் சந்தோஷம் அனைத்தும் போய்விட்டது. எனக்கு திருமண வாழ்க்கை தேவையில்லை எனக் கூறிவிட்டார். இரு தரப்பு உறவினர்கள் சமாதானம் செய்தும் காயத்ரி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

இதனால், மணமகன் வீட்டார் சோகத்துடன் திரும்பிச் சென்றனர். இறந்த நாய் அங்குள்ள சுடுகாட்டில் மதியம் 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.

கார்த்தியை உள்ளே வரமறுத்த ஜிம்னாக்ளப்

Posted: 28 Feb 2012 11:35 PM PST


காலர் வைக்காத டி சர்ட் போட்டு வந்த 'குற்றத்துக்காக' நடிகர் கார்த்தியை வெளியிலேயே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர் ஜிம்கானா க்ளப் நிர்வாகிகள். அவர் காலர் வைத்த வேறு சட்டை போட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர்.

இதேபோல, சின்னதாக காலர் வைத்த ஒரு சட்டையைப் போட்டு வந்ததால், கமலா தியேட்டர் அதிபர் விஎன் சிதம்பரமும் வெளியில் நிறுத்தப்பட்டார்.

சென்னையில் உள்ளது ஜிம்கானா க்ளப். இங்கு நேற்று ஒரு பிரஸ் மீட் நடந்தது. சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆரம்பிப்பது குறித்த பிரஸ் மீட் அது.

ஆனால் இதில் ஏக குழப்பங்கள், பஞ்சாயத்துகள். அங்கீகாரமில்லாத சில நபர் ஏற்பாடு செய்த பிரஸ் மீட் என்பதால் யாரும் போக வேண்டாம் என்று முதலில் பிஆர்ஓ யூனியன் சொல்லிக் கொண்டிருந்தது. அப்புறம் பஞ்சாயத்து நடந்து, ஒருவழியாக நிகழ்ச்சி மாலை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் நடிகர் கார்த்தி. விழாவில் கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரமும் வந்திருந்தார். அந்த கிளப்பின் 'டிரஸ் கோட்'படி, டி சர்ட், காலர் வைக்காத டி சர்ட் போட்டு உள்ளே வரக்கூடாதாம்.

ஆனால் கார்த்தியோ காலர் வைக்காத டிசர்ட் போட்டு வந்துவிட்டார். உள்ளே விட மறுத்துவிட்டனர் க்ளப் நிர்வாகத்தினர். அரைமணி நேரம் அவர் வெளியில் காத்திருந்தார். பின்னர் உதவியாளர் மூலம் வேறு சட்டை ஏற்பாடு செய்து போட்டுக் கொண்டு வந்தார்.

அடுத்து வந்த கமலா தியேட்டர் அதிபர் விஎன் சிதம்பரம் வழக்கமாக அணியும் சின்ன காலர் வைத்த வெள்ளைச் சட்டை அணிந்து வந்தார். அவரது ட்ரஸ் கோட் அதுதான்!

அவரையும் உள்ளே விட மறுத்துவிட்டார்கள். அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அனுமதிக்காததால் தன் ட்ரைவர் சட்டையை வாங்கிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

இந்த ட்ரஸ் கோடெல்லாம் இங்கு வழக்கமாக வரும் உறுப்பினரோடு நிறுத்திக் கொள்ளலாமே... நிகழ்ச்சிக்கு வருகிற விருந்தினர்களிடம் எதிர்ப்பார்ப்பது சின்னப் புள்ளத்தனமால்லையா என்று நிருபர்களுக்கு, ஒரு இரும்புத்தனமான சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தனர் க்ளப் நிர்வாகத்தினர்.

இஸ்ரேலிடம் வென்றது ஈரான் (வீடியோ படங்கள் இணைப்பு)

Posted: 29 Feb 2012 04:25 AM PST


  சர்வதேச திரைப்பட விருதான ஓஸ்கர் விருது சர்வதேச அரசியல் விவகாரங்களையும் எதிரொலித்திருப்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று.
84வது ஓஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஓஸ்கர் விருதை வென்றிருக்கிறது ஈரான் திரைப்படமான "தி செபரேஷன்".

ஓஸ்கர் விருதைவிட ஈரானியர்களுக்கு இதில் அளவில்லா மகிழ்ச்சி புதைந்திருக்கிறது. அது என்னவென்றால் ஈரானின் தி செப்பரேசன் படம் போட்டியிட்டது இஸ்ரேலின் திரைப்படமான "புட்நோட்டு"டன்.


ஏற்கெனவே அரசியல் அரங்கத்தில் இருநாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் நிலையில் இந்த விருது பெற்றிருப்பது ஈரான் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் ஓஸ்கர் விருதை குறிப்பிடும் அந்நாட்டு ஊடகங்கள் அனைத்துமே "இஸ்ரேலை வென்றது ஈரான்" என்கின்றன. ஈரான் நாட்டு அரசு தொலைக்காட்சியும் இப்படித்தான் சொல்லி வருகிறது.