I tamil web |
- மனத்துணிவூம் மாயாஜாலமும்
- வெங்கட் பிரபுவின் படத்தில் மீண்டும் சூர்யாவூடன் ஜோடி சேர்கிறார் ஸ்ருதி ஹாசன்
- 337 சிக்கன் லெக்பீஸ்களை அரைமணி நேரத்தில் சாப்பிட்ட மனிதர்
- 3 திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் அதன் கிளைமாக்சையே மாத்த சொன்னாராம் ரஜனி
- புகையிரத வீதியில் தலை வைத்து உறங்குவதால் குணமாகுகின்றதாம் நோய்கள்
- த ஆர்டிஸ்ட் ஹூகோ படங்களுக்கு தலா 5 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற சிறந்த நடிகை மெரில் ஸ்ட்ரீப்
- என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் விஜய்
- பறவை முட்டைத் திருடனுக்கு விசித்திர தண்டனை
- ஆகாயத்திற்கும் பயணிக்கலாம் அதிசய லிப்ட் கண்டுபிடிப்பு!!!
- உல்லாசமாக இருக்கும் பண்டா கரடி! (படங்கள்)
- தவறிய கையால் வந்த வினை! (படங்கள், வீடியோ)
| Posted: 28 Feb 2012 06:32 AM PST பொதுவாக மாயாஜாலம் அனைத்து தரப்பினரையும் அதிகமாக கவர்வதுடன் அனைவரின் மனதில் பெரும் மகிழ்ச்சியையும், சிந்தனையும் ஏற்படுத்துகின்றது. ரமனா என புகழ்பெற்ற இந்த மேஜிக் நிபுணர், தனது தாத்தாவிடம் இருந்து ஆரம்ப மேஜிக் வித்தைகளைக் கற்றுக்கொண்டு, பின்பு இந்தியாவின் புகழ்பெற்ற மேஜிக் அக்கடமியில் கலந்து கொண்டு பலவிதமாக வித்தைகளை கற்றுள்ளார். மேலும் அவ்வாறு இங்குள்ள மேஜிக் நிபுணர் செய்யும் வித்தைகளில் சிலவற்றைக் காணொளியில் காணலாம். |
| வெங்கட் பிரபுவின் படத்தில் மீண்டும் சூர்யாவூடன் ஜோடி சேர்கிறார் ஸ்ருதி ஹாசன் Posted: 28 Feb 2012 06:11 AM PST இயக்குனர் வெங்கட் பிரபுவின் படத்தில் சூர்யா ஜோடியாக மீண்டும் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதை இயக்குநர் வெங்கட்பிரபு மறுத்துள்ளார். ஸ்ருதி ஹாசன் பாலிவுட்டில் லக் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். ஆனால் லக் அவருக்கு லக்கியாக இல்லை. தமிழில் அவர் அறிமுகமான ஏழாம் அறிவு அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. சூர்யா-ஸ்ருதி ஜோடியும் நல்ல ஜோடியாக இருக்கிறது என்று பேசப்பட்டது. இந்நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் மீண்டும் சூர்யாவுடன் ஸ்ருதி ஜோடி சேர்வதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து வெங்கட் பிரபுவிடமே கேட்டதற்கு, அவர் கூறியதாவது, மங்காத்தா வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் தல அஜீத்தை வைத்து படம் எடுக்கிறீர்களா என்று கேட்கின்றனர். அவரை வைத்து படம் எடுக்க ஆசையாக உள்ளது. ஆனால் அதற்கு நாளாகும். தற்போது சூர்யா நடிக்கும் ஆக்ஷன், த்ரில்லர் படத்தை இயக்குகிறேன். இதில் தெலுங்கு ஹீரோ ரவி தேஜாவும் நடிக்கிறார். தற்போது சூர்யாவும், ரவி தேஜாவும் வேறு படங்களில் பிஸியாக இருக்கின்றனர். அந்த படங்களை முடித்த பிறகு இந்த படப்பிடிப்புக்கு வருவார்கள். முன்னணி நடிகை ஒருவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். அது ஸ்ருதி தானே என்று பலர் கேட்கின்றனர். சூர்யா-ஸ்ருதி எனது படத்தில் ஜோடி சேர்வதாகக் கூறப்படுவது வெறும் வதந்தி தான் என்றார். |
