சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்

சித்தர்கள் தமிழக செய்திகள், இலங்கை முக்கிய செய்திகள், சினிமா செய்திகள், உலக செய்திகள், ஆன்மிகம் மற்றும் சமயல் குறிப்புகள்


kuspoo

Posted: 29 Feb 2012 09:29 AM PST

தயவு செய்து

Posted: 29 Feb 2012 09:27 AM PST

டோனி தனியாக சந்தித்து காலில் விழுந்தார்.... தயவு செய்து Final விளையாட வேண்டாம்...

Mayavaram Movie Audio Launch Images

Posted: 29 Feb 2012 09:21 AM PST


Mayavaram Tamil Movie Audio Launch gallery, Mayavaram Movie Music Launch stills, Mayavaram Movie audio release function pictures, pics, photos, images,
 CLICK THE IMAGE TO VIEW IN FULL SIZE 










Isha Chawla New Images

Posted: 29 Feb 2012 09:21 AM PST


Actress Isha Chawla gallery, Isha Chawla latest stills, Isha Chawla at Poola Rangadu Movie Success Meet pictures, pics, photos, images,
 CLICK THE IMAGE TO VIEW IN FULL SIZE 













Kajal Agarwal Latest Images

Posted: 29 Feb 2012 09:20 AM PST


Actress Kajal Agarwal gallery, Kajal Agarwal new stills, Kajal Agarwal at Duplicate Telugu Movie Press Meet pictures, pics, photos, images,
 CLICK THE IMAGE TO VIEW IN FULL SIZE 













Karthi Inauguration New Association Images

Posted: 29 Feb 2012 09:19 AM PST


Karthi Inaugurates Theatre Owners New Association gallery, Karthi at Inauguration of New Association stills, pictures, pics, photos, images,
 CLICK THE IMAGE TO VIEW IN FULL SIZE 








Mahisasura Maridini Stotram - Complete version - PART II

Posted: 29 Feb 2012 09:20 AM PST


சிறையிலிருந்து ஜாமினில் வந்த கல்மாடி: முதல் முறையாக பாராளுமன்ற குழு கூட்டத்தில் பங்கேற்பு

Posted: 29 Feb 2012 09:14 AM PST

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஒன்பது மாதமாக சிறையில் இருந்த முன்னாள் எம்.பி. கல்மாடி கடந்த ஜனவரி மாதம் ஜாமினில் வெளியே வந்தார். 

இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்திருக்கும் கல்மாடி முதன் முறையாக பாதுகாப்பு குறித்த பாராளுமன்ற குழு கூட்டத்தில் இன்று பங்கேற்றார். கூட்டத்தில், இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் செயல்திறனை மேம்படுத்துதல் குறித்த ஆலோசனைகளை அவர் வழங்கினார். மேலும், அடிப்படை பயிற்சி விமானத்தை உருவாக்கும் முயற்சியில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் இறங்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு போர் விமானங்களை உருவாக்கும் கடினமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆலோசனைகளை வழங்கினார். 

சுரேஷ் கல்மாடி விமானியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 1, 10, 19, 28

Posted: 29 Feb 2012 09:10 AM PST

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். தள்ளிப் போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது வேலைக் கிடைக்கும். 

பிள்ளைகளின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும். தாய்வழி உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டு பயணம் சாதகமாக அமையும். சகோதரிக்கு திருமணம் முடியும். பழைய நண்பர்கள், உறவனர்களால் ஆதாயம் உண்டு. 

கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை வழங்குவீர்கள். பிரபலங்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதிதாக வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். திடீர் பயணங்களும், செலவுகளும் வந்துப் போகும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். 

அரசியல்வாதிகளே! மேலிடம் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்‌தியோகத்தில் சம்பளம் உயரும். கடினமான வேலைகளையும் எளிதாக முடிப்பீர்கள். கலைத்துறையினர்களே! உங்களின் புகழ், கௌரவம் உயரும். சாதித்துக் காட்டும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 4, 8, 9, 11, 28, 29
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வியாழன்

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 2, 11, 20, 29

Posted: 29 Feb 2012 09:09 AM PST

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த கசப்புணர்வுகள் நீங்கும். 