| 337 சிக்கன் லெக்பீஸ்களை அரைமணி நேரத்தில் சாப்பிட்ட மனிதர் Posted: 28 Feb 2012 05:57 AM PST அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் ஆண்டுதோறும் சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு, இப்போட்டியில் அதிகமான சிக்கன் லெக் பீஸ் சாப்பிடுபவருக்கு பத்து லட்சம் ரூபாய் பரிசளிக்கப்படும்.சமீபத்தில் நடந்தேறிய இந்தாண்டிற்கான போட்டியை காண்பதற்கு 20 ஆயிரம் பேர் திரண்டிருந்தனர். மசாலா தடவப்பட்டு நன்றாக பொரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான லெக் பீஸ்கள் தயாராக இருந்த நிலையில் மணி ஒலித்து, போட்டி துவங்கியது. இப்போட்டியின் இறுதியில் ஜப்பானைச் சேர்ந்த டகெரு கொபாயஷி என்ற இளைஞர் அரை மணி நேரத்தில் 337 லெக் பீஸ்களை சாப்பிட்டு பரிசைத் தட்டிச் சென்றார். இதற்கு முன் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர் 255 லெக் பீஸ்களை சாப்பிட்டு சாதனை படைத்திருந்தார். தற்போது அந்த சாதனையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டகெரு கொபாயஷி முறியடித்தது குறிப்பிடத்தக்கது. |
| 3 திரைப்படத்தின் இறுதி கட்டத்தில் அதன் கிளைமாக்சையே மாத்த சொன்னாராம் ரஜனி Posted: 28 Feb 2012 05:39 AM PST '3' படத்தின் பிரத்யேக காட்சியை பார்த்த ரஜினி படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சோகமாக இருப்பதற்கு பதில் மகிழ்ச்சியாக இருக்குமாறு வைக்கலாமே என்று அறிவுரை கூறியுள்ளார்.ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறி டி பாடல் மூலம் புகழ் பெற்றது தனுஷ் மட்டுமல்ல அவரது மனைவி ஐய்வர்யா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள 3 படமும் தான். இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் ரஜினி மகள் படத்தில் கமல் மகள் ஸ்ருதி நாயகியாக நடித்திருப்பது தான். இந்த படம் மார்ச் மாத இறுதியில் ரிலீஸாகிறது. இந்த நிலையில் '3' படத்தின் பிரத்யேக காட்சியைப் பார்த்த ரஜினி தனுஷ், ஸ்ருதிஹாசன் ஆகியோரின் நடிப்பு சிறப்பாக உள்ளதாகவும், ஐஸ்வர்யா சிறப்பாக பணியாற்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். கிளைமாக்ஸ் சோகமாக முடிவது மட்டும் ரஜினிக்கு பிடிக்கவில்லை போன்று. அதனால் கிளைமாக்ஸை சந்தோஷமாக முடியும்படி மாற்றலாமே என்று அறிவுறுத்தியுள்ளார். சூப்பர்ஸ்டார் பேச்சுக்கு மறுபேச்சேது. கிளைமாக்ஸை மாற்றுவது குறித்து ஐஸ்வர்யாவும், தனுஷும் ஆலோசித்து வருகின்றனர். |
| புகையிரத வீதியில் தலை வைத்து உறங்குவதால் குணமாகுகின்றதாம் நோய்கள் Posted: 28 Feb 2012 05:31 AM PST தண்டவாளத்தில் தலை வைத்துப்படுத்தால் நோய்கள் குணமாகும் என்ற வினோதமான நம்பிக்கை இந்தோனேசியாவில் உள்ளது. தற்போது புயல் வேகத்தில் இந்த சிகிச்சை முறை அங்கு பரவி வருகிறது.ரெயில்வே தண்டவாளத்தில் படுப்பதன் மூலம் பல்வேறு வகையான நோய்களை குணமாக்க முடியும் என்று, இந்தோனேசியா மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். ரெயில் வரும் போது ஏற்படும் அதிர்வின் மூலம் நோய்கள் குணமாகின்றது என்று கூறுகின்றனர். |
| த ஆர்டிஸ்ட் ஹூகோ படங்களுக்கு தலா 5 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்ற சிறந்த நடிகை மெரில் ஸ்ட்ரீப் Posted: 27 Feb 2012 11:40 PM PST லாஸ் ஏஞ்சலஸ்: 84 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சலில் நடைபெற்றது.'அயர்ன் லேடி' படத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமராக நடித்த மெரில் ஸ்ட்ரீப் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது இவர் பெறும் 3வது ஆஸ்கர் விருதாகும்.