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அவ்வப்போது கை, கால் வலி, சளித் தொந்தரவு வந்து நீங்கும். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். 

அவ்வப்போது தந்தைக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். மனஉளைச்சல், பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களை தவிர்ப்பது நல்லது. கன்னிப் பெண்களே! பெற்றோருடன் கலந்தாலோசித்து எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தூக்கமின்மை வந்து நீங்கும். 

அரசியல்வாதிகளே! தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும். திட்டமிட்ட காரியங்களில் ஒருசில வெற்றி பெறும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 6, 11, 12, 21, 24, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், ப்ரவுன்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், சனி

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 3, 12, 21, 30

Posted: 29 Feb 2012 09:07 AM PST

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் தடைப்பட்ட வேலைகள் முடியும். திடீர் நன்மை உண்டாகும். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். புது வேலை அமையும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். 

ஓரளவு உடல் நிலை சீராகும். உறவினர்கள், நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். எதிர்மறை சிந்தனைகள், வீண் டென்ஷன், தந்தையுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்கை நிதானமாக கையாளுங்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். சொத்து வாங்குவதற்கு முன்பாக தாய்பத்திரத்தை சரி பார்க்கவும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திடாதீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். பெற்றோரை அனுசரித்துப் போங்கள். பயணங்களின் போது கவனம் தேவை. 

அரசியல்வாதிகளே! சகாக்கள் மத்தியில் மேலிடத்தை பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். பற்று வரவு சுமார்தான். உத்‌தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! வர வேண்டிய சம்பள பாக்கிகளை போராடி பெறுவீர்கள். இங்கிதமான பேச்சால் முன்னேறும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 5, 7, 13, 16, 23, 26
அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மயில்நீலம், ஆரஞ்சு 
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : செவ்வாய், வியாழன்

‌மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 4, 13, 22, 31

Posted: 29 Feb 2012 09:05 AM PST

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள் இந்த மாதத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வி. ஐ. பிகளின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. 

குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். எதிரும், புதிருமாக பேசிக் கொண்டிருந்த உறவினர்கள் தன் தவறை உணர்வார்கள். இரத்த சொந்தங்கள் வலிய வந்து உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். 

லோன் கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். அவ்வப்போது சிறுசிறு விபத்து, அலைச்சல், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். முன்கோபம், உறவினர் பகை வந்து நீங்கும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. அரசியல்வாதிகளே! கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போராட வேண்டியிருக்கும். 

கன்னிப் பெண்களே! விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சில சலுகைகளை அறிவிப்பீர்கள். வேலையாட்களால் விரையம் வரும். உத்‌தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்கள். கலைத்துறையினர்களே! போராடி படைப்புகளை வெளியிடுவீர்கள். விட்டுக் கொடுத்து வெற்றி பெறும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 6, 8, 12, 17, 25, 28, 29
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : இளம்சிவப்பு, மஞ்சள்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், வெள்ளி 

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 5, 14, 23

Posted: 29 Feb 2012 09:04 AM PST

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தி சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். ஓரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடி வரும். 

பழைய சொந்த-பந்தங்கள் வலிய வந்து உறவாடுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது தெம்பு பிறக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் இருந்த உரசல் போக்கு மாறும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். அவ்வப்போது பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களின் உடல் நலம் பாதிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனம் பழுதாகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். சளித் தொந்தரவு வந்து நீங்கும். மூளை பலத்தால் முன்னேறுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சு வேண்டாம். அரசியல்வாதிகளே! வீண் விமர்சனங்களை தவிர்த்து, செயலில் அக்கறை காட்டுங்கள். 

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வது பற்றி கலந்து ஆலோசிப்பீர்கள். வேலையாட்கள் அவ்வப்போது விடுப்பில் செல்வார்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மேலதிகாரி ஆதரிப்பார். கலைத்துறையினர்களே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். அந்தஸ்து உயரும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 1, 7, 13, 15, 18, 24, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிஸ்தா பச்சை, பிங்க்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 6, 15, 24

Posted: 29 Feb 2012 09:03 AM PST

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய திட்டங்களைத் திட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். பிள்ளைகளின் போக்கில் அக்கறை செலுத்துவீர்கள். 

எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். வழக்கில் வெற்றி கிட்டும். வீட்டை விரிவுப்படுத்தி கட்டுவீர்கள். சகோதரருக்கு வேலைக் கிடைக்கும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அவ்வப்போது வேலைச்சுமை, முன்கோபம், இனந்தெரியாத கவலைகள், விமர்சனங்கள் வரும். 

சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிக் கிடைக்கும். கடன் பிரச்னை ஒன்றை நினைத்து கவலைப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக செயல்படவேண்டாம். கன்னிப்பெண்களே! காதல் விவகாரங்களில் அவசரம் வேண்டாம்.

உயர்கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்‌தியோகத்தில் சக ஊழியர்களிடம் அளவாகப் பழகுங்கள். கலைத்துறையினர்களே! விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகிப்புத் தன்மையால் முன்னேறும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 4, 5, 10, 12, 15, 21, 24
அதி‌ர்ஷ்ட எண்கள் : 1, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மெரூண், ரோஸ்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வியாழன்

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 7, 16, 25

Posted: 29 Feb 2012 09:02 AM PST

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பணபலம் உயரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு, மரியாதைக் கூடும். 

அரசு காரியங்கள் சுலபமாக முடியும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். புது வேலை அமையும். புது சொத்து வாங்குவீர்கள். 

வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். வேற்று மொழிக்காரர்கள் அறிமுகமாவார்கள். அவ்வப்போது குடும்பத்தில் சலசலப்பு, வீண் சந்தேகம் வந்து விலகும். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பர். அரசியல்வாதிகளே! தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவிற்கு நெருக்கமாவீர்கள். 

ஆன்மீகவாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். லாபம் பெருகும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்‌தியோகத்தில் உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். கலைத்துறையினர்களே! வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். திடீர் யோகம் தரும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 7, 9, 13, 19, 23, 27
அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, சாம்பல் நிறம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : திங்கள், வெள்ளி

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 8, 17, 26

Posted: 29 Feb 2012 09:02 AM PST

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்கள், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். 

உங்கள் ரசனைக் கேற்ற சொத்து வாங்குவீர்கள். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். பழைய நண்பர்கள், உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். பழைய வீட்டை புதுமைப்படுத்துவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வழக்கு சாதகமாக திரும்பும். 

வாகனம் புதிதாக அமையும். அவ்வப்போது மனஇறுக்கம், தூக்கமின்மை, தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கோவில் விழாவை முன்னின்று நடத்துவீர்கள். மனோ பலம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். 

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடத்தை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்‌தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். கலைத்துறையினர்களே! உங்களின் சம்பளம் உயரும். மூத்த கலைஞர்கள் உதவுவார்கள். கடின உழைப்பால் இலக்கை எட்டும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 8, 12, 16, 17, 26, 29, 30
அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சிவப்பு, கிளிப்பச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : புதன், சனி

மா‌ர்‌ச் மாத எண் ஜோதிடம் : 9, 18, 27

Posted: 29 Feb 2012 08:39 AM PST

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் நினைத்த காரியம் நிறைவேறும். ஒரளவு பணவரவு உண்டு. குடும்பத்தில் திருமணம் ஏற்பாடாகும். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. 

உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரம் மகிழ்ச்சி தரும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சிலர் இருக்கும் வீட்டை கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். உடன்பிறந்தவர்களை அனுசரித்துப் போங்கள். 

அரசியல்வாதிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. ஷேர் மூலம் பணம் வரும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களை ஆதாரமின்றி விமர்சிக்க வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். 

வியாபாரத்தில் புதிய திட்டங்கள் வகுத்து லாபத்தைப் பெருக்க முற்படுவீர்கள். சிலநேரங்களில் வாடிக்கையாளர்களிடம் தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படக்கூடும். உத்‌தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கிகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். கலைத்துறையினர்களே! திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி பெறும் மாதமிது. 

அதி‌ர்ஷ்ட தேதிகள் : 9, 16, 18, 21, 24, 28, 31
அதி‌ர்ஷ்ட எண்கள் : 7, 8
அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், ஆலிவ்பச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள் : ஞாயிறு, வெள்ளி

வெயில் காலத்தில் செல்லங்களை நல்லா கவனிங்க!