இதற்கு முன் க்ராமர் Vs கிராமர் (1979), சோபிஸ் சாய்ஸ் (1982) ஆகிய படங்களுக்கும் இவர் ஆஸ்கர் விருது பெற்றுள்ளார். இதுவரை 17 முறை ஆஸ்கர் விருதுக்கு இவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஊமைப் படமான 'த ஆர்டிஸ்ட்' படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் மைக்கல் ஹசானாவிகஸ் சிறந்த டைரக்டருக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். கருப்பு வெள்ளைப் படமான இந்தப் படம் ஏற்கனவே பல உலக விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 'த ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின்னுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் லுடோவிக் பெளர்சும் ஆஸ்கர் வென்றுள்ளார். மொத்தத்தில் இந்தப் படம் 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த டாகுமெண்டரி படத்துக்கான விருது டேனியன் ஜுங்கே மற்றும் ஷர்மீன் ஒபைத் சினோய் ஆகியோரின் 'சேவிங் பேஸ்' படத்துக்குக் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மீது ஆசிட் வீசி நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை இந்தப் படம் விவரிக்கிறது. ஜார்ஜ் க்ளூனி நடித்த 'த டெசன்டன்ஸ்' படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.சிறந்த வெளிநாட்டு படத்துக்கான விருது ஈரானின் 'ஏ செப்பரேஷன்' திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. மார்ட்டின் ஸ்கோர்செசயின் 3டி படமான ஹூகோவுக்கு சிறந்த சவுண்ட் எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆர்ட் டைரக்ஷன், சிறந்த விஷூவல் எபெக்ட்ஸ் ஆகிய பிரிவுகளின் கீழ் 5 ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. |
| என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக துப்பாக்கியில் விஜய் Posted: 27 Feb 2012 11:30 PM PST இளைய தளபதி விஜய் துப்பாக்கி படத்தில் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறாராம். ஏ. ஆர். முருகதாஸின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி. இதில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், திடீரென்று இந்தப் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் விஜயிடம் கேட்டதற்கு, 'படம் ட்ராப்னு வர்ற செய்திகளை நம்பாதீங்க. சீக்கிரமே மீண்டும் தொடங்கிடும். பெப்சி பிரச்சனை போன்றவையெல்லாம் தீர்ந்ததும் படப்பிடிப்பு தொடங்கிடும்" என்றார். தற்போது பெப்சி பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்ததையடுத்து தற்போது படப்பிடிப்பு துவங்கியுள்ளது. துப்பாக்கி படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் படமாக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் என்ன கதாபாத்திரத்தில் வருகிறார் என்பது இத்தனை நாட்கள் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் அவர் திருடர்களை டொப்பு, டொப்புன்னு சுட்டுத் தள்ளும் என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது. என்கௌன்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழகத்தை ஒரு என்கெளன்டர் பரபரப்புக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் விஜய் வேறு துப்பாக்கியைத் தூக்குகிறார்...! |
| பறவை முட்டைத் திருடனுக்கு விசித்திர தண்டனை Posted: 27 Feb 2012 11:16 PM PST இங்கிலாந்து நாட்டில் போ நகரில் வசித்துவரும் மேத்யு கோன்ஷா(49) என்பவர் 700 வகையான அரிய பறவைகளின் முட்டைகளை திருடி அவற்றை தனது வீட்டில் காட்சி பொருளாக வைத்திருந்திருக்கிறார்.இவர் ஸ்காட்லாந்து நாட்டில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு சென்று அங்கு வசிக்கும் அரிய வகை தங்க பருந்துகள், குருவிகள், மற்றும் நெருப்பு கோழிகள் போன்றவற்றின் முட்டைகளை திருடி வந்தார். பின்னர் அவற்றை தனது வீட்டில் கண்காட்சி போல வைத்து இருந்தார். சில முட்டைகளில் குஞ்சு உருவாகி இருப்பதை அறிந்த அவர் அந்த முட்டையில் துளையிட்டு அதன் மூலம் அக்குஞ்சுகளை சிதைத்து வெளியேற்றி இருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த பறவை ஆர்வலர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பொலிசார் மேத்யு கோன்ஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 10 ஆண்டுகளுக்கு பறவைகளின் இனப்பெருக்க காலத்தில் ஸ்காட்லாந்து நாட்டுக்குள் மேத்யு பிரவேசிக்க கூடாது என்று உத்தரவிட்டனர். |