Posted: 29 Feb 2012 08:36 AM PST

பருவ நிலை மாற்றத்தினால் கோடை காலத்திற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ளது. 

வெப்பத்தினால் புழுக்கம் அதிகம் இருந்தாலும் மின்தடைவேறு வெப்பத்தின் கடுமையை அதிகப்படுத்துகிறது. 

பெரியவர்களினாலேயே வெப்பத்தை சமாளிக்க முடியாத நிலையில் பச்சிளம் குழந்தைகளின் பாடு பெரும்பாடாகிவிடுகிறது. 

கோடைவெப்பத்தில் இருந்து இளம் சிசுக்களை பாதுகாக்க சில டிப்ஸ்…

வியர்வை கவனம்

கோடை காலத்தில் குழந்தைகளுக்கு அதிகம் வியர்த்துக் கொட்டும். இதனால் உடைகள் நனைந்து அவர்களுக்கு சளி பிடிக்கும். அடிக்கடி தும்மல் போடுவார்கள். வியர்வை பற்றி அவர்களால் கூற முடியாது. அழுகையினால் மட்டுமே ஈரத்தை உணர்த்த முடியும் எனவே குழந்தைகளின் உடம்பில் வியர்வையினால் ஈரம் படிந்திருக்கிறதா என்று அவ்வப்போது சோதனை செய்யவேண்டும்.

ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம்மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.

லேசான உடை

கோடையில் மெல்லிய பருத்தி உடைகளை அணிவிக்கலாம். இதனால் குழந்தையின் உடல் காற்றோட்டத்தை உணரும். எளிதில் மூச்சு விட முடியும்.

சூரிய ஒளியில் பாதுகாப்பு

குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குடை பிடித்துக்கொண்டு நிழலியே அழைத்துச் செல்லவேண்டும். பார்க், கடற்கரை பகுதிகளில் நிழலான இடங்களில் காற்றாட அழைத்துச் செல்வது பாதுகாப்பானது.

நீர் சத்து

கோடையில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே அவ்வப்போது கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரை குடிக்கத் தரவேண்டும். இது வியர்வை மூலம் வெளியேறும் தண்ணீரை ஈடு செய்யும். தாய்ப் பால் ஊட்டும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு சரியான நேரத்திற்கு பால் ஊட்டவேண்டும். நீர்ம ஆகாரங்களை அடிக்கடி குழந்தைகளுக்கு தருவது அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தூக்கம் விழிக்கும்

கோடையில் குழந்தைகளை உறங்க வைப்பது எளிதான காரியமல்ல. அதுவும் மின்சாரம் இல்லையென்றால் அன்றைக்கு முழுக்க சிவராத்திரிதான். எனவே குழந்தைகளை உறங்கவைக்கும் அறையை குளுமை நிறைந்ததாக, காற்றோட்டமானதாக வைத்திருக்கவேண்டும். காற்றோட்டம் நிறைந்த ஜன்னல்கள் இருந்தால் அவற்றை நன்றாக திறந்து வெளிக்காற்று அறையினுள் வருமாறு அமைக்கவேண்டும். மஸ்லின் துணியினால் ஆன திரைச் சீலைகளை ஜன்னலுக்கு போடுவது குளுமையான காற்றினை அறைக்குள் தக்கவைக்கும்.

மிதமான காற்று

வெயில் காலத்தில் கட்டிலின் மேல் உஷ்ணம் அதிகம் இருக்கும் காரணத்தினால் உங்கள் குழந்தைகளை கட்டிலில் படுக்க வைப்பதற்குப் பதில், பாயை விரித்து, அதன் மேல் பருத்திப் புடவையை அடர்த்தியாக மடித்து தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க விடலாம்.

குழந்தைக்கு வியர்த்துப் போகும் என்பதால், அதிகப்படியான மின்விசிறிக் காற்று குழந்தையின் முகத்திற்கு நேரே படும்படி படுக்க வைத்து, குழந்தைக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்திவிடக்கூடாது. காற்றின் வேகம் மிதமானதாக இருப்பதே சிறந்தது. 

வௌவால் மீன் ப்ரை

Posted: 29 Feb 2012 08:32 AM PST

மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி மீன் சாப்பிட செய்து தரவேண்டும். குழம்பில் போடுவதை விட ப்ரை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். வெளவால் மீன் முள் அதிகம் இல்லாதது என்பதால் ப்ரை செய்ய ஏற்றது.

தேவையான பொருட்கள்

வௌவால் மீன் - அரை கிலோ

மிளகாய்த்தூள் – 4 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீ ஸ்பூன்

எலுமிச்சை – அரை மூடி

இஞ்சி, பூண்டு – 2 டீ ஸ்பூன்

கான் ப்ளவர் – 2 டீ ஸ்பூன்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

மீன் ப்ரை செய்முறை

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். முள் அதிகம் இருக்காது என்பதால் பொடியாக கட் செய்து கொள்ளலாம். அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, கார்ன் ப்ளவர், உப்பு, எலுமிச்சை சேர்த்து பிசிறிக் கொள்ளவும். இதனை ப்ரீசரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் மீன் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன், நான்கு துண்டுகள் போட்டு பொரித்து எடுக்கவும். கார்ன் ப்ளவர் போட்டதால் மீன் ப்ரை மொறு மொறு என்று இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

Posted: 29 Feb 2012 08:29 AM PST

5. மெ‌ரினா

பாண்டிரா‌ஜின் இந்த பீச் ரசிகர்களின் புறக்கணிப்பால் காற்று வாங்குகிறது. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் இப்படம் 1.9 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள இப்படம் சென்ற வார இறுதியில் 3.56 லட்சங்களை வசூலித்துள்ளது.

4. தோனி

நல்ல படம் என்று பெயர் எடுத்தும் தோனி பாக்ஸ் ஆஃபிஸில் தடுமாறுகிறது. சென்ற வார இறுதியில் இப்படம் 4 லட்சங்களை மட்டுமே வசூலித்துள்ளது. இரண்டு வாரங்கள் முடிவில் இதன் சென்னை வசூல் 73 லட்சங்கள்.

3. அம்புலி

சின்ன பட்ஜெட்டில் எடுத்த அம்புலி 3டி படம் பரவலாக அனைவரையும் கவர்ந்திருக்கிறது. சென்ற வார இறுதியில் 5.6 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 19 லட்சங்களை தனதாக்கியுள்ளது.

2. முப்பொழுதும் உன் கற்பனைகள்

கரன்சியை இறைத்து எடுக்கப்பட்ட இப்படம் சென்ற வாரம் முதலிடத்தில் இருந்தது. இந்த வாரம் இரண்டாவது இடம். மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் படத்தின் வசூல் பரவாயில்லை. சென்ற வார இறுதி வசூல் 33.2 லட்சங்கள். இதுவரை சென்னையில் 1.17 கோடி வசூலித்ததுள்ளது இப்படம்.

1. காதலில் சொதப்புவது எப்படி

சென்ற வாரம் இரண்டாவது இடத்தில் இருந்த படம் இந்த வாரம் முதலிடத்தில். ஓபனிங் வீக் எண்டைவிட சென்ற வார இறுதி வசூல் அதிகம். 46.8 லட்சங்கள். இதுவரை 1.51 கோடியை வசூலித்திருக்கும் இப்படம் சென்னையில் ஐந்து கோடிகளை தாண்டும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

கண்களை வியப்பில் ஆழ்ந்தும் மெய்சிலிர்க்கும் காட்சிகள்(வீடியோ இணைப்பு)

Posted: 29 Feb 2012 08:22 AM PST

வேகமாக சுழறும் பூமியின் செயற்பாட்டில் இடம்பெறும் அதன் செயல்களும் படு வேகமாகவே முடிந்து விடும்.

அதாவது மெய்சிலிர்க்க வைக்கும் சில நிகழ்வுகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்து விடும். அது எப்படி நடந்தது? என்று எண்ணிப் பார்க்கவே சந்தர்ப்பம் இருக்காது.

அந்த வகையில் உலகில் பல பாகங்களில் இடம்பெற்ற மெய்சிலிர்க்கும் காட்சிகளை மிகவும் வேகம் குறைவாக (Slow) பார்த்தால் எப்படி இருக்கும்.