| ஆகாயத்திற்கும் பயணிக்கலாம் அதிசய லிப்ட் கண்டுபிடிப்பு!!! Posted: 27 Feb 2012 07:18 PM PST ![]() நிலவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச்செல்ல ஒரு நிறுவனம் முயற்சி செய்து வரும் வேளையில், ஜப்பானை சேர்ந்த ஒபயாஷி என்ற கட்டுமான நிறுவனம், வானவெளிக்கு செல்ல அதிசய `லிப்ட்' அமைக்கப்போவதாக அறிவித்து உள்ளது. 'இந்த உலகத்துக்கு வெளியே' என்று பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தின்படி, நிலவுக்கு செல்லும் பாதையில் கால்வாசி தூரம்வரை, அதாவது தரையில் இருந்து 96 ஆயிரம் கி.மீற்றர் தூரம்வரை, அதாவது தரையில் இந்த லிப்ட் அமைக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது. இரும்பை விட 20 சதவீதம் அதிக வலுவுள்ள "நானோ டியூப்" தொழில்நுட்பம் மூலம் இந்த லிப்ட் அமைக்கப்படும் என்றும், 40 ஆண்டுகளுக்குள் இந்த அதிசய லிப்ட் கட்டி முடிக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் 30 பயணிகளை இந்த லிப்டில் ஏற்றிச் செல்வார்கள் என்றும், மணிக்கு 200 கி.மீற்றர் வேகத்தில் ஒரு வாரத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது. அவர்கள் 36 ஆயிரம் கி.மீற்றரில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையத்தில் இறக்கி விடப்பட்டு, வானவெளி அதிசய காட்சிகளை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் மட்டுமே அதற்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. |
| உல்லாசமாக இருக்கும் பண்டா கரடி! (படங்கள்) Posted: 27 Feb 2012 06:35 PM PST ![]() கரடி வகைகளில் ஒன்றான பண்டா கரடிகள் உலகளவில் அழிந்து வரும் இனமாக கருதப்படுகின்றது. இந்த இன கரடிகள் மூங்கில்களையே அதிகம் விரும்பி உண்ணும். அவ்வாறு பசி தீர மூங்கில்ளை உண்டுவிட்டு உல்லாசமாக இருக்கும் பண்டா கரடியையே நீங்கள் படங்களில் காண்கின்றீர்கள். சீனாவின் சிச்சுவான் மாகாணத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்கா ஒன்றில் மிற்சுஆகி இவாகோ என்ற புகைப்பட கலைஞரால் பிடிக்கப்பட்ட படங்களே இவை. இதுபற்றி கருத்து தெரிவித்த மிற்சுஆகி "தான் குறித்த பூங்காவிற்கு விஜயம் செய்தவேளை அங்குள்ள அழகிய மிருகங்களை படம்பிடிக்க விரும்பினேன் அப்போது தற்செயலாக இடம்பெற்ற பண்டா கரடியின் வினோத செய்கையை படம்பிடிக்க நேர்ந்தது" என்றார். இந்த பண்டாக்கள் நாளொன்றிற்கு 20 தொடக்கம் 30 பவுண்ட வரையான மூங்கில்களை உண்ணக்கூடியன. அத்துடன் இவை ஆறு அடி நீளம் வரை வளரக்கூடியன என்பது குறிப்பிடத்தக்கது. |
| தவறிய கையால் வந்த வினை! (படங்கள், வீடியோ) Posted: 27 Feb 2012 06:32 PM PST கிறீஸ் நாட்டில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் பணிபுரியும் வெயிட்டர் ஒருவர் அங்கு வந்திருந்த ஏஞ்சலா மேர்கல் என்பரின் பின் பகுதியில் ஐந்து கிளாஸ் பியரை ஊற்றியுள்ளார். 21 வயதான அந்த வெயிட்டரின் தவறுதலான செயற்பாடானது அங்கு அமர்ந்திருந்த அனைவரையும் சிரிப்பில் ஆழ்தியுள்ளது. ஏஞ்சலா மேர்கல் என்பர் ஜேர்மன் பல்கலைகழகம் ஒன்றின் விரிவுரையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. |
| You are subscribed to email updates from ஐ தமிழ் வெப் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




