அது தொடர்பான காணொளி இது. கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் மெய்சிலிர்க்கும் காட்சிகளை பாருங்கள்

2ஜி உரிமங்கள் ரத்து: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசு சவால் விட முடியாது - தொலை தொடர்பு செயலாளர்

Posted: 29 Feb 2012 08:17 AM PST

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் 122 உரிமங்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அரசு சவால் விட முடியாது என்று தொலை தொடர்பு செயலாளர் ஆர். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

 ஆர். சந்திரசேகரன்  கூறியதாவது-

உரிமங்களை ரத்து செய்த தீர்ப்புக்கு எதிராக நாங்கள் சவால் விடவில்லை. இது தொடர்பாக, இந்த வார இறுதியில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கிறோம். இந்த தீர்ப்பின் மீது மறுபரிசீலனை கோரி மனு தாக்கல் செய்ய அரசுக்கு கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதியிலிருந்து ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது. அதற்கு முன்பே, இந்த விவகாரத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும் எனத்தெரிகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் கூடங்குளம் போராட்ட குழு சந்திப்பு

Posted: 29 Feb 2012 08:18 AM PST

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை கூடங்குளம் அணு நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர், அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் இன்று சந்தித்தனர். 

சந்திப்பிற்கு பின்னர் உதயகுமார் கூறியதாவது: 

முதலமைச்சர் ஜெயலலிதாவை என்னுடைய தலைமையில் போராட்ட குழுவினர் சந்தித்தோம். அப்போது தமிழக அரசு நியமித்த நிபுணர்குழு அறிக்கை ஒரு தலைபட்சமானது என்றும், போரட்ட மக்களை சந்திக்காமல் அக்குழு சென்று விட்டதாகவும் கூறினோம் என்றார். 

மேலும், தான் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என தெரிவித்ததாகவும் கூறினார். எங்களுடைய கோரிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா கவனமாக கேட்டதாகவும், ஆனால் இதுகுறித்து எந்த உத்திரவாதமும் அவர் எங்களுக்கு அளிக்கவில்லை என்றும், முதலமைச்சருடனான சந்திப்பு தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

‘கழுகு’ படத்திற்காக வித்தியாசமான போராட்டம்

Posted: 29 Feb 2012 08:10 AM PST

வழக்கமாக சென்சாரில் 'ஏ', 'யுஏ' பெறப்பட்ட படங்களை போராடி 'யு' வாங்குவார்கள். ஆனால் சென்சார் 'யு' கொடுத்து, சில காட்சிகளை வெட்டச் சொன்னதால் மறுப்பு தெரிவித்து எனக்கு 'யுஏ'வே இருக்கட்டும். 

நீங்க சொல்கிற காட்சிகளை வெட்டினால் படத்தின் கதை பாதிக்கும். வரிவிலக்கு எனக்கு பாதிப்புதான் என்றாலும் அதற்காக படத்தின் தரமும், காட்சியமைப்பும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று போராடி 'யுஏ' வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் 'பட்டியல்' சேகர். 

விரைவில் வெளிவரவிருக்கும் 'கழுகு' படத்திற்குத்தான் இந்த போராட்டம். 'கழுகு' வரும் மார்ச் 9-ந் தேதி முதல் உலகமெங்கும் பறக்கப் போகிறது.

உயிரை பறிக்கும் தூக்க மாத்திரைகள்./

Posted: 29 Feb 2012 08:07 AM PST

ஆழ்ந்த உறக்கத்திற்காக பயன்படுத்தப்படும் தூக்க மாத்திரைகள் உயிரையே பறித்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

தூக்க மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அமெரிக்கா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 23,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 10,500 பேர் தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள்.

தூக்க மாத்திரை சாப்பிட தொடங்கிய 2 1/2 வருடத்தில் பலவிதமான நோய்களால் இவர்கள் பாதிக்கப்படுவது தெரியவந்தது.

இவர்களில் 35 சதவீதம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டனர், குறிப்பாக 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வது உடல் நலத்துக்கு ஆபத்து என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துபவர்கள் தங்களது மருத்துவர்களின் அறிவுரையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.